Posted on Leave a comment

மாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்

Alternte Reality

ஆங்கிலப் புத்தகங்கள் / டிவி தொடர்கள் / திரைப்படங்கள், பரீட்சார்த்தம் என்ற பெயரில் விதவிதமாக, மிக விநோதமாகச் சிந்திக்கின்றன. நடந்து முடிந்த ஒரு வரலாற்று உண்மையை மாற்றி, அதற்குப் பதில் ‘இப்படி நடந்திருந்தால் (What If?)’ என்று வித்தியாசமாகச் சிந்திப்பதுதான் Alternate Reality எனப்படும் மாற்று யதார்த்தம். இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து, மாற்று யதார்த்தம் ஒன்றை யோசிக்கலாமா? Continue reading மாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

இருபதாம் நூற்றாண்டில் உலக அறிஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட மாபெரும் அறிவியல் அறிஞர் சந்திரசேகர வெங்கட ராமன் (சி.வி.ராமன்). அவர் இறந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திர இந்தியாவின் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சியில் ராமனின் எண்ணமும் ராஜகோபாலாச்சாரியின் எண்ணமும் ஒன்றாக இருந்தது என்பதை வெகுசிலரே அறிவர். Continue reading சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

Posted on Leave a comment

நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்

‘கொரோனா’ என்ற வார்த்தையுடன் அரசியல்வாதியின் துண்டுபோல அதனுடன் ‘நாவல்’ என்ற ஒன்று கூடவே இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். ‘நாவல்’ – புதிது என்பதைக் குறிக்கிறது. புதுவிதமான வைரஸ்!

நாவல், நவீனம் என்ற சொற்கள் புதுமையைக் குறிக்கின்றன. நவீன மருத்துவமனை, நவீன மருத்துவர்கள், நவீன ஆயுதங்கள், நவீன தகவல்தொடர்புகள், நவீன காலத்திற்கு ஏற்ற நவீனமயமாக்கல் என்று இந்த நவீன உலகத்தில் எல்லாம் நவீனமாகிறது. நவீனம் – ‘பழமையிலிருந்து மாறுபட்டு’ என்கிறது அகராதி. பழமையிலிருந்து மாறாதவர்களை ‘பழமை பேசும் கிழம்’ என்று நக்கல் அடிக்கிறோம். கை கூப்பி வணக்கம் சொல்லும் மரபுள்ள இந்தியாவை ‘நீங்க எல்லாம் எப்ப மாறப் போறீங்க?’ என்று கிண்டல் செய்வதைக் கேட்கிறோம். Continue reading நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்