
சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,
தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில சட்டசபை முடிவுகள் 11-12-2018 அன்று வெளியாகின. சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று
மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்கானாவில்
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி
அமைத்தன.
ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பிரதான ஆளும்
அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்திலேயே நேரடிப் போட்டியில் இருந்தது. தெலுங்கானாவிலும்
மிசோரத்திலும் பாஜக பலமான கட்சியல்ல. பாஜகவைப் பொருத்தவரையில் தான்
ஆண்ட மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் தான் ஆண்ட மிசோரத்தை
இழந்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைத் தக்க
வைத்துள்ளது. 2019
தேர்தலுக்கு முன்பாக நடக்கும் சட்டசபைத் தேர்தல் என்பதால்
இத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதில் எந்தச்
சந்தேகமுமில்லை. புள்ளி விபரங்களின்படி உண்மையிலேயே
காங்கிரஸ் அதிக பலம் பெற்றுள்ளதா, பாஜக தனது பலத்தை
முற்றிலும் இழந்துள்ளதா என்பதைக் காணலாம்.
சத்திஸ்கர்:
சத்திஸ்கரில் பாஜக பெருந் தோல்வியைச்
சந்தித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். 15 ஆண்டுகள்
தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கெதிரான மக்கள் மனநிலையின் பிரதிபலிப்பு
என்றே தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பொருள் கொள்ளவேண்டியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பாஜக காங்கிரசைக்
காட்டிலும் 10% வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது.
2003, 2008, 2013ல் இரண்டு
கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் குறைந்துகொண்டே வந்தது. கடந்த 2013 தேர்தலில் 0.75% வாக்கு வித்தியாசமே இருந்தது.
ஆனால் இடங்களைப் பொருத்தவரை கடந்த மூன்று
தேர்தல்களிலும் சராசரியாக காங்கிரஸ் 39-40 இடங்களையும் பாஜக 49-50
இடங்களையும் பிடித்திருந்தது. இத்தேர்தலில் அஜித் ஜோகியின் ஜனதா சத்தீஸ்கர் காங்கிரசும்
பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
2013
Vs 2018 ஒரு
ஒப்பீடு:
மொத்த தொகுதிகள்: 90
ஆண்டு
|
பாஜக
|
காங்கிரஸ்
|
பகுஜன் சமாஜ்வாடி
|
|||
வாக்கு சதவீதம்
|
வென்ற இடங்கள்
|
வாக்கு சதவீதம்
|
வென்ற இடங்கள்
|
வாக்கு சதவீதம்
|
வென்ற இடங்கள்
|
|
2013
|
41.04%
|
49
|
40.29%
|
39
|
4.27%
|
1
|
2018
|
33.0%
|
15
|
43.0%
|
68
|
11.5% (JCCP+BSP)
|
7
|
Source:ECI
சத்திஸ்கர் பழங்குடியினர் மற்றும் தலித் தொகுதிகளுக்கான
முடிவுகள் – ஓர் ஆய்வு
பழங்குடியினர் மொத்த தொகுதிகள் (ST): 29
தலித்துகளுக்கான மொத்த தொகுதிகள் (SC): 10
ஆண்டு
|
பாஜக
|
காங்கிரஸ்
|
||
ST
|
SC
|
ST
|
SC
|
|
2008
|
19
|
5
|
10
|
4
|
2013
|
11
|
9
|
18
|
1
|
2018
|
4
|
2
|
24
|
6
|
Source:ECI
·
2018
தேர்தலில் பழங்குடியினருக்கான 29 இடங்களில்
காங்கிரஸ் 25 இடங்களை வென்றுள்ளது. மேலும் தலித்துகளுக்கான 10 இடங்களில் காங்கிரஸ் 7 இடங்களைக்
கைப்பிடித்துள்ளது. 2013ல், 18
பழங்குடியினர்
தொகுதிகளைக் காங்கிரஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.
·
பாஜக 2008, 2013 தேர்தலில் முறையே 19, 11
பழங்குடியினர்
தொகுதிகளில் வென்றது. ஆனால் 2018 தேர்தலில் பாஜக
பழங்குடியினருக்கான தொகுதிகளில் 3 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ஒரு இடத்தை
அஜித் ஜோகியின் கட்சி வென்றுள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித் தொகுதிகளில்
காங்கிரஸ் தனது கடந்தகால பலத்தைப் பெற்றுள்ளது.
·
காங்கிரஸ் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது.
இது பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு உதவும். அதாவது 2004, 2009 மற்றும் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்
மொத்தமுள்ள 11 பாராளுமன்றத் தொகுதிகளில் 1 இடத்தை மட்டுமே வென்றது. 10 தொகுதிகளில் பாஜகவே
வென்றுள்ளது.
·
சத்திஸ்கர் மக்கள் சட்டசபையையும் பாராளுமன்றத்
தேர்தலையும் பிரித்துப் பார்த்தால் முடிவுகள் அதிக அளவுக்கு பாஜகவிற்கு லாபம்
கொடுக்கலாம். ஆனால் பாஜகவின் வாக்கு சதவீதம் இப்போதுதான் பெரிய அளவில்
சரிந்துள்ளது. மேலும் காங்கிரஸ் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை
அறிவித்தால் பாஜக வெற்றிக்கு கஷ்டப்
வேண்டியிருக்கும்.
·
பாஜகவின் வாக்கு சதவீதம் காங்கிரசைக் காட்டிலும் 10% குறைந்துள்ளது.
2013 தேர்தலை ஒப்பிட்டால் 8% வாக்குகளை
இழந்துள்ளது. இதுவே பாஜகவிற்கான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம்:
மத்தியப் பிரதேசத்தில் எந்தக் கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 230
தொகுதிகளில்
காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109
இடங்களையும்
பெற்றது. பெரும்பான்மைக்குத் தேவை 116 இடங்கள். பகுஜன்
சமாஜ்வாடி (2 இடங்கள்)
சமாஜ்வாடி (1 இடம்) ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. சத்திஸ்கரைப்
போல பாஜக இங்கு படுதோல்வியைச் சந்திக்கவில்லை. 15
ஆண்டுகள்
தொடந்து ஆட்சியில் இருந்தபோதும் கடுமையான போட்டியைக் கொடுத்தது. பாஜகவே
காங்கிரசைக் காட்டிலும் 0.1%
அதிக வாக்குகளைப் பெற்றது. பாஜக 41%, காங்கிரஸ்
40.9%.
14 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும்
பாஜகவின் வெற்றி வாக்கு வித்தியாசம் 2000க்கும் குறைவு.
இதில் 9 இடங்களில் காங்கிரசும், 5
இடங்களில்
பாஜகவும் வெற்றி பெற்றன. அதிலும் 10 தொகுதிகளில்
வாக்கு வித்தியாசம் 1000 க்கும் குறைவு. அதில்
காங்கிரஸ் 7
தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் வென்றது.
Source:NDTV
மத்தியப் பிரதேசம் பழங்குடியினர் மற்றும்
தலித் தொகுதிகளுக்கான முடிவுகள் – ஓர் ஆய்வு
பழங்குடியினர் மொத்த தொகுதிகள் (ST): 46
தலித்துகளுக்கான மொத்த தொகுதிகள் (SC): 35
ஆண்டு
|
பாஜக
|
காங்கிரஸ்
|
||
ST
|
SC
|
ST
|
SC
|
|
2008
|
29
|
25
|
17
|
9
|
2013
|
31
|
28
|
15
|
4
|
2018
|
16
|
17
|
19
|
18
|
Source:ECI
பாஜகவின் தோல்விக்கான காரணங்கள்:
·
காங்கிரஸ் கடந்த 2013 (36.38%), 2008 (32.39%), 2003 (31.61%)
வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரசின்
வாக்கு சதவீதம் கடந்த 2013 (36.38%) தேர்தலைக்
காட்டிலும் அதிக வாக்கு சதவீதத்தை 2018 (40.9%) பெற்றுள்ளது.
·
பாஜக கடந்த 2013 (44.88%), 2008 (37.64%), 2003 (42.5%) வாக்குகளைப் பெற்றுத் தனிப் பெரும் கட்சியாக
ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் இத்தேர்தலில் 3.88% குறைந்துள்ளது.
·
இத்தேர்தலில் பகுஜன் சமாஜ்வாடி (2), சமாஜ்வாடி
(1), சுயேச்சைகள் (4)
இடங்களைப்
பிடித்தனர். இதில் 6
தொகுதிகளில் பாஜகவே இரண்டாமிடத்தில் வந்தது. காங்கிரஸ்14 தொகுதிகளில் மூன்றாம் இடம் அல்லது அதற்கும் கீழாகவே இருந்தது.
·
191
கிராமப்புற தொகுதிகளில் காங்கிரஸ் 103 இடங்களில்
காங்கிரசும், 86 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
·
37 நகர்ப்புறத்
தொகுதிகளில் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 23
இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
·
பாஜக தலித் மற்றும் பழங்குடியினர் தொகுதிகளில்
பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை அட்டவணையைப் பார்த்தாலே புரியும்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகள் 200. ஒரு
வேட்பாளர் தேர்தலின்போது இறந்து விட்டதால் 199
இடங்களுக்குத்
தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் 99 இடங்களையும்
பாஜக 73 இடங்களையும் வென்றன. பெரும்பான்மைக்குத் தேவையான
இடங்கள் 100.
காங்கிரசின் கூட்டணிக் கட்சியான லோக்தள் பெற்ற 1 இடத்தையும் சேர்த்து
100 இடங்களைப் பெற்று ஆட்சி
அமைத்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரசுக்கும் பாஜகவிற்குமான வித்தியாசம் 0.5%
மட்டுமே!
கடந்த கால தேர்தல்களில் கட்சிகளின் வாக்கு
சதவீதமும் இடங்களும்:
ஆண்டு
|
பாஜக
|
காங்கிரஸ்
|
பகுஜன் சமாஜ்வாடி
|
|||
வாக்கு சதவீதம்
|
வென்ற இடங்கள்
|
வாக்கு சதவீதம்
|
வென்ற இடங்கள்
|
வாக்கு சதவீதம்
|
வென்ற இடங்கள்
|
|
2003
|
39.2%
|
120
|
35.65%
|
56
|
3.97%
|
2
|
2008
|
34.7%
|
78
|
36.82%
|
96
|
7.6%
|
6
|
2013
|
45.17%
|
163
|
33.7%
|
21
|
3.37%
|
3
|
2018
|
38.8%
|
73
|
39.3%
|
99
|
4.00%
|
6
|
Source:ECI
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
ராஜஸ்தானில் பாஜக இடங்களை இழந்திருந்தாலும் வாக்கு வங்கியை இழக்கவில்லை.
பாராளுமன்றத் தேர்தலில் மோடிக்கான வாக்குகளைக் குவிக்கும் பட்சத்தில் பாஜகவே அதிக
இடங்களைப் பிடிக்கும் என்று சொல்லி விடலாம். இப்படிப் பார்த்தால் காங்கிரசுக்கு
வந்தவரை லாபம். ஏனெனில் கடந்த 2014 லோக்சபா
தேர்தலில் பாஜக 25/25
இடங்களையும் கைப்பற்றியது. அது இந்தமுறை நடக்குமா என்பதைப்
பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. மேற்கூறிய அட்டவணைப்படி பார்த்தால் பாஜக
கடந்த நான்கு சட்டசபைத் தேர்தல்களிலும் 70 சட்டசபை
தொகுதிகளுக்கும் கீழே செல்லவில்லை. ஆனால் காங்கிரசுக்கு அப்படியல்ல. தனிப்
பெரும்பான்மையைக் கூடப் பிடிக்க இயலவில்லை.
ராஜஸ்தான் பழங்குடியினர் மற்றும் தலித் தொகுதிகளுக்கான
முடிவுகள் – ஓர் ஆய்வு:
பழங்குடியினர் மொத்த தொகுதிகள் (ST) : 34
தலித் மொத்த தொகுதிகள் (SC) : 25
ஆண்டு
|
பாஜக
|
காங்கிரஸ்
|
||
ST
|
SC
|
ST
|
SC
|
|
2008
|
2
|
14
|
16
|
18
|
2013
|
18
|
32
|
4
|
0
|
2018
|
10
|
11
|
13
|
21
|
Source:ECI
ராஜஸ்தானில் பாஜக தலித் மற்றும் பழங்குடியினர்
தொகுதிகளில் 21/59 அளவிற்கே இடங்களைப்
பிடித்துள்ளது. காங்கிரசோ
34/59 இடங்களைப்
பிடித்துள்ளது. மற்ற 4 இடங்களில் பகுஜன்
சமாஜ்வாடியும் இதர கட்சிகளும் பிடித்துள்ளன.
தெலுங்கானா:
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறுதிப்
பெரும்பான்மையுடன் தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. சந்திரசேகர் ராவின்
மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவச திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே அரசியல்
நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர். காங்கிரஸ் மகா கூட்டணி ஒன்றை தெலுகுதேசம்,
தெலுங்கான ஜன சமிதி மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துப்
போட்டியிட்டது. அதற்கு எந்த பலனுமில்லை. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய
சமிதி 88/119
இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 60.
Source:NDTV
தேர்தல் முடிந்த ஐந்து
மாநிலங்களில் தெலுங்கானாவில் மட்டுமே ஆளும் அரசுக்கு ஆதரவாக மக்கள்
வாக்களித்துள்ளார்கள். அதிலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக 25 இடங்களை
TRS கட்சிக்கு கிடைக்கச் செய்துள்ளார்கள். காங்கிரஸ்
கூட்டணி கடந்த 2013 தேர்தல்படி பார்த்தால் 37 இடங்களைப்
பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை 16 இடங்கள் குறைந்து 21 இடங்களே
பிடித்துள்ளது. பாஜகவைப் பொருத்தவரையில் கடந்த
தேர்தலைக்காட்டிலும் நான்கு இடங்கள் குறைந்து ஒரு இடத்தைப் பிடித்தாலும் வாக்கு
சதவீதம் அதிகரித்தே உள்ளது. மேலும் பாஜக தெலுங்கானாவில் ஒரு முக்கியக் கட்சியல்ல.
லோக்சபா தேர்தலில் மஹா கூட்டணி அமைத்தால் மட்டும் வெற்றி கிடைக்காது என்பதன்
முன்னோட்டமாக தெலுங்கானா முடிவுகளை அரசியல் வல்லுனர்கள் முன்வைக்கிறார்கள். டிஆர்எஸ்தான்
லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களைப் பிடிக்கும். அதன் தலைவர் மற்றும் முதல்வரான
சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வாறாக மூன்றாவது அணி அமைந்தால் பாஜகவிற்கு லாபமில்லாவிட்டாலும் காங்கிரசுக்குப்
பெருத்த நஷ்டம் ஏற்படும். ஏனெனில் மாநில கட்சிகள் கோலோச்சும் பல மாநிலங்களில்
பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அம்மாநிலங்களில்
காங்கிரசுக்கு சில இடங்களை ஒதுக்கினால் காங்கிரசின் மொத்த எண்ணிக்கை உயரும். அதைத்தான்
மூன்றாவது அணி தடுக்கும்.
மிசோரம்:
மிசோரத்தில் மொத்த தொகுதிகள் 40. பெரும்பான்மைக்குத்
தேவையான இடங்கள் 16. மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களைப் பிடித்துள்ளது. ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 5 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. பாஜக 1 இடத்தில்
வெற்றி பெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மொத்தம் 7.
மோடியின் கடந்த நான்கு வருடங்களில் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரசின் ஆட்சியை
அகற்றி பாஜக மற்றும் வடகிழக்குப் பிராந்திய கட்சிகளின் ஆட்சி அமைந்துள்ளது.
காங்கிரஸ் ஏழு மாநிலங்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் இது
பாஜகவிற்கு சாதகமான அம்சம். ஏனெனில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பிரதான
ஆளும் அல்லது எதிர்க்கட்சியாகவே இருந்து வந்துள்ளது. அவ்வகையில் பார்க்கும்போது மொத்தமுள்ள
26 வடகிழக்குப் பாராளுமன்றத் தொகுதிகளில் தேர்தலுக்குப்
பிந்தைய அல்லது முந்தைய கூட்டணியை பிராந்தியக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க
அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
மிசோரத்தில் கிறித்துவ
மக்கள் தொகை 87%.
பௌத்தர்கள் 8.5%, இந்துக்கள் 2.7%. பாஜக இந்தத்
தேர்தலில் 0.3%
(2013) லிருந்து 8% (2018) தேர்தலில்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை ஆட்சிக்குப்
பெரும்பாலும் வருவது மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தே
அமைந்து வந்துள்ளது. ஆகையால்தான் 2014-2014 காலக்கட்டங்களில்
காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வந்தது என்பது முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லை என்றாலே
பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வடகிழக்குப் பிராந்தியக் கட்சிகள் உதவும்.
Source:ECI