Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

The Razor’s Edge – Somerset Maugham

வகுப்பறைகளைப் போலவே சிலநேரங்களில் தெருவோரங்களும் நமக்குச் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் என்பதை ஒப்புக்கொள்பவர்கள் உண்டு. ஒப்புக்கொள்ளாதவர்கள் இதைப் படித்துவிட்டு மாறக்கூடும். Continue reading இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

(செப்டம்பர் 2020 இதழின் தொடர்ச்சி..)

வலம் குழுவினர் தொகுத்து அனுப்பியிருந்த கர்ணனைக் குறித்த சில கேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வில்லி பாரதம், ஜைமினி பாரதம் போன்ற படைப்புகளின் ஆசிரியர்கள் காரணத்தோடோ, காரணமின்றியோ செய்திருக்கும் மாறுதல்கள் உருவாக்கியிருக்கும் கட்டமைப்பே கர்ணனைப் பற்றி இன்று நிலவிவரும் பிம்பத்துக்கு அடிப்படையாக இருப்பதைப் பார்த்தோம். வியாச பாரதத்தில் கர்ணன் தோல்வியைத் தழுவும் தறுவாயில் ‘இவ்வளவு தர்மம் செய்தேனே! தர்மம் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று தர்ம நிந்தனை செய்கிறான். ‘தர்மம் தலை காக்கும்’ என்ற பாரம்பரியமான கருத்து இதில் அடிபட்டுப் போகிறதோ என்ற எண்ணத்தினாலோ என்னவோ (உண்மையில் வியாச பாரதத்தின் இந்தக் கட்டம் தர்மத்தின் மீதான அவநம்பிக்கை எதையும் ஊட்டவில்லை) வில்லிபுத்தூரார், கர்ணன் செய்த தர்மத்தின் பலன்களையெல்லாம் ஒரு பிராமணன் வடிவில் வந்து யாசித்துப் பெற்றதாக ஒரு கற்பனையை உள்ளே நுழைத்தார். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 8 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் ஜெர்மானியர்களின் கைதிகளாக இருந்த சிவப்பு ராணுவத்தினர், சோவியத் அமைப்பின் பொது மக்கள் என்று பலரும் தங்களுக்கு விடுதலை என்று மகிழ்ந்து கொண்டாடினர். ஜெர்மனி தோற்று சோவியத் யூனியன் வென்ற நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததால் நாட்டுக்குத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டனர். ஜெர்மன் சிறைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்குச் செல்லாமல் சைபீரியச் சிறை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஜெர்மானியச் சிறைகளில் அவர்களுக்கு நாஜி கொள்கை கற்பிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுவித்து கம்யூனிசத்தை மீண்டும் கற்பிக்க என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு கொடுமையான சிறை. போனால் திரும்பி வருவது மிகவும் அரிது. Continue reading சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு

அன்று ஆங்கில வகுப்பு. இங்கிலீஷ் சார் வயதில் இளயவர். கிளாஸ் ‘போரடிக்காமல்’ இருக்க அவ்வப்போது சுவைபட ஏதாவது பேசுவார்; கேள்விகள் கேட்பார். ‘வாழ்க்கையில் என்ன சாதனை செய்யப்போகிறீர்கள்’ என்ற பொதுவான கேள்விக்கு மாணவர்கள் பதில் கூற வேண்டும்.

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

ஆல்பெர் காம்யூவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

அடையாறு பகுதியின் இளைஞர்கள் அன்றாடம் கூடுமிடம் ஹோட்டல் ரன்ஸ். பலருக்கு அதை வாழுமிடம் என்றுகூடச் சொல்லலாம். எவ்வளவுநேரம் உட்கார்ந்திருந்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். காபி, டீ, சமோசா என்று பில் மட்டும் கூடிக்கொண்டே போகும். என்னுடைய வாழ்க்கைத் தடத்தில் ஹோட்டல் ரன்ஸுக்கு முக்கியமான இடமுண்டு. பத்தாண்டுகளுக்கு மேலாக நான் ஈடுபட்டுவந்த கடல் தொழில், மீன் தொழில், கருவாடு தொழில், எல்லாவற்றிலிருந்தும் விலகும் கட்டம் அங்கேதான் நிகழ்ந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

Posted on Leave a comment

காமிசார்களின் அரசியல் (Demoted) | அருண் பிரபு

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வென்றது முற்றிலும் ஹிட்லரின் தலைக்கனம், பிடிவாதம், தற்குறித்தனம் இவற்றால் மட்டுமே; ரஷ்யர்களை விட்டிருந்தால் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு பெரிய எண்ணிக்கையில் செத்திருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் மற்றொரு படம். Continue reading காமிசார்களின் அரசியல் (Demoted) | அருண் பிரபு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

போலிசுக்கு பதிலாக புஸ்வாணம்

தமிழகத்தில் செயல்படும் இந்து இயக்கங்களுக்குச் சவாலாக இரண்டு நிகழ்வுகள் ஏற்பட்டன. 1981 மற்றும் 1982ல். முதலில் மீனாட்சிபுரம், இரண்டாவது மண்டைக்காடு. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

Posted on 1 Comment

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

  1. உண்மையில் மகாபாரதத்தில் கர்ணனின் இடம் என்ன? கர்ணன் வள்ளலாகவும், அன்பே உருவானவனாகவும், நீதி நேர்மை தர்மம் எல்லாம் அறிந்திருந்தும் செஞ்சோற்றுக் கடனுக்காக மட்டுமே கௌரவர்கள் பக்கம் நின்றதாகவும் இந்தியா முழுமைக்கும் நம்பப்படுகிறதே, இது சரிதானா? கர்ணன் மனமறிந்து எந்தத் தவறையும் மகாபாரதத்தில் செய்யவே இல்லையா?
  2. கர்ணன் செய்த தவறுகளாக கிருஷ்ணன் பட்டியலிடுவது என்ன?
  3. கர்ணனின் தேர்க்கால் உடைந்து போர்க்களத்தில் கர்ணன் நின்றபோது, அர்ஜுனன் எய்த அம்பு படாமல் தர்மதேவதை காத்தாள் என்பது உண்மைதானா?
  4. கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் வரிசையில், தர்மனுக்கு நிகரான தர்மத்தைத் தொடர்பவனாக கருதத் தக்கவனா?
  5. அர்ஜுனனுக்கு நிகரான வீரனாகவும் வைக்கப்படத்தக்கவன் தானா கர்ணன்?

Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

‘ஏன் சார் நீங்க செருப்பு போடறதில்ல?’

1967ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பில் பயிலும் ஒரு சிறு மாணவர் கூட்டம், அங்கே தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சி.ஜகன்னாதாச்சாரியாரிடம் இக்கேள்வியைக் கேட்டது. ஜகன்னாதாச்சாரியார் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் துறைபோகியவர். ஆன்மிகத்திலும், ஆண்டாள் பாசுரங்களிலும் ஆய்வுகள் செய்தவர். இலக்கணப் புலி. பொய்யே சொல்லத்தெரியாத புனிதர். தேசபக்தர். Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

Posted on 1 Comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

(Lectures on Ramayana by Rt. Hon’ble V. S. Srinivasa Sastri; Raamaayana Peruraigal, (Tamil translation by Smt. K. Savithri Ammal Both pub. By The Samskrita Academy, 84, Thiru Vi Ka Road, Mylapore, Chennai-600004)

சென்ற ஆண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் எனது சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்தது. பேசி முடித்த பிறகு உரையாடிக் கொண்டே நண்பர்களோடு அரங்கத்தை விட்டு வெளியே வந்தோம். வளாக வெளிப்பரப்பில் கிளைபரப்பி ஒரு பெரிய மாமரம் இருந்தது. Continue reading இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.