வலம் நவம்பர் 2020 இதழ்

வலம் நவம்பர் 2020 இதழின் உள்ளடக்கம்.

 

தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீனிவாஸ் 

தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

சொந்த நாட்டின் அகதிகள் – THE EDGE (2010) | அருண் பிரபு

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்

இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை…

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

ஏதோ எரிச்சலில் இருந்த நான், அவர் சொல்வதைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் “பேசறது அய்யர். கேட்கப் போறதும் அய்யர். இதில் உங்களுக்கு என்ன ஆர்வம். நீங்கள்தான் எப்போப் பார்த்தாலும் அய்யர் என்று எதிர்த்துக் கொண்டு இருக்கிறீர்களே” எனப் படபடவென்று சொல்லிவிட்டேன்..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்

இன்றைய ஊடகச் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நீரோட்டத்தில், தமிழகத்தில் கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன் என்ற ஜி.ஏ.நடேசன் அவர்களின் பங்களிப்புப் பற்றியெல்லாம் படிக்கவோ எழுதவோ ஒருவருமில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரலாற்றில் ஜி.ஏ.நடேசன் அவர்களின் பங்களிப்பு அபாரமானது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது…

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

வாழ்க்கையின் அகப் பொருளைத் தேடத் தொடங்குகிறான் லார்ரி. இந்தியா வருகிறான். இமயமலைப் பகுதிகளில் உள்ள யோகிகளை சந்திக்கிறான். தென்னிந்தியாவில் கேரளத்திற்கு வருகிறான். அங்கே ஒரு குருவிடம், அவர் ஆசிரமத்திலேயே இருந்து யோக முறைகளைக் கற்கிறான். மனது பண்பட்ட நிலையில் மீண்டும் பாரிஸுக்கு வந்து பழைய காதலியைச் சந்திக்கிறான்…

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்

வியாச பாரதத்தில் கர்ணன் தோல்வியைத் தழுவும் தறுவாயில் ‘இவ்வளவு தர்மம் செய்தேனே! தர்மம் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று தர்ம நிந்தனை செய்கிறான். ‘தர்மம் தலை காக்கும்’ என்ற பாரம்பரியமான கருத்து இதில் அடிபட்டுப் போகிறதோ என்ற எண்ணத்தினாலோ என்னவோ (உண்மையில் வியாச பாரதத்தின் இந்தக் கட்டம் தர்மத்தின் மீதான அவநம்பிக்கை எதையும் ஊட்டவில்லை) வில்லிபுத்தூரார், கர்ணன் செய்த தர்மத்தின் பலன்களையெல்லாம் ஒரு பிராமணன் வடிவில் வந்து யாசித்துப் பெற்றதாக ஒரு கற்பனையை உள்ளே நுழைத்தார்…

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு

இந்தப் படத்தின் மூலம் சைபீரியச் சிறைகளில் மக்கள் பட்ட கொடுமைகளை விவரிக்க எண்ணியதாக இயக்குநர் அலெக்சி உசிடெல் தெரிவித்துள்ளார். ரஷ்யர்கள் மற்ற மொழி, வட்டார சோவியத் மக்களை அடிமைகள் போல நடத்தியதையும் குறிப்பிட்டுள்ளார் அவர். உலகமே வியக்கும் உன்னத கம்யூனிசம் என்று பேசும் இவர்கள் சொந்த நாட்டு மக்களையே அடிமைப்படுத்தி சிறைவைத்த கொடுமைக்காரர்கள். இதை அவர்களே ஒவ்வொன்றாக வெளியே சொல்வது கம்யூனிஸ்ட்டுகளின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டுகிறது…

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

இந்து மதத்திலேயே பிறந்து இந்துவாக வளர்ந்து, அந்த இந்து மதத்தையே அழிக்க ஆசைப்படுகிற சில ‘ஐயாக்கள்’ இருக்கிறார்கள்! இவர்கள்தாம் இந்து மதத்துக்கு ஆபத்து விளைவிப்பவர்கள்! இவர்களிடத்தில் நாம் விழிப்போடு நடந்து கொள்ள வேண்டும்!

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்

‘போட்டியிடும் நாடு’ என்பதிலிருந்து ‘வளர்ந்த நாடு’ என்கிற அடுத்த கட்டத்துக்கு ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டியுள்ளது.

அத்தகைய பாய்ச்சலுக்கு இந்தியாவை தயார் செய்யவும் ஆற்றுப்படுத்தவும் ஒரு புரட்சிகரமான கல்வித் திட்டம் தேவை.

அந்தக் கல்வித் திட்டம்தான் ‘தேசியக் கல்வித் திட்டம் 2020’…

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.