மதம், மொழி, இனம் போன்ற பண்பாட்டு வெளிகள் சார்ந்து பல்வேறு செய்திகள் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. ஆனால் பிரத்தியேகமாக அந்த அந்தப் பண்பாட்டு வெளிகளில் இருந்து பேசும் படைப்பாளர்களின் குரல்கள்தான் அப்பொதுப் புத்தியின் போதாமைகளைக் கலைத்துப் போட்டு அந்த அந்த நுண் உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்ல வல்லவை. வாசகர்கள் மட்டுமல்ல, படைப்பாளிகளும் இப்பொதுப்புத்திக்குக் காரணம்தான் என்பதையும் இந்நேரத்தில் சொல்லத்தான் வேண்டும்.
Month: February 2022
ஹிஜாப்பும் காவித் துண்டும்

பள்ளிகளில் ஹிஜாப் – காவித் துண்டுப் பிரச்சினை இந்திய அளவில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. நேற்று உடுப்பியில் அரசு ப்ரி யுனிவர்சிட்டி கல்லூரியில், ஒரு மாணவி பர்கா அணிந்து பள்ளிக்கு வர, சுற்றி நின்ற ஹிந்து மாணவர்கள் காவித் துண்டுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கத்த, இந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே பள்ளிக்குள் சென்றுவிட்டார். Continue reading ஹிஜாப்பும் காவித் துண்டும்
சில பயணங்கள் சில பதிவுகள் – 44 | சுப்பு

பக்தராஜ் மகராஜ்
வருடத்திற்கு இரண்டு முறையாவது விசாகப்பட்டினத்திற்குப் போய் ரமணனைச் சந்திப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. ஒருமுறை புறப்படும் போது பக்தராஜ் மகராஜ் என்ற மகான் விசாகபட்டினத்திற்கு வரப்போவதாகவும், மூன்று நாட்கள் பிரபாத் குமார் வீட்டில் தங்கப் போகிறார் என்றும் செய்தி வந்தது. அவரோடு இருக்க வேண்டுமென்று ரமணன், அனு, இரண்டு குழந்தைகள் எல்லோரும் அந்த மூன்று நாட்களும் பிரபாத் குமார் வீட்டிலேயே தங்குவதாக முடிவெடுத்தார்கள். என்னையும் சேர்த்துக்கொண்டார்கள். பெங்களூரில் இருந்து ஆனந்த் வந்து சேர்ந்துகொண்டான். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 44 | சுப்பு