அந்த அமெரிக்க ஆராய்ச்சியாள தம்பதிகள் நாட்டுப்புறத் திருவிழாவைக் காண அந்த கிராமத்துக்கு வந்திருந்தனர். நகர்ப்புறங்களிலிருந்து மிகவும் விலகி இருந்த கிராமம் அது. அந்தத் தம்பதிகளுக்கு வழிகாட்டியாக ஒரு பதினேழு வயது இருக்கும் கிராமப்பெண் கிடைத்தாள். கெட்டிக்கார பெண். தன் பணியைச் செவ்வனே செய்தாள். கிராமத்திலிருந்த மிருக ஆஸ்பத்திரி அந்தத் தம்பதிகளின் கவனத்தை ஈர்த்தது. அங்கே சென்று பார்க்கலாமா? ஓ சரி என்றாள் அந்த வழிகாட்டிப் பெண். Continue reading சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்
Author: Valam Magazine
ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்
பகுதி 13 – பரஸ்பர ஒத்துழைப்பிற்கான வேண்டுகோள்
அ) தனது நாட்டை நேசிக்கும் எந்த இந்தியனும் தற்போதைய நிலையை வலியுடனும் மோசமான வேதனையுடனுமே பார்க்க முடியும். தாங்கள் இறப்பதற்கு முன் தங்களுடைய அன்பான பூர்வீக நிலத்தின் மீது சுதந்தர தேவி ஆட்சி செய்வதைக் காணலாம் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் தியாகம் செய்திருக்கும் பலர் பொது வாழ்க்கையில் உள்ளனர். Continue reading ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்
மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்
திருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்த காரணத்தால் மட்டுமே அரசு பாண்டுவின்வசம் ஒப்புவிக்கப்பட்டது என்றல் அது ஒரு Care taker அரசுதானே? அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது? அவர்கள் எப்படி அரசுரிமை பெறுகிறார்கள்?
மக்களாட்சி மலர்ந்துவிட்ட காலத்தில் வசிக்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்—அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலைமைகள் — மிகவும் மசங்கலாகவே தெரிவிக்கப்பட்டும் புரிந்துகொள்ளப்பட்டும் இருக்கின்றன. இராமாயண பாரத இதிகாசங்களையும் பாகவதம் முதலான புராணங்களையும் ஆழ்ந்து படிக்கும்போது ஒரு பேருண்மை புலப்படுகிறது. மக்களாட்சிக் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மன்னராட்சிக் காலத்தில், மன்னர்கள், மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்திருக்கின்றனர்; மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு நாட்டில், மன்னனுக்கு உரிய இடம் என்ன என்பது காலந்தோறும் காலந்தோறும் மாறிக் கூட வந்திருக்கிறது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்
ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்
புதிய நோய்கள் அறியப்படும் போதெல்லாம் உலகச் சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரீம்ஸ் (Reims) தீவுக்குத் திரும்பும். இங்குதான் உலகின் மிகப் பழைமையான கிருமி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான ஃபிரெடெரிக் லோஃப்லர் ஆராய்ச்சி மையம் (Friedrich Loeffler Institute) அமைந்திருக்கிறது. இது 1910ல் லோஃப்லர் எனும் விஞ்ஞானியால் ஆரம்பிக்கப்பட்டது.
Continue reading ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்
வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில், குறிப்பாகக் கடந்த இருபது ஆண்டுகளில்தான் உலகில் அதிகமான நாடுகள் தங்களை ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ளன. இப்போது உலகில் பாதிக்கும் அதிகமான மக்கள் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழுகின்றார்கள். இந்த மாற்றம் ஏனென்றால் பெருவாரியான மக்கள் ஜனநாயக முறையில் தங்களுக்கான ஒரு அரசை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.
Continue reading தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்
ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு
1953 மார்ச் மாதம் 4ம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில் ஒரு பியானோ இசை நிகழ்ச்சி நடந்தது. அது முடியும் நேரம் ரேடியோ மாஸ்கோ இயக்குநரை அழைத்து அந்த நிகழ்ச்சியின் இசைப்பதிவு வேண்டும் என்கிறார் ஸ்டாலின். நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பதிவு செய்து அனுப்புகிறார் இயக்குநர். அதில் பியானோ வாசிக்கும் மரியா யுடினா என்கிற பெண்மணி ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். தன் மாளிகையில் அதைப் படிக்கும் ஸ்டாலின் மூச்சடைத்து விழுகிறார். கை கால் இழுத்துக் கொள்கிறது. ரஷ்யாவின் மத்திய ஆட்சிக் குழு மொத்தத்திற்கும் தகவல் போகிறது. முதலில் வரும் உள்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு (NKVD) தலைவர் பெரியா, யுடினாவின் குறிப்பைக் கண்டு அதைப் பத்திரப்படுத்துகிறார். கமிட்டியின் துணைத்தலைவர் மாலங்கோவ் ஸ்டாலினின் நிலை கண்டு பதறுகிறார். பெரியா அவரை சமாதானப்படுத்தி “நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் தோழர். மற்ற எல்லாம் என் பொறுப்பு” என்கிறார். Continue reading ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு
முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்
கடந்த காலத் தவறுகள் எரிந்து போகட்டும் – இதுதான் தன் ஆய்வறை எரிந்தபோது எடிசன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகள். இப்போது பற்றி எரியும் கொரொனா தீயில் நாம் எரிக்க வேண்டிய கடந்தகாலத் தவறுகள் கம்யூனிசமும் சோசியலிசமும்தான். நலத்திட்டங்கள், சமத்துவம் பேசும் சோசியலிசத்தை விடுத்து, நம்மைச் சுரண்டி ஏய்க்கும் முதலாளித்துவத்திற்கு வழிவகை செய்வதா எனக் கேட்கத் தோன்றலாம். Continue reading முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்
நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்
‘கொரோனா’ என்ற வார்த்தையுடன் அரசியல்வாதியின் துண்டுபோல அதனுடன் ‘நாவல்’ என்ற ஒன்று கூடவே இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். ‘நாவல்’ – புதிது என்பதைக் குறிக்கிறது. புதுவிதமான வைரஸ்!
நாவல், நவீனம் என்ற சொற்கள் புதுமையைக் குறிக்கின்றன. நவீன மருத்துவமனை, நவீன மருத்துவர்கள், நவீன ஆயுதங்கள், நவீன தகவல்தொடர்புகள், நவீன காலத்திற்கு ஏற்ற நவீனமயமாக்கல் என்று இந்த நவீன உலகத்தில் எல்லாம் நவீனமாகிறது. நவீனம் – ‘பழமையிலிருந்து மாறுபட்டு’ என்கிறது அகராதி. பழமையிலிருந்து மாறாதவர்களை ‘பழமை பேசும் கிழம்’ என்று நக்கல் அடிக்கிறோம். கை கூப்பி வணக்கம் சொல்லும் மரபுள்ள இந்தியாவை ‘நீங்க எல்லாம் எப்ப மாறப் போறீங்க?’ என்று கிண்டல் செய்வதைக் கேட்கிறோம். Continue reading நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்
மகாபாரதம் – கேள்வி பதில் (பகுதி 1) | ஹரி கிருஷ்ணன்
விட்டுப் பெருமளவும் விலகிக்கொண்டே இருக்கும் இன்றைய சூழலில் பெரும்பாலும் இளம் தலைமுறைக்கும்
அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு முதியவர்களுக்கும்கூட, ராமாயண பாரதங்களைப் பற்றிய
பலவிதமான ஐயங்களும், விடைகாண முடியாத பல்வேறு கேள்விகளும் எழுந்துகொண்டேயிருப்பதுதான்
நிதர்சனம்.இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு விடைகளைத் தருவதற்கான முயற்சி இது.வாசகர்களும்
தங்களுக்கு எழும் இதுபோன்ற—ராமாயண, பாரத இதிகாசங்கள் தொடர்பான கேள்விகளை அனுப்பி வைக்கலாம்.வால்மீகி
ராமாயணம், கம்பராமாயணம் ஆகியவற்றின் மூலங்களின் துணையுடனும், மஹாபாரதத்தில் தமிழில்
வெளிவந்துள்ள கும்பகோணம் பதிப்பு, ஆங்கிலத்திலுள்ள கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு,
Bhandarkar Oriental Research Institute (BORI) பதிப்பை ஆங்கிலத்தில் ஆக்கப்பட்டுள்ள
பிபேக் தேப்ராயின் மொழிபெயர்ப்பு ஆகியனவற்றின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் விடைகள்
சொல்லப்படும்.இந்த இதழுக்கான முதல் கேள்வி இது.
இந்திரனிடத்திலிருந்து பெற்ற (வாசவி சக்தி எனப்படும்) சக்தி ஆயுதத்தை, கர்ணன்தான் களத்தில்
நுழைந்த முதல் நாளிலேயே அர்ஜுனன் பேரில் எய்திருக்கலாமே.அவ்வாறு செய்யாமல் ஏன் கடோத்கசனின்மீது
எய்து அந்த அஸ்திரத்தை வீணடித்தான்?
கேள்வியின் விடைக்குள் நுழைவதன் முன்பு, சில ஆரம்பகட்டத் தகவல்களைச் சொல்லவேண்டும்.பீஷ்மர்
தலைமையில் நடந்த யுத்தத்தில் ‘பீஷ்மர் விழும்வரையில் நான் யுத்தத்தில் பங்குபெறமாட்டேன்’
என்று கர்ணன் சபதம் செய்திருந்தான்.பீஷ்மர் பத்தாம் நாள் வீழ்த்தப்பட்டார்.அபிமன்யு
வதம் துரோணர் தலைமையேற்ற பதின்மூன்றாம் நாள் நடைபெற்றது.அபிமன்யு வதத்துக்குக் காரணமாக
இருந்த ஜயத்ரதனை மறுநாள் ‘சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால் நெருப்பில் விழுந்து
உயிர் நீப்பேன்’ என்று அர்ஜுனன் சபதம் செய்திருந்தான்.பதினான்காம்
நாள் சூரிய அஸ்தமனத்துக்குச் சற்று முன்பு ஜயத்ரத வதம் முடிந்தது.ஆனால் அன்றைய போர்
எப்போதும்போல சூரியாஸ்தமனத்துடன் நிறுத்தப்படாமல் இரவெல்லாம் தொடர்ந்தது.யானைகள் மீதும்
குதிரைகள் மீதும் தேர்களின் மீதும் தீப்பந்தங்களை ஏற்றிவைத்துக்கொண்டு இரவெல்லாம் போரிட்டார்கள்
என்கிறது வியாச பாரதம்.பீமனுக்கும் ஹிடிம்பிக்கும் பிறந்தவனான கடோத்கசன் அரக்க இனத்தைச்
சேர்ந்தவனாதலால், இரவு ஆகஆக அவனுடைய உக்கிரம் அதிகரித்தது.கௌரவ சேனையைச் சேர்ந்த பலர்,
இந்திரன் தந்த சக்தியை உபயோகித்து அவனைக் கொல்லச் சொல்லிக் குரலெழுப்பினர். “கர்ண!
இப்பொழுது சக்தியாயுதத்தினாலே விரைவாகக் கடோத்கசனைக் கொல்.திருதராஷ்டிர மகாராஜனைச்
சேர்ந்த இந்தக் கௌரவர்கள் ஓடுகிறார்கள்.பீமன், பார்த்தன் இருவரும் நமது விஷயத்தில்
என்ன செய்யப்போகிறார்கள்?அர்த்தராத்திரியில் தாக்கச் செய்கின்ற இந்தப் பாபியைக் கொல்.நமக்குள்
எவன் மிக்க கோரமான இந்த யுத்தத்தினின்று விடுபடுவானோ அவன் சேனையுடன் கூடின பார்த்தர்களை
எதிர்த்துப் போர்புரிவான்.ஆதலால், இந்தக் கோரரூபியான ராக்ஷஸனை இந்திரனாலே கொடுக்கப்பட்ட
சக்தியினாலே நீ கொல்ல வேண்டும்.கர்ண!இந்திரனுக்கொப்பான எல்லாக் கௌரவர்களும் போர்வீரர்களுடன்
ராத்திரி யுத்தத்தில் நசிக்கவேண்டாம்’ என்று சொன்னார்கள்.”
(கும்பகோணம் பதிப்பு, துரோண பர்வம், 5ம் தொகுதி, கடோத்கசவத பர்வம், அத்.180, பக்.722)
(At that time all the
Kauravas, beholding Karna and that terrible illusion (of the Rakshasa) cried
out saying, ‘O Karna, slay the Rakshasa soon with thy dart. These Kauravas and
the Dhartarashtras are on the point of being annihilated. What will Bhima and
Arjuna do to us? Slay this wretched Rakshasa at dead of night, who is consuming
us all. They that will escape from this dreadful encounter to-day will fight
with the Parthas in battle. Therefore, slay this terrible Rakshas now with that
dart given thee by Vasava. O Karna, let not these great warriors, the
Kauravas, these princes that resemble Indra himself, be all destroyed in this
nocturnal battle’ என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு—Drona
Parva, Section CLXXIX) இதைக் கேட்ட கர்ணன், தன்னுடைய கவச குண்டலங்களைக் கொடுத்து அதற்கு
பதிலாக இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை கடோத்கசன் மீது எய்தான்.சக்தியாயுதத்தால்
தான் அடிக்கப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்த கடோத்கசன், தன் உருவத்தை விந்திய மலையைப்
போலப் பெருக்கிக்கொண்டு கௌரவ சேனையின் மீது விழுந்தான்.இப்படியொரு மலைபோன்ற உருவத்துடன்
அவன் விழுந்ததால் கௌரவ சேனையில் ஒரு அக்ஷெஹிணி சேனை அழிந்தது.(பாரதத்தின் மற்ற பல பதிப்புகளில்,
கடோத்கசன் விழும்போது, ‘உன் உருவத்தைப் பெருக்கிக்கொண்டு விழு’
என்று பீமன் வந்து சொன்னதாகக் காணப்படுகிறது.அது தமிழ் மொழிபெயர்ப்பிலும் இல்லை.ஆங்கில
மொழிபெயர்ப்புகளிலும் இல்லை.)
இதை திருதராஷ்டிரனிடத்தில் சொல்லிக்கொண்டு வரும்போது, திருதராஷ்டிரன் அவனை இடைமறித்தான்.
‘ஓ ஸஞ்சயா!கர்ணன் இந்திரனிடத்திலிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை ஏன் அவன் போருக்கு வந்த
முதல் நாளிலேயே (அதாவது பதினோராவது நாள் போரிலேயே) விடவில்லை?பன்றிக்கும் நாய்க்கும்
நடக்கின்ற சண்டையில் இரண்டுமே அழிந்தன என்றால் எப்படி வேட்டைக்காரனுக்கு லாபமோ, அப்படி
இப்போது சக்தியாயுதம் கடோத்கசனின் மீது ஏவப்பட்டதால் இப்போது வாசுதேவனுக்கு லாபமாயிற்று.கடோத்கசன் கர்ணனைக் கொன்றிருந்தால், அது பாண்டவர்களுக்கு
லாபமாகியிருக்கும். அல்லது கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், சக்தியாயுதம் வீணடிக்கப்பட்டதால்
அதுவும் பாண்டவர்களுடைய லாபமாகவே ஆகும்.இப்படியிருக்கும்போது, மகாபுத்திசாலியான நீ,
கர்ணனுக்கு அர்ஜுனன் மீது சக்தியாயுதத்தைப் பிரயோகிக்கும்படி ஏன் நினைவூட்டவில்லை?’
என்று கேட்டான்.தமிழ் மொழிபெயர்ப்பில் அத்.183, பக்.731ல் உள்ள இந்தப் பகுதியை கிஸாரி
மோகன் கங்கூலி இவ்வாறு மொழிபெயர்க்கிறார்: Even so hath that fatal dart been
rendered fruitless through Ghatotkacha. As in a fight between a boar and a dog,
upon the death of either, the hunter is the party profited, I think, O learned
one, that even so was Vasudeva the party to profit by the battle between Karna
and Hidimva’s son. If Ghatotkacha had slain Karna
in battle, that would have been a great gain for the Pandavas. If, on the other
hand, Karna had slain Ghatotkacha, that too would have been a great gain to
them in consequence of the loss of Karna’s dart. Endued with great wisdom, that
lion among men, viz., Vasudeva, reflecting in this way, and for doing what was
agreeable to and good for the Pandavas, caused Ghatotkacha to be slain by Karna
in battle.’… “Dhritarashtra said, ‘My son is
fond of quarrel. His advisers are foolish. He is vain of his wisdom. It is for
that, that this certain means of Arjuna’s death hath been baffled. Why, O
Suta, did not Duryodhana, or that foremost of all wielders, viz., Karna,
possessed of great intelligence, hurl that fatal dart at Dhananjaya? Why,
O son of Gavalgana, didst thou too forget this great object, possessed as thou
art of great wisdom, or why didst not thou remind Karna of it?’
கர்ணனுக்கு இதை நினைவூட்டாமலில்லை.பதினோராம் நாள் யுத்தத்தின் இரவிலிருந்து ஒவ்வொரு
நாளும்நானும் துரியோதனனும் துச்சாதனனும் சேர்ந்து பார்த்தனைக் கொல்லுமாறு கர்ணனுக்கு
நினைவூட்டுவோம். ‘கர்ணா, சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜுனனைக் கொல்.அர்ஜுனனுடைய
வீழ்ச்சிக்குப் பிறகு வேறு யாரையாவது கண்ணன் தலைமையேற்கச் செய்தால், கர்ணா, கண்ணனைக்
கொல்.அவன்தான் பாண்டவர்களுக்குப் புகல்.அவன்தான் அவர்களுடைய வேர்.ஆகவே, இலை கிளைகளை
விட்டுவிட்டு வேரை அழி’ என்று தினந்தோறும் இரவுக்கூட்டத்தில் கர்ணனுக்கு
நினைவூட்டுவோம்.காலையில் எழுந்திருக்கும்போது இந்த உறுதியான தீர்மானத்தோடு கண்விழிப்போம்.ஆனால்
எப்படியோ தெரியவில்லை.காலையில் போர் தொடங்கியதும் இந்தத் தீர்மானத்தை நாங்கள் எல்லோருமே
மறந்துவிடுவோம்.கேசவன் எப்போதும் அர்ஜுனனைக் காக்கிறான்.அர்ஜுனைக் காக்கிறான் என்றால்,
தன்னைக் கொல்வதற்காக நாங்கள் திட்டம் தீட்டியிருப்பதை அவன் அறியானா?தன்னைக் காத்துக்கொள்வான்
இல்லையா?எனவேதான் அர்ஜுனனைக் கர்ணனுக்கு எதிரில் அவன் கொண்டுவரவே கையில் சக்கரப்படையைக்
கொண்டுள்ள அந்த ஜனார்தனனை வெல்வோர் யாருமே இல்லை’ என்று
பதில் சொன்னான்.
மோகன் கங்கூலி இந்தப் பகுதியை இப்படி மொழிபெயர்க்கிறார்:
said, ‘Indeed, O king, every night this formed the subject of deliberation
with Duryodhana and Sakuni and myself and Duhsasana. And we said unto Karna, ‘Excluding
all other warriors, O Karna, slay Dhananjaya. We would then lord it over
the Pandu’s
and the Panchalas as if these were our slaves. Or, if upon Partha’s
fall, he of Vrishni’s
race appoints another amongst the sons of Pandu (in this place for carrying on
the fight), let Krishna himself be slain. Krishna is the root of the Pandavas,
and Partha is like their risen trunk. The other sons of Pritha are like their
branches, while the Panchalas may be called their leaves. The Pandavas have Krishna for their
refuge, Krishna for their might, Krishna for their leader. Indeed, Krishna is
their central support even as the moon is of the constellations. ……….. We
rose every morning, having formed such a resolution in respect of that Lord of
the very gods, viz., Hrishikesa of immeasurable energy. At the time of battle,
however, we forget our resolution. Kesava
always protected Arjuna, the son of Kunti. He never placed Arjuna before the
Suta’s son in battle. Indeed, Achyuta always placed other
foremost of car-warriors before Karna, thinking how that fatal dart of ours
might be made fruitless by ourselves. O lord! When, again, the high-souled
Krishna protected Partha in this manner from Karna, why, O monarch, would not
that foremost of beings protect his own self? Reflecting well, I see that there
is no person in the three worlds who is able to vanquish that chastiser of
foes, viz., Janardana, that hero bearing the discus in hand.
ஆலோசித்துத் திட்டம் தீட்டினாலும், யுத்தம் தொடங்கியதும் நாங்கள் அனைவருமே இதை எப்படி
மறக்கிறோம் என்பது தெரியவில்லை.இது கண்ணனுடைய வேலைதான்’
என்று ஸஞ்சயன் சொல்கிற இந்த பதில், ஒருபுறம் பார்த்தால் ஏற்புடையது என்று தோன்றுகிறது.ஏனென்றால்,
மஹாபாரதத்தில் ஒரு வாக்கியம் திரும்பத் திரும்ப ஒலிக்கும்: “யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ
யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய:” (சல்லிய பர்வம், அத்தியாயம் 61, ஸ்லோகம்
30). இங்கே நாம் சல்லிய பர்வத்திலிருந்து மேற்கோள் காட்டியிருந்தாலும், கம்பராமாயணத்தில்
‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்று திரும்பத் திரும்ப ஒலிப்பது போல இந்த
“யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய:” என்பது
பல இடங்களில் ஒலிக்கும்.எங்கே தர்மமோ அங்கே கிருஷ்ணன்; எங்கே கிருஷ்ணனோ அங்கே வெற்றி’
என்ற இந்த மஹாவாக்கியத்தை ஒட்டி ஸஞ்சயனுடைய பதில் ஒலிப்பதால் இதை ஏற்கலாம் என்றும்
தோன்றும்.
பதில் அவனுடைய கண்ணோட்டத்தின்படி மட்டும்தான்.(இந்தச் சமயத்தில் இன்னொன்றையும் கவனித்திருப்பீர்கள்.ஸஞ்சயன் ஒவ்வொரு நாளும்
யுத்த களத்தில் இருந்தான்.நாம் பொதுவாக எண்ணுவதைப்போல திருதராஷ்டிரனுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு
ரன்னிங் காமெண்டரி கொடுத்துக்கொண்டிருக்கவில்லை. இதற்கான வலுவான ஆதாரங்கள் பாரதத்தில்
பல இடங்களில் வருகின்றன.பதினெட்டாம் நாள் யுத்தத்தில் போர்க்களத்தில் ஸஞ்சயன், பீமனிடத்திலும்
சாத்தியகியிடத்திலும் அகப்பட்டுக் கொள்கிறான். ‘இந்த மூஞ்சுறால் ஒரு பயனும் இல்லை.விட்டுவிடு’
என்று பீமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கே தோன்றும் வியாசர் ஸஞ்சயனை விடுவிக்கும்படிச்
சொல்கிறார்.இது போகட்டும்.இதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்.) ஸஞ்சயன் அவனுடைய கண்ணோட்டத்தில் சொன்ன
பதில் ஏற்கத் தக்கதுதானா என்பது இப்போது நம்முன் உள்ள கேள்வி.கர்ணன் களத்துக்குள் நுழைந்த
பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து, கர்ணன் வீழ்ந்த பதினேழாம் நாள் யுத்தம் வரையில்
ஒவ்வொரு நாளும் நடந்தது என்ன என்பதன் சுருக்கத்தைப் பார்த்துக்கொண்டு வந்தால்தான்,
ஸஞ்சயனுடைய பதிலின் validity புலப்படும்.அதை அடுத்தமுறை அலசுவோம்.