லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

நம்முடைய பாடப் புத்தகங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. அண்மையில் எழுந்த சர்ச்சை மொகலாய மன்னர்கள் தாங்கள் இடித்த ஹிந்துக் கோவில்களை மீண்டும் சீரமைத்தார்கள் என்பது. இதற்கு ஆதாரங்கள் உண்டா எனத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது ‘இல்லை’ என என்.சி.ஈ.ஆர்.டி நிறுவனம் பதிலளித்துள்ளது..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘என் சரித்திரம்’ மிகவும் புகழ்பெற்ற நூல். அதைப் போலவே முக்கியமான மற்றொரு நூல் அவர் எழுதிய அவரது குருநாதரின் வாழ்க்கை வரலாறு. ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’. Continue reading லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையார் பெயர் சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். எனவே புதிதாக ஆரம்பிக்கிற இந்த ‘லும்பன் பக்கங்கள்’ தொடரையும் அவர் விஷயத்திலிருந்து ஆரம்பிப்பதில் தவறில்லை. Continue reading லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்நாட்டில் திராவிட இயக்க அலை அடித்த போது அதனை எதிர்த்து நின்றதோடு, ஹிந்து தர்மத்துக்காகக் குரல் கொடுத்த முக்கியமான ஊடகவியலாளர்கள் உண்டு. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் இல்லாமல், அவர்கள் தீர்மானமாக ஹிந்து தர்மத்தை ஆதரித்தனர். திராவிட இயக்க போலித்தனங்களைத் தோலுரித்தனர்.

அப்படிப்பட்ட ஒரு ஊடகவியலாளர் தமிழ்வாணன் அவர்கள். தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களால் தமிழ்வாணன் எனப் பெயர் சூட்டப்பட்டவர் அவர். ‘துணிவே துணை’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர். Continue reading தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி

முனைவர் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைவர். 2019 ஜனவரியின் போது சனாதனத்தை ஒழிப்போம் என்கிற போர் அறிவிப்புடன் ஒரு மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுக, இடது கம்யூனிஸ்ட் வலது கம்யூனிஸ்ட் ஆகியோருடன் இஸ்லாமிய வகுப்புவாத கட்சிகளும் கலந்து கொண்டன. Continue reading அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி

சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

அந்த அமெரிக்க ஆராய்ச்சியாள தம்பதிகள் நாட்டுப்புறத் திருவிழாவைக் காண அந்த கிராமத்துக்கு வந்திருந்தனர். நகர்ப்புறங்களிலிருந்து மிகவும் விலகி இருந்த கிராமம் அது. அந்தத் தம்பதிகளுக்கு வழிகாட்டியாக ஒரு பதினேழு வயது இருக்கும் கிராமப்பெண் கிடைத்தாள். கெட்டிக்கார பெண். தன் பணியைச் செவ்வனே செய்தாள். கிராமத்திலிருந்த மிருக ஆஸ்பத்திரி அந்தத் தம்பதிகளின் கவனத்தை ஈர்த்தது. அங்கே சென்று பார்க்கலாமா? ஓ சரி என்றாள் அந்த வழிகாட்டிப் பெண். Continue reading சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

அயோத்தி தீர்ப்பு – உண்மை மதச்சார்பின்மையின் வெற்றி | அரவிந்தன் நீலகண்டன்


அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்ட இறுதியாக அனுமதி கிடைத்துவிட்டது. பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகளாக இந்துக்கள் மேற்கொண்ட ஒரு பெரும் தொடர் போராட்டம் அமைதியான ஆர்ப்பாட்டமற்ற வெற்றியை அடைந்திருக்கிறது.
சர்வதேச அளவில் மதச்சார்பின்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய சமீபத்திய வெற்றி இதுதான்.
ஸ்வராஜ்யா பத்திரிகையின் இணைய ஆசிரியர் ஆருஷ் தாண்டன் தீர்ப்பு வரும் அன்று அதிகாலை தனது ட்விட்டரில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார்:
‘சற்றேறக்குறைய 100 கோடி மக்களைக் கொண்ட மதத்தின் சமுதாயம், அதன் மிக மிக ஆதாரமான புனித இடத்தில் கோவில் கட்ட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய மதச்சார்பற்ற நாட்டின் நீதிமன்றத்தை நம்பிக் காத்திருக்கிறார்கள். இதை போல் வேறெங்காவது பார்க்க முடியுமா?’
பின்னர் அன்று காலை பத்திரிகையாளர் மின்ஹாஸ் மெர்ச்சண்ட் இதே விஷயத்தை மீண்டும் சுட்டிக்காட்டினார்.
இந்தியா போல தன்னியல்பிலேயே மதச்சார்பின்மை கொண்ட தேசத்தில்தான் 80 விழுக்காடு பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் 70 ஆண்டுகளாக தாம் கோவில் கட்ட சட்டபூர்வமான ஒரு தீர்ப்புக்காகக் காத்திருப்பார்கள். இந்தியாவுக்கு மத சகிப்புத்தன்மை குறித்து உபதேசப் பேருரை செய்யும் மேற்கத்திய ஜனநாயகங்கள் கொஞ்சம் தங்கள் வரலாறுகளைப் பார்த்தால் நலம்.
அப்படியானால் டிசம்பர் 6 1992?
இந்தியாவின் சராசரி முஸ்லிமுக்கு இது மிகப்பெரிய துயரத்தை அளித்தது. அது முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடியதுதான். இதன் விளைவாக முஸ்லிம் சகோதரர்கள் இயல்பாக, பாதுகாப்பற்ற உணர்வில் ஆழ்ந்தார்கள். அன்னிய முதலீட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு இரையானார்கள். இது ஒரு விஷச்சுழலை உருவாக்கியது.
ஆனால் இதை உருவாக்கியவர்கள் இந்துத்துவர்கள் அல்ல.
இதை உருவாக்கியவர்கள் இடதுசாரிகள். மார்க்ஸியவாதிகள்.
தொடக்கம் முதல் ஹிந்துத்துவ இயக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த ஒரு விஷயம், இது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மதப்பிரச்சினை அல்ல என்பதுதான். ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்களில் ஒருவரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும் இருந்த கல்யாண் சிங் உருக்கமாக சொன்னார்:  ‘நாங்கள் ஸ்ரீ ராம ஜென்மபூமியாக தலைமுறை தலைமுறையாக வழிபடும் இந்த இடத்தை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில் செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள் கட்டித்தருகிறோம்.’
அதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் பெரிய அளவில் ஒத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது அவர்கள். அதை இல்லாமல் ஆக்கியவர்கள் மார்க்சியக் குறுங்குழு ஒன்று என்கிறார் அவர்.
அக்காலகட்டத்தில் வெளிப்படையாகக் களமிறங்கியவர்கள் பெரும் மார்க்சிய அறிவுஜீவிகள். ஆனால் அவர்கள் அனைவரும் கச்சிதமாக கல்வி சமூக-வரலாற்று ஆராய்ச்சி அமைப்புகளில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள்தான் பாடநூல்களை வடிவமைத்தார்கள். அவர்களை பொதுவாக மக்கள் வரலாற்று அறிஞர்களாகப் பார்த்தார்களே தவிர ஒரு அரசியல் தரப்பின் சித்தாந்தத் தரகர்களாகப் பார்க்கவில்லை.
அவர்கள் அந்த இடம் மசூதிதான் என்றார்கள். ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரம் எதுவுமில்லை என்றார்கள். புராண மத நம்பிக்கைகளை வரலாறாகத் திரித்து அரசியல் செய்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றார்கள்.
ஜனவரி 1991ல் மார்க்ஸிய வரலாற்றறிஞர்களான ஆர்.எஸ்.ஷர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பர் உட்பட 42 அறிவுஜீவிகள் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டார்கள். ‘அங்கே கோவில் இருந்ததற்கான சான்றுகளே இல்லை.’
இன்னும் கூட சொன்னார்கள், ‘ராமரைக் கும்பிடும் வழக்கமும் அயோத்தியைப் புனிதமாகக் கருதுவதும் கூட பின்னாட்களில் ஏற்பட்டதுதான்.’
ஹிந்து தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில் பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில் என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்; ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக் குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன ராமர் கோவிலுக்கு ஆதாரங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்தது. அதிர்ச்சி அடைந்த அறிவுஜீவிகள் அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள்.
அகழ்வாராய்ச்சியாளர் பி.பி.லால், ராம ஜென்ம பூமி – பாப்ரி அமைப்பு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர். அவர் அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதை உறுதி செய்தார். இடதுசாரிகளோ, இல்லவே இல்லை அது பொய், லால் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறார் என்றார்கள். அவரது ஒரிஜினல் அறிக்கையில் அவர் அதைக் கூறவே இல்லை என்றார்கள். அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது இதை மறுத்தார். 1977களில் பாப்ரி அமைப்பினையொட்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இருந்த ஒரே முஸ்லிம் தான் மட்டுமே என்பதை நினைவுபடுத்திய அவர் ‘பாப்ரி அருகே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்துக்கு நான் சென்று பார்த்தேன். அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதைக் கண்டேன்’ எனத் திட்டவட்டமாக கூறினார்.
தண்டனையாக அதன் பின்னர் கே.கே.முகமது இடமாற்றமும் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதைக் குறித்தெல்லாம் கவலை அடையவில்லை. அவர் கூறிய சான்றாதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்தது. கேகே முகமது அவர்களின் சாட்சியத்தை வெளியே கொண்டு வர உதவியவர் ஐராவதம் மகாதேவன்.
ஆனால் இடதுசாரிகள் விடவில்லை. நாடு முழுக்கத் தங்கள் இயக்கங்களைப் பயன்படுத்தி, பெரிய பிரசாரம் செய்தார்கள். ‘புத்த கயாவின் கதை என்ன? அதை ஹிந்துக்கள் அழிக்கவில்லையா? ஆக்கிரமிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
ஆனால் உண்மை அப்படி அல்ல. வரலாற்றாராய்ச்சியாளர் டாக்டர்.அப்துல் குதோஸ் அன்ஸாரி விளக்கினார்:
‘பௌத்தம் செழித்து வளர்ந்திருந்த புத்த கயா பகுதியில் இஸ்லாமின் சிலை உடைப்புத் தீவிரம் பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும். இதன் விளைவாக அங்கே பௌத்தர்களே இல்லாமல் அழிந்துவிட்ட நிலையில் அங்கு (சிதைக்கப்பட்ட) பௌத்த விகாரங்களை வழிபட, பராமரிக்க ஆளில்லாத நிலையில் பிராமணர்கள் தங்கள் மதக்கடமைக்கு வெளியே சென்று அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.’
ஆனால் இத்தகைய வரலாற்று நுண் உண்மைகளைக் குறித்துப் பேசிடும் நிலையில் இல்லை இடதுசாரி பிரசாரகர்கள். வலுவான ஊடகமும் அதிகார வர்க்கமும் ஒரு பக்கம் அணிதிரள, அயோத்தியில் ராமனுக்கு ஓர் ஆலயம் இல்லையா என்கிற ஆதங்கம் வெகுஜன மக்கள் மனத்தில் அலையடிக்க ஆரம்பித்தது. இஸ்லாமியர் மனத்திலோ, அது ஒரு மசூதி என்கிற எண்ணம் ஆழப்பதியத் தொடங்கியது.
இந்நிலையில் அக்டோபர்-நவம்பர் 1990 – தேவ தீபாவளி எனப்படும் வடநாட்டு கார்த்திகா பௌர்ணமி தினத்தன்று அயோத்தியில் குழுமிய கரசேவர்களை முலாயம் சிங் யாதவின் அரசு படுகொலை செய்தது. அதிகாரபூர்வமாக 13 முதல் 16 என்கிறார்கள். ஆனால் நிச்சயம் ஐம்பதுக்கு அதிகம் கரசேவகர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. பல உடல்கள் மண் சாக்கில் கட்டி சரயு நதிக்குள் வீசப்பட்டு பின்னர் அழுகி உருகுலைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டன.
இதன் விளைவாக அடுத்த தேர்தலில் உத்தர பிரதேசத்தை பாஜக வென்றது. கல்யாண் சிங் முதலமைச்சரானார். சர்ச்சைக்குட்பட்ட நிலத்தை சுற்றி நிலத்தைக் கையகப்படுத்தினார்.
இதற்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. கரசேவகர்கள் கடும் வருத்தமடைந்தனர். ஆனால் 1991ல், உச்சநீதிமன்றம் சொன்னதைக் கேட்டு அமைதி காத்தனர். உடனே ஊடகங்கள் ‘கரசேவை பிசுபிசுத்துவிட்டது; ராமஜென்மபூமி மீட்பு இயக்கம் சக்தி இழந்துவிட்டது’ என்று பேசின.
1991ல் கூறப்பட்ட தீர்ப்பு 1992 இறுதியில் கூட கொடுக்கப்படவில்லை. இத்தனை உணர்ச்சிபூர்வமான விஷயத்தில், லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கும் இருந்து வந்து அயோத்தியில் குழுமியிருக்கும் ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது சில வாரங்கள் தாமதமானால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் தாமதமானால்? தங்கள் பொறுமை அதிகார வர்க்கத்தால் துச்சமாக விளையாட்டுப் பொருளாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டனர் கரசேவகர்கள். அதனால்தான் டிசம்பர் ஆறு 1992ல் பொங்கியெழுந்தனர். அது துரோகமென்றால், துரோகத்தின் முதல் கல்லை இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மை பேசும் அதிகார வர்க்கம் அவர்கள்மீது வீசியது.
இக்கும்மட்டங்கள் இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஜனவரியில் சென்னையில் ஒரு சர்வமத தலைவர்களும் அரசியல்வாதிகளும் கொண்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராக இருந்தவர் காந்தியரும் வரலாற்றாசிரியருமான தரம்பால்.
தரம்பால் அந்த இடிப்பு பெரும்பான்மை இந்தியர்களுக்கு நன்மையைத் தந்ததாகவே கூறினார். மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு இது, இதற்கு ஒரு தனி இயக்கமோ அல்லது கட்சியோ பொறுப்பாக முடியாது என்றார்.
விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசுக்கும் பாரத தேசத்துக்கும் ஏற்பட்ட பிளவை இந்த இயக்கம் சமன் செய்கிறது. அது வெற்றி அடையுமா என்னவாகும் என்பது தெரியாது என்பதுதான் உண்மை – இதுதான் அவரது மைய கருத்து.
அதன் பின்னர் 2003ல் வழக்குக்காக அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தது. ஒரு கனேடிய புவியியல் நிறுவனம் முதலில் ஆராய்ந்து, அங்கே பாப்ரி அமைப்புக்குக் கீழே மற்றொரு அமைப்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தது. அகழ்வாராய்ச்சியில் தேவநாகரி கல்வெட்டு உட்பட, சில மனித உருக்கொண்ட விக்கிரகங்களும் கிடைக்க ஆரம்பித்தன. நவீத் யார் கான் என்ற ஒரு பாப்ரி ‘மசூதி’ ஆதரவாளர் அகழ்வாராய்ச்சிக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்திடம் கோர, அது தள்ளுபடி ஆயிற்று.
ஜூன் மாதத்தில் மீண்டும் ஊடக காமெடி தொடங்கியது. ஜூன் 11 2003ல் வெளியான செய்திகளில் ‘பாப்ரி மசூதிக்குக் கீழே ஓர் அமைப்பு இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என்பதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளைப் படிக்கும்போது எந்த அளவுக்குத் தங்கள் வாசகர்களை எவ்வித மனச்சாட்சியும் இல்லாமல் மடையர்கள் என இந்தப் பத்திரிகைகள் கருதுகின்றன என்பது புரியும். உதாரணமாக, ’தி ஹிந்து’ தனது செய்தியின் தொடக்கத்தில் இப்படி முழங்கியது:
‘இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் பாப்ரி மசூதியின் கீழே வேறொரு அமைப்பு இருப்பதற்கான எவ்வித அமைப்புரீதியிலான வித்தியாசங்களையும் தான் தோண்டிய 15 புதிய குழிகளிலும் காண முடியவில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.’
ஆனால் உண்மை இப்படி இருந்தது. அது முக்கியப்படுத்தப்படாமல் அதே செய்தியில் குறிப்பிடப்பட்டது.
‘அமைப்புரீதியிலான வித்தியாசங்களைத் தான் ஆராய்ச்சி மேற்கொண்ட வேறு 15 குழிகளில் கண்டறிந்ததாக அறிக்கை சொல்கிறது.’
இப்போது நாம் அனைவரும் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டிய கேள்வி – எது இந்திய மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி? திட்டமிட்டுப் பொய் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு மசூதியாக சிறுபான்மை மக்கள் மனத்தில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா? அல்லது தாக்கப்பட்டு, குண்டடி பட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப்பட்டு, அந்தக் கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?
அந்த இடம் இந்த தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களிடமும் ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு பெயர் ஸ்ரீ ராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி கடுவன் மள்ளனாருக்கும் வேடுவப் பெண் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன். ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன் பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை சீக்கியர் கபீர் கானத்தைப் பாடுகிறார். பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை தென்னிந்தியர் போதேந்திரர் கானத்தைப் பாடுகிறார். இப்படி அனைவரையும் இணைக்கும் பண்பாட்டு உன்னதம் ராமன்.
பாஜக ஏன் ஒரு அரசாணையைப் பிறப்பித்து ராமர் கோவில் கட்டியிருக்கக் கூடாது என்று 2019 தேர்தலின்போது சிலர் கேட்டார்கள். அது அரசியல் ஆதாயத்தைத் தந்திருக்கலாம். ஆனால் தேசம் முழுமைக்கும் சொந்தமான ராமனுக்குக் கட்டப்படும் கோவிலாக அது அமையாது. அப்படி அமைய இப்படிக் காத்திருந்து நீதிமன்றம் மூலமே செய்யப்படும் செயல்தான் ராமனுக்குப் பெருமை தரும்.
இன்றைக்கு அளித்த தீர்ப்பின் மூலம் பாரதத்தின் உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கும் பாரததேசத்தின் ஆன்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட செயற்கை நேருவியப் பிளவை அகற்ற முன்வந்திருக்கிறது. அதற்கான ஆன்ம பலம் நம் அரசியல் சாசனத்துக்கு உள்ளது என்பதைக் காட்டியிருக்கிறது.
இது இந்த தேசத்தின் பண்பாட்டின் பெருமை. ராம நாம வேள்வியின் மகிமை.

குழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன்நம் அனைவரையும் உலுக்கியிருக்கும் ஒரு துன்பச் சம்பவம் இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்ஸனின் துர்மரணம். எண்பது மணி நேரப் போராட்டத்தின் பின்னர் அக்குழந்தையை மீட்க இயலவில்லை. ஆனால் அரசு அதன் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தியது. நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தையும் மானுடத் திறமையையும் அதன் உச்ச துரித கதியில் பயன்படுத்தியது. மாநில அரசின் அமைச்சரின் செயல்பாடு இத்தருணங்களில் எப்படி அரசியல்வாதிகள் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான புதிய அடிப்படை நடத்தையாக மாறியுள்ளது.

இவை ஒருபுறமிருக்க இந்தத் துன்பச் சம்பவத்தை ஊடகங்கள் பயன்படுத்திய விதம் அனைத்து மக்களிடமும் பொதுவாக முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அறம்’ திரைப்பட இயக்குநர் போன்ற அறிவியல் எதிர்ப்பாளர்கள் ஊடகப் பிரபலங்களாகவும் துறை வல்லுநர்களாகவும் வலம் வந்தனர். நல்ல காலம் அத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் துறை வல்லுநர்களாக பேட்டி தரவில்லை என்பது ஏதோ தமிழ்நாட்டின் பூர்வ ஜென்ம புண்ணியம்.

அக்குழந்தையின் மறைவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் அருணன் போன்ற ‘அறிவுசீவிகள்’ வெளியிட்ட வெறுப்பு உமிழும் ட்வீட்கள் தமிழ்நாட்டில் முற்றிப் போய்விட்ட மனோவியாதியின் வெளிப்பாடுகளாக இருந்தன. ஏதோ அந்தக் குழந்தை கிறிஸ்தவர் என்பதால் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ந்ததாக ட்வீட் செய்து தனது வக்கிரத்தை வெளிக்காட்டி புளகாங்கிதமடைந்திருந்தார் அருணன்.

இப்படி ஒரு ஊடகப் பொது மன மண்டலம் அனைத்துத் தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சமூக வியாதியே அன்றி வேறல்ல. தமிழ்நாட்டில் இன்று ஊடகவியலாளனாக வேண்டுமென்றால் அதன் முதல் தகுதியே இந்த மனவக்கிரம்தான் எனத் தோன்றுகிறது.

சுஜித் வில்ஸன் அவன் மரணத்தின் மூலம் நமக்குப் பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறான். ஆழ் துளைக் கிணறுகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவற்றை ஒழுங்காக மூடுங்கள். குறிப்பாக சிறார்கள் அவற்றின் அருகில் செல்வதைத் தடுக்கும் விதமாக மூடி அபாயக் குறிப்புகளை வையுங்கள். உங்கள் வீட்டின் அருகிலேயே குழந்தைகள் விளையாட ஆபத்தற்ற இடங்களையும் அவை செல்லக் கூடாத ஆபத்து சாத்தியங்கள் உள்ள இடங்களையும் குழந்தைகளுக்குத் தெளிவாகச் சொல்லி, தவிர்க்க வேண்டிய இடங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வையுங்கள்.

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்களை அனுப்பும் இந்தியா பூமியில் எண்பதடிகளுக்குள் மாட்டிக் கொண்ட சிறார்களைக் காப்பாற்ற முடியவில்லை என மீம்கள் வலம் வரலாயின. மீத்தேனைத் தோண்டி எடுக்க முடிந்த ONGC தொழில்நுட்பத்தால் குழந்தையை மீட்க முடியாதா என அடுத்த மீம்கள். இவை எல்லாவற்றிலும் அடிப்படையாக இருப்பது இந்தியாவின் மீதும் அதன் அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகள், சாதனைகள் மீதுமான வெறுப்பு. வேற்று நாட்டின் மீது பயபக்தி. இது இந்தியாவில் ஒவ்வொரு துயர நிகழ்வின் போதும் செயல்படுத்தப்படும் சமூக ஊடக நிகழ்வு. இப்போது தமிழ்நாட்டில் இது பொது ஊடகங்களிலும் அழுத்தமாகக் குடி கொண்டிருக்கும் வியாதி.

பெட்ரோலையும் மீத்தேனையும் தோண்டி எடுப்பது போலவா குழந்தையைத் தோண்டி எடுக்க முடியும்? அருவாமனையில் அபெண்டிக்ஸ் ஆப்பரேஷன் செய்ய சொல்லும் புத்திசாலித்தனம் இது.

வெறுப்பு பேச்சுக்கு உள்ளான இஸ்ரோவை எடுத்துக் கொள்வோம். பல முறை நம் மீனவர்களைக் கடலில் தத்தளிக்கும்போது காப்பாற்ற இஸ்ரோ தொழில்நுட்பமே உதவியது. நம் நீராதாரங்களை மேம்படுத்த இஸ்ரோ உதவியுள்ளது. இஸ்ரோவால் உண்மையாகக் காப்பாற்றப்பட்ட நம் நாட்டு மக்களின் எண்ணிக்கை எந்த சூப்பர் கதாநாயகனும் அவனது ஒட்டுமொத்தத் திரைவாழ்க்கையில் திரையில் காப்பாற்றியதாக நடித்த மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடப் பெரிதாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப எதிர்ப்பு, இந்திய வெறுப்பு ஆகியவற்றைத் திட்டமிட்டு பரப்பும் தீயசக்திகளான லயோலா முதல் திமுக வரை இவற்றைக் குறித்து கவலைப்படுவதே இல்லை.

சுஜித் மீட்பு நடக்கும்போது ஆளூர் ஷா நவாஸ் என்கிற விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சீனாவில் இத்தகைய மீட்பு பணி வெற்றிகரமாக நடக்கும் வீடியோ காட்சியை வைரலாக்கினார். சீனாவில் தொழில்நுட்பம் மக்களுக்கு உதவுகிறது, இந்தியாவில் உதவவில்லை என்பது பிரசாரத்தின் அடிநாதம்.

சீனா கடந்த சில பத்தாண்டுகளில் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் அதற்கு சீன மக்கள் கொடுத்த விலை அதிகம். பெரிய விண்வெளி சாதனைகளைச் செய்திருக்கிறது சீனா. ஆனால் அதற்காக ராக்கெட் லாஞ்ச்களின் போது ஒட்டுமொத்தக் கிராமங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. தவறுதலாக ஏவப்பட்ட ராக்கெட்களால் நள்ளிரவில் மக்களோடு எரிந்து தரைமட்டமான கிராமங்களின் காணொளிகள் காணக்கிடைக்கின்றன. கைதிகள் எல்லாவிதமான அறிவியல் மானுடப் பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்படுவதுடன் அவர்களின் உள்ளுறுப்புகள் பெரிய அளவில் ‘அறுவடை’ செய்யப்படுகின்றன. அண்மையில் க்வாண்டம் டெலிபோர்ட்டேஷன் என்கிற முன்னணித் தொழில்நுட்பத்தில் சீனா பெரும் சாதனையை நிகழ்த்தியது. மானுட அறிதலிலேயே மிக முக்கியமான முன்னணித் தாவல். ஆனால் அதற்கான மையத்தை சீனா ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் மேற்சிகரமொன்றில் அமைத்திருந்தது. திபெத்தில் சீனா நடத்தும் பண்பாட்டு மக்கள் இனத்துடைத்தழிப்பு உலகம் அறிந்த ஒன்று. 2016ல் சீனா உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி டிஷ்ஷை அமைத்தது. பிரபஞ்சத்தில் எங்காவது ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் அறிவுத்திறனுள்ள உயிரினங்கள் ஏதாவது சமிக்ஞைகளை அனுப்புகின்றனவா எனப் பகுத்தறிய இந்த ரேடியோ டெலஸ்கோப் டிஷ் ஆண்டெனா. இதற்காக 9,000 கிராம மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வேறிடங்களுக்குக் கொண்டு போக வைக்கப்பட்டனர்.

இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இப்படிப்பட்ட அசுரத்தனம் கொண்டதல்ல. இன்னும் சொன்னால் அதற்கு முட்டுக்கட்டை போடும் சக்திகள்தான் அசுரத்தனமாக இயங்கி வருகின்றன.


தமிழ்நாட்டில் தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவிருந்தது நினைவிருக்கலாம். இதன் அமைப்பைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஆயிரம் அடி கீழே அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மையம். இதனை வந்தடைய பக்க வாட்டில் மலையடியே ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்க அணுகு சாலை. இதை வரவிடாமல் செய்தவர்கள் நாம். லூடைட் தனமாகப் போராடி நியுட்ரினோ குறித்துப் பொய் பிரசாரம் செய்து, அறிவியல் எதிர்ப்புப் பிரசாரம் செய்து இதை வரவிடாமல் செய்தோம்.

இது நிறைவேறியிருக்கும் பட்சத்தில் ஆயிரம் அடிக்கு கீழே மனிதர்கள் – ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்யும் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். அது செயல்படும் பட்சத்தில் அதில் நெருக்கடி மீட்புக்கான தொழில்நுட்பமும் அமைந்திருக்கும். அதற்குத் தேவையான உபகரணங்கள், நிலச்சரிவில் ஆழத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது போன்ற விதிகள் தெரிந்த ஒரு வல்லுநர் குழு நமக்கு இருந்திருக்கும். இங்கு இருக்கும் ஆபத்து உதவி உபகரணங்கள் மிக நிச்சயமாக சுஜித்தைக் காப்பாற்றுவதிலும் நல்பங்கு வகித்திருக்கும் என நம்ப மிகுந்த இடம் இருக்கிறது.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நியூட்ரினோ ஆய்வகத்தில் 1,000 அடி ஆழத்தில் மனிதர்கள் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அல்ல என்றாலும் கூட, மானுடர்கள் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். அப்போது ஏதாவது ஆபத்துக்கள் நிகழ்ந்தால் அவர்களைக் காப்பாற்றும் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அங்கே இருந்தாக வேண்டும். இவை எல்லாம் அங்கே உருவாகியிருக்கும். சுஜித் விஷயத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அக்குழந்தையைக் காப்பாற்றும் விஷயத்தில் மிக முக்கியக் காரணியான காலம் என்பதை அது சிக்கனப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு சாத்தியத்தைக் கூட இல்லாமல் ஆக்கியது வேறு யாருமல்ல, நம் இடதுசாரி தமிழ்ப் பிரிவினைவாத லூடைட் கும்பல்தான்.

நமது ஏவுகணை தொழில்நுட்பம் நமக்கு ஏவுகணைகளை மட்டும் தரவில்லை. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைவான அதே சமயம் வலுவான நடையுதவி சாதனங்களை உருவாக்கி தந்தது. இப்படிப்பட்ட உப நன்மைகளை ‘ஸ்பின் ஆஃப்’ நன்மைகள் என்பார்கள். எந்த ஒரு பெரும் தொழில்நுட்பத்துடனும் இப்படிப்பட்ட ஸ்பின் ஆஃப்கள் கூட கிடைக்கும். நியூட்ரினோ ஆய்வக அமைப்பு பொறிநுட்ப சாதனை. நம் நிலவியல் சூழலில் மிக ஆழங்களில் மானுடர்கள் செயல்பட அமைக்கப்படும் ஒரு அமைப்பு. இதன் ஸ்பின் ஆஃப்களில் பேரிடர் சூழலில் ஆழப்புதைபடும் மக்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்திருக்க பெரும் வாய்ப்பு உண்டு. அதனை இல்லாமல் ஆக்கியதில் நம் இடதுசாரி லூடைட்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இதற்கு நாம் என்ன விலை கொடுக்கிறோம் என்பதைத் தெரியாமலே விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்ப எதிர்ப்பு சக்திகளை எந்த அளவு விலக்கி வைக்கிறோமோ அந்த அளவு நம் சமூகத்துக்கு நல்லது. 

மகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 6) | தமிழில்: ஜனனி ரமேஷ்
(22) குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில் என்னிடம் இருப்பதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உரிமம் பெறாத வெடி மருந்துகள் அல்லது ஆயுதங்கள் அல்லது குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில் ஆவணச் சான்றுகள் அல்லது பொருள் சான்று என்னிடம் இருப்பதாகக் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை.

(23) தொடர்பு மட்டுமே சதிக்கான ஆதாரமாகாது

வழக்கின் தொடக்கத்திலேயே ப்ராசிக்யூஷன் தரப்பு அதனிடம் இருக்கும் வலுவான ஆவணச் சான்று மூலம் குற்றம் சுமத்தப்பட்டவர், குறிப்பாக கோட்சேவும், ஆப்தேவும், என்னோடு தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் அவர்களுடைய வழிகாட்டியாவும் குருவாகவும் நான் திகழும் அளவுக்கு எனது அசைக்க முடியாத விசுவாசிகளாவும் விளங்கியதால், எனது ஆலோசனையோ, ஒப்புதலோ இல்லாமல், அவர்களால் சதித் திட்டம் தீட்டி இச்செயலைச் (ஆதாவது படுகொலை) செய்திருக்கவே முடியாது என்று குற்றம் சாட்டியது.

இப்போது இந்த ஆவணச் சான்று வெளிச்சத்துக்கு வந்த நிலையில் ப்ராசிக்யூஷன் தரப்பு என் மீது குற்றம் சுமத்தியதைப் போன்றே நானும் உறுதியாக அந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, நியாயமற்றது என்பதுடன் நீதிமன்றம் என் மீது காழ்புணர்வு கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் சொல்வதற்கு வாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு:

A) கவதங்கர் பி.டபிள்யு. 115 மற்றும் சி ஹெச் ப்ரதான் பி.டபிள்யூ. 130 ஆகியோரின் சாட்சிகள் என் வீட்டில் சோதனை நடைபெற்ற பிறகு ஏராளமான கடிதங்கள் சிஐடி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பதை உறுதிப்படுத்துகின்றன. காவல் ஆய்வாளர் ஏ.ஆர்.பிரதான் (பி.டபிள்யூ.129) இதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கடிதப் போக்குவரத்தில் மொத்தம் 143 கோப்புகள் இருந்தன என்றும் அவற்றில் மொத்தமாக 10,000 கடிதங்களுக்குக் குறையாமல் இருந்தன என்றும் பிரதான் ஒப்புக் கொள்கிறார் (பி.டபிள்யூ.129 பக்கம் 4). மூன்று மாதங்கள் இப்பணியில் முழுமையாக ஈடுபட்டு ஒவ்வொரு கடிதத்தையும் படித்து ஆய்வு செய்தார். பின்னர் அவற்றில் பெரும்பான்மை தள்ளுபடி ஆனது – காரணம் என்னைக் குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. கோட்சேவும் ஆப்தேவும் எனக்கு எழுதியதாவும், நான் அவர்களுக்கு எழுதியதாகவும் கருதப்படும் 100-125 கடிதங்களை எனக்கு எதிரான சான்று ஆவணங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ப்ராசிக்யூஷன் தரப்பு முனைந்தது. ஆனால் இயல்பற்ற, வழக்கத்துக்கு மாறான அக்கடிதங்களின் ஏற்புநிலை கேள்விக்குரியானது. ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த 100-125 கடிதங்களில் ஆப்தேவும், கோட்சேவும் எழுதிய 20 கடிதங்கள் மட்டுமே ப்ராசிக்யூஷன் தரப்பு ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. முக்கியமாக இந்த வழக்கில் அவற்றை ஆவணச் சான்றுகளாக என்னை நேரடியாகக் குற்றத்துக்கு உட்படுத்தாமல், கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோருக்கும் எனக்கும் இடையேயான பொதுவான தொடர்பைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் நிபந்தனையுடன் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

(B) மேற்கண்ட நிபந்தனையின் அடிப்படையில் இக்கடிதங்கள் சான்றாக அனுமதிக்கப்பட்டாலும், இவை குறித்து நான் விரிவாகவே இந்த வாக்குமூலத்தின் பிரிவுகளில் (10 & 11) தெரிவித்திருக்கிறேன். மேலும் கோட்சேவும், ஆப்தேவும், வெளிப்படையான, சட்டப்பூர்வமான இந்து சங்கடன் மற்றும் மகாசபா செயல்பாடுகளின் ஊழியர்களாக மட்டுமே என்னுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் அக்கடிதங்களிலிருந்து நான் தெளிவாக மேற்கோள் காட்டி உள்ளேன்.

இதன் காரணமாக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எனக்கு வந்த தபால்களில் ப்ராசிக்யூஷன் வசமுள்ள சற்றேறக்குறைய 10,000க்கும் மேற்கண்ட கடிதங்களில், மிகத் தீவிர ஆய்வுக்குப் பின்னரும், என்னைக் குற்றத்துக்கு உட்படுத்தும் வகையில் ஒற்றைச் சொல்லோ வரியோ காணப்படவில்லை என்பதே, ஏனைய விஷயங்கள் சரிசமமாக இருக்கும் சூழலில், நான் அப்பாவி என்பதை நிரூபிப்பதற்கான சான்றாகும். எப்படி இருப்பினும், கைவசமுள்ள சான்றாவணம் மூலம், கூறப்படும் இந்தச் சதித்திட்டத்தில், கோட்சே மற்றும் ஆப்தேவுடன் என்னைத் தொடர்புபடுத்தும் ப்ராசியூஷன் தரப்புக் குற்றச்சாட்டு தவிடுபொடியாகும்.

(C) மேலும், ப்ராசிக்யூஷன் தரப்புச் சான்றே 1948ல் ஆப்தேவிடமிருந்து ஒரு கடிதமும், கோட்சேவிடமிருந்து மூன்று கடிதங்களும் எனக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. இக்கடிதங்கள் அனைத்துமே அதே ஆட்சேபணைற்ற வகையில் இருப்பதுடன், 1946 அக்டோபர் 30க்குப் பிறகும், 1947லும், 1948லும், கோட்சே எனக்கு எந்தக் கடிதமும் எழுதவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது (பி.டபிள்யூ.129 பக்கம் 4).

மேற்கூறிய காலகட்டத்தில் ஆப்தேவிடமிருந்து எனக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்பதுடன் கோட்சேவுக்கோ ஆப்தேவுக்கோ தனியாகவோ கூட்டாகவோ எந்தக் கடிதத்தையும் நானும் அனுப்பவில்லை. இதன் மூலம் அந்தச் சான்றாவணம் 1947 அல்லது 1948ல் எங்களுக்கு இடையே எந்தக் கடிதப் போக்குவரத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

கர்க்கரே குறித்து பிரதான் (பி.டபிள்யூ.129 பக்கம் 3) தனது சாட்சியில் கூறுவதாவது ‘நான் ஆய்வு செய்த 143 கோப்புகளில் சாவர்க்கருக்கு கர்க்கரே அல்லது கர்க்கரேக்கு சாவ்சர்க்கர் எழுதியதாக ஒரு கடிதத்தைக் கூட காணவில்லை’ என்கிறார்.

(D) எனவே குற்றம் சாட்டப்பட்ட எவரோடும், குறிப்பாக ஆப்தே மற்றும் கோட்சேவோடும், 1946 இறுதி தொடங்கி 1948 பிப்ரவரியில் நான் கைது செய்யப்படும் தேதி வரை, எனக்கு எந்தக் கடிதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவு. ஆப்தே – கோட்சே கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு ப்ராசிக்யூஷன் தரப்பு அவர்களுக்கும் எனக்குமான தொடர்பை நிரூபிக்க முனைவதை எதிர்த்து அது மகாசபையின் சட்டபூர்வ மற்றும் பொதுவான செயல்பாடுகள் என்னும் எனது வேண்டுகோளை இது உறுதிப்படுத்துகிறது. எனவேதான் 1946ல் நான் மகாசபை தலைவர் பதவியை உடல் நிலை சீராக இல்லாததால் ராஜினாமா செய்த பிறகு எனது பொதுச் சேவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். இதன் காரணமாக ஏனைய இந்து சபா ஊழியர்களைப் போலவே ஆப்தேவும் கோட்சேவும் இந்து சங்கடன் அறிக்கைகள் அல்லது எனது பிரசாரப் பயணம் அல்லது பொது விவகாரங்கள் தொடர்பான எனது வழிகாட்டுதல்கள் ஆகியவை குறித்து எனக்கு எழுதுவதை நிறுத்திவிட்டனர். ஆகவே மேற்கொண்ட கால கட்டத்தில் அவர்களது கடித்தப் போக்குவரத்து திடீரென நின்று போனதை இது விவரிக்கிறது.

E) கூறப்படும் சதித்திட்டம் 1947 டிசம்பரில் தொடங்கியதாகப் ப்ராசிக்யூஷன் தரப்பு சொல்வதைக் கவனிக்க வேண்டும். என்னுடனான கோட்சே மற்றும் ஆப்தே கடிதப் போக்குவரத்து அந்தக் காலத்துக்கு முன்பே நின்று விட்டதைப் ப்ராசிக்யூஷன் சாட்சியே மேற்கண்டபடி நிரூபிக்கிறது. இதன் காரணமாக எனக்கும் கோட்சே மற்றும் ஆப்தேவுக்கும் இடையேயான தொடர்பு, அதாவது எந்தக் கடிதப் போக்குவரத்தை ஆதாரமாக வைத்து ப்ராசிக்யூஷன் தரப்பு நிரூபிக்க முனைகிறதோ, அந்தத் தொடர்பை நிரூபிக்க கடிதப் போக்குவரத்து, கூறப்படும் சதித்திட்டம் உருவாவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே நின்று விட்டது.

இந்தக் காரணங்களுக்காகவே நான் சமர்ப்பிப்பது என்னவெனில், கடிதப் போக்குவரத்து குறிப்பிடும், இதுபோன்ற சட்டப்படியான மற்றும் முறையான தொடர்பு, கூறப்படும் சதித் திட்டம் உருவாவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே நின்றுவிட்டதால், என்னை எந்தச் சூழலிலும், குற்றவாளியாக்க இயலாது என்பதுடன், இதைக் குற்றம் மற்றும் சதித்திட்டத்துடனான தொடர்பாகவும் சந்தேகிக்க முடியாது என்பதுதான். முறையான மற்றும் சட்ட ரீதியான தொடர்பையும், குற்றம் மற்றும் சதித்திட்டத்தையும் இணைக்க முடியாத அளவுக்கு இடைவெளி உள்ளது. பல பிரபல வழக்குகளில் இந்த அடிப்படைக் கொள்கைகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, சர்காரின் சாட்சியச் சட்டம் (பிரிவு 10 பக்கம் 98) ‘சதித் திட்டம் தீட்டிய எவருடன் குற்றம் சுமத்தப்பட்டவரின் தொடர்பு குறித்த சாட்சி மட்டுமே அவரை அந்த சதியின் கூட்டாளியாகக் குற்றவாளியாக்கப் போதுமானது அல்ல’ என்று தெளிவாகக் கூறுகிறது.

(24) இந்தச் சதித்திட்டம் குறித்துக் கோட்சேவும் ஆப்தேவும் என்னோடு ஆலோசனை நடத்தினர் என்றும், அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் தங்களது விசுவாசத்தை மதிப்போடும் மரியாதையோடும் எனக்கும் நான் பின்பற்றும் இந்து சித்தாந்தத்துக்கும் தெரிவித்துள்ள காரணத்தால், என்னுடைய ஒப்புதலின்றி இந்தக் குற்றத்தை அவர்கள் செய்திருக்க இயலாது என்று ப்ராசிக்யூஷன் தரப்பு பிடிவாதமாக முடிவுக்கு வந்துள்ளது அபத்தம் என்பது மேற்கண்ட பிரிவிலிருந்து தெளிவு.

பெரும்பான்மைக் குற்றவாளிகள் தங்களது மதப் பிரிவுகளின் குருக்கள் மற்றும் வழிகாட்டிகள் மீது மிகுந்த மரியாதையும், விசுவாசத்தையும் செலுத்துவதுடன், அவர்களது கொள்கைகளைப் பின்பற்றுவதிலும் உறுதியாக உள்ளனர். அப்படியெனில் அவர்களைப் பின்பற்றுவர்களின் குற்றச் செயல்களுக்கு குருவும் வழிகாட்டியும் பொறுப்பாக முடியுமா? அந்தக் குற்றவாளிகள் தங்கள் குருக்கள் மற்றும் வழிகாட்டிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களையே குற்றவாளியாக்க முடியுமா? குற்றம் சுமத்தப்பட்ட பெரும்பான்மை நபர்கள் தங்கள் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருங்கிய தொடர்பும், அன்பும் மரியாதையும் வைத்துள்ளதுடன், அவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் தங்கள் பணிவைத் தெரிவிக்கின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உறவினர்களிடம் பணிவோடு கீழ்ப்பணிவதால், குற்றச் செயல்களைச் செய்வதற்கு முன்பு அவர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெற்றார்கள் என்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தார்கள் என்றும் கூற முடியுமா? அரசியல் கட்சிகளிலுள்ள எண்ணற்ற தொண்டர்களில் சிலர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், தலைவர்கள் மீது அவர்கள் மதிப்பும், மரியாதையும், வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காகக் குற்றத்துக்கு அவர்களைப் பொறுப்பாக்கிக் காவல் துறை கைது செய்ய முடியுமா? இன்னும் சொல்லப் போனால் தலைவருக்குள்ள தார்மிகச் செல்வாக்கைச் அவரது அனுமதியைப் பெறாமலேயே சில தொண்டர்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லையா?

1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது காங்கிரஸ் தொண்டர்களாக மகாத்மா மீது மதிப்பு மரியாதையுடன் நெருங்கமாக இருந்த சில முன்னணிச் செயல் வீரர்கள் தலைமறைவாக வன்முறையில் ஈடுபட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிரான இதுபோன்ற தலைமறைவு வன்முறை நியாயமா, நியாயமற்றதா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. மகாத்மா காந்தி இந்தத் தலைமறைவு வன்முறையைக் கண்டித்தார் என்பதை மட்டும் சொன்னால் போதுமென நினைக்கிறேன். ஆனால் இந்தச் செயல் வீரர்களின் பின்னால் அணிவகுத்த மக்கள் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று முழக்கமிட்டுக் கொண்டே இரத்தம் பெருக்கெடுக்கக் கலவரத்திலும், நாசவேலையிலும் ஈடுபட்டனர். ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று முழக்கமிட்டதாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததாலும், காந்திஜியிடம் கட்டாயம் வன்முறை குறித்த ஆலோசனைகளைக் கேட்டிருப்பார்கள் என்ற முடிவுடன் பிரிட்டிஷ் அரசு கூட காந்திஜியைச் சிறையில் அடைக்கவில்லை. இந்த வழக்கில் ப்ராசிக்யூஷன் தரப்பு சில குருக்களையும், வழிகாட்டிகளையும் சாட்சிகளாக விசாரித்ததில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலருக்குப் பயங்கரமான வெடி மருந்துகளை வழங்கியதுடன், இந்தச் சதித்திட்டம் நடைபெற்றதாகக் கூறப்படும் டிசம்பர் – ஜனவரி காலகட்டத்தில், இந்தியக் குடிமகன்களாக இருந்த ஜின்னா மற்றும் லியாகத் அலி ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டியதாகவும் பிரமாணத்தில் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், ஒப்புக் கொள்ளப்பட்ட இத்தகைய குற்றத் தொடர்பைக் கூடக் காரணம் காட்டி ப்ராசிக்யூஷன் தரப்பு குற்றம் சுமத்தப்பட்டவர், இச்சதித்திட்டம் சம்மந்தமாக இந்தச் சாட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்ற முடிவுக்கு வருவதுடன், அவரையும் இந்தச் சதியில் குற்றவாளியாக்க இயலாது. அவர்கள் அனைவரும் குற்றவாளியாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இதே ப்ராசிக்யூஷன், ஆப்தேவுக்கும் கோட்சேவுக்கும் எனக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த சட்டபூர்வ கடிதப் போக்குவரத்து மற்றும் தொடர்பைக் காரணமாக்கி, இந்தச் சதித் திட்டம் சம்மந்தமாக என்னிடம் ஆலோசனை நடத்தினர் என்பதுடன், என்னையும் குற்றவாளியாக்கும் பிடிவாதமான முடிவு அபத்தமும் அநியாயமும் ஆகும். ஆனால் ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சியே அதே குணத்துடன், ‘இருந்திருப்பார்’ மற்றும் ‘இருந்திருக்க மாட்டார்’ என்ற ஊக அடிப்படையில் இருப்பதால், எனக்கு எதிரான வழக்கை நிருப்பிக்கப் போதுமான மற்றும் நேரடி சாட்சியைத் தேடுவதில் ப்ராசிக்யூஷன் தரப்பு நம்பிக்கையற்று இருக்கிறது. அதே அளவுக்கு, சரியோ, தவறோ, இடரில் இருப்பதாகக் கருதும் தங்களது கௌரவத்தைக் காப்பாற்றப் போதிய ஆதாரங்களின்றி அபத்தமான ஊகங்களின் அடிப்படையில் பொறுப்பற்று நடந்து கொள்வதும் தெள்ளத் தெளிவாகிறது.

(25) ப்ராசிக்யூஷன் சாட்சியின் இந்தப் புனைவு இரண்டே வரிகளில் அடங்கி உள்ளது. முதலாவது செவி வழிச் செய்தி, இரண்டாவது அனுமானம்

இப்போது எந்தச் சான்றாக இருந்தாலும், பொருள் அல்லது சூழ்நிலை, வாய்மொழியாக அல்லது எழுத்துபூர்வமாக, எனக்கு எதிராக ப்ராசிக்யூஷன் தரப்பு கொண்டுவந்திருந்தாலும், எனது வாக்குமூலத்தின் மேற்கண்ட பகுதியில் அவற்றுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளேன். இந்நிலையில் அதிலுள்ள ஒரேயொரு பகுதியில் காணப்படும் இரண்டே வரிகள் மூலம் மட்டுமே சதித்திட்டத்தில் எனக்குள்ள தனிப்பட்ட தொடர்பை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கமாகும்! இவ்விரண்டுமே பேட்ஜ் சுமத்திய குற்றச்சாட்டுகள்:-

காந்தி, நேரு மற்றும் சுராவார்டி ஆகியோரைத் தீர்த்துக் கட்டுமாறு நான் ஆப்தேவிடம் சொன்னதாக, ஆப்தே தன்னிடம் கூறினார் என்பதே பேட்ஜின் முதல் வாக்கியமாகும். ‘வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பி வாருங்கள்’ என்று நான் ஆப்தே மற்றும் கோட்சேவிடம் சொன்னதைக் கேட்டதாக பேட்ஜ் கூறுவது இரண்டாவது வாக்கியமாகும். ஆப்தே சொன்ன முதல் வாக்கியத்தின் அடிப்படையில் இதை பேட்ஜ் ஊகித்திருக்கலாம்.

வண்டிகள் நிறையக் கடிதப் போக்குவரத்து, தேடல்கள், அமைச்சர் முதல் திரைப்பட நடிகர் வரை, மகாராஜா முதல் டாக்ஸி ஓட்டுனர் வரை, ஏராளமான சாட்சிகளுடன் ப்ராசிக்யூஷன் சான்றாவணத்தை பிரம்மாண்டமாக்கித் தீவிரப்படுத்தியதன் முக்கிய நோக்கம் எதிர்பார்த்த விளைவு கிடைக்க வேண்டும் என்பதே. ஆனால் என்னுடைய வழக்கைப் பொருத்தவரை, மகா சபா பவன் தொலைபேசி ‘ட்ரங்கால்’ போன்று ‘பயனற்றுப்’ போய்விட்டது.

இந்த வாக்குமூலத்தில் பிரிவுகள் (18 மற்றும் 19) கூறிய காரணங்களின்படி மதன்லாலின் கதையிலும் எதுவுமில்லை. ஜெயின் சொன்னதாக அங்கத் சிங்கும், அமைச்சரும் கூறுகிறார்கள்; ஜெயின் தனக்கு மதன்லால் சொன்னதாகக் கூறுகிறார்; மதன்லாலோ நான் ஜெயினிடம் எதுவுமே சொல்லவில்லை என்கிறார்; ஜெயின் சொன்ன கதையாகவே இருப்பினும், கூறப்படும் சதித்திட்டத்தோடு தனிப்பட்ட முறையிலும் உறுதியாகவும் என்னைத் தொடர்புபடுத்தவில்லை.

இப்போது, என்னை இந்தச் சதித்திட்டத்துடன் உறுதியாகவும், நேரடியாகவும் தொடர்புபடுத்த முனைவு மேற்கொள்ளப்படும் பேட்ஜ் சான்றாவணத்தில் மேற்கண்ட இரு வாக்கியங்களுள், முதலாவது செவி வழிச் செய்திதான். அப்ரூவரான பேட்ஜ் இந்த வாக்கியத்தைத் தன்னிடம் ஆப்தே கூறியதாகச் சொல்கிறார். ஆனால் ஆப்தேவும் கோட்சேவும் அவ்வாறு பேட்ஜிடம் எதுவுமே சொல்லவில்லை என்றும் நானும் அவர்களிடம் எதுவும் கூறவில்லை என்றும் மறுத்துள்ளனர். எனவே பேட்ஜின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த எந்தச் சான்றும் நிச்சயமாக இல்லை. பேட்ஜின் முதல் குற்றச்சாட்டு செவிவழிச் செய்தி மட்டுமின்றி உறுதிப்படுத்தப்படாத செவிவழிச் செய்தியும் ஆகும். உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஒரு அப்ரூவர் தனிப்பட்ட முறையில் கேட்டதையோ, பார்த்தையோ கூட நம்பகமான சான்றாகப் பொதுவாகச் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே ஒரு செவிவழிச் செய்தியை, ஒரு அப்ரூவர் செவிவழிச் செய்தி என்று ஒப்புக் கொண்ட பிறகு, நம்பகத்தன்மை அற்றதாகவும், உறுதிப்படுத்தப்படாததாகவும் தானே இருக்க முடியும்!

அதுமட்டுமன்றி, அதைப் போன்ற சில காரணங்கள், ஆப்தே மற்றும் கோட்சேவிடம் சொன்னதைத் தனிப்பட்ட முறையில் கேட்டதாக பேட்ஜ் சொன்னது இரண்டாம் வாக்கியத்தின் நம்பகத்தன்மையைப் பழுதாக்குகிறது. இது உண்மையெனில் பிறகு அது செவிவழிச் செய்தி அல்ல. ஆனால் பேட்ஜ் அதே வாக்கியத்தில் ‘வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பி வாருங்கள்’ என நான் சொன்னது சதித்திட்டம் தொடர்பாக நேரடியாக இல்லை என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். சதித்திட்டத்துடன் எனக்கு தொடர்பிருக்கலாம் என்ற பேட்ஜ் அனுமானித்திருக்கலாம். மேலும் ஆப்தே மற்றும் கோட்சே ஆகிய இருவரும் என் வீட்டுக்கு மூவர் வந்த கதையும், அந்த வாக்கியத்தை நான் சொன்னதாகக் கூறிய குற்றச்சாட்டும், புனையப்பட்டவை மற்றும் முற்றிலும் பொய் என்று தெளிவாகக் கூறியுள்ளனர். இதை யாரும் எதற்கும் உறுதிப்படுத்தவில்லை. ஆகவே உறுதிப்படுத்தப்படாத இந்தச் செய்தியை அனுமானித்தது தர்க்கவியலாளர் கூட இல்லை, ஒரு அப்ரூவர் என்பதால், அதற்கு நீதிமன்றத்தில் எந்த விதமான நம்பகத்தன்மையோ, சான்றாவண மதிப்போ கிடையாது. இவ்விரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது – முதலாவது அப்ரூவர் சொன்ன உறுதிப்படுத்தப்படாத செவிவழிச் செய்தி. இரண்டாவது அப்ரூவரின் உறுதிப்படுத்தப்படாத அனுமானம். இவ்விரண்டுமே எந்த நீதிமன்றத்தின் முன்பாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்க சான்றாவணமாக இருக்க முடியாது என்ற நிலையில், நான் தாழ்மையுடன் பணிந்து சமர்ப்பிப்பது என்னவெனில், எனக்கு எதிரான வழக்கு முழுவதுமாகத் தானாகத் தகரும். அத்துடன், நான் குற்றமற்றவன் என்பதும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகும்.

இந்துத்துவ முன்னோடி கஸலு லட்சுமிநரசு செட்டி | அரவிந்தன் நீலகண்டன்
மேன்மை தங்கிய கவர்னர் துரையாரின் சிவந்த முன்வழுக்கை மண்டையில் வியர்வைத் துளிகள் அளவுக்கு அதிகமாகவே உருவாகியிருந்தன என்பதற்கு மெட்ராஸின் வெப்பநிலை மட்டுமே காரணம் அல்ல. கனம்பொருந்திய கவர்னர் துரையாரின் பெயர் வெகு நீளமாக ‘ஜியார்ஜ் ஹே ட்வீட்டேலின் எட்டாம் மார்க்யுஸ்’ என்று இருந்தாலும் அதை ட்வீட்டேல் என்றே அழைப்பது வழக்கம்.

கவர்னரின் மனது அன்று அடைந்த விரக்தியான கோபம் சொல்லத் தரமானதன்று. ‘கறுப்புத் தோல் இந்திய முட்டாள்களா இதைச் செய்தார்கள்?’ என்று எண்ணும்போதெல்லாம் அவர் கொதிநிலை உச்சத்தை அடைந்தது. ஆட்சி செய்வது பெயருக்குத்தான் கும்பெனி என்பது அவருக்குத் தெரியும். உண்மையான ஆட்சி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நடத்தப்பட்டது. எனவே நடந்திருப்பது பிரிட்டிஷ் அரசுக்கே விடப்பட்ட சவால். இந்த சவாலுக்கு பின்னால் இருப்பவர் யாரென்பதும் கவர்னர் பெருமகனாருக்குத் தெரிந்திருந்தது.

மெட்ராஸ் பல்கலைக்கழகம் அன்றைக்கு ஆங்கிலமும், குமாஸ்தா வேலைக்கான தயார்படுத்தலும் அளிக்கும் ஒரு கல்விச் சாலை. கும்பனி உருவாக்கிய அரசு இயந்திரத்துக்கு சேவகம் செய்ய மதராஸ்வாசிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அனுப்பிய நிறுவனம். அங்கே ‘பண்பாடற்ற’ இந்த இந்தியர்களின் பண்பாட்டை உயர்த்த, என்றென்றைக்குமான சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழைய, விக்கிர ஆராதனையை அடியோடு ஒழிக்க, எல்லாவற்றுக்கும் மேலாக ராஜ விசுவாசமுள்ள பிரஜைகளாக்க விவிலியத்தைக் கட்டாய பாடமாக்க முடிவு செய்த கவர்னரின் ஆலோசனைக் கூட்ட தாஸ்தாவேஜு ஒரு பத்திரிகையில் பிரசுரமாகித் தன்னை பிரச்சினைக்குள் ஆளாக்கும் என நினைத்திருப்பாரா துரைமகனார்?

பத்திரிகையின் பெயர் ‘மதியம்’. ஆங்கிலத்தில் ‘கிரெஸண்ட்’. பத்திரிகையின் ஆதார சக்தி செட்டி – கஸலு லட்சுமிநரசு செட்டி.

சட்டம் தெரிந்த ஆசாமி. எங்கெங்கே அவருக்குத் தொடர்புகள் உண்டு என்பது எவருக்கும் தெரியாது. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை உண்டாக்க வேண்டுமென்றே செலவளித்துக் கொண்டிருக்கும் இந்து. அந்த ஆளை மட்டும் கவிழ்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தால்…

கவர்னருக்கு மட்டுமல்ல, அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிட்டிஷ் காலனியவாதியின் முதுகுத் தடத்திலும் ஒரு ‘சுரீரை’ ஏற்படுத்த வல்லது அந்தப் பெயர். யார் இந்த செட்டி?

இன்றைக்கு நாம் மறந்துவிட்டாலும் தேச விடுதலை தர்ம பாதுகாப்பு வீரர்களில் கஸலு லட்சுமிநரசு செட்டி மிகவும் முக்கியமானவர். முதன்மையானவர். தமிழகத்தின் முன்னோடி இந்துத்துவர் செட்டி என்று சொன்னால் அது மிகச்சரியாக இருக்கும்.

செட்டி 1806ல் பிறந்தார். பிறந்த தேதி தெரியவில்லை. அவர் கோமதி செட்டி சமுதாயத்தினர். அவர் ஆங்கிலக் கல்விக்கூடங்களில் பயிலவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களிலிருந்து உருவானவர். ஆங்கிலம் சுயகல்வி மூலமாக அவருக்குக் கிட்டியது. அந்தக் காலகட்டத்தில் ஆங்கில ஆட்சி தன்னை வலிமையாக நிலைநாட்டி தமிழகமெங்கும் பரவ ஆரம்பித்துவிட்டிருந்தது. அதே காலகட்டத்தில் அமெரிக்க காலனிகளுக்கும் தாய் பிரிட்டிஷாருக்கும் மோதல் ஏற்பட்டு, பிளவுகளால் அட்லாண்டிக் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்தது – குறிப்பாக பருத்தி வியாபாரம். இதைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் கடும் உழைப்பாலும் புத்திக் கூர்மையாலும் செல்வந்தராக உயர்ந்தார் செட்டி. ஆனால் குலதர்மமான வைசியத் தொழிலில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவரது ஸ்வபாவம், பாரதத்தின் சமயாச்சாரங்களையும், சமுதாய நலனையும், இயற்கை வளங்களையும் காப்பாற்றும் போராட்டத்தையே அவரது ஸ்வதர்ம குருக்ஷேத்திரமாகக் காட்டியது.

எளிமையான தோற்றம். கம்பீரமான தலைப்பாகை. நெற்றியில் ஸ்ரீ வைணவ நாமம். இந்த அமைதியின் வடிவமான மனிதர், பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான போராட்டத்தில் – அனைத்துத் தளங்களிலுமான போராட்டத்தில் – அழுத்தமாகக் குதித்தார். ஒரே நோக்கம் – நம் மக்களின் சுபிட்சமும் சுதந்திரமும்.

அன்றைய மெட்ராஸின் அதிகாரவர்க்கத்தில் யார் யாரெல்லாம் பெரும் பதவிகளில் அதிகார பீடங்களில் இருந்தார்களோ அவர்களை எதிர்த்தது இம்மனிதரின் ஒற்றைக் குரல். அன்றைய மெட்ராஸ் நீதிமன்றங்கள் மதமாற்ற கேந்திரங்களாகs செயல்பட்டன. சர் வில்லியம் பர்ட்டன் தான் ஒரு நீதிபதி என்பதைத் தாண்டி தாம் கிறிஸ்தவ மதப் பிரசார ஊழியரும்கூட என்பதை ஐயம் திரிபறக் கூறினார். நீதிபதி தன் இருக்கையில் இருந்தபடி குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இந்துக்களுக்கு அவர் கொடுக்கும் கிறிஸ்தவப் பிரசாரப் பேருரைகள் வெகு பிரசித்தம்.

மெட்ராஸில் இயங்கிய கும்பனியார் அரசின் முதன்மைச் செயலாளர் ஜே.எஃப்.தாமஸ், மதம் மாறினால் மட்டுமே அரசு அலுவலகங்களில் வேலை கிடைக்கும் என்பதை ஒரு எழுதப்படாத விதியாகவே மாற்றியிருந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் E.B.தாமஸ் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர். இவர் திருநெல்வேலியில் மதமாற்றத்தை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றத் துணை புரிந்தார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி மூர்ஹெட் என்பவர் நீதிமன்றச் செயல்பாடுகளில் ஒன்றாக விவிலியப் பிரசங்கத்தை இணைத்திருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஏற்கெனவே பார்த்தது போல கவர்னரும் தீவிர கிறிஸ்தவ மதமாற்றச் செயல்பாடுகளுக்கான பெரும் ஆதரவுத்தூணாகவே இருந்தார்.

அக்டோபர் இரண்டாம் தேதி 1844, பாரதத்தின் தேசபக்த இதழியல் தென் பாரதத்தில் பிறந்த நாள் என கூறலாம் 1857 எழுச்சிக்கு இன்னும் 13 ஆண்டுகள் இருந்தன. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகவோ இன்னும் 41ஆண்டுகள். லட்சுமிநரசு ‘மதியம்’ எனும் இதழை உருவாக்கினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மூன்று மொழிகளில், மாதம் மும்முறை வந்த இந்த இதழின் நோக்கம் ‘ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்துவது.’ இந்த இதழின் அசிரியராக செட்டி இந்துக்கள் மீதும் பாரதத்தின் மீதும் அபிமானம் கொண்ட எட்வர்ட் ஹார்லே என்பவரை நியமித்தார். இந்தப் பத்திரிகையின் புலனாய்வு நிருபர்கள் பெரும் வலையென அரசு இயந்திரமெங்கும் உள்ளிருந்தார்கள். இவர்களில் கொஞ்சம் தார்மிக உணர்வு கொண்ட சில பிரிட்டிஷாரும்கூட அடக்கம். இவர்கள் மூலம் அரசின் திட்டங்களை முன்னரே அறிந்து வெளிப்படுத்தும்போது ‘விண்டெக்ஸ்’, ‘வெளிப்படையாகப் பேசுவோன்’ என்பது போன்ற புனைபெயர்கள் பயன்படுத்தப்பட்டன.

இப்படி ‘மதியம்’ அன்றைக்கு வெளிப்படுத்திய விஷயங்களில் சில: இந்துக் கோவில்களிலிருந்து வரும் பணத்தை, கோவில் நிர்வாகத்துக்கு மட்டும் கொஞ்சம் கொடுத்துவிட்டு, அரசே எடுத்துக் கொள்வது; மெட்ராஸ் பல்கலையில் கிறிஸ்தவ பைபிளை மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்க கவர்னர் தன் ரகசியக் கூட்டத்தில் பேசிய விஷயங்களின் பதிவு; மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக இந்துக்களின் சொத்துச் சட்டத்தை மாற்றும் முயற்சி; இத்யாதி.

மெட்ராஸ் பல்கலையில் பைபிளைப் புகுத்தும் முயற்சி பிரிட்டிஷாரின் வரையறுக்கப்பட்ட தந்திர இலக்கணங்களுடன் செய்யப்பட்டது. முதலில் ஆங்கிலம் சொல்லித்தரப்படாத சுதேசி கல்வி அமைப்புகளில் – திண்ணைப்பள்ளி போன்றவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைகள் மறுக்கப்பட்டன. இது ஆங்கிலக் கல்வி படிக்கும் தேவையை ஏற்படுத்தியது. இதற்கு மெட்ராஸ் பல்கலையை சென்னையிலும் இதர நகரங்களிலும் வாழும் மிகப் பெரும்பாலானோர் அணுகினர். ஆனால் இதில் படித்து தேர்ச்சி கிடைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை. இந்த வேலையின்மைக்குக் காரணம் மாணவர்களின் கல்வித் தரத்தில் உள்ள ஏதோ ஒரு குறைபாடு. உண்மையில் அந்தக் குறைபாடு என்னவென்றால் கிறிஸ்தவ மதத் தொடர்பான கேள்விகள் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும். அதில் பதிலளிக்க இயலாதவர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய, பிரிட்டிஷ் அரசு வேலைக்குத் தயார்படுத்த ஒருவருக்கு பைபிள் அறிவு அவசியம் என சொல்லி பைபிளை ஒரு கட்டாயப் பாடமாக்க கவர்னர் பெருந்தகை திட்டமிட்டிருந்தார்.

அத்துடன் விஷயத்தை விட்டுவிடவில்லை லட்சுமிநரசு செட்டி. பச்சையப்பா கல்வி நிறுவன வளாகத்தில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தைத் திரட்டினார். அக்டோபர் 7 1846ல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டு கவர்னருக்கு எதிரான மனு பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் சமயச் சார்பின்மை கொண்டவராக இல்லாமல் கிறிஸ்தவ மதத்துக்கு பாரபட்சம் காட்டுகிறார், மதம் மாறாத பட்சத்தில், இந்து மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதைக்கூட மிஷினரிகளால் தடுக்க முடிகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது. அரசு இயந்திரமும் கிறிஸ்தவ மிஷினரிகளும் இணைந்து செய்யும் இந்த நடவடிக்கைகளை அந்த மனு கண்டித்தது. இது அரசு இயந்திரத்துக்குள் சர்ச்சையை உருவாக்கியது. கவர்னரின் கவுன்ஸிலில் உறுப்பினரான சாமெயர் என்பார் இதைக் குறித்து ‘மத ரீதியில் மக்களுக்கு எதிரான நடவடிக்கையால், மக்கள் அரசுக்கு மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பலத்த அடி’ விழுந்திருப்பதாகக் கூறினார். எப்படி ஆவணங்கள் கசிந்தன என ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது. சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் ‘மதியம்’ அதே வீரியத்துடன் செயல்பட்டது. அதன் அலுவலகம் தீவிரமான போலீஸ் கண்காணிப்புக்கு உள்ளானது.

அரசு ‘கிரெஸெண்ட்’ என்கிற ‘மதியம்’ பத்திரிகைக்கு எந்த விதத்திலெல்லாம் கஷ்டங்கள் உண்டாக்க முடியுமோ அப்படியெல்லாம் கஷ்டங்களை உருவாக்கியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கெஸட்டில் பத்திரிகையின் விளம்பரத்தை அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டது அரசு. குறிப்பாக பச்சையப்பா கல்வி நிறுவன மாநாட்டில் செட்டி அவர்களின் உரை குறித்த உளவுத்துறை அறிக்கை ‘கேட்போரிடம் கலக உணர்வைத் தூண்டுவதாகவும் ஹிந்துக்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் திருப்புவதாகவும்’ அமைந்தது எனக் கூறியது.

அதே 1840களில் மற்றொரு முக்கிய நிகழ்வு நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆதரவுடன் ஜரூராக மதமாற்றத்தை மிஷினரிகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். சாதாரண ஹிந்துக்கள், பெரும்பாலும் நாடார் சமுதாயத்தைச் சார்ந்த உழைக்கும் பெருங்குடி மக்கள், இதற்கு எதிர்ப்பு காட்டினர். இது ‘விபூதி இயக்கம்’ என பெயர் பெற்றது. மதம் மாற்ற வருவோர் மீதும் மதம் மாறிட சொல்வோர் மீதும் விபூதியை வலுக்கட்டாயமாக பூசி அவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். விரைவில் திருநெல்வேலி இந்துக்கள் ‘விபூதி சங்கம்’ என்றே ஒரு அமைப்பைக் கூட ஏற்படுத்தினர். ஆனால் மிஷினரிகளுக்கு இருந்த காவல்துறை செல்வாக்கோ அரசு அதிகாரமோ அவர்களுக்கு இல்லை. இம்மக்களுக்குக் கைகொடுக்க சென்னையில் இருந்த இந்துப் பெருமக்கள் முடிவு செய்தனர். சென்னையில் ‘சதுர்வேத சித்தாந்த சபை’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் ‘கல்விக் களஞ்சியம் பிரஸ்’ என்கிற பெயரில் ஒரு அச்சகம் உருவாக்கப்பட்டது. (14 சாலைத் தெரு பிள்ளையார் கோவில் அருகில்.) இது உமாபதி முதலியார் என்பவராலும் அவர் சகோதரராலும் தொடங்கப்பட்டது. விபூதி கலகத்தில் கைது செய்யப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஏற்படுத்தி வாதாட, அவர்களுக்கு நிதி உதவி செய்ய, சதுர்வேத சித்தாந்த சபை களம் இறங்கியது. மெட்ராஸ் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த லெவின் என்பவர், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பு வழங்கினார். கவர்னர் இதனால் ஆத்திரமடைந்தார். தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்தத் தீர்ப்பை ரத்து செய்தார். மிஷினரிகளுக்கு ஆதரவாகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் தீர்ப்பளித்தார். மீண்டும் களமிறங்கினார் லட்சுமிநரசு செட்டி. முதலியாருடனும் ஸ்ரீனிவாசப் பிள்ளை எனும் தன் தோழருடனும் கூட்டங்கள் நடத்தி இதனைக் கண்டித்தார். ஆயிரக்கணக்காக மக்களின் கையெழுத்துகள் பெறப்பட்டு அரசுக்குக் கண்டனத் தீர்மானம் அனுப்பப்பட்டது.

தன் இதழ் செய்யும் பணிகளை மேலும் ஒரு இயக்கமாக மாற்ற 1849ல் செட்டி அவர்கள் தொடங்கிய அமைப்பு ‘மெட்ராஸ் மகாஜன சங்கம்’. அவரும் அவரது தோழர் ஸ்ரீனிவாச பிள்ளையும் இணைந்து ‘மெட்ராஸ் ஹிந்து லிட்ரரி சொஸைட்டி’ என்கிற அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்து, அது தோற்ற பின்னரே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த சொசைட்டியின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் முக்கியமானது. 1833ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக இருந்தவர் காவெலி வெங்கட லட்சுமய்யா என்பவர். இவர் ராயல் ஆசியாட்டிக் ஸொசைட்டியிலும் உறுப்பினராக இருந்தவர். செட்டியும் பிள்ளையும் இந்துக்களுக்காகவும் மதமாற்றத்துக்கு எதிராகவும் பாடுபட்ட இந்த சொஸைட்டியின் முக்கிய ஆதரவாளர்கள். என்னதான் சமுதாயத்தில் மதிக்கப்பட்ட பிரமுகர்கள் இந்த சொஸைட்டியில் இருந்தாலும் அரசு இந்த சொஸைட்டியை எட்டிக்காய் போலவே நடத்தியது. என்னதான் அலங்கார வார்த்தைகள் பிரிட்டிஷ் அரசு இயந்திரத்தினரால் பேசப்பட்டாலும் ஹிந்துக்களின் சுய ஒருங்கிணைப்பு என்று வந்தால் அரசு அதை மிகவும் குரோதத்துடன் நடத்தியது.

பணபலத்திலும் அரசு ஆதரவிலும் மிஷினரிகளுடன் ஒப்பிடுகையில் இந்த சொஸைட்டி ஒரு புல்லுக்கு சமானம். ஆனாலும் இம்மக்கள் தம் சொந்த முயற்சியில் ஒரு கல்விச்சாலையை சென்னையில் ஆரம்பித்தனர். ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளும் சுதேச மொழிகளில் அறிவியல் உட்பட இதர பாடங்களும் நடத்தப்பட்டன. இவர்களுக்கு ஒரு கட்டத்தில் கடுமையான நிதி உதவி தேவைப்பட்டபோது அவர்கள் அரசை அணுகினார்கள். பெட்டிஷன் மேல் பெட்டிஷன்கள் அனுப்பப்பட்டன. அரசு பாராமுகமாகவே இருந்தது. இந்துக் கோவில் வருமானங்களை எடுத்துக்கொண்ட காலனிய அரசு, மிஷினரிகளுக்கு சலுகைகளும் நிலங்களும் வழங்கிய அரசு, இந்துக்களின் சுய முயற்சிகளுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை.

இந்த சொசைட்டியின் மனுவைப் படிக்கும்போது இவர்கள் எந்த அளவுக்குத் தொலைநோக்குப் பார்வையுடன் விஷயங்களை அணுகியிருக்கிறார்கள் என்பது அதிசயமாக இருக்கிறது. ‘விஞ்ஞான அறிவை எம் இளைஞர்களுக்கு ஆங்கிலத்திலும் கீழைத் தேச மொழிகளிலும் கற்பிக்க’ தாம் இந்தக் கல்விச்சாலையை ஆரம்பித்ததாக அந்தக் கோரிக்கை மனு சொல்கிறது. இதில் அதிசயம் என்னவென்றால் லண்டனிலுள்ள ராயல் ஏசியாடிக் சொஸைட்டியில் உள்ள பாரதச் சார்பு உறுப்பினர்களை இந்த சொசைட்டியினர் அணுகி அவர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களைப் பெற்று அதனை காலனிய அரசுக்கு அனுப்பியுள்ளனர். அரசாங்கம் பிற தொண்டு நிறுவனங்களுக்கு (கிறிஸ்தவ) செய்யும் அடிப்படை சலுகையைக்கூட இவர்களுக்கு அளிக்கவில்லை. வெறும் 235 ரூபாய் மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில் அரசின் எவ்வித ஆதரவும் இன்றி அரசிடம் மீண்டும் மீண்டும் மன்றாடினர் இம்மக்கள். இறுதியில் இந்த சொஸைட்டி செயலிழந்து நின்றது.

லட்சுமிநரசு செட்டியின் பார்வை ஒரு முழுமையான சமுதாயப் பார்வை. மிஷினரி ஆக்கிரமிப்பு, கோவில் நிலங்கள் இழப்பு ஆகியவற்றையும் வரி வசூலில் செய்யப்படும் கொடுமைகளையும் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினையாக அவரால் பார்க்க முடிந்தது. எனவே மிஷினரி-காலனிய மதமாற்றத்துக்கு எதிராகப் போராடிய அதே வேகத்துடன் விவசாயிகளை வரிவசூலிப்புக்காக சித்திரவதை செய்வதையும் எதிர்த்துக் களமிறங்கியது மகாஜனசபை. 1852ல் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகளை மகாஜனசபை ஆவணப்படுத்தியது:

தங்களுக்கு மனு சமர்ப்பிப்போரின் இந்தத் துயரமானது அதீத வரிவசூலினாலும் அதனுடன் இணைந்து செய்யப்படும் கொடுஞ்செயல்களாலும் ஏற்படுகிறது. கம்பெனியாரின் நீதிமன்றங்களில் முறையிடப்படும் குறைகள் காலதாமதத்தினாலும் திறமையின்மையினாலும் தீர்க்கப்படுவதில்லை; முக்கியத் தேவைகளாக மனுதாரர் கருதுபவை சாலைகள், பாலங்கள், நீர்ப் பாசனத் தேவைகள், மக்களுக்கான கல்விச் சேவை, அரசுச் செலவு கட்டுப்படுத்தப்படுதல், உள்ளூர் அரசு அமைப்புகளை வலுப்படுத்தி மக்களுக்கு சந்தோஷத்தையும் தேசத்துக்கு வளத்தையும் அளிக்கும் ஒரு ஆட்சி.’

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி என்பது பிரிட்டிஷ் ஆட்சிதான். ஆனால் மக்கள் கோரிக்கைகள் எழும்போது பொறுப்பைத் தட்டி தவிர்க்க அது ஒரு முகமூடி. செட்டி இதை நன்றாகவே புரிந்துகொண்டார். எனவே ஆட்சிப் பொறுப்பு நேரடியாக பிரிட்டிஷ் அரசுக்கு மாற்றப்பட வேண்டுமென அவர் கூறினார். பாரத மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலிருந்து பிரிட்டன் அப்போதுதான் தப்ப முடியாது.

இந்த மனு சமர்ப்பிக்கப்பட்ட அதே ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஹிந்து மக்களிடம் பரிவெண்ணம் கொண்டவருமான டான்பி ஸெய்மௌர் என்பவர் இந்தியா வந்தார். லட்சுமிநரசு அவரைத் தம் வீட்டில் தங்க வைத்தார். அவரை லட்சுமிநரசு தஞ்சை விவசாயப் பகுதிகள் முழுக்க அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் வரிவசூல் கொடுமைகளையும் ஏழை விவசாயிகள் படும் கொடுமைகளையும் காட்டினார். அத்துடன் நில்லாமல் ஜனவரி 24 1853ல் பிரிட்டிஷ் அரசுக்கு ‘இங்கு நடைபெறும் சித்திரவதைகள் குறித்து ஆராய ஒரு கமிஷன் நியமிக்கப்பட வேண்டு’மென்று எழுதினார் லட்சுமிநரசு.

ஜூலை 1854ல் ஸெய்மௌர் இந்த விஷயத்தை பிரிட்டிஷ் ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’-ல் பேசினார். தான் நேரடியாகக் கண்டவற்றை சாட்சியம் அளித்தார். கும்பெனியாரின் வரி வசூலிப்புக் கொடுமைகளால் எளிய விவசாயிகள், உழவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதன் விளைவாக சித்திரவதை குற்றச்சாட்டை ஆராய ஒரு கமிஷனை பிரிட்டிஷ் அரசு தென்னிந்தியாவுக்கு, குறிப்பாக தஞ்சை பகுதிக்கு அனுப்பியது. ‘சித்திரவதை கமிஷன்’ எனப் பிரபலமாக அறியப்பட்ட இந்த கமிஷன் இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் வேளாண் தொழிலாளர்களையும் சந்தித்து உண்மையைக் கண்டறியும் பணியுடன் தமிழகம் வந்தது. இது ஒருபுறம் நடக்கும்போதே லட்சுமிநரசு செட்டி விவசாயிகள் சார்பில் மற்றொரு மனுவை ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களுடன் பிரிட்டிஷ் மேல்சபைக்கு அனுப்பினார். 1856 ஏப்ரல் 14 அன்று அது ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’-ல் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதே சமயம் ‘சித்திரவதை கமிஷன்’ தன் அறிக்கையை சமர்ப்பித்தது. வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசு காலனிய வரிவசூலில் நடக்கும் கொடுமைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது.

நவீன ஜனநாயக முறைமைகளையும் அத்துடன் பிரிட்டிஷ் அரசு இயந்திரத்தின் செயல்பாட்டையும் மிக நன்றாக உள்வாங்கி, அதையே பாரத தேசநன்மைக்காகப் பயன்படுத்தி வெற்றியடைந்திருந்தார் திண்ணைப் பள்ளிகளில் கல்வி பயின்ற லட்சுமிநரசு செட்டி.

அவர் மீது எப்போதுமே காவல்துறையின் கண்காணிப்பு இருந்து வந்தது. காவல்துறை சூப்பிரெண்டின் அறிக்கை, லட்சுமிநரசு செட்டி அவர்களின் உரை வீச்சு மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக மாற்றியது என்பதைக் கூறுகிறது – குறிப்பாக ‘சமுதாயத்தின் கீழடுக்குகளில் இருக்கும் மக்களை, அந்த அறியாதவர்களை (அரசுக்கு எதிராக) உஷாராக்கியது’ என்கிறது. ஏதோ அரசுக்கு எதிராக அன்றைய கிளப்புகளில் அமர்ந்துகொண்டு பெட்டிஷன் போடுகிற ரகமாக செட்டி அவர்கள் செயல்படவில்லை. மாறாக அதிகார உயர் பீடங்களுடன் மோதுகிற அதே நேரத்தில் அவரது போராட்டத்தை அவர் சமுதாயத்தின் அனைத்துத் தள மக்களுக்கும் கொண்டு சென்றவர் செட்டி.

விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகளை போராடிய அதே காலகட்டத்தில், சிறிதும் சளைக்காமல், விழிப்புணர்வுடன், மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகள் கல்வி அமைப்புகளில் நடப்பதையும் எதிர்த்து அவர் போராடினார். 1853ல் கவர்னர் பைபிளை மீண்டும் கல்விச்சாலைகளில் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் லட்சுமிநரசுவின் மெட்ராஸ் மகாஜன சங்கம் அதை முறியடித்தது. இந்த அமைப்பின் கடைசி மனு 1859ல் இந்திய அரசு செயலரான ஸ்டேன்லிக்குக் கொடுக்கப்பட்டது. இதில் கோவில் நிலங்களின் இழப்பு குறித்து கூறப்பட்டது. கல்விச் சாலைகளில் பைபிள் திணிக்கப்படுவதையும் பொதுவாக இந்துக்களுக்கு எதிரான ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுவதையும் கண்டித்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸி கல்லூரியில் சமஸ்கிருதமும் சுதேசி மொழிகளும் சொல்லிக் கொடுக்க பீட்டர் பெர்ஸிவல் என்பார் நியமிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. ஏனென்றால் அவர் இந்துக்கள் மீது வெறுப்பைக் கக்கும் மிஷினரி, அவருக்கு தமிழில் அறிவு தொடக்கநிலை அறிவுதான், சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க கிஞ்சித்தும் அருகதை அற்றவர், அவரது நூலில் ஔவையாரின் செய்யுள்களைத் திரித்து மோசடி செய்தவர் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிய அந்த மனுவில் கணிசமாக முஸ்லீம் மக்களின் கையெழுத்துக்களை செட்டி அவர்களால் பெற முடிந்தது என்பது முக்கியமான விஷயம்.

பெண்கல்வியில் மிகவும் அக்கறை காட்டிவர் செட்டி அவர்கள். தன் செல்வத்தில் கணிசமான பங்கை பெண்களுக்கான கல்வி சாலைகளை நிறுவ செலவளித்தவர் அவர். அந்த காலகட்டத்திலேயே விதவைகள் மறுமணத்துக்காக பிரசாரம் செய்தவர்.

லட்சுமிநரசு செட்டி ஒட்டுமொத்த தென்னகத்தின் நலனைத் தம் பார்வையில் கொண்டிருந்தார். மைசூர் போரின்போது பிரிட்டிஷ் அரசு ஹைதராபாத் நிஜாமுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்திருந்தது. திப்புவைத் தோற்கடிக்க நிஜாம் உதவினால், பின்னர் மைசூர் ராஜ்ஜியத்தை அதன் உண்மை ராஜாவிடம் கொடுக்கத் தேவையில்லாத நிலை வந்தால், பிரிட்டிஷாரும் நிஜாமும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பது அது. போருக்குப் பல ஆண்டுகளுக்கு பின்னரும் மைசூர் அரச வம்சத்திடம் பொறுப்பை முழுமையாக அளிக்காமல் பிரிட்டிஷ் அரசு ஊசலாடிக் கொண்டிருந்தது. செட்டி இதனைக் கவனித்தார். மிகுந்த ராஜ தந்திரத்துடன் அவர் ஒரு விஷயம் செய்தார். மைசூர் கிருஷ்ண ராஜ உடையாரிடம் ஒரு நெருங்கிய உறவினர் பையனை இளவரசனாகத் தத்தெடுக்கச் சொன்னார். பின்னர் ஹைதராபாத் நிஜாமின் பிரதம அமைச்சர் சர் சாலர் ஜங் மூலமாக பிரிட்டிஷாரிடம் அவர்கள் வாக்குறுதியை நினைவூட்டி அழுத்தம் தரச் சொன்னார். ஏற்கெனவே வட இந்தியாவில் பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷார் இந்நிலையில் மைசூர் மகாராஜாவைப் பகைத்து இன்னொரு எதிரியை தென்னிந்தியாவில் உருவாக்க விரும்பவில்லை. விளைவாக கிழக்கிந்திய கம்பெனியார் மைசூரை அதன் மகாராஜாவிடமே அளிக்க வேண்டியதாயிற்று.

பிரிட்டிஷார் அவரைப் பெரும் ஆபத்தாகப் பார்த்தார்கள். அவரது பொது உரைகள் போலீஸ் உளவுத்துறையினரால் கவனிக்கப்பட்டன. 1857க்குப் பிறகு ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் விழிப்புணர்வு கொண்ட இந்தியர்களிடம் சமரசம் செய்து கொள்வது நல்லது எனக் கருதப்பட்டது. எனவே 1861ல் அவரை அரசே கௌரவித்தது. 1863ல் மெட்ராஸ் சட்டசபை கவுன்ஸிலில் அவர் உறுப்பினராக்கப்பட்டார். ஆனால் இதற்கிடையில் செட்டி வறுமைக்குத் தள்ளப்பட்டிருந்தார். 1846ல் தபால் மூலமாக மட்டும் 10,809 பிரதிகள் விற்ற ‘மதியம்’, 1853ல் 4794 ஆகக் குறைந்து, இறுதியில் வெறும் 150க்கும் கீழே சென்றபோது அதை அவர் நிறுத்த வேண்டி வந்தது. ஆதரிக்க ஆளில்லை.

1868ல் செட்டி அவர்கள் பணத்தின் வறுமையிலும் தேசபக்த செழிப்புடனும் இறந்தார். தேசத்தையும் தேச தர்மத்தையும் காப்பதே அவரது வாழ்க்கையின் முழு போராட்டமாக அமைந்தது. தேசத்தின் விவசாயிகள், நிலங்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் ஹிந்து தர்ம பாதுகாப்புக்குமான தொடர்பினை முதன்முதலாக ஜனநாயக யுகத்தில் வலியுறுத்தி எழுந்த குரல் சென்னையிலிருந்து எழுந்தது. அவரது வாழ்க்கையை நினைவில் கொள்வது நம் கடமை. ஆம். வீர சாவர்க்கருக்கு முன்னோடியாக எழுந்த ஹிந்துத்துவ குரல் சென்னையிலிருந்து எழுந்தது.