Posted on 1 Comment

பழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி

புதுவருஷத்துல
டைரி எழுதத் தொடங்குவது
,
சிகரெட்டை விட்டுவிடுவதாக உறுதி எடுப்பது, இதெல்லாம்
ஏன் நிலைக்க மாட்டேனென்கிறது
?”

ஐம்பத்து எட்டு வயது ஹிரேன் ஷா என்ற நண்பர் வியந்தபோது, சற்றே
இரக்கமாகவும் இருந்தது
.
அவரும் பல வருடங்களாக சிகரெட்டை விடுவதற்கு முயற்சிக்கிறார். ஒரு
பை பாஸ்
, ஆஸ்த்மா இருமல் எனப் பலதும் இருக்கையில், ஆபத்து
எனத்தெரிந்தும் தன்னால் ஏன் விட முடியவில்லை என்ற கேள்வி கோபமாகவும் இயலாமையாகவும்
மாறுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது
.
புதிய
நல்ல பழக்கங்களையும் ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை
?’ என்ற
கேள்வியும் கூடவே கேட்டுக்கொண்டேன்
.
இப்போதெல்லாம். காலையில்
எழுந்து வேலைகளைப் பார்ப்பது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது
, இது
தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி
.
ஏன் முடியவில்லை என்பதுதான். பழக்கங்கள்
எதற்காக நிற்கின்றன
? பழக்கங்களின் பின்னே நிற்பதென்ன?

ஸ்டீபன் கோவே ‘7 Habits
of Effective People’
என்ற பிரபல புத்தகத்தில், 7 பழக்கங்களையே
முன் வைத்தார்
. வெற்றி என்பது ஒரு நாள் வேலை செய்து கிடைக்கும் செப்படி
வித்தையல்ல
. அதற்கான அடிப்படைப் பழக்கங்கள். அவை
நம்மில் ஊறியிருக்க வேண்டுமென்பதைப் புத்தகத்தில் பல இடங்களில் வலியுறுத்துகிறார்
. எதைக்
கொண்டுவரவேண்டும் என்பதைச் சொன்னாரே தவிர
, எப்படி
என்று சொல்லவில்லை
. அது ஒவ்வொருவரின் மன ஆளுமையைப் பொருத்தது. அதுவே
அப்புத்தகத்தின் பெரும் வெற்றி
.
புரியாத பலருக்குப் பயனளிக்காத தோல்வி.

அடிப்படையில் வெற்றியென்பது சில பழக்கங்களின் விளைவு என்றே கோவே கருதினார். இதனை
ப்ரையன் ட்ரேஸி
, மால்கம் க்ளாட்வெல், டேனியல்
கோல்மேன் போன்றோரின் புத்தகங்களிலும் இழையோடுவதைப் பார்க்கலாம்
. இதனை
நம்முன்னோர்கள் வாழ்வியல் நெறிகளில் உட்புகுத்தினார்கள்
. நாலடியார், திருக்குறள்
என்று நீளும் பதினென்கீழ்க்கணக்கு இலக்கியத்தில் பழக்கங்களின் அருமை பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது
.

இப்பழக்கங்களின் மூலம்,
நமது சமூகத்தொடர்பின் புதிய கோணங்கள் சாத்தியமாவதைக்
கண்கூடாகக் காணலாம்
. எப்படி நடந்துகொள்ளவேண்டும், பேச
வேண்டும் என்பது போன்ற
,
நாகரிகத்தின் முக்கியக் கூறுகளை பழக்கங்கள் அடுத்த
தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றன
.
இதனை மரபின் கடத்தலாக சமூகம் அங்கீகரித்தது. இதில்
இடையூறாகப் பரிணமிக்கும் புதிய தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைகள்
, பழக்கங்கள்
தலைமுறைகளைக் கடந்து செல்வதைத் தடுக்கின்றன
. இங்குதான்
போராட்டம் தொடங்குகிறது
.

சமூக வலைத்தளங்களைக் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் பழக்கம் இன்று பலருக்கு
இருக்கிறது
. அதுவரை, காலையில் எழுந்ததும்
உடல் சுத்தப்படுத்துதல்
,
தியானம், பெரியோரை வணங்குதல், தெய்வ
வழிபாடு என்றிருந்த பழக்கங்கள் சற்றே பின்தள்ளப்படுகின்றன
. மொபைல்
போன் படுக்கையறையில் நுழைந்தது
,
இடையூறாகிய தொழில்நுட்பம்.

மற்றொரு இடையூறு,
எதிர்ப்புச் சிந்தனைகள். உதாரணமாக, “ஏன்
காலையில் எழுந்து படிக்கணும்
?
எனக்கு ராத்திரி ரொம்பநேரம் முழிக்க முடியும்அப்ப
படிச்சிக்கறேன்
என்ற கருத்து. இதில்
காலை எழும் பழக்கம் தடைப்படுகிறது
.

உடல் ரீதியான பழக்கங்கள் மட்டும் ஒருவரின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்துவிட
முடியுமா
, சிகரெட் குடிக்காதவர்களுக்குப் புற்றுநோய் வராமலா இருக்கிறது
அல்லது காலையிலெழுந்து படிப்பவர்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றியடைந்து விட்டார்களா
என்ற கேள்விகள் எழலாம்
.
இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால்
பழக்கங்கள் என்பன ஐந்து நாள் கிரிக்கெட் போல்
அது 20 ஓவர்
விளையாட்டில்லை
.
இதனை மிக அருமையாக விளக்கியது 1970களில் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில்
நடத்தப்பட்ட
மார்ஷ்மல்லோ சோதனை.’ நான்கு
வயதுக் குழந்தைகளுக்கு
,
ஒரு அறையில், வேறு
கவனச் சிதறலுக்கான காரணிகள் ஏதுமின்றி
, மார்ஷ்மால்லோ என்ற
இனிப்பு மேசைமேல் வைக்கப்பட்டது
.
அவர்களுக்கு ஒரு விவரமும் கொடுக்கப்பட்டது. ‘அந்த
இனிப்பை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் எடுத்துச் சுவைக்கலாம்
. பதினைந்து
நிமிடம் பொறுத்தால்
, ஒருவர் வந்து இரண்டு இனிப்புகள் தருவார். பொறுத்திருக்க
வேண்டுமானால் இருக்கலாம்
.’
பல குழந்தைகள், அப்போதே
இனிப்பை எடுத்துக் கொண்டுவிட்டன
.
சில குழந்தைகள், இனிப்பைப்
பார்க்காமல் கண்களை மூடி
,
ஏதோ தனக்குள் பாடி, தன்
கவனத்தை இனிப்பிலிருந்து புறத்தாக்கின
. அவர்களில் சிலர் மட்டுமே
இறுதி வரை இரண்டு இனிப்பிற்குக் காத்திருந்தனர்
. இனிப்பைக்
குழந்தைகள் உடனே எடுத்துக்கொண்டுவிடும்
, அவர்களுக்கு அதிகமாக
சுயக் கட்டுப்பாடு கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்
.

ஆய்வு அத்தோடு நிற்கவில்லை.
முதலில் இனிப்பை எடுத்துக்கொண்ட குழந்தைகளும், இறுதி
வரை உறுதியாக நின்ற குழந்தைகளும் கவனமாகப் பல பத்தாண்டுகளாகக் கவனிக்கப்பட்டனர்
. பொறுத்து
நின்ற குழந்தைகள்
, பிற்காலத்தில், போதை, பதின்ம
வயது கர்ப்பம்
, பள்ளியிலிருந்து விலகுதல் என்பதானவற்றிலிருந்து விலகி, தங்கள்
துறையிலும்
, தனி வாழ்விலும், பொது
வாழ்விலும் ஓரளவு வெற்றியை அடைந்திருந்தனர்
. முதலில்
இனிப்பை எடுத்த குழந்தைகள் போதை போன்ற பல கவனச் சிதறல்களுக்கு ஆளாகியிருந்தனர்

இதே போல் நியூஸிலாந்திலும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பெருமளவில்
குழந்தைகளைக் கவனித்த அந்த ஆய்வு
,
பல பத்தாண்டுகளுக்குப் பின், மார்ஷ்மாலோ
பரிசோதனையின் முடிவு போலவே தனது முடிவுகளையும் கொண்டிருந்தது
.
கவனம், மன உறுதி, மனக்
குவியம் போன்றவற்றை இது போன்ற ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டின
. சிறு
வயதிலேயே மன உறுதியும்
,
தெளிவும் கொண்டவர்கள், வாழ்க்கை
முழுதும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை
. “சின்ன
வயசுல டாண்ணு அஞ்சு மணிக்கு எந்திச்சிருவா
. இப்ப
மணி எட்டாகுது
போன்ற அங்கலாய்ப்புகள் சகஜம். சிறு
வயதில் இருந்த பண்புகள் காலப்போக்கில் மாறுவதை
, புறவயக்
காரணிகளின் தாக்கம் என்று மட்டுமே இதுவரை கருந்தியிருந்தனர்
.

ரோல்ஃப் டோப்லி என்பவர் தனது புத்தகத்தில் இது அகவயமான சிந்தனையின் விளைவின்
தாக்கமும் கொண்டது என்கிறார்
.
சிந்திக்கும் விதம் பிறழும்போது, தோல்விக்குத்
தொடர்பில்லாத காரணிகளோடு தோல்வியைத் தொடர்பு செய்து பார்க்கும் தவறு சிந்தனையில் ஏற்படுவதே
இதற்கு அடிப்படைக் காரணம் என்று வலியுறுத்தினார்
. “அவ, போன
வாரம் டூர் போயிட்டு வந்தும்
,
கணக்குல நூத்துக்கு நூறு வாங்கியிருக்கா; நான்
காலேல அஞ்சு மணிக்கு எந்திச்சுப் படிச்சும்
80தான்என்ற
சிந்தனை
, காலையிலெழுவதை சந்தேகத்திலாக்குகிறது. பழக்கம்
அறுபடுகிறது
.

பழக்கங்கள் மட்டுமே வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில்லை. ஆனால், பழக்கங்கள்
சாதகமாக இருப்பவருக்கு வேண்டியபடி முடிவினைக் கொள்வதன் நிகழ்தகவு
0.6க்கு
மேல்
. இதன் உளவீயல்கூறுகள் பலவிதமாக இருப்பதால், ஒரு
பழக்கம்
, பல விதங்களில் பயனடையச் செய்யும். எனவேதான்
முன்னோர்கள் மரபின் வழி பழக்கங்களைச் சடங்குகளாக்கி வலுக்கட்டாயமாக முன்னிறுத்தினர்
. சில
நாட்களில் ஒரு வேளை உணவு விடுதல்
,
குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே அடுத்தநாள் உட்கொள்ளுதல், தினமும்
சந்தியாவந்தனத்தில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி
, கோயிலில்
நடை என்று செல்வதில் பன்முகப் பயனுண்டு
.

ஒவ்வொரு பழக்கத்திற்கும் மூன்று காரணிகள் தேவை. ஒன்று, தூண்டும்
பொருள்
/ நிகழ்வு, நமது எதிர்வினை, அது
தரும் சாதகமான முடிவு
. இனிப்பைப் பார்த்ததும், அது
தரும் முடிவாக
இனிப்பான உணர்வு’, இனி
வரப்போகும் மகிழ்வைக் கொண்டு
,
நமது எதிர்வினையைத் தூண்டுகிறது. இந்தச்
சுழற்
சி பலமுறை தொடர்ந்ததும், ஆக்க
நிலை அனிச்சைச் செயல் நமது எதிர்வினையை
, நாமறியாமலேயே நிகழ
வைக்கிறது
. கோயிலைத் தாண்டும்போது, கன்னத்தில்
கை போவதும்
, மதிய உணவின் பின் தானாக எழுந்து கடை வரை போய் சிகரெட்டை
வாங்குவதும் இந்த அனிச்சைச் செயலின் வகையே
.

இதில் தடுக்க வேண்டியவற்றை எப்படித் தடுப்பது? நமது
தேவை என்னவென்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும்
. சிகரெட்
குடிப்பதால் எனக்கு என்ன கிடைக்கிறது என்ற கேள்விக்கான விடை
, ஒரு
விதமான சுக உணர்வு
, ஒரு நிறைவு என்று வருமானால், அதனை
வேறு எதன் மூலம் நான் பெற முடியும் என்று ஆராய வேண்டும்
. இது
முதல்படி
.

இதுவே மிகச்சிக்கலான படியும்கூட. அத்தனை தெளிவாக, ஒரு
உணர்வைப் பகுத்துப் போட்டுவிட முடியாது
. எனவே இரு நிலைகளாக
சிந்தனையைப் பிரிக்கவேண்டும்
.
ஒன்று உணர்ச்சி பூர்வமானது. மற்றது
தருக்க பூர்வமானது
. சிகரெட், இனிப்பு, நடை, அரட்டை
என்பன உணர்வு பூர்வமானவை
.
இவற்றில் ஒன்றை, மற்றதால்
மாற்ற முடியுமா
? என்ற கேள்வி எழவேண்டும். சிகரெட்டை
விட
, அங்கு நின்றுகொண்டிருக்கும் நண்பர்களுடனான அரட்டை முக்கியம்
எனத் தோன்றினால்
, சிகரெட் இல்லாதவர்களிடம் அரட்டை அடிக்கப் போவது நல்லது. இதனைப்
பயன்பாடு என அறுதியிட்டு
,
நமது எதிர்வினையை மாற்றவேண்டும். புகை
பிடிக்க வேண்டுமென்று நினைக்கையில்
,
எழுந்து, நண்பர்களிடம் சென்று
பேசுவது
, பயன்பாட்டை மாற்றி எதிர்வினையையும் மாற்றுகிறது. அடிக்கடி
செய்வதில்
, புகை பிடிக்கும் பழக்கம் உடைகிறது. இது
சார்ல்ஸ் டுஹிக்
ன் உத்தி.
இதுபோன்று புதிய பழக்கங்களை உண்டாக்க முடியும். காலையில்
எழுந்து படிக்க நினைக்கும் இளைஞனின் வீட்டார்
, அவனது
காலையெழும் முயற்சியைப் பாராட்டாமல்
, அவன் படித்ததைப் பாராட்ட
வேண்டும்
. எப்போது பயன்பாடு பாராட்டப்படுகிறதோ, மூளை
அதனை மீண்டும் விரும்பி
,
அதனை அடையும் எளிதான வழியை நோக்கும். இது
பழக்கமாக உருவாகும்
.

தவறான பயன்பாடு கணித்தல்,
தவறான எதிர்வினை என்பன பழக்கத்தைக் கொண்டு வராது. மாறாக
விரக்தியே மிஞ்சும்
. இன்றைய இளைஞர்களுக்குப் பழக்கங்கள் வருவதற்கு, பயன்பாட்டின்
ஊக்கம் தருதல்
, எதிர்வினையின் முயற்சிகளுக்கு ஆதரவு தருதல், கெட்ட
பழக்கங்களை விடுவதற்கு அவற்றின் தூண்டுதல்களை நிராகரித்தல் போன்றவை பயிற்சிக்கபபடவேண்டும்
. இது
ஒரு குழும அமைப்பின்மூலம் தொடங்கப்பட்டால்
, வெற்றியடைய
சாத்தியங்கள் உண்டு
.
மரபின் பல சடங்குகள் நம்மில் பழக்கங்களை எதிர்பார்க்கின்றன. காலையில்
தியானம்
, யோகா, கோயில் செல்லுதல் போன்றவை, பழக்கங்களை
முன்னிறுத்துகின்றன
. மனக்குவியத்தை இப்பழக்கங்கள் வளர்ப்பதோடு, ஒரு
சுய ஆளுமையை மெல்ல மெல்ல உறுதிப்படுத்துகின்றன
. ஒரு
நற்பழக்கத்தின் வளர்ப்பு
,
வாழ்க்கையில் பல இடங்களில் வெற்றியைக் கொண்டுவர முடியும். ஒரு
பழக்கத்தையேனும் கைக்கொள்ள
,
ஒரு தீயபழக்கத்தையேனும் கைவிட முயற்சிப்பது பெரும்பயனைத்
தரும்
. வாழ்வு மரத்தான் ஓட்டம், நூறு
மீட்டர் ஓட்டமல்ல
.

Reference : 7 Habits of Highly
Effective People – Stephen Covey Habits – Charles DuHigg, Art of Thinking
Clearly – Rolf Dobili, Focus – Daniel Goleman.

1 thought on “பழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி

  1. பழகியபின் உள்ளே ஒரு குரல் அதற்கு ஆதரவாய் கேட்டுக் கொண்டே இருக்கிறது..
    செய்ய வைத்தும் விடுகிறது.

    எல்லாப் பழக்கத்துக்கும் இது பொதுவாய்.

Leave a Reply