Posted on Leave a comment

வலம் ஜூலை 2018 இதழ் – முழுமையான படைப்புகள்


வலம் ஜூலை 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

அஞ்சலி: பி.ஆர்.ஹரன் | அரவிந்தன் நீலகண்டன்

காவியக் கண்ணப்பர் | ஜடாயு

டிஎன்ஏ சாட்சியங்கள் | ரஞ்சனி நாராயணன்

ஸ்ரீ -கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | அபாகி

பூணூலில் தூக்கு மாட்டிக் கொள்ளும் திராவிட இனவெறி | பி.ஆர்.ஹரன்

மேலை அல்லது கல்யாணி சாளுக்கியர் சிற்ப ஆலயக் கலை எழில் வரலாறு | அரவக்கோன்

கார்ட்டூன் பக்கம் – ஆர்.ஜி

சில பயணங்கள் சில பதிவுகள் – 10 | சுப்பு


காலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்

Posted on 2 Comments

காலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்

காலா
திரைப்படம் தொடர்பான அனைத்து விவாதங்களும் முதலில் எழுப்பப்படும் கேள்வி ஒரு
திரைப்படத்திற்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்க
வேண்டுமா என்பதுதான்
. ஒரு திரைப்படம், அதுவும் வெகுஜனங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்
எடுக்கப்பட்ட திரைப்படத்தை நாம் ஒரு பரப்புரை ஆயுதமாகத்தான் கருதவேண்டும்
. எனவே அதனைக் குறித்து விவாதிப்பதும், அதன் பரப்புரை அம்சங்களைக்
கட்டுடைப்பதும் அவசியமானதாகும்
.
காலா திரைப்படம் குறித்து விவாதிக்கும்போது அத்திரைப்படம்
கட்டி எழுப்ப முயலும் மதம்
, சித்தாந்தம் மற்றும் அரசியல் சார்ந்த
பரப்புரைகளை
/ சித்திரங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
காலாவும் மதமும்:
தனிப்பட்ட வாழ்வில் பெரும் ஆன்மிகவாதியாகத் தன்னை முன்னிறுத்தும் ரஜினிகாந்த்
எப்படி இந்தத் திரைப்படத்தில் நடித்தார் என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி
. நாத்திகமோ, ஹிந்து மதத்தின் மீதான விமர்சனமோ ஒரு பிரச்சினை அல்ல. இந்தியாவில் ஹிந்து மதத்தில் நாத்திகம் என்பதை பொருட்படுத்தத்தக்க ஒரு
எதிர்தரப்பாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருதி வந்துள்ளோம்
. காலாவில் வரும் மதம் சார்ந்த கருத்துகளில் பிரச்சினை என்னவென்றால் அது
தமிழகத்தில் மட்டும் காணப்படும் தக்கையான ஹிந்து வெறுப்பு நாத்திகம் என்பதுதான்
. படத்தில் ரஜினி அதாவது காலாகடவுள் நம்பிக்கையற்றவராக காண்பிக்கப்படவில்லை. ஹிந்துமத நம்பிக்கையற்றவராகத்தான் காட்டப்படுகிறார். முதலில் வரும் பாடல் காட்சியில் ரஜினி நமாஸ் செய்வது தெளிவாகக் காட்டப்படுகிறது. அதேபோல் பின்னர் வில்லனிடம் பேசும்போதும் குதா…” என்று தொடங்கும் வசனத்தைக்
கூறுகிறார்
. படத்தில் பல ஹிந்து கதாபாத்திரங்கள் கழுத்தில்
இஸ்லாமியபாணி தாயத்தை அணிந்துள்ளனர்
. ரஞ்சித் முன்வைக்கும் போலி
பகுத்தறிவுதான் படத்தை கேலிக்குரியதாக்குகிறது
.

திரைப்படத்தில்
எங்கெல்லாம் ஹிந்து மதத்தை சிறுமை செய்ய முடியுமோ அங்கெல்லாம்
சிறுமை செய்துள்ளார்
. சில உதாரணங்களை பார்க்கலாம்.
1. படத்தில் வரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அனைவரும் நெற்றியில் ஆஞ்சநேயர்
குங்குமம் என்று தமிழகத்தில் அறியப்படும் செந்தூரத்தை அணிந்துள்ளனர்
. செந்தூரம் என்பது ஆஞ்சநேய பக்தர்கள் அணியும் சின்னம். அது ஹிந்து இயக்கத்தவர்கள் மட்டுமே அணியும் சின்னம் அல்ல. நெல்லையில் 90% ஹிந்துக்கள் நெற்றியில் இது
இருக்கும்
. உபயம்: கெட்வெல் ஆஞ்சநேயர். ஆனால் இத்திரைப்படம் செந்தூரத்தை ஏதோ ரவுடிகளின் சின்னம் என்பதுபோல சித்தரித்துள்ளனர். இதே இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். காலாவின் முன்னாள் காதலி நீங்கலாக அனைத்து இஸ்லாமிய கதாபாத்திரங்களும்
இஸ்லாமிய சின்னங்களை அணிந்துள்ளனர்
. ஜீன்ஸ் அணிந்துள்ள இஸ்லாமிய
யுவதி கூட தலையை ஹிஜாபால் மறைத்துள்ளார்
. ஒரு சின்னத்தைக் கேவலப்படுத்துதல்
அதற்கெதிராக மற்றொரு சின்னத்தைப் புனிதப்படுத்துதல் என்னும் அற்ப பரப்பியல்
விளையாட்டு இது
. இரு சமூகங்களையும் பிரிக்கும் சூழ்ச்சி என்றுகூட
கூறலாம்
.
2. இதேபோல் வில்லன் தொடர்ந்து தனது
தரப்பை நியாயப்படுத்த கீதையின் வசனங்களைச் சொல்கிறார்
. “கிருஷ்ணர் ஏற்கெனவே கூறினார்….”, “போரில்
கிருஷ்ணன் செய்ததுதான்
…” என்றெல்லாம் தனது தவறை
நியாயப்படுத்துகிறார்
. ஏனைய புனித நூல்கள் போரைக்
குறித்து சொன்னவற்றை வசனமாக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை
. இவ்வாறு வெறுப்பை வளர்க்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல நம் கருத்து.
3. ‘ராவணகாவியம்’, ‘அசுரன் என்ற அழைப்பு ஆகியவற்றைக் காட்டி, இறுதிக் காட்சி வன்முறை
வெறியாட்டத்தில் பின்னணியாக ராமகாதையின் வரிகளை ஓடவிட்டிருப்பது மற்றொரு கீழ்மை
.
4. காலாவின் போராட்டத்தில் இஸ்லாமியர் கலந்துகொள்கிறார்கள். வெள்ளை உடை அணிந்த பெந்தகோஸ்தே ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஹிந்துக்கள், அர்ச்சகர்கள் யாரும் கலந்து
கொள்ளவில்லை
. ஹிந்து இயக்கங்கள் அதற்கு எதிராகவும் இருக்கின்றன. எதற்கு இத்தகைய ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி?
5. ‘காலா என்னும் பெயரே வடமொழி மூலத்தைக் கொண்டது. வேதத்தில் அச்சொல் வருகிறது. ஸ்ரீராமனை காலாம்போதர… ’ என மந்திர நூல்கள்
வர்ணிக்கின்றன
. (அதாவது கார்மேகத்தின் வர்ணம்
கொண்டவன் என்று
.) இருப்பினும் இவை அனைத்தையும்
ஹிந்து மதத்திற்கு எதிராகத் திருப்பி போலி பரப்புரை உரையாடல்களை உருவாக்குகிறார்
இயக்குநர்
.
6. ஆஞ்சநேயர் குங்குமத்தை மட்டும் அல்ல. ஆஞ்சநேயரையும்
கீழ்மைப்படுத்தும் விதமான காட்சிகள் உண்டு
. இறுதிக் காட்சிகளில் வரும்
வில்லனின் உடல்மொழியையும் அந்தக் கதாபாத்திரம் பயன்படுத்தும் கதையை ஒத்த
ஆயுதத்தையும் பார்த்தால் இது புரியும்
.
7. வில்லனின் நிறுவனத்தின் பெயர் ‘Manu Builders’. இதற்கு நான் விளக்கவுரை தரவேண்டியது இல்லை.
8. அந்தண வெறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படி? ஆகவே வில்லனின் பெயரில் சித்பவன் அந்தணர் துணைப்பெயரான அய்யங்கர்
இணைக்கப்பட்டுள்ளது
.
ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி? சரி, ஏனோ காழ்ப்புணர்ச்சி என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இதற்கு மாற்றாக இயக்குநர் எதை வைக்கிறார்?
. படம் முழுவதும் புத்தர் சிலைகள் வருகின்றன. இயக்குநருக்கும்
அறிவுஜீவிகளுக்கும் தெரியாத
விஷயம் என்னவென்றால் பௌத்தம் ஜாதி அமைப்பை ஏற்கிறது
என்பதுதான்
. லஸிதி வஸ்தார சூத்திரத்தில் போதி சத்துவர் அந்தண/சத்ரிய உயர்குலத்தில்தான் பிறக்க முடியும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. Y.Krishnan எழுதிய ‘Buddhism and the caste system’
என்னும் கட்டுரையை
(Journal of the International Association of
Buddhist studies vol.a. Number 1)
வாசித்தால் தலை சுற்றும். வைதீக ஹிந்து மதப்பிரிவுகளில் இரு பிறப்பாளர் அல்லாதவர்களுக்கு மோக்ஷ உபாயமாக
புராணங்கள் கூறப்பட்டுள்ளன
. தொல் பௌத்தத்தில் அப்படியான
வழிமுறை கூட இல்லை
. திரு.அம்பேத்கருக்கு ஓரளவிற்கு இது
தெரியும்
. அதனால்தான் அவர் ஒரு புது பௌத்த பிரிவை உருவாக்கினார். ‘நவயானா என்ற பெயரில் திரு.அம்பேத்கர் பௌத்தத்தின் ஆதாரக் கொள்கையான கர்மாவையும் மறுபிறப்பையும்
நிராகரித்தார்
. (இவற்றை ஏற்றுக்கொண்டால்
ஜாதியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
.) இவை இல்லாத ஒரு பௌத்தம் பௌத்த
மதமே அல்ல என்பது செவ்வியல் பௌத்தர்கள்
மற்றும் ஆய்வாளர்களின்
கருத்து
. இதைப்பற்றி எல்லாம் இயக்குநர் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை
.
. இதைத் தவிர திரு.அம்பேத்கரின் உருவச்சிலையும், .வே.ரா.வின் உருவச்சிலையும் படம்
முழுக்கக் காட்டப்படுகின்றன
. இஸ்லாம் குறித்த திரு.அம்பேத்கரின் கருத்து என்ன, ஏன் அவர் இந்திய ராணுவத்தில்
ஹிந்துக்கள் எண்ணிக்கை குறையக் கூடாது என்றார்
, இஸ்லாமிய அரசியலுக்கும் ஜனநாயக அமைப்பிற்கும் இடையேயான முரண் குறித்த திரு.அம்பேத்கரின் வாதம் முதலியவற்றை இயக்குநர் வசதியாக மறந்துவிட்டார்போல. (‘ஹிந்துத்துவ அம்பேத்கர் நூலை ஏனையோர் வாசிக்கலாம்.) பட்டியல்
இனத்தவர் மற்றும் இஸ்லாமியர் குறித்த ஈ
.வே.ரா.வின் கருத்தை நான் கூறவேண்டிய
தேவை இல்லை
.
காலாவின் குலதெய்வம் காலாச்சாமிதானே. எனவே ஹிந்துக்களின் சிறுதெய்வ வழிபாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறதே என்ற
கேள்வி எழும்
. இதிலும் ஒரு விஷமம் உண்டு. சமுத்திரக்கனி காலாச்சாமி பிரசாதம் என்று கூறி காலாவை கள் அருந்தச் செய்கிறார். பின்னர் காலாவின் மனைவியும் மகனும் கொல்லப்படும்போது காலாவே தான்
கள்ளுண்டதனால்தான் அதனைத் தடுக்க முடியாமல் போனது என்கிறார்
. நுட்பமாகச் சொல்லப்படும் செய்தி என்ன? ஹிந்து மத எதிர்ப்பாளர்களும்
மிஷனரிகளும் சிறு தெய்வ வழிபாட்டை முன்னெடுப்பதற்கு முக்கியமான காரணம்
என்னவென்றால் சிறு தெய்வ வழிபாடுகளில் இத்தகைய விஷமங்களைச் செய்யலாம் என்பதுதான்
. மறைமுகமாக குறுதெய்வங்களை வழிபடுவதால் அபாயமே உண்டு என்பது அல்லவா படம்
சொல்லும் செய்தி
?
குழந்தைகளை போராட்டக்களத்திற்குக் கொண்டுவருவது என்னும் கண்டிக்கத்தக்க
வழக்கம் சில ஆண்டுகளுக்கு
முன் ஐஐடி .வெ.ரா. வாசக வட்டம் பிரச்சினையில்
தொடங்கியது
. இதனை அப்போதே கவிஞர் தாமரை போன்றவர்கள் கூட
கண்டித்தனர்
. இன்று இது அனைத்து சமூக விரோத சக்திகளும்
பயன்படுத்தும் தந்திரமாக மாறியுள்ளது
.
இத்தகைய நிலமோசடி விஷயங்களில் சாதாரணமாக பெரும்பங்கு வகிக்கும் அரசு சாரா
நிறுவனங்களையும்
(NGO) ஆட்சியாளர் தரப்பையும் (அப்பகுதி ச..) மிக மெலிதாகதான் கண்டிக்கிறார்.
நாஞ்சில் நாடனின் எட்டு திக்கும் மதயானை தொடங்கி ஜெயமோகனின் புறப்பாடு வரை பல படைப்புகளிலும் சொல்லப்பட்டிருக்கும் தாராவி ஜாதிப் பிரச்சினைகள் ஆக மொத்தம் ஒரு வரியே இந்தப் படத்தில்
வருகிறது
. இந்தப் பிரச்சினையைக் குறித்தெல்லாம் பேசாமல் எத்தகைய
சமூகநீதி திரைப்படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார் என்று புரியவில்லை
.
ஹிந்து மதத்தை திரைப்படங்களில் சிறுமைப்படுத்த முயல்வது புதிது ஒன்றும் இல்லை. இத்தகைய முயற்சிகளுக்கு ஹிந்துக்கள் என்றும் அறிவுசார் தளத்தில் மட்டுமே
எதிர்வினையாற்றியுள்ளனர்
. இனியும் அப்படித்தான். ஆனால் இத்தகைய திரைப்படங்கள் ஒரு சில சிறுபான்மையினரையும், விளிம்பு நிலை மக்களையும் தவறாக வழிநடத்தி தனிமைப்படுத்தி அவர்களின்
வளர்ச்சியைத் தடுத்துவிடுமோ என்பதுதான் நம் கவலை
. ‘மெட்ராஸ் திரைப்படத்தில் நாம் கண்டது திரைக்கலையில் புதிய
அழகியலை
, ஆவணப்படுத்தப்படாததை ஆவணப்படுத்திய நம்பிக்கை நட்சத்திரமான
ரஞ்சித்தை
. ஆனால் காலாவில் இருப்பது வெறுப்பின் தேய்வழக்கை
உமிழும் ஒருவர்தான்
. தவறான சித்தாந்த ரஞ்சித் கலையை
பலிவாங்கிவிட்டார்
.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 10 – சுப்பு

தமிழ்வாணனின் கண்ணாடி
 1967 தேர்தல்தான் என்னுடைய அரசியல் வாழ்க்கையின் தொடக்கம். 1971 தேர்தலில் நான் முழு மூச்சில் ஈடுபட்டேன். அரசியல் என்னை பாதித்தது. நானும் என் அளவில் நடப்பு
அரசியலை பாதித்தேன்
. ஆகவே அந்தக் காலகட்டத்தின்
அரசியல் பின்னணியைப் பற்றி கொஞ்சம் எழுதுகிறேன்
.
விடுதலை பெற்ற நாளிலிருந்து ஆட்சி அதிகாரத்தை பங்கு போடாமல் அனுபவித்து வந்த
காங்கிரஸ்காரர்களுக்கு
1967 தேர்தலில் பலத்த அடி விழுந்தது. 
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது ஒரு பரிதாபமான காட்சி. அன்றைய முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் வீட்டில் அன்று நிலவிய
அசாதாரண சூழ்நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது
. 
பக்தவத்சலத்தின் வீட்டில் அன்றைய காவல்துறைத் தலைவர் அருள் இருந்திருக்கிறார். முதல்வரும் அவரும் வானொலிச் செய்திகளைக் கேட்டவண்ணம் இருக்க, “எப்படியும் காங்கிரஸ்தான் ஜெயிக்கும், கவலைப்பட வேண்டாம்என்று தொடர்ந்து அருள் சொல்லியிருக்கிறார்.
நேரம் ஆக ஆக திமுக கூட்டணியின் அமோக வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது. அருள் என்ன சொல்கிறார் என்று முதல்வர் அருளைத் தேட, அருள் அந்த அறையிலேயே இல்லை. அறையை விட்டு வெளியே வந்த முதல்வர்
காவலுக்கிருந்த
போலீஸ்காரர்களும் இல்லை என்பதை
அறிந்து அதிர்ச்சியடைந்தார்
. ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும்
பாக்கி
.
அவரிடம் விசாரித்தபோது அருள் அண்ணாதுரை வீட்டிற்குப் போயிருக்கிறார் என்றும்
மற்ற போலீஸ்காரர்கள் எப்பவோ போய்விட்டார்கள் என்றும் விசுவாசியான தான் மட்டும்
தங்கியிருப்பதாகவும் அந்த போலீஸ்காரர் கூறினார்
.
என்கிறது அந்தப் பதிவு.
ஒரிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப்
பேசினார் பிரதமர் இந்திரா காந்தி
. கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு
கல்வீச்சு நடந்தது
. அதில் இந்திரா காந்தியின் மூக்கு உடைபட்டது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களில்
காங்கிரஸ் அதிகாரத்தை இழந்தது
. இருந்தாலும் பாராளுமன்றத்
தொகுதிகளில் கிடைத்த வெற்றியின் காரணமாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நீடித்தது
. இந்திரா காந்தி பிரதமராக நீடித்தார். மொரார்ஜி தேசாய் துணைப்
பிரதமராக இருந்தார்
. இது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். இருவருக்கும் இடையே இருந்த பூசல் வெளிப்படவில்லை என்றாலும் அது சமயம்
வருவதற்காகக் காத்திருந்தது
.
இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகிர் உசேன் காலமானதை ஒட்டி (மே 1969) புதிய குடியரசுத் தலைவரைத்
தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது
. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்
குழு நிஜலிங்கப்பா தலைமையில் பெங்களூரில் கூடி சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக
பரிந்துரை செய்தது
. ஆனால் பிரதமர் இந்திரா காந்தி கட்சியின் முடிவுக்கு
எதிராகச் செயல்பட்டார்
. வி.வி. கிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதற்கு ஆதரவாக
இந்திரா காந்தியும் அவர்களுடைய சகாக்களும் களத்தில் இறங்கினர்
. முடிவில் வி.வி. கிரி வெற்றி பெற்றார். இந்திரா காந்தி மீது காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திரா காங்கிரஸ் என்றும் கட்சி இரண்டாகப் பிளந்தது.
தன்னுடைய பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பிராபல்யத்தை
அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் இந்திரா காந்தி சில முற்போக்கு நடவடிக்கைகளை
எடுத்தார்
. தனியார் வசம் இருந்த பதினான்கு வங்கிகளை நாட்டுடைமை
ஆக்கினார்
. மன்னர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து
செய்வதாக ஆணையிட்டார்
. 
மன்னர் மானிய ரத்து தொடர்பான மசோதா மாநிலங்களவையில் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பது திமுகவின் அதிகாரபூர்வமான முடிவு, ஆனால் திமுக உறுப்பினரான நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு சரியான நேரத்தில் அஜீரணம் ஏற்பட்டு அவர் வாக்கெடுப்பில்
கலந்து கொள்ளாமல் பாத்ரூமிற்குச் சென்றுவிட்டார்
. அதன் விளைவு, அரசு மசோதா தோல்வியடைந்தது. ஆட்சி கவிழ்ந்தது. தேர்தல் வந்தது.
இந்த நேரத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி சாமர்த்தியமாக ஒரு வேலை
செய்தார்
. தமிழ்நாடு சட்டமன்றம் கலைக்கப்பட்டு தமிழ்நாட்டைப்
பொருத்தவரை நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்பட்டது
. ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் கை கோர்த்துக்கொண்டன. எதிரணியில் இந்திரா காங்கிரஸும் திமுகவும். ஜனநாயகக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட காமராஜ் தலைமையிலான அணிக்கு பிரசார
பீரங்கியாகச் செயல்பட்டார் துக்ளக் இதழின் ஆசிரியர் சோ
. ராமசாமி. அரசியல் இதழான துக்ளக்கின் வரலாற்றில் இதை ஒரு
திருப்புமுனை என்றே சொல்லலாம்
.
தேர்தல் பிரசாரத்தின்போது சென்னை தி.நகர் திருமலைப் பிள்ளை தெருவில்
உள்ள காமராஜ் வீட்டை புகைப்படம் எடுத்து போஸ்டர் ஆக்கி ஒட்டினார்கள் திமுகவினர்
. அந்த போஸ்டரில் இருந்த வாசகம் சோலை நடுவே வாழ்கிற சோசலிஸ பிதாஎன்று சொல்லி காமராஜர் வசதியாக வாழ்வதாக குற்றம் சாட்டியிருந்தது.
உண்மையில் அது காமராஜருக்கு சொந்தமான வீடு அல்ல, வாடகை வீடுதான். அந்த வீட்டை காமராஜருக்கு சொந்தமாக்கிவிட பலமுறை பலர் முயற்சித்தும் காமராஜ் அதை
ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை
.
இருபது ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காமராஜின் நிலை இதுதான். அவருடைய அமைச்சரவையில் பங்கு பெற்ற கக்கன் நிலைமையோ இதைவிட மோசம். 1971 தேர்தலில் கக்கனுக்காக வேலை செய்தவர் மயிலாப்பூரைச் சேர்ந்த திருஞானம். அவர் எழுதுகிறார். 
“1971ல் நான் தென் சென்னை பகுதியில் இளைஞர் காங்கிரஸ் (ஸ்தாபனம்) அமைப்பாளராக இருந்தேன். என் வீட்டிற்கு அருகில் உள்ள அஜந்தா ஓட்டலுக்கு எதிரே முன்னாள் அமைச்சர்
கக்கன் வாடகை வீட்டில் குடியிருந்தார்
. அந்த வீட்டின் வாடகை ரூபாய்
நூற்று ஐம்பது
. 
சொந்தக் கார் இல்லாத கக்கன் ஶ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதிக்கு
வேட்புமனு தாக்கல் செய்ய மீட்டர் போட்ட டாக்சி எடுத்துக்கொண்டுதான் போனார்
. அவருக்கும் அவருக்காக தேர்தல் வேலை செய்த யாருக்கும் கார் வசதியில்லை. இது எனக்கு சங்கடமாக இருந்தது.
இராயப்பேட்டையில் மாலி மோட்டார்ஸ் உரிமையாளர் ராஜகோபாலய்யர் என்பவர்
சுதந்திராக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார்
. அவரிடம் பேசி கக்கனுடைய தேர்தல்
வேலைகளுக்காக கார் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டேன்
. அவரும் மகிழ்ச்சியோடு சம்மதித்து தன்னுடைய செலவிலேயே பெட்ரோல் போட்டு டிரைவர்
சம்பளமும் கொடுத்து மூன்று கார்களை கொடுப்பதாகச் சொல்லிவிட்டார்
. 
ஆனால் இந்த உதவியை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் ஒரு தடங்கல் ஏற்பட்டது. 
ராஜகோபாலய்யர் சொன்னதை கக்கனிடம் சொன்னபோது இப்படியெல்லாம் உதவி கேட்டு
வாங்கிவிட்டால் நாளைக்கு பதிலுக்கு நாம ஏதாவது செய்ய வேண்டிவரும்
. ஆகவே இந்த விவகாரமே வேண்டாம் என்று மறுத்துவிட்டார். பிறகு அந்தத் தொகுதியிலே பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு இரண்டு கார்
ஏற்பாடு செய்துகொடுத்தோம்
. இந்தத் தகவலை கக்கனுடைய
பார்வைக்கு வராமல் மறைத்துவிட்டோம்
.
என்கிறார் இன்றைய பத்திரிகையாளர் திருஞானம்.
கருணாநிதியின் ஆட்சிக்குக் காவலராக தன்னை அறிவித்துக்கொண்ட ஈ.வெ.ரா இந்த சமயத்தில் சேலத்தில் ஒரு ஊர்வலம் நடத்தினார். அந்த ஊர்வலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போடப்பட்டது. இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலக் காட்சிகளை துக்ளக் இதழ் புகைப்படமாக வெளியிட்டது.
சேலம் ஊர்வலம் தொடர்பாக ஈ.வெ.ரா மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய கருணாநிதி அரசு, தலைகீழாகச் செயல்பட்டது. குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை
இல்லை
, ஆனால் துக்ளக் இதழ் தடை செய்யப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் ஆதரவாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர்
மத்தியில் எழுச்சி ஏற்பட்டது
. சென்னையில் தடை செய்யப்பட்ட
துக்ளக் இதழை எடுத்துக்கொண்டு மாணவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
நடத்தினார்கள்
.
கருணாநிதி அரசின் நடவடிக்கையைக் கண்டித்து சென்னை தி.நகரில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. கல்யாண மண்டபத்தில் நடந்த
கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வந்துவிட்டதால் கூட்டத்திற்கு வெளியேயும்
வீதிகளிலும் மக்கள் வெள்ளமாக இருந்தது
. பனகல் பார்க் தொடங்கி தி.நகர் பஸ் நிலையம் வரை ஜனக் கூட்டம்.
இந்தக் கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். அரசுக்கு எதிர்ப்பாக ஆரவாரமான
பேச்சுகள்
, மேடையில். ஆனால் என் புத்தி வேறு விதமாக
யோசித்துக் கொண்டிருந்தது
. என்னுடைய யோசனை மேடையில் இருந்த
எழுத்தாளர் தமிழ்வாணன் பற்றியது
. அவர் அந்த மேடையிலும் கறுப்புக்
கண்ணாடி அணிந்திருந்தார்
. என்னுடைய சந்தேகம், நெடுநாள் சந்தேகம் தமிழ்வாணன் அழகிற்காக கறுப்புக் கண்ணாடி அணிகிறாரா அல்லது
தன்னுடைய பார்வைக் குறைபாட்டை மறைப்பதற்காக கறுப்புக் கண்ணாடி அணிகிறாரா என்பதுதான்
.
கூட்டம் முடிந்து கலைந்து போக ஆரம்பித்த வேளையில் நான் தமிழ்வாணனை நெருங்கி
அவர் சட்டையைப் பிடித்து இழுத்தேன்
.
கோபமாகத் திரும்பிய அவர் என்ன?’ என்று கேட்டார். ‘உங்களுக்கு கண்ணு தெரியுமா
தெரியாதா
?’ என்று கேட்டேன். அவர் முகத்திலிருந்த உஷ்ணம் அதிகமாகியது. கண்ணாடியைக் கழற்றினார், கண்களைக் காட்டினார். அவருடைய பார்வை நன்றாகத்தான்
இருக்கிறது என்பதை நான் உறுதி செய்வதற்குள் கூட்டம் எங்களைப் பிரித்துவிட்டது
(தொடரும்)

Posted on Leave a comment

மேலை அல்லது கல்யாணி சாளுக்கியர் சிற்ப-ஆலய கலை எழில் வரலாறு | அரவக்கோன்

வாதாபி சாளுக்கியர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தவன் ராஷ்டிரகூட அரசன் தந்திதுர்க்கன். இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் (பொ.பி. 972-73) மீண்டும் சாளுக்கிய ஆட்சி புத்துயிர் பெற்றது. அதுவரை சாளுக்கிய அரசர்கள் ராஷ்டிரகூட ஆட்சியில் குறுநில மன்னர் நிலையில் இருந்தனர். ராஷ்டிரகூட அரச வம்சத்தின் கடைசி மன்னன் இரண்டாம் கரகனை இரண்டாம் தைலபன் போரில் வென்றான். கரகன் போரில் இறந்துபோனான். அப்போது நிலைகொண்ட சாளுக்கிய ஆட்சி அடுத்த இருநூறு ஆண்டுகள் வலிமையுடன் இருந்தது. சாளுக்கிய அரசன் முதலாம் சோமேஸ்வரன் (பொ.பி. 1042-1068) கல்யாணி (கல்யாணபுரம்) என்னும் நகரை நிர்மாணித்து அதைத் தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தமையால் கல்யாணி சாளுக்கியர் என்றும் அழைக்கப் படுகிறார்கள். ஆனால் அந்த இருநூறு ஆண்டுகளும் சோழர்களுடனும், வேங்கி சாளுக்கியருடனும் தொடர்ந்து போர்கள் நிகழ்ந்தவாறே இருந்தன. பொ.பி. 12ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னனால் முற்றிலும் அழிந்து போனது சாளுக்கியர் ஆட்சி.
ஆலயக் கட்டடக்
கலை
பொ.பி. 11-12ம் நூற்றாண்டுகளில் மேலை சாளுக்கியர் ஆட்சியில் அணிகலன்கள் அதிகம் கொண்ட ஒரு சிற்பப்பாணி துங்கபத்திரை நதிப்பகுதியில் (இப்போதைய வடக்கு கர்நாடகப் பகுதியில்) அறிமுகமானது. ஆலயங்கள் தொடர்ச்சியாக உருவாகத் தொடங்கின. தொழிற்சாலைபோலச் சிற்பிகள் இடைவிடாது படைப்புத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். போர்கள் இதற்கு எந்தவிதமான இடையூறும் உண்டாக்கவில்லை. இந்த ஆலயங்கள் முன்னரே இருந்த திராவிட, நாகர, வேசர பாணியில் பல்வேறு கட்டமைப்பு அளவுகளில் கட்டப்பட்டன.

இப்போது நினைவுச் சின்னங்களாக எஞ்சியிருக்கும் ஆலயங்கள் அந்தக் கட்டடக் கலைப் பாணியைக் கூறுகின்றன. இவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஆலயங்களாவன: கொப்பில் மாவட்டத்தில் இடக்கியில் உள்ள மஹாதேவ
ஆலயம். கதக் மாவட்டத்தில் லகுண்டியில் உள்ள காசிவிஸ்வேஸ்வரர்
ஆலயம். பெல்லாரி மாவட்டத்தில் குருவட்டியில் உள்ள மல்லிகார்ஜுனர்
ஆலயம். தவளகிரி மாவட்டத்தில் பெகாலியில் உள்ள கல்லேஸ்வரர்
ஆலயம் (Gallaeswarar). சிமோகா மாவட்டத்தில் பல்லகவி நகரில் உள்ள சரஸ்வதி
ஆலயம், தம்பில் நகரில் உள்ள தொட்டபாசப்பா
ஆலயம் என்று சிற்ப முதிர்ச்சி கொண்ட ஆலயங்களும் உள்ளன. பெரும்பாலும் சிவனுக்கான ஆலயங்களே இவர்கள் ஆட்சியில் கட்டப்பட்டன. என்றாலும், எண்ணிக்கையில் குறைவாக திருமாலுக்கும் ஜைனமதத்திற்கும் ஆலயங்கள் எடுப்பிக்கப்பட்டன.
இன்றைய கர்நாடக தார்வாட், ஹவேரி, கதக் பகுதிகளில் பெரும் தொழிற்சாலைகள்போலச் சிற்பக்கூடங்கள் இயங்கின. இன்று நம்மிடையே மீதமிருக்கும் நினைவுச் சின்னங்களாக தோராயமாக ஐம்பது ஆலயங்கள் அதை நமக்குத்
தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டடப் பாணி கிழக்கில் பெல்லாரி, தெற்கில் மைசூர், வடக்கில் பீஜாப்பூர், பெல்காம் பகுதிகளிலும் பரவி விரிந்தது.
ஆலய கட்டட
அமைப்பில் உண்டான
புதிய வடிவமைப்புச்
சிந்தனை
பொதுவாக ஆலய அமைப்பு பழைய திராவிட வழியாகவே இருந்தபோதும் அதில் பல நூதனமும் தனித்தன்மை கூடியதுமான உத்திகள் புகுத்தப்பட்டன. இன்றளவும் கர்நாடகத்தில் ஆலயங்கள் இந்த விதமாகவே அமைக்கப்படுவது அதில் ஒன்று. கல்யாணி நகரம் இருந்த நிலப்பகுதிகளில் மட்டும்தான் நாகர பாணி ஆலயங்களை நாம் காண முடியும். வாதாபி சாளுக்கிய ஆட்சிக் காலத்தில் ஆலயங்கள் மக்கள் மிகுதியாக வாழ்ந்த வாதாபி, அய்ஹோளே, பட்டடக்கல் போன்ற நகரங்களில் உருவாயின. ஆயின் கல்யாணி சாளுக்கியரின் ஆட்சிக்காலத்தில் அவை சிதறி உருவாயின. இது அவர்கள் கடைப்பிடித்த ஊராட்சி முறையைச் சொல்கிறது. வாதாபி சாளுக்கிய ஆலயங்களைக் காட்டிலும் கல்யாணி சாளுக்கிய ஆலயங்களில் கருவறை மீதுள்ள கோபுரங்கள் அளவில் சிறியதாக, உயரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன.
மேலை சாளுக்கியரின் ஆலய அமைப்புப் பாணி முதலாவது அந்த வம்சத்தின் ஆட்சி தொடங்கிய நூற்றாண்டின் முற்பகுதியிலும், இரண்டாவது பொ.பி. 11ம் நூற்றாண்டில் தொடங்கி பொ.பி. 1186ல் அவர்கள் வீழ்ச்சி அடைந்தது வரையிலும் என்பதாக இரு காலகட்டங்களில் பிரிக்கப்படுகின்றன.
      முதல்
காலகட்டத்தில் சாளுக்கியர்களின் மையப்பகுதி எனக் கருதப்படும் அய்ஹோளே, பாணசங்கரி, மஹாகூடம், கதக் பகுதிகளில் ஆலயங்கள் கட்டப்பட்டன. வளர்ந்து முதிர்ந்த சிற்ப உயர்வை இரண்டாம் காலகட்டத்தில் லகுண்டி பகுதியில் கட்டப்பட்ட ஆலயங்களில் காணலாம். அங்கிருந்து அந்தப் பாணி தெற்கு கர்நாடகத்தில் புகழுடன் ஆட்சி செய்த ஹொய்சாளர், இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி செய்த காகதியர் காலத்து ஆலயங்களிலும் கலந்ததைக் காண முடிகிறது. ஹொய்சாள வம்ச ஆட்சியில் ஆலயம் எழுப்பியது சாளுக்கிய ஆட்சிக் காலத்து வழிவந்த சிற்பியரே என்பதை நமக்கு தெளிவாகச் சொல்கின்றன இவை.
ஆலய வளாகம்
அடிப்படை ஆலய
அமைப்பு
மேலை சாளுக்கியரின் ஆலயத்தில் கருவறை, முன் மண்டபம், கோபுர சுற்றுவழி இம்மூன்றும் அமைந்துள்ள தரைதள வடிவம், கட்டடச் சிற்ப வழி, சிற்பங்களின் வடிவம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுவோம்.
ஆலயத்தின் வெளிப்புறச் சுவர்ப்பரப்பில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் அதன் தோற்றத்தைச் சார்ந்த வடிவத்தை முடிவு செய்தன. ஆலயங்கள் சதுரமான, செவ்வக அடுக்குகொண்ட, நட்சத்திர வடிவம் கூடிய என்பதாகப் பல்வேறு விதமாக அமைக்கப்பட்டன.
உருவம் சார்ந்த சிற்பங்கள் (மானுடர், விலங்கு, பறவை மற்றும் தாவரங்கள்) சிறிய அளவில் நெருக்கமாக கோபுரங்களிலும் அடித்தள அடுக்குகளிலும், தூண் கூரையைத் தாங்கும் பகுதியில் அமையும் பிறைகளிலும் நுணுக்கம் கொண்டவிதத்தில் சிற்பமாயின.
ஆலயங்களின்
வகைகள் அல்லது
பிரிவுகள்
சாளுக்கிய ஆலயங்கள் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளன. ஒன்றுத்விகுடாஎனப்படும் இரு கோபுரங்களும் தூண்கள் கூடிய ஒரு மண்டபமும் கொண்டது. மற்றதுஏககூடாஎனப்படும் ஒரு கோபுரமும் தூண்கள் கூடிய மண்டபமும் கொண்டது. இந்த இருவித ஆலயங்களிலும் மைய மண்டபத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பக்க நுழைவாயில்கள் உண்டு. இந்த ஆலயங்கள் தெற்கு, வடக்கு பாணி ஆலய அமைப்பு இரண்டையும் உள்ளடக்கியவை. மைய ஆலயம், சிற்றாலயங்கள் இவற்றின் ஒட்டுமொத்த அமைப்பு வடக்கு சார்ந்ததாகவே இருந்தது. ஆலயங்கள் எப்போதும் கிழக்கு முகமாகவே நுழைவாயில் கொண்டவையாய் எழுப்பப்பட்டன.

கருவறையையும் மைய மண்டபத்தையும் மூடிய சிறு மண்டபத்தின் வழியாக பாதை ஒன்று இணைத்தது. பொதுவாக இங்கு கருவறைச் சுற்றுப்பாதை கிடையாது. (அதாவது கருவறையை வலமாகச் சுற்றிவரும் வழி.) மண்டபத்தைத் தாங்கிய கல்தூண்கள் உயரம் குறைந்ததாக இருந்ததால் தளத்திலிருந்து மேற்கூரை வரையிலான இடைவெளி குறைவாகவே இருந்தது. மண்டபத்தினுள் ஏறத்தாழ இருளே நிலவியது. விளக்கின் ஒளி கொண்டே மக்கள் நடமாட முடிந்தது.
பொ.பி. 11ம் நூற்றாண்டில் ஆலய அமைப்பு புதிய சிந்தனை கூடியதாக தோற்றம் பெற்றது. வாதாபி சாளுக்கியப் பாணியில் இடம் பெற்ற திராவிட அமைப்பைச் (பட்டடக்கல் பகுதியில் உள்ள விருபாட்சர் மல்லிகார்ஜுனர் ஆலயங்கள்போல) சார்ந்தும், அதில் நுழைந்த புதிய சிற்ப அமைப்பும் கொண்டிருந்தது. கர்நாடக சிற்பிகள் வட இந்திய (நாகர) ஆலய அமைப்பினால் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து சில வடிவமைப்புகளையும் இணைத்து ஆலயங்களை உருவாக்கினர்.
அப்போது ஆலயங்கள் உருவாக்க மாக்கல் (soap stone) வகை பாறை பயன்பாட்டுக்கு வந்தது. அது பின்னர் ஹொய்சாளர் ஆட்சியிலும் தொடர்ந்தது. இந்த வகைப் பாறை ஹவேரி, சவனுர், பியாட்கி மொடபெனுர் பகுதிகளில் ஏராளமாக உள்ளது. பாறைகளைப் பிளப்பதற்கு குறைந்த உழைப்பே போதுமானது. அதில் நுணுக்கமானதும் நெருக்கமானதுமான உருவங்களை எளிதில் சிற்பியால் உண்டாக்க முடிந்தது.
இந்த வகை அமைப்பு வழி மேலும் சில புதிய சிந்தனையுடன் பொ.பி. 12ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. சாளுக்கிய சிற்பிகள் திராவிட அமைப்பு கோபுரங்களின் அடுக்குகளை உயரத்தில் குறைத்து அவற்றின் எண்ணிக்கையைக் கூட்டினார்கள். தரையிலிருந்தே ஆலயம் படிப்படியாக சுற்றளவில் குறைந்து வந்து உச்சியில் கலசம் கொண்டு முடிந்தது. சுற்றுச் சுவர் கோபுரம் என்று தனியாக ஒன்று இருக்கவில்லை. வட்ட அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்று பொருத்தியவாறு உள்ள இதில் திராவிட அமைப்பு வெளிப்படையாகத் தெரியாது. பழையதும் புதியதுமான ஆலய அமைப்பு அடுத்தடுத்து இடம் பெற்றன. ஆயினும் அவை தனியாகவே இருந்தன. கலக்கவில்லை. சில ஆலயங்களில் இவை இணைக்கப்பட்டன. வேசர அல்லது கதம்ப சிகரம் என்று அவை அறியப்பட்டன.
நட்சத்திர
வடிவ ஆலய
அமைப்பு
இந்தக் காலகட்டத்தில் ஒரு புதிய வகை ஆலய அமைப்பு தோன்றியது. அதுதான் நட்சத்திர வடிவ ஆலயம். சவதியில் உள்ள திருமூர்த்தி ஆலயம், கோனூரில் உள்ள பரமேஸ்வர ஆலயம், ஹைகேசிங்கள்குடியில் உள்ள சௌரம்மா ஆலயம் இம்மூன்றிலும் இதைக் காணலாம். தடையற்ற பதினாறு முனைகளைக்கொண்ட நட்சத்திரத் தள அமைப்பு இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. வட இந்தியாவில் உள்ள நிலத்திலிருந்து உயர்த்திய மேடையில் எழுப்பப்பட்ட (‘பூமிஜாவகை) ஆலயங்களில் 32 முனைகள் உண்டு. ஆனால், அவை தொடர்ச்சியானவை அல்ல. இடையிடையே வேறு வடிவங்களைக் கொண்டவை. பொ.பி. 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முந்தைய நூற்றாண்டின் அமைப்பே பின்பற்றப்பட்டது. என்றாலும், வெறுமையான பகுதிகள் நெருக்கமான வடிவங்களால் நிரப்பப்பட்டன.
கல்யாணி நிலப்பகுதியில் (இன்றைய பீடார் மாவட்டம்) உருவான ஆலயங்கள் நாகர வடிவத்தில் உள்ளன. ஆலயத்தின் தரை அமைப்பு நட்சத்திர வடிவம் அல்லது செவ்வக அடுக்கு வடிவத்திலேயே உருவானது. இதனால் சுவர் புடைப்புத் தூண்களின் இரண்டு பக்கம் முழுவதுமாக வெளிப்பட்டது. கீழ்ப்பகுதி சதுரமானதும் இருபுறமும் ஒரே விதமான வடிவ சிற்பம்கூடியதுமாக உருவானது. இது ஏறத்தாழ மண்டபத்தைத் தாங்கும் தூண் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.
அடிப்படைத்
தன்மைகள்
தூண்கள், நுழைவாயில் கதவுகள், தோரணங்கள், சுவரும் கூரையும் கூடுமிடத்து விளிம்பில் அமைந்த மாடங்கள், ஆலயத்தின் வெளிச் சுவர்ப்பரப்பில் இடம் பெற்ற தூண்கள், அவற்றுக்கு இடைப்பட்ட பிறைகள் போன்ற பகுதிகளில் நுணுக்கமும் அடர்த்தியும் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. தொலைவிலிருந்து காண்போருக்கு இவற்றின் வேறுபாடு ஒன்றும் தெரியாதபோதும், நெருங்கிப் பார்த்தால் நுண்ணிய மாற்றங்கள் சிற்ப அமைப்பில் தென்படுகின்றன. அவர்களது கற்பனை வளத்தை இதன் மூலம் அறிய முடிகிறது. தரைத்தள அடுக்குகளில் தொடரும் பல்வேறு வடிவங்களின் எழில், வரிசையான புரவி, யானை அவற்றை நடத்துவோர், நடனமங்கையர், இசைக் கருவிகளை ஒலிப்போர் என்று நெருக்கமாக ஆலயத்தின் நாற்புறமும் நிரப்பி உண்டாக்கி உள்ளனர்.
நுழைவாயிலின் மூன்று எல்லைகளிலும் பல அடுக்குகள் கொண்ட வடிவங்கள் உண்டாக்கப்பட்டன. அவை அடர்த்தியான சிற்பங்கள் கொண்டதாக அமைந்தன. கருவறைச் சுவர் ஒளி நுழையும் விதமாக துளைகள்கொண்ட பல வடிவ அமைப்புடன் சாளரங்கள் கூடியதாக அமைக்கப்பட்டது.
திராவிட வடிவச் சதுர அமைப்பில் சுவர்ப்பரப்பு தட்டையாகவே இருந்தது. சுவர் நெடுகிலும் சீரான இடைவெளியில் சுவரிலிருந்து வெளிப்படும் தூண்கள் தேசலான புடைப்பாகவே இருந்தன. அவற்றின் இடைவெளியில் புடைப்புச் சிலையாக அளவில் பெரிய ஒற்றை உருவம் சிற்பமாயிற்று. பின்னர் சுவர்ப்பரப்பு முழுவதும் நெருக்கமான உருவங்கள், வடிவங்கள் என்று விரிவாக்கம் பெற்றது.
மண்டபம், கூரை
மண்டபத்தின் கூரை, தட்டையாகவும் விரிந்த குடை போன்றும் இருவிதமான உத்தியில் உண்டாயின. கூரையில் உத்திரங்கள் குறுக்கு நெடுக்காகக் கூடும் இடத்தில் அவற்றைத் தாங்கும் விதமாக தூண்கள் நிறுவப்பட்டன. நான்கு தூண்களுக்கிடையில் காணப்படும் கவிகை மாடம் மிகுந்த வேலைப்பாடுகள் கொண்டது. அது சீராகக் குறைந்து செல்லும் பாறைவளையங்கள் அடுக்கப்பட்டதாக அமைந்துள்ளது. காரை, சுண்ணாம்பு எதுவும் இவற்றிற்கு பிடிப்பாகப் பயன்படுத்தப்படவில்லை. இதனால் சதுரப்பரப்பின் நான்கு செங்கோணத்திலும் உண்டாகும் முக்கோணப் பகுதிகள் நுணுக்கமான இலை, மலர் போன்ற பின்னிய வடிவங்களால் நிரப்பப்பட்டுள்ளன. தட்டையான சதுரக் கூரை சிறுசிறு சதுரப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தாமரை மலர், அல்லது பறக்கும் வானுலக மாந்தர் போன்ற சிலைகளால் நிறைக்கப்பட்டன.
மண்டபத் தூண்
அகழ்ந்த குகையாயினும் ஆலயத்தில் எழும்பியதாயினும் மண்டபத்தூண் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டதாக உருவானது. அது பௌத்தம், ஜைனம், சைவம், வைஷ்ணவம் என்று அனைத்து ஆலயங்களிலும் முக்கிய இடம் பெற்றது. எளிமையாக ஒரு கூரையைத் தாங்கியதாகத் தொடங்கிய அது படிப்படியாக விரிவும் நுணுக்கமும் கூடியதாக அமைந்துள்ளதை மதுரையிலும் கும்பகோணத்திலும் உள்ள ஆலயங்களில் காணப்படும் நாயக்கர் காலத் தூண்கள் வரை இழை அறுகாமல் இருப்பதைக் காண முடியும்.
சாளுக்கியர் வழியில் அவை இரண்டு விதமான அடிப்படை வடிவம் கொண்டன. ஒன்று கனசதுர அடுக்குகள் கோணங்கள் மாறி மாறியும் அவற்றின் இடையிடையே உருளை வடிவமும் கொண்டவிதமாகவும், நிலத்திலிருந்து மேலெழும்பும் பகுதி கனசதுரமாக தூணைத் தாங்கும் விதமானதாகவும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டன. மற்றது கடைசல் முறையில் செய்யப்படும் மணி போன்ற உச்சியை உடையது. கடைசல் தூண்கள் மாக்கல்லால் ஆனவை. வளையங்கள் கீழிருந்து மேல் வரை ஏராளமானதாக அடுத்தடுத்து உண்டானவை. அவ்வகைத் தூண் பல துண்டுகளால் தொகுக்கப்பட்டது என்பது காண்போருக்குப் புலனாகாதது. முதலில் கூறியது வலுக்கூடியது. மண்டபத்தின் எடையைத் தாங்கக் கூடியது. கடையப்பட்ட தூண்களிலும் சிற்பிகள் பின்னர் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களைச் செதுக்கினார்கள். இந்த வகை தூண்கள் அதன் முதிர்ச்சியை கதக் நகரில் உள்ள த்ரிகூடேஸ்வர ஆலயத்தினுள் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் தொட்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுவர்.
உருவச் சிலைகள்
உருவங்கள் சார்ந்த சிற்பங்கள் தொடக்கத்தில் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்களிலிருந்து கதை சொல்லும் பாணியில் நிகழ்ச்சிகள் கொண்டதாக இடம் பெற்றன. பின்னர் கடவுளர் உருவங்கள் இடம்பெறத் தொடங்கின. நீண்ட பட்டையான சுற்றுச் சுவர் தளத்தில் முன்னவை அளவில் சிறியதான சிலைகளாய் இடத்தை அடைத்தபடி உண்டாயின. விலங்குகளில் யானையின் உருவம் மிகுதியாக இடம் பெற்றது. அடுத்ததாக இடம் பெற்றது புரவி.
இறை உருவங்கள் ஒரு விரைத்த தன்மையுடன் உறைந்த விதமாக மாற்றமின்றி மீண்டும் மீண்டும் சிற்பமாயின. முன்னர் அவற்றின் ஒரு நெகிழ்த்தன்மையும் தோற்றத்தில் மாற்றங்கள் கொண்டதுமான அணுகுமுறை காணப்பட்டது. இவற்றில் இப்போது உடை என்பது சில கோடுகளின் வழியாகவே காட்டப்பட்டது.

சிறுகோபுரங்கள்
பொ.பி. 11ம் நூற்றாண்டிற்குப் பின்னர் கட்டப்பட்ட ஆலயங்களில் சிறு கோபுரங்கள் இடம்பெறத் தொடங்கின. சுவர்ப்பரப்பில் இரு தூண்களுக்கு இடையே அவற்றை இணைப்பதாக, தூண் மண்டபத்துக்குக் கூரையைத் தொடும் இடத்தில், இவை அமைக்கப்பட்டன. திராவிட, நாகர பூமிஜா, வேசர வகை வடிவங்கள் அளவில் சிறியதாக மையம் கொண்டன. பூவேலைப்பாடுகள் அவற்றின் வெளிப்புறத்தை நிறைத்தன. தொகுப்பாகவும் நுணுக்கம் குறைந்ததாகவும் இருந்த அவை, இப்போது மெல்லியதாகவும் சிற்ப நுணுக்கம் கூடியதாகவும் முப்பரிமாணத் தன்மையுடனும் இடம் பெற்றன.
இவ்வகை சிறு கோபுரங்கள் வடக்கிலிருந்து தெற்கே பரவிய சிற்பப் பாணியை ஏற்று எழிலான சிற்பவடிவங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்தன. அலங்காரங்களும் அணிகலன்களும் வார்ப்பு வகையினின்றும் உளிகொண்டு செதுக்கியதாக மாறி ஆழமும் முப்பரிமாணமும் காட்டியவிதமாக இடம் பெற்றன.
பொ.பி. 11ம் நூற்றாண்டு சிறு கோபுரங்கள் தரைத்தளம், உச்சி, சிறு தூண்கள் வரிசை, கூரை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், பொ.பி. 12ம் நூற்றாண்டில் திராவிடபாணி வழியில் அடுக்குகள் கூடியவையாகவும் ஆலயங்களில் இடம் பெற்றன.
பொ.பி. 12ம் நூற்றாண்டில் சாளுக்கியரின் ஆட்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. என்றபோதிலும் ஆலயக் கட்டட அமைப்புப்பாணி என்னும் சொத்து ஹொய்சாள வம்ச ஆட்சிக்காலத்திலும், பின்னர் பொ.பி. 15, 16ம் நூற்றாண்டுகளில் பேரரசாக விளங்கிய விஜயநகர வம்சத்தாலும் பாதுகாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. சாளுக்கிய ஆட்சியிலும், பின்னர் வந்த ஹொய்சாள, விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்திலும் ஆலயங்களின் அருகே அமைந்த வெவ்வேறு அமைப்புடன் கூடிய படிக்கட்டுகள் கொண்ட குளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவை கல்யாணி என்றும் புஷ்கரணி என்றும் விளிக்கப்படுகின்றன.
Posted on Leave a comment

பூணூலில் தூக்குமாட்டிக்கொள்ளும் திராவிட இனவெறி | பி.ஆர். ஹரன்

(வலம் ஜூலை-2018 இதழுக்காக இந்தக் கட்டுரையை பி.ஆர்.ஹரன் தனது மறைவுக்கு இரண்டு நாள் முன்பாக அனுப்பியிருந்தார்) 
தமிழ் தலைமகன் என்கிற பெயரில் டுவிட்டரில் உலாவும் ஒருவர், கமல்ஹாசனிடம், “நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு கமல்ஹாசன், “நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல்”. அதனாலேயே அதைத் தவிர்த்தேன்என்று பதில் சொல்லியிருந்தார்.
இந்தச் சிறிய சம்பாஷணையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவதாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தமிழறிவு”. “தமிழ் தலைமகன்என்கிற பெயரில் உலா வருபவரின் தமிழறிவு பல்லிளிக்கின்றது. அவருடைய கேள்வியில் பிழைகள் இருக்கின்றன. அவருக்குப் பதிலளித்த தமிழ் கலைஞரோ, படிக்கும் நூலைப் பற்றிக் கேட்டால், அணியும் முப்புரி நூலைப் பற்றிப் பதிலளிக்கிறார். இவர் தன்னைக் கவிஞராக வேறு காட்டிக்கொள்பவர். இந்த மாதிரி சாதாரணமான ஒரு கேள்வியைக்கூட பிழையின்றிக் கேட்கத்தெரியாதவர்களும், சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லத் தெரியாதவர்களும்தான் இன்று தமிழகத்தில்தமிழ்வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவதாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்இனவெறி”. சாதாரணமான தமிழ் நூல் பற்றிய கேள்விக்கு முப்புரிநூலை அசிங்கப்படுத்தும் விதமாகப் பதிலளித்து, தன்னுடைய தாழ்வு மனப்பான்மையையும், முட்டாள்தனத்தையும், அடையாள நெருக்கடியையும் ஒருங்கே வெளிக்காட்டிக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகாலத்திற்கும் அதிகமான ஆட்சியில், தமிழறிவு அதலபாதாளத்திற்கும், இனவெறி ஆகாயத்திற்கும் சென்றுள்ளன. இதில் தமிழறிவைப் பற்றி வேறொரு சமயம் பார்ப்போம். இப்போது இந்தக் கட்டுரையில் திராவிட இயக்கத்தின் இனவெறியைப் பற்றி, குறிப்பாக பிராம்மண துவேஷத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கமல்ஹாசன் பிராம்மண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் பிராம்மண கலாசாரத்திற்கு விரோதமாகவே வளர்ந்தவர். ஆயினும், முதல் திருமணத்தைப் பிராம்மண முறைப்படி செய்துகொண்டவர். இரண்டாவது மற்றும் மூன்றாவது திருமணங்களை திருமணம் என்கிற சடங்குகள் இல்லாமல் செய்துகொண்டவர். சட்டப்படிப் பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா என்பதும் தெரியவில்லை. மூன்று மனைவிகளும் அவரை விட்டு விலகிவிட்டனர்.

இவர் பல ஆண்டுகளாகத் தன்னைப் பகுத்தறிவுவாதியாகவும் ஈவெராவின் சீடராகவும் முன்னிலைப் படுத்திக்கொள்பவர். ஆயினும் திராவிட இயக்கத்தினர் இவரை முழுமையாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இவரும் தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் எல்லாம் பிராம்மணப் பண்பாட்டையும், பிராம்மணர்களையும் கொச்சைப்படுத்தியும், எள்ளி நகையாடியும் செய்திருக்கிறார். பேட்டிகளிலும் அவமதித்துப் பேசியுள்ளார். முதுகு சொறிவது தவிர பூணலினால் வேறு எந்தப் பயனும் இல்லை என்றெல்லாம் பேசியிருக்கிறார். அப்படியிருந்தும் திராவிட இனவெறியாளர்கள் இவருக்கு அங்கீகாரம் கொடுத்தபாடில்லை. இவரை இன்னும் பிராம்மணராகவே பார்க்கின்றனர்.
தற்போது முழுநேர அரசியலுக்கு வந்து, கட்சியும் தொடங்கிவிட்ட நிலையில், தன்னைப் பகுத்தறிவுவாதியாகவும், மதச்சார்பின்மைவாதியாகவும், ஈவெரா மண்ணின் திராவிடனாகவும் காட்டிக்கொள்ள வேண்டிய சூழலில், மேற்கண்ட டுவிட்டர் கேள்விக்குப் பதிலளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த மாதிரியான தொடர் நடத்தை இவர் அடையாள நெருக்கடியில் (Identity
Crisis)
சிக்கித் தவிக்கிறார் என்பதையே காட்டுகிறது.
கமல்ஹாசனைப் போன்ற கோழைகள் இவ்வாறு கோமாளித்தனங்களில் ஈடுபடுவதற்கு, திராவிட இயக்கம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வளர்த்துவந்துள்ள, ஆரியதிராவிட கட்டுக்கதைகளும், பிராம்மணத் துவேஷமும்தான் காரணம். கமல்ஹாசனின் கோமாளித்தனமான முட்டாள்தனமான இந்தப் பேச்சின் பின்னணியில் இருக்கும் பிராம்மணத் துவேஷ அரசியலைப் பார்ப்போம்.
கடந்த வருடம் (2017) ஜூலை மாதம்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்கிற தீவிரவாத அமைப்புபன்றிக்குப் பூணல் அணிவிக்கும்போராட்டத்தை அறிவித்திருந்தது. பெரும்பாலும் பிராம்மண சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் ஆவணி அவிட்டம் பண்டிகைக்கு (07.08.2017) எதிராக இந்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும், சென்னையில் குறிப்பாக பிராம்மணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூரில் சமஸ்கிருதக் கல்லூரி வாசலில் இந்தப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அந்தத் தீவிரவாத அமைப்பினர் அறிவித்திருந்தனர். நிறைய இடங்களில் சுவர்களில் இந்த அறிவிப்பை எழுதியிருந்தார்கள்.
இந்த அறிவிப்பு வெளிவந்த ஜூலை
18
ஆம் தேதி அன்றே பல ஹிந்து அமைப்பினர், காவல்துறைக்குப் புகார் மனுக்கள் அனுப்பினர். தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், காவல்துறை இந்தப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், முன்நடவடிக்கையாக அவ்வமைப்பினரைக் கைது செய்யவேண்டும் என்றும் கோரியிருந்தனர். காவல்துறையும் அவ்வமைப்பினரை வைத்தே அவர்கள் எழுதிய சுவர் சித்திரங்களையும் அறிவிப்புகளையும் அழிக்கச் செய்தனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்தும் கடுமையாக எச்சரித்தும் அனுப்பினர். அவ்வமைப்பு போராட்டத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆயினும் பயனில்லை.
காவல்துறை எச்சரிக்கையாக ஆகஸ்டு 7ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஆயினும்,
மயிலாப்பூரில் அல்லாமல் ராயப்பேட்டை அருகே அவ்வமைப்பினர் சிலர் பன்றிக்குட்டிகளுக்குப் பூணல் அணிவித்து அவற்றின் வாயையும் திறக்கமுடியாமல் கட்டிவைத்து, கயிற்றினால் அவற்றை இழுத்து வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலிஸார், ஒன்பது பேரைக் கைதுசெய்து, பன்றிக் குட்டிகளையும் அவர்களிடமிருந்து விடுவித்தனர். இந்தப் போராட்டத்தில் மூச்சுமுட்டி ஒரு பன்றிக்குட்டி இறந்துபோனது.

7ஆம் தேதியன்று சந்திர கிரகணம் இருந்ததால், அதனால் ஏற்படும் தோஷத்தைத் தவிர்ப்பதற்காக, அன்று கொண்டாடப்படவிருந்த ஆவணி அவிட்டம் பெரும்பான்மையான சம்பிரதாயங்களால் அடுத்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது இந்தத் தீவிரவாத அமைப்பினருக்குத் தெரியாமல்போனது நகைமுரண்.
அதோடு கூட, ஹிந்து மதத்தில் பிராம்மணர்கள் மட்டுமல்லாமல், செட்டியார்கள், ஆச்சாரிகள், வன்னியர்கள் போன்ற பல்வேறு சமுதாயத்தவர்களும் பூணல் அணிபவர்கள்; அவர்களும் ஆவணி அவிட்டம் அன்று பூணல் மாற்றிக்கொள்கிறார்கள் என்கிற தகவல்களும், நிரந்தரமாகப் பூணல் அணியாத பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான ஹிந்துக்களும் குறிப்பிட்ட சுக, துக்க நிகழ்ச்சிகளில் பூணல் அணிந்தே சடங்குகளைச் செய்கிறார்கள் என்கிற தகவலும், பட்டியல் வகுப்புகளில் கூட சில சமுதாயத்தவர்கள் (குயவர்கள் போன்றவர்கள்) பூணல் அணிபவர்கள் என்கிற தகவலும் இந்தப்பகுத்தறிவுப் பகலவன்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, இந்தப் போராட்டம் பெரும்பான்மையான ஹிந்து சமுதாயத்தவர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த அமைப்பினர் கூடிய விரைவில் தெரிந்துகொள்வார்கள். அப்போது தங்கள் இயக்கத்தின் அழிவை கண்ணெதிரிலேயே காண்பார்கள்.
தமிழகத்தில் பிராம்மணத் துவேஷம் என்பது இன்று நேற்று வந்த விஷயம் அல்ல. திராவிடர் கழகம் ஆரம்பித்த நாள் முதல் வளர்க்கப்பட்டு வருகின்றது. சொல்லப்போனால், தி.. தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே பிராம்மணத் துவேஷம் அன்னிய சக்திகளால் விஷவித்தாக விதைக்கப்பட்டிருந்தது. அன்னிய சக்திகளின் ஆதரவுடன் .வெ.ரா 1925ஆம் ஆண்டு தேச விரோத இயக்கமாகத் தொடங்கியதுதான்சுயமரியாதை இயக்கம்”. அதே பிராம்மணத் துவேஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதை அஸ்திவாரமாகக்கொண்டு தன்னுடைய ஆரியதிராவிட இனவெறி அரசியலைக் கட்டமைக்கத் தொடங்கியது அவ்வியக்கம்.
சமூகநீதியையும், ஜாதி ஒழிப்பையும் முக்கிய குறிக்கோள்களாகச் சொல்லிக்கொண்டாலும், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் பிராம்மணர்களையே குற்றம் சொல்லி அவர்கள்மீது பழி சுமத்திய .வெ.ரா, பிராம்மணர்களையும், பழங்காலம்தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்துமத சடங்கு சம்பிரதாயங்களையும், கலாசாரப் பழக்கவழக்கங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்ற தன்னுடையஉயரியநோக்கத்திற்காகவும், அதன் மூலம் அரசியல் லாபம் பெறுவதற்காகவும், தன் சுயமரியாதை இயக்கத்தைப் பெரிதும் பயன்படுத்தினார். “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடித்துக் கொல்லுஎன்று தன் சமூகச் சீர்திருத்தக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார். அவருடைய தலைமையில் தெருமுனைக் கூட்டங்கள், நாடகங்கள்
மூலம் பிராம்மணத் துவேஷம், இந்துமத எதிர்ப்பு,
பிரிவினைவாதம் போன்ற தேச விரோதக் கொள்கைகள் தமிழகமெங்கும் பரப்பப்பட்டன. இந்த சுயமரியாதை இயக்கமே பின்நாட்களில் திராவிடர் கழமாக உருவானது.
1949ல் .வெ.ராவின் போக்கு பிடிக்காமல் திராவிடர் கழகத்தை விட்டு வெளியே வந்த அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். இயக்கத்திலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தாலும், பின்பற்றிய கொள்கைகளில் மாற்றம் இல்லை. தி..வில் இருந்த பிராம்மணத் துவேஷம் தி.மு..விலும் தொடர்ந்தது. தெருமுனைப் பிரசாரங்கள், சினிமாக்கள் மூலம் பரப்பப்பட்டது. .வெ.ராவும் அண்ணாவும் காலமான பிறகு,
கருணாநிதியும் வீரமணியும் பிராம்மணத் துவேஷக் கொள்கையை மேலும் தீவிரமாக்கினர். .வெ.ரா இருந்தபோதே ஆரம்பித்துவிட்ட பிராம்மணர்கள் மீதான, பூணலை அறுப்பது,
குடுமிகளை வெட்டுவது போன்ற தாக்குதலும் வன்முறையும், கருணாநிதிவீரமணி கூட்டணியில் மேலும் பயங்கரமாகத் தொடர்ந்தன. பிராம்மணர்கள் வெளியில் வரவே பயப்படும் சூழலும் ஏற்பட்டது.
ஆனால், கருணாநிதியின் போக்கு பிடிக்காமல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த பிறகு, பிராம்மணர்கள் மீதான தாக்குதல்கள் பெருமளவு குறைந்துபோய் நாளடைவில் நின்றே போனது.
திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கையான நாத்திகத்தை முழுவதுமாகப் புறக்கணித்தது .தி.மு.. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் பேராதரவு .தி.மு.கவுக்குக் கிடைத்தது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சில தடங்கல்களை எதிர்கொண்டு அடக்கி கட்சியைக் கைப்பற்றி ஆட்சியையும் பிடித்த ஜெயலலிதாவின் ஆட்சியிலும் பிராம்மணர்கள் மீதான தாக்குதல்கள் இல்லாமல் இருந்தன.

ஆயினும், 2006ஆம் ஆண்டு மீண்டும் தி.மு. ஆட்சி உருவான பிறகு,
பிராம்மணத் துவேஷம் முன்னுக்கு வந்தது. பிராம்மணர்கள் மீதான தாக்குதல்களும் வன்முறையும் மீண்டும் ஆரம்பித்தன. பிராம்மணத் துவேஷத்தை வைத்தே தன் நாத்திக,
ஹிந்து விரோத அரசியல் கோட்டையைக் கட்டிய .வெ.ராவின் சிலையை,
உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் மனங்களைப் புண்படுத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ஆலயத்தின் முன்பு வைத்துத் திறந்தனர் திராவிடர் கழகத்தினர். அதற்கு முழு ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் நல்கியது கருணாநிதியின் தி.மு. அரசு.
தில்லை நடராஜனையும் ஸ்ரீரங்கத்து ரங்கநாதனையும் பீரங்கி வைத்துத் தகர்க்கும் நாள் என்னாளோ,
அன்னாளே எங்களுக்குப் பொன்னாள்
என்று கூக்குரலிட்டு வந்த திராவிட இனவெறிக் கூட்டம்,
அவ்வாறு செய்ய முடியாததால், அதற்குப் பதிலாக .வெ.ராவின் சிலையை ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக வைத்தது.
ஸ்ரீரங்கத்தில் செய்ததுபோல தமிழகத்தில் மேலும்
128
கோயில்கள் முன்பாக .வெ.ராவின் சிலைகளை வைக்கப்போவதாக வீரமணி அறிவிக்க, அதற்குத் தங்கள் அரசு அனைத்து ஒத்துழைப்பும் தரும் என்று கருணாநிதியும் அறிவித்தார். சிலைக்குத் திறப்பு விழா நடப்பதற்கு முன்பாகவே ஹிந்து மக்கள் கட்சியினரால் அதன் தலை துண்டிக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது. கருணாநிதி அரசு அவ்வழக்கில் பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துத் தன்னுடைய துவேஷத்தைக் காட்டிக்கொண்டது. .வெ.ராவின் சிலைகளைக் கோயில்கள் முன்பாக வைப்பதைக் கண்டித்து அவர் பத்திரிகை அறிக்கை வெளியிட்டதற்காக சில உடைப்பு வழக்கில் அவர் பெயரைச் சேர்க்கத் துணிந்தது கருணாநிதி அரசு. பின்னர் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி அவர்களின் எச்சரிக்கைக்குப் பிறகு ஸ்வாமிஜியின் பெயர் நீக்கப்பட்டது. பிறகு அதற்கெனவே தயாராகச் செய்து வைத்திருந்ததைப்போல வெண்கலச் சிலையை ஒரே நாளில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள் திராவிடர் கழகத்தினர்.
அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டையில் ஏப்ரல்
20, 2007
அன்று பி. மனோகரன்,
மீரான் ஹுஸ்ஸேன் ஆகிய இருவர் .வெ.ராவின் சிலையைச் சேதம் செய்தனர்.
அதன் விளைவாக தமிழகத்தில் பல இடங்களில் மடங்கள் மற்றும் கோயில்கள் மீது திராவிடர் கழகத்தினரும் தி.மு.கழகத்தினரும் .தி.மு.கவினரும் தாக்குதல் நடத்தி வன்முறையில் இறங்கினர். பிராம்மணர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
தஞ்சை பெருவுடையார் கோயில் குருக்கள் ஒருவரைத் தாக்கி அவரின் பூணலையும் குடுமியையும் அறுத்தனர். நெய்வேலி வில்லுடையான்பட்டு முருகன் கோயில் குருக்களாக இருந்த 74 வயது குருமூர்த்தி என்பவர் மீது
10
திராவிடர் கழக குண்டர்கள் கடுமையான தாக்குதல் நடத்தினர். அவரின் குடுமியையும், பூணலையும் அறுத்து, அவருடைய 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பிடுங்கிக்கொண்டு கோயில் விநாயகர் சிலையையும் உடைத்துச் சென்றனர். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய வீட்டிற்குள் புகுந்து,
அவருடைய மகன் ஞானஸ்கந்தனையும், அவருடைய சகோதரர் மகன் கணேசனையும், பேரன் கோபிநாத்தையும் அடித்து அவர்களின் பூணலையும் குடுமியையும் அறுத்தனர். சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபமும் வன்முறைக்குப் பலியானது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு அங்கிருந்த கடவுளர் சிலைகள் உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். சேலம் சங்கர மடத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கும் தெய்வச் சிலைகள் உடைக்கப்பட்டன. இவ்வாறு தமிழகத்தில் பல இடங்களில் பிராம்மணர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முத்துப்பேட்டையில் .வெ.ரா சிலையைச் சேதம் செய்தவர்கள் இருவருமே பிராம்மணர்கள் இல்லை. ஒருவர் முஸ்லிம்,
மற்றொருவர் அப்பிராம்மணர். அப்படியிருக்க தி. குண்டர்களும் தி.மு. குண்டர்களும் பிராம்மணர்களை ஏன் தாக்கவேண்டும்? சிலையைச் சேதம் செய்தவர்களில் ஒருவர் முஸ்லிம் எனும்போது,
மசூதிகளின் மீதோ அல்லது முஸ்லிம் மௌலவிகள் மீதோ ஏன் தாக்குதல் நடத்தவில்லை? இதிலிருந்தே, .வெ.ரா சிலையைச் சேதம் செய்தது இவர்களே நடத்திய நாடகமாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழத்தானே செய்கிறது?
ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அம்மாநிலத்தை ஆளும் முதல் அமைச்சரின் தலையாய கடமையாகும். ஆனால் கருணாநிதியின் ஆட்சியில் பிராம்மணர்களுக்கு என்றுமே பாதுகாப்பு இருந்தது கிடையாது.
2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத் தலைமைச் செயலருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குருக்கும் இடையே நடந்த டெலிபோன் பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. .தி.மு. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டன. அரசின் நடவடிக்கையையும், முதல் அமைச்சரின் ராஜினாமாவையும் கோரின. அப்போது கர்நாடக மாநிலத்தில் இதேபோல் நடந்த டெலிபோன் ஒட்டுக்கேட்ட சம்பவத்தில் அப்போது கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவைச் (பிராம்மணர்) சுட்டிக்காட்டிப் பேசிய கருணாநிதி,
என்ன செய்வது?
இந்த முதல்வர் பூணல் அணிந்தவர் இல்லையே! கடவுளின் முகத்தில் இருந்து தோன்றிய ஜாதியைச் சேர்ந்தவர் இல்லையே! கால்களிலிருந்து தோன்றிய ஜாதியைச் சேர்ந்தவர்தானே!” என்று தன்னுடைய மேதாவிலாசத்தை வெளிக்காட்டினார்.
அதேபோல 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம்,
உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான
27%
இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் தடைசெய்தபோது, அப்போதைய நீதிபதிகள் இருவரையும் அவமதிக்கும் விதமாக,
லட்சக்கணக்கானோரின் தலைவிதியை இரண்டு அல்லது மூன்று பேர் தீர்மானிப்பதா? தடை விதித்த இரண்டு நீதிபதிகளும் பூணல் அணிந்த ஆரியர்கள்
என்று அப்போதைய முதல்வர் கருணாநிதியும், தி. தலைவர் வீரமணியும் அறிக்கை வெளியிட்டனர்.
அனைத்து ஜாதி அர்ச்சகர்
சட்டத்தைக் கொணர்ந்த தி.மு. அரசு,
அர்ச்சகர்களுக்கான ஓராண்டு பயிற்சி முகாம்கள் நடத்தியது.
அப்போது பயிற்சி பெறுபவர்கள் பூணல் அணியத் தேவையில்லை என்று அரசாணை வெளியிட்டுத் தன்னுடைய பிராம்மணத் துவேஷத்தை மீண்டும் வெளிக்காட்டிக்கொண்டார் கருணாநிதி.
இந்துக் கடவுளரைக் கொச்சைப்படுத்துவதையே தொழிலாகக்கொண்டிருக்கும் இவர்களின் மேதாவிலாசம், பிராம்மணனாகப் பிறந்த ராவணனைத் திராவிடனாகவும், க்ஷத்ரியரான ராமரை ஆரியராகவும் வர்ணித்தபோது வெளிப்பட்டது. தி.மு.கவின்முரசொலி’ இதழும்,
தி.கவின்விடுதலை’ இதழும் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பிராம்மணத் துவேஷத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.
இரு பத்திரிகைகளும் பிராம்மணர்களை அவமதிக்காத நாள் இல்லை என்றே சொல்லலாம்.
பிராம்மணத் துவேஷத்தையே வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து அரசியல் நடத்திய .வெ.ரா, தன்னுடைய சுயநலன் என்று வரும்போது பிராம்மணரான ராஜாஜியின் ஆலோசனைகளின்படியே செயல்பட்டார். கருணாநிதியும் தன்னுடைய சுயநலனுக்காகத் தன்னைச் சுற்றி,
மருத்துவர் முதல் யோகா ஆசிரியர் வரை,
பிராம்மணர்களையே வைத்துக்கொண்டார். இவர்களுடைய குடும்பத்துப் பெண்கள் தாலியணிந்து, கோயில்களுக்குச் சென்று வழிபட்டு, இல்லங்களில் பூஜைகள் செய்து, வாழ்கின்றனர். இவர்கள் வீட்டுக் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் ஆங்கிலமும் ஹிந்தியும் கற்று படிக்கின்றனர்.
இவர்களுடைய பிராம்மணத் துவேஷம், கடவுள் மறுப்பு,
ஹிந்தி எதிர்ப்பு, சுயமரியாதை திருமணம்,
ஜாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் எல்லாம் ஊருக்கு உபதேசம்தானே தவிர,
இவர்கள் பின்பற்றுவதற்கில்லை. நாட்டையும் மக்களையும் ஏமாற்றி, போலித்தனமான அரசியல் செய்துவந்த இவர்கள் இன்று சாயம் வெளுத்து,
தோலுரிக்கப்பட்டு அசிங்கமாக நிற்கிறார்கள்.
இவர்கள் சென்ற ஆண்டு நடத்திய பன்றிக்குப் பூணல் அணிவிக்கும் போராட்டம் நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றது. குறிப்பாக இளையதலைமுறையினர் இவர்களின் இனவெறி அரசியலைப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர். திராவிட இனவெறி இன்று பூணலில் தூக்கு மாட்டிக்கொண்டுள்ளது. இது தெரியாமல் நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல, கமல்ஹாசன் உளறிக்கொட்டித் தானே அசிங்கப்பட்டிருக்கிறார். தமிழகம் கைகொட்டி எள்ளிநகையாடிச் சிரிக்கின்றது! அரசியல் தலைவராக வலம் வரவேண்டியவர் அரசியல் கோமாளியாக நடந்துகொண்டு வருகிறார்.
ஆதாரங்கள்:
1.  
பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது
Read more at:
 http://tamil.oneindia.com/news/tamilnadu/9-periyarist-held-panrikku-poonool-podum-porattum-292052.html
5.  
தினமலர் – 23 ஏப்ரல் 2007 : – (https://groups.yahoo.com/neo/groups/anti_hindu_watch/conversations/topics/86 )

Posted on Leave a comment

ஸ்ரீ கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | சந்தித்தவர்: அபாகி

 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றில் கண்ணுக்குத் தெரியாத வேர்கள் பலருண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ கணேசன் ஜி. 1970ல் இருந்து ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக (முழுநேர ஊழியர்) இருந்து வருபவர். தமிழகத்தில் பல்வேறு ஹிந்து இயக்கப் பிரமுகர்களை உருவாக்கியவர். மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ போன்ற பல்வேறு பிரபலங்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக மாற்றியவர். தற்போது, விவசாயிகளுக்கான இயக்கமான பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத அமைப்பாளர். ஏராளமான விவசாயிகளைத் தலைவர்களாக மாற்றிய பெருமை இவருக்குண்டு. உடல்நிலை தளர்ந்த நிலையிலும், திருச்சியை மையமாக வைத்து தமிழகத்தில் உள்ள கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்

சென்னைக்கு வந்திருந்த ஸ்ரீகணேசன் ஜியை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவற்றில் சில பகுதிகள் இங்கே:
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பில் எப்போது
சேர்ந்தீர்கள்?
1963ல்
குரோம்பேட்டையில்
இருந்தேன். அப்போது தி.நகர் பசுவுல்லா சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிச்சிக்கிட்டிருந்தேன். ரக்ஷாபந்தன் நேரத்தில் ஒரு நோன்பு வரும். அதனால எங்க பள்ளியில் அரை நாள் விடுமுறை விட்டார்கள். சாயங்காலம்தான் அந்த நோன்பு. அதனால வீட்டுல பூஜையெல்லாம் முடிச்சிட்டு 6 மணிக்கு வாங்கடான்னு சொன்னாங்க. ஏன்னா பெண்கள் விழாதான் அது. அதனால் பகல் முழுவதும் கிரிக்கெட் விளையாண்டோம். கிரிக்கெட் முடிஞ்சிட்டுது. அப்புறம் திரும்ப வந்தோம். ஆறு மணிக்குத்தான வீட்டுல வரச் சொன்னாங்க, இன்னும் நேரம் இருக்கேன்னு பார்த்தோம்.
அப்போது மூணாவது வீட்டுப் பையன் சொன்னான், “டேய் இங்க நேத்து கபடி விளையாடினாங்கடா, பாக்கலாம்ன்னான். சரின்னு கபடி விளையாட்ற இடத்துக்கு போனோம். நாங்க போகும்போது எல்லாரும் அப்போதுதான் விளையாடிட்டு வரிசையா ரவுண்டா நின்னாங்க. எங்களையும் உக்காரச் சொன்னாரு. எங்கள் ஆரூயிர் தாய்நாடேன்னு ஒரு பாட்டை பாடினாரு. எல்லாரையும் அதைத் திரும்ப பாடச் சொன்னாரு.
அப்புறம் ஒரு அருமையான கதை சொன்னாரு. மகாத்மா காந்தி ஒரு கிராமத்துல நிதி திரட்டியபோது ஒரு சிறுமி ஒரு சின்ன பென்சில் கொடுத்தாராம். அதைத் தேடினது பத்திய கதை அது. ரொம்பவே கவர்ந்தது. கடைசியில் சமஸ்கிருத மொழியில் பிரார்த்தனை. அரை அரை வரியா சொல்லி திரும்ப சொல்லச் சொன்னாரு. முடிஞ்ச உடனே நாங்கள்லாம் சேரலாமான்னு கேட்டேன். நாளைல இருந்து வந்துடுனு சொன்னாரு.
சந்தா எவ்வளவுன்னு கேட்டேன்.
நாடு போன்ற ஒரு குடும்பம் இது. இந்த தேசத்த ஒரு குடும்பமாக்கணும். குடும்பத்துல ஒருத்தன உறுப்பினரா சேர்த்துக்க சந்தா உண்டான்னு சொன்னாரு. அப்ப நாளைக்கு வந்துட்றேன்னு சொன்னேன்.
எதுக்கு சார் இந்த சங்கம், நல்லா இருக்குன்னேன். நாளைக்கு கொஞ்சம் முன்னாடியே வந்துடுன்னு சொன்னார். நானும் அரை மணிநேரம் முன்னாடி போனேன். அவரும் வந்துட்டாரு.
எதுக்காக இந்த சங்கம்னு திரும்ப கேட்டேன். அதான் நேத்தே சொன்னேனே, “தேசத்த முழுக்க ஒரு குடும்பமாக்கணும். காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும். சிவபெருமான் நம்ம அப்பா. வடக்கே தக்ஷிணாமூர்த்தியா இருக்காரு. நம்ம அம்மா பார்வதி தெற்கே கன்னியாகுமரியா இருக்கா. நாமெல்லாம் சகோதரர்கள். உடன்பிறப்புகள். இந்த உணர்வு இருக்கும்போது இந்த நாடே உலகத்தில தலைசிறந்த நாடாகிடும்னு சொன்னாரு.
ஆனா அப்ப அதுமாதிரியெல்லாம் இல்ல. மொழி, மதம்னு ஒருபக்கம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், சண்டை. நம்மலாம் பாரத மாதாவின் குழந்தைகள். நம்ம எல்லாரும் ஒரு குடும்பம் ஆக்கணும். இதை எப்படிங்கய்யா செய்றது, சந்தாலாம் இல்லை, எப்படி உறுப்பினர் கணக்கு எடுக்கிறது, இது எப்படி செய்யமுடியும்னு கேட்டேன்.
செய்வோம்யா. இந்த
பூமில கடவுள் 24 மணிநேரத்த நமக்குக் கொடுத்திருக்கான். சாப்பிடறது, தண்ணி குடிக்கிறது, காத்த சுவாசிக்கிறதுக்குன்னு. அதுல ஒரே ஒரு மணி நேரத்தை இந்த நாட்டுக்காக நாம கொடுக்கணும், அதான்யா சந்தான்னு சொன்னாரு.
எப்படி வரணும் என்று என்றேன். “அப்படியே வரவேண்டியதுதான். செருப்ப அங்க வரிசையா கழட்டி போட்டுட்டு வரணும். ஒரு ரூபாய் செருப்பு இருக்கும், 5 ரூபாய் செருப்பு இருக்கும். 50 ரூபாய் செருப்பும் இருக்கும், 500 ரூபாய் செருப்புகூட இருக்கும். ஆனால் செருப்பு செருப்புதான. வந்து அங்க வரிசையா வெச்சிட்டு வரணும். கோயிலுக்குள்ள செருப்ப போட்டு போவோமா? அதுமாதிரிதான் ஒருமனப்பான்மையோடு வரணும். ஏன்னா, நாம பாரத மாதாவோட குழந்தை. நீ படிச்சவனா இருக்கலாம், படிக்காதவனா இருக்கலாம், உயர்ந்த சாதிய சேர்ந்தவனா இருக்கலாம், தாழ்த்தப்பட்ட சாதிய சேர்ந்தவனா இருக்கலாம். உயர்ந்த உத்தியோகம், தாழ்ந்த உத்தியோகம், தெருக்கூட்டுறவங்க, மளிகைக் கடை வச்சிருக்கிறவங்கன்னு எந்த வேறுபாடும் வரக்கூடாது. பாரத மாதாவோட குழந்தைன்னு வரணும். உடம்பால, மனசால, இந்த உணர்வோட வரணும். 24 நாளு மணி நேரத்துல 1 மணிநேரம், 24 நாள்ல ஒருநாள். அப்படி வரணும்னு சொன்னார்.
அப்படி வர ஆரம்பிச்சவன்தான். நானா போய்ச் சேர்ந்துட்டேன். அங்கே அப்போ சங்கத்த யாரு நடத்துனாங்கன்னா பிஜேபில சங்கர்ன்னு ஒருத்தர், ரயில்வேல வேலை பார்த்துட்டு, தீனதயாள் உபாத்தியாயா செத்துப் போன பிறகு, முழுநேரமா இருந்தாரு. அவரு அந்தப் பகுதில (சங்கத்துல) கார்யவாஹ் (செயலாளர்) ஆக இருந்தாரு. அவரு தம்பி தியாகராஜன். அவரும் சங்கத்துல இருந்தாரு. அவரு குரோம்பேட்டை நேரு நகர்ல இருந்தாரு. அவரு அப்பா போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்தார்னு நினைக்கறேன், அதனால போஸ்ட் ஆபீஸ்வீடுனு அவங்க வீட்டைச் சொல்லுவாங்க. அவருதான் அந்த ஷாகாவ நடத்துனாரு. அவரு நடத்துன விதம் ரொம்பப் புடிச்சிருந்தது. அதனால, தானா போய்ச் சேர்ந்தேன்.
பிரச்சாரக்கா
எப்ப வந்தீங்க?
1970
சங்கத்தின் மூணாவது ஆண்டு பயிற்சிக்கு நாக்பூருக்குப் போயிருந்தேன். என்னுடன் ஒன்பது பேர் வந்திருந்தாங்க. இப்போது ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவராக இருக்கும் சேலம் குமாரசாமி உட்பட. முகாம் முடியும் நேரத்தில், மறைந்த சுப்பராவ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதுல, ‘ஸ்ரீகணேஷ், உன்னை தூத்துக்குடிக்கு போட்டிருக்காங்க. அதனால இந்த மூணாவது ஆண்டு பயிற்சி முடிஞ்சவுடனே தூத்துக்குடிக்கு இந்த விலாசத்துக்கு வரவும். அங்க மனவாளசாமின்னு ஒருத்தரும், நெல்லையப்பன்னு ஒருத்தரும் இருப்பாங்க. அவங்க உங்கள வரவேற்பாங்கன்னு சொல்லியிருந்தார். ஆனா உண்மையில பிரச்சாரக்கா எப்ப வந்தேன்னா… 1970 ஏப்ரல் 23 அன்னிக்கு எனக்குக் கல்லூரியில் மூணாவது ஆண்டு கடைசி நாள் பரிட்சை. ஒரு மணிக்கு பரிட்சை எழுதி முடிச்சிட்டு, 2 மணிக்கு பையை எடுத்துக்கிட்டு, தஞ்சாவூர் காரியாலயத்துக்கு பஸ் ஏறிட்டேன். ஏன்னா நான் சங்கத்தில் இரண்டாவது ஆண்டு, முதல் ஆண்டுப் பயிற்சி முகாம்கள் முடிக்கும்போதே அப்போதைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் இராமகோபாலன் ஜி, ‘யாரெல்லாம் இந்தத் தேசம் முன்னேற்றத்துக்காக உழைக்க முடியும்?’னு கேட்டாரு. திரும்பிப் பார்க்காம கை தூக்கணும்னு சொன்னாரு. நிறைய பேர் கைதூக்கினோம். அதுல நானும் ஒருத்தன். இல. கணேசன், சுகுமார் எல்லாரும் கை தூக்கினோம். சுகுமார்னா, இப்போதைய பி.எம்.எஸ். அகில பாரதப் பொறுப்பாளர் சுகுமாரன் ஜி. ஏப்ரல் 23, 1970ல் தஞ்சாவூர் காரியாலயத்துக்குப் போயிட்டேன். அப்போது 100 மாணவர்களை ஷாகாக்குக் கொண்டுவரணும்னு முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இந்தியன் எக்ஸ்பிரஸ்ல கோபாலகிருஷ்ணன், T.R. நாராயணன் (இல. கணேசன் தங்கை வீட்டுக்காரர்), ராமரத்தினம் ஜி, வெங்கட்ராமன், அதே மாதிரி சுந்தர்ராஜன்னு ஒருத்தர் மானா மதுரை சாவடியில காரியாலயத்துல இருந்தாரு. இவங்கதான் 100 மாணவர்களை ஷாகாவுக்குக் கொண்டுவர முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. அப்புறம் மதுரைல சங்க சிக்ஷா வர்க (ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர பயிற்சி முகாம்) நடந்தது. அங்க ஐந்து, ஆறாவது நாள் இருந்து கணக்கை முடிச்சிட்டு, அங்கிருந்து கிளம்பி 8ம் தேதியோ என்னவோ சென்னைக்கு கிளம்பி வந்து 9ம் தேதி நாக்பூர் முகாமுக்குப் போனோம். அப்ப பிரச்சாரக்கா வந்தாச்சு.
அந்த நேரத்தில்
பிராந்திய பிரச்சாரக்காக
(
ஆர்.எஸ்.எஸ்.
மாநில அமைப்பாளர்)
இராம.கோபாலன்
ஜி இருந்தார்.
உங்களுக்கு அவரோடு
இருந்த அனுபவம்
பற்றி சொல்லுங்க
அவரோடு அனுபவம் 63வது வருஷமே தொடங்கியாச்சு.
இங்க சென்னை சாங்கிக் (கூடுகை) நடக்கும். கண்ணப்பர் ஹால், இல்லைன்னா சேத்துப்பட்டு, வடபகுதில இருக்கிற ரெயில்வே C.I.T. காலனில நடக்கும். இந்த சாங்கிக்ல விசேஷப் பயிற்சியும் நடக்கும். எல்லாத்திலேயும் கலந்துக்கிடுவோம். அங்கவச்சிதான் முதன்முதலா இராமகோபாலன் ஜியைப் பார்த்தோம். அங்க தேசபக்திக் கதைமலர்னு ஒண்ணு, விஜயபாரதம் (தியாகபூமி) வெளியிட்டாங்க. கனகராஜன்தான் அப்ப அதுக்கு ஆசிரியர். அதுல கப்பலோட்டிய தமிழன் செக்கிழுக்கிற படம்தான் அதன் முகப்பு அட்டையில போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தையும் வாங்கிட்டு, முதல்முறையா கோபால்ஜிகிட்ட பேசினோம். அதுதான் முதல் அத்தியாயத்தோட ஆரம்பம். அதுதான் பிரச்சாரக்கா வர்றதுக்கு கிடைத்த உணர்ச்சிகள்.
என்னோட முதல் முக்கிய சிக்ஷக் (ஆர்.எஸ்.எஸ். ஷாகா பொறுப்பாளர்) தியாகராஜன். அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. அங்கே ஒரு வீட்டு மாடில எங்க ஷாகா (ஆர்.எஸ்.எஸ். கிளை) ஸ்வயம்சேவகர்களுக்கு உணவுன்னு சொன்னாங்க. எனக்கு அதுக்கு முன்னாடி அது மாதிரி எல்லாம் அனுபவம் கிடையாது. என்னையும் கூப்பிட்டு இருந்தாங்க. நானும் போயிருந்தேன். அங்க கோபால்ஜி வந்திருந்தாரு. அங்க சடகோபன்னு ஒருத்தர். பிற்காலத்தில் அவரும் பி.ஜே.பி. முழு நேரமா வந்தாரு. அவரும் இவரும் போஸ்ட் ஆபிஸ்ல செஞ்சுக்கிட்டு இருந்த தங்களுடைய வேலையை ராஜினாமா செஞ்சிட்டு DL படிச்சிட்டு இருந்தாங்க. அதையும் முடிச்சிட்டு, சேலம், கோவை ஆகிய இடங்கள்ளல்லாம் முழு நேரமா வந்தாரு. அவரு கோபால்ஜிகிட்ட பேசிட்டு இருந்தாரு. ‘நீங்கள்ளா கல்யாணம் பண்ணிட்டுதான் பிரச்சாரக் ஆகணும்னு சொன்னீங்க. நாங்கள்லாம் கல்யாணம் பண்ணிகிட்டோம். ஆனா நீங்க எப்ப பண்ணப்போறிங்கன்னு கேட்டாரு. உங்க வீட்லலாம் அதப் பத்தி கேக்கலயான்னு இராமகோபாலனைக் கேட்டாரு.
தேசத்துக்காக வந்திருக்கோம், அப்படி போகவேண்டியதுதான்னு இராமகோபாலன்ஜி சொன்னாரு. அப்பதான் எனக்குத் தெரியும், அவர் திருமணம் ஆகாம பிரச்சாரக்கா ஆனவர்னு. அதுக்கப்புறம் ஷாகாவுல பாப்போம்.
பொத்தேரில ஒரு காரியாலயம் இருக்கு. அந்த காரியாலயத்துல அவரு இருந்தாரு. நான் அங்கே போவேன். நான் மயிலாடுதுறைக்கு கல்லூரிக்கு போயிட்டேன். அப்ப சென்னைக்கு ஏதாவது காரியமா வந்தேன்னா அங்க போவேன். அதுக்குள்ள எப்படியோ நட்பு வந்துருச்சு. அப்படியே போயிட்டு வருவேன். அங்க சீனிவாசன், கண்ணப்பான்னு ஒருத்தர், குஸ்தியெல்லாம் நல்லாப் போடுவாரு இவரு, அவங்கல்லாம் அங்க இருந்தாங்க. என்னை சாப்பிடுனு சொல்வாரு. இரு இரு, பேசிட்டுப் போலாம்னு சொல்வாரு. அப்படியே போச்சு.
அதுக்கு அப்புறம்தான் மயிலாடுதுறைக்குப் போய் முதல் வருஷப் பயிற்சி, இரண்டாவது வருஷப் பயிற்சி, மூணாவது வருஷப் பயிற்சி எல்லாம். அப்புறம் மயிலாடுதுறைக்கு வருஷத்துக்கு ஒருதரம் அவரு வருவாரு. அப்ப அங்க ஷாகா ஆரம்பிச்சாச்சு. அந்த ஷாகா ஆரம்பிச்சி இரண்டாவது வருஷம்தான் பாஸ்கர்ராவ் அங்க பிரச்சாரக் ஆனார். அதுக்கு முன்னாடிலாம் அங்க கோபால்ஜி வருஷத்துக்கு இரண்டு மூணு தடவை வந்திருவாரு. வல்லநாடு கோயில்ல நடந்தது. நாற்பது ஐம்பதுபேர் வருவாங்க. நானே அதை இரண்டா பிரிச்சி கல்லூரி மாணவர்களுக்குன்னு தனியா பயிற்சி கொடுப்பேன். அப்ப இராமகோபாலனுடைய அக்கா கூட இருந்தாங்க. அவங்க திருவெற்றியூர்ல கல்யாணம் ஆகி இருந்தாங்க. ஒருதடவை அவர் தன்னோட செருப்பை எடுத்துட்டு வந்துரு போலாம்னு சொன்னாரு. அதாவது வெளியே நின்னுட்டுப் பேசிட்டு இருந்தாரு. நான் அவரோட செருப்பைக் கால்ல போட்டுட்டு இருந்தேன். செருப்பு ரொம்ப பொருந்தியிருக்கே. என்னோட செருப்பும் நல்லாப் பொருந்தியிருக்கு, பிரச்சாரக்கா வர்றதுக்கும் எல்லாம் பொருந்தியிருக்குன்னு சொன்னாரு. அப்ப அது புரியல. சிந்திக்க சிந்திக்கத்தான் எல்லாம் புரிஞ்சது.
ஷாகால அவரு பேசினால் பொறி பறக்கும். அதுக்கு அப்புறம் பயிற்சி. ஒரு முகாமில் இன்ஸ்பெக்ஷன். எல்லாரும் அவங்க அவங்க பொருட்களை எடுத்து வைக்கணும்னு சொன்னாங்க. இராமகோபால்ஜி, இன்னும் இரண்டு பேரு வருவாங்கன்னு சொன்னாங்க. அப்ப என்னோட பொருட்களை கோபால்ஜி பார்த்தாரு. இந்த மூஞ்சிக்கு பவுடர் கேக்குதான்னு சொன்னாரு. விபூதி வேற பவுடர் வேறப்பான்னார். அன்னிக்கு தூக்கிப் போட்டதுதான் அந்த பான்ஸ் பவுடரை. அப்புறம் போடறதே இல்லை. அப்புறம் கல்லூரிப் படிப்பு இரண்டு வருஷம். அப்பல்லாம் பவுடர் இல்லாம மெட்ராஸ்ல பள்ளிக்கூடத்துக்குக்கூட போகவே முடியாது. நம்ம உணர்வு அப்படி இருக்கும். என்னவோ மாதிரி இருக்கேன்னு தோணும். அப்ப கூட பவுடர் போட்டதில்ல. அவரு சொல்லிட்டாரு, அப்படியே பவுடரை விட்டாச்சு. அப்புறம், ‘என்னாச்சு, ரெடியாய்ட்டியா, என்ன பண்றஅப்படின்னு அடிக்கடி கேப்பாரு.
அதுக்கு அப்புறம் எமர்ஜென்சி பீரியட்லாம் வந்தது. தூத்துக்குடிக்கு பிரச்சாரக்கா போயிருக்கோம். தூத்துக்குடிக்கு வருஷத்துக்கு மூணு தடவை போயிடுவாரு. திருச்செந்தூருக்கு மூணு தடவை வந்து பேசியிருக்காரு. தூத்துக்குடில, விளாத்திகுளத்துல, ஸ்ரீவைகுண்டத்துல, கோவில்பட்டிலன்னு எல்லா இடங்கள்லயும் பேசி இருக்காரு. விளாத்திகுளத்துல ஒரு தி..காரர் வீட்ல தங்கியிருந்தாரு. தி..காரரா இருந்தாலும் ரொம்ப ஆதரவாளரா மாறிட்டாரு. அப்படி என்னைப் பார்க்கிறதுக்காக வந்தேன்னுதான் சொல்லுவாரு. ஆனா, சங்க வேலையா திட்டம் போட்டுதான் வருவாரு எப்பவும். சுப்பராவ்தான் திட்டம்போட்டே கொடுப்பாரு. மாநில பிரச்சாரக் வர்றாரு, அதெல்லாம் அரேஞ்ச் பண்ணுங்கன்னு சொல்லிடுவாரு. நல்லா வேலை செஞ்சா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பத்து பேரு, இருபது பேரு, முப்பது பேரு இருப்பாங்க. அவரு பேரச் சொன்னா போதும், பெரிய மாற்றம் வந்துடும். அதுமாதிரிதான் தர்மபுரில. அப்பலாம் சைக்கிள் ஓட்டமுடியாது. சைக்கிள்லாம் கொடுக்கமாட்டாங்க. அப்படி கொடுத்தாலும் ஒண்ணுதான் கிடைக்கும். மணல்ல வச்சி மிதிக்க முடியாது. ஆனா அவரு நாலு பேர வச்சி ஓட்டிக்கிட்டு போவாரு. அப்படியே திருச்செந்தூர். அப்படி இருக்கும்போது அவரு பூஜை பண்ற முறை, தினசரி அனுஷ்டானங்கள்ல கரெக்டா இருப்பாரு. இதெல்லாம் அவரைப் பார்த்து ஒரு இம்ப்ரெஷன், அவர மாதிரி வரணும்னு. அவரு கூட்டம் நடத்தினா போதும், ஆள் வந்துரும். அது அப்படியே ஒரு பெரிய மார்க்கத்துல என்னைக் கொண்டுபோய் விட்டிச்சி.
சுந்தர.லட்சுமணனை
(
ஆர்.எஸ்.எஸ்.
பிரச்சாரகர், சேவாபாரதி
அகில பாரத
பொறுப்பாளர்) சங்கத்துக்கு
கொண்டுவந்தது நீங்கதானே?
அப்ப நான் தூத்துக்குடில பிரச்சாரக்கா இருந்தேன். இடிந்தகரைல பெரிய மதமாற்று வேலையெல்லாம் நடந்துடுச்சு. அப்ப தாய்மதம் திரும்புதல்னு ஒரு ஷாகா இருக்கு, வான்னு சொல்லிட்டாரு. நானும் போயிட்டேன். பகவான் அப்படிங்கிறவர் அங்க வேலை பாத்தாரு. அப்ப சுந்தர லட்சுமணன் அப்பா சுந்தரம்னு ஒரு ஆசிரியர் இருந்தார். அப்ப, ‘ கணேசா, திருச்செந்தூர்ல ஒரு ஷாகா ஆரம்பிக்கணும்னு சொன்னல்ல, உனக்கு ஒருத்தர அறிமுகம் செஞ்சு வைக்கிறேன்னு சொன்னாரு.
சுந்தரம்ஜியிடம் பேசினேன். அவரு, ‘இதுமாதிரி பள்ளிக்கூடத்தை நடத்துறேன். இந்தக் குழந்தைகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கிறேன். நல்ல விஷயங்கள்லாம் சொல்லிக் கொடுக்கிறேன். வாங்க, நாம RSS இந்துக்களை சேர்த்து நடத்தலாம்னு சொன்னாரு. அதனால அங்கபோய் அவரைத் தொடர்புகொண்டேன். நான் அவரைத் தேடிப் போனேன். மார்கழி மாசம் 1ஆம் தேதிதான் போனேன்னு நினைக்கிறேன். அப்ப அவரு பையன்ங்களை அழைச்சிக்கிட்டுக் குழுவா திருப்பாவை, திருவெம்பாவை பாடிட்டுப் போயிட்டு இருந்தாரு. அவரு வீட்டுலேயே தங்கச் சொன்னாரு. சாப்பாடு அவரு வீட்டுல. அப்ப சுந்தர.லட்சுமணன் காலேஜ்ல பி.யு.சி. படிச்சிட்டு இருந்தாரு. அவரோட ஸ்கூல்லயே ஷாகா ஆரம்பிச்சோம். அவரு வீட்டுப் பையங்க, பக்கத்து வீட்டுப் பையங்க எல்லாரும் சேர்த்துக்கிட்டு ஷாகா ஆரம்பிச்சு, அப்படியே 50, 60 பேர் ஆயிட்டோம். அப்ப நான் திருச்செந்தூர்லேயே தங்கிடலாம்னு முடிவு பண்ணினேன். அப்ப அவரு வீடு அங்க இருந்தது. முருகானந்தம் டிரெஸ்ட்னு ஒண்ணகூட அவரு நடத்திட்டு இருந்தாரு. அதுல மேல ஐந்து ரூம் வச்சிருந்தாரு. அதுல ஒரு ரூம் கொடுத்தாரு. அதனால, காலை வேளைல எழுந்திச்சு, திருச்செந்தூர் நாழிக் கிணறு எல்லாம் சுத்திக் குளிச்சிட்டு, காலைல வெளியே போயிட்டு, மத்தியானம் வந்துருவேன். அப்புறம் சாயங்காலம் ஷாகா நடக்கும். அதுல அப்படியே சுந்தர.லட்சுமணன் முக்கிய சிக்ஷக்கா ஆயிட்டாரு. அந்த ஆண்டுப் பயிற்சி வந்தது. லட்சுமணனைக் கூப்பிட்டேன். நான் வரேன்னும் சுந்தரம்ஜி சொன்னாரு. என் பையன் சின்னபையன்னு சொன்னாரு. ‘இல்ல இல்ல, உங்க பையனை முதல்ல நீங்க அனுப்புங்க. நீங்க அடுத்த வருஷம் வாங்கன்னு சொன்னேன். சுந்தர.லட்சுமணனோட தாத்தா, பாட்டி ரெண்டுபேரும் இருந்தாங்க. அம்மாவோட அண்ணா, தாத்தா அவங்க ரெண்டு பேரு, மொத்தம் ஐந்துபேரும் மூணு நாள் தங்குறோம்னு சொல்லிட்டு, மொத்தம் முப்பது நாளும் தங்கிட்டாங்க. ஒண்ணு ரெண்டு நாள் தவிர மற்ற எல்லா நாட்களும் தங்கிட்டாங்க. ஆசிரியர் பயிற்சி முடிச்சிருந்தாங்க. விருதுலாம் கூட வாங்கினாங்க. அவங்க பெரிய அம்மாவா இருந்து எல்லாருக்கும் வழிகாட்டினாங்க. நான் வேற ஊருக்கு மாற்றலான பிறகு இரண்டாவது பி.பி.. முடிச்சாரு. மூணாவது வருஷம் முடிச்சாரு. அப்புறம் எமர்ஜென்ஸி பீரியட்ல பிரச்சாரக்கா வந்தாரு.
எமர்ஜென்ஸி
நேரத்தில் எப்படி
வேலை செய்தீங்க?
எமர்ஜென்ஸி பீரியட்ல தென்சென்னைதான் நம்ம இடம். தென்சென்னைல கிழக்குப் பகுதிதான் இந்தக் காரியாலயத்துல இருந்தது. சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, ராயப்பேட்டை, டிரிப்ளிகேன், மயிலாப்பூர், அப்புறம் மௌன்ட் ரோடு, அடையார் வரைக்கும். இந்த ஏரியாவை நாலா பிரிச்சிருந்தாங்க. இந்தப் பகுதிக்கு நான். வடபகுதிக்கு சேதுபதி பத்மநாபன், கிழக்குப் பகுதி பீஷ்மாச்சாரி, இப்ப வெளிநாட்டில் பிரச்சாரக்கா இருக்காரு. ஹைதராபாத்ல இருந்து பிரச்சாரக்காக வந்தாரு. மேற்குப் பகுதிக்கு சண்முகநாதன்ஜி. நாலுபேருகிட்டயும் ஒப்படைச்சாங்க.
எமர்ஜென்ஸி
அறிவித்த நேரத்தில்
எங்கிருந்தீங்க?
எமர்ஜென்ஸி அறிவித்த சமயத்துல, எமர்ஜென்ஸி மாதிரி வரும் என்று சொல்லப்பட்டிருந்தது. எனக்கு அதைப் பத்தியெல்லாம் அவ்வளவு தெரியாது. எமர்ஜென்ஸி அறிவிக்கும்போது நான் இங்கேதான் இருந்தேன். காரியாலயம்கூட இங்கதான் இருந்தது. இடிக்கப்படுவதற்கு முன்னாடியே இதை வாங்கிட்டோம். இதை சீல் வச்சிருவாங்களோன்னு இருக்கோம். எமர்ஜென்ஸி காலைலதான் அறிவிக்கிறாங்க. தினத்தந்தி நாளிதழ் முதல்பக்கத்துல RSS அலுவலகம் சீல் வைக்கப்பட்டதுன்னு செய்தி வெளியிட்டிருந்தாங்க. ஆச்சரியமாக இல்லை? இன்னிக்குதான் அறிவிச்சி இப்பதான் கூட்டம் போட்டிருக்காங்க. அதுக்குள்ள தினத்தந்தி பேப்பர்ல செய்தி இருக்கு. நாங்க எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருந்தோம். அப்படி எதாவது எமர்ஜென்ஸி மாதிரி அறிவிச்சா சுதந்திர தினப் பூங்காவில் எல்லாரும் சந்திக்கணும்னு சுப்பராவ் சொல்லியிருந்தாரு. இருக்கிற இடம், நாம எங்கெல்லாம் தங்கணும்ங்கிற ரகசிய இடம் எல்லாம் முடிவாகியிருந்தது. எமர்ஜென்ஸில எனக்கு வெளில வரக்கூடாதுன்னு உத்தரவு. ஆனால் முக்கியமான தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க இணைப்பெல்லாம் இருந்தது. எல்லா மாநிலத்திலேயும் தொடர்புகொள்ளணும். நமக்குக் கடிதங்கள் அங்கங்கே வரும் போகும். இந்தப் பொறுப்புக்கு லிங்க்1னு பேரு. பல்வேறு பகுதிகளிலிருந்து என்னைத் தொடர்பு கொள்வாங்க. அப்படி கடிதப் போக்குவரத்து நாடு முழுவதும் நடத்துறது, மத்த மாநிலங்களில நடக்கிறதைத் தெரிஞ்சுக்கிறது, தமிழ்நாட்ல நடக்கிறதைச் சொல்றதுன்னு கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் நம்ம கைல இருந்தது. தலைவர்கள்லாம் வரும்போது ரகசியமாக தலைவர்களைச் சந்திக்க வைக்கிற வேலை, இதுதான் நம்ம எமர்ஜென்ஸி வேலை.
இந்தியன்
எக்ஸ்பிரஸ் ராம்நாத்
கோயங்காவைத் தொடர்பு
கொண்டீர்களா?
கோயங்கா வீட்டுக்கு நான் போவேன். எப்படி போவேன்னா அவங்க வீட்டுல கிருஷ்ணா கைத்தான்னு அவரோட மகள் இருந்தாங்க. அவங்க ஒரு பால் பண்ணை வச்சி நடத்திட்டு இருந்தாங்க. ஹரிஹரன்னு முன்னாள் பிரச்சாரக் அங்க வேலை பார்த்தாரு. கோயங்கா வீட்டுலதான் எமர்ஜென்சி நேரத்துல மறைந்த கி. சூரியநாராயணராவ் ஜி கொஞ்சநாள் இருந்தாரு. அவருக்கு எப்படி நேரடித் தொடர்பு வந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா அந்த ஹரிஹரன் மூலமா அங்க தங்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அப்ப அதுக்கு முன்னாடி எஸ். குருமூர்த்தி பெரியவங்களை தொடர்புகொண்டு எமர்ஜென்ஸி பத்தி பேசியிருந்தார். இண்டியன் எக்ஸ்பிரஸ்ல ஆடிட்டிங் செய்வதற்கு அவருதான் போவாரு. ஆனா ஹரிஹரன் மூலமாகதான் சூரிஜியை அங்க தங்க வச்சாரு. அப்படி நான் அந்த வீட்டுக்குப் போயிருந்தேன். கோயங்கா இருப்பாரு, அவர் மகன் சூர்தாஸ் இருப்பாரு, அப்ப தியாகராஜன்ஜி கூட இருப்பாரு. அப்ப நான் ஐந்து ஆறு முறை போயிருக்கிறேன்.
துக்ளக் பத்திரிகையின்
சோ…?
சோவைத் தொடர்பு கொள்ளணும்னு இராமகோபாலன் ஜிதான் சொன்னாரு. ‘நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்னு ஒரு பிரதியை சோவிடம் கொடுன்னு சொன்னாரு. அதனால சோவை நீ சந்திக்கணும்னு சொல்வாரு. அப்போ சிதம்பரம்னு அங்க ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி இருந்தாரு. இந்தியன் ரிவியூனு டிடிகே ரோட்ல இருக்கிற மியூசிக் அகாடமில ஒரு பத்திரிகை ஆபிஸ் இருக்கும். அந்தப் பத்திரிகையோட எடிட்டர் சிதம்பரம். அவரை எனக்கு கோபால்ஜி அறிமுகப்படுத்தி வச்சார். சோ தினமும் ஆபிஸ் போறதுக்கு முன்னாடி தியாகி சிதம்பரத்தைச் சந்திச்சிட்டுதான் போவாரு. அதனால அங்க சோவைச் சந்திக்கிறதுக்காக அங்க போய் தினமும் ஒருமணி நேரம் பேசிட்டு இருப்பேன். அப்ப அங்க சோ வருவாரு. அப்ப அவரை சந்திச்சு எமர்ஜென்ஸி நேரத்துல என்ன விஷயம் நடக்குது, என்ன என்ன சம்பவம்லாம் நடக்குதுன்னு நாங்க விவாதிப்போம். அங்க இருந்த நாலு பேர்ல, குருமூர்த்தி, வரதராஜன், சி. கோபாலன் ஆகிய மூணு பேருக்கு, நகரத்துல இருக்கிற முக்கிய பிரமுகர்களை ரகசியமா தொடர்பு கொள்வதற்கு துருப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ரொம்ப நல்லா செயல்பட்டாங்க.
நான்தான் அப்ப சோவோட லிங்க். வாரத்துல மூணுநாள் சந்திச்சிடுவேன். அவரோட காபி சாப்பிடுவேன். இப்ப அவரு இருந்தாருன்னா என்னைப் பார்த்தா அடையாளம் தெரியுமானு தெரியாது.
இந்து முன்னணி
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
தி..வை
எதிர்த்து சங்க
வேலைகள் எப்படி
இருந்தன?
சங்க வேலை, தி..வை எதிர்க்கணும், அதை முறியடிக்கணும்னு சொல்றதில்ல. சங்கம் ஒழுங்கா இருக்கணும்ங்கிறதை மட்டும் ரொம்ப வலியுறுத்தி இருந்தாங்க. ‘அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறிவிடு’, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்புஇந்த ரெண்டு விஷயத்தை இராமகோபாலன் ஜி இங்க வலியுறுத்தினாங்க. அதற்காகப் புத்தகத்தையே நாம போட்டோம். அந்த சமயத்துலதான் நான் சேலத்துல கல்லூரில படிச்சிட்டு இருந்தேன். 69 இருக்கும் அப்ப. சேலத்துல இருக்கிற ராமர், பிள்ளையார் சிலைக்கெல்லாம் செருப்பு மாலை போட்டு, சாணிய கரைத்து ஊத்தி, விளக்குமாறெல்லாம் அடிச்சு அவமானப்படுத்தினாங்க. இந்த விஷயம் எல்லாம் நம்ம ஷாகால தீவிரமாக விவாதிக்கப்படும். அவன் போட்டுருக்கான், அதனால அதைக் கண்டிச்சு நம்ம வால்போஸ்டர் ஒட்டுவோம்னு சொல்லி, மயிலாடுதுறையில நான் அதை ஒட்டியிருக்கேன். கல்லூரி மாணவர்கள் பத்துப்பேரு அங்க படிக்கிற மாதிரி நிக்கிறது. வெறும் வால்போஸ்டர்தான் ஒட்டினோம். அதுதான் தி..வை எதிர்த்து நாம செஞ்ச முதல் போராட்டம்னு நினைக்கிறேன். நாமல்லாம் ஒண்ணா நின்னு படிக்கிற மாதிரி காட்றது. அப்ப அங்க வர்றவங்களும் அதைப் படிப்பாங்க. அப்படி ஒவ்வொருத்தரையா படிக்க வைக்கிறது. அது பெரிய இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அப்புறம் சேலத்துல இருக்கிறவங்க அதை எதிர்த்தாங்க. அப்புறம் தி. கூட்டத்துக்குப் போய் அவங்க பேசறதெல்லாம் கேக்கறது. நாம சாதியத்தான் எதிர்த்தோம். சாதி இல்லாத இந்தியா ஒண்ணா இருக்கணும்ங்கிறதுக்காகத்தான் நாம இருக்கோம். சாதிய ஒழிக்கணும், இந்துக்கள ஒற்றுமைப்படுத்தணும்ங்கிற எண்ணம் எனக்கு இருந்தது.
அப்ப தர்மபுரில தி..காரர் ஒருத்தர் நாகராஜன்னு பேரு, பஸ்டாண்ட்ல டீக்கடை வச்சிருந்தாரு. அவர் பழக்கமானார். அப்போ ஒருநாள் .வெ.ரா. வர்றார்னு சொன்னாரு. இருவரும் .வெ.ரா.வைப் பார்க்க போனோம். அங்க .வெ.ரா தமிழாசிரியர் வீட்டுல தங்கியிருந்தாரு. அவர்கிட்ட, ‘சாதிலாம் இல்லை, இந்துக்கள் ஒண்ணா இருக்கணும்னு சொல்ற RSS இயக்கத்துல முழு நேர ஊழியரா இருக்காருன்னு என்னை அறிமுகப்படுத்தி வச்சாரு. அப்படியா வாங்கன்னு .வெ.ரா. கூப்பிட்டாரு. ‘அப்படியா, RSS போறேன்னு சொன்னேன். அய்யா சாதி ஒழியணுங்கிற கொள்கை இரண்டு பேருக்கும் ஒண்ணுதான்னு நாகராஜன் சொன்னாரு.
ஈவெரா அவர்கள்
வேற எதாவது
சொன்னாரா?
வேற எதுவும் சொல்லல, வாங்கன்னாரு, அப்புறம் டீக்கடைக்காரர பார்த்து நீயும் RSS இருக்கியான்னு கேட்டாரு. ஆமா, அவங்க ஷாகா நடத்துவாங்க, நான் போவேன்னு சொன்னாரு. வேற ஒண்ணும் சொல்லலை. சிரிச்சாரு. ஆனா வாங்கன்னு கூப்பிட்டாரு. அது எனக்கு ஆச்சரியமா இருந்தது. சின்ன பசங்கதான நாம, நம்மை வாங்கன்னு கூப்பிட்டாரேன்னு தோணுச்சு. ஏன்னா கடவுள் இல்லைன்னு சொன்னவருதானன்னு ஒரு எண்ணம். அதுக்கப்புறம் தி..காரங்க சில பேர் தொடர்புல வந்தாங்க.
பாலக்காட்டுல கோபால்ஜி வந்தாரு, அங்க கன்னிகா பரமேஸ்வரி கோயில்னு ஒண்ணு இருந்துச்சு. கல்யாண மண்டபம் மாதிரி இருக்கும். RSS கொள்கை விளக்கக் கூட்டம்னு போட்டு நோட்டீஸ்லாம் அடிச்சிக் கொடுத்து, கோபால்ஜிய கூட்டிட்டு வந்தோம். பக்கத்துல இருக்கிற கிராமத்துல நாங்க போய் நேர்ல நோட்டீஸ் கொடுத்துக் கூப்பிட்டு வந்தோம். ஒரு 150 பேர்க்கு மேல வந்திருந்தாங்க. கல்யாண மண்டபம் முழுவதும் நிரம்பிடிச்சு. அந்த கூட்டத்துல கோபால்ஜி பேசினாரு. அப்போ தி..காரர் ஒருத்தர், சரிங்க அப்ப நாங்கல்லா எப்படிங்க உங்க கூட்டத்துக்கு வரமுடியும்னு கேட்டாரு. ‘நான் தி..வுல இருக்கேன், மாமிசம் சாப்பிடுவேன். நீங்களோ இந்துக்கள் ஒற்றுமைன்னுதான் சொல்றீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா நான்லாம் சேரமுடியாதே. மாமிசம் சாப்பிடறேன், இந்துவே இல்லையேன்னு சொன்னாரு. “யாரு சொன்னா சாப்பிடக்கூடாதுன்னு? ரெண்டு ஆடு சாப்பிடணும்.” “இங்க ஐயருங்கல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்களே. மாமிசம் சாப்பிட்டவங்க அத விடமுடியாதுங்களேன்னு சொன்னாரு. “யாரு சொன்னா விடச்சொல்லி? ரெண்டு ஆடு சாப்பிடுங்கன்னு சொன்னாரு கோபால்ஜி. அதிர்ச்சியாயிட்டாரு தி..காரர். “அய்யருங்க மாமிசம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, RSS அய்யரு இயக்கம்னு சொல்றாங்க…”ன்னு திரும்பவும் சொன்னாரு. “சாப்பாடு வீட்ல சாப்பிடப் போற, இங்கயா வந்து சாப்பிடப் போற? இல்ல RSS சாப்பாடு போடப்போதாஅவங்க அவங்க சாப்பிடுவாங்க இஷ்டமிருந்தா. நம்ம மாரியம்மன் கோயிலுக்கு கிடா வெட்டுறதில்லையா, அதல்லாம் இருக்கும். அதாவது கடவுளைப் பார்த்துடணும், கடவுள அடைஞ்சிடணும்னு நினைச்சிருக்காங்க. அவங்க நிறைய ஆசையை விடணும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, இப்படி நிறைய விஷயங்களை விடணும். அதுல மாமிசமும் விடணும்னு சொல்லியிருக்கு. அப்ப கடவுளைப் பார்த்திரலாம்னு சொல்லியிருக்கு. அதைதான் சொல்லியிருக்காங்க எல்லாரும். அதல்லாம் சாப்பிடலாம். RSS இருந்தாலும் சாப்பிடலாம்னு சொன்னாரு. தி..காரருக்கு உடனே சந்தோசம். தருமபுரில எந்த இடத்துல என்னைப் பார்த்தாலும் உடனே என்னைக் கூட்டிட்டுப்போய், இவர் RSS இருக்காருன்னு பெருமையா சொல்லி அறிமுகப்படுத்தி வைப்பாரு. அவரோட நண்பர் ஒருவர் பெரியசாமின்னு ஒரு டாக்டர் ஒருத்தர் இருந்தாரு. அவருதான் எனக்கு நிறைய உதவி பண்ணினார் தருமபுரில. அவர் ஜிசிஐஎம் படிச்சிருந்தாரு. அவரைத்தான் .தி.மு..க்கு முதல் மாவட்ட அமைப்பாளராக எம்.ஜி.ஆர். போட்டார். தர்மபுரி மாவட்டத்துல நிறைய இடங்கள்ல நமக்கு நண்பர்கள்தான்.
எமர்ஜென்ஸிக்கு
அப்புறம் எங்க
இருந்தீங்க?
எமர்ஜென்ஸிக்கு அப்புறம் என்னை இங்கிருந்து இராஜபாளையம் ஜில்லாக்குப் போட்டுட்டாங்க. நாங்க போறதுக்கு நாலு ஐந்து வருஷத்துக்கு முன்னாடி சங்கரன்கோவில்ல சுப்பாராவை பிரச்சாரக்கா போட்டிருந்தாங்க. அங்க ஏதோ உண்ணாவிரதம் இருந்ததால, ஸ்கூல்ல டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அதனால பள்ளிக்கூடத்தை எதிர்த்து கேஸ் போட்டு ஜெயிக்கிற வரைக்கும் அங்கயே இருந்தாரு. அங்க இருக்கிற கிராமங்களில் எல்லாம் சங்கம் அமைச்சி நடத்திட்டு இருந்தாரு. அவரு இராஜபாளையத்துல சமந்தபுரம் அப்படிங்கிற இடத்துல ஷாகா நடத்திட்டு இருந்தாரு. வாரத்துக்கு ஒருதடவை வருவாரு. பழைய பேட்டைலயும் ஷாகா நடத்தினாரு. கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான் போனபிறகு ஒரு மூணு ஆண்டு இருந்தேன். மூணு ஆண்டுக்குள்ளே ஒரு 16 ஷாகா நடத்திட்டோம். மாநில அளவிலான ஒரு வருடாந்திர முகாமும் அங்க நடத்தும் ஒரு வாய்ப்பு கிடைச்சது. அங்க சங்கம் நல்ல செல்வாக்கா இருந்தது. இராஜசுப்பிரமணியம் பாலிடெக்னிக்லதான் முகாம் நடந்தது. பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவராக இருந்த பேராசிரியர் இராஜேந்திரசிங் போன்ற தலைவர்கள் வந்து வழிகாட்டினாங்க.
அப்பதானே
சங்கர சுப்பிரமணியம்
(
தற்போதைய பி.எம்.எஸ்.
மாநில அமைப்பாளர்)
வந்தாரு?
ஆமா, சங்கர சுப்பிரமணியம், .பி.வி.பி.யோட அமைப்பாளரா இருந்த ஆதித்யன், அப்புறம் பாலுன்னு ஒருத்தர் வந்திருந்தாங்க. இப்படி நமக்காக நிறைய பேர் வந்திருந்தாங்க. தற்போதைய தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். துணைத் தலைவர் பி.எம். ராமகிருஷ்ணன், வி.ஹெச்.பி. தென் பாரத அமைப்பாளர் பி.எம். நாகராஜன் இவங்கள்லாம் அந்த நேரத்துலதான் நம்மகூட வந்தாங்க. இராஜபாளையத்துல ஒரு 15, 16 ஷாகா. செல்வாக்குள்ள ஒரு இயக்கமாக இருந்தது.
அதன் பிறகு
எங்கே இருந்தீர்கள்?
மதுரை ஜில்லா பிரச்சாரக்கா இரண்டாண்டு, அப்புறம் விபாக் (மூன்று அல்லது நான்கு மாவட்டம் சேர்ந்தது) பிரச்சாரக்கா மதுரையில இருந்தேன். இப்ப இருக்கிற டி.வி. ரங்கராஜன், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசகண்டன், அவரு நகர காரியாலயத்துல இருந்தாரு. தினமணில எழுத்தாளராக இருந்த சுவாமிநாதன், அவர் ஜில்லா காரியகர்த்தாவா இருந்தாரு. இந்து முன்னணில இராஜகோபால்னு ஒருத்தர் வெட்டுப்பட்டு இறந்துபோயிட்டார். அவரு என்னோட மையப்பகுதி காரியாலயத்துல இருந்தாரு. அதுக்கு அப்புறம் பரமேஸ்வரன்னு ஒருத்தர் புரொபஸர். அவருக்குகூட நல்ல நெருக்கம் கிடைச்சது. அவர .பி.வி.பிக்கு அறிமுகப்படுத்தி வைச்சேன். பிற்காலத்தில் அவரும் வெட்டப்பட்டு இறந்து போனார்.
கோபால்ஜி (இராமகோபாலன் ஜி) வெட்டப்பட்டபோது நான் அங்க இருந்தேன். காலைல ஷாகாக்கு கிளம்பிட்டு இருக்கும்போது, அகில பாரத நுகர்வோர் அமைப்பின் (.பி.ஜி.பி ) தற்போதைய எம்.என். சுந்தரோட அண்ணன் எம்.என். சுப்பிரமணியன்னு நினைக்கிறேன், அவரு திருவனந்தபுரத்துல இருந்து வந்திருந்தாரு. கோபால்ஜி வெட்டுப்பட்ட செய்தியை அவருதான் கொண்டுவந்தாரு. உடம்பெல்லாம் ரத்தம் பட்டிருந்தது. “கோபால்ஜி இப்படி வெட்டுப்பட்டுட்டாரு, யாதவராவ்ஜி, சூரியநாராயணராவ், சங்கராச்சாரியார், சின்மயானந்தர். இந்த நாலுபேருக்கும் உங்களுக்கும் தகவல் கொடுக்கச் சொன்னாங்க. சாவைக் கண்டு நான் பயப்படலன்னு சொல்லச் சொன்னாரு. அவர வெட்டுனவங்களைப் பிடிச்சிட்டாங்க. அவருக்கு கழுத்துல வெட்டுப்பட்டு எலும்பெல்லாம் தெரியுது. ஆனா பேசிட்டு இருக்காரு.” மதுரை மெடிக்கல் காலேஜ்ல உதவிப்பேராசிரியரா இருக்கிறவர் சொன்னார், “உடனே அழைச்சிட்டு போங்கய்யா, அவரு பேசறாருல, காப்பாத்திடலாம், அழைச்சிட்டு போங்கன்னு சொன்னாராம். இப்ப இருக்கிற மாதிரி அப்ப ஃபோன்லாம் கிடையாது. இந்த மாதிரி கோபால்ஜி வீட்டுக்கு ஃபோன் பண்ணிக்கிறேன்னேன். மதுரை மெடிக்கல் காலேஜ்ல இருந்தவங்களுக்கு ஃபோன் பண்ணினேன். கோபால்ஜி வந்திருக்காருன்னாங்க. இராமகோபாலன்ஜிக்கு இரத்தம் கொடுக்கணுமா என்னன்னு பார்த்துக்கோங்கன்னு சொன்னேன். இப்படி பத்துபேருக்கு ஃபோன் பண்ணிருப்பேன். பத்து பேருக்கு தகவல் சொல்லி நேரா ஆஸ்பத்திரிக்கு வந்துருங்கன்னு சொல்லிட்டு, நேரா இராஜகோபாலன்ஜி (பிற்காலத்தில் இந்து முன்னணித் தலைவராக இருந்தவர், தீவிரவாதிகளால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டவர்) வீட்டுக்கு போனேன். அவரு உடனே போஸ்டர் அடிக்கணும்ஜின்னு சொன்னாரு. என்கிட்டயே காசு கேட்டாரு. 50 ரூபாய்க்கு அப்போ கட்டைல வச்சி அடிச்சி தருவான். லெக்ஷ்மி பிரஸ்ல அடிச்சிட்டு, ஆஸ்பத்திரிக்குப் போனோம். நிறைய போலிஸ்காரங்க அங்க. எல்லாரையும் விடுவாங்கன்னு நினைச்சு போனோம். ஆனா என்னை மட்டும் உள்ளே விட்டாங்க. அப்பதாம் என்னை போலிஸ்காரங்களுக்கெல்லாம் தெரியும்னு நினைச்சேன். அப்ப அவருக்கு ஒரு பக்கம் ஷேவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு பக்கம் தைச்சிட்டு இருந்தாங்க. ரத்தம் விளக்கெண்ண மாதிரி குபுக் குபுக்ன்னு வந்துட்டு இருந்தது. வலிக்கலையான்னு கேட்டேன். இல்லன்னு சொன்னாரு.
நாலு நாளா போராடி ஆப்ரேஷன் பண்ணி சக்சஸ் பண்ணிட்டாங்க. முடிஞ்சப்புறம் அவரைப் பார்க்க நான் போனேன். அப்புறம் மூணுநாள் அங்க இருந்துட்டு, வடசென்னைக்குப் போறதுக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தேன். அப்ப சங்கத்துல நிறைய பொறுப்பு கொடுத்திருந்தாங்க. விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு போணும்னுலாம் சொல்லிருந்தாங்க. அப்பதான் இதுமாதிரி ஆயிடுச்சி. அதனால உடனே சென்னைக்கு கிளம்பி வரவும்னு சூரிஜி சொல்லிட்டாரு. உடனே அந்த டிக்கெட்டை கேன்சல் பண்ணி, அதுக்கு வேற ஒருத்தரை ஏற்பாடு செஞ்சேன்.
விஷ்வ ஹிந்து
பரிஷத்துல
விஷ்வ ஹிந்து பரிஷத்துல போயி நாங்கல்லாம் வேலை பார்த்தோம். அப்புறம் ஓராண்டுக்குப் பிறகு சங்கத்துக்கே வாங்கன்னு கூப்பிட்டாங்க. என்னை பாண்டிச்சேரிக்கு பிரச்சாரக்காகப் போட்டாங்க. அங்க ரெண்டு, மூணு வருஷம் இருந்தேன். அந்த சமயம் வடலூர்ல சங்கஷிர்சனம் ஒண்ணு நடத்தினோம். சுதர்ஷன்ஜி சிதம்பரத்துக்கு வந்தாரு. வடலூர்ல முகாம் நடத்தினோம். சிதம்பரத்துல ரெண்டு, மூணு முகாம் நடத்தினோம். கடலூர் மாவட்டம் கொஞ்சம் பின்தங்கின மாவட்டமாத்தான் அப்ப இருந்தது. இருந்தாலும் அந்த சமயம் நல்ல எழுச்சி இருந்தது.
அதுக்கு அப்புறம்
கன்னியாகுமரியா?
பாண்டிச்சேரில ரெண்டு வருஷம் இருந்தபோது, அதுக்கு அப்புறம் திருச்சில போட்டாங்க. அங்க இருந்தபோதுதான் டாக்டர்ஜி நூற்றாண்டு விழா நடந்தது. அப்பதான் ஷுகர் ரொம்ப அதிகம் ஆயிட்டது. அப்ப அதெல்லாம் தெரியாது. கால்ல ஓட்ட விழுந்துடுச்சி. அப்புறம் கேட்டா ஷுகர் 525ன்னு சொன்னாங்க. அப்புறம் ஷுகருக்கு மருந்து எடுத்தேன். காலைலயும், மாலைலயும் ரெண்டு வேளையும் இன்சுலின் போட்டுக்குவேன். அப்புறம் அது மூடிடுச்சு. சரியா போயிடுச்சு. அப்புறம் திருச்சில ரெண்டு வருஷம். அதுக்கு அப்புறம் கன்னியாகுமரிக்கு வான்னு சொல்லிட்டாங்க. அப்ப அங்க இருந்த பாஸ்கர் ராவ் தூத்துக்குடி, திருநெல்வேலிக்குப் போயிட்டாரு. அப்ப திருநெல்வேலிலதான் ஹெட்குவாட்டர்ஸ். அப்படி அங்க இருந்தப்புறம், பாஸ்கர் ராவ்க்கு பத்து மாவட்ட பொறுப்பு (சம்பாக்) கொடுத்துட்டாங்க. கன்னியாகுமரி பிரச்சாரக்கா 2 வருஷம் இருந்த பிறகு, 1993 என்னை சூரியநாராயண ராவ்ஜி, கேந்திர பிரச்சாரக்கா இருந்த கிருஷ்ணபாஜிஎல்லாரும் முடிவு செஞ்சு நம்ம ஸ்ரீகணேசனை பாரதிய கிசான் சங்கத்துக்கு மாநிலப் பொறுப்பாளராகப் போட்டிருக்குன்னு அப்ப சொன்னாங்க. அந்தக் கூட்டத்துல அப்போதைய அகில பாரத பொதுச் செயலாளர் ஹெச்.வி. சேஷாத்திரி வந்து கிசான் சங்கத்தைப் பத்தி தெரியுமான்னு கேட்டாரு. தெரியாதுன்னு சொல்லிட்டேன். சாப்பிடுவியா நல்லான்னாரு, நல்லா சாப்பிடுவேன்னு சொன்னேன். சும்மா செல்லமா ஒரு குத்து குத்திட்டு, சீரியஸாயிட்டாரு.
நம்ம
சங்கத்தால எல்லா இந்துக்கள்கிட்டயும் போக முடியும். ஆனா அதுக்கு இப்படித்தான் போகணும்னு ஒரு பயிற்சி இருக்கு. எல்லா இந்துக்களும் ஷாகா வருவதற்கு காலம் அதிகமாகும். விஷ்வ ஹிந்து பரிஷத்தால போகமுடியும். விஷ்வ ஹிந்து பரிஷத் இவ்வளவு நாள் நடந்தது. இது இரண்டாவது. மூன்றாவதாக பி.ஜே.பி. போகமுடியும். எல்லாக் கிராமங்களுக்கும், பி.ஜே.பி. எப்படி போனாலும் பாதிபேரு அரசியல்ரீதியா எதிராத்தான் இருப்பான். கிசான் சங்கம் எல்லா கிராமத்துக்கும் நல்லா போகமுடியும். பி.எம்.எஸ். தொழிற்சங்கம் நகரத்துல இருக்கும். கிராமத்துல போகமுடியாது. ஆனா கிசான் சங்கம் மூலமா கிராமத்துக்குப் போகமுடியும். கிசான் சங்கம் மூலமாக நம்ம சங்கக் கருத்தைச் சொல்லணும். ஆனா ஒண்ணு நியாபகம் வச்சிக்கணும். எல்லா விவசாயிகளையும் ஒரு சமஸ்காரமா உண்டாக்கணும்னு சொன்னாரு.
பாரதிய கிசான்
சங்கத்தின் மாநில
அமைப்பாளர் என்று
உங்களை அறிவித்ததும்
என்ன செய்தீர்கள்?
என்னை அறிவித்ததும், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர் சேஷாத்திரிஜி, ‘டெல்லியில் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் கூட்டம் நடக்குது. அங்க போயிட்டு வாஎன்றார். அந்தக் கூட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்களும் கலந்துகொண்டாங்க. அடுத்த கிசான் சங்கத்துக் கூட்டத்துக்கு கூப்பிடறதா சொன்னாங்க. இப்படிப் பல கூட்டத்துக்குப் போய் எனக்கு ஒரு விஷயம் தோணிச்சு. கிராமங்களில் எல்லாக் கட்சிக்கும் பிரமுகர்கள் இருக்காங்க. ஆனா, விவசாயிகளுக்காக வாதாட, போராட, தலைவர்கள் தேவைன்னு உணர்ந்தேன். முதல் கட்டமா, ஆர்.எஸ்.எஸ்ஸிடம் கேட்டு, 17 பழைய பொறுப்பாளர்களுக்குக் கடிதம் போட்டேன். அதுல, ஏழு பேரு திருநெல்வேலியில நடந்த மாநிலக் கூட்டத்துக்கு வந்திருந்தாங்க. அதுல வந்தவங்க ஐந்து பேர் மாநில அளவிலயும், ரெண்டு பேர் மாவட்ட அளவிலும் பொறுப்பேத்துக்கறதா சொன்னாங்க. இன்னும் சிலரையும் சேர்த்து 10 பேர் கொண்ட மாநிலச் செயற்குழு அமைத்தோம்.
இந்த 25 வருஷத்துல
தமிழகத்தில் பாரதிய
கிசான் சங்கம்
சார்பில் என்னென்ன
பணிகள் செய்திருக்கிறீர்கள்?
நிறைய செய்திருக்கோம். எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தியிருக்கோம். தென்னை விவசாயிகள், மல்லி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், நெல் விவசாயிகள்னு எல்லாருக்காகவும் குரல் கொடுத்திருக்கோம். மதுரை மாவட்டத்துல முல்லைப் பெரியாறு தொடர்பான கருத்தரங்கம், திருநெல்வேலி, திருச்சி, மதுரைன்னு எல்லா இடங்களிலும் நதிநீர் தொடர்பான கருத்தரங்குகள், இயற்கை விவசாயம் தொடர்பான முகாம்னு நிறைய நடத்தியிருக்கோம். இவ்வளவு டன் வறட்டிகள் கொண்டு யாகம் நடத்தினா, இத்தனை ஆக்ஸிஜன் பெருகி, மழை வரும்னு விஞ்ஞானபூர்வமான உண்மை. காவிரிக்கரையில மழை வேண்டி ரெண்டு முறை யாகம் நடத்தியிருக்கோம். ரெண்டு முறையும் நல்ல மழை. எல்லா ஊர்களிலும் கோமாதா பூஜையும் நடத்தியிருக்கோம். பசு சார்ந்த பொருளால நிறைய நன்மை இருக்கு. அதேபோல நாட்டுமாடு விவசாயத்துக்கு மட்டுமல்ல, பல வகைகளில் உதவிகரமா இருக்கு.
அதேபோல, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்கணும்ங்கறதுதான் கிசான் சங்கத்தோட முக்கியமான கோரிக்கை. விவசாயிகளிடம் உற்பத்தி விலையை விட குறைவா வாங்கி அரசாங்கமே ஏமாத்துது. நகரங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச சந்தை விலை நிர்ணயிக்கப்படுது. ஆனா, விவசாயிகளுக்கு அவங்களோட உற்பத்தி செலவு கூட கிடைக்க மாட்டேங்குது. பல இடங்களில் கடன் வாங்கிதான் விவசாயிகள் பயிரிடறாங்க. உற்பத்தி விலையே கிடைக்கலேன்னா கடன் தள்ளுபடி கேட்கறாங்க. அப்படி கேட்கறது நியாயமில்லதான். ஆனா, வேற வழியில்லையே! கடன் தள்ளுபடி தற்காலிகத் தீர்வுதான். நிரந்தரத் தீர்வு லாபகரமான விலைதான்.
உலகமயமாக்கலின்
தாக்கம் விவசாயத்தில்
இருக்கிறதா?
நிச்சயமா. விவசாயிகளைத் தந்திரமா வியாபாரத்துக்குள்ள தள்ளுவதுதான் உலகமயமாக்கல். விவசாயிகளிடம் அதிக விளைச்சலை தரக்கூடிய விதைகள்ன்னு சொல்லி, மரபணு மாற்ற விதைகளை விக்கறான். அந்த விதைகளால, மனித இன செயல்பாடுகளே மாறக்கூடிய அபாயங்கள் இருக்கு. அதோட மண்ணு விஷமாகி, மண்ணுல விளையுற பயிர்கள் விஷமாகி, அதனால உணவுப் பொருட்கள் பால் வகைகள் விஷமாகி, அதை சாப்பிடற மக்கள் விஷமாகி, நாடே ஆஸ்பத்திரியா மாறிக்கொண்டிருக்கு. அப்புறம், நம்ம நாட்டுல ஏராளமான மருந்துகளையும் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கு. நம்ம நாட்டுல என்ன விளையணும்னு வெளிநாட்டு நிறுவனங்கள் முடிவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படறோம். பன்னாட்டு நிறுவனங்கள் கூட சாதாரண விவசாயிகள் போட்டியிட முடியுமா? இந்த மோசடிதான் உலகமயமாக்கல்.
வாஜ்பாய்
ஆட்சிக்காலத்தில் விவசாயிகளைத்
திரட்டி கிசான்
சங்கம் சார்பில்
தந்தோபந்த் டெங்கடிஜி
டெல்லியில் ஆர்ப்பாட்டம்
நடத்தினாரே?
எதிர்க்கட்சியா இருக்கும்போது பேசறது சுலபமா இருக்கு. ஆனா, ஆட்சிக்கு வந்தா எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகள், பன்னாட்டு நிறுவனங்கள் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. பா... ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி கிசான் சங்கத்தின் கோரிக்கையானவிவசாயிகளுக்கு லாபகரமான விலையை வாஜ்பாய் கொள்கையளவில் ஒத்துக்கொண்டார். இந்த நாட்டுல 80 சதவீத மக்கள் கிராமத்துலதான் வாழறாங்க. விவசாயம்தான் அவங்களோட ஆதாரம். விவசாயிகள் நல்லா இருந்தாதான் கோயில் பூசாரி முதல் எல்லா வியாபாரங்களும் பிழைக்கும். கிராம பொருளாதாரமே விவசாயிகளைதான் நம்பியிருக்கு. விவசாயிகள் நலிஞ்சு போனா, நாடே நலிஞ்சு போகும். இது வாஜ்பாய்க்கு புரிஞ்சது. முதல்ல, வருஷத்துக்கு ஒண்ணு நடைமுறைப்படுத்தறதா சொன்னார். அதை செய்யறதுக்குள்ள அவரோட ஆட்சி கவுந்து போச்சி. விவசாயிகளோட நிலைமையும் இன்னும் மாறலை. அவர், நதிநீர் இணைப்புத் திட்டங்கள்போல சிலவற்றைச் செய்தார். ஆனா, அது போதுமானதா இல்லை.
மன்மோகன்
சிங் தலைமையிலான
காங்கிரஸ் அரசாங்கம்
பத்தி?
அது வெளிநாட்டு அரசாங்கம் போலதான் இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவான அரசாங்கமாத்தான் செயல்பட்டார். அவர் நம்ம நாட்டு ஆளா இருந்தாலும், அமெரிக்க ஆள்போலதான் இருந்தார். அதனால அவர் ஆட்சியில விவசாயிகளுக்கு ஆதரவான ஒரேயொரு திட்டத்தைக்கூட சொல்ல முடியல.
அவருடைய ஆட்சியில்
விவசாயிகள் பட்டினிச்
சாவு அடைந்ததாக
பிரசாரம் செய்யப்பட்டதே?
வேற வழி? கடன் வாங்கி விவசாயம் பண்ணாங்க; உற்பத்தி விலையை விட குறைவான விலை; விவசாயத்துக்கு எதிரான அப்போதைய அரசின் நடவடிக்கைகள். இதனால, விவசாயிகள் தற்கொலை செய்யப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மோடி ஆட்சியில்
விவசாயிகளுக்கு என்ன
செய்துள்ளார்?
மோடி நல்ல மனுஷன். விவசாயிகள் முன்னேறினாதான் நாடு முன்னேறும்னு உணர்ந்துருக்கார். கவலைப்படறார். இந்த ஆட்சியில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவசாயத் திட்டங்கள் வந்துருக்கு. நீர் மேலாண்மை தொடர்பான மோடி அரசின் திட்டம் எதிர்காலத்தில்தான் பலனளிக்கும். ஆனா, இப்ப இருக்கற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லைனுதான் சொல்லணும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடணும்னு கேட்டோம்; அதை பத்தி எதுவும் சொல்லலை. ஆனா, கிசான் சங்கத்தோட நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த வருஷ பட்ஜெட்டுலஃபேமிலி லேபருக்கும்சேர்த்து விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும்னு சொல்லியிருக்கார். விவசாயிகள் கடன் வாங்கிப் பயிரிடறது மட்டுமல்ல; அவங்க குடும்பமே வேலை செய்யுது. அதை புரிஞ்சுதான் ஃபேமிலி லேபர் பத்தி பேசியிருக்காரு. அதேபோல, விவசாயிகளுக்கு லாபகரமான விலை குறித்து பரிசீலிக்க ஒரு குழு அமைப்போம்னு சொல்லியிருக்கார். ஆனா, அது பத்தி உத்திரவாதம் எதுவும் தரலை. நாலு வருஷத்துக்கு முன்னாடி, உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு விலை நிர்ணயிப்போம்னு சொல்லியிருந்தார்.
மோடியை விவசாயிகளுக்கு
எதிரானவரா சித்திரிக்கிறார்களே?
மோடிக்கு நம்ம நாட்டுல மட்டுமல்ல, உலக அரங்கிலும் பெயர் கிடைச்சிருக்கு. அதனால, எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சியாவே மாறிட்டாங்க. அரசியல் லாபத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்தறாங்க. ஆனா, இந்தப் போராட்டங்களால விவசாயிகளுக்கு எதுவும் நன்மை நடந்ததா தெரியலை. விவசாயிகளோட கடன்களைத் தள்ளுபடி செய்யணும்னு போராடுற எதிர்க்கட்சிகள், ஏன் லாபகரமான விலை வேண்டும்னு போராடுவதில்லை.
அது மட்டுமல்ல, இயற்கையை சுரண்டுறாங்க; காடு, வனங்களை சுரண்டுறாங்க; சட்டவிரோதமா மணலை அள்ளறாங்க. இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கண்டிக்கறது இல்ல. எதிர்த்துப் போராட்டம் நடத்தறது இல்ல. ஆனா, விவசாயிகளை மட்டும் தங்களோட அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக்க நினைக்கறாங்க.
தமிழகத்தில்
இப்போது கிசான்
சங்க வேலைகள்
எப்படியிருக்கிறது?
தமிழகத்துல, அரசியல் கட்சிகள் மாதிரியே விவசாயி சங்கங்களும் ஆயிட்டாங்க. அரசியல் தலைவர்கள் மாதிரியே இருப்பைக் காட்ட போராட்டம் நடத்தறாங்க. இதுக்கு மத்தியில பாரதிய கிசான் சங்கம் சந்தேகமே இல்லாம வளர்ந்துட்டு வருது. கிராமந்தோறும் விவசாயத் தலைவர்களை உருவாக்குவது, இயற்கை விவசாயத்தைப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நாட்டு மாடுகள் வளர்ப்பு, கோ பூஜைகள் நடத்துவது, விஷமில்லா உணவுப் பொருட்களை வழங்குவது, நீர் மேலாண்மை செய்வது போன்ற பயனுள்ள விஷயங்கள் செய்துட்டுதான் இருக்கோம்.
எதிர்காலத்
திட்டங்கள் ஏதாவது
வைத்திருக்கிறீர்களா?
நீர் மேலாண்மையை மேம்படுத்தணும். தமிழகத்துல ஆண்டுதோறும் 3,000 டி.எம்.சி. அளவுக்கு மழை பெய்யுது. அது மக்களுக்கு பயன்படாம வீணா கடல்ல கலக்குது. அதை மேலாண்மை செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தணும். தேவைக்கு மேற்கொண்டு அண்டை மாநிலங்களைக் கேட்கலாம். தர மறுத்தா சட்டபூர்வமாகவும் வாங்கலாம். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல. இன்னைக்கு மக்கள்தொகை அதிகமாயிருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி, தங்கள் மாநிலத்துல பாயுற நதியை தாங்களே பயன்படுத்திக்கணும்னு அண்டை மாநிலங்களும் நினைக்குது. நாமதான் விழிச்சுக்கணும்.
பாரதிய கிசான்
சங்கம் சார்பில்
விவசாயிகளுக்கு கூட்டுறவு
வங்கி தொடங்கப்
போவதாக கூறப்படுகிறதே?
ஆமாம். நபார்டு வங்கி சார்பிலே ஏராளமான விவசாயத் திட்டங்கள் அறிமுகமாயிருக்கு. மற்றொரு பக்கம், லாபகரமான விலையை அரசாங்கம் மட்டுமே நிர்ணயித்துவிட முடியாது. அரிசி, தானியம், காய்கறிகளோட விலைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் கூட மாறுபடலாம். அதனால, விவசாயிகள் மத்தியில் கூட்டுறவு இருக்கணும்; அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துக்கணும்; விளையும் பொருட்களை தங்களுக்குள்ள லாபகரமான விலையில் பகிர்ந்து கொள்ளணும்ங்கற நோக்கத்தோட தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கியைத் தொடங்கும் திட்டமிருக்கு. இது சம்பந்தமா கலந்து பேசிட்டு இருக்கோம்.



(புகைப்படங்கள்பிரசன்னா)

Posted on Leave a comment

டிஎன்ஏ சாட்சியங்கள் | ரஞ்சனி நாராயணன்

‘நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெண்’ என்று சொல்லிக்கொண்டு சில பெண்கள் வழக்காடு மன்றம் வரை போய்வந்த செய்தி பரபரப்பாக செய்தித்தாள்களில் வெளியாகி மக்களால் பேசப்பட்டது. கடைசியாக பெங்களூரிலிருந்து இப்படிச் சொல்லிக்கொண்டு வந்த அம்ருதா என்ற பெண் ஒருபடி மேலே போய் ‘ஜெயலலிதாவின் டிஎன்ஏவுடன் என் டிஎன்ஏவையும் வைத்துப் பரிசோதனை செய்யுங்கள். நான் அவரது பெண்தான் என்பது தெரிய வரும்’ என்று ஒரு சவால் விட்டார். நீதிமன்றமும் டிஎன்ஏ சோதனை செய்யலாம் என்று ஒரு யோசனையைக் கூறியிருக்கிறது. ஒரு செய்தித்தாள் அம்ருதாவின் குண்டுக் கன்னங்கள், தடித்த உதடு ஆகியவை ஜெயலலிதாவை நினைவு படுத்துகின்றன என்று வேறு எழுதியது!

பிரபலமானவர்களின் மறைவிற்குப் பிறகு இதுபோல நிகழ்வது புதியது அல்ல. சமீபத்தில் நான் எழுதி முடித்த ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ புத்தகத்திலும் இதுபோல ஒரு நிகழ்ச்சி வருகிறது. ஜோனின் மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் கறுத்த கூந்தலை உடைய பெண் ஒருத்தி ஃப்ரான்ஸ் நாட்டின் வடமேற்கு எல்லைக்கு வெளியே தொம்ரேமியிலிருந்து 50 மைல் தொலைவிலிருந்த மெட்ஸ் (Metz) நகரில் தோன்றினாள். அவள் ஜோன் போலவே இருந்தாள். அல்லது ஜோன் தன்னைச் சுற்றி மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து எப்படியே தப்பித்துவிட்டாள் என்று நம்ப ஆசைப்பட்ட மக்களுக்கு இவள் ஜோன் போலவே காட்சி அளித்தாள் என்றும் சொல்லலாம். ஜோனின் இரண்டு சகோதரர்கள் உட்பட பலரும் அவளை அடையாளம் தெரிந்துகொண்டதாகக் கூறினர். அவள் ஜோன் போலவே ஆண்களின் உடையை அணிந்திருந்தாள். மிக லாகவமாக, திறம்படக் குதிரை சவாரி செய்தாள். அவள் பிரபலமான அந்தக் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு மெட்ஸ் நகரின் சிறந்த வீரரான ராபர்ட் (Robert des Armoises) கணவராகக் கிடைத்தார். அவர் அந்த ஊரின் மிகப் பெரிய செல்வந்தரும் கூட. இந்த ஜோனின் நகல் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயும் ஆனாள். 1439ம் வருடம் அவள் ஆர்லியன் நகரின் மேற்குப் பகுதிக்குச் சென்றபோது, அவள் அந்த நகருக்குச் செய்த நன்மைக்காக அவளுக்கு தங்கப் பணப்பைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் 1440ம் வருடம் திரும்பவும் அவள் பாரிஸ் நகருக்கு வந்தபோது, அவள் ஜோன் இல்லை, ஏமாற்றுக்காரி என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாள். இந்த மோசடியால் எந்தவிதப் பயனும் இல்லை என்று அறிந்து அந்தப் பெண் மெல்ல மறைந்து போனாள்.

நிற்க. சிலநாட்களுக்கு முன் டிஎன்ஏ குற்றவிசாரணையில் பயன்படுத்தப்படும் விதம் குறித்து நான் படித்த கட்டுரையிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

டிஎன்ஏ என்பது ஒரு குறியீடு. பிற்காலத்தில் நாம் எந்த மாதிரி உருவாகுவோம், வளர்வோம், செயல்படுவோம் என்பதைச் சொல்லும் குறியீடு. மனிதர்களின் டிஎன்ஏக்கள் 99.9% ஒரே மாதிரி இருக்கும். மீதி இருக்கும் 0.1% டிஎன்ஏக்கள்தான் நம்மை பிறரிடமிருந்து ‘வேறுபட்டவன்’ என்று தனித்தனி மனிதர்களாகக் காட்டுகின்றன. சிம்பன்சி குரங்குகளிலிருந்து நாம் ஒரே ஒரு சதவிகிதம் டிஎன்ஏவால் வேறுபடுகிறோம் என்பது மிக முக்கியமான விஷயம். ஒரு சின்னஞ்சிறு வித்தியாசம் கூட எத்தனை மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது இதிலிருந்து புரிகிறது, இல்லையா? பொதுவாக நெருங்கிய உறவுகளின் நடுவே டிஎன்ஏக்கள் ஒன்றேபோல இருக்கும்.

நமக்கென்று தனித்துவமாக இருக்கும் டிஎன்ஏவின் சிறிய பகுதியைக் கொண்டு நம்முடைய டிஎன்ஏவின் சுயவிவரத்தை (DNA Profile) உருவாக்க முடியும். பொதுவாக இந்த சுயவிவரம் ஒரு வரைபடமாகக் (graph) காட்டப்படும். இதில் பல்வேறு உச்சங்களைக் (peak) காணலாம். நமது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நமது டிஎன்ஏ தனித்துவமாக செயல்படும் விதங்களை இந்த உச்சங்கள் காட்டுகின்றன.

An example of an STR analysis used to differentiate between DNA samples (via Wikimedia Commons)

டிஎன்ஏ சாட்சியங்கள் தற்காலத்தில் குற்ற விசாரணையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குற்ற விசாரணையில் இந்த டிஎன்ஏ சாட்சிகள் வழக்கையே மாற்றும் தன்மை படைத்தவை. ஆனால் இவை பெரிய புதிரின் ஒரே ஒரு பகுதிதான். இதை வைத்துக்கொண்டு ‘இவன்தான் செய்தான்’ என்று தெளிவாகச் சொல்வது அரிது. ஒரு குற்றத்தைப் பற்றி டிஎன்ஏ சொல்லும் தகவல்கள் ஒரு எல்லைக்குள்தான் இருக்கும் என்று கைரேகை நிபுணர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் சொல்லுகிறது. கூடவே நீதிமன்றத்தில் இந்த சாட்சி எதை நிரூபிக்கும், எதை நிரூபிக்காது என்பதும் அதனுடைய நம்பகத்தன்மையும் இன்னும் தெளிவுபடுத்தப் படவேண்டிய நிலையில் உள்ளன.

லிநெட் வொயிட் 1988ல் கொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளி என்று சிறையிலடைக்கப்பட்ட மூவரும் தவறாக தண்டனைக்கு ஆளானவர்கள் என்று தெரிய வந்தது. உண்மைக் குற்றவாளி யார், அவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரிகள் 2002ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய உத்தியின்படி பரிசோதிக்கப்பட்டன. கொலை செய்திருக்கக்கூடிய வயது அல்லாத ஓர் இளைஞனின் டிஎன்ஏவுடன் அந்த மாதிரிகள் ஒத்துப்போயின. அதனால் அவனது குடும்ப நபர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அந்த இளைஞனின் மாமா அந்தக் கொலையை தான் செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு 2003ல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

இந்த டிஎன்ஏ சுயவிவரம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை அடைய உதவியிருக்கிறது. ‘க்ரீன் ரிவர் கில்லர்’ என்ற ஒரு குற்றவாளியை இதன் மூலம் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தக் கொலையாளி சுமார் ஐம்பது பெண்களை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு வாஷிங்டன் ஸ்டேட்டில் இருக்கும் க்ரீன் நதியின் பல்வேறு இடங்களில் இந்த உடல்களைப் புதைத்து வைத்திருந்தான். இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தக் கொலைக் குற்றவாளியை டிஎன்ஏ மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.

இருப்பினும் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு தனிப்பட்ட மனிதனை இவனே குற்றவாளி என்று முடிவாகச் சந்தேகமில்லாமல் சொல்லுவதில்லை. வேறு வேறு விதமான 16 உடலியல் கூறுகள் அல்லது பண்புகள் இருந்தால் ஒரு டிஎன்ஏ மாதிரியிலிருந்து ஒரு தனி நபரின் கைரேகைகளை வரைய முடியும். ஆனால் இவை சில காரணங்களால் அதாவது ஈரம், கடுமையான உஷ்ணம் போன்றவற்றால் பழுதுபட்டிருந்தால் சில பண்புகள் மட்டுமே கிடைக்கும். அப்போது முழுமையான சுயவிவரம் (full profile) தயாரிக்க முடியாது. ஒரு பகுதிச் சுயவிவரம் (partial profile) அல்லது முழுமை அடையாத சுயவிவரத்தை தடயவியலாளர்கள் உருவாக்குவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு டிஎன்ஏ சுயவிவரம் முழுமையானதாக இருந்தால் ஒரு மனிதனின் முழு உருவத்தையும் விவரிக்கும் என்று வைத்துக்கொண்டால் இந்த முழுமை அடையாத சுயவிவரம் அந்த மனிதனின் ஒரே ஒரு விவரத்தை மட்டுமே உதாரணமாக அவரது கூந்தலின் வண்ணத்தை மட்டுமே காட்டக்கூடும்.

டிஎன்ஏவின் முழுமையான சுயவிவரம் குற்றவாளியைத் தவிர இன்னொரு மனிதனின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகக்கூடும். முழுமையடையாத சுயவிவரம் இன்னும் அதிகமான மனிதர்களின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகக்கூடும். பல மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தற்செயலாக இணைக்கப்பட்டு விடும்போது தவறுதலாக ஒரே ஒரு டிஎன்ஏ சுயவிவரம் மட்டுமே உருவாக்கப்பட்டு விஷயம் சிக்கலாகிவிடும் அபாயம் இருக்கிறது.

அந்தச் சமயத்தில் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு குறிப்பிட்ட தனி நபரிடமிருந்து மட்டுமே வந்திருக்கும் என்று அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒப்பீட்டு சாத்தியக்கூறுகள் – அதாவது குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏவையும், அனுமானத்தில் இருக்கும் ஒருவரின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கிடைக்கும் தகவல்கள் – பல சமயங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடும். இன்னும் கடுமையான அணுகுமுறை என்றால் நேரடியாக இரண்டு டிஎன்ஏக்களை ஒப்பிடுவதுதான். அதாவது சந்தேகத்திற்குரிய நபரின் டிஎன்ஏ மற்றும் இன்னொருவருடைய டிஎன்ஏ இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து விகிதாசாரத்தைக் கணக்கிடுவது. இந்த விகிதாசாரம் கூட டிஎன்ஏ ஆராய்ச்சிக்கு விஞ்ஞான ரீதியான ஆதரவைக் கொடுக்குமே தவிர ஆம் இல்லை என்ற பதிலைக் கொடுக்காது.

அமெரிக்கன் பார் அசோசியேஷன் (AmericanBarAssociation) டிஎன்ஏ தொழில்நுட்பத்தை ஆதரித்தபோதிலும் புள்ளிவிவரங்களை ஆராயும்போது போதுமான எச்சரிக்கை தேவை என்ற கருத்தை முன்வைக்கிறது. மேலும் வழக்கறிஞர்களும் டிஎன்ஏ சாட்சியங்களை அதிக அளவில் நம்பவேண்டாம் என்றும் நீதிமன்றங்கள் டிஎன்ஏவை ஆராயும் பரிசோதனைக் கூடங்களின் தரங்களையும் (Quality) கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகிறது. ‘சந்தேகத்திற்குரிய நபரைத் தவிர இன்னொருவருக்கும் ஒரே மாதிரியான டிஎன்ஏ முடிவுகள் இருக்கக்கூடும் என்று தீர்ப்புக் குழுவினருக்குச் சொல்வது ஏற்புடையது அல்ல’ என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஒரு குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றிய விவரங்கள், நீதிமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். எது கதை எது நிஜம் என்பது நமக்குப் புரியும். அந்த வித்தியாசம் பத்திரிகைகளில் வரும் பரபரப்புச் செய்தியினால் மங்கிப் போகக்கூடும். இதன் காரணமாக பெரும்பான்மை மக்களுக்கு விஞ்ஞான சாட்சியங்கள் என்பது பற்றிய உண்மையல்லாத சில புரிதல் இருக்கின்றன. அதுவும் டிஎன்ஏ பற்றிய தவறான புரிதல்கள் நீதியை தவறான திசைக்குத் திருப்பக்கூடும்.

சில சமயங்களில் டிஎன்ஏ சாட்சியம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்: ஒரு கொள்ளைக் குற்றம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட டிஎன்ஏவின் பகுதி சுயவிவரம் ஒரு பார்கின்சன் நோயாளியின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போனது. பாவம், அந்த நோயாளியால் நான்கு அடி கூட பிறர் உதவியின்றி நடக்க முடியாத நிலை! பார்கின்சன் நோயாளியின் வழக்கறிஞர் மேலும் பல பரிசோதனைகளைச் செய்யச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். அவற்றின் அடிப்படையில் பார்கின்சன் நோயாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இது மட்டுமல்ல; இன்னொரு சங்கடமான உண்மையும் இருக்கிறது இதில். ஒரு குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்படும் டிஎன்ஏ மாதிரி நம்முடைய டிஎன்ஏ மாதிரியுடன் – நாம் அங்கு இருந்திருக்கவே முடியாது என்றாலும் – ஒத்துப் போகலாம். குற்றம் நடப்பதற்கு முன்பாகவே யாராவது ஒருவர் அங்கு வந்திருக்கக் கூடும். பிறகு குற்றம் நடந்திருந்தால், அவரது டிஎன்ஏவும் அங்கிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த டிஎன்ஏ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. ஒருபக்கம், முன் எப்போதையும் விட இப்போது டிஎன்ஏ சாட்சியங்களை வைத்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகமாகிக்கொண்டே போகிறது. இன்னொரு பக்கம், குற்றம் நடந்த இடத்தில் கலப்படம் ஆன டிஎன்ஏ கிடைப்பது. இரண்டு நபர்கள் கை குலுக்கும்போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறும் டிஎன்ஏக்கள் (TouchDNA) விசாரணையில் குழப்பங்களை வரவழைக்கின்றன. டிஎன்ஏ சாட்சியங்களை எப்படி ஆராய்வது என்று சட்டம் மற்றும் நீதித்துறை நிபுணர்கள் பயிற்சி பெற்றாலொழிய தவறான முடிவுகளும் தவறான நீதிகளும் வருவதைத் தடுக்க முடியாது.

இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் வைக்கவேண்டும். மனிதர்கள் தங்கள் டிஎன்ஏக்களை வேறு வேறு விகிதங்களில் இழக்கிறார்கள். பொதுவாக டிஎன்ஏக்கள் நமது உடலில் உள்ள திரவங்களில் அதாவது இரத்தம், விந்து மற்றும் எச்சில் இவற்றில் இருக்கும். இவை தவிர நாம் மிக நுண்ணிய அளவில் நமது கூந்தல், தோல் ஆகியவற்றையும் இழக்கிறோம். சிலர் தோல் வியாதி காரணமாக அதிக அளவில் டிஎன்ஏக்களை இழப்பார்கள். ஒரு திருடன் ஒளிவதற்கு என்று வழக்கமான ஓரிடத்தைத் தேர்ந்தெடுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு ஒருவர் அடிக்கடி செல்கிறார். அவருக்கு தோல் வியாதி இருக்கிறது. திருடனைப் பற்றிய புகாரை காவல்துறைக்கு அவர் சொல்லுகிறார் என்றால் தடயவியல் முதலில் இவரைத்தான் அடையாளம் காட்டும். அந்த இடத்தில் இருக்கும் அவரது டிஎன்ஏவின் அளவு அவர் அந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார் என்பதைக் காட்டும். தோல்வியாதி காரணமாக அவரது டிஎன்ஏக்கள் அங்கு அதிக அளவில் கிடைக்கும்.

இந்த மாதிரி ஆராய்ச்சியினால் தெரிய வருவது இதுதான்: குற்றப் புலன் விசாரணையில் டிஎன்ஏ சாட்சியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவி. ஆனால் அதை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அதை மட்டுமே அதிகமாக நீதிமன்றங்களில் பயன்படுத்தாமல், மற்ற சாட்சியங்களுடன் கூட பயன்படுத்த வேண்டும். உதாரணமாக உடைத்துத் திறக்கப்பட்ட ஒரு வீட்டில் சமையல் அறையில் கிடைக்கும் டிஎன்ஏக்கள் அந்த வீட்டின் சொந்தக்காரர், வந்திருந்த விருந்தாளிகள் இவர்களுடையதாக இருக்கலாம். அல்லது குற்றம் நடந்த இடத்தை ஆராய வந்த குழுவினரில் ஒருவரின் டிஎன்ஏவாகவும் இருக்கக்கூடும். கலப்படம் இல்லாமல் டிஎன்ஏக்களை சேகரிக்கவில்லையென்றால் இதுவும் சாத்தியம்.

நன்றி: படம், கட்டுரை https://daily.jstor.org/forensic-dna-evidence-can-lead-wrongful-convictions/

Posted on Leave a comment

காவியக் கண்ணப்பர் | ஜடாயு

கண்ணப்ப நாயனாருடைய பரவசமூட்டும் கதையை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் அனேகமாக யாருமே இருக்க மாட்டார்கள். அவர் வாழ்ந்து சிவனருள் பெற்ற காளத்தி மலை எனப்படும் காளஹஸ்தி ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் இடத்தில் உள்ளதால் கண்ணப்பரை இந்த மூன்று பிரதேசங்களிலும் மிகவும் பக்தியுடன் போற்றி வணங்குகிறார்கள். அவரது திருக்கதையைக் கூறும் முழுநீளத் திரைப்படமான ‘பேடர கண்ணப்பா’ கன்னடத்தில்தான் முதலில் வெளிவந்தது. 1954ல் ஜி.வி. ஐயர் இயக்கத்தில் ராஜ்குமார் நடித்து தேசிய விருது பெற்ற இந்தப் பிரபலமான திரைப்படம் பின்பு 1955ல் ‘வேடன் கண்ணப்பன்’ என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. கன்னட சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இந்தப் படம் கருதப் படுகிறது.

தாராசுரம் கோயில் சிற்பம்

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராக தமிழ்நாட்டின் சிவாலயங்கள் எங்கும் கண்ணப்பர் வணங்கப்படுகிறார். ஆனால், பெரும்பாலான நாயன்மார்களும் வாழ்ந்த பக்தி இலக்கிய காலகட்டத்திற்கும் முன்பு பழங்காலத்திலிருந்தே சிவபக்தி மரபில் ஒரு பெரும் தொன்மமாக அவரது கதை வந்துகொண்டிருக்கிறது. திருமுறைகளில் பல இடங்களில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி…”

(திருவாசகம்)

“வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம்
காய் கணையினால் இடந்து ஈசனடி கூடு காளத்தி மலையே”

(திருஞான சம்பந்தர் தேவாரம்)

காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள், செய்ய குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும், பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே.

(திருநாவுக்கரசர் தேவாரம்)

வழிநடந்து தேய்ந்த செருப்பு
பசுபதி சிரத்தில் கூர்ச்சமாயிற்றே**
வாயினால் கொப்புளித்த நீர்   
திரிபுராந்தகரின் திவ்ய அபிஷேகமாயிற்றே
கொஞ்சம் கடித்த மாமிசத்துண்டின் மிச்சம்
புதிய நைவேத்தியமாயிற்றே
அஹோ! பக்தி எதைத்தான் செய்யாது
வனவேடன் பக்தர்களின் மணிமுடியானானே.

(ஆதிசங்கரரின் சிவானந்தலஹரி, 65)

(** அபிஷேகத்திற்கு முன் தெய்வத் திருமேனிகளின் மீது வைக்கப்படும் தர்ப்பைப்புல் கூர்ச்சம் எனப்படும்.)

பின்பு நாயன்மார்களின் சரிதங்களை முழுமையாகத் தொகுத்து பொ.யு பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெரியபுராணமாக இயற்றுகிறார். இந்த நூலினுள் உள்ள கண்ணப்ப நாயனார் புராணத்தில் (181 பாடல்கள்), அதுகாறும் சிறு குறிப்புகளின் வழியாக அறியப்பட்டிருந்த இந்த சரிதத்திற்கு ஒரு முழுமையான காவியத்தன்மையை அளித்துவிடுகிறார். செறிவான நுண்தகவல்களாலும் தனது அற்புதமான கவித்துவத்தாலும் இக்கதைக்கு மகத்தான அளவில் சேக்கிழார் மெருகூட்டியிருக்கிறார். எங்களது பெங்களூர் இலக்கிய வாசிப்புக் குழுவின் வாராந்திர அமர்வுகளில் இந்தப் பகுதியை சில வாரங்கள் முன்பு வாசித்தபோது இதனை முழுவதுமாக உணர்ந்தோம். இக்கட்டுரையில் சற்றே விரிவாக அதைக் காண்போம்.

வன வேடர் வாழ்க்கை: 

சோழ மன்னனது அவையில் அமைச்சர் பதவியேற்று அரச அதிகாரத்துடன் வாழ்ந்த சேக்கிழார், வனவேடர்களின் ஊரையும் வாழ்க்கையையும் அதற்கே உரிய பொலிவுகளும் கொண்டாட்டங்களும் துலங்குமாறு வர்ணித்திருக்கிறார். எந்தவிதமான அருவருப்பையும் கூச்சத்தையும் வெளிப்படுத்தவில்லை.

காளத்தி மலை அமைந்துள்ள பகுதியான பொத்தப்பி நாடு என்ற மலைப் பிரதேசத்திற்கு இன்றும் அதே பெயர் புழக்கத்தில் உள்ளது. கண்ணப்பர் நாடு என்றே அதனை அறிமுகம் செய்கிறார் கவி. அப்பகுதியில் உள்ள உடுக்கூரு (Vutukuru) என்னும் கிராமம்தான் பெரியபுராணத்தில் வரும் உடுப்பூர் என்றும் ஒரு கருத்து உள்ளது.

மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்காளத்திக் கண்ணப்பர் திருநாடென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.

யானைத் தந்தங்களை வேலிபோல நட்டுவைத்து அதுவே மதிளாக அமைந்தது உடுப்பூர். அங்கு கொடிய நீண்ட காதுகள் வளைந்து தொங்கும் வேட்டை நாய்களை வார்க்கயிற்றினால் மரங்களில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த விளா மரங்களின் கொம்புகளில் வார்க்கயிற்றால் செய்த வலைகள் தொங்கும். மலைநெல் முற்றத்தில் காய்ந்து கொண்டிருக்கும். அத்துடன், பன்றி, புலி, கரடி, காட்டுப்பசு, மான் முதலிய பார்வை மிருகங்கள் கட்டப்பட்டிருக்கும் (“பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும்”). வேடர்கள் காட்டு விலங்குகளின் குட்டிகளைப் பிடித்து வந்து, அவைகளை வீட்டு விலங்குகளாக்கி வளர்ப்பர். இவற்றைப் பார்வை மிருகம் என்பர். வேட்டையாடும்போது இவற்றைப் பார்வையாகக் காட்டி, அந்தந்த இனத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகளைப் பிடிப்பர்.

“வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும்
‘கொல்’ ‘எறி’ ‘குத்து’ என்று ஆர்த்துக் குழுமிய ஓசை”

எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும். கூடவே, உடுக்கும் ஊதுகொம்பும் பறையும் கூடிக் கலீரென ஒலித்திடும் ஓசைகளுக்கு மேலாக சுற்றியுள்ள மலைகளில் இரைந்தோடும் அருவி ஒலிகளும் ஆங்காங்குக் கேட்கும். இத்தகைய ஊரில் வாழும் வேடர்கள் மலைத் தேனும் ஊன் கலந்த சோறும் உணவாக உண்பவர்கள். நஞ்சு ஊட்டிய கூரிய கொடிய நெருப்புப் போலும் அம்பினைக் கைக் கொண்டவர்கள். அச்சம், அருள் என்ற இரண்டையுமே அறியாதவர்கள்.

மைச் செறிந்தனைய மேனி வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன்தோலார்.

திண்ணன் பிறப்பும் இளமைப் பருவமும்:

இந்த நாட்டின் அதிபதி நாகன். அவன் மனைவி தத்தை. அவர்களுக்கு நீண்டநாள் குழந்தைப் பேறில்லை. தங்கள் குலதெய்வமான முருகன் கோயில் சென்று சேவல்களையும், மயில்களையும் காணிக்கையாக விடுத்து (பலிகொடுத்து அல்ல), குரவைக் கூத்தாடி வழிபாடு செய்கிறார்கள்.

வாரணச் சேவலோடும்வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப்புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை.

(சுரும்பணி – வண்டுகள் மொய்க்கும், பேரணங்காடல்)

முருகன் அருளால் பிறந்த குழந்தையைத் தந்தை கையில் தூக்கிவைத்துக்கொள்ள முடியாத அளவுக்குத் திண் என்று இருந்ததால் திண்ணன் என்று பெயர் சூட்டுகிறார்கள்.

அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்

(அருமையால் – கடினமாக இருப்பதால், திண்சிலை – வலிய வில்.)

குழந்தை நடக்க ஆரம்பித்தவுடன் அதற்குப் பல்வேறு நகைகளை அணிவிக்கிறார்கள். தலையில் வெள்ளிப் பூண் திகழும் புலிநகச் சுட்டி. நெஞ்சில் முள்ளம் பன்றியின் முள்களை அரிந்து இடையிடையே கோத்த நீண்ட புலிப்பல் மாலை. காலில் யானைக் கொம்பினால் செய்த தண்டை. இந்தக் கோலத்துடன் திண்ணன் வீதியிலே விளையாடுகிறான். இப்படி வளர்ந்து வரும் நாளில் திண்ணனாரின் குழந்தை விளையாட்டுக்களை பக்திரசம் பொங்க சேக்கிழார் வர்ணிக்கிறார்.
ஒருமுறை பார்வை மிருகமாக அங்கிருந்த புலியின் வாயைக் குகை என்று நினைத்து திண்ணன் அதற்குள் கையை நீட்டி விடுகிறான். அன்புடைத் தந்தையான நாகன் அதுகண்டு பயந்துபோய், அப்படிச் செய்யாதே என்று ஒரு சிறு குச்சியைக் கையில் எடுத்து வீசுகிறான். குழந்தை அழுது கண்களில் நீர் சொரிகிறது. அதுகண்டு ஓடிவந்த தாய் எடுத்தணைத்து அந்தக் கண்ணீர் முத்துக்களை, தன்வாயால் முத்தம் கொடுத்து மாற்றுகிறாள். இக்காட்சியை சூரியன், சந்திரன் என்ற இருசுடர்களையும் கண்களாகக் கொண்ட சிவபெருமானின் கண்களில், பின்னர் நேர இருக்கும் தீங்கினைத் தீர்க்கப் போகின்ற அந்த அழகிய கண்களில், நீர் சொரிந்தது என்று சமத்காரமாகக் கூறுகிறார் கவி.

இப்படியே வளர்ந்து அவர் வில்வித்தை பயிலும் பருவத்தை அடைந்ததும், அதனை ஒரு பெரிய விழாவாக அந்த ஊரே கொண்டாடுகிறது. தலைவனின் மகன் வில்பிடிக்கப் போகிறான் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சியுடன் பொன்னும் மணியும் யானைக் கொம்பும் மயிற்பீலியும் புலித்தோலும் கள்ளும் இறைச்சியும் தேனும் கிழங்கும் கனியும் திரள்திரளாக எடுத்துக்கொண்டு வேடர்கள் வருகிறார்கள்.

மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல்நறவும் ஊனும் பழங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார்.

(தரளமும் – முத்தும், வரியின் – புலியின், கோடும் – தந்தமும், நறவும் – தேனும், துன்ற – அடர்ந்திருக்க.)

அந்த விழாவில் பல்வேறு சடங்குகளும் முறையாகச் செய்து வில்வித்தையை சிறப்பாகப் பயின்று தேர்ந்த வில்லாளியாகவும் வேட்டைத் தொழிலில் வல்லவராகவும் ஆகிவிடுகிறார் திண்ணனார்.


கன்னி வேட்டை 

அந்நிலையில், அங்குள்ள மலைப்புறங்களிலும், பயிர் விளையும் காடுகளிலும் எங்கும் கொடிய பன்றி, புலி, கரடி, காட்டுப்பசு, காட்டெருமை எனப் பல விலங்குகள் மிகவும் நெருங்கிப் பெருமளவில் வந்து அழிவு செய்தன. அதுகண்டு, மாதம்தோறும் செய்திடும் முறையான வேட்டை தாமதமானதால் இந்நிலை நேர்ந்தது என்று வேடர்கள் அனைவரும் திரண்டு, குலத்தலைவனான நாகனிடம் வந்து முறையிட்டார்கள். மூப்படைந்துவிட்டதால் முன்புபோல வேட்டையாடும் திறன் இல்லை, எனவே திண்ணனையே தலைவனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நாகன் கூறினான். தேவராட்டி என்ற முதிய பெண்ணை அழைத்து, வேட்டை சிறக்க கானுறை தெய்வங்களுக்கு பலி ஊட்டுமாறு நாகன் வேண்ட, அவளும் வந்து அதனைச் செய்து முடித்தாள்.

“கோட்டமில் என் குலமைந்தன் திண்ணன், எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு, பூண்டு,
பூட்டுறு வெஞ்சிலை வேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான்; அவனுக் கென்றும்
வேட்டைவினை எனக்கு மேலாக வாய்த்து
வேறுபுலம் கவர் வென்றி மேவு மாறு,
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்
காடுபலி ஊட்டு” என்றான் கவலையில்லான்.

(கோட்டம் – குற்றம், வெஞ்சிலை – கொடிய வில், வென்றி – வெற்றி, வேறு புலம் – மற்ற பிரதேசங்கள்.)

வேடர்களெல்லாரும் மிக மகிழ்ந்து திண்ணனாரின் கன்னி வேட்டைக்கான (முதல் வேட்டை) ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்கள்.

திண்ணனாரின் வேட்டைக் கோலத்தைப் பாதாதி கேசமாக சேக்கிழார் விரிவாக வர்ணிக்கிறார். மயில் இறகின் அடியில், குன்றி மணிகளை இடை இடையே வைத்து மயிர்க்கற்றையை நெற்றியில் பொலிவுபெறச் சாத்தினார்கள். பலவகை மணிகளைக் கோர்த்து இடையிடையே பன்றிக் கொம்புகளை இளம்பிறைத் துண்டங்கள் எனத் தொங்கவைத்து, அவற்றை வேங்கைப் புலியின் தோல் மேலாகப் பதித்து, தட்டை வடிவினதாக அமையப் பெற்ற சன்னவீரம் எனும் அணிகலனை மார்பிலே அணிவித்தார்கள். தோள்களில் வாகுவலயங்கள் மின்ன, பலவித காப்புக்கள் அணியப் பெற்று விளங்கிடும் முன் கையில், மழைமேகம்போல் அம்பு சொரியும் வில்லின் நாணினைப் பற்றிடும் கோதையைக் கட்டினார்கள். இடையில் புலித்தோல் ஆடையை உடுத்தி, முத்துக்கள் விளிம்பில் பதித்த நீண்ட உடைத் தோலினையும், சிவந்த நிறம்கொண்ட உறையுள் செருகப் பெற்ற சுழல் வாளையும் பொருத்தினார்கள்.

வீரக்கழல் காலின் விளங்க அணிந்து, பாதம்
சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப் பெருவில் வலங்கொண்டு, பணிந்து, திண்ணன்
சாரத் திருத்தாள் மடித்து, ஏற்றி, வியந்து தாங்கி…

வீரக்கழல்களைக் காலில் பூட்டி, பாதம் பொருந்துமாறு தோல் செருப்பை அணிந்து, பளுவான பெரிய வில்லை வலம் வந்து வணங்கி எடுத்து, இரு காலும் நிலத்தில் மடித்து நின்று ஊன்றி நின்றார். நாணை ஏற்றி வில்லை வளைக்கும்தோறும் அதன் லாகவத்தை வியந்து நோக்கிக் கையில் எடுத்துக்கொண்டார்.

அவ்வாறு, ஆண் சிங்கம்போல எழுந்த திண்ணனார் முன்பு வேடர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்தது.

ஆளியேறு போல ஏகும் அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே.

இறுக்கிக் கட்டிய வார்க் கயிறுகளை அந்த வேடர்கள் தங்கள் முரட்டுக் கைகளில் ஏந்தி வந்தார்கள். கூடவே வேட்டை நாய்கள் இருபக்கங்களும் ஒன்றொடு ஒன்று பொருந்தாமல் ஓடி வந்துகொண்டிருந்தன. வெற்றித் தெய்வமான கொற்றவையின் திருவடி முன் போய் நீள்வதுபோல, அவை தங்கள் சிவந்த நாக்குகளைத் தொங்கவிட்டிருந்தன.

தனது பாசவலையை அறுப்பதற்காக அந்தக் காட்டுக்குள்ளே ஓடுகின்ற திண்ணனாருக்கு முன், காட்டை வளைப்பதற்காக வார்வலைகளைச் சுமந்து செல்லும் வேடர் கூட்டம் ஓடியது.

போர்வலைச் சிலைத்தொழில் புறத்திலே விளைப்ப, அச்
சார்வலைத் தொடக்கறுக்க ஏகும் ஐயர் தம் முனே
கார்வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார்வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்.

(சார்வலைத் தொடக்கறுக்க – தம் உள்ளத்துள் சார்கின்ற பாசவலைகளின் பந்தத்தை அறுக்க, ஐயர் – தலைவராகிய திண்ணனார், முனே – முன்னே, கார்வலைப் படுத்த குன்று – மேகங்கள் சூழ்ந்த மலை, கானமா – காட்டு மிருகங்கள், வார்வலைத் திறம் – வலைகளின் பொதி, வெற்பர் – மலைவாழ்பவர்.)

வேட்டை முறைமைப்படி, முதலில் மிருகங்கள் அதிகமாக உள்ள ஒரு சூழலைத் தேர்ந்தெடுத்து, அதற்கு வெளியே அவை ஓடிவிட முடியாதபடி வலையால் சுற்றி வளைத்து ஒரு சிறிய வேட்டைக் காட்டை உருவாக்குவார்கள். பின்பு அதற்குள்தான் வேட்டையாடுவார்கள். இந்தக் குறிப்பையே மேற்கூறிய பாடலில் கூறுகிறார்.
கொம்புகள் ஒலிக்கவும், பறைகளும் பம்பையும் முழங்கவும், அனைவரும் கூடி கைகளைத் தட்டுதலால் பேரோசை எழவும், வேட்டுவக் கூட்டம், அவ்வேட்டைக் காட்டினைப் பலபக்கமும் வளைத்துச் சென்றது. இந்த ஓசைகளால் காட்டிலுள்ள மிருகங்கள் கலங்கி எழுந்தன. காட்டுப் பன்றிகள், மானினங்கள், கரடிகள், காட்டெருமைகள், யானைகள், கொடிய புலியின் வகைகள் எனப் பெருமிருகங்கள் பலவாக வெருண்டு எழுந்து பாய, வேடர்கள், அவற்றின்மேல் நெருங்கிச் சீறி அம்பினால் எய்து கொன்றார்கள்.

வெங்கணைபடு பிடர்கிழிபட விசையுருவிய கயவாய்
செங்கனல்பட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கெழு சிரம் உருவிய பொழுது அடல் எயிறுற அதனைப்
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்.

(கயவாய் – மான், கருமா – பன்றி, எயிறுற – பல்லில் சேர, புரைவன – போல்வன.)

கொடிய அம்பு பட்டதால் பிடரி கிழியும்படி விசையுடன் உருவப்பட்ட மான், அந்த அம்பு முன் போதலால் வாயினில் குருதி பெருகிச் சிவந்த நெருப்பைப்போலக் காட்சி தந்தது. அதன்பின் இன்னும் அம்புகள் விசையுடன் சென்று முன்னே வந்த பெரும் பன்றியின் தலையில் உருவின. அப்பன்றி அதே வீச்சில் சென்று முன்னாக வந்த புலியின் வாய்க்குள் அம்புடன் சேரத் தைத்தது. அக்காட்சி புலி, பன்றியைக் கௌவிக் கொண்டோடியதுபோல இருந்தது.

இத்தகைய பயங்கரமான வேட்டைத் தொழிலிலும் சில நியதிகளையும் வரம்புகளையும் அவர்கள் கடைப்பிடித்தனர். உடுக்கைபோலக் காலும் மடிந்த செவியும் உடைய யானைக் குட்டிகளை அவர்கள் தீண்டமாட்டார்கள். துள்ளி ஓடுகின்ற சிறு மிருகக் குட்டிகள் மீதும் அம்பு எய்ய மாட்டார்கள். கருவுற்றிருப்பதால் கால் தளர்ந்து ஓட முடியாது தளர்ந்து போய்விட்ட விலங்குகளையும், தங்களது பிணையை அணைத்துக்கொண்டு கூடியிருக்கும் மிருகங்களையும் அவர்கள் துயரம் செய்ய மாட்டார்கள்.

துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள் மிகைபடு கொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன அணைவுறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறுகொலைபுரி சிலை மறவோர்.

இப்படி வேட்டை நடந்து கொண்டிருக்கையில், யானைகளும் அச்சமுற, காடெங்கும் புழுதி பரவுமாறு ஒரு பன்றி எழுந்தது. மேகங்கள் இடி இடித்துக்கொண்டு போவதுபோலக் கர்ஜித்து, கண்களில் தீப்பொறி பறக்க வேடர்கள் கட்டிய வலைகள் எல்லாம் அறும்படியாக விசையோடு ஓடியது. அதனைத் துரத்திக் கொல்லும் உறுதியுடன் கூட்டத்தைப் பிரிந்து அந்தப் பன்றியின் பின்னே திண்ணனார் ஓடினார். நாணன், காடன் என்ற இரு வீரர்கள் மட்டும் தங்கள் தலைவரைப் பிரியாது தொடர்ந்து ஓடினர். ஓடிக்களைத்த பன்றி ஒரு மர நிழலில் மூச்சு வாங்கி நிற்க, அம்பெய்யாது வேகமுடன் ஓடி அப்பன்றியின் உடலைத் தனது சுழல்வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கினார் திண்ணனார். அச்சோ இவனல்லவோ ஆண்மகன் என்று காடனிடம் சொல்லி உளம் பூரித்தான் நாணன்.

வேடர்தம் கரிய செங்கண் வில்லியார் விசையிற் குத்த
மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு, நாணன்
“காடனே இதன்பின் இன்று காதங்கள் பலவந்து எய்த்தோம்;
ஆடவன் கொன்றான் அச்சோ” என்றவர் அடியில் தாழ்ந்தார்.

(மாடு – பக்கத்தில், துணியாய் – துண்டாய், எய்த்தோம் – களைத்தோம்.)

சிவ தரிசனம்:

“இவ்வளவு தூரம் ஓடிவந்ததால் மிகவும் பசிக்கிறது. கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுப் பிறகு இப்பன்றியை நெருப்பில் காய்ச்சி உண்டு அதன்பின் வேட்டைக் காட்டைச் சென்று சேர்வோம்” என்று நாணனும் காடனும் கூறினர். சரியென்று திண்ணனும் சொல்ல, தண்ணீருக்காக, அந்த மலைச்சாரலில் உள்ள பொன்முகலி ஆற்றை நோக்கி அவர்கள் சென்றனர். வழியிலே தோன்றும் ஒரு குன்றைப் பார்த்த திண்ணன், அங்கு போவோம் என்று சொல்ல, அது குடுமித்தேவர் உறையும் மலை, அங்கே சென்று கும்பிடலாம் என்று நாணன் கூறினான்.

“நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவேம்” என்ன, நாணன்
“காண நீ போதின், நல்ல காட்சியே காணும்; இந்தச்
சேணுயர் திருக்காளத்தி மலைமிசை எழுந்து, செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்” என்றான்.

திருக்காளத்தி மலையின் மேல் ஏற ஏற, தன் உடலில் உள்ள பாரம் எல்லாம் நீங்குவது போலவும், நெஞ்சத்தில் ஆசை பொங்கி இதுவரை இல்லாத வேறோர் விருப்பம் தோன்றுவது போலவும் உணர்வதாகத் திண்ணனார் கூறுகிறார்.

“ஆவதென்? இதனைக் கண்டு இங்(கு) அணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும்! ஆசையும் பொங்கி, மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்;
தேவர் அங்கிருப்பது எங்கே? போகு?” என்றார் திண்ணனார் தாம்.

பிறகு மலைச்சாரலில் பொன்முகலி ஆற்றின் கரையை அடைந்ததும், சுமந்து வந்த பன்றியை அங்கு கிடத்தி, தீமூட்டி சமைக்க ஏற்பாடு செய்யுமாறு காடனிடம் கூறிவிட்டு, நாணனும் திண்ணனும் முன்னே செல்கின்றனர்.

தனக்கு முன்பாக நாணனும், தனது அன்பும் விரைந்து ஏறிச்செல்ல, காளத்தி மலையின் உச்சியை நோக்கித் திண்ணனார் அடிவைத்து நடக்கிறார். இந்தக்காட்சி சிவஞானிகள் தத்துவங்களாகிய படிகளில் ஏறி, பரம்பொருளாகிய சிவத்தைச் சென்றடைவதுபோல உள்ளது.

நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி,
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர்
நீள்நிலை மலையை ஏறி, நேர்படச் செல்லும் போதில்.

(வரை – மலை, சோபானம் – படிகள்.)

சைவ சித்தாந்த மரபு பிரபஞ்சம் 96 தத்துவங்களால் ஆனது (தத்துவங்கள் என்பது உலகை இயக்கும் அக, புற சக்திகளைக் குறிக்கும்) என்றும் பரம்பொருளாகிய சிவம் இந்த அனைத்துத் தத்துவங்களுக்கும் அப்பால் உள்ளது என்றும் கூறுகிறது. அந்த சித்தாந்தக் கருத்தை இந்த இடத்தில் அற்புதமாக சேக்கிழார் பொருத்திக் காட்டுகிறார்.

இப்படிச் சென்ற திண்ணனார், குடுமித்தேவரின் திருவுருவத்தைக் காண்பதற்கு முன்னமேயே, இறைவனது கருணை கூர்ந்த பார்வை அவர்மீது பொருந்த, இப்பிறவியில் முன்னர் சார்ந்திருந்த வினைகள் அனைத்தும் நீங்கி, ஒப்பற்ற அன்புருவமாக ஆனார்.

தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்புருவம் ஆனார்.

ஓடிச் சென்று அப்பெருமானைக் கட்டித் தழுவினார். முகர்ந்து மகிழ்ந்தார். அவரது மேனியின் மயிர்க்கால்கள்தோறும் மகிழ்வு நிறைந்து பொங்கியது. மலர் போன்ற கண்களில் இருந்து அருவிபோல நீர் பொழிந்தது. “அடியேனுக்கு இவர் இங்கே அகப்பட்டாரே, அச்சோ!” என்று உவகையடைந்தார். (இக்கதைப் போக்கில் பின்னர் வரும் குறிப்புகளிலிருந்து குடுமித் தேவரின் திருவுருவம் முகலிங்கம் எனப்படும் லிங்கவடிவமாகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல சிவாலயங்களில், குறிப்பாக கர்நாடகக் கோயில்களில் மீசையுடன் கூடிய முகம் லிங்கத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்).

“ஐயனே, வேட்டுவச் சாதியார்போல, யானை, கரடி, புலி, சிங்கம் திரியும் இக்காட்டில் துணைக்கும் ஒருவரும் இல்லாமல் இப்படித் தனியே இருக்கிறீரே… கெட்டேன்!” என்று உள்ளம் பதைத்தார் திண்ணனார். பின்பு அங்கு பச்சிலையும் மலரும் இறைந்து கிடப்பதைப் பார்த்து, இந்த நற்செயலைச் செய்தது யாரோ என்று நாணனிடம் கேட்டார்.

பச்சிலை யோடு பூவும்பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ…?

‘‘முன்பு வேட்டையாட வந்தபோது ஒரு அந்தணர் இந்தப் பெருமானுக்கு நீராட்டிப் பூசை செய்ததை நான் பார்த்தேன்’’ என்று அவன் கூறினான்.

ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும்அவன் செய்தானாகும் என்றான்.

உடனே, இதுவே இவருக்கு இன்பமளிக்கும் செயல் என்று தன் மனத்துள் உறுதி செய்துகொண்ட திண்ணனாரின் மனதில் தாமும் அதேபோலப் பூசை செய்ய வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அதே நேரத்தில் தனியாக அமர்ந்திருக்கும் இறைவனை விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை. போவதும் வருவதும் இறைவனை அணைத்துக் கொள்வதும் வைத்தகண்கள் மாறாமல் மீண்டும் மீண்டும் நின்று நோக்குவதுமாக, கன்றை விட்டு அகல மனமில்லாத தாய்ப்பசுபோல இருக்கிறது அவர் நிலை.

போதுவர் மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;
காதலின் நோக்கி நிற்பர்; கன்றகல் புனிற்றாப் போல்வர்;
“நாதனே அமுது செய்ய நல்ல மெல்லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன்” என்பார்.

(புனிற்றா – புனிற்று + ஆ – புதிதாகக் கன்றை ஈன்ற தாய்ப்பசு.)
பின்பு ஒருவழியாக, ‘‘நீர் அமுதுசெய்ய நானே போய் மெல்லிய இறைச்சி கொண்டுவருவேன்’’ என்று கூறிவிட்டுக் கிளம்புகிறார்.

சிவபூஜை:

நாணனும் திண்ணனாரும் உச்சியிலிருந்து கீழிறங்கி நதிக்கரைக்கு வருகிறார்கள். “தீயும் கடைந்து மூட்டி வைத்திருக்கிறேன், பன்றியின் உறுப்புகளையெல்லாம் உங்கள் குறிப்பின்படி பிரித்து வைத்திருக்கிறேன். ஏன் இவ்வளவு காலம் தாழ்த்திவிட்டீர்கள்?” என்று கேட்கிறான் காடன்.

அதற்கு நாகன், “ஐயோ, அதை ஏன் கேட்கிறாய்? இவன் மலைமேலே தேவரைக் கண்டதும், மரப்பொந்தைப் பிடித்த உடும்புபோல அவருடன் ஒட்டிக்கொண்டான். இப்போதும் கீழே வந்தது எதற்காக தெரியுமா? அந்தத் தேவர் தின்ன இறைச்சி கொண்டுபோவதற்காக. இனிமேல் இவன் நம்குலத் தலைமையை விட்டான். தேவருக்கே ஆட்பட்டுவிட்டான்” என்கிறான்.

“அங்கு இவன், மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு,
வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்பென்ன நீங்கான்;
இங்கும் அத்தேவர் தின்ன இறைச்சி கொண்டேகப் போந்தான்
நம் குலத்தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு” என்றான்.

“திண்ணா! நீ எங்கள் குலமுதல்வன் அல்லவா? இப்படி செய்யலாமா?” எனக் கேட்கும் காடனின் முகத்தையும் பாராமல் தனது காரியத்தில் முனைந்திருக்கிறார் திண்ணனார். பன்றி இறைச்சியை நெருப்பிலிட்டு வதக்கி, அவற்றில் நன்கு வெந்த தசைகளை ஓர் அம்பில் கோத்து, நெருப்பில் இட்டுக் காய்ச்சி, சுவையைப் பரிசோதிப்பதற்காக அவற்றை வாயில் போட்டு அதுக்கிப் பதம் பார்த்து, மிகவும் சுவையுடையவற்றை தான் செய்து வைத்திருக்கும் தொன்னையில் இட்டுக் கொண்டிருக்கிறார். “இந்நேரம் இவனுக்குக் கடும்பசி இருக்கும், அதைப் பற்றிய பொருட்டே இல்லை. நமக்கும் பசி பிடுங்கித் தின்கிறது. இறைச்சியை நமக்குத் தரவேண்டும் என்றுகூட இவனுக்குத் தோன்றவில்லை” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு நாணனும் காடனும் வாய்பிளந்து நிற்கிறார்கள். இவனுக்கு ஏதோ தெய்வமயக்கம் ஏற்பட்டுவிட்டது. கீழிறங்கிப் போய் வேடுவர்களோடு தந்தை நாகனையும் தேவராட்டியையும் கூட்டிக்கொண்டு வருவோம் என்று முடிவு செய்து அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறார்கள்.

அவர்கள் போனதும் திண்ணனாருக்குத் தெரியவில்லை. கையில் தொன்னையை எடுத்துக்கொண்டு, வாயில் நதிநீரை நிரப்பிக்கொண்டு, தனது கொண்டையில் மலர்களைச் சொருகிக்கொண்டு பூசைக்கு விரைகிறார்.

கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊனமுது அமைத்துக் கொண்டு, மஞ்சனம் ஆட்ட உன்னி,
மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண்டார்.

(கல்லை – தேக்கிலையால் செய்த தொன்னை, உன்னி – எண்ணி, பள்ளித்தாமம் – மலர்மாலை, குஞ்சி – கொண்டை, துதைய – நெருங்க.)

குடுமித்தேவரை வணங்கும் கண்ணப்பர். இதில் விமானத்துடன் கூடிய கோயில் சித்தரிக்கப் பட்டுள்ளது (தஞ்சைப் பெரிய கோயில் சிற்பம்)

 ஐயோ என் நாயனார் பசித்திருப்பாரே என்று பதைபதைப்புடன் சென்று, சிவலிங்கம் மீதிருந்த மலர்களைச் செருப்புக்காலால் அகற்றிவிட்டு, தன் நெஞ்சத்தில் விளைந்த அன்பையே உமிழ்வார்போல அபிஷேகம் செய்கிறார்.

இளைத்தனர் நாயனார் என்றுஈண்டச் சென்று எய்தி, வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு, முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி, வாயில் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போல, விமலனார் முடிமேல் விட்டார்.
(வெற்பின் – மலையில், முதல் – அனைத்திற்கும் ஆதியானவர்.)

பின்பு, மலர்களைச் சாற்றுகிறார். தான் கொண்டுவந்திருந்த தொன்னையை முன்பாக வைத்துப் பின்வருமாறு வேண்டுகிறார்:

பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ்விறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்தருளும் என்றார்.

இப்படிப் பரவசப்பட்டுத் திண்ணனார் நிற்க, மாலைப்போதும் வந்தது. அவரது பேரன்பைத் தன் கதிர்க்கரங்களால் வணங்கி, மலைக்கு அப்பால் சென்று சூரியன் மறைந்தான். இரவு கவிந்தது. கொடிய விலங்குகள் வரும் என்பதை நினைத்துக் கையினில் வில் தாங்கிக் கருமலைபோல நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார் திண்ணனார்.

செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்.

(சிலை – வில், வரை – மலை, மருங்கு – பக்கத்தில்.)

நிலவின் ஒளியில்லாத அந்த அமாவாசை இருட்டிலும், தீப மரங்களின் ஒளியும், புலனடக்கிய முனிவர்களின் தவத்தின் ஒளியும், குரங்குகள் மரப்பொந்துகளில் வைத்த மணிகளின் ஒளியும் சேர்ந்து வீச, அந்த மலைச்சாரலில் இரவென்பதே இல்லை.

செந்தழல் ஒளியில் பொங்கும் தீபமா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணிவிளக்கொளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கியுள்ளார் அரும்பெருஞ் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவொன்றில்லை.

பொழுது விடியவும், பறவைகளின் ஒலி கேட்கவும், சூரியன் முழுதாக உதிக்கும் முன் வேட்டையை முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் தோன்ற, காளத்தி நாதரைக் கைதொழுது வில்லும் அம்பும் ஏந்திப் புறப்பட்டார் திண்ணனார்.

காலைப் போதானதும், அங்கு வழக்கமாக வந்து ஆகம முறைப்படி சிறப்பாகப் பூசைசெய்யும் சிவகோசரியார் வருகிறார்.

எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கேற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய முனிவர் சிவகோசரியார்.

சிவபெருமான் திருமுன்பு இறைச்சித் துண்டுகள் இறைந்து கிடப்பதைப் பார்த்துப் பதைபதைத்து, “நேர்வரத் துணிவில்லாதே வேடுவரே இவ்வாறு செய்திருக்க வேண்டும், இறைவனே இதுவும் உன் திருவுள்ளமோ?” என்று கதறியழுகிறார். அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கித் தூய்மை செய்து, மீண்டும் நீராடி வந்து வேதமந்திரங்களை ஓதி, திருமஞ்சனம் முதலான சகல உபசாரங்களுடனும் தனது பூசையைச் செய்து முடிக்கிறார். பின்பு தனது தபோவனத்திற்குத் திரும்பிச் செல்கிறார்.

காலையில் கிளம்பிய திண்ணனார், தனியொருவராக வேட்டைக் காட்டில் திரிந்து, பன்றி, மான் முதலான பல விலங்குகளையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பக்குவமாக சமைத்து எடுத்து வருகிறார். அந்தணரின் பூஜை நிர்மால்யங்களை அகற்றிவிட்டு, தம்முடைய பூசையை செய்து முடிக்கிறார்.

வந்து திருக்காளத்தி மலையேறி வனசரர்கள்
தந்தலைவனார், இமையோர் தலைவனார் தமையெய்தி,
அந்தணனார் பூசையினை முன்புபோல் அகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய பூசனையின் செயல்முடிப்பார்.

உடும்பு இறைச்சி படைக்கும் திண்ணனார் (தஞ்சைப் பெரியகோயில் சிற்பம்)

இவ்வாறாக, திண்ணனார் பூசையும், சிவகோசரியார் பூசையும் மாறிமாறித் தொடர்ந்து நடந்து வந்தன. செய்தி கேள்விப்பட்டு திண்ணனாரின் தந்தையாகிய நாகனும் வேடர்களும் மலைமேல் ஏறிவந்து என்னென்னவோ செய்து பார்த்தனர். திண்ணனார் காளத்திநாதரைக் கணமும் பிரியேன் என்று தம் உறுதியில் நின்றார். சரி, இவன் நம் வழிக்கு வரமாட்டான் என்று முடிவு செய்து அவர்கள் வந்தவழியே திரும்பினர்.

சிவார்ப்பணம்:

திண்ணனாரின் பூசையைத் தீமை என்று கருதி ஒவ்வொரு நாளும் அகற்றிச் சுத்தம் செய்து வருகிறார் சிவகோசரியார். ஐந்தாவது நாள் பொறுக்காமல், இறைவனே இந்த அனாசாரத்தை நீரே நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். அன்றிரவு சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, அந்தணரே அப்பூசையைச் செய்பவன் சாதாரண வேடுவன் என்று தவறாக எண்ணாதீர் என்று அறிவுறுத்தித் திண்ணனாரின் அன்பு எத்தகையது என்றும் கூறுகிறார்.

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்றருள் செய்வார்.

“நாளை பூசையை முடித்தபின்பு நீ ஒளிந்திருந்து நடப்பதைப் பார். பின்பு, அவன் என்னிடம் கொண்டிருக்கும் அன்பின் சிறப்பையெல்லாம் நீ உணர்வாய்” என்று சிவபெருமான் கனவில் ஆணையிடுகிறார். சிவபெருமான் கனவில் கூறியதன் அதிசயத்தை நினைத்தபடியே ஆறாம் நாள் காலையில் வழக்கம்போல மலையேறிச் சென்று பூசையை முடித்துவிட்டு மறைந்து நின்று காத்திருக்கிறார் சிவகோசரியார்.

வழக்கம்போலத் தனது ஊனமுதையும் பூசைப் பொருட்களையும் எடுத்து வரும் திண்ணனார், வழியில் தீய நிமித்தங்களைக் காண்கிறார். என் ஐயனுக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலைப்பட்டுக்கொண்டே விரைகிறார். பக்கத்தில் வரும்போது இறைவனின் வலது திருக்கண்ணிலிருந்து உதிரம் வடிவதைப் பார்த்து ஓடோடி வருகிறார்.

அண்ணலார் திருக்காளத்திஅடிகளார் முனிவனார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத்திருநயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர்; தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைந்தோடி வந்தார்.

வந்தவர் கையில் இருந்த வில்லும் பூசனைப் பொருட்களும் சிதறி வீழ, நிலத்தில் விழுந்து புரண்டு அழுகிறார். பின்பு எழுந்து சென்று இறைவன் கண்களில் வழியும் இரத்தத்தைத் துடைக்கிறார். அப்போதும் அது நிற்கவில்லை என்பதைக் கண்டு மனம் பதைத்து யார் என் தலைவருக்கு இதைச் செய்தது என்று சுற்றுமுற்றும் சென்று தேடிப்பார்க்கிறார். ஒருவரையும் காணவில்லை. பின்பு மீளவந்து இறைவன் திருமேனியைக் கண்டு புலம்புகிறார்.

பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்ததென்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்ததென்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்ததென்னோ
ஆவதொன்று அறிகிலேன்யான் என்செய்கேன் என்று பின்னும்.

(அடுத்ததென்னோ – நிகழ்ந்ததென்னவோ, மேவினார் – சேர்ந்தவர்கள்.)

பின்பு, “என்ன செய்தால் இக்கண்ணில் தோன்றும் இப்புண் தீரும்? இம்மலைச்சாரலில் உள்ள பச்சிலைகளைக் கொணர்ந்து மருந்தாகப் பிழிவேன்” என்று நிச்சயித்து, வனத்தில் வேகவேகமாக அலைந்து திரிந்து உடனடியாக மூலிகைகளைக் கொணர்ந்து மருந்தாகப் பிழிந்து பார்க்கிறார்.

புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதநாயகன் பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார்.

அப்போதும் இரத்தம் வடிவது குறையவில்லை. இந்த நிலையில் இனிமேல் என்ன செய்வது? ஊனுக்கு ஊனே மருந்து என்ற கானகவாசிகளின் பட்டறிவு அவர் மனதிலே மின்னலடிக்கிறது.

“இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச்செயல்?” என்று பார்ப்பார்
“உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன்” ஏனும் உரைமுன் கண்டார்.

அடுத்த கணமே, மகிழ்ச்சி பொங்கும் உள்ளத்தோடு, ஓர் அம்பை எடுத்து அதனால் தன் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து அப்படியே குருதி கொட்டும் திருக்கண்களின் மீது அப்புகிறார்.

மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன்னிருந்து தம் கண்
முதற்சரம் மடுத்து வாங்கி முதல்வர்தம் கண்ணில் அப்ப.

உடனே அந்தக் கண்ணில் கொட்டிக் கொண்டிருந்த இரத்தம் நின்று விடுகிறது. திண்ணனார் ஆனந்தக் கூத்தாடுகிறார். ஆகா நான் செய்தது நன்று என்று உள்ளம் பூரிக்கிறார்.

நின்ற செங்குருதி கண்டார் நிலத்தினின்று ஏறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்து மாடி
“நன்று நான் செய்த இந்த மதி” என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார்.

திண்ணனாரின் அன்பின் திறத்தை மேலும் காட்டவேண்டி, இறைவன் தனது இடக்கண்ணில் இரத்தம் வடியச் செய்கிறார். ஐயோ கெட்டேன் என்று அலறுகிறார் திண்ணனார், பின்பு, “அச்சமில்லை, என்னிடம் இதற்கு மருந்துண்டு; இடக்கண்ணையும் தோண்டி அப்புகிறேன்” என்று நிச்சயிக்கிறார்.

கண்டபின், “கெட்டேன்! எங்கள் காளத்தியார் கண்ணொன்று
புண்தரு குருதி நிற்க, மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்; மற்று இதனுக்கு அஞ்சேன்; மருந்து கைக்கண்டேன்; இன்னும்
உண்டொரு கண்; அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன்” என்று.

இறைவனது இடக்கண் இருக்குமிடத்திற்கு அடையாளமாக அங்கு தனது காலை ஊன்றி, அம்பினால் இடக்கண்ணை அகழ்வதற்கு முற்படும் தருணத்தில், இறைவனது திருக்கை வெளித்தோன்றி, “கண்ணப்ப நிற்க, கண்ணப்ப நிற்க, கண்ணப்ப நிற்க” என மூன்று முறை அமுதவாக்காக மொழிந்தது.

செங்கண் வெள்விடையின் பாகர், திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர், திருக்காளத்தி அற்புதர் திருக்கை, அன்பர்
தங்கண் முன் இடக்கும் கையைத் தடுக்க, மூன்றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க வென்றே.

திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கண்ணப்ப நாயனார் சோழர் கால செப்புத் திருமேனி சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இத்தருணத்தின் உணர்ச்சிகரம் அதில் அபாரமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. வலதுகண் அகழ்ந்து எடுக்கப்பட்ட முகம். அந்தக் கண்ணை ஏந்தியிருக்கிறது கரம். ஆயினும் முகத்தில் வேதனையின் சுவடு இல்லை, வாயில் பற்கள் சிறிதே வெளித்தோன்ற ஒரு தெய்வீகக் குறுநகை. இதனைப் படைத்த அமர சிற்பியின் கலைமேன்மையை என்ன சொல்லிப் புகழ்வது!

சிவபெருமான் கண்ணப்பரைத் தனது கையால் பிடித்துக்கொண்டு, எமக்கு வலப்புறமாக என்றென்றும் வீற்றிருப்பாய் என்று அருள் புரிந்தார்.

ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு, “என் வலத்தின்
மாறிலாய் நிற்க” என்று மன்னு பேரருள் புரிந்தார்.

இவ்வாறாகப் பெரியபுராணத்தின் கண்ணப்பர் சரிதை நிறைவுறுகிறது. தன்னளவில் ஒரு தனிக்காவியம் என்றே இதனைக் கூறலாம்.

கண்ணப்பர் சிற்பங்கள் சோழர் காலம் தொடங்கிப் பல கோயில்களிலும் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்திருக்கின்றன. சிவபக்தி மரபில் கண்ணப்பரின் மகத்தான இடமென்ன என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். எனவே இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், இவற்றைக் கண்ணுறும் வரலாற்று “ஆய்வாளர்களில்” ஒரு சாரார், அரசனுக்காக வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் துணிய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே கண்ணப்பரின் உக்கிரமான பக்தியைக் காட்டும் இச்சிற்பங்களை அமைத்துள்ளார்கள் என்று ஒரு கோட்பாட்டை எந்த ஆதாரமுமின்றி முன்வைக்கிறார்கள். அந்தச் சிற்பங்களும் சரி, மேற்கண்ட காவியச் சித்தரிப்புகளும் சரி, ஆழமான பக்தி உணர்வின் தூண்டுதலால் மட்டுமே படைக்கப்பட்டிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்;
கேளார் கொல்? அந்தோ கிறிபட்டார் – கீளாடை
அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தியுள் நின்ற
கண்ணப்பராவார் கதை. 


(கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி (பதினொன்றாம் திருமுறை)

Posted on Leave a comment

பி.ஆர். ஹரன் – அஞ்சலி | அரவிந்தன் நீலகண்டன்

பி.ஆர்.ஹரன்: மறைவு: ஜூலை 4, 2018

தமிழ் ஹிந்துத்துவ எழுத்துலகம் என்பது அன்று மிகவும் சிறியது.  1980களின் இறுதியில் ஒரு பெரும் எழுத்தியக்கமாக உருவாகி வரத்தொடங்கிய ஹிந்துத்துவ சிந்தனையுலகமும் எழுத்துலகமும் பின்னர் திடீரென்று இல்லாமல் போயிற்று. 2004 இல் வாஜ்பாய் அரசு தோற்று முழுக்க முழுக்க இந்து எதிர்ப்பு என்பது அடிப்படை அரசியல் விதியாக தமிழ்நாட்டில் மாறியது. இதற்கான ஆதார அடையாளங்கள் 2002 இலேயே தொடங்கிவிட்டன. திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மதவாதிகள் ஆகியோர் அடங்கிய மிகச் சீரான படையொன்று தமிழில் இயங்கியது. தமிழ் இணையவுலகத்தில் அவர்களே ஆதிக்கம் செலுத்தினர். அச்சு ஊடகங்களுக்கு அங்கிருந்து இறக்குமதியானார்கள்.  அக்காலகட்டத்தில், அதாவது 2002-2010 காலகட்டத்தில் ப்ளாக்கர்கள் கோலோச்சிய காலத்தில் ’சைகோ போலி டோண்டு’ என்கிற ஒரு திராவிட-இடதுசாரி கும்பல் ஒவ்வொரு இந்து ப்ளாக்கரையும் குறிவைத்து ஆபாசத்தின் உச்சத்தில் தாக்கியது. மிகவும் கடுமையான உளவியல் தாக்குதல்கள் அவை. அதிகார வர்க்கத்தின் ஆசியும் தமக்கிருப்பதாகக் காட்டிக் கொண்டு அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு ப்ளாக்மெயில் வரை நீண்டன. இன்று அந்த ‘சைகோ போலி டோண்டு’ குழுவினர் மதிப்புடைய இடதுசாரி திராவிட எழுத்தாளர்களாக வலம் வருகின்றனர். அவர்கள்தான் எனத் தெரிந்தாலும் அவர்களை ஆதாரபூர்வமாக சிக்கவைப்பது கடினம்.

எந்த சூழ்நிலையில் பி.ஆர்.ஹரன் இயங்கினார் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எனவேதான் இந்த விவரிப்பு.

பி.ஆர்.ஹரன் குறித்து எனக்கு தனிப்பட்ட விவரங்கள் அதிகமாக தெரியாது. அவர் அன்னையார் முதியோர் நோய்களால் அவதிப்பட்டப் போது ஹரன் அவர் அன்னையாரைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஹரன் திருமணமாகாதவர். ஒரு முதன்மை நிறுவனத்தில் முன்னாள் விற்பனை அதிகாரி. அவர் எப்படி ஹிந்துத்துவ எழுத்துலகத்துக்குள் வந்தார்? 2004 இல் நடந்த சங்கராச்சாரியார் கைது அவரை கடுமையாக பாதித்தது. தீபாவளி நாளில் ஒரு ஹிந்து சன்னியாசி கைது செய்யப்படுகிறார். எப்படி இது சாத்தியம்? இப்படி ஒரு கிறிஸ்தவ பிஷப் , விடுங்கள் ஒரு கிறிஸ்தவ போதகரைக் கூட கிறிஸ்துமஸ் நாளில் கைது செய்ய முடியுமா? இக்கேள்விகள் அவரை எழுத வைத்தன.

அவர் விரைவில் இது காஞ்சி மடம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என கண்டுகொண்டார் ஒட்டுமொத்த ஹிந்துசமுதாயமே ‘a society under siege’  என்பதை உணர்ந்து கொண்டார். மதமாற்றங்கள், மதக் கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கு அவர் சென்றார். மலர்மன்னனுடன் அவர் கலவரப் பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு செய்தார். ஆர்கனைசர், யுவபாரதி, நியூஸ் டுடே, உதய் இந்தியா, திண்ணை. காம், வலம் என பல பத்திரிகைகளில் எழுதினார். எழுத்து தம் ஆயுதம் என்பதை கண்டு கொண்டார். அதனை அவர் தர்மம் என உணர்ந்ததைக் காக்க பயன்படுத்தினார். எள்ளளவும் சுயநலமற்றவர்.

கால்நடை பாதுகாப்பு, கோவில் பாதுகாப்பு, பண்பாட்டு பாதுகாப்பு என அவர் இயங்கிய தளங்கள் பலவிதமானவை. ஆனால் அவை அனைத்தையும் இணைத்தது தர்மம் குறித்த அவரது பற்று.

அவர் என்றைக்குமே தனக்காக எழுதியதில்லை. தன் பெயர் வரவேண்டுமென்பதோ அல்லது தனக்கு புகழ் வரவேண்டுமென்பதோ குறித்து அவருக்கு கிஞ்சித்தும் எண்ணம் இருந்ததில்லை. எழுத்து துறையில் தெரிந்தோ தெரியாமலோ இருந்து தொலைப்பதால் இதை சொல்கிறேன். முனிவர்கள் தவம் செய்யும் போது ரம்பையோ மேனகையோ வந்து நடனமாடுவார்கள் என்று சொல்வார்களே, எழுத்தை தவமென செய்தால் வந்து நடனமாடும் ரம்பை மேனமை இந்த புகழ் போதை. மிகக் கடுமையான போதை. போதை என்று இல்லாவிட்டாலும் கூட எழுத்தின் மீது ஒரு பற்றிருக்கும். இது என் எழுத்து என்கிற ஒரு அடிப்படையான கர்வம். பி.ஆர்.ஹரனுக்கு இது எதுவுமே இருந்ததில்லை. அவர் எழுத்து என்பது தர்மத்தையும் தேசத்தையும் காப்பாற்ற செய்யப்படும் வேள்வியில் சொரியப்படும் ஆகுதி. ஆகுதியான பிறகு அது தேவதைகளுக்குத்தான் சொந்தம். இந்த யக்ஞத்தின் அதிதேவதை ராஷ்ட்ரி. அவ்வளவுதான். அவ்வளவேதான். அதற்கு மேல் அவர் தன் எழுத்தைக் குறித்து ‘என் எழுத்து’ என சிந்தித்ததே இல்லை. அர்ஜுனனும் பாணம் காண்டீபத்திலிருந்து சென்ற பிறகு அதை என் அம்பு என நினைத்திருக்க மாட்டான் என்று சொல்வார்கள். காண்டீபத்திலிருந்து விடுபடும் பாணம் கிருஷ்ணார்ப்பணம் ஆகிவிடுகிறது. ஹரனுக்கு அனைத்துமே தேசத்துக்கு அர்ப்பணம்.

எனக்கும் அவருக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. அவருக்கு ஒரு குறிப்பிட்ட பாரம்பரிய ஸ்தாபனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எனக்கு இல்லை. அவர் அந்த ஸ்தாபனத்தின் பார்வையில் தர்மத்தை வரையறை செய்தார். என்னால் அதை இறுதிவரை ஜீரணிக்க முடியவில்லை. என்றைக்கும் ஏற்பது இயலாது. ஈழத்தமிழர் பிரச்சனை, ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் நாங்கள் கடுமையாக முரண்பட்டோம். ஒருவர் உங்கள் நண்பனாக இருக்கும் போது அவரது பெருமை தெரிவதை விட அவர் உங்கள் எதிர்நிலைபாட்டில் நிற்கும் போதுதான் அவரது உண்மையான பெருமையோ தன்மையோ விளங்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி.

ஒரு சர்வதேச ஹிந்துத்துவ அறிவுஜீவி. அவர் ஒரு விஷயத்தில் என்னுடைய உழைப்பை பயன்படுத்தியிருந்தார். ஆனால் அதை அவர் அங்கீகரிப்பதில்லை. இதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஹரன் பொங்கி எழுந்துவிட்டார். அப்போது எங்கள் இருவருக்கும் பல விஷயங்களில் காரசாரமான மோதல்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டம். எந்த ஹரன் தன்னுடைய எழுத்தினை பற்றற்ற நிலையில் தேசார்ப்பணமாகக் கொண்டு இயங்கி வந்தாரோ அதே ஹரனுக்கு அவருடன் நிலைப்பாடுகளில் கடுமையாக வேறுபட்டு வாதிடிக் கொண்டிருந்த என் உழைப்பை ஒருவர் உதாசீனப்படுத்துகிறார் என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த மகோன்னதமே என் மனதில் ஹரனை வரையறை செய்கிறது.

அவர் நியூஸ் டுடேயில் பணியாற்றிய போது ஒவ்வொருநாளும் ஒரு கட்டுரை எழுதுவது பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அவர் பழகும் விதம் நண்பர்களை என்றென்றைக்குமாக மாற்றியிருக்கிறது. கம்பீரமான குரல்.  முதன் முதலில் அவரைப் பார்த்த போது அவர் பழைய ராணுவ அதிகாரி என்றே நினைத்தேன். கேட்டும்விட்டேன். ‘இல்லை’ என்று புன்னகையுடன் சொன்னார். பிறகு ‘ராணுவத்தில் சேருவதுதான் என் முதல் ஆசையாக இருந்தது’ என்றார். எல்லா விதங்களிலும் அவர் ஒரு அருமையான மனிதர். ஒருவருக்கு அவரை போன்ற எதிரிகள் இருந்தால் நண்பர்கள் தேவை இல்லை. எதிரிகளையும் நேசிக்கத் தெரிந்தவர்.

இன்று ஹரன் நம்மிடையே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் நினைவு எப்போதும் உடனிருக்கும். அவருக்கு தமிழ்நாடு குறித்து இருந்த கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘வேதமுடையதிந்த நாடு’ என்பதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் வேதம் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் கால்நடை செல்வம் பெருக வேண்டும். அனைத்து சமுதாயங்களும் பரஸ்பர அன்புடன் நல்லுணர்வுடன் சமரசத்துடன் வாழ வேண்டும். ஹரன் மனதில் பதிந்திருந்த லட்சிய தமிழகம் இதுதான். ஒரு விநோதம் ஹரன் தரிசித்த தமிழ்நாட்டை ஏற்கனவே ஞானசம்பந்தர் தம் தேவாரப்பாடலில் வரையறை செய்திருக்கிறார். அதை படிக்கும் போதெல்லாம் இனி சிவபெருமானுடன் பி.ஆர்.ஹரனின் முகமும் நினைவில் வரும்.

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

இதை எதிர்க்கும் சக்திகளுடன் எவ்விதத்திலும் ஹரன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஜிகாதிகளையும் மதமாற்றிகளையும் தீராவிடக் கும்பல்களையும் இடதுசாரி போலிகளையும் எதிர்த்து தமிழ்நாட்டில் இயங்குவது மிகக் கடினமான விஷயம். ஏறக்குறைய தன் மரண சாசனத்தில் தானே கையொப்பமிட்டு வாழும் வாழ்க்கைதான் அது. அந்த வாழ்க்கையைத்தான் ஹரன் வாழ்ந்தார்.

இறுதி நாளிலும் பாரதி குறித்த நாடகத்துக்கு சென்று கொண்டிருந்தார். திருவல்லிக்கேணி கோவில் வீதி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டது. இறுதி வரை தேசசேவையில் உயிர் பிரிவதென்பது அவருக்கு பெரிய பாக்கியம். எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு வாழ்நாளெல்லாம் சுயநலமின்றி வாழ்ந்த மனிதர் இறுதியில் மிகப் பெரிய சுயநலத்துடன் நம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு தான் பூரணாகுதி ஆகிவிட்டார். அவர் மனதில் தரிசித்த தமிழ்நாட்டை நாம் உருவாக்குவோம்.  அது மட்டுமே அவருடைய நினைவுக்கு நாம் செய்யும் ஒரே அஞ்சலி.