Posted on Leave a comment

வலம் மார்ச் 2020 முழுமையான இதழ்

வலம் மார்ச் 2020  இதழ் :

வலம் மார்ச் 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.







அராஜகத்துக்குப் பலியான வடகிழக்கு தில்லி | தேஜஸ்வினி

நாடாளுமன்ற பட்ஜெட் 2020 | ஜெயராமன் ரகுநாதன்

2020 டெல்லி மாநிலத் தேர்தல் முடிவுகள் – கட்சிகள் கற்க வேண்டியது என்ன? | லக்ஷ்மணப் பெருமாள்

சில பயணங்கள் – சில பதிவுகள் 28 | சுப்பு

சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்

அந்தமானிலிருந்து கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

மகாபாரதம் – கேள்விகளும் பதில்களும் | ஹரி கிருஷ்ணன்

விஞ்ஞானப் புதினங்களின் பார்வையில் (தற்போது நிகழ்காலமாகிவிட்ட) எதிர்காலம் |ராம்ஸ்ரீதர்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பாகம் 11 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

Posted on Leave a comment

ஹேமு என்கிற ஹேமசந்திர விக்ரமாதித்யா : வரலாற்றில் மறக்கப்பட்ட மாவீரர் | ஜடாயு

இந்திய வரலாற்றில் மாபெரும் திருப்பங்களை
ஏற்படுத்திய போர்கள் என்று சிலவற்றைச் சொன்னால், மூன்று பானிபட் போர்களும் அதில் கட்டாயம்
இடம்பெறும். இவற்றின் முடிவுகள் சிறிது மாறியிருந்தாலும் கூட இந்தியாவின் சரித்திரம்
திசைமாறியிருந்திருக்கும். இதில், இரண்டாம் பானிபட் போரில் வீழ்ந்த ஹேமு என்ற மகத்தான
வீர அரசர் முகலாயப் பேரரசர்கள் மற்றும் அவர்களது படாடோபமான வரலாறுகளுக்கிடையில் சிக்கி,
அந்தக் காலகட்டத்தின் ஏராளமான இந்துக்களின் துயரமும் வேதனையும் நிறைந்த வாழ்க்கையைப்
போலவே, சாதாரண அடிக்குறிப்பாக மட்டுமே எஞ்சிவிட்டார் என்பது சோகம்.
அது 1500களின் தொடக்கக் காலம்.
பாரதத்தின் வடக்கு மேற்கு, மத்தியப் பகுதிகள் பெருமளவு இஸ்லாமிய ஆட்சிக்குள் வந்து
விட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த தென்னிந்தியா, ராஜபுதனம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம்
ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்து ஆட்சியாளர்கள் நிலைபெற்றிருந்தனர். இஸ்லாமியர்களாக மாறிவிட்டிருந்த
மத்திய ஆசியாவின் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்கிடையே தொடர்ந்து கடுமையாகப் போரிட்டுக்
கொண்டுமிருந்தனர். மத்திய கால இந்தியாவின் பல பெரும்போர்கள் ஆப்கானிய – முகலாய மோதல்களே.
இச்சூழலில் தில்லியை நோக்கிப்
படையெடுத்து வந்த தைமூர்-செங்கிஸ்கான் கலப்பு வம்சாவளியைச் சேர்ந்த பாபர் முதலாம் பானிபட்
போரில் (1526) ஆஃப்கானியரான இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து முகலாய ஆட்சிக்கு அஸ்திவாரமிட்டார்.
பாபரின் மறைவுக்குப் பிறகு அவரது மகனான ஹுமாயூன் தொய்வடைந்திருந்த நேரத்தில், பீகாரில்
இப்ராஹிம் லோடியின் படைப் பிரிவின் தலைவனாக இருந்த ஷேர் கான் சூரி, தில்லியின் மீது
படையெடுத்து (1540) முகலாயப் படைகளைத் தோற்கடிக்க, பாபரின் மகன் ஹுமாயூன் ஈரானுக்குத்
தப்பியோடினார். சாதாரண ஆப்கானிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த படைத்தலைவனான ஷேர் கான்,
இவ்வெற்றிக்குப் பின்பு ஷேர் ஷா சூரி என்று தில்லியின் அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
இந்தச் சூழலில்தான் ஹேமுவின் வாழ்க்கை
வெளிச்சத்துக்கு வரத் தொடங்குகிறது.  அவரது
இளமைப் பருவம் குறித்து அதிக விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. தில்லியிலிருந்து 150
கிமீ தொலைவில் ஜெய்ப்பூருக்கு வடக்கே ராஜஸ்தானத்தில் அல்வர் (Alwar) நகரின்
Dhansar பகுதியில் வசித்து வந்த ஒரு ஏழ்மையான வணிகக் குடும்பத்தில் (பனியா) அவர் பிறந்திருக்கலாம்
என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் R.C.மஜூம்தார். ஹேம ராய், பஸந்த் ராய் அல்லது
ஹேம சந்திர பார்கவா என்பது அவரது மூலப் பெயராக இருக்கலாம் என்று K.K.பாரத்வாஜ் கருதுகிறார்.
சிறுவயதிலேயே அவரது குடும்பம் தில்லி நகர்ப் புறத்திற்கு இடம் பெயர்ந்தது. தனது இளமைப்
பருவத்தில் அவர் ஹிந்தி, சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி பாரசீக மொழிகளில் அடிப்படை தேர்ச்சி
உள்ளவராகவும், குதிரை ஏற்றம், மல்யுத்தம் ஆகிய கலைகளைப் பயின்றவராகவும் இருந்தார் என்று
கருதப் படுகிறது.

தில்லியின் புறநகர்ப் பகுதியான
ரேவாரி (Rewari) என்ற இடத்தில் சந்தையில் பலசரக்கு, காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யும்
வியாபாரியாக ஷேர் ஷாவின் படைத்தலைவர்களுக்கு அவர் அறிமுகமாகிறார். பீரங்கிகளுக்கு வேண்டிய
வேதி உப்பு (saltpetre) தயாரித்துத் தருபவராகவும் அவர் இருந்திருக்கலாம். 1545ல் ஷேர்
ஷாவின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் இஸ்லாம் ஷா அரசராகும் போது, ஹேமு அரசு நிர்வாகத்தின்
அபிமானத்தைப் பெற்று பிரதான சந்தைக் கண்காணிப்பாளர் என்ற பதவியை அடைந்து. முக்கியமான
ஒற்றராகவும் பணியாற்றுகிறார்.
இஸ்லாமிய அரசில் இந்துக்கள் ஜிஸியா
வரி போன்ற கொடும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும், பெண்களைக் கவர்ந்து செல்லுதல், அடிமைகளாக்கி
விற்றல், கட்டாய மதமாற்றங்கள், கோயில் அழிப்புகள் போன்ற கொடுமைகளுக்கும் தொடர்ந்து
உட்படுத்தப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அரசாட்சி இயங்குவதற்கு இந்துப் போர்க்குடிகள்,
வணிகர்கள் ஆகியோரின் ஆதரவும் தேவைப்பட்டது. மேலும் எப்போதும் உட்பகைகளாலும் சூழ்ச்சிகளாலும்
துரோகங்களாலும் நிறைந்திருந்த தில்லி இஸ்லாமிய அரசில், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும்
பரஸ்பரம் ஒற்றர்களாக வைத்திருப்பது போன்ற யுக்திகளும் புழக்கத்திலிருந்தன என்பதைக்
கவனிக்க வேண்டும்.
1553ல் இஸ்லாம் ஷாவின் மறைவிற்குப்
பின், அவரது 12 வயது மகனான பிரோஸ் ஷாவைக் கொன்றுவிட்டு, மாமன் அடில் ஷா சூரி தில்லியின்
அரசராகிறார். ஹேமுவின் அந்தஸ்து மேலும் உயர்ந்து அவர் பிரதம அமைச்சராகவும்
(Wazir), பிரதான கண்காணிப்பாளராகவும் ஆகிறார். அடில் ஷா சூரியின் அரசவையில் பணி நியமனங்கள்,
நீதி வழங்குதல் ஆகியவற்றுக்கான அதிகாரம் அனைத்தும் ஹேமுவிடம் இருந்தது என்று அபுல்
ஃபசல் தனது ‘அக்பர் நாமா’வில் குறிப்பிடுகிறார்.
அடில் ஷா சூரியின் அனைத்துப் போர்
வெற்றிகளுக்குப் பின்னும் ஹேமுவின் கூர்மையான யுத்த மேதைமையும் வீரமும் இருந்தது. மன்னருக்கு
எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஆஃப்கானிய கிளர்ச்சியாளர்கள் உட்பட பல்வேறு  எதிரிகளைத் தோற்கடித்து 22 போர்களில் அடில் ஷாவுக்கு
வெற்றியைத் தேடித்தந்தார் ஹேமு. அப்படியும் ஷேர் ஷா சூரியின் பேரரசு நான்கு துண்டுகளாக
உடைந்து, ஆக்ரா-பீகார் பகுதிகளின் அதிகாரம் மட்டுமே அடில் ஷாவிடம் நீடிக்கிறது. வங்கத்தில்
முகமது ஷா சூரி தன்னை சுயமாக மன்னராக பிரகடனம் செய்து கொள்ள அங்கு பெரும்படையுடன் சென்று
அவரை ஹேமு முறியடிக்கிறார். வங்கத்தில் படைகளுடன் தங்கி அந்த மாகாணத்தில் நிர்வாக அமைப்பைச்
சீரமைத்து வருகிறார்.
இச்சூழலில் தில்லியில் ராணுவ பலம்
தளர்ந்த போது, ஈரானில் ஒளிந்திருந்த ஹுமாயூன் தனது படைத்தலைவர் பைராம் கான் தலைமையில்
படையெடுத்து வந்து 1555ல் அங்கு ஆண்டு வந்த சிகந்தர் ஷா சூரியைத் தோற்கடித்து தில்லியைக்
கைப்பற்றினார். 1556ல் ஹுமாயுன் இறந்தார். அவரது மகனான அக்பர் அப்போது 13 வயது சிறுவன்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தில்லியை நோக்கி தனது படைகளைத் திருப்பிய ஹேமுவை
தார்டி பெக் கான் தலைமையிலான முகலாயப் படைகள் துக்ளகாபாத் என்ற இடத்தில் சந்திக்கின்றன.
புகழ்பெற்ற துக்ளகாபாத் போரில்
(1556) முகலாயப் படைகளுடன் ஒப்பிடுகையில் ஹேமுவின் படை பெரும் வலிமை கொண்டிருந்தது.
அவரது படையில் இந்து வீரர்களும் ஆப்கானியர்களும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர்.
1000 யானைகள், 50,000 குதிரைகள், 51 கனரக பீரங்கிகள், 500 falconets எனப்படும் மென்ரக
பீரங்களிகள் கொண்ட மாபெரும் படை ஹேமு என்ற ஹேமசந்திராவின் தலைமையில் அணிவகுத்து வந்தது
என்று இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பதாயுனி பதிவு செய்கிறார். பீதியுடன் போரிட்ட முகலாயப்
படைகளை வென்று தில்லியை ஹேமு கைப்பற்றுகிறார்.
தனது சுயமான வீரத்தாலும் தலைமைப்
பண்பாலும் தில்லியை வென்றடுத்த ஹேமு, தன்னை சுதந்திரமான மன்னராகப் பிரகடனம் செய்து
கொண்டார். புரானா கிலா எனப்படும் தில்லியின் கோட்டையில் பறந்து கொண்டிருந்த இஸ்லாமியக்
கொடியை இறக்கி இந்துக்களின் காவிக் கொடியைப் பறக்க விட்டார். 1556 அக்டோபர் 7 அன்று
பாரம்பரிய இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க, அந்தணர்கள் ஆசிகூற, புனித தீர்த்தங்களின்
நீர்த்திவலைகள் தெறிக்க, வெண்கொற்றக் குடை மேல்விரிய, தில்லியில் அவரது ராஜ்யாபிஷேகம்
விமரிசையாக நடைபெற்றது என்று வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்கார் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
ஆப்கானிய சர்தார்களும், இந்து சேனாபதிகளும் அருகருகே நின்று தங்கள் மாமன்னராக அவரைப்
பிரகடனம் செய்து வாழ்த்தினர். பிருத்விராஜனுக்குப் பிறகு 350ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு
இந்து மன்னர் தில்லியின் அரியணையில் ஏறிய மகத்தான தருணம் அது. அதற்கு ஏற்ற வகையில்
‘சம்ராட் ஹேமசந்திர விக்ரமாதித்யா’ என்ற பட்டப் பெயரையும் அவர் ஏற்றார். அப்பெயரில்
நாணயங்களையும் உடனடியாக ஆணை பிறப்பித்து வெளியிட்டார். மிகச்சிறந்த நிர்வாக அனுபவம்
கொண்டிருந்த ஹேமு, சீரழிந்திருந்த நிர்வாக அமைப்புகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளில்
இறங்கினார். ஆப்கானிய சர்தார்களுக்கும் இந்து படைத்தலைவர்களுக்கும் பாரபட்சமின்றி வெகுமதிகளை
வழங்கினார்.
துக்ளகாபாத் போரின் தோல்வியினால்
பெரிதும் மனம் தளர்ந்திருந்த முகலாயப் படைத்தலைவரும் அக்பரின் பாதுகாவலருமான பைராம்
கான், ஹேமுவின் இந்த வெற்றியைக் கண்டு மேலும் பீதியடைந்தார். உடனடியாக, எஞ்சியிருந்த
முகலாயப் படைகள் திரண்டு 1556 நவம்பர் 5ம் நாள் பானிபட்டில் ஹேமுவின் பெரும் படைகளை
எதிர்கொண்டன. மீண்டும் முகலாயர்களின் தோல்விக்கான சாத்தியங்களே அதிகம் என்ற நிலை இருந்த
இப்போரில் எச்சரிக்கையுடன் அக்பரும் பைராம் கானும் போர்க்களத்திலிருந்து 8 மைல் தூரத்திலுள்ள
தளவாடத்திலேயே தங்கி விட்டனர். அலி குலி கான் ஷைபானி உள்ளிட்ட நான்கு படைத்தலைவர்கள்
முகலாயப் படைகளை நடத்திச் சென்றனர். எதிர்த்தரப்பில், ஹவாய் என்ற புகழ்பெற்ற யானை மீதேறி
ஹேமசந்திரா தானே தனது படைகளை நடத்தினார். இடப்புறம் அவரது சகோதரி மகன் ரமையா, வலப்புறம்
ஷாதி கான் கக்கார் ஆகியோர் படைத்தலைவர்களாக வந்தனர். போர் தொடக்கத்திலிருந்தே ஹேமுவின்
படைகளுக்கே வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தது. முகலாயப் படைகளையும் இரு பக்கப் பிரிவுகளையும்
சேதமடையச் செய்து மையத்தை நொறுக்குவதற்காக ஹேமுவின் படை முன்னேறிக் கொண்டிருந்தது.
வெற்றி மயிரிழையில் இருக்கும்
தருணத்தில் முகலாயர் படையிலிருந்து பறந்து வந்த அம்பு ஹேமுவில் இடது கண்ணில் தைத்து
விட, அவர் உடனே நினைவிழந்தார். இது ஹேமுவின் படைகளிடையே உடனடியாகப் பெரும் கலக்கத்தையும்
நிலைகுலைவையும் உண்டாக்கியது. படைகளின் வியூகம் குலைந்தது. ஹேமுவின் படைவீரர்கள் போரிடுவதை
விட்டு தப்பியோடத் தொடங்கினர். முகலாயப் படை இதைப் பயன்படுத்தி முன்னேறி பெரும் அழிவை
நிகழ்த்தியது. ஹேமுவின் படைவீரர்கள் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். தோல்வியே கண்டறியாத
வீரர் என்று புகழ்பெற்றிருந்த ஹேமு தனது வாழ்வில் முதலும் கடைசியுமாகத் தோற்றார்.  
காயம் பட்டு நினைவிழ்ந்திருந்த
ஹேமுவைத் தாங்கிச் சென்ற யானையை முகலாயப் படை சிறைப்பிடித்து அக்பரும் பைராம் கானும்
தங்கியிருந்த கூடாரத்துக்கு எடுத்துச் சென்றது. இறந்து கொண்டிருந்த ஹேமுவின் தலையை
வாளால் வெட்டிக் கொன்று காஜி (காஃபிர்களைக் கொன்றவன்) என்ற புகழ்மிக்க பட்டத்தை அடையுமாறு
பைராம் கான் ஆணையிட, 13 வயதான அக்பர் அதை அப்படியே ஏற்று நிறைவேற்றினார். ஹேமுவின்
கொய்யப் பட்ட தலை வெற்றிச்சின்னமாக காபூலுக்கு அனுப்பப்பட்டது. அவரது சிதைந்த உடல்
தில்லிக் கோட்டையின் ஒரு வாயிலில் தொங்கவிடப்பட்டது. இப்போரில் கொல்லப்பட்ட காஃபிர்களின்
தலைகளைக் கொய்து அதனை மீனார் (ஊசிக் கோபுரம்) ஆகக் கட்டினார் அக்பர். இந்த செய்திகள்
அனைத்தையும் அபுல் ஃபசல் தனது அக்பர் நாமாவில் பதிவு செய்கிறார். அக்பர் தலைகளை வைத்துக்
கோபுரம் கட்டும் முகலாய பாணி ஓவியமும் நூலின் பிரதிகளில் வரையப்பட்டுள்ளது.
 
இத்தகைய கொடூரம் வாய்ந்த அக்பரைத்தான் நேருவிய-மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் பொய்களை அள்ளி வீசி அமைதியை விரும்பிய பேரரசர்
என்பது போல சித்தரித்துள்ளனர்.
ராஜஸ்தானில் அல்வர் நகருக்கருகில்
Machari என்ற கிராமத்தில் வாழ்ந்த ஹேமுவின் குடும்பத்தினரையும் முகலாயப் படைகள் வேட்டையாடினர்.
80 வயதான ஹேமுவின் தந்தை இஸ்லாமுக்கு மதம் மாறும்படி கட்டாயப் படுத்தப்பட்டார். அதை
மறுக்கவே, உடனடியாகக் கொல்லப்பட்டார். ஹேமுவின் மனைவி, குழந்தைகள் எங்கோ தப்பித்து
ஓடிப் பிழைத்ததாகக் கருதப்படுகிறது.
ஹேமுவின் மறைவிற்குப் பின் அடில்
ஷா சூரியும் அதிக நாள் வாழவில்லை. 1557ல் வங்கத்தில் ஹேமுவால் முறியடிக்கப் பட்ட முகமது
ஷா சூரியின் மகன் கிஸ்ர் கானால் கொல்லப்பட்டார்.
இவ்வாறாக ஹேமுவின் சகாப்தம் முடிவுக்கு
வந்தது. ஒளிவீசும் சூரியன் போல எழுந்து வந்த மாவீரன் மின்னல் போல மறைந்து விட்டான்.
இதற்குப் பிறகு 1709ல் அவுரங்கசீப் இறந்த பின்பு, 1737ல் தான் பேஷ்வாவின் மராட்டியப்
படைகளின் வெற்றி முழக்கத்துடன் இந்து அரசதிகாரம் தில்லியில் மீண்டும் தலையெடுக்க முடிந்தது. 
மிக எளிய பின்னணியிலிருந்து எழுந்து
வந்து மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய ஹேமுவின் வீரமும் பண்புகளும் அவரது எதிரிகளாலும்
கூடப் புகழப்பட்டன. பதாயுனி (The Muntakhabu-
rūkh),
அபுல் ஃபசல் (அக்பர் நாமா), நிஜாமுதீன் அகமது (Tabaqat-i-Akbari), அஹ்மத் யாத்கார்
(T
ārikh-i-Salātin-i-Afghāniyah), அப்துல்லா (Táríkh-i Dáúdí) ஆகிய இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின்
பதிவுகளில் ஹேமுவைப் பற்றிய குறிப்புகள் வெறுப்பும், அசூயையும் அதே சமயம் பொறாமையும்
வன்மமும் கலந்த மதிப்புடனும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நவீன காலகட்டத்திய வரலாற்றாசிரியர்களான
V.A.ஸ்மித், Sri Wolsey Haig, ஜதுநாத் சர்கார், R.C.மஜும்தார் ஆகியோர் ஹேமுவின் எழுச்சியையும்
வீழ்ச்சியையும் உள்ளவாறே பதிவு செய்துள்ளனர்.
ஒரு மாதம் கூட தில்லியின் அரியணையில்
அமர்ந்து அரசு செய்யாவிட்டாலும் கூட, ஹேமசந்திர விக்ரமாதித்யனின் புகழ்மிக்க வாழ்வு
இந்துக்களின் நெஞ்சில் நீங்காது நிலைபெற்று விட்டது. அச்சு ஓவியங்கள் வரத் தொடங்கியபோது
1910களில் அவரது ராஜதர்பார் ஓவியமாக வரையப்பட்டு வீடுகளில் வைக்கப்பட்டது.
  
தற்போது, ஹரியானாவில் பானிபட்டில்
உள்ள அருங்காட்சியகத்தின் வாயிலை ஹேமசந்திரரின் சிலை அலங்கரிக்கிறது.
அருங்காட்சியகத்தின் உள்ளே அக்பர்
கட்டிய ‘தலை கோபுரம்
ஓவியமும் உள்ளது.
வரலாற்றின் கசப்புணர்வுகளை ஒரு
நவீன சமுதாயம் கற்று, மறந்து முன்செல்லலாம். ஆனால் வரலாறு அளிக்கும் முக்கியமான பாடங்களையும்,
மகத்தான உத்வேகங்களையும் நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.
வீரரை வீரர்கள் போற்றுவர். ஹேமுவின்
புனித நினைவை நாம் போற்றுவோம்.  
Posted on Leave a comment

அராஜகத்துக்குப் பலியான வடகிழக்கு தில்லி | தேஜஸ்வினி



வடகிழக்கு
தில்லி கலவரங்களில் 42 பேர் பலியாகியுள்ளனர். வழக்கம்போல்,
இந்து அமைப்புகளே இதற்கு முழுமுதற் காரணம்
என்று ஊடகங்கள் வர்ணிக்கத் தொடங்கி, பழிபோடுவதில் உச்சத்தைத் தொட்டுள்ளனர்.
கலவரக்
கதை, பா...
உறுப்பினர் கபில் மிஸ்ராவில் இருந்தே
தொடங்கப்படுகிறது. ‘அமெரிக்க அதிபர் கிளம்பும்வரைதான் காத்திருப்பேன்,
நீங்களாகக் கலைந்து போகாவிட்டால், நாங்கள் கூட்டத்தைக் கலைத்துவிடுவோம்என்று அவர் ஷாகீன்பாக்
போராட்டக்காரர்களைப் பார்த்துத் தெரிவித்ததே, வடகிழக்கு தில்லி பகுதியான ஜாஃப்ராபாத்தில்
கலவரம் தொடங்கக் காரணம் என்ற வர்ணனை
சுவாரசியமாக முன்வைக்கப்படுகிறது.
இது நடப்பது பிப்ரவரி 23 ஆம் தேதி.
ஆனால்,
அதற்கு முன்பே, ஜாஃப்ராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில்
நிலையத்துக்கு அருகில் இஸ்லாமியப் பெண்கள் திரளத் தொடங்கிவிட்டார்கள். 22ஆம் தேதி,
இஸ்லாமியர்கள் நிறைந்த சாந்த்பாக் பகுதியில் இருந்து ராஜ்காட்டுக்கு பேரணி செல்ல அனுமதி
கோரப்பட்டது. போலீஸ் அனுமதி தர
மறுத்துவிட்டது. ஆனால், இஸ்லாமிய பெண்கள்
திரண்டு, நடக்கத் தொடங்குகிறார்கள். ராஜ்காட்டுக்குத்தான் போகிறார்கள் என்று நினைத்த போலீஸுக்கு
ஏமாற்றமே ஏற்பட்டது. அவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தின்
அருகே உட்கார்ந்துவிட்டார்கள். இது ஒரு பிரதான
சாலை. சீலம்பூர், மெளஜ்பூர் முதல் யமுனா விஹார்
வரை இணைக்கக்கூடிய சாலை 66 என்று இதற்குப் பெயர்.
இங்கே, சாலையை மறித்து உட்கார்ந்ததில்,
போக்குவரத்து பாதிப்பு தொடங்கியது. அன்று இரவு வரை
யாரும் இதை இடைஞ்சல் என்பதற்கு
மேல் பெரிய விஷயமாகக் கருதவில்லை.
ஆனால்,
23ஆம் தேதி இரவில் இருந்து
இதே பகுதியில் இரண்டு விஷயங்கள் நடைபெறத்
தொடங்கின. முதலில், ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தின்
அருகே அமர்ந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. இரண்டு,
கபில் மிஸ்ராவின் பேச்சு வீடியோ இந்தப்
பகுதியில் அதிகம் வலம்வரத் தொடங்கியது.
மேலும், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு,
கர்நாடகத்தில் வாரிஸ் பதான் பேசிய
மற்றொரு வீடியோவும் இவர்களிடையே புழங்கத் தொடங்கியது.
கபில்
மிஸ்ரா வீடியோ பேச்சு வலம்
வரத் தொடங்கியவுடன், மெளஜ்பூர் பகுதியில் சின்னச் சின்னதாக மோதல்கள் எழுந்தன. பிப்ரவரி 23 மாலை 5 மணிக்குத் தொடங்கிய
மோதல்கள், 24 காலை முழுவீச்சை எட்டியது.
வடகிழக்கு தில்லி முழுவதும் கலவர
பூமியானது.
இந்தக்
கட்டுரை எழுதும்போது, கலவரம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு
மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அமைதி திரும்பியுள்ளது. வடகிழக்கு
தில்லியின் பல பகுதிகளில், கடைகள்
திறக்கப்பட்டுள்ளன.
ஆனால்,
கலவரம் நடந்த மூன்று நாட்கள்
மற்றும் அதற்குப் பிறகான ஊடக வர்ணனைகளில்,
பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதை எடுத்துச் சொல்ல
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. ஊடகங்களிலும்
சமூக வலைத்தளங்களிலும் வளைய வரும் வீடியோக்கள்
பெரும்பாலும் இந்து தரப்பில் இருந்தே
எடுக்கப்பட்டவை. அதாவது, போலீஸும் ஊடகக் காரர்களும் இந்து
தரப்பு மக்கள் மத்தியில் சுலபமாக
இறங்கிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடிந்தது. ஆனால், இஸ்லாமியர் ஏராளமாக
வாழும் பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் எதுவும் அவ்வளவு விரைவாகப் பொதுமக்கள் பார்வைக்கு வரவே இல்லை. அவையெல்லாம்
கடந்த ஒன்றிரண்டு நாட்களாகத் தான் லேசாகத் தெரியத்
தொடங்கியுள்ளன. ஒரு குறிப்பிட்ட வீடியோவில்,
இஸ்லாமியப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 500 தாள் கொடுக்கப்படுவது தெரிகிறது.
இன்னொரு வீடியோவில், குறிப்பிட்ட நபர் ஒருவர் இஸ்லாமிய
கூட்டத்தினரால் அடித்துக்கப்படுவது தெரிகிறது. கலவரம் தொடங்கிய பிறகு,
இஸ்லாமியத் தரப்பினர் வாழும் பகுதிகளில், போலீஸாரால்
கூடப் போகமுடியவில்லை. என்ன நடக்கிறது என்பதைப்
புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.
2. ஜாஃப்ராபாத்தில்
இஸ்லாமிய பெண்களின் திரட்டலுக்கு யார் காரணம்? மூன்று
முக்கியமான அமைப்புகள் இதன் பின்னே செயற்பட்டுள்ளன.
இவர்கள் தான் ஷாகீன்பாக் போராட்டத்துக்கும்
பின்னணியில் இருந்து வேலை செய்தவர்கள்.
3. முதலாவது
வருவது, இடதுசாரி பெண்கள் அமைப்பானபிஞ்ரா தோட்’ (PinjraTod). இவர்கள்
தான் ஜாஃப்ராபாத்தில் இஸ்லாமியப் பெண்களை கூட்டிக்கொண்டு வந்தவர்கள். இடதுசாரி தீவிரவாத அமைப்பான பிஞ்ரா தோட், கமுக்கமாக
வேலை செய்பவர்கள். இந்தியாவெங்கும் இதுபோன்ற மா.லெ. இயக்கத்தினர்
இப்படிப்பட்ட குயுக்தியோடு செயல்படுபவர்கள்.

தமிழகத்தில்,
எஸ்.வி.சேகர் வீட்டின்
முன்பு, அவரது பேச்சுக்கு எதிர்ப்புத்
தெரிவித்து ஒரு கூட்டம் கோஷம்
போடச் சென்றது. பல பெண் பத்திரிகையாளர்களும்
இடம்பெற்றிருந்தார்கள். அவர்களிடையே புகுந்திருந்த மா.லெ. கும்பல்,
சட்டென வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது. எஸ்.வி.சேகர்
வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல்
தொடங்கியது. உண்மையில் பல பத்திரிகையாளப் பெண்களுக்கும்
இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. வழக்கு போடப்பட்டபோது,
அப்பாவிப் பெண்கள் இதனால் பாதிப்படைந்தனர்.
அதேபோல்தான்
வடகிழக்கு தில்லியிலும் நடந்துள்ளது. இஸ்லாமியப் பெண்களைத் தெருவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தபிஞ்ரா தோட்டின் உண்மை முகத்தை
முதன்முதலில் ஒரு டிவீட் தான்
போட்டு உடைத்தது. ஓவியாஸ் சுல்தான் கான் என்பவர் எழுதியுள்ள
டிவீட்டைப் படியுங்கள்:

மேட்டுக்குடி
சிவில் சமூகங்கள் மற்றும் பிஞ்ரா தோட் போன்ற
குழுக்களின் கற்பனைகளுக்காக, சீலம்பூர் மற்றும் டிரான்ஸ் யமுனா பகுதி மக்களாகிய
நாங்கள்தான் பெரும் சிரமத்தில் தள்ளப்பட்டு
இருக்கிறோம். இந்தப் பகுதியினர் அனைவரும்
கவலைப்படுகின்றனர். எங்கும் பேரச்சம் நிலவுகிறது. அவர்கள் எல்லா இடங்களிலும் வன்முறையைக்
கட்டவிழுத்துவிடுகின்றனர்.
இன்று, ஜாஃப்ராபாத் பிரதான சாலையை மறித்துவிட்டார்கள்.
 1992, 2006 கலவரங்களின்
பாதிப்புகளும் சமீபத்தில் மத்திய அரசு நிகழ்த்திய
வன்முறையின் சுவடுகளும் இன்னும் எங்கள் பகுதியினரிடையே உண்டு.
அப்போதெல்லாம் இவர்கள் யாரும் எங்களுக்கு பக்கபலமாக
நிற்கவில்லை.
 மிக மோசமான பொறுப்பற்ற நடத்தை
இது.
 ஒரு சில உள்ளூர்ப் பெண்கள்,
சாலை மறியல் செய்ய மறுத்தபோது,
பிஞ்ரா தோட் தலைவர்கள் சொன்னார்கள்:
 “நாங்கள்
போர்க்கோலம் பூண்டுவந்துள்ளோம், எங்களோடு இல்லாதவர்கள் அனைவரும் இந்த நாட்டுக்குத் துரோகம்
செய்தவர்கள்.”
 தில்லிகேட்
தர்யாகஞ்ச் பகுதியில் இதே பிஞ்ராதோட்,
போலீஸாரோடு மோதியது, ஆனால் யாருமே கைதாகவில்லை.
அவர்கள் ஓடிவிட்டார்கள். உள்ளூர் மக்கள் தான் கைதாகி,
வழக்கைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 அவர்களுடைய
சாகசங்களுக்காக நாங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறோம்.
 எங்கள்
பகுதியில், அமைதி திரும்ப கடுமையான
உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
எந்தவிதமான வன்முறையையும் அனுமதிக்க முடியாது.
 இதே வேலையை பிஞ்ரா தோட் அமைப்பினர் முன்பே டிரான்ஸ் யமுனா
போராட்ட தலத்திலும் பலமுறை செய்ய முயன்றனர்.
நாங்கள் அவர்களை அப்போது தடுத்தோம். எங்கள் போராட்டம் அமைதி
வழியிலேயே நடைபெறும் நாங்கள் தெளிவாக அவர்களுக்குச் சொன்னோம்.
 எங்களுக்காகப்
பிரார்த்தியுங்கள். வெளியார்கள் வந்து எங்கள் பகுதிகளில்
இதுபோன்ற வீரதீர சாகசங்கள் செய்வதைத்
தடுக்க எங்களுக்கு உதவுங்கள்.
 கோரிக்கையை
வைப்பவர்கள்:
 சீலம்பூர்,
ஜாஃப்ராபாத், டிரான்ஸ் யமுனாவின் பொறுப்பான குடிமக்கள்

இதனை ஏற்றுக்கொள்வது போல் இன்னொரு டிவீட்
போட்டவர், காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டின் செய்தி
ஆசிரியர் அஷ்லின் மேத்யூ. அவர், “பிஞ்ரா தோட் பெண்கள், சாலை மறியல் செய்ய
ஜாஃப்ராபாத் பெண்களைத் தள்ளிக்கொண்டு போவதாக ஞாயிறுமுதல் அறிந்துவருகிறேன்.
இது கூட்டுமுடிவு என்று ஜாஃப்ராபாத் பெண்கள்
தெரிவித்தனர். டிசம்பர் மாதம் தர்யாகஞ்சில் வன்முறை
ஏற்பட்டபோது, பிஞ்ரா தோட் குழு
அங்கே இருந்தது,” என்று ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்துள்ளார்.
4. இந்தக்
கலவரத்துக்குப் பின்னே இருந்த இன்னொரு
நபர், ஷர்ஜில் இமாம். தில்லி ஷாகீன்பாக்
போராட்டத்தைத் தூண்டிவிட்டவரே இவர் தான். இவர்
ஆரம்பித்த தீயில் குளிர் காய்ந்தவர்கள்
தான் ஆம் ஆத்மியும் காங்கிரஸ்
கட்சியும். மதம் சார்ந்த போராட்டமாக
வெடித்த ஷாகீன்பாக்கை, செக்கியூலராக மாற்றிய புண்ணியவான்கள் தான் ஆம் ஆத்மியும்
காங்கிரஸும்.

 (ஷர்ஜில்
இமாம்)
ஷர்ஜில்
இமாம், ஜே.என்.யு.
மாணவர். இவரது பேச்சுகள் அனைத்தும்
பிரிவினை வாத விஷம் தோய்ந்தவை.
ஷாகீன்பாக் போராட்டத்தில், இவர் தெரிவித்த இரண்டு
கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
இந்திய
முஸ்லிம்கள் திரண்டு எழுந்து, அஸாமையும் வடகிழக்குப் பகுதியையே துண்டித்துவிட வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு புத்திபுகட்ட முடியும் என்று பேசினார். இன்னொன்று,
சாலையை மறிப்பது ஒன்று தேசத் துரோகம்
அல்ல என்பது.
ஷர்ஜில்
இமாம் ஒரு முகம் தான்.
இவருக்குப் பின்னே இருக்கும் இயக்கங்கள்
தான் நம்மை அச்சமடைய வைப்பவை.
இரண்டு அமைப்புகள் இவருக்குப் பின்னே உள்ளன என்கிறது
உளவுத் துறை.
ஒன்று,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா. கர்நாடக
ஃபோரம் ஃபார் டிக்னிட்டி, கேரளத்தின்
நேஷனல் டெவலப்மெண்ட் பிரண்ட், தமிழகத்தின் மனித நீதி பாசறை,
செளத் இந்தியா கெளன்சில் ஆகியவற்றின் கூட்டு அமைப்புதான் பாப்புலர்
ஃப்ரண்ட் ஆப் இந்தியா. இந்த
அமைப்புதான் நாடெங்கும் நடைபெறும் பல்வேறு சி...வுக்கு எதிரான போராட்டங்களுக்கு
நிதியுதவி அளித்துவருவதாகத் தெரிகிறது. இதுவரை இந்த அமைப்பினர்
ரூ.120 கோடி ரூபாய் வரை
செலவிட்டிருப்பதாக, மத்திய அமலாக்கத் துறை
கண்டுபிடித்துள்ளது. இந்தப் பணம், சி...வுக்கு
எதிரான போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் வங்கிகளில்
இருந்து எடுக்கப்பட்டதாகத் தகவல்.
தமிழ்நாடு
உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வரும் அமைப்பு, பி.எஃப்.. தேசிய
புலானாய்வு முகமை தொடர்ந்து பல
மாநிலங்களில் மேற்கொண்டுவரும் ரெய்டு மற்றும் கைதுகளில்,
பி.எஃப்.. உறுப்பினர்களே
சிக்கிவருகின்றனர்.
இரண்டாவது
அமைப்பு, இஸ்லாமிக் யூத் பெடரேஷன் (.ஒய்.எப்.). இது
இன்னும் மோசமான அமைப்பு. இவர்களுடைய
நோக்கமே அல்லாவின் ஆட்சியை இந்தியாவில் நிலைநிறுத்துவதுதான். அதற்காகப் பல விதங்களில் பிரசாரங்களில்
ஈடுபட்டு வருகிறது.
இவர்களின்
முகமாகச் செயல்பட்டு வரும் ஷர்ஜில் இமாம்
பேச்சுகள், அனைத்து இடங்களிலும் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது.
5. வடகிழக்கு
தில்லி கலவரத்தின் இன்னொரு முக்கிய புள்ளி, காவல் துறை. சி...வுக்கு
எதிரான போராட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, மன ரீதியாகக் காயப்பட்டது
போலீஸ்தான். எதைச் செய்தாலும் தப்பு,
செய்யவில்லை என்றாலும் தப்பு என்று நீதிமன்றங்களும்,
ஊடகங்களும் அவர்களைக் காயடித்து வந்தார்கள்.
ஜாஃப்ராபாத்
கலவரத்தை முதலில் இவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. என்ன நடவடிக்கை எடுக்க
வேண்டும், தடியடி நடத்தலாமா, கைது
செய்யலாமா என்றெல்லாம் குழப்பம் நிலவியதாக போலீஸ் துறையினரே தெரிவிக்கின்றனர்.
சரியான
உத்தரவுகளை மேலதிகாரிகள் அளிக்கவில்லை என்பதோடு, அவர்களுடையமொரேல்என்று சொல்லப்படும் மன
உறுதியும் குலைந்துபோய்விட்டது. தொடர்ச்சியாக அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களே
இதற்குக் காரணம். துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டியது தான், நிலைமை கட்டுக்கடங்காமல்
போனதற்குக் காரணம்.
6. இந்தக்
கலவரங்களின் நோக்கம் என்ன? ஒன்றே ஒன்றுதான்.
அமெரிக்க அதிபர் இந்தியா வரும்போதும்
அவர் இங்கே இருக்கும்போதும், கலவரத்தைத்
தூண்டி விட்டுவிட்டால், இரண்டு பலன்கள் கிடைக்கும்.
ஒன்று அதிபர் ஏதேனும் ஒரு
கருத்து முத்தை உதிர்ப்பார். இரண்டு,
சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவரலாம்.
பின்னர்
இவை இரண்டையும் பிடித்துக்கொண்டு சிலம்பம் ஆடலாம் என்று காத்திருந்தார்கள்.
சென்ற முறை, அமெரிக்க அதிபரான
ஒபாமா வந்துவிட்டுச் சென்றபோது, இந்தியாவின் மத சுதந்திரத்தைப் பற்றி,
ஒரு நெருக்கடியான கருத்தை உதிர்த்தார். அது சர்வதேச சமூகங்களிடமும்,
ஊடகங்களிலும் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது.
அதேபோன்ற
ஒரு வார்த்தை முத்தைத் தான் எதிர்பார்த்தார்கள் சி... எதிர்ப்பு
கலவரக்காரர்கள். அதற்குக் கொடுக்கப்பட்ட விலை தான் இந்த
42 உயிர்கள். நல்லவேளையாக அந்த ஓட்டைவாய் அதிபர்
இங்கே மட்டும் கொஞ்சம் நாக்கை அடக்கிக்கொண்டுவிட்டார். உள்நாட்டு விவகாரம்
என்றதோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.
7. ஷாகீன்பாக்கை
பயன்படுத்தி, ஆம் ஆத்மி கட்சி
முழு மெஜாரிட்டியோடு ஜெயித்துவிட்டது. இப்போது அரவிந்த் கேஜரிவால் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். போலீஸ்துறை, மத்திய அரசின் கையில்
இருப்பதால், தன் கையில் கறையில்லை
என்ற எண்ணம் அவருக்கு.
8. ஊடகங்கள்
தான் இதில் புகுந்து விளையாடின.
உண்மை நிலவரங்களைச் சொல்வதைவிட, வழக்கம்போல், ஒரு பக்கச் சாய்வைக்
காண்பித்து, அனைவர் பதற்றத்துக்கும் காரணமானது,
என்.டி.டி.வி.
சி.என்.என்., நியூஸ்
18 போன்றவை கொஞ்சம் சமச்சீராக செய்திகள் வெளியிட்டன. வலைத்தளங்களில், ஒயர், ஸ்கிரால், குவின்ட்
ஆகியவை எதிர்ப்பிரசாரத்தை முன்னெடுக்க, பிரின்ட் மட்டும் கொஞ்சம் சமநிலையோடு நடந்துகொண்டது. ஊடகங்கள், Genocide, Pogrom போன்ற சொற்களை வெகு
இயல்பாகப் பயன்படுத்தியதுதான் எரிச்சல் தந்தது. இனப்படுகொலை என்றே தில்லி கலவரத்தைச்
சித்திரிக்க, இவர்களுக்கு எங்கிருந்து மனம் வந்ததோ தெரியவில்லை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் மட்டும் இச்சொற்களைப்
பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு
விதிக்கப்பட்டிருப்பதாகத்
தகவல். 
9. இதில்
முக்கியமான புள்ளி என்னவென்றால், உண்மையில்
இஸ்லாமியச் சமுதாயத்துக்குள் என்ன நடக்கிறது என்றே
தெரியவில்லை என்பதுதான். ஆங்கில பத்திரிகைகள் எழுதுகிறவர்கள்,
டி.வி.யில் பேசுகிறவர்கள்
எல்லோரும் ஒரு பொதுவான விவரிப்பையே
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பவர்கள். உண்மையில்
இஸ்லாமியச் சமுதாயத்துக்குள் ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்க
வேண்டும் இல்லையா? இங்கே தமிழகத்தில் தலித்
பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் தலித் அல்லாதவர்கள் பேசுவார்கள்.
உடனே, அவர்களை முளையிலேயே கிள்ளியெறியும் போக்கு வெளிப்படும். தங்கள்
வலியைத் தாங்கள் தான் பேச வேண்டும்
என்பார்கள். அதேபோல், சி...,
என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பற்றியெல்லாம்
அவர்களுக்குள் என்ன விவாதம் நடைபெறுகிறது
என்றே தெரியவில்லை. உருது ஊடகங்களில் ஏதேனும்
நடைபெறுகிறதா என்பதை விவரம் அறிந்தவர்கள்
தான் சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த தில்லி கலவரத்திலேயே
இதர வெளியார்கள், தங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற எண்ணம் ஒருசில
இடங்களில் வெளிப்பட்டது கண்கூடு. உதாரணமாக, இந்தக் கட்டுரையிலேயே மேலே
குறிப்பிட்டஓவியாஸ் சுல்தான் கான்என்பவர் எழுதியுள்ள
டிவீட் கவனிக்கத்தக்கது.
10. மத்திய
உளவுத்துறையின் மிகப்பெரிய சறுக்கல் தில்லி கலவரங்கள். இப்படிப்பட்ட
ஒரு சம்பவம் திட்டமிடப்படுகிறது என்பதை அவர்களால்  ஏன் முன் கூட்டியே
கணிக்க முடியவில்லை என்பதற்கு பதில் இல்லை.
11. மத்திய
அரசின் ஒரு முக்கிய பிரச்சினை,
அவர்களால் இஸ்லாமியர் மத்தியில் உரையாடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்க
முடியவில்லை என்பதுதான். பா...வும் இஸ்லாமிய அமைப்புகளும்
ஏதேனும் ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டால்,
எல்லா குழப்பங்களும் தெளிவாகிவிடும். இது ஏற்படாமல் தடுப்பதில்
தான் பல்வேறு சந்தர்ப்பவாத அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.
அதையும் விரைவில் முறியடிக்க மத்திய பா... முயற்சி செய்யவேண்டும்.
12. வடகிழக்கு
தில்லி கலவரம் என்பது நீங்காத
ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டது. வலியை
ஏற்படுத்திவிட்டது. காவல்துறை, பொதுமக்கள் என்று பலருக்கும் ஏற்பட்டுள்ள
இழப்புகளை ஈடுசெய்யவே முடியாது. இத்தகைய ஓர் அமைதியின்மையையும் அதிகாரக்
குலைவையும்  தான்
கலவரக்காரர்கள் விரும்புகிறார்கள். ஆங்கிலத்தில் இதற்குப் பொருத்தமான சொல், அனார்கி (anarchy). அராஜகம்.
இம்முறை அவர்களுடைய மோசமான நோக்கத்துக்கு தில்லி
பலியாகிவிட்டது. இனிமேலாவது உஷாராக இருக்கவேண்டும். அது
மத்திய அரசின் கையில் தான்
இருக்கிறது.

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய் – பாகம் 11, தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 11
அரசியல் முன்னேற்றத்திற்கான சில பரிந்துரைகள்
இந்து-முஸ்லிம் உறவுகளின் கடந்த கால வரலாற்றை
நான் இதுவரை தொட்டுச் சென்றிருக்கிறேன். தற்போது விஷயங்கள் எந்த அளவிற்கு வந்துள்ளன
என்பதற்கான ஒரு சித்திரத்தையும் அளித்துள்ளேன். அரசியல் துறையில், தற்போதைய நிலைமையை
எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த சில அவதானிப்புகளை இப்போது தருகிறேன்.
முஸ்லிம் தலைவர்கள் சார்பாகப் பின்வருவன
பரிந்துரைப்படுகிறது:
​​அ) அனைத்து சட்டமன்றங்கள், உள்ளாட்சி
அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பிற அரசு, அரசு சார்ந்த அமைப்புகளில் தனித் தொகுதிகளுடன்
கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
திரு. எம்.ஏ. ஜின்னா இந்த கட்சியில் அண்மையில்
இணைந்திருக்கிறார். அவர் தன்னை ஒரு தேசியவாதி என்று எப்படிக் கூறிக்கொள்கிறார் என்பதை
என்னால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தற்காலிகமானதே,முஸ்லிம்கள் வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு காலம் வரும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.தனித்
தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஒரு
உள்நாட்டுப் போர் இல்லாமல், அது எப்போதும் ஒழிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய
உள்நாட்டுப் போர், ஒரு சமூகம் மற்றொன்றின் மேல் தனது மேலாதிக்கத்தை நிறுவவதற்கு வழிவகுக்கும்.
இந்துஸ்தான் முழுவதும் முஸ்லிம் ஆட்சியை நிலைநாட்ட வெளிநாட்டு முஸ்லிம் நாடுகளின் உதவியை
முஸ்லிம் தலைவர்களில் சிலர் கோரி வருகிறார்கள் என்று சில இந்துக்கள் அச்சப்படுவதற்கு
இது வலுச்சேர்க்கிறது. இந்தப் பயம் உண்மையோ பொய்யோ,அந்த அச்சத்தைக் கொண்டிருப்பவர்கள்வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தைவலிமையுடன் எதிர்ப்பது இயற்கையானது. ஆனால் அரசாங்கம் இதை நிறைவேற்றுவதில்
உறுதியாக இருப்பதால், இந்த எதிர்ப்பு பயனற்றதாகவே இருக்கும். எனவே தற்போதைய நிலைமையை
நீட்டிப்பதையே அவர்கள் விரும்பக்கூடும்.
சுயராஜ்யக் கோரிக்கு சரியான மறுமொழி இந்த
தனித் தொகுதியுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம்.வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை
வலியுறுத்திக்கொண்டே தொடர்ந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதைப் பற்றி பேசுபவர்களின் மனநிலையை
என்னால் ஒருபோதும் பாராட்ட முடியவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு
உண்மையில் புரியவில்லை.இதில் ஒன்று மற்றொன்றை எப்போதும் அடைய முடியாததற்கான சரியானவழி.
கடந்த மூன்று ஆண்டுகளின் அனுபவம் அதற்கு மிக உறுதியான சான்று. முஸ்லிம்களின் இந்தக்
கோரிக்கை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சுதந்திரத்திற்கு எதிரானநிலைப்பாட்டை
வலுப்படுத்துகிறது. மேலும் இந்தியா சுதந்திரத்திற்குத் தயாராக உள்ளது என்ற வாதத்திற்கு
எதிரான பதிலை அளிக்கக்கூடியது.வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது ஒரு பொதுவான தேசம்
என்ற யோசனைக்கு எதிரான மோசமான, அழிவைத்தரக்கூடிய, விரோதமான கொள்கை, அதிலும் தனித் தொகுதி
என்பது இந்தத் தீய கொள்கையை அளவிட முடியாத அளவுக்கு மோசமாக்குகிறது. நம்நாட்டு முஸ்லிம்
மக்கள் தேசியவாதத்தின் மீதான நம்பிக்கையிலும், சுதந்திரத்திற்கான கோரிக்கையிலும் உண்மையிலேயே
அக்கறையுள்ளவர்களாக இருந்தால், அவர்களால் செய்யக்கூடியது தனித் தொகுதிகளை வலியுறுத்துவதல்ல.
ஆ) முசால்மன்கள் பெரும்பான்மையாக இருக்கும்
மாகாணங்கள் மற்றும் இடங்களில், மாகாண சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
மக்கள்தொகை அடிப்படையில் இருக்க வேண்டும். பிற மாகாணங்களிலும் இடங்களிலும், அவர்களுக்கு
‘பயனுள்ள
சிறுபான்மை பிரதிநிதித்துவம் இருக்க
வேண்டும்.
(இ) பிரிவு (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள
கொள்கையின் அடிப்படையில் அரசின் கீழ் உள்ள இடங்களும் அலுவலகப் பதவிகளும் விநியோகிக்கப்பட
வேண்டும்.
(ஈ) முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள
மாகாணங்களிலும், அகில இந்தியத் துறைகளிலும், முஸ்லிம்களுக்கு மொத்த பதவிகளில் 25 சதவீதம்
முதல் 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
இந்த உட்பிரிவுகளை ஒவ்வொன்றாக அவற்றின்
வரிசையின் அடிப்படையில் ஆராய்வோம்.
பிரிவு (அ) இன் உட்கருத்து கோட்பாட்டளவிலும்
நடைமுறையிலும் ஒன்றுபட்ட தேசத்தை நிராகரிப்பதாகும். இது முஸ்லிம் இந்தியா, முஸ்லிம்
அல்லாத இந்தியா என இரு பிரிவுகளாக நாட்டைப் பிளவுபடுத்துவதை ஆதரிக்கிறது.நான் வேண்டுமென்றே
முஸ்லிம் அல்லாத இந்தியா என்று சொல்கிறேன். ஏனென்றால் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் இருப்பதெல்லாம்
அவர்களின் சொந்த உரிமைகளுக்கான உத்தரவாதம் மட்டுமே. மற்ற அனைத்து சமூகங்களும் அவர்களைப்
பொருத்தவரை ஒரே கூட்டம்தான்.நாட்டின் அனைத்து பிரதிநிதித்துவ நிறுவனங்களிலும் தனித்தனி
வாக்காளர்களுடன் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை கோருபவர்கள், தாங்கள் தேசியவாதத்தையோ
அல்லது ஐக்கிய இந்தியாவையோ நம்பவில்லை என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளட்டும். இரண்டு
விஷயங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாதவை.
சட்டமன்றங்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கான
கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும், எப்போதென்றால் அந்தக் கொள்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டால்
மட்டுமே. ‘பயனுள்ள
சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கான
வேண்டுகோள் ஏற்றுக்கொள்ள முடியாதது. திரு. ஜின்னா
இதைப்பற்றி தனக்குச் சொந்தமான
ஒரு சிறப்பு விளக்கத்தை வைத்துள்ளார். உண்மைகளின் வெளிச்சத்தில் அதை ஆராய்வோம். வங்காளத்திலும்
பஞ்சாபிலும், முசல்மான்கள் பெரும்பான்மையில் உள்ளனர், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால்,
அவர்கள் இந்த மாகாணங்களை ஆளுவார்கள். இந்த மாகாணங்களில் உள்ள இந்துக்கள், திரு. ஜின்னாவின்
விளக்கத்தின்படி, ஏற்கெனவே ஒரு சிறுபான்மையினர், எனவே அவர்களுக்கு எந்தவொரு சிறப்புப்
பிரதிநிதித்துவத்திற்கும் உரிமை இல்லை. ஆனால் சீக்கியர்களின் நிலை என்ன? அவர்களுக்குச்
சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்கு உரிமை இல்லையா? அதைப் பெறுவது யாருடைய பங்கிலிருந்து?
இந்துக்களின் பங்கிலிருந்தா அல்லது முஸ்லிம்களின் பங்கிலிருந்தா? எந்தவொரு கொள்கையின்
கீழும் அவர்கள் அதை இந்துக்களின் பங்கிலிருந்து பெற முடியாது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக
உள்ள உத்திரப் பிரதேசத்திலிருந்தோ அல்லது மற்ற மாநிலங்களிலிருந்தோ அவர்கள் அந்தப் பிரதிநிதித்துவத்தை
எந்தக் கொள்கையின் அடிப்படையில் பெறுகிறார்களோ அதே அடிப்படையில்தான் சீக்கியர்களும்
முஸ்லிம்களின் பங்கிலிருந்து இதைக் கோரமுடியும். இது ஹிந்துக்களும் சீக்கியர்களும்
சேர்ந்து பெறுவதை விட பெரும்பான்மை பலத்தைக் கோரும் முஸ்லிம்களின் கோரிக்கையில் குறுக்கிடக்கூடும்.
சில முஸல்மான்கள் இதை உணர்ந்து, அவர்கள்
ஒன்று அல்லது இரண்டு இடங்கள் அதிகமுள்ள பெரும்பான்மையுடன் திருப்தி அடைவார்கள் என்று
வாதிடுகின்றனர். ஆனால் எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் வைத்திருக்க
முடியாது அல்லவா.எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லஅனுமதிக்கப்படுகிறார்கள்
என்று வைத்துக்கொள்வோம். பஞ்சாப்பில் தங்கள் ஆட்சியைத் திறம்படச் செய்ய முடியும் என்று
அவர்கள் கற்பனை செய்கிறார்களா? இந்திய மாகாணங்களில் பஞ்சாப் ஒரு தனித்துவமான இடத்தைப்
பிடித்துள்ளது. ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றியபோது மாகாணத்தின் ஆட்சியாளர்களாக இருந்த
ஒரு சமூகத்தின் வீடு இது. அந்த சமூகம் வீரியமானது, வலுவானது, ஒன்றுபட்டது. இந்த ஏற்பாட்டின்
மூலம் முழுமையாக அடிபணிந்த நிலையை ஏற்றுக்கொள்ள அந்தசமூகம் உடனடியாக ஒப்புக் கொள்ளுமா?
வேறு எதுவும் அவர்களுக்கு உதவவில்லை என்றால், முன்பு செய்தது போல, அவர்கள் சுதந்திரத்தை
எதிர்க்கக்கூடும்,
இந்தச் சூழ்நிலையில், இந்துக்கள் மற்றும்
சீக்கியர்களின் உணர்வுகளை மிதிக்காமல் முஸ்லிம்கள் தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறக்கூடிய
ஒரு தீர்வைத் தேட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். எனது பரிந்துரை பஞ்சாப் பிரிக்கப்பட
வேண்டும். இரண்டு மாகாணங்களாக, மேற்கு பஞ்சாப் ஒரு பெரிய முஸ்லிம் பெரும்பான்மையுடன்,
ஒரு முஸ்லிம் ஆளும் மாகாணமாக இருக்க வேண்டும்; கிழக்கு பஞ்சாப், ஒரு பெரிய இந்து-சீக்கிய
பெரும்பான்மையுடன்,முஸ்லிம் அல்லாததாக இருக்க வேண்டும். நான் வங்காளத்தைப் பற்றி விவாதிக்கவில்லை.
திரு. தாஸ் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தை வங்காளத்தின் பணக்கார, மிகவும் முற்போக்கானஇந்துக்கள்
எப்போதுமே செயல்படுத்துவார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாது. நான் அவர்களுடைய
விஷயத்திலும் இதே ஆலோசனையை கூறுவேன், ஆனால் வங்காளம் திரு. தாஸின் ஒப்பந்தத்தை ஏற்க
முடிவு செய்தால், நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்கள் சொந்த விஷயம்.
மௌலானா ஹஸ்ரத் மோகானிசமீபத்தில்இந்தியாவின்
டொமினியன் அந்தஸ்தை முஸ்லிம்கள் பிரிட்டிஷாரின் கீழ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
என்று கூறியுள்ளார். அவர்கள் நோக்கம் என்னவென்றால், இந்தியாவில் தனி முஸ்லிம் மாநிலங்கள்,
ஒரு தேசிய மத்திய அரசாங்கத்தின் கீழ் ஹிந்து மாநிலங்களுடன் இயங்கவேண்டும் என்பதே. இந்து
மற்றும் முஸ்லிம் மக்களைக் கொண்ட சிறிய மாநிலங்களுக்கு அவர் ஆதரவாக இருக்கிறார். தனித்
தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது விதியாக இருக்க வேண்டும் என்றால்,
சிறிய மாகாணங்களைப் பற்றிய மௌலானா ஹஸ்ரத்தின் திட்டம் மட்டுமே செயல்படக்கூடிய முன்மொழிவாகத்
தெரிகிறது. எனது திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு நான்கு முஸ்லிம் மாநிலங்கள் இருக்கும்:
(1) பதான் மாகாணம் அல்லது வடமேற்கு எல்லைப்புற மாகாணம், (2) மேற்கு பஞ்சாப், (3) சிந்து
(4) கிழக்கு வங்கம் ஆகியவை. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் குறிப்பிட்ட அளவிலான
முஸ்லிம் சமூகங்கள் ஒரு மாநிலத்தை உருவாக்கும் அளவிற்குப் போதுமானவை, இருந்தால் அவை
இதேபோல் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரு ஐக்கிய இந்தியா அல்ல என்பதைத் தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும். இதன் பொருள் இந்தியாவை ஒரு முஸ்லிம் இந்தியா மற்றும் முஸ்லிம்
அல்லாத இந்தியா என்று தெளிவாகப் பிரித்தல் ஆகும்.
இ) ஒரு தேசிய கண்ணோட்டத்தில், அரசாங்க
சேவைஅல்லது பல்கலைக்கழகங்களில் எந்தவொரு இனவாத வேறுபாட்டையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆயினும்கூட, தற்போதைய விஷயங்களில் முஸ்லிம் அதிருப்தி நன்கு நிறுவப்பட்டதும் உண்மையானதும்
என்பதை மறுக்க முடியாது. அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய ரொட்டிகள், மீன்களின் நியாயமான
பங்கை முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொள்ள இந்துக்கள் முன்வரவேண்டும். அவர்கள் முஸ்லிம்களின்
நிலையிலிருந்து, அவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைக் காண வேண்டும். மியான் பாஸல்-இ-ஹுசைன்
இந்த விஷயத்தில் உண்மையான குறைகளை முன்வைக்கிறார். ஆனால் இந்த குறைகளை நீக்கும் முறையில்மட்டுமே
நம்பிக்கையற்ற முறையில் அவர் தவறு செய்துள்ளார். அவர் இந்துக்களின் கண்ணோட்டத்தைப்
பாராட்டியிருக்க வேண்டும், மேலும் கசப்பான மாத்திரையை இந்துக்களால் எளிதில் விழுங்கச்
செய்யும் வகையில் செயல்படுத்தியிருக்கவேண்டும். அதைப் படிப்படியாகச் செய்திருக்கவேண்டும்.
பஞ்சாபில் மியான் பாஸல்-ஹுசைனின் ஆட்சி,மற்றும்
லாகூரில் உள்ள சவுத்ரி ஷாஹாபுதீனின் ஆட்சி, முஸ்லிம் ஆட்சியின் கீழ் அவர்கள் இருக்கக்
கூடியவற்றின் மாதிரியை இந்துக்களுக்கு வழங்கியுள்ளது. அவர்கள் இதைச் செயல்படுத்த ஏதுவாக
இருந்தது கடந்த ஐந்து ஆண்டுகளில் சர் ஈ. மக்லாகன் மற்றும் சர் ஜான்மேனார்ட்டின் கொள்கைகள்தான்.
அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர் என்பதென்னவோ உண்மை.ஆனால் ஒரு இந்திய தேசபக்தராக
மியான் பாஸல்-இ-ஹுசைன் பெருமைப்படக்கூடிய உண்மை இதுதானா? நான் மியான் பாஸ்ல்-ஐ ஹுசைனின்
நிலையில் இருந்திருந்தால், அதே நோக்கத்தை வேறு வழியில் அடைய முயன்றிருப்பேன்.கடைசி
முயற்சியாக மட்டுமே வெளிப்படையான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பேன். பஞ்சாபின் முஸ்லிம்களுக்கு
(முஸ்லிம் நில உரிமையாளர்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள்ன், முஸ்லிம் பட்டதாரிகளிடமிருந்து
வேறுபடுகிறவர்களையே நான் குறிப்பிடுவது) கல்வி, பொருளாதார வாய்ப்புகளே மிகப் பெரிய
தேவைகளாக உள்ளன. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கல்வியறிவு குறைந்தமுஸ்லிம் மாவட்டங்கள்
மாகாணத்தில் உள்ளன.
முஸ்லிம், இந்து நில உரிமையாளர்களின்
தயவில் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை
மேம்படுத்த முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு சில படித்த முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின்
கீழ் பதவிகளை வழங்குவது தற்போதைய நிலைக்கு தீர்வு அல்ல. ஒரு சிலரின் நலன்களைப் பாதுகாப்பதும்,
பலரின் நலன்களைப் புறக்கணிப்பதும் பாராட்டத்தக்க ஒன்றல்ல, ஆனால் மியான் பாஸல்-இ-ஹுசைன்
சாதித்தது அதைத்தான், அதுவும் மிகப்பெரிய செலவில்!
முஸ்லிம் ஆட்சியைத் தவிர, பொருள் ஈட்டவும்
பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையவும்வேறு வழிகள் உள்ளன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள்
இன்னும் அறியவில்லை. நவீன முற்போக்கான கொள்கைகளை முஸ்லிம்களிடம் முன்னிறுத்துவதை விட்டுவிட்டு,
தனித்துவமான கொள்கைகளை, மயிர்பிளக்கும் கோட்பாடுகளை, அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திருப்பதைவெறுமனே
வலியுறுத்துபவர்களை முஸ்லிம்களின் நல்ல நண்பர்கள் என்று அழைக்க முடியாது. இந்திய முஸ்லிம்கள்
தங்கள் தலைவிதியை இந்துக்களுடன் இணைக்கும் பட்சத்தில், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும்
அவர்கள் முன்னேறஉதவுவது இந்துக்களின் கடமையாகும், ஆனால் தற்போதைய வகுப்புவாதக் கொள்கைகள்
மேலோங்கினால், அவர்களின் பின்தங்கிய நிலை குறித்து ஹிந்துக்களின் அக்கறையின்மை பற்றி
அவர்களால் குறை கூற இயலாது. தற்போதைய இனவாத போராட்டம், இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள
வன்முறை, வற்புறுத்தலின் சூழ்நிலையுடன், இந்துக்களின் மனதில் ஒரு எதிர்வினையை மட்டுமே
உருவாக்க முடியும்.

Posted on Leave a comment

விஞ்ஞானப்புதினங்களின்பார்வையில் (தற்போதுநிகழ்காலமாகிவிட்ட) எதிர்காலம் | ராம்ஸ்ரீதர்

சிறிது
காலம் முன் வரை விஞ்ஞானப் புதினங்கள் (நாவல்கள் மற்றும் திரைப்படங்கள்) எதிர்காலத்துடன்
ஒரு சிக்கலான தொடர்பையே வைத்துக் கொண்டுந்திருந்தன.
பெரும்பாலும்
இந்த வகை நாவல்கள் / திரைப்படங்களில் எதிர்காலத்தில் மனிதன் அற்புதமான / ஆச்சரியமான
விஷயங்களைச் சாதிப்பான். உதாரணத்திற்கு, பறக்கும் கார்கள், சுயமாகப் பறந்து செல்ல தனிமனித
ஜெட் பேக்குகள் (Jetpacks), எரிமலையின் அருகாமையில் உல்லாச சுற்றுலா – இதுபோன்றவை.
உண்மையைச்
சொல்லப்போனால் இதுபோன்ற மகிழ்ச்சியான / ஒளிமயமான எதிர்காலம் போரடிக்கும் என்று தோன்றியதாலோ
என்னவோ, இப்போது, சமீபகாலமாக, வரும் படைப்புகள் (நாவல்கள் / திரைப்படங்கள்) எல்லாமே
எதிர்காலத்தை மிக அச்சுறுத்தும் வகையில் காட்டுகின்றன.
விஞ்ஞானப்
புதினங்களை சுலபாமாக இரு வகையாகப் பிரித்துவிடலாம்; எடுத்ததெற்கெல்லாம் விண்வெளி, வேற்று
கிரக மனிதர்கள், அண்டவெளிப் பயணம், பிற கிரகங்களை மனிதகுலம் ஆக்கிரமிப்பது போன்ற
Hard Science Fiction; மற்றொரு புறம், விஞ்ஞான உலகில் திடீரெனத் தோன்றுவதாக / கண்டுபிடிக்கப்படுவதாக
நிகழும் மாற்றங்களை விவரிக்கும் நாவல்கள் / திரைப்படங்கள் போன்ற Soft Science
Fiction.
ஆங்கிலத்தில்,
முதல்வகை படைப்புகள் ஏராளம். இப்போது இரண்டாவது வகை படைப்புகளும் பல்கிப் பெருகிவருகின்றன.
இதில்
அலுப்பூட்டும் வண்ணம், திரும்பத் திரும்ப Zombie-க்கள் எனப்படும் நடைபிணங்களின் அட்டகாசங்களை
விவரித்து / காட்டி அலுக்க வைக்கிறார்கள். அல்லது, ஒரு கொடூர வைரஸ் தாக்குதல், உலகில்
பெரும்பான்மையான மனிதர்கள் இறந்துவிட, மீதியிருக்கும் சொற்ப மனிதர்கள், மிஞ்சியிருக்கும்
சொற்ப உணவுக்காகப் போராடுவது. கடந்த வருடங்களில் இது போன்ற அச்சுறுத்தும் விஞ்ஞான விபரீதங்களைப்
பற்றி புத்தகங்கள் / திரைப்படங்கள் நிறைய வந்திருந்தாலும், சமீபத்தில், இது போன்ற ஒரு
அச்சுறுத்தும் சூழ்நிலை விவரிப்பை (Scenario) ஆரம்பித்தது, 2007-ல் The Road என்ற மிகப்
புகழ்பெற்ற நாவலை எழுதிய கோர்மாக் மெக்கார்தி (Cormac McCarthy) என்ற புண்ணியவான்
(புலிட்ஸர் விருதினை வென்றவர்). இது 2009-ல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.
இதே
பாணியைப் பின்பற்றி இப்போது எக்கச்சக்கமான புத்தகங்கள் / திரைப்படங்கள். இவ்வகையான
அச்சுறுத்தும் எதிர்கால நிகழ்வுகளை post – apocalyptic என்றும் dystopian என்றும் அழைக்கிறார்கள்.
Apocalypse
(அபோகாலிப்ஸ்) என்பது பேரழிவு. பைபிளில் புதிய ஏற்பாட்டில் (New Testament) இது பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதையும் பெருவெள்ளம் சூழ்ந்து அழிப்பதாக விவரம்
உள்ளது. இதற்குப் பின் நடக்கும் நிகழ்வுகளையே post – apocalyptic படைப்புகள் (அதீதமான
கற்பனையுடன்) விவரிக்கின்றன.
இந்த
அபோகாலிப்ஸ் என்ற வார்த்தை வேண்டுமானால் நாம் அதிகம் கேள்விப்படாததாக இருக்கலாம். ஆனால்,
பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மஹாபாரதத்தில் இதுபற்றிய (பெரும் வெள்ளத்தினால் வரும்
பேரழிவு) விவரிக்கப்பட்டுள்ளது.
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் இடையேயான குருஷேத்திர யுத்தம் முடிவுக்கு வந்து கிருஷ்ணபரமாத்மாவின்
உதவியால் கௌரவர்கள் அடியோடு அழிக்கப்படுகிறார்கள். தன்னுடைய மகன்கள் எல்லோரும் இறந்ததினால்
வருந்தும் காந்தாரி, கோபத்தில் கிருஷ்ணரைப் பார்த்துச் சாபமிடுகிறாள். “நான் உன்னை
விஷ்ணுவின் வடிவாகவே பாவித்து பூஜை செய்தேன். ஆனால், நீ இப்படியெல்லாம் நடக்கும் என்று
தெரிந்தும் இந்தப் போர் மூள்வதைத் தடுக்க முற்படவில்லை. என்னுடைய பக்தி உண்மையானால்,
இன்னும் 36 வருடத்தில் ஒரு பெரும் வெள்ளம் சூழ்ந்து துவாரகை மட்டுமல்ல, இந்த உலகமே
அழிந்து போகும்
என்று சொல்லும் காந்தாரியிடம், கிருஷ்ணர்
சொல்கிறார். “உன் பக்தி உண்மை காந்தாரி. இன்னும் 36 வருடங்களில் நீ சொன்னது போலவே ஒரு
பெருவெள்ளத்தில் இந்த உலகம் அழியும்
என்று வாக்கு கொடுக்கிறார்.
போரில்
வெற்றி பெற்றாலும் தங்களுடைய சொந்தங்கள் அனைவரையும் இழந்ததால் துன்புறும் பாண்டவர்கள்
ஐவரும், தங்கள் குல மக்கள் சிலரை அரசாள வைத்துவிட்டு நெடும்பயணமாகப் பல கோயில்களுக்கு
பாப விமோசனம் பெறும் நோக்கில் செல்கிறார்கள். இவர்கள் யாரும் இல்லாததால் அந்த மக்கள்
தறிகெட்டு போய் குடித்துக், கும்மாளமிட்டு வாழ்வைக் கொண்டாடுகிறார்கள். இதனிடையே, துவாரகையிலிருக்கும்
சிலர், கிருஷ்ணர் மற்றும் ஜாம்பவதிக்கும் பிறந்த சம்பா என்ற மகனுக்குப் பெண் வேடமிட்டு,
கர்ப்பவதி போல நடிக்க வைத்து, அங்கிருக்கும் சில முனிவர்களிடம் விளையாட்டாக “இந்தப்
பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்?
என்று கேட்கிறார்கள். உண்மையை உணர்ந்த முனிவர்கள்,
“ஒரு இரும்பு உலக்கைப் பிறக்கும். அதனால் உங்கள் இனமே பூண்டோடு அழியும்

என்று சபித்துவிடுகிறார்கள்.
அதுபோலவே
சம்பாவிற்கு ஒரு உலக்கை பிறக்கிறது. இதை அறியும் அரசன் உக்கிரசேனன், அந்த உலக்கையைத்
தூள்தூள்ளாக்கி கடலில் கரைக்க ஆணையிடுகிறார்.
கிருஷ்ணரிடம்
“இது என்ன விபரீதம்?
என்று கேட்க, அவர் புன்னகைத்து, “கால சக்கரம்
சுழல்வதை யாராலும் நிறுத்த முடியாது. காந்தாரி இட்ட சாபம் பலிக்கும் நேரம் வந்துவிட்டது

என்று சொல்கிறார்.


கடலில்
கரைக்கப்பட்ட உலக்கையின் ஒரு துண்டை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது. அந்த மீனைத் தூண்டிலில்
பிடிக்கும் ஒரு வேடன், மீனின் வயிற்றில் இருக்கும் துண்டை எடுத்து அதை வைத்து ஒரு அம்பு
நுனியைத் தயாரிக்கிறான். ஒரு மரத்தின் கிளையில் சாய்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்
கிருஷ்னரின் வெண்பாதத்தை தூர இருந்து பார்க்கும் அந்த வேடன், அதைப் புறா என்று நினைத்து
அம்பெய்தி விடுகிறான். கிருஷ்ணரின் அவதாரம் இவ்வாறாக முடிவுக்குவந்தவுடன், கடல் கொந்தளித்து
பெரும் வெள்ளம் வந்து உலகை அழிக்கிறது.
Dystopia
(டிஸ்டோபியா) என்பது Utopia (உடோபியா) என்பதின் எதிர் / மாற்று வடிவம். உடோபியா என்பது
ஒரு கற்பனை உலகம். இங்கே, சகல வசதிகளுடனும், செழிப்பாக, எந்தவித பிரச்சினைகளும் இன்றி
மனிதர்கள் வாழ்வதாக 16-ம் நூற்றாண்டில் தாமஸ் மோர் (Thomas More) என்பவர் விவரித்தார்.
இந்த உடோபியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்குப் பொருள் ‘இல்லாத
உலகம்
என்பதே.
இப்போது
வரும் படைப்புகள் இதற்கு நேர் எதிர்மாறான ஒரு உலகத்தை (பசி, பட்டினி, நோய் போன்ற தீராத
பிரச்சினைகளுடன்) விவரிக்கும் போது உடோபியா (Utopia) என்பதற்கு எதிர்வார்த்தையாக டிஸ்டோபியா
(Dystopia) என்ற பதத்தை உபயோகிப்பதனால் இவ்வகை படைப்புகள் dystopian என்று அழைக்கப்படுகின்றன.
நாம்
இப்போது 21-ம் நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்டபடியால், கடந்தகாலத்தில் இந்த நூற்றாண்டின்
ஆரம்பத்தில் நடப்பது போன்ற சில கற்பனைப் படைப்புகளில் அதனை எழுதியவர்கள் எப்படிக் கற்பனை
செய்தார்கள் என்பது பற்றி ஆராயலாம். இவர்கள் கற்பனையில் 2020ல் துவங்கும் தசாப்தம்
(decade) மிக மோசமாக இருக்கும் என்றே கணித்துள்ளார்கள்.மிக மோசமான டிஸ்டோபிய சூழ்நிலைகளையே
பெரும்பாலான எழுத்தாளர்கள் விவரித்துள்ளார்கள். பி.டி (P D) ஜேம்ஸ் என்ற பிரபல எழுத்தாளர்
1992-ல் எழுதிய தி சில்ட்ரன் ஆஃப் மென் (The Children of Men) என்ற கதையில் 1995க்குப்
பிறகு உலகில் குழந்தைகளே பிறப்பதில்லை. உலகெங்கும் பசி, பட்டினி போன்ற காரணங்களால்
நிறைய தற்கொலைகள் போன்ற துயர சம்பவங்கள் உலகைச் சூழ்கின்றன. கதை நடக்கும் வருடமாக
2021ஜக் குறிப்பிடுகிறார் கதாசிரியர்.
இதற்கு
நேரெதிர்மாறாக, ரெய்ன் ஆஃப் ஃபயர் (Reign of Fire) என்ற திரைப்படத்தில் நம் உலகை தீ
காக்கும் பிரமாண்டமான ட்ராகன்கள் (dragons) சூழ்ந்துவிடுகின்றன. கண்ணில் கண்டவற்றை
எல்லாம் பொசுக்குகின்றன. அவற்றை மனித இனம் அடக்க, பெரும் போராட்டம் நிகழ்கிறது.
2002ல் வெளிவந்த இந்தப் படத்தில் கதை நடப்பது 2020ல் என்று காட்டுவார்கள். இதைத் தவிர,
திகில் கதை எழுத்தாளர் ஸ்டீஃப ன் கிங் (ரிச்சர்ட் பாக்மன் -Richard Bachman- என்ற புனைபெயரில்)
1982ல் எழுதிய தன்னுடைய ரன்னிங் மேன் (Running Man) நாவலில், 2025ல், அமெரிக்கா பொருளாதார
வீழ்ச்சியைச் சந்திக்கும். இதனால் உண்டாகும் தீவிரமான பிரச்சினைகளால் மக்கள் மிக ஆபத்தான
ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு உயிர் பிழைக்க வழி தேடுவார்கள் என்று குறிப்பிட்டிருப்பார்.
பின்னர், இந்த நாவலைத் தழுவி, அதே பெயரில் 1987ல் ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர் நடிக்கப்
படமாக எடுத்து, படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
1950லேயே
ரே பிராட்பரி (Ray Bradbury) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர் எழுதிய
There will come Soft Rains என்ற சிறுகதையில் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் நடக்கும்
ஒரு அணுஆயுத விபத்தால் ஒரு நள்ளிரவில் உலகமே அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகி அழிந்துவிடும்
என்று கணித்திருப்பார். கதை நடக்கும் வருடம் 2026 என்று எழுதியிருப்பார் ரே பிராட்பரி.
1982ல் ஹாரிஸன் ஃபோர்ட் (Harisson Ford) நடித்து, பிரபல இயக்குநர் ரிட்லி ஸ்காட்
(Ridley Scott) இயக்கிய தி ப்ளேட் ரன்னர் (The Blade Runner) மிகப் பெரும் வெற்றியும்,
புகழையும் பெற்றது. இந்தப் படம் 2019ல் லாஸ் ஏஞ்சலஸில் (Los Angeles) நடைபெறுவது போல
படமாக்கப் பட்டிருக்கும். இது பிலிப் கே. டிக் (Philip K.Dick) என்பவர் 1968ல் எழுதிய
‘Do Androids Dream of Electric Sheep?
என்ற கதையைத் தழுவியதாகும். இதே படம் ப்ளேட்
ரன்னர் 2049 (The Blade Runner 2049) என்ற பெயரில், டெனிஸ் வில்யனுவி (Denis
Villeneuve) என்பவர் இயக்கத்தில், 2017ல் எடுத்து வெளிவந்தது. ஆனால் அது எதிர்பார்த்த
அளவு வெற்றிபெறவில்லை.
இது
மிகப் பெரிய பட்டியல். நிறைய புத்தகங்களும், திரைப்படங்களும் இந்த தசாபத்தில்
(2020-ல் ஆரம்பித்து 10 வருடங்கள்) நடைபெறும் கதை அம்சங்களுடன் வந்துள்ளன. எல்லாவற்றையும்
குறிப்பிடுவது நேர விரயம். பொதுவாக விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி
நடப்பதைப் பார்த்து, உள்வாங்கிக் கொண்டு, எதிர்காலம் இப்படி இருக்கலாம் என்ற கற்பனையில்
பல சமயம் நிறைய வரம்பு மீறிப் போய்விடுகிறார்கள். ஆனால், 1970 / 80 / 90 களில் எழுதியவர்கள்
2020 எப்படியிருக்கும் என்று எப்படிச் சரியாக யூகிக்க முடியும்?
நாம்
இந்தக் கதைகள் / திரைப்படங்களில் உள்ள அச்சுறுத்தும் சூழ்நிலையை வேறு விதமாகச் சிந்தித்துப்
பார்க்கலாம். இப்போதைய நிலை உலகில் மோசம் என்றாலும் இன்னும் டிஸ்டோபியா / அபோகாலிப்ஸ்
(dystopia / apocalypse) என்றளவு மோசமாகவில்லையே?
அதனால்
உள்ள மட்டும் நம் சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம். பறக்கும் கார்கள்,
சுயமாகப் பறந்து செல்ல தனிமனித ஜெட் பேக்குகள் (Jetpacks) என்று முன்னர் குறிப்பிட்ட
மாதிரி நல்ல முன்னேற்றங்களை மட்டுமே மனதில் கொண்டு, தைரியமாக எதிர்காலத்தை மேற்கொள்ளலாம்.
எதிர்காலம் எப்படியிருக்கும் என்றும் நாம் எப்படி அனுமானிக்க முடியும்?ஏனென்றால், வேறு
சில படைப்புகளில் (நாவல்கள் / திரைப்படங்களில்) அடுத்த தசாப்தம் (2030ல் ஆரம்பித்து
10 வருடங்கள்) இதைவிட மோசமாக இருக்கும் என்றே கணித்துள்ளார்கள்.
நாம்
எப்போது போல இதைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறையுடன் (positive attitude) அணுகுவோம்.
நன்றி:
இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய (நான் படித்து / பார்த்து அனுபவித்த) விஞ்ஞானப் புதினங்கள்
/ மற்றும் அவற்றைத் தழுவியெடுத்த திரைப்படங்கள் / மஹாபாரதக் குறிப்பு / David
Baker, Lecturer in Big History, Macquarie University, Australia.

Posted on Leave a comment

அந்தமானிலிருந்து கடிதங்கள் – 9வது கடிதம் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

ஒன்பதாவது
கடிதம்
செல்லுலார்
சிறை
போர்ட்
ப்ளேயர்
6-7-1920
அன்பிற்குரிய
பால்,
நீ
இங்கு வருவதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்த போது எனக்கு மிகுந்த மன உளைச்சல் உண்டாகியது.
ஆனால் 2-6-1920 தேதியில் நீ போட்ட கடிதம் அந்த மன உளைச்சலை நீக்கியது. நீ என்னைப் பிரியும்
போது எப்படி இருந்ததோ அப்படியேதான் என் உடல் நிலை இப்போதும் இருக்கிறது. மேலும் மோசமாக
ஆகவில்லை. ஆனால் நீ சென்ற பிறகு நம் சகோதரரின் உடல் நிலை மிகவும் மோசமாக ஆகியிருக்கிறது.
பிரச்சினை அதேதான். அஜீரணமும் கல்லீரல் கோளாறும். அவருடைய தற்போதைய எடை 106 பவுண்டுகள்
(48கிலோ). நான் இப்படி எழுதுவதனால் எங்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக நினைத்துவிட
வேண்டாம். அப்படி இல்லை. நான் உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். இதைவிட மோசமாக ஏதேனும் ஆனால்
அதைப் பற்றியும் நான் உனக்குத் தகவல் தெரிவிப்பேன்.
ஒருவழியாக
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நூற்றுகணக்கானோர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்காகப் பெரிய அளவில் உழைத்த பம்பாய் தேசிய யூனியன், நம் தலைவர்கள் மற்றும் இந்திய
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மாபெரும் கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்து
நடத்திய நம் தேசப்பற்று மிக்க மக்கள் ஆகியோருக்கு நன்றி. அந்த மனுவில் கையெழுத்து வாங்க
நடந்த மாபெரும் இயக்கத்தில் குறைந்த காலத்தில் கிட்டத்தட்ட 75000 பேர் கையெழுத்திட்டதனால்
அது அரசிற்கு மாபெரும் அழுத்தத்தைக் கொடுத்தது என்பது உண்மை. எப்படி இருந்தாலும் இது
அரசியல் கைதிகளின் மற்றும் அவர்கள் போராடிய நோக்கம் இரண்டின் தார்மிக நிலையையும் மேலும்
உயர்த்தியது. மேலும் நாங்கள் விடுதலை அடைய வேண்டும் மக்களே விரும்பியதால், இப்போது
நாங்கள் ஒருவேளை விடுதலை அடைந்தாலும் அந்த விடுதலை மேலும் தகுதி வாய்ந்ததாக ஆகும்.
எங்கள்பால் கருணையும் அக்கறையும் காண்பித்த நாட்டுமக்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றி
சொன்னாலும் தகும்.
நாங்கள்
எதிர்பார்த்ததையும் விட அதிகமாக அவர்கள் எங்கள்பால் அக்கறை கொண்டதாகவே நான் நினைக்கிறேன்.
அவர்கள் முயற்சிகள் முழுவதும் பலனளிக்காமலும் இல்லை. எங்கள் இரண்டு பேருக்கும் பொது
மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றாலும் எங்களுடன் இருக்கும் நூற்றுகணக்கான அரசியல் கைதிகளுக்கு
விடுதலை கிடைக்கிறது என்ற செய்தி எங்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. நாங்கள் கடந்த எட்டு
வருடங்களாக செய்த வேலைமறுப்புகள், கொடுத்த கடிதங்கள், மனுக்கள், பத்திரிகைகள் கொடுத்த
அழுத்தங்கள் எல்லாவற்றிற்கும் பலன் கிடைத்திருக்கிறது.
2-4-1920
அன்று நான் அரசு சமீபத்தில் வழங்கியிருக்கும் பொது மன்னிப்பு குறித்து ஒரு புதிய மனுவை
அளித்துள்ளேன். அதில் 1918ம் ஆண்டு நான் சமர்ப்பித்த மனுவில் நான் பொது மன்னிப்பை இன்னமும்
சிறையில் இருப்போருக்கும் மற்றும் மற்ற நாடுகளில் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும்
நீட்டிக்க வேண்டும் என கோரியிருந்தேன். அதில் இந்திய அரசியல் சூழல் குறித்த என்னுடைய
நிலைப்பாட்டையும் தெளிவாக விளக்கியிருந்தேன். குறிப்பாக அதிகாரவர்க்கத்தில் விவாதிக்கப்பட்டு
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் விளக்கமளித்திருந்தேன்.
இயற்கையில்
கிடைக்கும் வளங்களைப் பெற உழைக்கும் மனிதகுலத்தை மொத்த பூமிக்கும் குடிமகன்களாகப் பார்க்க
வேண்டும் என்ற சிந்தனையை இந்த நாடு மானுடத்திற்கு வழங்கியிருக்கிறது. சூரியனுக்குக்
கீழ் வரும் இந்த பூமியில் இருக்கும் அனைவரும் ஒரே குடியை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினைகளும்
வேறுபாடுகளும் தவிர்க்கமுடியாதவை என்றாலும் அவை செயற்கையானவையே. எனவே அரசியல் கோட்பாடுகள்
மற்றும் கலைகளின் இறுதி இலட்சியம், நாடுகள் அனைத்தும் இணைய வேண்டும் என்பதே. அவற்றின்
சுய தேவைகளுக்காக அரசியல் கோட்பாடுகள் இருக்கலாம். எப்படி ஒரு உயிரின் தேவைக்கு ஒவ்வொரு
அணுவும் இருக்கிறதோ, அப்படி குடும்பங்களும் இனக்குழுக்களும் சேர்ந்து ஒரு தேசத்திற்கான
தேவைகளை பூர்த்தி செய்யும். ஆனால் மானுடம் என்பதே எல்லாவற்றிற்கும் மேலான தேசப்பற்று.
ஆகவே பல முரண்களைக் கொண்ட இனக்குழுக்களையும் தேசங்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றி
கண்ட எந்த ஒரு ராஜ்ஜியமோ அல்லது காமன்வெல்த்தோ, அது இந்த உயர்ந்த இலட்சியத்தை அடைவதில்
ஒரு படி முன்னே சென்றிருக்கிறது என்றே அர்த்தம். அந்த காமன்வெல்த் அது பிரிட்டிஷாக
இருக்கட்டும் அல்லது இந்தியனாக இருக்கட்டும் அல்லது வேறு நல்ல பெயர் கிடைக்கும் வரை
ஆர்யன் காம்ன்வெல்த் என்று கூட அழைக்கலாம், அதற்கு அந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய நான்
மனப்பூர்வமாக ஒத்துழைப்பேன். இந்த நோக்கத்திற்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆகவே அரசு தங்கள் கண்ணோட்டத்தை மாற்றி அதன் மூலம் இந்தியா அரசியல்சட்டத்தின் அடிப்படையில்
சுதந்திரத்தை நோக்கி முன்னேற வழிவகுத்திருக்கிறது என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதன்மூலம்
என்னைபோன்ற புரட்சியாளர்கள் தங்கள் பாதையை விடுத்து இங்கிலாந்துடன் ஒரு கௌரவமான ஒப்பந்தத்திற்கு
உடன்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் முன்னேற்றத்திற்கும் ஒரு வழி இருக்கிறது.
மானுடமே
மேலான தேசபக்தி என்ற இந்தச் சிந்தனைதான் எங்களுக்கு அந்த மானுடத்தின் ஒரு பகுதி சீரழிக்கப்படும்
போது கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் நாங்கள் வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை
போன்ற புரட்சியைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் வலிமையை வலிமையால் எதிர்கொள்வது என்று நாங்கள்
முடிவெடுத்த போதும்கூட நாங்கள் எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை.ஏனென்றால் வன்முறை
என்பது உயிரை மாய்ப்பது. நான் எப்போதும் எனக்காகவோ அல்லது என் தேசதிற்காகவோ வன்முறையை
ஒரு அணுகுமுறையாக யோசித்துக்கூடப் பார்த்ததில்லை. அதனாலேயே வலிமை குன்றிய நேர்மையாளர்கள்
மீது வன்முறை பிரயோகிக்கப்படும்போது நான் அதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன்.
இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, போராளிகள் வன்முறையைக் கைக்கொள்ளும்போது
நான் அதனை எதிர்த்தே வந்திருக்கிறேன். அந்நியர்கள் இந்தியர்களை ஆள்வதை எதிர்ப்பதைப்
போலவே நான் இந்தியாவில் நிலவும் சாதி மற்றும் தீண்டாமை பிரச்சினைகளையும் எதிர்த்து
வந்திருக்கிறேன்.
நாங்கள்
வேறு வழியில்லாமல்தான் புரட்சியைத் தேர்ந்தெடுத்தோம்; அதன் மீது விருப்பம் கொண்டு அல்ல.இந்தியா
மற்றும் இங்கிலாந்தின் நோக்கங்கள் பாதுகாக்கப்பட அவற்றின் லட்சியங்கள் அமைதியான முறையில்
சுமுகமான பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமாகப் படிப்படியாக முன்னேற வேண்டும் என்றே நாங்கள்
நினைக்கிறோம். அதற்கு வாய்ப்பிருக்கும் பட்சத்தில் அமைதியான வழிமுறைகளை கைக்கொள்ளும்
முதல் ஆளாக நான் இருப்பேன். வளர்ச்சிக்கான சக்திகள் தொடர்ந்து தடையில்லாமல் முன்னேற,
புரட்சி போன்ற அரசியல் சட்ட மீறல்களை நாங்கள் கைவிடுவோம்.
எங்களுடைய
சட்ட மீறல்களுக்கான காரணங்களை அரசாங்கம் தனது மாற்றங்கள் மூலம் நீக்குமானால் அதன் காரணமாகப்
புரட்சியும் ஓயும். முன்னேற்றமே எங்கள் எல்லோருடைய லட்சியமாவும் அமையும். அத்தகைய மாற்றத்திற்கு
ஒரு தொண்டனாக நான் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். எங்கள் தலைமுறையின் மிக பெரிய
கனவான இந்த நாட்டின் சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி அது செல்லுமானால் அதற்கு நான் முழுமூச்சுடன்
உழைக்கத் தயார்.
நான்
புரட்சியாளர்களின் முகாம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த போதும் என்னுடைய கருத்து
இதுவாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு பன்னிரண்டு
வருடங்கள் ஆனபின்பும் என் எண்ணம் அதுவாகத்தான் இருக்கிறது. வாள்முனையில் எங்களுக்கு
விதிக்கப்பட்ட சட்டங்களை அனுசரிக்கவும் அவற்றிற்கு விசுவாசமாக இருப்பதும் எங்களுக்குக்
கஷ்டமாக இருப்பது உண்மைதான். அதிலும் அடக்குமுறைக்கு முகமூடியாக அரசியல்சட்டம் பயன்படுத்தப்படும்போது
அதற்கு விசுவாசமாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டே நாம் நடக்க
வேண்டும் அதுவே நம் கடமை என்றே நாங்கள் எப்போதும் நினைத்து வந்திருக்கிறோம். சமுதாயத்திற்கு
நன்மையைப் பயக்கும் எந்த சட்டத்தையும் மதிப்பது நேர்மையான மனிதர்களின் இயல்பாகவே இருந்திருகிறது.
இந்திய
காபினெட் மற்றும் உயர் அதிகாரிகள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்று. “இந்தியாவில்
இருந்த பண்டைய மன்னர்களை எதிர்த்து நீங்கள் புரட்சி செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அவர்கள் யானையின் காலால் மிதிபட வைத்திருப்பார்களே
என்பது.
அதற்கு என்னுடைய பதில்: இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்து உட்பட உலகின் பல நாடுகளிலும்
புரட்சி செய்பவர்களின் கதி அதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஏன் ஜெர்மானியர்கள் தங்களிடம்
பிடிபட்டவர்களை ஒழுங்காக நடத்தவில்லை, அவர்களுக்குப் பசிக்கு உணவாக பிரெட்டும்வெண்ணெய்யும்
கூட வழங்கவில்லை என்று உலகம் முழுக்க பிரிட்டிஷ் மக்கள் பிரசாரம் செய்கிறார்கள்? ஒரு
காலத்தில் போர்க் கைதிகளை தார் மற்றும் மொலோச் போன்ற போர்க்கடவுள்களுக்கு பலியாக கொடுக்கும்
வழக்கம் கூடத்தான் இருந்தது. ஆனால் இன்று நாம் நாகரீகத்தில் முன்னேறியிருக்கிறோம்.
அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முயற்சியால் விளைந்த ஒன்று. ஆகவே அதன் பலன் ஒட்டுமொத்த
மனிதகுலத்திற்கும் போய்ச் சேர வேண்டும். காட்டுமிராண்டித்தனமான காலங்களையும் ஒப்பிட்டு
எனக்கு ஒழுங்கான விசாரணையும் தண்டனையும் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது உண்மைதான்.
எனக்கு நரமாமிசம் சாப்பிடும் மக்கள் கூட்டம் வழங்கும் தண்டனையைவிட மேலான தண்டனையைத்தான்
வழங்கியிருக்கிறோம் என்று அரசும் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒன்றை
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பண்டைய காலங்களில் ஆட்சியாளர்கள் புரட்சி செய்பவர்களைக்
கொடுஞ்சித்ரவதை செய்ததைப் போலவே தங்கள் கை ஓங்கியவுடன் புரட்சியாளர்களும் ஆட்சியாளர்களை
சித்ரவதை செய்திருக்கிறார்கள். என்னையும் மற்ற புரட்சியாளர்களையும் நியாயமான முறையில்
நடத்தி இருக்கிறோம் என்று பிரிட்டிஷ் மக்கள் நினைத்தால் அவர்கள் ஒன்றை நினைவில் இருத்த
வேண்டும். இங்கிருக்கும் நிலைமை தலைகீழாக மாறினால் எங்கள் கைக்கு அதிகாரம் வரும்போது
நாங்கள் உங்களை இதே போல நியாயமான முறையில்தான் நடத்துவோம்.
இந்த
மனுவின் வாயிலாக எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று பெரிய நம்பிக்கை எதுவும் கொள்ள
வேண்டாம். எங்களுக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை, அதனால் விடுதலை ஆகாவிடினும்
எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமும் இல்லை. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் மனோநிலையில்
நாங்கள் இருக்கிறோம். பால், உன்னால் முடிந்ததை நீ முயன்றாய். உன் விடாமுயற்சியால் இன்று
பல அரசியல் கைதிகள் விடுதலை ஆகிறார்கள். நாங்கள் இருவர் விடுதலை ஆகாவிட்டாலும் பல நூறு
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உன் முயற்சி வழிகோலியிருக்கிறது.
உன்னை
நல்ல ஆரோக்கியத்துடன் பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நண்பர்களுக்கும் மற்ற
உறவினர்களுக்கும் என்னுடைய அன்பையும் விசாரிப்புகளையும் கூறவும்.
என்றும்
உன் அன்பிற்குரிய சகோதரன்
தாத்யா.


Posted on 1 Comment

சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்

தமிழில்
வெளியான, வெளியாகும் தினசரி, வார, இருவார, மாத மற்றும் பருவ இதழ்கள் பற்றி நிறைய ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலக்கிய இதழ்களைப் பற்றியும் அரசியல்
இதழ்களைப் பற்றியும் மேற்கொள்ளப்பட்டவையே. அரிதிலும் அரிதாக, கலை, அறிவியல் உள்ளிட்ட
இதழ்களைப் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன

ஆனால்,
சமயம் சார்ந்தும், சாதிகள் சார்ந்தும் வெளியான இதழ்கள் குறித்து விரிவான தளத்தில்,
பரந்து விரிந்த பார்வையில் இதுவரை ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. சைவ சமயம் தொடர்பாக
19ம் நுாற்றாண்டு தொடங்கி இப்போது வரை வெளியாகும் மாத இதழ்களைப் பற்றி கடந்த ஓராண்டாக
நான் ஆய்வு மேற்கொண்டு வந்தேன். ஆய்வில் 10 சதவீதமே கடந்துள்ள நிலையில், அதைப் பற்றிசில
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
19ம்
நுாற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுப் பதிப்புகள் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்தும்
முறை பரவலான பின், யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் பல சைவ மாத இதழ்கள் வெளியாகத் தொடங்கின.
இலங்கை
இதழ்கள்
எச்.எம்.
சின்னத்தம்பி என்பவரை ஆசிரியராகக் கொண்டு, 1877ல் வெளியான இலங்கை நேசன்தான் யாழின்
முதல் சைவ இதழ். இலங்கை நேசனில் ஆறுமுக நாவலரும் எழுதியுள்ளார். 1882ல் சரவண முத்துப்பிள்ளை
ஆசிரியராக இருந்து தொடங்கிய சைவ உதயபானு, சைவப் பிரகாச சமாஜத்தால் கொழும்பில் இருந்து
வார இதழாக வெளிவந்தது. The Sivite Rising Sun என்ற ஆங்கிலப் பெயரையும் கொண்டிருந்த
சைவ உதயபானு, வண்ணார்பண்ணையில் இருந்து வெளியானது. 1884 வரை வெளியான இந்த இதழ், அதன்
பின் எப்போது நிறுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. 1888ல் யாழ்ப்பாணத்தில் சைவ பரிபாலன
சபை தொடங்கிய போது, இந்து சாதனம் என்ற இதழை அச்சிடுவதற்காக சைவ உதயபானுவின் அச்சு
இயந்திரங்கள் யாழுக்கு அனுப்பப்பட்டன. சைவ சமாஜம், சைவ உதயபானுவின் தொடர்ச்சியே சைவ
பரிபாலன சபை மற்றும் இந்து சாதனம் என்கிறார், நுாலக நிறுவனர் கோபிநாத்.
1882ல்
மூத்த தம்பிச் செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான விஞ்ஞானவர்த்தனி, ஞானசபாபதிப்
பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளியான சைவாபிமானி போன்றவை முக்கிய சைவ இதழ்களாக விளங்கின.


1908ம்
ஆண்டு யாழ்ப்பாணத்தில் சி.தாமோதரம் பிள்ளையால் (சி.வை.தாமோதரம் பிள்ளை அல்லர்) தொடங்கப்பட்டு
மாதம் இருமுறையாக வெளிவந்ததுதான் ஞானசித்தி இதழ். பின்னர் தமிழகத்தில் இருந்தும் இந்த
இதழை வெளிக் கொண்டு வந்தார். தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சபையில், போதக
ஆசிரியராக இருந்து, 1919ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதி மறைந்தார். இந்த ஞானசித்தியில்
சைவ சமய உண்மைகள் பல அறுதியிட்டு ஆகமப் பிரமாணங்களுடன் வெளியாகின. இந்த தகவல்கள், பிற்காலத்தில்
தமிழகத்தில் வெளியான பல சைவ இதழ்களில் தொடர்ந்து மறுபிரசுரம் செய்யப்பட்டன.
1889ம்
ஆண்டு முதல் இந்து சாதனம் வெளியாகி வருகிறது. இடையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்தது.
2017ம் ஆண்டு முதல் நீர்வை மயூரகிரி சர்மாவை ஆசிரியராகக் கொண்டு புதுப்பொலிவுடன்
வெளிவருகிறது. இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பு Hindu Organ என்ற பெயரில் தனி இதழாகவும்
சில காலம் வெளியானது. ஆரம்ப காலங்களில் நல்லுார் த.கைலாசப்பிள்ளை போன்றோர் இந்து
சாதனத்தில் எழுதி வந்துள்ளனர்.
இவை
தவிர, 20ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், 1908ல் சைவ சூக்குமார்த்த போதினி, 1910ல்
சைவ பாலிய சம்போதினி, 1924ல் சைவ சித்தாந்த பானு ஆகிய இதழ்கள் தோன்றி சில ஆண்டுகளில்
மறைந்துள்ளன
தமிழகத்தில்
சைவ இதழ்கள்
சித்தாந்த
ரத்நாகரம்
சைவ
சித்தாந்தசண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகர் தொடங்கிய சித்தாந்த ரத்நாகரம் என்ற
இதழ்தான் தமிழகத்தில் முதன் முதலாக அறியப்படும் சைவ இதழ். இது மாத, வார இதழ்களைப் போல்
அல்லாமல், ஒரு பெரிய நுாலைப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சஞ்சிகைகளாக அதாவது பாகம்
பாகமாக வெளிவந்தது. அதில்தான் நாயகர் தனது பல நுால்களையும் தொடர் கட்டுரைகளாக எழுதி
வெளியிட்டார். அவற்றுக்கான மறுப்பு எழுந்த நிலையில் அதற்கான பதில்களையும் அந்த அந்த
இதழ்களிலேயே பதிவு செய்தார். பின்னாட்களில் அவை தொகுக்கப்பட்டு நுால்களாக வெளிவந்தன.
நாயகர்
மட்டுமின்றி அவரது சீடர்கள் எழுதிய நுால்களும், கட்டுரைகளும் சித்தாந்த ரத்நாகரம் இதழில்
அவர்கள் பெயருடனோ அல்லது  நாயகரின் பெயருடனோ
வெளியாகின.
ஞானாமிர்தம்
யாழ்ப்பாணத்து
வடகோவைச் சபாபதி நாவலர் அவர்கள், சென்னையில் தொண்டை மண்டல வேளாளப் பிரபுக்களின் உதவி
மற்றும் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நிதியுதவியால், சென்னையில் சித்தாந்த
வித்தியாநுபாலன அச்சியந்திர சாலை அமைத்து அங்கிருந்து சர்வதாரி வருஷம் வைகாசி மாதம்
முதல் அதாவது 1888ம் ஆண்டு மே மாதம் முதல் ஞானாமிர்தம் என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார்.
போதிய நிதியுதவி கிடைக்காததால், 1889ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு ஞானாமிர்தம் நின்று
விட்டது. இதழ் நிறுத்தப்பட்டதை அறிந்த சேதுபதி மன்னர், மீண்டும் முன்பணம் கொடுத்ததால்,
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1891ம் ஆண்டு கர வருஷம் கார்த்திகை மாதம் முதல் சிதம்பரத்தில்
இருந்து வெளியாகத் தொடங்கியது.



ஞானாமிர்தம்
இதழ் வெளியாக, 1891ம் ஆண்டு கர வருஷத்திற்கு 360 ரூபாய் மற்றும் 1892ம் ஆண்டுநந்தன
வருஷத்திற்கு 300 ரூபாயை சேதுபதி மன்னர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியுதவியை
வைத்து மட்டுமே இரண்டு ஆண்டுகள் ஞானாமிர்தம் மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இந்தத்
தகவலை 1892ம் ஆண்டு நந்தன வருஷம்கார்த்திகை மாதம் வெளியான ஞானாமிர்தம் இதழில் நாவலர்
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானாமிர்தம்
இதழில்,சித்தாந்த சைவ போதம், திராவிடப் பிரகாசிகை, ஜகத்குரு விசாரம் என்ற தலைப்புகளில்
தொடர் கட்டுரைகள் வெளியாகின. இவற்றில் திராவிடப் பிரகாசிகை பின்னாளில் தனி நுாலாக
வெளியானது. இதுவே தமிழில் இலக்கிய வரலாறு எழுதுவதற்கான முன்னோடி நுால் என்பார் கார்த்திகேய
சிவத்தம்பி.
வேறு
எந்த மாத இதழ்களிலும் காணக் கிடைக்காத வகையில், ஞானாமிர்த இதழில்தான், இதழில் இலக்கணம்,
இதழாசிரியரின் இலக்கணம், இதழைப் படிப்போரின் இலக்கணம் என மூன்றையும் குறிப்பிட்டு
தனித்தனி கட்டுரைகள் வரைந்தார் நாவலர். இன்று படிப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும்
அன்று இதழ்கள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் இதுபோன்ற வரையறைகள் தேவையாக இருந்தன
என்பதை யூகிக்க முடிகிறது.
ஞானபானு
ஞானபானு
என்ற பெயரில் 19ம் நுாற்றாண்டிலும், 20ம் நுாற்றாண்டிலும் பல மாத இதழ்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக இதழியல் வரலாற்றில், ஞானபாநு என்று சொன்னால் அது விடுதலைப் போராட்ட வீரர்
சுப்பிரமணிய சிவா நடத்தி வந்த இதழையேகுறிக்கிறது. ஆனால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த,
சித்தாந்த போத ரத்னாகரம், வைதிக சைவ சித்தாந்த போத ரத்னாகரம் முதலிய பட்டங்களைப்
பெற்ற காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை, ஞானபானு என்ற தலைப்பில் ஒரு மாத இதழை நடத்தி வந்தார்.
மற்ற
சைவ இதழ்களில் இருந்து இந்த இதழ் முற்றிலும் மாறுபட்டதாக விளங்கி வந்தது. அநேகமாக இவர்தான்,
சைவ இதழியல் உலகில் முதன் முதலில் தலையங்கம் எழுதத் தொடங்கியவர் எனலாம். இவரது குரு,
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பர சிவயோகிகள். இவர், சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை
சோமசுந்தர நாயகருக்கு மாமன் முறை உள்ளவர். ஆலால சுந்தரம் பிள்ளையும் யோகிகளுக்கு
உறவினர்தான். ஆரம்பத்தில் ஆதிசங்கரரின் அத்வைதத்தி்ன்பால் ஈர்ப்புக் கொண்டு, அச்சுதாநந்த
சுவாமிகள் என்ற பெயரில் விளங்கிய யோகிகள், ஒரு கட்டத்தில் சைவ சித்தாந்தத்தின்பால்
ஈர்க்கப்பட்டு தனது பெயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என மாற்றிக் கொண்டார்.
அவரிடம்
சைவ சித்தாந்தப் பாடம் பயின்ற பிள்ளை, அன்றும் இன்றும் வேறெந்த சைவ இதழ்களிலும் வெளிவராத
அத்வைத சம்பிரதாய நுால்களான ஞானவாசிட்டம், பகவத் கீதா சாரம், சைவ, வைணவ தல வரலாறுகள்,
தமிழிலும் ஆங்கிலத்திலும் பழமொழிகள், தாயுமானவரின் பாடல்களுக்கு உரைகள், சூதசங்கிதைக்கு
உரை, புராணங்கள், விரத நிர்ணயங்கள் என பல பரிமாணங்களில் சைவ உண்மைகளை எடுத்துரைத்து
வந்தார்.
இவற்றில்
அத்வைத சம்பிரதாய நுால்களின் உரைகளின் இறுதியில், சைவ சித்தாந்தத் தெளிவு என்ற தனித்
தலைப்பில் அந்த நுால்களுக்கு சைவ சித்தாந்த ரீதியில் விளக்க உரை எழுதியிருப்பார்.
4ம் இதழிலில், தான் ஏன் அத்வைத சம்பிரதாய நுால்களுக்கு உரை எழுதினோம் என தலையங்கத்தில்
விளக்கியிருப்பார்.
சிவஞான
போதத்திற்கு மாதவச் சிவஞான சுவாமிகள் எழுதிய மாபாடியம் அச்சாவதற்கு முன்பே, ஏகாம்பர
சிவயோகிகளிடம் கேட்டறிந்தபடி, சிவஞானபோத நுட்பம் என்ற தலைப்பில் சிவஞானபோதத்திற்கு
விளக்க உரை எழுதி அதை ஞானபானுவில் முதல் கட்டுரையாக இடம்பெறச் செய்தார் பிள்ளை.
ஆங்கில
அரசை வாழ்த்தியும், கோயில்களில் தர்மகர்த்தாக்கள் எப்படி செயல்பட வேண்டும், தாயுமானவ
சுவாமிகளுக்கு உரை எழுதிய அத்வைதிகள் திருவாசகத்திற்கும் உரை எழுத முற்பட்டதைக் கண்டித்தது,
கடல் பிரயாணம் மேற்கொண்ட பிராமணர்களை சடங்குகள் மூலம் சுத்திகரித்து மீண்டும் தங்கள்
சமுதாயத்திலேயே பிராமணர்கள் சேர்த்துக் கொண்டது என பல தலைப்புகளில் விரிவான தலையங்கங்களை
எழுதியுள்ளார் காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை. துரதிர்ஷ்டவசமாக ஞானபானு இதழின் முழு வெளியீடுகளும்
தற்போது கிடைப்பதில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிநபர் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.
சித்தாந்த
தீபிகை
தமிழிலும்
ஆங்கிலத்திலும் சைவ சித்தாந்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்ற ஆசையால், ஜே.எம்.நல்லசாமி
பிள்ளையால், 1897 ஜூன் மாதம்சித்தாந்த தீபிகை தொடங்கப்பட்டது. தமிழில் ஓராண்டு மட்டுமே
வெளிவந்த இந்த இதழ், பின்னர் 1911ம் வரை ஆங்கிலத்தில் முழுமையாக வெளிவந்தது. இதில்
சித்தாந்த சாத்திரங்கள் குறித்த ஆய்வில் ஆழங்கால்பட்ட கட்டுரைகள் வெளியாகின. இன்று
வரை இப்படி ஒரு இதழ் மீண்டும் வரவே இல்லை எனலாம்
ஞானசாகரம்
சென்னையில்
சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகர் நிறுவிய வேதாகமோக்த சைவ சித்தாந்த
சபையின் சார்பில், 1902ம் ஆண்டு முதல், வெளியானதுதான் ஞானசாகரம். நாகை வேதாசலம் பிள்ளை
என்ற இயற்பெயரில் மறைமலையடிகள் தொடங்கிய மாத இதழ் இதுதான், பின்னாளில் அவர் தமிழ்நெறியை
ஏற்றவுடன், இதழின் பெயரும் அறிவுக் கடல் என மாற்றம் பெற்றது. இந்த இதழ் ஆரம்ப நாட்களில்
சென்னை பண்டித மித்திர யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.



இந்த
இதழில் மாகறல் கார்த்திகேய முதலியார், டி.சவரிராய பிள்ளை, யாழ்ப்பாணத்துச் சுன்னாகம்
அ.குமாரசுவாமிப் பிள்ளை, மதுரை சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்ட சைவப் பேரறிஞர்கள் தொடர்
கட்டுரைகளை எழுதி வந்தனர்.
மாணிக்கவாசகர்
கால நிர்ணயம் உள்ளிட்ட தனது நுால்களை, ஞானசாகரம் இதழில் தான் மறைமலையடிகள்தொடர் கட்டுரைகளாக
எழுதி பின்னர் நுால்களாக வெளியிட்டார். இதில்தான், திருவாசகத்தின் முதல் நான்கு அகவல்களுக்கும்
உரை எழுதினார்.
சித்தாந்தம்
சித்தாந்த
தீபிகையின் தொடர்ச்சியாக, சென்னையில் இயங்கி வரும் சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில்
1912ம் ஆண்டில் பூவை கல்யாண சுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தொடங்கியது.
ம.பாலசுப்பிரமணிய முதலியார், திருச்சிற்றம்பலம் பேரறிஞர் மு.அருணாசலம், ந.ரா.முருகவேள்,
சச்சிதானந்தம் என சைவப் பேரறிஞர்கள் இந்த மாத இதழில் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.
ஓலைச்
சுவடிகளில் இருந்து பல சைவ நுால்கள் சித்தாந்தம் இதழில் அச்சுருவுக்குக் கொண்டு வரப்பட்டன.
பொருள் பொதிந்த கட்டுரைகள் மட்டுமின்றி சர்ச்சைக்குரிய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றன.
சித்தாந்தம் இதழில் தான், துடிசைக் கிழார் அ.சிதம்பரனார் முதன் முதலாக, சிவஞானபோதம்
தமிழ் முதல் நுாலே என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி, மெய்கண்டார் அருளிச் செய்த
‘சிவஞானபோதம் தமிழா? வடமொழி மொழிபெயர்ப்பா?
என்ற
விவாதத்தைத் தொடங்கி வைத்தார். பின்னாட்களில் ம.பா. அதை 120 கேள்விகளுடன் தனி நுாலாக்கி
விவாதத்தை நாடளவில் பேசுபொருளாக்கினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சங்கரன் கோவில்
சைவ சித்தாந்த சபை நிறுவனரும், திருவாவடுதுறை ஆதீன வித்துவானுமான பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப்
பிள்ளை முழுமையான பதில்களை அளித்தார்.



சித்தாந்தம்
இதழில் ஆரம்பத்தில், தமிழ், வடமொழி தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் பெரிய அளவில்
நடந்தன. கட்டுரைகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில்விரிவான ஆய்வுகளும் இடம்பெற்றன.
1980களில் சைவ சித்தாந்த சமாஜம், பெருமன்றமாகப் பெயர் மாற்றம் பெற்ற பின்னர், சித்தாந்தம்
இதழின் தடமும் முற்றிலும் மாறியது.
தற்போது,
நல்லுார் சரவணன் தலைமையில் இயங்கி வரும் பெருமன்றத்தின் சார்பில் அவரையே ஆசிரியராகக்
கொண்டு சித்தாந்தம் இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நுாற்றாண்டைக்
கடந்த முதல் சைவ இதழ் என்ற பெருமை சித்தாந்தம் இதழுக்கே உரியது
சைவம்
சைவ
இதழியல் உலகில் மிக நீண்ட காலம் வெளிவந்த இதழ்களில் சைவமும் ஒன்று. சென்னை சிவனடியார்
திருக்கூட்டத்தின் சார்பில், வெளியானது தான் சைவம் மாத இதழ். இருக்கம் ஆதிமூல முதலியாரை
ஆசிரியராகக் கொண்டு இந்த இதழ், 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று சைவ இதழியல் உலகில்
தனி இடம் பிடித்தது.
தமிழகத்தில்
அடியார்கள் முதன்முதலில் ஒரு கூட்டமைப்பாக இணைந்து செயல்பட்ட பெருமைக்குரியது சென்னை
சிவனடியார் திருக்கூட்டம். இதன் சார்பில் பள்ளிக்கூடம், தேவாரப் பாடசாலை, மாத இதழ்
ஆகியவைதொடங்கப் பெற்று தடையின்றி நடந்து வந்தன
மற்ற
அமைப்புகளில் இருந்து மிக வித்தியாசமாக, திருக்கூட்டத்தின் வருடாந்தர வரவு, செலவுகள்
அறிக்கை ‘சைவம்
இதழில் வெளியிடப்பட்டு வந்தது. இதன் மூலம்
வெளிப்படைத் தன்மையைப் பேணி வந்தார் ஆதிமூல முதலியார்.
முதலியார்
மட்டுமின்றி சைவப் பேரறிஞர்கள் பலர் சைவம் இதழில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தனர்.
முதன்முதலாக விளம்பரங்கள் வெளிவந்த சைவ இதழும் இதுதான். சமகாலப் பிரச்சினைகளான மதமாற்றம்,
சுகாதாரம், மகப்பேறு, மருத்துவம் ஆகியவை தொடர்பாகவும் சைவம் இதழில் கட்டுரைகள் வெளியாகின.
வெறும் இதழ் நடத்துவதோடு மட்டுமின்றி, சமூகத்திற்குப் பயனுள்ள பல நடவடிக்கைகளையும்
சென்னை சிவனடியார் திருக்கூட்டம் மேற்கொண்டு வந்தது.
சைவம்
இதழில் பெரும்பாலும், இந்து சாதனம், ஞானசித்தி உள்ளிட்ட இதழ்களில் இருந்தும், சூளை
சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள் போன்ற சீலர்கள் எழுதியதுமான கட்டுரைகள் அச்சிடப்பட்டு
வந்தன. தனிநபர்கள் சைவம் இதழில் கட்டுரைகள் எழுதியது ஆரம்ப காலத்தில் குறைவாகவே இருந்தது.
சிவஞானபோத
மாபாடியம் முதலில் அச்சான பின், சைவம் இதழின் ஆசிரியராக இருந்த ஆதிமூல முதலியார், சிவஞானபோதத்திற்குப்
பொருள் எழுதி தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். இன்று வரை அது நுாலாகவில்லை என்பது
வருந்தத் தக்கது.
பின்னாட்களில்,
மதுராந்தகத்தில் குருகுலம் தொடங்கிய மறைமலையடிகளாரின் சீடர் அழகரடிகள், இதே சைவம்
என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தி வந்தார். சைவம் பற்றியும் சென்னை சிவனடியார் திருக்கூட்டம்
பற்றியும் விரிவான ஆய்வு தேவை.
செந்தமிழ்ச்
செல்வி
சைவ
சித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தின் அதிகாரபூர்வ மாத இதழ் இது. 1925ம் ஆண்டு தொடங்கி
இன்று வரை நடந்து வருகிறது. கா.சுப்பிரமணிய பிள்ளை, மறைமலையடிகள் உள்ளிட்ட சைவப் பேரறிஞர்கள்
பங்கு பற்றிய இந்த இதழ், சைவத்தின் வளர்ச்சிக்காகத் தொடங்கி, தனித்தமிழ் முழக்கத்தை
முன்வைத்து திசை மாறி, தற்போது பல்சுவை இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் தோற்றம்,
வளர்ச்சி, தேய்வு பற்றி தனி ஆய்வே தேவை.
சிவநேசன்
நாட்டுக்கோட்டை
நகரத்தார்களின் குடியிருப்புகளில் ஒன்றான பலவான் குடியில் இருந்து 1925ம் ஆண்டு முதல்
15 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்ததுதான் சிவநேசன். இராம.கு.இராம. ராமசாமிச் செட்டியார்
இதன் ஆசிரியராக இருந்தார். மற்ற சைவ மாத இதழ்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, சமகால
பிரச்சினைகளை அதிகளவில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட ஒரே சைவ இதழ் இதுதான்.
குறிப்பாக,
ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிரான கட்டுரைகளை சிவநேசன் தொடர்ந்து வெளியிட்டு
வந்தது. அதேபோல் சைவ சமயத்தில், பசுத்தோல் போர்த்திய புலிகளாக நடமாடியவர்கள் பற்றியும்
அது தோலுரித்துத் தொங்க விட்டது. ‘சிவநேச
னுக்கு மாநிலம் தழுவிய அளவில் பெரும் வரவேற்பு
கிடைத்திருந்தது.
இந்தித்
திணிப்பை எதிர்த்து பல கட்டுரைகளை வெளியிட்ட சிவநேசன், 1933ம் ஆண்டு கோயில் நுழைவுப்
போராட்டத்தை எதிர்த்துக் கடுமையாக சாடியது. அந்த ஆண்டு முழுவதும் மரபுச் சைவர்கள்,
கோயில் நுழைவுப் போராட்டம் குறித்து விமர்சித்து எழுதிய கட்டுரைகள் சிவநேசனில் தொடர்ந்து
வெளிவந்த வண்ணம் இருந்தன. 1933ல் திருநெல்வேலியில் நடந்தசனாதன இந்து தர்ம மாநாடு குறித்த
விரிவான செய்திகள் சிவநேசனில் இடம் பெற்றிருந்தன.
புகழ்
பெற்ற சைவப் பேரறிஞர்கள் சிவநேசனில் எழுதுவதைப் பெருமையாகக் கருதும் அளவுக்கு சிவநேசனுக்கு
வரவேற்பு இருந்தது. நினைத்த கருத்தை துணிச்சலுடன் எழுதி வெளியிட்டு வந்ததால் ராமசாமிச்
செட்டியாரின் பெயரும் பரவியது. பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை சிவநேசனில், ஆசிரியர்
பெயர் குறிப்பிடாமல், ‘சுலோக பஞ்சக விஷயம்
என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் பின்னாளில்
தனி நுாலாக வெளியானது. அதையும் ராமசாமிச் செட்டியாரே வெளியிட்டார். கோயில் நுழைவுப்
போராட்டத்தை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்ட நீலகண்ட சித்தாந்தியார், சுலோக பஞ்சக
விஷயத்தைப் பாராட்டி எழுதியிருந்தார்.
இந்த
அனைத்து சைவ மாத இதழ்களும், நுால் மதிப்புரைகள், மாதம்தோறும் நடைபெற்ற நிகழ்வுகள்,
கண்டனங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை பொதுவாக வெளியிட்டு வந்தன. மிக அரிதினும் அரிதாகவே
இவற்றில் விளம்பரங்கள் வெளிவந்தன. வருவாய் நோக்கம் கருதி இவற்றின் ஆசிரியர்கள் இந்த
மாத இதழ்களை நடத்தவில்லை என்பது தெளிவு.
இவை
தவிர, நெல்லையில் செயல்பட்டு வந்த வைதிக சைவ சம்மேளனம் என்ற அமைப்பின் சார்பி்ல், வி.சிதம்பர
ராமலிங்கம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு சமயஞானம் என்ற மாத இதழ் வெளியானது. 1901ம்
ஆண்டில் இந்துக் கல்லுாரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்த தி.பா.சிவராம பிள்ளை,
திருநாவுக்கரசு என்ற பெயரில், மாத இதழ் நடத்தி வந்தார். நெல்லையின் சைவ அறிஞர்களான
செப்பறை சுவாமிகள், காருடை சூரியமூர்த்திப் பிள்ளை போன்றோர் அதில் பங்களிப்பு செய்தனர்.
அருட்பா – மருட்பா வழக்கிற்காக நா.கதிரைவேற் பிள்ளைக்கு நிதியுதவி திரட்டிக் கொடுத்தது
பற்றிய செய்திகள் இந்த இதழி்ல்தான் காணப்படுகின்றன.
கொங்கு
நாட்டின் பேரூரில் இருந்து ம.நா.ராமசாமி சிவாசாரியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான
சைவப் பிரகாசம், வடமொழியில் உள்ள சைவ நுால்களை தமிழாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே
கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான சைவ வித்யா, நெல்லை பேட்டையில்
இருந்து, தங்கவேலுப் பிள்ளை என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஞான அரசு, புதுவையில்
இருந்து யாழ்ப்பாணம் ச.கந்தையா பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த வித்தகம், சித்தாந்த
பண்டித பூஷணம் பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட சமயசாதனம்
என பல சைவ இதழ்கள் சொல்லரிய தொண்டாற்றியிருக்கின்றன.
இந்தக்
கட்டுரையில், திருமடங்களின் சார்பில் வெளிவரும் இதழ்களை நான் சேர்க்கவில்லை. மாறாக,
தனிநபர்கள், தனி அமைப்புகள் சார்பில் வெளியான இதழ்களையேஅறிமுகம் செய்துள்ளேன், இந்த
இதழ்களில் பல தற்போது கிடைப்பதற்கே அரிதாகி விட்ட நிலையில், இவற்றின் சில பதிப்புகளை,
தமிழ் இணைய மின்னுாலகத்தில் மின்னாக்கமாக காணமுடிகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்கு
நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.
இக்கட்டுரை
எழுதுவதற்கு, உ.வே.சா. நுாலகம் தான் எனக்குப் பெருமளவில் உதவியது. அந்த நுாலக நிர்வாகிகளுக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Posted on Leave a comment

சில பயணங்கள் – சில பதிவுகள் 28 | சுப்பு

சி.ஆர். நரசிம்மன்
மத்தியில்
ஆட்சி செய்த இந்திரா காந்தி அரசு நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து“தேர்தல்
நடத்தப்படும்
என்ற அறிவிப்பை வெளியிட்டது
(18-01-1977). இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஜனதா கட்சியின்
கூட்டணிக்கு 292 இடங்கள் கிடைத்தன.
தமிழகத்தில்
ஜனதா கூட்டணியில் ஸ்தாபன காங்கிரஸுக்கு மூன்று இடங்களும், திமுகவுக்கு ஒரு இடமும் கிடைத்தன.
அதிமுக – இந்திரா காங்கிரஸ், வலது கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு முப்பத்தேழு இடங்கள் கிடைத்தன.
தேர்தல்
முடிவுகளைத் தொடர்ந்துமொரார்ஜி தேசாய் பிரதமராகப் பதவியேற்றார். இந்த அமைச்சரவையில்
அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோர் இடம்பெற்றதில் என்னைப் போன்றோருக்கு
மகிழ்ச்சி.
ஆனால்
ஜனதா கட்சியில் ஒற்றுமை என்பது தேடப்பட வேண்டிய பொருளாக இருந்தது. உள் கட்சியில் ஏற்பட்ட
பிளவு காரணமாக மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். அடுத்த பிரதமராக வந்தவர் சரண் சிங்.
சரண் சிங் அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து, பாலா பழனூர் ஆகியோர்
இடம்பெற்றனர். ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பிறகு சரண் சிங் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்தது (ஜனவரி 1980).
இந்தத்
தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 351/525 இடங்களில் வெற்றிபெற்றது. இந்திரா பிரதமரானார்.
இதற்கிடையே
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் (ஜூன் 1977) அதிமுக கூட்டணி ஆட்சியைப்
பிடித்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சரண்
சிங் பதவிவிலகலுக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (ஜனவரி 1980)தமிழ்நாட்டின்
அரசியல் அணிவகுப்பில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி
அமைத்து பெரும் வெற்றிபெற்றன. அதிமுகவுக்குக் கிடைத்தது இரண்டு இடங்கள்தான்.
மு.கருணாநிதியின்
விருப்பத்திற்கிணங்க பிரதமர் இந்திராவால் அதிமுக அரசு கலைக்கப்பட்டது
(17-02-1980).
அதிமுக
கப்பல் மூழ்கிவிடும் என்ற நினைப்பில் திமுகவினர் மிதந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குத்
தீனி போடும் வகையில் முரசொலியில் அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருந்தன. அமைச்சர் சௌந்தர
பாண்டியன் விலகல், மாநிலங்களவை உறுப்பினர் நூர்ஜஹான் ரசாக் திமுகவில் சேர்ந்தார், அதிமுக
எம்.எல்.ஏ ஆறுமுகம் விலகல், வி.பி.முனுசாமி எம்.பி திமுகவில் சேர்ந்தார், செல்வராஜ்
எம்.எல்.ஏ திமுகவில் சேர்ந்தார், வீட்டுவசதி வாரியத் தலைவர் செல்லையா திமுகவில் சேர்ந்தார்,
வெங்கா எம்.பி திமுகவில் சேர்ந்தார் என்கிற ரீதியில் முரசொலி செய்திகள் வெளிவந்து திமுகவினரை
குஷிப்படுத்திக்கொண்டிருந்தன.
இந்த
பரபரப்பான அரசியல் பின்னணியில்தான் நான் சமாசார் செய்தி நிறுவனத்தின் தமிழ்நாடு செய்தியாளராக
இருந்தேன். அதில் இரண்டு சம்பவங்களைமட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
தமிழ்நாடு
ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரியின் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.
அது அன்றைய குடியரசுத் துணைத்தலைவர் எச்.எம்.ஹிதயதுல்லாவின் பிறந்தநாளுக்கான விருந்து.
நான் கலந்துகொண்டேன் (டிசம்பர் 1979). செல்வந்தர்கள், உயர்மட்டத்திலிருக்கும் அரசியல்வாதிகள்,
அதிகாரிகள் ஆகியோரோடு அதிகப் பழக்கம் இல்லாத எனக்கு அது புது அனுபவமாக இருந்தது.
ஆரம்பமே
சரியில்லை. உள்ளே நுழைந்தவுடன் நான் ஒரு இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன். அங்கு வந்த
ஒரு அதிகாரி“கவர்னர் மாளிகையின் எல்லைக்குள் சிகரெட் பிடிக்கக்கூடாது

என்று என்னை எச்சரித்தார். நான் புகைப் பழக்கத்தை விட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை
அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் திரும்பிப்
போய்விடுகிறேன் என்று நான் சொல்லச் சொல்ல அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிகரெட்
விஷயத்திலேயே குறியாக இருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் சம்பாஷணை எந்தத் தரப்பிற்கும்
வெற்றி தோல்வியில்லாமல் முடிவுக்கு வந்தது. விருந்து நடக்கும் இடத்திற்கு நான் அழைத்துச்
செல்லப்பட்டேன்.
அதுவரை
சினிமாக்களில் மட்டுமே நான் பார்த்திருந்த காட்சி அது. விசாலமான அறையின் மையப்பகுதியில்.
மிகப்பெரிய முட்டை வடிவில் மேசை. வெளிச்சத்துக்கென்று இல்லாமல் அழகுக்காகச் செய்த விளக்குகள்.
கூப்பிடு தூரத்தில் சீருடைப் பணியாளர்கள். பத்து பேர் சாப்பிடும் விருந்துக்கு நான்கு
பணியாளர்கள், இரண்டு மேஸ்திரிகள்.
என்னைத்
தவிர, சட்டப் பேரவைத் தலைவர் ம.பொ.சிவஞானம், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில், ஆற்காடு
இளவரசர், கலாசேத்திராவின் ருக்மணி அருண்டேல்,தமிழ்நாடு சட்ட அமைச்சர் கே.நாராயணசாமி
முதலியார், ராஜாஜியின் புதல்வர் சி.ஆர்.நரசிம்மன்,ஹிதயதுல்லா தம்பதியினர் மற்றும் பட்வாரி.
விருந்தினர்கள்
அமர வைக்கப்பட்ட பிறகு பட்வாரியும்,ஹிதயதுல்லா தம்பதியரும் வந்தார்கள். அவர் வரும்போது
எழுந்து நிற்க வேண்டும் என்று எனக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்டது. இந்த மாதிரி விஷயங்களில்
எனக்கு சமர்த்து குறைவு என்று எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்கள்.
எனக்குப்
பக்கத்தில் இருந்தவர் ம.பொ.சி. பேரவையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காகப் போய்
வந்ததில் அவரோடு கொஞ்சம் பழக்கம் உண்டு. ம.பொ.சி எனக்குத் தெரிந்தவரையில் சாமானியர்களில்
சாமானியர். “இங்கே எப்படி நடைமுறை
என்று அவரிடம் கேட்டுவிட்டேன். அவர் முதலிலேயே
மூன்று மணிகளை அடித்துவிட்டார். “நாமாகப்பேசக்கூடாது, சத்தம்போட்டுப் பேசக்கூடாது,
கேட்ட கேள்விகளுக்கு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் என்பவைதான்

அந்த எச்சரிக்கை மணிகள்.
இத்தனையும்
மீறி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. மாளிகையின் பணியாளர் ஒருவர் என்னருகில் வந்து,
குனிந்து காதில்“விருந்து முடிந்த பிறகு மேதகு ஆளுநர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்

என்றார். ம.பொ.சியையும் அவருடைய எச்சரிக்கையையும் மறந்துவிட்ட நான்“என்னோடு பேச விரும்புகிறீர்களா?

என்று பட்வாரியைப் பார்த்துக் கேட்டுவிட்டேன், சத்தம் போட்டு. எங்களுக்கு சம்பந்தமில்லை
என்ற மாதிரிஎல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள், பட்வாரி உட்பட.
விருந்து
நன்றாகத்தான் இருந்தது. ஆனால் எல்லோருமே தயங்குமிடத்தில் விருப்பப்படி விளையாட நம்முடைய
நாகரிகம் இடம் தரவில்லை.
விருந்துக்குப்
பிறகு, ஆளுநர் என்னை அழைத்துப் பேசுவார் என்று காத்திருந்தேன். அவர் அழைக்கவில்லை.
எல்லோரும் அவரவர்களுடைய காரில் ஏறி வெளியேறிவிட்டார்கள். மாளிகையின் வாசலறையில் மூவர்
மட்டும் இருந்தோம். நான், சி.ஆர்.நரசிம்மன் மற்றும் ஆளூநரின் ஏ.டி.சி. (A.D.C).
மற்றவர்கள்
புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தபோது, சி.ஆர்.நரசிம்மன் என்னிடம் கேட்டார். “தி.நகருக்கு
ஆட்டோ சார்ஜ் எவ்வளவு ஆகும்
என்று. என்னை அந்த வார்த்தைகள் வெகுவாகப்
பாதித்துவிட்டன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் வக்கீல் தொழிலில் சம்பாதித்த
ராஜாஜியின் புதல்வர் இவர். தவிர, சி.ஆர்.நரசிம்மன் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக
இருந்திருக்கிறார். கை சுத்தம் என்பதால் காசு மிச்சமில்லை. இப்போது கிண்டி ராஜ்பவனிலிருந்து
தி.நகருக்கு ஆட்டோவில் போகும் செலவைப் பற்றித் தயங்குகிறார் என்பது எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது. உடைமைகளையும், ஊதியங்களையும் தேச நன்மைகளுக்காக விட்டுக்கொடுத்தவர்களின்
குடும்பங்களுக்கு இந்த கதிதான் என்கிற விஷயம் உறைத்தது.
அவரிடம்“நான்
ஏற்பாடு செய்கிறேன்
என்று சொல்லிவிட்டு மெயின் ரோடிலிருந்து
ஆட்டோவை மடக்கி உள்ளே அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி ஏ.டி.சியிடம் கேட்டுக்கொண்டேன்.
அவர் உதவினார். ஆட்டோ வந்தது. தமிழர்கள் செய்த பாவச் செயலுக்குப் பரிகாரமாக நானே அவருடன்
ஆட்டோவில் போய் அவரை விட்டுவிட்டு பிறகு அடையார் வீட்டுக்குத் திரும்பினேன். ஆட்டோ
செலவு என்னுடையது…
*
பிரதமர்
இந்திரா பதவி ஏற்ற நூறாவது நாளில் சென்னைக்கு வந்தார் (ஏப்ரல் 1980). பிரதமரைச்சந்திப்பதற்காக
சென்னை விமான நிலையத்தின் வி.ஐ.பி பகுதியில் பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தோம். என்னையும்
சேர்த்து இருபது பேர். எங்களை பொழுது விடியாத நேரத்தில் கலைவாணர் அரங்கத்திற்கு வரச்
சொல்லி மூன்று வேன்களில் ஏற்றி விமான நிலையத்திற்குக் கூட்டி வந்திருந்தார்கள். எல்லோரும்
கலைவாணர் அரங்கத்திற்கு ஆறு மணிக்குதான் வந்தார்கள். நான் மட்டும் சங்கக் கட்டுப்பாட்டுடன்
ஐந்து மணிக்கு ஆஜர். பின் விளைவுகள் என்னை பாதித்தபடியே இருக்க மீனம்பாக்கம் விமான
நிலையத்திற்கு வந்து காத்திருந்து ஒன்றுக்கு இரண்டு காப்பி குடித்துவிட்டு என்ன கேட்கலாம்
என்று யோசித்திருந்தபோது “யஷ்பால்
என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. கூப்பிட்டவர்
இந்திரா.
யஷ்பால்
என்பவர் இந்திராவின் உதவியாளர் யஷ்பால் கபூர். அரசு ஊழியராக இருந்த யஷ்பால் கபூர் அரசு
வேலையைத் துறந்துவிட்டு உத்திரபிரதேசத்தின் ரேபெரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திராவுக்கு
உதவியாளராக இருந்தார் (1971). அரசு வேலையிலிருந்து யஷ்பால் கபூர் விடுவிக்கப்படுவதற்கு
முன்பே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவிட்டார் என்பது அலகாபாத் நீதிமன்றத்தில் சோசலிஸ்ட்
தலைவர் ராஜ் நாராயண் தொடுத்த வழக்கின் பாய்ண்டுகளில் ஒன்று என்பதைக் குறித்துக்கொள்ளவும்.
இந்திரா
சோபாவில் அமர்ந்திருக்க, எதிரில் நாங்கள் நின்றிருந்தோம். சில போட்டோகிராபர்களும் சேர்ந்துகொண்டார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிப்போட்டர்கள் இரண்டு பேர் டேப் ரிக்கார்டரின் பளு தாங்காமல்,
தேடி ஒரு ஸ்டூலைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பத்து நிமிடம்தான் பிரதமர் பேசுவார் என்று
எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. பத்து என்றால் பதினைந்து என்று அர்த்தம் என்று அகில
இந்திய வானொலிக்காரர் என் காதில் கிசுகிசுத்தார்.
பார்வைக்கு
இந்திரா பணக்கார சீமாட்டி போலத் தெரிந்தார். பதில்களெல்லாமே ஏதோ எங்களுக்குச் செய்கிற
சலுகை போல் இருந்தது. இதனால் அந்த இடத்தில் கேள்வி கேட்பதில் தயக்கம் இருந்தது. சர்க்கரைக்கான
இரட்டை விலை என்கிற ஜனதா அரசின் உத்தரவை (Dual pricing policy) இந்திரா ரத்து செய்திருந்தார்.
அதுபற்றி ஒரு கேள்வி வந்தது. இன்னொருவர் பதுக்கப்பட்ட சர்க்கரையை வெளிக்கொண்டுவர முடியவில்லையே
என்று கேட்டார். அதற்கு இந்திரா“இந்த நாடு மிகப் பெரிய நாடு. இதன் மூலைகளில் எல்லாம்,
கிராமங்களில் பதுக்கப்பட்டுள்ள சர்க்கரையைக் கண்டுபிடித்து எடுக்க அரசு இயந்திரம் போதாது

என்றார்.
இந்த நேரத்தில் நான் புகுந்தேன். “கிராமங்களில்
இருப்பவர்கள்தான் பதுக்கல் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களா? “ என்று கேட்டேன். அவர்
புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார், பதிலில்லை. இடைவெளியில் இன்னொருவர் வேறு கேள்வி
கேட்க விஷயம் திசைமாறிவிட்டது.
“கிராமங்களில்தான்
சர்க்கரை பதுக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரதமர்
என்பதாகச்
செய்தி எழுதி அனுப்பிவிட்டேன். விளைவு, அது இந்தியா முழுவதும் செய்தியாகிவிட்டது. தமிழகத்தில்
இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் இதைப் பதிவு செய்திருந்தது.
சர்க்கரை
விஷயமாக நான் கொடுத்த செய்தி பற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து சமாசார் தலைமையிடம்
விசாரித்திருக்கிறார்கள்.இதன் விளைவாக என் மேலதிகாரி என்னை விசாரித்தார். அவருக்கு
அவசியமாகத் தெரிந்த விசாரணை என் புத்திக்கு அநாவசியமாகப்பட்டது. ஒரு கட்டத்தில் நான்
கோபப்பட்டேன். வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
வேலையை
விட்டு விலகியவுடன் ராஜேந்திரனைப் பார்க்க நொச்சிக்குப்பத்துக்குப் போனேன்.அங்கே ராஜேந்திரனுக்கும்
புதிய பார்ட்னர் குமாருக்கும் தகராறு. நாகப்பட்டினத்திலிருந்து மூட்டை மூட்டையாக நெத்திலிக்
கருவாடு வாங்கிவந்து அடுக்கி வைத்திருந்தார்கள். வால்டேக்ஸ் ரோடிலுள்ள கருவாடு மொத்த
வியாபாரிகள் அதை வாங்கத் தயாராக இல்லை. இதுதான் பிரச்சினை.
“மொத்தமாக
விற்க முடியாவிட்டால் சில்லறையாக விற்கலாமே
என்பது என் யோசனை. அதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
ஒருநாள் முழுவதும் போராடி அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டேன். மறுநாள் ஒரு சைக்கிள்
ரிக்க்ஷாவில் இரண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டேன். துணைக்கு சின்ன ராஜேந்திரன் என்ற பையன்.
சைதாப்பேட்டை
மீன் மார்க்கெட்டுக்குப் போய் அங்கு கருவாடு விற்கும் பெண்களுடன் பேசினேன். மூட்டையிலிருந்து
எடுக்கப்பட்ட கருவாடுகள் ஐந்து பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் அதைக் கூறுகட்டி
விற்றார்கள். காலை முதல் மாலை வரை கருவாட்டுக் கடையில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தேன்.
என் கையில்“Talks with Ramana
.
பத்து
நாட்களில் கருவாடு விற்கப்பட்டு கமிஷன் கொடுக்கப்பட்டு போட்ட பணத்தை எடுத்துவிட்டோம்.
பிறகு நானில்லாமல் சின்ன ராஜேந்திரனை அனுப்பி தங்கசாலையிலும் இதே பார்முலா தொடர்ந்தது.
இதற்குப்
பிறகு குமாருடைய முயற்சியால் மேட்டூர் அணையில் கிடைக்கும் மீன்களை ஹெளராவிற்கு எடுத்துப்
போனேன்.இது ஒரு மாதம்தான்.சரிவரவில்லை.
கல்கத்தா
அருகில் உள்ள தட்சிணேசுவரத்துக் காளி கோவிலில் வெகு நேரம் நின்றிருந்தேன்.கல்கத்தாவின்
நெரிசல் இங்கு இல்லை.மக்கள் வரிசையாக வந்து கங்கை நீரைக் குடத்தில் எடுத்து வந்து புஷ்பங்களோடு
லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்தார்கள்.சிமெண்ட் தரையில் வெய்யில் சூடு தெரியாதிருக்க
கங்கைச் சிதறல்.இந்தப் பராசக்திதானா பரமஹம்சர் கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டாள்?இவளா
பேசினாள்? இப்படி ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டிருந்தேன்.ஆனால் விக்ரகம் நான் கற்பனை
செய்திருந்ததைவிடச் சிறியதாக இருந்தது.
தட்சிணேசுவரம்
இப்படி என்றால் கல்கத்தாவின் மையப்பகுதியில் இருக்கும் காளிகட்டம் நேர் எதிர்.கடவுள்
நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடும் போலிருந்தது.வரிசையாகப் போகும்போது, எனக்கு முன்னால்
ஒருவன் காளியின் மீதே கைகால் விரித்துக் கவிழ்ந்திருந்தான்.பெரிய பக்தன் போலிருக்கிறது
என்று நினைத்துக் காத்திருந்தேன்.அவன் அசைவதாய் இல்லை.சிறிது நேரத்திற்குப் பிறகுதான்
எனக்கு அங்கே நடப்பது என்ன என்று தெளிவாகியது.காசு கொடுத்தால் நாம் காளியைத் தொட்டுப்
பார்க்கலாம்.அப்படிக் கொடுக்காதவர்கள் தொட்டுவிட முடியாதபடி இந்த பந்தோபஸ்து.
ஹெளராவிலிருந்து
திரும்பி வரும்போது பாரதீப் போனேன்.கொண்டம்மாள் எனக்குத் தர வேண்டிய பாக்கியை வசூல்
செய்யலாம் என்று போனால் கொண்டம்மாளின் நிலைமை பரிதாபமாயிருந்தது.அவளுடைய இடத்தில் இன்னொரு
வியாபாரி வந்துவிட்டதால், வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.கணவன் எப்படி
இருக்கிறான் என்று கேட்டதற்கு, “அவர் இப்பவெல்லாம் ரொம்ப திருந்திட்டார்.வீட்லதான்
குடிக்கிறாரு
என்றாள்.
இடையே
ஒருமுறை பீஹாரில் உள்ள பொகாரோவுக்குப் போய் விஷ்ணுவோடு சில நாட்களிருந்தேன்.சென்னைக்கு
வந்தவுடன் எனக்கு நாகப்பட்டினத்தில் போஸ்டிங்.
கொண்டய
பாலத்தில் விசைப்படகைப் பறிகொடுத்ததிலிருந்து எனக்கும் ராஜேந்திரனுக்கும் ஒரு இடைவெளி
ஏற்பட்டுவிட்டது.அந்த இடைவெளிக்குக் காரணம் பணநஷ்டம் அல்ல.அவனுடைய குடிப்பழக்கம்தான்.ராஜேந்திரன்
விடியற்காலையில் எப்போது சாராயக்கடை திறக்கும் என்று காத்திருப்பான்.இரவில் கடை மூடும்வரை
இருந்து குடித்துவிட்டு வருவான்.
நாகப்பட்டினத்திலிருந்து
ஐஸ்மீனை நாங்கள் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். குமார் சென்னையில் அதை விற்றுக்
கொண்டிருந்தான்.கம்பனி சட்டப்படி எங்களுக்கு ஆளுக்கு தினசரி பாட்டா நாற்பது ரூபாய்.என்னுடைய
செலவு பத்து ரூபாயைத் தாண்டாது.ஒரு ரூபாய் கொடுத்தால் லாட்ஜில் படுக்கை வசதி உண்டு.அங்கேயே
வராந்தாவில் தங்கிக் கொள்ளலாம்.குளியலறை, கழிவறையைப் பயன்படுத்தலாம்.காலையில் ஒரு டீ
மட்டும் சாப்பிடுவேன்.மதியம் ஐந்து ரூபாய் கொடுத்து, பையனை அனுப்பி, வரும் கேரியர்
சாப்பாட்டை நானும்அவனும் ஒரு நாயும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.இரவு உணவு இரண்டு
ரூபாய்.இடையில் ஒரு டீ உண்டு.ராஜேந்திரனோ சூரியன் உச்சிக்கு வருவதற்குள் நாற்பது ரூபாயைக்
காலி செய்துவிட்டு, என்னிடம் அன்றாடம் ஒவர் டிராப்ட் கேட்பான்.என்னுடைய மீதத்தை அவனுக்குக்
கொடுத்துவிடுவேன்.
நாங்கள்
தங்கியிருந்த லாட்ஜில் ஒரு மலையாளி இருந்தார். இவர் தனக்கு மந்திர, தந்திரங்கள் தெரியும்
என்று சொல்லி அங்கேயிருந்தவர்களை மிரட்டி வைத்திருந்தார்.ஆனால் என்னிடம் மட்டும் மரியாதையோடிருப்பார்.ஒருநாள்
இரவு நான் அவருடைய அறையில் தங்கினேன்.அறையில் நான் மட்டும்தான்.வராந்தாவில் மற்ற வியாபாரிகள்.
என்னால் தூங்க முடியவில்லை.கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று அங்கே நடமாடுவதைப் போன்ற
உணர்வு.எழுந்து வெளியே வந்து படுத்துவிட்டேன்.
காலையில்
அவரை விசாரித்தேன்.அவர் சிரித்தார். பதில் சொல்லவில்லை.அங்கே இருந்தவர்களிடம்“டேய்,
இவன் லுங்கியை அவுறுங்கடா
என்றேன்.இரண்டு பேர் பிடித்துக்கொள்ள, லுங்கி
அவிழ்க்கப்பட்டது.ஒரு தொடையில் தையல் போட்டிருந்தது.தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சினார்.சில
துர்தேவதைகளை உபாசனை செய்து தன் கட்டுக்குள் வைத்திருப்பதாகச் சொன்ன அவர், “தொடைக்குள்
மந்திரத் தகடு இருக்கிறது
என்றார்.அவருடைய மந்திரம் என்னிடம் பலிக்கவில்லை
என்று ஒப்புக்கொண்டார்.பிறகு மான் கொம்பு, நவபாஷாணக்கல் ஆகியவற்றை சன்மானமாகக் கொடுத்தார்.அந்தப்
பொருட்களை அங்கே இருந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.
அவருடைய
லுங்கியை ஏன் அவிழ்க்கச் சொன்னேன் என்று எனக்குத் தெரியாது.ஆனால் அவர் என் மணிக்கட்டில்
கட்டியிருந்த கயிற்றை மந்திரக் கயிறு என்று அவர் நினைத்துவிட்டார் என்கிற விஷயம் பிறகு
தெரிய வந்தது.உண்மையில் அது ஆர்.எஸ்.எஸ். நண்பரால் கட்டப்பட்ட ரட்சாபந்தன்கயிறுதான்.
தொடரும்…


Posted on Leave a comment

2020 டெல்லி மாநிலத் தேர்தல் முடிவுகள் – கட்சிகள் கற்க வேண்டியது என்ன? | லக்ஷ்மணப் பெருமாள்

புதுடெல்லிக்கான சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 08,2020 அன்று
நடந்தது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி
11,2020 அன்று
வெளியாகின. மொத்தமுள்ள
70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி8 இடங்களையும்
பிடித்தன. காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. டெல்லியின் தேர்தல் முடிவுகளை
டெல்லியோடு மட்டுமே நாம் பொருத்திப் பார்க்கக் கூடாது. இன்றைய காலகட்டத்தில்
வாக்காளர்களின் மனநிலை எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு கட்சியும் கூர்ந்து
கவனிக்க வேண்டும். அதைத் தவறவிடும் கட்சிகள் மக்களை விட்டு வெகு தூரத்திற்குச்
செல்லும் என்பதைத்தான் டெல்லி முடிவுகள் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதற்கான
காரணங்களைக் காண்போம்.
வட இந்திய வாக்காளர்கள்
முட்டாள்கள் – ஆர்.எஸ்.பாரதி    
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வட இந்தியர்களை
முட்டாள்கள் என்கிறார். இது தமிழகத்தில் உள்ள பல திராவிடத் தமிழர்களுக்குள்ள
ஒருவிதமான மன நோய். கல்வியறிவில் வட இந்தியர்கள் தமிழகத்தை விடப்
பின்தங்கியுள்ளார்கள் என்பதாலும், வட இந்தியர்கள் தமிழகம் வாக்களிக்கும் முறைக்கு
நேரெதிராக வாக்களிப்பதாலும், திராவிடத் தமிழர்கள் வட இந்திய வாக்காளர்களை
முட்டாள்கள் என்று கருத்தை உதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். எந்த ஒரு
மாநிலத்தையும் இப்படிப் பார்ப்பது 
தவறானது.
1975ல் இந்தியா முழுமைக்கும் இந்திரா எமெர்ஜென்சி சட்டத்தைக் கொண்டு
வந்தார். அதன் பிறகு நடந்த லோக்சபா தேர்தலில்
(1977)
இந்தியா முழுமைக்கும் இந்திராவின் கொடுங்கோல ஆட்சிக்கு எதிராக ஜனதாகட்சி பெரும்
வெற்றி பெற்றது. குறிப்பாக வட இந்தியாவில் மாபெரும் வெற்றியை ஜனதா கட்சியும் தென்
இந்தியாவில் காங்கிரசும் அதிக இடங்களைப் பிடித்தன. அதிலும் தமிழகத்தில் காங்கிரஸ்
அதிமுக கூட்டணி
34 இடங்களைப் பிடித்திருந்தது. ஓர்
கொடுங்கோல ஆட்சிக்குப் பின்னாக நடந்த தேர்தலில் தலைகீழாக வாக்களித்தவர்கள்
புத்திசாலியான வாக்காளர்களா என்று கேட்டால் திராவிடத் தமிழர்கள் முகத்தை எங்கு
கொண்டு வைப்பார்கள்? இதை விடுங்கள், வட இந்திய வாக்காளர்களும் புத்திசாலிகள்
என்பதற்கு சமீப காலத்தில் நடந்த இன்னொரு உதாரணம் தருகிறேன்.
ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும்பாராளுமன்றத் தேர்தலும் 2019ல் ஒரே நேரத்தில்
நடக்கிறது. அங்குள்ள வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சியை
8 லோக்சபா
இடங்களில் வெற்றி பெறச் செய்கிறார்கள். இது
56 சட்டசபை
இடங்களை வெல்வதற்கான எண்ணிக்கை. ஆனால், அதேதினத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்
பாஜக வெறும்
23 இடங்களையே பிடிக்கிறது. நவீன்
பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமோ
112 சட்டசபை இடங்களைப்
பிடித்தாலும் லோக்சபா தேர்தலில்
12 இடங்களைத் (84 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களைத்) தான் பெறுகிறது. பெரும்பாலும்
பணம் கொடுத்து வாக்காளர்களை மயக்காமல் நடக்கும் தேர்தலில் ஒரு மாநில வாக்காளர்கள்
இப்படி வாக்களிக்கிறார்கள் என்றால், உண்மையில் அவர்களிடம் தெளிவு இருக்கிறது
என்றுதான் பார்க்கவேண்டும். இந்த எளிய மக்களைத்தான் திராவிடத் தமிழர்கள் என்று
சொல்லிக் கொள்பவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள்.
இப்போது இன்னொரு வட இந்தியப் பகுதியான டெல்லியைப்
பார்க்கலாம். அங்குள்ள வாக்காளர்கள் மிகத் தெளிவாக வாக்களிக்கும் முறையைப்
பின்பற்றுகிறார்கள்.
2013ல் பாஜக 32 (34%), ஆம் ஆத்மி, 28(29%), காங்கிரஸ் 8 (24.8%) இடங்களில் வெல்கிறது.
இந்தத் தேர்தலில் குழப்பமான ஓர் முடிவு வருகிறது. ஏனெனில், ஆம் ஆத்மியின் தொடர்
போராட்ட முறைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருக்கிறது. காங்கிரசுடன் ஆட்சி
அமைத்த கெஜ்ரிவால் மூன்று மாதங்களுக்குள்ளாகத் தானே ஆட்சியைக் கலைத்து விடுகிறார்.
அதன் பிறகுஆறு மாதத்திற்குள்ளாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. டெல்லி வாக்காளர்கள்
மிகத் தெளிவாக மோடிதான் பிரதமராக வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். மொத்தமுள்ள
7
இடங்களிலும் பாஜக வெல்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஓர் இடத்தைக்
கூடப் பெறவில்லை.
அதே வேளையில் அடுத்து ஆறு மாதங்களுக்குள்ளாக நடக்கும்
சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள
70 இடங்களில்67 இடங்களைக் கைப்பற்றுகிறது. பாஜக
வெறும்
3 இடங்களை மட்டுமே பெறுகிறது. காங்கிரஸ்
துடைத்தெறியப்படுகிறது. ஆறு மாத இடைவெளிக்குள் நடந்த மூன்று தேர்தல்களில் எப்படி
டெல்லி வாக்காளர்கள் மாறி ஓட்டுப் போடுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கும்
போதுதான்,டெல்லி முனிசிபாலிட்டிக்கான தேர்தல்கள்
2017ல்
நடக்கின்றன. அதில் பாஜக
181 இடங்களையும், ஆம் ஆத்மி 49 இடங்களையும்,காங்கிரஸ் 46 இடங்களையும்
வெல்கிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால்
2012ல்
நடந்த முனிசிபாலிடி தேர்தலில்
131 இடங்களைப் பெற்ற பாஜகதான்
181 இடங்களைப் பெறுகிறது. பாஜக கடந்த மூன்று எம்சிடி
தேர்தலிலும் வெற்றிவாகை சூடி வருகிறது என்பதும் மேலும் டெல்லி மக்களைக் கவனிக்க
வைக்கிறது.
2015 சட்டசபைத் தேர்தலில் 67 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி ஏன் பெருமளவு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை
என்கிற கேள்வி மிக முக்கியமானது. தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவும் கருணாநிதியும்
ஆட்சியில் இருக்கும் வரையில் சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் எந்த
தில்லாலங்கடி வேலை செய்தாவது வெற்றியைத் தக்க வைக்க முயற்சி செய்வதைப்
பார்த்திருக்கிறோம். மக்களும், ஆள்கிற கட்சியே உள்ளாட்சித் தேர்தலில் வென்றால்தான்
நமக்கு நல்லது என்ற அடிப்படையில் வாக்களிப்பார்கள். அதைத் தவறு என்று சொல்ல
மாட்டேன். ஆனால் அதே வேளையில், டெல்லியில் முனிசிபாலிடி உறுப்பினர்களில் பாஜகவினர்
தங்களுக்கு சேவை செய்வதால், அவர்களே இருக்கட்டும் என்ற அடிப்படையில் தொடந்து
மூன்று முறை ஒரே கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் டெல்லி வாக்காளர்களைத்
தாராளமாகப்பாராட்டலாம்.
டெல்லி வாக்காளர்களின் மனநிலை மாற்றம் ஓர் படிப்பினை.
அடுத்து
2019க்கான லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை
முடிவு செய்கிற தேர்தல். டெல்லி வாக்காளர்கள்
2014ஐக்
காட்டிலும் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்களிக்கிறார்கள். மீண்டும் டெல்லியிலுள்ள
ஏழு இடங்களையும் பாஜக கைப்பற்றுகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில் பாஜக
46%
(2014) லிருந்து 56.4% (2019)வாக்குகளைப்
பெறுகிறது. காங்கிரசிற்குஇரண்டாம் இடத்தையும் ஆம் ஆத்மிக்குமூன்றாம் இடத்தையும்
வழங்குகிறார்கள் டெல்லி வாக்காளர்கள். இந்த ஏழு லோக்சபா இடங்களுக்குட்பட்ட
70
சட்டசபை தொகுதிகளில்65 இடங்களில்
பாஜகவும்,
5 இடங்களில் காங்கிரசும் முன்னிலை பெற்று
இருந்தது. ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட முதலிடத்தில் வரவில்லை. ஆனால் அதே டெல்லி
வாக்காளர்கள் அடுத்த ஆறு மாதத்தில் நடந்த தற்போதைய சட்டசபைத் தேர்தலில் ஆம்
ஆத்மிக்கு
62 இடங்களையும் பாஜகவிற்கு 8 இடங்களையும் வழங்குகிறார்கள். காங்கிரஸ் அதலபாதாளத்திற்குச் சென்று
விட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் தெளிவாகத் தேர்ந்தெடுக்கும்
மக்களைத்தான் திமுகவின் அமைப்புச செயலாளர் முட்டாள்கள் என்கிறார். இந்தியா
முழுமைக்கும் பாஜக வெற்றி பெற்றபோது தமிழக வாக்காளர்கள் நேரெதிராக வாக்களித்தார்கள்.
அவ்வாறானால் தமிழக வாக்காளர்கள் முட்டாள்களா என்று கேட்கக் கூடாது. அதற்கான
காரணங்களை ஆராய்வதற்கு டெல்லி தேர்தல் முடிவுகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அது என்ன என்பதைப் பார்க்கலாம்.
இன்றையக் காலக் கட்டத்தில் அரசியலைப் பொருத்தவரையில்
கருத்துருவாக்கம் என்கிற சொல் மிக முக்கியமானதாக ஆகியுள்ளது.
இக்கருத்துருவாக்கங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன? வெறும் கருத்துருவாக்கங்களே
தேர்தல் வெற்றியைத் தந்து விடுமா? ஆட்சி முறை மாற்றங்கள் முக்கியமானதில்லையா? இது போன்ற
கேள்விகளோடு பொருத்திப் பார்த்துத்தான் நாம் ஓர் முடிவுக்கு வரமுடியும்.
ஓர் ஆட்சி மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்காமல் பார்த்துக்
கொள்ள வேண்டியது இங்கு மிக மிக அவசியமானதாகிறது. எளிமையாகப் புரியவேண்டும்
என்பதற்காக ஆட்சி என்பதைக் கட்சி என்று போட்டுப் பார்க்கலாம். ஆட்சியாளர்கள் ஊழல்
அற்றவர்கள் என்கிற பார்வை அவர்களின் வெற்றிக்கு முக்கியமாகி உள்ளது. அடுத்து ஓர்
ஆட்சி கொடுத்த வாக்குறுதியில்
100%
நிறைவேற்றா விட்டாலும், அவர்கள் நமக்காக ஓரளவுக்குச்
செய்கிறார்கள் என்கிற கருத்துருவாக்கம் செய்ய வேண்டியது மிக முக்கியமானதாகி
உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பல நல்ல விஷயங்களைச் செய்வார்கள்.
ஆனால், அந்தக் கட்சி எந்த அளவுக்கு மக்களிடையே அதைக் கொண்டு செலுத்துகிறது என்பது
அக்கட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று.
தற்காலங்களில் இலவசங்களும் மக்கள் நலத்திட்டங்களும் மக்களை ஓரளவுக்குச் சென்று
சேரும் காலகட்டத்திற்கு வந்துள்ளோம். இவையெல்லாம் ஆளும் அரசுகள் தங்களைப்
பயனாளிகளிடம் நெருங்கச் செய்ய உதவி செய்கிறது.
அதேவேளையில் எதிர்க்கட்சிகள் சில மாநிலங்களில் வெற்றி
பெறுவதற்கான காரணங்களையும் ஆராய வேண்டி உள்ளது. தொடர் போராட்டங்களைப் பல்வேறு
அமைப்புகள் மூலமாக, குறிப்பாக அரசியல் கட்சியாகச் செயல்படாத அமைப்புகள் மூலமாக,
தொண்டு நிறுவனங்கள் மூலமாக, மத அமைப்புகள் மூலமாகத் தொடர்ந்து செய்யும் போது
பெரும்பகுதி மக்களிடையே அது வரவேற்பைப் பெற்று விடுகிறது. இது போன்ற போராட்டங்கள்
நடக்கும் போது ஆளும் தரப்பு மக்களிடையே தங்களின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாகச்
சொல்லாமல் இருப்பதும், போராட்டங்களை அனுமதித்துக் கொண்டும்,மக்களிடையே திட்டத்தின்
நன்மை பற்றிப் பேசாமல் இருந்து கொண்டே திட்டத்தைத் தாமதமாக அமல்படுத்தலாம் என்கிற
மனப்பாங்கோடு செயல்படுவதும் மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்கச் செய்கிறது.
அடுத்து ஊடகங்களின் பங்களிப்பும், சமூக ஊடகங்களின்
பங்களிப்பும் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊடகங்கள் இன்று
நடுநிலையோடு இருப்பதில்லை. அவை ஆட்சியாளர்கள் பற்றிய கருத்துருவாக்கங்களை
உருவாக்குகின்றன. குறிப்பாகப் போராட்டங்கள் இன்று ஓரிடத்திலிருந்து பல
இடங்களுக்குப் பரவுவதில் ஊடகங்களின் பங்கு அலாதியானது. இதை எந்தத் தரப்பு சரியாகக்
கையாள்கிறதோ அவர்கள் மக்களிடையே ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இவையெல்லாம் காரணிகள்தான். மக்களைப் பொருத்தவரையில் ஓர் ஆட்சியில்
தாங்கள் கண்ட துன்பங்கள், அவலங்கள், ஊழல் விஷயங்கள்என்ன என்பதைத்தான் பெரும்பாலும்
பார்க்கிறார்கள். எந்த அளவுக்கு ஓர் ஆட்சி தன் மீதுஎதிர்மறையான விஷயங்கள் பரவாமல்
பார்த்துக் கொள்கிறதோ அதுவே முக்கியமாகி உள்ளது. தேர்தலைப் பொருத்தவரையில் நேர்மறை
வாக்குகளைக் காட்டிலும் எதிர்மறை வாக்குகளை மையமாக வைத்துத்தான் ஆட்சி மாற்றங்கள்
நடக்கின்றன. அந்த வகையில் டெல்லி வாக்காளர்களும் சரி, இந்தியாவின் இதர
வாக்காளர்களும் சரி, தங்கள் முன்பாக வைக்கப்படும் கருத்துருவாக்கத்தின்
அடிப்படையில் வாக்களிக்கும் மனநிலையில் உள்ளார்கள். இதில் தமிழக வாக்காளர்களை
முட்டாள்கள் என்கிற கருத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும். வட இந்திய வாக்காளர்கள்
முட்டாள்கள் என்ற வாதத்தையும் நிராகரிக்க வேண்டும். இதற்கான படிப்பினையைத்தான்
டெல்லி, ஒடிஸா போன்ற தற்காலத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்தில் கூட 2020
லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே அதிமுகவுக்குத் தந்த மக்கள், அதே நாளில்
நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில்
9
இடங்களில் வெல்லச் செய்து ஆட்சியை நிலைநிறுத்தச் செய்துள்ளார்கள்
என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.
டெல்லியில் கட்சிகளின் நிலை என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆம் ஆத்மியைப் பொருத்தவரை இந்தத் தேர்தலில் அதன் வெற்றிக்கு
ஏழை மக்களுக்கான இலவசத் திட்டங்களும், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான
முக்கியத்துவமும் மக்களைத் திருப்தி படுத்தி உள்ளது. பல குறைபாடுகள் உள்ளன என்ற
பாஜகவின் வாதத்தில் நியாயமிருந்தாலும், கெஜ்ரிவால் முடிந்தளவு நல்லது செய்கிறார்
என்கிற எண்ணம் ஒட்டுமொத்த வாக்காளர்களிடையே வந்துள்ளது. அதை நாம் கவனிக்க வேண்டி
உள்ளது. தேர்தலை எதிர்கொண்டதில் கெஜ்ரிவாலைப் பாராட்ட வேண்டி உள்ளது. ஓரிடத்தில்
கூட தன்னை இந்துக்களுக்கு எதிரியாகக் காட்டி விடக் கூடாது என்பதிலும் அவர் மிகத்
தெளிவாக இருந்தார். அரசியல் சட்டப் பிரிவு
370
நீக்கத்தை ஆதரித்தார் கெஜ்ரிவால். ராமர் கோவில் தீர்ப்பை
வரவேற்பதாக அறிவித்தார். சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக ஆரம்பத்தில் காட்டிக்
கொண்டாலும் தேர்தல் பரப்புரையில் அதை முன்னிலைப்படுத்தினால் பாஜகவிற்குச் சாதகமாகி
விடும் என்பதை உணர்ந்து அதைப் பற்றிப் பேசுவதையும் அக்கேள்வியை எதிர்கொள்வதையும்
பெரும்பாலும் தவிர்த்தார். அனுமன் பாடலைத் தாமாகவே பாடினார். இவையெல்லாம் இஸ்லாமிய
வாக்குகளைத் தமக்கு எதிராகத் திருப்பி காங்கிரசிற்குக் கொண்டு சென்று விடாதா என்று
அவர் கவலைப் படவே இல்லை. அதற்குக் காரணம் உள்ளது. இந்திய இஸ்லாமியர்களின்
வாக்குமுறை இதன் அடிப்படையில்தான் அமைகிறது. அது ‘பாஜக ஆட்சியின் நலத்திட்டங்கள்,
ஊழலற்ற ஆட்சி, ஆட்சியின் செயல்முறை ஆகியவற்றைச் சார்ந்து பாஜகவைப் பார்க்க
வேண்டியதில்லை. பாஜக ஆட்சி நல்லதே செய்திருந்தாலும் வாக்களிக்க வேண்டியதில்லை.
பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்கிற எண்ணத்தை சிறு குழந்தைகள் வரை கொண்டு
சேர்த்துள்ளது இஸ்லாமிய சமூகம். குறிப்பாக மோடியை முன்வைத்து! ஆகையால் இஸ்லாமியர்களின்
வாக்களிக்கும் முறை என்பது பாஜகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும்
வாக்களிக்கக்கூடாது என்பதுதான். அடுத்து பாஜகவை எதிர்த்து எந்தக் கட்சி வெற்றி
பெறும் வாய்ப்புள்ளதோ அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்கிற இடத்திற்கு
இஸ்லாமிய வாக்குகள் வந்துவிட்டன.

இந்தப் புள்ளியை கெஜ்ரிவால் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார். இஸ்லாமியர்களிடத்து
எனக்கு வாக்களிக்காமல் காங்கிரசிற்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வந்து விடும்
என்கிற எண்ணத்தை மட்டும் தனது இஸ்லாமிய வேட்பாளர்கள் வாயிலாகக் கொண்டு சேர்த்தார்.
அந்த வகையில் கெஜ்ரிவாலின் அரசியல் சாதுர்யத்தைப் பாராட்ட வேண்டி உள்ளது.
பாஜகவைப் பொருத்தவரையில் தனது வாக்கு சதவீதத்தைக் கடந்த
தேர்தலைக் காட்டிலும்
6% உயர்த்திய போதும், மக்களின் மனநிலையை வெல்லாமல் போனதற்கான காரணங்களை ஆராய
வேண்டி உள்ளது. கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் அதற்கு இணையான ஒருவரை
முன்னிறுத்தி இருக்கவேண்டும். பாஜக அதைச் செய்யவில்லை. எங்கெல்லாம் ஆம் ஆத்மி
ஆட்சி தவறு இழைக்கிறது என்பதை மக்களிடம்கொண்டு செல்லத் தவறி விட்டது பாஜக.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு கட்சியும் யார் தலைமையில் வழி
நடத்தப்படுகிறது, யார் மக்களின் மனதில் தலைமைத்துவத்திற்கான ஏற்புத் தன்மையைக்
கொண்டு வருகிறார் என்பதும் முக்கியமானது. எப்படி நரேந்திர மோடிக்கு
ராகுல்இணையில்லையோ அப்படித்தான் கெஜ்ரிவாலுக்கும் இணையான பாஜக முகம் டெல்லியில்
இல்லாமல் போனது, பாஜகவிற்குப் பெரும் பின்னடைவைத் தந்துள்ளது.
காங்கிரஸ் டெல்லி தேர்தலில் பெருத்த பின்னடைவைச்
சந்தித்துள்ளது. டெல்லியில் தலித் வாக்குகள், சிறுபான்மை வாக்குகளை முற்றிலுமாக
இழந்து விட்டுள்ளது. காங்கிரஸ் டெல்லி தேர்தலை அணுகிய முறையும், தேர்தல்
முடிவுகளில் ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியில்
புளகாங்கிதம் அடைந்ததையும் வைத்துப் பார்த்தால் காங்கிரஸ் அரசியல் செய்ய
லாயக்கில்லாத கட்சி என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ்
4.26% வாக்குகளை
மட்டுமே டெல்லி தேர்தலில் பெற்றுள்ளது.காங்கிரசின் வேட்பாளர்களில்
63 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். தான் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை
என்று காங்கிரஸ் முடிவெடுத்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் மீண்டும் முதன்மைக்
கட்சியாக வந்த சரித்திரம் கிடையாது. இப்படித்தான் திமுகவை அழிக்க எம்ஜிஆரைப்
பயன்படுத்தலாம் என்று ஆரம்பித்தது. இன்று தமிழகத்தில் அதிமுக, திமுகவின் முதுகில்
சவாரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றியில் மகிழ்ச்சி அடையும்
ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் டெல்லியில் இனி என்றைக்கும் மூன்றாவது கட்சிதான் என்பது
புரியவில்லை.
காங்கிரசின் எதிர்காலம், பாஜக Vs காங்கிரஸ் நேரடிப்
போட்டி நிலவும் மாநிலங்களில் மட்டுமே இருக்கிறது. எங்கெல்லாம் மாநிலக் கட்சிகள்
வலுவாக உள்ளதோ அங்கெல்லாம் காங்கிரஸ் இனி ஒட்டுண்ணி அரசியல் கட்சியாக மட்டுமே
இருக்கும். இனி டெல்லியில் காங்கிரசிற்கு அரசியல் முக்கியத்துவம் இருக்காது
என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
டெல்லி வாக்கு சதவீத ஒப்பிடு:

கடந்த கால தேர்தல் வாக்கு சதவீதம்:


Posted on Leave a comment

நாடாளுமன்ற பட்ஜெட் 2020 | ஜெயராமன் ரகுநாதன்

பட்ஜெட்டின்
சில முக்கிய அம்சங்கள்


  • விவசாயத் துறைக்கு,
    2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின்
    வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயத் துறையைப் போட்டிமிக்க
    துறையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் நவீன விவசாய
    சட்டங்களை மாநில அரசுகளும் பின்பற்ற ஊக்குவிப்போம்.
  • 20 லட்சம் விவசாயிகளுக்கு
    சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் வழங்கப்படும்.
  • தானியலெட்சுமி திட்டம்
    (விதைகளை சேமித்து விநியோகிக்கும் திட்டம்) அறிமுகம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு
    அதிகக் கடன் உதவி.
  • ‘கிருஷி உடான் திட்டத்தில் தேசிய, சர்வதேச
    விமானப் போக்குவரத்து மூலம் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்ல வசதி.
  • 2020 – 21 நிதியாண்டில்
    கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • திறன் மேம்பாட்டுக்கு
    3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும்
    எனக் கணிக்கப்பட்டுள்ள 100 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • விவசாயிகள் தங்களது வேளாண்
    பொருட்களைக் கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடன், ‘கிசான் ரயில்
    சேவை தொடங்கப்படும்.
  • விவசாயிகளுக்குக் கடன்
    வழங்குவதற்காக, 15 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2022 – 23 நிதியாண்டுக்குள்
    மீன் உற்பத்தி 200 லட்சம் டன்னாக உயர்த்தப்படும்.
  • ரசாயன உரம் தவிர, இயற்கை
    உரம் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்படும்.
  • சுகாதாரத் துறைக்குக் கூடுதலாக
    69 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 2020 – 21 நிதியாண்டில்
    துாய்மை இந்தியா திட்டத்துக்கு, 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மேலும்
    112 மாவட்டங்களில் மருத்துவ வசதி.
  • சுத்தமான குடிநீர் வழங்க,
    ‘ஜல் ஜீவன் மிஷன்
    திட்டத்துக்கு, 3.6 லட்சம்
    கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • அரசு – தனியார் பங்களிப்பு
    மூலம், 100 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
  • குறைந்த விலையில் மருந்துகள்
    வழங்கும் மருந்தகம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • 2025ம் ஆண்டுக்குள் காசநோய்
    முற்றிலும் ஒழிக்கப்படும்.
  • கல்வித்துறைக்கு,
    99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நாட்டின் ‘டாப் – 100 கல்வி நிறுவனங்களில்
    ‘ஆன்லைன்
    பட்டப்படிப்புக்கான பாடப்பிரிவு
    தொடங்கப்படும்.
  • தேசிய காவல்துறை, தேசிய
    தடய அறிவியல் பல்கலை அமைக்க நடவடிக்கை.
  • கல்வித் துறையில் நேரடி
    அன்னிய முதலீட்டுக்கு அனுமதி.
  • 2026க்குள் பல்கலையில்,
    150 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்க நடவடிக்கை.
  • ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின்
    மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு, ‘இன்ட்சாட்
    நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
  • அலைபேசி மற்றும் மின்சார
    உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்க திட்டம் தொடங்கப்படும்.
  • 2020 – 21 நிதியாண்டில்
    தொழில் மற்றும் வணிகத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்கு 27,300 கோடி ரூபாய்
    ஒதுக்கீடு.
  • டில்லி – மும்பை எக்ஸ்பிரஸ்
    மற்றும் இரண்டு சாலை திட்டங்கள் 2023க்குள் நிறைவேற்றப்படும்.
  • ரயில் பாதைகளின் ஓரம் சூரிய
    ஒளித் தகடுகள் (சோலார் பேனல்கள்) அமைக்கப்படும்.
  • அடுத்த மூன்றாண்டுகளுக்குள்
    பிரிபெய்டு மீட்டர் அறிமுகப்படுத்தப்படும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
    துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நாடு முழுவதும் தகவல் மையம்
    அமைப்பதற்குத் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும்.
  • தொழில் மற்றும் வர்த்தக
    மேம்பாட்டுத் துறைக்கு, 27,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • சென்னை – பெங்களூரு இடையே
    வர்த்தக வழித்தடம் கூடுதல் தேஜஸ் ரயில் இயக்கப்படும்.
  • ரயில் பாதைகளை மின்மயமாக்க,
    27 ஆயிரம் கோடி ரூபாய், போக்குவரத்துக் கட்டமைப்புக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி
    ஒதுக்கீடு.
  • சத்துணவு தொடர்பான திட்டத்துக்கு,
    35,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க
    எரிசக்தி துறைக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • பாரத் நெட் திட்டத்துக்கு
    6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • தபால் நிலையம், மருத்துவமனை,
    காவல் நிலையம், பள்ளிகள் இணைக்கப்படும்.
  • ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள்
    ஆப்டிக்கல் ஃபைபர் மூலம் இணைக்கப்படும்.
  • உடான் திட்டத்தின் கீழ்
    2026க்குள் 100 புதிய விமான நிலையம்.
  • பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி.
    பிரிவு நலன் துறைக்கு 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • பழங்குடியினர் நலனுக்கு,
    53,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • முதியோர் நலனுக்கு,
    9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • சுற்றுலாத் துறைக்கு,
    2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • கலாசாரத் துறைக்கு,
    3,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • 10 லட்சத்துக்கு மேற்பட்ட
    மக்கள் வசிக்கும் நகரங்களில் சுத்தமான காற்று நிலவுவதற்கு வழிவகை செய்யப்படும்.
  • காற்று மாசுபாட்டைத் தவிர்த்து,
    சுத்தமான காற்று திட்டத்துக்கு 4,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • கெஸட் அல்லாத பதவிகளுக்கு
    ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு தேசிய ஆள்சேர்ப்பு மையம் அமைக்கப்படும்.
  • வங்கி டெபாசிட்தாரர்களுக்கான
    காப்பீடு 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்வு.
  • ஐந்து லட்சம் சிறு, குறு,
    நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
  • வரி என்ற பெயரில் மக்களைத்
    துன்புறுத்துதல் என்பதை இந்த அரசு சகித்துக்கொள்ளாது.
  • தேசியத் தொழில் நுட்பம்
    டெக்ஸ்டைல் திட்டத்துக்கு 1,480 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களும்
    அரசின் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின்
    வாராக்கடனை வங்கிகள் வசூலிப்பதற்கான காலக்கெடு 2020 மார்ச்சில் இருந்து 2021 மார்ச்
    வரை நீட்டிக்க வேண்டுமன ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்துகிறது.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின்
    வியாபாரம் 5 கோடி ரூபாய் வரை தணிக்கை சமர்ப்பிக்கத் தேவையில்லை. முன்பு இது 1 கோடி
    ரூபாயாக இருந்தது.
  • நிதிப் பற்றாக்குறை,
    3.8 சதவீதமாக இருக்கும்.
  • 2020 – 21ல் நாட்டின் பொருளாதார
    வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும்.
  • காஷ்மீருக்கு 30,757 கோடி
    ரூபாய், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு 5958 கோடி ரூபாய் திட்டங்கள்.
  • எல்.ஐ.சி.,யில் உள்ள மத்திய
    அரசின் சிலபங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும்.
  • புதிய வருமான வரி விதிப்பு
    முறையால் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும்.
  • மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு
    15 சதவீதம் வருமான விலக்கு வழங்கப்படும்.
  • ஆதார் அடிப்படையில் உடனடி
    பான்கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • துாத்துக்குடியின் ஆதிச்சநல்லுார்
    உட்பட ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இந்த முறையும் நமது நிதி அமைச்சர் தமிழில் மேற்கோள் காட்டிப்பேசியதைப்
பாராட்டிவிட்டுத் தொடங்கலாம்.
இந்த
பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால்
நிலைமை அப்படி இருந்தது.
முக்கியமாக
மூன்று விஷயங்கள்:
மந்தமான
பொருளாதாரம், எதிர்பார்த்ததைவிடக்குறைவான முதலீடு மற்றும் கடுமையான அழுத்தங்களுடனான
நம் நிதி அமைப்பு
. இந்த
பட்ஜெட்டில் இவை அனைத்தும் கவனிக்கப்பட்டு சரியான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அப்போதுதான்
நமது குறிக்கோளான 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையமுடியும் என்பது வெளிப்படை.
ஒரு
இடத்தில்கூட இந்த பட்ஜெட் பொருளாதார மந்தம் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும், பட்ஜெட்டின்
மூலாதாரக் குறிக்கோளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. வரும் நிதி ஆண்டில்
நிறைவேற்ற வேண்டிய குறிக்கோள்கள் பற்றி நிதி அமைச்சர் வெகு விரிவாகப் பேசினார். இன்றைய
பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான ‘தேவை அதிகரிப்பை
ச்
செய்ய (Demand Creation) அரசாங்கச் செலவுத்திட்டங்களைக் கூறினார். ஆனால் வருவாய் அளவையும்
அதன் சாத்தியங்களையும் பார்த்தால்தான் இந்தச் செலவுத்திட்டங்களும் அதன் மூலம் தேவை
அதிகரிப்பும் எவ்வாறு நிகழும் என்பது பற்றி நாம் முடிவுக்கு வரமுடியும்.
பட்ஜெட் என்றாலே எல்லோரும் முதலில்
கவனிப்பது நிதிப்பற்றாக்குறை (
Fiscal
Deficit). 2019-20ல் இந்த நிதிப்பற்றாக்குறை 3.8% ஆக இருந்தது. நிதி அமைச்சர் வரும்
ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 3.5% தான் இருக்கும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.
எந்தப் பற்றாக்குறை குறைப்பும் 0.5%க்கு மேல் இருந்தால் அது நடைமுறையில் அத்தனை சாத்தியமில்லை
என்பது வல்லுநர்களின் கருத்து. இந்த முறை பற்றாக்குறை வேறுபாடு 0.3%தான். எனவே இது
நடைமுறைக்கு வரக்கூடும் என்னும் நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.
வரும்
2020-21 ஆண்டில்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.0–6.5% இருக்கும் என்கிறது சமீபத்திய
பொருளாதார ஆய்வு. நிதிப்பற்றாக்குறை விகிதத்தின் (Ratio) தொகுதியான (Numerator) மொத்த
வருவாய் குறைந்துவிட்டாலும், அந்த விகிதத்தின் வகுக்கும் எண்ணிக்கையான (Denominator)
செலவும் குறைந்துவிடுவதால் விகிதம் 3.5% என்னும் கட்டுக்குள் வந்துவிடும் என்பது நம்பிக்கை.
வரும்
வருடத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 10% அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு சரியானதுதான்.
வரி வருமானமும் 12% அதிகரிக்கும் என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் சென்ற ஆண்டு
இது நிகழவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே, நிதிப்பற்றாக்குறை எகிறாதா என்னும்
விமரிசனத்தின் பின்னே காரணம் இல்லாமலில்லை.
தனியார்மயமாக்கலின்
மூலம் இந்த அரசாங்கத்துக்கு வரப்போகும் வருமானம் ரூ 2,10,000 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
“இதுவும்
தப்புங்க! போன வருஷமே தனியார் மயமாக்கலின் வருவாய் ரூ 1,05,000 கோடின்னு எதிர்பார்த்து,
ரூ 65,000 கோடிதானே வந்தது?
சரிதான்,
ஆனால் இந்த முறை அரசின் முழு முனைப்பும் செலுத்தப்படவிருக்கிறது. மேலும் இந்த எண்ணிகையை
அடைவதற்கான கால அவகாசம் அதிகம் என்பதால் சாத்தியம் அதிகமே. முக்கியமாக எல் ஐ ஸியின்
பங்கு விற்பனை மூலம் அரசுக்கு பெரும் வருமானம் வரும் என்பதும் ஒரு சாத்தியமே.
நிதி
அமைச்சகம் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வரவுகளைக் கவனமாகக் கண்காணித்து
அதற்கேற்றாற்போல செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்போதுதான் நிதிப்பற்றாக்குறை
எதிர்பார்த்த 3.5%ல் அடங்கும். என்னைக்கேட்டால் பட்ஜெட்டில் 3.5% இருந்தால் கூட, அரசாங்கம்
இதை 3% என்னும் கட்டுக்குள் வைக்க முயலுவதுதான் சரி.
வரி
சம்மந்தமாகவும் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. போன முறை கார்ப்பரேட்டுகளின் வரிக்குறைப்பு
நிகழ்ந்தது. இந்த முறை தனிமனித வரிகளில் மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றம் மிகப்பெரும்
தாக்கத்தை உண்டாக்காது என்பது என் கருத்து.
இந்த
பட்ஜெட்டில் இன்னொரு புதுமை, வரி செலுத்துபவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெரிவு செய்யும்
வாய்ப்பு. விலக்குகளோடு கூடிய அதிக வரியா அல்லது விலக்குகள் ஏதுமில்லாத குறைந்த வரியா
என்பதை அவரவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவுமே விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தத் தேர்வு வாய்ப்பால் எவ்விதப் பலனுமில்லை என்று சிலர் சொல்ல, கிட்டத்தட்ட 70%
பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாக அரசாங்கம் சொல்கிறது. தனது உரையில் அமைச்சர் கிட்டத்தட்ட
90% வரி செலுத்துபவர்கள் ரூ 2 லட்சத்துக்கும் குறைவான வரிச்சலுகைகள் பெறுகிறார்கள்.
அவர்கள் இந்தத் தெரிவை எடுத்துக்கொண்டால் வரி குறைப்புக்காக செலவோ முதலீடோ செய்யத்தேவை
இருக்காது என்கிறார். எனவே அவர்களின் கையில் அதிகப்பணம் மிஞ்சும் என்பதே அரசின் வாதமாக
இருக்கிறது. இது உண்மையும் கூடத்தான். ஆனால் இதன் சரியான தாக்கம் அடுத்த வருடம்தான்
நமக்குத் தெரியக்கூடும்.
நிதி
அமைச்சர் தன் உரையில் தெரிவித்த இன்னொரு சுவாரஸ்யம் நம் வரிச்சட்டத்தில் கிட்டத்தட்ட
120 வரி விலக்குகள் இருந்தனவாம். வரி விதிப்பைச் சுலபமாக்கும் குறிக்கோளில் கடந்த சில
வருடங்களில் கிட்டத்தட்ட 70 சலுகைகள் வரை நீக்கப்பட்டு விட்டன. மேலும் வரிக்கான பிரிவு
இப்போது ஐந்து பிரிவுகளாக (slab) உள்ளன. இன்னும் ஓரிரு ஆண்டில், வரி செலுத்துபவர்கள்
எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பற்றிய புள்ளிவிவரம் உறுதியாகத் தெரியவரும்போது
வரி விதிப்பு பிரிவுகளும் குறைக்கப்பட்டு வரிவிகிதமும் குறைவதற்கான சாத்தியம் அதிகம்.
இன்றைய
பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு செலவழிக்கவேண்டிய சமூக மற்றும் தொழில் கட்டுமானங்கள்
(Social and physical infrastructure) ஏராளமாக இருக்கின்றன. இந்நிலையில் மேலும் மேலும்
வரிச்சலுகைகளை எதிர்பார்ப்பது சரியானதல்ல. இது போன்ற புதுமையான முறைகளால்தான் வரிக்குறைப்பைக்
கொண்டு வர முடியும். மேலும் நீண்ட காலத்தில் குறைவான பிரிவுகள் (slabs), சுலபமான வரி
விதிப்பு, குறைவான விலக்குகள் (few slabs, simpler tax structure and fewer
exemptions) என்று மாற்றினால்தான், வரிச்சட்டம் எளிமையானதாகும். மேலும், வரிக்கான சர்ச்சைகள்
நீதிமன்றம் வழக்குகள்  என்றெல்லாம் பண மற்றும்
நேர விரயங்கள் குறையும்.
“வரி
என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்துதல் என்பதை இந்த அரசு சகித்துக்கொள்ளாது. வரி செலுத்துபவர்கள்
இந்நாட்டின் மதிப்பு மிக்கவர்கள்
என்று நிதி அமைச்சர் சொல்லியிருப்பது உவப்பாக
இருக்கிறது.
வெளி
நாட்டு முதலீட்டை ஈர்க்கும் பல விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இருப்பது வரவேற்கத்தக்கது.
Disribution dividend வரியை அகற்றியிருப்பதும் கவர்மெண்ட் பேப்பர் எனப்படும் பத்திரங்களில்
இந்தியாவில் வசிக்காதவர் (non resident) முதலீடு செய்வதற்கான முறைகள் புகுத்தப்பட்டிருப்பதும்
நிச்சயம் முதலீட்டை அதிகரிக்கும். அதே சமயம் இந்த முறைகளின் மூலம் அதிகக்கடன் சுமை
ஏறாமல் அரசாங்கம் கவனிக்க வேண்டியதும் அவசியம்.
நிதி
அமைச்சர் தன் உரையில் ஒவ்வொரு துறைக்குமான முதலீடுகள் பற்றி விரிவாகப் பேசினார். மேம்போக்காகப்
பார்த்தால் இவை ஒன்றும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் என்னும் நம்பிக்கையை
அளிக்கவில்லை. இந்தத் திட்டங்களின் சாதகபாதகங்கள் பற்றி அந்த அந்தத் துறை விற்பன்னர்கள்
தீவிரமாக ஆய்வுசெய்து சொன்னால்தான் மேற்கொண்டு விவாதிக்க முடியும். ஆனால் நம் கவலை
இந்தத்திட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே. மொத்த செலவினங்கள்
12% உயர்ந்திருக்க மூலதனச் செலவுகள் மட்டுமே 18% அதிகரிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் மொத்தத்தில் இந்தச் செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% என்று இருக்கிறது.
இந்த 1.8% என்பது பல ஆண்டுகளாகவே அதே நிலை என்பதால், இப்போது திட்டமிடப்பட்டுள்ள உயர்வு
இருக்குமா என்பதில் ஒரு சின்ன கேள்விக்குறி எழுகிறது!
வரி
என்று வரும்போது எல்லோரும் ஒரே குரலில் ஆட்சேபிப்பது ஜி.எஸ்.டி நிர்வாகம் பற்றின சங்கடங்கள்.
இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் எதிர்பார்த்துக் கிடைக்காமல் பட்ஜெட்டைக் குறை கூறுபவர்கள்
அதிகம். ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஜி.எஸ்.டி என்பது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில்
இல்லை. ஜிஎஸ்டிஎன் என்னும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்த குழுவின் கட்டுப்பாட்டில்தான்
இருக்கிறது. எந்த முடிவுமே ஜிஎஸ்டிஎன்-னின் மூலமாகத்தான் எடுக்க முடியும். ரசீது
(bill) வேண்டும் என உறுதியாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பணப்பரிசு, எலக்ட்ரானிக்
பில், ஆதார் சார்ந்த சரிபார்ப்பு மற்றும் இன்னும் சுலபமாக்கப்படவேண்டிய முறைகள் எல்லாமே
ஜிஎஸ்டிஎன்னால்தான் நிகழ்த்தப்படவேண்டுமே அன்றி நிதி அமைச்சகத்தாலோ அல்லது நிதி அமைச்சராலோ
அல்ல.
ஆனாலும்
‘ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டை ஒருங்கிணைத்துள்ளது. ஜிஎஸ்டியால்
சாமானிய மக்களின் மாதாந்திர வருமானம், 4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் மாதம்
1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. வரும் ஏப்ரல் முதல் எளிமைப்படுத்தப்பட்ட
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும். புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் கடந்த நிதியாண்டில், 40 கோடி ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

என்னும் அறிவிப்புக்களும் கவனிக்கப்படவேண்டியவையே.
கஸ்டம்ஸ்
விதிகளிலும் சில நல்ல மாற்றங்கள் வந்திருக்கின்றன. புதுமையாக மக்களின் பங்களிப்பின்
பேரில் (Crowd sourcing) சில கஸ்டம்ஸ் வரி விலக்கு அளிப்பது, வெளிநாட்டுப் பொருட்களுக்கெதிரான
பாதுகாப்பு, anti-dumping பற்றிய சில மாற்றங்கள் என நல்ல மாறுதல்கள் வந்திருக்கின்றன.
சில பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்வு மற்றும் இறக்குமதி பதிலீட்டுக்கொள்கை
(Import substitution) எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது கேள்விக்குறியே. ஒரு பக்கம்
உள் நாட்டுத் தொழில்களைக் காக்கும் முயற்சிகளைச் செய்துவிட்டு, கூடவே வெளிநாட்டு முதலீட்டைப்பெருக்க
வேண்டும் என்பது முரணாக இருப்பது கண்கூடு.
நாட்டில்
வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன என்பது இந்த அரசுக்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.
இதுவே எதிர்க்கட்சிகளின் முக்கிய ஏவுகணையாகவும் இருப்பதால் இந்த பட்ஜெட்டில் இதற்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கேற்றாற்போல இந்த
பட்ஜெட்டில், படித்து முடித்த பட்டதாரிகளுக்கு நகர உள்ளாட்சிகளில் ஒரு வருட இண்டெர்ன்ஷிப்
பயிற்சிக்கு வழி வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு வருடம் சம்பாதிக்கும் வாய்ப்போடு
பட்டதாரி இளைஞர்கள் தங்களின் வேலைத்திறனை அதிகரித்துக்கொள்ளவும் உந்துதலாய் அமையும்.
நமது
நிதி அமைப்பில் (Financial system) பல முன்னேற்றங்கள் தேவை என்பதும் அதனாலேயே இந்தத்
துறை தனிக்கவனம் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கித்துறை மாற்றங்கள்
மிக அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வங்கிகளை ஒன்றோடு ஒன்று
இணைப்பது என்பதைவிட ஒட்டு மொத்தமாக வங்கித்துறையின் கட்டுப்பாடு எந்த அளவுக்கு அரசு
சார்ந்து இருக்க வேண்டும் என்பது விவாதப்பொருளாகும். ஐடிபிஐ வங்கியின் பங்குகளை அரசு
தனியாருக்கு விற்றுவிடத் தீர்மானித்திருப்பது இந்தக் கொள்கை பற்றிய ஒரு ஊகத்தை நமக்கு
அளித்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் தெளிவு வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாக
இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மையில் அரசுக்கட்டுப்பாடு கையளவு நீளத்திலிருக்க
(Arm
s length) வேண்டும் என்னும் கோட்பாடு நல்லதுதான்
என்றாலும் செயல் திறமை என்பதும் தொழில் நுட்பம் என்பதும் மேலாண்மையிலிருந்து வேறு பட்டவை
என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மூன்றும் சேர்ந்திசைந்தால்தான் நல்ல முன்னேற்றத்தைக்
காண முடியும்.
ஓரளவுக்குத்
தரப்பட்ட கிரெடிட் திட்டம் வரவேற்கப்பட்டது என்றாலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்
(NBFC) எதிர்பார்த்த பெரிய சலுகைகள் இல்லாததால் அவர்கள் இந்த பட்ஜெட்டினால் அதிகம்
பயன் பெறவில்லை. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் செய்தது போல
Troubled Asset Relief Programme (TARP) திட்டம் வரும் என்று எதிர்பார்த்ததால் ஒரு
அளவுக்குத் தரப்பட்ட கிரெடிட் காரண்டி சலுகையுமே அவர்களைக் கவரவில்லை.
மக்களின்
டெபாசிட் இன்ஷூரன்ஸ் காப்பு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பது
நல்ல சலுகை என்றாலும் பல கோஆப்பேரேடிவ் வங்கிகள் இத்திட்டத்துக்குள் வராது என்பதால்,
முக்கியமாக சமீபத்திய பஞ்சாப் அண்ட் மஹாராஷ்டிரா கோ ஆப்ரேடிவ் வங்கியின் வீழ்ச்சியால்
ஏற்பட்ட பாதிப்பின் விளைவினால் இது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.
கூர்ந்து
கவனித்தால் பிரதமர் மோடியின் முதல் அரசின் பட்ஜெட்டிலிருந்து இந்த 2020-21 பட்ஜெட்
வரை ஒரே கொள்கை நோக்கம் இருப்பதை உணர முடியும். இந்த பட்ஜெட்டின் மிக நல்ல அம்சம் அரசின்
கொள்கையான வெளிப்பட்ட தன்மை (Transparency) நன்றாகத் தெரிவதுதான். மேலும் இந்த அரசு
இப்போதைய பொருளாதார மந்த நிலை ஒரு சுழற்சியின் (Cyclical) தாக்கமே தவிர அடிப்படையானது
(Structural) அல்ல என்பதைத்தான் நம்புகிறது என்பதைத்தான் பட்ஜெட்டின் பல அம்சங்கள்
புலப்படுத்துகின்றன. இது சரிதான் என்றும் தவறு என்றும் இரு பக்கமுமே வாதப்பிரதிவாதங்கள்
எழுந்திருக்கின்றன.
அதிகரிக்கும்
முதலீடுதான் இன்றைய மிக மிக முக்கியத்தேவை. இந்த பட்ஜெட் அந்த முதலீட்டைப் பெற்றுத்தரக்கூடியதா
என்பதே கேள்வி. இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.