
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.
As Far As My Feet Will Carry Me (2001)
1945ல் படம் தொடங்குகிறது. க்ளெமென்ஸ் ஃபோரல் என்ற ஜெர்மானிய நாஜிப் படைவீரன் சோவியத் துருப்புக்களால் சிறை பிடிக்கப்படுகிறான். Continue reading ஓட்டம் | அருண் பிரபு
இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் ஜெர்மானியர்களின் கைதிகளாக இருந்த சிவப்பு ராணுவத்தினர், சோவியத் அமைப்பின் பொது மக்கள் என்று பலரும் தங்களுக்கு விடுதலை என்று மகிழ்ந்து கொண்டாடினர். ஜெர்மனி தோற்று சோவியத் யூனியன் வென்ற நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததால் நாட்டுக்குத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டனர். ஜெர்மன் சிறைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்குச் செல்லாமல் சைபீரியச் சிறை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஜெர்மானியச் சிறைகளில் அவர்களுக்கு நாஜி கொள்கை கற்பிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுவித்து கம்யூனிசத்தை மீண்டும் கற்பிக்க என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு கொடுமையான சிறை. போனால் திரும்பி வருவது மிகவும் அரிது. Continue reading சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு
இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வென்றது முற்றிலும் ஹிட்லரின் தலைக்கனம், பிடிவாதம், தற்குறித்தனம் இவற்றால் மட்டுமே; ரஷ்யர்களை விட்டிருந்தால் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு பெரிய எண்ணிக்கையில் செத்திருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் மற்றொரு படம். Continue reading காமிசார்களின் அரசியல் (Demoted) | அருண் பிரபு
கம்யூனிஸ உலகில் நண்பன் என்பதும் இல்லை எதிரி என்பதும் இல்லை. கொள்கைக்கு விரோதி என்று சந்தேகம் வந்தால் பெற்ற தாயைக் கூட சிறை செய்யவோ கொல்லவோ தயங்கமாட்டார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை இது. Continue reading சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு
(Listopad – A Memory of the Velvet Revolution)
செக்கொஸ்லொவேகியாவில் 1989ம் ஆண்டு நடைபெற்ற மென்பட்டுப் புரட்சி என்று அறியப்படும் Velvet Revolution சமயத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் லிஸ்டொபாத். ஏறத்தாழ ஒரு மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் அதிரடிப்படைப் போலிஸின் அச்சுறுத்தல்களுக்கிடையே, அமைதிப் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி, தேசிய கீதம் பாடி, ‘ரஷ்யாவே வெளியேறு’ என்று கோஷமிட்டு, விடுதலை வேண்டிப் போராடினார்கள். அந்தச் சமயத்தில் செக்கோஸ்லோவேக்கியாவில் ஆட்சி எப்படி இருந்தது, மக்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று பேசுகிறது திரைப்படம். Continue reading வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு
வாங் கிராமம், ஜியாங்சி மாகாணம் சீனாவில் பிறந்தவர் நான்ஃபு வாங். இவர் 1985ல் சீனாவின் ஒரு பிள்ளைக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். இவர் பெற்றோர் பையன் பிறப்பான் என்ற எதிர்பார்ப்பில் ஆண் தூண் என்று பொருள்பட நான்ஃபு என்று இவருக்குப் பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியும் அதே பெயரை வைத்தனர். இவருக்குப் பிறகு ஒரு தம்பி உண்டு. ஒரு பிள்ளைக்கும் இன்னொரு பிள்ளைக்கும் இடையே 5 ஆண்டுகள் இடைவெளி இருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு அனுமதி உண்டு என்ற சட்டத்தின் படி இவர் பெற்றோர் இரண்டாவது பிள்ளை பெற்றுக் கொண்டாலும், ஊரில், பொது இடங்களில் அவர்கள் ஏதோ தவறு செய்தவர்கள் போலவே பார்க்கப்பட்டனர். பள்ளிக்கூடத்தில் நான்ஃபுவை தோழிகள் தம்பி இருப்பது பற்றிக் கேலி செய்தனர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாதவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. நான்ஃபுவின் தம்பி பிறக்கவுள்ள சமயம் அவரது பாட்டி ‘இது பெண்ணாக இருந்தால் ஒரு கூடையில் வைத்து தெருவில் வைப்போம்’ என்றாராம். அப்போது குழந்தையின் பாலினத்தை அறியும் சோதனை அங்கே வரவில்லை. பையன் என்றதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
Continue reading ஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு
சீனாவின் கம்யூனிஸ காலத்தையும் அதன் மாற்றத்தையும் சொல்லுகிறது இந்தப் படம். 1970களில் மாவோவின் காலத்தில் படம் தொடங்குகிறது. ஷாண்டாங் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 9 குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்தவன் லீ குங்க்சின். அந்தக் கிராமத்துக்கு அதிகாரிகள் வருகிறார்கள். லீயின் பள்ளிக்கு வரும் அதிகாரிகள் அங்கே மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பீஜிங்கில் நடக்கும் நாட்டியப் பயிற்சிக்கு அனுப்பவிருப்பதாகச் சொல்கிறார்கள். லீயின் வகுப்பில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் போகிறார்கள் அதிகாரிகள். லீயின் வகுப்பாசிரியர் மிகவும் கெஞ்சிக் கேட்டு அவனைச் சேர்த்துவிடுகிறார். லீ பீஜிங் போவதை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் பக்கத்து குவிங்டாவ் நகரத்தில் தேர்வுக்கு வரச்சொல்கிறார்கள். அங்கே சைக்கிளில் அழைத்துப் போகிறார் லீயின் தந்தை. லீயிடம் நடனத்துக்குத் தேவையான ஒரு நளினம் உள்ளது என்று மாநில நாட்டிய மாஸ்டர் அவனைத் தேர்வு செய்கிறார்.
Continue reading மாவோவின் கடைசி நடனக் கலைஞன்: Mao’s Last Dancer | அருண் பிரபு