ராமன் மாமா
ரமணனின் நண்பரான விசாகப்பட்டினம் பிரபாத் குமாரைப் பற்றிச் சொன்னேன். இன்னொருவர் பெயர் பார்வதி குமார். பார்வதி குமார் World Teachers Trust என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு சென்னையில் தலைமையிடம் கொண்டிருக்கும் பிரம்ம ஞான சபையின் சித்தாந்த வகையில் ஏற்படுத்தப்பட்டது. இதை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரி என்பவர் நிறுவி, அவருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு பார்வதி குமாரிடம் வந்தது. இந்த அமைப்பிற்கு ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் கிளைகள் உண்டு. வருடா வருடம் பார்வதி குமார் சுற்றுப்பயணமாக அங்கே போகவும், அவர்கள் வருட இறுதியில் இங்கே வருவதுமாக ஒரு ஏற்பாடு. ரமணன் தயவால் எனக்கு இந்த அமைப்பின் புத்தகங்களை அச்சடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அது லாபகரமாகவும் இருந்தது. முதலில் ஆசான் சி.வி.வி. என்கிற புத்தகம். கும்பகோணத்தில் வாழ்ந்த சி.வி.விதான் இவர்களுடைய குரு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரியார் எழுதி ஆங்கிலப் புத்தகம் ஏற்கெனவே வெளியாகி, அதைத் தமிழில் ரமணன் மொழிபெயர்க்க, அச்சிடும் பணி எனக்கு. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 43 | சுப்பு