Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) – சாவர்க்கர் | தமிழில்: VV பாலா

(புகைப்படம் நன்றி: சாவர்க்கர் ஸ்மார்க்)

இரண்டாவது கடிதம்
அன்புள்ள சகோதரா!
18 மாதங்கள் கழித்து
எனக்கு பேனாவையும் மையையும் தொடும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இதே
நிலை தொடர்ந்தால் எனக்கு எழுதுவதே மறந்து போகும் நிலை கூட வரலாம். இந்த
த் தாமதம் உன் ஏக்கத்தை அதிகரித்திருக்கும். ஆனால் ஜூலை மாதம் நம் அன்பிற்குரிய
பாபா அவர்களின் கடிதம் உனக்கு
க்
கிடைத்திருக்கும். அதனால் ஒரே நேரத்தில் இரு கடிதங்களையும் அனுப்பாமல் இடைவெளி
விட்டு அனுப்பினால் உனக்கும் அது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேன். நீ
மருத்துவ
ப் படிப்பு சேர்ந்து நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி. உனக்கு அந்தப் படிப்பு பிடித்திருக்கிறதா? என்னைப் பொருத்தவரையில் அது ஒரு புனிதமான படிப்பு. நீ மருத்துவம் மட்டுமில்லாமல் உடற்கூறு
அறிவியலையும் உன்னுடைய விசேட பாடமாக எடுத்து
ப் படித்தால் நன்று.
இதனை ஒரு தொழிலாக
க் கருதாமல் சேவையாகக் கருது. இதன் மூலம் தொண்டாற்ற நிறைய வாய்ப்புகள்
கிடைக்கும். ஆப்
பிரிக்கப் பழங்குடி மக்கள்
முதல் நாக
ரிக மேன்மக்கள் வரை எல்லோரும் மதிக்கும் பணி இது. ஆத்மா
குடியிருக்கும் கோவிலான உடலை
ப் பற்றிய படிப்பு. ஆத்மாவைப் பற்றிய படிப்பிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
உன்னுடைய சென்ற வருடப் புத்தக தேர்வுகள் மிகச் சிறப்பாக இருந்த. மொரோபந்த், பாரத், விவேகானந்தர்,
எல்லாம் தரமான புத்தகங்கள். நான் கேட்ட புத்தகங்களில்
ஜேய மீமாம்சம் மற்றும்அஜேய மீமாம்சம் மட்டும்
வரவில்லை. என்ன காரணம்? நான் இந்த வருடத்திற்கு ஒரு பட்டியல் அனுப்பி இருக்கிறேன்.
ஆனால் எனக்கு
ப் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பத்து
ரூபாய்க்கு மேல் செலவு செய்யவேண்டாம். ஒருவேளை நான் கொடுத்த பட்டியலின் விலை
அதற்கு மிகுமானால் கடைசியில் உள்ள புத்தகங்களை
த்
தவிர்த்து விடு. எல்லாமே புது
ப் புத்தகங்களாக
இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பழைய புத்தகங்கள் கிடைத்தாலும் வாங்கி அனுப்பு.
உனக்கு பெங்கால் பிடித்திருக்கிறதா? நவராத்திரி பண்டிகை விடுமுறை முடிந்து நீ பெங்கால் திரும்பியதும்
கிட்டத்தட்ட பெங்காலி பாபுவாகவே மாறியிருப்பாய் என்று நினைக்கிறேன். மராத்தி மொழி
நினைவிருக்கிறதா? வேறு எதையும் இழக்காமல் பார்த்து
க் கொள். அந்த
புத்திசாலி பெங்காலிகள் உன் இதயத்தை
த் திருடி
விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு பெங்காலி என் சகோதரனின்
மனைவியாக அமைந்தால் எனக்கும் சந்தோஷமே. பல மாகாணங்களில் இருக்கும் ஹிந்துக்கள்
இப்படி
த் திருமண உறவு கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். அதே நேரம் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை மணப்பது இந்தத் தருணத்தில் நம் தேசத்திற்கு நல்லதல்ல என்றும் நான் நினைக்கிறேன்.
எனதருமை பால் (Bal), என்னைப் பற்றியும்
கொஞ்சம் சொல்கிறேன். என் உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது. இந்த
ச் சிறைக்கு வந்த பிறகு என்னுடைய உடம்பிற்கு எந்தப் பெரிய
பிரச்சினையும் வரவில்லை. இங்கு வரும்போது என்ன எடை இருந்தேனோ அதே எடையை இப்போதும்
தக்க வைத்து
க் கொண்டிருக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான்
ஆரோக்
கியமாக இருக்கிறேன். ஒரு சில விஷயங்களில் வெளியில் இருக்கும்போது
இருந்ததை விட இங்கு நன்றாகவே இருக்கிறேன். சிறை ஒரு ஆளை நன்றாகவும் ஆக்கும்,
சீரழிக்கவும் செய்யும். யாரும் இங்கு வரும்போது எப்படி இருந்தார்களோ அதேபோல வெளியே
செல்லும்போது இருக்க முடியாது. வெளியே வரும்போது மேலும் நன்றாகவோ அல்லது மேலும்
மோசமாகவோதான் வருவார்கள். அதி
ர்ஷ்டவசமாக என்னுடைய
மனம் இங்குள்ள சூழலுக்கு விரைவிலேயே பழகி
க்கொண்டு விட்டது.
வெளிப்புறத்தில் அமைதியில்லாமல் இருக்கும் இயற்கை சிறைக்குள்ளே அமைதியாக இருப்பது
என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இப்படிப்பட்ட சூழல் மாற்றங்களுக்கு நம் மனம்
பழகி
க்கொள்வது என்பது இயற்கை நமக்குக் கொடுத்த வரம் என்று நான் சொல்வேன்.
நான் அதிகாலையிலும் பிறகு மாலையிலும்
சிறிது நேரம் பிராணாயாமம் செய்வேன். பிறகு நன்றாக உறங்குவேன். அப்படி உறங்குவது
எனக்கு நல்ல ஓய்வை
த் தருகிறது. மனம்
மிகுந்த அமைதியை அடையும். காலையில் எழுந்திருக்கும் போதுதான் நாம் சிறையில்
மரப்பலகையில் படுத்து
க் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு வரும். மனிதர்களுக்கே உரித்தான சாதாரண
இலக்குகளும் ஆசைகளும் எனக்கு இப்போது குறைந்துகொண்டு வருகின்றன. நல்லதொரு
கொள்கைக்காக உழைத்தோம் என்ற திருப்தி என் மனதுக்கு இருக்கிறது. அதனால் என் மனது
சஞ்சலமில்லாமல் அமைதியாக இருக்கிறது. சில நேரம் விதிவிலக்குகள் இருந்தாலும்
பொதுவாக என் மனநிலை இப்படித்தான் இருக்கிறது.
உண்மையில் சொல்லப் போனால், திடீரென்று என்னை பம்பாய் அல்லது
லண்டன் மாநகரத்தில் இறக்கிவிட்டால், ‘ஜனக்கூட்டத்தைப் பார்த்தால் தீப்பிடித்து எரியும்
வீடு போல் இருக்கிறது
என்று சாகுந்தலத்தில்
வரும் ரிஷிகுமாரனுடன் நானும் சேர்ந்து கதற வேண்டி இருக்கும்.
நாம் கேள்விப்படும் புரளிகளை எல்லாம்
வைத்து ஒருவேளை வெளியில் இருந்திருந்தால் நம் வாழ்க்கை மேலும் பயனுற
இருந்திருக்குமோ என்ற எண்ணம் வரலாம். ஆனால் வெளியில் இருப்பவர்கள் அதிகம் வேலை
செய்கிறார்களாக இருக்கலாம், ஆனால் உள்ளே இருப்பவர்கள் அதைவிட கூடுதலாக வேலை செய்துகொண்டு
இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள். என் அன்பிற்குரிய பால், இங்கு நாங்கள் படும்
துன்பங்களும் தீவிரமான பணிக்கு ஈடானதுதான் என்பதையும் புரிந்துகொள்.
நான் அதிகாலை ஐந்து மணிக்கு மணி
அடித்ததும் எழுந்து கொள்வேன். அதை
க் கேட்டதும் எனக்கு
நான்
தோ கல்லூரியில் உயர்படிப்பு படிக்கின்றாற் போல ஒரு உணர்வு வரும். பிறகு காலை பத்து மணி வரையில் எங்களுக்குக் கடுமையான பணி  இருக்கும். என் கைகளும்
கால்களும் கொடுக்கப்பட்ட வேலையை
த் தன்னிச்சையாகச் செய்து கொண்டிருக்கும். என் மனமோ இங்குள்ள கண்காணிப்புகளை எல்லாம் தாண்டி கடல்
மலை என்று ரம்மியமான விஷயங்களில் மட்டும், தேனை
க்
குடிக்கும் வண்டு போல அலைந்துவிட்டு வரும். அதன் பிறகு நான் சில வரிகளை எழுதுவேன்.
பிறகு பன்னிரண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவு உட்கொள்வோம். பிறகு மீண்டும் வேலை.
நாலு மணி முதல்
ய்வு. இந்த நேரத்தில் படிப்பேன். இதுதான் இங்குள்ள தினசரி
வாழ்க்கை.
நம் தாய்நாடு எப்படி உள்ளது என்பதை
உன் பதிலில் கூறு. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கின்றதா?
1910ல்
அலஹாபாத்தில் செய்ததை
ப் போல வருடா வருடம்
அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்களா? டாடா அல்லது
கப்பல்
நிறுவனம் அல்லது புதிய மில்கள் போன்று தேனும் ஸ்வதேசி நிறுவனங்கள் புதிதாக உருவாக்கி இருக்கின்றனவா? சீனக் குடியரசு எப்படி இருக்கிறது? ஒரு கனவு நனவானது போல இருக்கின்றது அல்லவா? இது
வரலாற்றில் ஒரு முக்கிய
த் தருணம். சீனாவின்
இந்த மாற்றம் ஒரு நாளில் வந்தது அல்ல.
1850ம் ஆண்டில்
இருந்து அவர்கள் இதற்காக
ப் பாடுபட்டுகொண்டு
இருக்கிறார்கள். சூரியன் உதிக்கும் வரை அது எங்கிருந்து வருகிறது என்பது நம்
கண்களுக்கு
த் தெரியாது அல்லவா, அதுபோல. பெர்சியா, போர்சுகல், எகிப்து
இவற்றின் நிலை எப்படி இருக்கின்றது? தென்னா
ப்பிரிக்காவில் உள்ள
இந்தியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற
ப்பட்டு இருக்கின்றனவா? புதிய கவுன்சில் மூலமாக ஏதேனும் முக்கியச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதா? உதாரணத்திற்கு உயர்திரு கோகலே அவர்கள் கொண்டு
வந்த கல்வி மசோதா. நம் மதிப்பிற்குரிய திலகர் எப்போது விடுதலை
செய்யப்படவிருக்கிறார்
?
நீ என் கடிதத்தை எனது ஆருயிர் யமுனாவிடம்
காண்பித்தாயா? அவளுக்கு எல்லாவற்றையும் மொழிபெயர்த்து
க் கூறு. இன்னும் சில வருடங்கள்தான். அதிகபட்சம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு
ஒரு புதிய விடியல் பிறக்கும். ஆகவே என் அருமை மனைவியே
, எப்போதும் போல் உன் வாழ்க்கையை உன்னதமாக நடத்து. அன்பிற்குரிய அண்ணிக்கு என் மரியாதையும் நமஸ்காரங்களும். ஒரு தாயாக, சகோதரியாக,
தோழியாக என்னை வாழ்த்திக்கொண்டிருப்பவர் அவர். என் நெஞ்சம் முழுக்க மற்றொருவரும்
நிறைந்திருக்கிறார்.
சில காரணங்களுக்காக நான்
இப்போது அவருடைய பெயரை
க் கூற இயலாது. நான்
அவர்கள் எல்லோருடைய நினைவாகவே எப்போதும் இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறவும்.
அவர்களை நான் எப்படி மறப்பேன்? சிறையில் இருக்கும் ஒருவனால் எதையும் மறக்க இயலாது.
புதிய அ
னுபவங்கள் எதுவும் இல்லாதபொழுது மனது பழைய நினைவுகளிலேயே உழன்று கொண்டிருக்கும். எனவே சிறையில் இருக்கும்போது நம் நினைவில் இருப்பவை
எல்லாவற்றையும் திரும்ப திரும்ப அசை போட்டு
க் கொண்டிருப்போம்.
அதனால் மறந்து போனவர்களும் கூட
நினைவுக்கு வருவார்கள். எனதருமை
நண்பர்களே, சிறையில் நாங்கள் வற்றாத கண்ணீருடன் இருக்கிறோம். யாரேனும் வந்து
ஆறுதலாக
ப் பேசி அன்புடன் எங்கள் கண்ணீரைத் துடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறோம். சிறையில் இருக்கும்போது எப்படி
என்னால் எதையும் மறக்க இயலும்? என் அன்பிற்கு
ப்
பாத்திரமானவர்கள் எல்லோரிடமும் என் அன்பான விசாரிப்பை
க் கூறவும். ரத்த பந்தங்கள் சிலர்கூட நம்மை விட்டு வெட்கி விலகியபோது, கூட நம்முடன் இருந்து நமக்குப் பக்கபலமாய் இருந்தவர்களை
நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன் என்று கூறவும். சிறையில் இருந்து வரும் கடிதம்
ஆதலால் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.
என் ஒரே சகோதரிக்கும் என்னுடைய ஒரே நம்பிக்கையான வசந்திற்கும்
என்னுடைய ஆசிர்வாதங்களை
க் கூறவும். மாமி,
குட்டி சாம்பி ஆகியோரிடமும் விசாரித்ததாக கூறவும்.
இப்படிக்கு,

உன்னுடைய அன்பான சகோதரன்


தாத்யா.


Leave a Reply