ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை குறித்து காங்கிரஸ் கட்சி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. என்றாலும், கட்சித் தலைவர்கள் அதற்குப் பல எதிர்வினைகளை வெளியிட்டு வந்தனர். பூமி பூஜை விழாவினை நிறுத்த சில தலைவர்கள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றனர், சிலர் இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் அழைக்கப்படவில்லை என்று புகார் கூறினர். Continue reading சோமநாதர் கோவிலும் பணிக்கரின் கடிதமும் | தமிழில்: ஸ்ரீனிவாசன்
Month: September 2020
பாரதக் கோவில் | சுஜாதா தேசிகன்
நான் பள்ளியில் படிக்கும்போதுதான் எனக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் அறிமுகம். என் தந்தையின் நண்பர் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அவர் அச்சகத்தில் எழுத்துக்களைக் கோத்து வார்த்தையாக்குவதைப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையில் கிழித்த சிவகாமியின் சபதம் போன்ற கதைகளை பைண்ட் செய்து தருவார். புத்தகம் எப்படி பைண்ட் செய்ய வேண்டும் என்று எனக்குக் கற்றும் கொடுத்தார். பார்க்க மிக ஒல்லியாக ஊசிபோல இருப்பார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார். Continue reading பாரதக் கோவில் | சுஜாதா தேசிகன்