
இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடைய தமிழிலக்கியத்தின் ஒரு மகத்தான சிகரம் கம்பராமாயணம் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த மகத்தான காவியத்தின் ஊடாக அறநெறிகளும், தத்துவச் சிந்தனைகளும், வாழ்க்கைத் தரிசனங்களும், பல்வேறு விதமான பண்பாட்டு, சமூக, வரலாற்றுச் செய்திகளும் இயல்பாகப் பயின்று வருகின்றன. இவற்றைப் பலவிதங்களில் ரசனைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துவது கம்பரைப் பற்றியும், தமிழ்ப் பண்பாடு பற்றியதுமான நமது கண்ணோட்டத்தை விரிவாக்கும். அதனடிப்படையில் குலம், சாதி, வர்ணம் ஆகிய மரபார்ந்த கருத்தாக்கங்கள் குறித்து கம்பராமாயணப் பாடல்களில் வரும் குறிப்புகளை ஒரு தொகுப்பாக இக்கட்டுரையில் பார்க்கலாம். Continue reading கம்பனில் குலமும் சாதியும் | ஜடாயு