காவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள்
– ஜடாயு
மலையும் குகையும் வனங்களும் நிறையும் இந்த எழில், இறைவன் தன் படைப்பு விசித்திரங்களை வரிசைப்படுத்திய கொலு மண்டபம். நெஞ்சை அள்ளும் இந்த அழகெல்லாம் தெய்வக் காவேரியின் பிறப்பிடத்திற்கன்றி வேறு எதற்குப் பொருந்தும்?
– புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் டி.வி.குண்டப்பா
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பல பெங்களூர்வாசிகளின் நாட்களையும் எண்ணங்களையும் ஆக்கிரமித்திருப்பது காவிரிப் பிரச்சினைதான். அடிப்படையில் இப்பிரச்சினையில் நான்கு முக்கியமான கண்ணிகள் உள்ளன. பிரச்சினைக்கான நீண்டகாலத் தீர்வு என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. நீர்ப்பங்கீட்டு உரிமைகள்
‘வான் பொய்ப்பினும்தான் பொய்யாக் காவேரி’ என்று சங்கத் தமிழ்ப் பாடல் கூறினாலும், பெருமளவு மழைப்பொழிவைச் சார்ந்தே காவிரியின் நீரோட்டம் அமைந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை. பனிமலையில் தோன்றும் கங்கையையும் யமுனையையும் போன்று வற்றாத நீரோட்டம் கொண்ட ஜீவநதியல்ல காவிரி. பல்வேறு சூழலியல் காரணிகளால், மழைப்பொழிவு வருடாவருடம் குறைந்துகொண்டே வரும் நிலையில், காவிரியின் நீர்வரத்தும் குறைந்தே வருகிறது. இந்நிலையில், தேவைக்கும் குறைவாக உள்ள காவிரி நீரைப் பங்கிடுவது என்பது பற்றாக்குறை பட்ஜெட் போடுவது போன்ற விஷயம். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. எனவே, இயற்கை வழங்கும் வரமான முழுக்கொடையைப் பகிர்ந்து கொள்வது போலவே, அது தரும் சாபமான பற்றாக்குறையையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே சமநிலை கொண்ட நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும்.
இதன் அடிப்படையில்தான் பல பத்தாண்டுகள் இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்காடல்களுக்குப் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு நீர்ப்பங்கீட்டு விகிதத்தை 2007ம் வருடத் தீர்ப்பின் மூலம் நிர்ணயித்தது. இந்த விகிதத்தை இரு மாநிலங்களுமே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் வழக்கு இன்னும் தொடர்கிறது.
சரித்திரமும்
பூகோளமும் இணைந்து இந்தப் பங்கீட்டை சிக்கலான ஒன்றாக ஆக்கியிருக்கின்றன. நிலவியல் ரீதியாகக் காவிரி நதியின் பயணம் தொடங்குமிடமாகவும் மேற்பரப்பாகவும் (upper riparian) உள்ள கர்நாடகம் கடந்த 100 வருடங்களில் நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நான்கு பிரம்மாண்டமான அணைக்கட்டுகளைக் கட்டி காவிரி நீரைத் தேக்கும் வசதிகளைச் செய்து கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டு வரை இந்த அணைக்கட்டுகள் இல்லாததால், நதியின் கீழ்ப்பரப்பிலுள்ள தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதி, கட்டுப்படுத்தப்படாத காவிரியின் பிரவாகத்தை கல்லணை போன்ற பாரம்பரியத் தடுப்பணைகளில் தேக்கிக் கால்வாய்களின் வழியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தி ‘சோழநாடு சோறுடைத்து’ என்ற பெயரை உண்டாக்கியிருக்கிறது.
பூகோளமும் இணைந்து இந்தப் பங்கீட்டை சிக்கலான ஒன்றாக ஆக்கியிருக்கின்றன. நிலவியல் ரீதியாகக் காவிரி நதியின் பயணம் தொடங்குமிடமாகவும் மேற்பரப்பாகவும் (upper riparian) உள்ள கர்நாடகம் கடந்த 100 வருடங்களில் நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நான்கு பிரம்மாண்டமான அணைக்கட்டுகளைக் கட்டி காவிரி நீரைத் தேக்கும் வசதிகளைச் செய்து கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டு வரை இந்த அணைக்கட்டுகள் இல்லாததால், நதியின் கீழ்ப்பரப்பிலுள்ள தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதி, கட்டுப்படுத்தப்படாத காவிரியின் பிரவாகத்தை கல்லணை போன்ற பாரம்பரியத் தடுப்பணைகளில் தேக்கிக் கால்வாய்களின் வழியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தி ‘சோழநாடு சோறுடைத்து’ என்ற பெயரை உண்டாக்கியிருக்கிறது.
வரலாற்று ரீதியாக அப்பகுதியின் ஒட்டுமொத்த வாழ்க்கை, விவசாயம், கலாசாரம் அனைத்தும் காவிரியை நம்பியும் சார்ந்துமே உள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலும் கம்பராமாயணமும் தியாகராஜரின் சங்கீதமும் எல்லாம் காவிரியின் கொடை அன்றி வேறென்ன? உண்மையில் உலகெங்கும் எல்லா நதிகளின் டெல்டாப் பிரதேசங்களுக்கும் இது பொருந்தும். எனவே, எல்லாப் பிரதேசங்களிலும் உள்ள நீர்ப்பங்கீட்டு உடன்படிக்கைகள் இத்தகைய வரலாறுகளை அங்கீகரித்தே உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், காவிரி நீரின் போக்கைக் கட்டுப்படுத்தும் நிலையில் உள்ள கர்நாடகம், இந்த இயல்பான விஷயத்தை மிகவும் எரிச்சலுடனும் வன்மத்துடனும் அணுகுகிறது. தமிழ்நாட்டின் சட்டபூர்வமான உரிமைக் கோரல், ‘நமது’ காவிரி நீரைத் தமிழ்நாடு அநியாயமாகக் கேட்கிறது என்பதாக இங்குள்ள அரசியல்வாதிகளாலும் கன்னடப் பிரதேசவாதக் குறுங்குழுக்களாலும் தொடர்ந்து சித்திரிக்கப்படுகிறது. இந்த வருடம் தங்கள் மாநிலத்தின் நீர்த் தேவைகள் மற்றும் பற்றாக்குறைகளை விடாமுயற்சியுடன் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்குத்
தரவேண்டிய ஒட்டுமொத்த நீரின் அளவைக் குறைப்பதில் கர்நாடக மாநில அரசு ஓரளவு
வெற்றியும் பெற்றுள்ளது. ஆனாலும், இதனால் திருப்தியடைவதற்குப் பதிலாக ‘ஊசி முனையளவு நிலம் கூடப் பாண்டவர்களுக்குத் தர முடியாது’ என்று கூறிய துரியோதனனைப் போன்ற ஒரு மனநிலை இங்குள்ள காவிரி போராட்டக் குழுக்களிடையே நிலவுகிறது.
தரவேண்டிய ஒட்டுமொத்த நீரின் அளவைக் குறைப்பதில் கர்நாடக மாநில அரசு ஓரளவு
வெற்றியும் பெற்றுள்ளது. ஆனாலும், இதனால் திருப்தியடைவதற்குப் பதிலாக ‘ஊசி முனையளவு நிலம் கூடப் பாண்டவர்களுக்குத் தர முடியாது’ என்று கூறிய துரியோதனனைப் போன்ற ஒரு மனநிலை இங்குள்ள காவிரி போராட்டக் குழுக்களிடையே நிலவுகிறது.
நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நீதிமன்றம் பாராளுமன்றத்தையே கட்டுப்படுத்தும் விதமாகச் செயல்படுகிறது என்ற வாதத்தை முன்வைத்து மத்திய அரசு பின்வாங்கியது. நீதிமன்றத்தால் ‘வஞ்சிக்கப்படுவதாக’ கருதும் கர்நாடகத்திற்கு ஓர் ஆறுதலையும் தமிழ்நாட்டின் தரப்புக்கு ஒரு தற்காலிக பின்னடைவையும் இது அளித்துள்ளது.
2. நீர்ப் பயன்பாடு:
கர்நாடகச் சட்டமன்றம் இப்பிரச்சினை தொடர்பாக இயற்றிய தீர்மானத்தில் ‘பெங்களூர் மற்றும் கர்நாடகத்தின் பிற ஊர்களுக்கான குடிநீர்த் தேவை என்பது பாசனத்திற்கும் மற்ற பயன்பாடுகளுக்குமான நீர்த்தேவையை விட அதிமுக்கியமானது. எனவே குடிநீர்த் தேவை போக மேலதிகமாக உள்ள காவிரி நீரை மட்டுமே நீர்ப்பங்கீட்டுக்காக அளிப்பது குறித்து யோசிக்க முடியும். இந்த வருடம் அதற்கான சாத்தியமே இல்லை. எனவே நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் தர்க்கபூர்வமாகத் தோன்றினாலும், அவ்வளவு எளிமையான சமன்பாடு அல்ல இது. உண்மையில் நீர்ப்பயன்பாடு குறித்து இரு மாநிலங்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயங்களுக்கு இந்தத் தீர்மானம் அடிகோலியிருக்கிறது.
காவிரி நதியின் வழித்தடத்திற்கு மிக அருகில் இருக்கும் மைசூர், மாண்டியா ஹாசன் போன்ற சிறு நகரங்கள் காவிரி நீரைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை. அசுரவேகத்தில் வளர்ந்து வரும் பெங்களூர் என்ற பெருநகரத்தின் தேவைக்காக 150 கிமீ தூரத்திற்கும் மேல் குழாய்களைப் பதித்து 500 அடி ஆழத்திலிருந்து இறைக்கப்பட்டு காவிரி நீர் பெங்களூருக்குக் கொண்டு வரப்படுகிறது. காவிரி என்ற ‘காமதேனு’ எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் தரும் என்ற கணக்கில், பெங்களூரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் குளங்களும் முற்றிலுமாகச் சீரழிய விடப்பட்டுள்ளன. இந்த நீராதாரங்களை உயிர்ப்பிப்பதுதான் பெங்களூரின் நீண்டகாலத் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாறைகள் நிறைந்த பெங்களூர் பகுதியில் நிலத்தடி நீரைத் தேடிப் பயன்படுத்துவது என்பது அதிக செலவும் குறைந்த பயன்பாட்டு மதிப்பும் கொண்ட ஒரு சமாசாரம்.
நகரக் குடிநீர் வாரியத்தின் மூலமாக விநியோகிக்கப்படும் நீர் முழுவதும் ‘குடிநீர்த் தேவை’ என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இதில் குறைந்த அளவு நீரே (அதிகபட்சம் 25-30%) உண்மையில் குடிநீருக்காகவும் உணவுக்காவும் பயன்படுகிறது. மற்ற நீர் அனைத்தும் குளியல், சுத்தம் செய்தல், கழிவறைகள், தோட்டங்கள், நகர்சார்ந்த சிறிய தொழில்கள் என்று பலவிதங்களில் செலவழிகிறது. இவற்றில் கணிசமான பயன்பாடுகளுக்கான நீர், குடிநீர் போன்று உயர்தரத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கழிவுநீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரையே நாம் இவற்றுக்காகப் பயன்படுத்த முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பெங்களூர் உட்பட இந்தியாவின் எல்லா நகரங்களிலும் பெரும்பாலான கட்டடங்களும் நீர்விநியோகக் குழாய்களும் இதற்கு வசதியானதாகக் கட்டமைக்கப்படவில்லை. நகரத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் சேர்த்து இதற்கும் நிதி ஒதுக்கி, கட்டமைப்புகளை மேம்படுத்தி, நீர்ப்பயன்பாட்டைத் தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதுதான் தீர்வேயன்றி, விவசாயத்திற்கான நீரை நகரங்களுக்குக் கொண்டு வந்து அதைக் கழிவு நீராக்குவதல்ல என்ற வாதத்தில் நிச்சயம் நியாயம் உள்ளது.
“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” என்கிறது புறநானூறு. ஆம், உணவை விளைவிப்பதற்கென்று உள்ள நதிநீரை அவ்வாறே பயன்படுத்துவதுதான் முறையானதும் இயற்கைக்கு முரண்படாததும் ஆகும். ஆனால், இதிலும் அறிவியல்பூர்வமான செயல்பாடும் கட்டுப்பாடும் கண்காணிப்பும் வேண்டும். பயிர்களின் தேர்வும் பாசன முறைகளும் அதை ஒட்டியே அமைய வேண்டும். ஆனால், பல காரணங்களால் அப்படி அமையவில்லை. உதாரணமாக, கர்நாடகத்தின் மைசூர், மாண்டியா பிரதேசங்களில் 1970களுக்கு முன்பு வரை சோளம், கம்பு, கேழ்வரகு (ராகி) மற்றும் பல சிறுதானியங்கள் அதிக அளவில் பயிரிடப் பட்டன. இவற்றை விளைவிப்பதற்கான நீர்த்தேவை மிகவும் குறைவு. ஆனால், தற்போது இந்தப் பயிர்களின் சாகுபடி 50-60% குறைந்து, அதற்குப் பதிலாக, நீடித்த, அதிக அளவிலான நீர்ப்பாசனத்தைக் கோரும் நெல்லும் கரும்புமே அதிக அளவில் பயிரிடப் படுகின்றன. 1970களுடன் ஒப்பிடுகையில் கரும்புச் சாகுபடி 500% அதிகரித்துள்ளது. தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியிலும் காலம்காலமாக நெல்,கரும்பு ஆகிய பயிர்களே மிகப் பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.
அரிசிச் சோற்றையே மைய உணவுப் பொருளாகக் கொண்ட ஓர் உணவுக் கலாசாரத்தையே இப்போது நாம் தென்னிந்தியாவில் மிகப் பரவலாகப் பின்பற்றுகிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளாக நமது பயிர் மற்றும் உணவுக் கலாசாரம், பல்வேறு தானியங்களும் இணைந்ததாகத்தான் இருந்து வந்துள்ளது என்றும், மிக அண்மைக்காலத்தில்தான் அது மாறியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இனிவரும் காலங்களில் பாசனத்திற்கான நீர்த்தேவையை நாம் பெருமளவில் கட்டுக்குள் வைத்தே ஆகவேண்டும். அதற்கேற்றபடியான பயிர் மாற்றங்களைக் கொண்டுவந்தேயாக வேண்டும். இல்லையென்றால் குடிநீரா உணவு உற்பத்திக்கான நீரா என்ற வாழ்வாதாரப் போட்டியை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
3. நதியின் நசிவு
குடகிலிருந்து கடல் வரையிலான காவிரியின் பயணத்தில் ஒவ்வொரு இடத்திலும் நாளும் நாளும் நதி நசிந்து தேய்ந்து அழிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பிரம்மகிரியில் காவிரி பிறந்து மலைகளினூடாகக் கீழிறங்குகிறது. ஹாரங்கி, சுவர்ணாவதி, ஹேமாவதி, கபினி, லக்ஷ்மணதீர்த்தம் ஆகிய துணை ஆறுகள் அதனுடன் இணைகின்றன. இது பள்ளத்தாக்குப் பகுதி. பின்னர் சமவெளியில் ஷிம்ஸா, அர்காவதி ஆகிய ஆறுகள் இணைகின்றன. இது மைசூர் பீடபூமிப் பகுதி. இவை இரண்டும் கர்நாடகத்தில் உள்ளன. பின்னர் பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகள் காவிரியில் வந்து இணைகின்றன. குளித்தலைக்குப் பிறகு அகண்ட காவிரி. நந்தலாறு, நட்டாறு, வஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராயன் ஆறு, புத்தாறு என ஏழு கிளைகளில் நூற்றுக்கணக்கான வாய்க்கால்களாக ஓடிக் கடலைச் சென்று அடைகிறது. இது தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதி. இந்த மூன்று பகுதிகளிலும் காவிரி மிகப் பெரிய அளவில் மாசுபடுத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டு வருகிறது.
குடகுமலைக் காடுகளின் அடர்த்தியால் உருவாகும் பெருமழையே காவிரி நீர்ப்பெருக்கிற்கான முதற்காரணம். 19ம் நூற்றாண்டில் இந்த நீடித்த மழைப்பொழிவையே மையமாக வைத்து அங்கு காப்பி எஸ்டேட்கள் உருவாகத் தொடங்கினாலும், காடுகள் பெருமளவில் அழியவில்லை. ஆனால் காப்பிக்கான உலக அளவிலான சந்தையின் வசீகரம் கொஞ்சம் கொஞ்சமாக காடழிப்பு நிகழ வழிவகுத்தது. 1977 முதல் 1997 வரையிலான இருபது வருடங்களில் குடகுமலைக் காடுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் 30% குறைந்துவிட்டன. இதுபோக, மின் கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்காகவும் குடகின் கானகவளம் அழிக்கப்படுகிறது. கடந்த 40 வருட மழைப்பதிவு விவரங்களை எடுத்துப் பார்த்தால், குடகில் மழைப்பருவத்தின் கால அளவும் வருடாவருடம் சுருங்கி வருவது தெரிகிறது. இது நேரடியாகவே காவிரிக்கு வரக்கூடிய மழைநீரின் அளவைப் பாதிக்கிறது.
மைசூர் பீடபூமிப் பகுதியில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களின் உபரி நீர், விவசாயத்தை அதிகரித்துள்ளதோடு பல்வேறு தொழிற்சாலைகளையும் உருவாக்கியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நஞ்சன்கூடு தொழிற்பேட்டை மற்றும் மைசூரைச் சுற்றியுள்ள காகித ஆலைகள், சாராய ஆலைகள், உர உற்பத்தி மையங்கள் அனைத்தும் காவிரி நீரை மாசுபடுத்துகின்றன. காவிரிப் படுகையில்
உள்ள, உலகெங்கிலுமிருந்து பறவைகள் வந்து கூடும் ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்தின்
பல பகுதிகள் மீன்களற்றுப் போய்க் கிடக்கின்றன.
உள்ள, உலகெங்கிலுமிருந்து பறவைகள் வந்து கூடும் ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்தின்
பல பகுதிகள் மீன்களற்றுப் போய்க் கிடக்கின்றன.
காவிரியின் நன்னீரை ஒருபுறமாக எடுத்துக் கொள்ளும் பெங்களூர் மாநகரத்தின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் முழுவதும் மறுபுறமாக விருஷபாவதி ஆற்றின் வழியாகக் காவிரியின் துணைநதியான அர்காவதியில் வந்து கலக்கிறது.
சமீபத்தில் கர்நாடகப் பாசனத்துறை அமைச்சர் பெங்களூரிலிருந்து 1400 மில்லியன் லிட்டர் கழிவுநீர் காவிரியின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் பாய்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைச் சட்டசபையில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசிடமிருந்து இதற்கு எந்த எதிர்வினையும் எழாததில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனென்றால் காவிரியை
மாசுபடுத்துவதிலும் சுரண்டுவதிலும் கர்நாடகத்தைவிட முன்னணியில் நிற்கிறது
தமிழ்நாடு. கர்நாடகத்தில் காவிரி நதி ஓடும் தூரம் 316 கிமீ தூரம்தான், அதிலும் பெருமளவு மக்கள் கூட்டமில்லாத மலைப்பகுதிகளில் காவிரி ஓடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 416 கிமீ தூரம், முற்றிலும் சமவெளிப்பகுதிகளில் மக்கள் அதிகம் நிறைந்த ஊர்கள் வழியாகக் காவிரி ஓடுகிறது. சீரழிவும் அதற்கேற்றபடி அதிகம்தான்.
மாசுபடுத்துவதிலும் சுரண்டுவதிலும் கர்நாடகத்தைவிட முன்னணியில் நிற்கிறது
தமிழ்நாடு. கர்நாடகத்தில் காவிரி நதி ஓடும் தூரம் 316 கிமீ தூரம்தான், அதிலும் பெருமளவு மக்கள் கூட்டமில்லாத மலைப்பகுதிகளில் காவிரி ஓடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 416 கிமீ தூரம், முற்றிலும் சமவெளிப்பகுதிகளில் மக்கள் அதிகம் நிறைந்த ஊர்கள் வழியாகக் காவிரி ஓடுகிறது. சீரழிவும் அதற்கேற்றபடி அதிகம்தான்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தின் அண்மையிலேயே மெட்ராஸ் அலுமினியம், கெம்ப்லாஸ்ட் சன்மார் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் அத்தனையும் சேர்ந்து அபாயகரமான நச்சுப் பொருட்களை கணக்கு வழக்கின்றிக் காவிரி நீரில் கொட்டி வருகின்றன. பவானி ஆறு சாயப் பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகளின் நச்சுகளையும்,கீழ் பவானியில் மேட்டுப்பாளையத் தொழிற்சாலைக் கழிவுகளையும் திரட்டிக் கொண்டு வர, எல்லாம் காவிரியில் கலக்கின்றன. அதற்கும் கிழக்கே நொய்யல் ஆற்றில் திருப்பூர் நகரின் ஒட்டுமொத்த சாயம் மற்றும் சலவைத் தொழில்களின் கழிவுகள் சேர்ந்து அந்த ஆறே உயிரியல் ரீதியாக இறந்தது (biologically dead)
என்று கருதும் அளவுக்கு மாசுபடுத்தப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம், கோவை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் சேர்ந்து மொத்தமாகத் தினந்தோறும் 270 மில்லியன் லிட்டர் நகரக் கழிவுகளை காவிரியின் வழித்தடத்தில் கொட்டுகின்றன. இந்தக் கழிவுகளை உருவாக்கும் சிறிதும் பெரிதுமான வர்த்தக நிறுவனங்களும் நகராட்சிகளும் பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கழிவுகளைச் சுத்திகரித்துப் பின் நீரில் விடுவதற்காகக் கட்டமைப்புகளை உருவாக்கவே இல்லை.
என்று கருதும் அளவுக்கு மாசுபடுத்தப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம், கோவை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் சேர்ந்து மொத்தமாகத் தினந்தோறும் 270 மில்லியன் லிட்டர் நகரக் கழிவுகளை காவிரியின் வழித்தடத்தில் கொட்டுகின்றன. இந்தக் கழிவுகளை உருவாக்கும் சிறிதும் பெரிதுமான வர்த்தக நிறுவனங்களும் நகராட்சிகளும் பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கழிவுகளைச் சுத்திகரித்துப் பின் நீரில் விடுவதற்காகக் கட்டமைப்புகளை உருவாக்கவே இல்லை.
இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, காவிரிப் படுகையில் மணல்கொள்ளை அரசியல்வாதிகள் மற்றும் கிரிமினல்களின் கூட்டு மாஃபியாவினால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த மணல்கொள்ளை இன்னும் சில காலத்திற்கு இப்படியே தொடர்ந்தால் காவிரி நதி, ஒரு நதியாகத் தமிழ்நாட்டில் தன் ஜீவனைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்றே ஐயம் ஏற்படுகிறது. கர்நாடகம் காவிரி நீர்மீது தனக்கு நியாயமாக உள்ளதை விட அதிக உரிமையை ஒருவேளை கோரும் என்றால், தமிழ்நாடு அளவுக்கு மோசமாக காவிரியைத் தங்கள் மாநிலம் சீரழிக்கவில்லை என்பதையே ஒரு தார்மீகக் காரணமாகச் சொல்லக் கூடும். அது உண்மையும் கூட.
இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போதுதான் காவிரி நதிநீர்ப்பங்கீடு என்பதை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பது புரியும். நதிநீர் என்பது இயந்திரத்தனமாகப் பங்குவைக்கும் சொத்து அல்ல. அது ஜீவனும் உயிர்த்துடிப்பும் உள்ள ஓர் இயற்கை மண்டலம். ஆனால் நீர்ப்பங்கீட்டு வழக்கை விசாரிக்கும் நமது உச்சநீதிமன்றம் கூட இந்தக் காரணிகள் எதையும் கணக்கில் கொள்ளாமல், சாதாரண வருடத்தில் இத்தனை டி.எம்.சி தண்ணீர், பற்றாக்குறை வருடத்தில் அத்தனை டி.எம்.சி. தண்ணீர் என்று கணக்குப் போடுவதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
4. தேச நல்லுறவு
1991ம் வருடம் காங்கிரஸ் தலைவர் பங்கராப்பா முதல்வராக இருந்தபோது காவிரிப் பிரச்சினையை வைத்து பெங்களூரில் பெரும் கலவரம் நடந்தது. தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, தாக்குதல்களும் நிகழ்ந்தன. இந்த வருடம் செப்டம்பரில் சில வாரங்கள் ஏற்பட்ட நிலைமை அந்த அளவுக்கு மோசமாகவில்லைதான். ஆனால் அதே காவிரிப் பிரச்சினையை முன்வைத்து இப்போது உண்டான பதற்றத்தையும் பீதியையும், பதினெட்டு வருடங்களாக வாழ்ந்துவரும் இந்த அழகிய நகரத்தில் நான் முன்னெப்போதும் உணர்ந்ததாக நினைவில்லை.
கேபிள் தொலைக்காட்சியும் இணையமும் சமூக ஊடகங்களும் உடனுக்குடனாக உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ஒரு பக்கச் சார்பான செய்தி அலசல்களையும் வதந்திகளையும் தொடர்ந்து அளித்துக் கொண்டிருந்தன. இதுவும் கலவர மனநிலையைப் பரப்புவதற்குக் காரணமாகியிருக்கலாம் என்பதைப் புறந்தள்ளிவிடமுடியாது.
நதிநீர்ப்பங்கீட்டு வழக்கில் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக வரும் தீர்ப்பை முகாந்திரமாக்கி உடனடியாக அதைத் தமிழர்கள் மீதான வெறுப்புணர்வாக மாற்றத் திட்டமிட்டு வேலை செய்யும் கன்னட பிரதேசவாதக் குறுங்குழுக்கள் இங்கு கணிசமான அளவில் உள்ளன. இவற்றுடன் சமூகவிரோதிகளும் இணைந்து இம்முறை பெரிய அளவிலான கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர். கே.பி.என் பஸ்கள் எரிக்கப்பட்டதும், தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டதும், தமிழர்களுக்கு உரிமையான சில வர்த்தக நிறுவனங்கள் உடைக்கப்பட்டதும் பெங்களூரின் மீது விழுந்துவிட்ட மோசமான கரும்புள்ளிகள். இதேபோல, தமிழகக் குறுங்குழுக்களால் ராமேஸ்வரத்தில் கன்னட யாத்ரீகர்கள் தாக்கப்பட்டதும், சென்னையின் பாரம்பரிய உணவகமான உட்லண்ட்ஸ் தாக்குதலுக்குள்ளானதும் தமிழ்நாட்டின் மீதான ஒரு கரும்புள்ளியே.
இரு மாநிலங்களிலும் பிரதேசவாதக் குறுங்குழுக்கள் உண்டென்றாலும், அவற்றுக்கிடையேயுள்ள முக்கியமான ஒரு வேறுபாடு கவனத்திற்குரியது. கர்நாடகத்தில் அதிகபட்சம் அது கன்னட மொழிவெறி, பெருநகர லும்பன்களின் அடாவடி என்ற அளவில் நின்று விடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உடனடியாக இந்திய தேசிய விரோதமாகவும் தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதப் பிரசாரமாகவும் தூபம் போட்டு வளர்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரிவினைவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம், விடுதலைப் புலிகள், மாவோயிசப் பயங்கரவாதம் இவற்றுக்கெல்லாம் ஆதரவுக் குரல்கொடுக்கும் இந்தக் குறுங்குழுக்கள் காவிரிப் பிரச்சினையிலும் உட்புகுந்து நச்சுக் கருத்துக்களைத் தூவும் சூழல் நிலவுகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரிய போக்கு. இந்தத் தமிழ்த்தேசியக் குறுங்குழுக்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படவேண்டும்.
கர்நாடகம் – தமிழ்நாடு இடையே ஓசூர் வழியான வாகனப் போக்குவரத்து சில வாரங்களுக்கு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுக் கிடந்ததும், எல்லைக் காவல் படையினர் அத்திப்பள்ளி செக்போஸ்டில் பாதுகாவலாக நின்றதும் கொடுங்கனவாக எண்ணி மறந்து விடவேண்டியவை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவையெல்லாம் மிகச்சிறிய விதிவிலக்கான சம்பவங்களே.
இவற்றுக்கு நடுவில் இந்த தேசத்தின் உணர்வுபூர்வமான ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடந்தேறின – ராமேஸ்வரத்திற்கு
வந்த கன்னட யாத்ரீகர்களை இந்து மக்கள் கட்சியினர் பூர்ண கும்பம் கொடுத்து
வரவற்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளுக்கு
தமிழ்நாடு அரசு முழு பாதுகாப்பு அளித்தது. தும்கூரில், தமிழ்நாட்டு லாரி
ஓட்டுநர்கள் 250 பேரை 2-3 நாட்கள் தங்கவைத்து உணவளித்து அவர்களது வாகனங்களுக்கும்
பாதுகாப்பளித்தனர் அந்த ஊரின் கன்னடச் சகோதரர்கள்!
வந்த கன்னட யாத்ரீகர்களை இந்து மக்கள் கட்சியினர் பூர்ண கும்பம் கொடுத்து
வரவற்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளுக்கு
தமிழ்நாடு அரசு முழு பாதுகாப்பு அளித்தது. தும்கூரில், தமிழ்நாட்டு லாரி
ஓட்டுநர்கள் 250 பேரை 2-3 நாட்கள் தங்கவைத்து உணவளித்து அவர்களது வாகனங்களுக்கும்
பாதுகாப்பளித்தனர் அந்த ஊரின் கன்னடச் சகோதரர்கள்!
2007ல் கர்நாடகத்தில் ஆட்சி செய்த பாஜக – ஜனதாதள அரசு எந்தப் பெரிய கலவரங்களும் பதற்றங்களும் ஏற்படாமல் சிறு சலசலப்புகளுடன் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடும் சம்பிரதாயத்தைக் கையாண்டது. ஆனால், இப்போதைய காங்கிரஸ் மாநில அரசும், கர்நாடகத்தில் உள்ள பாஜக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும் கன்னடக் குறுங்குழுக்களின் செயல்பாடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை மறைமுகமாக ஆசியளிக்கின்றனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கண்டனத்திற்குரிய வகையில் கர்நாடகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினையை வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர். ஒப்பீட்டில், ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு சட்டரீதியான தீர்வுகளையும் நீதிமன்றங்களையுமே சார்ந்து தனது ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்குமிடையேயான பண்பாட்டு, சமூக உறவுகள் மிக உறுதியானவை. சங்ககாலம் தொட்டுத் தொடர்ந்து வருபவை. இருமாநிலங்களிலும் தமிழ், கன்னட மொழி பேசும் மொழிச்சிறுபான்மை சமூகத்தினர் பல நூற்றாண்டுகள் அந்தந்தப் பிரதேசங்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்து வருகின்றனர். எந்தக் காரணம் கொண்டும் இந்தப் பிணைப்பும் நல்லுறவும் சேதப்பட அனுமதிக்கக் கூடாது.
காவிரி என்ற பெயர் இருமாநில மக்களின் இதயங்களிலும் எழுப்பும் உணர்வு சாதாரணமானதல்ல. அவள் நம் அன்னை. இன்று நேற்றல்ல, ஊழிக்காலம் வரை உணவூட்டி வளர்க்கப் போகும் தாய். ஒருதாய் மக்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை அந்தத் தாயன்பின் வல்லமை கொண்டே தீர்ப்போம்.
வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி
– இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
உசாத்துணைகள்: