
கர்ணனை அணுகுதல்
(செப்டம்பர் 2020 இதழின் தொடர்ச்சி..)
வலம் குழுவினர் தொகுத்து அனுப்பியிருந்த கர்ணனைக் குறித்த சில கேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வில்லி பாரதம், ஜைமினி பாரதம் போன்ற படைப்புகளின் ஆசிரியர்கள் காரணத்தோடோ, காரணமின்றியோ செய்திருக்கும் மாறுதல்கள் உருவாக்கியிருக்கும் கட்டமைப்பே கர்ணனைப் பற்றி இன்று நிலவிவரும் பிம்பத்துக்கு அடிப்படையாக இருப்பதைப் பார்த்தோம். வியாச பாரதத்தில் கர்ணன் தோல்வியைத் தழுவும் தறுவாயில் ‘இவ்வளவு தர்மம் செய்தேனே! தர்மம் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று தர்ம நிந்தனை செய்கிறான். ‘தர்மம் தலை காக்கும்’ என்ற பாரம்பரியமான கருத்து இதில் அடிபட்டுப் போகிறதோ என்ற எண்ணத்தினாலோ என்னவோ (உண்மையில் வியாச பாரதத்தின் இந்தக் கட்டம் தர்மத்தின் மீதான அவநம்பிக்கை எதையும் ஊட்டவில்லை) வில்லிபுத்தூரார், கர்ணன் செய்த தர்மத்தின் பலன்களையெல்லாம் ஒரு பிராமணன் வடிவில் வந்து யாசித்துப் பெற்றதாக ஒரு கற்பனையை உள்ளே நுழைத்தார். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்