Posted on 1 Comment

வலம் – ஜூன் 2021

வலம் ஜூன் 2021 இதழின் படைப்புகள்

தமிழ்நாடு 2021 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – ஓர் அலசல் | லக்ஷ்மணப் பெருமாள்

நம்மை நோக்கிப்பாயும் தோட்டா – கொரோனா | ஜெயராமன் ரகுநாதன்

ஆகஸ்டு 44வது – பெலோரூசின் தங்கம் | அருண் பிரபு

மகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்

இந்தியா புத்தகங்கள் – 12 | முனைவர் வ.வே.சு

இது நம் சனாதன தர்மம் – நூல் விமர்சனம் | கவியோகி வேதம்

சிங்கப்பூர் நீர் மேலாண்மை | ஆமருவி தேவநாதன்

உயிர்ப்பிடிப்பு (சிறுகதை) – சித்ரூபன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு

 

Posted on Leave a comment

வலம் – விடைபெறல்

வணக்கம்.

வலம் இதழ் தொடர்பாக ஒரு அறிவிப்பு.

கடந்த 55 மாதங்களாக வலம் இதழ் தொடர்ந்து வெளி வந்தது. கொரோனா காரணமாக மே 2021 இதழை வெளியிடவில்லை. ஜூன் 2021 இதழ் 56வது இதழ்.

இந்த இதழுடன் வலம் இதழை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அச்சு இதழைக் கொண்டு வருவதன் சவால்கள் தெளிவாகவே தெரிகின்றன. சோஷியல் மீடியா யுகத்தில் மாத இதழ்களின் தேவை குறித்தும் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த இதழ் இரண்டு வருடங்கள் வந்தால் கூடப் போதும் என்றுதான் தொடங்கினோம். எப்படியோ இத்தனை இதழ்கள் வெளி வந்தது நல்ல விஷயமாகவே தோன்றுகிறது.

இந்த இதழைக் கொண்டு வர உதவிய அனைத்து நண்பர்களுக்கும், குறிப்பாக பிரதிபலன் பாராமல் எழுதிய நண்பர்களுக்கும், தொடர்ந்து சந்தா செலுத்தி வாசித்த நண்பர்களுக்கும் நன்றி.

சந்தாதாரர்களுக்கு மீதம் உள்ள தொகை, கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் அனுப்பப்பட்டிருக்கிறது. சந்தா வரப் பெறாதவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

வலம் இதழ் ஆன்லைனில் தேவைப்படும்போது வெளிவரும் ஒரு இதழாக இனி இருக்கும். அதுவும் இலவச வலைத்தளமாகவே இயங்கும். இது குறித்த விரிவான அறிவிப்பைப் பின்னர் வெளியிடுகிறோம்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். நன்றி.

பாரத மாதா கி ஜெய். ஜெய்ஹிந்த்.

வலம் எடிட்டோரியல் குழு.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு

சமையல்கட்டில் ஆண்கள்

பல வருடங்களாகத் தொடர்ந்து அரசியல்களத்தில் செயல்பட்டு வந்த எனக்கு டாக்டருடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. ஆனால் பலமுறை முயன்று பார்த்தும் என்னால் அவரை வகைப்படுத்த முடியவில்லை. ‘சிறுவயதில் தனக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி மீது ஈடுபாடு இருந்ததாக’ அவர் ஒரு முறை குறிப்பிட்டார். அதற்காக அவர் சொல்லிய காரணம் சுவாரசியமாக இருந்தது. ‘கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அரிவாளும் சுத்தியலும். விளைகின்ற பொருட்களை அறுவடை செய்து அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இதற்குத் தடையாக இருப்பவரை சுத்தியலால் அடிக்கவேண்டும் என்பதாகத் தன்னுடைய புரிதல் இருந்தது’ என்று அவர் சொன்னார். இதையே நான் டாக்டருடைய அரசியல் கொள்கை என்று பரப்புரை செய்தபோது, ‘அது சின்ன வயசில் இருந்த புரிதல்’ என்று சொல்லி ஒதுக்கிவிட்டார். அவருடைய சமகாலத்தில் வெகுவாகப் பேசப்பட்ட அதிமுக – திமுக., எம்ஜிஆர் – கருணாநிதி மோதல் பற்றி அவர் எதுவும் பேசியதில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு

Posted on Leave a comment

உயிர்ப் பிடிப்பு (சிறுகதை) | சித்ரூபன்

‘அனாயாசேன மரணம்

வினாதைன்யேன ஜீவனம்

தேஹிமே க்ருபயா சம்போ

த்வயி பக்திம் அசஞ்சலாம்’

என்று எழுதப்பட்டிருந்த தாளை எதிர் வீட்டு மாமா விபூதி வாசனையுடன் மாதங்கியிடம் கொடுத்தார். ‘இது காஞ்சி மஹா பெரியவா அருளின ஸ்லோகம்.. நரசிம்மய்யங்கார்க்கு ரொம்ப முடியலேன்னு கேள்விப்பட்டேன்.. இந்த மந்திரத்தை சொல்லி ஈஸ்வரனை வேண்டின்டா, வயசானவா கஷ்டப்படாம சீக்கிரமே ஸத்கதி அடைஞ்சுடுவாளாம்..’ என்று அவர் சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை. எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக படுத்த படுக்கையாய் நரக வேதனை அனுபவிக்கும் மாதங்கியின் மாமனாரைப் பார்க்க வந்திருந்தார் அவர். Continue reading உயிர்ப் பிடிப்பு (சிறுகதை) | சித்ரூபன்

Posted on Leave a comment

சிங்கப்பூர் நீர் மேலாண்மை | ஆமருவி தேவநாதன்

‘You know, you can drink the water direct from the tap.’ டாக்ஸி ஓட்டுநர் லிம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.

‘What lah? See ghost already ya? Why mouth open so wide?’ லிம் மேலும் கேட்டதும் திறந்த வாய் மூடிக்கொண்டது. ‘Yes, I mean what I say lah. You drink water from tap and fall ill, I pay you $100’ என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது. இன்னும் பலப்பல ஆச்சரியங்கள் என்னை ஆட்கொள்ளப்போவதை உணராமல் மோன நிலையில் அமர்ந்திருந்தேன். Continue reading சிங்கப்பூர் நீர் மேலாண்மை | ஆமருவி தேவநாதன்

Posted on 2 Comments

இது நம் சனாதன தர்மம் – நூல் விமர்சனம் | கவியோகி வேதம்

இது நம் சனாதன தர்மம், ஹைதராபாத் ரிஷிபீடம் வெளியீடு- ஆசிரியர் ப்ரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா, தமிழாக்கம்- ராஜி ரகுநாதன், பக்கம் 674, விலை ரூ 350/-

‘மனிதன் தனியானவன் இல்லை. அவன் கடவுளின் பிரதிபிம்பம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரிடமிருந்து பிரிந்து இங்கு வருகிறார்கள். ஆனால் அறிவது இல்லை. உணர வேண்டும் அதை. எனில், அவன் அறிய முற்படுவது இல்லை. முயன்றால் முடியும்தான். மூச்சுப் பயிற்சி, தவம் போன்ற பயிற்சியால் நிச்சயம் முடியும்.’ சொன்னவர் ஸ்ரீபரம ஹம்ச யோகானந்தர். அவரைப்போல் ஆழ்ந்து தவம் செய்த பல மகான்களும் இதையே சொல்லியிருக்கிறார்கள். Continue reading இது நம் சனாதன தர்மம் – நூல் விமர்சனம் | கவியோகி வேதம்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – 12 | முனைவர் வ.வே.சு

Krishna The man and his philosophy OSHO

‘அந்தப் பையனுக்கு எவ்ளோ வயசிருக்கும் பாட்டி?’

‘அஞ்சு வயசிருக்கும். அவன் பள்ளிக்கூடம் போற வழியில ஒரு பெரிய காடு. அதத் தாண்டிதான் போகணும். அன்னிக்கு அவன் அம்மாவால அவன் கூட வரமுடியல. தனியாத்தான் போகணம். அவனுக்கு பயமாயிருந்தது. என்ன பண்ணறதும்மான்னு கேட்டான்.’

‘அப்ப.. அவன் அம்மா என்ன சொன்னா பாட்டி?’ Continue reading இந்தியா புத்தகங்கள் – 12 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – 14 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

பதினேழாம் நாள் போரில் தன்னுடைய தேர்ச்சக்கரம் நிலத்தில் அமிழத் தொடங்கியதும் கர்ணன், ‘நான் இந்தத் தேர்ச்சக்கரத்தைத் தூக்கி நிறுத்தும் வரையில் என்மீது அம்பெய்யாமல் இருக்கவேண்டும் அர்ஜுனா! உன்னை தர்மத்தின் பேரால் கேட்கிறேன்’ என்று சொன்னதையும், அதைக் கேட்டுப் பரிகாசமாகச் சிரித்த கண்ணன் ‘நல்லது. இப்போதாவது உனக்கு தர்மத்தின் நினைவு வந்ததே. ஆனால் இன்னின்ன செயல்கள் நடைபெற்றபோது உனக்கு தர்மத்தின் நினைவு ஏற்படவில்லையே! அப்போதெல்லாம் உன் தர்ம சிந்தனை எங்கே போனது’ என்று மொத்தம் பதினோரு குற்றச்சாட்டுகளை அடுக்குவதையும் கர்ணன் இதற்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிவதையும் பார்த்தோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 14 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

ஆகஸ்டு 44வது – பெலோரூசின் தங்கம் | அருண் பிரபு

1944ம் ஆண்டு ஆகஸ்டு 7 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஜெர்மனியில் இருந்து விடுவிக்கப்பட்ட பெலோரஷ்யாவில், ஒரு ரேடியோ, ரகசியத் தகவல்களை ஒலிபரப்புகிறது. அதன் அடிப்படையில் எதிரிகளின் உளவுப்படை குறித்த விவரங்களை அறிந்து வர கேப்டன் அல்யோகின் தலைமையில் ஒரு குழு அனுப்பப்படுகிறது. இவர்கள் SMERSH எனப்படும் ரகசிய போலிஸ், உளவுத்துறை, காமிசார்கள் ஆகியோரைக் கண்காணிக்கும் பிரிவினர். ஏற்கெனவே போலந்து போராளிக் குழுக்கள், சோவியத்தை எதிர்க்கும் உள்ளூர் ஆயுதக் குழுக்கள் என்று அந்தப் பகுதி அபாயகரமானதாக உள்ளது. அவர்கள் பெலாரூஸ் நாட்டுக்குச் சுதந்திரம் தேவை, சோவியத் ஆட்சிக்கு உட்பட முடியாது என்ற கொள்கையோடு போராடுபவர்கள். போலந்துக்காரர்கள் அவர்களைப் பயிற்றுவித்து அப்படியே போலந்தை விட்டு கம்யூனிசத்தை விரட்ட முயல்பவர்கள். Continue reading ஆகஸ்டு 44வது – பெலோரூசின் தங்கம் | அருண் பிரபு

Posted on Leave a comment

நம்மை நோக்கிப் பாயும் தோட்டா – கொரோனா | ஜெயராமன் ரகுநாதன்

Thanks: DDIndia

‘மோடி தடுத்து நிறுத்தியது கொரோனாவை அல்ல, உண்மைகளை!’

திருவாய் மலர்ந்திருக்கும் ராஹுல் காந்திக்கு நம் அனுதாபங்களைத் தெரிவித்தே இந்த வ்யாசத்தைத் தொடங்க வேண்டும். ஏனென்றால் இந்தக் காலக்கட்டத்தில் (அதாவது மே 01, 2021 எழுதப்பட்ட கட்டுரை இது) மோடி அல்லாமல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தால் என்னும் ‘மாற்றுச்சிந்தனை’யை ஓடவிட்டால் கிடைக்கும் பதில் அடிவயிற்றில் சில்லிடவைக்கும். கொரோனா அளவுக்கு வீர்யம் இல்லாவிட்டாலும் அந்த அளவு பீதியை உண்டு பண்ணிய 26/11 தாக்குதலின் போது காங்கிரஸ் அரசு ஒரு அவசரகால நிலமையை நிர்வகிக்க எடுத்த, இல்லை இல்லை, எடுக்காமல் ஊறப்போட்ட முடிவுகள்தாம் நமக்கு இப்போது வழிகாட்டி. அதன்படி பார்த்தால் நமது மாற்றுச்சிந்தனை செய்யவே முடிந்திராத அளவுக்கு நாடு சீர்குலைந்துபோயிருக்கும் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் பதில். கால்களில் முட்டிக்குப் பதிலாக ஜெல்லியை வைத்துக்கொண்ட காங்கிரஸ் அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த உறுதியான முடிவும் எடுக்காமல் தயங்கித்தயங்கி பாகிஸ்தானுடன் ஹீனமான குரலில் பேச்சு வார்த்தைக்கு முயன்ற அவலத்தை நாமே பார்த்தோம். அப்படிப்பட்ட செயல்பாடுடைய அரசு இன்றிருந்தால் என்னும் எண்ணமே நமக்கு பயத்தைத் தருகிறதா இல்லையா? Continue reading நம்மை நோக்கிப் பாயும் தோட்டா – கொரோனா | ஜெயராமன் ரகுநாதன்