Posted on Leave a comment

ரஷ்ய உளவாளிகள் | அருண் பிரபு

Black March – Unofficial Assignment – Russian Detectives

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும் செக்கோஸ்லோவாகியாவும் சரணடைந்தாலும் சிறு சிறு எதிர்ப்புக் குழுக்கள் சோவியத் படைகளை எதிர்க்கின்றன. ஆயுதப் போராட்டமாக இது உருவெடுக்க ரஷ்ய உளவுப்படை ஒன்று உள்ளே வருகிறது. எங்களை எதிர்க்கிறார்கள் என்றால் நாங்கள் வருகிறோம் என்று அமெரிக்காவோ பிரிட்டனோ வரும், வந்தால் தன் கை தாழும் என்று எண்ணும் ஸ்டாலின் உளவுப்படைகளை அனுப்பி இந்த எதிர்ப்பாளர்களை ‘கவனிக்க’ உத்தரவிடுகிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமான கர்னல் ஒருவரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்படுகிறது. Continue reading ரஷ்ய உளவாளிகள் | அருண் பிரபு

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

மறைக்கப்படும் உண்மைகள்

பிப்ரவரி 2021 இல் ‘தாஸ்குப்தா ரிவ்யூ’ என்கிற முக்கியமான அறிக்கையை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. பயோடைவர்ஸிட்டி என்கிற உயிரினப்பன்மையின் பொருளாதார முக்கியத்துவம் குறித்த மிகவும் விவரங்கள் நிறைந்த அறிக்கை. Continue reading லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு

கபில்தேவின் கப்

மார்க்ஸிஸ்ட் தோழர்கள் நடத்தும் உரையாடல் மற்றும் எழுத்தில் அதிகமாகப் புழங்கும் ஒரு வார்த்தை – வர்க்க உணர்வு. தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பாட்டாளிகளிடம்தான் புரட்சிக்கு அவசியமான வர்க்க உணர்வு இருக்கும் என்றும், அவர்கள் முன்னெடுத்துச் செல்வதுதான் ஒரிஜினல் புரட்சி என்றும், கார்ல் மார்க்ஸ் எழுதினார். நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அது நடக்கவில்லை. தோழர்களே அந்தப் பாடத்தைத் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த வார்த்தை நிலைத்துவிட்டது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

அர்ஜுனனுடனான இறுதிப் போரின்போது, கர்ணனுடைய தேர்ச்சக்கரம் பூமியில் அமிழத் தொடங்கியதும், ‘நான் இந்தத் தேர்ச்சக்கரத்தைத் தூக்கும் வரையில் என்மீது அம்பு தொடுக்காமல் இரு என்று உன்னை தர்மத்தின் பேரால் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கர்ணன் சொன்னதும், அர்ஜுனனுடைய தேர்ச்சாரதியான கண்ணன், ‘உனக்கு இப்போதாவது தர்மத்தின் மீது நினைவு வந்ததே’ என்று சொல்லிவிட்டு, கர்ணன், பாண்டவர்களுக்குச் செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு ‘அப்போதெல்லாம் உன் தர்மம் எங்கே போனது’ என்று அவனை நோக்கிப் பதினோரு கேள்விகள் எழுப்பியதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு

ரஷ்ய கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. மகா தேசப்பற்றுப் போர் என்று சோவியத் பெயர் சூட்டிய இரண்டாம் உலகப் போரில் எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமே இப்படம். Continue reading இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு

Our Oriental Heritage – Will Durant

பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்ஸி காலம். பேச்சுக்கு இருந்த கட்டுப்பாடு உணவுக்கு இல்லை. எனவே சென்னை மயிலை லஸ் முனையிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி அருந்த நண்பர்களோடு சென்றிருந்தேன். வட இந்திய உணவு வகை மற்றும் வேறு பல புதிய உணவு வகைகள் கிடைக்குமிடம். இதுவரை சாப்பிடாத ஏதேனும் ஒன்றை ‘டேஸ்ட்’ செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசை. Continue reading இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

நம்முடைய பாடப் புத்தகங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. அண்மையில் எழுந்த சர்ச்சை மொகலாய மன்னர்கள் தாங்கள் இடித்த ஹிந்துக் கோவில்களை மீண்டும் சீரமைத்தார்கள் என்பது. இதற்கு ஆதாரங்கள் உண்டா எனத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது ‘இல்லை’ என என்.சி.ஈ.ஆர்.டி நிறுவனம் பதிலளித்துள்ளது. Continue reading லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

The Invasion That Never Was – Michel Danino

‘டேய்! பார்த்தியா?’

எங்கள் வகுப்பறைக்குள் முகுந்தனைச் சுற்றி ஒரே தலைகள். நான் எட்டிப் பார்த்தேன். அவன் கையில் கொஞ்சம் வளைந்து நீளமாக இருக்கும் இரும்புத் துண்டு. Continue reading இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

பிரதமர் இந்திரா படுகொலை

திருவொற்றியூர் கடற்கரைக் கோவிலில் டாக்டர் நித்யானந்தம் ஏற்படுத்திய அனுபவத்தின் தாக்கம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் எவ்வளவு முயன்றாலும் அது என்னைவிட்டு அகலவில்லை. என்னுடைய உளநிலையில் டாக்டர் தனக்கென்று ஒரு உள்ஒதுக்கீடு செய்து கொண்டு விட்டார். எதைச் செய்தாலும் எங்கே சென்றாலும் என்னால் அவரை அகற்ற முடியவில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – 11 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல் – ஒரு விளக்கக் குறிப்பு

ஜனவரி 2021 இதழில் நாம் பாண்டவர்களுடைய வனவாச காலம், காலக்கணக்குப்படி அதிகமாகவே இருந்தது என்ற பீஷ்மருடைய விளக்கத்தை மேற்கோள் காட்டி, ‘இந்த விளக்கம் இன்னமும் முடிவுபெறவில்லை’ என்பதையும் தெரிவித்து, ‘இது பீஷ்மருடைய விளக்கம். இதை துரியோதனன் ஏற்கவில்லை. இந்த விஷயத்தை அடுத்த இதழில் தொடர்ந்து காண்போம்’ என்ற குறிப்போடு முடித்திருந்தோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 11 | ஹரி கிருஷ்ணன்