Posted on Leave a comment

வலம் – விடைபெறல்

வணக்கம்.

வலம் இதழ் தொடர்பாக ஒரு அறிவிப்பு.

கடந்த 55 மாதங்களாக வலம் இதழ் தொடர்ந்து வெளி வந்தது. கொரோனா காரணமாக மே 2021 இதழை வெளியிடவில்லை. ஜூன் 2021 இதழ் 56வது இதழ்.

இந்த இதழுடன் வலம் இதழை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அச்சு இதழைக் கொண்டு வருவதன் சவால்கள் தெளிவாகவே தெரிகின்றன. சோஷியல் மீடியா யுகத்தில் மாத இதழ்களின் தேவை குறித்தும் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த இதழ் இரண்டு வருடங்கள் வந்தால் கூடப் போதும் என்றுதான் தொடங்கினோம். எப்படியோ இத்தனை இதழ்கள் வெளி வந்தது நல்ல விஷயமாகவே தோன்றுகிறது.

இந்த இதழைக் கொண்டு வர உதவிய அனைத்து நண்பர்களுக்கும், குறிப்பாக பிரதிபலன் பாராமல் எழுதிய நண்பர்களுக்கும், தொடர்ந்து சந்தா செலுத்தி வாசித்த நண்பர்களுக்கும் நன்றி.

சந்தாதாரர்களுக்கு மீதம் உள்ள தொகை, கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் அனுப்பப்பட்டிருக்கிறது. சந்தா வரப் பெறாதவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

வலம் இதழ் ஆன்லைனில் தேவைப்படும்போது வெளிவரும் ஒரு இதழாக இனி இருக்கும். அதுவும் இலவச வலைத்தளமாகவே இயங்கும். இது குறித்த விரிவான அறிவிப்பைப் பின்னர் வெளியிடுகிறோம்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். நன்றி.

பாரத மாதா கி ஜெய். ஜெய்ஹிந்த்.

வலம் எடிட்டோரியல் குழு.

Leave a Reply