‘வக்.. வக். வக்..’
சீசரின் குரைப்பு சுசீலாவை எழுப்பியது. படுக்கப் போனதில் இருந்து, இரவு வெகு நேரம் சுசீலா தூங்கவே இல்லை. அவனுடைய அப்பா ஜூரம் என்று இருமல் ‘சிரப்’
குடித்ததால் அவரும் சிவகுமாரைப் பற்றி விசாரிக்காமலேயே தூங்கிவிட்டார். வீட்டுக்கு வரவே இல்லை.

ஒருமுறை மட்டுமே குரைத்து சீசர்
நிறுத்திக்கொண்டது. சுசீலா
படபடப்புடன் எழுந்தார். படுக்கை
அறைக் கதவை மறக்காமல் மூடிவிட்டு,
வரவேற்பறைக்குள் நுழைந்தார்.
சிவகுமாரின் அறையில் விளக்கெரிந்தது.
சீசர் அவனுக்காகதான் குரைத்திருக்கிறது.
அவன் அறைக் கதவு பாதி மூடியிருந்தது.
எவ்வளவு நேரமாகி வந்திருக்கிறான்?
நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார் சுசீலா. மூன்று மணி.
இத்தனை நேரம் எங்கே போயிருந்தான்?
‘டேய் சிவா, எங்கேடா
போயிருந்த? சாப்டியா?’ அவன் அப்பாவை
எழுப்பிவிடக் கூடாது என்பதால் தணிந்த குரலில் கேட்டார். பதிலில்லை. அவன் அறைக்கு அருகே வந்தார். அவன் ஒரு பயணப் பெட்டிக்குள் தனது துணி
மணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.
‘டேய்… என்னடா
ஆச்சு உனக்கு? இப்போ
என்னத்துக்கு துணி எடுத்து வைக்கிறே?’

‘ஆபீஸ்
வேலையா அர்ஜெண்டா வெளியூர் போகணும்மா…’
வேலையா அர்ஜெண்டா வெளியூர் போகணும்மா…’
‘நீ வேலை
பாக்கறது கூரியர் தானே. உள்ளூருல
தானே தபாலெல்லாம் தரணும்.’
பாக்கறது கூரியர் தானே. உள்ளூருல
தானே தபாலெல்லாம் தரணும்.’
‘இல்லமா…. கேரளால ஆள் குறைவா
இருக்காங்காம்.’
இருக்காங்காம்.’
‘கேரளாவா? போயிட்டு வர்ற எத்தனை நாள் ஆவும்?’
‘ரெண்டு மூணு
மாசம் ஆவும்மா.’
மாசம் ஆவும்மா.’
‘என்னடா
உளர்றே. அப்பாவுக்கு
அடிக்கடி உடம்பு சுகம் இல்லாமல் போயிடுது.
நீ என்னடான்னா கேரளாவுக்கே போறேன்ற?’

அவன் பெட்டியை மூடி விட்டாலும் வேறு
எதையோ அறை முழுவதும் தேடினான்.
‘என்னடா தேடற?’ இதற்கும்
பதில்லில்லை. ‘என்னடா
ஆச்சு உனக்கு?’ அவன்
பின்னாடியே சென்று அவன் தோளைத் தொட்டுத் திருப்பினார். அவன் முகம் கலங்கியதுபோல இருந்தது. ‘ஏண்டா முகம் ஒரு
மாதிரி இருக்கு?’ ஒரு கணம்
அவன் கண்கள் கலங்கின. சுதாரித்துக்கொண்டு, ‘நான் ஆபீஸுக்கு
எடுத்துப் போற பெரிய பையைத் தேடறேன்’
என்று அவனது உடை அலமாரியில், அவன் அறையின் மேஜைக்குக் கீழே, அவனது கட்டிலுக்குக் கீழே எனத் தேடிக்கொண்டே
போனான். ‘சாப்டியா?’ மறுபடி பதிலிலில்லை. இப்போது அவன் வரவேற்பறையில் ‘டீபாய்’க்குக் கீழே
பையைத் தேடிக் கொண்டிருந்தான்.
அது சற்றே பெரிய பை. அதை எப்படி
அந்த இடத்தில் தேடுகிறான் என்று அம்மாவுக்கு விளங்கவில்லை. ‘கருப்புக் கலருதானே
அந்த பேக்?’ அவன்
பதிலளிக்கவில்லை. பாலைச் சூடு
செய்து எடுத்து வரப் போனார்.
தாமதமாக வருகிறவன்தான். ஆனால் தனது
அறையில் உறங்கப் போய் காலையில் மெதுவாகத்தான் எழுந்திருப்பான். மிகவும் தாமதமாக வரும் நாட்களில் அவன்
குடித்துவிட்டு வருகிறானா என்னும் சந்தேகமும் சுசீலாவுக்கு உண்டு.

பாலை எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வரும்போது, அவன் பயணப் பெட்டியுடன் கிளம்பிக்
கொண்டிருந்தான். ‘பாலைக்
குடிடா. ராத்திரிதானே
கேரளா டிரெயினெல்லாம் கிளம்பும்?’
என்றார். ‘தாம்பரத்துல
காலையில ஐந்து மணிக்கு வண்டி இருக்கும்மா…’
என்றான். நம்புவதா
வேண்டாமா என்று சுசீலாவுக்குப் புரியவில்லை.
அப்பா தூங்கும் நேரமாகப் பார்த்துக் கிளம்புகிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. அவருடைய குறுக்கு விசாரணை இல்லாமல் இவன்
தப்பிக்கிறான். அவ்வளவு
சூடான பாலை எப்படி விழுங்கினான்?
பெட்டியுடன் வெளியே காலை எடுத்து வைத்தான். ‘பணம் இருக்காடா?’

‘ஆபிசுல அட்வான்ஸ் வாங்கி இருக்கேன்.’
செல்வம் தனது ‘மான்சன்’ எனப்படும் ஆண்களுக்கு மட்டுமான வாடகை
விடுதியில் மூன்றாவது மாடியில் மூலை அறையில் இருந்தான். சென்னையில் மாலைக்கு மேல்
திருவல்லிக்கேணியில் எப்படியும் கடற்காற்று வீசவே செய்யும். சில சமயம் அது பலமாகவே அடிக்கும். செல்வத்தைப் பொருத்த வரை அந்த அறை
மொட்டை மாடிக்குக் கீழே இருந்ததால் எப்போதும் வெயிலின் தாக்கம் இருக்கும். பேருந்துகள் செல்லும் சாலை எதுவும்
அருகில் கிடையாது என்பதால் சற்றே வாடகை குறைவு. அவனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்ததாலேயே அவன்
இதைத் தேர்ந்தெடுத்திருந்தான்.
திருவல்லிக்கேணியில் பல பள்ளிகளுக்கு அவன் நிறுவனம் பள்ளியின் வளாகப் பாதுகாப்பு
மற்றும் குழந்தைகளுக்கான கற்றுத் தரும் காணொளிகள் உள்ள மென் பொருளை விற்றிருந்தது. அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவுதான். அருகே மந்தவெளி, மைலாப்பூர் மற்றும் ராயப்பேட்டைப்
பள்ளிகளையும் சேர்த்தால் மொத்தம் நூறு பள்ளிக்குக் குறைவில்லை. எனவேதான் அவன் அங்கே அறை எடுத்தான்.

விடியற்காலையில் செல்வம் விழித்துக்
கொள்ளத் தேவையில்லை. பள்ளிகளில்
பதினோரு மணிக்கு மேல்தான் கணிப் பொறி வகுப்புகள் இருக்கும். அனேகமாக எதாவது ஒரு பள்ளியில் அவன்
அன்றைய வகுப்புக்கு முன்பு மென்பொருளைச் சரி செய்து தர விரைவான். இன்று என்னமோ அவனுக்கு இரவு இரண்டு
மணிக்கே அறையின் வாயிலில் வளையல் குலுங்கும் சத்தம் கேட்பதுபோல இருந்தது. இப்போது மூன்று மணிக்கு மறுபடி அதே
சத்தம்.

சிவகுமார் அவசர அவசரமாகக் கிளம்பிப்
போய் விட்டான். அவனுடைய
அப்பா எழுந்தால் அவன் எங்கே என்பார்.
விவரத்தைக் கூறினால் தன்னை ஏன் எழுப்பவில்லை என்று கேட்பார். அலுவலக வேலையாகப் போகிறவன் ஏன் அலுவலகப்
பையை எங்கேயோ வைத்து விட்டுத் தேடினான் என்றே தெரியவில்லை. சோபாவுக்கும் சுவருக்கும் இடைப்பட்ட
பகுதி இருளாகவே இருக்கும். சோபாவை
நகர்த்தி விட்டுப் பார்த்தார்.
இருட்டோடு இருட்டாக கருப்புப் பை கிடந்தது.
அதான் அவன் கண்ணில் படவில்லை.
பையை இழுத்தார். சற்றே கனமாக
இருந்தது.

செல்வத்துக்கு ஆண்கள் மட்டும் வசிக்கும்
இந்த மான்ஷனில் வளையல் சத்தம் புதிராக இருந்தது. மாத வாடகை விடுதிகளில் அது மாதிரியான தொழில் எதுவும்
நடப்பதில்லை. எனவே அதற்கு வாய்ப்பில்லை. பூனை எதாவது மெல்லிய பாத்திரம் போன்ற
எதையேனும் இழுத்துக் கொண்டு ஓடுகிறதா?
அவனால் யூகிக்க முடியவில்லை.
ஆனால் தூக்கம் கெட்டுவிட்டது.
அவனுடைய அறைக்குள்ளே குளியலறை உண்டு.
எனவே அவன் அதிகம் வெளியே போக மாட்டான்.
இரவில் தாமதமாக வரும் பக்கத்து அறைக்காரர்கள் நடமாடினாலும் அவன் எதுவும் கண்டு
கொள்ளவே மாட்டான். இன்று
யாருமே நடமாடவில்லை. ஏதோ
மந்திரம் போட்டதுபோல இயல்பைவிட அமைதியாயிருந்தது. அறையின் கதவைத் திறந்து வெளியே வந்து வராந்தாவில்
இருமருங்கும் பார்த்தான். யாருமில்லை. மறுபடி அறைக்குள் நுழையப் போனபோது
மொட்டை மாடிக்குச் செல்லும் மாடிப் படியில் வளையல் சத்தம் கேட்டது.

சிவகுமாரின் அலுவலகப் பையைத் திறந்தால்
மேலாக அவனது சதுர வடிவ மதிய உணவு டப்பாவே முதலில் கிடைத்தது. அதை அசைக்கும்போதே அவருக்கு அவன்
சாப்பிடவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
அதை எடுத்துக்கொண்டு போய் அதில் மீதியிருந்த உணவை சமையலறைக் குப்பைக் கூடையில்
கொட்டினார். பின்னர்
டப்பாவைப் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் வைத்தார்.

ஏதோ நினைவு வந்தவராய் வரவேற்பறைக்கு
வந்து கருப்புப் பையைக் கையில் எடுத்துத் திறந்தார். அவனின் ஒரு கால்சராயும் மேற் சட்டையும் அதற்குள் இருந்தன. என்ன இது? அவற்றின் மீது திட்டுத் திட்டாக ரத்தம்? குளியலறைக்குப் பையை அப்படியே எடுத்துக்கொண்டு
போனார். பைக்குள்
வேறு ஏதோ கீழே சொருகி வைக்கப்பட்டிருந்தது.

செல்வத்துக்கு ஏதோ நடமாட்டம் இருப்பது
ஊர்ஜிதமாகத் தென்பட்டது. அவன் மாடிப்படியை
நோக்கி விரைந்தான். படியின்
மீது மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தது.
அவன் படிகள் மீது ஏறி மொட்டை மாடிக்கு அருகில் இருக்கும் சதுரமான நிலையிடத்தை
அடைந்தான். மொட்டை
மாடிக்கான கதவு திறந்தே இருந்தது.
அதனுள் நுழைந்தான். மொட்டை
மாடியில் விளக்கு எதுவுமில்லை.
தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சம் படர்ந்திருந்தது. இப்போது கீழே வளையல் சத்தம் கேட்பதுபோல
இருந்தது. அவனுக்கு
முகமெல்லாம் வியர்த்திருந்தது.

சுசீலாவுக்கு அந்த விடியற்காலை
நேரத்திலும் குளித்ததுபோல உடலெங்கும் வியர்த்து விட்டது. அந்தப் பையின் அடிப்பக்கத்தில் ஒரு
பெண்ணின் சூடிதாரின் இரு பகுதிகளுமிருந்தன.
ரோஜா நிறப் பின்னணியில் மஞ்சள் பூவேலை செய்யப்பட்ட சூடிதார் உடையிலும்
திட்டுத் திட்டாக ரத்தம் இருந்தது.

செல்வம் விரைந்து கீழே வந்து அதே
வேகத்தில் இன்னும் சில படிக்கட்டுகள் இறங்கி இரண்டாம் தளத்துக்குப் போனான். ஒரு அறையில் மட்டுமே விளக்கு எரிந்து
கொண்டிருந்தது. விடுதியே
அமைதியில் ஆழ்ந்திருப்பதுபோல இருந்தது.
மீண்டும் அறைக்குள் வந்தான்.
கொஞ்சம் தண்ணீர் குடித்தான்.
பின்னர் அறையின் கதவைத் தாளிட்டான்.
படுத்துக்கொண்டான். ஆனால் உறக்கம் வரவில்லை. சற்று நேரத்தில் அவன் காதருகே வளையல் ஓசை. எழுந்தான். வெள்ளைச் சேலை ரவிக்கை, வெள்ளை நிறக் கண்ணாடி வளையல்கள், அவன் படுக்கைக்கு அருகே நிறைய மல்லிகைப்
பூவுடன் ஓர் இளம் பெண். திடீரென ஓர்
ஆளைப் பார்த்த படபடப்பில் எழுந்து நின்றான்.
அவள் வாளிப்பான உடற்கட்டுடன் அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்குப் பாதங்கள் இல்லை. பாதங்கள் பூமியில் பதியவில்லை. ‘காலுக்கு மேலே நான்
அழகா இல்லையா?’ என்றாள். கிணற்றுக்கு உள்ளே இருந்து பேசுவதுபோல
ஓர் ஆழ்ந்த எதிரொலி மிகுந்த சத்தமாக இருந்தது. அறைக்கு வெளியே யாராவது பெண் குரலைக் கேட்டால் அவ்வளவுதான்.

சுசீலா முதலில் கூடத்தில் வந்து
அமர்ந்து மின் விசிறியைச் சுழல விட்டார்.
என்ன செய்திருப்பான் சிவகுமார்?
எதை மறைக்கிறான்? உண்மையிலேயே
எங்கே போகிறான்?
அமர்ந்து மின் விசிறியைச் சுழல விட்டார்.
என்ன செய்திருப்பான் சிவகுமார்?
எதை மறைக்கிறான்? உண்மையிலேயே
எங்கே போகிறான்?
‘இது ஆண்கள்
இருக்கும் விடுதி,’ என்றான்
செல்வம் சற்றே நடுங்கும் குரலில்.
‘ஏன் ஆம்பளையோட இருக்கக் கூடாத பொண்ணா நானு?’ என்றபடி அவள் முன்னே வந்தாள். அவன் பின்னே பின்னே போய்ச் சுவரில் முதுகை இடித்து நின்றான். அவள் அவனை விட ஓரிரு அங்குலம் மட்டுமே
உயரமானவள். அவன்
முகத்துக்கு இருபக்கமும் சுவர் மீது தனது இரு கைகளையும் வைத்தாள். பின்னர் அவன் கண்களை ஊடுருவி நோக்கினாள். அவளின் கட்டான மார்பகங்கள் அவன்
மார்பின் மீது படர்ந்தன. அவள்
கால்கள் அவன் கால்களைச் சுற்றின.
அவள் கண்களின் ஒரு பாவையில் பாஞ்சாலி,
அருந்ததி, வாசுகி, அகலிகை, மேனகை,
சகுந்தலை, கண்ணகி, சூர்ப்பனகை, ஊர்மிளா, யசோதரா எனப் பலக் காவிய மாந்தர்கள் மாறிக் காட்சி
கொடுத்தனர். அவர்களை
அவன் பார்த்ததே இல்லை. ஆனால் இவள்
பாவை வழி பார்க்கும்போது அப்படியே பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. மற்றொரு பாவையில் சமகால சினிமா
நடிகைகளின் உருவம் ஆடையின்றி நிர்வாணமாக மாறி மாறி வந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சித் திகைப்பை அவன் தாண்டும்
முன் அவள் உதடுகள் அவன் உதடுகளை நெருங்கின.
அவளின் மேலிருந்து காட்டமான மருதாணி வாசனை வீசியது.

சுசீலாவுக்கு அந்தத் துணிகளை என்ன
செய்வது என்றே புரியவில்லை. துவைக்கப்
போட்டாலும் கறைகள் மறைய வாய்ப்பில்லை.
காயும் துணிகள் வேலைக்காரி மற்றும் அண்டை வீட்டார் கண்களில் வம்பாக மாறும். துவைக்க முடியா விட்டால் எப்படி இவற்றை
சரி செய்வது. எரிப்பது
ஒன்றே வழி? எப்படி
எரிப்பது?

அவன் உதடுகளை அவள் கவ்வினாள். பின்னர் நாக்கால் அவன் நாக்கைத்
துழாவினாள். அவளது
கவ்வல் அவனுக்கு அச்சமூட்டும் அழுத்தத்துடன் இருந்தது. அவளது கால்கள் அவனது கால்களைச் சுற்றி வளைக்க
அவள் தன் கைகளை இறக்கி அவனை அணைத்துக் கொண்டாள். திடீரென அவனை விலக்கி, ‘ஏண்டா
உனக்கு என்னைப் பிடிக்கலே?’ என்றாள். ‘நான் ஒண்ணும்
செய்யலியே?’ ‘அதாண்டா
நானும் கேக்கறேன். செய்ய
முடியாத அளவு என்ன குறை எனக்கு?’
‘உன் கண்ணுல பாத்த விஷயமெல்லாம்.’
‘எதையாவது சொல்லித் தப்பிக்க நினைக்காதே.
உனக்கு என்னைப் பொம்பளையின்னு தொணலையின்னுதானே அர்த்தம். டேய், திருவல்லிக்கேணி இங்கிலீஷ் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ரூம்ல நீ
எந்த ரெண்டு பேரைப் பார்த்தே…
அங்கே என்ன நடந்துதுனு எனக்குத் தெரியும். அதெயெல்லாம் முழுங்கின உனக்கு என்னக் கண்டா இளப்பமா
இருக்காடா? விடியற
நேரமாவுது. நாளை
மறுநாள் ராத்திரி வருவேன். ஆம்பிளையா
நீ நடக்கலே. உயிரை
எடுத்து எங்கூடவே கூட்டிக்கிட்டிப் போயிருவேன்.’
அவனைக் கட்டில் மீது தள்ளி விட்டு மறைந்தாள்.

இனி அந்த அறையிலிருப்பதில் அர்த்தமில்லை. காலை எழுந்ததில் இருந்து எப்போது பத்து
மணி ஆகும் என்று பரப்போடு இருந்தான் செல்வம்.
பத்தரை மணிக்குத் தான் மேன்ஷன் அலுவலகம் திறந்தது. அறையைக் காலி செய்வதாய்க் கூறி விட்டு, மேலே வந்தான். பெட்டி படுக்கையைத் தயார் செய்தான். மதியம் இரண்டு மணி போல ‘வாட்ச் மேன்’
அறைக் கதவைத் தட்டினார்.
திறந்தார். ‘சார் இவர்
பேரு சிவகுமார். உங்க
ரூமுக்கு வர்றாரு’ என்று
கூறிப் போய் விட்டார். வெடவெடவென
இருபத்தைந்து வயதிருக்கும் இளைஞன்.
‘உள்ளே வாங்க’ என்றான்
செல்வம்.

‘சார் ஐ ஆம்
சிவகுமார். கூரியர்
கம்பெனிலே வேலை பாக்கறேன்’ என்றான்
அவன். ‘நான் ஒரு
பைதான் கொண்டு வந்திருக்கேன்.’
சிவகுமார். கூரியர்
கம்பெனிலே வேலை பாக்கறேன்’ என்றான்
அவன். ‘நான் ஒரு
பைதான் கொண்டு வந்திருக்கேன்.’
‘இன்னும் ஒன்
அவர்லே நான் கிளம்பிடுவேன். நீங்க
இப்பவே இங்கே தங்கிக்கலாம்.’
அவர்லே நான் கிளம்பிடுவேன். நீங்க
இப்பவே இங்கே தங்கிக்கலாம்.’
‘தேங்க்ஸ்
சார்’ என்றவன், கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்து, ‘உங்க ஷூஸ் இருக்கு’ என்றான். தனது பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு பிளாஸ்டிக்
பையை எடுத்து அதற்குள் இந்த காலணிகளை வைத்தான் செல்வம்.

சுசீலா கணவரிடம் அவன் தனது அறையில்
உறங்குகிறான் என்றே கூறி இருந்தார்.
மாலையில் கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவனது பையில் இருந்த ரத்தம் தோய்ந்த
உடைகள் பற்றி எதுவும் கூறவில்லை.
பிற அனைத்தையும் அப்படியே கூறினார்.
உடனே அவர் சிவகுமாரின் கைபேசியில் அவனை அழைத்தார். உடனே மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அது அவனது கைபேசி ஒலிக்கும் சத்தம்தான். அவனது அறைக்குள் இருந்து வந்தது சத்தம். அவர் அங்கே போனார். சிவகுமாரின் கைபேசி அங்கேதான் இருந்தது.

ஒரு கையில் செல்வத்தின் பெட்டி மறுகையில்
அவனது மடிக்கணினிப் பை இரண்டையும் எடுத்துக் கொண்டு தரைத்தளம் வரை வந்தான்
சிவகுமார். மற்றொரு
பெட்டி மற்றும் படுக்கை இவற்றை செல்வம் எடுத்துக் கொண்டு இறங்கினான்.

‘ரொம்ப நன்றி
சிவகுமார்’ என்றவன், ‘ஒரு நிமிஷம் ரூமை சரி பார்த்து விட்டு
வர்றேன்’ என மாடிக்கு
விரைந்தான். பல பழைய
நினைவுகளுடன் அறையைச் சுற்றி நோட்டம் விட்டவன் கண்ணில் பல வெள்ளை வளையல் துண்டுகள்
கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே தென்பட்டன.
அவற்றை எடுத்து முகர்ந்து பார்த்தான்.
மருதாணி வாசம். பின்னர்
கால்சராய்ப் பைக்குள் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.