பட்ஜெட்டின்
சில முக்கிய அம்சங்கள்
சில முக்கிய அம்சங்கள்
- விவசாயத் துறைக்கு,
2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. - 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின்
வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - விவசாயத் துறையைப் போட்டிமிக்க
துறையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - மத்திய அரசின் நவீன விவசாய
சட்டங்களை மாநில அரசுகளும் பின்பற்ற ஊக்குவிப்போம். - 20 லட்சம் விவசாயிகளுக்கு
சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் வழங்கப்படும். - தானியலெட்சுமி திட்டம்
(விதைகளை சேமித்து விநியோகிக்கும் திட்டம்) அறிமுகம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு
அதிகக் கடன் உதவி. - ‘கிருஷி உடான்’ திட்டத்தில் தேசிய, சர்வதேச
விமானப் போக்குவரத்து மூலம் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்ல வசதி. - 2020 – 21 நிதியாண்டில்
கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - திறன் மேம்பாட்டுக்கு
3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும்
எனக் கணிக்கப்பட்டுள்ள 100 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். - விவசாயிகள் தங்களது வேளாண்
பொருட்களைக் கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடன், ‘கிசான் ரயில்’ சேவை தொடங்கப்படும். - விவசாயிகளுக்குக் கடன்
வழங்குவதற்காக, 15 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - 2022 – 23 நிதியாண்டுக்குள்
மீன் உற்பத்தி 200 லட்சம் டன்னாக உயர்த்தப்படும். - ரசாயன உரம் தவிர, இயற்கை
உரம் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்படும். - சுகாதாரத் துறைக்குக் கூடுதலாக
69 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. - 2020 – 21 நிதியாண்டில்
துாய்மை இந்தியா திட்டத்துக்கு, 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு. - ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் மேலும்
112 மாவட்டங்களில் மருத்துவ வசதி. - சுத்தமான குடிநீர் வழங்க,
‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்துக்கு, 3.6 லட்சம்
கோடி ரூபாய் ஒதுக்கீடு. - அரசு – தனியார் பங்களிப்பு
மூலம், 100 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. - குறைந்த விலையில் மருந்துகள்
வழங்கும் மருந்தகம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். - 2025ம் ஆண்டுக்குள் காசநோய்
முற்றிலும் ஒழிக்கப்படும். - கல்வித்துறைக்கு,
99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு. - நாட்டின் ‘டாப் – 100’ கல்வி நிறுவனங்களில்
‘ஆன்லைன்’ பட்டப்படிப்புக்கான பாடப்பிரிவு
தொடங்கப்படும். - தேசிய காவல்துறை, தேசிய
தடய அறிவியல் பல்கலை அமைக்க நடவடிக்கை. - கல்வித் துறையில் நேரடி
அன்னிய முதலீட்டுக்கு அனுமதி. - 2026க்குள் பல்கலையில்,
150 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்க நடவடிக்கை. - ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின்
மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு, ‘இன்ட்சாட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படும். - அலைபேசி மற்றும் மின்சார
உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்க திட்டம் தொடங்கப்படும். - 2020 – 21 நிதியாண்டில்
தொழில் மற்றும் வணிகத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்கு 27,300 கோடி ரூபாய்
ஒதுக்கீடு. - டில்லி – மும்பை எக்ஸ்பிரஸ்
மற்றும் இரண்டு சாலை திட்டங்கள் 2023க்குள் நிறைவேற்றப்படும். - ரயில் பாதைகளின் ஓரம் சூரிய
ஒளித் தகடுகள் (சோலார் பேனல்கள்) அமைக்கப்படும். - அடுத்த மூன்றாண்டுகளுக்குள்
பிரிபெய்டு மீட்டர் அறிமுகப்படுத்தப்படும். - புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. - நாடு முழுவதும் தகவல் மையம்
அமைப்பதற்குத் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும். - தொழில் மற்றும் வர்த்தக
மேம்பாட்டுத் துறைக்கு, 27,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு. - சென்னை – பெங்களூரு இடையே
வர்த்தக வழித்தடம் கூடுதல் தேஜஸ் ரயில் இயக்கப்படும். - ரயில் பாதைகளை மின்மயமாக்க,
27 ஆயிரம் கோடி ரூபாய், போக்குவரத்துக் கட்டமைப்புக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி
ஒதுக்கீடு. - சத்துணவு தொடர்பான திட்டத்துக்கு,
35,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி துறைக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. - பாரத் நெட் திட்டத்துக்கு
6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. - தபால் நிலையம், மருத்துவமனை,
காவல் நிலையம், பள்ளிகள் இணைக்கப்படும். - ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள்
ஆப்டிக்கல் ஃபைபர் மூலம் இணைக்கப்படும். - உடான் திட்டத்தின் கீழ்
2026க்குள் 100 புதிய விமான நிலையம். - பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி.
பிரிவு நலன் துறைக்கு 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - பழங்குடியினர் நலனுக்கு,
53,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - முதியோர் நலனுக்கு,
9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - சுற்றுலாத் துறைக்கு,
2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - கலாசாரத் துறைக்கு,
3,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - 10 லட்சத்துக்கு மேற்பட்ட
மக்கள் வசிக்கும் நகரங்களில் சுத்தமான காற்று நிலவுவதற்கு வழிவகை செய்யப்படும். - காற்று மாசுபாட்டைத் தவிர்த்து,
சுத்தமான காற்று திட்டத்துக்கு 4,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - கெஸட் அல்லாத பதவிகளுக்கு
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு தேசிய ஆள்சேர்ப்பு மையம் அமைக்கப்படும். - வங்கி டெபாசிட்தாரர்களுக்கான
காப்பீடு 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்வு. - ஐந்து லட்சம் சிறு, குறு,
நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. - வரி என்ற பெயரில் மக்களைத்
துன்புறுத்துதல் என்பதை இந்த அரசு சகித்துக்கொள்ளாது. - தேசியத் தொழில் நுட்பம்
டெக்ஸ்டைல் திட்டத்துக்கு 1,480 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. - வெளிநாடு வாழ் இந்தியர்களும்
அரசின் திட்டங்களில் முதலீடு செய்யலாம். - சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின்
வாராக்கடனை வங்கிகள் வசூலிப்பதற்கான காலக்கெடு 2020 மார்ச்சில் இருந்து 2021 மார்ச்
வரை நீட்டிக்க வேண்டுமன ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்துகிறது. - சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின்
வியாபாரம் 5 கோடி ரூபாய் வரை தணிக்கை சமர்ப்பிக்கத் தேவையில்லை. முன்பு இது 1 கோடி
ரூபாயாக இருந்தது. - நிதிப் பற்றாக்குறை,
3.8 சதவீதமாக இருக்கும். - 2020 – 21ல் நாட்டின் பொருளாதார
வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும். - காஷ்மீருக்கு 30,757 கோடி
ரூபாய், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு 5958 கோடி ரூபாய் திட்டங்கள். - எல்.ஐ.சி.,யில் உள்ள மத்திய
அரசின் சிலபங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும். - புதிய வருமான வரி விதிப்பு
முறையால் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும். - மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு
15 சதவீதம் வருமான விலக்கு வழங்கப்படும். - ஆதார் அடிப்படையில் உடனடி
பான்கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். - துாத்துக்குடியின் ஆதிச்சநல்லுார்
உட்பட ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இந்த முறையும் நமது நிதி அமைச்சர் தமிழில் மேற்கோள் காட்டிப்பேசியதைப்
பாராட்டிவிட்டுத் தொடங்கலாம். இந்த
பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால்
நிலைமை அப்படி இருந்தது.

முக்கியமாக
மூன்று விஷயங்கள்:
மூன்று விஷயங்கள்:
மந்தமான
பொருளாதாரம், எதிர்பார்த்ததைவிடக்குறைவான முதலீடு மற்றும் கடுமையான அழுத்தங்களுடனான
நம் நிதி அமைப்பு. இந்த
பட்ஜெட்டில் இவை அனைத்தும் கவனிக்கப்பட்டு சரியான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அப்போதுதான்
நமது குறிக்கோளான 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையமுடியும் என்பது வெளிப்படை.

ஒரு
இடத்தில்கூட இந்த பட்ஜெட் பொருளாதார மந்தம் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும், பட்ஜெட்டின்
மூலாதாரக் குறிக்கோளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. வரும் நிதி ஆண்டில்
நிறைவேற்ற வேண்டிய குறிக்கோள்கள் பற்றி நிதி அமைச்சர் வெகு விரிவாகப் பேசினார். இன்றைய
பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான ‘தேவை அதிகரிப்பை’ச்
செய்ய (Demand Creation) அரசாங்கச் செலவுத்திட்டங்களைக் கூறினார். ஆனால் வருவாய் அளவையும்
அதன் சாத்தியங்களையும் பார்த்தால்தான் இந்தச் செலவுத்திட்டங்களும் அதன் மூலம் தேவை
அதிகரிப்பும் எவ்வாறு நிகழும் என்பது பற்றி நாம் முடிவுக்கு வரமுடியும்.

பட்ஜெட் என்றாலே எல்லோரும் முதலில்
கவனிப்பது நிதிப்பற்றாக்குறை (Fiscal
Deficit). 2019-20ல் இந்த நிதிப்பற்றாக்குறை 3.8% ஆக இருந்தது. நிதி அமைச்சர் வரும்
ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 3.5% தான் இருக்கும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.
எந்தப் பற்றாக்குறை குறைப்பும் 0.5%க்கு மேல் இருந்தால் அது நடைமுறையில் அத்தனை சாத்தியமில்லை
என்பது வல்லுநர்களின் கருத்து. இந்த முறை பற்றாக்குறை வேறுபாடு 0.3%தான். எனவே இது
நடைமுறைக்கு வரக்கூடும் என்னும் நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.

வரும்
2020-21 ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.0–6.5% இருக்கும் என்கிறது சமீபத்திய
பொருளாதார ஆய்வு. நிதிப்பற்றாக்குறை விகிதத்தின் (Ratio) தொகுதியான (Numerator) மொத்த
வருவாய் குறைந்துவிட்டாலும், அந்த விகிதத்தின் வகுக்கும் எண்ணிக்கையான (Denominator)
செலவும் குறைந்துவிடுவதால் விகிதம் 3.5% என்னும் கட்டுக்குள் வந்துவிடும் என்பது நம்பிக்கை.

வருடத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 10% அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு சரியானதுதான்.
வரி வருமானமும் 12% அதிகரிக்கும் என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் சென்ற ஆண்டு
இது நிகழவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே, நிதிப்பற்றாக்குறை எகிறாதா என்னும்
விமரிசனத்தின் பின்னே காரணம் இல்லாமலில்லை.

தனியார்மயமாக்கலின்
மூலம் இந்த அரசாங்கத்துக்கு வரப்போகும் வருமானம் ரூ 2,10,000 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

“இதுவும்
தப்புங்க! போன வருஷமே தனியார் மயமாக்கலின் வருவாய் ரூ 1,05,000 கோடின்னு எதிர்பார்த்து,
ரூ 65,000 கோடிதானே வந்தது?”

சரிதான்,
ஆனால் இந்த முறை அரசின் முழு முனைப்பும் செலுத்தப்படவிருக்கிறது. மேலும் இந்த எண்ணிகையை
அடைவதற்கான கால அவகாசம் அதிகம் என்பதால் சாத்தியம் அதிகமே. முக்கியமாக எல் ஐ ஸியின்
பங்கு விற்பனை மூலம் அரசுக்கு பெரும் வருமானம் வரும் என்பதும் ஒரு சாத்தியமே.

நிதி
அமைச்சகம் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வரவுகளைக் கவனமாகக் கண்காணித்து
அதற்கேற்றாற்போல செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்போதுதான் நிதிப்பற்றாக்குறை
எதிர்பார்த்த 3.5%ல் அடங்கும். என்னைக்கேட்டால் பட்ஜெட்டில் 3.5% இருந்தால் கூட, அரசாங்கம்
இதை 3% என்னும் கட்டுக்குள் வைக்க முயலுவதுதான் சரி.

வரி
சம்மந்தமாகவும் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. போன முறை கார்ப்பரேட்டுகளின் வரிக்குறைப்பு
நிகழ்ந்தது. இந்த முறை தனிமனித வரிகளில் மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றம் மிகப்பெரும்
தாக்கத்தை உண்டாக்காது என்பது என் கருத்து.

இந்த
பட்ஜெட்டில் இன்னொரு புதுமை, வரி செலுத்துபவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெரிவு செய்யும்
வாய்ப்பு. விலக்குகளோடு கூடிய அதிக வரியா அல்லது விலக்குகள் ஏதுமில்லாத குறைந்த வரியா
என்பதை அவரவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவுமே விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தத் தேர்வு வாய்ப்பால் எவ்விதப் பலனுமில்லை என்று சிலர் சொல்ல, கிட்டத்தட்ட 70%
பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாக அரசாங்கம் சொல்கிறது. தனது உரையில் அமைச்சர் கிட்டத்தட்ட
90% வரி செலுத்துபவர்கள் ரூ 2 லட்சத்துக்கும் குறைவான வரிச்சலுகைகள் பெறுகிறார்கள்.
அவர்கள் இந்தத் தெரிவை எடுத்துக்கொண்டால் வரி குறைப்புக்காக செலவோ முதலீடோ செய்யத்தேவை
இருக்காது என்கிறார். எனவே அவர்களின் கையில் அதிகப்பணம் மிஞ்சும் என்பதே அரசின் வாதமாக
இருக்கிறது. இது உண்மையும் கூடத்தான். ஆனால் இதன் சரியான தாக்கம் அடுத்த வருடம்தான்
நமக்குத் தெரியக்கூடும்.

அமைச்சர் தன் உரையில் தெரிவித்த இன்னொரு சுவாரஸ்யம் நம் வரிச்சட்டத்தில் கிட்டத்தட்ட
120 வரி விலக்குகள் இருந்தனவாம். வரி விதிப்பைச் சுலபமாக்கும் குறிக்கோளில் கடந்த சில
வருடங்களில் கிட்டத்தட்ட 70 சலுகைகள் வரை நீக்கப்பட்டு விட்டன. மேலும் வரிக்கான பிரிவு
இப்போது ஐந்து பிரிவுகளாக (slab) உள்ளன. இன்னும் ஓரிரு ஆண்டில், வரி செலுத்துபவர்கள்
எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பற்றிய புள்ளிவிவரம் உறுதியாகத் தெரியவரும்போது
வரி விதிப்பு பிரிவுகளும் குறைக்கப்பட்டு வரிவிகிதமும் குறைவதற்கான சாத்தியம் அதிகம்.

இன்றைய
பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு செலவழிக்கவேண்டிய சமூக மற்றும் தொழில் கட்டுமானங்கள்
(Social and physical infrastructure) ஏராளமாக இருக்கின்றன. இந்நிலையில் மேலும் மேலும்
வரிச்சலுகைகளை எதிர்பார்ப்பது சரியானதல்ல. இது போன்ற புதுமையான முறைகளால்தான் வரிக்குறைப்பைக்
கொண்டு வர முடியும். மேலும் நீண்ட காலத்தில் குறைவான பிரிவுகள் (slabs), சுலபமான வரி
விதிப்பு, குறைவான விலக்குகள் (few slabs, simpler tax structure and fewer
exemptions) என்று மாற்றினால்தான், வரிச்சட்டம் எளிமையானதாகும். மேலும், வரிக்கான சர்ச்சைகள்
நீதிமன்றம் வழக்குகள் என்றெல்லாம் பண மற்றும்
நேர விரயங்கள் குறையும்.

“வரி
என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்துதல் என்பதை இந்த அரசு சகித்துக்கொள்ளாது. வரி செலுத்துபவர்கள்
இந்நாட்டின் மதிப்பு மிக்கவர்கள்” என்று நிதி அமைச்சர் சொல்லியிருப்பது உவப்பாக
இருக்கிறது.

வெளி
நாட்டு முதலீட்டை ஈர்க்கும் பல விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இருப்பது வரவேற்கத்தக்கது.
Disribution dividend வரியை அகற்றியிருப்பதும் கவர்மெண்ட் பேப்பர் எனப்படும் பத்திரங்களில்
இந்தியாவில் வசிக்காதவர் (non resident) முதலீடு செய்வதற்கான முறைகள் புகுத்தப்பட்டிருப்பதும்
நிச்சயம் முதலீட்டை அதிகரிக்கும். அதே சமயம் இந்த முறைகளின் மூலம் அதிகக்கடன் சுமை
ஏறாமல் அரசாங்கம் கவனிக்க வேண்டியதும் அவசியம்.

அமைச்சர் தன் உரையில் ஒவ்வொரு துறைக்குமான முதலீடுகள் பற்றி விரிவாகப் பேசினார். மேம்போக்காகப்
பார்த்தால் இவை ஒன்றும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் என்னும் நம்பிக்கையை
அளிக்கவில்லை. இந்தத் திட்டங்களின் சாதகபாதகங்கள் பற்றி அந்த அந்தத் துறை விற்பன்னர்கள்
தீவிரமாக ஆய்வுசெய்து சொன்னால்தான் மேற்கொண்டு விவாதிக்க முடியும். ஆனால் நம் கவலை
இந்தத்திட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே. மொத்த செலவினங்கள்
12% உயர்ந்திருக்க மூலதனச் செலவுகள் மட்டுமே 18% அதிகரிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் மொத்தத்தில் இந்தச் செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% என்று இருக்கிறது.
இந்த 1.8% என்பது பல ஆண்டுகளாகவே அதே நிலை என்பதால், இப்போது திட்டமிடப்பட்டுள்ள உயர்வு
இருக்குமா என்பதில் ஒரு சின்ன கேள்விக்குறி எழுகிறது!

என்று வரும்போது எல்லோரும் ஒரே குரலில் ஆட்சேபிப்பது ஜி.எஸ்.டி நிர்வாகம் பற்றின சங்கடங்கள்.
இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் எதிர்பார்த்துக் கிடைக்காமல் பட்ஜெட்டைக் குறை கூறுபவர்கள்
அதிகம். ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஜி.எஸ்.டி என்பது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில்
இல்லை. ஜிஎஸ்டிஎன் என்னும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்த குழுவின் கட்டுப்பாட்டில்தான்
இருக்கிறது. எந்த முடிவுமே ஜிஎஸ்டிஎன்-னின் மூலமாகத்தான் எடுக்க முடியும். ரசீது
(bill) வேண்டும் என உறுதியாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பணப்பரிசு, எலக்ட்ரானிக்
பில், ஆதார் சார்ந்த சரிபார்ப்பு மற்றும் இன்னும் சுலபமாக்கப்படவேண்டிய முறைகள் எல்லாமே
ஜிஎஸ்டிஎன்னால்தான் நிகழ்த்தப்படவேண்டுமே அன்றி நிதி அமைச்சகத்தாலோ அல்லது நிதி அமைச்சராலோ
அல்ல.

ஆனாலும்
‘ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டை ஒருங்கிணைத்துள்ளது. ஜிஎஸ்டியால்
சாமானிய மக்களின் மாதாந்திர வருமானம், 4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் மாதம்
1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. வரும் ஏப்ரல் முதல் எளிமைப்படுத்தப்பட்ட
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும். புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் கடந்த நிதியாண்டில், 40 கோடி ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’
என்னும் அறிவிப்புக்களும் கவனிக்கப்படவேண்டியவையே.

கஸ்டம்ஸ்
விதிகளிலும் சில நல்ல மாற்றங்கள் வந்திருக்கின்றன. புதுமையாக மக்களின் பங்களிப்பின்
பேரில் (Crowd sourcing) சில கஸ்டம்ஸ் வரி விலக்கு அளிப்பது, வெளிநாட்டுப் பொருட்களுக்கெதிரான
பாதுகாப்பு, anti-dumping பற்றிய சில மாற்றங்கள் என நல்ல மாறுதல்கள் வந்திருக்கின்றன.
சில பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்வு மற்றும் இறக்குமதி பதிலீட்டுக்கொள்கை
(Import substitution) எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது கேள்விக்குறியே. ஒரு பக்கம்
உள் நாட்டுத் தொழில்களைக் காக்கும் முயற்சிகளைச் செய்துவிட்டு, கூடவே வெளிநாட்டு முதலீட்டைப்பெருக்க
வேண்டும் என்பது முரணாக இருப்பது கண்கூடு.

நாட்டில்
வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன என்பது இந்த அரசுக்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.
இதுவே எதிர்க்கட்சிகளின் முக்கிய ஏவுகணையாகவும் இருப்பதால் இந்த பட்ஜெட்டில் இதற்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கேற்றாற்போல இந்த
பட்ஜெட்டில், படித்து முடித்த பட்டதாரிகளுக்கு நகர உள்ளாட்சிகளில் ஒரு வருட இண்டெர்ன்ஷிப்
பயிற்சிக்கு வழி வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு வருடம் சம்பாதிக்கும் வாய்ப்போடு
பட்டதாரி இளைஞர்கள் தங்களின் வேலைத்திறனை அதிகரித்துக்கொள்ளவும் உந்துதலாய் அமையும்.

நமது
நிதி அமைப்பில் (Financial system) பல முன்னேற்றங்கள் தேவை என்பதும் அதனாலேயே இந்தத்
துறை தனிக்கவனம் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கித்துறை மாற்றங்கள்
மிக அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வங்கிகளை ஒன்றோடு ஒன்று
இணைப்பது என்பதைவிட ஒட்டு மொத்தமாக வங்கித்துறையின் கட்டுப்பாடு எந்த அளவுக்கு அரசு
சார்ந்து இருக்க வேண்டும் என்பது விவாதப்பொருளாகும். ஐடிபிஐ வங்கியின் பங்குகளை அரசு
தனியாருக்கு விற்றுவிடத் தீர்மானித்திருப்பது இந்தக் கொள்கை பற்றிய ஒரு ஊகத்தை நமக்கு
அளித்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் தெளிவு வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாக
இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மையில் அரசுக்கட்டுப்பாடு கையளவு நீளத்திலிருக்க
(Arm’s length) வேண்டும் என்னும் கோட்பாடு நல்லதுதான்
என்றாலும் செயல் திறமை என்பதும் தொழில் நுட்பம் என்பதும் மேலாண்மையிலிருந்து வேறு பட்டவை
என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மூன்றும் சேர்ந்திசைந்தால்தான் நல்ல முன்னேற்றத்தைக்
காண முடியும்.

ஓரளவுக்குத்
தரப்பட்ட கிரெடிட் திட்டம் வரவேற்கப்பட்டது என்றாலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்
(NBFC) எதிர்பார்த்த பெரிய சலுகைகள் இல்லாததால் அவர்கள் இந்த பட்ஜெட்டினால் அதிகம்
பயன் பெறவில்லை. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் செய்தது போல
Troubled Asset Relief Programme (TARP) திட்டம் வரும் என்று எதிர்பார்த்ததால் ஒரு
அளவுக்குத் தரப்பட்ட கிரெடிட் காரண்டி சலுகையுமே அவர்களைக் கவரவில்லை.

மக்களின்
டெபாசிட் இன்ஷூரன்ஸ் காப்பு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பது
நல்ல சலுகை என்றாலும் பல கோஆப்பேரேடிவ் வங்கிகள் இத்திட்டத்துக்குள் வராது என்பதால்,
முக்கியமாக சமீபத்திய பஞ்சாப் அண்ட் மஹாராஷ்டிரா கோ ஆப்ரேடிவ் வங்கியின் வீழ்ச்சியால்
ஏற்பட்ட பாதிப்பின் விளைவினால் இது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.

கூர்ந்து
கவனித்தால் பிரதமர் மோடியின் முதல் அரசின் பட்ஜெட்டிலிருந்து இந்த 2020-21 பட்ஜெட்
வரை ஒரே கொள்கை நோக்கம் இருப்பதை உணர முடியும். இந்த பட்ஜெட்டின் மிக நல்ல அம்சம் அரசின்
கொள்கையான வெளிப்பட்ட தன்மை (Transparency) நன்றாகத் தெரிவதுதான். மேலும் இந்த அரசு
இப்போதைய பொருளாதார மந்த நிலை ஒரு சுழற்சியின் (Cyclical) தாக்கமே தவிர அடிப்படையானது
(Structural) அல்ல என்பதைத்தான் நம்புகிறது என்பதைத்தான் பட்ஜெட்டின் பல அம்சங்கள்
புலப்படுத்துகின்றன. இது சரிதான் என்றும் தவறு என்றும் இரு பக்கமுமே வாதப்பிரதிவாதங்கள்
எழுந்திருக்கின்றன.

அதிகரிக்கும்
முதலீடுதான் இன்றைய மிக மிக முக்கியத்தேவை. இந்த பட்ஜெட் அந்த முதலீட்டைப் பெற்றுத்தரக்கூடியதா
என்பதே கேள்வி. இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.