பகுதி 9 – ஹிந்து மறுமலர்ச்சியும் மற்ற வகுப்புவாத நிலைகளும்
உலகளாவிய
இஸ்லாம் மற்றும் முஸல்மான்களிடையே இனவாதம் அதிகமாக இருப்பது பற்றி நான் கூறியது ஒருபுறமிருக்க,
மறுபுறத்தில் உள்ள ஹிந்துக்கள் செயலற்றவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருந்தார்கள் என்று
நான் கூறுவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். ஹிந்துக்கள்
இந்தியர்களைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. அவர்களுக்கென்று எந்த நாடும் இல்லை,
வேறு எந்தத் தேசமும் இல்லை. எனவே, உலகளாவிய ஹிந்துமதம் என்ற கருத்தாக்கத்திற்காக, அதை
போன்ற சொல்லாக்கத்திற்காக இஸ்லாமியர்களைச் சொல்வது போல, ஹிந்துக்களைக் குற்றம் சொல்ல
முடியாது. ஹிந்து மதம் மற்றும் இந்தியத்துவம் ஆகியவை இந்த விஷயத்தில் ஒத்த சொற்களாகும்.

ஆனால்
அவர்களுக்கே சொந்தமான வழியில், இந்து மறுமலர்ச்சியாளர்கள் கடுமையான, தனிப்பட்ட, ஆக்ரோஷமான
வகுப்புவாத உணர்வை உருவாக்குவதில் பின்தங்கிவிடவில்லை. கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின்
ஆரம்பத்தில், ஹிந்து மதத் தலைவர்கள் சிலர், போர்க்குணம் மிக்க இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தின்
அம்சங்களை சுவீகரித்துக்கொள்ளாவிட்டால், ஹிந்து மதம் அழிந்துபோகும் என்ற முடிவுக்கு
வந்தனர். ஆர்ய சமாஜ் போர்க்குணமிக்க ஹிந்து மதத்தின் ஒரு வகை. ஆனால் இந்த யோசனை ஆர்ய
சமாஜத்துடன் மட்டுமே நின்றுவிடவில்லை. சுவாமி விவேகானந்தரும் அவரது சிறப்புமிக்க சீடர்
சகோதரி நிவேதிதாவும் இதே மனநிலையில் இருந்தனர். ஆக்ரோஷமிக்க ஹிந்துமதத்தைப் பற்றி அவர்
எழுதிய கட்டுரைகள் இதற்கான சிறந்த சான்றுகளாகும்.

பிரிட்டிஷ்
ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே மேற்கத்திய அறிவு, மேற்கத்திய சிந்தனை, மேற்கத்திய மனநிலை
ஆகியவை ஹிந்துக்களின் மனதைப் பீடித்தன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். பிரம்ம
சமாஜ் அதன் முதல் வெளிப்பாடு ஆகும். அறுபதுகளின் முற்பகுதியில் பிரம்ம சமாஜ் ஒரு ஹிந்து
அல்லாத அமைப்பாக இருந்தது. அதன் செல்வாக்கின் கீழ் ஹிந்து அறிஞர்கள், சிந்தனையாளர்கள்
மற்றும் மாணவர்கள் விரிவான சிந்தனை கொண்டவர்களாக மாறினர். சிலர் கிறிஸ்தவர்களாக மாறினர்,
மற்றவர்கள் நாத்திக வாதத்தைப் பின்பற்றி முற்றிலும் மேற்கத்தியமயமாக்கப்பட்டனர். இவ்வாறு
ஹிந்து மதம் குறித்த அலட்சியத்தின் அலை நாடு முழுவதும் பரவியது. ஆர்ய சமாஜ் இயக்கமும்
ஆக்ரோஷமான ஹிந்து மதமும் அந்த அலட்சியத்திற்கான எதிர்வினையாகும். இந்திய தேசிய காங்கிரசின்
ஆரம்பகால ஹிந்துத் தலைவர்களில் பெரும்பாலோர் இந்த வகையில் ஹிந்துக்கள் அல்லாதவர்களாக
இருந்தனர். திரு எஸ்.என்.பானர்ஜியா, லால் மோகன் கோஷ் அல்லது ஆனந்த மோகன் போஸ் ஹிந்து
மதத்திற்காக என்ன செய்தனர்? மகாதேவ் கோவிந்த் ரானடே கூட ஒரு அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்தார்.
ஜி.கே.கோகலே ஒரு ஹிந்துவே அல்ல. மற்ற பெயர்களைக் குறிப்பிட நான் விரும்பவில்லை.

இவ்வாறு
இந்தியாவின் அரசியல் தேசியவாத இயக்கம் உயர் எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அறிவாளிகளும்
உயர்வானவர்களுமான பார்சிகள், அறிவுஜீவிகளான (தங்கள் மனநிலையில் ஹிந்துக்கள் அல்லாத
அல்லது அதைப் பற்றிக் கவலைப்படாத) ஹிந்துக்களின் வாரிசுகள், அறிவாளிகளும் உயர்ந்த சிந்தனை
உள்ளவர்களுமான ஒரு சில முஸ்லிம்கள் ஆகியோரால் கட்டமைக்கப்பட்டது. இத்தகைய நல்ல நிலையில்
பிறந்த இது, ஒரு தூய சுதந்திரத்தின் இயக்கமாக இருந்திருக்க வேண்டும். தூய சுதந்திரம்
இனம் அல்லது மதம் என்ற வேறுபாட்டைக் காட்டுவதில்லை. டஃபெரின் மற்றும் ஹ்யூமின் கூட்டு
விவாதங்களின் குழந்தையாகப் பிறந்த இதை, தூய்மையான சுதந்திரத்தின் இயக்கம் என்று கொள்வதை
விட ஒரு ‘பாதுகாப்பு-வால்வு’ ஆகவே கருத வேண்டியிருக்கிறது. அந்த இயக்கத்தின் இறைத்தந்தை
டஃபெரின் மார்க்விஸ், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அதன் கழுத்தை நெரிக்க முடிவு செய்தபோது,
அதன் வயது மூன்று கூட ஆகவில்லை. அதை கழுத்தை நெரிப்பதற்கான சிறந்த வழி, அதன் தேசியத்
தன்மையைக் கொள்ளையடிப்பதும், மதப்பிரிவுகளை வளர்ப்பதும் ஆகும். பிந்தையது ஒரு இமயமலை
பனிப்பாறையைப் போல, அதன் எடையின் கீழ் அழிந்துபோகும் அல்லது அதன் வாழ்நாள் முழுவதும்
சிக்கலான நிலையில் இருக்கும் அளவிற்கு மோசமான விரிசல்களைக் கொண்டிருக்கும்.

மறைந்த
சர் சையது, காங்கிரஸை மத அடிப்படையில் எதிர்த்தது அந்த இமாலயப் பனிப்பாறையைப் போன்றது
என்று குறிப்பிடலாம். தனது சமூகம் குறித்த சர் சையத்தின் அச்சங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை
என்று நான் கூறவில்ல. ஆனால் அவர் எழுப்பிய கூக்குரல் அந்த நேரத்தில் இந்திய தேசியவாதத்தின்
மரண அடியாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸைப் பற்றிய சர் சையத்தின் அணுகுமுறை பின்வரும்
கருத்துகளினால் தாக்கம் கொண்டிருந்தது

(அ) இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையில்
இருந்தனர். ஒரு ஜனநாயக அரசாங்கத்தை இந்தியாவின் அரசியல் இலக்காக ஏற்றுக்கொண்டால், அதில்
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும்.

(ஆ) ஹிந்துக்கள் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் முஸ்லிம்களை
விட முன்னேறியவர்கள். அரசாங்க செல்வாக்கின் பெரும்பகுதியை நீண்ட காலத்திற்கு ஆக்கிரமித்துக்கொள்வார்கள்.

(இ) ஒரு ஹிந்து அரசு என்பது இந்தியாவில் இஸ்லாத்தின் முடிவைக்
குறிக்கலாம். அல்லது குறைந்தபட்சம் இஸ்லாம் அடிபணிந்திருக்கவேண்டியதைக் குறிக்கலாம்.

வெளிநாட்டு
முஸ்லிம் நாடுகளின் உதவி பெற்று அல்லது அது இல்லாமல் இந்தியாவில் மற்றொரு இஸ்லாமிய
அரசு உருவாவதற்கான சாத்தியத்தை அவர் நம்பவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்
இந்த நாட்டில் நிரந்தர பிரிட்டிஷ் ஆட்சி என்ற கருத்தை ஆதரித்தார்.

மறுபுறம்,
இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவனர்கள் முற்றிலும் நேர்மையான, உண்மையான தேசியவாதிகளாக
இருந்தனர். அவர்கள் எந்த முஸ்லிம்-விரோத நோக்கங்களையும் ஆதரிக்கவில்லை. தேசியவாதம்
வகுப்புவாதத்தைக் கவனிக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்தவர்கள். ஆனால், சர் சையத்தின்
எதிர்ப்பானது அதைக் கவனிக்கும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தியது. அந்தக் கால ஹிந்துக்கள்
தங்கள் சக முஸ்லிம்களை விட அதிக எண்ணிக்கையிலான வகையில் உயர் அரசு அலுவலகங்களில் பதவி
வகித்து வந்தார்கள். நாட்டின் பொது வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும்
செல்வாக்கு செலுத்தியவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், இவையெல்லாம் முஸ்லிம்களுக்கு
எதிரான எந்த ஒரு சதிச்செயலின் காரணமாக இல்லை. எனவே, அரசாங்கத்தின் சேவைகளில் ஒவ்வொரு
சமூகத்திற்கான வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். முதல்
விஷயத்தில் காங்கிரஸ் சரணடையும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்தது. ஆனால் இரண்டாவது
விஷயம் அதனால் அங்கீகரிக்கப்படவில்லை.

சர்
சையத் சொன்னது முற்றிலும் வகுப்புவாத அடிப்படையில், சரியான விஷயம். ஆனால் ஒரு தேசியக்
கண்ணோட்டத்தில் அவரது கோரிக்கை ஆபத்தானது. பல ஐரோப்பிய நாடுகளின் வரலாறு, தேசிய வளர்ச்சியின்
செயல்பாட்டில் அவர்கள் அனைவரும் இதேபோன்ற சூழ்நிலையை சிறிது காலம் சந்திக்க நேர்ந்தது
என்பதைக் காட்டுகிறது. மதம் சார்ந்த கோரிக்கைகளை அவர்கள் முற்றிலும் நிராகரித்தது,
தேசங்களாக மாற அவர்களுக்கு உதவியது. அவர்களின் அடிப்படைக் கொள்கையாக, மதத்திற்கு மேலாக
அரசின் மேலாதிக்கத்தை அவர்கள் அங்கீகரித்தனர். அரசு சார்ந்த சேவைகள் உட்பட அரசாங்கத்தின்
அமைப்பைப் பாதித்த அனைத்து மத வேறுபாடுகளையும் படிப்படியாக அவர்கள் அகற்றினர். இந்தியாவில்
நாம் வேறுபட்ட, நேர் மாறான போக்கைக் கடைப்பிடித்தோம்.

வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்வது மதத்திற்கு ஒரு சலுகையாகவும், தேசியவாதத்திற்கு
எதிரானதாகவும் அமையும். இது, அரசுக்கு மேலாக மதத்தின் ஆதிக்கத்தை அரியணையில் வைத்தது.
பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் தாங்கள் முதலில் முஸ்லிம்கள் என்றும் பின்னர் இந்தியர்கள்
என்றும் வெளிப்படையாகக் கூறுகிறார்கள், இருப்பினும் 1915ம் ஆண்டில் திரு மஹர்-உல்-ஹக்
முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்தபோது அவர் எப்போதுமே இந்தியராகத்தான் இருந்ததாகக்
கூறினார். ஒருவர் இந்திய ஹிந்துவாகவோ அல்லது இந்திய முசல்மான் ஆகவோ இருக்கலாம், ஆனால்
அவர் எப்போதும் ஒரு இந்தியராக இருக்கவேண்டும். ‘ஜசிராத்-உல்-அரபு’ சுதந்திரத்திற்காக
இந்திய சுதந்திரத்தைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறும் ஒருவர் இந்திய தேசியவாதியாக
இருக்க முடியாது.

இரு
சமூகங்களுக்கிடையேயான தற்போதைய பதற்றம் அரசியல் ரீதியானதே தவிர மத ரீதியானது அல்ல என்பதை
இரு தரப்புத் தலைவர்களும் உறுதியாகக் கூறுகின்றனர். லக்னோ ஒப்பந்தத்தின் போதாமை மற்றும்
நியாயமற்ற தன்மை இதற்குக் காரணம் என்று முஸ்லிம்கள் வாதிடுகின்றனர். இனவாதப் பிரதிநிதித்துவம்
தற்போதைய சிக்கலின் அடிப்படையாக இருப்பதாக ஹிந்துக்கள் கருதுகின்றனர். அவரவர்களைப்
பொருத்தவரை இருவருமே சரியானவர்கள். லக்னோ ஒப்பந்தம் நியாயமற்ற தன்மை உள்ளது என்று வைத்துக்கொண்டாலும்,
உள்ளாட்சி அமைப்புகள், அரசு சேவைகள், கல்வி நிறுவனங்களுக்கு அது விரிவாக்கப்பட்டதற்கு
முஸ்லிம்களே நிச்சயமாகப் பொறுப்பு.

பஞ்சாப்பிற்கு
வெளியே உள்ள மக்களுக்கு வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தின் கொள்கை எந்த அளவிற்கு அங்கே
உள்ளது அல்லது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது தெரியாது. நடைமுறையில் ஹிந்துக்களுக்கும்
முஹம்மதியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் சீக்கியரல்லாதவர்களுக்கும் இடையிலான அனைத்து
சமூக உறவுகளும் குலைந்துவிட்டன. மூன்று சமூகங்களும் அவற்றின் தனி கிளப்புகள், தனி அமைப்புகள்
மற்றும் தனிக் கல்லூரிகளைக் கொண்டுள்ளன. விளையாட்டு அமைப்புகளிலும் சமூகச் செயல்பாடுகளிலும்
கூட, மூன்று சமூகங்களும் வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துகின்றன. என்னைப்
பொருத்தவரை, பிரச்சினை மதம் மற்றும் அரசியல் சார்ந்தது. மதம் அரசியல் நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தப்படுகிறது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட
அளவு உண்மையான மதக் கூறு உள்ளது என்பதும் எனக்குத் தெரியும்.

மேற்கூறியவற்றை
நான் எழுதிய நாளிலேயே, பஞ்சாப் ஆளுநர் சர் எம். ஹெய்லி பஞ்சாப் சட்டமன்றத்தில் ஒரு
உரையை நிகழ்த்தினார். அதிலுள்ள பின்வரும் அவதானிப்புகள் நிலைமையைச் சரியாக விளக்குகிறது.

‘நான் விவரித்ததை விட மிகவும் கடினமான ஒரு சிக்கல் இங்கே உள்ளது.
ஏனென்றால் இது உறுதியில்லாத, நேரடி அணுகுமுறை அல்லது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத காரணிகளைக்
கொண்டுள்ளது. இனங்களுக்கிடையேயான பிளவு என்ற நச்சுக்கு சில தீர்வுகளை நாம் கண்டுபிடிக்க
வேண்டும், இது நம்முடைய பொது, சமூக வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கிறது. இங்கு நான்
வெளிப்படையாகவும் துல்லியமாகவும் பேச விரும்புகிறேன். என்னுடைய இதயபூர்வமான விருப்பம்
முரண்பாடுகளைத் தீர்ப்பதே தவிர, ஏற்படுத்துவது அல்ல. முக்கியமாக, நான் குறிப்பிடுவது
வகுப்புவாதக் கலவரத்தையோ அல்லது வெளிப்படையான இடையூறையோ அல்ல. கடந்த காலங்களில் இதுபோன்று
நடந்துள்ளது. ஆனால், அண்டை மாகாணங்களில் நடந்துள்ளதைப் போல வெளிப்படையான வன்முறைகள்
இந்த மாகாணத்தில் அண்மையில் நடக்கவில்லை என்பதை எண்ணிப் பெருமையடையவேண்டும். ஒரு வெளிப்படையான
வன்முறை என்பது பேராபத்து. சமூகங்களுக்கு இடையே அது நீண்ட காலப் பிளவை ஏற்படுத்தும்
தாக்கமுள்ளது. ஆனால் அது முழுமையான பிரச்சினையல்ல. நாம் நோக்கியுள்ள பேரபாயமும் அது
அல்ல. நான் குறிப்பிடுவது, நம் வாழ்க்கையின் செயல்பாடுகளில், சமூக விஷயங்களில், நிர்வாகத்தைப்
பற்றிய ஒவ்வொரு கேள்விகளில் உள்ளூர் நிகழ்வுகளை நிர்வகிப்பதில், கல்வியில், ஏன் தற்போது
நடைபெறும் சட்டம் நீதி ஆகியவற்றைப் பற்றிய விவாதத்தில் என்று எல்லாவற்றிலும் வகுப்புவாதம்
பற்றிய கேள்வி எழுகின்றது என்பதை.’

இந்த
விஷயத்தில் அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் அப்பாவியாக இருந்தார்கள், இருக்கிறார்கள்
என்று சர் எம்.ஹெய்லி நம்மை நம்பச்சொல்வதை நான் ஒரு கணம் கூட ஒப்புக் கொள்ளவில்லை.
எனது தாழ்மையான கருத்தின்படி, பஞ்சாபில் வகுப்புவாத நிலைமை, ஒரு கணிசமான அளவிற்கு,
அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதாகும். ஆனால், இது வேறு ஒரு விஷயம்.