‘கர்மகாண்டம்’ எனப்படும் சடங்குகளைத் துறந்து, அறிவுத் தேடலில் ஈடுபடும் ‘ஞானகாண்டம்’ என்பதான இயக்கத்திற்கு உபநிஷதங்களில் சான்று உள்ளது. இந்த இயக்கத்தையே பிற்பாடு புத்தரும் பின்பற்றினார். கானகத்திற்குச் செல்லுதல் என்ற இந்து நடைமுறையை மேற்கொண்டதன் பின், அவர் இரண்டு குருமார்களிடமிருந்து கற்றுக்கொண்ட தியான முறைகள் உட்பட பல வழிமுறைகளை முயன்று பார்த்தார். எவையும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும், அவற்றைத் தனது பௌத்தப் பாடத்திட்டத்தில் சேர்க்க அதுவே போதுமானதாக இருந்தது. அனபனஸதி (Anapanasati) அதாவது மூச்சுக்காற்றைக் கவனித்தல் என்ற வழிமுறையை அவர் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது. இன்று ஒவ்வொரு யோகப்பள்ளியிலும் பிரபலமான இருக்கும் யோக முறைதான் அது. சில காலங்கள், இந்துமதப் பிரிவான ஜைனத்தில் உள்ளது போன்றே அதிதீவிர துறவு நெறியையும் அவர் பின்பற்றினார். ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு குழுவில் சேர்வதற்கும், பிறகு அதிலிருந்து விலகுவதற்குமான இந்து மதத்திற்கே உரியதான சுதந்திரத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்துவாகவே நீடித்தார்.
தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.
அமெரிக்காவின் 9/11, இந்தியாவின் 26/11க்குப்பிறகு ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டேயாக வேண்டும். அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது அதன் தீவிரத்திலும் நம்பமுடியாத அதிர்ச்சியிலும், அரசாலும் பாதுகாப்பு விற்பன்னர்களாலும் உடனடியாகச் செயல் படமுடியவில்லை. இப்படியெல்லாம் கூடத் தாக்குதல் வருமா என்னும் அதிர்ச்சியே மேலோங்கி ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவிலும் நவம்பர் 26 தாக்குதலின்போது தீவிரவாதிகளின் துணிச்சல் அதிர்ச்சி அடையவைத்துவிட்டது. இனி இது போன்ற தாக்குதல்களை முன்பே கண்டுபிடிப்பதும் அந்தத் தாக்குதல்களின் தீவிரத்தை ஒடுக்க முனைவதும் மிக முக்கியம்.
நம் காலத்துக்கு வெகு அருகில் வாழ்ந்து மறைந்த தாகூர் மட்டுமல்ல, நமது வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞர்கள் அனைவரிடமுமே காளிதாசனின் பாதிப்பு உண்டு. அதனால் தான் கவி குல குரு என்றே சம்ஸ்கிருத மரபில் அவனை அழைக்கிறார்கள்.
இவ்வளவு பெருமை உள்ள கவியரசன் தன்னை எப்படி கருதிக் கொள்கிறான் தெரியுமா?
மந்த³: கவியஶ:ப்ரார்தீ²
க³மிஷ்யாம்யுபஹாஸ்யதாம்|
ப்ராம்ʼஶுலப்⁴யே ப²லே லோபா⁴து³த்³ப³ஹுரிவ வாமன:||
“கவிஞர்களுக்கே உரிய பெருமையை விரும்பி மந்தனான நானும், எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டு துள்ளித் துள்ளிக் குதித்து ஏமாந்து நகைப்புக் கிடமாகும் குள்ளனின் நிலையை அடைவேனோ” என்கிறான்.
உவமை என்றால் காளிதாசனின் உவமைகளே (உபமா காளிதாசஸ்ய) என்றொரு வழக்கு உண்டு. எத்தனை கோணத்திலிருந்து ஒப்பு நோக்கினாலும் பொருந்தக் கூடிய உவமைகள் அவை.
மரபின் பல சடங்குகள் நம்மில் பழக்கங்களை எதிர்பார்க்கின்றன. காலையில் தியானம், யோகா, கோயில் செல்லுதல் போன்றவை, பழக்கங்களை முன்னிறுத்துகின்றன. மனக்குவியத்தை இப்பழக்கங்கள் வளர்ப்பதோடு, ஒரு சுய ஆளுமையை மெல்ல மெல்ல உறுதிப்படுத்துகின்றன. ஒரு நற்பழக்கத்தின் வளர்ப்பு, வாழ்க்கையில் பல இடங்களில் வெற்றியைக் கொண்டுவர முடியும். ஒரு பழக்கத்தையேனும் கைக்கொள்ள, ஒரு தீயபழக்கத்தையேனும் கைவிட முயற்சிப்பது பெரும்பயனைத் தரும். வாழ்வு மரத்தான் ஓட்டம், நூறு மீட்டர் ஓட்டமல்ல.
அசோகரின் தவ்லி பிரகடனம் அசோகரின் பிரகடனங்கள் என்று மற்ற ஊரில் காணப் படும் கல்வெட்டுகளில் 1 முதல் 14 பிரகடனங்கள் உள்ளன. ஆனால் போர் நடந்த இடமான இந்த தவ்லியில் 11, 12, 13 மூன்றும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஸ்பெஷல் எடிக்ட்ஸ் என்று வகையறுக்கப்பட்டிருக்கும் இரண்டு பிரகடனங்களைக் காண்கிறோம்.
முதல் பத்து, மிருகவதை கூடாது, பலியிடுதல் கூடாது, அனைவரும் சமம், தர்மம் பரப்பப்பட வேண்டும் எனப் பல கட்டளைகளைச் சொல்கிறது. 11, 12, 13 மூன்றும் சகிப்புத் தன்மை, தர்மம், அசோகரின் கலிங்க வெற்றி இவற்றைப் பற்றி இருப்பதால், கலிங்கப் போர் நடந்த இடத்தில் இவை பொருத்தமாக இருக்காது என்பதாலும்,புரட்சிக்குக் காரணமாகலாம் என்பதாலும் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இதற்குப் பதிலாக இரண்டு பெரிய பிரகடனங்களைக் காண்கிறோம்.
இந்த உலகத்தில் வாழிடத்துக்காகவும், பிழைப்புக்காவும் இடம்பெயரும் ஜீவன்களில் மனிதர்களும் அடக்கம். ஆப்பிரிக்காவில் தொடங்கி, கண்டம், தீவுகள் எனத் தாறுமாறுகாக இடம் பெயர்ந்திருக்கிறோம். கிட்டத்தட்ட நடந்தே போய்ப் பல கண்டங்களில் குடியேறியிருக்கிறோம். ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கெல்லாம் எப்படிப்போனோம் என்பது இப்போது வரை பெரிய பிரமிப்புதான், காந்தப்புலத்தை அறியும் அளவுக்கு நமது மூளைக்குத் திறமையில்லை என்றாலும், இந்த நகர்தலுக்கு நம் மூளை பழக்கப்பட்டதுதான். இன்னும் பார்த்தால் வேட்டைச் சமூகக் காலத்தில் எதையாவது துரத்திப்போய் அடித்துக்கொண்டு மீண்டும் வீடோ, குகையோ திரும்புதல் என்பது உயிர்வாழ்தலுக்கு அத்தியாவசியமான ஒன்று. நமது மூளையில் அதற்கு உரிய பங்கு இருக்கிறது. மூளையின் இரண்டு அரைக்கோளங்களுக்கு அடியிலும் குர்குரே சிப்ஸ் போன்ற ஒரு வடிவத்தில் மூளையின் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த ஏரியாவின் பெயர் ஹிப்போகாம்பஸ் (Hippocampus). ஹிப்போகாம்பஸ் குறுகிய கால ஞாபகத் திறன், நெடுங்கால ஞாபகத் திறன் மற்றும் பரிமாண ஞாபகங்களை நிர்வகிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்தப் பெண்ணின் குரல், பயிற்சியால் எவராலும் எட்ட முடியாத ஒன்று. அது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற வரம். உருக்கி வார்த்து, அடித்து நீட்டி, மெலித்து மெருகேற்றிய தங்கக் கம்பி அல்ல இவரது குரல். தனக்காகத் தானாய் தன்னெச்சில் ஊற்றெடுத்து தன்கூடு தான் கட்ட உமிழ்ந்திழுத்த மென்பட்டு இழை. மின்பட்டுத் தாரை. வெட்டுப்பிசிறு இன்னதென்று அறியாத துகில்பட்டு. சுத்த சுயம்பிரகாசச் சுயம்பு. நாட்டுப் பாடல்களின் நன்நாற்றமும் நகர்பாடல்களின் மின்வெட்டுகளும் மென்பாடல்களின் உள்வண்ணமும் இவர் குரலில் பொங்கிப் பிரவகிக்கிறது. சோலையில் பூத்துகுலுங்கும் வளர்செடி போலல்லாமல் கடுங்காட்டின் நடுவில் கண்கூச ஒளிரும் பச்சைப் பசுஞ்செடி போலிருக்கிறது இவர் குரல். அது மல்லிகை மணமறியாமல் வளர்ந்து மலர்ந்திருக்கும் மல்லிகை.
“நோ கிருத்திகா. யூ ஆர் நாட் கெட்டிங்க் இட். எந்த ஒரு தம்பதிக்கு நடுவிலேயும் வழக்கமா வரக்கூடிய சண்டைதான் உங்க ரெண்டு பேருக்கும் இருந்திருக்கு.”
அதற்குள் அம்மாளின் கைபேசி சிணுங்கியது. “வணக்கம் மேடம். தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க். நாளைக்கி காலையில அபிஷேகத்துக்குக் கண்டிப்பா வருவேன். இப்போ ஒரு ‘கவுன்ஸிலிங்க். அப்பறம் கூப்பிடறேன்.”
“மேடம் என்னோட சர்ட்டிஃபிகேட் எல்லாத்தையும் கொளுத்தினாரே அதை நீங்க படிக்கலே?”
“என்ன கிருத்திகா குழந்தை மாதிரி பேசறீங்க? நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே?”
“மேம். யூ வாண்ட் டு டவுன் ப்ளே எனிதிங்க் பட் வோண்ட் கிவ் மீ டைவர்ஸ்.”
எப்படி வாஷிங் மிஷின் துணியைப் பிழிந்து அழுக்குத் தண்ணீரை வெளியே தள்ளுகிறதோ, அதே மாதிரி சிறுகுடல் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. பெருங்குடலுக்கு வந்து சேருபவை எலும்புத் துண்டு, பழக் கொட்டை (மாங்கொட்டை இதில் சேராது), நார்ச்சத்து போன்றவை.
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் பெருங்குடல் சிணுங்கும்.
ஆன்லைனில் இந்த இதழை மட்டும் வாசிக்க: http://nammabooks.com/valam-july?filter_name=valam&page=2
ஆன்லைனில் இபுத்தக சந்தா செலுத்த: http://nammabooks.com/valam-one-year-subscription?filter_name=valam&page=2
அச்சுப் புத்தகத்துக்கு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html