
தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.
தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.
கர்ணனை அணுகுதல்
அர்ஜுனனுடனான இறுதிப் போரின்போது, கர்ணனுடைய தேர்ச்சக்கரம் பூமியில் அமிழத் தொடங்கியதும், ‘நான் இந்தத் தேர்ச்சக்கரத்தைத் தூக்கும் வரையில் என்மீது அம்பு தொடுக்காமல் இரு என்று உன்னை தர்மத்தின் பேரால் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கர்ணன் சொன்னதும், அர்ஜுனனுடைய தேர்ச்சாரதியான கண்ணன், ‘உனக்கு இப்போதாவது தர்மத்தின் மீது நினைவு வந்ததே’ என்று சொல்லிவிட்டு, கர்ணன், பாண்டவர்களுக்குச் செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு ‘அப்போதெல்லாம் உன் தர்மம் எங்கே போனது’ என்று அவனை நோக்கிப் பதினோரு கேள்விகள் எழுப்பியதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்
கர்ணனை அணுகுதல் – ஒரு விளக்கக் குறிப்பு
ஜனவரி 2021 இதழில் நாம் பாண்டவர்களுடைய வனவாச காலம், காலக்கணக்குப்படி அதிகமாகவே இருந்தது என்ற பீஷ்மருடைய விளக்கத்தை மேற்கோள் காட்டி, ‘இந்த விளக்கம் இன்னமும் முடிவுபெறவில்லை’ என்பதையும் தெரிவித்து, ‘இது பீஷ்மருடைய விளக்கம். இதை துரியோதனன் ஏற்கவில்லை. இந்த விஷயத்தை அடுத்த இதழில் தொடர்ந்து காண்போம்’ என்ற குறிப்போடு முடித்திருந்தோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 11 | ஹரி கிருஷ்ணன்
செப்டம்பர் 2020 இதழில் கர்ணனைக் குறித்து ஆசிரியர் குழு எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு விடைகூறும் முகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்
கர்ணனை அணுகுதல்
கர்ணனைக் குறித்த ஒரு பொதுவான ஆய்வாக நாம் பதிலளித்துக்கொண்டிருக்கும் மூன்றாம் தவணை இது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன்
கர்ணனை அணுகுதல்
(செப்டம்பர் 2020 இதழின் தொடர்ச்சி..)
வலம் குழுவினர் தொகுத்து அனுப்பியிருந்த கர்ணனைக் குறித்த சில கேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வில்லி பாரதம், ஜைமினி பாரதம் போன்ற படைப்புகளின் ஆசிரியர்கள் காரணத்தோடோ, காரணமின்றியோ செய்திருக்கும் மாறுதல்கள் உருவாக்கியிருக்கும் கட்டமைப்பே கர்ணனைப் பற்றி இன்று நிலவிவரும் பிம்பத்துக்கு அடிப்படையாக இருப்பதைப் பார்த்தோம். வியாச பாரதத்தில் கர்ணன் தோல்வியைத் தழுவும் தறுவாயில் ‘இவ்வளவு தர்மம் செய்தேனே! தர்மம் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று தர்ம நிந்தனை செய்கிறான். ‘தர்மம் தலை காக்கும்’ என்ற பாரம்பரியமான கருத்து இதில் அடிபட்டுப் போகிறதோ என்ற எண்ணத்தினாலோ என்னவோ (உண்மையில் வியாச பாரதத்தின் இந்தக் கட்டம் தர்மத்தின் மீதான அவநம்பிக்கை எதையும் ஊட்டவில்லை) வில்லிபுத்தூரார், கர்ணன் செய்த தர்மத்தின் பலன்களையெல்லாம் ஒரு பிராமணன் வடிவில் வந்து யாசித்துப் பெற்றதாக ஒரு கற்பனையை உள்ளே நுழைத்தார். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்
கர்ணனை அணுகுதல்
Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்
விலக்கப்பட்ட வேள்வி
மே மாத இதழில் நம்முடைய ஐந்தாவது கேள்வியாகப் பின் வருவதை எழுப்பியிருந்தோம்: ‘பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில்—அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், Continue reading மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்
5 பாண்டவ கௌரவன்
தலைப்பு நகை முரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பதை பின்னால் பார்க்கலாம். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில் விடையளித்த பிறகு மற்ற கேள்விகளை எழுப்பத் தொடங்குவோம். நாம் எழுப்பிய முதல் கேள்வி இது: திருதராஷ்டிரன், பிறவியிலேயே கண் தெரியாதவனாக இருந்த காரணத்தால், பாண்டுவிடம் அரசு தரப்பட்டது என்றால், அரசு ஒப்படைக்கப்பட்டதா அல்லது, ஒரு மாற்று அரசனாகத் தாற்காலிகப் பொறுப்பில் பாண்டு அரசேற்றானா அல்லது, பாண்டுவின் நிலை வேறெதுவுமா?
மஹாபாரதத்தின் கதை அமைப்பின்படி, இந்தக் கேள்விக்கான விடை, பாண்டு அரசேற்ற அல்லது, திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்துச் சென்ற கட்டங்களில் இல்லை. பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தூது அனுப்பிக் கொண்டும், யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டும் இருக்கின்ற சமயமான உத்யோக பர்வத்தில்தான் வருகிறது. கிருஷ்ணர் தூது வந்திருக்கிறார். ஒவ்வொருவரும் துரியோதனனுக்கு அவன் செய்யும் தவறை எடுத்துச் சொல்லி, இதோபதேசமாக, முழு நாட்டை இல்லாவிட்டாலும் பாதி அரசையாவது கொடுக்கும்படியாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனோ எதற்கும் செவி சாய்க்காமல், தான் பிடித்த பிடியில் நின்று கொண்டிருக்கிறான்.
Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 5) | ஹரி கிருஷ்ணன்
அரசன் கர்ணனும் கூட்டு அனுமதியும்
துரியோதனன், கர்ணனை அங்க தேச மன்னனாக்கிய சமயத்தில் பாரதம் சொல்லும் விவரங்கள் துரியோதனனுக்கு சுயேச்சையாக முடிவெடுக்க முடியாத நிலை இருந்ததை உணர்த்துகின்றன. இந்நிலை துரியோதனனுக்கு மட்டுமல்லாமல் திருதராஷ்டிரனுக்கும் இருந்தது என்பதையும் இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன.
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக் களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை என்ன, திருதராஷ்டிரன் வகித்தததாகச் சொல்லப்படும் பதவிதான் என்ன என்பதைப் பற்றி சில கேள்விகளை எழுப்பினோம்.
Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்