Posted on Leave a comment

மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்

வடக்கே போகும் தேசம் என்றவுடன் ஏதோ நான் தனித்தமிழ் அன்பனாக மாறி சீரிய திராவிடச்சிந்தனையின் பாதிப்பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்னும் நைந்து போன வசனம் பேசுவதாக நினைக்க வேண்டாம். நான் சொல்லும் வடக்கே என்பது இரு பரிமாணப் பரப்பில் உயருவதைக் குறிக்கும் சொல்லாடலான ‘Going north’ என்பதுதான்! Continue reading மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

தெளிவான சட்டதிட்டங்கள் அற்ற, உடனடியாக முடிவெடுக்கும் திறனும் அற்ற ஒரு அரசாங்கம். இந்த அரசின் தலைமைப் பொறுப்பும் இப்படியே. இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய பேராபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்திய துரதிருஷ்ட சம்பவமே லெபனான் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து. Continue reading துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

பிரதமர் இந்திரா படுகொலை

திருவொற்றியூர் கடற்கரைக் கோவிலில் டாக்டர் நித்யானந்தம் ஏற்படுத்திய அனுபவத்தின் தாக்கம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் எவ்வளவு முயன்றாலும் அது என்னைவிட்டு அகலவில்லை. என்னுடைய உளநிலையில் டாக்டர் தனக்கென்று ஒரு உள்ஒதுக்கீடு செய்து கொண்டு விட்டார். எதைச் செய்தாலும் எங்கே சென்றாலும் என்னால் அவரை அகற்ற முடியவில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

Posted on Leave a comment

வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

ஓர் உணவகத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள்தான் வாழை இலை, உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் குடிக்க நீர் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் உரிமையாளர். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். பின்னர் நீங்களே சமைக்க வேண்டும் என்கிறார். நீங்கள் சமைக்கவும் செய்கிறீர்கள். அங்கு உணவு உண்ண உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீங்கள் வெளியேறும் நேரம் உணவக உரிமையாளர் உணவிற்கான தொகையைப் பெற்றுக் கொள்கிறார். Continue reading வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

Posted on Leave a comment

போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு

உக்ரேனில் ஒரு கிராமத்தை நாசிப்படை ஆக்கிரமிக்கிறது. குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போய் கிருமிநாசினி அறைக்குள் அடைத்துச் சோதனைகள் செய்து வெளியே எடுக்கிறார்கள். நோயுள்ள குழந்தைகள் கொல்லப்படுவர் என்கிறார்கள். ஜெர்மனியின் சோதனைச் சாலைகளுக்குச் சில குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். எலிகள் சீக்குப் பிடித்துச் சாகின்றன, நல்ல எலிகளாகப் பார் என்று ஜெர்மன் அதிகாரி தன் படைக்கு உத்தரவு போடுகிறார். Continue reading போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு

Posted on Leave a comment

விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

பிஜேபி அரசு கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. விவசாயத்துறை மாறுதல்களும் அதை முன்னெடுக்கும் மூன்று வேளாண் சட்டங்களும் அவற்றில் முக்கியமானவை. Continue reading விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘என் சரித்திரம்’ மிகவும் புகழ்பெற்ற நூல். அதைப் போலவே முக்கியமான மற்றொரு நூல் அவர் எழுதிய அவரது குருநாதரின் வாழ்க்கை வரலாறு. ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’. Continue reading லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

ஏசு கிறிஸ்துவும் இந்துக்களும் | சீதாராம் கோயல், தமிழில்: ஜடாயு

(சீதா ராம் கோயல் எழுதிய Jesus Christ: An Atrifice for Aggression (1994) என்ற நூலின் முன்னுரை)

சுவிசேஷங்களின் படியான ஏசுவின் முதல் தரிசனம் எனக்கு 1956ல் கிட்டியது. எனது ஜெசூட் நண்பர் என்னை மதமாற்ற முயன்று, அந்த முயற்சியில் தோல்வியடைந்திருந்தார். பாட்னாவில் உள்ள மிஷன் தலைமையகத்திற்குத் திரும்பி வந்ததும், எங்களுக்கிடையில் நடந்த உரையாடல்: Continue reading ஏசு கிறிஸ்துவும் இந்துக்களும் | சீதாராம் கோயல், தமிழில்: ஜடாயு

Posted on Leave a comment

அடிமையாக்கப்பட்ட கிராமங்கள் – ஜோசஃப் ஸ்டாலினின் பொற்காலம் | அருண் பிரபு

Stalin’s Enslavement of Rural Russia

கிராமப்புற ரஷ்யாவை ஸ்டாலின் எப்படி அடிமைப்படுத்தினார் என்பதன் விளக்கமே இந்தப் படம். Continue reading அடிமையாக்கப்பட்ட கிராமங்கள் – ஜோசஃப் ஸ்டாலினின் பொற்காலம் | அருண் பிரபு

Posted on Leave a comment

பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்

‘தமிழகத்திற்கும் தமிழ்த் தாய்க்கும் தொண்டு புரிவதென்ற நோக்கத்துடன் வெளிவந்துள்ள பல பத்திரிகைகள் இருக்கையில் ‘நானும் அத்தொண்டில் சேருவேன்’ என்று தீர்மானம் கொள்வதே அதிகத் துணிவு என்று நினைத்தல் கூடும். ஆயினும் ராமன் சேதுபந்தம் செய்யும் காலத்தில் ராமசேவையில் ஈடுபட்டு, ஒரு சிறிய கல்லை வெகுப் பிரயாசையோடு கொண்டு வந்து சேர்த்த அணிலின் பக்தியை பரமாத்மா பெரிதாகக் கொள்ளவில்லையா? அவ்வாறே தேசத்தொண்டு தமிழன்னையின் ஒவ்வொரு புதல்வனும் கைப்பற்ற வேண்டிய தர்மம் என்று கருதி, ‘பாரத மணி’ தன்னால் இயன்றதைச் செய்ய வெளிவந்திருப்பதால் தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெரும் என்று நம்புகிறோம்.’ Continue reading பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்