Posted on Leave a comment

வலம் மே 2019 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் மே 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

சாவர்க்கர் சிறப்பிதழ்

கம்பனில் வேதாந்தம்: ஐந்து மகத்தான உவமைகள் | ஜடாயு

உரிமைக்குரல்: பதிப்புரிமை – சன்மானம் – நாட்டுடைமை | கோ.இ.பச்சையப்பன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 19 | சுப்பு

ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை (1924) – பகுதி 1 : லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

வீர் சாவக்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரை | தமிழில் SG சூர்யா

மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்

அந்தமானில் இருந்து கடிதங்கள் – கடிதம் 1  | வீர சாவர்க்கர், தமிழில்: VV பாலா

தேவையா இந்துத்துவ அறிவியக்கம்? | அரவிந்தன் நீலகண்டன்

மோகினியின் வளையல்கள் (சிறுகதை) | சத்யானந்தன்

Posted on Leave a comment

மோகினியின் வளையல்கள் (சிறுகதை) | சத்யானந்தன்

வக்.. வக். வக்..’
சீசரின் குரைப்பு சுசீலாவை எழுப்பியது. படுக்கப் போனதில் இருந்து, இரவு வெகு நேரம் சுசீலா தூங்கவே இல்லை. அவனுடைய அப்பா ஜூரம் என்று இருமல் சிரப்
குடித்ததால் அவரும் சிவகுமாரைப் பற்றி விசாரிக்காமலேயே தூங்கிவிட்டார். வீட்டுக்கு வரவே இல்லை.
ஒருமுறை மட்டுமே குரைத்து சீசர்
நிறுத்திக்கொண்டது
. சுசீலா
படபடப்புடன் எழுந்தார்
. படுக்கை
அறைக் கதவை மறக்காமல் மூடிவிட்டு
,
வரவேற்பறைக்குள் நுழைந்தார்.
சிவகுமாரின் அறையில் விளக்கெரிந்தது.
சீசர் அவனுக்காகதான் குரைத்திருக்கிறது.
அவன் அறைக் கதவு பாதி மூடியிருந்தது.
எவ்வளவு நேரமாகி வந்திருக்கிறான்?
நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார் சுசீலா. மூன்று மணி.
இத்தனை நேரம் எங்கே போயிருந்தான்?
டேய் சிவா, எங்கேடா
போயிருந்த
? சாப்டியா?’ அவன் அப்பாவை
எழுப்பிவிடக் கூடாது என்பதால் தணிந்த குரலில் கேட்டார்
. பதிலில்லை. அவன் அறைக்கு அருகே வந்தார். அவன் ஒரு பயணப் பெட்டிக்குள் தனது துணி
மணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான்
.
டேய்என்னடா
ஆச்சு உனக்கு
? இப்போ
என்னத்துக்கு துணி எடுத்து வைக்கிறே
?’
ஆபீஸ்
வேலையா அர்ஜெண்டா வெளியூர் போகணும்மா
நீ வேலை
பாக்கறது கூரியர் தானே
. உள்ளூருல
தானே தபாலெல்லாம் தரணும்
.
இல்லமா…. கேரளால ஆள் குறைவா
இருக்காங்காம்
.
கேரளாவா? போயிட்டு வர்ற எத்தனை நாள் ஆவும்?’
ரெண்டு மூணு
மாசம் ஆவும்மா
.
என்னடா
உளர்றே
. அப்பாவுக்கு
அடிக்கடி உடம்பு சுகம் இல்லாமல் போயிடுது
.
நீ என்னடான்னா கேரளாவுக்கே போறேன்ற?’
அவன் பெட்டியை மூடி விட்டாலும் வேறு
எதையோ அறை முழுவதும் தேடினான்
.
என்னடா தேடற?’ இதற்கும்
பதில்லில்லை
. ‘என்னடா
ஆச்சு உனக்கு
?’ அவன்
பின்னாடியே சென்று அவன் தோளைத் தொட்டுத் திருப்பினார்
. அவன் முகம் கலங்கியதுபோல இருந்தது. ‘ஏண்டா முகம் ஒரு
மாதிரி இருக்கு
?’ ஒரு கணம்
அவன் கண்கள் கலங்கின
. சுதாரித்துக்கொண்டு, ‘நான் ஆபீஸுக்கு
எடுத்துப் போற பெரிய பையைத் தேடறேன்

என்று அவனது உடை அலமாரியில், அவன் அறையின் மேஜைக்குக் கீழே, அவனது கட்டிலுக்குக் கீழே எனத் தேடிக்கொண்டே
போனான்
. ‘சாப்டியா?’ மறுபடி பதிலிலில்லை. இப்போது அவன் வரவேற்பறையில் டீபாய்க்குக் கீழே
பையைத் தேடிக் கொண்டிருந்தான்
.
அது சற்றே பெரிய பை. அதை எப்படி
அந்த இடத்தில் தேடுகிறான் என்று அம்மாவுக்கு விளங்கவில்லை
. ‘கருப்புக் கலருதானே
அந்த பேக்
?’ அவன்
பதிலளிக்கவில்லை
. பாலைச் சூடு
செய்து எடுத்து வரப் போனார்
.
தாமதமாக வருகிறவன்தான். ஆனால் தனது
அறையில் உறங்கப் போய் காலையில் மெதுவாகத்தான் எழுந்திருப்பான்
. மிகவும் தாமதமாக வரும் நாட்களில் அவன்
குடித்துவிட்டு வருகிறானா என்னும் சந்தேகமும் சுசீலாவுக்கு உண்டு
.
பாலை எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வரும்போது, அவன் பயணப் பெட்டியுடன் கிளம்பிக்
கொண்டிருந்தான்
. ‘பாலைக்
குடிடா
. ராத்திரிதானே
கேரளா டிரெயினெல்லாம் கிளம்பும்
?’
என்றார். ‘தாம்பரத்துல
காலையில ஐந்து மணிக்கு வண்டி இருக்கும்மா
…’
என்றான். நம்புவதா
வேண்டாமா என்று சுசீலாவுக்குப் புரியவில்லை
.
அப்பா தூங்கும் நேரமாகப் பார்த்துக் கிளம்புகிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. அவருடைய குறுக்கு விசாரணை இல்லாமல் இவன்
தப்பிக்கிறான்
. அவ்வளவு
சூடான பாலை எப்படி விழுங்கினான்
?
பெட்டியுடன் வெளியே காலை எடுத்து வைத்தான். ‘பணம் இருக்காடா?’
ஆபிசுல அட்வான்ஸ் வாங்கி இருக்கேன்.
செல்வம் தனது மான்சன்எனப்படும் ஆண்களுக்கு மட்டுமான வாடகை
விடுதியில் மூன்றாவது மாடியில் மூலை அறையில் இருந்தான்
. சென்னையில் மாலைக்கு மேல்
திருவல்லிக்கேணியில் எப்படியும் கடற்காற்று வீசவே செய்யும்
. சில சமயம் அது பலமாகவே அடிக்கும். செல்வத்தைப் பொருத்த வரை அந்த அறை
மொட்டை மாடிக்குக் கீழே இருந்ததால் எப்போதும் வெயிலின் தாக்கம் இருக்கும்
. பேருந்துகள் செல்லும் சாலை எதுவும்
அருகில் கிடையாது என்பதால் சற்றே வாடகை குறைவு
. அவனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்ததாலேயே அவன்
இதைத் தேர்ந்தெடுத்திருந்தான்
.
திருவல்லிக்கேணியில் பல பள்ளிகளுக்கு அவன் நிறுவனம் பள்ளியின் வளாகப் பாதுகாப்பு
மற்றும் குழந்தைகளுக்கான கற்றுத் தரும் காணொளிகள் உள்ள மென் பொருளை விற்றிருந்தது
. அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவுதான். அருகே மந்தவெளி, மைலாப்பூர் மற்றும் ராயப்பேட்டைப்
பள்ளிகளையும் சேர்த்தால் மொத்தம் நூறு பள்ளிக்குக் குறைவில்லை
. எனவேதான் அவன் அங்கே அறை எடுத்தான்.
விடியற்காலையில் செல்வம் விழித்துக்
கொள்ளத் தேவையில்லை
. பள்ளிகளில்
பதினோரு மணிக்கு மேல்தான் கணிப் பொறி வகுப்புகள் இருக்கும்
. அனேகமாக எதாவது ஒரு பள்ளியில் அவன்
அன்றைய வகுப்புக்கு முன்பு மென்பொருளைச் சரி செய்து தர விரைவான்
. இன்று என்னமோ அவனுக்கு இரவு இரண்டு
மணிக்கே அறையின் வாயிலில் வளையல் குலுங்கும் சத்தம் கேட்பதுபோல இருந்தது
. இப்போது மூன்று மணிக்கு மறுபடி அதே
சத்தம்
.
சிவகுமார் அவசர அவசரமாகக் கிளம்பிப்
போய் விட்டான்
. அவனுடைய
அப்பா எழுந்தால் அவன் எங்கே என்பார்
.
விவரத்தைக் கூறினால் தன்னை ஏன் எழுப்பவில்லை என்று கேட்பார். அலுவலக வேலையாகப் போகிறவன் ஏன் அலுவலகப்
பையை எங்கேயோ வைத்து விட்டுத் தேடினான் என்றே தெரியவில்லை
. சோபாவுக்கும் சுவருக்கும் இடைப்பட்ட
பகுதி இருளாகவே இருக்கும்
. சோபாவை
நகர்த்தி விட்டுப் பார்த்தார்
.
இருட்டோடு இருட்டாக கருப்புப் பை கிடந்தது.
அதான் அவன் கண்ணில் படவில்லை.
பையை இழுத்தார். சற்றே கனமாக
இருந்தது
.
செல்வத்துக்கு ஆண்கள் மட்டும் வசிக்கும்
இந்த மான்ஷனில் வளையல் சத்தம் புதிராக இருந்தது
. மாத வாடகை விடுதிகளில் அது மாதிரியான தொழில் எதுவும்
நடப்பதில்லை
. எனவே அதற்கு வாய்ப்பில்லை. பூனை எதாவது மெல்லிய பாத்திரம் போன்ற
எதையேனும் இழுத்துக் கொண்டு ஓடுகிறதா
?
அவனால் யூகிக்க முடியவில்லை.
ஆனால் தூக்கம் கெட்டுவிட்டது.
அவனுடைய அறைக்குள்ளே குளியலறை உண்டு.
எனவே அவன் அதிகம் வெளியே போக மாட்டான்.
இரவில் தாமதமாக வரும் பக்கத்து அறைக்காரர்கள் நடமாடினாலும் அவன் எதுவும் கண்டு
கொள்ளவே மாட்டான்
. இன்று
யாருமே நடமாடவில்லை
. ஏதோ
மந்திரம் போட்டதுபோல இயல்பைவிட அமைதியாயிருந்தது
. அறையின் கதவைத் திறந்து வெளியே வந்து வராந்தாவில்
இருமருங்கும் பார்த்தான்
. யாருமில்லை. மறுபடி அறைக்குள் நுழையப் போனபோது
மொட்டை மாடிக்குச் செல்லும் மாடிப் படியில் வளையல் சத்தம் கேட்டது
.
சிவகுமாரின் அலுவலகப் பையைத் திறந்தால்
மேலாக அவனது சதுர வடிவ மதிய உணவு டப்பாவே முதலில் கிடைத்தது
. அதை அசைக்கும்போதே அவருக்கு அவன்
சாப்பிடவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது
.
அதை எடுத்துக்கொண்டு போய் அதில் மீதியிருந்த உணவை சமையலறைக் குப்பைக் கூடையில்
கொட்டினார்
. பின்னர்
டப்பாவைப் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் வைத்தார்
.
ஏதோ நினைவு வந்தவராய் வரவேற்பறைக்கு
வந்து கருப்புப் பையைக் கையில் எடுத்துத் திறந்தார்
. அவனின் ஒரு கால்சராயும் மேற் சட்டையும் அதற்குள் இருந்தன. என்ன இது? அவற்றின் மீது திட்டுத் திட்டாக ரத்தம்? குளியலறைக்குப் பையை அப்படியே எடுத்துக்கொண்டு
போனார்
. பைக்குள்
வேறு ஏதோ கீழே சொருகி வைக்கப்பட்டிருந்தது
.
செல்வத்துக்கு ஏதோ நடமாட்டம் இருப்பது
ஊர்ஜிதமாகத் தென்பட்டது
. அவன் மாடிப்படியை
நோக்கி விரைந்தான்
. படியின்
மீது மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தது
.
அவன் படிகள் மீது ஏறி மொட்டை மாடிக்கு அருகில் இருக்கும் சதுரமான நிலையிடத்தை
அடைந்தான்
. மொட்டை
மாடிக்கான கதவு திறந்தே இருந்தது
.
அதனுள் நுழைந்தான். மொட்டை
மாடியில் விளக்கு எதுவுமில்லை
.
தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சம் படர்ந்திருந்தது. இப்போது கீழே வளையல் சத்தம் கேட்பதுபோல
இருந்தது
. அவனுக்கு
முகமெல்லாம் வியர்த்திருந்தது
.
சுசீலாவுக்கு அந்த விடியற்காலை
நேரத்திலும் குளித்ததுபோல உடலெங்கும் வியர்த்து விட்டது
. அந்தப் பையின் அடிப்பக்கத்தில் ஒரு
பெண்ணின் சூடிதாரின் இரு பகுதிகளுமிருந்தன
.
ரோஜா நிறப் பின்னணியில் மஞ்சள் பூவேலை செய்யப்பட்ட சூடிதார் உடையிலும்
திட்டுத் திட்டாக ரத்தம் இருந்தது
.
செல்வம் விரைந்து கீழே வந்து அதே
வேகத்தில் இன்னும் சில படிக்கட்டுகள் இறங்கி இரண்டாம் தளத்துக்குப் போனான்
. ஒரு அறையில் மட்டுமே விளக்கு எரிந்து
கொண்டிருந்தது
. விடுதியே
அமைதியில் ஆழ்ந்திருப்பதுபோல இருந்தது
.
மீண்டும் அறைக்குள் வந்தான்.
கொஞ்சம் தண்ணீர் குடித்தான்.
பின்னர் அறையின் கதவைத் தாளிட்டான்.
படுத்துக்கொண்டான். ஆனால் உறக்கம் வரவில்லை. சற்று நேரத்தில் அவன் காதருகே வளையல் ஓசை. எழுந்தான். வெள்ளைச் சேலை ரவிக்கை, வெள்ளை நிறக் கண்ணாடி வளையல்கள், அவன் படுக்கைக்கு அருகே நிறைய மல்லிகைப்
பூவுடன் ஓர் இளம் பெண்
. திடீரென ஓர்
ஆளைப் பார்த்த படபடப்பில் எழுந்து நின்றான்
.
அவள் வாளிப்பான உடற்கட்டுடன் அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்குப் பாதங்கள் இல்லை. பாதங்கள் பூமியில் பதியவில்லை. ‘காலுக்கு மேலே நான்
அழகா இல்லையா
?’ என்றாள். கிணற்றுக்கு உள்ளே இருந்து பேசுவதுபோல
ஓர் ஆழ்ந்த எதிரொலி மிகுந்த சத்தமாக இருந்தது
. அறைக்கு வெளியே யாராவது பெண் குரலைக் கேட்டால் அவ்வளவுதான்.
சுசீலா முதலில் கூடத்தில் வந்து
அமர்ந்து மின் விசிறியைச் சுழல விட்டார்
.
என்ன செய்திருப்பான் சிவகுமார்?
எதை மறைக்கிறான்? உண்மையிலேயே
எங்கே போகிறான்
?
இது ஆண்கள்
இருக்கும் விடுதி
,என்றான்
செல்வம் சற்றே நடுங்கும் குரலில்
.
ஏன் ஆம்பளையோட இருக்கக் கூடாத பொண்ணா நானு?’ என்றபடி அவள் முன்னே வந்தாள். அவன் பின்னே பின்னே போய்ச் சுவரில் முதுகை இடித்து நின்றான். அவள் அவனை விட ஓரிரு அங்குலம் மட்டுமே
உயரமானவள்
. அவன்
முகத்துக்கு இருபக்கமும் சுவர் மீது தனது இரு கைகளையும் வைத்தாள்
. பின்னர் அவன் கண்களை ஊடுருவி நோக்கினாள். அவளின் கட்டான மார்பகங்கள் அவன்
மார்பின் மீது படர்ந்தன
. அவள்
கால்கள் அவன் கால்களைச் சுற்றின
.
அவள் கண்களின் ஒரு பாவையில் பாஞ்சாலி,
அருந்ததி, வாசுகி, அகலிகை, மேனகை,
சகுந்தலை, கண்ணகி, சூர்ப்பனகை, ஊர்மிளா, யசோதரா எனப் பலக் காவிய மாந்தர்கள் மாறிக் காட்சி
கொடுத்தனர்
. அவர்களை
அவன் பார்த்ததே இல்லை
. ஆனால் இவள்
பாவை வழி பார்க்கும்போது அப்படியே பெயர்கள் நினைவுக்கு வருகின்றன
. மற்றொரு பாவையில் சமகால சினிமா
நடிகைகளின் உருவம் ஆடையின்றி நிர்வாணமாக மாறி மாறி வந்து கொண்டிருந்தது
. இந்தக் காட்சித் திகைப்பை அவன் தாண்டும்
முன் அவள் உதடுகள் அவன் உதடுகளை நெருங்கின
.
அவளின் மேலிருந்து காட்டமான மருதாணி வாசனை வீசியது.
சுசீலாவுக்கு அந்தத் துணிகளை என்ன
செய்வது என்றே புரியவில்லை
. துவைக்கப்
போட்டாலும் கறைகள் மறைய வாய்ப்பில்லை
.
காயும் துணிகள் வேலைக்காரி மற்றும் அண்டை வீட்டார் கண்களில் வம்பாக மாறும். துவைக்க முடியா விட்டால் எப்படி இவற்றை
சரி செய்வது
. எரிப்பது
ஒன்றே வழி
? எப்படி
எரிப்பது
?
அவன் உதடுகளை அவள் கவ்வினாள். பின்னர் நாக்கால் அவன் நாக்கைத்
துழாவினாள்
. அவளது
கவ்வல் அவனுக்கு அச்சமூட்டும் அழுத்தத்துடன் இருந்தது
. அவளது கால்கள் அவனது கால்களைச் சுற்றி வளைக்க
அவள் தன் கைகளை இறக்கி அவனை அணைத்துக் கொண்டாள்
. திடீரென அவனை விலக்கி,ஏண்டா
உனக்கு என்னைப் பிடிக்கலே
?’ என்றாள். ‘நான் ஒண்ணும்
செய்யலியே
?’ ‘அதாண்டா
நானும் கேக்கறேன்
. செய்ய
முடியாத அளவு என்ன குறை எனக்கு
?’
உன் கண்ணுல பாத்த விஷயமெல்லாம்.’
எதையாவது சொல்லித் தப்பிக்க நினைக்காதே.
உனக்கு என்னைப் பொம்பளையின்னு தொணலையின்னுதானே அர்த்தம். டேய், திருவல்லிக்கேணி இங்கிலீஷ் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ரூம்ல நீ
எந்த ரெண்டு பேரைப் பார்த்தே

அங்கே என்ன நடந்துதுனு எனக்குத் தெரியும். அதெயெல்லாம் முழுங்கின உனக்கு என்னக் கண்டா இளப்பமா
இருக்காடா
? விடியற
நேரமாவுது
. நாளை
மறுநாள் ராத்திரி வருவேன்
. ஆம்பிளையா
நீ நடக்கலே
. உயிரை
எடுத்து எங்கூடவே கூட்டிக்கிட்டிப் போயிருவேன்
.
அவனைக் கட்டில் மீது தள்ளி விட்டு மறைந்தாள்.
இனி அந்த அறையிலிருப்பதில் அர்த்தமில்லை. காலை எழுந்ததில் இருந்து எப்போது பத்து
மணி ஆகும் என்று பரப்போடு இருந்தான் செல்வம்
.
பத்தரை மணிக்குத் தான் மேன்ஷன் அலுவலகம் திறந்தது. அறையைக் காலி செய்வதாய்க் கூறி விட்டு, மேலே வந்தான். பெட்டி படுக்கையைத் தயார் செய்தான். மதியம் இரண்டு மணி போல வாட்ச் மேன்
அறைக் கதவைத் தட்டினார்.
திறந்தார். ‘சார் இவர்
பேரு சிவகுமார்
. உங்க
ரூமுக்கு வர்றாரு
என்று
கூறிப் போய் விட்டார்
. வெடவெடவென
இருபத்தைந்து வயதிருக்கும் இளைஞன்
.
உள்ளே வாங்கஎன்றான்
செல்வம்
.
சார் ஐ ஆம்
சிவகுமார்
. கூரியர்
கம்பெனிலே வேலை பாக்கறேன்
என்றான்
அவன்
. ‘நான் ஒரு
பைதான் கொண்டு வந்திருக்கேன்.
இன்னும் ஒன்
அவர்லே நான் கிளம்பிடுவேன்
. நீங்க
இப்பவே இங்கே தங்கிக்கலாம்
.
தேங்க்ஸ்
சார்
என்றவன், கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்து,உங்க ஷூஸ் இருக்குஎன்றான். தனது பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு பிளாஸ்டிக்
பையை எடுத்து அதற்குள் இந்த காலணிகளை வைத்தான் செல்வம்
.
சுசீலா கணவரிடம் அவன் தனது அறையில்
உறங்குகிறான் என்றே கூறி இருந்தார்
.
மாலையில் கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவனது பையில் இருந்த ரத்தம் தோய்ந்த
உடைகள் பற்றி எதுவும் கூறவில்லை
.
பிற அனைத்தையும் அப்படியே கூறினார்.
உடனே அவர் சிவகுமாரின் கைபேசியில் அவனை அழைத்தார். உடனே மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அது அவனது கைபேசி ஒலிக்கும் சத்தம்தான். அவனது அறைக்குள் இருந்து வந்தது சத்தம். அவர் அங்கே போனார். சிவகுமாரின் கைபேசி அங்கேதான் இருந்தது.
ஒரு கையில் செல்வத்தின் பெட்டி மறுகையில்
அவனது மடிக்கணினிப் பை இரண்டையும் எடுத்துக் கொண்டு தரைத்தளம் வரை வந்தான்
சிவகுமார்
. மற்றொரு
பெட்டி மற்றும் படுக்கை இவற்றை செல்வம் எடுத்துக் கொண்டு இறங்கினான்
.
ரொம்ப நன்றி
சிவகுமார்
என்றவன்,ஒரு நிமிஷம் ரூமை சரி பார்த்து விட்டு
வர்றேன்
என மாடிக்கு
விரைந்தான்
. பல பழைய
நினைவுகளுடன் அறையைச் சுற்றி நோட்டம் விட்டவன் கண்ணில் பல வெள்ளை வளையல் துண்டுகள்
கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே தென்பட்டன
.
அவற்றை எடுத்து முகர்ந்து பார்த்தான்.
மருதாணி வாசம். பின்னர்
கால்சராய்ப் பைக்குள் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்
.

Posted on Leave a comment

தேவையா இந்துத்துவ அறிவியக்கம்? | அரவிந்தன் நீலகண்டன்


அண்மையில் இணைய இதழான சொல்வனத்தில் எழுத்தாளர்
அம்பை சிறப்பிதழில் அவரது வாழ்க்கையில் நடந்த இரு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.
இரண்டுமே அவர் என்னிடம் உரையாடல்களின்போது சொன்னவை. ஒன்று: அவர் டெல்லியில் உள்ள கல்லூரி
விரிவுரையாளர் சேவைக்கான நேர்காணலுக்காகச் சென்றிருக்கிறார். அதில் அவரிடம் விடுதலைப்
போராட்ட வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடச் சொல்கிறார்கள். அன்று அம்பைக்கு ‘அரசியல்
சரித்தன்மை’ தெரியாது. அவர் சொல்லும் பெயர்களில் ஒன்று சாவர்க்கர். அவருக்கு அந்த வேலை
கிடைக்கவில்லை. அவர் அதை இந்த பதிலுடன் இணைத்துப் பார்க்கவில்லை. ஏதோ வேலை கிடைக்கவில்லை,
அவ்வளவுதான். ஆனால் பின்னாட்களில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ‘ஏன் சாவர்க்கரின்
பெயரைச் சொன்னீர்கள்? நீங்கள் வித்யார்த்தி பரிஷத்தா என்கிற ஐயம் அன்றைக்கு உங்கள்
மீது ஏற்பட்டது.’ சாவர்க்கர் பெயரை சொன்னது அவரை நேர்காணல் செய்த முக்கிய இடதுசாரி
பேராசிரியர்களுக்கு உடனடி ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னாட்களில் அவர் ஜவஹர்லால் நேரு பல்கலை
மாணவி என்பதும் அவர் இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் ஏதுமற்றவர் என்பதைத் தெள்ளத்தெளிவாக
தெரிந்த பின்னருமே இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பு (ICHR, Indian Council for
Historical Research) இல் வேலை கிடைக்கிறது. அங்கு ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது
குறித்த முடிவுகள் எடுக்கப்படும் கூட்டங்களில் அம்பை அமரக்கூடிய வாய்ப்பு அவருக்குக்
கிடைக்கிறது. அவரால் முடிவுகள் எடுக்க முடியாது. ஆனால் அந்தக் கூட்டங்களுக்கு அவர்
சாட்சி. அங்கு நடந்த விஷயங்களை அவர் தார்மீகமாக வெளியில் சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக
அதன் போக்கை அவரால் சொல்ல முடியும். அதற்கு தார்மீகத் தடை எதுவும் இல்லை. அவர் அதை
ஒரே வரியில் சொல்கிறார்: ‘மார்க்சியப் பார்வை இல்லாத ஆராய்ச்சிகள் பெருமளவில் ஏற்கப்படுவதில்லை.
அங்கு தெள்ளத்தெளிவாக மார்க்சிய சார்பு இருந்தது.’
இவை இரண்டுமே அம்பை முக்கியமானவை எனக் கருதவில்லை.
போகிற போக்கில் உரையாடலில் சொல்லிச் சென்ற விஷயம். ஆனால் இவற்றைத் தரவுகளாகப் பயன்படுத்தலாமா
எனக் கேட்டபோது சரி எனச் சொன்னார்.
ICHR என்பது இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்காக
இந்தியக் குடிமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அமைப்பு. 1970களிலேயே அல்லது அதற்கும்
முன்பாகவே இவை இடதுசாரிகளின் ஆதிக்கத்துக்குள் வந்துவிட்டிருந்தன. நேருவிய மார்க்சியர்கள்,
மார்க்சிய இஸ்லாமியர்கள் (அல்லது இஸ்லாமிய மார்க்ஸியர்கள்) என இருவகையான அறிஞர்கள்
இருந்தனர். இவர்களே தலைநகரிலிருந்து எப்படிப்பட்ட விதத்தில் இந்திய வரலாறு எழுதப்பட
வேண்டுமென்று முடிவு செய்தார்கள். எப்படிப்பட்ட விதத்தில் இந்திய வரலாறு எழுதப்படுவதற்கு
மட்டுமே இந்திய அரசின் நிதி உதவியும், இந்திய அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படும் என்பதை
முடிவு செய்தார்கள். சாவர்க்கரின் பெயரைச் சொல்வது கூட உங்களுக்கு அரசாங்க வேலைகளை
இழக்க செய்யும் என்கிறபடியிலான மிகக் கடுமையான ஆனால் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகள்
உருவாக்கப்பட்டிருந்தன. 1990கள் வரை அரசாங்க வேலை என்பது மட்டுமே நிரந்தரமான வருவாய்க்கான
வழி என இருந்த நிலையில் இந்த கண்ணுக்குத் தெரியாத நிர்ப்பந்தங்கள் எத்தனை வலிமையானவை
எனச் சொல்லத் தேவையில்லை. வேலை தேடும் இளைஞனுக்கு ஏறக்குறைய நெற்றிப்பொட்டில் வேலை
வாய்ப்புத் துப்பாக்கியை வைத்து ‘இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்கிறாயா, இல்லாவிட்டால்
வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாகிறாயா’ எனக் கேட்பதுதான் இது.
இது பாசிசம் இல்லை என்றால் வேறெது பாசிசம்?
இன்னும் சொன்னால் இது பாசிசத்தின் அடுத்த நிலை. பெனிட்டோ முஸோலினி நேருவியர்களைப் பார்த்து
‘அட என் செல்லங்களா’ எனச் சொல்லியிருப்பார். ‘நானாவது இந்திரா போல தெரு ரவுடித்தனமான
அடக்குமுறைகளை மட்டும்தான் செயல்படுத்தினேன். நேருவிய பாசிஸ்ட்களான நீங்களோ அடுத்த
தளத்துக்கு போய் அறிவு நிலை பாசிசத்தை அல்லவா அமைப்பு ரீதியாகச் செயல்படுத்திவிட்டீர்கள்’
என உச்சி மோந்து மெச்சியிருப்பார் நம்மூர் ரொமிலா தாப்பர்களையும் இர்பான் ஹபீப்களையும்.
இந்த நிலையில்தான் இன்றைக்கு கேள்வி எழுகிறது.
எங்கே இந்துத்துவ அறிவியக்கம்? ‘இந்த இந்துத்துவர்களுக்கு சிந்தனையாளர்களைக் கண்டாலே
ஆகாது. ஏனென்றால் இவர்களுக்கு சிந்தனை சுதந்திரம் பிடிக்காது. இவர்கள் ஒரு ரொமிலா தாப்பரை
உருவாக்கியிருக்கிறார்களா? இவர்களால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு அமைப்பை
உருவாக்க முடியுமா? முடியாது. இவர்களுக்குச் சிந்திக்க தெரியாது. கூச்சல் போடத்தான்
தெரியும். பாசிஸ்ட்கள். வெத்தலையோ பான்பராக்கோ குதப்பிக் கொண்டு கடப்பாறை எடுத்துக்கொண்டு
ஜெய்ஸ்ரீ ராம் என கோஷம் போட மட்டுமே தெரிந்தவர்கள். நாங்கள்? நாங்கள் அறிவு ஜீவிகள்.
இந்திய பண்பாட்டை ஆக்ஸ்போர்ட்டிலும் காம்ப்ரிட்ஜிலும் சென்று கற்றவர்கள்.’ ஆம், ரொமிலா
தாப்பர் முதல் சகரிகா கோஷ் வரை இந்திய வரலாற்றைக் கற்க இங்கிலாந்து சென்ற அறிஞர் பெருமக்கள்தான்.
எனவே ‘இங்குள்ள பண்பாட்டு மையம் தொடங்கி விளிம்பு நிலை மக்கள் வரை குளிர் பதனூட்டப்பட்ட
அறைகளிலிருந்து முற்போக்கு பத்வா அளிக்க நாங்களே தகுதியானவர்கள். சமானிய பாமரரான நீங்கள்
அதையே உங்கள் வரலாறாகவும் சமுதாய யதார்த்தமாகவும் ஏற்க வேண்டும்.’
இடதுசாரிகள் போல மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி
அமைப்பு அதிகாரங்களைக் கைப்பற்றி உருவாக்கப்பட்ட இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று
இல்லைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்துத்துவ உயிரியக்கம் என்று ஒன்று என்றென்றுமாக
இருக்கிறது. அதில் ஒரு பாகமாக வாழ்கிறது அறிவியக்கம். பாரத மரபில் உயிருக்கும் அறிவுக்கும்
பிரிவு எதுவும் இல்லை. தொல்காப்பிய சூத்திரம் அறிவையே, அறிதலையே உயிரினங்களின் அடிப்படையாக்கி
அளித்தது. ப்ரபோத விதிதம் – எவ்வித அறிதலும் பிரம்மத்தின் வெளிப்பாடு, அதுவே உயிரியக்கம்
என்பது உபநிடதம்.
இதன் தொடர்ச்சியே மாபெரும் அத்வைத ஞானியான
வித்யாரண்யரிடமிருந்து விஜயநகரம் உருவாவது. குரு கோவிந்த சிம்ஹனைப் போல சரித்திர ஞானமும்
சாஸ்திர ஞானமும் கொண்டவரிடமிருந்தே காலசா உருவானது. ராமகிருஷ்ண-விவேகானந்த மரபிலிருந்து
சூல்கொண்ட செயல்முறை வேதாந்தம் டாக்டர் ஹெட்கேவார்-குருஜி கோல்வல்கரால் ராஷ்ட்ரீய ஸ்வயம்
சேவக சங்கமாயிற்று. சங்க கங்கையின் ஞான பிரவாகத்தில் இந்த தேசத்தின் அறிவியக்கம் எப்போதும்
போல் இந்த தேசத்தின் உயிரியக்கத்தின் பிரிக்கமுடியாத கூறாகவே உள்ளது.
ஒரு சிறிய சோதனையைச் செய்யுங்கள். உங்களுக்குக்
கிடைக்கும் இன்றைய இலக்கிய அறிவுஜீவி இதழ்களை, கட்டுரைகளை, ஆசிரியர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவர்களின் அனைத்து இந்தியத்தன்மை கொண்ட மேல்பூச்சுகளுக்குள்ளும் நீங்கள் அவர்களின்
மேற்கத்திய பிச்சைப்பேறுகளைக் கண்டு கொள்ளலாம்.
ஒரு எடுத்துக்காட்டு. இங்கு ‘தலித்’துகளின்
வாழ்க்கையைத் தாது வருடப் பஞ்சத்தின்போது சித்திரப்படுத்தும் ஒரு நாவலை எடுத்துக் கொள்வோம்.
மிகக் கவனமாக அதில் மிஷினரிகள் வேறு, காலனிய அதிகாரிகள் வேறு என்கிற வேறுபாடு சித்தரிக்கப்பட்டிருக்கும்.
கிறிஸ்தவ இறையியல் மேற்கத்திய நாடுகளில் ஏற்றெடுத்துள்ள ஒரு தூய்மைப்படுத்தல் இது.
என்னதான் மிஷினரி சுவர்களுக்குள் சுதேச அமெரிக்கக் குடிகளும் ஆப்பிரிக்க இன மக்களும்
கொடுமைகளை அனுபவித்திருந்தாலும் அவற்றை எல்லாம் இன்றைக்கு மிக அமைதியாக ஆனால் நிச்சயமாக
மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் மிஷனரி வரலாற்றெழுத்தர்கள். மிஷனரிகள் வேறு காலனியாதிக்கம்
வேறு. இதையே நீங்கள் நாவலில் காண முடியும். என்னதான் மிஷினரிகள் பஞ்சங்கள் மூலம் இந்துக்கள்
தன் மதிப்பு இழந்து மிஷினரி பிரச்சாரங்களுக்குச் செவி மடுத்தார்கள் எனப் பஞ்சங்களை
மனிதத்தன்மை கொஞ்சமும் இன்றிப் புகழ்ந்தாலும் நம்மூர் நாவலில் ஒரு தூய கிறிஸ்தவன் காலனியத்துக்கு
அப்பாலாக பஞ்சங்களில் மடியும் நம்மூர் மக்களுக்காக இரங்குவான். நம்மூரிலோ பஞ்சங்களில்
மடிபவர்கள் தலித்துகளாக மட்டுமே இருக்க நம்மூர் ‘மேல்சாதியினரோ’ பிரிட்டிஷ் அதிகார
வர்க்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்வர். இது உண்மையில் மேற்கத்திய நியோ காலனியம் பிச்சை
போட்ட ஒரு பார்வை. சரித்திரத் தரவுகள் சொல்வது வேறு. எல்லா சாதியினரும் பஞ்சத்தால்
கஷ்டப்பட்டார்கள். தக்காண மராட்டியத்தின் வசுதேவ பல்வந்த் பட்கே முதல் தஞ்சை மாவட்ட
சைவ ஆதீனங்கள் வரை பஞ்சத்தை எதிர்த்து தங்களாலான சேவைகளைச் செய்தார்கள். கிறிஸ்துவின்
ஊழியர்களுக்கோ இவை ஒன்றும் அவ்வளவு உவப்பானதாக அமையவில்லை.
ஆனால் நாவல் மேற்கத்தியப் பண்பாட்டின் மானுட
நேசத்தையும் கிறிஸ்தவத்தின் எளியோர் மீதான அன்பையும் இந்தியர்களின் மானுடமற்ற சாதியக்
கொடுமையுடன் வேறுபடுத்திக் காட்டுவதாக அமையும். அதாவது 2010களில் தமிழில் வரும் படைப்புக்கும்
19ம் நூற்றாண்டு மிஷினரி பிரச்சார மூன்றாந்தர இலக்கியத்துக்கும் வேறுபாடு நகாசு வேலைகளில்
இருக்கிறதே அன்றி அதன் உள்ளீட்டில் இல்லை.
இப்படி பொதுமைப்படுத்துவதையும் பாரதத்தை எதிர்மறையாக
சித்தரிப்பதையும் கடுமையாக எதிர்த்தவர்களில் காந்தியும் ஒருவர். அவரது முன்னோடி விவேகானந்தர்.
காதரீன் மேயோவை இலை நடுவில் வைத்துவிட்டு காந்தியை உறுகாய் போல் வைத்து அதே காந்தியை
காரியமானது கறிவேப்பிலை என ஒதுக்கும் ஒரு சிந்தனை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவர்கள்தான் கேட்கிறார்கள், ‘எங்கே இந்துத்துவ சிந்தனை மரபு?’
பாரத சிந்தனை மரபென்பது இன்றைக்கு இந்துத்துவ
இயக்கத்தில் மட்டுமே நீரோட்டமாக இருந்து வருகிறது. தீனதயாள் உபாத்யாயா, தத்தோ பந்த்
தெங்கடி, தரம்பால், ஜெயின் சகோதரிகள் (மீனாட்சி & சந்தியா), சீதாராம் கோயல், ராம்
ஸ்வரூப் என நீளும் இந்த சிந்தனை மரபு மக்கள் வரிப்பணத்தில், அரசமைப்பு அதிகாரத்தில்
உருவானதல்ல. ஆனால் அவற்றின் தெளிவும் ஆழமும் சுய வேர்ப் பிடிப்பும் கொண்ட சிந்தனைக்கு
சமானமான ஒரு பத்தி கூட இத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சிகளிலிருந்து
எழுந்ததில்லை. தீன தயாள் உபாத்யாயா ஆராய்ச்சி மையத்தின் தலைமையிலிருந்த காலம் சென்ற
நானாஜி தேஷ்முக் சித்ரகூடத்தின் கிராமங்களை வழக்குகளில்லாத கிராமங்களாக மாற்றினார்.
மிகச் சிறந்த சிந்தனையாளர்தான். ஆனால் அவரது சிந்தனை என்பது வெளிப்பட்டதென்னவோ அவரின்
செயல்பாடுகளில். அவரது வாழ்க்கையே அவரது சிந்தனை.

நானாஜி
தேஷ்முக்
சில ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரில் ஜீவா
என்கிற சூழலியல் ‘போராளி’ ஒருவரின் உரையைக் கேட்டேன். இந்த ஜீவா என்பவர் தமிழ்நாட்டின்
முதன்மைச் சூழலியல் சிந்தனையாளரென எழுத்தாளர் அதிகார வர்க்கத்தால் முன்னிறுத்தப்படுபவர்.
‘விதையில்லாத திராட்சையை தின்னுற நீ? அப்ப உனக்கு விதையில்லாமல் போயிடும். உனக்கு ஆண்மை
போயிடும்’ என்று ஆவேச ஆட்டம் ஆடுவதுதான் அவரது ‘உரை’யாக இருந்தது. இப்படிப்பட்டவர்கள்
சிந்தனைச் சிற்பிகள். ஆனால் இன்றைய தேதியில் மிக முக்கியமான சூழலியல் மாற்றங்களை தமிழ்நாட்டில்
கொண்டு வந்திருக்கும் அமைப்பு விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம்
என்கிற நார்டெப். இவர்கள் மிகக் குறைவான அரசு ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆற்றியிருக்கும்
பணிகள் அபரிமிதமானவை. ஆனால் என்ன, இவர்களால் இப்படி ஜீவா போல முட்டாள்தனமாக ‘சூழலியல்
சீமான் தனமாக’ பேச முடியாது. இவர்களின் செயல்பாடுகளே இவர்களின் அறிவியக்கம். புளியங்குடி
அந்தோனி சாமியின் புழக்கடை பயோகேஸ் கலன் அதை சொல்லும்.
ராம் ஸ்வரூப் 1970களில் 80களில் எழுதிய நூல்களைப்
படியுங்கள். இன்றைக்கு மேற்கத்திய நாடுகளில் நடக்கும் மத அனுபவங்களின் நியூரோ அடிப்படைகள்
குறித்த ஆராய்ச்சிக்கான சட்டகத்தை நீங்கள் அவரிடம் காணலாம். ஏன் இந்தியாவில் இந்த ஆராய்ச்சிகள்
நடக்கவில்லை? பதஞ்சலியும் திருமூலரும் பிறந்த மண்ணில் சமய அனுபவங்களின் நரம்பியல் அடிப்படைகள்
குறித்து ஏன் ஒரு ஆராய்ச்சியும் இல்லை? ஏனென்றால் அது நேருவிய மார்க்சிய பத்வாக்களால்
அறிவுலகத்தில் விலக்கப்பட்டதாயிருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், பாரதத்தின் அறிவியல்-அறிவியக்க
முன்னேற்றத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பாணி அறிவு ஜீவிகள் மிகப்பெரும் தடைக்கற்கள்.
அவர்கள் அறிவுலகில் கோலோச்சுவதற்காக இந்திய தேசமே கட்டுண்டு கிடக்கச் செய்தார்கள்.
இவர்களின் நேருவிய பாசிசத்தின் பளிங்கு மாளிகைகளுக்குக் கீழே பாதாளச் சிறைகளில் பாரதிய
சிந்தனை மரபைச் சிறைப்படுத்த யத்தனித்தார்கள். அதைத்தான் உடைத்திருக்கிறது இந்துத்துவம்.
இந்துத்துவம் இவர்களின் அதிகார மாளிகைகளை அச்சுறுத்துகிறது. பரிபூரண சிந்தனைச் சுதந்திரத்தின்
முதல் கீற்றை நேருவிய-மார்க்சிய இருளில் ஆழ்த்தப்பட்ட தேசத்தின் ஆன்மாவுக்கு அளிக்கிறது.
இருளிலேயே இருந்து பழகி சுகித்த சாக்கடைவாசிகளுக்கு
அந்த ஒளியின் துளி நஞ்செனக் கசப்பதில் ஆச்சரியமென்ன?

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – கடிதம் 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலா

கடிதம் 1
ஓ தியாகிகளே
சுதந்திரதிற்கான
போராட்டம் துவங்கியது முதல்
வழிவழியாக
நாம் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்
.
இதில்
தோல்விகள் நிரந்தரம் இல்லை, வெற்றி நிச்சயம்.
இன்று மே 10ம்
தேதி. இந்தநாளில்தான்
1857ம் ஆண்டு தியாகிகளால் முதல்
சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டது. நம்முடைய அடிமைத்தளையை அறுத்தெறிய நம்
தாய்நாடு வாளேந்திய நாள். விடுதலைக்கான முதல் அடியை நம் தாய்நாடு கொடுத்த நாள்.
பரங்கியரைக் கொல்வோம் என்ற போர்முழக்கம் ஆயிரக்கணக்கான போராளிகளால் எழுப்பப்பட்ட
நாள். மீரட்டில் இருந்த சிப்பாய்கள் டெல்லி நோக்கி தங்கள் புரட்சிப் பயணத்தை
ஆரம்பித்த நாள். தங்கள் புரட்சி போராட்டத்திற்குக் கொள்கைகளை வகுத்து ஒரு
தலைவரையும், ஒரு கொடியையும் உருவாக்கிய நாள். அந்தப் புரட்சிப் போராட்டத்தை ஒரு
தேசியப் போராட்டமாகவும் ஒரு சமயப் போராட்டமாகவும் மாற்றிய நாள்.
தியாகிகளே, உங்களுக்கு பெருமை
உண்டாகட்டும். நம் நாட்டின் மதங்கள் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டபோது நம் இனத்தின்
பெருமையைக் காக்க நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினீர்கள். அதுவரை அணிந்திருந்த
தங்களின் முகமூடிகளை நீக்கி போலிகள் நம் நாட்டை அடிமை சங்கிலிக்குள் பிணைத்தனர்.
இவர்களை நம்பி நம் தாய்நாடு ஏமாந்தபோது
1857ம் வருட போராட்டத்தின் தியாகிகளே,
நீங்கள் நம் தாய்த்திருநாட்டை எழுச்சி அடையச் செய்து நம் தாய்நாட்டின் பெருமையைக்
காக்க ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பி, போர்க்களம்
புகுந்தீர்கள். தெய்வீகமும் தேசியமும் மட்டுமே உங்களது தாரக மந்திரமாக இருந்தது.
உங்களது போராட்டம் மிகச் சரியான ஒன்றுதான். நீங்கள் போராடாமல் இருந்திருந்தால்
ரத்தம் சிந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காதுதான். ஆனால் அடிமைத்தளையில் இருப்பது
அதைக்காட்டிலும் பெருத்த அவமானத்தைத் தரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அடிமைத்தளையை
எதிர்த்துப் போராடாத நம் நாட்டிற்கு விடுதலை தேவை இல்லை, நாம் அடிமையாய்
இருக்கத்தான் லாயக்கு என்று உலகம் நம்மைப் பார்த்து கூறியிருக்கும்.
1857-இலும் கூட நம் பெருமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள நாம் ஒன்றும்
செய்யவில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள்.
அதனால் இந்த நாளை உங்கள் நினைவுக்கு
காணிக்கையாக்குகின்றோம். இந்த நாளில்தான் நீங்கள் ஒரு புதிய கொடியை உயர்த்திப்
பறக்க விட்டீர்கள், ஒரு புதிய பாதையை வகுத்தீர்கள், அடைய வேண்டிய ஒரு புதிய இலக்கை
வரைந்தீர்கள், நம் தேசத்திற்கு விடிவு வர வேண்டும் என்று சூளுரைத்தீர்கள்.
உங்களுடைய புரட்சிப்போராட்டத்தின்போது நீங்கள்
விடுத்த அறைகூவலை நாங்கள் வழிமொழிகின்றோம். அன்னியரை வெளியேற்ற வேண்டும் என்ற
உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் உழைப்போம். அடிமைத்தளை உடைக்கப்படும் வரை,
நமக்கு சுதந்திரம் முற்றிலுமாக கிடைக்கும் வரை
1857ம் ஆண்டு துவங்கிய
போர் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. சுதந்திரதிற்காக மக்கள் எழுச்சி
அடையும் போதெல்லாம், சுதந்திர வேட்கை நம் தியாகிகளின் மனதில் தோன்றும்போதெல்லாம்
தன் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரே ஒருவன் பழி தீர்க்க எழுந்து
நின்றாலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை என்றுதான் பொருள். புரட்சிப்
போராட்டத்தில் அமைதி ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுதந்திரம் அல்லது வீர
மரணம் என்ற இரண்டில் ஒன்றுதான் நிதர்சனம். உங்களுடைய நினைவுகள் எங்களுக்கு
உத்வேகம் அளிக்கின்றன. நீங்கள்
1857ம் ஆண்டு துவங்கிய போரை நாங்கள்
தொடர உறுதியோடுள்ளோம். நீங்கள் நடத்திய போராட்டம் இந்தப் போரின் முதல் கட்டம்
என்றே நாங்கள் கருதுகிறோம். அதில் ஏற்பட்ட பின்னடைவு போரில் தோற்றதாக
அர்த்தமாகாது. அதில் ஏற்பட்ட தோல்வியை இந்தியா ஏற்றுக்கொண்டதாக உலகம் கூறுமா என்ன?
1857ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிந்திய ரத்தம் வீணாக
போய்விடுமா? நம் தந்தையர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை அவர்களுடைய புதல்வர்கள்
நிறைவேற்றமாட்டார்களா? இந்திய தேசத்தின் வரலாற்று தொடர்ச்சி முடிந்து
போய்விடவில்லை.
1857ம் ஆண்டு மே 10ம்
தேதி துவங்கிய போர்
1908ம் ஆண்டு மே 1ம்
தேதியிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. சுதந்திரம் அல்லது வீர மரணம் இரண்டில்
ஒன்று கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடந்துகொண்டேதான் இருக்கும்.

எங்களது இந்தப் போராட்டத்தில்,
தியாகிகளாகிய நீங்களே எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றீர்கள். அந்த உத்வேகம்
இல்லையென்றால் பல சிறு வேறுபாடுகளால் சிதறுண்டிருக்கும் எங்களால் ஒன்றுபட்ட எங்கள்
தாய்த் திருநாட்டைப் பார்க்க இயலாது. அந்த ஒற்றுமையை நீங்கள் எப்படி கொண்டு
வந்தீர்கள் என்ற ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். ஹிந்துக்கள் மற்றும்
முகமதியர்களின் இசைவோடு எப்படி பரங்கியரின் அதிகாரத்தை தவிடுபொடியாக்கி சுதேசியை
மக்களிடையே பிரபலப்படுத்தினீர்கள்; சாதி, மதம் போன்ற பிடிப்புகளில் இருந்து மக்களை
எப்படி தேசம் என்ற மேலான பந்தத்தை ஏற்படுத்தினீர்கள்! பகதூர் ஷா எப்படி நாடு
முழுவதிலும் பசு வதைத் தடையை அமுல்படுத்தினார்! மாவீரரான நானா சாஹிப் எப்படி
டெல்லி சக்ரவர்த்திக்கு பீரங்கி முழக்கத்தின் மூலம் முதல் மரியாதையைத் தந்து
தன்னுடைய மரியாதையை இரண்டாவதாக ஏற்றுக் கொண்டார்! எப்படி நம் எதிரி ஒற்றுமையாக
இருந்த நம்மைப் பார்த்து, ‘இந்த இந்திய போராட்டத்தின் மூலம் நிர்வாகிகளுக்கும்
வரலாற்று ஆய்வாளர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கலாம்.
ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், பிராமணர்களும் சூத்திரர்களும்,
ஹிந்துக்களும் முகமதியர்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்த இயலும் என்கின்ற
செய்திதான் அது. இந்த நாட்டில் பல்வேறு மதம் மற்றும் இனக்குழுக்கள்
இருக்கின்றபடியால் இங்கு நாம் பாதுகாப்பாக ஆட்சி செய்ய முடியும் என்ற எண்ணம் இனி
செல்லுபடியாகாது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பரஸ்பர
மரியாதையுடன் மற்றவர்களுடைய செயல்பாடுகளை அணுகுகிறார்கள். நம்முடைய அரசு இத்தகைய
புரட்சிகள் வெடிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் ஒரு சமுதாயத்தின் மேல்
பத்திரமில்லாமல் நின்று கொண்டிருக்கிறது. இங்கு மதமும் தேசப்பற்றும் இணைந்து
இருக்கின்றது. தேசபற்றை வலியுறுத்தும் மதமும், மதச் சுதந்திரத்தை மதிக்கும்
தேசப்பற்றும் இங்கு இருக்கின்றது என்பதை நமக்கு இந்தப் புரட்சிப் போராட்டங்கள்
அடையாளப்படுத்தி இருக்கின்றன
’ என்று கூறினார்கள்.
இப்பேற்பட்ட ஒரு மாபெரும் போராட்டத்தை
நடத்தத் தேவையான சக்தியையும் அதனை ரகசியமாகச் செய்யகூடிய சூட்சுமத்தையும் எங்களுக்கும்
தாருங்கள். பசுமையான நிலத்தின் அடியில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலைக்
குழம்பு இருப்பதை அறியாத எதிரி, அதனை எதிர்கொள்ள தயாரில்லாத நிலையில் இருந்தான்.
அதுபோன்ற சாதுர்யத்தை எங்களுக்கும் தாருங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமம்தோறும்
எப்படிப் புரட்சி பற்றிய செய்திகளை சப்பாத்தி மூலம் பரப்பினீர்கள் என்ற வித்தையை
எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். ஒரே மாதத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும், ஒவ்வொரு
இளவரசனும், நகரங்கள், சிப்பாய்கள், போலீஸ்கள், ஜமீன்தார்கள், பண்டிட்கள்,
மவுல்விகள் என்று எல்லோரையும் எப்படி இந்தப் புரட்சித் தீ பற்றிக்கொண்டது,
கோவில்களிலும் மசூதிகளிலும் ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற கோஷம் எப்படி விண்ணைப்
பிளந்தது என்பதைக் கூறுங்கள். மீரட் எழுச்சி அடைந்தது, டெல்லி எழுந்தது, பெனாரஸ்
எழுந்தது, ஆக்ரா, பாட்னா, லக்னோ, அலாஹாபாத், ஜாதகல்பூர், ஜான்சி, பாண்டா, இந்தோர்,
பெஷாவரில் இருந்து கல்கத்தா வரையிலும், நர்மதாவில் இருந்து ஹிமாலயம் வரையிலும்
அந்த எரிமலை வெடித்து எல்லோரையும் புரட்சி ஆட்கொண்டது.
ஓ தியாகிகளே, இந்த மாபெரும் புரட்சியை
நடத்தும்போது நம் மக்களிடம் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்னவென்பதையும் எங்களுக்குக்
கூறுங்கள். இந்த மாபெரும் தேசிய வேள்வியில் பங்கு பெறாமல் உங்களுடைய தன்னலமற்ற
போராட்டத்தை நீர்த்து போகும்படி செய்த நபர்களின் சுயநலத்தைப் பற்றியும்
சொல்லுங்கள். ஹிந்துஸ்தானத்தின் தோல்விக்குக் காரணம் ஹிந்துஸ்தானம் மட்டுமே என்பதையும்
கூறுங்கள். பல நூற்றாண்டு கால அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற நம் அன்னை வீறுகொண்டு
எழுந்து பரங்கியரைத் தன் வலதுகையால் அவர்கள் தலையில் தாக்கும்போது, அவளுடைய இடதுகை
எதிரியைத் தாக்காமல், அவள் தலையையே தாக்கியதைப் பற்றியும் கூறுவீர். அந்த
அடியினால் அவள் ஐம்பது ஆண்டு காலம் துவண்டு போனதைப் பற்றியும் கூறுவீர்.
ஐம்பது ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் 1857ம்
ஆண்டு நீங்கள் துவங்கிய அந்த சுதந்திர வேட்கை இன்னும் தீரவில்லை. அதன் வைர விழா
கொண்டாட்டங்களின்போது உங்களுடைய கனவுகள் நிறைவேறும் என்று நாங்கள்
உறுதியளிக்கிறோம். நாங்கள் உங்கள் குரலைக் கேட்கிறோம். அதன்மூலம் எங்களுக்கு
உத்வேகம் கிடைக்கின்றது. மிகக் குறைந்த உதவிகளைக்கொண்டு நீங்கள் போரை
நடத்தினீர்கள். அந்தப் போர் வெறும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அது
துரோகத்திற்கும் எதிரான போர். துவாப்பும் அயோத்யாவும் இணைந்து நின்று போர்
புரிந்தது பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஏனைய இந்தியாவிற்கும்
எதிராகத்தான். கடினமான அந்தப் போரை நீங்கள் மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்தீர்கள்.
அந்நிய சக்திக்கு எதிரான அந்தப் போரில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றீர்கள். இது
எப்பேர்ப்பட்ட உற்சாகத்தைத் தரக்கூடியது. துவாப்பும் அயோத்யாவும் ஒரு மாதத்தில்
சாதித்ததை இந்துஸ்தானம் முழுவதும் உறுதிப்பாட்டோடு இணைந்தால் ஒரே நாளில் சாதித்து
விடலாம். இது எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. அதனால்
உங்களுடைய போராட்டத்தின் வைர விழ
1917ம் ஆண்டு நடக்கும்பொழுது
இந்திய ஒரு சுதந்திர நாடாக இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை
எங்களுக்கு இருக்கிறது.
ராணி லக்ஷ்மி பாயின் ரத்தமும் பஹதூர்
ஷாவின் எலும்புகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்கவேண்டி
காத்திருகின்றன. புரட்சிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களைக் கூற மறுத்ததனால் மரண
தண்டனை விதிக்கப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த போராளி பீர் அலி பரங்கியரின் காதில்
படும்படி கூறிய வார்த்தைகள் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. ‘நீங்கள் என்னை இன்று
தூக்கில் இடலாம். என்னைப் போன்ற பலரையும் நீங்கள் தூக்கில் இடலாம். ஆனால் என்னுடைய
இடத்தில் பல ஆயிரம் பேர் வருவார்கள். உங்கள் எண்ணம் ஈடேறாது.’
இந்தியர்களே, இந்த வாக்கியம்
நிறைவேற்றப்பட வேண்டும். தியாகிகளே, நீங்கள் சிந்திய ரத்தத்திற்கு நாங்கள் பழி
வாங்குவோம்.
வந்தே
மாதரம்.

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்


நிற்பவர்கள்:
சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்ஸே, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே
அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் ஆப்தே, சாவர்க்கர், நாதுராம் கோட்ஸே, விஷ்ணு கார்கரே

பின்புலம்: மகாத்மா
காந்தி கொலை வழக்கு தொகுதி II (குற்றம் சுமத்தப்பட்டவர் அறிக்கைகள்) அதிகாரப்பூர்வ
ஆவணங்களிலிருந்து மீள் உருவாக்கம் செய்யபப்பட்டவை. கீழ்க்கண்டவை சாவர்க்கர் எழுத்து
வடிவிலான வாக்குமூலம் ஆகும்:
சிறப்பு நீதிமன்றம், செங்கோட்டை, தில்லி
குற்றவியல் எண் ….. 1948
வாதி
Vs
கோட்சே மற்றும் பலர் – குற்றம் சுமத்தப்பட்டவர்கள்
இபீகோ 120பி, 302 பிரிவுகளின் கீழ் வழக்குப்
பதிவு
குற்றம் சுமத்தப்பட்டவர் எண் 7, விநாயக்
தாமோதர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பணிந்து சமர்ப்பிப்பது
என்
மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றங்களையும் நான் இழைக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை.
இந்த
வழக்குக்கான சாட்சி 1948 ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்மந்தப்பட்டவர்களின்
தனி நபர் செயல்கள் என்றும், கூட்டுச் சதியின் விளைவு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி
இருந்த நிலையிலும், இந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஒப்புக்
கொண்ட நிலையிலும்,
இந்த
நீதிமன்றத்தின் விசாரணை முடிவுகள் எப்படி இருப்பினும், நான் விழுமிய முறையில் வலியுறுத்துவது
என்னவெனில், அரசு வழக்கறிஞர் குற்றம் சுமத்தியபடி நான் எந்தவொரு கூட்டுச் சதிக்குக்
காரணமாகவும் இல்லை, அதில் ஈடுபடவும் இல்லை அல்லது அதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகள் குறித்து
அறியவும் இல்லை.
குற்றப்
பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாக இருக்கவில்லை,
அதற்கான காரணமோ அவசியமோ இல்லை.
என்
தரப்பு வாதத்தைத் தெளிவுபடுத்த எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிலை குறித்துச் சில
முக்கிய விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 1905ம் ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தில்
பட்டம் பெற்றேன். சட்டம் படிக்க இலண்டன் க்ரேஸ் இன் கல்லூரியில் சேர்ந்து 1909ல் பார்
கௌன்சிலில் இணையத் தகுதி பெற்றேன். மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதை, நாடகம்,
விமர்சனம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதி உள்ளேன். நான்
எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகள், இந்தியாவின் ஒன்றுக்கும்
மேற்பட்ட பல பல்கலைக்கழகங்களால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நாக்பூர் பலகலைக்கழகம் இலக்கியத்துக்கான எனது சேவைகளைப் பாராட்டிச் எனக்கு
‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் முதல் சிந்து வரை, காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் நடைபெறும் அரசியல், சமூகம்,
மதம், இலக்கியம் தொடர்பான பல்வேறு அமர்வுகள், கூட்டமைப்புகள், கருத்தரங்குகளுக்குத்
தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பான விவரங்களையும், சம்மந்தப்பட்ட
ஆவணங்களையும், ப்ராக்சிக்யூஷன் தரப்பு ஏற்கனவே ஆதாரமாகப் பதிவு செய்துள்ளது. (பி.டபிள்யூ
57, பக்கங்கள் 222 & 223, பி.டபிள்யூ 69 பக்கங்கள் 319 & 320 பார்க்கவும்)
சாவர்க்கர் சதன்
– பத்தாண்டுகளுக்குமுன்பு பம்பாய் தாதர் பகுதியில் நான் புதிதாகக் கட்டிய ‘சாவ்சர்க்கர்
சதன்’ என்னும் வீட்டில் குடியிருக்க வந்தேன். இந்த வழக்கைப் பொருத்தவரை இந்த வீட்டைப்
பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘சாவர்க்கர் சதன்’ இரு அடுக்குகள்
கொண்ட வீடாகும். தரைத் தளத்தில், நடுக் கூடம், இந்து சங்கதான் அலுவலகத்துக்காக, இந்து
மகாசபாவைப் போலவே, எந்த வாடகையும் இல்லாமல், எனது சொந்தச் செலவில் பரமாரிக்கப்பட்டு
வருகிறது. உள்ளூர் இந்து சபா ஊழியர்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வருவோர், இந்து
சபா பணிகள் குறித்து விவாதிக்க இங்கே வழக்கமாக வருவார்கள். இந்து சபா ஊழியர்களும்,
வருகை தருவோரும், படிப்பதற்காக ஏராளமான தினசரிகளும், சஞ்சிகைகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கும்.
அது வரவேற்பு அறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அலுவலக ஊழியர்களும், வாடகைக்குக்
குடியிருப்போரும் உபயோகப்படுத்தத் தொலைபேசி இணைப்பும் உண்டு. இந்து சங்கதான் அலுவலகம்
தொடர்பான தட்டச்சு மற்றும் எழுத்துப் பணிகளும் நடைபெற்று வந்தன. அன்றாட வேலைகளைக் கவனிக்க
செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலக நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய மற்றும் அவசரப்
பணிகள் இருந்தால் மட்டுமே அவர் என்னைத் தொடர்பு கொள்வார். கடந்த நான்கு அல்லது ஐந்து
ஆண்டுகளாக திரு ஜி.வி.தாம்லே எனது செயலாளராகவும், திரு கஸர் எனது பாதுகாவலராகவும் இருந்து
வருகின்றனர். திரு கஸர் நடுக் கூடத்துக்குப் பின்புறம் உள்ள அறையில் வசித்து வருகிறார்.
இந்த
வீட்டின் தரைத் தளத்திலுள்ள நடுக் கூடத்தின் இடதுபக்கம் நுழைந்தால் பல அறைகள் வாடகைக்கு
விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக திரு ஏ.எஸ்.பிட்டே தனது குடும்பத்துடன்
இங்கே வாடகைக்குத் தங்கியிருக்கிறார். ‘ஃப்ரீ இந்துஸ்தான்’ என்னும் ஆங்கில வார ஏட்டின்
ஆசிரியரான அவர் பம்பாய் மற்றும் மராட்டிய மாகாண முன்னணித் தலைவரும் ஆவார். இந்த நடுக்
கூடத்தின் வலது பக்கத்தில் திரு ஜி.வி.தாம்லே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
என்னுடைய செயலாளராக இருப்பதுடன் திரு ஜி.வி.தாம்லே தாதர் மற்றும் பம்பாய் மாகாண இந்து
சபாக்களின் தனித்துவ மற்றும் பிரபல ஊழியராகவும் உள்ளார்.
நான்
என் குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறேன். என் தனிப்பட்ட அலுவலகம்
மற்றும் வரவேற்பு அறை முதல் மாடியிலுள்ள நடுக் கூடத்தில் அமைந்துள்ளது. எனது உடல்நிலை
தொடர்ந்து சரிந்து வருவதால், செயலாளரின் சிறப்பு அனுமதி இல்லாமல், பொது மக்களோ, ஊழியர்களோ,
என்னைச் சந்திக்க முதல் மாடிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. என்னைப் பார்க்க சிறப்பு அனுமதி
பெற்ற பிறகே நேர்காணல்கள் அனைத்துக்கும் நேரம் ஒதுக்குகிறேன். முதல் மாடியிலும் சில
அறைகளை ஒருவருக்குக் குடும்பத்துடன் வாடகைக்கு விட்டிருக்கிறேன்.
பொதுவாக
என்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ள விரும்பாத நான், ப்ராக்சிக்யூஷன் தரப்பு என் மீது
சுமத்திய சில மறைமுகக் குற்றச்சாட்டுகள் காரணமாக, விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில்
உள்ளேன். இந்தியா மற்றும் சில தருணங்களில் வெளி நாடுகளிலிருந்து கூட ஆயிரக் கணக்கானோர்
சாவர்க்கர் சதனுக்கு வருகை தந்துள்ளனர். இளவரசர்கள் தொடங்கி விவசாயிகள் வரை, சனாதனத்
தலைவர்கள் தொடங்கி சோஷியலிஸ்ட் தலைவர்கள் வரை, இந்து சபா தலைவர்கள் தொடங்கி காங்கிரஸ்
தலைவர்கள் வரை, பள்ளி மாணவர்கள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள் வரை, பல்வேறு கட்சிகளைச்
சேர்ந்த பிரபலங்கள், ஊழியர்கள், இளைஞர்கள் என அன்றாடம் பலர் நாள் முழுவதும் சாவர்க்கர்
சதனுக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஆப்பிரிக்கா
மற்றும் உலகின் ஏனைய நாடுகளின் பத்திரிக்கைப் பிரதிநிதிகளும், பிரபல அரசியல் விமர்சகர்களும்
என்னை பேட்டி எடுக்க சாவர்க்கர் சதனுக்கு வந்துள்ளனர். என்னைச் சந்திக்க வருவோரை ஒழுங்குபடுத்த
நுழைவு வாயிலில் ஒன்றிரண்டு கூர்க்காக்களும், சீக்கியர்களும் பாதுகாப்புக்கு இருப்பார்கள்.
(சாட்சி பி.டபிள்யூ 57 பக்கங்கள் 222 & 223 பார்க்கவும்).
இந்து மகாசபா – 1937ம்
ஆண்டு இந்து மகாசபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆறு முறை தொடர்ந்து அதன் தலைவராக
இருந்தேன். சமீபமாக எனது உடல் நிலை ஒத்துழைக்காததால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன்.
லாலா
லஜ்பத்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகிய பிரபலங்கள் நிறுவிய மகாசபா பதிவு பெற்ற
சங்கம் என்பதை விளக்க இந்த வழக்குக்கு இதுபோதும். விஜயராகவாச்சாரியார், ராமானந்த் சாட்டர்ஜி,
என்.சி.கேல்கர், பாய் பரமானந்த், டாக்டர் மூஞ்சே உள்ளிட்ட பிரபலங்கள் இதன் தலைவர்களாகப்
பதவி வகித்துள்ளனர். இதன் நிறுவனர்களும், தலைவர்களும், இந்திய தேசியக் காங்கிரஸின்
தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் இருந்துள்ளனர். மகாசபாவின் முக்கிய நோக்கம் ‘இந்து
சங்கதான்’ அதாவது இந்துக்களின் அரசியல், சமுக ஒருங்கிணைப்பு மற்றும் ராணுவமயமாக்கல்
ஆகும். அரசியல் அறிவியல் ரீதியாக இந்துக்களை இந்தியாவில் ‘தேசியப் பெரும்பான்மையினர்’
என்று அழைப்பதால், ஆற்றலும், பாதுகாப்பும், உறுதியும் கொண்ட பாறைபோன்ற அடித்தளத்தின்
மீது வலுவான சுதந்திர இந்திய நாடு உருவாகும் வகையில், இந்துக்களின் ஒருங்கிணைப்பும்,
கூட்டமைப்பும் அமைய வேண்டும். அவ்வாறு உருவாகும் இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்க வேண்டும்.
வாழும் ஒவ்வொரு விசுவாசம் மிக்க குடிமகனும் மதம், சாதி, இன, வேறுபாடு இன்றிச் சமமான
உரிமையும், கடமையும் பெற வேண்டும். தேசிய அளவில் இந்துக்களுக்கான உரிமைப் பங்கைத் தாண்டி
ஒரு இஞ்ச் அளவு கூட அதிகம் வேண்டாம். ஆனால் அதே சமயம், இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய
நியாயமான உரிமையைப் பிடுங்கிக்கொண்டு, முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்துக்காக, அவர்களது
தகுதியைத் தாண்டிப் பங்களிப்பது, அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் விசுவாசமாக இருக்கமாட்டார்கள்
என்பதற்காக அப்படிச் செய்வதை இந்திய நாடு பொறுத்துக் கொள்ளாது. அது துரோகத்தின் மீது
நம்பிக்கை வைப்பதற்குச் சமானமாகும். சிறுபான்மை மதம் / இன ரீதியிலான தனி வாக்குரிமைக்கு
வழிவகுக்கும் ‘கம்யூனல் அவார்ட்’ (Communal Award) திட்டத்தை மகாசபை கடுமையாக எதிர்த்ததற்கு
முக்கியக் காரணம், கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமியருக்கு 3 வாக்குரிமையும், 3 இந்துக்களுக்கு
1 வாக்குரிமையும் மட்டுமே கிடைக்கும் என்று அது சொன்னதால்தான்.
அகில
இந்திய அளவில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபா என மூன்று முக்கிய மற்றும்
பெரிய அமைப்புகளாக உருவாகும் வகையில் மகாசபா மிக வேகமாக வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும்
பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடு மற்றும் ஏனைய ஆலோசனை அமைப்புகளில்
பங்கேற்கப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க அதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. மேலும் அதன்
தலைவர் என்ற முறையில் பல்வேறு தருணங்களில் நேர்காணல்களுக்கும், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கான
கருத்துக்களைப் பதிவு செய்ய பல்வேறு வைஸ்ராய்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து எனக்கும்
அழைப்பு வந்துள்ளது. க்ரிப்ஸ் மிஷன் வந்திருந்த சமயத்திலும் அரசு அழைப்புக்கு இணங்க
மகாசபாவின் கருத்துக்களை எடுத்துரைக்க எனது தலைமையில் குழு பங்கேற்றது. தாய்நாட்டின்
ஒற்றுமையை வேரறுக்கும் வகையில் கூறுபோட்ட க்ரிப்ஸ் திட்ட விதிகளை எந்த சமரசமும் செய்து
கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரே அமைப்பு, மூன்று அகில இந்திய அமைப்புகளில், மகாசபா
மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மகாசபாவுக்கு
அனைத்து மாகாணங்களிலும், இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன. மகாசபா
உருவாக்கிப் பிரச்சாரம் செய்த இந்து சங்கதானுக்குப், பின்னாளில் சாவர்க்கரிஸம் என்று
பிரபலமான சித்தாந்தத்துக்கு, இளைஞர்கள் தொடங்கி பிரபல தலைவர்கள் வரை ஆயிரக் கணக்கான
இந்துக்கள் மகத்தான ஆதரவளித்தனர். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மகாசபை தலைவர் பொறுப்பில்
இருந்த காரணத்தால் அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவே நான் பார்க்கப்பட்டேன்.
என்னுடைய அமைப்பு ரீதியான கடிதத் தொடர்புகள், பயணங்கள், எழுத்துகள், பேச்சுகள் மூலம்
இந்தியா முழுவதிலுமுள்ள ஆயிரக் கணக்கான மகாசபா தலைவர்கள், ஊழியர்கள், உறுப்பினர்கள்
ஆகியோருடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டேன்.
இதுபோன்ற
எண்ணற்ற இந்து மகாசபா ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுள் ஒருவராகத்தான் பண்டிட்
நாதுராம் கோட்சே எனக்குப் பிரத்யேகமாக அறிமுகம் ஆனார். திரு ஆப்தேவும் ஒரு கடிதம் மூலம்,
நகரில் பணியாற்றும் இந்து சபா ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். கலெக்டர்
அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து ரைஃபிள் கிளப் தொடங்கவும் ஆர்வமுடன் இருந்தார். குவாலியர்
இந்து சபா தலைவர் என்ற முறையில் டாக்டர் பர்சுரேவும் அறிமுகமானார். கர்கரே நகரைச் சேர்ந்த
இந்து சபா ஊழியர் என்பதையும், இந்து மகாசபா மூலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
விவரத்தையும் அறிந்துகொண்டேன். திரு பட்கே எனக்கு எழுதிய கடிதம் மூலம் அவர் இந்து சங்கதான்
ஊழியர் என்றும் சட்டத்துக்கு உட்பட்டு உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை விற்பனை செய்வதையும்
தெரிந்துகொண்டேன். குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்களான சங்கர், கோபால் கோட்சே மற்றும்
மதன்லால் ஆகியோர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர்களின் பெயர்களைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் இந்து சபா
ஊழியர்களாக நான் அறிந்திருந்தவர்கள்:
இந்து
மகாசபாவின் உள்ளூர், மாவட்ட மற்றும் மாகாணக் கிளைகள் அமைப்பு ரீதியான விதிகளுக்கு இணங்க
அவர்களது பணி குறித்த அறிக்கைகளை பம்பாயிலுள்ள எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.
பூனா இந்து சபாவிலிருந்து வரும் அறிக்கைகளிருந்து திரு பட்கே சம்பளத்துக்கும், சில
சமயம் சம்பளம் இல்லாமலும் பிரச்சாரக்காகப் பணியாற்றியதைத் தெரிந்துகொண்டேன். உரிமம்
பெற்ற ஆயுதங்களை விற்பனை செய்ய அவர் நடத்திக் கொண்டிருந்த கடை குறித்த ஒன்று அல்லது
இரண்டு அறிக்கைகளை எனக்கு அனுப்பியதுடன், நிதி உதவியும் கோரி இருந்தார். இக்கடிதங்கள்
பற்றி எனது எழுத்து வடிவிலான வாக்குமூலத்தில் பின்னர் விரிவாக விளக்குகிறேன். இதைத்
தாண்டி எனக்குத் திரு பட்கே பற்றி வேறு எதுவுமே தெரியாது. தனிப்பட்ட முறையிலும் என்னுடன்
அவர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
குவாலியர்
இந்து மகாசபா பணி குறித்த அறிக்கைகளை டாக்டர் பர்சுரே சில ஆண்டுகள் எனக்கு அனுப்பி
வைத்தார். இந்து சங்தான் இயக்கத்துக்கு உதவும் நோக்கத்துடன் ‘இந்து ராஷ்ட்ர சேனா’ என்ற
பெயரில் தன்னார்வக் குழுவை அமைத்துள்ளதாக எனக்குக் கடிதம் எழுதினார். ப்ராக்சிக்யூஷன்
தரப்பு சாட்சிகளுள் ஒருவர் தன்னை சேனா அமைப்பின் உறுப்பினர் என்றும், அதன் பயிற்சிகளில்
பங்கேற்றுள்ளதாகவும், ராஷ்ட்ர சேனாவின் நோக்கம் இந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது என்றும்
இந்த நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார் (பி.டபிள்யூ.39 பக்கம் 137 பார்க்கவும்).
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து டாக்டர்
பர்சுரே பற்றிய செய்திகள் எதுவும் எனக்கு வரவில்லை. அவரும் தனிப்பட்ட முறையில் என்னுடன்
எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. நகரிலுள்ள இந்து சபா அறிக்கைகள் மூலம் இந்து
ராணுவமயமாக்கலுக்காகவும், சங்கதானுக்காகவும், திரு ஆப்தேவுடன் ஷுத்திப் பணிக்காவும்
கடுமையாக உழைத்து வருவதாகத் திரு கர்கரே பற்றி அடிக்கடி நான் கேள்விப்படுவேன். இந்து
சபா சார்பில் நகராட்சித் தேர்தல்களில் கர்கரே வெற்றி பெற்றது குறித்து திரு ஆப்தே ஓரிரு
முறை எனக்குக் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் கர்கரே ஒரு தடவை கூட எனக்குக் கடிதம் எழுதியதில்லை.
தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கவும் இல்லை (பி.டபிள்யூ 129 பக்கம் 3 பார்க்கவும்).
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் உடல்நலம் குன்றியதிலிருந்து அவரைப் பற்றி எந்தவொரு
தருணத்திலும் நான் கேள்விப்படவும் இல்லை. திரு ஆப்தே மற்றும் திரு பண்டிட் கோட்சே ஆகிய
இருவரும் நகர் மற்றும் பூனாவிலுள்ள இந்து சபா ஊழியர்களாகத் தாங்களாகவே என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு
பின்னர் தனிப்பட்ட முறையில் என்னுடன் பழக்கமானார்கள்.
ஆப்தே, கோட்சே மற்றும் அவர்களது கடிதப்
போக்குவரத்து
மகாசபா
திட்டத்தில் இந்து ராணுவமயமாக்கல் விஷயம் மிக முக்கிய அம்சமாக எப்போதுமே இடம் பெற்று
வந்ததுள்ளது. இந்த நோக்கத்துடன் சில பணிகளை நகர் ஊரிலிருந்து ஆப்தே செய்து வருவதாக
அவரது கடிதத்திலிருந்து தெரிந்துகொண்டேன். இதுகுறித்து அங்குள்ள தலைவர்களிடம் நடத்திய
விசாரணையில் அது உண்மை என்றும், அதற்கான அரசு அனுமதியை அப்போதைய உள்துறை உறுப்பினரிடமிருந்து
அவர் பெற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். பின்னர் பூனாவில் ஸ்ரீ ரகுநாத ராவ் பரஞ்ச்பே
தலைமையில் ரைஃபிள் க்ளப்களின் கூட்டத்துக்கான மையத்துக்கும் திரு ஆப்தே ஏற்பாடு செய்திருந்தார்
(டி27 & டி28 என்று குறிக்கப்பட்டுள்ள திரு ஆப்தேவின் கடிதங்களைப் பார்க்கவும்).
இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகளால் அவர் கௌரவ தொழில்நுட்ப ஆளெடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன்,
நிறைவாக விமானப் படையில் கிங்க்ஸ் கமிஷனாகவும் உயர்ந்தார். இந்து சபாவிலும் பணியாற்றினார்.
அவர் எனக்கு எழுதி, நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10-12 கடிதங்களில் பெரும்பாலானவை
ரைஃபிள் க்ளப் அறிக்கைகள் மற்றும் இந்து சபாவில் அவர் பணியாற்றியது தொடர்பானவையே.
ஆப்தேவைப்
போலவே கோட்சேவும் அதே வழியில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். மராட்டியத்தின் பல்வேறு
பகுதிகளுக்குப் பிரச்சாரக் என்ற முறையில் மேற்கொண்ட பயணம், உள்ளூர் சபா தொடர்பான அவரது
பணிகள், கருத்துகள், ஆலோசனைகள் குறித்து எனக்கு அறிக்கைகள் அனுப்பி வைப்பார். எங்களது
அமைப்பு ரீதியான கட்டமைப்பு விதிகளின்படி ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாகாண ஊழியரும் இதுபோன்ற
அறிக்கைகளை எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாகும். கோட்சே எனக்கு
எழுதி நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 15 அல்லது 20 கடிதங்கள் அனைத்துமே மேற்கூறிய
அமைப்பு ரீதியான அறிக்கைகள் தொடர்பானவை மட்டுமே ஆகும்.
கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் எனக்கு எழுதிய சில கடிதங்களைப் ப்ராக்சிக்யூஷன்
தரப்பு எனக்கு எதிரான சாட்சியங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ‘அக்ரணி’க்கு
எழுதிய கடிதங்களில் எனது பயணம் உள்பட சில தலைப்புகளில் இடம்பெற்றவைகளைப் ப்ராக்சிக்யூஷன்
தரப்பு மேற்கோள் காட்டி எனக்கும் அவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் நிரூபிக்க
முனைந்துள்ளது. ஆனால் விரிவாக ஆராய்ந்தால், எனக்கும் அவர்களுக்கும் இடையேயான உண்மையான
தொடர்பைத் தெரிவிப்பதுடன், அவை இயற்கை நியதிக்கும் சட்டத்துக்கும் உட்பட்டவை என்பதையும்
விளக்கும். ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராகத் தாக்கல் செய்த அதே கடிதங்கள் மூலமே
என் தரப்பு நியாயத்தை நிரூபிப்பேன்.
(தொடரும்…)

Posted on Leave a comment

வீர் சாவக்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரை | தமிழில் SG சூர்யா

குறிப்பு: அந்தமான் சிறை அனுபவங்கள் என்ற பெயரில் தமிழில் வெளியாகும் புத்தகம் வெகு முன்பே My transportation for Life என்று ஆங்கிலத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்துக்கு எழுதப்பட்ட முன்னுரை தமிழில் இங்கே.

அன்பார்ந்த வாசகரே,

மராத்திய மொழியில் முதலில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க, இதன் ஆசிரியர் சிறையில் பட்ட இன்னல்களைப் போலவே, மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டன.

சுதந்திரப் போரில் சிறிய பங்கை மட்டுமே ஆற்றிய பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போரில் தாங்கள் சிறைப்பட்ட கதைகளை மிகைப்படுத்திச் சொல்லிக்கொண்டிருக்கையில், மிகப்பெரும் இன்னல்களையும் சித்திரவதைகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட ஸ்வந்திர வீர் சாவர்க்கர் என்று நம்மால் அழைக்கப்படும் சாவர்க்கர், தனக்கும் தன்னுடன் இருந்த சக கைதிகளுக்கும் அந்தமான் செல்லுலர் சிறையில் இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி எதுவும் வெளியில் கூறாமல் இருந்தார். அப்படிச் செய்வது நாகரிகமாக இராது என்றும், அது தற்பெருமையாகக் கருதப்படும் என்றும், அந்தமானில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அதீதமானது என்று கூறி மக்கள் நம்பாமல்கூடப் போகலாம் என்றும் அவர் அஞ்சினார். அது மட்டுமில்லாமல் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தங்கள் உயிரையும்கூடப் பொருட்படுத்தாமல் தியாகம் செய்த சக போராளிகளை ஒப்பிடும்போது இது ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல என்றும் அவர் கருதினார்.

பருந்திடம் மாட்டிக்கொண்ட ஒரு பறவையின் கூக்குரலாகட்டும், செயின்ட் ஹெலினா-வில் இருந்து பாரீஸுக்குக் கொண்டுவரப்பட்ட தங்கள் மன்னன் மாவீரன் நெப்போலியனின் உடலைப் பார்த்துக் கதறிய பிரெஞ்சு மக்களின் அழுகுரலாகட்டும், அவை ஒரு சோகத்தின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடுகளாகத்தான் பார்க்கப்படும். ஆனால் அத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள்கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கடுமையான நடைமுறைகளால் வெளிப்படுத்த முடியாதபடி இருந்தது. அதனையும் மீறி வெளியே சொல்லப்படப் போவது அங்கே அனுபவித்த கொடுமைகளின் உண்மையான தீவிரத்தைப் பிரதிபலிக்கப் போவதில்லை. அதனால் தன் மனதில் உள்ளவற்றை எந்தத் தடையுமில்லாமல் வெளியில் சொல்ல அதற்கென சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்து அவர் காத்திருந்ததை நாம் குறைகூற முடியாது. ஆனால் ஒருவேளை அப்படி ஒரு தருணம் அமையாமலேயே போயிருந்தால்? அவருடைய அமைதியினால் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அநீதியை நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவரோ அரைகுறையாக அங்கு நடந்தவற்றைப் பற்றிச் சொல்வது தற்பெருமை போல் அமைந்துவிடும் என்றே கருதினார்.

அவர்மேல் மதிப்பு வைத்திருப்பவர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்ததால், அவர் தனது போராட்டத்தைப் பற்றிய முழுமை பெறாத இந்த விவரிப்பைப் பதிப்பிக்கச் சம்மதித்தார். இதன்மூலம் நம் மக்களுக்குச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பது ஓரளவாவது தெரிய வரும் என்று எல்லோரும் வற்புறுத்தியதால் ஆசிரியர் வீர சாவர்க்கர் அந்தக் கோரிக்கைக்கு இணங்கினார். இதனால் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ மறைந்த லோகமான்ய பால கங்காதர திலகர் நடத்தி வந்த ‘கேசரி’ என்ற வார இதழில் 1925-26ல் தொடராக வெளிவந்தது.

ஆனால் எதற்கும் அஞ்சாத அந்தத் தேசிய இதழும் கூட இதில் இடம் பெற்றிருந்த சில பகுதிகளைப் பிரசுரிக்கத் தயங்கியது. ஆகவே இந்தக் கதையின் இரண்டாவது பாகத்தை வேறொரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டி வந்தது. ‘ஷ்ராத்தானந்த்’ என்ற பத்திரிகையில் 1927 ஜனவரி 20ம் தேதியிலிருந்து இது வெளிவந்தது. கடைசியில் 1927ம் ஆண்டு மே மாதம் மொத்தக் கதையும் முதல்முறையாக வெளியிடப்பட்டது.

ஆசிரியர் ஸ்வதந்திர வீர் சாவர்க்கர் அப்போது 1909ம் ஆண்டு ஜாக்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302, 109 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டிருந்தார். அவருக்கு முதல் ஆயுள் தண்டனை 1910ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியும், பின்னர் 1911ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி இரண்டாவது ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டன. 50 ஆண்டுகாலக் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்ற அவர் 1960ம் ஆண்டுதான் விடுதலை செய்யப்படவிருந்தார். 1911ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வீர் சாவர்க்கர் அந்தமான் கொடும்சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சிறையில் இழைக்கப்படப்போகும் கொடுமைகளினால் அவர் அங்கிருந்து வெளிவர மாட்டார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் அதற்கு மாறாகச் சிறையில் எழுந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிராக எல்லோரையும் ஒருங்கிணைத்து அவர் போராடினார். இதன் காரணமாக அந்தச் சிறைக்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை இந்தியாவிலிருந்து அனுப்புவது கொஞ்சம் கொஞ்சமாக நின்று போயிற்று. அங்கிருந்த கொடுங்கோலனான ஜெயிலரும் தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள வேண்டி வந்தது. வீர சாவர்க்கர் அதன் பிறகு கல்கத்தா, ரத்னகிரி மற்றும் எரவாடா சிறைகளுக்கு மாற்றபட்டார். பிறகு
கடைசியாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் அவர் விடுதலையும் செய்யபட்டார்.

இந்த புத்தகம் 1927ம் ஆண்டு மே மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டாலும், 1927ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தான் ஷ்ரத்தானந்த் பத்திரிக்கையில் முதலில் இதுகுறித்து அறிவிப்பு வந்தது. அப்போதுதான் பம்பாய், அகோலா, நாக்பூர், அமராவதி போன்ற மையங்களில் இந்தப் புத்தகம் பற்றிய அறிவிப்புகள் வெளியாயின. ஒருவேளை, அதற்கு முன்பு வரை பிரதிகள் தயார் செய்யப்பட்டு ரகசியமாக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம். பதிப்பித்த முதல் மூன்று வருடங்களுக்குள் அதாவது 1930ம் ஆண்டிற்குள் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்திருக்கவேண்டும். ஏனென்றால் ஷ்ரத்தானந்த் பத்திரிக்கையில் 1930ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பையும் ஆசிரியரின் கவிதைகள் மற்றும் வாழ்க்கை பற்றிய நூல்களையும் வெளியிட பதிப்பகங்களை வரவேற்று அறிவிப்புகள் வெளிவந்தன.

விரைவிலேயே இந்தப் புத்தகத்தின் குஜராத்தி மொழிபெயர்ப்பு வெளியாகியது. உடனடியாக 1934ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிரஸ் ஆக்ட் (அவசர நிலை அதிகாரங்கள்) 1931, விதி 19ன் கீழ் இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. பல பத்திரிகைகள் இந்தத் தடையைக் கண்டித்தன. உதாரணத்திற்கு, 1934ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி வந்த ‘கேசரி’ இதழில், ‘இது மராத்தி வாசகர்களால் பல வருடங்களாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதனால் நாட்டில் எந்தச் சட்ட ஒழுங்கு சீர்குலைவும் ஏற்படவில்லை. இந்தச் சட்டம் அப்போதே மூன்று வருடங்களாக அமலில் இருந்து வந்திருக்கிறது. மூன்று வருடங்களாக இந்தச் சட்டத்திற்கு முரணாக எதுவும் நடக்கவில்லை எனும்போது இப்போது இதனைத் தடை செய்ய திடீரென்று என்ன நடந்துவிட்டது’ வாதிடப்பட்டது. தடை செய்யப்பட்டு ஒன்பது நாட்கள் கழித்து, அதாவது 1934ம் ஆண்டு 26ம் தேதி பம்பாயில் தோபி தாலோ என்ற இடத்தில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ரத்னகிரியில் உள்ள வீர் சாவர்க்கரின் தொண்டர்களில் ஒருவரால் சுடப்பட்டார். சுட்டவர், மறைந்த வாமன் ராவ் சவான். இது நடந்த 24 மணி நேரத்திற்குள் ரத்னகிரியில் இருந்த வீர் சாவர்க்கரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தடைக்கான எதிர்ப்பே அந்த பிரிட்டிஷ் அதிகாரியின் மீது நடந்த கொலை முயற்சி.

தடை செய்யப்பட்டவுடன் இந்தப் புத்தகத்தின் குஜராத்திப் பதிப்பை வெளியிட்ட பிரஸ்தான் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தின் அலுவலகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இந்தப் புத்தகத்தின் பிரதிகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல பிரஜாபந்து என்ற வார பத்திரிகையின் பதிப்பாளரும் அச்சிடுபவருமாகிய இந்திரனந்தன் பல்வந்த்ராய் தாக்கூர் என்பவருக்கு இரண்டாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மராத்தியில் வெளியானபோது எந்தப் பிரச்சினையும் இல்லை, குஜராத்தியில் வெளியானவுடன் தடை செய்யப்படுகிறது என்றால், இந்த புத்தகத்தைக் குறித்து யார் புகார் அளித்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பலர் மனதில் எழுந்தது. ஒருவேளை இது, சிவாஜியையும் ராணா பிரதாப்பையும் ஆயுதம் தாங்கிப் புரட்சி செய்தவர்கள் என்ற காரணத்திற்காகக் குறை கூறிய, பிரத்வி சிங் மற்றும் இதர புரட்சியாளர்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறிய, இந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரில் முஸ்லிம்களை தாஜா செய்து கொண்டிருந்த எவரோ ஒருவராக இருக்கக்கூடும்.

1937ம் ஆண்டு மறைந்த நாராயண் ராவ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் என்ற முறையில் இந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கக் கோரி விண்ணப்பித்தார். அதேபோல பல தனி நபர்களும் நிறுவனங்களும்கூடக் கோரிக்கை விடுத்தன. 1937ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீ.வீ.சாத்தே என்பவர் அந்தமான் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவாக ஒரு பேரணி ஒன்றை நடத்தினார். அந்தப் பேரணியின் முடிவில் புனேவில் உள்ள ஷன்வர் வாதாவிற்கு எதிரே நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் வீர் சாவர்க்கர் எழுதிய புத்தகத்தின் 191ம் பக்கத்திலிருந்து ஒரு பகுதியை, புத்தகத்தின் மீதான அநியாயமான தடையை எதிர்க்கும் விதமாக, வாசிக்கப் போவதாக அறிவித்தார். உடனேயே அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ தேவுல்கொவங்கர் என்பவர் அவர் கைகளிலிருந்து அப்புத்தகத்தைப் பறித்தார். உடனேயே வீர் சாவர்க்கரால் சின்காத் வெற்றியைக் குறித்து எழுதப்பட்ட மற்றொரு தடை செய்யப்பட்ட பாடலான ‘தன்யா சிவாஜி முதல் ரனகாச்சி தன்யாச்சி தானாஜி’ என்ற பாடலை அவரும் மற்றவர்களும் பாட ஆரம்பித்தனர். கைப்பற்றப்பட்ட வீர் சாவர்க்கரின் புத்தகங்களைத் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என மற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கம் அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆனால் உண்மையில் எதுவும் நடக்கவில்லை.

1945ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதும் அந்தக் கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. சிலர் தடையை மீறி அந்தப் புத்தகங்களைப் பதிப்பிப்போம் என்று கூறினர். 1946ம் ஆண்டு மே 22ம் தேதி ஒருவழியாகத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் தடை இருந்ததோ இல்லையோ, வீர் சாவர்க்கரின் புத்தகங்கள் ரகசியமாகப் பதிப்பிக்கப்பட்டுப் பெருவாரியான மக்களால் படிக்கப்பட்டும் வந்தன. இரண்டாவது முறையாக, சட்டபூர்வமான பதிப்பு 1947ம் ஆண்டு வெளிவந்தது. ஹிந்து ராஷ்ட்ர க்ரந்தமாலா-வின் ஐந்தாவது வெளியீடாக பர்சுரே புரானிக் அனி மண்டலி என்ற இயக்கம் இதனை வெளியிட்டது.

1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்திஜி கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் சுதந்திர இந்தியாவை ஆண்ட முதல் அரசு உள்நோக்கத்துடன் வீர் சாவர்க்கரையும் குற்றம்சாட்டி இணைத்தது. ஆனால் பின்னர் அவர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று கூறி விடுவிக்கபட்டார். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குப் பயந்து மக்கள் அவரது புத்தகங்களை வாங்கப் பயந்தனர். அதனால் பம்பாயில் உள்ள நடைபாதைகளில் மிகக் குறைந்த விலைக்கு, அதாவது ஒரு ரூபாய்க்கு அந்தப் புத்தகங்கள் விற்கப்பட்டன. ஆனால் புத்தகத்தின் விற்பனை மேலும் அதிகரித்தது. பிறகு அது அதன் உண்மையான விலைக்கே விற்கப்பட்டது.

குஜராத்திப் பதிப்பு மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் ஆங்கிலப் பதிப்புகளும் விரைவிலேயே வெளிவந்தன. தற்போதைய ஆங்கில மொழிபெயர்ப்பு பம்பாய் முலுந்த் பகுதியில் இருக்கும் நாராயன் டோபிவாலா கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் வீ.என்.நாயக் என்பவரால் செய்யப்பட்டது. இது 1949ம் ஆண்டு பம்பாயில் உள்ள சத்பக்தி பிரகாஷன் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் காந்தி கொலை வழக்கினால் ஏற்பட்ட பிரச்சினைகளை இதுவும் சந்திக்க வேண்டியிருந்ததால் இந்தப் புத்தகத்தின் ஹிந்திப் பதிப்பை அப்போது கொண்ட வர இயலவில்லை. அது பிற்பாடு நாக்பூரில் உள்ள பிரித்விராஜ் பிரகாஷன் என்ற பதிப்பகத்தால் 1966ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதன் சுருக்கப்பட்ட பதிப்பு ஹிந்துவாணி என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. மத்திய அரசாங்கத்தின் ஆதரவோடு இயங்கும் சாஹித்ய அகாதமி பதிப்பகமும் இதனை 14 இந்திய மொழிகளில் வெளியிட உத்தேசம் உள்ளதாக அறிவித்தது. ஆனால் பின்னர் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. என்ன காரணம்? அது அரசாங்கத்துக்குத்தான் தெரியும்.

இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியை 1963ம் ஆண்டு சமக்ர சாவர்க்கர் வாங்மயா என்ற நிறுவனம் பதிப்பித்தது. பிறகு 1968ம் ஆண்டு இது தனி புத்தகமாக ஜி.பி.பராசுரே பிரகாஷன் மந்திர் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அப்போது வீர் சாவர்க்கரின் விடுதலைக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததால், அவரால் தன்னுடைய பல கருத்துக்களுக்கு விரிவான விளக்கங்கள் கொடுக்க இயலவில்லை. அதனால் ஸ்ரீ பாலாராவ் சாவர்க்கர் இந்தப் பதிப்பில் பல அடிக்குறிப்புக்களைக் கொடுத்திருந்தார்.

இந்தப் புத்தகம் அந்தமானிலும் ரத்னகிரி, எரவாடா சிறைகளிலும் வீர் சாவர்க்கருக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சித்தரித்திருந்தது. அதேபோல எந்த விதமான அனுகூலமான சூழ்நிலைகளும் இல்லாத நிலையில் 13 ஆண்டுகள் எல்லா விதமான கொடுமைகளையும் எதிர்த்து நின்று சளைக்காமல் போராடிய அவரது தீரத்தையும் அது பறைசாற்றியது. தன் இளமைக்காலம் சிறையில் வீணாகியபோதும், எந்த விதமான நம்பிக்கையும் இன்றி அந்தமான் சிறையில் நிர்கதியான சூழலில் அவர் வாடியபோதும், மற்ற கைதிகளைப் போல மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கவில்லை. மாறாக மனதைச் சம நிலையில் வைத்திருந்தார். இதனால் அவரால் ஆயிரக்கணக்கான வரிகள் கவிதைகளாக எழுத முடிந்தது. தத்வார்தமாய்ச் சிந்திக்க முடிந்தது. இன்று நாட்டைப் பீடித்திருக்கும் பல இன்னல்களுக்கான தீர்வை அந்தச் சூழ்நிலையிலும் அவரால் சிந்தித்துச் சொல்ல முடிந்தது. அவற்றை நம் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் நிலைமை மேலும் மோசமாகும்போது அவற்றைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும். தேசத்தை முன்னேற்றுவதற்கான பல பரிமாணங்களை அவர் சிந்தித்தார். அவரது இத்தகைய தீர்கமான கருத்துக்களைப் படிக்கும்போது நமக்கு அவர் எழுதிய கவிதை வரிகளான

‘கற்சுவர்களோ இரும்புக் கதவுகளோ நம்மைச் சிறைப்படுத்தாது’

என்பது நினைவுக்கு வருகிறது. இது அவருடைய அசைக்கமுடியாத மன உறுதியையும் தேசப்பற்றையும் குறிக்கிறது. தீர்க்கதரிசியான அவர் மிகச் சிறந்த செயல்வீரரும் ஆவார். நாடு அடிமைத்தளையின் உச்சத்தில் இருந்தபோதிலும் அவர் தன் வாழ்நாளின் எந்தவொரு நிமிடத்தையும் வீணாக்காமல் தன் தாய்நாட்டின் மீட்சி குறித்தே சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். பாரதத் தாயின் இப்படிப்பட்ட ஒரு மகத்தான புதல்வனை நாம் இதுநாள்வரை முட்டாள்தனமாக உதாசீனப்படுத்தி வந்தோம் என்பதுதான் இதிலே மிகவும் வருந்தத்தக்க விஷயம். இதனால் நஷ்டம் நமக்குத்தான். இனி வரும்காலங்களிலாவது நமக்குத் தெளிவு கிடைக்கும் என்று நாம் நம்புகிறேன்.

– எஸ்.டி. காட்போலே.
போரிவில்லி, பம்பாய்.

பின்குறிப்பு: வீர் சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள் – இரட்டை ஆயுள்தண்டனையும் நாடு கடத்தப்படுதலும்’ புத்தகம் கிழக்கு பதிப்பகம் வாயிலாக விரைவில் வெளியாக இருக்கிறது.

Posted on Leave a comment

ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை (1924) – பகுதி 1 : லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 1 
ஹிந்து முஸ்லிம் பிரச்சினை இந்தியாவின் பிரச்சினை

 

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை
என்பது இந்தியாவின் பிரச்சினையாகும். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்,
கேள்விப்பட்டுமிருக்கிறோம். ஆங்கிலோ-இந்தியர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையே எப்போதும்
விவாதத்தை உருவாக்கும் விஷயம் இது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஒரே நாட்டில்
வாழமுடியும் என்பதை முன்னவர்கள் நம்பமறுக்கிறார்கள், பின்னவர்கள் நம்புகிறார்கள். குறிப்பிட்ட
ஒரு தருணத்தில் எவ்வளவு ஒற்றுமை அல்லது வேற்றுமை உள்ளது என்பதே ஒரு முக்கியப் பிரச்சினையாகும்.
ஆனால் 1919லிருந்து 1921 வரை இந்தியாவில் இருந்த ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு
இருந்தனர் என்பது உண்மை. இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திய வரலாற்றில் முதன்முறையாக
ஆகப்பெரிய, வரலாற்றின் முக்கியமான, இந்தியாவில் உள்ள அற்புதமான மசூதி ஒன்றின் வளாகத்திலிருந்து
ஒரு காஃபிர் உரை நிகழ்த்தினார். அதேபோல் மிலேச்சர்கள் ஹிந்துக்களுடன் சேர்ந்து ஹிந்துக்களின்
பண்டிகைகளைக் கொண்டாடினர்.
இருப்பினும், இந்தக்
குறுகிய காலகட்டத்தில் ஏற்பட்ட ஒற்றுமை தொடரவில்லை என்பதும் உண்மை. கடந்த மூன்று வருடங்களாக
பிரிட்டிஷ் ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாதவரையில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவர்மீது
ஒருவர் கடுமையான விரோதம் பாரட்டுகின்றனர். இந்தச் சீர்கேட்டைத் தடுக்க நடைபெற்ற முயற்சிகள்
எதுவும் வெற்றிபெறவில்லை. தீர்வு ஒன்றினைக் காண செய்யப்பட்ட பிரயத்தனங்கள் எதுவும்
பலனளிக்கவில்லை. இதை எழுதும்போது இரண்டு சமூகங்களுக்கும் இடையேயான உறவுகள் மீட்டெடுக்கமுடியாமல்
முறியும் நிலையில் உள்ளன என்பதை மறுக்க இயலாது. மதக் கலவரங்களும் பிரச்சினைகளும் முன்னெப்போதையும்விட
அடிக்கடி நிகழ்கின்றன. பரஸ்பர நம்பிக்கையின்மையும் சந்தேகங்களும் விளிம்புநிலையை எட்டிவிட்டன.
என்னதான் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டாலும், காங்கிரஸ் வட்டாரங்களிலும்கூட,
இரண்டு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களுக்குள் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் நிலவுகிறது.
காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் எப்போதுமே ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை முன்னிருத்தப்படும், ஆனால்
அதன் தலைவர்கள் நிலைமையைச் சீராக்கவோ, ஒரு தீர்வை எட்டவோ தவறிவிட்டனர். இதற்கான விளக்கம்
எளிது. அவர்கள் மக்களின் ஆதரவை இழந்திருக்கவேண்டும் அல்லது நேர்மையாக நடந்துகொள்ளாமல்
இருந்திருக்கவேண்டும். பின்னாலுள்ள கருத்தை நான் ஏற்கவில்லை, எனவே முன் உள்ள கருத்தையே
நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும்.
மகாத்மா காந்தி விடுதலை
செய்யப்படுவதற்கு முன்பு, நாடு முழுவதும் அவர் சிறையில் இருந்தபோது பெரிதாக உருவெடுத்துவிட்ட
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எரவாடா சிறையை நோக்கி இருந்தது. எல்லா நம்பிக்கைகளும்
ஒரே மனிதரைச் சார்ந்தே இருந்தன, ஆனால் அவர் சிறையில் இருந்த காரணத்தால், அவரது விடுதலை
ஹிந்து முஸ்லிம் தகராறிலிருந்து நாட்டிற்கும் விடுதலை அளிக்கும் என்று கருதப்பட்டது.
இருதரப்பும் அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தன. அவரது தலைமை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அவரது நோக்கங்களைப் பற்றி சிறிதளவு சந்தேகம் கூட இருந்ததில்லை. அன்பு, பொறுமை, நம்பிக்கை,
நற்குணம் ஆகியவற்றின் அடையாளமாக அவர் கருதப்பட்டார். ஆகவே ‘எரவாடா சிறையைத் திறக்கும்
சாவி’ ஹிந்து முஸ்லிம் பிரச்சினைகளைத் தீர்க்கும் சாவியாகக் கருதப்பட்டது. விதி அத்தகைய
ஒரு சாவியை அளித்தது, மகாத்மா விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அவர் விடுதலையானபோது அவரது உடல்நலம் அவ்வளவு சரியாக இல்லை.
அதனால் ஆறு வாரங்களை அவர் மருத்துவமனையில் அவர் கழிக்க நேரிட்டது. ஆனால் அவருக்கே உரிதான
தன்னலமற்ற தன்மையுடன் நிலைமையை ஆராய அவர் முற்பட்டார், இந்த வருத்தத்திற்குரிய மாற்றத்தின்
காரணத்தையும் அவர் ஆராய்ந்தார். இம்முயற்சியில் எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. இருதரப்பு
நியாயங்களையும் அவர் கேட்டறிந்தார், நடுநிலையாளர்களின் கருத்துக்களையும் கேட்டார்.
தனிப்பட்ட விசாரணைகளை முடித்துவிட்டு, சிந்தனையிலும் தியானத்திலும் ஆழ்ந்தார்.
அதன்பின் இனிமையான,
நியாயமான, சமாதானத்தைக் கோரும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். ஆனால் அது இருதரப்பிற்கும்
திருப்தியாக இல்லை. நான் இங்கே இரு தரப்பிற்கும் என்று கூறும்போது அவர் வார்த்தையை
வேதவாக்காக நினைக்கும், அவர் கூறுவதற்கு எதிர்க்கேள்வி கேட்காத பிரிவை அதில் சேர்க்கவில்லை.
அவருடைய அறிக்கை எந்த அளவிற்கு ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் திருப்தியளித்தது
என்று ஆராய்ந்தால், அதில் ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களைவிட குறைவான திருப்தியே இருந்தது
என்று சொல்லலாம். குற்றம்சாட்டுவதிலும் பொறுப்பைச் சுமத்துவதிலும் அவர் பாரபட்சமில்லாது
நடந்துகொள்ளவில்லை என்ற குறை ஹிந்துக்களுக்கு இருந்தது. ஹிந்துக்களில் ஒரு பிரிவினரை
(செல்வாக்குமிக்க, துடிப்பான, சுறுசுறுப்பானவர்கள்) அவரது அறிக்கை காயப்படுத்தி, வார்த்தைகளாலும்
தீர்மானங்களாலும் அதற்குக் கடுமையான எதிர்வினைகளை ஆற்ற வைத்தது. இது சரியானது அல்லது
தவறானது என்று எப்படி நினைத்தாலும், இரு சமூகங்களுக்கிடையே சமரசத்தை உருவாக்க நினைக்கும்
ஒருவர் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட இயலாதவாறு இருந்தது அது.
 
லாலா லஜ்பத் ராய்
என்னைப் பொருத்தவரை
மகாத்மா அளித்த தீர்வும், இதற்கான மருந்தாக அவர் பரிந்துரைத்ததும் ஒருவரையும் கவரவில்லை.
ஒருவர் அவரிடமிருந்து எதிர்பார்த்தது போல், அவருடைய ஆய்வும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
அவர் மேம்போக்கான காரனங்களைக் கருதினாரேயன்றி, ஆழமாகச் சென்று அடிப்படைக் காரணிகளைப்
புரிந்துகொள்ள முயலவில்லை. மியான் ஃபசல்-இ-உசைனைப் பற்றியும் ஸ்வாமி ஷ்ரத்தானந்தரையும்
பற்றி அவர் சில கருத்துகளைச் சொன்னார், ஆனால் அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் பற்றி ஏதும்
தெரிவிக்கவில்லை. அவரது நேர்மையையும், எல்லோரிடமும் அவர் கொண்ட அன்பையும், சமாதானத்திற்கான
அவரது விருப்பத்தையும், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முழுமையான ஒற்றுமை
ஏற்படவிரும்பிய அவரது பதட்டத்தையும், இவை எல்லாவற்றின் மூலமாக ஸ்வராஜ்யம் என்ற கோரிக்கையையும்,
ஏன் ஸ்வாராஜ்யம் அடைவதையே அவர் விரும்பியதையும் யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் இதையெல்லாம்
அடைய உதவுகின்ற அறிக்கை ஏமாற்றம் அளித்தது. தோற்றத்தில் அருமையாகவும், பிரமாதமாகவும்
இருந்த பிரச்சினைக்கான தீர்வு மேலோட்டமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள்,
ஒரு வலிநிவாரணியாக, நிரந்தரத் தீர்வாக அவரது முடிவு இருக்கும் என்பதைப் பொய்யாக்கிவிட்டது.
இந்தக் குழப்பங்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இடையே, அது உண்டாக்கிய பிரச்சினைகளுக்கு நடுவே,
இந்தியாவின் நலனை விரும்புபவர்களுக்கு ஒரு வலிமையான கருத்து உருவாகி வந்திருக்கிறது.
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் எந்த அளவு பிரிந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் இடையேயான
அவர்களின் உறவுகள் எவ்வளவு மோசமடைந்திருந்தாலும், ஸ்வராஜ்யம் என்ற கருத்தில் அரசுக்கு
எதிரான நோக்கத்தில் அடிமைத்தளையை உடைத்தெடுக்கும் முயற்சியில் அவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்
என்பதுதான் அது. இந்தியர்கள் ஒவ்வொருவரிடமும் இந்த அரசியல் தன்மையைக் கொண்டுசேர்த்த
பெருமை மகாத்மா காந்தியையே சேரும். அவர்களிடம் ஒரு விழிப்புணர்வை, எக்காலத்திலும் அணையாத
அந்த வேட்கையை ஏற்படுத்தியது அவர்தான். ஒரு தேசியத்தை உருவாக்கும் எண்ணத்தை அவர்களிடம்
விதைத்தது அவர்தான். மகாத்மாவின் இந்த வலிமையான, நிரந்தரமான சாதனையின் காரணமாக எதிர்காலத்தைக்
குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஒருவர் விரும்பியதைப் போல அவரது அறிக்கை திருப்திகரமானதாக
இல்லாமலிருக்கலாம். ஆனால் அனைவரையும் முன்னே இழுத்துச் செல்பவர் அவர்தான். நாம் விரும்பும்
நோக்கத்தை அடைய தலைமை தாங்கி முன்செல்பவரும் அவர்தான். ஆனால் வெற்றிக்கு முக்கியமான
காரணிகளில் ஒன்றாக இருப்பது, எந்த ஒரு உண்மையையும் புறக்கணிக்காமல் இருப்பது. அனுபவத்தைத்
தவிர்த்து வெற்றுப்பேச்சுகளை நம்புவது பலனளிக்காது. அவர் செய்யாவிட்டாலும் மற்றவர்கள்
சரியான சிந்தனையையும், எண்ணத்தையும் சரியான தீர்வு ஒன்றுக்கான தயார் நிலையையும் தூண்டி
வெற்றிகாணக்கூடும்.

 

இந்தியாவை நோக்கிய
என் பயணத்தின்போது மேற்கூறியவற்றை நான் எழுதினேன். அதன்பின் நவம்பர் 18, 1924ல் நான்
பம்பாயை அடைந்தபின்னர் நான் பார்த்த, படித்த, அவதானித்தவற்றுடன் நான் எழுதியதை ஒப்பிட்டுப்
பார்த்தேன். நான் இந்த மண்ணை அடைந்தவுடன் இரண்டு அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட
நேர்ந்தது. ஒன்று கோஹட் துயர சம்பவம், மற்றொன்று மகாத்மா காந்தியின் உண்ணாவிரதம். கோஹட்
சம்பவத்தின் ஆகப்பெரிய துன்பமளிக்கும் விஷயம், முஸ்லிம்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஹிந்துக்கள்
அனைவரும் அந்த இடத்திலிருந்து வெளியேறியதுதான். இந்தத் துயர சம்பவத்திற்கான இரண்டு
சமூகங்களின் பங்களிப்பைக் குறித்து இங்கு நான் வாதிட விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ்
ஆட்சியில் முன்னெப்போதையும் விட இந்த அரசு செயல்படாமலும், திறனில்லாமலும் நடந்துகொண்டிருக்கின்றது
என்பதை நான் சொல்லமுடியும். நான் பிரிட்டிஷ் ஆட்சியினால் கவரப்பட்டவனல்ல. சொல்லப்போனால்
எந்த ஒரு அந்நிய ஆட்சியாலும் மயங்கிவிட்டவனல்ல. பிரிட்டிஷ் குணநலன்களை நான் மதித்தாலும்
அவர்கள் நிர்வாக முறைகளின் எனக்கு விமர்சனங்கள் எப்போதும் உண்டு. இருப்பினும் பிரிட்டிஷ்
அரசால் சிறுபான்மையரைப் பாதுகாக்க முடியும் என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியையும்
பாதுகாப்பையும் அவர்களால் கட்டிக்காக்க முடியும் என்று நம்புகிறவன் நான்.
கிட்டத்தட்ட
3500 நபர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அடங்கிய ஒரு சமூகமே அவர்கள் வீடுகளிலிருந்து
தூரமான ஒரு இடத்தை நோக்கி அரசுப் போக்குவரத்தின் மூலம் அரசின் உதவியால், ஒரு பெரும்பான்மை
சமூகத்தினால் தாக்கியழிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்த இந்த நிகழ்வு,
பிரிட்டிஷ் அரசின் மீதான இந்த நம்பிக்கையைக் குலைத்து விட்டது. ஏனெனில் இதற்கு இரண்டு
காரணங்கள்தான் இருக்க முடியும். வடமேற்கு மாகணத்தில் இருந்த, பிரிட்டிஷ் அதிகாரிகளின்
நேர்மையின்மை அல்லது திறமையின்மை இதன் காரணமாக இருக்கக்கூடும். ஒரு வாதத்திற்காக கோஹட்டில்
இருந்த ஹிந்துக்கள்தான் கலகம் செய்து, முஸ்லிம்களை இத்தகைய கொலைவெறித்தாக்குதலில் ஈடுபடும்
நிலைக்குத் தள்ளினார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இந்தத் தாக்குதலிலிருந்து ஹிந்துக்களுக்குப்
பாதுகாப்பு அளித்து, அங்கு சட்டம் ஒழுங்கு சீரடைந்த உடன், குற்றம் செய்தவர்களுக்குத்
தகுந்த தண்டனை அளிப்பது பிரிட்டிஷ் அரசின் கடமை. உண்மையில் கோஹட்டின் நடந்தது என்னவென்றால்,
அதிகாரிகள் நிலைமை கட்டுமீறிப்போய்விட்டதென்று கருதி ஹிந்துக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு
அளிக்கத் தவறிவிட்டனர். விசாரணையின்றி தண்டனை அளிக்கும் சட்டத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்
அல்லவா. அது என்ன? வழக்கமான நீதி வழங்கும் முறையைத் தடுத்து, அதிகாரிகளைச் சட்டத்தின்
படி செயல்பட விடாமல் தடுப்பது. அதே போன்ற ஒன்றுதானே கோஹட்டிலும் நடந்தது?
குற்றம் சாட்டப்பட்ட
ஒவ்வொருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்றும் குற்றம் சாட்டுபவர்களின்
தாக்குதலிலிருந்து அவர் காக்கப்படவேண்டுமென்றும் சட்டம் சொல்கிறது. ஒரு நீதிமன்றம்
அவரைக் குற்றவாளி என்று கருதிய பின்னரே அவருக்குத் தகுந்த தண்டனையளிக்கப்படவேண்டும்.
கோஹட்டின் ஹிந்துக்கள் குற்றம் செய்தவர்கள் எனக் கொண்டாலும், அவர்களைக் கைது செய்து,
நீதிமன்றத்தின் முன் நிறுத்தி வழக்கு நடைபெறும்போது பாதுகாப்பது பிரிட்டிஷ் அரசின்
கடமை. கோஹட்டில் இதைச் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் தவறிவிட்டது. உயிர்பயத்தால் ஹிந்துக்கள்
அங்கிருந்து வெளியேற விரும்பினாலும், அவர்களைத் தடுத்து நம்பிக்கையளிப்பது அரசின் கடமை.
அவர்களுக்கு தகுந்த ராணுவப் பாதுகாப்பு அளித்து அவர்கள் வீட்டில் தங்குமாறு அரசு செய்திருக்கவேண்டும்.
தங்கள் உயிருக்கு ஆபத்து எற்படும் என்ற அச்சம் இருந்தாலொழிய கோஹட் ஹிந்துக்களைப் போல
யாரும் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் விட்டுச் செல்ல விரும்பமாட்டார்கள். இந்த
நிகழ்வு மதக் கலவரத்தின் ஒரு புதிய பரிணாமத்தை வெளிக்காட்டியிருக்கிறது. இதை ஒற்றுமையை
ஏற்படுத்த விரும்புபவர்கள், பிரச்சினையின் ஆணிவேரை அணுகாமல் மேலோட்டமாகத் தீர்வு ஒன்றைக்
காண விரும்புபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மகாத்மா காந்தியின்
உண்ணாவிரதத்தைப் பொருத்த வரையிலும், அமேதி, குல்பர்கா, கோஹட் போன்ற இடங்களில் உள்ள
ஹிந்து ஆலயங்களுக்கு நேர்ந்த அவமதிப்புகள், கோஹட் துயரச் சம்பவம் ஆகியவை அவருக்கு அதிர்ச்சியை
அளித்திருக்கவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக, அவரது புரிதல் இன்மைக்கும், ஹிந்து
முஸ்லிம் விவகாரத்தைத் தவறாகக் கையாண்டதற்கும் ஒரு தியானத்தை மேற்கொள்ளவேண்டிய கடமை
இருப்பதாக அவர் கருதியிருக்கவேண்டும். முஸ்லிம்களின் ‘கிலாஃபத்தை’ காப்பதற்காக ஹிந்துக்களின்
ஒத்துழைப்பைக் கோரிய அவர் எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் முஸ்லிம்கள் ஹிந்துக் கோவில்களை
அவமதித்ததற்காக வருந்தியிருக்கவேண்டும். அவரது அதிர்ச்சி ஏற்படுத்திய கையாலாகாத்தனத்திற்கும்
ஏமாற்றத்திற்கும் தீர்வாக தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள இந்த இருபத்து ஒரு நாள் உண்ணாவிரதம்
உதவுமென்று, தன்னையறியாமல் அவர் செய்த பாவங்களுக்கு மன்னிப்பாக அவர் இதைக் கருதியிருக்கலாம்.
ஹிந்து முஸ்லிம் உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட இந்த இடைவெளி ஒரு வாய்ப்பாக அமையுமென்றும்
அவர் நம்பியிருக்கலாம்.
என்னுடைய முதல் உணர்வு
இதை நிராகரிப்பதாக அமைந்தது. ஆனால் டெல்லியை அடைந்ததும், இந்தத் தீர்மானத்தை எடுக்க
அவரைத் தூண்டியது வேறு எந்த வழியிலும் அவரைத் திருப்திப் படுத்தாது என்று உணர்ந்துகொண்டேன்.
ஒற்றுமை மாநாட்டைப் பற்றிய என்னுடைய கருத்தும் இதுவேதான். ஒற்றுமை மாநாடு இதற்கான தீர்வை
அடையாது, தீர்வை அடையவும் முடியாது என்பதே என் எண்ணம். ஆனால் இந்தப் பிரச்சினையைப்
பற்றிய பல்வேறு விதமான குழப்பங்களையும் தாக்கங்களையும் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல
முயற்சியாக இருக்கும் என்று எண்ணினேன். தனது ஆற்றல், நேரம், கவனம் ஆகியவற்றின் பெரும்பகுதியை
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக செலவழிக்க மகாத்மா காந்தி முடிவுசெய்திருக்கிறார்.
என்னுடைய இதயத்தின் அடியாழத்திலிருந்து இந்த முயற்சியில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ஆனால் அவர் தன்னுடைய முயற்சி அத்தனையும் தற்போதைய நிலையில் அடிப்படைக் காரணிகளை அறிவதில்
செலவழித்தாலொழிய அவர் இதில் வெற்றிபெற இயலாது. அவருடைய நெருக்கமான நண்பர்களின் ஊகங்கள்,
முன்முடிவுகளை அவர் தவிர்த்தாலேயன்றி, தனது முக்கியமான நேரத்தை தகுந்த முறையில் பயன்படுத்தினாலேயன்றி
இதற்குத் தீர்வு காண முடியாது. அறிவியல் ரீதியாக இந்தக் கேள்விக்கு விடைகாண அவர் முயலவேண்டும்.
பிரச்சினையின் அடிப்படைக் காரணங்களை அறிந்து அதன் மூலம் தீர்வு காண அறிவியல் முறைகளை
அவர் பயன்படுத்தவேண்டும்.
என்னுடைய
கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக நான் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.
நான் உண்மையை வெளிப்படையாகப் பேசப்போகிறேன். தலைமைத்துவம் அளிக்கும் பொறுப்பின் காரணமாக
பூடகமாகப் பேசுவதைக் கைவிட்டு, யார் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாமல் செயலாற்றப்போகிறேன்.
என்னைப் பலர் விமர்சனம் செய்யக்கூடும், ஆனால் பிரச்சினைகளில் ஈடுபட்டுக்கொள்ள எனக்கு
விருப்பமில்லை. இந்த விவகாரத்தில் என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்கும் முன்னர் இதை
எல்லாம் தெளிவுபடுத்துவது தேவை என்று நினைக்கிறேன்.
(தொடரும்)

 

பாகம் 13 | பாகம் 12 | பாகம் 11 | பாகம் 10 | பாகம் 9 | பாகம் 8 | பாகம் 7 | பாகம் 6 | பாகம் 5 | பாகம் 4 | பாகம் 3 | பாகம் 2 |

 

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 19 | சுப்பு


அரசியல் சட்டமும் ஆடை மாற்றமும்

இந்திய நாட்டையே
அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவசரநிலை அறிவிப்பால் பெரும்பாலான அரசியல் இயக்கங்கள்
செயலிழந்து போய்விட்டன. இருந்தாலும் எதிர்ப்புக் குரல்களை ஒரேயடியாக அவரால்
ஒடுக்கமுடியவில்லை.
 
ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர்
சோழிங்கர் பொதுக்கூட்டத்தில் (27-06-1975) ‘அடிப்படை உரிமைகளைக் காக்க போராட்டம்
நடத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். சங்கத்துக்காரர்களின் முயற்சியால்
அவசரநிலையை எதிர்த்து நாடெங்கும் சத்யாகிரகம் நடத்தப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை
சேலம், மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல இடங்களில் சத்யாகிரகம் வெற்றிகரமாக நடந்தது.
நிறைவாக சென்னை மெரினா கடற்கரையில் 26-01-1976 அன்று சத்யாகிரகம் நடந்தது.
 
மெரினாவில் சத்யாகிரகம் நடக்கும் என்ற
அறிவிப்போடு கூடிய போஸ்டர்களை அடையாரில் நாங்கள் ஒட்டினோம். தவிர, ஆர்வத்தின்
காரணமாக மெரினா பீச்சிற்கு நானும் ராஜேந்திரனும் கோட்டூரான் ஸ்ரீதரும்
போயிருந்தோம்.
 
அங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் யாரும்
எங்கள் கண்ணில் தென்படவில்லை. மணல்வெளி முழுவதும் அங்கங்கே ஒருவர் என்ற
ஏற்பாட்டில் குதிரைப்படை போலீஸ் மட்டும் மிரட்டிக்கொண்டிருந்தது.
 
குறிப்பிட்ட நேரத்தில், சினிமாவில்
கிளைமாக்ஸ் காட்சி வருவதுபோல எல்லாம் நடந்தது; குடும்பத்தோடும் குழந்தைகளோடும்
அமர்ந்திருந்தவர்கள், அவர்களையெல்லாம் புறப்பட்டுப் போகச் சொல்லிவிட்டு,
போராட்டக்காரர்களாக மாறி கோஷம் போட்டனர். ஏற்கெனவே கடற்கரை மணலில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த பிரசுரங்களை அவர்கள் தோண்டி எடுத்தார்கள், விநியோகித்தார்கள்.
 
போராட்டக்காரர்களைக் குதிரை போலீஸ்
தாக்கியது, சுற்றி வளைத்துப் போலீஸ் வண்டியில் ஏற்றியது. இந்தக் காட்சியை ஸ்ரீதர்
கேமராவில் படமெடுத்தான். இதைப் பார்த்துவிட்ட ஒரு போலீஸ்காரர் கேமராவைப் பிடுங்க
முயற்சி செய்தார். போலீஸைத் தாக்கிவிட்டு ஸ்ரீதர் கேமராவை மீட்டு வந்தான்.
போலீஸ் படை சுதாரித்துக்கொள்வதற்குள்
நானும் ராஜேந்திரனும் ஸ்ரீதரும் தப்பித்து ஓடினோம், ஓடினோம் – கண்ணகி
சிலையிலிருந்து காந்தி சிலை வரை. என்னுடைய நீண்ட நெடிய வாழ்க்கையில் நான் அதிக
தூரம் ஓடியது அன்றுதான் என்று நினைக்கிறேன்.
இந்த இடத்தில் ஸ்ரீதரைப் பற்றிய
இடைச்செருகல் ஒன்றைத் தருகிறேன்.
 
சென்னையில் அடையாருக்கும்
நந்தனத்துக்கும் இடைப்பட்ட பகுதி கோட்டூர் என்ற கிராமம். இங்கே வைணவர்களுக்கான ஒரு
கோவில் இருக்கிறது. ஸ்ரீதரும் அந்தச் சமூகம்தான். அடையார் நண்பர்கள் ஸ்ரீதரை
செல்லமாக கோட்டூரான் என்று அழைப்பது வழக்கம்.
 
ஸ்ரீதரை நான்தான் சங்கத்துக்கு அழைத்து
வந்தேன். அவனுக்கு விஷயஞானம் கம்மி. ஆனால் வேலையில் வேகம் அதிகம். ஒருமுறை அன்றைய
பிராந்த பிரச்சாரக்காக இருந்த கோபால்ஜி (இராம கோபாலன்) அடையார் ஷாகாவிற்கு
வந்தார். எங்களோடு உரையாடும்போது ஒவ்வொருவரிடமும் ஷாகாவிற்கு வந்ததற்கான காரணங்களைக்
கேட்டார். வட்டமாக உட்கார்ந்திருந்த நாங்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய அளவில் தேச
பக்தி, தெய்வ பக்தி, முகலாயப் படையெடுப்பு என்று ஏதேதோ சொன்னோம். இதுபோன்றக்
கேள்வியை எதிர்பார்க்காத சிலர் மழுப்பினோம்.
 
வந்தது ஸ்ரீதரின் முறை.
‘இங்கதான் நம்பளவாள் எல்லாம் இருக்கா’
என்று சொன்னான்.
 
கோபால்ஜி என்னைக் கேட்டார் ‘ஏம்பா, இது
பிராமண சங்கம்னு சொல்லியிருக்கியா?’
நான் சொன்னேன், ‘எதுவும் சொல்லல.
வெறும் கொள்கையை வைத்துக்கொண்டு ஆளில்லாமல் என்ன செய்வது? ஆட்களைச்
சேர்த்துவிட்டால் கொள்கையை அப்புறம் சொல்லிக்கொள்ளலாம்.’
ஷாகா, பள்ளிக்கூடத்து மைதானத்தில்
நடந்தது, அதுவும் பின்மாலைப் பொழுதில். அந்த இருட்டில் கோபால்ஜி சிரித்தாரா முறைத்தாரா
என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
 
*
ஒருபக்கம் அவசரநிலை என்ற பெயரில்
நாட்டில் ஜனநாயகத்தின் கூறுகளே இல்லாமல் செய்துகொண்டிருந்த பிரதமர் இந்திராவுக்கும்
மூச்சுவிட நேரம் தேவைப்பட்டது போலும். இன்னொரு பக்கம் இந்திராவின் சர்வாதிகாரப்
போக்கை எதிர்த்து உலக நாடுகளில் எழுந்த எதிர்ப்பும் காரணமாக இருக்கலாம். அவரே
தன்னுடைய அராஜக ஆட்சிக்கு இடைவெளியாக கால் புள்ளி அளவு காலம் ஒதுக்கினார். அதிலும்
அவருடைய சுயநலம்தான் கலந்திருந்தது. இப்படி உருவானதுதான் 42வது அரசியலமைப்புச்
சட்டத் திருத்தம்.
 
நீதித்துறைக்குப் பதில் சொல்ல வேண்டும்
என்பதில் அவருக்கு ஒப்புதல் இல்லை.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்
ஆகியவற்றின் வல்லமையைக் கட்டுப்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்
கூறுகளை நீர்த்துப் போகச் செய்யவும், அடிப்படை உரிமைகளை வெற்றுக் காகித அளவில் கட்டுப்படுத்தவும்
இந்திரா செய்த ஏற்பாடுதான் 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம். தன்னுடைய
அதிகார துஷ்பிரயோகத்தை மறைப்பதற்காக இந்தியா ஒரு மதசார்பற்ற, சோஷலிஷ நாடு என்ற
மேற்பூச்சை மட்டும் பூசிவிட்டார்.
 
இந்தக் கொடுமையிலும் நமக்கு லாபகரமான
விஷயம் ஒன்று இருந்தது. 1975 நவம்பரில் நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்த மசோதாவை
அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அரசாங்கத்தின் கெடுபிடிகளை சற்றுத் தளர்த்தி
இதுபற்றிய சொற்பொழிவுகளுக்கும் உரையாடல்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
 
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு
சங்கத்துக்காரர்களால் நாடுமுழுவதும் அரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அடையாறில்
கண்ணன், ரமணி மற்றும் கோபால் ஆகிய மூன்று இளைஞர்கள் இதற்காகத் துணிச்சலாக வேலை
செய்தனர்.
கண்ணனைப் பற்றி முந்தைய அத்தியாயம்
ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் நினைவூட்டுவதற்காகச் சொல்கிறேன்.
சங்கப் பணியாக கட்டை வண்டி இழுத்த கண்ணன் என்று வைத்துக்கொள்ளலாம்.
 
என்னதான் நாங்கள் எல்லோரும் இளமைத்
துடிப்போடு இருந்தாலும் அவசரநிலைக் காலத்துக் கெடுபிடிகளை நேரடியாக
உணர்ந்தவர்களால்தான் அதிலுள்ள சிரமத்தை உணரமுடியும். இருந்தாலும் எங்களிடம்
உற்சாகம் அதிகளவில் இருந்ததால் சிரமங்களைப் புறந்தள்ளிவிட்டுக் காரியத்தில்
இறங்கினோம். அதிலும் ஒருவரையொருவர் முந்த வேண்டும் என்ற போட்டியும் இருந்தது.
அடையார் காந்திநகரில் உள்ள காவல்
நிலையத்தின் எதிரே இந்திராவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டவேண்டும் என்று ஒரு யோசனை –
50 ரூபாய் பந்தயம். 50 ரூபாய்க்கு ஆசைபட்டு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது
கோட்டூரான் ஸ்ரீதர்.
இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்; அவசரநிலை
எதிர்ப்புகளுக்கான பணிகளுக்காக நம்பிக்கையானவர்களிடம் நிதி திரட்டி அதை
நம்பிக்கையானவர் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து
வைத்திருந்தோம். இது சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட பணம்தானே என்ற தைரியத்தில் அவர்
மக்கர் பண்ண ஆரம்பித்தார். எத்தனைமுறைதான் அவர் வீட்டிற்கு நடப்பது? ஒருகட்டத்தில்
தெருமுனையில் அவரை மடக்கிவிட்டோம். அப்போது கண்ணன் சொன்னது ‘இந்திரா இந்தியாவை
ஆளலாம்; ஆனால் அடையாரை நாங்கதான் ஆளறோம்.’
மறுநாள் காலையில் நிதி கைமாறிவிட்டது. 
ரமணி, சென்னை குருநானக் கல்லூரியில்
புதுமுக வகுப்பு மாணவன். அங்கேயே மாணவர்களைத் திரட்டி அவசரநிலைக்கெதிராக ஒருநாள்
ஸ்டிரைக் செய்து அது பிரச்சினை ஆகிவிட்டது. வீடுதேடி வந்த உளவுத்துறை அதிகாரிகள்
சின்னப் பையன்தானே மடக்கிவிடலாம் என்று நினைத்தனர். ரமணியின் பெற்றோர்களுக்கும்
ஏதோ தடியடி, கைது என்று இல்லாமல் வீடுதேடி வந்து நல்ல வார்த்தையாக பேசுகிறார்களே
என்று நெகிழ்ந்துவிட்டனர்.
 
வந்த அதிகாரிகளிடம் ‘அவசரநிலை என்பது
ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமானது’ என்று சொல்லிமுடித்தான் ரமணி.
 
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்த
அதிகாரி ஒருவர் சொன்னார், ‘தம்பி, நீ சொல்லறது எல்லாம் நியாயம்தான். ஆனால்
ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களே உள்ள போய்ட்டாங்க. உன்னால என்ன செய்ய
முடியும்?’ என்று கேட்டார்.
 
பளிச்சென்று வந்தது பதில்.
ரமணி சொன்னான். ‘இந்திரா காந்தி செய்யறது
தப்புனு தெரியுதில்ல. உங்களால எதிர்க்க முடியல. என்னால முடியுது. எழுந்து போய்
வேலையைப் பாருங்க.’
 
இந்தத் துணிச்சலுக்கு ரமணி கொடுத்தது
பெரிய விலை. இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட ரமணி அனுபவித்தது
ஆறுமாத சிறைத் தண்டனை.
கோபாலும் மத்திய தர வர்க்கம்தான்.
இளமைப் பருவம்தான். ஒல்லியான உடல், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத அளவில் ஒரு
வீரம். கோபாலுக்கும் அவசர நிலையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்ததற்காக ஆறு மாதம்
சிறைத் தண்டனை வர இருந்தது…
காந்திநகரில் இருக்கும் கல்கி
மண்டபத்தில் நாற்பத்து இரண்டாவது அரசியல் சட்டதிருத்தம் தொடர்பான கூட்டம் நடந்தது.
இதற்காக அழைக்கப்பட்டவர்கள் 200 பேர். வந்தவர்கள் 16 பேர். கூட்டத் தலைவர்
விடுதலைப் போராட்ட வீரர் N.S.வரதாச்சாரி. கண்ணன், கோபால், ரமணி, நான்,
ராஜேந்திரன், தெய்வ சிகாமணி ஆகியோர்தான் பொதுமக்கள். எட்டுப் பேர் போலீஸ்.
பேச்சாளர் ஸ்தாபன காங்கிரஸ்காரர்
எர்னெஸ்ட் பால். தண்டையார் பேட்டையிலிருந்து ஆட்டோவில் வந்த எர்னெஸ்ட் பால்
இளைஞர், குமரி அனந்தனுக்கு வேண்டப்பட்டவர். அவருக்குத் துணையாக இரண்டுபேர்
வந்திருந்தார்கள், மாலையோடு. துணைக்கு வந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல்
மண்டபத்துக்கு வெளியே நின்றார்கள். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
‘கூட எதுக்கு ஆள கூட்டிட்டு வந்தீங்க?
அவங்களையும் அரெஸ்ட் பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க?’ என்று கேட்டேன்.
 
‘நம்பள அரெஸ்ட் பண்ணிட்டா வீட்டுக்குத்
தகவல் சொல்லணும்ல, அதுக்குத்தான்’ என்ற பதிலில் அவருடைய அரசியல் முதிர்ச்சி
வெளிப்பட்டது…
இதே காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக்
கழகத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த
யோகலஷ்மி கல்யாண மண்டபத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது (03-08-1976).
அவசரநிலையைப் பொருத்தவரை, தொடர்ந்து திராவிட இயக்க எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு
என்கிற வகைமையிலேயே பயணித்துக்கொண்டிருந்த நான்கூட ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்
ஒன்று உண்டு – அது அவசர நிலையின்போது, அதை எதிர்த்து நின்ற கருணாநிதியின் உறுதி.
யோகலஷ்மி கல்யாண மண்டபத்தில் நடந்த
கூட்டத்திற்கு நானும் நண்பர்களும் போயிருந்தோம். அரசாங்கத்தின் கெடுபிடிகளை மீறி
அரங்கம் நிரம்பி வழிந்தது ஆச்சரியமாக இருந்தது.
 
முதலில் பேசிய திமுக பேச்சாளர் ஒருவர்
கூட்டமெங்கும் நிரவியிருந்த போலீஸ் வலிமையைப் பார்த்துப் பயந்துவிட்டார் என்று
நினைக்கிறேன். அது ரகுமான்கானாக இருக்கலாம். பெயர் சரியாக நினைவில் இல்லை,
சொதப்பிவிட்டார் என்பது மட்டும் நினைவிலிருக்கிறது.
‘காலத்திற்கு ஏற்றபடி, சமூகத்தின்
தேவைகளுக்கு ஏற்றபடி சட்டத்தில் திருத்தங்களைச் செய்யலாம். ஒரு பெண் குழந்தையாக
இருக்கும்போது அதற்கு நாம் அணிவிப்பது பாவாடை; அது வளர்ச்சியடைந்த பிறகு மேலாடை
தேவைப்படும்; அடுத்த கட்டமாகப் புடைவை. இப்படித்தான் சட்டத்தின் திருத்தங்களை சமூக
வளர்ச்சியின் குறியீடாகப் பார்க்க வேண்டும்’ என்றவாறு பேசி அவர் அமர்ந்துவிட்டார்.
அதாவது இந்திரா செய்தது சரிதான் என்கிற ரீதியில் உளறிவிட்டார். இது கூட்டத்தில்
சலசலப்பை ஏற்படுத்தியது.
நிறைவாக உரையாற்ற வந்தார் திமுக தலைவர்
மு.கருணாநிதி.
அவருடைய நீண்ட உரைக்காகத்தான் அந்தக் கூட்டம்
காத்திருந்தது;
தன்னுடைய உரையின் இடையே முந்தைய பேச்சாளரின் பாவாடை,
மேலாடை, புடைவை மேற்கோளைக் குறிப்பிட்டுத் தன்னுடைய எதிர்வினையால் கூட்டத்தைக்
கவர்ந்துவிட்டார்.
 
‘காலமாற்றத்தில் உருவம் மாறுகிறது.
உருவத்திற்கு ஏற்றபடி உடை மாறுகிறது. அதெல்லாம் தவறில்லை, அழகுதான். பெண்ணுடைய
வளர்ச்சிக்கு ஏற்றபடி ஆடை மாற்றம் அவசியம்தான், சமூகத்திற்கும் சமூகத்தின்
வளர்ச்சிக்கும், அதற்கான சட்டங்களுக்கும் இது பொருந்தும். வளர்ச்சிப்படிகளில்
பாவாடை புடைவையாக மாறலாம்; ஆனால் இப்போது நாட்டிலே பரவிக்கொண்டிருக்கிற கலாசாரப்படி
ஆணா, பெண்ணா என்று அறியமுடியாதபடி அணிந்துகொள்கிற கால்சட்டையும் மேல்சட்டையும்தான்
நமக்கு உறுத்தலாக இருக்கிறது. சட்டத் திருத்தங்கள் செய்யலாம்; ஆனால் சட்டத்தின்
அடிப்படைக் கூறுகளை அழித்துவிடக் கூடாது’ என்று சொல்லி முடித்தார்.
 
வீட்டிற்குத் திரும்பிவரும் வழியில்
நண்பர்களிடம் நான் சொன்னேன், ‘கருணாநிதியைப் பாத்தியா, ரகுமான்கானை மடக்கிவிட்டார்.’
கூட இருந்த கண்ணன், ‘கருணாநிதியை நம்பாதே. ரகுமான்கானிடம் நீ இப்படிப் பேசு, நான் அப்படிப்
பேசுகிறேன் என்று சொல்லியிருப்பார். எல்லாமே செட்டப்’ என்று சொல்லி
முடித்துவிட்டான்.
(தொடரும்…)

Posted on Leave a comment

உரிமைக்குரல்: பதிப்புரிமை – சன்மானம் – நாட்டுடைமை | கோ.இ.பச்சையப்பன்

மனிதகுல வரலாற்றின் கண்டுபிடிப்புகளில் மகத்தானவையாக போற்றப்படுவன இரண்டு, ஒன்று சக்கரம், இரண்டாவது அச்சுக்கலை. கூடன்பர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் மனிதனின் அறிவுப் புரட்சியில் ஆற்றிய பங்களிப்பை விவரிக்க ஒரு கட்டுரை போதாது.

ஓலைச்சுவடிகளில் எழுதும் சிரமத்தைத் தளர்த்தவே சுருக்கமான பாடல் வடிவத்தைத் தமிழர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். சுவடிகளைப் படியெடுக்கவே தமிழகத்தில் பல பகுதிகளில் ‘எழுத்துக்காரர்கள்’ எனப்படுவோர் வசித்ததாக எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் தம்பிரான் வணக்கம். இருபதாம் நூற்றாண்டில் அச்சுககலை புத்தக வெளியீடுகளை இலகுவாக்கியதற்கு இணையாக வாசிக்கும் வழக்கமும் வளர்ந்தது. எனினும் க்ரியா ராமகிருஷ்ணன் கூறுவதைப் போன்று புத்தகங்கள் தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக இன்னும் மாறவில்லை.

1914ல் காலனி ஆதிக்க பிரிட்டிஷார் ‘காப்புரிமை’ சட்டத்தை இந்தியாவில் இயற்றினர். சுதந்திர இந்தியாவில் 1952ல் இச்சட்டம் நவீனப்படுத்தப்பட்டது. பரவலான இது ‘காப்பிரைட் சட்டம்’ என்று அறியப்படுகிறது. ஒரு படைப்பு எவ்வகையைச் சேர்ந்தது எனினும் (எழுத்து, பேச்சு, புகைப்படம், இசை) அதன் உரிமை படைப்பாளிக்கு என்பதை இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது. படைப்பாளி தனது படைப்பின் மீதான உரிமையை சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிறருக்கு விற்று அதன் மூலம் சன்மானம் (ராயல்டி) பெறலாம். மேலும் அனுமதியின்றி தன் படைப்பை பிறர் நுகர்ந்தால் வெளியிட்டால் வழக்கு தொடுக்கலாம்.

எல்லா இந்தியச் சட்டங்களைப் போன்றே நம் சமுதாயத்தின் யோக்கியதையை நிரூபிக்கும் வகையில் இச்சட்டமும் தவறாகப் பயன்பட்ட வரலாறு உண்டு. படைப்பாளிக்குப் பாதுகாப்பானதாக மேலோட்டமாகத் தோன்றும் இந்தச் சட்டம், படைப்பின் மீதான உரிமைக்குரல்வளையை நெருக்கியதும் உண்டு.

எழுத்தாளர் தேவனை அறியாதவர்கள் குறைவு. சிவந்த நிறம், சுருட்டை முடி, வஜ்ரம் பாய்ந்த உடல் என்ற கதாநாயகனுக்குரிய எந்த இலக்கணமும் இல்லாமல், விளாங்காய் மண்டை, வழுக்கைத் தலை, ஒட்டடைக்குச்சி தேகம் என தேவன் படைத்த ‘துப்பறியும் சாம்பு’ என்றென்றும் வாழும் பாத்திரமல்லவா? கல்கிக்குப் பிறகு ஆனந்த விகடனின் ஆசிரியரன அவர் தன் பேனாவலிமையால் கல்கியின் வெற்றிடம் விகடனின் விற்பனையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். கதை, கட்டுரை, பயண நூல்கள் என எழுதிக்குவித்த தேவன், தான் மரணமடைந்த 1955ம் ஆண்டு வரை தன் படைப்புகளில் ஒன்றைக்கூட புத்தக வடிவில் பார்க்கவில்லை என்பதை நீங்கள் நம்புவீர்களா? விகடனின் பதிப்பாளர் வாசனின் பதிப்புரிமை தேவனை – புத்திரப்பேறில்லாத சோகத்துடன் தன் புத்தகம் பார்க்காத சோகமும் சேர்ந்து மரணமடைய வைத்தது.

எழுத்தாளர் அகிலன் கூட, விகடனில் பரிசுபெற்ற தன் சிறுகதைகளைப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே அச்சேற்ற முடிந்தது. தமிழுலகில் முதல் முனைவர் பட்டம் பெற்ற மு.வ. என்று அன்புடன் அழைக்கப்டும் மு. வரதராசனாரை அறியாதவர்கள் இலர். பரிமேலழகர் முதல் சாலமன் பாப்பையா வரை திருக்குறளுக்கு உரை எழுதியிருப்பினும், மு.வ.வின் தெளிவுரை தனித்துவம் மிக்கதான இன்றும் விளங்குகிறது. தனது தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்திடம் மிகக் குறைந்த தொகைக்கு விற்றுவிட, பின்னாட்களில் அது இலட்சக்கணக்கில் விற்க, மு.வ. திகைத்தார். படிப்பறிவு இருந்தாலும் மு.வ. பட்டறிவு இல்லையே என வருந்தியிருக்க வேண்டும். பின்னாட்களில் பல நாவல்கள் எழுதிய அவர் பதிப்புரிமையை யாருக்கும் வழங்காமல், விற்பனை உரிமையை மட்டும் பாரி நிலையத்திற்கு தந்தார். ‘சூடு கண்ட பூனை’யல்லவா?

2007ம் ஆண்டு ஈவெராவின் ‘குடியரசு’ இதழ்த் தொகுப்பை பெரியார் திராவிடர்கழகம் நூல் வடிவில் கொண்டுவர முயன்றபோது, தி.க.வின் வீரமணி நீதிமன்றம் சென்றார். பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கம் பற்றிய விவாதங்கள் மேலெழ மேற்படி நிகழ்வு வித்திட்டது.

அண்மையில் இளையராஜா தன் பாடல்களின் உரிமைக்காகப் போராடி அதன் விளைவாக ஒலி வடிவிலான படைப்பிற்குரிய மரியாதையை மீட்டெடுத்ததை நாம் மறக்க முடியாது.

ஒரு எழுத்தாளர் மறைந்து குறிப்பிட்ட காலம் நிறைவுற்றபின் அரசே முன்வந்து அதன் உரிமையாளர்களுக்கு (பெரும்பாலும் படைப்பாளியின் வாரிசுகளுக்கு) குறிப்பிட்ட தொகை அளித்து, அப்படைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை வழங்குவதை நாம் அறிவோம்.

நாட்டுடைமை ஆக்கப்படுவதன் மூலம் ஒரு படைப்பு ஜனநாயகப்படுத்தப்படுகின்றது. எளிய விலையில் பரவலாக மக்களைச் சென்றடைகின்றது. மேலும், வாரிசுகளுக்கு பணப்பயன் கிடைக்கவும் வழிவகுக்கின்றது. கல்கி, நா.பா., அண்ணா, காந்தியடிகள் என ஏராளமானவர்களின் உன்னதப் படைப்புகள் மக்களை அடைய ‘நாட்டுடைமை’ உதவிற்று எனில் அது மிகையில்லை.

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் மற்றும் அகிலன் ஆகியோரின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது அவர்களின் வாரிசுகள் அதனை மறுதலித்ததும் நிகழ்ந்தது.

1990களில் தாகூரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படாமல், பி.வி.நரசிம்மராவின் சிறுபான்மை காங்கிரஸ் அரசின் பத்தாண்டுகள் நீட்டிப்புச் சட்டத்திருத்தத்தால் விஸ்வபாரதி பல்கலையிடமே தாகூர் முடங்கிப்போனார். அரசியலுக்கு இணையாக எழுத்துலகின் மகத்தான ஆளுமை பெற்றிருந்த நேருவின் படைப்புகள் சோனியாவிடமே சுருங்கிப்போயுள்ளது.

எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் உயிருடன் இருந்தபோதே அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது ஒரு புதுமை. மருத்துவ சிகிச்சையை அவர் மேற்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புத் தேர்வு அது என்பது உண்மை.

கண்ணதாசன் மற்றும் அகிலன் போன்ற விற்பனை வாய்ப்பு குன்றாத ஜீவநதிகளின் ஊற்றை நாட்டுடைமை ஆக்கித் தூர்ந்து போகாமல் காப்பாற்ற வாரிசுகளுக்கு மனமில்லையே! கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் விற்பனையில் முதல் பத்துக்குள் இடம் பெறுவதையும் பல பதிப்புகள் கண்டிருப்பதையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால் இது புரியும்.

தமிழில் எழுதிப் பிழைக்கமுடியாது என்பது ஓரளவிற்கு உண்மை. வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் தன் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான பொருளை எழுத்தால் பெற முடியும் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

இலக்கியம் என்ற பிசாசு தன்னைப் பிடித்து ஆட்டிய காலம் வரை எழுதி வந்ததாகக் குறிப்பிட்டுக்கொண்ட ஜெயகாந்தன், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் வரை தன் நூல்களின் மூலம் ராயல்டி பெற்று வந்தார். ஜேகே எழுதியதை நிறுத்திப் பல்லாண்டுகள் ஆன பின்பும் இது சாத்தியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எண்பதுகளின் மத்தியகாலம் வரை வாழ்ந்த சாண்டில்யன் தன் ‘விஜயமாதேவி’ நாவலிற்கான ராயல்டியாக ஒரே தவணையில் ரூ 50,000 பெற்றுள்ளார். 80களில் இது மிகப்பெரிய தொகை. பாரதி பதிப்பகத்தின் பதிப்பாளர் பழ.சிதம்பரம் தனது பதிப்புரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரமணிசந்திரனின் நூல்கள் (அதன் இலக்கிய அந்தஸ்து விமர்சனத்திற்கு உரியதாயினும்) கட்டுக்கட்டாகக் கடல்கடந்து வாங்கப்படுகின்றன. அம்மணிக்குப் பணத்தையும் குவிக்கின்றன.

ராயல்டியில் ஏமாந்த எழுத்தாளர்களும் உண்டு. சுஜாதா, துக்ளக் பேட்டியொன்றில், ‘எனது லாண்டரி கணக்கைக்கூட’ (இதற்கு மாற்றாக ‘வண்ணான்’ என்ற சொல்லை சுஜாதா பயன்படுத்தியதாக வண்ணதாசன் கூறுகிறார்) வெளியிடுவதற்கு இதழாசிரியர்கள் தயாராக உள்ளனர் – எனக் கூறும் அளவிற்கு வாசகர்களால் வாசிக்கப்பட்டார். தனது நூல்கள் விற்பதற்குத் தகுந்த ராயல்டி தனக்குக் கிடைக்கவில்லை என்ற குறை அவருக்கு இருந்தது உண்மை.

தமிழில் முதலில் நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரன் பாரதி. தேசியக் கவி என்னும் மகாகவி என்றும் இன்று புகழப்படும் பாரதியின் படைப்புகள், டி.கே.சண்முகம், நாரண துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், ஜீவா உள்ளிட்ட பலரின் பெரும் போராட்டத்திற்குப் பிறகே நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த வரலாற்றை ஆய்வாளரான ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்ற நூலில் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

பாரதியின் பாடல்வரிகள் இன்று மேற்கோள் காட்டப்பெறாத பட்டிமன்றங்களே இல்லை. ரொளத்ரம் பழகு, நேர்படப்பேசு எனப் புகழ்பெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளுக்கு பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ கைக்கொடுக்கிறது. மணிக்கொடி, சுதந்தரச்சங்கு போன்ற பாரம்பரிய இதழ்களின் பெயர்கள் கூட பாரதியின் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவைதாம்.

வள்ளுவரை விடவும் கூட அதிக மேற்கோள் காட்டப்படும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன் பாரதி. அரசியல் ரீதியாக அவரை விமர்சிப்பவர்கள் கூட அவர் மகாகவி என்பதை மறுக்கவில்லை. தமிழை நவீனப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மையானவர் பாரதி. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எனத் தீவிரமாக இயங்கியவர் பாரதி. ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ஜார் மன்னனின் வீழ்ச்சியைப் பாடிய ஒரே இந்தியப் படைப்பாளி பாரதி. தான் வாழ்ந்த கால அரசியல் நிகழ்வுகளைத் துணிச்சலாகப் பிரதிபலித்த பாரதி சமகாலத்தில் விதந்தோதப்பட்டாலும் வாழுங்காலத்தில் வரவேற்பு பெற்றாரா?

தீப்பெட்டிகள் போல் என் படைப்புகள் சரளமாகவும் விலை மலிவாகவும் பரவ வேண்டும் என விருப்பம் தெரிவித்த பாரதியின் படைப்புகளில் நூற்றிருபது பக்கங்கள் தவிர வேறெதுவும் நூல் வடிவம் (அவர் மரணமடையும் வரை) பெறவேயில்லை என்பது மாபெரும் அவலம்.

‘சுதேசமித்திரன்’, ‘இந்தியா’, ‘விஜயா’ எனப் பல ஏடுகளில் பாரதியின் படைப்புகள் அச்சேறியபோதும் நூல் வடிவம் பெறவில்லை. ஆகச்சிறந்த அவருடைய ஆக்கங்களான ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்றவையும் விதிவிலக்கில்லை. பாரதியின் மரணத்திற்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை மட்டுமே காரணமன்று. அன்றைய தமிழ்ச் சமூகமும்தான். தன் படைப்புகளை நூலாக்கம் பெற உதவி செய்வோருக்கு அதன் விற்பனையில் பங்குதர பாரதி விளம்பரம் வெளியிட்டும், கடிதம் எழுதியும் தமிழ்ச்சமூகம் காட்டிய பாராமுகமே அவரைக் கொன்றது.

அமரத்துவமான படைப்புளும் வறுமையுமே பாரதி தன் குடும்பத்திற்கு விட்டுச்சென்ற பரிசுகள். மனைவி செல்லம்மாள் பாரதி, பாரதியின் தம்பி விஸ்வநாத அய்யருடன் இணைந்து படைப்புகளை நூல் வடிவமாக்கினார். எனினும் பெரிய வரவேற்பில்லை. 1930ம் ஆண்டில் பாரதியின் பாடல்களை இசைத்தட்டாக வெளியிடும் உரிமையை செல்லம்மாள் பாரதி சுராஜ்மல் என்ற நிறுவனத்திடம் கையளித்தார். வெறும் 450 ரூபாய்க்குக் கைமாற்றப்பட்ட இத்தொகை, அவரது மகள் தங்கம்மாளின் திருமணத்திற்குப் பயன்பட்டிருக்கக்கூடும். இந்த உரிமையை 1946ல் மிகபெரிய திரையுலக ஜாம்பவான் ரூ 9500 கொடுத்து வாங்கினார். அவர் ஏ.வி. மெய்யப்பச்செட்டியார்! சுருக்கமாக ஏ.வி.எம். அவருடைய தந்தையின் பெயர் ஆவிச்சி செட்டியார். எனவே, ஆங்கிலத்தில் ஏவி!

1935ல் டி.கே.சண்முகம் ‘மேனகா’ என்ற திரைப்படம் எடுத்தார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மூன்று அம்சங்களுக்காக இன்றளவும் நினைவுகூரப்படும் திரைப்படம் அது.

அ) முதல் சமூகக்கதை படம்

ஆ) வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவலைத் திரைவடிவமாக்கி வந்தது.

இ) பாரதியின் பாடலைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ்ப்படம்.

பாரதியின் பாடல் உரிமைகளைப் பெற்றவுடன் ஏ.வி.எம். செட்டியார் செய்த முதல் வேலை டி.கே.எஸ்ஸிற்கு சம்மன் அனுப்பியதுதான். டி.கே.எஸ். திகைத்தார்.

பாரதியின் மறைவிற்குப்பிறகு அவருடைய பாடல்கள் பல காரணங்களுக்காகப் பிரபலமடையத் தொடங்கி இருந்தன. சுதந்தரப் போரில் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்ட மக்கள் அவற்றைப் பாடினர். ‘பாரதி தேசியக் கவியா? மகா கவியா?’ என்ற விவாதத்தின் மூலம் கல்கியும், வ.ரா.வும் அவரை விவாதப் பொருளாக்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக 1938ல் பாரதியின் பாடல்களைப் பாட பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்தது. தடை செய்யப்பட்ட படைப்பு எவ்விதம் பிரபலமடையும் என்பதை ‘விஸ்வரூபம்’ படம் நமக்கு அண்மையில் நிரூபித்தல்லவா?

பாரதி மணிமண்டம் திறப்பு விழாவில் பாரதி படைப்புகளை அரசே வாங்கி அதனை நாட்டுடைமை ஆக்க வேண்டும் எனப் பொதுவுடைமை தலைவர் ஜீவா முழங்கினார். தனிச்சொத்து மறுப்பை அடிநாதமாகக்கொண்ட சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவாதான் ‘நாட்டுடைமை’ என்ற சிந்தனையை விதைத்தார்.

கட்டுரையின் முற்பத்தியில் கூறப்பட்ட பிரமுகர்கள் மற்றும் எண்ணற்ற ஆர்வலர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் அப்போதைய ஓமந்தூரார் தலைமையிலான அரசின் கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார், ஏ.வி.மெய்யப்பச்செட்டியாரை வலியுறுத்தி பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கினார். இணையாக பாரதியின் நூல்களையும் பாரதியின் தமையனார் விஸ்வநாத ஐயர் தானே முன்வந்து தேசத்திற்கு அளித்தார். 1949ல் இவையெல்லாம் நடந்தேறின.

1981ல் வெளியிடப்பட்ட ஒரு ஒலிப்பேழையில் பாரதி படைப்புகளை தேசத்திற்கு இலவமாக ஏவி.எம். செட்டியார் தாரைவார்த்ததாக (அப்போது அரசாகவோ – பேரரசாகவோ ஆகி இராத) வைரமுத்து எழுதியிருந்தார். பாரதி படைப்புகளை வேறுவழியின்றி கையளித்த ஏவி.எம். செட்டியார் தனக்குப் பாடல் வாய்ப்பளிக்கும் பெருநிறுவனத்தை நிறுவியவர் என்பதற்காகவே வைரமுத்து புகழ்வது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் எதன் பொருட்டும் உண்மை வரலாறு மறக்கப்படக்கூடாது. ஏனெனில் பாரதியின் படைப்புகள் அக்னிக்குஞ்சுகள்!

Posted on Leave a comment

கம்பனில் வேதாந்தம்: ஐந்து மகத்தான உவமைகள் | ஜடாயு

தமிழின் மூன்று மகத்தான கவிஞர்களாக கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோரைத் தனது பாடல்களில் பாரதியார் பட்டியலிட்டுள்ளார். அதில் ஒரு பாடல்,


சிலப்பதிகாரச்
செய்யுளைக் கருதியும்,
திருக்குறள் உறுதியும், தெளிவும், பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது’ என்று
உறுதிகொண்டிருந்தேன்…
என்று
போகிறது. இதில் கம்பனுக்குத் தரப்பட்டுள்ள புகழுரை சிந்தனைக்குரிய ஒன்று. எல்லையொன்றின்மை
என்று பாரதி சொல்வதை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, வாழ்க்கையை,
மனித விழுமியங்களைக் கூறுகிறார் என்று கொள்ளலாம். அன்பிற்கு, தியாகத்திற்கு, சகோதர
பாசத்திற்கு, பக்திக்கு அல்லது ஆசைக்கும் தான் எல்லை உண்டா? அதன் அடிப்படையில்
லட்சுமணனும், பரதனும், கைகேயியும், குகனும், வாலியும், ஜடாயுவும், லங்கா தகனமும்,
அக்கினிப் பிரவேசமும், மாயமானும் வாழ்க்கையின் சில பரிமாணங்களின் ஆழ்ந்த
குறியீடுகளாகவே நம் கலாசார வெளியில் பதிந்து விடச் செய்தவன் கம்பன். இது மிகவும்
பொருத்தமாக இருந்தாலும் வலிந்து கொள்ளும் பொருள் தான். அடுத்ததாக, எல்லையொன்றின்மை
என்பதற்கு நேர்ப்பொருள் முடிவற்றது, அனந்தம் என்பதாகும். இச்சொல் இந்திய ஞான
மரபிலும் கவி மரபிலும் பிரம்மம் எனப்படும் பரம்பொருளையே குறித்து நிற்கிறது. எனவே,
அந்தப் பரம்பொருளின் இயல்பைக் குறிகளால் காட்டக் கம்பன் செய்த முயற்சி என்றாகிறது.
இது கம்பரை மாகவிஞன் என்ற நிலையோடு கூட, தத்துவ ஞானியாகவும், வேதாந்தியாகவும்
சித்தரிக்கிறது.
கம்பரின்
இந்தப் பரிமாணத்தையும், கம்பராமாயணத்தில் வேதாந்தக் கருத்துக்கள் அங்கங்கு அமைந்து
வரும் பாங்கையும் குறித்து, சில அறிஞர்களும் ஆய்வாளர்களும் சுட்டிக்
காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, தத்துவக் கருத்துக்களை எடுத்துரைக்கும்போது,
தொன்றுதொட்டு உபநிஷதங்களும் சங்கரர் முதலான ஆசாரியர்களும் வேதாந்த மரபில் கூறியுள்ள
உவமைகளைத் தனது கவிதையில் கம்பர் உரிய இடங்களில் அழகுற எடுத்தாளும் பாங்கு கற்று
இன்புறுதற்குரியது. ‘கல்வியிற் பெரியவன் கம்பன்’ என்ற கூற்றுக்கேற்ப, வேதாந்த
சாஸ்திரத்திலும் கம்பனுக்கு நல்ல பரிச்சயமிருந்தது என்பது இவற்றிலிருந்து
புலனாகிறது.


1. பொன்னின்
பிறிதாகில பொற்கலனே?
நின்னின் பிறிதாய் நிலையின் திரியா
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்?
பொன்னின் பிறிது ஆகில பொற்கலனே.

யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
அசையும்
அசையாப் பொருள்களினால் ஆன இவ்வுலகம் (ஜகத்), உன்னிலிருந்து வேறுபட்டதாகவும், தனது
நிலையில் மாறாததாகவும், அதே சமயம் தன்னுள் வேறுவேறானவற்றைக் கொண்டுள்ளதாகவும் தோன்றுகிறது.
எனினும், உன்னிலிருந்து வேறுபட்டதா இவ்வுலகம்? பொன்னால் செய்த அணிகலன்கள் பலவிதமாக
இருந்தாலும், பொன்னை விட்டு வேறு ஒன்றாக ஆவதில்லை.
ஆதிசங்கரர்
தனது பல நூல்களில் எடுத்தாண்ட உவமை இது. உதாரணமாக,
ஸச்சிதா³த்மன்யனுஸ்யூதே
நித்யே விஷ்ணௌ ப்ரகல்பிதா: |
வ்யக்தயோ விவிதா
: ஸர்வா ஹாடகே கனகாதி³வத் ||
உண்மை,
அறிவு (ஸத், சித்) வடிவமாகவும், அழிவற்றதாகவும், எங்கும் வியாபித்துள்ளதுமான
(விஷ்ணு) பரம்பொருளில் பலவித வேற்றுமையுள்ள பொருட்கள், தங்கத்தில் காப்பு
முதலியவைகள் செய்யப்படுவது போல கற்பிக்கப் பட்டுள்ளன.

ஆத்மபோதம், 9
‘நீருமாய்த்
தீயுமாகி நிலனுமாய் விசும்புமாகி, ஏருடைக் கதிர்களாகி..’ என்கிறார் அப்பர். ‘நீரும்,
தீயும், நிலனும், விசும்பும் ஆக்கி’ என்று கூறவில்லை. ‘வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி ஊனாகி உயிராகி’ என்கிறது திருவாசகம். ‘வானாக்கி, மண்ணாக்கி, வளியாக்கி,
ஒளியாக்கி’ என்று கூறவில்லை. இந்துமதத்தின் கடவுள் என்பவர் ஏதோ ஏழு வானங்களுக்கு
அப்பால் பரமண்டலத்தின் உட்கார்ந்துகொண்டு உலகத்தைப் படைத்து வேடிக்கை பார்க்கும் பிரபஞ்சத்தினின்றும்
வேறுபட்ட கடவுள் (extra Cosmic God) அல்ல. மாறாக, உலகத்தின் ஒவ்வொரு
அணுவுக்குள்ளும் அணுவாக நின்று பிரபஞ்சமாகவே திகழும் கடவுள் (Cosmic God). நரசிம்ம
அவதாரத்தின் மையமான தத்துவமே இதுதான். அதனால்தான், அந்த அவதாரக் கதையைக் கூறும்
படலத்தில் பிரகலாதனின் துதியாக இந்தப் பாடலைக் கம்பர் அமைத்திருக்கிறார்.
‘படைப்புகளை
வணங்குவது மூடத்தனம் (ஷிர்க்). படைத்தவனாகிய அல்லாஹ் ஒருவனே வணங்குவதற்குரியவன்’
என்பது போன்ற விளம்பரப் பலகைகள் தமிழ்நாட்டில் இஸ்லாமிய வஹாபிய மதப்பிரசாரங்கள்
கோலோச்சும் சில இடங்களில் தென்படுவதைப் பார்த்திருக்கலாம். இந்துக்கள் பூமியையும்
நதிகளையும் மலைகளையும் மரங்களையும் புனிதமாகக் கருதி வழிபாடு செய்வதைக் கேலியும்
கண்டனமும் செய்யும் நோக்கத்துடனேயே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால்
இந்து சமயப் பண்பாடு காலம்காலமாக இயற்கையையும் சிருஷ்டியையும் தெய்வத்தன்மை
உடையதாகவே கருதி வந்திருக்கிறது. படைப்போன், படைப்பு என்ற இருமைக் கோட்பாடும் அதனால்
விளையும் வேற்றுமை உணர்வுகளும் அதில் இல்லை. ‘படைப்போனும் படைப்பாளியும் அல்ல,
நடராஜனும் அவனது நடனமுமே’ (No creator and creation, only the dancer and his
dance) என்ற மேற்கோள் இந்தத் தத்துவத்தின் சாரம்தான். இந்துத் தத்துவங்களுக்கும்
ஆபிரகாமிய மதக்கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படையான ஒரு வேறுபாட்டை விளக்கும்
வகையில் மேற்கண்ட உவமை அமைந்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையில்லை.
2. ஆலமும்
வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்

காலமும் கருவியும் இடனும் ஆய் கடைப்
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய்
சீலமும் அவைதரும் திருவும் ஆய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்.

யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
[இடனும் –
களனும்; ஆய் – ஆகி; கடைப்பால் – இறுதியில்; துய்ப்பானும் – அனுபவிப்பனும்; சீலம் –
நல்லொழுக்கம்]
உலகில்
எந்த ஒரு செயலையும் செய்வதற்குரிய காலம் கருவி, களன் மூன்றுமாய் ஆகி, அந்தச்
செயலின் இறுதிப் பயனாகவும், அந்தப் பயனை அனுபவிப்பனாகவும் தானே ஆகி,
நல்லொழுக்கமும், அதனால் அடையும் செல்வமும் தானே ஆகியவன் அந்தப் பரம்பொருள்.
ஆலமரமும் அதன் விதையும் போல, உலகமனைத்தும் தன்னுள் அடங்கியிருக்கும் படியான
பேராண்மையுள்ளவன் அவன்.

பிரகாலதன்
இரணியனுக்கு நல் உபதேசம் செய்யும் பகுதியில் இப்பாடல் வருகிறது. இதில் வரும்
தத்துவார்த்தமான அந்த உவமை, மிகத் தொன்மையானது. வேதாந்தத்தின் ஆதிமுதல் நூல்களான
உபநிஷதங்களிலேயே அது உள்ளது. சாந்தோக்ய உபநிஷதத்தில், குருவான ஆருணி உத்தாலகர்
என்ற முனிவருக்கும் அவரது மகனும் சீடனுமாகிய சுவேதகேது என்ற சிறுவனுக்கும் இடையில்
நிகழும் கீழ்க்கண்ட உரையாடலில் இது வருகிறது. நீயே அது (தத்வமஸி) என்ற மகா
வாக்கியமே இதன் இறுதி உபதேசமாக அமைந்துள்ளது.
இந்த
மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.
இதோ ஐயா.
இதை உடை.
உடைத்துவிட்டேன்
ஐயா.
அதில்
என்ன காண்கிறாய்?
துகள்கள்
போன்று சிறிய விதைகள், ஐயா.
அவற்றில்
ஒன்றை உடை.
உடைத்துவிட்டேன்
ஐயா.
அங்கு
என்ன காண்கிறாய்?
ஒன்றுமில்லை
ஐயா.
அவர்
சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த
நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது. சிரத்தை கொள்,
அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது
ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
இதில்
வரும் ‘ந்யக்ரோதஸ்ய பலம்’ என்பது அத்திப்பழம் என்று பொதுவாக மொழியாக்கம் செய்யப்
படுகிறது. ஆனால் இது ஒரு பொதுப்பெயராக அத்திமரம், ஆலமரம், அரசமரம் ஆகிய மூன்றையும்
குறிப்பதாகக் கொள்ளலாம். இவை மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு
வந்துள்ளன. நியக்ரோத (nyagrodha), உதும்பர (udumbara), அஸ்வத்த (ashwattha) என்று
விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் முறையே இந்த மூன்று மரங்களின் பெயர்களும்
அடுத்தடுத்து வருகின்றன.
இந்த மரங்களின்
மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக
அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப்
பருவங்களின் அடியில் மறைந்து கிடக்கிறது. ‘அத்தி பூத்தாற்போல’ என்பது வழக்கு.
கருவுக்குள் உயிர் யாருக்கும் தெரியாமல் குகையில் வளரும் கனல் போல வளர்கிறது,
குழந்தையாக அது வெளிப்படும்போது (manifest) தான் நாம் அதைக் காணமுடிகிறது.
அதேபோலத்தான் பிரபஞ்சமும். அது வெளிப்பட்டு நிற்கும் நிலையை மட்டுமே நாம்
காணமுடியுமே அன்றி அதன் மூலத்தை அல்ல. இந்த மரங்களின் மலர்தலும் கனிதலும்
சிருஷ்டியின் மகா ரகசியத்தின் குறியீடுகள் போல இருப்பதால்தான், தேர்ந்தெடுத்து இத்தகைய
உவமையை நமது ரிஷிகள் கூறினார்கள் என்று தோன்றுகிறது.
3. மொக்குளே
போல முரண் இற்ற அண்டங்கள்

நிற்கும் நெடும் நீத்த நீரில் முளைத்து எழுந்த
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து உன் உளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே
– ஆரணிய
காண்டம், கவந்தன் வதைப் படலம்
[பரம்பரனே
– மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன்; நீத்த நீரில் – வெள்ளத்தில்; மொக்குள் – குமிழ்;
முரண் இற்ற – முரண்கள் அழிந்த; பக்கம் – பக்ஷம், தன்மை]
(அனைத்தும்
அழிந்துவிடும் பிரளயம் எனப்படும் ஊழியிலும்) நிலையாக நிற்கும் பெரு வெள்ளக் கடலில்
முளைத்தெழுந்த குமிழ்கள் போல, (ஒன்றோடு ஒன்றுக்கு நிலவிய) மாறுபாடுகள் அனைத்தும் அழியப்
பெற்ற அண்டங்கள், ஒரே போல மேலெழுந்து, உன்னிடத்தே தோன்றி, உன்னிடத்திலேயே ஒளிந்து
மறைகின்ற தன்மை அறிதற்கு எளிதோ?
ஆதியில்
சிருஷ்டியின்போது அண்டங்கள் அனைத்தும் மாறுபாடற்று ஒரே பொருளாக (singularity)
உள்ளது. அந்த ஒற்றைப் பொருளிலிருந்து ஆகாசமும் (பெருவெளி), ஆகாசத்திலிருந்து
வாயுவும், வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து நீரும் எனப் படிப்படியாக
ஐம்பூதங்களும் தோன்றிப் பல்வேறு மாறுபாடுகளுடன் கூடிய பிரபஞ்சம் முழுவதுமாக
மலர்கிறது. பின்பு பிரளயத்தின்போது, இதற்கு நேரெதிராக, மாறுபாடுகள் அனைத்தும்
படிப்படியாக அழிந்து ஒற்றைப் பொருளாக ஆகின்றது. பிறகு மீண்டும் சிருஷ்டி, மீண்டும்
பிரளயம் என பிரபஞ்ச சுழற்சி தொடர்கிறது. இந்து ஞானம் கூறும் இந்த மகத்தான
பிரபஞ்சவியல் தத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே நவீன இயற்பியல் இத்திறக்கில்
கண்டடைந்து கொண்டிருக்கும் கருத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
பிரம்மமே
உலகிற்கு முதற்காரணமாக உள்ளது என்பதை விளக்கும் உவமை இது.
வேதாந்த
நூல்களில் காரணம் (cause) என்பதை உபாதான காரணம் (material cause), நிமித்த காரணம்
(efficient cause) என்று இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். உதாரணமாக, குடத்திற்கு
மண் உபாதான காரணம்; குயவன், சக்கரம், குயவனின் கருவிகள் முதலியவை நிமித்த காரணம். எப்படியென்றால்,
குடம் மண்ணிலிருந்து உண்டாகிறது என்பது மட்டுமல்லாமல், குடம் இருக்கும் காலம்
முழுவதும் அது மண்ணில்தான் நிலைபெற்றிருக்கிறது. மண்ணைவிட்டுப் பிரித்து குடத்தைத்
தனியாக எடுத்துச்செல்ல முடியாது. குடம் கடைசியாக அழிந்தாலும் அது மண்ணாகிறது. இவ்வாறு
காரியம் (effect) காரணத்திலிருந்து (cause) பிரிக்க முடியாமலிருக்கும்போது அது
உபாதான காரணம் எனப்படுகிறது. மாறாக, குயவன், சக்கரம், குயவனின் கருவிகள் முதலியவை
குடம் உண்டாவதற்குத் தேவையாக இருந்தபோதும், அதன்பிறகு குடத்துடன்
சம்பந்தமில்லாததால், அவை நிமித்த காரணம் என்றாகின்றன.
சங்கரர்
கூறுகிறார்:
உபாதா³னே(அ)கி²லாதாரே
ஜக³ந்தி பரமேஶ்வரே ।
ஸர்க³ஸ்தி²திலயான் யாந்தி பு³த்³பு³தா³னீவ வாரிணி ॥
அனைத்திற்கும்
ஆதாரமாகவும், உபாதானமாகவும் உள்ள பரமேசுவரனிடத்தில், தண்ணீரில் நீர்க்குமிழிகள்
தோன்றி, இருந்து, மறைந்து போவது போல, உலகமெல்லாம் உண்டாகி, இருந்து, அழிந்து
போகின்றன.

ஆத்மபோதம் 8
நீர்க்குமிழிகள்
நீரிலிருந்து எழுகின்றன, நீரில் வாழ்கின்றன, நீரிலேயே அமிழ்கின்றன. நீரைத் தவிர்த்துத்
தனியான இருப்பு என்று ஒன்று அவற்றுக்கு இல்லை. அதே போல, பல்வேறு மாறுபாடுகளுடன்
கூடிய பிரபஞ்சமும் அதன் ஜட, சேதனப் பொருட்களும் (உணர்வற்றவை, உணர்வுடையவை)
பிரம்மத்தினின்று தோன்றுகின்றன. பிரம்மத்தில் வாழ்கின்றன, பிரம்மத்திலேயே மறைந்து
லயமடைகின்றன. எனவே பிரபஞ்சத்திற்கு பிரம்மம் நிமித்த காரணமாக மட்டுமல்ல, உபாதான
காரணமாகவும் இருக்கின்றது. இதுவே அத்வைத வேதாந்தம் கூறும் கருத்து. த்வைதம்,
விசிஷ்டாத்வைதம் முதலான மற்ற தத்துவப் பிரிவுகளில் பிரம்மம் உபாதான காரணம் என்பது
ஏற்கப்படவில்லை. இந்தக் குறிப்பிட்ட உவமையைக் கம்பன் கூறியுள்ள விதம் சங்கரரின்
மேற்கண்ட சுலோகத்தின் மொழியாக்கம் போலவே உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
4.
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான்

காலையின் நறு மலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர் புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால், சொல்லுவோர்க்கு எலாம்
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான்.

யுத்தகாண்டம், இரணியன் வதைப் படலம்
[காலையின்
– காலத்தே; புரை – போன்ற; சூலை – வெம்மை, தாபம்; திருக்கு – மாறுபாடு; வேலையும்
திரையும் – கடலும் அலையும்]
காலத்தே
மலர்ந்த நறுமலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலையில் உள்ள மலர்களைப் போல,
சமயவாதிகளின் மனங்களின் வெம்மை காரணமான மாறுபாடு அல்லாமல், அவனது உண்மைத் தன்மையை
உணர்ந்து கூறும் ஞானிகளுக்கெல்லாம், கடலும் அலையும் போல வேறுபாடில்லாதவன் அவன்.
இந்த
உவமையில் இரண்டு விதமான வேறுபாடுகளையும் கடந்தவன் பரம்பொருள் என்று கவி
சுட்டுகிறார். முதலாவது, பல்வேறு பெயர்களிலும் ரூபங்களிலும் வழிபட்டாலும் பிரம்மம்
எனப்படும் பரம்பொருள் ஒன்றே; அதன் உருவங்களும் பெயர்களும் மாலையில் தொடுத்த
மலர்களைப் போன்றவை என்பது. இக்கருத்து நமது ஞானநூல்களிலும் பக்திப் பாடல்களிலும்
தொடர்ந்து பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ள ஒன்றுதான். இரண்டாவது, பற்பல
மாறுபாடுகளால் ஆன இவ்வுலகம் (பிரபஞ்சம்) பிரம்மத்திலிருந்தும் வேறுபட்டதன்று என்ற
கருத்து. கடலுக்கும் அலைக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்விக்கு வேறுவேறு
விதங்களில் விடைகாண்பதன் மூலமாகவே தூய அத்வைதம் முதல் தூய த்வைதம் வரையிலான
வேதாந்த தத்துவப் பிரிவுகளின் நுட்பமான வேறுபாடுகளை விளக்கி விட முடியும்.
ஸத்யபி பேதா³பக³மே
நாத² தவாஹம்
ʼ ந மாமகீனஸ்த்வம் ।
ஸாமுத்³ரோ ஹி தரங்க³
க்வசன ஸமுத்³ரோ ந தாரங்க³
இறைவா,
வேற்றுமை நீங்கியபோதும், நான் உன்னுடையவன், நீ என்னுடையவனல்லன். அலையன்றோ கடலைச்
சேர்ந்தது? ஒருபோதும், கடல் அலையைச் சேர்ந்ததாக இருப்பதில்லை.
– ஷட்பதீ
ஸ்தோத்ரம் (சங்கரர்)
இறைவா
உனது தன்னியல்பும் (ஸ்வரூபம்) எனது தன்னியல்பும் ஒன்றே. அது ஸச்சிதானந்த வஸ்து.
ஆயினும் நீ நித்யமுக்தன். பெரும் தீயிலிருந்து சிறு நெருப்புப்பொறி கிளம்புவது போல
நான் உன்னிடமிருந்து கிளம்பியுள்ளேன். பிறவிச் சுழலில் மாயையால் அல்லல்படுகிறேன்.
உன் கருணையால் அந்த ஸ்வரூபத்தை உணரப் போகிறேன். ஆகையால் சிறியோனாகிய நான் எப்போதும்
பெரியோனாகிய உன்னுடையவன்தான்.
அத்வைத
உண்மையின் உட்பொருளும், நடைமுறையில் பக்தனின் பக்தி உணர்வும் முரண்பட்டதல்ல என்பதை
இந்த உவமையைக் கொண்டு சங்கரர் விளக்குகிறார்.
திருமழிசையாழ்வாரும்
தனது பாசுரம் ஒன்றில் இதனை அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.
தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே. 

– திருச்சந்தவிருத்தம், நாலாயிர திவ்யப்ரபந்தம்
5.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்,
அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே,
மறைகளுக்கு இறுதி ஆவார்!
– சுந்தர
காண்டம், கடவுள் வாழ்த்து.
[அலங்கல்
– மாலை; அரவு – பாம்பு; விலங்கிய – ஊடுருவிக்கலந்த; விகாரப் பாடு – மாற்றங்கள்;
வீக்கம் – தோற்றம்; கலங்குவது – இல்லாமல் போவது; பொருதார் – போரிட்டார்]
எவருடைய
தரிசனத்தால் ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறு வேறு விதமாக
அமைந்த பன்மைத் தோற்றம், மாலையில் தோன்றும் பொய்ப்பாம்பு போல இல்லாது போய்விடுமோ,
அவரன்றோ கைவில் ஏந்தி இலங்கையில் போர் செய்தார்! – என்று வேதத்தின் எல்லை நிலமாக
இருக்கின்ற ஞானிகள் கூறுவர்.
ரஜ்ஜுஸர்ப்பம்
(கயிற்றரவு) என்று சுருக்கமான பெயரால் அழைக்கப்படும் மிகப் பிரபலமான வேதாந்த உவமை
இது. கயிற்றில் பாம்பின் பொய்த்தோற்றம் ‘அத்யாஸம்’ எனப்படுகிறது. இப்பாடலில் கயிறு
என்னுமிடத்தில் மாலை என்று கூறப்பட்டுள்ள போதிலும் உட்பொருள் அதேதான்.

சங்கரர்
கூறுகிறார்:
ரஜ்ஜுஸர்ப்வதா³த்மானம்ʼ ஜீவோ
ஜ்ஞாத்வா ப
யம்ʼ வஹேத் ।
நாஹம்
ʼ ஜீவ: பராத்மேதி ஜ்ஞாதஶ்சேன்னிர்பயோ பவேத் ॥
-ஆத்மபோதம்,
27
கயிற்றைப்
பாம்பாக (எண்ணுவது) போல, தன்னை ஜீவனாக எண்ணி பயமடைகிறான். நான் ஜீவனல்ல, பரமாத்மா
என்று அறிந்தால் பயம் நீங்கினவனாக ஆகிறான்.
மாலை
நேரத்தில் இருட்டில் ஆற்றங்கரையோரமாகச் செல்லும் மனிதன், கீழே வளைந்து கிடக்கும்
கயிற்றைப் பார்த்து பாம்பென நினைத்துப் பயமடைகிறான். அது காற்றில் சிறிது
அசைந்தாலும் பயந்து ஓடிக் கீழே விழுந்து துன்பமடைகிறான். இவன் பாம்பென்று
நினைத்தாலும் அதனால் கயிற்றில் எந்தவித மாறுபாடும் ஏற்படுவதில்லை. பிறகு
வெளிச்சத்தைக் கொண்டுவந்து, நண்பனின் உதவியுடன் வந்து உற்றுப்பார்த்ததும், இது
பாம்பல்ல கயிறு என்று தெரிந்து கொள்கிறான். பயமெல்லாம் நீங்கிவிடுகிறது. இதைப்
போலவே, தனது உண்மை ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ளாமல் உடல், புலன்கள், மனம்
இவற்றுடன் சேர்ந்து அவைகளையே ப்ரமத்தால் நான் என எண்ணி ஜீவன் உலகில் வாழ்கிறான். நான்
என்று எண்ணும் உடல் முதலானவற்றின் போக்குகளை வைத்து தன்னைக் குறுகியவனாக
எண்ணுகிறான். தன்னைக் காட்டிலும் வேறான பிரபஞ்சம் இருப்பதாக எண்ணி அதன் மூலம்
பயத்தையும் துன்பத்தையும் அடைகிறான். இவன் வேறாக நினைத்தாலும் அதனால் ஆத்ம
ஸ்வரூபத்தில் ஒருவித மாறுபாடும் ஏற்படுவதில்லை. எப்போது வேதாந்த ஞானத்தாலும்,
குருவின் உபதேசத்தாலும் அருளாலும் விவேகம் ஏற்பட்டு தனது உண்மை ஸ்வரூபத்தை
அறிந்துகொள்கிறானோ, அப்போது நான் உடல் அல்ல, புலன்கள் அல்ல, மனம் அல்ல, நான்
ஸச்சிதாந்த ஸ்வரூபமான பரமாத்மா. என்னைக் காட்டிலும் வேறாக பிரபஞ்சம் கிடையாது
என்று தெரிந்துகொண்டு பயம் நீங்கி விடுதலையடைகிறான்.
ஒன்றோடொன்று
ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறுவேறாக அமைந்த பன்மைத் தோற்றம் என்று
இப்பாடல் கூறும் கருத்தாக்கம் பஞ்சீகரணம் என்று வேதாந்த மொழியில் அழைக்கப்படுகிறது.
இது பற்றிய முழுமையான விளக்கம் சங்கரரின் ஆத்மபோதம் (சுலோகம் 12, 13), விவேக
சூடாமணி முதலான நூல்களில் உள்ளது.
பரம்பொருளே
அவதாரமெடுத்து ஸ்ரீராமனாகத் தோன்றியதால், இலங்கையில் போர் செய்தார் என்ற அடைமொழி
இங்கு ஸச்சிதானந்தமான ஆத்ம ஸ்வரூபத்தை, பிரம்ம ஸ்வரூபத்தைக் குறிக்கிறது.

ஸ்ரீராமஜெயம். ஓம் தத் ஸத்.