கோயில்களில் உள்ள முக்கியமான அம்சங்களுள் ஒன்று,
கல்வெட்டுகள். இவை ஏராளமான செய்திகளைத் தாங்கி நிற்கின்றன.
வரலாறு என்று தனியாக எதுவும் ஆவணப் படுத்தப்படவில்லை அல்லது அத்தகைய ஒன்று நம்
கைக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால், பொதுவாக,
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டின் வரலாறு பல்வேறு இலக்கியங்கள் மூலமாகவும்,
இத்தகைய எழுத்து வடிவச் செய்திகளின் மூலமாகவுமே அறியப்படுகிறது.
சங்க காலம் தொட்டு நம் வரலாற்றை ஓரளவு அறிய இவை உதவுகின்றன என்றாலும்,
இடையில் பல ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை அறிவது சிரமமாகவே உள்ளது.
உதாரணம் களப்பிரர்கள் ஆண்டதாகச் சொல்லப்படும் சங்க காலத்திற்குப் பிந்தைய காலம்
பற்றிய போதுமான விவரங்கள் நம்மிடம் இல்லை.

பல்வேறு மொழிகளையும், நாகரிகங்களையும்
கொண்ட நம் நாட்டின் வரலாறு விசித்திரமானது. அதைவிட
விசித்திரம், நாம் வரலாறு கற்கும் விதம்.
நம் பள்ளி வரலாற்றுப் புத்தகங்கள் பெரும்பாலும் மொகலாய சாம்ராஜ்யத்தையும்,
ஆங்கிலேய ஆட்சியையும் பற்றிச் சொல்வதாகவே உள்ளது. ஆனால்
நம் வரலாறு மிகத் தொன்மையானதல்லவா? அவற்றை நாம்
எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பது அதிர்ச்சி தரும் ஒரு விஷயம்.
பாபரும் அக்பரும் அறியப்பட்ட அளவு காரவேலனும்,
ராஜசிம்ம பல்லவனும் அறியப்படவில்லை.

இதற்குக் காரணம், நம்
வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களுமே இதை முக்கியமாகக் கருதவில்லை என்பதே.
நாம் அடிமைப்பட்ட வரலாற்றைப் படித்துப்
படித்தே, ஒரு தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆளப்பட்டோம் என்பது உண்மையே. ஆனால் அதற்குமுன் எவ்வளவு போராட்டங்கள்
நடந்தன என்பதை அறிவதும் இன்றியமையாதது. ஆனால் பள்ளிப் புத்தக வரலாறோ வேறு முகமாக எழுதப்படுகிறது.
உண்மையும், ஆழ்ந்த ஆராய்ச்சி சார்ந்ததாகவும் இல்லாத நிலையில்,
அந்த வரலாறு புறக்கணிக்கப் படுகிறது. வரலாறு
என்ற ஒரு துறையே பள்ளியில், கல்லூரிகளில் இல்லாத ஒரு காலத்தில் இப்போது இருக்கிறோம்.
இது சோகமான விஷயம்.

வாட்ஸப்பில் வரும், ‘கொனார்க்கில்
சூரியன் உள்ளே தெரியும், எல்லோரா ஏலியன்களால் கட்டப்பட்டது’
போன்ற உண்மையற்ற அபத்தங்களின் மூலம் நாமே நம் உயர்ந்த நாகரிகத்திற்கு நியாயம்
செய்யாமல் போய்விடுகிறோம். கல்வி, இலக்கியம்,
பல்வேறு கலைகள் இவற்றில் நாம் எத்தகைய உயர்ந்த நிலையில் இருந்தோம் என்பதைச்
சரியான முறையில் அறிந்து கொள்வது மிக முக்கியம். இது
நமக்கு ஒரு தன்மான உணர்வையும் பெருமையையும் தருவதோடு, நாட்டுப்பற்றையும்
பலப்படுத்தும்.

இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்,
பல்வேறு எழுத்துச் சான்றுகள், இவற்றை வைத்தே
நாம் வரலாற்றை அறியவேண்டும். பல கலைகளில் நாம் சிறந்திருந்ததற்குச் சான்றாக நிற்பவை
நம் கோயில்கள். கட்டுமானம் மூலமாகவும், சிற்பங்கள்
மூலமாகவும் நம் வரலாற்றுச் சிறப்பைச் சொல்லியபடி நிற்கும் இவற்றுள் விஷயப் பொக்கிஷமாய்
இருப்பவை இன்ஸ்கரிப்ஷன்ஸ். தனியாகப் பல இடங்களில் காணப்பட்டாலும் பெரும்பாலும்
கோயில்களிலேயே காணப்படுகின்றன.

இன்ஸ்க்ரிப்ஷன் என்பதற்குத் தமிழில் கல்வெட்டுகள் என்ற
பதமே உபயோகப்படுத்தப்படுகிறது. கல்லில் வெட்டப்பட்டவை கல்வெட்டுகள் சரி.
ஆனால் கல்லில் மட்டுமல்லாமல் செப்புத் தகடுகளிலும், மண்பானைகளிலும்
எழுத்துக்களைக் காண்கிறோம். இன்ஸ்க்ரிப்ஷன் என்ற வார்த்தை அனைத்துக்கும் பொதுவானது.
கல்லிலும், செப்புத் தகடுகளிலும் பொறிக்கப்பட்டிருப்பதால் பொறியெழுத்துக்கள்
என்று சொல்லலாம். இதைத் தமிழறிஞர்கள் முடிவு செய்யட்டும்.
நாம் பார்க்கப் போவது அவற்றிலுள்ள விவரங்கள்.

விவரங்களைப் பற்றிப் பார்க்குமுன் இவை எழுதப்பட்ட மொழி,
வடிவங்கள் இவற்றை சற்றே பார்க்கலாம். எகிப்தில்
தமிழ்ப் பொறியெழுத்துக்கள், மலேசியாவில் சம்ஸ்கிருதப் பொறியெழுத்துக்கள் என்று
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இவை விரவிக் கிடக்கின்றன.

இவை எழுதப்பட்ட மொழிகள் – தமிழ்,
சம்ஸ்கிருதம், ப்ராகிருதம் போன்றன;
சம்ஸ்கிருதம், ப்ராகிருதம் போன்றன;
எழுத உபயோகப்பட்ட லிபிகள் – கிரந்தம்,
பிராமி, தமிழ் வட்டெழுத்து, தமிழ்
பிராமி, தேவநாகரி போன்றன.
பிராமி, தமிழ் வட்டெழுத்து, தமிழ்
பிராமி, தேவநாகரி போன்றன.
பல்லவர்கள் பல்லவ கிரந்தம் என்றழைக்கப்படும் லிபியையும்
தேவநாகிரி லிபியையும் சம்ஸ்கிருதம் எழுத உபயோகப்படுத்தினர்.
தமிழுக்கு கிரந்தம், வட்டெழுத்து ஆகியவற்றை உபயோகப்படுத்தினர்.
ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள் பல்லவ கிரந்தத்திலேயே இருக்கின்றன.

நண்பர் ஒரு நிகழ்வைச் சொன்னார்.
ஆங்கிலேயர் ஒருவர் இங்கு வந்தாராம். கோயில்களில்
கல்வெட்டுகளில் எழுத்துக்கள் இருப்பதைக் காட்டி, ‘இதில்
என்ன எழுதியிருக்கிறது?’ என்று கேட்டாராம். அவரை
அழைத்துச் சென்ற தமிழர் தெரியாது என்றாராம். உடனே
இது என்ன மொழி என்று கேட்டாராம். தமிழ் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
‘நீங்கள் பேசுவதும் தமிழ், இதுவும் தமிழ், உங்கள்
தாய்மொழியும் தமிழ், ஆனால் இதைப் படிக்கத் தெரியாதா?’
என்று ஆச்சரியமாகக் கேட்டாராம். தொன்மையான ஒரு
மொழி பல எழுத்து வடிவங்களைப் பெற்று பல நூற்றாண்டுகளைக் கடந்து வரும் போது இத்தகைய
விசித்திரம் நிகழ்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இந்தக் கல்வெட்டு
ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாபிங்டன்,
வில்லியம் ஜோன்ஸ், லாக்வுட் எனப் பல ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தவற்றையே
நாம் இப்போது படித்து அறிய முயல்கிறோம். புதிதாகக் கல்வெட்டுகளும்,
செப்புத் தகடுகளும், எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்த வண்ணமிருக்கின்றன.
ஆனால் சிலராலேயே இவற்றைப் படிக்க முடிகிறது. தற்போது
இதைக் கற்க பல வகுப்புகள் இருந்தாலும் ஆராய்ச்சி போதுமான அளவில் இல்லை.
இவற்றுள் பொதிந்துள்ள விவரங்கள் படிக்கப்படக் காத்திருக்கின்றன.

இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த முக்கியமான சில
இன்ஸ்க்ரிப்ஷன்களைப் பார்ப்போம்.
இன்ஸ்க்ரிப்ஷன்களைப் பார்ப்போம்.
1. அசோகர் கல்வெட்டு. 262 பொ.மு.
(பொது யுகத்துக்கு முன்பு)
(பொது யுகத்துக்கு முன்பு)
பொ.மு.
நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கண்டறியப் பட்டிருக்கும் தமிழ் பிராமி
எழுத்து வடிவங்களும் அசோகரின் நீண்ட கல்வெட்டும் நமக்குத் தெரிந்தவரை மிகப்பழமையானவையாகக்
கருதப்படுகின்றன. இதுவரை கண்டெடுத்து, வரலாற்றாசிரியர்களால்
அங்கீகரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டதில் அசோகரின் கல்வெட்டுகளே முதன்மையானவை.
அசோகரின் தூண்களிலும், பாறைகளிலும் 33 பிரகடனங்கள்
பொறிக்கப்பட்டிருக்கின்றன. பிராக்ருத, கிரேக்க,
அரமாயிக் மொழிகளிலும் பிராமி, கரோஷ்டி லிபிகளிலும்
எழுதப்பட்டிருக்கின்றன.

இதில் ஒடிசாவில் தவ்லி என்ற இடத்தில் உள்ள பாறைப் பிரகடனம்
பிரசித்தமானது. அதைப் பார்ப்போம்.
பிரசித்தமானது. அதைப் பார்ப்போம்.
புவனேஸ்வர் அருகே தயா நதியின் கரையில் ஒரு பாறையில்
காணப்படும் இக்கல்வெட்டு, தர்மத்தைப் போதிப்பதாகச் சொல்கிறது.
இந்த இடத்தில்தான் கலிங்கப் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கலிங்கப் போரில் உயிர்ச் சேதம் அதிகமானதால் இந்த தயா ஆறு ரத்த ஆறாக ஓடியதாம்.
அதைப் பார்த்து அவர் மனம் கலங்கி தர்மவழியில் சென்றதாக அறிகிறோம்.
தோசாலி என்பதே தவ்லியாக மாறியிருக்கிறது.

இந்தக் கல்வெட்டு பிராக்ருத மொழியில் பிராமி லிபியில்
எழுதப்பட்டிருக்கிறது. தெளிவாகப் பொருள் அறியப்பட்ட கல்வெட்டுகளில் இதுவே
மிகப் புராதனமானது. கலிங்கப் போருக்குப் பின் இது பொது மக்களுக்குத் தினமும்
படித்துக் காட்டப்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

அசோகரின் தவ்லி பிரகடனம்
அசோகரின் பிரகடனங்கள் என்று மற்ற ஊரில் காணப் படும்
கல்வெட்டுகளில் 1 முதல் 14 பிரகடனங்கள்
உள்ளன. ஆனால் போர் நடந்த இடமான இந்த தவ்லியில் 11, 12,
13 மூன்றும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஸ்பெஷல் எடிக்ட்ஸ் என்று வகையறுக்கப்பட்டிருக்கும்
இரண்டு பிரகடனங்களைக் காண்கிறோம்.

முதல் பத்து, மிருகவதை
கூடாது, பலியிடுதல் கூடாது, அனைவரும் சமம், தர்மம்
பரப்பப்பட வேண்டும் எனப் பல கட்டளைகளைச் சொல்கிறது. 11, 12,
13 மூன்றும் சகிப்புத் தன்மை, தர்மம், அசோகரின் கலிங்க
வெற்றி இவற்றைப் பற்றி இருப்பதால், கலிங்கப் போர்
நடந்த இடத்தில் இவை பொருத்தமாக இருக்காது என்பதாலும்,புரட்சிக்குக்
காரணமாகலாம் என்பதாலும் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இதற்குப்
பதிலாக இரண்டு பெரிய பிரகடனங்களைக் காண்கிறோம்.

இந்த இரண்டும், ‘கடவுளுக்குப்
பிரியமானவரின் வார்த்தைகளிலிருந்து…’ என்று தொடங்கிப்
பல கருத்துகளைச் சொல்கின்றன. ‘அனைவரும் என் குழந்தைகள். அனைவருக்கும்
நல்வழி காட்டுவதே என் விருப்பம். நாம் தர்ம வழியில் நடக்கவேண்டும்.
பொறாமை, கோபம், அவசரம்,
அலுப்பு, சோம்பல் இவை நம்மை தர்ம வழியில் நடக்க விடாது.
அதனால் இவை நம்முள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோபமில்லாமல் இருப்பதும், அவசரமில்லாமல் இருப்பதும் இதற்கு மிக அவசியமானது.
தர்ம வழியில் செல்ல அலுப்புற்றவன், வாழ்வில்
உயர முடியாது. தர்மத்தைக் கடைப்பிடித்து நேரான வழியில் சீராகச் சென்று
முன்னேற வேண்டும்… என்று பல நற்கருத்துகளைச் சொல்கிறது.

அசோகர் திக்விஜயம் செய்து பல நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்தை
விரிவுபடுத்தியதையும், மக்கள் தர்ம வழியில் இருக்க அவர் எடுத்த முயற்சிகளையும்,
அவர் செய்த பல திட்டங்களையும் இக்கல்வெட்டுகளால் அறிகிறோம்.

2. காரவேலன் கல்வெட்டு
– 180 பொ.மு.
– 180 பொ.மு.
இதன் சிறப்பு இதில் பல தேதிகள் குறிப்பிடப்பட்டிருப்பதே.
பல அரசர்களைப் பற்றியும், நிகழ்ச்சிகளைப் பற்றியும் இதில் குறிப்புகள் இருப்பது
வரலாற்று ஆசிரியர்களுக்கு உபயோகமாக உள்ளது.

புவனேஸ்வர் அருகில் உள்ள ஹதிகும்பா குகையில் பிராக்ருத
மொழியில், பிராமி லிபியில் எழுதப்பட்ட இந்த காரவேலன்
கல்வெட்டு இம்மன்னனின் பல திட்டங்களை அவை நடந்த வருடங்களோடு குறிப்பிடுகிறது.

இதன் மற்றொரு சிறப்பு, இதில்
தமிழ்நாட்டின் அரசர்களைப் பற்றிய குறிப்புகள். குதிரைகள்,
முத்துகள் இவற்றை பாண்டிய மன்னனிடம் பெற்றுக் கொண்டதாகச் சொல்கிறது இக்கல்வெட்டு.

ஆட்சியின் முதல் வருடம் கோட்டை வாயிலைச் சரி செய்ததாகவும்,
இரண்டாம் வருடம் சதகர்ணி மகாராஜாவை மீறி, குதிரை,
யானை, தேர்ப்படைகளை மேற்கு நோக்கி அனுப்பி வெற்றி கண்டதாகவும்,
அந்நாட்டின் பொருட்களை அடைந்ததாகவும், பாசனத்திற்கு
நீர்வழிகளை அமைத்ததாகவும், மகத நாட்டை வென்றதாகவும் இக்கல்வெட்டு வருடா வருடம்
காரவேலனின் ஆட்சியில் நடந்தவற்றைச் சொல்கிறது. கோட்டையைச்
சரி செய்ய ஆன செலவைக் கூட 35,00,000 நாணயங்கள் என்று
குறிப்பிடுகிறது.

3. மண்டகப்பட்டு கல்வெட்டு – 600 பொ.பி.
திண்டிவனம் அருகே உள்ள மண்டகப்பட்டு எனும் இடத்தில்
காணப்படும் பல்லவர்காலக் கல்வெட்டு. சம்ஸ்கிருத
மொழியில் பல்லவ கிரந்த லிபியில் எழுதப்பட்டது.

மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட இக்குகைக் கோயிலில்
மூன்று பகுதிகளும், இரண்டு புறமும் துவாரபாலகர்களும் இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை கோயில்கள் சுதையாலேயே கட்டப்பட்டு வந்தன. காலத்தால்
அழியாத கோயிலை நிர்மாணிக்கும் பொருட்டு விசித்திர சித்தன் என்று அழைக்கப்படும் மகேந்திர
பல்லவன் கல்லிலேயே கோயில் கட்டுகிறான். இதை விளக்கும்
வரிகளே இங்கு இருக்கும் கல்வெட்டில் காணப்படுகிறது.

ஏதத் அனிஷ்டம் அத்ருமம் அலோகம் அசுதம்
விசித்ர சித்தேந நிர்மாபித ந்ருபேண
ப்ரம்மேஷ்வர விஷ்ணு லக்ஷிதாயதநம்.
மரமில்லாத, சுதையில்லாத,
உலோகமில்லாத கோயிலை விசித்திர சித்தனானவன் பிரம்மா, விஷ்ணு,
சிவன் ஆகியோருக்காகப் படைக்கிறான் என்கிறது இக்கல்வெட்டு.
இதுவே முதன்முதலாகக் கட்டப்பட்ட ஒரே கல்லில் அமைக்கப்பட்ட கற்கோயில் என்பதை
இதன் மூலம் அறிகிறோம்.

3. நரசிம்ம பல்லவர் கல்வெட்டு:
642 – 654 பொ.பி.
642 – 654 பொ.பி.
தற்போது பாதாமி என்றழைக்கப்படும் சாளுக்கிய தேசத்தின்
வாதாபி நகரத்தில் காணப்படுகிறது இக்கல்வெட்டு. பாதாமி
மியூசியம் அருகே உள்ள பாறையில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சம்ஸ்கிருத மொழியில், கிரந்த லிபியில் எழுதப்பட்டது.

புலிகேசி, மகேந்திரவர்ம
பல்லவனைத் தோற்கடிக்கிறார். அதற்குப் பதிலாக நரசிம்மவர்மர் பரஞ்சோதி தலைமையில்
படையை வாதாபிக்கு அனுப்பி வெற்றி வாகை சூடி பன்னிரண்டாண்டு காலம் வாதாபியில் ஆட்சி
செய்ததைக் கூறுகிறது இக்கல்வெட்டு.

5. அதிரணசண்ட கல்வெட்டு – 700 பொ.பி.
மாமல்லபுரத்தில் சாளுவங்குப்பத்தில் உள்ள அதிரணசண்ட
மண்டபத்தில் இருபுறமும் காணப்படும் கல்வெட்டுகள். சம்ஸ்கிருத
மொழியில் பல்லவ கிரந்தத்தில் ஒரு புறமும், நகரி
லிபியில் ஒரு புறமுமாக ஒரே விஷயம் அழகாகத் தெளிவாகச் செதுக்கப் பட்டிருக்கிறது.
முதல் நான்கு வரிகள் சிவனின் புகழைக் கூறுகின்றன. முதல்
வரி அத்யந்த காமாஸ்ய என்று ஆரம்பிக்கிறது. இதன்
மூலம் இது ராஜசிம்ம பல்லவனைக் குறிக்கிறது என அறிகிறோம். காஞ்சிபுரம்
கயிலாசநாதர் கோயில் என்ற அற்புதத்தைக் கட்டுவித்த அதே ராஜசிம்ம பல்லவன் இந்த சாளுவங்குப்பத்தில்
உள்ள அதிரணசண்டேஸ்வரம் என்ற இந்தக் கோயிலையும் கட்டுவித்தான்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் பிராகாரம் முழுவதும் எழுத்துக்கள்
பொறிக்கப்பட்டிருக்கின்றன. ராஜசிம்மனின் பல்வேறு பெயர்கள் கிரந்தம்,
தேவநாகரி, அழகேற்றப்பட்ட எழுத்து வடிவம்
(காலிக்ராஃபி) என்று மூன்றுவிதமான லிபியில் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இதே கோயிலில் மற்றுமொரு கன்னட மொழிக் கல்வெட்டு, காஞ்சியின்
மீது படையெடுத்து வந்த சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தியன் இந்த கோயிலைக் கண்டதும் மயங்கி
அதற்குப் பொன்னும் பொருளும் அளித்ததாகக் கூறுகிறது.

6. உத்திரமேரூர் கல்வெட்டு – 917 பொ.பி.
உத்திரமேரூர், பராந்தகச்
சோழன் காலத்தில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு.

நான்மறை உணர்ந்த வேதியர்கள் நிறைந்த ஊராதலால் உத்திரமேரூர்
சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்படும் ஊரில், ஊர்ப்
பெருமக்கள் சபை இயங்கி வந்ததை இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.
சபை நிர்வாகம் வாரியம் வாரியமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு
நிர்வாகம் நடந்திருக்கிறது. குடவோலை மூலம் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் தகுதி பற்றிக் கல்வெட்டு
கூறுகிறது. அதன்படி

1. கால் வேலிக்கு மேல் இறை கட்டும்
நிலம் வைத்திருக்கவேண்டும்
நிலம் வைத்திருக்கவேண்டும்
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30க்கு மேல்
60க்குள் இருக்கவேண்டும்
60க்குள் இருக்கவேண்டும்
4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும்
நிபுணராக இருக்கவேண்டும்
நிபுணராக இருக்கவேண்டும்
5. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான
ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக
இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும்,
அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.

சபை உறுப்பினராகக் கோரப்படும் தகுதிகள் (இரண்டாம் கல்வெட்டு):
1. கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக் கூடிய சொந்த நிலம்
பெற்றிருக்க வேண்டும்.
பெற்றிருக்க வேண்டும்.
2. அந்நிலத்தில் சொந்த மனை இருக்கவேண்டும்.
3. வயது வரம்பு முந்தைய கல்வெட்டில்
30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின்
அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள்
என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின்
அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள்
என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. மந்தர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச்
சொல்லுபவன்.
சொல்லுபவன்.
5. 1/8 நிலமே பெற்றிருப்பினும்
1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.

6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான
ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
7. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக
இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும்,
அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும்,
அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
8. ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும்
அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முன்
கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை.) தாயின் சிறிய,
பெரிய சகோதரிகளின் மக்கள் – தந்தையின் சகோதரிமக்கள் – மாமன்
– மாமனார் – மனைவியின் தங்கையை மணந்தவர்
– உடன்பிறந்தாளைத் திருமணம் செய்தவர் – தன்
மகளை மணம் புரிந்த மருமகன் . இதுபோன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு
எழுதுதல் கூடாது.

9. ஆகமங்களுக்கு எதிராகப் பஞ்சமா பாதகங்கள் செய்தார்,
கொள்கையை மீறுபவன், பாவம் செய்தவர்கள், கையூட்டுப்
பெற்றவர்கள் அதற்கான பரிகாரங்களைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் அவர்கள் உறுப்பினராகும்
தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
கொலைக்குற்றம் செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால்
கொலைக்குற்றம் செய்பவர், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்,
ஊர் மக்களுக்கு விரோதியாய் இருப்போர் (கிராம
கண்டகர்) இவர்கள் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.

10. கழுதை ஏறியோரும்,
பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத் தகுதியற்றோராவர்.

இதன் மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது
தெளிவாகிறது.
தெளிவாகிறது.
என்ன அருமையான விவரங்கள் பாருங்கள்.
உறுப்பினர்களுக்குத் தேவையான தகுதியைப் பாருங்கள். இப்போது
நாம் தேர்ந்தெடுப்பவருக்கு இதில் இரண்டு தகுதியேனும் இருக்குமா?
நாம் ஏன் இதை நம் நாட்டுத் தேர்தல் விதிமுறைகளாக ஆக்கக் கூடாது?

இதை நடைமுறைப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
நம் நாட்டில் கல்வெட்டுகளின் கதியைப் பற்றி ஒரு அனுபவம்.
கர்நாடகத்தில் பாதாமிக்கு அருகில் உள்ள பட்டடக்கல் என்ற ஊரில் ஜம்புலிங்கேஸ்வரர்
கோயில் ஒன்று. அதில் முக்கியமான ஒரு கல்வெட்டு இருக்கிறது என்று பார்க்கச்
சென்றோம். அந்தக் கோயிலையே தேட முடியவில்லை.
அங்கிருப்பவர்களுக்கோ அந்தப் பெயரே தெரியவில்லை. வேறு
கோயிலைக் காட்டுகிறார்கள். வீடுகள் அடர்த்தியாக இருக்கும் தெருக்கள்.
ஓரத்தில் சாக்கடை, பன்றிக்கூட்டம், எல்லாவற்றையும்
தாண்டி மூன்று முறை சுற்றி வந்துவிட்டோம். ‘இங்கேதான்
எங்கயோ இருக்கணும்’ என்றார் எங்கள் குழுத் தலைவர் மேப்பைக் கையில் வைத்துக்
கொண்டு. இரண்டு வீட்டிடையே இரு புறமும் கொடி கட்டி உணர்த்திய துணிகளைத் தாண்டி உள்ளே
உள்ளே போனோம். நீண்ட சந்தின் இறுதியில் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்தில்
நிறைய துணிகள் உலர்த்தியிருந்தது. ஏதோ ஹோட்டல் பெட்ஷீட்டுகள்,
துணிகள் என்று கொடி மயம். பெட்ஷீட்களை விலக்கிப் பார்த்தால் கோயில்.
ஜம்புலிங்கேஸ்வர். மேப்பில் இருக்கும் கல்வெட்டைத் தேடி துணிகளை விலக்கி
படிக்க முயன்றனர் நண்பர்கள். கொல்லைப்புறத்தில் ஒருபுறம் இது எதிலுமே பட்டுக் கொள்ளாமல்
துணிகளை அடித்து அடித்துக் கசக்கிய வண்ணம் கருமமே கண்ணாக ஒரு பெண்மணி.
துணி துவைக்கும் கல் பிரமாதமாகப் பெரிதாக இருந்தது. அதன்மேல்
ஏதோ கல்லில் வெட்டி எழுதப்பட்டிருந்த இடம், அந்தம்மாவுக்கு
கரகரவென்று துவைக்க ஏதுவாய் இருந்தது.