காஷ்மீரில் சில முக்கிய மாற்றங்களை நம் மத்திய அரசு செய்தபின் அதை எதிர்த்துப் பல்வேறு வகைகளில் / பல்வேறு அரங்கங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறுபிள்ளைத்தனமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணம் மற்றும் பின்னணி போன்றவற்றை அலசினால் இது அரசியல் பதிவாகிவிடும். என் நோக்கம் அதுவல்ல. இந்தியா – பாகிஸ்தான் போன்ற இரு நாடுகளுக்கிடையே அணு ஆயுதப் போர் நிகழ்ந்தால் என்னவாகும் என்பதைப் பற்றிய ஒரு அலசலே இந்தப் பதிவு.
பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா மிகப் பொறுப்பாகவே இதுவரை நடந்து கொண்டுள்ளது.
1947ல் நம் நாட்டிலிருந்து பாகிஸ்தான் என்ற பெயர் கொண்டு, முஹம்மது அலி ஜின்னா (1913 முதல் அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவராக ஜின்னாதான் செயல்பட்டு வந்தார்) தலைமையில் அவர்கள் தனி நாடாகப் பிரிந்தபோது, 14 ஆகஸ்ட் 1947ல் அவர்களுக்குச் சுதந்திரமும், 15 ஆகஸ்ட் 1947ல் நமக்குச் சுதந்திரம் கிடைத்து.
சில மாதங்களிலேயே நமக்கும் அவர்களுக்கும் போர் மூண்டது. காஷ்மீர் அப்போது மகாராஜா ஹரி சிங் என்பவர் ஆட்சியின் கீழ் இருந்தது. ‘நான் தனியாகவே இருந்து கொள்கிறேன். இந்தியா / பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடன் சேர மாட்டேன்’ என்று கொஞ்சமும் முதிர்ச்சி இல்லாமல் அவர் கூறியதைக் கேட்டுத் தலையாட்டிவிட்டு, ஆங்கில அரசு மற்ற இரு நாடுகளும் காஷ்மீரை ஒரு தனி (சுதந்திர) மாகாணமாக மதிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டது. ஆனால், ஜம்மு / காஷ்மீரில் இருந்த பெருவாரியான முஸ்லிம்கள் பாகிஸ்தானோடு இணைவதுதான் நல்லது என்று தீர்மானமாகச் சொன்னார்கள்.
ஆகஸ்ட் மாதம், 1947ல் சுதந்திரம் கிடைத்தவுடன், 1947 அக்டோபர் மாதமே பாகிஸ்தான் வேலையை ஆரம்பித்தது. அவர்களுடைய லஷ்கர் தீவிரவாதிகள், ஜம்மு / காஷ்மீரில் வசித்து வந்த முஸ்லிம் மக்களுடன் சேர்ந்துகொண்டு காஷ்மீரை ஆக்ரமிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் தாமதமாக விழித்துக்கொண்ட ஹரி சிங் அலறிக்கொண்டு இந்தியாவிடம் ‘எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று சரணடைந்தார். ‘காப்பாற்றுகிறோம், ஆனால், இந்தியாவோடு காஷ்மீரை இணைத்துவிடுங்கள்’ என்ற நிபந்தனையோடு இந்தியா காஷ்மீரை மீட்டது. ஆனால், இந்தத் தாமதத்தினால், பாகிஸ்தான் காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு (ஆசாத் காஷ்மீர், கில்ஜித்–பால்திஸ்தான்) இடத்தைத் தன் வசமாக்கிக்கொண்டு விட்டது. இன்றளவும் இந்தியா அதை PoK
(Pakisthan occupied Kashmir) என்றே அழைக்கிறது.
(Pakisthan occupied Kashmir) என்றே அழைக்கிறது.
சரி கொஞ்சம் பெருமூச்சு விட்டுவிட்டு 1965க்கு செல்வோம்.
மறுபடியும் பாகிஸ்தான் தோள்தட்டிக் கொண்டு ஆபரேஷன் ஜிப்ரால்டர்
(Operation Gibraltar) என்ற பெயரில் அதே காஷ்மீர் பகுதிக்குள் நுழைய முயற்சிக்க, இந்தியா உடனே பதிலடி கொடுத்தது. 17 நாட்கள் மட்டுமே இந்தப் போர் நீடித்தாலும் இரு பக்கத்திலும் ஏராளமான உயிர்ச் சேதம். இதில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தங்களை ஆதரிக்கவில்லை என்ற கோபத்தில் இரண்டு நாடுகளுமே USSR பக்கம் சாய்ந்தன. ரஷ்யா உடனே நாக்கைச் சப்பிக்கொண்டு, ‘அப்பிடிப் போடுடா அருவாள’ என்று சரசரவென்று காய் நகர்த்த ஆரம்பித்தது வேறு கதை.

அங்கிருந்து 1971க்கு வருவோம். இந்தப் போர் அதிசயமாக காஷ்மீர் சம்பந்தப்படாதது. அப்போது பாகிஸ்தான் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என இரு வேறு பகுதிகளாக இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தான் (குறிப்பாக கிழக்கு வங்கம்) பகுதி, மேற்கு பாகிஸ்தானின் யதேச்சிகாரம் பிடிக்காமல் ‘பங்களாதேஷ்’ என்று எங்களைத் தனியாகப் பிரித்து விடுங்கள் என்று போர்க்கொடி உயர்த்தியது. இதற்கு ஆதரவாக இந்தியா உள்ளே புகுந்து பங்களாதேஷ் தனிநாடாக உதவி செய்தது.
இதன் பிறகு நீண்ட இடைவெளி! (ஆனால், எல்லை பயங்கரவாதம், தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது).
1999க்கு வருவோம். இப்போதும் உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி, பாகிஸ்தான் கார்கில் பகுதியில் நுழையப் பார்த்தது. இந்தியா சரமாரியாக பதிலடி கொடுத்து பாகிஸ்தானை சரணடைய வைத்தது.
சரி, இதன்பிறகு நடந்த இரு கொடுமையான நிகழ்வுகளைப் பார்க்கலாம்:
13, டிசம்பர் 2001ல் சரசரவென ஐந்து தீவிரவாதிகள் (பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?) நமது பாராளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து தாக்கியதில் (அந்த ஐந்து தீவிரவாதிகளையும் சேர்த்து) 18 பேர் உயிரிழந்தனர். இது உள்நாட்டு விவகாரம், எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் முட்டாள்தனமாக மறுத்தாலும், உண்மை உலகறியும்.
இதன் பிறகு 2008ல் மும்பை நகரம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல கட்டடங்கள், ரயில் நிலையங்களை ஆக்கிரமித்து, துப்பாக்கிகளால் சுட்டும், கையெறிகுண்டுகளை
(grenades) வீசியும் 157 பேரைக் கொன்றனர். இந்தக் கேடுகெட்டச் செயலை நிறைவேற்ற உள்ளே நுழைந்த 10 தீவிரவாதிகளில் 9 பேரும் இறந்தனர். இதில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி மொஹம்மத் அஜ்மல் கஸாப் மட்டுமே. இவர்கள் பத்து பேருமே கராச்சியிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்துள்ளார்கள். வழியில், தாங்கள் வந்த படகை விட்டுவிட்டு ஒரு மீன்பிடி படகை ஆக்கிரமித்து, அதன் ஊழியர்கள் நான்கு பேர்களையும் கழுத்தறுத்து கடலில் வீசிவிட்டு, அந்தப் படகின் மூலம் மும்பை நகருக்குள் நுழைந்துவிட்டனர்.

இவர்கள் தாக்குதல் நடத்திய முக்கியமான இடங்களும் இறந்த அப்பாவி இந்தியர்களும்:
1) சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்: ரயில் நிலையத்தினுள் 58, வெளியே 10 பேர்
2) லெபோல்டு கஃபே (Cafe
Leopold): இறந்தவர்கள் 10 பேர்
Leopold): இறந்தவர்கள் 10 பேர்
மும்பையில் உள்ள மிகப் பழமையான, புகழ்பெற்ற சிறிய உணவகம் இது. இன்றளவும் கொலாபா
(Colaba) வில் உள்ளது. 1871ல் இரு பார்ஸி இனத்தவர்களால் தொடங்கப்பட்ட கடை இது. இந்தத் தாக்குதல் நினைவாக ஒரு சிறிய சேதமடைந்த பகுதியை அப்படியே விட்டுவைத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நிறையபேர் சர்வசாதாரணமாக வந்து செல்லும் இடமிது.

3) காமா / ஆல்ப்லெஸ் மருத்துவமனை: இறந்தவர்கள் 6 பேர் (போலிஸ்காரர்கள்)
4) நாரிமன் ஹௌஸ்: இறந்தவர்கள் 7 பேர்
5) ஓபராய், ட்ரைடென்ட் ஹோட்டல்: 3 நாட்கள் ஆக்ரமிப்பு செய்து இறந்தவர்கள் 30 பேர்
6) தாஜ் மஹால் பாலஸ், டவர் ஹோட்டல்: கேட் வே ஆஃப் இந்தியா என்ற புகழ்பெற்ற இடத்திலிருக்கும் இந்த ஹோட்டலில் 4 நாட்கள் ஆக்ரமிப்பு செய்து இறந்தவர்கள் 30 பேர்.
இதில் உயிருடன் பிடிபட்ட கஸாப் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணையில் சில உண்மைகளை கக்கிவிட்டு 21 நவம்பர் 2012 (ஆம், முழுதாக 4ஆண்டுகள் கழித்து) தூக்கிலடப்பட்டான்.
விசாரணையில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மன் ஹெட்லே (பாகிஸ்தானைச் சேர்ந்த இவனுடைய பூர்வாசிரமப் பெயர்: தாவூத் கிலானி), தாவூர் ஹுஸைன் ராணா ஆகியோர் இந்தச் சதித் திட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்தது.
இதில் ஹெட்லே தான் செய்தது தப்பு என ஒப்புக்கொண்டு, 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, 2013 லிருந்து அமெரிக்கச் சிறையிலிருக்கிறான். தாவூர் ஹுஸைன் ராணா (இவனுடைய பூர்வாசிரமும் பாகிஸ்தான்்தான்) 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு 2013 லிருந்து அமெரிக்கச் சிறையிலிருக்கிறான்.
பல்வேறு நாடுகளிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக, பாகிஸ்தான் 2009ம் ஆண்டு ஏழு பேர் மீது இந்தத் தாக்குதலுக்காக வழக்கு தொடர்ந்தது. இதில், இவற்றையெல்லாம் திட்டம் போட்டு நிறைவேற்றிய ஜாகிர் ரஹ்மான் லக்வியும் உண்டு. ஆனால், இவன் மேல் உள்ள குற்றம் சரிவர நிரூபிக்கப்படாமல் 2015ல் விடுதலையாகிவிட்டான்.
சூப்பர் பவர் உலகிலேயே நான்தான் என்று அமெரிக்காவும், USSRம் (அப்போதிருந்த சோவியத் நாடுகளின் கூட்டமைப்பு) இரண்டும் தீராத பகையில் முட்டிக்கொண்டிருந்தன.
1962ல் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட எண்ணி USSR தன்னுடைய சில ஏவுகணைகளை கியூபா நாட்டில் கொண்டுவந்து வைத்தது. (அங்கிருந்து அமெரிக்கா அருகில் என்பதால் இந்த நாச வேலை). இதற்கு கியூபா ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம், அதுவும் அப்போதைய USSR போல ஒரு கம்யூனிஸ சார்பு நாடு! இது தெரிந்தவுடன் அமெரிக்கா ஏகத்துக்கு எரிச்சலாகி கியூபா மீது அணுஆயுத ஏவுகணைகளை ஏவி USSR க்கு பாடம் புகட்ட முடிவு செய்தது. கடவுள் புண்ணியத்தில் அந்த மாதிரி விபரீதம் எதுவும் நடக்கவில்லை. நடந்திருந்தால் உலகம் முழுக்கவே அந்த அணு ஆயுத பாதிப்பு தெரிந்திருக்கும். நல்ல வேளையாக அந்தப் பேரழிவு தடுக்கப்பட்டது.
அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடியும், ரஷ்ய அதிபர் குருஷ்ஷேவும் இப்படி முட்டாள்தனமாக நேருக்குநேர், ஒண்டிக்கு ஒண்டி மோதிக் கொண்டதை, High
Noon in the Cold War: Kennedy, Krushchev, and the Cuban Missile Crisis என்ற புத்தகத்தின் ஆசிரியர் Max
Frankel விவரிக்கும் போது இவர்கள் இருவரும் கிறுக்குத்தனமாக ‘அணு ஆயுத சிக்கன்’
(Nuclear Chicken) ஆட்டம் ஆடினார்கள் என்று சொல்கிறார்.

இந்தச் ‘சிக்கன் ஆட்டம்’ என்ன என்பதை இதோ நம் சுஜாதா அவருடைய ‘வானமென்னும் வீதியிலே’ நாவலின் ஆரம்பத்தில் இவ்வாறு விளக்குகிறார்:
‘அமெரிக்காவில் ஒரு விளையாட்டு உண்டு. அதன் பெயர் ‘சிக்கன்’. அதில் இரண்டு கார்கள் நேராக ஒன்றை நோக்கி ஒன்று அசுர வேகத்தில் நெருங்க வேண்டும். தன் வழியிலிருந்து மாறாமல் எதிர் வருபவனைப் பாதை மாற்ற வைக்கின்ற டிரைவர்தான் ஜெயிப்பவன். இருவருமே பாதை மாறாமல் ‘ஸ்டியரிங்’கிற்கு அந்தக் கடைசி முக்கியத் திருப்பம் தராமல் இருந்தால் எவருமே ஜெயிப்பதில்லை; எவரும் பிழைப்பதும் இல்லை.’
சரி, நிகழ்காலத்திற்கு வருவோம்.
இப்போது மறுபடியும் அதே காஷ்மீர் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது பாகிஸ்தான். ஆனால், இந்த துருக்கி, இராக் போன்ற ஒன்றிரண்டு சில்லறை நாடுகள் தவிர சீனா, அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாகவே அறிக்கைகள் விட்டுள்ளன. ஆனாலும், பாகிஸ்தானின் அதிபர் என்ற ஒரே காரணத்தினால், உலக அரசியலில் எல்கேஜியான இம்ரான் கான் கொக்கரித்துக் கொண்டேதான் இருக்கிறார். ஒரு சில பேட்டிகளில் ‘பிரச்சினை கை மீறினால் அணுஆயுதப் போருக்கு நாங்கள் தயார். இந்தியா மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என அச்சுறுத்தும் பாணியில் பேசிய பிறகு, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இந்தியா பக்கம் நியாயம் இருப்பதாக ஆதரவு கூறியுள்ளன .
இந்த நிலையில் பல்வேறு மேற்கத்திய மீடியாக்களில் பரபரப்பான செய்தி என்னவென்றால் ஒருவேளை அந்த மாதிரி ஏடாகூடமாகிவிட்டால் உலகின் கதி என்னவாகும் என்பதுதான்.
1983ல் அமெரிக்க – ரஷ்ய மோதல் தொடர் சம்பந்தமாக உலகப்புகழ் விஞ்ஞான எழுத்தாளர் கார்ல் சாகன் (Carl
Sagan) கூறும்போது ‘நிலைமை நீடித்து முட்டாள்தனமாக அணுஆயுதப் போர் நிகழ்ந்தால் கோடிக்கணக்கான மக்கள் மடிவதோடு, அதன் விளைவால் ‘அணு குளிர்காலம்’ (Nuclear Winter) எனப்படும் நிலை ஏற்பட்டு பயிர்கள் அழிவதோடு, உலகெங்கிலும் பஞ்சம் ஏற்படும்’ என்று கவலை தெரிவித்தார்.

அணு குளிர்காலம் என்பது என்ன?
ஒரு அணுஆயுதப் போருக்கு பின், அதன்விளைவாக உண்டாகும் புகை மற்றும் தூசு போன்றவை மேலே சென்று நம்முடைய வளிமண்டலத்தில்
(atmosphere) சூரிய ஒளி புகாமால் தடுத்துவிடும். இதனால், உலகின் தட்பவெட்ப நிலை மாறிவிடும். நேரடியாக இதுபோல சூரிய ஒளி இல்லையென்றால் மிக மோசமான நிலை உண்டாகும். உலகின் இந்த வெப்பநிலை மாற்றத்தால் ஏராளமான மோசமான விளைவுகள் ஏற்படும். இன்னொரு பக்கம் அணுஆயுதக் கதிர்வீச்சால் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்கள் புல் பூண்டு இல்லாமல் எல்லாமே அழிவதோடு, அந்த இடம் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவிடும்.

1986ல் ரஷ்யாவில் செர்னோபில் என்ற இடத்தில் நடந்த அணுஆயுத விபத்தால் பலர் மாண்டனர்; ஏராளாமான உயிரினங்கள் அழிந்ததோடு, அதற்குப்பின் 33 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த இடம் வாழத் தகுதியற்ற இடம் என்றே முத்திரை குத்தப்பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டின் மிக மோசமான அணுஆயுத விபத்து என்று இது கருதப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இந்தக் கருத்து மோதல், (மறைமுகமாக எல்லையில் ஆட்கள் சுடப்பட்டு இறப்பது, நீண்ட வருடங்களாக நடந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்) போரில் சென்று முடியக்கூடாது என்று உலகநாடுகள் கவலையில் உள்ளன.
ஒருவேளை, சில மிக முட்டாள்தனமான செயல்கள், எண்ணங்களால் போர் மூண்டு, இந்தியா ஒரு 100-கிலோ டன் (Kilo
ton) அணு ஆயுத ஏவுகணைகளையும், பாகிஸ்தான் ஒரு 150-கிலோ டன் அணு ஆயுத ஏவுகணைகளையும் போரின் தொடக்கத்தில் உபயோகித்தால் கிட்டத்தட்ட 5 கோடியிலிருந்து 13 கோடி மக்கள் மடியலாம்.
ton) அணு ஆயுத ஏவுகணைகளையும், பாகிஸ்தான் ஒரு 150-கிலோ டன் அணு ஆயுத ஏவுகணைகளையும் போரின் தொடக்கத்தில் உபயோகித்தால் கிட்டத்தட்ட 5 கோடியிலிருந்து 13 கோடி மக்கள் மடியலாம்.
இந்த அணு ஆயுத ஏவுகணைகள் கீழே விழுந்து வெடித்து, கோடிக்கணக்கில் உயிர்ச் சேதம் ஏற்பட்ட பின்னர் நெருப்பும், புகையும்
stratosphere என்னும் நம் வளிமண்டலத்தின் ஒரு அடுக்கை அடைந்து, சூரியனிலிருந்து பூமிக்கு வரும் கதிர்களை மறைத்து, அதனால் உலகின் தட்பவெப்பம் 20 முதல் 35 சதவீதம் குறைந்து, உலகின் வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை குறையும். இந்தப் புகை மண்டலம் மறைய ஒரு 10 வருடங்கள் ஆகலாம், இதன் பிறகு உலகின் தட்பவெப்பம் சாதாரண நிலைக்கு மாறலாம்.

இடைப்பட்ட வருடங்களில் சூரிய ஒளி குறைந்து போய், மழையின் அளவும் மிகவும் குறைந்து போய் உலகில் எங்கு பார்த்தாலும் பசியும் பஞ்சமும்தான் மிஞ்சும்.
‘அமெரிக்கா போன்ற வல்லரசுகள் இந்தியாவையும், பாகிஸ்தானையும் அணு ஆயுதங்களை சேமித்து வைக்காதீர்கள் என புத்திமதி சொல்லுவது எப்படி இருக்கிறது என்றால், குடிப்பதற்காக நீங்கள் ஒரு பாருக்குள் (Bar) நுழைகிறீர்கள். நான் அங்கே கையில் ஒரு மதுக் கோப்பையுடன் அமர்ந்துகொண்டு, உங்களைப் பார்த்து குடிக்காதீர்கள் என்பது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அதுமாதிரிதான்’ என்கிறார் ஒரு மூத்த விஞ்ஞானப் பத்திரிகையாசிரியர்.
2025க்குள் இரண்டு நாடுகளையும் சேர்த்து 400 –
500 அணு ஆயுத ஏவுகணைகள் இருக்கலாம் என்கிறது ஒரு கணிப்பு. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல, அணு ஆயுதங்கள் படைத்த, வல்லரசு அல்லாத, எந்த இரு சிறிய நாடுகளும் இது போன்ற ஒரு போரில் ஈடுபட்டால் விளைவுகள் மிகக் கொடுமையாக, இந்த நூற்றாண்டின் மோசமான விளைவாகவே இருக்க முடியும்.

இவை எல்லாமே கற்பனை உருவகங்களாகவே இருந்துவிட்டு போகட்டும். அணு ஆயுதத்திறன் படைத்த நாடுகள் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளட்டும்.
தகவல் நன்றி:
டிஸ்கவர் இதழ் / Fox
News / காஸ்மோஸ் இதழ் / phys.org இணையத்தளம் / down to earth இணையத்தளம்