(மீனாட்சி அம்மாள்)
இந்த கோவிட்-19 வீட்டு முடக்க நாட்களில், குழந்தைகளுக்கும், மனைவிக்கும் சுவையாக ஏதாவது தின்பண்டங்கள் செய்து அசத்தலாமே என்று இணையத்தில் தேடினேன். அறிந்ததும் அறியாததுமாய்ப் பல்வேறு தின்பண்டங்கள் செய்யும் வழிமுறைகள் காணக் கிடைத்தன. கூடவே கிடைத்தது ‘மீனாட்சி அம்மாள்’ என்பவர் எழுதிய ‘சமைத்துப் பார்’ என்ற புத்தகம் பற்றிய செய்திகள். ‘மீனாட்சி அம்மாள்’ அந்தக் காலத்து மனுஷி ஆயிற்றே, அவர் எழுதிய புத்தகம் இன்னுமா கிடைக்கிறது என்று ஆச்சர்யத்துடன் தேடிப் பார்த்தால்.. ஆம். அவர் எழுதிய புத்தகமேதான். அவருடைய பேத்தி ப்ரியா ராம்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் வழக்கில் இருந்த சொற்களை மாற்றி, தற்காலத்து மக்களுக்கும் புரியும்படி நூலைக் கொண்டு வந்திருக்கிறார் ப்ரியா. அமேசானிலும் கிடைக்கிறது.
மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது 1951ம் ஆண்டு. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகம். இப்புத்தகம் இன்றைக்கும் விற்பனையில் இருக்கிறது என்பதும், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது என்பதும் சமையற்கலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், வரவேற்பையும் காட்டுகிறது. அதனால்தான் இன்றைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கொங்கு நாட்டுச் சமையல், சிறு தானியச் சமையல், அசைவச் சமையல், சைவச் சமையல், கிராமத்துச் சமையல், மண்பானைச் சமையல், மூலிகைச் சமையல் என்றெல்லாம் புதிது புதிதாகப் புத்தகங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வந்து கொண்டிருக்கின்றன.
‘The Best Of Samaithu Paar’ என்ற தலைப்பில், பெங்குவின் வெளியீடாக மீனாட்சி அம்மாளின் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அதனை வாசித்துக் கொண்டிருக்கையில் தமிழில் சமையற்கலை பற்றி வெளியான முதல் புத்தகம் எதுவாக இருக்கும் என்ற சிந்தனை தோன்றியது.
Continue reading அந்தக் கால சமையல் புத்தகங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்