தமிழகத்தில் பள்ளிக்கல்வி
அனீஷ் கிருஷ்ணன் நாயர்
தமிழகத்தில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பே ஒரு தேய்வழக்காகிவிட்டது. இந்தத் தலைப்பில் ஒரு விவாதத்தை நடத்த தேநீர்க் கடைகளில்கூட யாரும் தயாராக இல்லை. கல்வி வணிக மயமாகிவிட்டது என்று உரத்துக் கூவிவிட்டு அனைவரும் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். வடமாநிலங்களில் நடக்கும் தேர்வு மோசடிகளை நக்கல் செய்யும் வேளையில் நமது மாநிலத்தின் நிலையைக் குறித்து யாரும் யோசிப்பது இல்லை.
‘வணிக மயம்’ என்று கூறிவிட்டு நம் கண்முன் தெரியும் நோய்க் குறிகளை அசட்டை செய்ய முடியாது.

கடந்த மாதத்தில் நடந்த இரண்டு நீதிமன்ற வழக்குகள் நமது கல்விமுறையில் உள்ள பிரச்சினைகளை வெளிச்சம் இட்டுக் காட்டுகின்றன. இரண்டு நீதிமன்ற வழக்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டுமே தகுதி /நுழைவுத் தேர்வு தொடர்பானவை.
NEET(National Eligibility
Cum Entrance Test)
மற்றும் TET (Teacher
Eligibility Test) ஆகியவை குறித்த வழக்குகளையும், அதன் பின்புலத்தையும் ஆராய்ந்தால் நாம் அதிர்ச்சி அடைவோம்.

I
முதலில் நாம்
NEET தொடர்பான தீர்ப்பைக் குறித்து பார்ப்போம்.(1) உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி மருத்துவப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஒன்றினை மத்திய அரசு அறிவித்தது. நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவித்தது. மருத்துவக் கல்வியில் புழங்கும் கோடிகளைப் பற்றி நமக்குத் தெரியும்.
NEET என்பது நிர்வாக இடங்களில்கூட ஒருவிதமான தர வரிசை உருவாக வழி செய்கிறது. அதாவது நிர்வாகிகள் தங்கள் விருப்பப்படி நன்கொடை வாங்கிக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது. இத்தகைய ஒரு தேர்வை அனைவரும் கைதட்டி வரவேற்றிருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? பெற்றோர்களும் மாணவர்களும் பதறிப் போனார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு இறுதி வரை போராடியது. கருணாநிதி முதல்வர் ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டினார்.
NEETல் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குப் பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார்.
ஒரு நுழைவுத் தேர்வை எழுதி அதன் வழியாக மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் நமக்கு என்ன
பிரச்சினை?[1]. வேறு எங்கும் இல்லாத, மிகச்சிறந்த சமச்சீர்க் கல்வி முறையில் அடிப்படைகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டவர்களாகிவிட்ட நமது மாணவ மாணவியர் இதில் கலந்து வெற்றி வாகை சூடலாமே! நமது பாடத்திட்டம் மத்திய அரசின் பாடத்திட்டத்தைவிடத் தரமானதாக இருக்கிறது என்றால் தமிழக மாணவர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வு மிக எளிதானதாக அல்லவா இருக்க வேண்டும்?

நமது பாடத்திட்டம் மத்திய அரசின்
CBSE பாடத்திட்டத்துக்கு இணையாகத் தரமாக இல்லை என்றால் ஏன் அது சீர் செய்யப்படவில்லை? இதையல்லவா அரசும் மக்களும் யோசிக்க வேண்டும். அதனை விட்டு உச்ச நீதிமன்றத்தில் கருணை மனு போடுவதால் என்ன பயன்?

இரண்டாவது வழக்கு இன்னும் வேடிக்கையானது. இது ஆசிரியர் தகுதித் தேர்வைக் குறித்தது.
TET என்றழைக்கபடும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தங்களுக்கு விலக்குத் தரவேண்டும் எனக் கோரி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தொடுத்த வழக்கு[2].
RTE (Right To Education) என்றழைக்கப்படும் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என மத்திய அரசின் அமைப்பான
NCTE அறிவித்தது(3). இத்தேர்வில் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களைச் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்,
2010ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இது அவசியம். இதனை எழுதித் தேர்ச்சி அடைவதில் என்ன சிக்கல்?

சிறுபான்மையினரால் நடத்தப்படாத அரசு உதவி பெறும் பொதுப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு ஈடான சம்பளத்தை, அரசு உதவி பெறும் சிறுபான்மைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பெறுகிறார்கள். ஒரே விதமான சம்பளம், ஒரே
பாடத்திட்டம், ஒரே பதவி. ஆனால் தகுதித் தேர்வில் மட்டும் விதிவிலக்கு வேண்டும்.
இதுதான் கோரிக்கை.

அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டி, உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்றது.
[இத்தகைய தீர்ப்புகள் விளைவுகளைக் குறித்து
Oxford Handbook of The Indian Constitution நூலில்
K. Vivek Reddy எழுதிய “Minority
Educational Institutions” என்னும் கட்டுரை சிறப்பாக விளக்குகிறது.]
ஏனையப் பெரும்பான்மை /தனியார்ப் பள்ளிகளில் பணிபுரியும் பல ஆசிரியர்களும் இந்தத் தீர்ப்பை பொறாமையுடன் எதிர்கொண்டனர். ஒட்டுமொத்தமாக
TET ஐ ஒழித்தால் அவர்களுக்கு நிம்மதி. தரத்தைக் குறித்துச் சிந்தித்தவர்கள் வெகு சிலரே.

தகுதித் தேர்வை எதிர்க்கும் ஆசிரியர்களும் நுழைவுத்தேர்வுகளை எழுத விரும்பாத மாணவர்களும் இணைந்து உருவாக்கும் சித்திரம் புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானது.
II
தனியார்ப் பள்ளிகளின் தில்லுமுல்லுகள், கோழிப்பண்ணை பாணி பயிற்சி ஆகியவற்றைக் குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வித்தை காட்டும் குரங்கிற்கு வித்தைக்காட்டியால் எத்தகைய துயரங்களும் நீங்காத பாதிப்புகளும் ஏற்படுமோ, அத்தகைய துயரங்களும் பாதிப்புகளும் பெரும்பாலான தனியார்ப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஏற்படுகின்றன.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கதை வேறு. சில விதிவிலக்குகளைத் தவிர்த்து ‘வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை’ கதைதான். கற்பித்தலைக் கைகழுவி விடுவது, அல்லது மாவட்டக் கல்வி அதிகாரி/ஆட்சித் தலைவர் போன்றவர்கள் தரும் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல், பாடங்களை எடுப்பதற்குப் பதிலாக, தேர்ச்சி அடையத் தேவையான குறுக்கு வழிகளை மாணவர்களுக்குக் காட்டிக்கொடுப்பது.
கடுமையான கல்வி அதிகாரிகள் வந்தால் ஆசிரியர்கள் திருந்துவார்கள் எனச் சிலர் எண்ணுகின்றனர். நடப்பதோ அதற்கு நேர்மாறான விஷயம். உதாரணத்திற்கு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துமாறு ஓர் ஆங்கில ஆசிரியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அவர் சில தில்லுமுல்லுகளைச் செய்யத் தொடங்குவார்.
Precise writing என்னும் சுருக்கி எழுதுதலை ஒரே நிமிடத்தில் கற்றுக்கொடுத்துவிடுவார்.
‘ஒரு வரியை விட்டு ஒரு வரியை எழுது’ என்று மாணவர்களிடம் கூறி விடுவார். பத்தி சுருங்குவதற்கு முன்பாகவே மாணவர்களின் அறிவு சுருங்கிவிடும். ஆனால் மதிப்பெண்கள் ஓரளவு கிடைக்கக்கூடும். அத்தகைய மதிப்பெண்களைக் கொண்டு, தேர்ச்சியைக் கொண்டு யாருக்கு என்ன லாபம்?

III
பள்ளிக் கல்வியில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனில் நாம் பல அடிப்படை விஷயங்களை, நமது அரசியல் சரிநிலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, சரிசெய்ய வேண்டும்.
முதலில் நம்முன் நிற்கும் கேள்வி என்னவென்றால் இன்று எத்தகைய நபர்கள் ஆசிரியர் பணியைத் தேர்வு செய்கின்றனர் என்பதுதான். ஒரு காலத்தில் தலைசிறந்த மாணவர்கள்தான், அவர்களது ஆசிரியர்களால் ஈர்க்கப்பட்டு ஆசிரியப் பணிக்கு வருவார்கள். இன்று உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள எத்தனை ஆசிரியர்கள் பல்கலைக்கழக அளவில் முதன்மை இடங்கள் பெற்றிருந்தார்கள் அல்லது கல்லூரிக் காலத்தில் வகுப்பில் முதன்மை பெற்றிருந்தார்கள் என்று விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியும். கல்லூரியில் நன்றாகப் படிப்பவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் பணிக்குச் செல்வதில்லை. கல்விப் பணியில் ஆர்வம் உள்ள மாணவர்கள்கூட
B.Ed. மற்றும் D.T.Ed. கல்வியியல் கல்லூரிக்குச் செல்லத் தயங்குகின்றனர். ஒழுங்காகப் படித்து முடித்தாலும் அரசு வேலை/அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்குமா என்ற எண்ணம்தான் காரணம். குறிப்பாக, அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர்களைப் பணியமர்த்தும் விதம் பிரம்ம ரகசியம்.

அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுக் கல்வியியல் கல்லூரியில் படிக்கும் தலைசிறந்த மாணவர்களுக்குக் கணிசமான உதவித்தொகை தர வேண்டும். மேலும் அனுபவம் உள்ளிட்ட பல காரணங்களைக் கூறாமல் கல்லூரித் தேர்வுகளிலும், தகுதித்தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றால் அரசுப் பணி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஜாதி, மொழி, மதம், வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் திறமை அடிப்படையில்
100% ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே கற்பித்தலின் தரம் கூடும். திறமையான ஆசிரியர் ஒருவர் வேலைக்கு எடுக்கப்பட்டால் ஒரு சமுதாயமே முன்னுக்கு வரும்.

TET
தகுதித் தேர்வை அனைத்துப் பள்ளிகளில் (தனியார் பள்ளி உட்பட) பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கட்டாயத் தகுதியாக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு மற்றொரு தகுதித் தேர்வை வைக்க வேண்டும். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. ஆனால் அந்தச் சட்டபாதுகாப்பைக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கவேண்டுமா என்று அவர்கள் யோசிக்கவேண்டும்.

ஆசிரியர்களைத் திறமை அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் தேர்வு செய்வதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தகுதித் தேர்வு/புத்தாக்கத் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைவது கட்டாயமாக்கப்படவேண்டும்.
மக்கள்தொகைக்
கணக்கெடுப்பு, ஆதார் அட்டை, தேர்தல் பணிகள் ஆகியவற்றில் ஆசிரியர்களை
ஈடுபடுத்தக்கூடாது. இந்தப் பணிச்சுமைகள் கற்பித்தலைப் பாதிக்கும். இதனால் உருவாகும் அழுத்தம் வகுப்பறையில் பிரதிபலிக்கும். மேலும் இந்தப் பணிகளை எழுத்தறிவு உள்ள எந்த ஒரு கடைநிலை அரசாங்க ஊழியரும் செய்ய இயலும். இப்பணிக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அடுப்பை எரிப்பதற்கு ஒப்பானது. மாவட்டக் கல்வி அதிகாரி போன்ற பணி இடங்களைச் சுழற்சி முறையில் மாற்றினால், ஓர் ஆசிரியர் இறுதி வரை ஆசிரியராகப் பெருமிதத்தோடு இருக்கலாம். மாவட்டக் கல்வி அதிகாரி,
CEO /DEO போன்ற பள்ளிக்கல்வி இயக்குநரகப் பணிகள் போன்ற நிர்வாகப் பணிகளுக்குச் செல்பவர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் அப்பணிகளில் இருக்கக் கூடாது. ஒருமுறை நிர்வாக பணிக்குச் சென்றால் அடுத்த ஆறாண்டுகளுக்கு மறு நியமனம் கூடாது.

அரசு, பள்ளித் தேர்வு தேர்ச்சி விகிதத்தைக் கண்காணிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
100% தேர்ச்சி என்றாலே ஏதோ பிரச்சினை என்றுதான் பொருள். மாறாகக் கற்பித்தல் ஒழுங்காக நடக்கிறதா என்று கண்காணித்தால் போதுமானது. எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி அளித்து அவர்களைக் கொண்டு பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.
தனியார்ப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ, எதுவானாலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன என்றால் அவற்றை அரசாங்கமே கைப்பற்றி நடத்த வேண்டும். அவை சேவை நிறுவனங்களே. வணிக நிறுவனங்கள் அல்ல. எனவே அரசாங்கம் தாராளமாக இதனைச் செய்யலாம்.
மாநில அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பாத பெற்றோர்கள் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயாவில் தங்கள் குழந்தைகளை எப்பாடுபட்டாவது சேர்க்க முயல்கின்றனர். இது ஏன் என்பதை மாநிலக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும்.
பெற்றோர்கள்
Brand Valueஐக் கொண்டு பள்ளிகளைத் தேர்வு செய்வதால்தான் பல முன்னாள் சாராய வியாபாரிகள் இன்று அதனைவிட லாபகரமாக இருக்கும் இந்தத் தொழிலில் குதித்துள்ளனர். உங்கள் குழந்தையின் கல்வி என்பது வாகனச் சேவை அல்ல. எந்தப் பள்ளியில் சேர்த்தாலும் உங்களது பங்களிப்பு, கவனம் ஆகியவை மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு நன்மை தரும்.

மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்குச் செல்வதாலேயே குழந்தைகள் ஆன்மிகப் பேரொளியாகவோ, உத்தம சீலனாகவோ மாறப்போவதில்லை. ஒருவேளை மாணவர்கள் எதிர்த்திசையில் நடக்கும் வாய்ப்பும் உண்டு. ஆன்மிகத்தையும், ஒழுக்கத்தையும் உங்கள் வாழ்வில் இருந்து உங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ளட்டும். தமிழக் கல்வி முறையிலும் பள்ளிகளும் மாற்றங்களைச் செய்யவேண்டிய காலம் கடந்துபோய்விட்டது. இனியும் இந்நிலை நீடித்தால், கல்வி அறிவற்ற ஆனால் பட்டங்கள் பல கொண்ட ஒரு சமுதாயத்தைத்தான் நாம் விட்டுச் செல்வோம்.
அடிக்குறிப்புகள்: