Posted on Leave a comment

வேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்

தமிழரசனின் வேலை அவன் மனைவி செல்விக்குப்
பிடிக்கவில்லை.
“என்ன வேலை இது? ரெண்டு கிழங்களுக்கு வீட்லெ
எடுபிடி வேலை செய்துகிட்டு?
“அப்படிச் சொல்லாதே செல்வி. அவங்கதான் எனக்கு
ஆரம்பத்திலேர்ந்து எல்லாமே. கிராமத்திலேர்ந்து இங்கே மாறி வந்தப்ப, கூடவே என்னையும்
கூட்டிக்கிட்டு வந்தாங்க. படிக்க வசதியில்லாத நெலையிலே, இங்கெயே அவங்க வீட்லயே
வெச்சுக்கிட்டாங்க. ஒரு டிகிரி வாங்கவும், கம்ப்யூட்டர் கத்துக்கவும் உதவினாங்க.
“அதுக்காக…. அவங்க வீட்லயே வேலை செய்யணும்னு
ஏதாவது எழுதியிருக்கா? வெளி உலகத்துல ஆபீஸ், பிஸினஸ்ன்னு ஒண்ணும் கெடையாதா?
நாளைக்கு, வீடு வாசல்ன்னு வாங்க வேண்டாமா?
“அதான் சாப்பாடு போட்டு, சம்பளமும் தராங்களே
செல்வி?
“நானும்தான் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன். எனக்கு
பி எஃப், கிராசுவிட்டி எல்லாம் ஒரு சேமிப்பா வரும் – உனக்கு?
“ம்… உனக்கு அந்த வேலைக்கு அஞ்சு லட்சம்
சொளையா குடுத்து வாங்கினது. மாசம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு, உயிரே போறா
மாதிரி வேலை. கூடவே, பசங்களை திட்டக்கூடாது, கடுமையா ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னு
ஆயிரம் ரூல்ஸ். இதுக்கு நடுவிலே, சென்சஸ் எடுக்கறது, எலெக்‌ஷன் ட்யூடின்னு
டார்ச்சர் வேற.
“அதுக்கு என்ன செய்யறது. நிரந்தர வேலை எங்கே
கிடைக்குது? சாதி சர்டிபிகேட்டு அது இதுன்னு ஆயிரம் கேக்கறாங்க – பணம் வேற செலவு
செய்யணும். எல்லாம் செய்தாலும் வேலை நிச்சயமில்லே. இப்பத்திய நிலை அப்படித்தானே
இருக்குது? ம்.. எங்கப்பா சொன்னா, அந்தப் பெரிய மனுஷன் உனக்கும் ஒரு வேலை வங்கித்
தருவாரு…
“பத்து லட்சம் கொடுத்தா செய்யறேன்னாராம்!
உனக்காகக் கொடுத்த அந்தப் பணத்த பொரட்ட எவ்வளவு சிரமப்பட்டோம்? அதுவும் அந்த
ஐயாதான் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரு. இப்போ இது வேறயா?
அன்றாடம் இந்த உரையாடல் ஏதாவது ஒரு வடிவில்
சண்டையாக நடந்துகொண்டே இருக்கும். எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதைப் போல,
செல்வியின் உறவினர்களும் அவ்வப்போது வந்து ‘என்னதான் சொன்னாலும், ஆபீஸுக்குப் போறா
மாதிரி ஆகுமா? என்னவோ எடுபுடி வேலைக்கு, கிளியாட்டம் பொண்ணக் குடுத்துட்டோம்
என்று
செல்வியின் சீற்றத்தை விசிறிவிட்டுப் போவார்கள்.
தமிழரசன் தனது கம்ப்யூட்டர் அறிவால் நிறைய
வேலைகள் செய்பவன். புத்தகங்களுக்கு லே அவுட் செய்வது, முகநூலில் பதிவது,
ப்ளாக்கில் எழுத உதவுவது என எல்லாம் அத்துப்படி.
 
அவனை ஆதரித்த சங்கரன் தம்பதியினர், தனியாக ஒரு
ஃப்ளாட்டில் வசிக்கின்றனர். எண்பது வயது தாண்டிய
சங்கரன் ஒரு நல்ல இலக்கியச் சிந்தனையாளர், எழுத்தாளர். ஏதோ தாசில்தார் உத்தியோகம்.
ரிடையர்மெண்டுக்குப் பிறகு சென்னை வந்து விட்டார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக
எழுதி வருபவர். பக்கம் பக்கமாகக் கையால் எழுதியவர், இப்போது சொல்லிச் சொல்லி,
லாப்டாப்பில் பதிவிடுகிறார். கதை, கட்டுரை எனத் தன் ப்ளாக்கில் எழுதுவதும்,
முகநூலில் பதிவதும்
 அவருக்கு
எளிதாகிவிட்டன. மாத, வார சஞ்சிகைகளில் நகைச்சுவையாக எழுதுவதும் அவருக்குப்
பிடித்தமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முழுவதுமாக உதவுவது தமிழரசன்தான். ஒரு வேலை
என்பதைவிட, தனக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியும், ஆத்ம
திருப்தியும் அடைந்தான் அவன்.
 
சங்கரன் செல்லும் எல்லாக்
கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் உடன் செல்வது, புகைப்படம் எடுப்பது, வங்கி,
வெளியூர் செல்வது என எல்லாவற்றுக்கும் தமிழரசனே பெற்ற பிள்ளையைப்போல அவருடன் வலம்
வந்தான். வேளை தவறாமல் டிபன், காபி, சாப்பாடு எல்லாம் சங்கரனுடன் தமிழரசனுக்கும்
தருவது சங்கரனின் மனைவிதான். வீட்டுப் பண்டிகைகள், விசேஷங்கள் அனைத்துக்கும்,
வீட்டுக்கு வரும் சங்கரனின் மகனுக்கும், மகளுக்கும் தமிழரசனே எல்லா உதவிகளையும்
செய்வான்.
 
சங்கரனின் வலது கரம் தமிழரசன்தான். எழுதுவதில் மட்டும்
அல்லாமல், மருந்து மாத்திரை எடுத்துக் கொடுப்பது, புத்தகங்கள் வடிவமைப்பது, எல்லாமே
அவன்தான்.
மகன், மகள் இருவருக்கும் அவரவர் வாழ்க்கையை
அமைத்துக் கொடுத்துவிட்டு,
தன்
மனைவியுடன் தனியாக வாழ்வதில்தான் சுதந்திரமாக உணர்ந்தார் சங்கரன். அந்த
சுதந்திரத்தில் தலையிடாத தமிழரசனை அவருக்குப் பிடித்திருப்பதில் வியப்பு
ஒன்றுமில்லை. வீட்டிற்கு வருவோர் போவோர், புத்தகப் பதிப்பாளர்கள், சங்கரன்
நண்பர்கள் என எல்லோருக்கும் தமிழரசனைத் தெரியும் – அவன் மூலமாகவே அவரைத் தொடர்பு
கொள்வது எளிது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
மாதம் பிறந்தால், தமிழரசனின் வங்கிக் கணக்கில்
ஒரு கணிசமான தொகையைச் செலுத்திவிடுவார் சங்கரன். தமிழரசனின் திருமணத்துக்குப் பிறகு,
அந்தத் தொகை இரட்டிப்பானது.
இதெல்லாம் செல்விக்குப் புரிவதேயில்லை. தன்
கணவனும், நல்ல உடை, கூலிங்
கிளாஸ், கையில் தங்கக் கடிகாரம், கழுத்தில் தங்கச் சங்கிலி எல்லாம் அணிந்து,
மோட்டார் பைக்கில் ஒரு ஆபீஸ் போவதைப் பார்க்க ஆசைப்படுகிறாள்.
“என்ன செல்வி, மாப்பிள்ளை அந்த எழுத்தாளர்
வீட்டிலேயே பழியா கெடக்கிறாரு? மாமாகிட்ட சொல்லி நல்ல வேலை ஒண்ணு வாங்கிக்கலாமில்லே?
இப்போ நல்ல நல்ல வாய்ப்பெல்லாம் அரசாங்கம் நமக்குக் கொடுக்கிறாங்கள்ள?
தமிழரசன் மறுத்துவிட்டான். “பெரியவரு கூடத்தான்
இருப்பேன். அவருக்கு உதவி செய்யறதுதான் என் வேலை. அவர்கிட்டே நெறைய்ய
கத்துக்கிறேன். அவர் மூலமா வெளி வேலைங்களும் எனக்குக் கெடைக்குது. அந்தம்மா என்னெ
பெத்த புள்ளையாட்டம் அன்பா கவனிச்சுக்கிறாங்க. எனக்கு ஒரு கொறையும் இல்லே.
செல்விக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. இரண்டு
வருஷமா இதே போர்தான். கையில் குழந்தை வேறு. குழந்தை பிறந்தபோது, சங்கரன்
தம்பதியினர் குழந்தைக்குத் தங்கச் சங்கிலி போட்டதையும், கை நிறைய பணம்
கொடுத்ததையும் செல்வி மறக்கவில்லை. ஆனாலும், தமிழும் தன் பிறந்த வீட்டு
ஆண்களைப்போல், வெள்ளையும் சொள்ளையுமாய் ஆபீஸ் செல்லாதது ஒரு பெரிய குறையாகவே
பட்டது.
அந்த மாத இதழுக்கு அனுப்ப வேண்டிய கட்டுரைக்குத்
தாமதம் ஆகிவிட்டது. தமிழரசன் கம்ப்யூட்டரில் டைப் அடித்து, மெயில் செய்துவிட்டு,
வீட்டுக்குக் கிளம்ப, வழக்கத்தைவிட நேரம் அதிகமாகிவிட்டது. இந்தப் பரபரப்பில்,
செல்வியைக் கடைக்கு அழைத்துப் போகக் கொடுத்திருந்த வாக்கு மறந்துவிட்டது.
வீடு அலங்கோலமாகக் கிடந்தது. கோபமாகச் செல்வி. “போய்ருய்யா,
அவங்களோடயே போய்ரு. உனக்கு எதுக்குய்யா பொண்டாட்டி, கொழந்தை
எல்லாம்?
ஆவேசம் வந்தவள் போல் கத்தினாள். என்ன சொல்லியும் கேட்காமல்,
இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, விடுவிடுவென்று மணப்பாக்கத்தில் இருக்கும்
தன் அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். ‘செல்வி, செல்வி
கூப்பிட்டவாறு
பின்னாலேயே ஓடினான் தமிழரசன். எதிரில் வந்த ஆட்டோவில் ஏறித் திரும்பிப்
பார்க்காமல் சென்றுவிட்டாள் செல்வி.
தமிழரசன் இரவு முழுதும் தூங்கவில்லை. தான்
வேண்டாம் என்று சொல்லச் சொல்ல, கேட்காமல் தனக்குத் திருமணம் செய்து வைத்த சங்கரன்
ஐயா மீது கோபமாக வந்தது. இவர்களுக்கு என்னதான் வேண்டும்? புரியாமல் குழம்பினான்.
குழந்தை கபிலனின் சிரித்த முகம் மனதை மேலும் வருத்தியது.
மறுநாள் தமிழரசனின் முகம் வாடியிருப்பதைப் பார்த்த
சங்கரனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. சங்கரன் மனைவியும், “தோ பாரு தமிழு, உன்னையே
நம்பி தாலியக் கட்டிக்கிட்டு வந்திருக்கா செல்வி. என்னதான் பொறந்த
வீட்டுக்குப் போனாலும், அங்கெ அவளுக்கோ, உனக்கோ மரியாதை இருக்காது. அவள்
சந்தோஷமும் முக்கியமில்லையா? அவ என்ன கேக்கறா? வேற நல்ல வேலைக்குத்தானே போகச்
சொல்றா? குடும்பத்தைத் தவிர வேற எதுவுமே முக்கியமில்ல தமிழு. பேசாம அவ சொல்றா
மாதிரி அவ மாமாகிட்ட சொல்லி அந்த வேலைக்கே போயிடேன்
என்றாள்
ஆதரவாக.
சங்கரனும், “ஆமாம் தமிழு, அரசு உத்தியோகம்தான்
புருஷ லட்சணம். எனக்கு சனி, ஞாயிறுலே வந்து எல்லாம் செய்துடேன். எனக்கும் வயசு
ஆறது, நவீன எழுத்துக்களோட போட்டி போட முடியும்னு தோணல்லெ. ஏதோ ஆத்ம திருப்திக்கு
எழுதறேன். வாரத்தில் இரண்டு நாள் வந்து உதவி செய்யேன், அதுபோதும்
என்று
அன்புடன் சொன்னார்.
தமிழரசனுக்கு மனம் கேட்கவில்லை. மேலும்
சமீபத்தில்தான் சங்கரனுக்கு சர்க்கரை வியாதி அதிகமாகி, சிறுநீரகமும் முரண்டு
பிடிக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில் இவர்களைத் தனியே விட தமிழரசனுக்கு
மனமில்லை.
 
ஆனாலும், செல்வியின் பிடிவாதமும், அவள் வீட்டு
மனிதர்களின் வற்புறுத்தலும், தமிழரசனை நிலைகுலையச் செய்தன. சங்கரன் தம்பதியினரின்
அறிவுரையிலும் நியாயம் இருப்பதாகப் பட்டது.
 
பெரிய மனிதரின் செல்வாக்கு, கை மாறிய தொகை, சரியான
நேரத்தில் விழுந்த காலியிடம் எல்லாம் சேர்ந்து, தமிழரசனை, செல்வி விரும்பிய அரசுப்
பணியில் அமர்த்தின. மறுநாளே மலர்ந்த முகத்துடன், செல்வி வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வேலை ஒன்றும் பெரியதாக இல்லாவிட்டாலும்,
தமிழரசனுக்குக் கொஞ்சம் மனதில் குறுகுறுப்பு இருந்தது. சீனியாரிட்டி, தகுதிகளை
மீறிக் கிடைத்த
வேலையினால் ஏற்பட்ட குற்ற உணர்வு. எல்லோரும் தன்னையே
கவனிப்பது போலிருந்தது. வேலை நேரத்தில், வீண் அரட்டையிலும், சாப்பிடும் இடத்திலும்
பொழுதைக் கழிக்கும் அலுவலர்களைக் கண்டாலே எரிச்சலாய் வந்தது. சிறையில் இருப்பதைப் போல் இருந்தது
தமிழுக்கு. சங்கரன் ஐயாவுடன் செய்த வேலையில் இருந்த சுதந்திரமும் விருப்பமும் இங்கு
இல்லாதது மனதில் ஒரு வெறுமையைக் கொடுத்தது.
பகல் முழுவதும் அலுவலகம், மாலையிலும் வார
இறுதியிலும் சங்கரன் வீடு எனத் தன் வேலைகளைக் கவனித்து வந்தான் தமிழரசன்.
 
வயதும் நோயும் சங்கரனைப் படுக்கையில் தள்ளின.
வீட்டிலேயே இருபத்திநாலு மணிநேரமும் நர்ஸ், மருந்து, மாத்திரைகள், வாரம் ஒரு முறை
டாக்டர் விசிட் என சங்கரனை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் அவரது குழந்தைகள்.
தமிழரசனும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் இருந்தான்.
அன்று காலையில் அலுவலகம் சென்றவுடன், அன்றைய
செய்தித்தாளில் வந்திருந்த செய்தி உண்மை எனத் தெரிந்தது. வேலை வாங்கிக் கொடுத்த
பெரிய மனிதர் மற்றும் தமிழரசனின்
இரண்டு மேலதிகாரிகள் மீது ஊழல் புகார் – விசாரணை. அதிகாரிகள் வேலை இடைநீக்கம் என
அலுவலகமே இறுக்கமாயிருந்தது. தனக்கு என்ன மாதிரி அரசு ஆணை வருமோ என்ற
மனக்கலக்கமும் தமிழரசனுக்கு இருந்தது. சாப்பிடும் இடம், மரத்தடி, காரிடர் எல்லா
இடங்களிலும் இதே பேச்சாய் இருந்தது. மறைமுகமாகத் தனக்கும் சஸ்பென்ஷன் தகவல் வரலாம்
என்ற பேச்சும் காதில் விழுந்தது. அரசியல் புயலில் யாருக்கு என்ன இழப்பு வரும்
என்று யாரால் கூறமுடியும்?
அமைதியாக, மனதுக்குப் பிடித்த வேலையைச்
செய்துகொண்டிருந்த நாட்கள் தமிழரசனின் மனதில் வந்து போயின. இப்போது தினமும் ஒருவித
மன இறுக்கத்துடன் வேலைக்கு வர வேண்டியிருந்தது. மேலதிகாரிகள் கூப்பிடும்போதெல்லாம்
மெமோ கொடுப்பதற்குத்தானோ என்று அச்சமாய் இருந்தது. வாங்குவதைப் போலவே, லஞ்சம்
கொடுப்பதும் குற்றம்தான் என்று தெரிந்தும், இந்த வேலையை வாங்கியதில் வருத்தம்
இருந்தது. வேலைக்கு மட்டுமன்றி, இப்போது தன் தலைக்கே ஆபத்து வந்துவிட்டதைப் போல் உணர்ந்தான்.
சங்கரன் ஐயா சொல்லும் ‘எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்கணும்
என்னும்
வார்த்தைகளில் புதைந்துள்ள உண்மை உள்ளத்தைச் சுட்டது.
 
லேசான தலைவலி. அரை நாள் விடுப்பில் வீட்டிற்குக்
கிளம்பினான்.
பையில் செல்வி வாங்கிக் கொடுத்த புது போனில் செய்தி வந்தது. சங்கரன் மறைந்து
விட்டார். ‘ஐயா, உங்க கூடவே இருந்திருந்தா, நிம்மதியா இருந்திருப்பேனே
என்று
அழுது அரற்றினான் தமிழரசன்.
சங்கரனின் காரியங்கள் முடிந்து, ஒருநாள்
தமிழரசனை அவர் மகன் கூப்பிட்டனுப்பினார். “தமிழு, அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் உன் மேலதான் ரொம்பப் பிரியம். தன் புத்தகங்கள் விற்று வருகின்ற
ராயல்டிலே பாதிய உனக்குக் கொடுக்கணும்னு உயில் எழுதியிருக்கார். தன்னோட ஃபிக்சட்
டெபாசிட் ரூபாய் ஐந்து லட்சத்துக்கு, உன்னையே நாமினியா போட்டிருக்கார். உனக்கு
எப்போ வேணுமோ அப்போ எடுத்துக்கலாம். எனக்குத் தனியா ஒரு லெட்டர்லே, நீ விரும்பினா,
என் கம்பெனியிலேயே வேலை கொடுக்கவும் சொல்லியிருக்கார்
என்று
தெரிவித்தார். மனதில் பாரம் அழுத்த, ஹாலில் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த
சங்கரனை விழுந்து வணங்கினான் தமிழரசன்.
விசாரணைக் கமிஷன் தன் வேலையைச் செய்தது.
தமிழரசனுக்கு வேலை போனது. விசாரணை முடியும் வரை உள்ளூரிலேயே இருக்க உத்தரவாகியது.
வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் விசாரணைக் கமிஷன் முன் ஆஜர் ஆவது ஒரு வேலையாகிப்
போனது.
 
செல்விக்கு இப்போதெல்லாம் தன் கணவன் மோட்டர்
பைக்கில் வேலைக்குப் போவது பிடிப்பதில்லை.
 

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் – பகுதி 2 | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

ஒற்றுமை மாநாடும் உரிமைகளின் தொடர்பும்

(லாலா லஜ்பத் ராய்)
டெல்லி ஒற்றுமை மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின்போது, என்னை ஒரு விஷயம் அதிகம் பாதித்தது. அது என்னவென்றால், நல்ல திறனுள்ள, நாட்டுப்பற்றுள்ள இளம் முகமதியர்கள், அதே போல் சில ஹிந்துக்கள், ‘அறுதியான, முழு உரிமைகள் (absolute rights) என்ற கருத்தாக்கத்தின் மீது பெரும் பிடிப்புக்கொண்டிருந்தார்கள். பசுக்களைக் கொல்வதற்கான உரிமை முகமதியர்களுக்கு இருந்தது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்த உரிமையை அவர்கள் தானே முன்வந்து தியாகம் செய்தால்தான் குறைக்க இயலும். இந்த முழு உரிமைகளின் அடிப்படையில்தான், காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த திறமையான, தன்னைத் தியாகம் செய்த பல இளைஞர்கள் வரைவுத் தீர்மானங்களைத் தயார் செய்தனர். நான் பலமுறை சுட்டிக்காட்டியபடி, முழு உரிமைகள் பற்றிய கருத்து தவறான ஒன்றாகும், சட்டத்தில் அதற்கான அடிப்படை ஏதுமில்லை. தலைவரான பண்டித மோதிலால் நேருவும் இதே பார்வையைக் கொண்டிருந்து அதை மிகச் சிரமப்பட்டு விளக்கினார். இருப்பினும், விளக்கங்கள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. பலரும் இதே கருத்தாக்கத்தைக் கொண்டிருந்ததால், அதைப் பற்றி நீண்ட விளக்கம் ஒன்றை அளிக்க விரும்புகிறேன்.
எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நாட்டின் ஒரு பகுதியாக உள்ள எந்தவொரு சமூகத்திடமோ முழுமையான உரிமைகள் அளிக்கப்படவில்லை என்று நான் கூறுகிறேன். உரிமைகள் அந்தந்த நிலைமைகளைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. முழுமையான உரிமைகளின் அடிப்படையில் அமைந்த எந்த ஒரு சமூகமும் இருபத்து நான்கு மணிநேரத்திற்குக் கூட ஒன்றாக இருக்க இயலாது. முழு உரிமைகள் என்பது தவறான கோட்பாடாகவும், நடைமுறையில் தீங்கு விளைவிப்பதாக இருப்பதால், அந்தக் கருத்தாக்கம் நீண்ட காலம் முன்பே உடைந்துவிட்டது. இந்தக் கட்டுரையைப் பெரும் சிந்தனையாளர்கள், மேற்கத்திய சட்ட நிபுணர்களின் மேற்கோள்களைக் கொண்டு நான் நிரப்ப விரும்பவில்லை. இந்தக் கருத்து என்னைப் பொருத்தவரை மிகவும் எளியதாக இருப்பதால் அதை விளக்க அதிகம் சிரமப்படத்தேவையில்லை என்று கருதுகிறேன். ஒரு உயிரினத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு அதன் உறுப்புகளாக உள்ளவற்றின் பரஸ்பர கடமைகளைச் சார்ந்ததாக உள்ளது. உயிரினத்தின் எந்த ஒரு பகுதிக்கும் முழுமையான உரிமைகள் இல்லை.
முதலாவதாக, ஒரு தனிநபரின் அனைத்து உரிமைகளும். மற்றவர்களின் சம உரிமைகளைச் சார்ந்தே உள்ளன. இதுவே ஒரு சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கிடையேயான பரஸ்பர கடமைகளையும் பொறுப்புகளையும் உருவாக்குகிறது. நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூக உயிரினத்தில் காரணமில்லாமல் இன்னொருவருடைய சட்டபூர்வமான நலன்களுடன் மோதக்கூடிய செயலைச் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. சொல்லப்போனால், நல்லெண்ணத்தையும் முன்னேற்றத்தையும் காண்பதற்கு, மிகவும் மேம்பட்ட உறுப்பினர்கள் சில நேரங்களில் தங்கள் நலன்களைப் பொதுநலனுக்காக, சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஏழைகளைக் காப்பது, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களின், அதாவது விதவைகள், அனாதைகள், பார்வையிழந்தவர்கள், முடவர்கள், வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோரின் நலத்தைப் பேணுவது என்ற அனைத்தும் இந்த வகையின் கீழ் வருகிறது.
யூரோப்பின் வரலாற்றில் மனித உரிமைகள் மீது மிகுந்த கவனம் செலுத்திய காலம் ஒன்று இருந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் காலம். தாமஸ் பெயினின் ‘மனித உரிமைகள் (Rights of Man) அந்தத் தலைமுறையின் மனநிலையின் ஒரு பொதுவான பிரதிபலிப்பு ஆகும். ஆனால், ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே அந்தக் கோட்பாடு முற்றிலும் தவறானதாக, தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டது. மாஜினியின் ‘மனிதர்களின் கடமைகள் (Duties of Man), பெயினின் ‘மனித உரிமைகள் நூலுக்கு முழுமையான, உறுதியான பதிலடியாக அமைந்தது. பிரெஞ்சுப் புரட்சி மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் அரசியலமைப்பும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது. அமெரிக்க அரசியலமைப்பும் அதே முயற்சியைச் செய்கிறது. ஆனால் நடைமுறையில், இரண்டிலும் உரிமைகள் வரம்புகளுக்கு உட்பட்டவையாகவே உள்ளன.
உதாரணமாக, அந்த அரசியல் சட்டங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சுச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைகள் சுதந்திரம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுடைய நாட்டின் நலன் என்று வரும்போது, பிரஞ்சு மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இந்த உரிமைகள் மீது கைவைக்காமல் இருந்துவிடும் என்று யாராவது நினைக்க முடியுமா? முதலாம் உலகப்போரின்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமைகள் எப்படி மக்களிடமிருந்து ஏதாவது ஒரு சாக்கில் அரசின் நடவடிக்கைகள் மூலமோ அல்லது மாநில சட்டத்தின் மூலமோ விலக்கிக்கொள்ளப்படுவதைக் கண்கூடாக என்னால் பார்க்க முடிந்தது. தங்கள் விருப்பமில்லாமல், போரில் ஈடுபடவைப்பதைத் தவிர்க்கும் உரிமை எல்லோருக்கும் இருந்தது. ஆனால், இந்தப் போரின்போது, பல அரசுகள் இந்த உரிமையை நிராகரித்தன. தங்களது விருப்பத்திற்கு எதிராக மக்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த உரிமை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனச்சாட்சியுள்ளோர் எத்தகைய கடுமையான போராட்டங்களில் ஈடுபடவேண்டியிருந்தது, அதன் காரணமாக அவர்கள் எந்தவிதமான துன்பங்களைச் சந்திக்கவேண்டியிருந்தது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஒரு தனிமனிதர் அவர் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் சிந்திக்க முடியும், ஆனால் அந்த எண்ணத்தைப் பேச்சிலோ செயலிலோ அவர் காண்பிக்க முற்படும்போது அவரது உரிமைகள் நிபந்தனைகளாலும் வரம்புகளாலும் மட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கேள்வியின் சட்டபூர்வமான, அரசியலமைப்புச் சார்ந்த அம்சம் இதுதான்.
அதன் அறம் சார்ந்த அம்சத்தைப் பொருத்தவரை, உரிமைகளை விட கடமைகளை வலியுறுத்துவதே மேலானது என்பது தெளிவாக உள்ளது. கடமைகளை விட உரிமைகளை வற்புறுத்துபவர்கள் சுயநலவாதிகளாக, கர்வம் கொண்டவர்களாக, தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களாக உள்ளனர். கடமைகளை வலியுறுத்துகின்றவர்கள் இதற்கு நேர்மாறானவர்கள். மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கும் சேவை மனப்பான்மைக்கும் அடிப்படை உரிமைகளை விட கடமைகளை வலியுறுத்துவதில்தான் உள்ளது. உலகின் எல்லாப் பெரிய மதங்களின் போதனையும் இதுதான். புத்தர், கிறிஸ்து, காந்தி ஆகியோரின் போதனை இதுவே. ஒவ்வொரு நாளும் அளிக்கும் அனுபவத்தின் பாடமும் இதுதான். ஒரு உயர்ந்த சமூகத்தின் சிறந்த தன்மைக்கான எடுத்துக்காட்டு, அதன் உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யாமல் இருப்பது, அதற்காக உரிமைகள் என்று அழைக்கப்படுகிற தங்களது நலனையும் குறைத்துக்கொள்ளுவது என்பதுதான். எப்படியோ, ஒரு விஷயம் நிச்சயம். ஒரு சமுதாயத்தின் எந்தவொரு உறுப்பினரும் மற்றவர்களின் உரிமைகள் மீது மோதக்கூடிய அவரது உரிமையைச் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. இரண்டு பக்க உரிமைகளும், அவை ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இளைஞர்களில் சிலர், இந்த ‘உரிமைகளின் கோட்பாட்டை வலியுறுத்துவதைக் கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில், திரு இராஜகோபாலச்சாரி மாநாட்டில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், காந்தியின் போதனை என்பது உரிமைகளை விட கடமைகளின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த கேள்வியை இன்னும் சிறிது ஆழமாகச் சிந்திக்க நம் இளைஞர்களுக்கு நான் அறிவுறுத்துவேன். நாட்டு இளைஞர்களுக்கு நான் அறிவுரை வழங்குவேன். இந்த விஷயத்தைப் பற்றிய பற்றிய எழுத்துகளை இன்னும் கவனமாக வாசிப்பதற்கும், இந்த தீங்கு விளைவிக்கும் கோட்பாட்டின் தொல்லையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் நான் ஆலோசனை கூறுவேன். இது நடக்காவிடில், இந்தியாவின் ஒற்றுமைக்குச் சாத்தியமே இல்லை. நாம் பன்மொழிகளைக் கொண்ட ஒரு நாடு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், தங்கள் சுதந்தரத்திற்காகப் போராட வேண்டியிருந்த எந்த ஒரு யூரோப்பிய, மேற்கத்திய நாடுகளையும் விட நமது ஒற்றைப்படைத்தன்மை குறைவு. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அதன் மக்கள் அனைவரும் உரிமைகளால் அல்லாமல் கடமைகளால் ஈர்க்கப்பட்டாலொழிய, அத்தகைய ஒரு நாடு சுதந்தரத்தை வென்றெடுக்க முடியாது; அப்படியே சுதந்தரம் அடைந்தாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ள இயலாது. ஒவ்வொருவரும் அவருடைய நலனை மட்டுமே நினைத்தால், ஒற்றுமை இருக்காது. ஒற்றுமை இல்லாமல் சுதந்திரம் இல்லை.
(தொடரும்.)

Posted on Leave a comment

2019 தேர்தல் – தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வி | ஹரன் பிரசன்னா

பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு இடம் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) வெல்லாது என்று கணித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டைக் கணிக்கத் தவறிவிட்டன என்றுதான் தோன்றியது. துக்ளக்கின் இதயாவின் கணிப்புக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து ரங்கராஜ் பாண்டேவும் இதேபோன்ற கணிப்பை முன்வைத்தபோது ஆச்சரியமாகவும் பின்னர் இப்படித்தான் தீர்ப்பு வருமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. ஆனாலும் கடைசிவரை எப்படியும் பத்து இடங்களாவது என்.டி.ஏ வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரத் துவங்கிய ஒரு மணி நேரத்துக்கெல்லாம் எல்லாம் புரியத் தொடங்கியது.


ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத முதல் தேர்தல். அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் என்று பலமான கூட்டணி. இந்தியா முழுக்க மோடி அலை. ஆனாலும் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அசுர வெற்றி பெற்றிருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத நிலையில் நடக்கும் தேர்தல் என்பதால், அமமுக தனித்து நிற்கும் தேர்தல் என்பதால், தேர்தலுக்கு முன்பாகவே கணிக்கமுடியாது என்று சொல்லப்பட்டது. இது ஓரளவுக்கு இப்போதும் சரிதான். ஏனென்றால் இத்தனை வாக்கு வித்தியாசத்திலான திமுகவின் மிகப்பெரிய வெற்றியை யாருமே கணிக்கவில்லை.
அதேபோல் அமமுக, மநீம போன்ற கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக்கும் என்று கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதும் பொய்த்துப் போனது. மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பில்லை என்றே நான் நம்பினேன். அப்படித்தான் நடந்தது.
எல்லா முடிவுகளும் வந்துவிட்ட நிலையில் யோசித்துப் பார்த்தால்-

* பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இந்த வெற்றி ஸ்டாலினின் தொடர் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. இதனை பாஜக-அதிமுகவினர் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஸ்டாலினின் உழைப்பை அவர்கள் குறைவாக மதிப்பிட்டார்கள். என்னதான் மீம்கள் மூலம் கிண்டலடிக்கப்பட்டாலும் ஊர் ஊராக அவர் தைரியமாக மக்களிடம் சென்று பேசியது நிச்சயம் இந்த வெற்றிக்குப் பங்களித்திருக்கிறது. இதிலிருந்து பாஜகவுக்குப் படிக்க நிறைய இருக்கிறது என்பதை எழுத வேண்டியிருப்பதே பாஜகவுக்கு எவ்வளவு அவமானம் என்பதை பாஜகவினர் உணர வேண்டும். 

* காங்கிரஸ் தனித்துப் பெரிய பூஜ்ஜியம்தான் என்றாலும் அது திமுகவுடன் சேரும்போது பெரிய மாற்றம் நிகழவே செய்கிறது. 

* தமிழ்நாட்டில் கூட்டணி ஏற்படுத்திய கையோடு ஒரு வெற்றியைப் பெற்றதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எண்ணிக்கொண்டுவிட்டது. 

* கூட்டணிக்காகப் பெரிய அளவில் இங்கே பிரசாரம் செய்யப்படவில்லை. 

* கூட்டணியைத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது மக்களிடம் பரவும். இங்கே தலைவர்களிடம் ஒரு இணக்கமே இல்லை 

* எடப்பாடி பழனிசாமி ஒருவரைத் தவிர மற்ற அனைவரின் பிரசராமும் ஏனோதானோ என்றே இருந்தது. குறிப்பாக பாஜக தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்வதை விட்டுவிட்டுத் தங்கள் தொகுதிக்குள் மட்டுமே இருந்துகொண்டுவிட்டார்கள். 

* அதிமுகவின் பிரசாரமும் பெரும்பாலும் சட்டசபை இடைத் தேர்தல்களில் திமுகவைத் தடுத்து நிறுத்துவதை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிட்டது. 

* தங்கள் தரப்பை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதைத் தாண்டி, எதிர்த்தரப்பை எப்படி இல்லாமல் ஆக்குவது என்ற போராட்ட நிலைக்குள் எந்நிலையிலும் இக்கூட்டணியின் பிரசாரம் செல்லவே இல்லை. 

* சனாதன தர்மத்துக்கு எதிரான போர் என்று திமுக கூட்டணி அறிவித்தபோது அதை பாஜக கூட்டணி சரியாக எதிர்கொள்ளவில்லை. இதனால் ராமநாதபுரத்தில்கூட பாஜகவால் வெல்ல முடியாமல் போய்விட்டது. 

* திடீர்க் கூட்டணி தந்த சிக்கல்களை பாஜக கூட்டணியால் தாண்டமுடியவில்லை.

இனி என்ன செய்யலாம்?
ஒரு தேர்தலுக்கு சற்று முன்பு மட்டுமே கூட்டணி உருவாவதால் வரும் சிக்கல்கள், எப்போதுமே பாஜக இருக்கும் அணியைத்தான் பாதிக்கின்றன. எனவே பாஜக தனது கூட்டணியை வெகு முன்பே உருவாக்க வேண்டும். இதனால் சந்தர்ப்பவாதத் திடீர்க் கூட்டணி என்ற மாயையை உடைக்கலாம்.
2014 தேர்தலில் பாஜக மூன்றாவது அணியாகப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தக் கூட்டணி தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் வந்திருக்கும். ஆனால் தமிழகக் கட்சிகளுக்குப் பொறுமை இல்லை. தொடர்ச்சியான வெற்றி அதிலும் உடனடியான வெற்றி என்ற மாயையில் சிக்கி, அவர்கள் அக்கூட்டணியை உடைத்தார்கள். இன்றாவது அத்தவறைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
இக்கூட்டணியில் யாரால் யாருக்கு நஷ்டம் என்ற ஆய்வுகள் இனி வெள்ளம் போலப் பாயும். அதைக் கண்டுகொள்ளாமல் இக்கூட்டணி தொடரவேண்டும். இத்தேர்தலில் நடந்திருக்கும் ஒரு நல்ல விஷயம், இடைத் தேர்தல்களில் திமுக 13 இடங்களை வென்றிருப்பதற்கு இணையாக அதிமுகவும் 9 இடங்களில் வென்றிருப்பதுதான். ஸ்டாலின் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை என்பதை இந்த முடிவு மெய்ப்பிக்கிறது. இப்படிச் சொல்வதை திமுகவால் நிராகரிக்கமுடியாது. ஏனென்றால், மக்களவைத் தேர்தலில் அசுர வெற்றி பெற்றிருக்கும் அதே நேரத்தில், அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தேர்தல்களில் ஏன் திமுக வெல்லவில்லை என்பதை விளக்குவது திமுகவுக்குக் கடினம். 22 இடங்களையும் திமுக வென்றிருக்குமானால் இந்நேரம் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராகி இருப்பார். அப்படி நடக்கவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லதாக இப்படி அமைந்திருக்கிறது. அதாவது பாஜக கூட்டணியில் இருந்தாலும், மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாம் புரிந்துகொள்ளலாம். எனவே யாரால் யார் தோற்றார்கள் என்பதைப் புறம்தள்ளிவிட்டு, இக்கூட்டணி தொடரவேண்டும்.
மேலும் இக்கூட்டணி தொடர்ந்தே ஆகவேண்டும் என்பதற்கான இன்னொரு காரணம், அனைத்துக் கட்சிகளுக்கும் வேறு வழி இல்லை என்பது. பாஜகவால் தனித்து இப்போதைக்கு வெல்ல முடியாது. அன்புமணிக்கு இருக்கும் முதல்வர் கனவின் நேரடிப் போட்டியாளர் ஸ்டாலின் என்பதால், அவருடன் கூட்டணி சேர்வது, தனது கனவைக் கைவிடுவதற்குச் சமம். எடப்பாடி அரசு அடுத்த தேர்தலிலும் அமையவேண்டும் என்றால் கூட்டணி இல்லாமல் அது அதிமுகவுக்கு சாத்தியமே இல்லை. தேமுதிக மீண்டும் திமுகவுடன் சேருமானால், அக்கட்சி இன்னொரு மதிமுகதான் என்று உறுதி செய்யப்பட்டுவிடும். இந்நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு, இக்கூட்டணியைத் தொடர்ந்துகொண்டே எப்படி வெல்வது என்று யோசிப்பதுதான்.
இக்கூட்டணி எவ்விதச் சிக்கலும் இல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடருமானால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சட்டசபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு முடிக்கப்பட்டுக் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கவேண்டும். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றிப் பேசுதலை அதிகம் செய்யவேண்டும். இவையெல்லாம் மக்களிடம் ஒரு இணக்கத்தைக் கொண்டு வரும்.
மோடியின் அலை இந்தியா முழுக்க வீசிக்கொண்டிருக்க, தமிழ்நாட்டில் மட்டும் அந்த அலை இல்லாமல் போயிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் புகுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. தினம் எழுந்தால் ஏதேனும் ஒரு போராட்டம், ஏதேனும் ஒரு துரோகம் கண்டுபிடிப்பு என்றே ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள், போராளிகள் என்ற முகத்திரையில் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இதைத் தீவிரமாகத் தடுக்க பாஜக தரப்பு தவறிவிட்டது. இதனால்தான் கோவையில்கூட சி.பி. ராதாகிருஷ்ணனால் வெல்ல முடியவில்லை.
இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இது இன்னும் தீவிரமாகும். இப்படி தமிழ்நாட்டைப் போராட்டக் களமாகவே வைத்திருப்பது தேர்தலில் உதவுகிறது என்று ரத்தச்சுவை கண்டுவிட்ட கட்சிகள், இதையே இன்னும் தீவிரமாக முன்னெடுக்கும். பாஜக-அதிமுக கூட்டணி இதை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளவேண்டும்.
இந்திய எதிர்ப்பாளர்களுக்கு லாவணி பாடிக்கொண்டிருக்காமல் அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் மத்திய அரசு வைத்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது. இனியாவது பாஜக தன்னிடம் உள்ள அரசின் பலத்தையும் அதிகாரத்தின் பலத்தையும் புரிந்துகொண்டு, இந்திய நாட்டுக்கு எதிரான பிரசாரங்களை நியாயமாகக் கையாளுவது நல்லது. இல்லையென்றால் பிரிவினைவாதம் மிக எளிதாக மக்களிடம் பரப்பப்படும். இப்போதே நாட்டுப்பற்று என்பது ஒரு கிண்டலுக்குரிய விஷயம் என்று தமிழ்நாட்டு மக்கள் மனதில் விதைக்கப்பட்டாகிவிட்டது.
வலுவான, மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான மாநிலத் தலைமையுடன் பாஜக, தனது கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டால் தமிழ்நாட்டிலும் பாஜகவின் கொடி பறக்கும் நாள் தூரத்தில் இல்லை. தான் செய்த நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்வது, இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை உடைப்பது, பாஜகவுக்கு எதிரான பொய்களைத் தோலுரிப்பது, இவற்றையெல்லாம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கட்சிக்குப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றை பாஜக பெரிய அளவில் செய்வது முக்கியமானது. தனது இடம், தனது ஆதரவாளர்களின் இடம், தனது செல்வாக்கு, தனது தொகுதியில் தனது வெற்றி என்று இயங்கினால், இதேபோன்ற தோல்விகள்தான் காத்திருக்கும்.
கூட்டணி அமைப்பது நிச்சயம் ஒரு பலமே. ஆனால் அந்த பலம் மட்டுமே வெற்றியைக் கொண்டு வந்துவிடாது. மோடி அலை இருந்தும், நல்ல கூட்டணி இருந்தும், இந்தியா முழுக்க சூறாவளி பிரசாரம் செய்த மோடியின் உழைப்பே, தமிழ்நாட்டு பாஜகவுக்கு நல்ல எடுத்துக்காட்டு. அயராத உழைப்பு, வலுவான பிரசாரம், எதிர்ப்புக் குரலுக்கான தீவிரமான பதில் – இவற்றை மட்டுமே நம்பித் தேர்தலை எதிர்கொள்வது நல்லது. அப்போதுதான் அமைக்கப்படும் கூட்டணியின் பிரம்மாண்டத்துக்கு நியாயமான வெற்றி கிடைக்கும்.
ஸ்டாலின் 2014 தேர்தலிலும் சரி, 2019 தேர்தலிலும் சரி, தொடர்ந்து மக்களிடம் சென்று பேசினார். அவருக்குச் செய்யப்பட்ட கேலிகள், கிண்டல்கள் என எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தனது பலவீனத்தை இப்பிரசாரத்தின் மூலம் அவர் கடந்தார். ஆந்திராவில் இதே பாணியைப் பின்பற்றி ஜெகன்மோகன் ரெட்டி வென்றிருக்கிறார். அதாவது மக்களிடம் தொடர்ந்து சென்று உரையாடினால் அவர்கள் உங்களை நம்புவார்கள். அவர்களிடம் நிச்சயம் உங்களுக்கு எதிரான கேள்விகள் இருக்கும். நீங்கள் பதில் சொல்லமுடியாமல் போகலாம். ஆனாலும் தொடர்ந்து மக்களிடம் உரையாடினால் அவர்கள் நெருங்கி வருவார்கள். ஸ்டாலினுக்கு இது நடந்திருக்கிறது. ஸ்டாலினுக்கே நடந்திருக்கிறது. எனவே பாஜக தன்னை தமிழகத்தில் எப்படிப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கான பாதை காத்திருக்கிறது. பயணம் மட்டுமே நிகழவேண்டும்.
Posted on Leave a comment

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் – ஓர் ஆய்வு | லக்ஷ்மணப் பெருமாள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக
நாடான இந்தியாவின்
மக்களவைத் தேர்தல்
முடிவுகள் மே
23, 2019 அன்று வெளியாகின. மொத்த மக்களவைத் தொகுதிகளின்
எண்ணிக்கை 543. இதில் வேலூரில் மட்டும் தேர்தல்
ரத்து செய்யப்பட்டிருந்தது.
தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள்
272. பாரதிய ஜனதா கட்சி தனித்து 303 இடங்களைப்
பெற்று ஆட்சி
அமைத்திருக்கிறது. பாரதிய ஜனதா
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களைக்
கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ்
52 இடங்களை மட்டுமே பெற்றது.

2014 – 2019 ஓர் ஒப்பீடு

 • 2014 தேர்தலில் பாஜக
  282 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் பெற்றன. 2019 தேர்தலில்
  பாஜக 303 இடங்களையும்,
  காங்கிரஸ் 52 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு
  சதவீதம் 31.34% (2014) லிருந்து 37.6% க்கு
  2019 தேர்தலில் அதிகரித்துள்ளது. காங்கிரஸ்
  18.34% (2014) மற்றும் 18.34% (2019) வாக்குகளை மட்டுமே
  பெற்றுள்ளது. காங்கிரசால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க
  இயலவில்லை.
 • தேசிய ஜனநாயகக்
  கூட்டணி 336 (2014) இடங்களைப் பெற்று
  இருந்தது. தற்போது
  16 இடங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது.
 • ஐக்கிய முற்போக்குக்
  கூட்டணி 60 (2014) இடங்களைப் பெற்றது.
  தற்போது 91 இடங்களைப் பிடித்துள்ளது.
  2014 தேர்தலின்போது திமுக ஐக்கிய
  முற்போக்குக் கூட்டணியை விட்டு விலகி இருந்தது
  குறிப்பிடத்தக்கது.
 •  பாஜக 50% க்கும்
  அதிகமான வாக்குகளை
  16 மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் உட்பட) பெற்றுள்ளது.
  குஜராத் (62.1%), ராஜஸ்தான் (58.2%), மத்தியப்
  பிரதேசம் (58%), டெல்லி (56.3%), இமாச்சலப் பிரதேசம் (69%), உத்தரகாண்ட்
  (62.1%), சத்தீஸ்கர் (50.2%), ஹரியானா (57.8%), அருணாச்சலப் பிரதேசம்
  (57.9%), கர்நாடகா (51.38%), கோவா (51.18%), சண்டிகர்
  (50.64%), ஜார்கண்ட் (50.96%) ஆகும். இவை
  தவிர உத்திரப்
  பிரதேசம், பீகார்,
  மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணியோடு 50% க்கும்
  அதிகமான வாக்குகளைப்
  பெற்றுள்ளது பாஜக.
 • பாஜக வெற்றி
  பெற்ற 303 தொகுதிகளில்
  224 இடங்களில் 50% க்கும் அதிகமான
  வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது.
 • மேற்குவங்காளம், திரிபுரா,
  ஒடிசா, தெலுங்கானா
  ஆகிய மாநிலங்களில்
  அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த தேர்தலோடு
  ஒப்பிடுகையில் அதிக இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

மேற்கு வங்கம் 17.2% (2014) – 40.2% (2019) – 2014ல் 2 இடங்கள்,
2019ல் 18 இடங்கள்.
திரிபுரா 5.8% (2014)
– 48.9% (2019) – 2014ல் 0 இடங்கள், 2019ல்
2 இடங்கள்.
ஒடிஷா 21.3% (2014) –
38.3% (2019) – 2014ல் 1 இடம், 2019ல்
8 இடங்கள்.
தெலுங்கானா 11.2%
(2014) – 19.8% (2019) – 2014ல் 1 இடம், 2019ல்
4 இடங்கள்.
(ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ்)

 • உயர்சாதிக் கட்சி
  பாஜக என்ற
  பிம்பத்தை, 2014, 2019 ஆகிய இரு
  மக்களவைத் தேர்தல்களிலும்
  பாஜக உடைத்தெறிந்துள்ளது.
  எஸ்சி, எஸ்டி
  பிரிவிலுள்ள தொகுதிகளில் பாஜகவே அதிக இடங்களைப்
  பெற்றுள்ளது. மொத்தமுள்ள 84 எஸ்சி இடங்களில், பாஜக
  46 (2019) இடங்களைப் பெற்றுள்ளது. 2014 தேர்தலில் 40 இடங்களைப் பெற்றது. இதில்
  குறிப்பாக உத்திரப்பிரதேசம்
  (14), மேற்கு வங்காளம் (5), கர்நாடகா
  (5), ராஜஸ்தான் (4), மத்தியப் பிரதேசம்
  (4) ஆகிய மாநிலங்களில்
  மட்டும் 32 இடங்களைப் பிடித்துள்ளது. எஸ்டி பிரிவுக்குட்பட்ட
  47 இடங்களில் பாஜக 31 (2019) இடங்களை வென்றுள்ளது. 27 (2014) தேர்தலில் பெற்றதைக் காட்டிலும் அதிகமாக
  4 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. எஸ்சி பிரிவில்
  6 இடங்களை அதிகமாகப்
  பிடித்துள்ளது. கீழே உள்ள அட்டவணையில், எஸ்சி,
  எஸ்டி ஒவ்வொரு
  கட்சியும் பெற்ற
  இடங்களையும் வாக்கு சதவீதத்தையும் காணலாம்
 (Source: Times of
India)
 •  2014 தேர்தலோடு ஒப்பிடுகையில்
  பாஜக எஸ்சி
  தொகுதிகளில் 5.90% அதிகமாகவும், எஸ்டி
  தொகுதிகளில் 6.7% அதிகமாகவும், பொதுப் பிரிவில் 5.40% அதிகமாகவும்
  பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் காங். மற்றும்
  பாஜக பெற்ற
  வாக்கு சதவீத
  வித்தியாசம் முக்கியச் செய்தியைக் காட்டுகிறது. ஏழைகள்,
  தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி என்ற
  பெருமையை காங்கிரஸ்
  இழந்து விட்டுள்ளது
பிரிவு காங்.
வாக்கு சதவீதம்
பாஜக
வாக்கு சதவீதம்
எஸ்சி
தொகுதிகள் 
17.10% 34.60%
எஸ்டி
தொகுதிகள்
28.70% 40.10%
பொதுப்பிரிவு 19.00% 36.80%

 •  ஒட்டுமொத்தமாக முஸ்லிம்
  எம்பிக்களின் எண்ணிக்கை 23 லிருந்து 27 ஆக உயர்ந்துள்ளது.
  பாஜக நிறுத்திய
  ஆறு முஸ்லிம்
  வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதிகபட்சமாக திரிணமுல்
  காங்கிரஸ் (5), காங்கிரஸ் (4), சமாஜ்வாடி
  (3), பஹுஜன் சமாஜ்வாடி (3), இந்திய யூனியன் முஸ்லிம்
  லீக் (3), நேஷனல்
  கான்பெரன்ஸ் (3) அடங்குவார்கள். ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக
  உள்ள தொகுதிகள்
  என அடையாளப்படுத்தப்பட்ட
  79 தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக
  வெற்றி பெற்றுள்ளது.
  இதன் மூலம்
  பாஜக சிறுபான்மையினருக்கு
  எதிரான கட்சி
  என்பது முறியடிக்கப்பட்டுள்ளது.
  காங்கிரசோ ஆறு
  இடங்களை மட்டுமே
  வென்றுள்ளது. கடந்த 2014 தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டால்
  பாஜக கூடுதலாக
  ஏழு இடங்களைப்
  பெற்றுள்ளது. காங்கிரஸ் 12 இடங்களிலிருந்து
  ஆறு இடங்களை
  இழந்துள்ளது.
 • 2019 மக்களவைத் தேர்தலில்
  பாஜகவும் காங்கிரசும்
  186 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. இதில்
  16 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
  பாஜக 170 இடங்களைக்
  கைப்பற்றி உள்ளது.
  பாஜகவின் வெற்றி
  விகிதம் 91.4%. 2014 தேர்தலில் காங்கிரசோடு
  ஒப்பிடுகையில் 84% வெற்றியை ஈட்டி
  இருந்தது பாஜக.
  கடந்த 2014 தேர்தலில் பாஜகவுடன் நேரடியாக மோதியபோது
  24 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை
  16 இடங்களாக சுருங்கி விட்டுள்ளது.
 • 2019 மக்களவைத் தேர்தலில்
  20 மாநிலங்களில் இருந்து காங்கிரசின் ஒரு எம்பி
  கூட வெற்றி
  பெறவில்லை என்பது
  குறிப்பிடத்தக்கது. இது தவிர
  மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில்
  இருந்து ஒரேயொரு
  எம்பி மட்டுமே
  வெற்றி பெற்றுள்ளார்கள்.
  பாஜகவை பொருத்தவரையில்
  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், லட்சத்தீவு,
  மேகாலயா, அந்தமான்
  நிக்கோபார், தாத்ரா நாகர்வேலி, மேகலாயா, மிசோரம்,
  புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் (யூனியன் பிரதேசம்
  உட்பட) இருந்து
  ஒரு எம்பி
  கூட வெற்றி
  பெறவில்லை.

 பாஜகவின் வெற்றி சூத்திரமும்
காங்கிரசின் தவறான வியூகமும்

 • பாஜகவின் வெற்றிக்கு
  மிக முக்கியக்
  காரணங்கள்: பயனாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில்
  அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கொண்டு சேர்த்தது;
  இலவச காஸ்
  சிலிண்டர் இணைப்பு;
  அனைத்துக் கிராமங்களுக்கும்
  மின்வசதியை ஏற்படுத்தித் தந்தது; பிரதமரின் ஆயுஸ்மான்
  பாரத் திட்டம்;
  இலவசக் கழிப்பறைகள்
  திட்டம்; விவசாயிகளுக்கு
  ஆண்டுக்கு 6000 ரூபாய் அறிவிப்பு; விவசாயப் பயிர்களுக்கான
  விலை உயர்வு,
  விலைவாசிக் கட்டுப்பாடு, எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கான
  அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியது;
  10% ஏழைகளுக்குப் பொதுப்பிரிவில் இட ஒதுக்கீடு கொண்டு
  வந்தது; முத்ரா
  வங்கிகள் மூலமாகக்
  கடன் உதவி
  ஆகிய திட்டங்களை
  வெற்றிகரமாகச் செயல்படுத்தியதுதான். இதன் விளைவைத் தேர்தல்
  முடிவில் அறுவடை
  செய்ய முடிந்திருக்கிறது.
 • இந்தியாவின் தேசப்
  பாதுகாப்பை உறுதி செய்தது, வெளியுறவுக் கொள்கையில்
  கொண்டு வந்த
  அதிரடி மாற்றங்கள்,
  வெளிநாடுகள் மத்தியில் இந்தியாவைப் பெருமைமிகு நாடாக
  மாற்றியது மோடி
  என்கிற எண்ணம்
  மக்களிடம் பரவலாகக்
  காணப்பட்டதும், ராணுவத்தைப் பலப்படுத்தும் வகையில் அரசின்
  செயல்பாடுகள் அமைந்ததும் மக்களிடம் பேராதரவைத் தேடித்
  தந்துள்ளது.
 • மேற்கூறிய விஷயங்கள்
  அரசின் செயல்பாடுகள்
  என்றாலும் அரசியலில்
  தேர்தல் கூட்டணி,
  பிரசார வியூகம்,
  கட்சி மற்றும்
  ஆட்சியின் செயல்பாடுகளை
  மக்களிடம் கொண்டு
  சேர்க்க வியூகங்களை
  வகுத்தல் என
  அனைத்திலும் பாஜக காங்கிரசைக் காட்டிலும் பதினாறடி
  பாய்ந்து சென்றது.
 • சில மாநிலங்களில்
  கடந்த தேர்தலைக்
  காட்டிலும் குறைவான இடங்களைப் பெற்றாலும் (குறிப்பாக
  பீகாரில் 17 (22 – 2014) இடங்களைக் குறைத்துக்
  கொண்டு கூட்டணியை
  வலுப்படுத்தியது, மகாராஷ்டிராவிலும் அதே அணுகுமுறை, தமிழகத்தில்
  இடங்களைப் பெறாவிட்டாலும்
  மெகா கூட்டணிக்காக
  ஐந்து இடங்களுக்கு
  ஏற்றுக் கொண்டது
  எனக் கூட்டணி
  வியூகத்தோடு தேர்தலைச் சந்தித்தது.
 •  பாரதப் பிரதமர்
  நரேந்திர மோடிக்கு
  அருகில் கூட
  நெருங்காத நிலையில்தான்,
  மாற்றுக் கட்சிகளின்
  தலைவர்கள் போட்டியில்
  இருந்தார்கள். மேலும் பாஜக பிரதமராக மக்களின்
  அபிமானத்தைப் பெருமளவு பெற்ற மோடி ஒருபுறம்
  என்றால், எதிர்
  அணியில் யார்
  பிரதமர் வேட்பாளர்
  என்ற எந்த
  நோக்கமும் இல்லாமல்
  தேர்தலை எதிர்கொண்டது
  போன்ற அரசியல்
  காரணங்கள் பாஜகவை
  மீண்டும் அரியணையில்
  அமர்த்தியுள்ளன.
 • வலிமையான பாரதம்,
  பாதுகாப்பான பாரதம் இதுதான் பாஜகவின் தேர்தல்
  கோஷமாக இருந்தது.
 • குறிப்பாகச் சொல்ல
  வேண்டுமானால் பாஜக உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி
  என்கிற நிலையை
  மாற்றி அனைத்து
  இந்துக்களின் தலைவனாக, பெரும் இந்து சமூகத்தின்
  அடையாளமாக நரேந்திர
  மோடி விளங்கினார்.
  கர்நாடகா தவிர
  மற்ற தென்
  இந்திய மாநிலங்களில்
  அத்தகைய பார்வை
  இல்லாவிட்டாலும் வட இந்தியாவில் இந்துக்கள் அப்படி
  ஒருங்கிணைந்தார்கள். இஸ்லாமியப் பெண்களின்
  மத்தியிலும் முத்தலாக் மூலம் மோடி பிரபலம்
  அடைந்தார். எனவேதான் பட்டியல் பிரிவுத் தொகுதிகள்
  மட்டுமல்லாமால் சிறுபான்மையினரின் தொகுதிகளிலும்
  அதிக இடங்களைப்
  பாஜகவால் பெற
  முடிந்துள்ளது.

காங்கிரஸ் தோற்றதற்கான காரணம்:

 • காங்கிரஸ் ராகுலைப்
  பிரதமராக முன்னிறுத்தாதது
  ஒருபுறம். காங்கிரஸ்
  தாங்கள் ஆட்சி
  அமைக்க ஆதரவு
  தாருங்கள் என்பதற்குப்
  பதிலாக மோடியை
  அகற்றுங்கள் என்று பிரசாரம் செய்தது. இது
  அவர்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை
 • மோடி எதிர்ப்பு
  விஷயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலக்
  கட்சிகள் ஒருமித்த
  கருத்தைக் கொண்டிருந்தாலும்
  தேர்தல் கூட்டணி
  என்று வரும்போது
  சில மாநிலங்களில்
  காங்கிரசைப் பெரிய மாநிலக் கட்சிகள் அரவணைக்கத்
  தயாரில்லை. காங்கிரஸ் தேவையில்லாத சுமை என்பதும்,
  தங்களை வைத்து
  காங்கிரஸ் வெற்றி
  பெற்றால் தங்களின்
  பிரதமர் கனவு
  என்னாவது என்பதுமாக
  காங்கிரசோடு கூட்டணி ஏற்படுத்தாமல் விட்டன. ஒவ்வொரு
  மேடையிலும் மோடியை வீழ்த்த ஒன்றிணைந்த கட்சிகள்
  தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி வைக்கத் தயாராக
  இல்லாமல் போயின.
  சில மாநிலங்களில்
  தனக்கு மிகக்
  குறைந்த இடங்களை
  மட்டுமே மாநிலக்
  கட்சிகள் தரும்
  என்பதால் காங்கிரஸே
  ஆம் ஆத்மி
  போன்ற கட்சிகளோடு
  கூட்டணியை ஏற்படுத்தவில்லை.
  உபியில் சமாஜ்வாடி,
  பஹுஜன் சமாஜ்வாடி
  கூட்டணி அமையவில்லை.
  இதன் தாக்கம்
  மத்தியப் பிரதேசம்,
  ராஜஸ்தானிலும் தொடந்தது. மேற்குவங்கத்தில்
  திரிணமுல் காங்கிரஸ்
  அல்லது கம்யூனிஸ்ட்டுகளுடன்
  கூட்டணி அமைக்காமல்
  போனது போன்றவை,
  தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதற்குச்
  சமமாக மாறியது.
 •  அடுத்து காங்கிரசின்
  பிரசார வியூகம்.
  பாஜக அரசை
  எதிர்த்து அவர்
  முன்வைத்த வேலையில்லாத்
  திண்டாட்டம் வட இந்தியாவில் எந்தத் தாக்கத்தையும்
  இந்தத் தேர்தலில்
  ஏற்படுத்தவில்லை. தற்போது எந்த இளைஞர்களும் அரசு
  வேலை வாய்ப்பை
  நம்பி இல்லை
  என்பதால்தான் இந்தப் பிரசாரம் எடுபடவில்லை. மாறாக
  பாஜக அரசு
  5,00,000 ரூபாய் வரை வரி விலக்கு கொண்டு
  வந்ததால் பெரும்பாலான
  முதல்முறை வாக்காளர்கள்
  மற்றும் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள்
  மத்தியில் பாஜகவிற்குப்
  பெருமளவு ஆதரவு
  கிடைத்தது. வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிப் பேசியவர்
  ஆரம்பத்தில் ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது
  என்ற பிரசாரத்தை
  முன்வைத்தார். ஆனால் அதைக் கூட்டணியில் இருந்த
  ஸ்டாலினோ, சரத்பவாரோ
  கூட முன்வைக்கவில்லை.
  மேலும் பரப்புரையின்போது
  உச்சநீதிமன்றம் மோடியைத் திருடன் என்றும் ஊழல்வாதி
  என்றும் சொல்லியுள்ளது
  என்று சொன்னார்.
  அதை மக்கள்
  ரசிக்கவில்லை. மேலும் உச்சநீதி மன்றத்தில் இதற்காக
  மன்னிப்பும் கேட்க வேண்டி வந்தது.
 • புல்வாமா தாக்குதலில்
  வீரர்கள் பாதிக்கப்பட்டு
  இருந்த நிலையில்
  அரசு நடத்திய
  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கைச் சந்தேகப்பட்டதும்,
  புல்வாமா பதிலடியில்
  அரசு நாடகம்
  நடத்துகிறது என எதிர்க் கட்சிகள் பேசியதும்
  வட இந்திய
  மக்களிடம் எரிச்சலைக்
  கிளப்பியது.
 • நியாய் திட்டத்தின்
  கீழ் ஆண்டுக்கு
  72,000 ரூபாய் விவசாயிகளுக்குத் தரப்படும்
  என்ற கோஷத்தைக்
  கூட முழுமையாக
  எடுத்துச் செல்லாமல்,
  மீண்டும் மீண்டும்
  மோடியை மட்டுமே
  நோக்கித் தாக்குதலைத்
  தொடந்ததற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.
 • தாங்கள் என்ன
  செய்யப்போகிறோம் என்பதற்குப் பதிலாக முற்றிலுமாக எதிர்மறையாகப்
  பிரசாரம் செய்தது
  காங்கிரஸுக்கு முற்றிலும் எதிராக முடிந்துள்ளது.

 பாஜகவின் வெற்றியைப் புரிந்து
கொள்வது எப்படி?

2014 தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு
மிக முக்கியக்
காரணம், நரேந்திர
மோடி தன்னை
வளர்ச்சி நாயகனாக
முன்னிறுத்தியது. அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சியில் ஏற்பட்ட
ஊழல். ஆட்சிக்கு
எதிராக மக்களிடம்
ஏற்பட்ட வெறுப்பு
ஆகியவற்றால் மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது
காங்கிரஸ். பாஜகவோ 30 ஆண்டுகளுக்குப் பிறகு 282 இடங்களைப்
பெற்று தனிப்பெரும்னையுடன்
ஆட்சியை அமைத்தது.
2019 தேர்தலில் பாஜக குறைந்த
இடங்களைப் பெற்றிருந்தாலோ
அல்லது தனிப்பெரும்பான்மையோ
பெறாமல் போய்
இருந்தால் கூட,
இந்திய ஊடகங்கள்
இது பாஜகவின்
தோல்வி என்றே
பேசிக்கொண்டு இருந்திருக்கும். பாஜக கூட்டணிக் கட்சிகளின்
உதவியோடு ஆட்சி
அமைத்தால் கூட
இது பாஜகவின்
தோல்வி என்று
விவாதங்களை நடத்தி இருக்கும். ஆனால் இந்த
வெற்றி, ஆட்சிக்கு
ஆதரவான வாக்குகள்
மட்டுமல்ல. மோடி என்ற தலைவனின் மீது
மக்கள் வைத்திருக்கும்
அபரிமிதமான நம்பிக்கை. இந்தியாவின் வளர்ச்சியை மேலும்
வலுப்படுத்த இன்றைய நிலையில் நரேந்திர மோடியால்
மட்டுமே முடியும்
என்கிற அசைக்க
முடியாத நம்பிக்கையை
மக்கள் அவர்
மீது வைத்துள்ளார்கள்.
அதன் விளைவாகவே
கடந்த தேர்தலைக்
காட்டிலும் அதிக இடங்களைப் பாஜகவிற்கு வழங்கி
உள்ளார்கள்.
பாஜகவின் வெற்றிக்கு மிக
முக்கியக் காரணம்,
ஆர்எஸ்எஸ்சில் உள்ள தொண்டர்களின் தன்னலமற்ற பிரசாரமும்,
பாஜகவின் தலைவரான
அமித்ஷாவின் அயராத உழைப்பும் வியூகங்களும் முக்கியக்
காரணங்கள். சமூக வலைத்தளங்கள், மன் கி பாத், அரசு
விழாக்கள், தொழில் துறை மாநாட்டு உரைகள்,
வெளிநாட்டுப் பயணங்களில் இந்தியர்கள் மத்தியிலான உரை,
பாஜகவின் சமூக
ஊடகங்கள் எனப்
பிரதமர் மோடி
நேரடியாக மக்களிடம்
உரையாடியதன் பலன், பாஜகவின் வெற்றிக்கான காரணங்களில்
ஒன்று.
மெயின் ஸ்ட்ரீம் மீடியா
என்றழைக்கப்படும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் மோடி
ஏன் தங்களைச்
சந்திக்கவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பை ஏன் மோடி
வைப்பதில்லை என்று கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தன,
ஆனால் மோடியோ
பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில், கும்பலாகக்
கேள்வி கேட்கிறேன்
என்ற பெயரில்
அரசியல் தலைவர்களை
பதற்றத்துக்குள்ளாக்கி, அதில் அவர்கள்
விடும் வார்த்தைகளை
வைத்து, அவர்
எப்படி இப்படிச்
சொல்லலாம் என்று
குறிப்பிட்ட அரசியல்வாதியின் பிம்பத்தை உடைப்பதைப் பெருமையாக
நினைக்கின்றன, இன்றைய ஊடகங்களும் பத்திரிகையாளர்களும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ரஜினிகாந்தின்
பத்திரிகையாளர் சந்திப்பைச் சொல்லலாம். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்
என்று நல்லெண்ணத்துடன்
சொன்ன கருத்தை
எடுத்துக்கொண்டு, ‘போராட்டங்களை அவமதிக்கிறாரா?
இழிவு படுத்துகிறாரா?’
என்று திரித்துவிடும்
ஊடகங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இவர்களின் கீழ்த்தரமான
நடவடிக்கைகளைப் புரிந்துகொண்ட பிரதமர் மெயின் ஸ்ட்ரீம்
மீடியாக்களைப் மதிப்பதில்லை. காரணம், நான் மக்களுடன்
நேரடியாக உரையாடுகிறேன்,
ஆட்சியின் செயல்பாடுகளை
மக்கள் முன்பாக
வைக்கிறேன் என்பதே அவர் ஊடகங்களுக்குக் கொடுக்கும்
செய்தியாக உள்ளது.
என் மீதான
விமர்சனத்தையோ ஆட்சி மீதான விமர்சனத்தையோ ஊடகங்கள்
மக்களிடம் வைக்கட்டும்.
மக்கள் யாரைத்
தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ, அவர்களைத்
தேர்வு செய்யட்டும்
என்பதான அவரின்
செயல்பாடுகளால்தான் அனாவசியாமாக அவர்
ஊடகங்கள் வசம்
சிக்காமல் உள்ளார்.
மேலும் மோடியின்
செய்திகளை மக்கள்
விரும்பிப் பார்ப்பார்கள், அதனால் சேனலின் டிஆர்பி
ஏறும் என்பதால்தான்
அத்தனை ஊடகங்களும்
மோடி எங்கு
பேசினாலும் நேரடி ஒளிபரப்பைச் செய்கின்றன.
தாராளமயவாதிகளும், இடதுசாரி சிந்தனையாளர்களும்
எதிர்க்கட்சிகளும்மோடி சிறுபான்மைக்கு
எதிரானவர்என்ற பிரசாரத்தையும், ‘இந்துத்துவம் விஷம்,
மோடி பிரிவினைவாதி
என்ற கோஷத்தையும்
கைவிடாமல் இருக்கும்
வரையிலும், மோடி வீழத்தப்பட இயலாத தலைவராகவே
இருப்பார். அரசின் செயல்பாடுகளைக் கவனித்து மக்கள்
ஒருபக்கம் வாக்களித்தாலும்,
உணர்வு ரீதியாகவே
இறுதியில் வாக்கு
செலுத்த முடிவெடுக்கிறார்கள்.
இரண்டிலும் மோடி முன்னணியில் இருப்பதால்தான் அவர்
வீழ்த்த இயலாதவராக
2000லிருந்து இன்று வரை உள்ளார். மோடி
குஜராத்தின் முதல்வரான நாளில் இருந்து இன்றுவரை
தனிப்பெரும்பான்மையுடன்தான் ஆட்சியைக் கைப்பற்றி
வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
வலிமையான பாரதம், வளமான
இந்தியா, தூய்மையான
இந்தியா, நீர்ப்பிரச்சினையைத்
தீர்க்கும் அரசு, ஏழைகளின் நலன் பாதுகாக்கும்
அரசை மக்கள்
மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்.
அவ்வகையில் பாரதப் பிரதமர் மோடி 2019 தேர்தலில்
தமது சாதனையைச்
சொல்லி வாகை
சூடி உள்ளார்.
அடுத்த ஐந்து
ஆண்டுகளும் மக்கள் நம்பிக்கையைப் பாஜக அரசு
பெற வாழ்த்துவோம்

உசாத்துணை

Posted on Leave a comment

தமிழகத்தில் தாமரை மலருமா? | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி ஏற்படுமா என்கிற ஒரு வாசகரின் கேள்விக்கு, பல தலைமுறைகளுக்குப்
பிறகு ஒரு விஷயம் நடக்குமா நடக்காதா எனச் சொல்லத் தமக்கு முடியாது எனப் பதில் சொல்லியிருந்தார்
‘சோ
ராமசாமி.
இந்தியா முழுக்க அலை அடித்துப் பெரும் வெற்றி பெற்ற பாஜக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்
ஏன் தோல்வி அடைந்தது?
கேரளாவில் சபரிமலை விவகாரம் பெரும் புயலாக வீசியபோது ஒரு நுண்ணிய பிரசாரம் அவிழ்த்து
விடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சபரிமலையில் பெண்கள் செல்வதை ஆதரிக்கிறது என்றும்
, அதற்குப் பின்னால் ஒரு வலதுசாரி சதி இருக்கிறது
என்றும் அந்தப் பிரசாரம் கூறியது. சபரிமலை விவகாரத்தில் களத்தில் சங்க அமைப்புகளே இடதுசாரி
அரசின் அடக்குமுறையை எதிர்த்து வேலை செய்தன. ஆனால் அதன் அரசியல் அறுவடை பாஜகவிற்குக்
கிடைக்கவில்லை. என்றபோதிலும் இந்துக்கள் பல இடங்களில் சிறுபான்மையாகவே ஆகியிருக்கிற
கேரளாவில் ஏற்கெனவே சட்டசபையில் தாமரை மலர்ந்திருக்கிறது. அடுத்த சட்டசபை
த் தேர்தலில் பாஜக நிச்சயமாகக் கூடுதல் இடங்களைக்
கைப்பற்றும் என்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
இனி தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் என்று பாஜக 2014ல் மத்திய அரசை அமைத்ததோ அன்றே அதற்கு எதிரான
பிரசாரம் பல தளங்களில் முடுக்கிவிடப்பட்டது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவ
ப் பிரசார அமைப்புகள் இதற்காக மிகக் கடுமையாகச்
செயல்பட்டன. கிறிஸ்தவப் பிரசார அமைப்புகள் எனக் கூறியவுடன் தெருவில் நின்று பிரசுரம்
விநியோகிக்கிற, அல்லது ‘நோயாளிகளை சொஸ்தப்படுத்துகிறோம்
என்று கூவுகிற அல்லேலுயாக்கள் நமது நினைவுக்கு வரலாம்.
ஆனால் அமைதியாக வெளியே தெரியாமல் செயல்படும் கிறிஸ்தவ ஊடக மையங்கள் உள்ளன. அவை தமிழ்நாட்டின்
முக்கிய எழுத்தாளர்கள் தொடங்கி நாடக-சினிமா கலைஞர்களை, வெளியே மதச்சார்பின்மை போலத்
தெரியும் விஷயங்கள் மூலமாக உள்ளே இழுத்து, அவர்களைக் கடுமையான இந்து வெறுப்பு மனநிலைக்குக்
கொண்டுசெல்கிறார்கள். இதில் இந்தப் பிரசாரத்தை உண்மை என நம்பிவிடுகிறவர்கள் உண்டு என்றால்,
இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பதால் அதனால் பல தளங்களில் லாபம் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுகிற
இலக்கியவாதிகள், சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம்.
1998ல் கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்துல்நாசர் மதானியை விடுதலை
செய்யவேண்டும் என்கிற விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகளின்
பெயர் வரிசையைப் பாருங்கள். மேடையில் கம்ப ராமாயணத்தை மேலோட்டமாகப் பேசியே பெயர்பெற்ற
இலக்கிய ஆசாமி, கோவை குண்டுவெடிப்புக்காகச் சிறையில் இருந்த மதானியை விடுதலை செய்ய
கையெழுத்திட யோசிக்க மாட்டார். யோகானந்தரின் சுயசரிதையை உருவித் தன்னை சாயாத பாபாவாகக்
காட்டுகிற நடிகர் கோவை குண்டுவெடிப்பில் இஸ்லாமியர்களுக்குத் தொடர்பிருக்க முடியாது
என்று தமக்கு அமெரிக்காவிலேயே செய்தி வந்ததாகச் சொல்லுவார். இதற்கெல்லாம் பின்னால்
இருக்கும் காரணம், ஹிந்து சமுதாயத்தின் மீது அக்கறை கொள்வதே ஒருவித எதிர்மறைச் செயல்
என்பது போன்ற பிம்பத்தை தமிழ்நாட்டில் பரவவிட்டதே. அந்தக் காரியத்தைக் கமுக்கமாகச்
செய்தவர்கள் கிறிஸ்தவ இறையியல் அமைப்புகள். மதுரை இறையியல் கல்லூரிக்கு அழைக்கப்படுவது
என்பது நீங்கள் இலக்கியவாதியா இல்லையா என்பதைத் தீர்வு செய்யும் ஒரு முக்கிய மைல்கல்.
‘என்னை ஹரிஜன் என அழைக்க நீ யாரடா நாயே
எனக் காந்தியைக்
கேட்கும் பாடலை இந்த இறையியல் கல்லூரியில் தங்கும் விடுதி மாணவர்களுக்குக் கற்றுக்
கொடுக்கப்படுவதை ஒரு மூத்த இலக்கியவாதி வெளிப்படுத்தினார். ஆனால் காந்தி என்பவர் இந்துத்துவர்களை
அடிக்க மட்டுமே பயன்படுத்தப்படவேண்டிய ஒரு தடி என்பது அனைத்து முற்போக்குகளுக்கும்
தெரிந்த பாலபாடம்.
இன்று இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் கிறிஸ்தவ அமைப்புகளின் இதே செயல்முறையைச் செய்ய ஆரம்பித்துள்ளன. உதாரணமாக ஜாமாயத்
இ இஸ்லாமி எனும் அமைப்பை எடுத்துக் கொள்வோம். இந்த அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்
ஆகியவற்றில் பரவியுள்ள அமைப்பு. அந்தந்த நாட்டின் ஜமாயத் இ இஸ்லாமி அடுத்த நாட்டு அமைப்புடன்
தொடர்பற்றது எனக் கூறினாலும்கூட, அது ஒரு சட்ட வசதி ஏற்பாடு என்பதை அந்த அமைப்பினர்
அறிவர். அவர்களிடையே கருத்தியல் ஏற்பும் உண்டு. முடிந்தவரை ஒருவருக்கொருவர் ஆதரவும்
உண்டு. 1971ல் அன்று கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷில் வங்காளிகளுக்கு, குறிப்பாக
இந்துக்களுக்கு, எதிரான இனப்படுகொலையைச் செய்ததில் அமைப்பு சார்ந்தே அங்குள்ள ஜமாயத்
இ இஸ்லாமிக்குப் பங்கு இருந்திருக்கிறது. தென்னிந்தியாவில் ஜமாயத் இ இஸ்லாமியின் ‘மத்யமம்
என்கிற ஊடக அமைப்பில் பங்கேற்காத முற்போக்கு இடதுசாரி,
இந்து ஞானமரபு எழுத்தாளர்களே இல்லை. இவர்களில் எவருக்கும் இந்த அமைப்பின் தாய் அமைப்பான
‘ஜமாயத் இ இஸ்லாமி
குறித்து எவ்வித மனசாட்சி குறுகுறுப்பும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த எழுத்தாள ஊடக மாஃபியா கும்பலும் திருமாவளவன் என்கிற
சாதி வெறி பிடித்த ஒரு அரசியல்வாதியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. அதற்கு
ஒரே காரணம்தான். திருமாவளவன் மிகக் கீழ்த்தரமாக இந்து மதத்தை வசைபாடி இந்து எதிர்ப்பு
மனநிலையைத் தன் சாதியைச் சார்ந்த மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார். அவரைப் பாராட்டுவதன்
மூலம் தாங்கள் சார்ந்திருக்கும் இலக்கிய-சினிமா துறையின் நிழல் அதிகாரிகளான கிறிஸ்தவ
சர்வதேச அமைப்புகளிடம் குறிப்பிடத்தக்க அதிகார இதர பிற நன்மைகளை இவர்கள் பெற முடியும்.
தன்னை முற்போக்காக, சாதி மனநிலைகளைக் கடந்தவனாகக் காட்டிக் கொள்ள முடியும். உண்மையில்
திருமாவளவனை ஆதரிக்கும் ஒவ்வொருவரையும் உன்னிப்பாக
க் கவனியுங்கள். அடிப்படையில் அவர்கள் உள்ளுக்குள் சாதி வெறியர்கள். இன்றைக்கு
மேடைக்கு மேடை ஆபாசமாக இந்து மதத்தைப் பேசிவரும் பழ.கருப்பையா தன் சுயசாதிக்குள் சாதி
மீறித் திருமணம் செய்தவர்களைத் தள்ளி வைக்கவேண்டும் என்று பேசிய ஒரு வெறியர். இதைப்
போலவே சாதி மனப்பான்மை, சாதி குணங்கள் என்று தனிப்பட்ட உரையாடல்களில் பேசிய பலர் திருமாவளவனின்
ஆதரவாளர்கள். திருமாவளவனின் சாதிவெறி சாதி அரசியலை, அது இந்து மதத்தை வசைபாடுகிறது
என்கிற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கக் கூடிய இந்த அறிவுசீவி மாஃபியா கும்பல், கிறிஸ்தவம்
தமிழ்நாட்டில் பரப்பியிருக்கக் கூடிய எயிட்ஸ் நோய்.
எயிட்ஸைப் பரப்பும் சில விசயங்கள் எளிதில் எங்கும் நிலை கொண்டிருப்பதைப் போல,
தமிழ்நாட்டில் இந்தக் கருத்தியல் எயிட்ஸ் பரப்புவோர், ஊடகங்களின் அனைத்து இருண்ட மூலைகளிலும்
நின்று தங்களைத் தாங்களே விற்க தாங்களே இடைத்தரகர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டின்
நவீன பின்நவீன இலக்கியச் சிறப்பு. எனவே சொந்த வாழ்க்கையில் ராகவேந்திரரை வணங்குகிற
நடிகருக்குத் திரையில் ராமரையும் ராம பக்தரையும் மோசமாகக் காட்ட எந்தத் தயக்கமும் இல்லை.
அது அவர் உரிமை.
ஆனால்… அதே நடிகரை, தமிழ்நாட்டு பாஜக இன்றைக்கும் தன் மீட்பராக நினைப்பதுதான்
வேதனை.
ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ளுவோம். இன்றைக்குப் பிரபலமாக
இருப்போரில் நூற்றுக்கு 98 சதவிகிதத்தினர் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரசாரத்தையே
(நேரடி கிறிஸ்தவப் பிரசாரத்தை அல்ல) தெரிந்தோ தெரியாமலோ, ஆனால் நிச்சயமான சொந்த லாபங்களுக்காக,
மேற்கொள்ளக் கூடியவர்கள்தான். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே மேலே வர முடியும். அப்படிப்பட்டவர்களின்
பார்வையும் மதிப்பீடுகளும் மட்டுமே பரிசளிக்கப்படும்.
எனவே இங்கிருந்து மக்களுக்குப் பிரசாரம் செல்கிறது. இந்தச் செயல்பாடு எப்போதுமே
மேலிருந்து கீழாகச் செல்லும் செயல்பாடு. ஆனால் விளிம்புநிலை மக்கள் அரசியல் என்றே வெளியே
சொல்லப்படும். அதை நீங்கள் கேள்வி கேட்டால் நீங்கள் விளிம்புநிலை மக்களின் விரோதிகள்
ஆகிவிடுவீர்கள். ஆனால் இந்த விளிம்புநிலை மக்கள் அரசியலின் ஆபாசம், கட்டைப்பஞ்சாயத்து
முதல் பெண்களை ஆபாசமாகக் கேலி செய்வது என இருக்கும். இதையெல்லாம் தட்டிக் கேட்டால்
நீங்கள் சாதியவாதிகள் ஆகிவிடுவீர்கள். கட்டைப்பஞ்சாயத்துக்கே காந்திய முலாம் பூசும்
வாக்கு சாமர்த்தியம் கொண்டவர்கள் கிறிஸ்தவ இறையியல் மையங்களால் வாடகைக்கு எடுக்கப்பட்ட
எழுத்துக்கூலிகள். ‘இன்றைக்கு காந்தி இருந்திருந்தால் அந்த பொக்கை வாய் பாரிஸ்டர் மாட்டிறைச்சி
சாப்பிட்டு சாராயத்தில் வாய் கொப்பளித்திருப்பார் தெரியுமா
எனப் பேசக் கூடிய வித்தார எத்தர்கள்.
ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து இன்றைக்கு வரை எந்த விஷயத்தையும் அதி-உணர்ச்சிபூர்வமாக
ஆக்கி, அதை நரேந்திரரின் அரசுக்கு எதிராகத் திருப்பிவிடும் வெகுஜன விளையாட்டு தமிழ்நாட்டில்
இந்த மூளைகளிலிருந்து அடுத்த கட்டமாக நடக்கிறது.
இந்தச் சூழலில்தான் தமிழ்நாட்டை வென்றெடுக்க வேண்டியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில்
தாமரை மலர்வது உண்மையில் மிக எளிது. கரும்பாறை என்பதாகக் காட்சியளிக்கும் ஒரு மண்ணுருண்டையை
உடைக்க வேண்டியது மட்டுமே அதற்கான வேலை. அதைச் செய்ய இங்கே ஒரு செயலின்மை உள்ளது. இந்தச்
செயலின்மைக்காக தமிழ்நாட்டின் எதிர்காலம் பாழாகப் போகிறது.
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆதரவுடனும் கிறிஸ்தவ சபை ஆதரவுடனும் திராவிடப் பிரசாரமும்
அரசியலும் இங்கு பேயாக வீசியபோது, எவ்வித அமைப்பு ரீதியான பக்கபலமும் இல்லாமல் இந்துத்துவம்
பதிலடி கொடுத்தது. திருமுருக கிருபானந்த வாரியார் தம் உரைகளுக்கு நடுவே அவர்களை விமர்சித்தார்.
அதற்காக அவர் தாக்கப்பட்டார். தேவர் முதல் கோபாலகிருஷ்ணன் வரை தம் திரைப்படங்கள் மூலம்
திராவிட இயக்கத்தை எதிர்கொண்டார்கள். இதில் இயக்குநர் சிகரம் என அறியப்பட்ட கே.எஸ்.கோபால
கிருஷ்ணனின் திரைப்படங்கள் சமுதாய ஒற்றுமை, சாதி வேறுபாடு களைதல் ஆகியவற்றைப் புராண
கதையாடல்களுடன் இணைத்தன. இன்றைக்கு அவை அதீத நாடக பாணியாகப் படலாம். ஆனால் அவரது சில
உத்திகள் சிறப்பானவை.
உதாரணமாக அவரது வெற்றிப்படமான தசாவதாரம் (1976) திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அத்திரைப்படம் காமராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எமர்ஜென்ஸி அமலில் இருந்தபோது அதுவே
ஒரு துணிகர செயல். ஆமை அவதாரத்துக்கு எடுத்துக்கொண்ட கதையில் ‘அதிகார போதையால் இந்திரன்
அறிவிழந்ததாகச் சொல்லப்படும் வரிகள் எமர்ஜென்ஸிக்கு எதிராகச் சொல்லப்பட்டு சென்சாருக்குத்
தப்பியவை. இங்கு இவை கூட முக்கியமல்ல. உண்மை வாழ்க்கையில் திராவிட இயக்கப் பிரசார நடிகரான
எம்.ஆர்.ராதா என்பவரை இரணியகசிபுவாக்கி, இரணியனின் வாதங்களுக்கெல்லாம் பிரகலாதனை பதில்
சொல்ல வைத்திருப்பார் கோபாலகிருஷ்ணன். அன்றைக்கு இது திரை பிம்பத்தையும் உண்மை அரசியல்
நிலைப்பாட்டையும் நுண்ணிய விதமாக இணைத்துச் செய்யப்பட்ட இந்து தர்ம பிரசாரமே. மக்களின்
ஆழ்மனதில் ஒரு குழந்தையாலேயே திராவிட இயக்கத்தின் ‘பகுத்தறிவு
கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியும் என்பதைப் பதிய வைத்தார்
கோபாலகிருஷ்ணன். இன்றைய பார்வையில் அவரது திரைப்படங்கள் பல குறைகள் கொண்டதாக இருக்கலாம்.
ஆனால் தசாவதாரம் வெற்றிப்படம்.
இத்தகைய ஊடக உக்திகளை, அமைப்பாக இன்று வளரும் இந்துத்துவ சக்திகள் கைக் கொள்ளவேண்டும்.
அப்படியே அல்ல. அவற்றின் அடிப்படைகளிலிருந்து பரிணமித்து முன்னகர வேண்டும். தமிழ்நாட்டைப்
பீடித்திருக்கும் இருள் நோயின் வெளிப்பாடுகள் இரண்டு: திராவிட நாசியிசமும், தலித் அரசியல்
என்கிற பெயரில் நடக்கும் பாசிச அரசியலும். இவை இரண்டையும் அனைத்துத் தளங்களிலும் நாம்
எதிர்க்கவேண்டும்.
மிகக் குறைந்தபட்சமாக தமிழ்நாட்டின் இந்துத்துவப் பாரம்பரியத்தை நாம் மீட்டெடுக்க
வேண்டும். சுவாமி சகஜானந்தர், அவரது குருவான கரப்பாத்திரி சுவாமிகள், ஐயா வைகுண்டர்,
ராமலிங்க வள்ளலார், சுவாமி சித்பவானந்தர் ஆகியோரை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
நமக்கென ஒரு ஊடக மையம் தேவை. ம.வெங்கடேசன், டாக்டர்.கிருஷ்ணசாமி, தடா பெரியசாமி, அர்ஜூன்
சம்பத் ஆகியோரைக் கொண்ட ஒரு மையக் குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் மக்களைப் பெரிய
அளவில் சென்றடைய வேண்டும். இப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டு அது அமைதியாகக் களத்தில்
செயல்பட்டாலே போதுமானது.
அதன் தாக்கம் தமிழ்நாட்டில் சதா சர்வகாலமும் ஊற்றெடுக்கும் இந்துத்துவப் பிரவாகத்தை
உருவாக்கி, அடைத்து வைத்திருக்கும் மண்ணுருண்டையை உடைத்துவிடும்.