ஒவ்வொரு வருடமும் மண்டலக் காலத்தில் சபரிமலையையொட்டிச் சர்ச்சைகள் கிளம்புவது சமீபகாலமாக வாடிக்கையாகவே ஆகி விட்டது. அதிலும்
இந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதற்கு
எதிர்வினையாக ஹிந்துக்களின் எழுச்சியும் பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. கேரளம்
தாண்டி, தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் சபரிமலையில் ஆசாரங்களை
மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் உணர முடியும்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடைபெற்ற ஒரு முக்கியமான
சம்பவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். அன்றைய திருவிதாங்கூர்
மாநிலம் எனப்படும் (Travancore State) கேரளத்தில், 1950ல் சபரிமலையின் ஆலயம்
முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்த வந்த
காவல்துறை கூட ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டது. உள்ளே ஐயப்பனின் திருமேனி
(முன்பு ஆலயத்தில் பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்தது) மூன்று துண்டுகளாக நொறுக்கப்பட்டுக் கிடந்தது.
காட்டுத்தீயினால் உண்டான விபத்து என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில், காவல்துறை தன் விசாரணையைத் துவங்கியதும் அது விபத்தல்ல என்று
தெளிவாக்கியது. எரிந்து போயிருந்த ஆலயத்தில் கிடைத்த நெய்யில் நனைக்கப்பட்ட
தீப்பந்தங்களும் ஆலயக்கதவுகளில் காணப்பட்ட
கோடாலி அடையாளங்களும் இது விபத்தாக இருக்கமுடியாது என்று
திட்டவட்டமாக உறுதி செய்தது. ஐயப்பன் எனும் தெய்வத்தை நாடி ஆண்டுக்கு ஆண்டு
பக்தர்கூட்டம் அதிகரித்து வருவதைச் சிலர்
விரும்பவில்லை. சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லா
மதத்தவரும் சபரிமலைக்கு வருவதைப் பொறுக்க முடியாமல், சபரிமலை கோவிலையே அழித்துவிட்டால்
அத்துடன் அங்கு வரும் பக்தர் கூட்டமும் ஐயப்ப பக்தியும் அழிந்து விடும் என்று
எண்ணி இந்தச் சதிச்செயல்
அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. அரசியல் தலையீட்டால் அந்த வழக்கு மெல்ல பிசுபிசுத்து
விட்டது.
மனம் தளராத சில சக்திகள் சபரிமலைக் கோவிலின் சான்னித்தியத்தையும் பக்தர் கூட்டத்தின் நம்பிக்கையையும் அழிக்கும் செயல்களில்
ஈடுபட்டே வருகிறார்கள்.
தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்றும் அது ஐயப்பனுடைய இடம் அல்ல
என்று கூறி ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள்.
ஆலயம் ஹிந்து ஆலயமே அல்ல! பௌத்த தெய்வத்தின் ஆலயம்’ என்றொரு கதையைக் கிளப்பி விட்டார்கள். அதற்கு
தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தோம்.
எதிர்ப்பு வலுத்தவுடனே தங்கள் முயற்சியெல்லாம் பிரயோஜனம் இல்லாமல் ஆனவுடன், இப்போது, ஆதிவாசிகளிகளான மலை அரையர்களில் ஒரு பிரிவு
மக்களை ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள் திருப்பி விட்டிருக்கிறார்கள்.
சபாவின் நிறுவனரான பி.கே. சஜீவ் பேட்டி கொடுத்துள்ளார். இதையே
கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு வழிமொழிந்து இருக்கிறார். சபரிமலையைச் சுற்றியுள்ள
மலைக்காட்டின் ஆதிவாசிகள் பலரும் இன்று யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், யார்
அவர்களை இயக்குகிறார்கள் என்பதும் ஊரறிந்த ரகசியம். அதேபோல சபரிமலையின் மற்ற பற்றி
எரியும் பிரச்சினைகள் விஷயங்களில் வாயே திறக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன், “கோயிலின்
சம்பிரதாயம் மலை அரையன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது, அனைவருக்கும் தெரியும். சபரிமலை
ஆலயம் ஹிந்து ஆலயம் அல்ல! அது செக்யுலர் ஆலயம்” என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசி இருப்பது, ‘அப்பன்
குதிருக்குள் இல்லை’ என்பதை இன்னும் தெளிவாக்குகிறது இதன் பின்னரே இந்த விஷயத்தில் என் ‘மஹாசாஸ்தா விஜயம்’ நூலுக்காக ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த தகவல்களைத் தொகுத்திருக்கிறேன்.
விளக்கங்களைச் சொல்கிறேன்.
மூதாதையர்கள்தான் அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வந்தனர். ஆனால், 19ம் நூற்றாண்டில்
பந்தளம் மன்னர்களால் கோவில் அபகரிக்கப்பட்டது;
அரைய பழங்குடியினருக்கு பிறந்த அய்யப்பன் தனது நண்பர்களுடன்
சேர்ந்து போர்க்கலை பயிற்சி பெற்று அந்தப் பகுதியில், ஒரு வலுவான
சமூகத்தை உருவாக்கினார். பாண்டிய மன்னர்களை தாக்கிய சோழர்களை எதிர்க்க
அவர் உதவி புரிந்தார். அவருக்கு நாங்கள் கோவிலைக் கட்டினோம்.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லா வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்லுவோம்;
அய்யப்பன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது பிராமணர்களான தாழமண்
குடும்பத்தைச் (தந்த்ரி குடும்பம்) சேர்ந்த குருமார்களை அழைத்து வந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சடங்குகளை
குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன்பிறகு சபரிமலை கோவிலைச் சுற்றி உள்ள பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களை
அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.
சிலர் கூட – இது உண்மையாக இருக்குமோ என்ற ஐயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
நம் மக்களும், ஏதோ சொல்கிறார்கள் நெருப்பில்லாமல்
புகையாது என்றெல்லாம் பேசத்தலைப்படுகிறார்கள். இன்னும் சில அறிவுஜீவி
எழுத்தாளர்கள், ‘இது தான் உண்மை! வனவாசி
தேவதைக் கோவிலான ஐயப்பன் கோவிலைக் கைப்பற்றி சஸ்ம்கிருதமயமாக்கல் செய்துவிட்டார்கள்’ என்று அடித்தும்
விடுகிறார்கள்.
புராணம்’ முதலான புராணங்களிலேயே
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
ஒருபுறம் இருக்கட்டும்.
தீவிபத்துக்குள்ளாகியும், புனரமைக்கப்பட்டும் மூல விக்ரஹங்கள் மாற்றப்பட்டும்
இருக்கிறது. பொ.யு, 978ம் ஆண்டைச் சேர்ந்த
சபரிமலை கோயிலின் கல்வெட்டு ஒன்று,
அப்படியொரு தீ விபத்துக்கு பின் அக்கோயில் புனரமைக்கப்பட்டு, ஸ்ரீ ப்ரபாகராசாரியார் என்பவரது கைகளால்
விக்கிரகம் புனர்ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. (1900களில் இருந்த ப்ரபாகராசாரியார் இவர் அல்ல!
இவர் வேறு.)
பாக்யவச்ய க்ருபாலய /
ப்ரபாகராசார்ய கர ப்ரதிஷ்டிதோ மாகனய வக்ஷது பூரி மங்கலம்//
978ல் நடந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. மிகச் சமீபகாலம் வரை காணப்பட்ட இக்கல்வெட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு
சில காலம் தேவஸ்வம் போர்டு அலுவலகத்தில் இருந்தது. இப்போது
எங்கே என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.)
10ம் நூற்றாண்டிலிருந்தே அங்கே நம்பூதிரிகளின் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது
என்பது தெளிவு.
சாஸ்தாவின் சன்னிதியில் பூஜை முறை என்பது 10ம்
நூற்றாண்டிலிருந்தே
குழிக்காட்டில்லம், புதுமனை மற்றும் தாழமண் மடத்து தந்த்ரிகளிடம் இருந்தது. மேல்சாந்திகள் மட்டும் அவ்வப்போது நியமிக்கப்பட்டார்கள். ஒரே மேல்சாந்தி பலவருடம் நீடித்ததும் உண்டு. ஒரு
வருடத்திலேயே பலமேல்சாந்திகள் வந்ததும் உண்டு.
மட்டுமே நடைத்திறப்பு. பின்னர்
மண்டலபூஜை வந்தது. பின்னர் வருடம் ஆறுமுறை நடைதிறந்து இருமாதத்து பூஜை ஒன்றாக
நடந்தது. பின்னர் இப்போது காணும் மாதாமாதம் நடை திறக்கும் முறை உருவானது. 1960 வரை
முழுக்க முழுக்க பெரியபாதை மட்டுமே.
தாந்த்ரீக பூஜையே அங்கு நடைபெற்று வந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அமைப்பே உருவானது. 1830ல் திருவிதாங்கூர் அரண்மனையின் சார்பில் ராணி சேதுலக்ஷ்மி பாய்க்காக வேண்டி சபரிமலையில் சதசதயம் பாயஸம் நைவேத்யம் செய்ததாக ஒருகுறிப்பு தெரிவிக்கிறது. அப்போது ராமய்யன் எம்ப்ராந்த்ரி என்ற துளு பிராமணர் பூஜை செய்ததாக ஆவணம் உள்ளது,
சற்று நெடிய கால இடைவெளி உண்டு. மஹிஷி என்ற புராண காலத்து அரக்கியை சாஸ்தா
ஸம்ஹாரம் செய்ததையொட்டி எழுந்ததே சபரிகிரி ஆலயம்.
பெயர்ந்து கேரளம் சென்று பந்தளம் என்ற சிற்றரசு உருவானது. ஏற்கெனவே அங்கே ஆலயம் இருந்ததையும் அதைப் பந்தள அரசர், புனரமைத்துக் கட்டியதையும் அவர்களது குடும்பத்தினர் வருடா வருடம்
வந்து வணங்க வேண்டிய நிர்பந்தத்தையும் இது தெளிவாக உணர்த்துகிறது.
1909ல் ஐதீஹ்யமாலா எழுதிய கொட்டாரத்தில் சங்குண்ணி, அந்நூலில் சபரிமலை சாஸ்தா குறித்தும், பலகாலமாக,
குறிப்பாகப் பாண்டியர்கள்
மதுரையிலிருந்த ஆதிகாலம் முதலே என்று தெளிவாகக் கூறுகிறார். மதுரையில் இருந்த காலத்திலிருந்தே
பாண்டிய ராஜ குடும்பத்தினர் சபரிமலையில் வழிபாடு நடத்தியதையும், பின்னர்
அவர்கள் போர் காரணமாக கேரளம் வந்து இடங்கள் வாங்கி, பூஞ்சார், பந்தளம் என இரண்டு
ராஜ குடும்பங்களை உருவாக்கித் தங்கள் குல
வழக்கப்படி சபரிமலை சாஸ்தாவை வழிபட்டதையும், தாழமண் குடும்பத்தினர் பூஜைமுறை பற்றியும் தெளிவாக
எடுத்துரைக்கிறார்.
பெயர்.
வழக்கச் சொல்லே ‘ஐயப்பன்’. பழனியின் மூலவர் தண்டாயுதபாணி, வழக்குச் சொல்
‘முருகன்’.
சபரிமலை ஆலயப் பகுதியைக் கொள்ளையர் படை ஆக்கிரமித்தது. அப்போது அரசகுமாரிக்கும் ஆலய நம்பூதிரிக்கும் மகனாகத் தோன்றிய ஆர்ய கேரள வர்மன், பந்தள அரசரின் துணையோடும்
பாண்டிய தேசப்படைகளோடும், அம்பலப்புழை ஆலங்காடு படை வீரர்களோடும்
ஆலயத்தைப் புனரமைக்கும்
பணியில் ஈடுபட்டார். ஆர்ய கேரள வர்மனை மக்கள் செல்லமாக ஐயப்பன் என்று
அழைத்தார்கள். இவர்களுக்குக் கோவிலைப் புனர் நிர்மாணம்
செய்ய பலரும் துணை நின்றார்கள். மலையரையர்களும் கட்டாயம் துணை நின்றிருக்கலாம். இறைவனின் பெயரையே ஏற்ற வீரனான ஐயப்பன், காலத்தால் சீரழிந்து போயிருந்த சபரிமலை ஆலயத்தை மீட்டு, மீண்டும் புனரமைத்து அங்கே இறைவனுடன் ஐக்கியமானார்.
ஐயப்பன் பாட்டுக்களைச் சற்று ஆராய்ந்தால், அதில்
வாவரைத் தோழனாக கொண்டு
உதயணன் என்ற கொள்ளையனை வீழ்த்திய ஆர்ய கேரள வர்மன் எனும் ஐயப்பனை பற்றி மட்டுமே
காண முடிகிறது.
கொண்டிருக்கும் ஹரிஹர புத்ரனை பந்தள அரசர் வணங்குவதாக வாக்குறுதி கொடுத்தால், எதிரிகளை
நான் அழித்து ஆலயத்தை மீட்டுத்தருவேன்” என்று ஆர்ய கேரள வர்மன் (ஐயப்பன்) கேட்பதாக ஐயப்பன் பாட்டுகள் கூறும்.
பந்தள ராஜன் வன்படை திரட்டி மலை மீதேறி யிறங்கி நடந்து
சபரிமலை நாதனை வணங்கி வருவேனென்று சத்தியம் செய்தால்
இப்போது வரும் எதிரிகளை கொல்லத்தான் சிரமமே இல்லை”
பந்தள அரசர்களே சபரிமலை ஆலயத்தைப் புனரமைத்தார்கள்
என்பதும் தெளிவாகிறது.
நூற்றாண்டில் ஒருமுறை சபரிமலை பந்தள அரச குடும்பத்தால் புனரமைக்கப்பட்டதற்கும்,
1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில், போர்ச் செலவுகளைச்
சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும், சபரிமலைக் கோவிலையும், திருவிதாங்கூர் அரசரிடம் அடமானம் வைத்ததற்கும் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
கோவில் நிர்வாகம் பந்தள அரசரிடமிருந்து திருவிதாங்கூர் அரசுக்குக் கைமாறி இருக்க, 1900ல் பந்தள அரசரும் தாழமன்
குடும்பத்தினரும் அரையர்களிடமிருந்து கோவிலைப் பறித்தார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது.
என்பது மிகத் தெளிவு. அதே போல அரையர்கள் தெய்வங்களின் பெயரைச் சூட்டிக்கொள்வதும் வழக்கத்தில்
இல்லை.)
கொண்ட பெரியபாதை வழியே வந்து, பெரியபாதை வழியாகவே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப்
பாதை வழியே எறி வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. மேலே உள்ள பாடலில் ஆர்ய கேரள வர்மன் சத்தியம் கேட்பதிலிருந்தே – ரொம்பவும்
சிரமப்பட்டு வரவேண்டிய காரணத்தால் – ஆலயத்துக்கு வருடா வருடம் கட்டாயம் வரவேண்டும் என்று
நிர்பந்திக்கும் நிலை
தெளிவாகிறது.
மேல்சாந்தியாக இருந்து பூஜை செய்ய ஆள்கிடைக்காத காலங்களும் உண்டு. சபரிமலையில் இன்றும் ஒரு சடங்கு உண்டு : மகர
மஹோத்ஸவம் முடியும் அன்று, பதினெட்டாம் படியின் முன்பு, கோவிலின் வருமானம் என்று கூறி மேல்சாந்தி ஒரு பணமுடிப்பையும் கோவில் சாவியையும், பந்தள அரசப் பிரதிநிதியிடம் கொடுக்க, அவரோ அதில் கொஞ்ச பணத்துடன் சாவியையும் மேல்சாந்தியிடம் திரும்பக் கொடுத்து அடுத்த வருடம் வரை பூஜையை சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்வார். (இன்றைக்கு
கோவில் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளும் நிலையில் இது ஒரு வெறும் சடங்காக, பெயரளவில் நடக்கிறது. ஆனாலும் பந்தளம் அரசருக்கு கோவிலின் பந்தத்தை நிலைநாட்டும் உணர்ச்சிமிக்க சடங்கு இது.)
தங்கி இருப்பதும் அந்த அளவுக்குக்
கடினமான ஒன்றாக இருந்தததை உணர முடிகிறது. (என்னுடைய சிறிய பாட்டானார் CV கிருஷ்ணய்யர்
1920ல் கூட அரிவாள் எடுத்துக்கொண்டு பாதைகளை வெட்டிக்கொண்டு வழியை உண்டாக்கித்தான்
சென்றார்கள்.)
காட்டுக்குள் கட்டி வைத்து வழிபடும் கோவிலாக அது இருந்தால், இவ்வளவு சிரமப்பட்டுப் போகும் அந்தக் கோவிலை, தேடிப்பிடித்து பந்தள அரசன் கையகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
குரல் கொடுக்கிறார்கள்.
Travancore and Cochin States என்ற
ஒரு கேரள அரசு சர்வே குறிப்பு – சபரிமலை நிர்வாகத்தை பிராமணர் ஒருவரும் இரண்டு நாயர்களும் அரசாங்கத்தின் சார்பில் கவனித்து வந்ததாக கூறுகிறது.
குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பலரும்
அறிந்த முறையான கோவில். மலைக்காணிகளின் தனிப்பட்ட வழிபாட்டுத்தலம் அல்ல
என்பது தெளிவாகிறது.
மேனன், நாயர், பிள்ளை எனப்படும்
அந்தந்த சமூகத்திடமே இன்றும் இருக்கிறது.
என்று அழைக்கப்படும் தமிழ் பிராமணர்கள் வசமே இருந்தது. (1835 முதல் 1989 வரை யாரெல்லாம் இருந்தார்கள் என்ற ஆவணங்களும் தெளிவாக இருக்கின்றன.)
பகுதிகளில் ஏற்று நடத்தி அவர்களுக்குமே வெளிச்சபாடாக (சாமியாடி) இருந்தது – நாகர்கோவிலைச் சேர்ந்த பார்வதீபுரம் வெங்டீஸ்வர ஐயர் என்பவர்தான். மகரவிளக்கு முடிந்து ஒரு வாரம்வரை இவர் அரையர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தங்கி அவர்களுக்கான பூஜையை முடித்த பின்னரே ஊர் திரும்புவார். இது 1895 முதல்
1970ல் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.
எப்படி என்றால், 1950 தேவஸ்வம் போர்டு சபரிமலையில் பரம்பரையாகக் குறிப்பிட்ட வழிபாடு அல்லது சடங்குகளுக்கான உரிமை உள்ளவர்களை
ஆவணங்களுடன் பதிவு செய்து
கொள்ளும்படி கேட்டுக் கொண்டது.
சந்நதிக்கு எதிரே விரிவைக்கும் உரிமை உண்டு. இன்றும் அவர்களை
மலையில் காணலாம். அடுத்து மணிமண்டப பூஜா உரிமைகள் குரூப் இனத்தவருக்கும் நிலை நாட்டப்பட்டன. குரூப்பு சமூகத்தினர்தான் இன்றைக்கும் குருதி
நடத்தி எழுந்தளிப்பு ஊர்வலம் நடத்துகிறார்கள்.
வெடி வழிபாடு நடத்தும் உரிமை இருந்தது. 1950க்குள் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாகி கடவுள்
நம்பிக்கை இல்லாமல் போனதால் உரிமை தேவையில்லை என்று கருதி எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை. அதே போல மலைமேல் நாயர் என்ற
குடும்பமே கொச்சு கடுத்தனின் பூஜை உரிமை கொண்டவர்கள், அவர்கள்
குறித்த நேரத்துக்குள் கடிதமோ ஆவணமோ கொடுக்காததால்
அவர்கள் உரிமையும் பறிபோனது. தமிழ் பட்டர்களின் வெளிச்சப்பாடு உரிமையும்
பாலா பாஸ்கர ஐயர் காலத்துக்குப் பின் 1989ல் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
இனத்தவர்க்கும் சபரிமலையில் அவரவர்களுக்கான உரிமைகள் உண்டு. அப்படி ராஜ
குடும்பத்தினர் அரையர்களிடமிருந்து அபகரித்திருந்தால் குருதிக்கும் மணிமண்டப பூஜைக்கு
மட்டும் குரூப் இனத்தவர்க்ளை அனுமதிப்பானேன்?
வனவாசிகளின் தெய்வங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால்
கிட்டத்தட்ட 90% நம்பூதிரிகளின் குடும்ப தெய்வம், குல தெய்வம் வேட்டைக்கொருமகன்
என்று அழைக்கப்படும் வனதேவதையான கிராத சாஸ்தாதான்.
சபரிமலையில் சில உரிமைகள் உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை.
இருந்தது. வெட்டவெளியில் உள்ள கல்பீடம். அதற்கு எதிரே
மலையரையர்கள் வழிபடும் வண்ணம் ஒரு ஆட்டின் கல்சிலை இருந்தது. அங்கே வழிபடும் பூஜை உரிமை அவர்களுக்கே.
(1980கள் வரை இருந்த அவற்றை நீக்கியது ஆலய நிர்வாக அரசு அதிகாரிகள்.)
பூஜைகள் செய்யும் உரிமையும், மகரவிளக்குக்கு தீபம் ஏற்றும் உரிமையும் மலை அரையர்களுக்கு உண்டு. இவற்றைப் பறித்தது தேவஸ்வம் போர்டுதான். பந்தள குடும்பம் அல்ல!
அடையாளங்களை இழந்தது பாதிரிகளிடம்தான்.
Travancore’ சாமுவேல் மடீர் என்ற பாதிரியார் எழுதியது. அதில் சபரிமலைப் பகுதியிலுள்ள
மலையரையர்கள் பற்றி விவரமாக எழுதியுள்ளார். 1862ல் H.பேக்கர் என்ற
பாதிரியாரும் The Hill Arrians என்றொரு புத்தகம் எழுதியுள்ளார்.
வணங்கியதாகவும், சுமார் நூறாண்டு முன்பு (அதாவது
1762) தாலநாணி என்ற ஒரு சாமியாடி இருந்ததாகவும் கூறுகிறார். அதாவது அவர்களது கிராமத்தில் உள்ள குடியிருப்பில் ஐயப்பன் இவருக்குள் இறங்கிப் பேசுவதாக நம்பிக்கை. முட்ட முட்ட குடித்திருக்கும் தாலநாணி எருமப்பாறை
மலைப்பகுதியிலிருந்து சபரிமலைக்குத் தரிசனத்துக்காகச் செல்லும் மக்களிடம் தான் வரவில்லை என்று மறுத்துவிட்டு, அவர்களுக்கு
முன் சபரிமலையில் காத்திருப்பார் என்று புத்தகம் பேசுகிறது. அதாவது
1700களிலேய மலையரையர்கள் சபரிமலைக்கு வழிபடத்தான் போனார்கள்.
கோவில் நிர்வாகமோ பூஜையோ செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.
கொல்லப்பட்டு அவரது மகன் அவரது பதவியை அடைந்தார். All the descendants of
Talanani are now Christians. Thanks to Rev. Henry Baker’s work என்று
நூல் தெள்ளத்தெளிவாக உரைக்கிறது.
Arayans Instructing them and forming them into congregation. This good work is
carried out by other missionaries and likely to extend’ என்று புத்தக
ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அப்போதே 2,000 அரையர்களை கிறிஸ்தவர்களாக்கி மேல்காவு எனும் காட்டுப்பகுதியில் சர்ச் கட்டி
இருக்கிறார்கள். மிச்ச சொச்சம் இருந்தவர்களையும் Rev
WJ.ரிச்சர்ட் என்பவர் மதம் மாற்றி இருக்கிறார்.
என்பதோடு, அரையர்களுக்குமே அப்படி யாரும் இல்லாதபடி அவர்கள் வம்சத்தையே மதம்
மாற்றி அவர்களது பூஜை பொருட்களையும் விக்கிரகங்களையும் ரிச்சர்ட் வாங்கிக் கொண்டதாகப் புத்தகத்திலிருந்து தெளிவாகிறது.
விஷயங்கள் இப்படி இருக்க,
சம்பந்தமே இல்லாத, ஆதாரமற்ற விஷயங்களைப் பேசி மக்களை திசை திருப்புவது, பிரம்மாண்டமான சதிச்செயலின்
ஒரு அங்கம்தான். ஏதோ அரைகுறையாக உள்ள விஷயங்களைக் கையில் வைத்துக்கொண்டு சபரிமலை
மீதான தாக்குதலுக்கு இவர்களை ஒரு அஸ்திரம் ஆக்கி இருக்கிறார்கள்.
*****