‘தமிழகத்திற்கும் தமிழ்த் தாய்க்கும் தொண்டு புரிவதென்ற நோக்கத்துடன் வெளிவந்துள்ள பல பத்திரிகைகள் இருக்கையில் ‘நானும் அத்தொண்டில் சேருவேன்’ என்று தீர்மானம் கொள்வதே அதிகத் துணிவு என்று நினைத்தல் கூடும். ஆயினும் ராமன் சேதுபந்தம் செய்யும் காலத்தில் ராமசேவையில் ஈடுபட்டு, ஒரு சிறிய கல்லை வெகுப் பிரயாசையோடு கொண்டு வந்து சேர்த்த அணிலின் பக்தியை பரமாத்மா பெரிதாகக் கொள்ளவில்லையா? அவ்வாறே தேசத்தொண்டு தமிழன்னையின் ஒவ்வொரு புதல்வனும் கைப்பற்ற வேண்டிய தர்மம் என்று கருதி, ‘பாரத மணி’ தன்னால் இயன்றதைச் செய்ய வெளிவந்திருப்பதால் தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெரும் என்று நம்புகிறோம்.’ Continue reading பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்
Category: வரலாறு
பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்
1971ல் நாட்டு விடுதலை இயக்கத்தின் போது ஒட்டுமொத்த இனப் படுகொலைகளுக்குத் தூண்டியது உள்பட்ட வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை மற்றும் வழக்குகள் தொடர்பான வங்கதேசப் பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் அரசு வழக்கறிஞராக இருக்கிறார் தாஸ்குப்தா. இவர் நாட்டிலுள்ள சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் மனித உரிமை இயக்கமான இந்து–பௌத்த–கிறித்துவ ஒற்றுமை அமைப்பின் பொதுச் செயலராகவும் இருக்கிறார்.
1947 பிரிவினை குறித்து ஸ்க்ரோல்.இன் இதழுக்கு ராணா தாஸ்குப்தா அளித்த பேட்டி: Continue reading பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்
நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற 75வது ஐநா பொதுச் சபையில், காணொளி வாயிலாக, முன்பே பதிவுசெய்யப்பட்ட 22 நிமிட ஹிந்தி உரையை நிகழ்த்தினார். அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்தினார். அவர் பேசிய விவரம் வருமாறு: Continue reading நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்
ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்
(சர்ச்சில் – ரூஸ்வெல்ட் – ஸ்டாலின்)
இரண்டாம் உலகப் போரின் முக்கிய பிதாமகர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் (இங்கிலாந்து), ஹிட்லர் (ஜெர்மனி), ரூஸ்வெல்ட் (அமெரிக்கா), ஸ்டாலின் (ரஷ்யா) ஆகியோர் ஆவர். Continue reading ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்
வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்
நம்முடைய பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருமளவு உதவுகின்றன. இந்த அரசன் அந்த நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றான், அந்த அரசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் போன்ற செய்திகளைத் தவிர, அக்கால நிர்வாகம், நிதி மேலாண்மை, சமூக வாழ்வு போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த சாசனங்கள் உதவுகின்றன. அப்படிப்பட்ட பல செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகளில் ஒன்றுதான் பொயு 1063 – 1070க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழரின் திருமுக்கூடல் கல்வெட்டு.
Continue reading வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்