Posted on Leave a comment

வலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்

வலம் ஜனவரி 2021 இதழின் உள்ளடக்கம்:

பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்

பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்

அடிமையாக்கப்பட்ட கிராமங்கள் – ஜோசஃப் ஸ்டாலினின் பொற்காலம் | அருண் பிரபு

ஏசு கிறிஸ்துவும் இந்துக்களும் | சீதா ராம் கோயல், தமிழில்: ஜடாயு

மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்

சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு

1965 (சிறுகதை) | ஸிந்துஜா

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்

ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழ்

வலம் இதழ் அக்டோபர் 2020 இதழோடு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதைச் சாத்தியமாக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வலம் இதழ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

விவசாய மசோதா 2020 | அமன்

காமிசார்களின் அரசியல் (Demoted) | அருண் பிரபு

பாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு 

சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன்

புத்தகத்தில் தொலைதல் | ராம் ஸ்ரீதர் 

இந்தியா புத்தகம் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு

என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

படிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி

சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சந்தாவைப் ஆன்லைனில் www.valamonline.in வலைத்தளம் மூலம் புதுப்பிக்கலாம். மேலகதித் தொடர்புக்கு: 9884279211.

Posted on Leave a comment

வலம் ஆகஸ்ட் 2020 இதழ்

வலம் ஆகஸ்ட் 2020 இதழை இங்கே வாசிக்கலாம்..

தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு

கருப்பர் கூட்டமும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் | ஓகை நடராஜன்

வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்

ஸ்யாமா பிரசாத் முகர்ஜீ: ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

மகத்தான வெற்றி (Blockbuster) பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா

Posted on Leave a comment

ஸ்டெர்லைட்: இந்தியாவும் தாமிரத்தின் புவி அரசியலும்

மூலம்  :  கௌதம்
தேசிராஜூ, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ், பெங்களூரு

தமிழில்:  ஜனனி ரமேஷ்

ஸ்டெர்லைட்
ஆலையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்ட நீண்ட காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 2018ல் அரசும் நீதிமன்றமும் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட
ன. இதன் பிறகே இந்தியாவிலுள்ள பெரும்பான்மையோர் தாமிரம் பற்றிய செய்தியைப் பார்க்கத் தொடங்கினார்கள்.  

தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பொது சுகாதாரம் குறித்த அச்சம் ஆகியவை
வேதியல் துறையைப் போலவே பழமையானது.  அரசாங்கங்கள் மற்றும் நீதித் துறை அமைப்புகளுக்கு இடையே எப்போதுமே ஒரு நிச்சயமற்ற உறவுதான். தொழிற்துறையைப் பொருத்தவரையோ இந்த உறவு, வாழ்க்கைத் தரம் மற்றும் இலாப அளவு ஆகிய இரண்டுக்கும் இடையே, சாதக பாதகமின்றி நடுத்தரமாக எச்சரிக்கை உணர்வுடன் கத்திமேல் நடப்பது போலத்தான். இருப்பினும் இதற்கான தீர்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில்
ஓரளவுக்குக் கண்டறியப்பட்டுள்ளன.  அதோடு, செர்னோபில், லவ் கனால், போபால் விஷ வாயுக் கசிவுபோல் மிகப் பெரிய பேரழிவுகள் தற்போதெல்லாம் நடைபெறுவதில்லை.  

ஸ்டெர்லைட் எப்படி வேறுபடுகிறது?  அது ஏன் மூடப்பட்டது? இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஏன் இன்னும் மூடியே இருக்கிறது? மாசு, தொழிற்சாலை மூடப்படுவது மற்றும் மீண்டும் திறக்க  இயலாதது ஆகியவற்றுக்கு யார் காரணம்? அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களே காரணமா அல்லது வேறு யாரேனுமா?  இவைபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன.

அடிப்படை அறிவியலிலிருந்து புவி அரசியல் தொடங்குவதால் முதலில் வேதியலுக்குச் செல்வோம். 90க்கும் அதிகமான இயற்கைத் தனிமங்களில் தாமிரம் முதன்மையானதாகும்.  5000 ஆண்டுகளுக்கு  முன்பே மனிதனால் சுத்தமாகத் தனிமைப்படுத்தப்பட்ட இந்த உலோகம் ஏனைய தனிமங்களைப் போலவே வித்தியாசமானதாகும். வேதியலாளர்கள் சேர்மங்களை உருவாக்குவது போலத் தனிமங்களை உருவாக்க முடியாது. பூமியின் மேலடுக்கிலுள்ள தனிமமும், வளிமண்டலமும் மட்டுமே நமக்கு உள்ளன. ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு ஆகியவை ஏராளமாக இருக்கின்றன.  தாமிரம் போன்றவை மிக அரிதாகக் கிடைக்கின்றன. அவையும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இயற்கையாக தாமிரமாகக் கிடைக்காத இந்த உலோகத்தின் தாது, சிலி, பெரு, அமெரிக்கா, இந்தோனீஷியா, ஜாம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும்  ஃபிலிபைன்ஸ் ஆகிய சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. அங்கும் இங்குமாகச் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது சரிதானே? 

பிரச்சினையின் மையப் புள்ளியே இதுதான். அதிக அளவு மின் கடத்துத் திறன், அதிக வெப்பக் கடத்துத் திறன், அதிக வளை மற்றும் வடமாக நீளும் திறன், நடுத்தர விலை (வெள்ளியின் பண்புகள் தாமிரத்தைப் போலவே நல்லதுதான் என்றாலும் அதன் விலை பொதுவான பயன்பாட்டுக்குத் தடையாக உள்ளது) ஆகியவை தாமிரத்தின் சிறப்பியல்புகள். இந்தப் பண்புகள் காரணமாக அதிக அளவிலான மின் பகிர்மானத்துக்குத் தேவையான கம்பி வடங்கள் மற்றும் மின் முனைகள் தயாரிப்பில் தாமிரம் மிக அத்தியாவசியமான உலோகமாகிறது.  எளிதாகச் சொல்வதெனில் உலகளவில் தாமிரம் உடனடியாக எளிதாகக் கிடைக்காவிட்டால் இன்றைய நவீன வாழ்க்கை சாத்தியமில்லை.  

தாமிரத்தின்
முக்கிய தாதுப் பொருளான தாமிர பைரேட்டுகள் இந்தியாவில் அதிக அளவில் கிடைப்பதில்லை.
ராஜஸ்தானிலிருந்து ஜார்கண்ட் செல்லும் வழியில் கிடைக்கும் மிகக் குறைந்த அளவும் (உலகின்
மொத்த தாமிரத் தாதுவில் 2% மட்டுமே) தரம் குறைந்ததாகும்.  ஸ்டெர்லைட் போன்ற தாமிரம் பிரித்தெடுக்கும் நிறுவனங்கள்,
இந்தத் தாதுப் பொருளை மேற்கண்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, சுத்தமான உலோகத்தை
தூத்துக்குடியில் உற்பத்தி செய்கின்றன. இது மொத்தத் உள்நாட்டுத் தேவையில் சுமார்
35% ஆகும். மின்கலங்களில் பயன்படுத்தப்படும் எதிர்மின் முனைகள் (கேத்தோடுகள்) தயாரிப்புக்காகச்
சீனாவுக்குக் கணிசமான அளவில் தாமிர உலோகத்தை இந்தியா ஏற்றுமதி செய்தும் வந்தது. தாமிரத்தின்
இறக்குமதிகளைச் சீனா நம்பியிருக்க, அதை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ஒரு
நாட்டின் முக்கிய உலோகத்தை இழக்கச் செய்வது பண்டைய போர் முறையின் ஒர் அங்கமாகும். தங்கத்துக்கும்,
வெள்ளிக்கும் போரிட்டு சாம்ராஜ்ஜியங்கள் உருவாகி உள்ளன அல்லது சரிந்துள்ளன. அறிவியல்
வளரும் போது அத்துடன் இணைந்து தொழில்நுட்பமும் வளரவே, மற்ற தனிமங்களுக்கான நமது விருப்புகளும்
அதிகரிக்கத் தொடங்கின. உதாரணத்துக்கு பிளாட்டினம், பலோடியம், குரோமியம், நியோடைமியம்,
யுரேனியம், இண்டியம் போன்ற தனிமங்களும் இன்றைய அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படுகின்றன. 
 

மேற்கண்ட
தனிமங்களைக் கொண்ட நாடுகள் அவை இல்லாத நாடுகள் மீது தங்கள் அசாதாரணச் செல்வாக்கைப்
பயன்படுத்த முடியும்.  இதற்குக் காரணம், தனிமங்களை
உற்பத்தி செய்ய முடியாது, அவற்றைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கத்தான் முடியும்.  உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்க நிற வெறி அரசாங்கம்
நீண்ட காலம் நீடித்ததற்குக் காரணம், அமெரிக்கச் சந்தையின் மிக முக்கியப் பொருளான எஃகு
மீது பூசப்படும் குரோமியம் அதன் கைவசம் ஏராளமாக இருந்ததுதான். உயர் காந்தப் பாய்வு
அல்லது பெருக்குகளில் முக்கியப் பொருளாக விளங்கும் நியோடைமியம்
என்னும்
உலோகம் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அளவுக்குச் சீனாவில் இன்றைக்குக்
குவிந்திருப்பதால் அதன் உலகச் சந்தை விலையை நினைத்தபடி சீனாவால் நிர்ணயிக்க முடியும்.  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்…   
 

இதனைக்
கருத்தில் கொண்டு தாமிரத் தேவைகள் தொடர்பான இந்தியாவின் இழப்பு காரணமாக எந்த நாடு அதிக
அளவில் பயனடையும் என்பதை ஆய்வு செய்வது முக்கியமாகும்.  இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தாமிரச் சுத்திகரிப்பு
ஆலைகள் உள்ளன. சில ஆலைகள் உள்ளூர்த் தாதுக்களைப் பயன்படுத்துகின்றன. சில ஆலைகள் தாதுக்களை
இறக்குமதி செய்கின்றன.  ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம்
பிரிவில் வருகிறது. மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் (தாமிர பைரேட் தாதுவின் சாம்பலாக்கல் மற்றும் உருக்கலின்
போது வெளியேறும் நச்சுப் பொருள் சல்ஃபர் டை ஆக்சைட்) நீண்ட காலமாகவே கண்டுகொள்ளப்படாமலும்,
புறக்கணிக்கப்பட்டும், மீறப்பட்டும் வந்துள்ளது. இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உள்ளது.  இந்தப் பிரச்சினை போதாதென்று திராவிட இனவாதம், பிராமணத்
துவேஷம், கிறித்துவ மதமாற்றப் பிரசாரம், இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவற்றுடன் எப்போதுமே
பரபரப்புடன் கொந்தளிக்கும் அரசியல் சூழலுள்ள மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் ஸ்டெர்லைட்
ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவை காரணமாக அதிகார பலத்துடன் சர்வ வல்லமை படைத்தவர்களால் நினைத்த
நேரத்தில் பிரச்சினையைக் கொந்தளிக்க வைக்கவும் முடியும், உடனடியாக நிறுத்தவும் முடியும்.

இவை
அனைத்துக்கும் மேலாக இடதுசாரிகளின் வலுவான தடம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின்
பிராந்திய அடிப்படையிலான போக்கு ஆகியவை இம்மாநிலத்தில் ஆழமாக வேருன்றி உள்ளன. அடிப்படைப்
பிரச்சினையைத் தூண்டிய நாட்டுக்கு
,
இந்தியத் தொழிலாளர் மற்றும் தொழில்துறைத் தகராறுகள் மத்திய மாநில
அரசுகளின் பொதுப் பட்டியலில் வரும் என்ற விவரம் என்பது கண்டிப்பாகத் தெரியும். மேலும்  கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லி அரசுடன்
மோதல் போக்கையும்,  மையத்திலிருந்து விலகும்
தன்மையைம் கொண்ட ஒரு மாநில அரசைக் கையாளவது வெகு சுலபம் என்பதையும் அறிந்தே இருந்தனர்.
எனவேதான் தமிழகத்திலுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தது,  புவிசார் மூலஉத்தி மேதாவித்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
 

விவரங்களைக்
கூறிவிட்டேன்.  இதற்கு மேலும் எதையேனும் கூறினால்
அது ஊகங்களுக்கும், அனுமானங்களுக்குமே இடமளிக்கும். எனவே நான் வைத்த புள்ளிகளைக் கோலமாக்கிப்
புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரு ஆண்டுகளுக்குள் மரியாதைக்குரிய
ஏற்றுமதியாளர் ஒருவரிடமிருந்து இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்யத் தொடங்கி இருக்கிறது
(இதன் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் ரூ 40,000 கோடிகள்). இதே காலகட்டத்தில்
சீனாவுக்கான  பாகிஸ்தானின் தாமிர ஏற்றுமதிகள்
400% அதிகரித்துள்ளன (தாமிர பைரேட் தாது பலுசிஸ்தானில் ஏராளமாக உள்ளது). இதன் மூலம்
சீனாவின் தேவைகளைப் பாகிஸ்தான் தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது.  அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள்
அல்லது மதக் குழுக்கள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்க பெரிய ஆற்றல்மிகு நாட்டை உலகின் எங்கு
வேண்டுமானாலும் தேடுங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும். 
 

எந்த
நாடாக இருப்பினும் அந்நாட்டுத் தலைவர்கள் வேதியல் தனிமம் மற்றும் அதன் சேர்மங்கள் ஆகியவற்றுக்கு
இடையேயுள்ள வேறுபாட்டைத் தங்கள் விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், ஆலோசனை
பெறுவதிலும் தவறுவதில்லை.  ஆனால் இந்தியாவிலுள்ள
அறிவியல் ஆலோசகர்களால் இதனைச் செய்ய முடிவதில்லை. ஆனாலும், நிறைவாக, அரசியல், பொருளாதாரம்
மற்றும் மதத்தின் சட்டங்களை விட வேதியல் சட்டங்கள் உயர்வானவை. 

ஆங்கில மூலம் இங்கே.

Posted on Leave a comment

கடைசியாக ஒரு வைரஸ் என்னைப் பீடித்தது – டாக்டர் பியோட் (பெல்ஜியம்)

 கடைசியாக ஒரு வைரஸ் என்னைப் பீடித்தது” – எபோலாவையும் ஹெச்ஐவியையும் எதிர்த்துப் போராடிய அறிவியலாளர் கரோனாவால் மரணத்தை எதிர்நோக்க நேர்ந்த தருணத்தைப் பற்றி!


வைரஸ் ஆய்வாளரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினின் (London School of Hygiene & Tropical Medicine) இயக்குநருமான பீட்டர் பியோட் மார்ச் மத்தியில் கரோனா
நோயால்
(கோவிட்-19) பாதிக்கப்பட்டார்.
ஒரு வாரம் ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு
, பின்னர் லண்டனில் உள்ள தனது வீட்டில் குணமடைந்து
வருகிறார். இன்னும் மாடிப்படிகளில் ஏறும்போது மூச்சுவிடுவது அவருக்கு சிரமமாகவே
இருக்கிறதாம்.  
 

பெல்ஜியத்தில் வளர்ந்த பியோட், 1976ல் எபோலா வைரஸைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவர். தனது
வாழ்க்கையை, தொற்று நோய்களுக்கு எதிராகவே கழித்தவர். 1995 மற்றும் 2008 க்கு
இடையில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின்
தலைவராக இருந்த அவர், தற்போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின்
(Ursula von der Leyen) கொரோனா வைரஸ் ஆலோசகராக உள்ளார். புதிய கொரோனா வைரஸுடனான
அவரது தனிப்பட்ட போராட்டம், அவரது வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது என்று
கூறுகிறார் பியோட்.
 

மே 2 அன்று டச்சு மொழியில் நடந்த நேர்காணலின் தமிழ்
வடிவம் இங்கே – ஆங்கிலம் வழியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்த்தவர்
கிருஷ்ணன் சுப்பிரமணியன்.
 

*

மார்ச் மாதம் 19ம் தேதி, எனக்குத்
திடீரெனக் காய்ச்சல் வந்தது.
கடுமையான
தலைவலியும் இருந்தது. நம்பமுடியாத அளவுக்கு என் தலையும்
, தலைமுடியும் வலித்தன. எனக்கு அப்போது இருமல் இல்லை. ஆனால்
என்னுடைய முதல் எண்ணம்
, எனக்கு அந்த நோய் வந்துவிட்டது. ஆனாலும் நான் என்
பணியைத் தொடர்ந்து வீட்டிலிருந்து செய்துவந்தேன். நான் ஒரு வொர்க்கஹாலிக். கடந்த
ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் டெலிவொர்க்கிங்
முறையைக் கொண்டுவர நாங்கள் முயன்றோம். எனவே நாங்கள் அதிக பயணம் செய்ய வேண்டிய தேவை
இல்லை. புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் செய்யப்பட்ட அந்த
முதலீடு இப்போது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.      

நான் சந்தேகித்தபடி, COVID-19 சோதனையில் எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. நான்
வீட்டில் விருந்தினர் அறையில் தனிமையில் இருந்தேன். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை.
அதற்கு முன்பு இதைப் போல எனக்குத் தீவிரமாக நோய் வந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில்
ஒரு நாள் கூட உடம்பு சரியில்லை என விடுப்பு எடுத்ததில்லை. நல்ல
, ஆரோக்கியமான
வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்
. தவறாமல் நடைப்பயிற்சி செய்துவந்தேன். என்னை கரோனா
பாதிக்க  ஒரே காரணம் என் வயதுதான். எனக்கு
வயது 71. நான் எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவன் என்பதால்
, இதுவும்
கடந்து போகும் என்று நினைத்தேன். ஆனால் காய்ச்சலும் களைப்பும் அதிகரித்துக்கொண்டே
வந்ததால் ஏப்ரல் 1ம் தேதி ஒரு மருத்துவர் நண்பர் முழுமையான பரிசோதனை செய்துகொள்ள
அறிவுறுத்தினார்.

எனக்குக் கடுமையான ஆக்ஸிஜன் குறைபாடு இருந்தது, ஆனால்
மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. என்னுடைய நுரையீரலின் படங்கள் நான் கரோனாவின் பொது
அறிகுறியான நிமோனியாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததையும்
, பாக்டீரியா
நிமோனியா இருந்ததையும் காட்டின. பொதுவாக எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நான் தொடர்ந்து
சோர்வாக உணர்ந்தேன்
. சாதாரண சோர்வு அல்ல, கடும் அயர்வு. அந்த உணர்வை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டேன். இதற்கிடையில் வைரஸ் சோதனை நெகட்டிவ் என்றுகூடக் காட்டியது. இதுவும்
கரோனாவின் அறிகுறிதான். வைரஸ் மறைந்து விட்டாலும்
, அதன் விளைவு பல வாரங்களுக்குத் தொடர்ந்து இருக்கும். 

மருத்துவமனையில் உடனடியாக ஒரு வென்டிலேட்டரில்
வைக்கப்படுவேன் என்று கவலைப்பட்டேன். ஏனென்றால் அப்படிப்பட்ட நிலை இறக்கும்
வாய்ப்பை அதிகரிக்கும் என்று படித்திருந்தேன். இது என் பயத்தை அதிகரித்தது
. ஆனால்
அதிர்ஷ்டவசமாக முதலில் எனக்கு ஒரு ஆக்ஸிஜன் மாஸ்க்கைக் கொடுத்தார்கள்
. அது என்
பாதிப்பைக் குறைத்தது. எனவே நான் தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்புற அறையில் ஒரு
தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கவேண்டியிருந்தது. அந்த நிலையில் சோர்வாகி
, விதியின்
பிடியில் வாழ்க்கையை விட்டுவிடுவது போல் உணர்வீர்கள்.  செவிலியர்களிடம் முழுமையாகச் சரணடைந்துவிடும்
கட்டம் அது.  ஊசியில் இருந்து மருந்து
உட்செலுத்துதல் வரையான ஒரு
ரொட்டீன் வாழ்க்கை அது. நான் எப்போதுமே செயலூக்கத்துடன் வேலை
செய்வது வழக்கம். ஆனால் இங்கு 100% நோயாளி மட்டுமே.
 

ஒரு வீடற்ற நபர், ஒரு கொலம்பியத் துப்புரவாளர், பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு மனிதருடன் நான் ஒரு அறையைப்
பகிர்ந்து கொண்டேன் – மூன்று பேரும் நீரிழிவு நோயாளிகள். இதுவும் நோயின்
அறியப்பட்ட ஒரு பகுதிதான். பேசும் ஆற்றல் யாருக்கும் இல்லாததால் பகலும் இரவும்
தனிமையில் கழிந்தன. என்னால் பல வாரங்கள் கிசுகிசுப்பாக மட்டுமே பேச முடிந்தது
; இப்போது
கூட
, என் குரல்
மாலையில் சக்தியை இழக்கிறது. ‘நான் இதிலிருந்து குணமான பின்பு எப்படி இருப்பேன்?’ என்ற
கேள்வி எனக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

40
ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் வைரஸ்களை எதிர்த்துப் போராடிய பிறகு
, நான்
தொற்றுநோய்களின் நிபுணனாகிவிட்டேன். எனக்கு எபோலா நோய் வராமல் கரோனா வந்தது
ஒருவிதத்தில் மகிழ்ச்சி. ஒருவர் கரோனாவுடன் பிரிட்டிஷ் மருத்துவமனையில் சேர்ந்தால்
அவர் இறப்பதற்கு
30% வாய்ப்பு இருப்பதாக நேற்று ஒரு விஞ்ஞான ஆய்வைப்
படித்தேன். இது மேற்கு ஆப்பிரிக்காவில்
2014ல் எபோலா நோயால் நேர்ந்த ஒட்டுமொத்த இறப்பு விகிதம்
ஆகும். இது சில நேரங்களில் உங்கள் அறிவியல் ரீதியான சிந்தனைகளை மழுங்கச் செய்து
, உங்களை
உணர்ச்சியின் பிடிக்குள் தள்ளுகிறது.  வைரஸ்களை
எதிர்த்துப் போராடுவதற்காக நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன்
. இறுதியாக அந்த
வைரஸ்கள் என்னைப்
பிடித்துப் பழிவாங்குகின்றன
என்று நினைத்தேன். முடிவு எப்படி இருக்கும் என்றே தெரியாமல் ஒரு வாரம் சொர்க்கத்திற்கும்
பூமிக்கும் இடையில் போராடினேன்.
 

நீண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து
வீடு திரும்பினேன். தனிப்பட்ட வாகனத்தில் இல்லாமல்
, பொதுப் போக்குவரத்து மூலம் வீட்டிற்குச் சென்றேன். நகரத்தையும்
அதன் வெறிச்சோடிய வீதிகளையும்
, மூடிய விடுதிகளையும், ஆச்சரியப்படத்தக்க வகையில் தூய்மையடந்திருந்த காற்றையும்
பார்க்க விரும்பினேன். தெருவில் யாரும் இல்லாதது ஒரு விசித்திரமான அனுபவமாக
இருந்தது. நீண்ட நாட்கள் படுத்திருந்ததாலும்
, இயக்கம் இல்லாததாலும், என்னுடைய தசைகள்
பலவீனமடைந்திருந்தால்
, என்னால் சரியாக நடக்க முடியவில்லை. ஒருவருக்கு நுரையீரல்
தொடர்பான வியாதிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும்போது இது ஒரு நல்ல விஷயம் அல்ல.

வீட்டில் நான் நீண்ட நேரம் அழுதேன். சிறிது நேரம்
தூங்கினேன். ஏதேனும் தவறாகப் போய்விடுமோ என்ற யோசனை உங்களை அலைக்கழிக்கும்.
நீங்கள் மீண்டும் அடைபட்டிருப்பதுபோல் உணர்வீர்கள்
. ஆனால் இது போன்ற விஷயங்களை சரியான முறையில் அணுகுவது
நல்லது. இப்போது நெல்சன் மண்டேலாவை முன்பை விட அதிகமாகப் போற்றுகிறேன். 27
ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டாலும் சரியான சிந்தனைகளுடன் அவர் வெளியே
வந்தார்.
 

எனக்கு எப்போதுமே வைரஸ்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. அது இப்போதும்
குறையவில்லை. எய்ட்ஸ் வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்காக நான் எனது வாழ்க்கையின்
பெரும்பகுதியை அர்ப்பணித்துள்ளேன். வைரஸ் மிகவும் புத்திசாலித்தனமானது. அதைத்
தடுக்க நாம் செய்யும் எல்லாவற்றையும் அது தவிர்த்துவிடுகிறது. இப்போது என் உடலில்
ஒரு வைரஸ் இருப்பதை நான் உணர்ந்திருப்பதால் அது வைரஸ்களின் மீதான என் பார்வையை
மாற்றியிருக்கிறது. இதற்கு முன்னர் வைரஸ்களுடன் நான் சந்தித்த அனுபவங்கள்
இருந்தபோதிலும்
, இந்த
அனுபவம் என் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை உணர்கிறேன். நான் எளிதாகத்
தாக்கப்படக்கூடியவன் என்று உணர்கிறேன்.
 

நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, எனக்கு
மூச்சுத் திணறல் அதிகரித்தது. நான் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டியிருந்தது
, ஆனால் அதிர்ஷ்டவசமாக வெளிநோயாளி என்ற அடிப்படையில்
சிகிச்சை பெற முடிந்தது. சைட்டோகைன் புயல்
(cytokine storm)
என்று அழைக்கப்படும் ஒன்றால் ஏற்படும் நிமோனியா வகை நுரையீரல் நோய் என்னைப்
பீடித்திருந்தது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதீதமாக வேலை செய்வதால்
ஏற்படுவது.  வைரஸால் ஏற்படும் திசு
சேதத்தால் பலர் இறக்கவில்லை
. ஆனால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அதீதமான
எதிர்வினையின் காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதன் காரணம், நோய்
எதிர்ப்பு சக்திக்கு இந்த வைரஸை என்ன செய்வது என்று தெரியவில்லை.
 

இந்த நோய்க்கான சிகிச்சையில்தான் இன்னும் இருக்கிறேன். அதிக அளவு
கார்டிகோஸ்டீராய்டுகள் எனக்கு அளிக்கப்படுகின்றன
, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
என் உடலில் வைரஸ் அதிகரித்த அறிகுறிகளுடன் அந்தப் புயலும் (
cytokine storm)
இருந்திருந்தால்
, நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். எனக்கு ஏட்ரியல்
ஃபைப்ரிலேஷன் என்ற பாதிப்பும் இருந்தது
. என் இதய துடிப்பு நிமிடத்திற்கு 170 ஆகத் துடிக்கிறது. இது
சிகிச்சையின் துணையுடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
. குறிப்பாக பக்கவாதம் உள்ளிட்ட இரத்த உறைவு நிகழ்வுகளைத்
தடுக்க இது கட்டாயம் தேவை. இந்த வைரஸைக் குறைத்து மதிப்பிடக்கூட்டாது. இது நம்
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கலாம்.
 

கரோனா 1% நோயாளிகளைக் கொல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள், மீதமுள்ளவர்கள்
சிலர் ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தப்பிக்கிறார்கள். ஆனால் பலருக்கு
நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களின் நரம்பியல்
அமைப்பு கூடப் பாதிக்கப்படுகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால்
பாதிக்கப்பட்டிருப்பார்கள்
. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறுநீரக டயாலிசிஸ்
போன்ற சிகிச்சைகள் தேவைப்படும். கொரோனா வைரஸைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக்
கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு கேள்விகள் எழுகின்றன. இதனோடு பயணம் செய்துகொண்டே நாம்
அதைப் பற்றிக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அதனால்தான்
, விமர்சகர்கள் பலரைப் பார்த்து நான் எரிச்சலடைகிறேன்.
எந்த ஒரு நுண்ணறிவும் இல்லாமல் அவர்கள் அறிவியலாளர்களையும்
, கொள்கை
முடிவுகள் எடுப்போரையும் விமர்சனம் செய்துகொண்டு
, வைரஸைத் தடுக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். அது
நியாயமானதல்ல.

இன்று, 7 வாரங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நான் பழைய நிலையைக் கிட்டத்தட்ட
அடைந்துவிட்டதுபோல் உணர்கிறேன். வீட்டின் அருகிலுள்ள துருக்கியக்
கடைக்காரரிடமிருந்து வெள்ளை அஸ்பாரகஸை வாங்கிச் சாப்பிட்டேன்
. அஸ்பாரகஸ்
வளரும் சமூகமான பெல்ஜியத்தின் கீர்பெர்கனைச் சேர்ந்தவன் நான். என் நுரையீரல்
படங்கள் ஒருவழியாகச் சீரடைந்திருக்கின்றன. அதைக் கொண்டாட நீண்ட காலத்திற்குப் பின்
ஒரு நல்ல மது பாட்டிலைத் திறந்தேன்
. எனது செயல்பாடு சிறிது காலத்திற்கு
மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும்
, நான் மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நான்
ஈடுபட்ட முதல் பணி
, வான் டெர் லேயனின் COVID-19 R&D சிறப்பு ஆலோசகராக அமர்ந்தது.

ஒரு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இந்த ஆணையம் தீவிரமாக
முனைந்துள்ளது.  ஒரு விஷயத்தைத் தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்.  கொரோனா வைரஸ்
தடுப்பூசி இல்லாமல்
, நாம் ஒருபோதும் சாதாரணமாக வாழ முடியாது. இந்த
நெருக்கடியிலிருந்து வெளியேறும் ஒரே உண்மையான உத்தி, ஒரு தடுப்பூசியை உருவாக்குவது.
இது உலகளவில் வெளியிடப்படுவதற்கு
, பில்லியன் கணக்கில் இந்த மருந்தை உற்பத்தி
செய்யவேண்டும். இது பெரும் சவாலான முயற்சி. இதற்கான முயற்சிகள் பல்வேறு இடங்களில்
நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற போதிலும்
, கரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குவது சாத்தியமா என்பதே
இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தடுப்பூசிகள் மூலம் தங்கள் வாழ்க்கையைக்
காத்துக்கொண்டிருக்கும் சிலர் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட விரும்பாமல்
இருக்கும் முரண்பாடும் இன்று உள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்தால்
அதுகூட ஒரு பிரச்சினையாக மாறும்
, ஏனென்றால் அதிகமானோர் அதைப் போட்டுக்கொள்ள மறுத்தால், நாம்
ஒருபோதும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது.

இந்த நெருக்கடி பல பகுதிகளில் அரசியல் பதட்டங்களைக்
குறைக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு மாயையாக இருக்கலாம்
. ஆனால்
போலியோ தடுப்பூசி பிரசாரங்கள் அமைதிக்கு வழிவகுத்ததைக் கடந்த காலத்தில்
பார்த்தோம். அதேபோல்
, COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறந்த பணியைச் செய்து
வரும் உலக சுகாதார அமைப்பு [
WHO], தனது அதிகாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ளும்
என்று எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட நாடுகளின் சொந்த நலன்களைக் காக்கும் ஆலோசனைக்
குழுக்களை அந்த அமைப்பு சார்ந்து இருப்பதிலிருந்து வெளிப்பட்டு சீர்திருத்தப்படலாம்
என்று நம்புகிறேன்.
WHO கூட அடிக்கடி ஒரு அரசியல் விளையாட்டு மைதானமாக மாறிவிடுகிறது.

நான் நேர்மறை எண்ணங்களைக் கொண்டவனாகப் பிறந்தவன்.  மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய பின், முட்டாள்தனத்திற்கும்
அறிவற்றுச் செயல்படும் விதத்திற்குமான எனது சகிப்புத்தன்மையின் அளவு முன்பை விட
இன்னும் குறைந்துவிட்டது. அதேசமயம், நோய்வாய்ப்படுவதற்கு முன்பிருந்ததை விட
இப்போது என்னுடைய நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தான் செயல்படுத்துகிறேன் என்றாலும், அமைதியாகவும்
ஆர்வமுடனும் பணிகளைத் தொடர்கிறேன்
.

நன்றி: www.sciencemag.org

Posted on Leave a comment

வலம் ஏப்ரல் 2020 இதழ்

வலம் ஏப்ரல் 2020  இதழ் :

வலம் ஏப்ரல் 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.
எஸ் வங்கி பிரச்சினை | ஜெயராமன் ரகுநாதன்

வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள் | சுஜாதா தேசிகன்

 
 
 
 
 

 

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – பாகம் 12 | லாலா லஜ்பத் ராய் | தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 12- என் முடிவுகள், அறிவுரைகளின் தொகுப்பு
கடந்த கட்டுரையில், மியான் பாஸ்ல்-இ-ஹுசைன் குறைபட்டுக்கொள்ளும் ஒரு மனிதராக
இருப்பதைத் தெரிவித்திருந்திருந்தேன். ஆனால் அது யாருக்கு எதிரான குறை
? நிச்சயமாக
இந்து சமூகத்திற்கு எதிரானதல்ல. இந்துக்கள் அரசாங்கத்தின் கீழ் அதிக
எண்ணிக்கையிலான பதவிகளை ஆக்கிரமித்திருந்தால்
, அதற்கு அவர்கள் முற்றிலும்
எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்
. எனவே
அவர்கள் மீது குற்றம் சாட்டப்படக் கூடாது. தவறு முக்கியமாக தங்களுடையது என்பதை
முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப நாட்களில்
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கல்வி வசதிகளை அவர்கள் போதுமான அளவில்
பயன்படுத்தவில்லை. அதுதான் தற்போதைய விஷயங்களுக்குக் காரணமாக இருக்கிறது. கடந்த
ஐம்பது ஆண்டுகளாக
, அவர்கள்
இழந்த நேரத்தை ஈடுசெய்வதற்கான சிறப்பு வசதிகளை அரசு அவர்களுக்கு வழங்கி வருகிறது.
ஆனால் அது இப்போது மற்ற எல்லா சமூகங்களுக்கும் எதிராக அவர்கள் தங்கள் சொந்த
நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் முடிந்திருக்கிறது.

எதிர்காலத்தில் அரசாங்க பதவிகளில் தங்களுக்கு உரிய பங்கைத் தர வேண்டும்
என்று அவர்கள் கூறுவதில் நியாயம் உள்ளது. ஆனால்
, தங்களின் சரியான விகிதாச்சாரம்
தங்களுக்கு வழங்கப்படும் வரை
, மற்ற சமூகத்தைச் சேர்ந்த எவரும் பணியமர்த்தப்படக்கூடாது
என்று அவர்கள் கூறுவது எந்த விதத்தில் நியாயம்
? இப்படிப் பட்ட சர்ச்சை அபத்தமானது.
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்கப் பதவிகளின் எண்ணிக்கை
மக்கள்தொகையில் அதன் வலிமைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற கூற்றும் அபத்தமானது.
இந்த எண்ணிக்கைகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்
? விகிதங்கள் பதவிகளின் எண்ணிக்கையின்படி
நிர்ணயிக்கப்பட வேண்டுமா
, அல்லது ஊதியத்தின் அளவுக்கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டுமா? பதவி உயர்வு, இடைக்கால
நியமனங்கள்
, ஓய்வூதியம்
ஆகியவையும் கூட இதே அடிப்படையால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா
? அப்படியானால், அரசாங்கத்தின்
அனைத்து துறைகளும்
முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதபிரிவுகளாக, முற்றிலும் தனித்தனியாகவும், சுயாதீனமாகவும்
இருக்க வேண்டும் என்று ஏன் சொல்லக்கூடாது
? இவை கூட நகர்ப்புற மற்றும் கிராமப்புற மற்றும் விவசாய, வேளாண்மை அல்லாதவை
எனப் பிரிக்கப்பட வேண்டும். இந்த முழு விஷயமும் மிகவும் அபத்தமானது
, இதுபோன்ற
கூற்றை அறிவுஜீவிகளான
, பகுத்தறிவுள்ள
மனிதர்களால் எவ்வாறு தீவிரமாக முன்வைக்க முடியும் என்று ஆச்சரியப்பட
வேண்டியுள்ளது.

தவிர, அகில இந்திய
அளவிலான புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால்
, இந்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் படுவதன்
மூலம் தங்களுக்கு அதிகப் பங்கு கிடைக்கும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக
இருக்கிறார்களா
? எந்தக்
கொள்கையின் அடிப்படையில் அமைச்சகங்கள் பிரிக்கப்படும்
? சில மாகாணங்களில், மாகாணங்களில்
உள்ள சில துறைகளில்
, மக்கள்தொகை
விகிதம் குறிப்பதை விட அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பதவிகள் கிடைத்துள்ளன என்பது
உண்மையல்லவா
?

நடைமுறை சிக்கல்களின் அடிப்படையில் இந்த விஷயத்தைப் பரிசீலிக்கும்படியும், அதன்
பின்னர் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படக்கூடிய அளவிலான ஒரு
திட்டத்தைப் பரிந்துரை செய்யும்படியும் எனது நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இனவாத உணர்வின் தற்போதைய நிலையில் எந்தவொரு துறையும் எந்தவொரு சமூகத்தினாலும்
அல்லது வர்க்கத்தினாலும் ஏகபோக உரிமைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்பதை நான்
ஒப்புக்கொள்கிறேன். இந்த நிலைக்கு எதிரான தகுந்த பாதுகாப்பு செய்யப்படவேண்டும்.
வகுப்புவாத சூழ்ச்சிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
முறையான பிரதிநிதித்துவம் கொண்ட பொதுச் சேவை ஆணைக்குழுவின் நியமனம் எந்தவொரு
சமூகமும் எதிர்காலத்தில்
, அரசாங்க பதவிகளில் அதன் சரியான பங்கை இழக்காது என்பதற்கு
போதுமான உத்தரவாதமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய சூழ்நிலையின்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேறு எந்த தீர்வையும் என்னால் நினைத்துப்பார்க்க
முடியவில்லை. எவ்வாறாயினும்
, ஸ்வராஜ்யத்தை அடையும்போது, ​​தீர்வு எளிமையாக இருக்கும். மாகாண அரசாங்கங்கள்
தங்கள் ஊழியர்களை நியமிக்க முழு அதிகாரங்களைக் கொண்டிருக்கும்
, முஸ்லிம்
பெரும்பான்மையைக் கொண்ட மாகாணங்கள்
, தற்போதைய உணர்வுகளின் நிலை தொடர்ந்தால், தானாகவே
பெரும்பான்மையான முஸ்லிம் அரசு ஊழியர்களைக் கொண்டிருக்கும். அகில இந்திய சேவைகளைப்
பொருத்தவரை
, ஒரு சேவை
ஆணையம் தொடர்ந்து நியமனங்களைச் செய்யும்.

இதற்கிடையில், அரசாங்க
நியமனங்கள் குறித்து அதிகம் வம்பு செய்ய வேண்டாம் என்று இந்துக்களிடம்
மரியாதைக்குரிய வேண்டுகோள் ஒன்றை விடுக்கலாமா
? அரசாங்கத்தின் ஆதரவை அதிகம்
நம்பியுள்ள எந்த சமூகமும் பொருளாதார ரீதியாக வளர முடியாது. மக்கள்தொகையில் எவ்வளவு
சதவீதத்தினர் தங்கள் வாழ்க்கையை அப்படிக் கழிக்கிறார்கள்
? அரசு ஊழியர்கள் இனவாத வாழ்க்கையை
தங்கள் சம்பளத்தை விட அதிகப்படியாக மதிக்கிறார்கள் என்பது உண்மைதான். இத்தகைய
தாக்கங்களின் அளவு எளிதில் மிகைபடுத்தக் கூடியதே. தற்போதைய நிலைமை நீடிக்கும் வரை
, ரொட்டிகளையும்
மீன்களையும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழியில் அரசாங்கம் விநியோகிக்கட்டும்.
உயர்மட்டப் பதவிகள் எப்படியிருந்தாலும்
, ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; பின்னர்
ஆங்கிலோ-இந்தியர்கள்
; கடைசியில் இந்தியர்கள்
வருகிறார்கள். நொறுக்குத் தீனிகள் மீதான சண்டை போன்ற இது எந்தவொரு தேசபக்தரும்
ஈடுபடுவதற்கு மிகவும் அற்பமான விஷயமாகத் தெரிகிறது. ஸ்வராஜ்யத்தின் கீழ்
, ஒவ்வொரு
மாகாணத்தின் அரசாங்கமும் அதன் நிர்வாக அமைப்பின் வடிவையும் தன்மையையும்
தீர்மானிக்கும். இந்த விஷயத்தைப் பற்றி எந்தவொரு ஒப்பந்தத்திலும் இப்போது நுழைவது
அல்லது அதைப் பற்றி சண்டையிடுவது முற்றிலும் பயனற்றது.

அரசாங்க சேவைகளிலிருந்து இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்வோம்.
உள்ளாட்சி அமைப்புகளின் அரசியலமைப்பு சட்டமன்றங்களிலிருந்து வேறுபட்ட விதத்தில்
இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மக்கள்தொகை அடிப்படையிலான விதி அவர்கள்
விஷயத்தில் சரியாக இருக்காது. உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்களை இயற்றாது. அவர்கள்
உள்ளூர் விவகாரங்களை மட்டுமே நிர்வகிக்கிறார்கள். உள்ளூர் விவகாரங்கள் அந்தந்த
இடங்களைச் சார்ந்தது
, எல்லாவற்றிற்கும்
மேலாக
, ஒவ்வொரு
வட்டாரத்தின் தனிப்பட்ட முரண்பாடுகளின்படி அவை நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால்
முஸ்லிம்கள் மக்கள் தொகை அடிப்படையை வற்புறுத்தினால்
, நான் அதை அனுமதிப்பேன். அதை அவர்கள்
செய்யும் போது சில மாகாணங்களில் ஆதாயம் பெறுபவர்களாக இருப்பார்கள்
, மற்ற
இடங்களில் அந்த ஆதாயத்தை இழப்பார்கள்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, அவை
எந்தவொரு வகுப்புவாத வேறுபாட்டையும் அனுமதிக்கக் கூடாத இடங்கள். அது தேசத்தின்
முழு அறிவுசார் வாழ்க்கையையும் நச்சுப்படுத்தும். பின்தங்கியதாகக் கருதப்படும்
சமூகங்களுக்குக் கேட்கப்படும் சிறப்பு வசதிகளை நான் புரிந்துகொண்டு பாராட்ட
முடியும். அவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை கொடுங்கள்
, அவர்கள் பெரும்பான்மையாக உள்ள
இடங்களில் திறந்தவெளிக் கல்வி மையங்களை அமையுங்கள்
; தற்போதுள்ள நிறுவனங்களை இடமாற்றம்
செய்யாமலோ சிதைக்காமலோ பொது வருவாயிலிருந்து அதிகமான அல்லது சிறப்பு மானியங்களை
அவர்களின் நலனுக்காக ஒதுக்கலாம்.

இதுதொடர்பாக, பஞ்சாப்
சட்டமன்றத்தின் சில இந்து உறுப்பினர்கள் காம்ப்பெல்பூர்
, லியால்பூர் மற்றும் குஜ்ராத்தில்
இடைநிலைக் கல்லூரிகளைத் திறப்பதற்குக் காட்டிய எதிர்ப்பை நான் விரும்பவில்லை
, ஏற்றுக்கொள்ளவுமில்லை.
கலைக் கல்லூரிகளுக்கு அதிக பணம் செலவழிக்கப்படுவதை அவர்கள் ஆட்சேபித்தால்
, ஒன்று
அல்லது இரண்டு கல்லூரிகளை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாற்றுமாறு
பரிந்துரைப்பதே அவர்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம். பஞ்சாப் சட்டமன்றத்தின்
சில இந்து உறுப்பினர்களின் நடத்தை பற்றிய ஒரு பகுப்பாய்வு
, கடந்த கவுன்சிலிலும், தற்போதைய
கவுன்சிலிலும் சரி
, பஞ்சாபில்
தற்போதைய வகுப்புவாத பதட்டத்திற்கு முழு குற்றச்சாட்டும் மியான் பாஸ்ல்-ஐஹுசைனைச்
சார்ந்ததே என்று ஒரு சமநிலை கொண்டவரை நம்ப வைக்காது.

மியான் செய்த அல்லது செய்துகொண்டிருப்பதன் பெரும்பகுதி பொறுப்பு
அதிகாரத்துவ வர்க்கத்திடம் உள்ளது. அவரது சொந்த கருத்துக்கள் அரசாங்கத்தின்
கருத்துக்களுடன் ஒத்துப்போனதால்
, அவர் அதன் ஒரு கருவியாக இருந்திருக்கலாம். இந்து
விமர்சகர்கள் இந்தப் போக்கைக் கண்டுகொண்டு
, சமூகங்களிடையே பிளவை உருவாக்குவதில்
அதிகாரத்துவத்தின் மையக் கருவிகளாகத் தங்களை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடாது. வருங்கால
சந்ததியினர்
, நாம்
எதிர்நோக்கும் நெருக்கடியைக் கொண்டுவருவதற்கு தாங்கள் அறியாமலேயே அவர்கள் அளித்த
உதவியை மறக்கமாட்டார்கள்
. அதன்மூலம் அவர்கள் புரிந்த குற்றத்திலிருந்து அவர்களை
விடுவிக்கவும் மாட்டார்கள். எனது தீர்ப்பில் ஒத்துழையாமை இயக்கமும் அதற்கு ஓரளவு
பொறுப்பு ஆகும். தனிப்பட்ட முறையில்
, அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள பதவிகள் பற்றியோ, அதன்
சேர்க்கையைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. இருப்பினும்
, தொழில்முறை கல்லூரிகளின் நிலை
வேறுபட்டது. அவர்களின் விஷயத்தில்
, வெவ்வேறு சமூகங்களுக்கு தகுதியைப் பொருட்படுத்தாமல்
குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குவது
, கல்வித் தரத்தையும் வெற்றிகரமான செயல்திறனையும்
குறைக்கும். எவ்வாறாயினும்
, இவை சிறிய விஷயங்கள். அவற்றிற்குத் தேவையற்ற
முக்கியத்துவத்தை அளிக்கக்கூடாது.

இப்போது நான் செய்த பரிந்துரைகள் சுருக்கமாக:

(1) முழுமையான உரிமைகள் என்ற தீங்கு
விளைவிக்கும் கோட்பாட்டிலிருந்து உங்கள் மனதை விடுவிக்கவும்.

(2) உங்கள் மத (பிடிவாதமான
மதம்) அரசியலை நீக்குங்கள்.

(3) மதத்தை முடிந்தவரை பகுத்தறிவு
மயமாக்குங்கள். அத்தியாவசியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.

(4) ஒரு சமூகத்தை மற்றொரு
சமூகத்திலிருந்து பிரிக்கும் சமூகத் தடைகளை அகற்றவும்.

(5) உலகின் வேறு எந்த நாட்டையும் விட
இந்தியாவை நேசிக்கவும்
, முதலிலும் கடைசியிலும் இந்தியர்களாக இருங்கள்.

(6) வீட்டின் நிலைமைகளை
மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் கவனியுங்கள். உங்கள் சொந்த நாட்டு
மக்களுக்கான கடமை அனுமதிக்கும் வரை வெளிநாட்டிலுள்ள உங்கள் சக மதவாதிகளிடம்
அனுதாபப்படுவதையும் அவர்களுக்கு எப்போதாவது உதவுவதையும் நீங்கள் செய்யலாம். இந்த
விஷயத்தில் துருக்கி மற்றும் எகிப்தைப் பின்பற்றுங்கள்.

(7) சுத்தியைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
அது இங்கே முழுமையாக வந்துவிட்டது.

(8) இஸ்லாமியத்திற்கும்
ஹிந்துயிஸத்துக்கும் எதிரான உணர்வுகளைக் களைந்துவிட்டு சங்கதனையும் டான்ஸிமையும்
நீங்கள் முயலலாம். ஆனால் அது மிகவும் கடினமானது.

(9) சட்டமன்றத்தில் விகிதாசாரப்
பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருங்கள்
, ஆனால் தனித் தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம்.

(10) பெரும்பான்மையினரின் ஆட்சியைச்
செயல்படுத்த பஞ்சாப்பை இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கவும்.

(11) உள்ளாட்சி அமைப்புகளில்
பிரதிநிதித்துவ நியமனம் என்று மக்கள் தொகையை அடிப்படையாகக் காட்டி வலியுறுத்த
வேண்டாம். ஆனால் அதைப் பின்பற்ற நேர்ந்தால்
, தனித் தொகுதிகளை வலியுறுத்த
வேண்டாம்.

(12) சில பொதுவான பரந்த கொள்கைகளின்
அடிப்படையில் அரசாங்கப் பதவிகளை நிரப்புவதை ஒழுங்குபடுத்த பொதுச் சேவை ஆணையங்களை
வைத்திருங்கள்.

(13) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி
நிறுவனங்களில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் இருக்கக் கூடாது. ஆனால் பின்தங்கிய
வகுப்பினருக்கான சிறப்பு வசதிகள் வழங்கப்படலாம்
, பொது வருவாயிலிருந்து அவர்களின்
நலனுக்காக சிறப்பு மானியங்கள் வழங்கப்படலாம்.

Posted on Leave a comment

திருமாலிருஞ் சோலை நின்றான் வாணாதிராயன் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

கதையின் காலம் பதினான்காம் நூற்றாண்டு. பாண்டியர்கள், வாணாதிராயர்கள்
காலம். அரசரின் கோவில் திருப்பணிகள், குரு பக்தி, தேச பக்தி அனைத்தும் கலந்து காண முடிந்தது
நம் வரலாறுகளில். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ‘யதீந்திரப்ரணவ ப்ரபாவம்’ என்ற
வைணவ வரலாற்று நூல் மேற்கோலிட்ட விஷயம், கோவில் கல்வெட்டுகளில் உள்ள சில செய்திகள்,
சமகால நிகழ்வுகள் எல்லாம் கோத்து இந்தக் கதையைப் புனைந்துள்ளேன். மதுரையின் மேலுமொரு
வரலாற்றுச் சிறப்பு மிக்க, அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட இடம், பெயரும் திரிந்து வணிக
கட்டடங்களோடு இருக்கிறது. பல ஊர்களின் பெயர்கள் திரிந்து தொன்மை மாறி உள்ளன. வரலாற்றிக்குப்
பாதிப்பில்லாமல் சில கற்பனைகளும் உண்டு.
*
பாண்டி மண்டல ஸ்தாபனாச்சாரியார் என்ற விருது
கொண்ட தாங்கள் ஏனோ ஆழ்ந்த சிந்தனையில் உள்ளீர் போல் தெரிகிறதே மன்னா?
அமைச்சரின் கேள்விக்கு திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயர்
உடனடியாய் பதில் தரவில்லை.
ஆம் அமைச்சரே.. பாண்டிய நாட்டை அந்நிய ஆட்சியால் ஏற்பட்ட அழிவிலிருந்து
மீட்டுக் குழப்பத்தை ஒழித்து மதுரையிலிருந்து ஆட்சி செய்ததால்
பாண்டியமண்டல ஸ்தாபனாசாரியன் என்றும், புதுக்கோட்டையில்
கோலோச்சிய சோழனை வென்று
சோழ மண்டல பிரதாபச்சாரியன் என்றும் விருது
கொண்ட இந்த வாணவராய வம்சம், காஞ்சி வரை பரவியிருந்தாலும் இன்றும் விஜய நகர அரசின் கீழ்
தான் இருக்கிறது. இன்று லக்கணதண்ட நாயக்கர் முன் தென்காசி பாண்டியன் இவ்வாறு பேசுவாரென்று
துளியும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் அடுத்தகட்ட யோசனையில் இருந்தேன்..
மன்னர் அமைச்சரிடம் நீண்ட சிந்தனைக்குப் பின் சொன்னார். அதற்குள்
தேர் மதுரை அரண்மையை நெருங்கிக்கொண்டிருந்தது.
அவர்கள் திருசிராமலையிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.
அது மிகவும் முக்கியக் காரியமென்பதால் பிரதான அமைச்சர் நரசிங்கத் தேவரும், காரியாதிகாரி
பஞ்சவராயரும் உடன் பயணித்தனர். ஒரு சிறு படையும் உடன் இருந்தது.
அமைச்சரே, நாயக்கர் சொன்ன விஷயம் தொடர்பான முடிவுகள் எடுக்க உடன்
மந்திராலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும்..
அவ்வமயம் மன்னர் எதையோ கண்ணுற்றவராய், தேரோட்டி, சற்றே நிறுத்தும்.. அங்கேதோ கூட்டம் கூடியிருக்கிறதே… என்றார். அரசன் பார்வை கூட்டத்தின் நடுவில் இருந்த ஒரு துறவியிடம்
இருந்தது. அவர் வைணவ சின்னங்கள் தரித்து திருவாழியின் நிறத்தையொத்த திருமேனியோடு இருந்தார்.
அவரின் திருமேனி ஒளியே அரசனை அங்கிழுத்தது. தேரும் நின்றது. சாரதி தேரை நிறுத்தும்
காலம் பதினான்காம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் கடந்திருந்தன. பல அரசியல் குழப்பங்களோடு
பாண்டியநாடு விஜயநகரப் பேரரசின் கீழ் இரு பிரிவுகளாய் இருந்தது.
தேரை விட்டு இறங்கி மக்கள் கூட்டம் இருக்குமிடத்திற்குச்
சென்றான் மன்னன். உடன் அமைச்சரும் சென்றார்.
அந்த வைணவத் துறவியைச் சுற்றி சிங்கங்கள் போல் எட்டு
சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர் நடு நாயகமாய் நின்று, அந்த இடத்தின் பெருமையைப் பற்றிச்
சொல்லிக்கொண்டிருந்தார். மன்னன் வந்ததும் தெரியாமல் அங்கிருந்தவர்கள் அதில் மூழ்கியிருந்தனர்.
அவர் திருமாலின் பெருமைகளைச் சொல்ல, அரசனும் நின்று கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள்
நின்ற இடம் பாண்டிய அரண்மனையின் மேல் திசையிலும், கூடல் அழகர் கோவிலுக்கு வடக்கே சற்று
தூரத்தில் இருந்தது.
அங்குதான் வைணவ ஆழ்வாரான பெரியாழ்வார், ஸ்ரீவல்லப
பாண்டியன் சந்தேகத்திற்குத் தக்க சமாதானம் கூற, பொற்கிழி தானே இறங்கி வந்தது. உடன்
திருமாலும் கருடன் மீதேறி வந்து அருளினார். வியூக சுந்தரனான திருமாலின் மீது கண்ணெச்சில்
பட்டுவிடக்கூடாதென்று பெரியாழ்வார்
பல்லாண்டு என்ற தமிழ்ப் பதிகம் பாடினார். இந்தக் கதையைச் சுவைபட, சொல்வன்மை
மிக்கவரான வைணவத் துறவியும் சுற்றி இருந்தோர்க்குக் கூறினார் இந்த பாடலோடு.
கோதிலவாமாழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண் டானதுவும் * வேதத்துக்கு
ஓமென்னு மதுபோல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய் *
தான் மங்கலமாதலால்
அன்று பெரியாழ்வார் கருடன் மீது வந்த பெருமானைக் கண்ட
இடத்திற்கே சென்றுவிட்டார் அவர். அங்கிருந்த மணல் அன்றொருநாள் பெரியாழ்வார் திருப்பாதம்
பட்ட இடமாய் இருந்திருக்கும் என்று கூறி அங்கு வணங்கி, விழுந்து புரண்டார். இந்த பக்தியைக்
கண்ட அரசன் தன்னிலையை மறந்தான். அங்கிருந்த சிறு பாலகன் ஒருவர் இவ்வாறு பாடினார்.
ஈதோ கூடல்! ஈதோ புள்ளேறி வந்தவிடம்*
ஈதோ மெய் காட்டிய கரம்பு*
ஈதோ பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்
பல்லாண்டென்று காப்பிட்ட இடம்*
அந்த பாடல்களைக்கேட்டு ஆஹா..ஆஹா.. என்ற பேரொலியோடு அங்கிருந்தவர்கள் எல்லாம் தொழுது நின்றனர். அப்போதுதான்
அரசன் அங்கு வந்ததை அந்த வைணவ குழாம் கவனித்தார்கள். அரசன் துறவியின் கால்களில் விழுந்து
வணங்கினார்.
மன்னன் தன் விருதுகள் சொல்லாமல், அடியேன், திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன்.. என்றார். அந்த பக்தி, அவரின் பெயர் எல்லாம் கண்டு மன்னர் வைணவ வழியில்
வருபவர் என்று துறவி அறிந்துகொண்டார்.
அருகிருந்த வைணவ அடியார்களில் ஒருவர் துறவி பற்றி, ஸ்வாமி, அழகிய மணவாள ஜீயர். நாங்கள் கோவிலிருந்து (ஸ்ரீரங்கம்) வருகிறோம்.
பாண்டிய நாட்டு திவ்ய தேச யாத்திரை போய்க்கொண்டிருக்கிறோம்
என்று கூறினார்.
ஸ்வாமிகளைத் தரிசித்தது அடியேன் பாக்யம். இந்த பாண்டிய மண்டலமே பேறு
பெற்றது தங்களின் பொன்னடி பட்டதால். இராமானுசரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகளே அடியார்களோடு
இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம்.
அரசன், தான் ஏற்கெனவே வைணவத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் பற்றி
அறிந்திருந்தார். மேலும் அரசரின் முன்னோர் வாணாதிராயர்கள் சில காலம் முன் மதுரையில்
ஏற்பட்ட அந்நிய படையெடுப்பில் அங்கிருந்த கோவில்களைப் பாண்டியர்களோடு தோள் தந்து காத்தனர்.
அப்போது அங்கு பிரதான அமைச்சரான திருமலையாழ்வார் மூலம் மீண்டும்
வைணவத்தைத் தழுவினர். அவரோடு சேர்ந்து ஸ்ரீரங்கம் உத்ஸவ மூர்த்தியைக் காத்து சேர தேசம்
வரை சேர்த்தனர். வாணாதிராயர்கள் சிறந்த நிர்வாகத் தலைவர்களாக பாண்டியர்களுக்கு ஆபத்துக்காலங்களில்
உதவினர். பாண்டியர்கள் சார்ந்த மதத்தையே ஏற்று நடந்தனர். திருமலையாழ்வார்தான் பின்னாளில்,
அரச பதவியைத் துறந்து திருவாய்மொழிப் பிள்ளை என்ற நாமத்தோடு வைணவத்தை வளர்த்து இந்த
மாமுனிகளைத் தன் சிஷ்யராய்ப் பெற்றார்.
நரசிங்கத்தேவரே, இவர்கள் நம் முன்னோர் இராஜாங்க பிரதானி திருமலையாழ்வார்
வழி வருபவர்கள். ஒரு வகையில் மதுரையம்பதியை பிறந்த வீடாய்க் கொண்டவர்கள். அடியார்களனைவரையும்
நம் அரண்மனை அருகில் இருக்கும் அப்பன் திருவேங்கடமுடையான் மடத்தில் தங்குவதற்கு சிறப்பான
ஏற்பாடுகள் செய்யுங்கள்
என்றார் அமைச்சரிடம்.
பின் மாமுனிகளிடம், அடியேன்… ஸ்வாமிகள்
சந்திவேளையில் கூடல் திருக்கோவில் மங்களாசாசனம் செய்யவேணும். அதற்குள் சிறிது இராஜ்ய
விஷயம் முடித்துவிட்டு வருகிறேன்.
அவரும் ஆமோதித்து
அருள, அனைவரும் செல்லத்தொடங்கினர்.
அரசன் அரண்மனை அடைந்ததும், சிறிது நேரத்தில் இளவரசனோடு மந்திராலோசனை
மண்டபம் விரைந்தார். அங்கு, நரசிங்க தேவர், பஞ்சவராயர், சோழக் கோனார் போன்ற தளபதி,
அரசு அதிகாரிகளும், சுந்தர சோழபுரத்து நகரத்தார், வட்டாற்று நாட்டார், பின்முடிதாங்கினார்
போன்ற ஊர்த்தலைவர்களும் இருந்தனர். அரசனின் உத்தரவின் படி ஊர்த் தலைவர்களும் வந்திருந்தனர்.
அவையோரே… நம் நாட்டின் மீது தாக்குதல் இல்லை. ஆனாலும் நாம் இன்று
சற்று வித்தியாசமான சூழலில் இருக்கிறோம். அது பற்றித்தான் விவாதிக்க இங்கு கூடியுள்ளோம்.
அந்நியப் படையெடுப்பில் சிதைந்து போன நம் பாண்டிய மண்டலம், கம்பண்ண உடையாரால் மீண்டு,
விஜயநகர அரசர்களுக்குக் கீழ் இருந்தது. அந்தக் காலங்களில் பாண்டிய நேரடி வாரிசு இல்லாததால்,
பாண்டியர் மண உறவில் வந்த வாணாதிராயர்கள் பாண்டிய மண்டலத்தில் அரசரானோம். ஆனாலும் தென்காசியைத்
தலைநகராய்க் கொண்டிருக்கும் கொற்கை பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்ற ஏற்கெனவே போர்
செய்து தோற்றனர். இப்போதும் பராக்கிரம பாண்டியன் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறார். இவை எல்லாம் தாங்கள் நன்கு அறிந்தது
என்றார் அரசர்.
இரண்டாம் தேவராயரின் அரசியல் அதிகாரி லக்கண தண்ட நாயக்கர் அழைப்பின்
பேரில் திருசிராமலையில் ஒரு கூட்டம் நடந்தது. அங்கு பாண்டியனும் வந்திருந்தார். நாங்கள்
அங்கு சந்திப்போமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை..
அரசே, இது என்ன? இருவரும் நேரில்.. தகுந்த பாதுகாப்பு இல்லாமல்..
எதுவும் விபரீதம் நடக்கவில்லையே…?
பதறினார் சோழக்
கோனார்.
அழகர் கிருபையில் விபரீதம் இல்லை. ஆனால் போய் வந்த விஷயம்தான் கொஞ்சம்
யோசிக்க வேண்டியிருந்தது.
என்ன அரசே? பாண்டியர் மீண்டும் ஏதாவது.. என்று பல்லவராயர் சொல்லவும், இல்லை.. விஜயநகர
அரசு தன் ஆளுமையைக் கடல் கடந்து நீட்டிக்க விரும்புகிறது. ஈழம் வரை. ஆம்!. புது யுத்தம்.
சற்றே நிறுத்தித் தொடர்ந்தார். அவர்கள், நம்
படைகளோடு, பாண்டியப் படையும் சேர்த்துக்கொண்டு ஈழத்தைக் கைப்பற்ற நினைக்கின்றனர். ஒரு
பெரும்படை விஜயநகரிலிருந்தும் வரும். இவ்வழியே ஈழம் வரை செல்லும்..
நாம் ஏற்கெனவே விஜயநகர் ஆட்சிக்குட்படாமல் சில காலமாய் தனியே இருக்கிறோம்.
ஆனாலும் சுதந்திரமாய்ச் செயல்படவில்லை. இந்தச் சமயத்தில் நாம் எப்படி அவர்கள் படையை
அனுமதிப்பது, அதுவும் பாண்டிய படைகளோடு சேர்த்து?
என்றார் அமைச்சர்.
ஆம் அமைச்சரே. அதுதான் நானும் யோசித்தேன். பாண்டியர்களும் இதற்கு
உடன்படவில்லை. பின் நாயக்கரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
என்ன அரசே? அனைவரும் திகைப்பில் கேட்டனர்.
விஜயநகரப் படைகள் நம் மண்டலத்துக்குள் நுழையாது. இந்தப் போரில் படைகள்
நம் பாண்டி மண்டலத்திலிருந்துதான் செல்லும். விஜயநகர முக்கியப் படைகள் மட்டும் வரும்.
தென்காசி பாண்டியர்களும் இதே போல் உதவுவார்கள். நம் படை தென்காசி தாண்டிச் செல்ல இடையூரில்லை.
போரின் வெற்றிக்குப் பின் விஜயநகர அரசிடமிருந்து முற்றும் பிரிந்து பாண்டிமண்டலம் தன்னாட்சி
பெறும். இதுவே சாராம்சம்.
அரசர் தொடர்ந்தார். இப்போது கார்த்திகை
மாதம். வரும் மாசி மாதத்தில் நம் படைகள் கிளம்பும். இங்கிருந்து நான் அரச நிர்வாகம்
செய்வேன். இளவரசன் சுந்தரத்தோளுடையான் நம் படைகளை வழி நடத்திக் கொண்டு செல்வான். ஊர்த்தலைவர்கள்
படைகளைத் தயார் செய்யும் வேலைகளைச் செய்யுங்கள்.
அனைவரும் இதை ஒத்து தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.
நல்லது மன்னா. இளவரசரின் இந்த முதல் போரில் நாம் வெற்றிபெறுவோம்.
இந்த வெற்றியின் மூலம் நம் இளவரசரும் பாண்டிமண்டல நவ ஸ்தாபனாச்சாரியர் என்று புகழ்பெறுவார்
என்றார் அமைச்சர்.
யுத்தம் காரணமாய் மாவடை, மரவடை, பொன்வரி போன்ற வாசற்கணக்கு வரிகள்
திருத்தப்பட்டன.

படைகள் செல்லும் வழியில் இருக்கும் குடவர்,
கோவனவர், பூவிடுவார், தழையிடுவார், அணுக்கர் போன்ற பிரிவுகளுக்குத் தகுந்த உத்தரவுகள்
சேர்க்கப்பட்டன. மேலும் பல முடிவுகள் எடுத்து, திருவோலை வரைவர் மூலம் ஓலைப்படுத்தினர்.
அமைச்சர் அப்பன் மடம் சென்று பார்வையிட்டு மாலையில் கூடலழகர் கோவிக்குச்
சென்றார். அங்கு மணவாள மாமுனிகள், கோவிலைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த கிருதுமால் நதியில்
மாலை அனுட்டானம் முடித்துவிட்டு அடியார்களுடன் சென்று சுந்தரராஜப் பெருமானைத் தரிசித்தார்.
பின் அமைச்சரிடம் மன்னனின் வைணவ கோவில் கைங்கர்யங்கள்
பற்றிக் கேட்டார்.
அரசர் திருமாலிருஞ்சோலை அழகரிடம் அளவில்லா அன்பு கொண்டவர். அங்கு
ஸ்வர்ண விமானம் செய்வித்து, மேலும் பல கைங்கர்யங்கள் செய்ய ஏற்பாடு செய்வித்து வருகிறார்.
இதற்கு திருவளவன் சோமயாஜி என்பாரை நியமித்துள்ளார். திருமாலிருஞ்சோலையில் முதல் மாறவர்மன்
சுந்தரபாண்டியரது இராஜ்ய அதிகாரி சோலைமலைப் பெருமாள்
வாணாதிராயர் மடம் என்று ஒன்றை
ஸ்தாபித்து அடியார்களுக்கு அமுது செய்வித்திருந்தார். இப்போது மன்னர் அதைப் புனர்நிர்மாணம்
செய்துள்ளார்.
பெரியநம்பி திருமாலிருஞ்சோலை நின்றான் நிருவாகம் என்று பல வைணவ சந்நிதிகளுக்கு நிவந்தம் தந்துள்ளார் என்று மேலும் பல திருப்பணி பற்றி நரசிங்கதேவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
மன்னரும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.
மாமுனிகள் அடியார் குழாங்களோடு திருவோலக்கம் கொண்டிருந்தார். அவரின்
சொல்வன்மையில் அனைவரும் அசையாமல் இருந்தனர். பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பற்றி
மாமுனிகள் வ்யாக்யானம் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மன்னர் தனியே சந்தித்து
உபதேசம் பெற்றார்.
மன்னருடன், இளவரசன் சுந்தரத்தோளுடையான், பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியார்,
அம்மான் நீலங்கரையார் அனைவரும் இருந்தனர். அரசன் திருமாலிருஞ்சோலை கோவிலில் செய்துவரும்
கருவறை, மற்றை சந்நிதி, தங்க விமான கைங்கர்யங்கள் எல்லாம் கேட்டு மாமுனிகள் மிகவும்
சந்தோஷித்து, அவர்கள் அனைவரையும் மறுநாள் உதயத்தில் வரச் சொன்னார்.
மறுநாள் அரசன் வைகை ஆற்றங்கரையில் காலிங்கராயன் படித்துறை சென்று
புனித நீராடி குடும்பத்தோடு கோவில் விரைந்தார். அவர்கள் அனைவருக்கும் அங்கேயே பஞ்ச
ஸம்ஸ்காரங்கள்
1 செய்து வைத்தார் மணவாள மாமுனி. பின்னர் அன்று பின்னிரவே கிளம்பி,
கூராகுலத்தம தாசர் அவதரித்த சிறுநல்லூர், திருப்புல்லாணி, திருவழுதி நாட்டு திருக்
குருகூர்
2, மார்கழி நீராட்டு உற்ஸவம் திருமல்லிநாட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்று திவ்ய தேச யாத்திரை வழியைச் சொன்னார்
மாமுனிகள். அது கேட்டு மகிழ்ந்து ஆண்டாள் நாச்சியாரின் சில பாசுர அர்த்தங்களைக்
கேட்க விரும்பினான் மன்னன்.
அவரும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்.. என்ற திருமாலிருஞ்சோலை பாசுரங்களைச் சில மணிகளில், இந்த உலகமே கண்ணனின் விளையாட்டு. வீட்டைப் பண்ணி விளையாடும் அவனையே
சரணடைய வேண்டும்
என்று வெகுவாக விளக்கிச் சொன்னார். அவர்கள் யாத்திரை கிளம்பும்
நேரம் வந்தது. ஆச்சாரியார் நடந்து போனால் யாத்திரை குறித்த நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்
போக முடியாது என்று எண்ணி, பொன்னாலும், இரத்தினங்களாலுமான திருப்பல்லக்கை மன்னர் சமர்ப்பித்து
கார்த்திகை மாதப் பனி தாக்காமல் பனிப் போர்வையோடு அன்று இரவே கிளம்பினர். அவர்கள் வைகை
நதியை ஒட்டியே போனார்கள்.
அதிகாலை வேளை வந்ததும், ஒரு கிராமத்தில் பல்லக்கை இறக்க, மாமுனிகளும்
அங்கு நதியில் நீராடி, தன் அனுஷ்டானம் செய்யும் போது, அரசன் திருமாலிருஞ்சோலை நின்றான்
பல்லக்கு தாங்கி வந்த கோலத்தோடு இருப்பது கண்டு வியந்து
உறங்காவில்லி தாசரோ?3 என்று வினவி, நீரும் அவரைப்போல்
அரச குலத்தில் வந்து ஆச்சாரிய பக்தியால் இவ்வாறு பல்லாக்கும் சுமந்து இரவெல்லாம் நடந்து
வந்துள்ளீரே?
என்று அருளினார். இந்த ஊரை தாங்கள்
கடாக்ஷிக்க வேண்டும்
என்று அரசன் வேண்டியபடி அந்த ஊர்க்கு அழகிய மணவாள நல்லூர்4 என்று திருநாமமிட்டார் ஆச்சாரியார்.
மன்னரும் சந்தோஷித்து மதுரை நோக்கிக் கிளம்பினான். அவரது குரு பக்தி
கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். மன்னரைப்போல் குடிகளும் மாறத் தொடங்கினர்.
5
மதுரையில் இளவரசன் போருக்கு ஆயத்த வேலைகளைத் தீவிரமாய்ச் செய்தான்.
அனைத்து நாட்டுக்கும் தானே நேரில் பார்வையிட்டு வந்தான். சில நாட்களில் தூதுவர்கள்
மூலம் நாயக்கரின் செய்தி வந்தது. மன்னன், இளவரசனோடு சேர்ந்து படைகளின் வியூகங்களைச்
செய்தார். தென்காசி பாண்டியன் சற்றே இணக்கமாய் இருந்தான்.
இந்த வேலைகளில் ஆச்சாரியரின் யாத்திரை பற்றியும் கேட்டு வந்தான்
வாணாதிராயர். அவர்கள் சற்றே தாமதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தாலும் அங்கு, ஆண்டாள்
நாச்சியார் தானே அருளி, மார்கழி நீராட்டு உற்ஸவத்தை மாமுனிகள் பொருட்டு நீடித்ததைக்
கேட்டு மகிழ்ந்தான்.
தை கடைசியில் படைகள் பாளையங்களிலிருந்து கிளம்பின. நாயக்கரின் படையும்
வந்தது. சுந்தரத் தோளுடையான் படைகளை நடத்திப் போனான். பராக்கிரம பாண்டியன் தென்காசி
படையோடு அணிவகுத்து வந்தான். சிறுவயதானாலும் இளவரசன் வீரம், கம்பீரம் கண்டு அனைவரும்
ஆச்சரியப்பட்டனர். ஒரு திங்களுக்கு உள்ளாகவே படைகள் இலங்கை அடைந்தன. இதை அறிந்து இலங்கை
மன்னனும் போருக்குத் தாயாராய் இருந்தான். பெரும் போர் மூண்டது.
வாணாதிராயன் சாமர்த்தியமாக மற்றொரு படையை இராமநாதபுரம் கடல் வழியே
அனுப்பியிருந்தார். எதிர்பாராத தாக்குதலால் இலங்கைப் படை குலைந்தது. இருந்தாலும் சில
திங்கள் போர் நீடித்தது. வாணாதிராயன், இளவரசன் பற்றிய முன்னுக்குப் பின் முரணான செய்தியால்
கலக்கமுற்றான். மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது. பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியாருடன்
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை வணங்க எண்ணினான்.
அது ஆடி மாதம்., ஆண்டாள் நாச்சியார் திருஅவதார உற்ஸவமான திருவாடிப்பூர
உத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மூன்றாம் நாள். ஆண்டாள் நாச்சியார் திருமல்லி
நாட்டில் இருக்கும் பொன்பற்றி விழுப்பரைய நல்லூர் என்ற சுந்தரதோள் விண்ணகர்
6 கிராமத்திற்கு எழுந்தருளி ஒரு நாள் முழுதும் இருப்பார். பின்னர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வருவார். வாணாதிராயர் அன்று முழுதும் காத்துக்கொண்டிருந்தார்.
ஆண்டாள் நாச்சியார் மீண்டும் வர ஸ்ரீவில்லிபுத்தூர் காலதாமதமானது.
ஆண்டாளைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையும், இளவரசர் பற்றிய கவலையும் அரசருக்கு
அதிகமானது. சில நேரம் கழித்து ஆண்டாள் சகல பரிவாரங்களோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அடைந்தார்.
அரசரும் ஆனந்தமாய் தரிசிக்க, அங்குள்ள கோபுரத்தடி மண்டபத்தில் பல்லாண்டு இசைப்பாரான
அரையர்கள் நாச்சியார் திருமொழியை இசை அபிநயத்தோடு சமர்ப்பித்தனர். அதுவும், வாணாதிராயர்
மாமுனிகளிடம் கேட்ட
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்.. என்ற திருமாலிருஞ்சோலை பதிகம்.
சுந்தரத் தோளுடையான், ஏறுதிருவுடையான் என்று சொல்லும்
போதும்,
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வார்களே என்று அரையர்கள் இசைஅபிநயம் பிடிக்கும் போதும் அரசன் தன் நிலை மறந்து
கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தான். மன்னருக்குக் கோவில் மரியாதைகள் செய்யப்பட்டன.
இரண்டொரு நாட்களில் தூதுவன் மூலம் இளவரசன் பற்றிய நற்செய்தி வந்தது.
பாண்டியபடைகள் வெற்றி பெற்று சுந்தரத்தோளுடையான் தலைமையில் மதுரை நோக்கி வருகின்றன.
மன்னன் சந்தோஷித்து, தன் மனக்குறை தீர திருவமுது, திருமாலை, திருவிளக்கு மற்றும் நித்யபடிக்கு
திரளிற் பற்றில்7 உள்ள மாங்குளம் என்ற ஊரைத்
தானமாகத் தருவதாய் ஸ்ரீரங்கநாத பிரியன் என்ற திருவோலை வரைவார் மூலம் பட்டோலைப்படுத்தினார்.
பின்னர் அது கோவிலில் கல்வெட்டாய் எழுதப்பட்டது
.. சூடிக்கொடுத்தருளிய நாச்சியாற்குத் திருவாடித் திருநாள் நம் குறையறுப்பாகக்
கொண்டருளும் படிக்கு இந்தத் திருநாளுக்கு வேண்டும் அமுதுபடி கரியமுது சாத்துபடி திருப்பரிவட்டம்
திருமாலை திருவிளக்கும் மஞ்சள்காப்பு, கற்பூரம், குங்குமம் கண்டருளத் திருக்காப்பு
சூடம் உட்பட வேண்டும் நைவேத்தியங்களுக்கும் உட்பட்ட வகைக்கு விட்ட வீர நாராயண வளநாட்டுத்
திரளில் பற்றில் மாங்குடி ஆன சுந்தரத்தோள நல்லூர்…
அழகர் திருவுள்ளம்….
மதுரை வந்து சிலநாட்களில் வெற்றிக்கொண்டாட்டம் நடந்தது. மன்னர் தனியாக
நாணயங்கள் வெளியிட்டார்.
சமரகோலாகலன் ஒருபுறம், கருடன் மறுபுறம் என்று ஒரு நாணயமும், பாண்டிய
சின்னமான மீனின் மீது கருடன் அமர்வது போலவும், கருடன், சங்கு, சக்கரம் உள்ளது போலவும்
இருந்தது மற்றை நாணயங்களும் வெளியிட்டார். திருமாலிஞ்சோலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய
வைணவத் தளங்களுக்கு நிறைய கைங்கர்யம் செய்தான்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு பச்சைக் கற்பூரம், சந்தனம், வாசனாதி
திரவியங்கள் அரைக்க அழகிய அம்மிக்கல்லை குழவியோடு தந்தான். அதில் தம் ஆச்சாரியரான மணவாள
மாமுனிகளையும், அவரின் முக்கிய எட்டு அடியார்களையும் நினைக்கும் வண்ணம், எட்டு சிங்கங்கள்
தாங்கும் அந்த அம்மியின் அடியில்
திருமாலிருஞ்சோலை
நின்றான் மாவலி வாணாதிராயர் உறங்காவில்லி (தா)ஸந் ஆன சமரகோலாகலன்..
என்று பொறித்தான்.
மற்றைய சைவக் கோவில்களுக்கும் அநேக திருப்பணிகள் செய்ய பாண்டிய மண்டலத்தில்
வைதீக மதம் மீண்டும் தழைத்தது. பின்னாளில் சுந்தர தோளுடையானும் அது போலவே பல நல்ல பணிகளைச்
செய்தான். பல கோவில்களைப் புதுப்பித்தான். குடிகளும் மகிழ்ச்சியாய் இருந்தனர்.
அடிக்குறிப்புகள்:

1. பஞ்ச ஸம்ஸ்காரங்கள் என்பது திருமாலே சரணம் என்று அடைய
ஸ்ரீவைஷ்ணவராக நெறிப்படுத்தும் ஒரு முறை.

2.
இன்று ஆழ்வார் திருநகரி

3. இராமானுசர் காலத்தில் சோழ நாட்டுப் படைத் தளபதி
உறங்காவில்லிதாசர் என்று ஒருவர் ஸ்ரீரங்கத்தில் கைங்கர்யம் செய்தார். அவர்
எப்போதும் கைங்கர்யத்தில் இருப்பதால் உறங்குவதில்லை, ‘உறங்காவில்லி தாசர்’
எனப்பட்டார்.

4. இன்று ‘முத்தரசன்’ என்றுள்ளது அந்த ஊர்.

5. இம்மன்னன் கல்வெட்டில் திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயன்
உறங்காவில்லிதாசன், சமரக்கோலாகலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.

6. இன்று விழுப்பனூர் என்று வழங்கப்படுகிறது.

7.
இன்று திரளி


Posted on Leave a comment

விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

1918ல் வெளியான கீசக
வதம்
தான் தமிழின் முதல் சலனத் திரைப்படம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முன்னோடியான அந்த முதல் முயற்சியைச் செய்தவர் ஆர். நடராஜ
முதலியார். அதனைத் தொடர்ந்து
திரௌபதி வஸ்திராபரணம்,மஹிராவணன்,
மார்க்கண்டேயன்
போன்ற பல பேசாப் பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்றாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
தடையாலும் கட்டுப்பாட்டாலும் அவை மட்டுப்படுத்தப்பட்டன. 1931ல் வெளியான
காளிதாஸ்
தமிழின் முதல் பேசும் படமாகக் கருதப்படுகிறது. அதற்கு முன்பே அதே ஆண்டில்,
குறத்திப்
பாட்டும், டான்ஸூம்
என்ற சிறு படம் (குறும்படம்) வெளியாகியிருக்கிறது.
மொத்தம் நான்கே ரீல்கள் கொண்ட அப்படமே தமிழின் முதல் பேசும்படம் (அ) குறும்படம் என்று
கருதத்தக்கது. அதனைத் தொடர்ந்து புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு
ராமாயணம்,காலவா,சத்தியவான்
சாவித்திரி
, கிருஷ்ண லீலா
போன்ற படங்கள் வெளியாகின. கூடவே அக்காலத்தின் புகழ்பெற்ற நாடகங்களான
வள்ளி
திருமணம்
,ஹரிச்சந்திரா,
பிரகலாதா, நந்தனார்,
கோவலன் போன்றவையும் திரைப்படங்களாகி
வெற்றிபெற்றன.

இவ்வாறாக, நாடு விடுதலையும்
ஆகஸ்ட் 1947க்கு முன்பாகவே சுமார் 400 படங்கள் வரை வெளியாகியிருக்கின்றன. அவற்றில்
அரிய செய்திகளைக் கொண்ட சில படங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சீதா கல்யாணம் (1934)

தமிழின் ஆரம்ப காலத்தில்
புராண, வரலாற்றுக் கதைகளை மையமாக வைத்தே திரைப்படங்கள் வெளியாகின. அந்த வகையில்
1933ல் தொடங்கப்பட்டு 1934ல் வெளியான படம் சீதா கல்யாணம். பிரபல ஹிந்திப் பட இயக்குநர்
வி.சாந்தாராமின் முயற்சியில் உருவான இப்படத்தின் கதையை அக்காலத்தின் பிரபல எழுத்தாளரான
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் எழுதியிருந்தார். பாபுராவ் பண்டேர்கர் இயக்கியிருந்தார்.
சீதையின் திருமணத்தைப் பற்றிய இந்தக் கதையில் கதாநாயகன் ராமனாக நடித்தது பிற்காலத்தில்
இசை மற்றும் ஓவிய மேதையாக அறியப்பட்ட எஸ். ராஜம். கதாநாயகி சீதையாக நடித்தது எஸ்.ஜெயக்ஷ்மி.
இவர் ராமனாக நடித்த எஸ்.ராஜத்தின் சகோதரி. மற்றொரு சகோதரி சரஸ்வதி ஊர்மிளையாக நடிக்க,
சகோதரரான பாலசந்தர் ராவண தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவராக நடித்திருந்தார். இவரே பிற்காலத்தில்
நடிகரும் சிறந்த இயக்குநருமாக உருவாகி, இசை மேதையாகவும் திகழ்ந்த வீணை எஸ்.பாலசந்தர்.
இவர்களது தந்தையான சுந்தரம் ஐயர், ஜனக மகாராஜாவாக நடித்திருந்தார். இவர், அக்காலத்தின்
பிரபல வழக்குரைஞர்களுள் ஒருவர்.

அதுவரை கர்நாடக இசை வல்லுநராகத்
திகழ்ந்து பாடல்கள் எழுதி வந்த பாபநாசன் சிவன், இப்படத்தின் மூலம் பாடலாசிரியராகத்
திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். படத்திற்கு ஏ.என். கல்யாணசுந்தரத்துடன் இணைந்து இசையமைத்திருந்தவரும்
சிவன்தான். இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றாலும், அண்ணனும் தங்கையுமே நாயக,
நாயகியாக நடித்ததால் சர்ச்சையையும் தோற்றுவித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து
பின்னர், எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து சிவகவியிலும், ராதா கல்யாணம், ருக்மணி
கல்யாணம் போன்ற படங்களிலும் நடித்த எஸ்.ராஜம், பின்னர் நடிப்பிலிருந்து விலகி இசை மற்றும்
ஓவியத்தில் தனது கவனத்தைச் செலுத்தி ஓவிய மேதையானார். எஸ்.ஜெயக்ஷ்மியும் சில படங்களில்
கதாநாயகியாக நடித்துப் பின் இல்லற வாழ்வில் ஈடுபட்டார். எஸ்.பாலசந்தரும் சில படங்களில்
நடித்தார்.
பொம்மை, அந்த நாள் போன்ற சில படங்களை இயக்கினார்.
சில படங்களைத் தயாரித்தார். பின் முழுக்க இசைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பிரபாத் டாக்கிஸின் முதல்
படமான சீதா கல்யாணம், 1934ல் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பாபுராவ்
பண்டேர்கருக்கு உதவியாளராகப் பணியாற்றிய முருகதாசா (முத்துசாமி ஐயர்), இதே படத்தில்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.ராம்நாத்துடனும், எடிட்டர் ஏ.கே சேகருடனும் இணைந்து
பிற்காலத்தில்
வேல் பிக்சர்ஸ்
என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பல வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது.

பாமா விஜயம் (1934)

பிரபல கர்நாடக சங்கீத
வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் அறிமுகமான படம் இது. மகாராஜபுரம் விஸ்வநாத
ஐயரின் சகோதரர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கதாநாயகன் கிருஷ்ணனாக நடித்திருந்தார். ஜி.என்.பி.க்கு.
நாரதர் வேடம் பி.எஸ்.ரத்னா பாய் மற்றும் பி.எஸ். சரஸ்வதி பாய், பாமா, ருக்மணி ஆக நடித்திருந்தனர்.
துவாபரயுகத்துக் கிருஷ்ணன், கலியுகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய தியாகராஜ
சுவாமிகளின் கீர்த்தனையைப் பாடுவதாக ஒரு காட்சி. இது ஒரு முரண் என்றால் படத்தின் இறுதிக்
காட்சியில் கிருஷ்ணன், பாமா, ருக்மணி, நாரதர் எல்லாரும்
ஜன
கண மன
பாடலைப் பாடுகிறார்கள். அந்த வகையில் தேசியகீதம்
முதன் முதல் ஒலித்த தமிழ்ப்படமும் பாமா விஜயம்தான்.

எம்.கே. தியாகராஜ பாகவதர்
என்று அழைக்கப்படும் (நடிகர் தியாகராஜ பாகவதர் அல்ல) எம்.கே. தியாகராஜ தேசிகர் இப்படத்திற்கு
இசையமைத்திருந்தார். (ஒரே பெயரில் இருவர், ஒரே துறையில், ஒரே காலத்தில் அப்போது இருந்திருக்கிறார்கள்!)
மாயவரம் கந்தசாமி தியாகராஜ பாகவதர் என்பது இவரது முழுப்பெயர்.
ரஞ்சித
மோகன கவி
’, பாகவதர்
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், இசை ஆசிரியர்
என்று பல்வேறு திறமைகளுடன் இயங்கிய இவர்,
தியாகராஜ தீக்ஷிதர்
என்றும்,
தியாகராஜ தேசிகர்
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். தருமபுருர ஆதினத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை
கந்தசாமி தேசிகர் அக்காலத்தின் சிறந்த தமிழ் வித்வான்களுள் ஒருவர்.
சித்தாந்த
ரத்நாகரம்
என்று போற்றப்பட்டவர்.

தியாகராஜ தேசிகர் அல்லிவிஜயம்,
பக்த துளசிததாஸ் (1937), மாணிக்கவாசகர்
போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
சாம்பான்வரலாற்றை எழுதியிருக்கிறார். தக்ஷிணாமூர்த்தி மீதும் ஒரு செய்யுள்
நூலை இயற்றியுள்ளார்.

பவளக்கொடி (1935)

எம்.கே.தியாகராஜ பாகவதர்
கதாநாயகனாக முதன் முதலில் அறிமுகமான படம் இது. கதாநாயகியாக நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமிக்கும்
அதுவே முதல் படம். இருவரும் ஏற்கெனவே
வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா உட்பட பல நாடகங்களில்
இணைந்து நடித்த இணையர். இதனால் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில்
தியாகராஜ பாகவதர் அர்ஜூனன் ஆக நடித்திருந்தார். அக்காலத்தின் புகழ்பெற்ற நாடக நடிகரான
எஸ்.எஸ். மணி பாகவதர், கிருஷ்ணனாக நடித்திருந்தார். எஸ்.டி. சுப்புலட்சுமி பவளக்கொடியாக
நடித்திருந்தார். இப்படத்தில் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எழுதியவர் பாபநாசம்
சிவன். அற்புதமான வர்ண மெட்டுக்களையும் அவர் அமைத்திருந்தார்.

நாட்டு வழக்கில் இருக்கும்
மகாபாரதத்தின் கிளைக்கதையான அல்லி கதையை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதை இது.
சகுந்தலா
என்ற அக்காலத்து நாடகத்தால் புகழ்பெற்ற
சாந்தா தேவியும்
இப்படத்தில் நடித்திருந்தார். அவரது நாட்டியமும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. திரைப்பட
விளம்பரத்தில் அது குறித்த செய்தியும் இடம் பெற்றிருக்கிறது. தியாகராஜ பாகவதரைத் தமிழ்நாடெங்கும்
கொண்டு சேர்த்த முதல் படம் இதுதான். இப்படம் ஒன்பது மாதங்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
(கே.சுப்பிரமணியம் –
எஸ்.டி. சுப்புலட்சுமி)
மீனாக்ஷி சினிடோன் தயாரித்திருந்த
இப்படத்தின் இயக்குநர் அக்கால ஜாம்பவான்களுள் ஒருவரான கே.சுப்பிரமணியம். மீனாக்ஷி என்பது
அவரது முதல் மனைவியின் பெயர்; பிற்காலத்தில் இப்படத்தில் நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமியை
இவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இருவருமாக இணைந்து
யுனைடெட்
ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்
என்ற நிறுவனத்தை உருவாக்கினர். அதன் மூலம்
நவீன சதாரம், பாலயோகினி,
பக்த குசேலா, மிஸ்டர்
அம்மாஞ்சி
, கௌசல்யா கல்யாணம்,
சேவாசதனம், தியாகபூமி,
இன்பசாகரன் போன்ற பல படங்களைத்
தயாரித்து இயக்கினார்.

டி.ஆர்.ராஜகுமாரியை திரையுலகில்
அறிமுகம் செய்தது இவர்தான்.
கச்சதேவயானி
படத்தின் மூலம் அறிமுகமான ராஜகுமாரி, அக்காலத்து ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனார். தென்னிந்திய
திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பை உருவாக்கியவரும் கே.சுப்பிரமணியம்தான்.
தமிழ்த்
திரையுலகின் தந்தை
யாக இவர் மதிக்கப்படுகிறார்.
ரத்னாவளி (1935)

வடமொழியில் ஹர்ஷரால்
எழுதப்பட்ட நாடகம் ரத்னாவளி. இதனைத் தமிழில் நாடகமாக எழுதியிருந்தார் பம்மல் சம்பந்த
முதலியார். அது நாடகமாக நடத்தப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றதால் அதனைப் படமாக்க விரும்பினார்
ஏவி.மெய்யப்பச் செட்டியார். ஏற்கெனவே அவர் கிராமபோன் இசைத்தட்டுக்களுக்காக
சரஸ்வதி
ஸ்டோர்ஸ்
என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார்.
அதனை அடுத்து அவர்
சரஸ்வதி டாக்கீஸ்
என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் எடுக்கப்பட்ட படம்
தான்
ரத்னாவளி.

நாடக உலகில் வெற்றிகரமாகத்
திகழ்ந்த பி.எஸ். ரத்னா பாய், பி.எஸ். சரஸ்வதி பாய் சகோதரிகள் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக
நடித்தனர். தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்கரவர்த்தினி, கோகில கான வாணி
என்று போற்றப்பட்டவர் ரத்னா பாய். சங்கீத திலகம் என்று போற்றப்பட்டிருக்கிறார் சரஸ்வதி
பாய். இவர்கள் இருவரும் சகோதரிகள். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.
நிறைய கிராமபோன் தட்டுக்கள் இவர்கள் பாடி அக்காலத்தில் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் சரஸ்வதி
பாய் வாஸவதத்தை ஆகவும், ரத்னா பாய் ரத்னாவளி ஆகவும் நடித்திருந்தனர். நாயகனாக நடித்தது
எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி. இவர் அக்காலத்தின் வெற்றிப்பட நாயகர்களுள் ஒருவர். இப்படத்தில்
கதாநாயகியின் தோழி காஞ்சனமாலையாக அறிமுகமானவர்தான் டி.ஏ.மதுரம். முக்கிய வேடங்களில்
சி.பஞ்சு, ஏ.டி.கிருஷ்ண சர்மா, எம்.ஆர். சுப்பிரமணிய முதலியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

தென்னாட்டுச் சார்லி சாப்ளின்
என்று போற்றப்பட்ட சி.எஸ். சாமண்ணா இந்தப் படத்தில் நகைச்சுவை வேடமேற்றிருந்தார். உடன்
சுப்ரமணிய முதலியார், அங்கமுத்து, பபூன் ஷண்முகம், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் நகைச்சுவை
வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார். பிரஃபுல்லா
கோஸ் இயக்கியிருந்தார். 

ஒரே அரசனை ஒன்று விட்ட
சகோதரிகளான இருவர் மணக்கும் கதை இது. கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய
வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அக்காலத்தில் நகைச்சுவைக் காட்சிகளுக்காக பரவலான ரசிக
வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பி.எஸ்.ரத்னாபாய், பி.எஸ்.சரஸ்வதிபாய் பிற்காலத்தில் என்ன
ஆனார்கள் என்று குறிப்புகள் ஏதும் தற்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தின் பிரதியும்
கைவசம் இருப்பதாகத் தெரியவில்லை.

மிஸ். கமலா (1936)
(T.P. ராஜலட்சுமி)
தென்னிந்தியாவின் முதல்
பேசும் படமான
காளிதாஸ்
படத்தின் நாயகி டி.பி. ராஜலட்சுமி. இவர் அடுத்துக் கதாநாயகியாக நடித்த படம் மிஸ்.கமலா.
படத்திற்குக் கதை, வசனம் எழுதி இயக்கியவரும் இவரே! தயாரிப்பாளரும் இவர்தான். முதல்
பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர்
என்று பல்வேறு பெருமைகளை அவருக்கு பெற்றுத் தந்த படம் இது.

1936ல் தனது ராஜம்
டாக்கீஸ்
மூலம் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்
ராஜலட்சுமி. தனது முதல் நாவலான
கமலவல்லி அல்லது டாக்டர்
சந்திரசேகரன்
என்ற படைப்பையே திரைப்படமாக எடுத்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற சிறப்பும் இவருக்குக் கிடைத்தது. (இந்தியாவின்
முதல் பெண் ஃபாத்திமா பேகம்.)

ஒரு பெண் எழுத்தாளரின்
நாவல் முதன்முதலில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்றால் அது
மிஸ்.கமலாதான்.
அதுபோல திரைப்படமாகத் தயாரான இரண்டாவது நாவல் இதுதான். (முதல் நாவல்/படம் வடுவூர் துரைசாமி
ஐயங்காரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட
மேனகா’.) இப்படத்தில் ராஜலட்சுமியுடன் டி.வி.சுந்தரம்,
டி.பி.ராஜகோபால், வி.எஸ்.மணி, ஸ்டண்ட் ராஜூ, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்குப்
பாடல்களை எழுதி, இசையும், படத்தொகுப்பையும் கூட ராஜலட்சுமியே செய்திருந்தார்.

இது ஒரு வித்தியாசமான
காதல் கதை. புரட்சி அம்சம் கொண்ட கதை என்றும் சொல்லலாம். கதாநாயகி கமலவல்லி (டி.பி.ராஜலட்சுமி)
கண்ணப்பன் என்பவனைக் காதலிக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் டாக்டர் சந்திரசேகரனுடன்
திருமணம் நடக்கிறது. சந்திரசேகரனிடம் தன் காதல் பற்றிச் சொல்கிறாள் கமலவல்லி. பல்வேறு
பிரச்சினைகளுக்கிடையே அவன் அந்தக் காதலனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுக்கே அவளை மீண்டும்
ஊரறியத் திருமணம் செய்து வைக்கிறான் – இதுதான் நாவலின் கதை. விருப்பமின்றி வேறு ஒருவருடன்
திருமணம் நிகழ்ந்தாலும், அவருடன் சேர்ந்து வாழாது பண்பாடு, கலாசாரம் போன்ற மரபுகளை
மீறி ஒரு பெண் தன் காதலனையே மீண்டும் திருமணம் செய்து கொள்வதைக் காட்டும் படம். அது
அக்காலத்தில் மட்டுமல்லாது இக்காலத்திலும் புரட்சிதான். தமிழில் இம்மாதிரியான முற்போக்குச்
சிந்தனைகளுடன் வெளியான முதல் படம் அதுதான்.

படத்தின் புரட்சிகரமான
முடிவைக் கண்டு பலர் கொதித்தனர். திரையரங்குகள் முன் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும்
படம் வெற்றி பெற்றது. இப்படத்தின் சிறப்பாக, பாடல் காட்சி ஒன்றில் டி. என். ராஜரத்தினம்
பிள்ளையின் நாதஸ்வரம் இடம் பெற்றதைச் சொல்லலாம். (இந்தக் கதை பிற்காலத்தில் பிரபல நகைச்சுவை
ஒருவரின் வாழ்க்கையிலும் உண்மையாக நடந்தது. அதை மையமாக வைத்து பிற்காலத்தில் திரைப்படம்
ஒன்றும் உருவானது.)

சினிமா
ராணி
என்று போற்றப்பட்ட ராஜலட்சுமி, உடன் நடித்த நடிகர்
டி.வி.சுந்தரத்தைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தனக்குப் பிறந்த மகளுக்கு
தனது படம் மற்றும் கதாநாயகியின் நினைவாக
கமலா
என்று பெயர் சூட்டினார்.
பக்த குமணன் அல்லது ராஜயோகி, மதுரை வீரன் (1938), வீர அபிமன்யு, சாவித்ரி, திரௌபதி வஸ்திரா பரிணயம், குலேபகாவலி, ஹரிச்சந்திரா, நந்தகுமார், ஜீவஜோதி, இதயகீதம் போன்ற படங்களில் நடித்த
ராஜலட்சுமி, 1964ல் காலமானார். படத்தின் பிரதி தற்போது கிடைக்கவில்லை

சத்யசீலன் (1936)

1936ம் ஆண்டில் தமிழில்
வெளியான முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்று. கதாநாயகனாக நடித்தவர் எம்.கே. தியாகராஜ
பாகவதர். அவர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான திருச்சி தியாகராஜா ஃபிலிம்ஸை ஆரம்பித்துத்
தயாரித்த முதல் படம் இதுதான். எம்.எஸ்.தேவசேனா கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது
இயற்பெயர் கிருஷ்ணவேணி. இப்படத்தில் நடிப்பதற்காக பாகவதர்
தேவசேனா
என்று பெயரை மாற்றி விட்டார். டைகர் வரதாச்சாரியிரன் சகோதரரிடம் இசை பயின்றவர் தேவசேனா.
நாட்டியமும் அறிந்தவர். படத்தை இயக்கியிருந்தவர் பி.சம்பத்குமார். தன் நண்பரும், தனது
நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவருமான ஜி. ராமநாதனை இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கினார்
பாகவதர். பாடல்களை ஜனகை கவி குஞ்சரம் என்பவர் எழுதியிருந்தார்.

படத்தின் கதை, வசனத்தை
எல்.ராஜமாணிக்கம் எழுதியிருந்தார். ஜோதிபுரி நாட்டின் முதன்மந்திரி திடீரென இறந்து
போகிறார். சேனாதிபதியும் தன் பதவியை ராஜினாமா செய்கிறார். இரண்டாவது மந்திரி முதன்மந்திரியாகிறார்.
சேனாதிபதி பதவி காலியாக இருக்கிறது. அந்த இடத்தைப் பிடிப்பது யார் என்ற போட்டி ஏற்படுகிறது.
மக்கள் இறந்துபோன முதல் மந்திரியின் மகனும் வீரனுமான சத்தியசீலனை (எம்.கே.டி.) ஆதரிக்கின்றனர்.
அரச குடும்பத்தினரோ மன்னரின் மருமகனான பிரதாபருத்ரனை ஆதரிக்கின்றனர். கொடியவனான அவன்
பல்வேறு சூழ்ச்சிகள் செய்து ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறான். இறுதியில் சத்தியசீலன்
எப்படி வென்று ஆட்சியைப் பிடிக்கிறான், மன்னனின் மகளான பிரேமாவதியை (எம்.எஸ்.தேவசேனா)
மணக்கின்றான் என்பதே கதை.

பம்பாய் வாடியா மூவிடோனில்
தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சுதந்திரம், ஆட்சி தொடர்பான வசனங்களும், சில பாடல்களும்
இடம் பெற்றிருந்தன. பிரிட்டிஷ் அரசின் கடுமையான ஆட்சேபத்தால் அவை நீக்கப்பட்டதுடன்,
பாடல் வரிகளும் மாற்றப்பட்டன.

பாரதியாரின் பாடலான வீர
சுதந்திரம் வேண்டி நின்றார்
என்ற பாடலையும் மெட்டையும்
அப்படியே கையாண்டு வரிகளை மட்டும் மாற்றி இப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். படத்தில்
இடம் பெற்ற அப்பாடல் இதுதான்.
வீரர்கள் வாழ்வினை வேண்டிநின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ
ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார்
கள்ளிர் அறிவைச் செலுத்துவாரோ
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்று
வெற்றியை அறிந்தாரேல் – மானம்
துறந்தும் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று நினைப்பாரோ..
இப்படத்தில் சொல்லு
பாப்பா..நீ சொல்லு பாப்பா சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா

என்ற பாடலும் இடம் பெற்றிருக்கிறது. அது முதலில்
சுதந்திரம்பெற வழி நீ
சொல்லு பாப்பா
என்றே இடம் பெற்றிருந்தது. பிரிட்டிஷாரின் எதிர்ப்பால்
வரிகள் மாற்றப்பட்டன. மட்டுமல்லாமல் உழைப்பை வலியுறுத்தியும், குடியை எதிர்த்தும் இப்படத்தில்
பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாபநாசம் சிவன் எழுதிய, தோடி ராகத்தில் அமைந்த
தாமதமேன்
சுவாமி
என்ற பிரபல கர்நாடக இசைப் பாடலும் இப்படத்தில்
இடம் பெற்றிருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக
நடித்த தேவசேனா பிற்காலத்தில்  
நந்தனார் படத்தில் நடித்தவரும்,
பிரபல கர்நாடக இசைக்கலைஞருமான எம்.எம்.தண்டபாணி தேசிகரை மணந்து கொண்டார். படத்தின்
பிரதி இப்போது கிடைக்கவில்லை

பக்த குசேலா (1936)

பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம்,
தனது முதல் படமான
நவீன சதாரம் படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இயக்கிய படம்
பக்த குசேலா.
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான பாபநாசம் சிவன் நடித்த முதல் படம் இதுதான்.
அவர் குசேலன் வேடத்தில் நடித்திருந்தார். அவரது மனைவி சுசீலையாகவும், நண்பன் கிருஷ்ணனாகவும்
இரு மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் எஸ்.டி. சுப்புலட்சுமி. பிற்காலத்தின் தன் பாடல்களுக்காக
மிகவும் புகழடைந்த ஆர்.பாலசரஸ்வதி தேவி இப்படத்தின் மூலம்தான் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
பட்டு ஐயர், வித்வான் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1936ல் வெளியான
இப்படம் அக்காலத்தின் வெற்றிப்படங்களுள் ஒன்று.

தமிழில் வெளிவந்த முதல்
இரட்டை வேடத் திரைப்படம் இதுதான் எனலாம். தமிழில் முதன்முதலில் மாறுபட்ட இரட்டை வேடங்களில்
நடித்த பெண் கதாநாயகி என்ற பெருமையும் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இப்படம் மூலம் கிடைத்தது
(ஆண்: பி.யு.சின்னப்பா, படம்: உத்தமபுத்திரன், ஆண்டு: 1940.) பக்த குசேலா படத்தின்
பிரதி இப்போது இல்லை.

இரு சகோதரர்கள் (1936)
புராணப் படங்களே அதிகம்
வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படங்கள் சிலவும்
வந்தன. அவற்றுள் ஒன்று இது. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படம் 1936ல் வெளியானது.
சதி லீலாவதி
திரைப்படத்திற்குப் பிறகு
டங்கன் இயக்கிய இரண்டாவது படம் இது. கதாநாயகன்
கே.பி.கேசவன். நாயகி, எஸ்.என்.விஜயலட்சுமி. உடன் எம்.கே.ராதா, எஸ்.என்.கண்ணாமணி, கே.கே.பெருமாள்,
டி.எஸ்.பாலையா, கிருஷ்ணவேணி, எம்.எம்.ராதாபாய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில்
எம்.ஜி.ஆர் காவலராக தம்முடைய சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்
நடித்த இரண்டாவது படம் இது.

படத்தின் கதையை பிரபல
எழுத்தாளரும் கவிஞரும் திரைப்பட இயக்குநருமான ச.து.சு.யோகி எழுதியிருந்தார். திரைக்கதை
மற்றும் பாடல்களும் அவரே! இசை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ். அனந்தராமன்.

அண்ணன் – தம்பி இருவருக்கிடையே
எழும் பிரச்சினைகளை நாடக்குழுக்களின் பின்னணியில் இப்படத்தில் சொல்லியிருந்தார் யோகி.
அதுவரை தமிழில் முப்பது, நாற்பது, ஐம்பது எனப் பாடல் வந்து கொண்டிருந்த காலத்தில் அவற்றை
வெகுவாகக் குறைத்து உண்மையான சினிமாவைக் காட்ட விரும்பினார் டங்கன். அதனால் இதில்
13 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன. வசனங்களோடு கூடவே காட்சி அமைப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம்
கொடுத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார் டங்கன். கதைக்குத் தொடர்பில்லாத நகைச்சுவைக்
காட்சிகளே திரைப்படங்களில் அதிகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கதையோடு இணைந்த
நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இப்படத்தின் மேம்படுத்தப்பட்ட
வடிவமே பின்னர்
நாம் இருவர்
என்ற திரைப்படமாக வெளி வந்தது எனலாம். ச.து.சு. யோகியின் இரண்டாவது படம்
அதிர்ஷ்டம்.
வி.வி.சடகோபன், சூர்யகுமாரி, கொத்தமங்கலம் சுப்பிரமணியன், செல்லம், தமயந்தி ஆகியோர்
நடித்திருந்தனர். அதுவும் ஒரு வெற்றிப்படமே!
இரு சகோதரர்கள்
படத்தின் பிரதி இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை.

நவயுவன் (1937)
நவயுவன்
அல்லது கீதாசாரம்
என்ற தலைப்பில் 1937ல் வெளியான இப்படத்தின்
கதாநாயகன் பிரபல கர்நாடக இசைக்கலைஞரான வி.வி.சடகோபன். தமிழ்த் திரையுலகின் முதல் பட்டதாரி
நாயகன் இவர்தான். ஹாலிவுட் இயக்குநரான மிசெல் ஒமலெவ் இப்படத்தை இயக்கியிருந்தார். வெளிநாட்டில்,
குறிப்பாக லண்டனில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். சடகோபன் நடிகனாகத்
தொடங்கி, பாடகராக, இசையமைப்பாளராக, கவிஞராக, எழுத்தாளராக,, பத்திரிகாசிரியராக, இசைப்
பேராசிரியராக உயர்ந்து, பலதளங்களில் சாதனை புரிந்த கலை மேதை. இவரது இரண்டாவது படமான
மதனகாமராஜன்தான்
ஜெமினி நிறுவனத்தின் முதல்
படமாகும்.
இப்படத்தில் (மதனகாமராஜன்)
சடகோபன் கதாநாயகனாக நடிக்க, வசந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். எழுத்தாளர் பி.எஸ்.
ராமையா கதை-வசனம் எழுதியிருந்தார். பாடல்கள்: பாபநாசம் சிவன். இசை: எம்.டி.பார்த்தசாரதி,
எஸ்.ராஜேஸ்வரராவ். ஜெமினியின் முதல் வெற்றிப்படமாக இது அமைந்தது.
நவயுவன்
திரைப்பட உருவாக்கத்திற்காக முதன்முதல் லண்டன் சென்ற தமிழ் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாதான்.
இவர் சினிமா பற்றி எழுதியிருக்கும் நூல் குறிப்பிடத்தகுந்தது.
சிறந்த நடிகராக இருந்து,
சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞராக உயர்ந்த வி.வி.சடகோபன், ஒரு சமயம் டெல்லியில் இருந்து
ரயில் பயணம் மேற்கொண்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூடூர் ரயில் நிலையத்தில் இறங்கியவர்,
அதன்பின் மர்மமான முறையில் காணாமல் போய் விட்டார். அவர் ஹிமாலயத்திற்குச் சென்று துறவு
பூண்டு விட்டார் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்.

சதி அஹல்யா (1937)

மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தாரின்
முதல் படம்
சதி அஹல்யா.
டி.ஆர்.சுந்தரம் இயக்கிய முதல் படம் இது. நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம்
முதன்முதலில் அறிமுகமான படமும் இதுதான். அவருடைய முதல் பாடல் இடம்பெற்ற படமும் இதுவே.
(தவமணி
தேவி)

ஆனால், இப்படத்தின் கதாநாயகி
தவமணி தேவி. இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
புராணப் படமான அகலிகையின் கதை இது. நாயகனாக எஸ்.வி.தத்தாச்சார் நடித்திருந்தார். உடன்
எஸ்.டி.சுப்பையா, டி.எம்.சங்கர், எஸ்.என்.சிவக்கொழுந்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடலை மதுரை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். இசை:ஆர்.பாலுசாமி. தவமணி தேவி, முதன்முதலில்
நீச்சல் உடையில் நடித்த கதாநாயகி என்ற சிறப்பைப் பெற்றது இப்படம் மூலம் தான்.

நந்தகுமார் (1938)

டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக
முதன்முதலில் அறிமுகமான படம் நந்தகுமார். அப்போது அவருக்கு வயது 14. கிருஷ்ணனாக இப்படத்தில்
அவர் நடித்திருந்தார். அவருக்குத் தாய் யசோதாவாக டி.பி.ராஜலட்சுமி நடித்திருந்தார்.
கதாநாயகி ராதையாக டி.எஸ்.ராஜலக்ஷ்மி நடித்திருந்தார். டி.ஆர்.ராமச்சந்திரன், பிரபல
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் ஆகியோர் அறிமுகமான படம் இதுதான். தமிழில் முதல்
பின்னணிக் குரல் ஒலித்தது இப்படத்தில்தான். கிருஷ்ணரின் தாய் தேவகியாக நடித்த நடிகையின்
குரல் வளம் சரியில்லாததால் அவர் பாடலுக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன்
பின்னணி பாடினார். ஏவி.மெய்யப்பச்செட்டியாரின் பிரகதி பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருந்தது.

ஸ்ரீராமானுஜர் (1938)
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான
சங்கு சுப்பிரமணியம் நடித்த படம்
ஸ்ரீராமானுஜர்.
இப்படத்தில் அவர் ராமானுஜராக நடித்திருந்தார். உடன் படத்தில் எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி,
கலைமகள் ந. ராமரத்னம், சீனிவாச வரதன், ஜி.ஏ.ஞானாம்பாள், கமலாம்பாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடல்களை எழுதியவர்: பாரதிதாசன். வசனத்தை எழுதியவர் வ.ரா. இயக்கம்: ஏ.நாராயணன்.
ராஜி
என் கண்மணி
படத்திற்கு வசனம் எழுதியவரும் சங்கு சுப்பிரமணியம்தான்.

ஜலஜா (1938)

நாட்டியத்தை அடிப்படையாக
வைத்து உருவான முதல் தமிழ்ப்படம்
ஜலஜா அல்லது நாட்டிய
மகிமை
. 1938ல் இப்படம் உருவானது. படத்தின் கதாநாயகியாக
நடித்தவர் கும்பகோணம் ஸ்ரீ பானுமதி என்பவர். ஜி.கே.சேஷகிரி இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
கதை வசனத்தை எழுத்தாளர் மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன், டாக்டர் வி.ராகவன் மற்றும் ஜி.கே.சேஷகிரியுடன்
இணைந்து எழுதியிருந்தார். படத்தை ஜி.கே.சேஷகிரி மற்றும் ஆர்.ஆர்.கௌதம் இணைந்து இயக்கியிருந்தனர்.
இப்படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார், மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன். பாடல்கள்,
இசை: ஏ.என்.கல்யாணசுந்தரம். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ்.அனந்தராமன் இசைக்குழுவின்
தலைவராகப் பணி புரிந்த படம் இது.

இன்பசாகரன் (1939)
இயக்குநர் கே. சுப்ரமணியத்தின்
தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம். கோவை அய்யாமுத்து அவர்கள் எழுதிய நாடகத்தைப்
பார்த்து வியந்த இயக்குநர் அதன் உரிமையை வாங்கிப் படமாக எடுத்தார். கதாநாயகியாக எம்.ஆர்.சந்தானலஷ்மி
நடித்திருந்தார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் தன் குழுவினருடன் இந்தப் படத்தில்
நடித்திருந்தார். நம்பியாரும் முக்கிய வேடமேற்றிருந்தார். தயாரிப்பு முடிந்து, படத்தை
வெளியிடும் முன்னர் ஸ்டூடியோ தீ விபத்தில் சிக்கியது. அனைத்துப் படச் சுருள்களும் எரிந்து
அழிந்தன. இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு சில பாடல்கள் மட்டுமே நமக்குக் காலத்தின்
சாட்சியாக இருக்கின்றன. எரிந்துபோன ஸ்டூடியோவை ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்
வாங்கி, அங்கே ஜெமினி ஸ்டூடியோவை நிர்மானித்தார்

வாமனாவதாரம் (1940)
டி.ஆர்.மஹாலிங்கம் மாஸ்டர்
டி.ஆர்.மஹாலிங்கம்
ஆக நடித்த இரண்டாவது படம். கதையை சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
எழுதியிருந்தார். பாடல்களை எழுதியவர் சி.எஸ்.ராஜப்பா என்ற இயற்பெயர் கொண்ட கம்பதாசன்.
கம்பன்மீது கொண்ட பற்றால் கம்பதாசன் ஆன கவிஞர். இவர் ஏற்கெனவே
திரௌபதி
வஸ்திராபகரணம்
, சீனிவாச கல்யாணம்
போன்ற படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். நடிப்போடு பாடல் எழுதுவது, இசையமைப்பது,
கதை, வசனம் எழுதுவது என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவர் பாடல் எழுதிய முதல் படம்
இதுதான். இசை: என்.பி.எஸ்.மணி. இயக்கம்: பிரேம் சேத்தனா.

தொடர்ந்து மகாமாயா,
ஞானசௌந்தரி,
மங்கையர்க்கரசி,
சாலிவாகனன்,
லைலா மஜ்னு,
வனசுந்தரி,
சியாமளா,
அமரதீபம் எனப் பல படங்களில் கம்பதாசனின்
பாடல்கள் இடம்பெற்றன. பி.யு.சின்னப்பாவுக்கு இவர் எழுதிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மஹாபலிச் சக்கரவர்த்தி
மற்றும் வாமனரின் கதைதான் இது. ஆனால், வேறு ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வாமனன் ஆக நடித்தது டி.ஆர்.மஹாலிங்கம். என்.பி.எஸ்.மணி, வி.வி.எஸ்.மணி, டி.கே.உபேந்திரநாத்,
ஆர்.பாலசுப்பிரமணியம் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.
*
அந்தக் காலத் திரைப்படங்கள் பற்றி மேலும் சில
சுவாரஸ்யமான செய்திகள்:
* கர்நாடக சங்கீத வித்வான்
மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஒரே படம் பக்த நந்தனார் (1935).

* பெண்களே இல்லாமல் தயாரிக்கப்பட்ட
முதல் படம்
பக்த ராமதாஸ்
(1935).

* என்.எஸ்.கிருஷ்ணன்
அறிமுகமான படம் மேனகா (1935).

* தமிழ்த் திரையுலகில்
அதிகம் பாடல்கள் இடம் பெற்ற படம் – இந்திர சபா. 79 பாடல்கள். (1936)

* தமிழின் முதல் ஆக்‌ஷன்
படம் 1936ல் வெளியான மெட்ராஸ் மெயில். சண்டைக் கலைஞரான பாட்லிங் மணி (Battling
Mani) இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

* குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து உருவாக்கப்பட்ட முதல் குழந்தைகள் படம் – பால யோகினி. (1937)

* பாரதிதாசன் முதன்முதலில்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளியான படம் பாலாமணி அல்லது பக்காத் திருடன்.
(1937)

* சுதேசி இயக்க ஆதரவு,
தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய முதல் படம் சேவாசதனம். (1938)

* பிரபல சங்கீத வித்வான்
எஸ்.வி.சுப்பையா பாகவதர் கதாநாயகனாக நடித்த படம் கம்பர். வேல்பிக்சர்ஸ் தயாரித்திருந்த
இப்படம் 1938ல் வெளியானது. சி.எஸ்.யு. சங்கர் இயக்கியிருந்தார். எல்.நாராயண ராவ், மங்களம்
உள்ளிட்டோர் உடன் நடித்திருந்தனர்.

* முதன்முதலில் காடுகளில்
எடுக்கப்பட்ட படம் வனராஜா கார்ஸன். (1938)

* டி.ஏ.மதுரம் கதாநாயகியாய்
நடித்த முதல் படம் பாண்டுரங்கன் அல்லது ஜே ஜே விட்டல். (1939)

* தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய
முதல் படம் பக்த சேதா. (1940)

* மதுவிலக்கை வலியுறுத்தி
உருவான முதல் படம் விமோசனம். (1940)

* பிரபல நாதஸ்வர வித்வான்
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் காளமேகம். (1940)

* ஆண் வேடத்தில் நடித்த
பெண் கதாநாயகிகள்: டி.பி.ராஜலக்ஷ்மி, பி.எஸ்.ரத்தினாபாய், பி.எஸ்.சிவபாக்கியம், கே.பி.சுந்தராம்பாள்.

* பிரபல நாதஸ்வர வித்வான்
திருவெண்காடு சுப்பிரமணியம் கதாநாயகனாக நடித்த படம் காத்தவராய சாமி.
*

Posted on Leave a comment

அமைதி வழியில் அரசியல் புரிந்த மாமேதை பி.எஸ்.சிவசாமி அய்யர் (1864-1946) | பா.சந்திரசேகரன்

முத்திரை பதித்த பல அரசியல்
தலைவர்களை இந்திய சுதந்திரப் போராட்டம் உருவாக்கியது. அவர்களுக்கு உந்துகோலாக இருந்தது
முழு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தேசப்பற்றுதான். இந்தியர் என்கிற ஒற்றுமைதான்.
அன்றி, எந்த ஒரு இனமோ, மதமோ, சாதியோ அல்ல. சுதந்திரப் போராட்ட அரசியல் தலைவர்கள் சிலர்
ஆங்கிலேய அரசை எதிர்த்து நேரடியாகக் கிளர்ச்சி செய்து பல்வேறு மாற்று முயற்சிகளைச்
செய்து வந்தார்கள். அதே சமயம் சில அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசின் ஆதிக்க ஆட்சிமுறையை மாற்ற அரசின் பணிகளை ஏற்று உள்ளிருந்து
பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த இரண்டாவது ரக அரசியல்
தலைவர்கள் அப்பொழுது மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அரசுக்கு எதிராகக்
குரல் கொடுப்பவர்கள், ஆனால் நேரடியாகப் போராட்டத்தின் மூலம் செயல்பட விரும்பாதவர்கள்.
இவர்கள் கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசியல் சாசன முறையில் சுதந்திரம் பெறவேண்டும்
என்று எண்ணினார்கள். இவர்கள் ஆங்கிலேய அரசின் கொடுங்கோல் ஆட்சியை எழுத்துப்பூர்வமாக
எதிர்க்க வேண்டும்; எவ்விதத்திலும் வன்முறையோ உயிர்ச் சேதமோ ஏற்படாமல் போராட வேண்டும்
என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேய அரசுக்கு எதிராக நேரடியாகக் கிளர்ச்சி மற்றும்
போராட்டத்தின் மூலம் முத்திரை பதித்த அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறையாத வகையில்
பல மிதவாத அரசியல் தலைவர்கள் அரசியல் சாசனம் மூலமாக ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்துள்ளதை
வரலாற்று ஆய்வில் நாம் காணமுடிகிறது. அப்படிப்பட்ட சில தலைவர்கள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில்
கொடிகட்டிப் பறந்துள்ளார்கள்.

அந்த வகையில் பழமானேரி
சுந்தரம் சிவசாமி அய்யர் முற்போக்கான கொள்கைகளை ஆதரித்த ஒரு முக்கியத் தலைவர். பெரும்பாலும்
அவர் பி.எஸ்.சிவசாமி அய்யர் என்று அழைக்கப்பட்டார். மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர்
காலத்துக்கு முன்னர் மிதவாத காங்கிரஸ் வாதியாகவும், நல்ல தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர்
சிவசாமி அய்யர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு சிவசாமி அய்யர் ஆற்றிய பங்களிப்பு
ஆக்கபூர்வமானது. அவர் பொதுவாழ்வில் ஆற்றிய மகத்தான பணிகள் எண்ணற்றவை. அன்றைய இந்தியாவின்
புகழ்பெற்ற சட்ட அறிஞராக அவர் விளங்கினார். கல்வித் துறையிலும் இந்தியப் பாதுகாப்புத்
துறையிலும் பல்வேறு தளத்தில் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். ஒரு ஸ்டேட்ஸ்மென் என்று
அனைவராலும் பாராட்டப்பட்டவர் அவர்.

சிவசாமி அய்யர் மகாத்மா
காந்தி பிறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்றைய தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமானேரி கிராமத்தில் பிப்ரவரி 7ம் தேதி 1864ல் மூத்த
மகனாகப் பிறந்தார். அவருக்கு மூன்று இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். சிவசாமி
அய்யர் தனது ஆரம்பக் கல்வியை எஸ்.பி.ஜி கோட்டை பள்ளியிலும் உயர்நிலை பள்ளிக் கல்வியை
மானம்புசாவடி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று 1877ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், மெட்ராஸ்
மாநிலக் கல்லூரியிலும் இளங்கலைக் கல்வியை 1882ல் முடித்தார்.

பிறகு அவர் மெட்ராஸ்
மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்ட அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று
1885ல் வழக்குரைஞராக 21 வயதிலே தனது வக்கீல் பணியைத் துவங்கினார். முதலில் அவர் வழக்கறிஞர்
ஆர்.பாலாஜி ராவ் என்பவரிடம் தொழில் பழகுநராகச் சேர்ந்து பயிற்சி பெற்றார். 1893ல் தனது
தந்தை இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதே வருடம் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில்
உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து 1899ம் ஆண்டு வரை பணியாற்றினார். பிரிட்டிஷ்
இந்தியாவின்
வெள்ளி நாக்கு (சில்வர் டங்) என்று போற்றப்படும் வி.எஸ்.ஸ்ரீனிவாச
சாஸ்திரி, சிவசாமி அய்யரிடம் சட்டம் பயின்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குரைஞராக சிவசாமி
அய்யர் மெட்ராஸ் மாகாண உயர் நீதிமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் 1883 முதல்
1907 வரை மெட்ராஸ் சட்டச் செய்தி இதழின் (Madras Legal Journal) இணை ஆசிரியராக இருந்தார்.
அவர் 43து வயதில் 1907 முதல் 1912 வரை மெட்ராஸ் மாகாண தலைமை வழக்கறிஞர் அதாவது அட்வகேட்
ஜெனரலாகப் பணியாற்றினார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற
வழக்கறிஞர்களுக்கான சங்கத்தை சிவசாமி அய்யர் 1889ம் ஆண்டு உருவாக்கினார். பல முக்கிய
புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்றோர் சட்ட நுணுக்கங்களில்
சிவசாமி அய்யரிடம் ஆலோசனை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்துறையில் சிறந்து
விளங்கிய அவர் 1904 முதல் 1907 வரை மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.சி)
தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு கவர்னர் நிர்வாக கவுன்சில் உறுப்பினராக 1912 முதல்
1917 வரை பதவி வகித்தார். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இந்தியத் தொண்டர் இயக்கத்தை
உருவாக்கி ஆதரவளித்தார் சிவசாமி அய்யர். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் கொள்கையான,
படிப்படியாக அரசியல் சாசனச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் திட்டத்தை ஆதரித்த இந்திய
மிதவாதிகள் கட்சியின் தலைவராக 1919ல் மற்றும் 1926ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.நா
சபைக்கு முன்பு இருந்த
லீக் ஆஃப் நேஷன்ஸ்
1922ம் ஆண்டு நடத்திய மூன்றாவது கூட்டத்தொடரில் இந்தியாவின் சார்பாக சிவசாமி அய்யர்
கலந்துகொண்டு, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின்
செனட் உறுப்பினராக 1898ல் சிவசாமி அய்யர் முதல் இந்தியராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு
பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும் (Fellow) இருந்தார். அவர் 1916 முதல் 1918 வரை மெட்ராஸ்
பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பிறகு 1918 முதல் 1919 வரை வாரணாசியில் உள்ள பனாரஸ்
இந்துப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். வி.கிருஷ்ணசாமி அய்யர்
சென்னையில் சமஸ்கிருதக் கல்லூரியைத் துவங்கினார். அந்தக் கல்லூரியின் தலைவராக முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் சிவசாமி அய்யர். பள்ளியிலும் மற்றும் கல்லூரியிலும்
மாணவர்களுக்குத் தாய் மொழியில்தான் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் ஆழமாகத்
தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சாற்றல் மூலம் எடுத்துரைத்தார் சிவசாமி அய்யர். சட்டம்,
சமூகம், அரசியல், பொருளாதாரம், இராணுவம், பன்னாட்டுச் சட்டம் போன்றவை பற்றிப் பல ஆய்வுக்
கட்டுரைகளை எழுதியுள்ளார் அவர்.

அவருடைய சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில்
இருந்த சிறிய பள்ளி ஒன்று கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போது, 1906ம் ஆண்டு அந்தப்
பள்ளியை முழுவதுமாகத் தன் சொந்த நிதியின் மூலம் உயர்த்தினார். அந்தப் பள்ளி இன்றும்
சர்.பி.எஸ்.சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அவர்
இருக்கும் வரை அவருடைய பெயரை அந்தப் பள்ளிக்கு வைக்க அவர் அனுமதிக்கவில்லை. அன்றைக்கு
இந்தப் பள்ளிதான் சுத்தியிருக்கும்
பதினெட்டு
பட்டிக்கும் ஒரே பள்ளியாகத் திகழ்ந்தது.

பெண்கள் படிக்க வேண்டும்
என்பதைத் தீவிரமாக வலியுறுத்தியவர் சிவசாமி அய்யர். இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள
லேடி சிவசாமி அய்யர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அப்பொழுது தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளி
என்று 1930ல் இயங்கிவந்தது. இந்தப் பள்ளியின் வளர்ச்சி குன்றியபோது, சிவசாமி அய்யர்
தலைமையேற்றுப் பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்து, அந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக
உயர்த்தினார். அவர் உயிரோடு இருக்கும் வரை அவரது மனைவியின் பெயரை அந்தப் பள்ளிக்கு
வைக்க மறுத்துவிட்டார்.

இந்த இரண்டு பள்ளிகளிலும்
அவர் நூலகத்துக்கு என்று தனிக் கவனம் செலுத்தினார். மிகச்சிறந்த பழமையான மற்றும் புதிய
நூல்களையெல்லாம் திரட்டி மாணவ மாணவிகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதில் ஆர்வமுடன்
செயல்பட்டார். இந்த இரண்டு பள்ளிகளும் இன்று வரை சிறப்பான கல்விக் கூடங்களாக விளங்குகின்றன.
1939ம் ஆண்டு அவரது மனைவி இறந்த பிறகு, தான் வசித்த மைலாப்பூர் வீட்டை விற்று, அந்தப்
பணத்தைப் பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார் சிவசாமி
அய்யர். சென்னை விவேகானந்தா கல்லூரிக்கும் மற்றும் சம்ஸ்கிருத கல்லூரிக்கும் அவர் அளித்த
நன்கொடைகள் பற்றி அவர் இறந்த பிறகுதான் பலருக்கும் தெரியவந்தது.

சிவசாமி அய்யர் 1931ல்
இந்திய ராணுவ கல்லூரிகளுக்கான குழுவில் உறுப்பினராக இருந்தார். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ்
கவுன்சில் உறுப்பினராக 6 ஆண்டுகள் (1921-1923 மற்றும் 1924-1926) இருந்தபோது 1921ல்
சிவசாமி அய்யர் பதினைந்து அம்சங்களைக் கொண்ட அத்தீர்மானத்தில், இந்தியக் கடல் வணிகத்தை
மேம்படுத்தி, கப்பல் பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் பணியிடங்களில் 25 சதவீதம் இந்தியருக்கு
வாய்ப்பளிக்க வேண்டும் குரல் எழுப்பினார். இன்றைய இந்தியக் கடல்சார் படிப்புகளுக்கு
அவர் அன்று கொண்டு வந்த தீர்மானமே மூல வித்தாக அமைந்தது. மேலும் 1912ல் கோகலே அவர்கள்
உறுப்பினராக இருந்த அன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இந்தியர்களுக்கு அனைத்துத்
துறைகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்திய ராணுவத்தைப் பற்றி
மிகுந்த அக்கறையோடு பல கேள்விகளை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் பதிய வைத்தவர்
சிவசாமி அய்யர். மேலும் இந்தியாவில் புதிய கல்வி நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும்
என வலியுறுத்தினார்.
தமிழ் – ஆங்கிலப் பேரகராதி
(Tamil Lexicon) தொகுக்கும் பணியை முன்னெடுத்த குழுவின் தலைவராக விளங்கியவர் சிவசாமி
அய்யர். அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள்: உ.வே. சாமிநாத அய்யர், எஸ்.அனவரதவிநாயகம்
பிள்ளை, எஸ்.குப்புசாமி அய்யர், ரி.ராமகிருஷ்ண பிள்ளை மற்றும் மார்க் ஹன்டர்.

சிவசாமி அய்யர் காந்திமேல்
மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் அவர் அறிவித்த போராட்டங்களில் நடந்த
வன்முறையைக் கண்டு கடுமையாக விமர்சித்தார். மேலும், நேரு சோவியத் நாடுகள் பின்பற்றிய
கொள்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதையும் எதிர்த்தார்.

சிவசாமி அய்யர் அரசியலில்
மிதவாதியாக இருந்ததோடு, மக்கள் சமூக நலனிலும் அக்கறை கொண்டிருந்தார். தனிநபர் சுதந்திரத்தில்
சாதி வேற்றுமை கூடாதென்று கடுமையாக 1933ல் வாதாடியிருக்கிறார். ஆட்சி முறையைக் கட்டாயமாகப்
பரவலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசியல் சாசனத்தில் அடித்தட்டு மக்களுக்குத்
தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றால் எந்த ஆட்சியானாலும் அது அநீதியும் கொடுங்கோன்மையும்
கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கும் என்று அழுத்தமாக 1913ல் கூறினார் சிவசாமி அய்யர்.

சிவசாமி அய்யர் சிறந்த
நூல்களையும் எழுதியுள்ளார்.
எவல்யூஷன் ஆஃப் இந்து
மாரல் ஐடியல்ஸ்
(1935) என்ற தலைப்பில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்
நிகழ்த்திய கமலா நினைவுச் சொற்பொழிவு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்
இந்திய
அரசியல் சாசன பிரச்சினைகள்
(1928) என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய வி.கிருஷ்ணசாமி
நினைவுச் சொற்பொழிவுகள் போன்றவை பிரபலமானவை.
நாடு சுதந்திரம் அடைய
பத்து மாதங்களுக்கு முன்பு அவர் தனது 82ம் வயதில் 1946 நவம்பர் 5ம் தேதி காலமானார்.
அவருடைய தள்ளாத வயதிலும், இந்தியா மத அடிப்படையில் பிளவுபட இருப்பதை அறிந்து வேதனையுற்று
இந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்துக் கடைசி மூச்சுவரை குரல் கொடுத்தார் சிவசாமி அய்யர்.