Monthly Archives: October 2019

வலம் அக்டோபர் 2019 இதழ் அறிவிப்பு (4ம் ஆண்டுச் சிறப்பிதழ்)

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் – சில குறிப்புகள் | ஓகை நடராஜன்திருப்பங்களுடன் கூடிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னாஇந்திய இறைமையும் ஈழப் போராட்டமும் – அகரமுதல்வன்சில பயணங்கள் சில பதிவுகள் – 23 | சுப்புமகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 6) | தமிழில்: ஜனனி ரமேஷ்சந்திரயான் – கோல் முதல் கோள் வரை | சுஜாதா

Read More

வலம் ஆகஸ்ட் 2019 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் ஆகஸ்ட் 2019 படைப்புகள் இந்துத்துவ முன்னோடி கஸலு லட்சுமிநரசு செட்டி | அரவிந்தன் நீலகண்டன் பீஷ்ம நாரயண் சிங்கின் ஆலிங்கனம் | ஜெயராமன் ரகுநாதன் அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’: அறியப்பட்ட ஆளுமைகளின்  அறியப்படா முகங்கள் | செ.ஜகந்நாதன் ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் | அரவக்கோன் சில பயணங்கள் சில பதிவுகள் (பகுதி – 21) | சுப்பு இமயத்தின் விளிம்பில் – நிறைவுப் பகுதி (ஆதி கைலாஷ் யாத்திரை) |

Read More

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்

பகுதி 4 மூன்றாவதாக, அதே காரணத்துக்காக பேட்ஜின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அவரே பேசியதாவது: ‘அடுத்த 5 அல்லது 10 நிமிடங்களில் ஆப்தேவும், கோட்சேவும் கீழே இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து சாவர்க்கரும் உடனே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம் சாவர்கர் கூறியதாவது: ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’. இந்த வாக்கியத்தை நான் சொன்னேன் என்றே வைத்துக் கொண்டாலும், அது நிஜாம் ஒத்துழையாமை அல்லது அக்ரணி தினசரிக்கு நிதி திரட்டுதல் அல்லது இந்து ராஷ்ட்ர பிரகாஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்றல்

Read More

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பகுதி 4 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

குறுகிய இனவாதம் சுதந்திரத்தைப் பெறுவதிலிருந்து நம்மைத் தடை செய்கிறது பகுதி  சென்ற கட்டுரையில் செய்யப்பட்ட அவதானிப்புகள் பல அறிவுசார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் பிரச்சினையின் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு வருவதற்கு முன்பு அவற்றை விரிவாக விவாதிப்பது அவசியமாகும். ஹிந்து மற்றும் இஸ்லாமிய மதங்களும் கலாசாரங்களும் தங்களைப் பின்பற்றுபவர்களை இயற்கையாகவே ஒருவருக்கொருவர் விரோதப் போக்குடையவர்களாக மாற்றும் அளவிற்கு அடிப்படையாக வேறுபட்டதா? அல்லது இன்னும் குறிப்பாக, ஒன்றுக்கொன்று விரோதமானதாக இருக்கிறதா? அப்படியானால், இரண்டிற்கும் இடையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த

Read More

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலா

கடிதம் 3 திரும்பி பார்க்கையில் ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அந்த சந்தோஷமான நாள் திரும்பவும் வந்திருக்கிறது. வீட்டில் இருந்து ஒரு செய்தி வருவதும் வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும் எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பது சிறையில் இருக்கும் ஒருவருக்குதான் நன்றாகத் தெரியும். நாம் நேசிக்கும் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து நிலவொளியில் உரையாடுவதைப் போல மனதுக்கு ரம்மியமானது அது. ஒரு நிமிடம் பொறு. மணி அடித்துவிட்டது. நான் போய் உணவு உட்கொள்ள வேண்டும். காலை மணி பத்தாகி

Read More

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் – ஆண்டாள், நாச்சியார் திருமொழி ஸ்ரீரங்கவாசிகளுக்கே ‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும் வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில் க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும். தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது. இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட

Read More

இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்

பகுதி 1 இங்கே வாசிக்கலாம். பகுதி 2 குஞ்சி நோக்கி செல்லும் வழியெங்கும் தேவதாரு மரங்களும் பைன் மரங்களும் தென்படுகின்றன. தவிர காற்றோடு ஏதோ ஒரு நறுமணம் பரவுகிறது. வாசனை மரங்கள் பலவும் இங்கிருப்பதாக அறிந்தோம். தவிர இங்கு போஜ்பத்ரா மரங்களும் அதிகம். இந்த மரத்தின் பட்டையில்தான் விநாயகர் பாரதம் எழுதினாராம். போஜ்பத்ரா மரப்பட்டைகளை இங்கு விற்கிறார்கள். இது வீட்டில் இருப்பது நல்ல அதிர்வுகளைத் தரும் என்றார்கள். அதில் ஏதேனும் படம் வரையலாமென்று நானும் கொஞ்சம் மரப்பட்டைகள்

Read More

சில பயணங்கள் சில பதிவுகள் (பகுதி – 21) | சுப்பு

பரந்தவெளியில் பரவச நிலைகள் ‘சித்தெடுத்த மெய்ஞானியர் சிறையெடுத்திடும் திருவருள் முத்தெடுத்த மென்முறுவலை முகமெடுத்திடும் பேரொளி வித்தெடுத்து என்வேதனை வேரெடுத்திடும் மந்திரம் பித்தெடுத்தவன் காதலி பெரும் பேரெடுத்தவள் பைரவி’ என்று கவிதை தொடர்ந்தது. எழுதி முடிக்கும் வரை எனக்கு வேறு பிரக்ஞை இல்லை. முடித்துவிட்டுக் கைக்கடிகாரத்தைப் பார்த்தால் இரவு மணி பன்னிரண்டு. காலையில் நிஜாம்பட்டினம் போய்ச் சேர்ந்தோம். அங்கே போனவுடன் புத்தி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. அன்று பூராவும் கண்ணனோடு ஊர் வம்பு பேசுவதில் பொழுது போயிற்று.

Read More

ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் | அரவக்கோன்

விஜயநகரப் பேரரசுக்கு கர்நாட அரசு என்றும் ஒரு பெயர் இருந்தது என்பது அப்போது எழுதப்பட்ட நூல்களில் இருந்து தெரிகிறது. போர்ச்சுகீசியர் பிஸ் நெகர் (Bisnegar) அரசு என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர். பொயு 1336ல் இன்றைய வடக்கு கர்நாடக மாநிலத்தில் துங்கபத்திரா நதியின் தெற்குப் பகுதியில் விஜயநகர அரசு தோற்றம் கண்டது. ஹக்கராயர் (ஹரிஹர ராயர் ஹக்கா) புக்கராயர் (புக்கா) என்னும் இரு சகோதரர்கள் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாகப் பின்னர் விளங்கிய ஸ்ரீவித்யாரண்யரால் வழிகாட்டப்பட்டு இந்த

Read More

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’: அறியப்பட்ட ஆளுமைகளின் அறியப்படா முகங்கள் | செ.ஜகந்நாதன்

தமிழறிஞர்கள், அ.கா.பெருமாள், காலச்சுவடு. காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’ என்னும் நூல் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, பழந்தமிழ் இலக்கியங்களுடன் தொடர்புடைய 40 தமிழ் அறிஞர்களைப் பற்றிய தொகுப்பு நூல். ஐந்து ஆண்டுகாலம் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் இடம்பெற்றுள்ள 40 நபர்களைத் தவிர மேலும் 80 பேரைப் பற்றிய தகவல்களை ஆசிரியர் சேகரித்து வைத்துள்ளதாக முன்னுரையில் கூறுகிறார். அச்செய்திகளும் எதிர்காலத்தில் நூலாக்கம் பெறக்கூடும். நூலில் இடம்பெற்றுள்ள 40 நபர்களும்

Read More