முனைவர் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைவர். 2019 ஜனவரியின் போது சனாதனத்தை ஒழிப்போம் என்கிற போர் அறிவிப்புடன் ஒரு மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுக, இடது கம்யூனிஸ்ட் வலது கம்யூனிஸ்ட் ஆகியோருடன் இஸ்லாமிய வகுப்புவாத கட்சிகளும் கலந்து கொண்டன. Continue reading அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி
Month: October 2020
வலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்
ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழ்
வலம் இதழ் அக்டோபர் 2020 இதழோடு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதைச் சாத்தியமாக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வலம் இதழ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
காமிசார்களின் அரசியல் (Demoted) | அருண் பிரபு
பாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு
சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு
தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன்
புத்தகத்தில் தொலைதல் | ராம் ஸ்ரீதர்
இந்தியா புத்தகம் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு
என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்
படிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி
சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சந்தாவைப் ஆன்லைனில் www.valamonline.in வலைத்தளம் மூலம் புதுப்பிக்கலாம். மேலகதித் தொடர்புக்கு: 9884279211.
அஞ்சலி – வீரபாகு ஜி
விஜயபாரதம் பத்திரிகையின் ஆசிரியர் வீரபாகு ஜியின் மறைவுக்கு வலம் இதழ் அஞ்சலி செலுத்துகிறது.
படிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி
அசோக் பில்லரில் இறங்கினார்கள் பாபுவும் அவன் மாமாவும். அக்டோபர் மாதம் என்றாலும் சென்னையில் சரியான வெயில். “பரவாயில்லை, நான் பயந்த அளவு வெயில் இல்லை” என்றான் பாபு. மாமா முறைத்தார். அவன் ஊர் கோவில்பட்டி. அவர் ஊர் இலஞ்சி. Continue reading படிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி
என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்
எழுத்து என்பது நிலத்தடியில் உள்ள நீரூற்று போல. நீரூற்றுள்ள நிலம் சில்லென்றிருக்கும். எறும்புப் புற்றைப்போல் அங்கே வடிவமற்ற கற்பனைகள் உருவாகிக் கொண்டிருக்கும். இதை ஆழ்ந்து கவனிப்பவர், உள்ளுக்குள் இருக்கும் நீரோட்டத்தைத் துளையிட்டு வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடுவர். அம்புலிமாமா வாசிக்கும் காலத்திலேயே அடிமனசில் ஒளிந்திருந்த இந்த நீரூற்றை நானும் அறிந்தேன். Continue reading என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்
இந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.
புத்தகத்தில் தொலைதல் | ராம் ஸ்ரீதர்
நீங்கள் உங்களை / உங்கள் சுற்றுப்புறத்தை மறந்து ஒரு புத்தகத்திற்குள் தொலைந்து போவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல விஷயம் என்கிறது ஒரு விஞ்ஞானக் குறிப்பு. புத்தகத்திற்குள் தொலைதல், அதாவது அதில் ஆழ்ந்து போவது மிகவும் நல்லது, உங்களை அது மேலும் புத்திசாலியாக, ஒரு சிறந்த படைப்பாளியாக மாற்றும். அது ஒரு தப்பித்தல்தான் – உங்கள் கவலைகளிலிருந்து, உங்கள் தினசரி இயந்திரத்தனமான வாழ்விலிருந்து இப்படி தப்பித்து உங்கள் கனவுகளுக்குள் மூழ்கிப்போவது நல்லது. Continue reading புத்தகத்தில் தொலைதல் | ராம் ஸ்ரீதர்
தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன்
கடந்த அரை நூற்றாண்டாக இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி அனைத்து நிலைகளிலும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. அந்தக் கட்சியைப் போல் ஜனநாயக ஆட்சிமுறையை வேரறுத்தவர்களை நினைவுக்கு எட்டியவரை பார்க்கமுடியாது. Continue reading தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன்
சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு
ஆல்பெர் காம்யூவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்
அடையாறு பகுதியின் இளைஞர்கள் அன்றாடம் கூடுமிடம் ஹோட்டல் ரன்ஸ். பலருக்கு அதை வாழுமிடம் என்றுகூடச் சொல்லலாம். எவ்வளவுநேரம் உட்கார்ந்திருந்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். காபி, டீ, சமோசா என்று பில் மட்டும் கூடிக்கொண்டே போகும். என்னுடைய வாழ்க்கைத் தடத்தில் ஹோட்டல் ரன்ஸுக்கு முக்கியமான இடமுண்டு. பத்தாண்டுகளுக்கு மேலாக நான் ஈடுபட்டுவந்த கடல் தொழில், மீன் தொழில், கருவாடு தொழில், எல்லாவற்றிலிருந்தும் விலகும் கட்டம் அங்கேதான் நிகழ்ந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு
பாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு
“ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்”.
– பரலி சு. நெல்லையப்ப பிள்ளை (கண்ணன் பாட்டு முதற்பதிப்பின் முகவுரை, 1917)
Continue reading பாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு