எல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி
அரவிந்தன் நீலகண்டன்
I
சான் பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் அந்த இந்துக் கோவில் தெலுங்கு பேசுவோரால் நிர்வகிக்கப்படுகிறது. அங்கு இரு விஷயங்கள் எனக்கு வியப்பளித்தன. ஒன்று போன உடனேயே தென்பட்டது. ’நகரின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு’ எனும் தொனியுடன் எந்த பக்தரும் எட்டு மணிக்கு மேல் கோவிலிலோ அல்லது கோவில் மண்டபங்களிலோ இருக்கக்கூடாது. கோவில் வளாகத்தை விட்டு 8:30க்கு வெளியேறிவிட வேண்டும். என்னை அழைத்து வந்திருந்த நண்பர் திருமலைராஜனிடம் இதன் பொருள் என்ன என வினவினேன். ஏன் இத்தனை கட்டுப்பாடு? இங்குள்ள கிறிஸ்தவ சமூகத்தினருக்கு இங்கு கோவில் இருப்பதும் இங்கே இந்து விழாக்கள் நடப்பதும் அவ்வளவாக ரசிக்கவில்லை என்றார்.
உடன் வந்திருந்த நண்பர் சுந்தரேஷ் பதிலளித்தார். கோவில் கட்டுவதென்று தெரியவந்தால் உடனே உள்ளூர் கிறிஸ்தவ அமைப்பு அல்லது ஒரு தீவிர கிறிஸ்தவப் பிரமுகர் ஒரு வழக்குப் போடுவார். நகர சபையில் ஆட்சேபனை தெரிவிப்பார். பிறகு அதை எதிர்த்து நீங்கள் உங்கள் தரப்பை நிலைநாட்டவேண்டும். கோவில் கட்ட ஆகும் செலவைவிட வழக்கை நடத்த ஆகும் செலவு அதிகமாகிவிடும். இந்துக் கோவில்களைக் கட்டவிடாமல் கட்டுப்படுத்தும் ஒரு நல்ல உத்தி அது என விளக்கினார். அப்படிக் கோவில் வந்துவிட்டால் எங்களுக்கு அமைதி கெடுகிறது எனச் சொல்லி இதர ஆட்சேபனைகளை எழுப்பி, கோவிலின் செயல்பாடுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பார்கள்.
எங்கள் மாவட்டத்தில் நகரசபைக்குச் சொந்தமான மைதானங்களிலேயே இரவெல்லாம் நடக்கும் தூய ஆவிக்குரிய எழுப்புதல் பெந்தகோஸ்தே மதமாற்றங்களையும், கர்த்தருக்கு இந்தியாவை ஒப்புக்கொடுக்க நடத்தப்படும் முழு இரவு முழங்கால் யுத்த பேரிகைகளையும் நினைத்துக்கொண்டேன்.
திருமலைராஜன் கூறினார், “உள்ளே வந்து இந்தக் கோவில் மண்டபத்துக்கு அடிக்கல் போட்டவரின் பெயரைப் பாருங்கள்” – அந்தப் பளிங்குக் கல் சொல்கிறது: இங்கு அடிக்கல் நாட்டியவர் உஸ்தாத் அலி அக்பர் கான், நாள் செப்டம்பர் 15 1985.
மறுநாள் பெர்க்கிலி வேதாந்த மையத்துக்குச் செல்வதாக முடிவு. காலையில் நானும் சுந்தரேஷும் சென்று சேர்ந்தபோது பெர்க்லி வேதாந்த மையம் மூடி இருந்தது. அவர்கள் திறக்கும் நேரங்களில் நான் அங்கிருப்பது சாத்தியமில்லாததாக இருந்தது. என்றாவது பெர்க்லி வந்தால் பார்க்க வேண்டுமென்று நினைத்த ஓர் இடம் அது. அதன் வரலாறு அத்தகையது.
சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் செயல்பாடுகளை மிக அருமையாக ஆவணப்படுத்தியவர் மேரி லூயொஸ் பர்க் (Marie Louise
Burke). சகோதரி கார்க்கி எனும் பெயரில் சன்னியாசம் வாங்கியவர். சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடரான சுவாமி அசோகானந்தரின் சிஷ்யை. 1938ல் அசோகானந்தர் பெர்க்லியில் வேதாந்த மையம் ஒன்றை உருவாக்க முடிவு செய்கிறார். அதற்கான இடத்தையும் முடிவுசெய்து அதில் உள்ள கட்டடத்தில் மாறுதல்கள் செய்ய பெர்க்லி நகர சபையின் ஒப்புதலையும் பெற்றாயிற்று, உள்ளூர் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவருக்கு விஷயம் தெரிய வருகிறது. அவர் முக்கிய ஊர்ப் பிரமுகர்களின் கையெழுத்துகளை வாங்கி இங்கே இந்து அமைப்பு எதுவும் வரக்கூடாதென்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார். மே 1938ல் நகரசபை தன் ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. திட்டக் கமிஷனை விசாரிக்கச் சொல்கிறது.

விசாரணையின்போது ஐந்தே பேர்தான் வேதாந்த மையத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மீதி அனைவரும் மிகவும் செல்வாக்கு உடைய பிரமுகர்கள். எதிர்க்கிறார்கள். கமிஷன் அதனளவில் எவ்வித உண்மையான பிரச்சினையும் இல்லை எனக் கருதுகிறது. ஆனால் நகரசபை வேதாந்த மையம் வருவதை முற்றிலும் நிராகரிக்கிறது.
ஆனால் வேதாந்த இயக்கத்தினர் மனம் தளரவில்லை. மற்றொரு இடத்தை பெர்க்கிலியில் தேர்வு செய்கிறார்கள். மீண்டும் கடும் எதிர்ப்புப் பிரசாரங்கள். கேவலமான ஆபாசமான சீண்டல்கள். மீண்டும் விசாரணைகள். ஜூன் 20 1938ல் விசாரணை நடக்கிறது. இந்து மதம் குறித்து மிஷினரிகளால் கட்டமைக்கப்பட்ட எதிர்மறைச் சித்திரங்கள் அனைத்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஒருவர் கிருஷ்ணருக்கும் கோபிகைகளுக்குமான உறவு குறித்து மோசமாக விவரிக்கிறார். இந்து மதம் என்பது ஆபாசம் எனச் சொல்லப்படுகிறது. பெண்கள் பள்ளி ஒன்றின் முதல்வர் துறைமுகத்தில் ஒரு கப்பல் நிற்கிறது என்றும், அதில் அமெரிக்கப் பெண்குழந்தைகளைப் பிடித்துப் போட்டு இந்தியாவுக்குக் கொண்டு சென்று அடிமைகளாக விற்கப் போவதாகத் தமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார். இந்தப் பொய்ப் பிரசாரங்களுக்கெல்லாம் அமைதியாக பதிலளித்து இறுதியில் வேதாந்த மையத்துக்கு ஒப்புதல் கிடைக்கிறது. அது ஒன்றும் பெரிய மையம் அல்ல. நம்மூரில் உள்ள ஒரு கடைநிலை சர்ச் போல அது இருக்கிறது, அவ்வளவுதான். இறுதியாக அக்டோபர் 22 1939ல் வேதாந்த மையம் திறக்கப்படுகிறது.
அது விஜயதசமி நாள்.
அதே கலிபோர்னியாவில் இந்துப் பெற்றோர்கள் இன்றும் இந்துக்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்படும் எதிர்மறைச் சித்திரங்களை எதிர்த்து விசாரணை மன்றங்களில் சாட்சிக் கூண்டுகளில் நிற்க வேண்டியுள்ளது என்பதுதான் வேதனையான உண்மை.
என்னை அழைத்து வந்திருந்த சுந்தரேஷ் மற்றோரு இடத்துக்குச் செல்லலாம் என்றார். “உனக்கு நிச்சயமாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.”
II
ஸான் ஹோஸே (San Jose) மிஷன் அருங்காட்சியகம் அன்று வெறும் மிஷன் கேந்திரம்தான். அதை நிறுவியவர்கள் ஸ்பெய்ன் நாட்டு ராணுவத்துடன் வந்திறங்கிய மிஷினரிகள். அருங்காட்சியகக் கடையில் ஒரு புத்தகத்தை சுந்தரேஷ் தேடி எடுத்தார். ஏற்கெனவே அவர் அதைப் படித்திருக்கிறார். ‘கலிபோர்னிய மிஷனில் வாழ்க்கை’ (Life in a
California Mission) என்பது நூலின் தலைப்பு. ஜீன் ப்ரான்காய்ஸ் பெரோஸ் (Jean Francois de la Perouse) என்கிற பிரெஞ்சுக்காரர் எழுதியவை. மிஷனரிகளிடம் அன்பும் மதிப்பும் கொண்டவர். பூர்விகக் குடிகள் ஸ்பானியர்களைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்களுக்குப் பண்பாடு கிடையாது என்பதிலெல்லாம் அவருக்குப் பெரிதாகக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அவர் இந்த மிஷனை அடிப்படையில் ஒரு அடிமைப்பண்ணை என விவரிக்கிறார்.

ஸ்பானியர்கள் இங்கே 225 ஆண்டுகளுக்கு முன்னர், இன்று ஸான் பிரான்ஸிஸ்கோ என அழைக்கப்படும் இந்நிலப்பகுதிக்கு வந்திறங்கிய போது இங்கே ஓஹியோன் (Ohione) என்றழைக்கப்படும் பூர்விகவாசிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சிறு சிறு குழுக்களாக, சுதந்திரமான குழுக்களாக வாழ்ந்து வந்தனர். குறைந்தபட்சம் ஐம்பது குறுங்குழுக்களாகக் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். இன்று காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கும் வர்ணப்பொடிகள் அம்மக்கள் மதச்சடங்குகளில் தங்கள் உடல்களில் பூசிக் கொள்வன. கண்ணாடிப் பேழையில் வைக்கப்படாதிருக்கும் பட்சத்தில் ஒரு இந்து அதை விபூதி குங்குமம் என்றே உணரக்கூடும்.
காட்சியகத்தின் காட்சிப் பொருட்களை ஒவ்வொன்றாகக் காண்கிறோம். என் கையில் இருக்கும் புத்தகம் நன்றாகவே உதவுகிறது. குரான் வசனங்களை விளங்க வைக்கும் ஹதீஸ்கள் போல அந்தப் புத்தகம் செயல்படுகிறது. உதாரணமாக ஒன்று சொல்கிறேன். காட்சிப்படுத்துதலில் மிகவும் மென்மையாக்கி இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்: ‘ஒருமுறை கிறிஸ்தவ முழுக்கு அளிக்கப்பட்ட பின்னர் (baptized) இந்தியர்கள் மிஷினரிக் குழுமத்தை விட்டு அனுமதியில்லாமல் அவர்களின் சொந்தக் கிராமங்களுக்குச் செல்லக் கூடாது. ஏனெனில் கிறிஸ்தவ முழுக்கை ஃபாதர்கள், பழைய வாழ்க்கையிலிருந்து மாறிவிட்டதற்கான ஆன்மிக உடன்படிக்கையாகப் பார்த்தார்கள்.’ ஆனால் பெரோஸ் தம் நாட்குறிப்புகளில் சொல்லியிருப்பது இப்படி மென்மையாக எல்லாம் இல்லை.
… ஒரு இந்தியன் கிறிஸ்தவ முழுக்கு பெற்றதுமே அது அவன் வாழ்க்கைக்கான ஓர் ஆணையாக மாறிவிடுகிறது. அவன் அவனது சொந்தங்களுடன் வாழ அவனது கிராமத்துக்குத் தப்பியோடும் பட்சத்தில் அவன் மூன்று முறை திரும்ப வரும்படி அழைக்கப்படுகிறான். அவன் வரவில்லை என்றால் மிஷினரிகள் ஸ்பானிய ஆளுநரிடம் முறையிடுகிறார்கள். அவர் ராணுவத்தை அனுப்பி அவன் குடும்பத்தினரிடமிருந்து அவனை மீட்டு மிஷினரிகளிடம் கொணர்ந்து அளிக்கிறார். அங்கு அவனுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கசையடி அளிக்கப்படுகிறது.
பூர்விக வாசிகளிடம்
முதலில் ஆர்வத்தை வரவழைக்க ஸ்பானிய நாட்டிலிருந்து கொணரப்பட்ட பரிசுப் பொருட்கள்
பயன்படுத்தப்பட்டன. ஒரு பாதிரியார் இப்பொருட்களை ‘ஆன்மிக மீன்பிடித் தூண்டில்கள்’
என வர்ணித்தார்.
முதலில் ஆர்வத்தை வரவழைக்க ஸ்பானிய நாட்டிலிருந்து கொணரப்பட்ட பரிசுப் பொருட்கள்
பயன்படுத்தப்பட்டன. ஒரு பாதிரியார் இப்பொருட்களை ‘ஆன்மிக மீன்பிடித் தூண்டில்கள்’
என வர்ணித்தார்.
இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பூர்விக வாசிகள் மிஷன் நிலப்பரப்பில் வேலை வாங்கப்பட்டனர். அவர்களின் பெண்கள் மிஷினரிகளுக்கு உணவு சமைக்க வேண்டும். ஆண்கள் பயிரிட்டு ஆடு மாடுகளை மேய்க்க வேண்டும். அங்கு இவ்விஷயங்களை அழகாகக் காட்டும் ஓவியங்களை வைத்திருக்கிறார்கள். எல்லோரும் சந்தோஷமாக ஊழியம் செய்யும், அமைதியும் அன்பும் ததும்பும் ஓவியங்கள். ஓவியங்களில் பெண்கள் அமைதியான முகங்களுடன் பாதிரியார்களுக்குச் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பெரோஸ் தம் நாட்குறிப்பில் எழுதுகிறார்:
பெண்களுக்கு எப்போதுமே பகிரங்கமாக கசையடிகள் கொடுக்கப்படுவதில்லை. கொஞ்சம் தனிமையான மூடிய அறைகளுக்குள் அவர்களுக்குத் தண்டனைகள் அளிக்கப்பட்டன. அவர்களின் கதறல்கள் மிஷனில் உள்ள ஆண்களுக்குக் கேட்டு அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கலகங்கள் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஆண்களுக்கு பகிரங்கமாகவே தண்டனைகள் அளிக்கப்பட்டன. பிறர் தவறுகள் செய்யக் கூடாது என்பதற்கான ஒரு பாடமாக அவை அமைந்தன.
இந்த மிஷனை நிறுவிய கத்தோலிக்க பாதிரியாரான ஜுனிபெரோ ஸேரா (Junípero Serra) புனிதராக்கப்படுவார் என சங்கைக்குரிய போப் அவர்கள் அறிவித்திருப்பதை அடுத்து கார்டியன் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அது இந்த மிஷனில் நடந்த இன்னும் கொடுமையான சில விஷயங்களை வெளிக்கொணர்ந்திருந்தது:
பலாத்கார புணர்வுகளின் விளைவாக உருவான கருக்களைக் கலைத்த குற்றங்களுக்காகப் பிடிபட்ட பூர்விகவாசிப் பெண்களை பாதிரியார்கள் நாட்கணக்கில் சட்டகங்களில் கட்டி வைத்து அடித்தார்கள். அவர்கள் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சர்ச்சில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் மரத்தால் செய்யப்பட்ட ஒரு குழந்தை உருவத்தைக் கைகளில் ஏந்தியபடியே நிற்க வேண்டும்.
மிஷன் அருங்காட்சியகக் காட்சிப்படுத்துதலில் சில உண்மைகள் வரிகளுக்கிடையே வந்து விழத்தான் செய்கின்றன. ஒரு பூர்விக இந்தியன்
மிஷன் காம்பவுண்டுக்குள் தமது புனித நடன சடங்கைச் செய்தமைக்காகத்
தண்டிக்கப்பட்டார் எனச் சொல்கிறது ஓர் அறிவிப்பு.
மிஷன் காம்பவுண்டுக்குள் தமது புனித நடன சடங்கைச் செய்தமைக்காகத்
தண்டிக்கப்பட்டார் எனச் சொல்கிறது ஓர் அறிவிப்பு.
மற்றொரு காட்சிப்பொருள், அம்மை நோயால் பூர்விகவாசிகளின் மக்கட்தொகை கடுமையாகக் குறைந்த விஷயத்தைப் போகிற போக்கில் சொல்கிறது. புனித ஜோசப் சர்ச்சின் பொருட்கள் கணக்கெடுப்பில் இறந்துபோன குழந்தைகளின் கல்லறைகளுக்கு மேலே நடுவதற்கான கில்ட் ஒட்டிய சிலுவை இருப்பதைச் சொல்கிறது. இறந்து போன குழந்தைகள்…
மற்றொரு காட்சிப்படுத்துதல், மிஷன் உச்சத்தில் இருந்தபோது அது பல்லாயிரம் ஏக்கர்கள் படர்ந்து விரிந்திருந்ததைச் சொல்கிறது. இது ஒன்றும் இயல்பாகப் பரந்து விரிந்த விஷயமில்லை. கையிலிருக்கும் நூலில் மால்கம் மர்கோலின் விரிவாகவே சொல்கிறார்: ‘பூர்விகவாசி இந்தியர்கள், தங்கள் நிலத்துடன் இருந்த தொடர்பை அறுத்ததென்பது மிஷினரிச் செயல்பாடுகளின் எதிர்பாராத விளைவல்ல. அது திட்டமிட்டச் செயல்பாடு.’ நிலத்தைத் தாம் அபகரிப்பது என்பது ‘இந்தியர்களைப் பண்படுத்துவதற்கு’ கிடைத்த ஊழியக்கூலி என மிஷினரிகள் கருதினர் போலும். ’இந்தியனைப் பண்படுத்துவதென்பது அவனில் இயற்கையழிப்பைச் செய்வதே’ (‘Civilizing
the Indian can only be achieved by denaturalizingthem‘) என்கிறார் பெர்மின் லாஸோன் (Fermín Lasuén) எனும் முதன்மை மிஷினரி ஒருவர். இவர் புனித பிரான்ஸிஸ்–அசிசி சபையைச் சார்ந்தவர் என்பது என்னை அதிர்ச்சியுறச் செய்கிறது. புனித பிரான்ஸிஸ்–அசிசி இயற்கையை ஆராதித்த கிறிஸ்தவத் துறவி. ஆனால் அவர் நிறுவிய சபை பிற்காலத்தில் கடும் கிறிஸ்தவ மிஷினரிச் செயல்பாட்டுடன் இயங்கியிருக்கிறது. இயற்கையை ஆராதித்த ஒரு துறவியின் வழியில் வந்த சபை மிக இயல்பாக, பூர்விகவாசிகளில் இயற்கை அழிப்பைச் செய்வது குறித்துப் பேசுகிறது. இதில் புதைந்திருப்பது இந்துக்களுக்கு ஒரு நல்ல பாடம்.

இந்த முழுக்
கண்காட்சியும் ஒரு விதத்தில் நாசிகளின் வதை முகாம்களின் முன்மாதிரி அமைப்பொன்றினை
நியாயப்படுத்தும் அல்லது குறைந்தபட்சம் மென்மைப்படுத்தும் ஒரு முயற்சி. பூர்விகவாசிகள் இன்னும் தங்கள் கல்லறைகளிலிருந்து நிலங்கள் வரைக்குமான மீட்டெடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதால் இது தொடரும் அரசியல்–பண்பாட்டுப் போரில் ஒரு பிரகடனமும் கூட.

III
நியூ யார்க்கில் இருக்கும் யூதப் பாரம்பரிய காட்சியகத்தில் (Museum of Jewish
Heritage) தற்போது ‘லியோ ப்ராங்க் வழக்கு: நீதியைத் தேடி’ என ஒரு காட்சிப்படுத்துதலை நடத்துகின்றனர். 1913ல் ஜியார்ஜியாவில் பென்சில் உற்பத்தி ஆலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்த லியோ ப்ராங்க் என்பவர் அங்கே பணிபுரிந்த 13 வயதே ஆன மேரி பாகன் (Mary Phagan) கொலை செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் குற்றவாளி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தண்டனை நிறைவேற்றப்படும் முன்னால் அவர் வன்முறைக் கூட்டமொன்றினால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது நடந்து ஏறக்குறைய ஒரு தலைமுறை முடிவில் அவர் குற்றமற்றவரென்பதற்கான ஆதாரங்கள் வெளியாகின. ஆனால் இந்த விசாரணையின்போது அமெரிக்கச் சமுதாயத்தில் நிலவிய யூத வெறுப்பு ஊடகங்களில் வெளிப்பட்டது. அன்றைய அமெரிக்காவில் கறுப்பின மக்கள், யூதர்கள் போன்றவர்களின் மேல் நிலவிய மனச்சாய்வுகள் வெறுப்புகள் ஆகியவற்றைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்ட கண்காட்சி.

யூதப் பாரம்பரிய மையத்திலிருந்து ஓர் இந்துத்துவனாகக் கற்றுக்கொண்ட பாடமொன்றை இங்கே பதிவு செய்யவேண்டும். ஒரு மல்ட்டி மீடியா காட்சிப்படுத்துதல். யூத ஆச்சாரவாதிகள், யூத மதச்சார்பின்மையாளர்கள், யூத சோஷலிஸ்ட்கள், யூத ஸியோனிஸ சோஷலிஸ்ட்கள், ஸியோனிஸ்ட்கள் அனைவரையும், அனைத்துத் தரப்புகளையும் காட்டும் காட்சிப்படுத்துதல். விவேகானந்தர் சொன்னார், ‘அவர் யாராக இருந்தாலும் அவர் இந்து என்பதைக் கவனியுங்கள். அவர்கள் உங்களைத் தூற்றினாலும் கூட அவர்கள் இந்து என்பதைக் கவனியுங்கள்…’ ஏன் இந்துத்துவம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தமல்ல என்பது இதனால்தான். இந்து சமய, தத்துவ தரிசன மரபுகள், வரலாற்றுப் போக்குகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது இந்துத்துவம். இந்து மதங்களான வைதீக, சைவ வைணவ ஆரிய சமாஜ பிரம்ம சமாஜ சீக்கிய பௌத்த சமண சமயங்களனைத்தும் இந்துத்துவமெனும் பேராற்றின் துறைகளே. இஸ்ரேல் என்பதும் இஸ்ரேலை உருவாக்கும் ஸியோனிசமும் இவ்விதத்தில் அரசியல் என்பதைத் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்துத்துவத்தையும் ஸியோனிசத்தையும் இடது வலது என்று பிரிக்க முடியாது. தொடர்ந்து துவேஷத்துக்கு ஆளான யூதர்கள் இன வாதத்துக்கு எதிரான போராட்டங்களில் தோள் கொடுத்திருக்கிறார்கள். ஸியோனிஸத்துக்கும் இந்துத்துவத்துக்கும் இடது வலது போன்ற பிரிவினைகள் பொருந்தாது.
சில நாட்களுக்குப் பிறகு சொல்வனம்.காம் இணைய இதழின் ஆசிரியர் ரவிசங்கருடன் போஸ்டனில் உள்ள ஒரு யூத ஆலயத்தின் முன்னர் நிற்கிறோம். தாக்குதல் அச்சுறத்தல்கள் இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை அங்கு கதவில் ஒட்டியிருந்த அறிவிப்பு தெரிவித்தது. மானுட வெறுப்பின் மற்றொரு வெளிப்பாடு யூதர் மீதான துவேஷம். பில் மக்கார்த்தே என்பவர் சிரித்த முகத்துடன் எங்களை உள்ளே அனுமதிக்கிறார். அவர் ஒரு கணித விரிவுரையாளரும்கூட. இது ஒரு சீர்திருத்த யூதக் கோவில் என விளக்குகிறார். ஆச்சாரவாத யூதக் கோவில்களில் உள்ள சில கட்டுப்பாடுகள் தீட்டுகள் இத்யாதி இங்கே கிடையாது. ஆச்சாரவாத யூதத்தை சீர்திருத்த யூதத்துக்கு எதிராக நிறுத்தி புரட்சி எல்லாம் அவர்கள் செய்யவில்லை. உள்–வேறுபாடுகளை பன்மைச் செழிப்பென பார்க்கிறார்கள்.
அச்சீர்திருத்தக் கோவிலின் அருமையான வர்ணக் கண்ணாடி கலைக்காட்சிகள் யூத விவிலியத்தின் நிகழ்ச்சிகளையும் யூத வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துகின்றன. அப்படி ஒன்று, எருசலேமின் யூதக் கோவில் மேற்கத்திய ஆக்கிரமிப்பாளர்களால் பாழடிக்கப்பட்ட பின்னர், யூத வீரர்கள் மீண்டும் அக்கோவிலைக் கைப்பற்றியது. அப்போது அங்கே அவர்கள் விளக்கெரிக்க அங்கிருந்த அற்ப எண்ணெயே போதுமானதாக இருந்ததாம். இறை அருளின் அற்புதச் செயல் எனக் கோவிலை மீட்டெடுத்த யூத வீரர்கள் கருதினராம். மானுட வீரத்தையும் இறை அற்புதத்தையும் இணைக்கும் இந்நிகழ்வு யூத ஒளித்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஹனுக்கா! யூத தீபாவளி எனச் சொல்லலாம். ஒன்பது விளக்குகள் ஏற்றிக் கொண்டாடப்படும் திருநாள்.
இதைப் போன்றதொரு நிகழ்வை, அன்னிய சூறையாடலுக்கு உட்படுத்தப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலிலும் கூறுவார்கள். அன்னியப் படையெடுப்பும்
கொடுங்கோலும் 48 ஆண்டுகள் பூஜைகளில்லாமல் மதுரை கோவிலைப் பாழடித்தன. பின்னர்
இந்துக்கள் போராடி இக்கோவிலை மீட்டெடுத்து, அம்மையின் சிலையை மறைத்த இடத்தில்
பார்த்தபோது அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம்.
கொடுங்கோலும் 48 ஆண்டுகள் பூஜைகளில்லாமல் மதுரை கோவிலைப் பாழடித்தன. பின்னர்
இந்துக்கள் போராடி இக்கோவிலை மீட்டெடுத்து, அம்மையின் சிலையை மறைத்த இடத்தில்
பார்த்தபோது அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம்.
யூதர்களின் எருசலேம் கோவிலிலும் சரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சரி, தொடர்ந்து ஒளி கொடுத்த அந்த விளக்குகள் சொல்வது ஒரே உண்மையைத்தான். மானுட மனம் உருவாக்கும் வெறுப்பு இருளுக்கு மேலாக, உண்மை தொடர்ந்து ஒளியுடன் விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது அவ்விளக்குகளைக் கண்டறிந்து அவ்வொளியை உலகுக்கு அளிப்பதே நாம் இப்புவியின் பன்மைச் சிறப்புக்குச் செய்யும் பெரும் கடமை. பாரதத்தில் அதன் பெயர் இந்துத்துவம்.
அருமை