கிட்டத்தட்ட ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு பா.ஜ.க. மாநிலத் தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு உரையாட சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றிருந்தோம். தொண்டர்கள், பிரமுகர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த அவர், அதற்கு மத்தியில் ‘வலம்’ இதழுக்காக உரையாடினார். வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு கேள்விகளை முன்வைத்தோம்.
நாமக்கலில் தொடங்கி பா.ஜ.க. மாநிலத் தலைவர் வரை, உங்கள் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் 11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படிக்கும்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரக் (முழு நேர ஊழியர்) ஸ்ரீகணேசன்ஜி வந்திருந்தார். எங்கள் பகுதி, பட்டியலின மக்கள் வசிக்கின்ற பகுதி. Continue reading எல்.முருகன் நேர்காணல் | அபாகி