
வீட்டுக்கு முன்னால் பந்தல் போடப்பட்டிருந்தது. ஆனால் வீடு மிகவும் பெரியதாக இருந்ததால் பந்தலின் பெரிய அமைப்பு அவ்வளவாகப் பார்ப்பவரின் கண்ணில் தென்படவில்லை என்று ராமபத்திரன் நினைத்தார். பந்தலின் அடியில் தரையை ஜமுக்காளங்களினால் மூடியிருந்தார்கள். இருபது முப்பது நாற்காலிகள் போடப்பட்டிருந்தாலும் எல்லாவற்றிலும் ஆள்கள் உட்கார்ந்திருந்தார்கள். கரை வேட்டி அல்லது கரைத் துண்டு அல்லது இரண்டுமே என்று எல்லோரும் அணிந்திருந்தார்கள். ‘தன்னைத் தவிர’ என்று அவர் எண்ணினார். மனதுக்குள் சிறு நாணம் ஏற்பட்டது. Continue reading 1965 (சிறுகதை) | ஸிந்துஜா