Posted on Leave a comment

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

விலக்கப்பட்ட வேள்வி

மே மாத இதழில் நம்முடைய ஐந்தாவது கேள்வியாகப் பின் வருவதை எழுப்பியிருந்தோம்: ‘பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில்—அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், Continue reading மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Annie Besant – An Autobiography. (அன்னி பெஸெண்ட் – ஒரு சுயசரிதை)

இங்கிலாந்து சர்ச் ஒன்றின் பாதிரியான டாக்டர் ப்யூசேவிடம், 20 வயதான அப்பெண் கூறுகிறாள்:

“ஃபாதர் எனக்கு ஜீஸஸ் மீதோ அவர் கூறியுள்ள வார்த்தைகள் மீதோ நம்பிக்கை இல்லை. என் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நீங்கள் விளக்க வேண்டும்.”

“பெண்ணே! நீயே ஒரு தேவாலய ஊழியரான பாதிரியின் மனைவி. நீ இப்படிச் சொல்வது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. நீ செய்வது இறை நிந்தனை.”

“கிறித்துவ மதத்தில் எனக்குள்ள சந்தேகங்களைத்தானே கேட்கிறேன்!”

Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

ஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு

வாங் கிராமம், ஜியாங்சி மாகாணம் சீனாவில் பிறந்தவர் நான்ஃபு வாங். இவர் 1985ல் சீனாவின் ஒரு பிள்ளைக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். இவர் பெற்றோர் பையன் பிறப்பான் என்ற எதிர்பார்ப்பில் ஆண் தூண் என்று பொருள்பட நான்ஃபு என்று இவருக்குப் பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியும் அதே பெயரை வைத்தனர். இவருக்குப் பிறகு ஒரு தம்பி உண்டு. ஒரு பிள்ளைக்கும் இன்னொரு பிள்ளைக்கும் இடையே 5 ஆண்டுகள் இடைவெளி இருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு அனுமதி உண்டு என்ற சட்டத்தின் படி இவர் பெற்றோர் இரண்டாவது பிள்ளை பெற்றுக் கொண்டாலும், ஊரில், பொது இடங்களில் அவர்கள் ஏதோ தவறு செய்தவர்கள் போலவே பார்க்கப்பட்டனர். பள்ளிக்கூடத்தில் நான்ஃபுவை தோழிகள் தம்பி இருப்பது பற்றிக் கேலி செய்தனர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாதவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. நான்ஃபுவின் தம்பி பிறக்கவுள்ள சமயம் அவரது பாட்டி ‘இது பெண்ணாக இருந்தால் ஒரு கூடையில் வைத்து தெருவில் வைப்போம்’ என்றாராம். அப்போது குழந்தையின் பாலினத்தை அறியும் சோதனை அங்கே வரவில்லை. பையன் என்றதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

Continue reading ஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு

Posted on Leave a comment

புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு

Girish Chandra Ghosh – A bohemian devotee of Sri Ramakirishna – Swami Chetanananda

ஒரு சமயம் ஓர் எழுத்தாளர் ஐயா! தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை நான் எழுதலாமா? என்று தயங்கிக் கொண்டே கேட்டார். “நான் எப்படி உள்ளேனோ அப்படியே என்னை வடியுங்கள் என்று புன்னகையோடு உரைத்தார் கிரீஷ் சந்திர கோஷ். எழுத்தாளரின் தயக்கத்திற்கும் அவர் பெற்ற பதிலுக்கும் பின்னணியில் ஓர் அற்புதமான வாழ்க்கை வரலாறு படர்ந்து கிடக்கிறது. 

ஆடம்பர வாழ்க்கை, மதுப் பழக்கம், விலைமாதர்களோடு தொடர்பு, தன்னிச்சையாகச் செயல்படுதல், முரண்டு பிடிக்கும் குணம், முன்கோபம் என்று பல தீய பழக்கங்களையும், தீய குணங்களையும் கொண்டிருந்தவர் கிரீஷ். 

Continue reading புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

மாவோவின் கடைசி நடனக் கலைஞன்: Mao’s Last Dancer | அருண் பிரபு

சீனாவின் கம்யூனிஸ காலத்தையும் அதன் மாற்றத்தையும் சொல்லுகிறது இந்தப் படம். 1970களில் மாவோவின் காலத்தில் படம் தொடங்குகிறது. ஷாண்டாங் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 9 குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்தவன் லீ குங்க்சின். அந்தக் கிராமத்துக்கு அதிகாரிகள் வருகிறார்கள். லீயின் பள்ளிக்கு வரும் அதிகாரிகள் அங்கே மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பீஜிங்கில் நடக்கும் நாட்டியப் பயிற்சிக்கு அனுப்பவிருப்பதாகச் சொல்கிறார்கள். லீயின் வகுப்பில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் போகிறார்கள் அதிகாரிகள். லீயின் வகுப்பாசிரியர் மிகவும் கெஞ்சிக் கேட்டு அவனைச் சேர்த்துவிடுகிறார். லீ பீஜிங் போவதை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் பக்கத்து குவிங்டாவ் நகரத்தில் தேர்வுக்கு வரச்சொல்கிறார்கள். அங்கே சைக்கிளில் அழைத்துப் போகிறார் லீயின் தந்தை. லீயிடம் நடனத்துக்குத் தேவையான ஒரு நளினம் உள்ளது என்று மாநில நாட்டிய மாஸ்டர் அவனைத் தேர்வு செய்கிறார்.

Continue reading மாவோவின் கடைசி நடனக் கலைஞன்: Mao’s Last Dancer | அருண் பிரபு

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 13 – பரஸ்பர ஒத்துழைப்பிற்கான வேண்டுகோள்

 அ) தனது நாட்டை நேசிக்கும் எந்த இந்தியனும் தற்போதைய நிலையை வலியுடனும் மோசமான வேதனையுடனுமே பார்க்க முடியும். தாங்கள் இறப்பதற்கு முன் தங்களுடைய அன்பான பூர்வீக நிலத்தின் மீது சுதந்தர தேவி ஆட்சி செய்வதைக் காணலாம் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் தியாகம் செய்திருக்கும் பலர் பொது வாழ்க்கையில் உள்ளனர். Continue reading ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

Posted on 2 Comments

மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்

திருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்த காரணத்தால் மட்டுமே அரசு பாண்டுவின்வசம் ஒப்புவிக்கப்பட்டது என்றல் அது ஒரு Care taker அரசுதானே? அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது? அவர்கள் எப்படி அரசுரிமை பெறுகிறார்கள்?

மக்களாட்சி மலர்ந்துவிட்ட காலத்தில் வசிக்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்—அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலைமைகள் — மிகவும் மசங்கலாகவே தெரிவிக்கப்பட்டும் புரிந்துகொள்ளப்பட்டும் இருக்கின்றன. இராமாயண பாரத இதிகாசங்களையும் பாகவதம் முதலான புராணங்களையும் ஆழ்ந்து படிக்கும்போது ஒரு பேருண்மை புலப்படுகிறது. மக்களாட்சிக் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மன்னராட்சிக் காலத்தில், மன்னர்கள், மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்திருக்கின்றனர்; மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு நாட்டில், மன்னனுக்கு உரிய இடம் என்ன என்பது காலந்தோறும் காலந்தோறும் மாறிக் கூட வந்திருக்கிறது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு

1953 மார்ச் மாதம் 4ம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில் ஒரு பியானோ இசை நிகழ்ச்சி நடந்தது. அது முடியும் நேரம் ரேடியோ மாஸ்கோ இயக்குநரை அழைத்து அந்த நிகழ்ச்சியின் இசைப்பதிவு வேண்டும் என்கிறார் ஸ்டாலின். நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பதிவு செய்து அனுப்புகிறார் இயக்குநர். அதில் பியானோ வாசிக்கும் மரியா யுடினா என்கிற பெண்மணி ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். தன் மாளிகையில் அதைப் படிக்கும் ஸ்டாலின் மூச்சடைத்து விழுகிறார். கை கால் இழுத்துக் கொள்கிறது. ரஷ்யாவின் மத்திய ஆட்சிக் குழு மொத்தத்திற்கும் தகவல் போகிறது. முதலில் வரும் உள்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு (NKVD) தலைவர் பெரியா, யுடினாவின் குறிப்பைக் கண்டு அதைப் பத்திரப்படுத்துகிறார். கமிட்டியின் துணைத்தலைவர் மாலங்கோவ் ஸ்டாலினின் நிலை கண்டு பதறுகிறார். பெரியா அவரை சமாதானப்படுத்தி “நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் தோழர். மற்ற எல்லாம் என் பொறுப்பு என்கிறார். Continue reading ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு