Posted on Leave a comment

வலம் ஜனவரி 2019 இதழ் – முழுமையான படைப்புகள்


வலம் ஜனவரி 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

பிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்

கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து)  | கோ.இ. பச்சையப்பன்

வீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்

2018 : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் | லக்ஷ்மணப் பெருமாள்

சில பயணங்கள் சில பதிவுகள் – 16 | சுப்பு

ராமாயி | ஒரு அரிசோனன்

சபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

கார்ட்டூன்: லதா

Posted on Leave a comment

சபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்



ஒவ்வொரு வருடமும் மண்டலக் காலத்தில் சபரிமலையையொட்டிச் சர்ச்சைகள் கிளம்புவது சமீபகாலமாக வாடிக்கையாகவே ஆகி விட்டது. அதிலும்
இந்த ஆண்டு
உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதற்கு
எதிர்வினையாக ஹிந்துக்களின் எழுச்சியும் பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது
. கேரளம்
தாண்டி
, தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் சபரிமலையில் ஆசாரங்களை
மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது
.

இதன் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதைநடக்கும்
சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் உணர முடியும்.



சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடைபெற்ற ஒரு முக்கியமான
சம்பவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். அன்றைய திருவிதாங்கூர்
மாநிலம் எனப்படும்
(Travancore State) கேரளத்தில், 1950ல் சபரிமலையின் ஆலயம்
முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்த வந்த
காவல்துறை கூட ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டது. உள்ளே ஐயப்பனின் திருமேனி
(முன்பு ஆலயத்தில்
பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்தது) மூன்று துண்டுகளாக நொறுக்கப்பட்டுக் கிடந்தது.
காட்டுத்தீயினால் உண்டான விபத்து என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில்
, காவல்துறை தன் விசாரணையைத் துவங்கியதும் அது விபத்தல்ல என்று
தெளிவாக்கியது.
எரிந்து போயிருந்த ஆலயத்தில் கிடைத்த நெய்யில் நனைக்கப்பட்ட
தீப்பந்தங்களும்
ஆலயக்கதவுகளில் காணப்பட்ட
கோடாலி அடையாளங்களும் இது
விபத்தாக இருக்கமுடியாது என்று
திட்டவட்டமாக உறுதி செய்தது. ஐயப்பன் எனும் தெய்வத்தை நாடி ஆண்டுக்கு ஆண்டு
பக்தர்கூட்டம் அதிகரித்து வருவதை
ச் சிலர்
விரும்பவில்லை. சாதிமத வித்
தியாசமில்லாமல் எல்லா
மதத்தவரும் சபரிமலைக்கு வருவதை
ப் பொறுக்க முடியாமல், சபரிமலை கோவிலையே அழித்துவிட்டால்
அத்துடன் அங்கு வரும் பக்தர் கூட்டமும் ஐயப்ப பக்தியும் அழிந்து விடும் என்று
எண்ணி இந்த
ச் சதிச்செயல்
அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. அரசியல் தலையீட்டால் அந்த வழக்கு மெல்ல பிசுபிசுத்து
விட்டது
.

அந்தச் சதியின் தொடர்ச்சி அவ்வப்போது சபரிமலையில் அரங்கேறவே செய்கிறது, முயற்சியின்
மனம் தளராத சில சக்திகள் சபரிமலை
க் கோவிலின் சான்னித்தியத்தையும் பக்தர் கூட்டத்தின் நம்பிக்கையையும் அழிக்கும் செயல்களில்
ஈடுபட்டே வருகிறார்கள்
.
1983ல் செயிட்
தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்றும் அது ஐயப்பனுடைய இடம் அல்ல
என்று கூறி ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள்
.
பின்னர் சில போலி மேதாவிகளைக் கொண்டு, ‘சபரிமலை
ஆலயம் ஹிந்து ஆலயமே அல்ல
! பௌத்த தெய்வத்தின் ஆலயம்
என்றொரு கதையைக் கிளப்பி விட்டார்கள். அதற்கு
தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தோம்
.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மக்கள்
எதிர்ப்பு வலுத்தவுடனே தங்கள் முயற்சியெல்லாம் பிரயோஜனம் இல்லாமல் ஆனவுடன்
, இப்போது, ஆதிவாசிகளிகளான மலை அரையர்களில் ஒரு பிரிவு
மக்களை ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள் திருப்பி விட்டிருக்கிறார்கள்
.
சபரிமலை எங்களுக்குச் சொந்தமானது என்று கேரளாவின் மலை அரையர் பழங்குடியினர்
சபாவின் நிறுவனரான பி.கே. சஜீவ் பேட்டி கொடுத்துள்ளார்
. இதையே
கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு வழிமொழிந்து இருக்கிறார்
. சபரிமலையை
ச் சுற்றியுள்ள
மலைக்காட்டின் ஆதிவாசிகள் பலரும் இன்று யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்
, யார்
அவர்களை இயக்குகிறார்கள் என்பதும் ஊரறிந்த ரகசியம்
. அதேபோல
சபரிமலையின் மற்ற பற்றி
எரியும் பிரச்சினைகள் விஷயங்களில் வாயே திறக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன்
, “கோயிலின்
சம்பிரதாயம் மலை அரையன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது
, அனைவருக்கும் தெரியும். சபரிமலை
ஆலயம் ஹிந்து ஆலயம் அல்ல
! அது செக்யுலர் ஆலயம்
என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசி இருப்பது, ‘அப்பன்
குதிருக்குள் இல்லை
என்பதை இன்னும் தெளிவாக்குகிறது இதன்
பின்னரே இந்த விஷயத்தில் என்மஹாசாஸ்தா விஜயம் நூலுக்காக ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த தகவல்களைத் தொகுத்திருக்கிறேன்.
முதலில் அவர்கள் வைக்கும் வாதத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் அதற்கான
விளக்கங்களைச் சொல்கிறேன்
.
1. மலை அரையர் என்ற ஆதிவாசிகளின்
மூதாதையர்கள்தான் அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வந்தனர். ஆனால்
, 19ம் நூற்றாண்டில்
பந்தளம் மன்னர்களால் கோவில் அபகரிக்கப்பட்டது
;
2. மலையரையர் சமூகத்தைச் சேர்ந்த கந்தன் கருத்தம்மா என்ற பழங்குடியினத் தம்பதியருக்குத்தான் 41 நாட்கள் விரதமிருந்து அய்யப்பன் பிறந்தார்.
அரைய பழங்குடியினருக்கு பிறந்த அய்யப்பன் தனது நண்பர்களுடன்
சேர்ந்து போர்க்கலை பயிற்சி பெற்று அந்த
ப் பகுதியில், ஒரு வலுவான
சமூகத்தை உருவாக்கினார்
. பாண்டிய மன்னர்களை தாக்கிய சோழர்களை எதிர்க்க
அவர் உதவி புரிந்தார்
. அவருக்கு நாங்கள் கோவிலைக் கட்டினோம்.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லா வயது
ப் பெண்களும் கோவிலுக்கு செல்லுவோம்;
3. ஆனால், 1900ம் ஆண்டுகளில், பந்தளம் அரச குடும்பத்தினர் சபரிமலை
அய்யப்பன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது பிராமணர்களான தாழமண்
குடும்பத்தைச் (தந்த்ரி குடும்பம்) சேர்ந்த குருமார்களை அழைத்து வந்து
, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சடங்குகளை
குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன்பிறகு சபரிமலை கோவிலை
ச் சுற்றி உள்ள பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களை
அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்
.
இதுவே அவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.
இந்த வாதங்களைக் கேட்கும் நம் மக்களிலேயே
சிலர் கூட
இது உண்மையாக இருக்குமோ என்ற ஐயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
நம் மக்களும், ஏதோ சொல்கிறார்கள் நெருப்பில்லாமல்
புகையாது என்றெல்லாம் பேசத்தலைப்படுகிறார்கள்
. இன்னும் சில அறிவுஜீவி
எழுத்தாளர்கள்
, ‘இது தான் உண்மை! வனவாசி
தேவதைக் கோவிலான ஐயப்பன் கோவிலைக் கைப்பற்றி
சஸ்ம்கிருதமயமாக்கல் செய்துவிட்டார்கள்
என்று அடித்தும்
விடுகிறார்கள்
.
சபரிமலையின் பழைமை
சபரிமலையில் தர்மசாஸ்தாவின் ஆலயம் அமைந்திருப்பது ‘பிரம்மாண்ட
புராணம்
முதலான புராணங்களிலேயே
தெளிவாக
க் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
ஒருபுறம் இருக்கட்டும்
.
வரலாற்று ரீதியாக – சபரிகிரி ஆலயம் பலமுறை
தீவிபத்துக்குள்ளாகியும்
, புனரமைக்கப்பட்டும் மூல விக்ரஹங்கள் மாற்றப்பட்டும்
இருக்கிறது
.
பொ.யு, 978ம் ஆண்டைச் சேர்ந்த
சபரிமலை கோயிலின் கல்வெட்டு ஒன்று
,
அப்படியொரு தீ விபத்துக்கு பின் அக்கோயில் புனரமைக்கப்பட்டு, ஸ்ரீ ப்ரபாகராசாரியார் என்பவரது கைகளால்
விக்
கிரகம் புனர்ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. (1900களில் இருந்த ப்ரபாகராசாரியார் இவர் அல்ல!
இவர் வேறு.)
ஸமீன பஸ்வ நயன ப்ரயாதீன ப்ரபாவதீ
பாக்யவச்ய க்ருபாலய /

ப்ரபாகராசார்ய கர ப்ரதிஷ்டிதோ மாகனய வக்ஷது பூரி மங்கலம்//
(கடபயாதி ஸங்க்யை என்று கூறப்படும் காலத்தைச் சுட்டும் கணக்கீட்டு முறையில், இந்த பிரதிஷ்டை பொயு
978
ல் நடந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. மிகச் சமீபகாலம் வரை காணப்பட்ட இக்கல்வெட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு
சில காலம் தேவஸ்வம் போர்டு
அலுவலகத்தில் இருந்தது. இப்போது
எங்கே என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்
.)
ஆக, குறைந்த பட்சமாக
10ம் நூற்றாண்டிலிருந்தே அங்கே நம்பூதிரிகளின் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது
என்பது தெளிவு
.


சாஸ்தாவின் சன்னிதியில் பூஜை முறை என்பது 10ம்
நூற்றாண்டிலிருந்தே
குழிக்காட்டில்லம், புதுமனை மற்றும் தாழமண் மடத்து தந்த்ரிகளிடம் இருந்தது. மேல்சாந்திகள் மட்டும் அவ்வப்போது நியமிக்கப்பட்டார்கள். ஒரே மேல்சாந்தி பலவருடம் நீடித்ததும் உண்டு. ஒரு
வருடத்திலேயே பலமேல்சாந்திகள் வந்ததும் உண்டு.

பண்டைய காலத்தில் மகரவிளக்குக்கு
மட்டுமே நடை
த்திறப்பு. பின்னர்
மண்டலபூஜை வந்தது. பின்னர் வருடம் ஆறுமுறை நடைதிறந்து இருமாதத்து பூஜை ஒன்றாக
நடந்தது. பின்னர் இப்போது காணும் மாதாமாதம் நடை திறக்கும் முறை உருவானது. 1960 வரை
முழுக்க முழுக்க பெரியபாதை மட்டுமே.
கோவில் உருவான காலத்திலிருந்தே கேரள
தாந்த்ரீக பூஜையே அங்கு நடைபெற்று வந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
1940களுக்கு மேல்தான் தேவஸ்வம் என்ற
அமைப்பே உருவானது.
1830ல் திருவிதாங்கூர் அரண்மனையின் சார்பில் ராணி சேதுலக்ஷ்மி பாய்க்காக வேண்டி சபரிமலையில் சதசதயம் பாயஸம் நைவேத்யம் செய்ததாக ஒருகுறிப்பு தெரிவிக்கிறது. அப்போது ராமய்யன் எம்ப்ராந்த்ரி என்ற துளு பிராமணர் பூஜை செய்ததாக ஆவணம் உள்ளது,
பந்தளக் குடும்பமும் சபரிமலையும்
புராண காலத்துக்கும் வரலாற்றுக்கும்
சற்று நெடிய கால இடைவெளி உண்டு. மஹிஷி என்ற புராண காலத்து அரக்கியை சாஸ்தா
ஸம்ஹாரம் செய்ததையொட்டி எழுந்ததே சபரிகிரி ஆலயம்.
9ம் நூற்றாண்டில் தமிழகப் பாண்டியர்கள் புலம்
பெயர்ந்து கேரளம் சென்று பந்தளம் என்ற சிற்றரசு உருவானது
. ஏற்
கெனவே அங்கே ஆலயம் இருந்ததையும் அதைப் பந்தள அரசர், புனரமைத்துக் கட்டியதையும் அவர்களது குடும்பத்தினர் வருடா வருடம்
வந்து வணங்க வேண்டிய நிர்பந்தத்தையும் இது தெளிவாக உணர்த்துகிறது
.

1909ல் ஐதீஹ்யமாலா எழுதிய கொட்டாரத்தில் சங்குண்ணி, அந்நூலில் சபரிமலை சாஸ்தா குறித்தும், பலகாலமாக,
குறிப்பாக
ப் பாண்டியர்கள்
மதுரையிலிருந்த ஆதிகாலம் முதலே என்று தெளிவாகக் கூறுகிறார். மதுரையில் இருந்த காலத்திலிருந்தே
பாண்டிய ராஜ குடும்பத்தினர் சபரிமலையில் வழிபாடு நடத்தியதையும்
, பின்னர்
அவர்கள் போர் காரணமாக கேரளம் வந்து இடங்கள் வாங்கி, பூஞ்சார், பந்தளம் என இரண்டு
ராஜ குடும்பங்களை உருவாக்கி
த் தங்கள் குல
வழக்கப்படி சபரிமலை சாஸ்தாவை வழிபட்டதையும்
, தாழமண் குடும்பத்தினர் பூஜைமுறை பற்றியும் தெளிவாக
எடுத்துரைக்கிறார்
.

சபரிமலையின் உள்ள தெய்வத்துக்கு சாஸ்தா என்றே
பெயர்
.
வழக்கச் சொல்லேஐயப்பன்’. பழனியின் மூலவர் தண்டாயுதபாணி, வழக்குச் சொல்
முருகன்
.
10ம் நூற்றாண்டில் பன்னெடுங்காலமாகவே இருந்த
சபரிமலை ஆலயப் பகுதியை
க் கொள்ளையர் படை ஆக்கிரமித்தது. அப்போது அரசகுமாரிக்கும் ஆலய நம்பூதிரிக்கும் மகனாகத் தோன்றிய ஆர்ய கேரள வர்மன், பந்தள அரசரின் துணையோடும்
பாண்டிய தேசப்படைகளோடும்
, அம்பலப்புழை ஆலங்காடு படை வீரர்களோடும்
ஆலயத்தை
ப் புனரமைக்கும்
பணியில் ஈடுபட்டார்
. ஆர்ய கேரள வர்மனை மக்கள் செல்லமாக ஐயப்பன் என்று
அழைத்தார்கள்
. இவர்களுக்கு
க் கோவிலைப் புனர் நிர்மாணம்
செய்ய பலரும் துணை நின்றார்கள். மலையரையர்களும் கட்டாயம் துணை நின்றிருக்கலாம்
. இறைவனின் பெயரையே ஏற்ற வீரனான ஐயப்பன், காலத்தால் சீரழிந்து போயிருந்த சபரிமலை ஆலயத்தை மீட்டு, மீண்டும் புனரமைத்து அங்கே இறைவனுடன் ஐக்கியமானார்.
இன்று மலைநாடெங்கும் பாடப்படும் பழமையான
ஐயப்பன் பாட்டுக்களை
ச் சற்று ஆராய்ந்தால், அதில்
வாவரை
த் தோழனாக கொண்டு
உதயணன் என்ற கொள்ளையனை வீழ்த்திய ஆர்ய கேரள வர்மன் எனும் ஐயப்பனை பற்றி மட்டுமே
காண முடிகிறது.
“வருடா வருடம் மலை ஏறி வந்து சபரிகிரியில் கோயில்
கொண்டிருக்கும் ஹரிஹர புத்ரனை பந்தள அரசர் வணங்குவதாக வாக்குறுதி கொடுத்தால்
, எதிரிகளை
நான் அழித்து ஆலயத்தை மீட்டுத்தருவேன்” என்று ஆர்ய கேரள வர்மன்
(ஐயப்பன்) கேட்பதாக ஐயப்பன் பாட்டுகள் கூறும்.
காலத்தையொட்டி வருகின்ற மகர ஸங்க்ரமயாமமதில்
பந்தள ராஜன் வன்படை திரட்டி மலை மீதேறி யிறங்கி நடந்து
சபரிமலை நாதனை வணங்கி வருவேனென்று சத்தியம் செய்தால்
இப்போது வரும் எதிரிகளை கொல்லத்தான் சிரமமே இல்லை”
ஆக 10ம் நூற்றாண்டிலிருந்தே
பந்தள அரசர்களே சபரிமலை ஆலயத்தை
ப் புனரமைத்தார்கள்
என்பதும் தெளிவாகிறது
.
இதன் பின்னர் 16ம்
நூற்றாண்டில் ஒருமுறை சபரிமலை பந்தள அரச குடும்பத்தால் புனரமைக்கப்பட்டதற்கும்
,
1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில், போர்ச் செலவுகளைச்
சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும், சபரிமலைக் கோவிலையும், திருவிதாங்கூர் அரசரிடம் அடமானம் வைத்ததற்கும் தெளிவான ஆதாரங்கள் உள்ள.
1780திலேயே
கோவில் நிர்வாகம் பந்தள அரசரிடமிருந்து திருவிதாங்கூர் அரசுக்கு
க் கைமாறி இருக்க, 1900ல் பந்தள அரசரும் தாழமன்
குடும்பத்தினரும் அரையர்களிடமிருந்து கோவிலை
ப் பறித்தார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது.
(இவர்கள் சொல்லும் கந்தன்கருத்தம்மா கதைக்கும் ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பல காலம் முன்பிருந்தே சபரிமலை ஆலயம் முறையான வழிபாட்டு கேந்திரமாக இருந்திருக்கிறது
என்பது மிகத் தெளிவு. அதே போல அரையர்கள் தெய்வங்களின் பெயரைச் சூட்டிக்கொள்வதும் வழக்கத்தில்
இல்லை.
)
பண்டைய கால நடைமுறை
பண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் துவங்கி 41 மைல்
கொண்ட பெரியபாதை வழியே வந்து, பெரியபாதை வழியாகவே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப்
பாதை வழியே எறி வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. மேலே உள்ள பாடலில் ஆர்ய கேரள வர்மன் சத்தியம் கேட்பதிலிருந்தேரொம்பவும்
சிரமப்பட்டு வரவேண்டிய காரணத்தால் – ஆலயத்துக்கு
வருடா வருடம் கட்டாயம் வரவேண்டும் என்று
நிர்பந்திக்கும் நிலை

தெளிவாகிறது.

 

இது இப்படி இருக்க, சபரிமலை
மேல்சாந்தியாக இருந்து பூஜை செய்ய ஆள்கிடைக்காத காலங்களும் உண்டு. சபரிமலையில் இன்றும் ஒரு சடங்கு உண்டு : மகர
மஹோத்ஸவம் முடியும் அன்று, பதினெட்டாம் படியின் முன்பு, கோவிலின் வருமானம் என்று கூறி மேல்சாந்தி ஒரு பணமுடிப்பையும் கோவில் சாவியையும், பந்தள அரசப் பிரதிநிதியிடம் கொடுக்க, அவரோ அதில் கொஞ்ச பணத்துடன் சாவியையும் மேல்சாந்தியிடம் திரும்பக் கொடுத்து அடுத்த வருடம் வரை பூஜையை சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்வார். (இன்றைக்கு
கோவில் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளும் நிலையில் இது ஒரு வெறும் சடங்காக, பெயரளவில் நடக்கிறது. ஆனாலும் பந்தளம் அரசருக்கு கோவிலின் பந்தத்தை நிலைநாட்டும் உணர்ச்சிமிக்க சடங்கு இது.)
1800களில் கூட எத்தனையோ முறை பணமுடிப்பையும் சாவியையும் கொடுத்துவிட்டு, எங்கே மீண்டும் தன்னை பூஜை செய்யச் சொல்லிவிடுவார்களோ என்று மேல்சாந்தி பயந்து ஓடிப்போன கதைகள் கூட உண்டு.
சபரிமலைக்கு போவதும் அங்கே 3 நாட்கள்
தங்கி இருப்பதும் அந்த அளவுக்குக்
கடினமான ஒன்றாக இருந்தததை உணர முடிகிறது. (என்னுடைய சிறிய பாட்டானார் CV கிருஷ்ணய்யர்
1920ல் கூட அரிவாள் எடுத்துக்கொண்டு பாதைகளை வெட்டிக்கொண்டு வழியை உண்டாக்கித்தான்
சென்றார்கள்
.)
யாரோ மலைவாசிகள், தங்கள் மூதாதையர்களுகாகக்
காட்டுக்குள் கட்டி வைத்து வழிபடும் கோவிலாக அது இருந்தால், இவ்வளவு சிரமப்பட்டுப் போகும் அந்தக் கோவிலை, தேடிப்பிடித்து பந்தள அரசன் கையகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குடும்பத்துக்கு நேரடி பந்தம் இருப்பதாலேயே பந்தளக் குடும்பமும் தாழமண் குடும்பமும் இன்றும் சபரிமலைக்காகக்
குரல் கொடுக்கிறார்கள்.
சபரிமலைக்கோவில் வழிபாட்டு முறைகளும் உரிமைகளும்
பண்டைய காலம் தொட்டே சபரிமலையில் உள்ள உரிமைகள் மிகத் தெளிவாகவே இருந்த.
1820ல் வெளியான Word and Connor என்ற ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட Memoirs of Survey of the
Travancore and Cochin States
என்ற
ஒரு கேரள அரசு சர்வே குறிப்புசபரிமலை நிர்வாகத்தை பிராமணர் ஒருவரும் இரண்டு நாயர்களும் அரசாங்கத்தின் சார்பில் கவனித்து வந்ததாக கூறுகிறது.
அந்தக் குறிப்புகளில் 1820களிலேயே ஒரு ஆண்டுக்கு 15,000 பக்தர்கள் வருவதாக அதில் தெளிவாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பலரும்
அறிந்த முறையான கோவில்
. மலைக்காணிகளின் தனிப்பட்ட வழிபாட்டுத்தலம் அல்ல
என்பது தெளிவாகிறது
.
பந்தளத்திலிருந்து திருவாபரணம் சுமக்கும் குடும்பங்கள் முக்கியமாக நாயர் குடும்பங்களின் கீழ் உள்ளது.
அம்பலப்புழை, ஆலங்காடு பேட்டை உரிமைகள்
மேனன், நாயர்,
பிள்ளை எனப்படும்
அந்தந்த சமூகத்திடமே இன்றும் இருக்கிறது.
அதே போல கோவிலின் வெளிச்சப்பாடு என்று சொல்லப்படும் ஸ்தானம், பட்டர்கள்
என்று அழைக்கப்படும் தமிழ் பிராமணர்கள் வசமே இருந்தது. (1835 முதல் 1989 வரை யாரெல்லாம் இருந்தார்கள் என்ற ஆவணங்களும் தெளிவாக இருக்கின்றன.)
வெடி வழிபாட்டின் உரிமை சிறப்பன்சிரா (ஈழவ) பணிக்கர்கள் வசம் இருந்தது. வனதேவதைகளுக்குக் குருதி பூஜை நடத்தும் உரிமையோ குரூப் என்று சொல்லப்படும் சமூகத்திடம் இருக்கிறது.
இதையெல்லாம் விட விநோதம் என்னவென்றால் எந்த மலையரையர்கள் இன்று கோவிலுக்கு உரிமை கோருகிறார்களோ, அந்த மலையரையர்களின் பூஜையை, அவர்களின் குடியிருப்புப்
பகுதிகளில்
ஏற்று நடத்தி அவர்களுக்குமே வெளிச்சபாடாக (சாமியாடி) இருந்ததுநாகர்கோவிலைச் சேர்ந்த பார்வதீபுரம் வெங்டீஸ்வர ஐயர் என்பவர்தான். மகரவிளக்கு முடிந்து ஒரு வாரம்வரை இவர் அரையர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தங்கி அவர்களுக்கான பூஜையை முடித்த பின்னரே ஊர் திரும்புவார். இது 1895 முதல்
1970
ல் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.
இதில் சில உரிமைகள் இன்று நடைமுறையில் இல்லை. அது
எப்படி என்றால்
, 1950 தேவஸ்வம் போர்டு சபரிமலையில் பரம்பரையாக
க் குறிப்பிட்ட வழிபாடு அல்லது சடங்குகளுக்கான உரிமை உள்ளவர்களை
ஆவணங்களுடன் பதிவு செய்து
கொள்ளும்படி கேட்டுக் கொண்டது
.
இதில் முதலில் ஆவணங்களைக் குறித்த நேரத்தில் கொடுத்தது வாவர் சம்பந்தப்பட்ட குடும்பம்தான். அவர்களுக்கு
சந்நதிக்கு எதிரே விரிவைக்கும் உரிமை உண்டு
. இன்றும் அவர்களை
மலையில் காணலாம்
. அடுத்து மணிமண்டப பூஜா உரிமைக
ள் குரூப் இனத்தவருக்கும் நிலை நாட்டப்பட்ட. குரூப்பு சமூகத்தினர்தான் இன்றைக்கும் குருதி
நடத்தி எழு
ந்தளிப்பு ஊர்வலம் நடத்துகிறார்கள்.
சிறப்பன்சிரா குடும்பத்தினருக்கு சபரிமலையில்
வெடி வழிபாடு நடத்தும் உரிமை இருந்தது
. 1950க்குள் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாகி கடவுள்
நம்பிக்கை இல்லாமல் போனதால் உரிமை தேவையில்லை என்று கருதி எந்த
க் கடிதமும் கொடுக்கவில்லை. அதே போல மலைமேல் நாயர் என்ற
குடும்பமே கொச்சு கடுத்தனின் பூஜை உரிமை கொண்டவர்கள்
, அவர்கள்
குறித்த நேரத்துக்குள் கடிதமோ
ஆவணமோ கொடுக்காததால்
அவர்கள் உரிமையும் பறிபோனது
. தமிழ் பட்டர்களின் வெளிச்சப்பாடு உரிமையும்
பாலா பாஸ்கர ஐயர் காலத்துக்குப் பின்
1989ல் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
ஆக பந்தள ராஜகுடும்பம், பிராமணர்களான நம்பூதிரிகள் மட்டுமல்லாமல் எல்லா
இனத்தவர்க்கும் சபரிமலையில் அவரவர்களுக்கான உரிமைகள் உண்டு. அப்படி ராஜ
குடும்பத்தினர் அரையர்களிடமிருந்து அபகரித்திருந்தால் குருதிக்கும் மணிமண்டப பூஜைக்கு
மட்டும் குரூப் இனத்தவர்க்ளை அனுமதிப்பானேன்?

 

வனத்தில் இருக்கும் தேவதைகள் எல்லாம்
வனவாசிகளின் தெய்வங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால்
கிட்டத்தட்ட 90% நம்பூதிரிகளின் குடும்ப தெய்வம், குல தெய்வம் வேட்டைக்கொருமகன்
என்று அழைக்கப்படும் வனதேவதையான கிராத சாஸ்தாதான்.
அப்படியானால் அரையர்கள்? அவர்களுக்கும்
சபரிமலையில் சில உரிமைகள் உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை
.
மலைதேவதைகள் என்றொரு சன்னிதி மாளிகைப்புறத்தில்
இருந்தது
. வெட்டவெளியில் உள்ள கல்பீடம். அதற்கு எதிரே
மலையரையர்கள் வழிபடும் வண்ணம் ஒரு ஆட்டின் கல்சிலை இருந்தது
. அங்கே வழிபடும் பூஜை உரிமை அவர்களுக்கே
.
(1980கள் வரை இருந்த அவற்றை நீக்கியது ஆலய நிர்வாக அரசு அதிகாரிகள்
.)
மூங்கில் தண்டில் தேன் கொண்டுவந்து சபரிமலை சாஸ்தாவின் அபிஷேகத்துக்கு கொடுக்கும் உரிமையும், மலைதேவதைகளுக்குப்
பூஜைகள் செய்யும் உரிமையும், மகரவிளக்குக்கு தீபம் ஏற்றும் உரிமையும் மலை அரையர்களுக்கு உண்டு. வற்றைப் பறித்தது தேவஸ்வம் போர்டுதான். பந்தள குடும்பம் அல்ல!
அது மட்டுமல்லாது அரையர்கள் தாங்களாகவே தங்கள்
அடையாளங்களை இழந்தது பாதிரிகளிடம்தான்
.
1883ல் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ‘Native life in
Travancore’ சாமுவேல் மடீர் என்ற பாதிரியார் எழுதியது. அதில் சபரிமலை
ப் பகுதியிலுள்ள
மலையரையர்கள் பற்றி விவரமாக எழுதியுள்ளார்
. 1862ல் H.பேக்கர் என்ற
பாதிரியாரும்
The Hill Arrians என்றொரு புத்தகம் எழுதியுள்ளார்.
இந்நூலில் மலையரையர்கள் காடுகளில் உள்ள பூதங்களை
வணங்கியதாகவும்
, சுமார் நூறாண்டு முன்பு (அதாவது
1762) தாலநாணி என்ற ஒரு சாமியாடி இருந்ததாகவும் கூறுகிறார். அதாவது அவர்களது கிராமத்தில் உள்ள குடியிருப்பில் ஐயப்பன் இவருக்குள் இறங்கி
ப் பேசுவதாக நம்பிக்கை. முட்ட முட்ட குடித்திருக்கும் தாலநாணி எருமப்பாறை
மலைப்பகுதியிலிருந்து சபரிமலைக்கு
த் தரிசனத்துக்காகச் செல்லும் மக்களிடம் தான் வரவில்லை என்று மறுத்துவிட்டு, அவர்களுக்கு
முன் சபரிமலையில் காத்திருப்பார் என்று புத்தகம் பேசுகிறது
. அதாவது
1700களிலேய மலையரையர்கள் சபரிமலைக்கு வழிபடத்தான் போனார்கள்.
கோவில் நிர்வாகமோ பூஜையோ செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.
தாலநாணி, மற்றொரு மலைவாசிகளான சோகர்களால்
கொல்லப்பட்டு அவரது மகன் அவரது பதவியை அடைந்தார்
. All the descendants of
Talanani are now Christians. Thanks to Rev. Henry Baker’s work என்று
நூல் தெள்ளத்தெளிவாக உரைக்கிறது
.
‘Mr. Baker was privileged to baptize many hundreds of
Arayans Instructing them and forming them into congregation. This good work is
carried out by other missionaries and likely to extend’ என்று புத்தக
ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்
. அப்போதே 2,000 அரையர்களை கிறிஸ்தவர்களாக்கி மேல்காவு எனும் காட்டுப்பகுதியில் சர்ச் கட்டி
இருக்கிறார்கள்
. மிச்ச சொச்சம் இருந்தவர்களையும் Rev
WJ.ரிச்சர்ட் என்பவர் மதம் மாற்றி இருக்கிறார்.
சபரிமலைக்கு அரையர்கள் வெளிச்சப்பாடாக இருந்ததில்லை
என்பதோடு
, அரையர்களுக்குமே அப்படி யாரும் இல்லாதபடி அவர்கள் வம்சத்தையே மதம்
மாற்றி அவர்களது பூஜை பொருட்களையும் விக்
கிங்களையும் ரிச்சர்ட் வாங்கிக் கொண்டதாகப் புத்தகத்திலிருந்து தெளிவாகிறது.


விஷயங்கள் இப்படி இருக்க,
சம்பந்தமே இல்லாத, ஆதாரமற்ற விஷயங்களைப் பேசி மக்களை திசை திருப்புவது
, பிரம்மாண்டமான சதிச்செயலின்
ஒரு அங்கம்தான். ஏதோ அரைகுறையாக உள்ள விஷயங்களை
க் கையில் வைத்துக்கொண்டு சபரிமலை
மீதான தாக்குதலுக்கு இவர்களை ஒரு அஸ்திரம் 
ஆக்கி இருக்கிறார்கள். 



*****  

Posted on Leave a comment

ராமாயி (சிறுகதை) | ஒரு அரிசோனன்

“டாங்கி மாட்டர்
வூடு இதுதானே, தம்பி?” என்று கேட்டபடி வாயிலில் நின்ற மூதாட்டியை ஏற இறங்கப் பார்த்தேன்
நான்.
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வயதிருக்கும். நெற்றியில், கன்னத்தில்,
கண்ணைச் சுற்றி,
சுருக்கங்கள் முதுமையின் கோடாக அழுத்தமாகப் பதிந்திருந்தன. பார்வையில் ஒரு கனிவு. பளபளவென்ற
உடம்பின் கருமைப் பழுப்பான நிறமும் பொருத்தமான ஒரு அழகாகத்தான் இருந்தது. நெற்றியில்
வெறுமை. காதிலிருந்து இரண்டங்குலத்திற்குக் கீழே தொங்கிய காதணிகள். தலைமயிரை இழுத்துப்
பின்னால் மேலே சுற்றிச் சொருகியிருந்த பாவம், தலையலங்காரம் செய்துகொள்ள நேரமில்லை என்
பதைப் பறைசாற்றியது.
கரும்பச்சைநிறப்
புடைவை ரவிக்கையில்லாத மேலுடம்பை
யும்
சுற்றி மறைத்திருந்தது.
இலேசான வேப்பெண்ணைய்
நெடி.
அவள் பின்னால் ஒருவன் முழங்கால்வரை தொங்கும் பெரிய அழுக்குத்துணிக்
கோவணம் ஒன்று கட்டியிருந்தான்
. தலையில் மிகப்பெரிய முண்டாசு. வேறு உடையெதுவும் இல்லை. தலையிலிருந்த முண்டாசைக் கழட்டி
ஏன் வேட்டியாகக் கட்டிக்கொள்ளாமல் வெறும் கோவணத்துடன் இருக்கிறான் என்று என்னை நானே
கேட்டுக்கொண்டேன்
.
“என்ன தம்பி,
முளிக்கிறே? டாங்கி மாட்டர் வூடு இதுதானே?” மீண்டும் கேட்கப்பட்ட அக்கேள்வி என்னைக்
குழப்பியது.
“டாங்கி மாட்டரா?
அப்படி இங்கே யாரும்..” என்ற நான் மேலே தொடருவதற்குள், “கண்ணா? யாரு வாசல்ல?” என்றபடி
எனது பாட்டி அங்கு வந்தார்.
“அம்மா, தம்பிக்கு
என்னைத் தெரியல. நாந்தாங்க ராமாயி. டாங்கி மாட்டர் சமுசாரம்தாங்க நீங்க?” என்று தனது
வெற்றிலைக் காவிபடிந்த பற்கள் தெரியச் சிரித்தாள் அந்த முதிய பெண்மணி – ராமாயி.
சிலவிநாடிகள்
திகைத்த என் பாட்டி, மகிழ்வும், வியப்பும் கலந்த குரலில், “அடேடே, நம்ம ராமாயியா?
ரெண்டு மாமாங்கம் ஆயிப்போயிடுத்துடீ, உன்னைப் பார்த்து! ஒம் முகம் இன்னும்
மாறாம அப்படியே, மூக்கும் முழியுமாத்தானேடீ நீ இருக்கே!
முகத்தில சுருக்கம் இல்லாட்டா
இருபத்துநாலு வருஷம் முன்னால ராமாயி போகல்லே
, நேத்திக்குத்தான் போயிட்டு இன்னிக்கு வந்திருக்கான்னு
நினைக்க வேண்டியிருக்கும்
.
வாடீ,
வா!” என்று வரவேற்றபின்தான், ‘டாங்கி மாட்டர்’ என்
று ராமாயி குறிப்பிட்டது, டிராயிங் மாஸ்டரான எனது தாத்தாவை என்று
ஊகித்துக்கொண்டேன்.
“தம்பிதான் பாப்பாவோட
புள்ளையா? நான் கடைசியாப் பாத்தப்போ இந்தத் தம்பி வயசுதான பாப்பாவுக்கு?” என்று என்னைப்
பார்த்துப் பரிவுடன் கேட்டாள் ராமாயி. பாப்பா என்று குறிப்பிட்டது என் அம்மாவை என
ப் புரிந்துகொண்டேன்.
“ஆமாண்டி. அதுதான்
ஒன்னைப் பார்த்து மாமாங்கக் கணக்காயிடுத்துன்னு சொன்னேனே! பாப்பாவுக்குக் கல்யாணமாகி
மூணு கொழந்தைகள். இவன் மூத்தவன். இவனுக்கப்பறம் ரெண்டு பொண்ணு.
மாப்பிள்ளைக்கு
அடிக்கடி வேலை இடத்த மாத்திடறதுனாலே
, படிப்பு கெடவேண்டாம்னு இவன் இங்கேயே எங்களோட இருக்கான்” என்ற என் பாட்டி, “ஏன்னா, இங்கே வந்து யார் வந்திருக்கான்னு
பாருங்கோ! நம்ம ராமாயி!” என்று உள்ளே இருந்த என் தாத்தாவை விளித்
தார். “அது சரி. ஒம் புருஷன் சுகமா இருக்கானா? உனக்கு
எத்தனை கொழந்தைங்க? என்ன இப்படி திடுதிம்முனு வந்திருக்கே? உம் புருஷனும் வந்திருக்கானா?”
அமைதியாகத் தலையைக்
குனிந்துகொண்டாள் ராமாயி. முகத்தில் ஒரு சோகம் நிழலாடியது. பளபள்வென்றிருந்த பெரிய
கண்கள் இடுங்கின.
இதற்குள் அங்கு
வந்த தாத்தா, “வாம்மா ராமாயி, அத்தி பூத்தாப்பல இருக்கே, உன்னைப் பார்க்கறது! என்னம்மா,
சௌக்கியமா இருக்கியா? ஏன் தலையைத் தொங்கப்போட்டுண்டு
நிக்கறே?” என்று நல்ம் விசாரித்தார்.
“சாமி, எல்லாத்தையும்
தொலச்சுட்டு வந்துருக்கேன் சாமி!” வாய்விட்டு அழுதாள் ராமாயி.
நான் புரியாமல்
தடுமாறினேன். இந்த வயதான பெண் என் தாத்தாவைத் தேடி ஏன் வரவேண்டும்? ஏன் இப்படி அழவேண்டும்?
எதை இவள் தொலைத்திருக்கிறாள்? என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.
“உக்காரு முதல்லே.
உன்னைச் சமாதானப்படுத்திகோ. பின்னால நிக்கறது யாரு?” என்றவர், “உள்ளே போயி ராமாயி குடிக்கறத்துக்கு
ஜலம் கொண்டுவா!” என்று என் பாட்டியை அனுப்பினார்.
ராமாயி சைகை காட்டியவுடன், அவள் பின்னால் நின்றிருந்த
கோவணாண்டி
, தயங்கித் தயங்கி உள்ளே எட்டிப்பார்த்து, தனது காவிபடிந்த பற்களைக் காட்டித் தலைக்குமேல் கைகளைக் கூப்பினான்.
இவன் என் தம்பி நாச்சியபன், சாமி.
இவனுக்குப் ரொம்பநாளா காது கேக்காமப் போயிடுச்சு சாமி,” என்று மேலும் அழுதாள் ராமாயி.
இதற்குள் என் பாட்டி ஒரு சொம்பு நிறையத்
தண்ணீர் கொணர்ந்து ராமாயின் கையில் கொடுத்தார்
. பாதிச் சொம்புத் தண்ணீரை
மடக்மடக்கென்று குடித்துவிட்டு
, அதை நாச்சியப்பனிடம் நீட்டினாள்.
அவனும் பவ்யமாக அதை வாங்கி ஒரு வாய் குடித்தபின்னர் சொம்பை மெதுவாகக்
கீழேவைத்தான்
.
சொல்லு, ராமாயி! இருபத்திநாலு
வருஷம் முன்னாலே உன் மாமன்மகன் மாரியப்பனைக் கல்யாணம்பண்ணிண்டு கிராமத்துலே விவசாயம்
பண்ணப்போறேன்னு உன் தம்பி நாச்சியப்பனையும் கூட்டிண்டு போனே
! அதுக்கப்பறம் ஆளே மாறிப்போயி, எல்லாத்தையும் தொலைச்சுட்டேன்னு
சொல்றே
. பதட்டப்படாம, விவரமாச் சொல்லு
என்று கனிவுடன் கேட்டார் தாத்தா.
அந்த வவுத்தெரிச்சல நீங்களும் கேட்டுக்கிடுங்க சாமிஎன்று துவங்கிய ராமாயி, கிராமத்தில் தரிசாகக் கிடந்த தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து காப்பாற்றுகிறேன் என்று
தனது மாமன் மகன் மாரியப்பன் சொன்னதை நம்பி
, தெருவில் எல்லோர் வீட்டிலும் பால் வியாபாரம்
செய்துவந்ததை நிறுத்திவிட்டு
, வைத்திருந்த இரண்டு பசுக்களில்
ஒன்றை விற்று
, ஒரு
பசுவுடன், தானும், தன் தம்பியும், கிராமத்திற்குச் சென்றதைஎன் தாத்தா, பாட்டிக்குத் தெரிந்த செய்தியை, மீண்டும் ஒருதடவை சொல்லிச்
சிறிதுநேரம் நிறுத்தினாள்
.
அவளே மேலே தொடரட்டும் என்று அமைதியாக இருந்தனர் தாத்தாவும், பாட்டியும்.
அந்தக் கட்டைலேபோற என் புருசன், நாலைஞ்சு
வருசத்தில என் நிலம்
, பசுமாடு எல்லாத்தையும் கொஞ்சம்கொஞ்சமாப்
புடுங்கிக் கூத்தியா கால்ல கொண்டு கொட்டிட்டான் சாமி
. அவன நம்பிப்
போயி எல்லாத்தையும் தொலச்சுட்டேன்
. குடிச்சுட்டு வந்து காசு கேப்பான்.
இல்லைன்னா என்னையும், என் தம்பியையும் போட்டு உதை,
உதைன்னு உதைப்பான். அப்படி ஒருதடவை எக்குத்தப்பா
அடிச்சப்பத்தான் இவனுக்குக் காது
கேக்காமப் போயிடுச்சு. அது
போதாதுன்னு
, ஒரு தடவை குடிச்சுப்பிட்டு எம் வயித்திலே அவன் உதைச்சதால
பன்னண்டு வருசம் களிச்சு உண்டான என் கர்ப்பமும் கலங்கிப் போயிக் குறைப்பிரசவமாயிட்டுது
.
அந்தக் கசுமாலப் புருசன விட்டுட்டு வாரதுன்னாகிராமத்த விட்டுட்டு வாரதுன்னா எத்தை நம்பி நான் திரும்பி
வாரது
? வந்தா யாருக்காவது பாரமாத்தான இருக்கணும்? அங்கணயே நொந்துக்கிட்டுக் கெடந்தேன், சாமி. நாச்சியப்பன்
மட்டும் அங்கிட்டு இங்கிட்டு
வேலைசெஞ்சு காப்பாத்தலேன்னா எம் பொளப்பே நாறிப்போயிருக்கும்
. ஒரு
அநாதைப் புள்ளைக்கு அவனைக் கண்ணாலமும் செஞ்சு
வச்சேன் சாமி. செவுடனை வேற யாரு கண்ணாலம் கட்டிக்கிடுவாக?
அதுவாவுது ஒளுங்காக் குடுத்தனம் நடத்தப்படாதா? பாவிமகன் நாச்சி பக்கத்து மிராசு பண்ணையில வேலை பாத்துட்டு ரவையிலே வந்திருக்கான்.
நானும் அந்தச்சமயம் பார்த்து கூத்துப் பார்க்கப் பக்கத்து ஊருக்குப்
போயிருந்தேன்
. இவன் வந்து
பார்த்தா, அந்தச் சிறுக்கி என் புருசனோட சல்லாபம் பண்ணிக்கிட்டிருந்திருக்கா.
அதைப்
பார்த்து, அப்படியே
துடிச்சுப் போயிட்டான் சாமி இவன்
. பித்துப் பிடிச்சவன் மாதிரி
அப்படியே வூட்டு வாசல்ல படுத்துக் கிடந்திருக்கான்
. நான் காலைக்
கருக்கல்ல வந்து பார்த்துப் பதறிப்போயிட்டேன்
. இந்த ஏமாளிப்பய
வெவரம் சொல்லறபோதுதான் மெதுவா அந்தச் சிறுக்கியும் எம் புருசனும் கதவைத் தொறந்துக்கிணு
வெளிலே வந்தாங்க
.
ஏண்டா பொறுக்கி நாயேஒனக்கு கூத்தியா போதாதாடா?
இப்படி அநியாயமா என் தம்பி வாள்க்கைய நாசம்பண்ணிப்பிட்டீயேடா.
உண்டவீட்டுக்கே ரெண்டகம் செய்யற படவான்னு கத்தி, தெருவைக் கூட்டிப்பிட்டேனுங்க. பேச்சு தடிச்சுப்போச்சு.
அந்தச் சிறுக்கியும் வாய்க்கொளுப்போட என் தம்பி ஆம்பளயே இல்ல,
அவன்கூட வாள்க்கையே நடத்தமுடியாதுன்னு சொல்லிப்புட்டுசொல்லறதென்ன, மோசமா சைகை
பண்ணிக் காமிச்சு, தாலியை விசிறி எறிஞ்சுப்புட்டு. எம்புருசன்கூட கெளம்பிட்டா. நானும் போடான்னு,
என் புருசன் கட்டின தாலியக் களட்டி அவங்கிட்டயே வீசிப்புட்டேன்.”
ராமாயி கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. சேலைத் தலைப்பால் அவ்வப்போது துடைத்துக்கொண்டாள்.
கட்டின பொண்சாதியே ஆம்பிளையே இல்லேன்னது இவனை என்னவோ செஞ்சுட்டுதுங்க.
அதுலேந்து இவன் வேட்டிய அவுத்துத் தலைல கட்டிட்டு வெறும் கோவணத்தோட அலயறானுங்க.
ஒரு எடத்துல நிலச்சு வேலை செய்யறதில்லை. எப்படியோ
நாலைஞ்சு வருசம் காலம் தள்ளீப்புட்டோம்
.”
கீழே இருந்து சொம்பை எடுத்து மீதித் தண்ணீரையும் வேகவேகமாகக் குடித்தாள் ராமாயி.
அப்புறம்?” என்று அவளைத் தூண்டினார் என் பாட்டி.
ஏதோ அரை வயிருக்காவது துண்ணுக்கிட்டிருந்தோமுங்க. திடுமுன்னு இந்தப் பயலுக்குச் சரியா வெளிவாசல் போகமுடியலீங்க. திங்காம இருந்துப்புடலாம். வெளிவாசல் சரியாப்போகலேன்னா
எப்படி
? இப்ப ஒருமாசமா தண்ணியாத்தான் சாப்பிடமுடியதுங்க.
கஞ்சியோ, கூழோதான் குடிக்கறான். கண்ராவியா இருக்குங்க. கிராமத்து நாட்டுவைத்தியரு கொடுத்த
சூரணம் வேலைபண்ணல
. அவரும் டவுனு டாகுடருதான் பார்த்து வைத்தியம்பண்ணனும்னு
சொல்லிட்டாரு
.
எனக்கு யாரைங்க தெரியும்? இங்க காரக்குடிலேதான்
பெரிய டாகுடரையா இருக்காங்க
. தரும ஆசுப்பத்திரிலே இவனைக் காட்டலாமுன்னு
இங்க கூட்டிக்கிணு வந்தேனுங்க
. எனக்கு இந்த ஊரில உங்கள விட்டா
யாரைத் தெரியுமுங்க
? இவன் கொஞ்சம் சொகமாகறதுக்கு நீங்கதான் கொஞ்சம்
வளி காட்டணுமுங்க
.”
தேம்பித் தேம்பி அழுதாள் ராமாயி.
தாத்தாவும், பாட்டியும் சிலகணங்கள் கண்களாலேயே பேசிக்கொண்டபின்,
பாட்டி இலேசாகத் தலையை அசைத்தார். தாத்தாவும் தொண்டையைச்
செருமிக்கொண்டார்
.
ராமாயி. நீ தங்க இங்கேயே நான் வசதி பண்ணிக்
கொடுக்கறேன்
. உன் தம்பியை வேட்டியை இடுப்பில் கட்டிக்கச் சொல்லு.
ஆஸ்பத்திரிக்குப் போவோம்என்ற என் தாத்தாவை நன்றியுடன்
நோக்கினாள் ராமாயி
.
நான் சொன்னாக் கேக்கமாட்டானுங்க. நீங்களே
பயமுறுத்துங்க
, இந்தப் பயபுள்ளைய.”
தாத்தா நாச்சியப்பனைக் கோபமாக முறைத்துப் பார்த்தார். பாட்டியையும் ராமாயியையும் காட்டினார்.
அவன் தலையிலிருந்த முண்டாசை வெடுக்கென்று பிடுங்கி, அவன் கையில் கொடுத்து, கட்டிக்கொள்ளும்படி சைகைசெய்தார்.
அவரது செயலைக்கண்டு நாங்கள் அதிர்ந்துபோய்விட்டோம்.
நாச்சியப்பன் ஒன்றும் பேசாமல் முண்டாசை அவிழ்த்து இடுப்பில்
கட்டிக்கொண்டான்
.
பாட்டி அவர்கள் இருவருக்கும் மதிய உணவு கொடுத்தார். நாச்சியப்பன்
வேண்டாமென்று மறுத்தான்
.
வெளிவாசல் போகமுடியாம கசுட்டப்படறான். என்னம்மா
சாப்புடுவான்
?” என்று வருத்தத்துடன் அலுத்துக்கொண்டாள் ராமாயி.
பாலாவது ஒரு டம்ளர் குடிக்கட்டும்டீ. பாவம்!
கொலைபட்டினியாவா கெடப்பான்?” என்று பால் எடுத்துவந்தார்
எனது பாட்டி
.
மூவரும் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்கள். தாத்தாவும்,
ராமாயியும் திரும்பிவந்தார்கள். நாச்சியப்பனை ஆஸ்பத்திரியில்
வைத்துப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்களாம்
.
வாசல் சுவருக்கும், வீட்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் ஒரு
தட்டியைப் போட்டு மறைத்துக் கட்டினார் தாத்தா
. பாட்டி ஒரு பாயும்,
போர்வையும் கொடுத்தார். ராமாயி அங்கேயே தன் துணிமூட்டையைத்
தலைக்கு வைத்துக்கொண்டு இரவு படுத்துக்கொண்டாள்
ஒருவாரம் வைத்திருந்து மருந்துமாத்திரை கொடுத்துப் பார்த்துவிட்டு, நாச்சியப்பனுக்கு
ஆசனவாயில் கட்டிவளர்ந்திருப்பதால் அறுவைசிகிச்சை செய்யவேண்டும்
, மதுரைக்குத்தான் கூட்டிப்போகவேண்டும் சொன்னார்கள். ராமாயி
மிகவும் பயந்துபோய்விட்டாள்
.
தாத்தாவும், பாட்டியும் அவளைச் சமாதானப்படுத்தினார்கள்.
நாச்சியப்பன் நிலைமை மிகவும் மோசமாக ஆகிவருகிறது, ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்து ஒத்துக்கொள்ளாமல் நிறைய வாந்தியெடுத்தவண்ணம்
இருக்கிறான் என்று தாத்தா மெல்லப் பாட்டியின் காதைக் கடித்தார்
.
அடுத்தநாள் ஆள்பத்திரி சென்று அங்கிருந்து மதுரைக்குக் கூட்டிச்
செல்லலாம் என்று முடிவுசெய்தார்கள்
.
அதற்கு வேலையே வைக்காமல் அன்றிரவே நாச்சியப்பன் இவ்வுலகையே விட்டுப்
போய்ச்சேர்ந்துவிட்டான்
. தெருவுக்கே கேட்கும்வண்ணம் கதறிய ராமாயி மெல்லமெல்ல
அடங்கி அமைதியானாள்
.
நாச்சியப்பனை முனிசிபாலிட்டியே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டது.
நான் துங்கிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து,
இரவில் தாத்தா
பாட்டி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தது என்
காதில் விழுந்தது
:
ஏன்னா, இப்ப ராமாயி விஷயம் என்ன ஆறது?
அவ தம்பியோ போய்ச்சேர்ந்துட்டான். இவளுக்கோ கிராமத்திலே
பொழப்புக்கு ஒண்ணும் இல்லே
…” என்று பாட்டி மெல்ல இழுத்தார்.
ஆமா, அத நெனச்சாத்தான் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா
இருக்கு
.” இது தாத்தா.
அவ நம்மள நம்பி இங்கே வந்துட்டா. நாமதானே
ஏதாவது செய்யணும்
. அவளை எப்படி…” மீண்டும்
அதே இழுப்பு
.
அவளுக்குத் தெரிஞ்சது பால் வியாபாரம்தானே?”
ஒரு மாடு இருந்தா, அதைக் கொல்லைலே கட்டிட்டு,
இங்கேயே இருந்து பார்த்துக்கோடின்னு சொல்லலாம்…”
மாட்டுக்கு எங்கே போறது?”
அதுவும் சரிதான். நாலு எடத்துல வீட்டுவேலை
செஞ்சா
…?”
அதெப்படி அவளை வீட்டுவேலை செய்னு எப்படிச் சொல்றது? வாழ்ந்து நொடிச்சவ. மேலேயும், இந்தத்
தெருவில வேலை செய்யற முத்தம்மாவுக்கு அது போட்டியான்னா போயிடும்
?”
அப்படீன்னா?”
சிறிது நேரம் தாத்தாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
ஏன்னா, தூங்கிட்டேளா?”
எப்படித் தூங்கறது? யோசிக்கிறேன். வழி தெரியாமலா
போயிடும்
? அப்ப அதப்பத்தி அவகிட்ட பேசலாம். நீ இதப்பத்தி ராமாயிகிட்ட எதுவும் பேசவேணாம். தம்பியப்
பறிகொடுத்த சோகத்திலே இருப்பா
.”
சரி.”
நான் கண்ணயர்ந்துவிட்டேன்.
ஏன்னா, ராமாயியை காணோமே? எங்க போயிட்டா?” என்று பாட்டி தாத்தாவை உரக்கக் கேட்கும்
குரல் என்னை எழுப்பியது
.
அவள் தங்கியிருந்த இடத்தில் அவளது துணிமூட்டையும் இல்லை. தாத்தாவும்
நானும் எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தோம்
. அவளைக் கண்டுபிடிக்கவே
முடியவில்லை
.
ராமாயி சென்றவள் சென்றவள்தான். அதன்பிறகு
அவளுக்கு என்ன ஆயிற்று என்று எங்களுக்குத் தெரியவே இல்லை
.



*****
Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 16 | சுப்பு

விதி
வஞ்சிரம் வலையை யாரும்
வாங்குவதாயில்லை.
குப்புமாணிக்கத்தின் முயற்சியால்
அரங்கத்திலிருந்து பணம் வந்தது.
துங்கபத்ரா தொழிற்சாலையும்
அரசாங்க நிர்வாகத்திலிருந்ததால் அங்கே பராமரிப்பு சரியில்லை.
நெய்யப்பட்ட வலையும் தரமானதாய் இல்லை. இதைவிட நவீனமான மெஷின் ஒன்று கோவாவில் இருப்பதாகத்
தகவல் கிடைத்தது.
கவலை மீனைப் பிடிப்பதற்காகக் கவலை வலை
தயாரிப்பதென்றும், அதற்காகக் கோவா போய் வருவதென்றும் முடிவாயிற்று.
இதற்குள் கடன் தொல்லை அதிகமாகி வட்டி கட்டுவதற்கே
மாதம் இரண்டாயிரம் ரூபாய் தேவைப்பட்டது.
ஓரளவுக்கு மேல் கடன்
வாங்க முடியாததால் சீட்டு எடுக்கத் துவங்கினோம்.
ராஜேந்திரன் பெயரால் சீட்டு, என் பேரால் சீட்டு, தவிர சீட்டு
எடுப்பதற்கென்றே சில பினாமிகள் வேறு.
எடுத்த எடுப்பிலேயே
தள்ளுபடிகளைப் பற்றிக் கவலைப்படாமல் சீட்டை எடுத்துவிடுவோம்.
பாதிப் பணத்துக்குமேல் போய்விடும். தவணை முறைதானே சமாளித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இதை
ஆரம்பித்துப் பிறகு சீட்டுக் கட்டுவதற்காகவே சீட்டு எடுக்க வேண்டிய நிலைமை.
குப்பத்திலேயே சீட்டு எடுத்தால் ஓரளவுக்கு மேல்
சந்தேகமாகிவிடும் என்பதால் கம்பெனிச் சீட்டுகளில் சேர்ந்தோம்.
கையில் நல்ல பணப்புழக்கம் இருந்ததால் செலவுக்குக்
கவலையில்லை.
செலவுக்குக் கவலை இல்லாததால் கூட
இருந்த கூட்டத்திற்குக் குறைவில்லை.
இந்த நேரத்தில் கோவா பயணம் வியாபார
ரீதியில் வெற்றிகரமாக முடிந்தது.
எல்லா விதமான நவீன
மெஷின்களோடு ஒரு தொழிலதிபர் அங்கே ஒரு வலை தயாரிப்புத் தொழிற்சாலையைத்
துவக்கியிருந்த நேரம் அது.
அதிக விளம்பரம்
இல்லாததால் அந்தத் தொழிற்சாலையில் தயாரித்த வலைகளை அவரால் விற்பனை செய்ய
முடியாதிருந்தது.
சென்னையிலோ வலைக்காக முன்பணம்
கொடுத்துவிட்டு மாதக் கணக்கில் மீனவர்கள் காத்திருக்கிறார்கள்.
கோவாவிலோ தயாரிக்கப்பட்ட வலை விலை போகவில்லை. இது எங்களக்குப் பொற்காலமாக அமைந்தது. முதலீடு இல்லாமலேயே எங்களால் ஆயிரக்கணக்கில்
வியாபாரம் செய்ய முடிந்தது.
கோவா வலையும்
மிகவும் தரத்துடனிருந்ததால் நாங்கள் வைத்ததுதான் விலை.
 
அடுத்த இரண்டு வருடங்கள் நான்
மாதத்திற்கு இருபது நாட்கள் கோவாவில் தங்கினேன்.
ராஜேந்திரன் சென்னையிலிருந்து விற்பனையைக் கவனித்துக் கொண்டான். அவனுடைய வரவு செலவுகளைக் கவனிக்க எனக்கு நேரமில்லை. நானும், என் பங்கிற்கு ஆடம்பர ஓட்டல்களில் தங்க
ஆரம்பித்தேன்.
சென்னையிலிருந்த நாட்களில் கோவாவோடு
தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால் டெலிபோன் வைத்துக்கொண்டேன்.
இருபத்து மூன்று வயதில் எனக்குக் கிடைத்த வசதிகள்
என்னை மாற்றிவிட்டன.
ஒரு கையில் வில்ஸ்
பில்டர்.
இன்னொன்றில் பெர்ரி மேசன். சிங்கப்பூர் சட்டையும், டபுள் நிட் பேண்டும், நீள
முடியும் என்னை அலங்கரித்தன.
தனியாகப் போனாலும்
டாக்ஸியில்தான் சவாரி.
ராஜேந்திரனின் தங்கைக்குத் திருமணம்
நிச்சயமாயிற்று.
சுக துக்கங்களில் எங்களுக்குச் சம
பங்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் நானே முன்னின்று எல்லாச் செலவுகளையும்
செய்தேன்.
ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்பட்டு மிக
ஆடம்பரமாக செய்யப்பட்ட திருமணத்தால் எங்கள் புகழ் ‘ஓஹோ’ என்று வளர்ந்தாலும்,
எக்கச்சக்கமாகக் கடன் வாங்கி விட்டிருந்ததால் நிதி நிலைமை கவலைக்கிடமானது.
அடிக்கடி கோவாவுக்குப் போய் வந்ததில்
வெளிநாட்டாரோடு பழகும் வாய்ப்பிருந்தது.
பஞ்சிமிக்கு அருகில்
ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஹிப்பி பீச் என்ற கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
ஒரே நேரத்தில் நூறு கோஷ்டிகள் வெவ்வேறு இடத்தில்
வெவ்வேறு பாடலைப்பாடி இசைத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த சுதந்திர பூமியில் ஆடைகள் அனாவசியம் என்ற அபிப்பிராயத்தில் சிலர்
உலவிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் அருகில் போக
முடியாது.
குளிப்பது என்ற இந்தியப்பழக்கத்தை
இவர்கள் அங்கீகரிக்கவில்லை. சினிமாவில் வரும் தேவலோகக் காட்சி போல் இந்த இடத்தில்
அடுப்பப் புகையும், கஞ்சா நெடியோடு நிறைந்திருக்கும்.
நானும் இரண்டு முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டேன்.
ஒரு வாரம் கழித்து இந்தப் பெண் என்னை
ஓட்டலில் வந்து சந்தித்தாள்.
ஜெர்மனியிலிருந்து
பணம் வந்துவிட்டதாகவும், தான் ஊருக்குப் போவதாகவும் கூறினாள்.
நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோது வாங்க
மறுத்துவிட்டேன்.
கோவாவிலிருந்து ரயிலில் பெங்களூர்
வழியாகச் சென்னை வர வேண்டும்.
முதல் நாள் காலை
புறப்பட்டு மறுநாள் இரவு சென்னை வரலாம்.
இந்த ரயிலில்
என்னோடு வருபவர்களில் யார் சென்னை வரை பயணம் செய்கிறார்கள் என்பதை முதலில்
தெரிந்து கொள்வேன்.
அதிலும்
வெளிநாட்டாரிடம் நானே வலியச் சென்று பேச்சுக் கொடுப்பேன்.
நான் சீட்டைவிட்டு எழுந்து போகும்போது என் பெட்டிப்
படுக்கைகளையும், வலை மூட்டைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள ஆள்
வேண்டுமல்லவா?
ஒருமுறை ஒரு ஆங்கிலேயன் என்னுடன் பயணம்
செய்தான்.
தத்துவ மாணவனான அவன் கோவாவைப் பார்த்த
பிறகு ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய உரையைக் கேட்பதற்காக சென்னைக்கு வந்து
கொண்டிருந்தான்.
வண்டி புறப்பட்டதிலிருந்து சென்னை
வந்து சேரும்வரை எனக்கும், இவனுக்கும் இடையே இடைவிடாத வாதம் நிகழ்ந்து
கொண்டிருந்தது.
விதி என்று ஒன்று உண்டு. அதில் யாரும் தப்ப முடியாது என்பதை அவன் மீண்டும்
மீண்டும் விளக்க முயன்றான்.
எனக்கு விதியில்
நம்பிக்கையில்லை.
நாங்கள் தூக்கியெறிந்துவிட்ட விஷயங்களை
நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்று சொல்லிவிட்டேன்.
ரயில் சென்னைக்கு வந்தபோது பேய் மழை. ட்ராக்கில் தண்ணீர் நிற்பதால் ரயிலை பேசின்
பிரிட்ஜிலேயே நிறுத்திவிட்டார்கள்.
போர்ட்டரின்
உதவியில்லாமல் நானும் இவனுமாய் எங்கள் லக்கேஜைத் தூக்கிக்கொண்டு ஸ்டேஷனுக்கு
வெளியே வந்தோம்.
வீட்டுக்குப் போன் செய்தால் பஸ் வசதி
இல்லாததால் நான் அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டுமென்று அண்ணன் சொல்லிவிட்டார்.
அவர் சொன்னதை மதிக்காமல் ஒரு ஆட்டோவை வாடகை பேசினேன். ஆட்டோவில் உள்ளே நானும், ஆங்கிலேயனும். நாங்கள் நகர முடியாதபடி பெட்டி, படுக்கைகள், வலை
மூட்டை. ரோட்டில் வண்டிகளே இல்லை.
தெரு விளக்கும்
இல்லை.
வேகமாக வந்த ஆட்டோ ரிசர்வ் வங்கி
சப்வேக்குள் இறங்கிவிட்டது.
டிரைவர் யோசியாமல் செய்த காரியத்தால்
தண்ணீர் மளமளவென்று ஏறியது.
டிரைவரும்
ஆங்கிலேயனும் தண்ணீரில் குதித்து இடுப்பளவு நீரில் நின்று கொண்டு ஆட்டோவைப்
பிடித்துக் கொண்டார்கள்.
நான் இறங்க
முடியாதபடி என்னைச் சுற்றி பெட்டி, படுக்கை.
ஆட்டோ டிரைவரும்,
ஆங்கிலேயனுமாய்ச் சேர்ந்து ஆட்டோவைத் தள்ளிக்கொண்டு மேலே வந்தார்கள்.
மேலே வந்ததும் ஆட்டோ டிரைவர் இஞ்சினை சுத்தம் செய்து
கொண்டிருந்தான்.
நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். ஆங்கிலேயன் என் அருகில் வந்து ‘இப்போது நீ விதியை
நம்புகிறாயா? இன்றிரவு நான் உன்னை வண்டியில் வைத்துத் தள்ள வேண்டுமென்பதுதான் என் விதி’
என்றான்.
நொச்சிக்குப்பத்துக்குப் பக்கத்தில்
ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது.
இந்த ரெஸ்டாரன்ட்
முதலாளி எனக்கு வேண்டியராவார்.
சென்னையிலிருக்கும்
போதெல்லாம் நான் இங்கேயே தங்கியிருப்பேன்.
திடீர் ஐஸ்வர்யத்தை
என்ன செய்வதென்னு நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது பணத்தைக் கரைக்க இந்த
ரெஸ்டாரென்ட் உதவியது.
அவ்வப்போது இதற்கு
நான் பைனான்ஸ் செய்வதுமுண்டு.
நானும்,
ராஜேந்திரனும் இங்கே புதுமுறை டிப்ஸ் ஒன்றை அமல்படுத்தினோம்.
சாப்பிட்டுவிட்டு, அட்டென்டென்ஸ் ரிஜிஸ்தரை
எடுத்துவரச் செய்து வரிசையாக ஆளுக்கு ஒரு ரூபாய் டிப்ஸ் கொடுப்போம்.
தண்ணீர் இழுப்பவனிலிருந்து, மாவு ஆட்டுபவன்வரை
எல்லோரும் சேர்ந்துதானே ஒரு தோசையை உருவாக்குகிறார்கள்.
ஆகவே, எல்லோருக்கும் சமமாக டிப்ஸ் கொடுக்க
வேண்டுமென்பது, ராஜேந்திரனின் சித்தாந்தம்.
எனக்கும் இது
நியாயமாகப்பட்டது.
ரெஸ்டாரென்டில் வாடிக்கையாளர் உபயோகப்படுத்தும்
டெலிபோன் காசைப் போடுவதற்கு ஒரு உண்டியல் இருந்தது.
இந்த உண்டியல் ஒருநாள் திருட்டுப் போய்விட்டது. முதலாளி ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து குறி
பார்த்தார்.
மந்திரவாதி தெற்கே இருப்பவன்தான்
திருடியிருக்கிறான் என்று கூறிவிட்டான். தெற்கே ஜானகிராமன் என்ற காபி மாஸ்டர்
இருந்திருக்கிறான்.
ஜானகிராமன்
வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
இந்த விஷயத்தைக்
கேள்விப்பட்டதும் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த விஞ்ஞான யுகத்தில் மந்திரவாதியின் பேச்சை நம்பி ஒரு தொழிலாளியைப் பழி
வாங்கிவிட்டார்கள் என்ற கோபத்தில் ஜானகிராமனை என்னோடு வைத்துக் கொண்டேன்.
என்னுடைய தொழிலில் எனக்கே வேலையில்லாதபோது ஜானகிராமன்
செய்வதற்கு ஒன்றுமில்லை.
தினமும் பகலில் என்
வீட்டுக்குப் போய் சாப்பாடு எடுத்துவர வேண்டும்.
மற்றபடி நான் சிகரெட் குடித்தால் அவன் குடிக்க வேண்டும். நான் வேறு ஏதாவது குடித்தால் அவனுக்கும் அதுவே. மூன்று வேளை சாப்பாடும், சகல செலவும் போக மாத சம்பளம்
இருநூறு ரூபாய்.
வேலையிலிருக்கும்போதே ஜானகிராமன் ஒரு
குப்பத்துப் பெண்ணிடம் வம்பு செய்துவிட்டான்.
என்னுடைய தலையீட்டால் உதை வாங்காமல் தப்பித்தான். ஜானகிராமன் என்னைத்தான் அதிகமாகக் கவனிக்கிறான் தன்னைக்
கவனிக்கவில்லை என்ற எண்ணம் ராஜேந்திரனுக்கு ஏற்பட்டு, அவனும் ஒரு பையனை
நியமித்துக் கொண்டான்.
இவ்வாறு என்னால்
போஷிக்கப்பட்ட ஜானகிராமன் ஒரு நாள் குப்புமாணிக்கம் வீட்டில் நான் வைத்திருந்த
கணிசமான தொகையோடு காணாமல் போனான்.
ஜானகிராமனிடம் நான் பணத்தைப் பறிகொடுத்த
செய்தி ரெஸ்டாரென்ட் முதலாளிக்குத் தெரிந்தவுடன் அவர் எனக்கு ஆள் மூலம் அழைப்பு
விடுத்தார்.
நான் அவரைச் சந்தித்தேன். ‘ஜானகிராமன்தான் டெலிபோன் காசைத் திருடினான் என்பதை
ஒருவன் என்னிடம் சொல்லிவிட்டான்.
தகவல் கொடுத்தவனை
அடையாளம் காட்ட விரும்பாததால் மந்திரவாதி சொல்வதுபோல் ஒரு செட்அப் நானே செய்தேன்.
நீ இதைப் புரிந்து கொள்ளவில்லை. இவ்வளவு நாட்கள் என்னோடு பழகியிருந்தும் என்னிடம்
கேட்காமலேயே நீ முடிவு எடுத்துவிட்டாய்.
உனக்கு புத்தி
வரட்டும் என்று நானும் விட்டுவிட்டேன். இதுதான் விஷயம்’ என்றார்.
 
இது நடந்த சில மாதங்களுக்குப் பிறகு
நான் கோவாவுக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தேன்.
வண்டி குண்டக்கல் ஸ்டேஷனுக்கு வெளியே வந்துவிட்டது. நான் எஞ்ஜினைப் பார்த்தபடி ஜன்னலோரம்
உட்கார்ந்திருந்தேன்.
அப்போது ரயில்வே
ட்ராக் ஓரமாக ஜானகிராமன் நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டேன்.
அவ்வளவுதான். வண்டியிலிருந்து
என்னுடைய பெட்டிகளை வெளியே வீசி எறிந்தேன்.
வண்டியிலிருந்து
குதித்துவிட்டேன்.
ரயில் என்னைக் கடந்து சென்றுவிட்டது. பெட்டிகளை எடுத்து ஓரிடத்தில் வைப்பதற்குள்
ஜானகிராமன் என்னைப் பார்த்துவிட்டான்.
எனக்கும் அவனுக்கும்
நூறு கஜம் இடைவெளி.
தண்டவாளம்
மேட்டிலிருந்தது.
இரண்டு பக்கமும் ஆறு அடிப் பள்ளம். பள்ளத்திற்கு அப்பால் ஒருபுறம் வயல். இன்னொருபுறம் சாலை. அதன் மறுபக்கம் வீடுகள். பெட்டியை ஏதாவது ஒரு
வீட்டில் கொடுத்துவிட்டு இவனைப் பிடிக்கலாம் என்ற யோசனையுடன் பெட்டியைத்
தூக்கினேன்.
ஜானகிராமன் அங்கே கிடந்த சரளைக்கற்களை
எடுத்து நான் நகர முடியாதபடி வீசினான்.
கல்லடியிலிருந்து
தப்புவதற்காக பள்ளத்தில் இறங்கினேன்.
ஜானகிராமன் கற்களை
வீசிக்கொண்டே, தண்டவாளத்தின்மீது ஓடி மறைந்து போனான். பிறகு நான் குண்டக்கால்
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி கான்ஸ்டபிள் ஒருவரை ரிக்ஷாவில்
ஏற்றிக்கொண்டு ஜானகிராமனைத் தேடினேன். அவன் கிடைக்கவில்லை.
நான் எவ்வளவு சம்பாதித்தாலும் கடன்
வாங்கினாலும் என் வீட்டாருக்கு அதனால் லாபம் இல்லை.
வீட்டுக்கென்று நான் பணம் கொடுத்ததில்லை. ஒருநாள் மொத்தத் தொகையாகக்
கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
ஒரே ஒருநாள் மட்டும்
இதற்கு விதிவிலக்கு. அம்மாவும், நயினாவும் சண்டை போட்டுக் கொண்டதில் அம்மா
உணர்ச்சிவசப்பட்டுக் கீழே விழுந்துவிட்டாள்.
நாக்கு இழுத்துக்
கொண்டது.
பேச முடியவில்லை. அம்மாவை ஒரு டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு போய் ஒவ்வொரு
டாக்டராகக் காட்டினேன்.
யாரும் எனக்குத்
திருப்திகரமான வகையில் பதில் சொல்லவில்லை.
வீட்டுக்கே
வந்துவிட்டேன்.
ஒருநாள் சஸ்பென்ஸுக்குப் பிறகு
அம்மாவுக்குப் பேச்சு வந்துவிட்டது.
வியாபார விஷயமாக நான் கோவா
போயிருந்தபோது சென்னையில் பெரியப்பா காலமாகிவிட்டார்.
தொடரும்…
***



Posted on Leave a comment

2018 : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் | லக்ஷ்மணப் பெருமாள்

சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,
தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில சட்டசபை முடிவுகள்
11-12-2018 அன்று வெளியாகின. சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று
மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்கானாவில்
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி
அமைத்தன.
ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பிரதான ஆளும்
அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்திலேயே நேரடிப் போட்டியில் இருந்தது. தெலுங்கானாவிலும்
மிசோரத்திலும் பாஜக பலமான கட்சியல்ல. பாஜகவைப் பொ
ருத்தவரையில் தான்
ஆண்ட மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் தான் ஆண்ட மிசோரத்தை
இழந்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைத் தக்க
வைத்துள்ளது.
2019
தேர்தலுக்கு முன்பாக நடக்கும் சட்டசபைத் தேர்தல் என்பதால்
இத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதில் எந்த
ச்
சந்தேகமுமில்லை. புள்ளி விபரங்க
ளின்படி உண்மையிலேயே
காங்கிரஸ் அதிக பலம் பெற்றுள்ளதா
, பாஜக தனது பலத்தை
முற்றிலும் இழந்துள்ளதா என்பதை
க் காணலாம்.
சத்திஸ்கர்:
சத்திஸ்கரில் பாஜக பெருந் தோல்வியைச்
சந்தித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
15 ஆண்டுகள்
தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கெதிரான மக்கள் மனநிலையின் பிரதிபலிப்பு
என்றே தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பொருள் கொள்ளவேண்டியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பாஜக காங்கிரசைக்
காட்டிலும்
10% வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது.
2003, 2008, 2013ல் இரண்டு
கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் குறைந்துகொண்டே வந்தது. கடந்த
2013 தேர்தலில் 0.75% வாக்கு வித்தியாசமே இருந்தது.
ஆனால் இடங்களைப் பொ
ருத்தவரை கடந்த மூன்று
தேர்தல்களிலும் சராசரியாக காங்கிரஸ்
39-40 இடங்களையும் பாஜக 49-50
இடங்களையும் பிடித்திருந்தது
. இத்தேர்தலில் அஜித் ஜோகியின் ஜனதா சத்தீஸ்கர் காங்கிரசும்
பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
2013
Vs 2018
ஒரு
ஒப்பீடு:
மொத்த தொகுதிகள்: 90
ஆண்டு
பாஜக
காங்கிரஸ்
பகுஜன் சமாஜ்வாடி
வாக்கு சதவீதம்
வென்ற இடங்கள்
வாக்கு சதவீதம்
வென்ற இடங்கள்
வாக்கு சதவீதம்
வென்ற இடங்கள்
2013
41.04%
49
40.29%
39
4.27%
1
2018
33.0%
15
43.0%
68
11.5% (JCCP+BSP)
7
Source:ECI
சத்திஸ்கர் பழங்குடியினர் மற்றும் தலித் தொகுதிகளுக்கான
முடிவுகள் – ஓர் ஆய்வு
பழங்குடியினர் மொத்த தொகுதிகள் (ST): 29
தலித்துகளுக்கான மொத்த தொகுதிகள் (SC): 10
ஆண்டு
பாஜக
காங்கிரஸ்
ST
SC
ST
SC
2008
19
5
10
4
2013
11
9
18
1
2018
4
2
24
6


Source:ECI
·       
2018
தேர்தலில் பழங்குடியினருக்கான 29 இடங்களில்
காங்கிரஸ்
25 இடங்களை வென்றுள்ளது. மேலும் தலித்துகளுக்கான 10 இடங்களில் காங்கிரஸ் 7 இடங்களைக்
கைப்பிடித்துள்ளது.
2013ல், 1
8
பழங்குடியினர்
தொகுதிகளைக் காங்கிரஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.
·       
பாஜக 2008, 2013 தேர்தலில் முறையே 19, 11
பழங்குடியினர்
தொகுதிகளில் வென்றது. ஆனால்
2018 தேர்தலில் பாஜக
பழங்குடியினருக்கான தொகுதிகளில்
3 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ஒரு இடத்தை
அஜித் ஜோகியின் கட்சி வென்றுள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித் தொகுதிகளில்
காங்கிரஸ் தனது கடந்தகால பலத்தைப் பெற்றுள்ளது.
·       
காங்கிரஸ் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது.
இது பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு உதவும். அதாவது
2004, 2009 மற்றும் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்
மொத்தமுள்ள
11 பாராளுமன்றத் தொகுதிகளில் 1 இடத்தை மட்டுமே வென்றது. 10 தொகுதிகளில் பாஜகவே
வென்றுள்ளது.
·       
சத்திஸ்கர் மக்கள் சட்டசபையையும் பாராளுமன்றத்
தேர்தலையும் பிரித்துப் பார்த்தால் முடிவுகள் அதிக அளவுக்கு பாஜகவிற்கு லாபம்
கொடுக்கலாம். ஆனால் பாஜகவின் வாக்கு சதவீதம் இப்போதுதான் பெரிய அளவில்
சரிந்துள்ளது. மேலும் காங்கிரஸ் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை
அறிவித்தால் பாஜக வெற்றிக்கு
கஷ்டப்
வேண்டியிருக்கும்.
·       
பாஜகவின் வாக்கு சதவீதம் காங்கிரசைக் காட்டிலும் 10% குறைந்துள்ளது.
2013 தேர்தலை ஒப்பிட்டால் 8% வாக்குகளை
இழந்துள்ளது. இதுவே பாஜகவிற்கான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம்:
மத்தியப் பிரதேசத்தில் எந்தக் கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள
230
தொகுதிகளில்
காங்கிரஸ்
114 இடங்களையும், பாஜக 109
இடங்களையும்
பெற்றது. பெரும்பான்மைக்குத் தேவை
116 இடங்கள். பகுஜன்
சமாஜ்வாடி
(2 இடங்கள்)
சமாஜ்வாடி
(1 இடம்) ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. சத்திஸ்கரைப்
போல பாஜக இங்கு படுதோல்வியைச் சந்திக்கவில்லை.
15
ஆண்டுகள்
தொடந்து ஆட்சியில் இருந்தபோதும் கடுமையான போட்டியைக் கொடுத்தது. பாஜகவே
காங்கிரசைக் காட்டிலும்
0.1%
அதிக வாக்குகளைப் பெற்றது. பாஜக 41%, காங்கிரஸ்
40.9%.
14 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும்
பாஜகவின் வெற்றி வாக்கு வித்தியாசம்
2000க்கும் குறைவு.
இதில்
9 இடங்களில் காங்கிரசும், 5
இடங்களில்
பாஜகவும் வெற்றி பெற்றன. அதிலும்
10 தொகுதிகளில்
வாக்கு வித்தியாசம்
1000 க்கும் குறைவு. அதில்
காங்கிரஸ்
7
தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் வென்றது.
Source:NDTV
மத்தியப் பிரதேசம் பழங்குடியினர் மற்றும்
தலித் தொகுதிகளுக்கான முடிவுகள் – ஓர் ஆய்வு
பழங்குடியினர் மொத்த தொகுதிகள் (ST): 46
தலித்துகளுக்கான மொத்த தொகுதிகள் (SC): 35
ஆண்டு
பாஜக
காங்கிரஸ்
ST
SC
ST
SC
2008
29
25
17
9
2013
31
28
15
4
2018
16
17
19
18
Source:ECI
பாஜகவின் தோல்விக்கான காரணங்கள்:
·       
காங்கிரஸ் கடந்த 2013 (36.38%), 2008 (32.39%), 2003 (31.61%)
வாக்குகளைப் பெற்றுள்ளது.
 காங்கிரசின்
வாக்கு சதவீதம் கடந்த
2013 (36.38%) தேர்தலைக்
காட்டிலும் அதிக வாக்கு சதவீதத்தை
2018 (40.9%) பெற்றுள்ளது.
·       
பாஜக கடந்த 2013 (44.88%), 2008 (37.64%), 2003 (42.5%) வாக்குகளைப் பெற்றுத் தனிப் பெரும் கட்சியாக
ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் இத்தேர்தலில்
3.88% குறைந்துள்ளது.
·       
இத்தேர்தலில் பகுஜன் சமாஜ்வாடி (2), சமாஜ்வாடி
(1), சுயேச்சைகள் (4)
இடங்களைப்
பிடித்தனர். இதில்
6
தொகுதிகளில் பாஜகவே இரண்டாமிடத்தில் வந்தது. காங்கிரஸ்14 தொகுதிகளில் மூன்றாம் இடம் அல்லது அதற்கும் கீழாகவே இருந்தது.
·       
191
கிராமப்புற தொகுதிகளில் காங்கிரஸ் 103 இடங்களில்
காங்கிரசும்,
86 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
·       
37 நகர்ப்புறத்
தொகுதிகளில் காங்கிரஸ்
11 இடங்களிலும், பாஜக 23
இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
·       
பாஜக தலித் மற்றும் பழங்குடியினர் தொகுதிகளில்
பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை அட்டவணையைப் பார்த்தாலே புரியும்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகள் 200. ஒரு
வேட்பாளர் தேர்தலின்போது இறந்து விட்டதால்
199
இடங்களுக்குத்
தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ்
99 இடங்களையும்
பாஜக
73 இடங்களையும் வென்றன. பெரும்பான்மைக்குத் தேவையான
இடங்கள்
100.
காங்கிரசின் கூட்டணிக் கட்சியான லோக்தள் பெற்ற 1 இடத்தையும் சேர்த்து
100 இடங்களைப் பெற்று ஆட்சி
அமைத்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரசுக்கும் பாஜகவிற்குமான வித்தியாசம்
0.5%
மட்டுமே!
கடந்த கால தேர்தல்களில் கட்சிகளின் வாக்கு
சதவீதமும் இடங்களும்
:
ஆண்டு
பாஜக
காங்கிரஸ்
பகுஜன் சமாஜ்வாடி
வாக்கு சதவீதம்
வென்ற இடங்கள்
வாக்கு சதவீதம்
வென்ற இடங்கள்
வாக்கு சதவீதம்
வென்ற இடங்கள்
2003
39.2%
120
35.65%
56
3.97%
2
2008
34.7%
78
36.82%
96
7.6%
6
2013
45.17%
163
33.7%
21
3.37%
3
2018
38.8%
73
39.3%
99
4.00%
6
Source:ECI
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
ராஜஸ்தானில் பாஜக இடங்களை இழந்திருந்தாலும் வாக்கு வங்கியை இழக்கவில்லை.
பாராளுமன்றத் தேர்தலில் மோடிக்கான வாக்குகளைக் குவிக்கும் பட்சத்தில் பாஜகவே அதிக
இடங்களைப் பிடிக்கும் என்று சொல்லி விடலாம். இப்படிப் பார்த்தால் காங்கிரசுக்கு
வந்தவரை லாபம். ஏனெனில் கடந்த
2014 லோக்சபா
தேர்தலில் பாஜக
25/25
இடங்களையும் கைப்பற்றியது. அது இந்தமுறை நடக்குமா என்பதைப்
பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. மேற்கூறிய அட்டவணைப்படி பார்த்தால் பாஜக
கடந்த நான்கு சட்டசபைத் தேர்தல்களிலும்
70 சட்டசபை
தொகுதிகளுக்கும் கீழே செல்லவில்லை. ஆனால் காங்கிரசுக்கு அப்படியல்ல. தனிப்
பெரும்பான்மையைக் கூட
ப் பிடிக்க இயலவில்லை.
ராஜஸ்தான் பழங்குடியினர் மற்றும் தலித் தொகுதிகளுக்கான
முடிவுகள் – ஓர் ஆய்வு
:
பழங்குடியினர் மொத்த தொகுதிகள் (ST) : 34
தலித் மொத்த தொகுதிகள் (SC) : 25
ஆண்டு
பாஜக
காங்கிரஸ்
ST
SC
ST
SC
2008
2
14
16
18
2013
18
32
4
0
2018
10
11
13
21
Source:ECI
ராஜஸ்தானில் பாஜக தலித் மற்றும் பழங்குடியினர்
தொகுதிகளில்
21/59 அளவிற்கே இடங்களைப்
பிடித்துள்ளது.
காங்கிரசோ
34/59 இடங்களைப்
பிடித்துள்ளது. மற்ற
4 இடங்களில் பகுஜன்
சமாஜ்வாடியும் இதர கட்சிகளும் பிடித்துள்ளன.
தெலுங்கானா:
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறுதிப்
பெரும்பான்மையுடன் தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. சந்திரசேகர் ராவின்
மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவச திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே அரசியல்
நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர். காங்கிரஸ் மகா கூட்டணி ஒன்றை தெலுகுதேசம்,
தெலுங்கான ஜன சமிதி மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துப்
போட்டியிட்டது. அதற்கு எந்த பலனுமில்லை. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய
சமிதி
88/119
இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள்
60.

Source:NDTV
தேர்தல் முடிந்த ஐந்து
மாநிலங்களில் தெலுங்கானாவில் மட்டுமே ஆளும் அரசுக்கு ஆதரவாக மக்கள்
வாக்களித்துள்ளார்கள். அதிலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக
25 இடங்களை
TRS கட்சிக்கு கிடைக்கச் செய்துள்ளார்கள். காங்கிரஸ்
கூட்டணி கடந்த
2013 தேர்தல்படி பார்த்தால் 37 இடங்களைப்
பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை
16 இடங்கள் குறைந்து
21 இடங்களே
பிடித்துள்ளது. பாஜகவைப் பொ
ருத்தவரையில் கடந்த
தேர்தலைக்காட்டிலும் நான்கு இடங்கள் குறைந்து ஒரு இடத்தைப் பிடித்தாலும் வாக்கு
சதவீதம் அதிகரித்தே உள்ளது. மேலும் பாஜக தெலுங்கானாவில் ஒரு முக்கியக் கட்சியல்ல.
லோக்சபா தேர்தலில் மஹா கூட்டணி அமைத்தால் மட்டும் வெற்றி கிடைக்காது என்பதன்
முன்னோட்டமாக தெலுங்கானா முடிவுகளை அரசியல் வல்லுனர்கள் முன்வைக்கிறார்கள்.
டிஆர்எஸ்தான்
லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களைப் பிடிக்கும். அதன் தலைவர் மற்றும் முதல்வரான
சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வாறாக மூன்றாவது அணி அமைந்தால் பாஜகவிற்கு லாபமில்லாவிட்டாலும் காங்கிரசுக்குப்
பெருத்த நஷ்டம் ஏற்படும். ஏனெனில் மாநில கட்சிகள் கோலோச்சும் பல மாநிலங்களில்
பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அம்மாநிலங்களில்
காங்கிரசுக்கு சில இடங்களை ஒதுக்கினால் காங்கிரசின் மொத்த எண்ணிக்கை உயரும். அதைத்தான்
மூன்றாவது அணி தடுக்கும்.
மிசோரம்:
மிசோரத்தில் மொத்த தொகுதிகள் 40. பெரும்பான்மைக்குத்
தேவையான இடங்கள்
16. மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களைப் பிடித்துள்ளது. ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 5 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. பாஜக 1 இடத்தில்
வெற்றி பெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மொத்தம்
7.
மோடியின் கடந்த நான்கு வருடங்களில் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரசின் ஆட்சியை
அகற்றி பாஜக மற்றும் வடகிழக்குப் பிராந்திய கட்சிகளின் ஆட்சி அமைந்துள்ளது.
காங்கிரஸ் ஏழு மாநிலங்களையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் இது
பாஜகவிற்கு சாதகமான அம்சம். ஏனெனில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பிரதான
ஆளும் அல்லது எதிர்க்கட்சியாகவே இருந்து வந்துள்ளது. அவ்வகையில் பார்க்கும்போது மொத்தமுள்ள
26 வடகிழக்குப் பாராளுமன்றத் தொகுதிகளில் தேர்தலுக்குப்
பிந்தைய அல்லது முந்தைய கூட்டணியை பிராந்தியக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க
அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
மிசோரத்தில் கிறித்து
மக்கள் தொகை
87%.
பௌத்தர்கள் 8.5%, இந்துக்கள் 2.7%.
 பாஜக இந்தத்
தேர்தலில்
0.3%
(2013) லிருந்து 8% (2018) தேர்தலில்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை ஆட்சிக்குப்
பெரும்பாலும் வருவது மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் பொ
ருத்தே
அமைந்து வந்துள்ளது. ஆகையால்தான்
2014-2014 காலக்கட்டங்களில்
காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வந்தது
என்பது முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லை என்றாலே
பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வடகிழக்குப் பிராந்தியக் கட்சிகள் உதவும்.
Source:ECI



Posted on Leave a comment

வீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. மாலைப்பொழுது. வெளியில்
போய்விட்டு வந்துகொண்டிருந்தோம். எங்கள் வண்டி சிக்னலில் நின்றிருந்தது.
நடைபாதையில் ஒரு சிறுமி – பரட்டைத்தலையும், அழுக்கு உடைகளுமாக – மிஞ்சிப்போனால்
பத்து அல்லது பதினோரு வயது இருக்கலாம். திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு வேக
வேகமாக ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கலவரம்;
கண்களில் அதீத பயம். அவள் பின்னாலேயே ஒரு சிறுவன் – அவளைவிட ஒன்றிரண்டு வயது கூட
இருக்கலாம். வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி. அரைகுறையாக வளர்ந்திருந்த மீசையும் தாடியும்
அவனை விடலையாக
க்
காட்டியது. இவள் திரும்பிப் பார்த்தவுடன் கால்களை அகட்டி நின்று கொண்டு அசிங்கமாக
சைகை காண்பித்தான். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது.
உடலெல்லாம் கூசியது. அந்தச் சிறுமி இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தாள். அதற்குள் பச்சை
விளக்கு எரியவே எங்கள் வண்டி நகர்ந்துவிட்டது. பலநாட்கள் தெருவில் கண்ட இந்தக்
காட்சியே மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

பிஞ்சிலேயே பழுத்து வக்கிரமாகிவிட்ட அந்தச் சிறுவனை யார்
கட்டுப்படுத்துவது? சமூகத்தில் இந்த மாதிரியான விடலைப் பருவத்தில் அலையும் சிறுவர்களை
யார் திருத்த முடியும்? ஒருபக்கம் படிப்பில் சூரப்புலிகளாய் சிறுவர்கள்; இன்னொரு
பக்கம் இதைப்போன்ற வீதியோரங்களில் வளரும், பிற்காலத்தில் சமூக விரோதிகளாக
உருவாகும் குழந்தைகள். இந்தக் குழந்தைகளை திசை மாற்றி நல்லவர்களாய், சமூகத்தில்
தலை நிமிர்ந்து வாழுபவர்களாய் செய்ய முடியாதா? இந்தக் கேள்விகள் மனதை குடைந்து
கொண்டிருந்தன.
இந்த மாதிரி சிறுவர்களைப் பொதுவாக வீதிக்குழந்தைகள்
என்று குறிப்பிடப்படுகிறார்கள் (street children). யூனிசெப்-பின் கருத்துப்படி
பதினெட்டு வயசுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் – வீதிகளை அல்லது மனிதர்கள்
யாருமில்லாத இடங்களை
த்
தங்களது வாழ்விடங்களாக மாற்றிக்கொண்டு
, போதுமான பாதுகாப்போ அல்லது அவர்களை
அக்கறை எடுத்து
க்
கவனிக்க யாரும் இல்லாமலோ இருப்பவர்கள் வீதிக் குழந்தைகள். சில வளர்ந்த நாடுகளில்
சில குழந்தைகள் த்ரோன்-அவே (thrown-away) குழந்தைகள் என்று ஒரு தனியான பிரிவின்
கீழ் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தாய் அல்லது தந்தை
மட்டுமே இருக்கும் ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களாக
இருக்கிறார்கள்.
இந்தக்
குழந்தைகளைப் பற்றிய முதல் ஆவணம் 1848ல் ஆலன் பால் என்பவர் எழுதிய சோவியத்
ரஷ்யாவின் கைவிடப்பட்ட குழந்தைகளைப் பற்றிய புத்தகத்தில் காணப்படுகிறது. ‘அநாதைகளாகவும்,
கைவிடப்பட்டும் வாழும் குழந்தைகள் பழங்காலத்தில் இருந்தே துன்பத்திற்கு ஆளாகி
வருகிறார்கள். அகஸ்டன் ரோமில் இருக்கும் ஆண் விபசாரிகள் பலரும் இந்தச் சிறுவர்களே’
என்று இந்த நூலில் குறிப்பு காணப்படுகிறது. லார்ட் ஆஷ்லி 1848ல் சுமார்
30,000க்கும் மேற்பட்ட நிர்வாணமான, இழிந்த நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்கள் லண்டன்
நகரத்தில் சுற்றுவதாக
க்
குறிப்பிடுகிறார். முதல் உலகப்போரில் ஏற்பட்ட அழிவிற்குப் பிறகு சுமார் 7 லட்சம்
வீதியோர
ச்
சிறுவர்கள் இருப்பதாகவும், இவர்கள் தங்களுக்குள் குழுக்களை அமைத்துக்கொண்டு சின்னச்சின்ன
திருட்டுக்களிலும் விபசாரத்திலும் ஈடுபடுவதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் சுமார் ஒரு
மில்லியன் வீதியோரக் குழந்தைகள் இருக்கின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.
அவர்களைத் தவிர சின்ன நகரங்களிலும், ஊர்களிலும் இன்னும் நிறைய பேர்கள்
இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான இந்த
ச் சிறுவர்கள் வார்த்தைகளில் விவரிக்கவொண்ணாக் கொடுமையான நரக வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் குழந்தை
த் தொழிலாளிகளாக மாறுகின்றனர்.
பாதி வயிற்றுக்கு உணவு, கொளுத்தும் வெயிலிலிருந்தும், தாங்க
இயலாத குளிரிலிருந்தும் கொட்டும் மழையிலிருந்தும் காப்பாற்றாத உடைகள், ஒரு நாகரீக
சமுதாயத்தின் அடையாளங்களான கல்வி, மருத்துவம் போன்ற வசதிகள் எதையும் அறியாமல்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த வீதியோரக் குழந்தைகள். முடிவே இல்லாத வலியும்,
வேதனைகளும் நிறைந்தது அவர்களது வாழ்க்கை. வீதியோரக் குழந்தைகள் என்பவர்கள்
சுருக்கமாகச் சொன்னால் குப்பை பொறுக்கும் சிறுவர்கள். இவர்களில் காலணிகளை பாலிஷ்
செய்பவர்கள், கூலிகள், சிறு சிறு பொருட்களை விற்பவர்கள் எல்லோரும் அடக்கம்.
இந்தக் குழந்தைகள் இப்படி வீதியோரக் குழந்தைகளாய் மாற என்ன
காரணம்?
குடும்பத்தில் நிலவும் வறுமை, குடும்பச் சண்டை. இவை தவிர, அன்போ பாசமோ பெற்றவர்களிடமிருந்து
கிடைக்காதது
.
மாற்றந்தாய்
க்
கொடுமை, பெற்றோர்களை
ச்
சிறுவயதிலேயே இழக்க நேரிடுவது ஆகியவை இவர்கள் வீதிகளில் அடைக்கலம் புகக்
காரணங்கள். இவை தவிர, சமவயதுக்காரர்களுடனான போட்டி, அவர்களை மிஞ்சி இருக்க
வேண்டும் என்ற மன உந்துதல், நகர வாழ்க்கையின் வசீகரம், சுதந்திரமாக வாழ வேண்டும்
என்கிற ஆசை, தனக்கான அங்கீகாரம் கிடைக்க ஏங்குதல் என்று பல பல
க் காரணங்களை கூறலாம்.
இந்தக் காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்கள்
கானல் நீரைத் தேடி ஓடும் மான் போல நல்ல வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டே
இருக்கிறார்கள். சிறுவயதிலேயே இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகி
த் தங்கள் குழந்தைப்
பருவத்தையும் தொலைக்கிறார்கள். ஒரு குடும்பச்சூழலில் கிடைக்கக்கூடிய அன்பு, பாசம்,
அக்கறை, வசதிகள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள். இளம் வயதிலேயே அடிப்படைத்
தேவைகளைக்கூட தாங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலைமைக்குத்
தள்ளப்படுகிறார்கள். இதனால் மற்ற குழந்தைகளுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள மிகப்
பெரிய வித்தியாசங்களை உணருகிறார்கள்.
தங்களுக்கென்று ஒரு போக்கிடம் இல்லை என்பதைத் தினம் தினம் உணருவதுடன்,
மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். வீதிகள் அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைக் கொடுப்பதில்லை
என்பதுடன் சமுதாயமும் அவர்களை ஏற்பதில்லை. உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும்
இந்தச் சிறுவர்கள் குப்பைத் தொட்டிகளில் தங்கள் உணவைத் தேடுகிறார்கள்; பல நாட்கள்
பசியுடன் கழிக்கிறார்கள். நீரைக் குடித்தும், சில வேளைகளில் தகாத தொடர்புகள் மூலம்
போதை மருந்துக்கு ஆளாகி, அவற்றை உட்கொண்டும் தங்கள் பசியைத் தணித்துக்
கொள்ளுகிறார்கள்.
போஷாக்குப் பற்றாக்குறையினால் பல்வேறு குறைபாடுகளால்
பாதிக்கப் படுகிறார்கள். இளம் வயதிலேயே சிகரெட், மது, போதை மருந்துகளுக்கு ஆளாகி
இவர்களது வாழ்க்கை உருப்பெறுவதற்கு முன்பே அழியத் தொடங்குகிறது. போக்குவரத்து மிகுந்த,
ஜனசந்தடி நிறைந்த இடங்களில் இருப்பதால் நாள் முழுவதும் தூசியினாலும் வேறுவிதமான
மாசுப் பொருட்களாலும் பாதிக்கப்பட்டு ஆஸ்த்துமா, மூச்சுக் குழாய் அழற்சி நோய்
எனப்படும் பிராங்கைடிஸ் மற்றும் கடுமையான காச நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் மட்டுமின்றி இந்தப் பிரச்சினை உலகளவில் காணப்படுகிறது.
சில நாடுகளில் அவர்களது கலாசாரமே குழந்தைகளுக்கு எதிரியாக
மாறி அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி செய்கிறது. காங்கோ மற்றும் உகாண்டா
நாடுகளின் சிலபகுதிகளில் பேய் பிடித்திருப்பதாக நம்பப்பட்டு சில குழந்தைகள்
அவர்களது குடும்பத்தினரால் வீதிக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு சிறுமி
கற்பழிப்பட்டாள் என்றோ அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாள் என்ற சந்தேகம்
ஏற்பட்டால், அல்லது பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணத்தை மறுத்தாலோ ஆப்கானிஸ்தான்
நாட்டில் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறார்கள். வடக்கு நைஜீரியாவில் ஒரு
பிரிவினர் தங்கள் குழந்தைகளை புனித குரானைக் கற்பதற்கென மல்லம் என்று
அழைக்கப்படும் ஆசிரியரிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு ஒப்பந்தத்தின்
அடிப்படையில் அனுப்புகிறார்கள். ஒப்பந்தக் காலத்தில் இந்தக் குழந்தைகள் தங்கள்
வாழ்வாதாரங்களை வீதிகளில் பிச்சையெடுத்து தேடிக் கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி
சம்பாதிப்பதில் குருவிற்கும் கட்டாயமாக
ப் பங்கு உண்டு. கொடுக்காத பட்சத்தில்
கடுமையான தண்டனைகளுக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள்.
புனர்வாழ்வு மையங்கள்:
இந்தக் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கோ, சிறார் சீர்திருத்த
பள்ளிகளுக்கோ, அல்லது புனர்வாழ்வு மையங்களுக்கோ அனுப்பும் முயற்சிகளை பல அரசுகள்
எடுக்கின்றன. அரசு சாராத அமைப்புகளும் இந்த
ப் பணியில் ஈடுபடுகின்றன.
தினமும் சுமார் 25 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டு, சீர்திருத்த
அமைப்புகளுக்கு அனுப்ப
ப்படுகிறார்கள்.
ஆனாலும் இன்னும் நிறைய சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
பல அமைப்புகள் இத்தகைய குழந்தைகளை
க் கண்டுபிடித்து அவர்களை மற்ற சிறுவர்களைப்
போல வாழவைக்க, எல்லாவிதமான முயற்சிகளும் செய்து வருகின்றன. இந்த அமைப்புகள் இந்தச்
சிறுவர்களை துணையில்லாத குழந்தைகள் என்று பொதுப்பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
வீதியில் வாழும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளிகள், காணாமல் போன, கடத்தப்பட்ட
குழந்தைகள், வீட்டைவிட்டு ஓடி வந்த குழந்தைகள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு
ஈர்க்கப்பட்டு ஓடிவந்த குழந்தைகள், குற்றம் புரிந்த குழந்தைகள் எல்லோரும் இந்த
த் துணையில்லாத குழந்தைகள் என்ற
வகையில் அடங்குவர்.
இந்த அமைப்புகளின் முக்கியப்பணி குழந்தைகளுக்கு நல்வாழ்வு
கொடுப்பதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் தகுந்தவாறு அவர்களது புனர்வாழ்வு
முயற்சிகளும் அமைகின்றன. கடத்தப்பட்ட குழந்தைகள், குப்பை பொறுக்கும் சிறுவர்கள்,
குழந்தை
த்
தொழிலாளிகள் ஆகியோர் மீட்டெடுக்கப்பட்ட 24மணி நேரத்திற்குள் அவர்களது
குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. குழந்தைகள் நல அமைப்பு, காவல்துறை,
மற்றும் ஒரு ஆலோச
னையாளர்
ஆகியோர் குழந்தையுடன் அதற்குத் தெரிந்த மொழியில் பேசி அதன் ஊர் மற்றும்
பெற்றோர்களைப் பற்றிய விவரங்களை அறிகிறார்கள்.
சிறுவர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார்ப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.
14 வயதுக்கு மேற்பட்ட துணையில்லாக் குழந்தைகளில் முக்கால்வாசிபேர் பள்ளிப்படிப்பை
ப் பாதியில் விட்டவர்கள்.
அவர்களுக்கென சில தொழில்கள் கற்பிக்கப்படுகின்றன. உணவக மேலாண்மை, தச்சு வேலை,
தையல் வேலை ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. சிலர் அழகு நிலையங்களிலும், ஐஸ்க்ரீம்
பார்லர்களிலும், ஷாப்பிங் மால்களிலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு
ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை – தனியாக
த் தங்கள் வாழ்க்கையைச் சமாளிக்கும் வரை – காப்பகங்களே அவர்களின்
பொறுப்புகளை ஏற்கின்றன.
நீதியின்முன் குற்றவாளிகளாக நிறுத்தப்படும் சிறுவர்கள்,
பரோலிலோ அல்லது வழக்கு விசாரணை முடிந்த பின்னரோ நல்வழிப்படுத்தும் காப்பகத்தின்
கண்காணிப்பு இல்லங்களில் வைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கென இருக்கும் சிறப்பு
இல்லங்களில் இவர்களுக்கு
த்
திருந்தி வாழ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. யோகா, தியானம் முதலியவை
கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இவர்களை வழிக்குக் கொண்டுவருவது அத்தனை சுலபமான
காரியம் அல்ல. ஆலோசனை கூறுபவர்களுடன் பேசுவதற்கே இந்த
ச் சிறுவர்கள் நீண்ட காலம்
எடுத்துக் கொள்ளுகிறார்கள். தங்களது கடந்த கால வாழ்க்கைப் பற்றி பேச
விரும்புவதில்லை. ஆரம்பத்தில் அவர்கள் ஆலோசகர்களின் முகத்தைப் பார்க்கவும்
செய்வதில்லை. அவர்கள் செய்த குற்றத்தைப் பற்றிப் பேசாமல் அவர்களது பின்னணி பற்றி
பேச ஆரம்பிப்பார்கள் இந்த ஆலோசகர்கள். அவர்களிடம் உள்ள நல்லவைகளை அதிகம் எடுத்துச்
சொல்லுவார்கள். ஆலோசகர்கள் அவர்களின் நண்பன்; அவர்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற
நம்பிக்கை வந்த பின்புதான் அவர்கள் பேசத் தொடங்குவார்கள். இந்த
க் கண்காணிப்பு இல்லங்களில்
இந்தச் சிறுவர்களுக்கு மருத்துவ வசதி, அவ்வப்போது உடல்நலப் பரிசோதனை மற்றும்
அவர்களது குடும்பத்துடன் தொடர்பு என பலவகையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
குடும்பத்தில் பலவகையான துன்பங்களுக்கு ஆளானாலும் இவர்களுக்கு
இந்த இல்லங்களுக்கு வர விருப்பம் இருப்பதில்லை என்பது வருத்தமான உண்மை. முதல் முறை
வீதிக்கு வரும்போது அந்த
க்
கொடுமையான அனுபவத்தால் பயந்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் இவர்களை மீட்டால்
நலவாழ்வு மையங்களுக்கு விருப்பத்துடன் வருவார்கள். சில நாட்கள் வீதிகளில் வாழ்ந்து
பழகிவிட்டால் அவர்களால் இந்த மையங்களுக்கு வந்து இருக்க முடியாது. எந்தக் கவலையும்
இல்லாமல் வீதிகள் தரும் சுதந்திரம் இந்த இல்லங்களில் கிடைக்காது. இல்லங்களின்
கட்டுப்பாடுகளுக்கு
க்
கட்டுப்பட்டு நடப்பதை பெரிய சுமையாக எண்ணுகிறார்கள். பொதுவாக மீட்கப்படும் ஆண்
சிறுவர்கள் அதிக நாட்கள் இங்கு இருப்பதில்லை. சமயம் கிடைக்கும்போது வெளியே
ஓடிவிடுகிறார்கள்.
தொழிற்சாலைகள், உணவகம், கட்டட வேலை நடக்கும் இடங்களில் வேலைபார்க்கும்
குழந்தை
த்
தொழிலாளிகள் மீட்கப்பட்டு
, புனர்வாழ்வு கொடுக்கப்படுகிறது. இதற்கு 3 மாதங்களில் இருந்து ஒரு
வருடம் வரை ஆகலாம். காவல்துறையின் உதவியுடன் முதல் விவர அறிக்கை பதிவு
செய்யப்படுகிறது. இந்தக் குழந்தைகளுக்கு முதலில் முறைசாராக் கல்வி
அளிக்கப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு இவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
இப்படி மீட்கப்பட்ட சிறுவர்களில் இருவர் படித்து பொறியாளர்கள் ஆகியிருக்கின்றனர்.
15 சிறுவர்கள் டிப்ளமா படிப்பு முடித்திருக்கிறார்கள் என்று மீட்பு மையங்களின்
தகவல் கூறுகிறது.
சமீபத்தில் இளம் குற்றவாளிகள் சட்டத்தில் திருத்தங்கள்
செய்யப்பட்ட போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள், இதற்கான
முறையான அமைப்புகள் இல்லாத குறை, வலுவான அரசியல் கொள்கைகள் இல்லாமை இவற்றால்
வீதிகளில் நடமாடும் சிறுவர்களை நல்வழிக்குக் கொண்டுவந்து அவர்களையும் சமுதாயத்தில்
ஒரு அங்கமாக மாற்றுவது என்பது கடினமான ஒன்று. குழந்தைகளின் உரிமை என்பது
சட்டத்தில் அத்தனை முக்கியத்துவம் பெறுவதில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.
இந்த அமைப்புகள் பொதுமக்களிடம் வைக்கும் ஒரு கோரிக்கை:
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுவிடங்களில் இந்த மாதிரிச்
சிறுவர்களைப் பார்த்தால் உடனே ஏதாவது ஒரு மையத்தை
த் தொடர்புகொண்டு விவரம்
சொல்லுங்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் பாதுகாக்கப்படும், இந்த ஒரு சின்ன
செய்கையினால்.
நினைவு வைத்துக் கொள்ளுவோமாக!
Posted on 1 Comment

கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்


தலைவரார்களேவ்…
தமிழ்ப்பெருமக்களேங் வணக்கொம்!
‘தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றைய தினம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங்
நாம்’
‘வண்ணாரப் பேட்டகின சார்பில் மாலை’
‘வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்கு போய்வா போன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா
தாமிழர்கள் சொவாழ்வாய்த் திட்டமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணக்குவியல் காண்போ
மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிரு கூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்’

இன்னுமிருவர் பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…

விடுதலைக்குப் பின்னரான எழுபது வருடங்களில் தமிழகம் ஐம்பத்தொரு ஆண்டுகளாக திராவிட சித்தாந்தத்தை கைக்கொண்ட அரசியல் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறது. அரசியல் மட்டுமின்றி மொழி பண்பாடு சமூகம் மற்றும் இலக்கியம் என தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் திராவிடக் கருத்தியல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்துப் பரிசீலிக்க ஏற்றதான ஏற்றதொரு தருணம் இது.

ஆனைமுத்து, எஸ்.வி. ராஜதுரை, கீதா, கௌதமன் மற்றும் வீரமணி என்ற சாரங்கபாணி ஆகியோரால் பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா. வின் பேச்சும் எழுத்தும் தொகுக்கப்பட்டுத் திண்டு திண்டாக அச்சில் கிடைக்கின்றன. தென்னாட்டு இங்கர்சால் எனத் தம் தம்பியரால் மட்டும் அழைக்கப்பட்ட தமிழகத்தின் ‘ஒரே பேரறிஞரான’ அண்ணாதுரையின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் நூலகம்தோறும் புழங்கி வருகின்றன.

ஒரு தலைமுறையைச் சேர்ந்த சமூக உருவாக்கத்தில் பங்கு பெறும் ஆசிரியர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் திராவிட சிந்தனையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டே வந்துள்ளனர். அத்தாக்கம் சமகாலத்தில் வாழும் புதிய தலைமுறை வரை நீள்கிறது. போலவே அரை நூற்றாண்டுகாலம் நீடித்த ஆட்சி தந்த அதிகாரத்தின் வழியே தொடக்கக் கல்வி முதல் பல்கலைப் பாடங்கள் வரை திராவிட சிந்தனை விதைக்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய நடிகர்களின் வழியே சென்ற தலைமுறை வரை திரைப்படங்கள் மூலம் திராவிடக் கருத்தியல் பரிமாறப்பட்டது. தொகுத்துக் கூறினால் அரசியல் இலக்கியம் கலை எனச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் திராவிடச் சிந்தனை வேர் விட்டுப் பரவி இருக்கிறது எனலாம்.

அதிகார வலிமை மிக்க திராவிடக் கருத்தாக்கத்தை விமர்சித்து அவ்வப்போது தமிழில் புத்தகங்கள் எழுதப்படுகின்றன.

சுப்பு எழுதிய  ‘திராவிட மாயை ஒரு பார்வை’, பி.ராமமூர்த்தியின் ‘ஆரிய மாயையா திராவிட மாயையா?’, நெல்லை ஜெயமணியின் ‘கண்டுகொள்வோம் கழகங்களை!’ போன்றவை அவற்றுள் சில. இந்த வரிசையில் ஒரு புதிய வரவு தஞ்சை பொய்யாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ள இல. குணசேகரன் எழுதிய ‘திராவிட அரசியல்’ என்ற கட்டுரை நூல்.

புத்தகம் 336 பக்கங்களில் 18 அத்தியாயங்களில் திராவிட அரசியலை விமர்சிக்கிறது. திராவிட அரசியல்வாதிகள் தமது அடிப்படைக் கொள்கைகளாக கூறிக்கொள்ளும் திராவிட நாடு, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு மற்றும் சமயச் சார்பின்மை போன்றவைகளுக்கு எவ்வளவு உண்மையாக அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதை 50 ஆண்டுகாலப் பரப்பில் அரசியல் தரவுகளுடன் இந்நூல் ஆராய்கிறது.

நீதிக்கட்சி முதல் இன்றைய திமுக வரை வளர்ந்துள்ள பிராமணத் துவேஷம் பற்றிப் புத்தகம் ஆராய்கிறது. வேதபாராயணம், உபன்யாசம், ஆலயக் கைங்கரியங்கள் மற்றும் ஆச்சார அனுஷ்டானங்கள் மூலம் சனாதன மதம் என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்து மதத்தின் பாதுகாவலராய் விளங்கிய பிராமணர்களைத் தனிமைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் கிருத்துவ மிஷினரிகள் தங்கள் மத மாற்றத்தை மேற்கொள்ள ஏதுவாக விதைக்கப்பட்டதுதான் பிஷப் கால்டுவெல்லின் ஆரிய திராவிட புரட்டு.

பிராமணர்கள், ஆரியர்கள், வந்தேறிகள் என்ற கோட்பாடு வெறுப்பு அரசியலின் மீது கட்டமைக்கப்பட்ட போலி வரலாறு என்பதை கால்டுவெல்லுக்கு பின்பு வந்த பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் உரைத்த பின்பும், திராவிட சித்தாந்தவாதிகள் தங்கள் பிராமணத் துவேசத்தைக் கைவிட்டதே இல்லை என்பதை நூலாசிரியர் குணசேகரன் விவரிக்கிறார்.

1920களில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்தபோது நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியில் இருந்த 16 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கூட அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரவில்லை. போலவே, அண்ணாதுரை ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கீழவெண்மணி படுகொலையின்போது ஈ.வெ.ரா. பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக எள்முனை அளவும் பாடுபடவில்லை என்பதையும் புத்தகம் விளக்குகிறது.

புத்தகம் 1920 முதல் 2010 வரையிலான திராவிட அரசியலின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது இப்புத்தகம்.

சாதிப் பிரிவினையை ஒழித்தோம் என்றார்கள், ஆனால் சாதித் தலைவர்களின் பெயர்களைப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சூட்டினார்கள். தென்மாவட்ட கலவரங்களுக்குப் பிறகு அவை நீக்கப்பட்டதை அறிவோம்.

தமிழர்ப் பண்பாட்டைத் தூக்கிப்பிடிப்பது நாங்கள்தான் என இன்றளவும் கதைக்கிறார்கள். ஆனால் இவர்களின் தந்தை பெரியார் கண்ணகி முதல் மாதவி வரையிலான காப்பியப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியது வரலாற்று உண்மை.

1967ல் அண்ணாதுரை, பக்தவச்சலத்தை வெற்றி கொள்ள வழிவகுத்தது அரிசிப் பஞ்சமும், இந்தி மொழியும். இவர்களின் உடோப்பிய திராவிட நாட்டுக்கு உட்பட்ட கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையினை ஏற்று தாய்மொழிவழிக் கல்வியுடன் செழித்திருக்க, தமிழகத்தில் தாய்மொழி கான்வெண்ட்டுகளில் காணாமல் போயிருக்கிறது.

“கட்சியில் சேர்ந்தவுடன் பேரனுக்கு மத்திய அமைச்சர் பதவியா?” என ஊடகங்களின் கேள்விக்கு, “அவருக்கு இந்தி தெரியுமே” என்றார் கருணாநிதி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்த ஆன்மாக்கள் சாந்தி அடைந்திருக்கும். மக்கள்-தேவர்- நரகர் என்ற நூலில் எழுத்தாளர் பிரபஞ்சன் ‘நாம்தானே இளிச்சவாயப்பர்’ என்கிறார்.

காந்தியடிகளால் தென்னகத்தில் திருச்சியில் 1016ல் தொடங்கிவைக்கப்பட்ட தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம் ஹிந்தி பயில்வோர்களில் அதிகம் பேர் தமிழகத்தில் இருந்துதான் என்பது நகைமுரண்.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்ற போராடினார்கள் – ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கியவர்கள். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பெயரும் எப்போதும் இனிக்கிறது அவர்களுக்கு.

1926ல் சுயராஜ்ஜியக் கட்சியிடம் தோற்றுப்போகிறது நீதிக்கட்சி. நீதிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் பி சுப்புராயன் கட்சியை விட்டு வெளியேறி சுயராஜ்ஜியக் கட்சியுடன் ஆட்சி அமைத்தார். கழகங்களிடையே கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்கு வித்திட்டவர் யாரெனத் தெரிகிறதா? 1967 தேர்தலின்போது அண்ணாதுரை ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற வாக்குறுதி தந்தார். ஆட்சியைக் கைப்பற்றியதும், ‘மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்’ எனத் தமிழைக் கொண்டு டபாய்த்தார்.

நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் என்று கூறி ஆட்சியைப் பிடித்ததும் ‘கையளவு நிலமாவது தருவேன்’ என்ற முத்தமிழ் அறிஞர் அண்ணாதுரைதான். இன்னும் இருபது ரூபாய்க்குத் தமிழன் ஏமாந்து கொண்டே இருப்பதுதான் பேரவலம்.

‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என சூளுரைத்தார்கள். பிசி ராமசாமி அய்யர் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு பிரிவினை தடை சட்ட மசோதா வந்ததும் திராவிட நாடு கோரிக்கையைச் சுடுகாட்டிற்கு அனுப்பினார்கள்.

சங்க இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் செழுமைப்படுத்திய தமிழ்மொழியை பகுத்தறிவு என்ற போர்வையில் பக்தி இலக்கியங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பகுத்தறிவின் எல்லை இந்துமதம் வரையில்தான் என்பதைக் கூறவே தேவையில்லை. பிள்ளையார் சிலையை உடைத்த ஈ.வெ.ரா தனக்குத் தானே சிலையை வைத்துக்கொண்டார். பின்னாட்களில் அவரால் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று வசைப்பாடப்பட்ட கழகத்தார் ‘சரஸ்வதி உன் நாவில் இருக்கிறாள் என்கிறாயே, எங்கே அப்பா அவள் மலம் கழிப்பாள்?’ எனக் கூசாமல் கேட்டார்கள். ‘உங்கள் இதயத்தில் குடியிருக்கும் அண்ணா வாடகையா தருகிறார்?’ எனக் கேட்டால் தமிழினத் துரோகி என்பார்கள்.

‘தமிழை நான் கற்றுக்கொண்டது கலைஞரின் வசனம் கேட்டுத்தான்’ எனக்கூறுவது திருவிழா / திரை விழா மேடைகளில் வழமையான ஒன்று. அண்ணாவும் கதை வசனம் எழுதியவர்தான். நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியன எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் பட்டியல் நீளமானது. தென்னரசு, முரசொலிமாறன், அன்பழகன், நெடுஞ்செழியன் அவர்களுள் சிலர். இலக்கிய ரீதியில் அவர்கள் எழுத்துக்கு என்ன இடம் என்பது தனியே ஆராயத் தக்கது. ஆனால் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெரும்பாலான திராவிட இயக்கப் புனைவுகள், கண்ணதாசனின் வார்த்தைகளில் சொன்னால் ‘நச்சு இலக்கியங்கள்’.

திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிக்க புதிதாக நாம் எதையும் கூற வேண்டியதில்லை. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிரெதிர் அணிகளில் இருந்தபோது பரஸ்பரம் ஒருவரை பற்றி மற்றொருவர் பேசிய, எழுதியவற்றைக் குறிப்பிட்டாலே போதுமானது. பலவற்றை அச்சிலேயே ஏற்ற முடியாது.

சாதி ஒழிப்பு என்ற பெயரில் பிராமணத் துவேஷத்தையும், பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மத வெறுப்பையும் அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட திராவிட இயக்கங்களின் மூலவர் ஈ.வெ.ரா ஒரு சமூகப் போராளியாக நிறுவப்பட்டுள்ளார். பாடப்புத்தகங்கள் வழியாக மட்டுமே அறியும் பேஸ்புக், வாட்ஸ்அப் இளையதலைமுறை அவரை மார்டின் லூதர் கிங் ஜூனியராகவோ மால்கம் x ஆகவோ அறியும் அபாயம் உள்ளது. இச்சூழலில் ‘திராவிட அரசியல்’ போன்ற நூல்கள் தேவைப்படுகின்றன.

நூறு நூல்களை வாசித்து அவைகளின் சாரத்தை இல. குணசேகரன் நூல் ஆக்கியுள்ளார். நல்ல அச்சு, தரமான தாள், இனிய நடை – சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல். புத்தகத்தில் காணப்படும் ஏராளமான அச்சுப்பிழைகள் அடுத்த பதிப்பில் களையப்படும் என நம்புவோமாக.

தமிழ் இலக்கணப்படிப் பிழையாகப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். சில இடங்களில் வழு (பிழை) வந்தாலும் சரியானது போன்று தோற்றமளிக்கும். அதற்கு வழுவமைதி என்று பெயர். இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள ஞானக்கூத்தனின் கவிதைக்கு ‘காலவழுவமைதி’ என்பதே தலைப்பு. பிறழ்வுகளையே அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கங்களைப் பற்றிய இக்கட்டுரைக்கு இதைவிடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது.

கண்ணீரும், செந்நீரும் சிந்திப் பெற்றது சுதந்திரம். அந்த சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிக்கக் கோரிய ஒரு மனிதரைப் பெரியார் என அழைப்பது பேரவலம் அல்லவா?

பின்குறிப்பு: கவிதையை மறுபடியும் வாசித்துப் பாருங்கள். உங்களை அறியாமல் உங்கள் குரலில் ஒரு கயமைத்தனம் கலப்பதைப் பார்க்கலாம்.

Posted on Leave a comment

பிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு மோதி அளித்த
நேர்காணலின் தமிழ் வடிவம் இது. நேர்காணல் செய்தவர் ஏ.என்.ஐ ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ்.
தமிழில் மொழிபெயர்த்தவர் கிருஷ்ணன் சுப்ரமணியன்.

பாஜகவைப்
பொருத்தவரை 2018 ஒரு நல்ல ஆண்டாக அமையவில்லை. 5 மாநிலத் தேர்தல்களில் கட்சி தோல்வியைச்
சந்தித்திருக்கிறது. 2019ல் நீங்கள் வெல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா? உங்களுக்கு
எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பிரதமர்: 2018ஐ ஒரு வெற்றிகரமான ஆண்டாகவே
நான் கருதுகிறேன். தேர்தல்கள் நாட்டின் பல முகங்களில் ஒன்று மட்டுமே. இந்த நாட்டில்
ஏழை எளியவர்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜ்னா திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் காப்பீடு பெறுகிறார்கள்.
திட்டம் அமல்படுத்தப்பட்ட 100 நாட்களில் 6-7 லட்சம் பேர் பயனடைந்திருக்கின்றனர். இப்படிப்
பெரும் எண்ணிக்கையில் நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இன்று சிகிச்சைக்கான
வசதிகள் கிடைத்துள்ளன. இதை எப்படி நான் தோல்வி என்று கூறமுடியும். என்னுடைய ஆகப்பெரிய
சாதனையாக இதை நான் கருதுகிறேன். இன்று உலகம் வானிலை மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது,
இந்தியா மாசுகளை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில்,
2018ல் ஐநா சபை சுற்றுச்சூழலைக் காப்பவருக்கு அளிக்கப்படும் ‘சாம்பியன் ஆஃப் எர்த்’
விருதை அதன் தலைவருக்கு வழங்கியுள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாகும். 18,000 கிராமங்கள்
மின்வசதி இல்லாமல் இருந்தன. இந்த ஆண்டு எல்லா
க் கிராமங்களுக்கும்
மின்வசதி கிடைத்திருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளைப் பொருத்தவரை, நமது வீரர்கள் அருமையான
சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். பல பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இரண்டாம், மூன்றாம்
கட்ட நகரங்கள், கிராமங்கள் ஆகிய இடங்களிலிருந்தும் பொருளாதார நிலையில் பின் தங்கி இருப்பவர்களாகவும்
உள்ளோர் நாட்டின் கொடியைப் பறக்க விட்டிருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகளான விளையாட்டு
வீரர்களும் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறார்கள். 104 செயற்கைக் கோள்கள் விண்ணில்
செலுத்தப்பட்டுள்ளன. அது ஒரு பெரும் சாதனை. 2018ல் விளைச்சலும் அமோகமாக உள்ளது. எந்த
ஒரு துறையையும் உதாரணமாக எடுத்துக்கொண்டால், இந்தியா முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.
2018 இந்தியாவிற்கு ஓர்
ஒளிமயமான
ஆண்டாக இருந்தது.
நான்
தேர்தல் தோல்விகளைப் பற்றிப் பேசுகிறேன். பாஜக 5 மாநிலங்களில் தோல்வியுற்றிருக்கிறது.
ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சியின் பிரதமர் நீங்கள். இதைத் தோல்வியாகக் கருதவில்லையா?
தெலுங்கானவிலும் மிசோரத்திலும், பாஜகவிற்கு
வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவோ ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவோ யாரும் கருதவில்லை.
சட்டிஸ்கரில் தெளிவான முடிவு கிடைத்துள்ளது. பாஜக தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், மற்ற
இரு மாநிலங்களில் தொங்கு சட்டசபையே அமைந்திருக்கிறது.
இரண்டாவதாக, 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததால்
ஏற்பட்ட சலிப்பை எங்களது தொண்டர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எங்கே தொய்வு ஏற்பட்டது
என்பதைப் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
இருந்தாலும், ஹரியானாவின் உள்ளாட்சித்
தேர்தல்களில் நாங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம். திரிபுராவில், 90-95% வெற்றி
கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 74% ஓட்டுப் பதிவு நடந்துள்ளது, அங்கும் பல இடங்களில்
பாஜக வெற்றி பெற்றுள்ளது. வெற்றியும் தோல்வியும் மட்டுமே அளவுகோல்களாகக் கருதப்படுவதில்லை.
ஆனாலும் உங்களது ஓட்டு சதவிகிதம் இடங்களாக மாற்றமடையவில்லை. மோதி
அலை முடிவுக்கு வந்துவிட்டதா?
இந்த நேரத்தில் இப்படிச் சொல்லுவோருக்கு
நான் நன்றி தெரிவிக்க விழைகின்றேன். மோதி அலை / மோதி மாஜிக் என்று அவர்கள் சொல்லும்போது,
மோதி அலை என்று ஒன்று இருந்ததாக அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். 2013-14ல் வந்த ஊடகச்
செய்திகளை, தினசரி மற்றும் தொலைக்காட்சி விவாதங்களைப் படித்துப் பாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட சாரார், ‘மோதி அலை எதுவும்
இல்லை, மோதியால் எதுவும் செய்ய இயலாது’
என்று திரும்ப திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள்.
இன்று
இந்த எண்ணிக்கை சிறிது கூடியிருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம். இந்த நபர்களுக்கு இந்தக் கதையை உருவாக்கவேண்டிய
பொறுப்பு உள்ளது. மோதி அலை அல்லது மோதி மாஜிக் என்று ஒன்று உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்
என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே.
என்னைப் பொருத்தவரை, அலை என்பது மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசையை உள்ளடக்கியது, நம்முடைய எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும்
யார் நிறைவேற்றப்போகிறார்கள் என்பதின் மீதான நம்பிக்கை சார்ந்தது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகள்
அதிகரித்துள்ளன. அதுவே ஒரு புதிய சக்தியாக ஒருவெடுத்துள்ளது
எதிர்க்கட்சிகள் மோதி மாஜிக் குறைந்துள்ள
காரணத்தால் பாஜக 180 இடங்களுக்கு மேல் பெறாது என்று நம்புகின்றன. அவர்களை ‘180 குழு’
என்று அழைக்கின்றனர். அவர்கள் மோதி அல்லாத ஒரு காரணியை சார்ந்துள்ளனர். இது நடக்குமா?
2019ல் பாஜக 180க்குக் கீழ் இடங்களைப் பெறும் என்று நினைக்கிறீர்களா?
இது போன்ற கணக்குகளைப் பரப்பாவிடில் அவர்களது கூட்டணியில் எப்படி ஆட்கள் சேர்வார்கள்?
மக்களை ஈர்க்க இதுபோன்று அவர்கள் பேச வேண்டியிருக்கிறது.
அவர்களைக் காப்பற்றிக் கொள்ள இது போன்ற சித்திரத்தை அளிக்கவேண்டியிருக்கிறது. அறிவியல் ரீதியாக
இதைப் பற்றி ஏதாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? 2013-14ல், இதே ஆட்கள்தான்
200
இடங்களுக்குக் கீழே என்ற குழுவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்
. அதே கதை இப்போதும் தொடர்கிறது.
பாஜகவைப் பொருத்தவரை, சாதாரண வாக்காளரின் அறிவைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதில்
தீர்மானமாக இருக்கிறோம். அரசியல் நிபுணர்கள் எல்லோரிடமும் நான் சொல்வது, சாதாரண மனிதரின்
அறிவின் மீது நம்பிக்கை வையுங்கள் என்பதைத்தான்.
இந்த அரசிடமிருந்து 2019ல் விலகிச்செல்லும்படி சாதாரண மக்களுக்கு அப்படி
என்ன அனுபவம் நேர்ந்துவிட்டது? 5 ஆண்டுகளுக்கு முந்தைய தினசரிகளைப் படித்துப் பாருங்கள்.
அப்போதுள்ள தலைப்புச் செய்திகளைக் கவனியுங்கள். இப்போதுள்ள தலைப்புச் செய்திகளையும்
கவனியுங்கள். சாதாரண மனிதருக்கு எல்லாமே தெரியும். எனக்கு சாதாரண மனிதர்களிடமும் இந்த
நாட்டின் இளைஞர்களிடமும் நம்பிக்கை உள்ளது.
நீங்கள் காங்கிரஸ் அல்லாத பாரதத்தைப் பற்றி 2013லிருந்து கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் சாதாரண மனிதர் உங்களுக்கு மாற்றாகக் காங்கிரஸை இன்னும் கருதிக்கொண்டிருக்கிறார்
என்பதால்தான் உங்களுடைய
அடித்தளமான ஹிந்தி பேசும் பகுதிகளில் காங்கிரஸ் அரசுகள் அமைந்துள்ளன. உங்களுடைய இலக்கான
காங்கிரஸ் அல்லாத பாரதம் இன்னும் உருவாகவில்லை.
காங்கிரஸ் என்பது
ஒரு எண்ணம், ஒரு கலாசாரம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே கூடச் சொல்கிறார்கள்.
நீண்ட காலமாக அந்தக் கலாச்சாரம் நாட்டின் மையமாக இருந்துவருகிறது. அந்தக் கலாசாரம்
என்ன? சாதீயம், வாரிசு அரசியல், ஜனநாயக விரோதம், வேண்டியவர்களுக்குச் சலுகைகள் அளிப்பது.
நான் காங்கிரஸ்
அல்லாத என்று குறிப்பிடும்போது, இந்த நாடு மேற்குறிப்பிட்ட கலாசாரத்திலிருந்து அந்த
எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸே இந்தக்
கலாசாரத்திலிருந்து விடுபட நான் விரும்புகிறேன்.
நிறுவனங்கள் நிலைக்கின்றனவோ
இல்லையோ, ஒரு ஜனநாயகத்தில் வலுவான ஒரு எதிர்க்கட்சி தேவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் காங்கிரஸ் அதிலும் தோல்வியடைந்துவிட்டது.
2017 வரை மோதி-அமித் ஷா கூட்டணியை யாரும் தோற்கடிக்க முடியாது
என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது (தோல்விகளுக்கு) இந்தத் தலைமை பொறுப்பேற்கவேண்டியது
போல் தெரிகிறது. நீங்கள் தேர்தல்களில் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கொள்கை
வெற்றிகரமானதாக இருந்தால், நீங்கள் ஏன் தேர்தல்களில் தோல்வியடைய நேரிடுகிறது
? இந்தத் தோல்விகளுக்கு
தலைமை பொறுப்பேற்க வேண்டியதில்லையா?
மோதி மற்றும் அமித்
ஷாவால் பாஜக இயங்குகிறது என்பது என்று கூறுபவர்கள் பாஜகவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்.
உலகின் ஆகப்பெரிய கட்சி பாஜக. வாக்குச் சாவடி தொடங்கி நாங்கள் வலிமையாக இருப்பதால்
பாஜக இயங்குகிறது. ‘என்னுடைய வாக்குச் சாவடி எல்லாவற்றிலும் பெரிது’ என்பது எங்கள்
தாரக மந்திரம். எங்களுடைய தொண்டர்கள் 365 நாட்களும் இந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறார்கள்.
பாஜகவை ஓரிருவர் இயக்குகிறார்கள் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள், இந்த இயக்கத்தைப் பற்றி
அறியாதவர்கள். ஒவ்வொரு தளத்திலும் தொண்டர்களுடைய தலைமைத்துவம் உள்ளது
. அது ஒரு கூட்டு முயற்சியாக உருவெடுக்கிறது. பாஜக எல்லோருடனும்,
எல்லோருடைய வளர்ச்சிக்காகவும் என்ற முன்னெடுப்புடன் மக்களை வென்றெடுக்கிறது.
மீண்டும் மீண்டும்
பாஜக தோற்கிறது என்று சொல்வதால், நாங்கள் உண்மையில் தோற்கிறோம் என்று அர்த்தமில்லை.
அஸ்ஸாம், ஹரியானா, திரிபுரா ஆகிய இடங்களில் பாஜக வென்றிருக்கிறது.
எனில், மன ஊக்கம் குறையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
மன ஊக்கம் குறைவதைப்
பற்றிய பேச்சே இல்லை. பாஜக வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. மன ஊக்கம் குறைவதற்கான
காரணமே இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம். 2019ல் ஒரு கட்சி நாட்டின்
நம்பிக்கையைப் பெற்று மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது என்றால் அது பாஜகவாகவே
இருக்கமுடியும்.
இந்தத் தோல்விக்கான சில காரணங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியைச்
சரியான முறையில் அமல்படுத்தாதது போன்றவை. யோசித்துப் பார்த்தால், பணமதிப்பிழப்பிற்கான
தேவை இருந்ததா? அதனால் எந்த நோக்கம் நிறைவேறியது?
கருப்புப் பணத்தைப்
பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்துகொண்டிருந்தன. இணைப் பொருளாதாரம் ஒன்று செயல்படுகிறது
என்பதைப் பற்றிய சந்தேகமே இல்லை. படுக்கைகளுக்கு அடியில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன
. பணம் அடைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த இணைப் பொருளாதாரம் நாட்டைப் பாழ்படுத்திக்கொண்டிருந்தது. பணமதிப்பிழப்பு ஒரு பெரும்
பணியைச் செய்திருக்கிறது. வரும் நாட்களில் அது நாட்டை வலுவான பொருளாதாரப் பாதையில்
இட்டுச் செல்லும். சாக்குகளில் அடைபட்டிருந்த பணம் தற்போது வங்கிக் கட்டமைப்பில் நுழைந்துள்ளது.
நேர்மை நிறைந்த
சூழல் ஒன்று உருவாகியுள்ளது. வரிவிதிப்பின் அடித்தளம் முன்பைவிட விரிவடைந்துள்ளது.
இதை நீங்கள் வெற்றி என்று கருதமாட்டீர்களா? ஜிடிபியை ஒப்பு நோக்கும்போது பணச்சுழற்சி
குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அளவீடு ஆகும். அது முன்பு இருந்
து போலத் தொடர்ந்திருந்தால்,
நாட்டை வழி நடத்திச் செல்வது கடினமான விஷயமாக இருந்திருக்கும்.
இந்த ‘அதிர்ச்சிக்கு’ என்ன தேவை இருந்தது?
அது ஓர் ‘அதிர்ச்சி’
என்று கருத முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே நாங்கள் மக்களை, உங்களிடம் கருப்புப்
பணம் இருந்தால் அதை வங்கியில் செலுத்திவிடுங்கள், அதற்கான அபராதத்தையும் செலுத்திவிடுங்கள்,
உங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று எச்சரித்திருந்தோம். ஆனால், அவர்கள் மோதி மற்ற
அரசுகளைப் போலத்தான் செயல்படுவார் என்று நினைத்தனர். மிகச் சிலரே தன்னிச்சையாக முன்வந்தனர்.
ஊடகங்கள் மூலமாகவும்,
நாடாளுமன்றத்திலும் நான் மக்களை இந்தத் திட்டத்தினால் பயன்பெறுமாறு வலியுறுத்தினேன்.
இல்லாவிடில், நாங்கள் (அரசு) நிலைமையை மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும்
கூறியிருந்தேன். இது ஒரே இரவில் ஏற்பட்டதன்று. இதை நடைமுறைப்படுத்த ஒரு வருட காலம்
பிடித்தது.
அதன் பின்னரே இந்த முடிவை நாங்கள் எடுக்கவேண்டியிருந்தது. நாட்டின்
பொருளாதார ஆரோக்கியத்திற்கு அது தேவையாக இருந்தது.
நடைமுறையில் ஏதாவது
மாற்றம் வந்தால், உதாரணத்திற்கு ரயில்வேயை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு போகி தண்டவாளங்களை
மாற்றும்போது அதன் வேகம் மாறுகிறது. இதை மறுக்க இயலாது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது,
ஜிடிபி எவ்வளவு குறைந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? 2%க்கும் குறைவாக அது வீழ்ச்சியடைந்தது.
மாற்றம் வரும்போது இது போன்று நிகழும்
. பின்னர் அது ஸ்திரப்படும். இப்போது நமது வளர்ச்சி விகிதம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கவேண்டிய பணி ஒன்று இருந்தது, நாங்கள் அதைச் செய்தோம். நாடு முன்னோக்கிச்
செல்லவேண்டிய கொள்கை ஒன்று இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் குற்றங்கள் புரிந்தவர்கள் திரும்ப அழைக்கப்படுவார்களா?
அவர்கள் நாட்டை விட்டு வெளியில் தப்பியோடிவிட்டனர். நீரவ் மோதி, சோக்ஸி, மல்யா ஆகியோர்
அயல்நாட்டு வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டுள்ளனர். இணைப் பொருளாதாரத்தை ஒழிக்கவும் பொருளாதாரக்
குற்றவாளிகளை
த் திரும்பக் கொண்டுவரவுமான நோக்கம் நிறைவேறவில்லை.
அவர்கள் ஏன் தப்பியோடவேண்டும்.
முன்பு போல அரசுகள் இருந்திருந்தால், அதே நட்பு தொடர்ந்திருக்கும். கொள்ளையடிக்கவேண்டுமா,
அடித்துக்கொள்ளுங்கள்; நேர்மையின்றி
ப் பணம் சம்பாதிக்கவேண்டுமா, சம்பாதித்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குத் தப்பியோடவேண்டிய
தேவை இருந்திருக்காது. இப்போது அவர்கள் சட்டத்தின் வழி நடக்கவேண்டியிருப்பதால் தப்பியோடுகிறார்கள்.
ஒரு பைசா கூட மீதம் வைக்காமல் அவர்கள் செலுத்தவேண்டியிருக்கிறது.
தப்பியோடியவர்களைத் திரும்பக் கொண்டுவர பன்னாட்டுச் சட்டங்கள் உள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தலைமறைவாயுள்ள அவர்களைப் போன்றவர்களுக்காக நாங்கள் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம்.
அவர்களின் சொத்துப் பறிமுதல் அன்னிய நாடுகளில் கூட நடைபெறுகிறது. அரசிடம் உள்ள அத்தனை
கருவிகளையும் இதற்காக நாங்கள் பயன்படுத்துகிறோம்.
முன்பு நாட்டை விட்டு
வெளியேறிச் சென்றவர்கள் திரும்பி வரமாட்டார்கள், ஆனால் இந்த அரசின் காலத்தில் நாட்டை
விட்டுத் தப்பியோடியவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை
உள்ளது. அது இன்றோ நாளையோ கூட நிகழலாம். தூதரக வழிகள், சட்ட ரீதியான முயற்சிகள், சட்டத்தின்
மூலமாக சொத்துக்களைப் பறிமுதல் செய்வது ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின்
பணத்தைக் கொள்ளையடித்தவர்கள், ஒவ்வொரு காசையும் திரும்பச் செலுத்தவேண்டியிருக்கும்.
முதன்முதலாக, நான்
பங்குபெற்ற முதல் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் கருப்புப் பணத்தைப் பற்றியும் பணப்பாதுகாப்புப்
புகலிடங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பினேன். அது ஒரு முக்கியப் பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டது.
தவிர, தீவிரவாத்தின் ஒரு நிதி ஊற்றாகவும் அது கருதப்பட்டது. அது தொடர்பான வங்கிக் கணக்குகளைப்
பகிர்ந்து கொள்ள நாடுகளிடையே உடன்பாடு ஏற்பட்டது.
நாம் பல்வேறு நாடுகளோடு
உடன்படிக்கைகள் செய்துகொண்டுள்ளோம். 2019க்குப் பின் பல நாடுகளிடமிருந்து உடனடித் தகவல்கள்
நமக்குக் கிடைக்கும். இதன்மூலம் கருப்புப் பணம் திரும்பக் கொண்டுவரப்படும்.
2013லிருந்து உங்களுடைய உரைகளைக் கவனிக்கும் போது, அதாவது 2ஜி, 3ஜி,
சிடபிள்யூஜி, தமாத் (மாப்பிள்ளை) ஜி, நீங்கள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் அவர்கள்
லோதி தோட்டத்தில் உலவிக்கொண்டேயிருக்கிறார்கள். யாரும் சிறையில் இல்லை
sஅவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லவா. பெயிலில் வெளியே இருப்பவர்களால்
அதைச் செய்ய முடியும்.
ஆனால் நீங்கள் கவனிக்கவேண்டிய உண்மை, நாட்டின் முதல் குடும்பமாக அறியப்பட்ட, நாட்டை நான்கு தலைமுறைகளாக
ஆட்சி செய்தவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர். அதுவும் நிதிமுறைகேடுகள் சம்பந்தமான குற்றங்களுக்காக.
இது பெரிய விஷயம். அவர்களிடம் பணி செய்த ஒரு குழுவினர், இந்தத் தகவல்களை மறைத்து வேறு
பல கதைகளை உலவ விடுகின்றனர்.
இந்த நாட்டின் முன்னாள்
நிதி அமைச்சர் நீதிமன்றங்களுக்குச் சென்று வருகிறார். இது சாதாரண விஷயமல்ல. அரசியல்
எதிரியாக இருப்பதனாலேயே நீங்கள் பிரச்
சினைகளைச் சந்திக்கவேண்டும் என்று நினைப்பவன்
நான் அல்ல. நாங்கள் அதை (அரசியல் பழிவாங்குதலை) ஆதரிப்பவர்களல்ல. நீதிமன்றம் எந்தத்
தீர்ப்பு வழங்கினாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் ஆனால் அது தாமதமாகிவிடக்கூடாது.
நீங்கள் இந்த விஷயத்தில் தாமதம் செய்ய மாட்டீர்கள் என்ற எதிர்பார்ப்பினால்தான்
மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். ஆனால் ஐந்து வருடங்கள் கழிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லையே
?
5 வருடங்களில் ஏராளமாக
நடந்திருக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதனால்தான் மோதியிடம் அவர்களுக்கு ஆதரவு
இருக்கிறது.
ஜிஎஸ்டி – ராகுல் காந்தி இதை கப்பர் சிங் டாக்ஸ் என்று அழைக்கிறார்,
இந்த வரியை அமலாக்குவதில் சிரமங்கள் இருந்ததால்தான் ஏதோ ஒரு வழியில் இதைச் செயல்படுத்திவிட்டீர்கள்
என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒருவர் எப்படி நினைக்கிறாரோ
அப்படியேதான் அவரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படும். நாட்டின் அரசியல் கட்சிகள் அனைவரிடமும்
கலந்து ஆலோசித்த பிறகுதானே ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது? பிரணாப் முகர்ஜி நிதி
அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ஜிஎஸ்டியின் செயலாக்கம் துவங்கிவிட்டது. நாடாளுமன்றத்தில்
ஒருமுகமாக அது நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன் நாட்டிலிருந்த வரி விகிதம் என்ன?
30-40% வரை வரி விதிக்கப்பட்டது. இதைத் தவிர மறைமுக வரிகள். மீண்டும் விதிக்கப்பட்ட
வரிகள் எல்லாம் இருந்தன. ஜிஎஸ்டி இதை எளிமையாக்கிவிட்டது. அதிக வரி வசூலிக்கப்பட்ட
500 பொருட்களுக்கு தற்போது வரியே இல்லை. கடந்த சில தினங்களில், 1
,200-1,250 பொருட்களுக்கான
வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, சிலவற்றிற்கு 18% லிருந்து 12-5% ஆகவும் சிலவற்றிற்கு
0 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைக்கின்ற கருத்துகளின் அடிப்படையில்
நாங்கள் இதைச் செயல்படுத்திக்கொண்டிருக்கின்றோம். இது தொடர்பான உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை பங்கு பெறும் ஜிஎஸ்டி கவுன்சிலில்தான்
முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அங்கே அனைவரும் சமமாகக் கருதப்படுகின்றனர். புதுச்சேரியும்
கோவாவும் சமமானவை. காங்கிரஸ் அரசுகள் கூட. நாடாளுமன்றத்தில் அது ஒருமுகமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அவர்கள் தங்களுடைய அரசுகளையும் கட்சித் தலைவர்களையுமே வசை பாடுகிறார்களா என்ன?
அரசியல் ரீதியாக
சர்ச்சைகளை எழுப்புவதில் எந்தப் பயனும் இல்லை. ஜிஎஸ்டி என்பது புதியதொரு முறை.
தொழில்நுட்பத்தின்
துணையோடு நிகழ்கின்ற ஒரு பெரிய மாற்றம். சில சிறிய வர்த்தகர்கள் அதனால் பிரச்
சினைகளைச் சந்தித்துள்ளார்கள்,
அது எங்களுக்குப் புரிகிறது. அவர்களுடைய பிரச்
சினைகளைக் காதுகொடுத்துக்
கேட்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எங்களுடைய கவனத்திற்கு வரும் எதையும் நாங்கள்
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்புகிறோம். அதை எப்படி எளிமைப்படுத்துவது என்று கூட்டாக
நாங்கள் முடிவுசெய்கிறோம்.
ரூ 20 லட்சம் வரம்பிற்குட்பட்ட
வர்த்தகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வரி விதிப்பிற்கான வரம்பை ரூ 75 லட்சமாக
உயர்த்த நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பின்போது, சில மாநிலங்கள்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், இது கமிட்டியிடம் சென்றுவிட்டது. கமிட்டி இது தொடர்பான
முடிவு எடுக்கும்போது பலர் இதனால் பயன்பெறுவார்கள்.
அதைப் போலவே, கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்
வீடுகள் மற்றும் முடிவடைந்த வீடுகளின் ஜிஎஸ்டியை, உணவகங்களுக்கு நாங்கள் அளித்த சலுகை
போலவே 5 சதவிகிதத்திற்குக் கீழே கொண்டுவர முயன்றோம். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சிலால் இதை
நிறைவேற்ற முடியவில்லை. இதுவும் கமிட்டிக்குச் சென்றிருக்கிறது. கமிட்டியின் அறிக்கையை
விரைவில் கொண்டுவர நாங்கள் முயல்கிறோம்.
இப்படித் தொடர்ந்து,
ஜிஎஸ்டியை எளிமையாக்கவும் வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிக்கவும் நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம்.
இவ்வளவு குறைந்த நேரத்தில், இவ்வளவு பெரிய நாட்டில் இதைச் செய்வது சாதாரண விஷயமல்ல.
இவ்வளவு பெரிய நாட்டின் வேறுபாடுகளோடு நாங்கள் இதைச் செயல்படுத்துவதில் இன்னமும் மேம்பாட்டிற்கான
வழிவகைகள் உள்ளன. நாங்கள் அந்த மாற்றங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
உங்களுடைய தீவிர ஆதரவு வாக்கு வங்கியாக இருப்பது வர்த்தகர்கள்,
பணியாளர்கள், மத்தியதர வர்க்கம் ஆகியோர். புதுச்சேரியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்.
அங்கே உங்களது தொண்டர் திரு ஜெயின், மத்தியதர வர்க்கத்தைப் பற்றி, அவர்களுக்கு வரிச்
சலுகை எதுவும் கிடைக்காதது பற்றி உங்களிடம் கேள்வி எழுப்பினார். நடுத்தர வர்க்க மக்களுக்கு
நீங்கள் செய்ய நினைப்பது என்ன?
நடுத்தரவர்க்க மக்களைப்
பொருத்தவரை, நமது சிந்தனையை மாற்றிக்கொள்ளவேண்டும். நடுத்தரவர்க்கம் யாருடைய தயவிலும்
வாழ்வதில்லை. அவர்கள் கௌரவத்தோடு வாழ்கிறார்கள், நாட்டிற்கு அவர்களுடைய பங்கு அளப்பரியது.
அடித்தள மக்களுக்கு ஏதாவது கிடைக்கவேண்டுமென்றால், அந்த எண்ணமும் பெருந்தன்மையும் நடுத்தரவர்க்க
மக்களிடமும் உள்ளது. நடுத்தரவர்க்க மக்களைப் பற்றி சிந்திக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு
உள்ளது, அவர்கள் எங்களுக்கு மட்டும் வாக்கு அளிப்பதில்லை, நாட்டின் நலனுக்காகவும் அவர்கள்
வாக்களிக்கிறார்கள்.
ஒரு காலத்தில்
18% இருந்த பணவீக்கத்தை நாங்கள் 2-3% க்கு கொண்டுவந்துவிட்டோம். அதனால் பெரும் பலன்
அடைபவர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்போது அதன் சிறந்த
பலன்கள் மத்தியதரவர்க்கத்தினரையே சென்றடைகின்றன. ஏனெனில் அவர்கள் திருடுவதில்லை, தினசரி
செலவினங்களைக் குறைப்பதில்லை. எனவே விலை உயராத போது அவர்கள் பலனடைகிறார்கள். மருத்துவப்
படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கும்போது யார் பலனடைகிறார்கள்? நடுத்தரவர்க்கத்தினரின்
எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
உடான் யோஜ்னா திட்டத்தின் கீழ், ரூ 2
,500க்கு விமானங்களில் செல்லலாம். அதேபோன்று
ரயில்வேயிலும் உதாரணங்கள் உண்டு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழைகளுக்கு ரூ 5 லட்சம்
வரை காப்பீடு கிடைக்கும் என்றாலும் மறைமுகமாக மருத்துவமனைகள் மற்றும் மற்ற வேலைவாய்ப்புகள்
மூலம் நேரடியாகப் பலனடைபவர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. முத்ரா யோஜ்னா
வின் 15 கோடி கடன்வசதியின்
மூலம் அதிக பலனடைவது நடுத்தரவர்க்கமே. நடுத்தரவர்க்கத்தினர் வங்கிகளிடமிருந்து வீட்டுக்கடனைப்
பெறுவது முன்பு கடினமாக இருந்தது ஆனால் பணம்திப்பிழப்பிற்குப் பிறகு ரூ 20 லட்சம் வரை
அவர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது அதன்பின் 5 வருடங்களுக்கு 5-6 லட்சங்கள் வரை சேமிப்பின்
பயனை அடைவார்கள். ‘ஸ்டார்ட் அப்’ களை தொடங்குவதற்கான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,
அது நடுத்தரவர்க்கத்தால்தான் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இது போன்ற பல உதாரணங்கள்
உள்ளன.
சிலர் மோதி விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர்.
ராகுல் காந்தியின் கடன் தள்ளுபடி ‘லாலிபாப்’ என்று உங்களால் அழைக்கப்படுகிறது.
ஒரு விவசாயி கடனைச்
செலுத்தத் தவறும்போது, மற்றொரு பக்கம் பொருளாதாரக் குற்றவாளிகள் கவலையில்லாமல் வாழும்போது,
விவசாயிகள் ராகுல் காந்தி அவர்கள் பக்கம் இருக்கிறார் என்று நினைப்பார்கள். உங்களுடைய
கருத்து என்ன?
ஒரு தவறான. திசை
திருப்பக்கூடிய பொய்யைக் கூறும்போது அதை நான் லாலிபாப் என்று அழைத்தேன். அதாவது நாங்கள்
அத்தனை விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டோம் என்று கூறுவது. அப்படி எதுவும்
நடக்கவில்லை என்பதே உண்மை. அவர்களுடைய சுற்றறிக்கைகளைப் பாருங்கள். அவர்கள் தவறான செய்திகளை
அளிக்கக்கூடாது. வங்கிகளைக் கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற தேவையான
சட்டங்களை இந்த அரசு இயற்றியுள்ளது. ரூ 3 லட்சம் கோடி திரும்ப வந்துள்ளது.
அவர்கள் இந்த இரண்டு
விஷயங்களையும் ஒப்பிடக்கூடாது. மக்களைத் திசை திருப்பி, பொய்களைக் கூறக்கூடாது. குறிப்பாக
ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி இதைச் செய்யவே கூடாது.
கடன் தள்ளுபடி உதவும்
என்றால், அது கட்டாயம் செயல்படுத்தப்படும். ஆனால், அது முந்தைய அரசுகளால் செய்யப்பட்டதா?
தேவிலால் காலத்திலிருந்து கடன் தள்ளுபடி செய்யப்பட்டது 2009 தேர்தலில் அது வெற்றியைக்
கொடுத்தது.
ஆனால் நம்முடைய
முறையின் தவறு என்ன. விவசாயிகள் கடன்களால் கஷ்டப்படுகிறார்கள். அரசு
, தேர்தல்கள் – கடன் தள்ளுபடி என்ற சுழற்சியை மீண்டும் மீண்டும் அவர்களின் மேல்
சுமத்துகிறது.
எனவே இதற்கான தீர்வு
விவசாயிகளுக்குத் தகுந்த அதிகாரத்தை அளிப்பதில் உள்ளது. விதைகளிலிருந்து சந்தைப்படுத்துதல்
வரை, விவசாயிகளுக்கு அத்தனை வசதிகளையும் அளிக்கவேண்டும். விவசாயிகளுக்கான குளிரூட்டப்பட்ட
சேமிப்பகங்களுக்கான 100 திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஏன் விவசாயிகளுக்கு கடன்
பிரச்
சினை ஏற்படுகிறது. அவர்களுக்குக் கடன் தேவைப்படாத சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.
சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை 2007ல் செயல்படுத்தப்பட்டிருந்தால், கடன்களுக்கான தேவையே
ஏற்பட்டிராது. அதைச் செயல்படுத்தாமல், தேர்தலில் வெற்றிபெற வழிகளைத் தேடுகிறார்கள்
அவர்கள்.
வங்கிகளிலிருந்து
கடன் பெறுபவர்கள் விவசாயிகளில் ஒரு பகுதியினர்தான். பெரும்பாலான விவசாயிகள் லேவாதேவிக்காரர்களிடமிருந்து
கடன் பெறுகின்றனர். அரசுகள் இப்படிப்பட்ட அறிவிப்புகளைச் செய்யும்போது, இந்த வகை விவசாயிகளுக்கு
தள்ளுபடியின் பலன் கிடைப்பதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் இந்தத் திட்டங்களுக்கு
வெளியே இருப்பவர்கள்தான். ஆக, இதெல்லாம் அரசியல் வித்தைகளாகவே உள்ளன.
இருப்பினும், மாநில
அரசுகள் இதைச் செய்யும்போது நாங்கள் அதைத் தடுப்பதில்லை. நாங்கள் எந்த மாநில அரசுகளையும்
தடுத்ததில்லை. நாங்கள் விவசாயிகளின் பிரச்
சினைகளைத் தீர்க்க
முனைகிறோம். அவர்களுக்குத் தகுந்த அதிகாரங்கள் அளிக்க விழைகிறோம்.
முத்தலாக் பிரச்சினை போன்று அவசரச்சட்டம் அயோத்யா விஷயத்தில் கொண்டுவரப்படுமா?
ராமர் கோவில் ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயமாக பாஜகவினால் ஏன் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டது?
முத்தலாக் விஷயத்தில்
அவசரச்சட்டம் உச்சநீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. பாஜகவின் தேர்தல்
அறிக்கையில் நாங்கள் இந்த விஷயத்திற்கான தீர்வு சட்டபூர்வமாக எட்டப்படும் என்று கூறியிருந்தோம்.
கடந்த 70 வருடங்களாக
ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களால் முடிந்த அளவு இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்று
உருவாவதைத் தடுத்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றும் இது உச்சநீதி மன்றத்தின்
முன்னால் உள்ளது. ஒரு வழியாக தனது இறுதிக் கட்டத்தை அது எட்டிவிட்டது.
நாட்டின் நலனைக்
கருதி நீதிமன்றத்தை முடக்கக்கூடாது என்று காங்கிரஸுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அவர்கள் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. காங்கிரஸைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து
நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உதவி செய்ய வேண்டும்.
நீதிமன்றத்தில்
தடைகளை ஏற்படுத்தும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள், அதை நிறுத்தவேண்டும். நீதி தன் கடமையைச்
செய்யட்டும். அதை அரசியலாக்காதீர்கள். நீதிமன்றத்தின் நடைமுறைகள் நிறைவடையட்டும். அரசுக்கு
என்ன பொறுப்பு உள்ளதோ அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.
பசுக்களின் பெயரால் அடித்துக் கொலை செய்வது... முக்கியமான பிரமுகர்கள்,
நஸ்ருதீன் ஷா போன்றவர்கள் கூட இந்தியாவில் இஸ்லாமியருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறுவது…
இம்ரான் கான் கூட
மோதிக்கு சிறுபான்மையினரை எப்படிக் கையாள்வது என்று போதிப்பேன் என்று சொல்வது…
ஏன் பாஜக சிறுபான்மையரிடம்
மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதில்லை
?
அது போன்ற நிகழ்வுகள்
நாகரிகமுள்ள சமூகத்தை உயர்த்திக்காட்டாது. அந்த நிகழ்வுகளை எந்த ஒரு குரலும் ஆதரிக்கக்கூடாது.
இது மிகவும் தவறானது, கண்டனத்துக்குரியது. ஆனால் அந்நிகழ்வுகள் 2014க்குப் பின்தான்
தொடங்கியதா? இது சமூகத்தில் உள்ள குறைபாடுகளின் வெளிப்பாடே. இந்த நிலையை மாற்ற நாம்
எல்லோரும் ஒன்றாகச் செயல்படவேண்டும். அது இந்த அரசில் நிகழ்ந்தது, இது அந்த அரசில்
நிகழ்ந்தது போன்ற விவாதங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வு
கூடக் கண்டிக்கத்தக்கது.
மகாத்மா காந்தி,
வினோபா பாவே ஆகியோர் சொன்னவை, அரசியல் சாசனத்தில் எதிரொலிக்கப்பட்டுள்ளன. அந்த உணர்வுகளை
மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அந்த உணர்வுகளை மதித்தால் நம்முடைய உணர்வுகளுக்கும்
மரியாதை கிடைக்கும். அந்தச் சூழலை உருவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும்.
வளைகுடா பகுதியில்
இருக்கும் ஒரு இஸ்லாமிய அறிவுஜீவி, இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பைப்
பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் பகுதியில் ஒரே மதநம்பிக்கை உள்ளவர்கள் ஒருவரையொருவர்
தாக்கிக்கொள்கிறார்கள். இந்தியா இந்தப் பாராட்டை எண்ணிப் பெருமிதம் கொள்ளவேண்டும்.
எல்லாருடனும் எல்லோருக்கான
வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால், 18
,000 கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்படுள்ளது.
எந்த கிராமம் எந்த இனத்தைச் சேர்ந்தது என்று கேட்டு இந்த வசதி அளிக்கப்படவில்லை.
நீண்ட காலமாக ஒற்றுமையுடன்
வாழ்வதை எண்ணி இந்தியா பெருமைப்படவேண்டும். சமூகத்தில் அத்தகைய நிகழ்வுகளுக்கு இடமில்லை.
சமூகத்தின் அடி நாதம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
நாட்டில் நடைபெறும் அரசியல் வன்முறைகள் பற்றி
பாஜவின் தொண்டன்
என்ற முறையில் நான் அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மேற்கு வங்கத்தில் பாஜக, தனது ஜனநாயக உரிமைகளைச் செயல்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
தேர்தல்களின் போது எங்களது தொண்டர்கள் கொல்லப்பட்டவிதம் ஜனநாயகத்தைப் பற்றிய உயர்வான
அபிப்பிராயத்தை உருவாக்காது. கேரளாவில் எங்களது தொண்டர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர்.
கர்நாடாவில் எண்ணமுடியாத
அளவிற்கு எங்களது பல தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் எங்களது தொண்டர்கள்
கொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமிலும் கூட. ஜம்மு காஷ்மீரில் எங்கள் தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர்.
இங்கு எங்களது தொண்டர்கள் கொல்லப்படுவது முக்கியப் பிரச்சினை அல்ல, இது போன்ற அரசியல்
வன்முறை நமது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும்.
இந்த அரசு எந்த
உருவத்திலும் வன்முறையைச் சகித்துக்கொள்ளாது என்று பாஜக தொண்டர்களுக்கும் அவர்களது
குடும்பத்தினருக்கும் உறுதியளிக்கிறேன். அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்பதில்
நாங்கள் தீர்மானமாக உள்ளோம்.
நாங்கள் மாநில அரசுகளுக்கும்
வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஒருநாள் உண்மை வெளிவரும். இன்று சிலர் பாதுகாப்பாக இருப்பதுபோன்று
உணரலாம்
. ஆனால் ஒரு நாள்
உண்மை வெளிவந்துவிடும். ஒரு ஜனநாயகத்தில் எப்படிச் செயல்படவேண்டும் என்பது பற்றி அரசியல்
கட்சிகள் தங்கள் தொண்டர்களுக்குக் கற்றுத் தரவேண்டும்.
முத்தலாக் அவசரச் சட்டம் ஒரு முற்போக்கான விஷயமாகக் கருதப்பட்டது
ஆனால் அதே நேரத்தில் சபரிமலைப் பிரச்சினையில் உங்களது கட்சி மரபுக்கும் சடங்குகளுக்கும்
இடையே சிக்கிக் கொண்டது. ஏன் இந்த முரண்பாடு
?
இரண்டும் மாறுபட்ட
விஷயங்கள். நீங்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. உலகில் பல இஸ்லாமிய நாடுகள்
முத்தலாக்கைத் தடை செய்துள்ளன. எனவே இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமில்லை. பாகிஸ்தானில்
கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. இது பாலின சம உரிமையைப் பொருத்த விஷயம். எனவே
இரண்டும் வேறுபட்டவை.
அனைவரும் தங்களுக்குரிய
உரிமையைப் பெறவேண்டும் என்று இந்தியா கருதுகிறது. சில கோவில்களின் மரபுப் படி, அங்கெல்லாம்
ஆண்கள் செல்லக்கூடாது. அங்கே ஆண்கள் செல்வதில்லை.
சபரிமலை விஷயத்தில்
உச்சநீதிமன்றத்தின் ஒரு பெண் நீதிபதி சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அதை ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.
அதை எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்புபடுத்த வேண்டியதில்லை. ஒரு பெண்ணாக அவர்
சில பரிந்துரைகளைச் செய்துள்ளார். அதைப் பற்றி விவாதம் நிகழ்த்தப்படவேண்டும்.
மகாகட்பந்தன் (மகா கூட்டணி) இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறது.
மோதி கேசிஆர் கூட்டணியை ஆதரிக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு கூறுகிறார். இதைப் பற்றிய
தெளிவு கிடைக்குமா?
கேசிஆர் உருவாக்கும்
கூட்டணியைப் பற்றி எனக்குத் தெரியாது.
கடந்த 5 ஆண்டுகளில் மகாகட்பந்தன் ஒருமித்துக்
கூறிய ஏதாவது ஒன்று உண்டா? அவர்களின் குரல் மாறுபாடுகளுடன் ஒலிக்கின்றது. அவர்கள் யார்?
தங்களைக் காத்துக்கொள்ள ஆதரவைத் தேடுகின்றனர்.
ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொள்வோம், அதன் மூலம் நாம் காப்பாற்றப்படுவோம்.இப்படியாக இந்த விளையாட்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அவர்களுடைய ஒரே
நோக்கம் மோதி. மோதிக்கு
, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள்
என்பது. ஒரு தினசரியை எடுத்துக்கொள்ளுங்கள். கூட்டணியின் 10 தலைவர்கள் பல குரல்களில்
மோதியின் மீது வசைபாடுவார்கள். நாட்டிற்கு அவர்கள் என்ன செய்வார்கள், ஏன் செய்வார்கள்
என்பதைப் பற்றி அதில் ஒன்றும் இருக்காது.
அரசியல் கூட்டணியில் உள்ளவர்களே தங்களுக்குள் கொள்கையளவில் ஒற்றுமை
இல்லை என்று கூறிவிட்டனர். மோதியைத் தவிர வேறு யாராவதோ என்பது அவர்களின் கொள்கை.
2019 மோதிக்கும் மற்றவர்களுக்குமான போட்டியாக இருக்குமா?
இந்திய மக்கள் தேர்தலின்
போக்கைத் தீர்மானிப்பார்கள். பொதுமக்கள் அதன் அடிப்படையை முடிவு செய்வார்கள். யார்
மக்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்யப்போகிறார்கள். யார் மக்களின் நோக்கங்களுக்கு எதிராக உள்ளனர்.
அதுதான் தேர்தலின் அளவுகோலாக இருக்கப்போகிறது.
முன்பு ஊழல் பரவலாகப்பட்டிருந்தது
என்று மக்களுக்குத் தெரியும், மாநிலங்களில் இருந்தவர்கள் மாநிலங்களைக் கொள்ளையடித்தனர்.
மத்தியில் இருந்தோர் மத்திய அரசைக் கொள்ளையடித்தனர். இப்படி ஊழலில் ஈடுபட்டோர் கூட்டணியாக
வருவதை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி மக்கள் முடிவெடுப்பார்கள்.
இது மக்களுக்கும்
கூட்டணிக்கும் இடையேயான போட்டி. பொதுமக்களின் அன்புக்கும் ஆசிக்கும் அடையாளமாக இருப்பது
மோதிதான்.
ஒரு அதிபர் தேர்தலைப் போல 2019 இருக்குமா – ஒரு புறம் மோதி மற்றொரு
புறம் ராகுல்.
இந்தத் தேர்தல்
யார் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறார்கள், மக்களின் அபிலாஷைகளை யார் நிறைவேற்றுகிறார்கள்,
யார் தடுக்கிறார்கள் என்பதின் அடிப்படையில் நடைபெறும். பொதுமக்கள் அதுபற்றி முடிவெடுப்பார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா?
தொடர்ந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள்.
2014க்குப் பின், சிறிய கட்சிகள் எங்களுடன் சேர்ந்துள்ளன, குறிப்பாக வடகிழக்குப் பிராந்தியத்தில்.
மாயாவதி?
எந்த ஒரு புத்திசாலி
மனிதரும் இதை
த் தொலைக்காட்சியில்
சொல்லிக்கொண்டிருக்கமாட்டார். அதாவது யார் இணைகிறார்கள், யார் வெளியேறுகிறார்கள் என்பதை.
ஆனால் பொதுமக்கள் அனைத்தையும் அறிவார்கள். உதாரணமாக, தெலுங்கானாவில் அவர்கள் கூட்டணி
படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. கூட்டணியின் முதல்
முயற்சி அது.
ஜம்மு காஷ்மிரில்
கூட்டணி உள்ளாட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க முடிவுசெய்தது. மக்கள் அவர்களை நிராகரித்தனர்.
74% வாக்கு பதிவானது. அஸ்ஸாமில் கூட்டணி முழுவதும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிட்டது.
ஆனால் பாஜகவி
டம் தோல்வியைத் தழுவியது.
திரிபுராவிலும் இது போன்ற முடிவுதான். மேல்மட்டத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்தத்
தலைவர்கள் ஒன்று சேரலாம், ஆனால் பொதுமக்கள் அவர்களுடன் சேரப்போவதில்லை.
உதவ் தாக்கரேயைப் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின்
வார்த்தைகளை, ‘சௌக்கிதார் சோர் ஹை’ போன்றவற்றை எதிரொலிக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தல்களை
அடுத்து கூட்டணித் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டைக் கடுமையாக்கிக் கொள்கின்றனர் என்று
நீங்கள் நினைக்கவில்லையா?
2014ல் எங்களுக்கு
அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனாலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்தோம்.
இன்றும் நாங்கள் அரசை நடத்தும்போது, முடிவெடுப்பதில் எங்களுக்குள் ஒற்றுமை உள்ளது.
மாநிலங்களில் தனிப்பட்ட அரசியல் உள்ளது என்பது உண்மை. எங்களது கூட்டணிக்கட்சிகள் தாங்கள்
வளர்ச்சியடையவேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். எங்களது எதிர்பார்ப்பும் அதுவே. கூட்டணிக்
கட்சிகளைப் பாதிப்படையச் செய்து நாங்கள் வளர விரும்பவில்லை.
ஆனால் காங்கிரஸின்
நோக்கம் வேறு. காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோர் காங்கிரஸை எதிர்த்துக் குரலை எழுப்பி
அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் அல்லது காங்கிரஸ் எதிர்ப்பின் மூலம் வளர்ந்தவர்கள்.
எனவே காங்கிரஸை அவர்கள் நெருங்கும்போது அந்தக் கட்சி அவர்களை விழுங்கிவிடுகிறது.
நாங்கள் மாறுபட்டவர்கள்.
எங்களிடம் கூட்டு வைத்திருப்பவர்கள் வலுப்பெறுகிறார்கள். எங்களது கூட்டணிக் கட்சிகள்
உயர்வதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடுகிறோம். சில நேரங்களில் சில எதிர்பார்ப்புகள்
பூர்த்தியடைவதில்லை. அவர்கள் பலனடைய அழுத்தம் கொடுக்கிறார்கள். சிலர் பேச்சுவார்த்தையின்
மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட
குணம் உண்டு. ஆனால் எங்களைப் பொருத்தவரை அனைவரையும் ஒன்றாக முன்னெடுத்துச்செல்ல விழைகிறோம்.
பிராந்தியங்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவே நான் விரும்புகிறேன். மாநிலங்களின்
உரிமைகளைப் புறக்கணித்து நாட்டை நடத்திச்செல்ல இயலாது. அதனால்தான் பாஜக வெற்றியடைகிறது.
தென்னிந்தியாவில் பாஜக ஏன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவில்லை.
கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றோரோடு தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உண்டா?
இது உண்மையல்ல.
30 வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டது இன்னும் சொல்லப்பட்டு வருகின்றது. தென்னிந்தியாவில்
எங்களுக்கு இடம் உண்டு. கோவாவிலும் மகாராஷ்ட்ராவிலும் நாங்கள் உள்ளோம். எங்களுடைய அடித்தளத்தை
விரிவுபடுத்த தொடர்ந்து முயன்றுவருகிறோம். ஜம்மு காஷ்மீரில் எங்களுக்கு எம்பி உண்டு,
தமிழ்நாட்டிலும் உண்டு. வடகிழக்கிலும் உண்டு. நாங்கள் அனைவரையும் கூட்டுச் சேர்த்துக்கொள்ள
தயாராக இருக்கிறோம், யார் எங்களுடன் சேர விரும்புகிறார்களோ, நாங்கள் யாருடன் பேச இயலுமோ
அவர்களை இணைத்துக்கொள்வோம்.
காங்கிரஸும் அரசியல் நோக்கர்களும் பாஜக நாட்டின் நிறுவனங்களை
பலவீனப்படுத்திவிட்டது என்று கூறுகின்றனர். சிபிஐயின் முதலாவது இரண்டாவது இடங்களில்
இருப்பவர்களுக்கிடையேயான தகராறின் காரணமாக பிரதமர் நேரடியாகத் தலையிட நேர்ந்தது. ரிசர்வ்
வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆர்பிஐயின் கஜானாவை பாஜகா காலி செய்ய முயல்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸுக்கு இந்த
விஷயத்தைப் பேச எந்த உரிமையும் இல்லை. பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எதிராக
என்ஏசி உருவாக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் அலுவலகத்திற்கு எந்த வகையில் அதிகாரம் இருக்க
முடியும்? மந்திரி சபை முக்கிய முடிவுகளை எடுக்கிறது
. ஆனால் பெரிய தலைவர்கள் அதை பத்திரிகையாளர் சந்திப்பில் கிழித்தெறிகிறார்கள்.
நிறுவனங்களுக்குக் கொடுக்கும் மரியாதை இதுதானா?
நீதித்துறையைப்
பொருத்த அளவில், கொள்கையின் அடிப்படையில் நீதித்துறையை முடிவு செய்வோம் என்று அவர்கள்
கூறினர். மூத்த நீதிபதிகள் வெளியேற்றப்பட்டு அனுபவமில்லாத நீதிபதிகள் பதவி உயர்வு பெற்றனர்.
நீங்கள் நிறுவனங்களைப் பற்றிப் பேசலாமா?
இதே ஆர்பிஐயில்,
பல முறை ஆளுநர்கள் தங்கள் பதவிக்காலம் முடியுமுன்பே வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
திட்டக்குழு உறுப்பினர்களை கோமாளிகள் என்று நீங்கள் வர்ணித்ததுண்டு. அப்போதைய துணைத்தலைவர்
யார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அது அவர்களுக்கு
உயர்வளிக்கின்றதா? சிபிஐயின் பிரச்சினை வெளிவந்தபோது, சட்டப்படி அவர்கள் இருவரும் விடுப்பில்
செல்லப்பணிக்கப்பட்டனர். ஏனெனில் நிறுவனங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை.
ஆர்பிஐயின் ஆளுநர்
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ய விரும்பினார். நான் இதை முதல் முறையாக வெளிப்படுத்துகிறேன்.
கடந்த 6-7 மாதங்களாகவே தனது விருப்பத்தை அவர் தெரிவித்துக்கொண்டிருக்கிறார். அதை எழுத்துபூர்வமாகக்
கூடத் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் எனக்குக் கூட எழுதினார்…
அவர் மீது (உர்ஜித் படேல்) ஏதாவது அரசியல்ரீதியான அழுத்தம் இருந்ததா?
அந்தக் கேள்விக்கே
இடமில்லை. ஆர்பிஐ ஆளுநராக படேல் சிறப்பாகப் பணிசெய்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்வேன்.
ஈடி (அமலாக்கப்பிரிவு) எம்பராஸ்மெண்ட் டைரக்டரேட் என்று அழைக்கப்பட்டது,
பழி வாங்குதல் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதை எப்படிச் சொல்கிறார்கள்
என்று தெரியவில்லை. அண்மையில் சோராபுதீன் தீர்ப்பு வந்தது. அதைப் படியுங்கள். நிறுவனங்கள்
எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்று தெரியும். மோதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
என்றுதான் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் பழிவாங்குதல் என்கிறீர்கள். அமலாக்கப்பிரிவு
தன் கடமையைச் செய்கிறது. ஒரு வெளிநாட்டிலிருந்து தலைமறைவான ஒருவர் இந்தியாவிற்குக்
கொண்டுவரப்படுகிறார். ஒவ்வொரு இந்தியரும் இதை நினைத்துப் பெருமைப் படவேண்டாமா.
கிறிஸ்டியன் மைக்கலுடைய
வழக்கறிஞராக காங்கிரஸ்காரர் ஒருவர் வந்தால் அது கவலையளிக்கக்கூடிய விஷயம். நாட்டுமக்கள்
இப்போது தலைமறைவுக் குற்றவாளி வந்ததை நினைத்துப் பெருமையடையவேண்டும். சட்டபூர்வமான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உண்மை விரைவில் வெளிப்படும். அதை விடுத்து, உங்கள் கட்சியிலிருந்து
மைக்கலுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களை அனுப்புகிறீர்கள். இது வருத்தப்படவேண்டிய ஒன்று.
ரபேல் விவகாரத்தில், உங்களுக்கு வேண்டியவருக்கு
ஆதரவாக
நீங்கள் செயல்பட்டதாக ராகுல் காந்தி உங்களின் மீது
தனிப்பட்ட குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். அனில் அம்பானி உங்கள் நண்பர் என்றும்
அவருக்கு நீங்கள் உதவிசெய்ய பிரான்ஸ் அரசுக்கும் டஸ்ஸாட்டுக்கும் அழுத்தம் கொடுத்ததாகவும்
அவர் கூறுகிறார். நீங்கள் இதுபற்றிப் பேசவில்லை, ஏன் நீங்கள் இந்த விஷயத்தில் மௌனம்
சாதிக்கிறீர்கள்?
இது என்மீது வைக்கப்பட்டுள்ள
தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, என்னுடைய அரசின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. தனிப்பட்ட
முறையில் என்மீது குற்றம் இருந்தால், அவர்கள் யார் எப்போது எங்கே யாருக்கு என்ன கொடுத்தார்கள்
என்பதைத் தோண்டியெடுக்கட்டும்.
நாடாளுமன்றத்தில்
நான் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். எனக்குக் கிடைத்த பொது மேடைகளில் இதுபற்றிக்
குறிப்பிட்டிருக்கிறேன். உச்சநீதிமன்றம் கூட இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அது இந்த
விஷயத்தை ஆழமாக ஆய்வுசெய்திருக்கிறது. பிரான்ஸின் அதிபர் இதுபற்றிப் பேசியிருக்கிறார்.
ஊடகங்கள் இதற்கான ஆதாரங்கள் என்ன என்பது பற்றி அவர்களிடம் கேட்டிருக்கவேண்டும். அதற்கான
துணிச்சல் இருக்கிறதா? சேற்றை எறிந்துவிட்டு ஓடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள்
எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்காமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து
இதை எழுப்புவதாலேயே நான் பதிலளித்துக்கொண்டு இருக்கவேண்டுமா என்ன?
நாட்டில் இதுபற்றி
விவாதம் நடத்தப்பட வேண்டும். சுதந்தரம் அடைந்ததிலிருந்து ராணுவ பேரங்களில் ஏன் சர்ச்சைகள்
எழுப்பப்படுகின்றன? ஏன் நம் ராணுவம் பலவீனப்படுத்தப்படுகிறது? யார் இதைச் செய்கிறார்கள்?
இதன் காரணம் என்ன?
ராணுவ விவகாரங்களில்
இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? இடைத்தரகர் இல்லாமல் இந்தப் பேரங்கள் நடக்காதா? மேக்
இன் இந்தியா 70 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டிருந்தால், வெளியிலிருந்து சுரண்டுபவர்களின்
வழி மூடப்பட்டிருக்கும்.
என்னுடைய குற்றம்
நான் மேக் இன் இந்தியாவை உருவாக்கியது. என்னுடைய குற்றம் நம்முடைய ராணுவத்திற்குத்
தேவையானவற்றை இந்தியாவிலேயே உருவாக்குவது. அதன்மூலம் வெளிநாட்டுத் தேவைகளுக்கு முடிவுகட்டுவது.
தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்காக நான் முயல்கிறேன்.
ராணுவத்தைப் பலவீனப்படுத்த
முயல்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். என்மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைச்
சுமத்துகின்றனர் என்பது பற்றி நான் கவலைப்படுவதா அல்லது என்னுடைய நாட்டின் தேவைகளைப்
பூர்த்தி செய்ய முயல்வதா? என் மீது எப்படி வசைபாடப்பட்டாலும், எந்த ஒரு குற்றம் சுமத்தப்பட்டாலும்,
நேர்மையின் வழி நடப்பது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது
என்றும் நான் முடிவுசெய்துவிட்டேன். நம் ராணுவ வீரர்களை விதியின் வழி செல்ல நான் விடப்போவதில்லை.
அவர்களது தேவைக்கேற்ப, நான் கொள்முதல் முறையை விரைவுபடுத்தப்போகிறேன். என்மீது தவறான
குற்றம் சுமத்தப்பட்டாலும் இதைச் செய்வேன்.
சர்ஜிகல் ஸ்ட்ரைக் விஷயத்தை, முன்னாள் ராணுவ
அதிகாரிகள் அரசியலாக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். பாஜக இந்தத் தாக்குதல்களை அரசியல்
ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகிறது
என்னுடைய கருத்தும்
இந்தத் தாக்குதல்களை அரசியலாகக் கூடாது என்பதுதான். அதில் எந்தச் சர்ச்சையும் இல்லை.
இந்தத் தாக்குதல்கள் நடைபெற்ற பின் எந்த ஒரு அமைச்சரும் இதைப் பற்றிப் பேசவில்லை.
ஒரு ராணுவ அதிகாரி
நாட்டிற்கு இதைப் பற்றி விளக்கமளித்தார். இந்தத் தகவல் பாகிஸ்தானுக்கும் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்குத் தகவல் அளிக்கப்ப
டும் வரையில், இந்தியாவிலும் இதுபற்றிச் செய்திகள் வெளிப்படுத்தப்பட்டவில்லை.
ஆனால், இந்த நாட்டில்
தாக்குதல்கள் நடந்த அதே நாளில் துரதிருஷ்டவசமாக சில கட்சித் தலைவர்கள்
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கைப் பற்றிச் சந்தேகம் எழுப்பினார்கள். தங்களது மன ஊக்கத்தை உயர்த்திக்கொள்ள
பாகிஸ்தானுக்கு இப்படிப் பேசவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் சொல்லப்பட்டது
இங்கும் கூறப்பட்டது.
அவர்களுடைய வாதங்களுக்கு
வலுச்சேர்ப்பதற்காக, பாகிஸ்தானில் கூறப்பட்டதையே அவர்கள் ஆதாரமாகக் காட்டினர். அரசியலாக்குவது
அதிலிருந்து துவங்கியது. நீங்கள் ராணுவத்தைப் பழித்தீர்கள். ராணுவ நடவடிக்கையைப் பற்றி
ச் சந்தேகம் எழுப்பியவர்கள் தவறு செய்தார்கள் என்று நான் கருதுகிறேன்.
அந்த வகை அரசியலாக்குதல் நடந்திருக்கக்கூடாது.
ராணுவத்தைப் புகழ்வது
குடிமக்கள் மற்றும் அரசின் கடமையாகும். 1962ல் நமது ராணுவம் வெளிப்படுத்திய வீரத்தையும்
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட அதன் திறனையும்
நாம் பாராட்ட வேண்டும்.
நாட்டிற்காக தங்கள்
உயிரைப் பணயம் வைப்பவர்களின் வீரத்தை நாம் பாரட்டவில்லை என்றால், யார்தான் அதைச் செய்வது?
ராணுவத்தைப் பாராட்டுவது அரசியல் என்று கருதக்கூடாது.
இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்ற மணித்துளிகளில், உங்கள் மனதில்
ஓடிக்கொண்டிருந்தது என்ன
? இந்தத் தாக்குதல்கள் தோல்வியுறும் பட்சத்தில் ஒரு அரைகுறை நடவடிக்கைக்கான
பொறுப்பு உங்கள் மேல் அல்லவா விழுந்திருக்கும். போர்களை விரும்புபவர் என்ற குற்றச்சாட்டும்
உங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும்.
..
யூரி (URI) நிகழ்ந்தபோது, நமது
ஜவான்கள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டபோது
, அது என்னை அமைதியிழக்கச்செய்தது. என்னுள்ளே ஒரு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான் கேரளா சென்றபோது
இதுபற்றிக் குறிப்பிட்டேன்.
ஆனால் ஒரு ஜனநாயக
நடைமுறையின் ஒரு பகுதி
தான் நான். தனிப்பட்ட கோபம், ஆத்திரம், அமைதியிழப்பு ஆகியவை நடைமுறைகளின்
மீது திணிக்கப்படக்கூடாது. ஆனால் என்ன நிகழ்ந்தது என்பது பற்றி ராணுவத்திடம் பேச்சு
நடத்திக்கொண்டேயிருந்தேன். ராணுவத்தில் இருந்த கோபம் என்னிடத்தில் இருந்ததை விட மிக
அதிகம் என்பதைக் கண்டுகொண்டேன். ராணுவ வீரர்களின் மன ஊக்கத்திற்காக, உயிர்த்தியாகம்
செய்த வீரர்களுக்காக நீதியை அவர்கள் விரும்பினர்
. நான் அவர்களிடம் திட்டம் ஒன்றைத் தீட்டும்படிக் கேட்டுக்கொண்டேன். என்ன தேவை, என்ன செய்யலாம் என்பதையும் கேட்டேன்.
அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். அவர்கள் திட்டம் தீட்டினர். அந்த நடவடிக்கைக்கு
முழுப் பாதுகாப்பை நான் விரும்பியதால் இருமுறை அந்தத் தேதி மாற்றப்பட்டது. இறுதியில்
அந்த நடவடிக்கை முடிவுசெய்யப்பட்டது. அது ஒரு பெரிய அபாயம் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.
எனக்கு அரசியல் அபாயங்களைப் பற்றிக் கவலையில்லை. என்னுடைய கவலையெல்லாம் நம் வீரர்களின்
பாதுகாப்புப் பற்றியதுதான். அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது. அவர்கள்
நம்முடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு எந்தவிதத் தியாகத்தையும் செய்யத்தயாராக இருந்தார்கள்.
அதற்காக அவர்களுக்குத் தேவையானது அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பயிற்சியளிக்கவும்
முடிவுசெய்யப்பட்டது. சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ரகசியம் காக்கப்பட்டது.
இட விவரங்களும் தடைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மோசமான நிலை ஏற்பட்டால் என்ன
செய்வது என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது. எனக்கு ஒரு நல்ல
படிப்பாக அது இருந்தது. அதன்பின் தேதியைத் தீர்மானித்தோம்.
முக்கிய அணியில் யார் எங்கேயிருப்பது என்பது பற்றி முடிவுசெய்யப்பட்டது. விடிவதற்கு
முன் நம் ஆட்கள் திரும்பிவிடவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.
வெற்றியடைந்தாலும்
தோல்வியுற்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சூரிய உதயத்திற்கு முன் திரும்பிவிடவேண்டும்
என்று தெளிவாக ஆணையிட்டிருந்தேன். ஆசைப்பட்டு தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டாம் என்று
கூறியிருந்தேன். வெற்றியோ தோல்வியோ விடிவதற்கு முன் திரும்பிவிடவேண்டும். தோல்வி கிடைத்தாலும்
திரும்பி விடுங்கள். என்னுடைய வீரர்கள் இறப்பதை நான் விரும்பவில்லை.
வீரர்கள் குறிப்பிட்ட
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை முழுவதும் நான் அவர்களுடன் தொடர்பிலிருந்தேன்.
ஆனால் காலையில் ஒரு மணி நேரம் தகவல்கள் கிடைக்கவில்லை. எனக்கு கவலை ஏற்பட்டது. சூரிய
உதயத்திற்கு ஒரு மணி நேரம் கழித்தும் தகவல்கள் ஏதும் இல்லை. எனக்கு அது ஒரு கடினமான
நேரமாக இருந்தது. நானும் அவர்களுக்குத் தகவல்கள் அனுப்ப இயலவில்லை.
சூரியன் உதித்து
அடுத்த ஒரு மணி நேரம் கவலையோடு கழிந்தது. என்னுடைய முதல் நோக்கம் நம் வீரர்கள் உயிரோடு
திரும்பவேண்டும்.
அதன்பின், நம்முடைய
எல்லையை அவர்கள் இன்னும் அடையவில்லை என்ற தகவல் கிடைத்தது
. ஆனால் இரண்டு பிரிவுகள் பாதுகாப்பான பகுதியை அடைந்துவிட்டன, எனவே கவலைப்படவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி
வீரர் திரும்பும் வரை எனக்கு அமைதியில்லை என்று கூறினேன். இந்நடவடிக்கை நிறைவடைய
, விடிந்த பின் 2 மணி நேரம் ஆனது. பின்னர் சிசிஎஸ் சந்திப்பு நிகழ்ந்தது.
அதற்கு முன் பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டியிருந்தது. பாகிஸ்தானியர்கள் நம்முடைய
அழைப்பை முதல் முறை எடுக்கவில்லை. இந்திய ஊடகங்களுக்கு 12 மணிக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
என்னைப் பொருத்தவரை அந்த நிமிடங்கள்
, அந்த நடவடிக்கை நடந்த விதம், அந்தத் துல்லியம், முக்கியமானவை. நம்முடைய ராணுவத்தின்
புதிய பரி
மாணத்தை நான் அறிந்துகொண்டேன். அவர்களுக்கு என் வந்தனங்கள்.
இந்தத் தாக்குதலின் நோக்கங்கள் என்ன? தீவிரவாதம் குறையவில்லை,
எல்லைக்கு அப்பாலான தீவிரவாதம் இன்னமும் தொடர்கிறது. இது ஒரு தடுப்பு நடவடிக்கையா?
தொடர்ந்து சென்று தாக்குதல் என்ற புதிய கொள்கை ஏதும் உள்ளதா?
இதுபோன்ற விஷயங்கள்
ஊடகங்களில் விவாதிக்கத் தகுந்தவை என்று நான் கருதவில்லை. எந்த மாதிரியான வியூகங்கள்
வகுக்கவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பதெல்லாம் தகுந்த நிலைகளில் விவாதிக்கப்பட்டுவருகின்றன.
1965 போர், பிரிவினையின்போது நடந்த போர்
, இப்படி ஒரு போரில் பாகிஸ்தான் வழிக்கு வந்துவிடும்
என்று நாம் நினைத்தால் அது தவறான நினைப்பாகும். பாகிஸ்தான் ஒழுங்குபட சிறிது காலம்
பிடிக்கும்.
நவாஸ் ஷெரிப்பைத் தாங்கள் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தீர்கள்.
நீங்களும் லாகூர் சென்றீர்கள். இம்ரான் கான் பதவியேற்குமுன்பே அவருக்கு வாழ்த்துச்
செய்தி அனுப்பினீர்கள்.
சிலர் மோதி ஏன் வாழ்த்துச் சொல்ல அவசரப்படுகிறார், அவருடைய நோக்கம்
நோபல் பரிசா என்று கூறுகின்றனர். இந்திய – பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் துவங்குமா?
ஐமுகூ அரசாக இருந்தாலும்
சரி அல்லது தேஜ கூட்டணி அரசாக இருந்தாலும் சரி, நாம் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற
கொள்கை நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறோம். அது நாட்டின் கொள்கை, மன்மோகன் சிங்குடையதோ
அல்லது மோதியுடையதோ அல்ல. நம்முடைய மாறாத கொள்கை
, எல்லாவிதமான பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக்கொள்வது என்பது. ஏனெனில் இந்தியாவின் நிலை வலுவாக இருக்கிறது. நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான்,
குண்டு வெடிப்புகளுக்கும் துப்பாக்கி
ச் சத்தங்களுக்கும் இடையே நாம் பேச்சுவார்த்தை நடத்த இயலாது. எல்லை
கடந்த பயங்கரவாதம் முற்றுப்பெறவேண்டும். இதற்கான தொடர்ந்த அழுத்தத்தை நாம் கொடுத்து
வருகிறோம். உலகில் இந்த நிலைப்பாட்டிற்குச் சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறோம், தீவிரவாதத்தை
ஆதரிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தியிருக்கிறோம். இதுதான் உண்மை. நிகழ்வுகள் நடந்தன,
ஆனால் குறைந்த அளவிலேயேதான் அவை நடைபெற்றன. மனிதத் தன்மையையும், சட்டத்தையும், நாட்டின்
ஒற்றுமையையும் நம்புபவர்களின் கை ஓங்கி இருக்கிறது.
இம்ரான் கானின் அறிக்கையில் ஏதாவது நம்பகத்தன்மை தெரிகிறதா,
இம்ரான் அழைத்தால் நீங்கள் சார்க் மாநாட்டிற்குச் செல்வீர்களா?
பழமொழி ஒன்று உண்டு. பாலத்தை நாம் நெருங்கும்போது…”
சீனா – நீங்கள் ஸீ ஜின்பிங்கை 13-14 முறை சந்தித்திருக்கிறீர்கள்.
அதற்குப் பதிலாக டோக்லம் போன்றவையே உங்களுக்குக் கிடைத்தது. நேருவைப் போல நீங்களும்
ஏமாற்றப்பட்டுவிட்டீர்களா?
டோக்லாமில் நாம்
அளித்த பதிலடியை வைத்தே இந்தியாவைப் பற்றி முடிவுசெய்ய வேண்டும். ஏமாற்றம் என்ற வகையில்
இந்தியாவுடன் எதுவும் நிகழவில்லை. நம்முடைய அடிப்படைக் கொள்கை, நம் அயல்நாடுகளுடன்
நேச உறவு கொள்வதே. எல்லா இந்திய அரசுகளும் இதையே கடைப்பிடிக்கின்றன.
நீங்கள் அடிக்கடி வெளிநாடு செல்கிறீர்கள், அது வெறும் புகைப்படங்களுக்காக
மட்டுமே, வேறு வலுவான பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன.
எல்லா பிரதமர்களும்
கிட்டத்தட்ட இதுபோன்ற பயணத்திட்டங்களையே கொண்டிருந்தனர். நீங்கள் கணக்கெடுத்தால், பல்வேறு
சந்திப்புகள், உச்சி மாநாடுகள் நடைபெறுகின்றன. அவற்றில் பிரதமர் இல்லாவிடில், உங்கள்
குரல்
ஒலிக்காது. எனவே இந்தப் பயணங்கள் அவசியமானவை. மன்மோகன் ஜியும் இதைச் செய்யவேண்டியிருந்தது.
அது கட்டாயமானதாக ஆகிவிட்டது. இந்தியாவின் குரல் உலகத்திற்குக் கேட்கவேண்டும் என்று
நான் முயல்கிறேன். அதிக எண்ணிக்கையில் மக்களைச் சந்திக்க நான் முயல்கிறேன். முன்பு
பிரதமர் செல்லும்போது அவர்கள் போய்ச்சேரும் இடங்களிலும் அவர்கள் புறப்படும் இடங்களிலும்
அவர்களை யாரும் கவனிப்பதில்லை. நான் மக்களோடு உரையாடுவதாலும் முக்கிய முடிவுகளை எடுப்பதனாலும்தான்
என்னுடைய பயணங்கள் கவனிக்கப்படுகின்றன.
கங்கை இன்னமும் சுத்தம் செய்யப்படவில்லை. 5 வருடங்கள் ஆகிவிட்டன.
நான் 5 மாநிலங்களை
இந்த நோக்கத்திற்காக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த ஆற்றுக்காக ராஜீவ் காந்தி
காலத்திலிருந்து செலவிடப்படும் பணம் எந்தப்பலனையும் ஏன் அளிக்கவில்லை? நாங்கள் அதை
ஆராய்ந்தோம். குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன, இந்தப் பணியை முடிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுவிட்டோம்.
உதாரணமாக, ஆற்றை 120 வருடங்களாக மாசுபடுத்திக்கொண்டிருந்த ஒரு கால்வாய் மூடப்பட்டுள்ளது.
கங்கையில் கலக்கும்
துணை ஆறுகளையும் தூய்மை செய்வது சவாலான பணியாகும். பன்னாட்டு அறிக்கை ஒன்று கங்கையைத்
தூய்மை செய்யும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் அது
எனக்குத் திருப்தி தரவில்லை. இந்தப் பணியில் கடுமையாக உழைக்கிறேன். நாம் வெற்றிபெறுவோம்
ஆக, நீங்கள் வாரணாசியிலிருந்து போட்டியிடுவீர்களா அல்லது புரி
ஒரு தொகுதியாக இருக்குமா?
ஊடகவியலாளர்களும்
ஏதாவது பணி செய்
யுங்கள்.
முதல்முறை எம்பியான நீங்கள் ராகுல் காந்தி உங்களைப் பார்த்து
கண்ணடிப்பார் என்று எதிர்பார்த்தீர்களா? நாடாளுமன்றத்தில் உங்களுடைய ஏற்றத் தாழ்வுகளைப்
பற்றிக் கூறுங்கள்
.
நாடாளுமன்றம் விவாதங்களுக்குரிய
இடமாக இருக்கவேண்டும். வலுவான விவாதங்கள் நடைபெறும்போது, இனிய அமுதம் அதிலிருந்து கிடைக்கும்.
துரதிருஷ்டவசமாக, அதுபோன்ற விவாதங்கள் நடைபெறாதது நாட்டை பாதிப்புக்குள்ளாக்குகிறது.
நாடாளுமன்றத்தில் எட்டு மணி நேர விவாதம் நடைபெறும்போது அரசைச் சூழ்ந்து கேள்விகள் கேட்க
அது ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது. அரசுப்பணித்துறையும் இதைக் குறித்துக்கொள்கிறது.
நமது நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் அறிவொளி பொருந்தியதாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு சில
மனிதர்கள் இதைச் சீர்குலைத்து நமது ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கின்றனர்.
இந்த ஐந்தாண்டு கால உங்கள் ஆட்சியில் ஏதாவது வருத்தம்
உண்டா, அதேபோன்று உங்களுக்குத் திருப்தி அளித்த ஒரு விஷயம்.
..
என்னுடைய பணி திருப்தியாக
இருந்ததா இல்லையா என்ற முடிவை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்று, எனக்கு
ஆச்சரியமேதுமில்லை. லுட்
யென் உலகத்தை (அதாவது பாரதீயமற்ற உலகத்தை) எனது ஒரு பகுதியாக
மாற்றவில்லை அல்லது நான் அதன் ஒரு பகுதியாக மாறவில்லை. எனது பின்புலம் வேறு என்ற காரணத்தால்
அவர்கள் எனது ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பவில்லை. மேல்தட்டு அல்லாத மக்களின்
பிரதிநிதியாக நான் இருக்கிறேன். நான் அவர்களை வெல்ல முடியவில்லை. அவர்களை எப்படி வெல்வது
என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (மற்றபடி) ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியாகக்
கழித்தேன். என்னுடைய பணியில் நேர்மை உள்ளது. நான் மக்களுக்காகப் பணிபுரிகிறேன்