அனைவருக்கும் வணக்கம்.
புதிய இதழ் தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
புதிய இதழின் பெயர்: வலம்.
மாத இதழாக வெளிவரும் வலம் இதழின் பொறுப்பாசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா.
80 பக்கங்களுடன் கருப்பு -வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவரும்.
வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கும். சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்கும்.
இந்த இதழுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு தனி இதழின் விலை: 50 ரூ. ஒரு இ-இதழின் விலை: 30 ரூ.
ஓராண்டு சந்தா (அச்சு இதழுக்கு): ரூ 500
இந்தியாவில் உள்ளவர்களுக்கு அச்சு இதழ் ஒவ்வொரு மாதமும் அஞ்சல் துறைமூலம் புக் போஸ்ட்டில் (சாதாரண தபாலில்) அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் இ-இதழைத்தான் படிக்கவேண்டியிருக்கும். அச்சு இதழை அனுப்ப இயலாது. அச்சு இதழுக்கு சந்தா அனுப்புபவர்கள் சந்தாவை செக்காகவோ டிடியாகவோ அனுப்ப விரும்புகிறவர்கள். V. Harihara prasanna என்ற பெயருக்கு டிடி/செக் எடுத்து,
வலம் இதழ், 19, அருணாச்சலா ஃப்ளாட்ஸ், லக்ஷ்மி நகர், நன்மங்கலம், சென்னை - 600129 தொடர்புக்கு: 9884279211
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மணியார்டர் அனுப்பவேண்டாம். செக் அல்லது டிடி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மணி ஆர்டர் அனுப்பினால் அது நிராகரிக்கப்படும்.
சந்தாவை பேங்க் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்ப விரும்பிகிறவர்கள், வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற, ValamTamilMagazine at gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.
‘வலம்’ இதழை மின்னிதழாக நம்மபுக்ஸ் வலைத்தளத்தில் வாங்கி அனைவரும் வாசிக்கலாம்.
முதல் இதழ் விஜயதசமி அன்று அக்டோபர் 11, 2016ல் வெளிவந்தது.
இதழுக்கு படைப்புகள் அனுப்ப விரும்புகிறவர்கள் ValamTamilMagazine at gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை அனுப்பி வைக்கவும்.
– வலம் ஆசிரியர் குழு.