Posted on Leave a comment

சினிமாச் சோழர்கள் | கோ.எ.பச்சையப்பன்

அரசியலில் நடிகர்களும், நடிகர்களின் அரசியலும்

“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழுந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”

மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்த உடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பாக்காச் சோழர்
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?

-ஞானக்கூத்தன்!

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு அது. திரையுலகப் பாரம்பரியத்தின்படி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். படத்தின் நாயகன் கமல்ஹாஸனை வாழ்த்தியும், அவர் ‘வேண்டாவெறுப்பாக’ தாங்கி வரும் உலக நாயகன், காதல் மன்னன் (இந்த பட்டம் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒவ்வொரு நாயகனுக்கு இடம்பெயரும்! ஏறக்குறைய சூழற்கோப்பை போன்றது) போன்ற பட்டங்களை விளித்து ரசிகர்கள் கோஷம் எழுப்பியவாறு இருக்க, முதல்வர் முகம் சுளித்தார். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வேறு எவரையும் விட நன்கறிந்தவர் கமல்! ஒலிபெருக்கிக்கு அருகே வந்து கொன்ன வார்த்தை – பீருட்டஸைப் பார்த்து ஜீலியஸ் சீஸர் சொன்ன ‘யூ டூ ப்ரூட்டஸிற்கு’ நிகரானது – “என் ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்லர்!” Continue reading சினிமாச் சோழர்கள் | கோ.எ.பச்சையப்பன்

Posted on Leave a comment

கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன்

கடந்த ஐந்து மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ், யானையின் காதில் சித்தெறும்பு புகுந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி இருக்கிறது. இந்த நிலையில்தான் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் இருக்கிறார்கள். எத்தனை கொடிய ஒரு நோயைக் காட்டிலும் இந்த கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்படுகிறோம். ஏனென்றால், இந்த வைரஸ் மனிதர்களிடையே ஒரு நொடியிலே பரவும் தன்மை உள்ளதால்தான்.

Continue reading கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன்

Posted on Leave a comment

வலம் ஜுூன் 2020 முழுமையான இதழ்

வலம் ஜுூன் 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.

வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்

சீனா உலக நாடுகளால் தண்டிக்கப்பட வேண்டும் | எஸ்.நடராஜன்

மாவோவின் கடைசி நடனக் கலைஞன்: Mao’s Last Dancer | அருண் பிரபு

20 லட்சம் கோடி – பொருளாதார மாற்றக் கணம் | ஜெயராமன் ரகுநாதன்

வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள்| கிருஷ்ணன் சுப்பிரமணியன்

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – அடித்தளத்தைத் தகர்க்கும் ஆதாரத் தொகுப்பு | செ.ஜகந்நாதன்

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரிகிருஷ்ணன்

ஆத்மநிர்பர் – தன்னிறைவா? தற்கொலை முயற்சியா? | சுசீந்திரன்

புதியதொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு