வலம் மார்ச் 2021 இதழ்

வலம் இதழ் மார்ச் 2021 இதழை இங்கே வாசிக்கலாம்.

சந்தா செலுத்த இங்கே செல்லவும்.

மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன் 

கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.இ. பச்சையப்பன் 

இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு 

இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு 

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன் 

மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்

சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு 

உறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன் 

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

லாரி பிரில்லியண்ட் தாம் இந்நூலை எழுதியிருந்தாலும் பெரியம்மைக்கு எதிராகக் களத்தில் இறங்கி போராடிய, பெரும் தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட பல்லாயிரக்கணக்கான களப்பணியாளர்களுள் ஒருவராகவே தன்னை முன்னுறுத்துகிறார். இந்தப் பல்லாயிரம் பணியாளர்கள் இந்திய டாக்டர்கள் செவிலியர் இவர்களெல்லாம் வீர நாயகர்கள். ஆனால் இவர்களெல்லாம் மதிக்கப்படுவதில்லை என்பதில் அவருக்கு மன வருத்தம் உள்ளது..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

உறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்

வின்ஸ்டன் சர்ச்சில் சிறந்த உறையூர் (திருச்சி) சுருட்டுகள் மற்றும் (Pol Roger champagne) போல் ரோஜர் ஷாம்பெயின் ஆகியவற்றின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார்..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு

கபில்தேவுக்கு கப்பைக் கொடுத்தாகி விட்டது. அவர் அதைத் தூக்கி காமராவுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் காண்பித்து விட்டு நகர்ந்து விட்டார். இன்னோரு கப்பை கிரிக்கெட் சங்கத் தலைவரிடம் கொடுத்து அவர் அதை டீன் ஜோன்ஸிடம் கொடுக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. கப்பை எடுத்து வந்த ஊழியர் அவசரத்தில்..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்

உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன்

இன்றைய தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியாவில் மற்ற பகுதியிலும் சரி, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற மாமனிதர், ஒரு தமிழர், பல்துறை அறிஞர், நம் நாட்டிற்கு அளித்த பங்களிப்பைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாது. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பது துரதிர்ஷ்டம். ராஜாஜி மறைந்து 48 ஆண்டுகள் ஆகின்றன. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு, அவரின் எண்ணற்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் மறைக்கப்பட்டது, எதோ தனி நபருக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பல்ல, வருங்கால சந்ததியினருக்கும் மற்றும் நம் தேசத்துக்கும்தான்..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு

ரஷ்ய கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. மகா தேசப்பற்றுப் போர் என்று சோவியத் பெயர் சூட்டிய இரண்டாம் உலகப் போரில் எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமே இப்படம்..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு

பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்ஸி காலம். பேச்சுக்கு இருந்த கட்டுப்பாடு உணவுக்கு இல்லை. எனவே சென்னை மயிலை லஸ் முனையிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி அருந்த நண்பர்களோடு சென்றிருந்தேன். வட இந்திய உணவு வகை மற்றும் வேறு பல புதிய உணவு வகைகள் கிடைக்குமிடம். இதுவரை சாப்பிடாத ஏதேனும் ஒன்றை ‘டேஸ்ட்’ செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசை..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.எ. பச்சையப்பன்

1834ம் ஆண்டு வெள்ளையரின் விதேசிகளின் ஆட்சி பாரதத்தில் வேர்பிடிக்கத் தொடங்கிய தருணம்! குடும்பத் தொழில் நொடித்துப் போனதால் ஏற்பட்ட பொருளிழப்பை ஈடுகட்ட ‘சூரியன் அஸ்தமிக்காத’ இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார் ஒருவர். தகிக்கும் வெயிலிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க ஆங்கிலேயர்கள் அப்போது(ம்) கோடைவாசஸ்தலமாகக் கருதிய ஊட்டிக்குச் சென்னையிலிருந்து பயணமானார். நான்கு ‘கூலிகள்’ டோலி கட்டி பதினோரு நாட்கள் மேற்படி கனவானைச் சுமந்துகொண்டு ஊட்டிக்குக் கொண்டு சேர்த்தனர். தமக்கு முன்னரே அங்கே தங்கியிருந்த வில்லியம் பெண்டிங் உள்ளிட்ட நால்வருடன் இணைந்துகொண்ட அந்த ‘போலிப் பயணி’ வடிவமைத்ததுதான் ‘இந்தியத் தண்டனைச் சட்டம்’.

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்

வடக்கே போகும் தேசம் என்றவுடன் ஏதோ நான் தனித்தமிழ் அன்பனாக மாறி சீரிய திராவிடச்சிந்தனையின் பாதிப்பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்னும் நைந்து போன வசனம் பேசுவதாக நினைக்க வேண்டாம். நான் சொல்லும் வடக்கே என்பது இரு பரிணாமப் பரப்பில் உயருவதைக் குறிக்கும் சொல்லாடலான ‘Going north’ என்பதுதான்!

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.