வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள் | சுஜாதா தேசிகன்ஏழு வருடங்கள் முன் கார் ஓட்டிக்கொண்டு பெங்களூரிலிருந்து வயநாடு வழியாகக் கேரளாவுக்குச் சென்றேன். போகும் வழியில் பந்திப்பூர் காட்டைக் கடந்து வரும் வழியில் சாலை குறுக்கே ஒரு பெரிய யானை கடக்க கொஞ்சம் நேரம் காத்திருந்தேன். சத்தியமங்கலம் வந்தபோது செக் போஸ்ட்டில் காரை நிறுத்தினார்கள். எங்கே போகிறேன் போன்ற விசாரிப்புகளுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தேன். என் பக்கத்திலிருந்தவர் சார் இங்கேதான் ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிக்கொண்டு இருந்தான் என்றார். அந்த அடர்ந்த காட்டை மீண்டும் பார்த்தபோது அதன் நிசப்தம் ஒரு வித பீதியைக் கிளப்பியது.

யானை கடந்து போன பந்திப்பூரில்தான் 1994ம் வருடம் க்ருபாகர் சேனனி (Krupakar Senani) என்று இரண்டு பிரபல வனவிலங்குப் புகைப்படக்காரர்களை பெரிய அதிகாரிகள் என்று நினைத்து வீரப்பன் கடத்தினான். பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவித்தான். (இருவரும் Birds, Beasts and Bandits – வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.) பந்திப்பூர் யானையும், நாங்களும் அன்று பயம் இல்லாமல் காட்டைக் கடந்து சென்றதற்கு வீரப்பன் கொல்லப்பட்டதே காரணம்.

சமீபத்தில் முன்னாள் சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் (STF) கே. விஜயகுமார் எழுதிய சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டை படித்தேன். (Veerappan – Chasing the brigand என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.) அதைத் தொடர்ந்து, இதன் ஆங்கில மூலத்தில் சில முக்கியமான பகுதிகளையும், கர்நாடகத்தின் முன்னாள் காவல்துறை இயக்குநர் எழுதிய வீரப்பனின் நட்சத்திரக் கடத்தல் – ராஜ்குமார் புத்தகத்தையும் மீண்டும் படித்தேன். சில புள்ளிகளை இணைக்க முடிந்தது.

தமிழ்நாட்டில் வீரப்பன் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. அவன் நல்லவன், அவனை இப்படி மாற்றியது கல்குவாரி அதிபர்கள், அரசியல்வாதிகள், அவரை எங்கள் எல்லைச்சாமியாகவே பார்க்கிறோம், வீரப்பன் இருந்திருந்தால் காவரி பிரச்சினை இருக்காது, வீரப்பர் என்று கூப்பிட வேண்டும் கோயில் கட்ட வேண்டும் என்று இன்றும் அரசியல் பேசும் பிரிவினைவாதிகள் ஒரு புறம். அவன் கொள்ளைக்காரன், பல உயிர்களைக் காவு வாங்கிய ஈவு இரக்கமற்ற கொலைகாரன், தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டவன் என்ற கருத்தும் உடையவர்கள் இன்னொரு புறம். 

இந்த இரண்டு கருத்துக்களைத் தாங்கித்தான் வீரப்பன் பற்றிய திரைப்படம், புத்தகம் எல்லாம் வந்திருக்கின்றன.

விஜயகுமார் எழுதிய புத்தகம் மிக முக்கியமான ஆவணம். வீரப்பனைச் சுட்டு வீழ்த்தியவர் என்ற ஒரு காரணம் இருந்தாலும், காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பில் பணிபுரிபவர் தேச நலனைக் கருத்தில் கொண்டு உண்மையை எழுதியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. புத்தகம் முழுவதும் விறுவிறுப்பான வீரப்பனின் வேட்டை. புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது.

ஒளிந்து கொள்பவர்களுக்கும் தேடுபவர்களுக்கும் இடையில் நடக்கும் போட்டியில் பத்துக்கு ஒன்பது முறை ஒளிந்து கொள்பவர்கள்தான் வெற்றி பெறுகிறாரகள் – ரிச்சர்ட் கிளார்க்.

இதற்கு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். சி.தினகர் எழுதிய வீரப்பன் நட்சத்திரக் கடத்தல் இன்னொரு முக்கிய ஆவணம். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது என்ன மாதிரியான அரசியல் நடந்தது என்று இதில் தெரிந்துகொள்ளலாம். இந்த இரண்டு புத்தகங்களையும், சேர்ந்து நோக்கும்போது வேறு பரிமாணம் கிடைக்கிறது.
வீரப்பனைத் தமிழகத்தின் ராபின் ஹுட் என்றும், வீரப்பனைப் பிடித்துவிட்டார்களா? என்றும் பலர் கேலி பேசியுள்ளார்கள். துக்ளக் சோ முதல் சுஜாதா வரை கேலி பேசாதவர்கள் யாரும் இல்லை.

சுஜாதா சொன்ன பதில் ஒன்று:
இண்டர்நெட்டில் வீரப்பனைப் பற்றி வெப்தளமும் இடம் பெற்று விட்டதே?
அப்படியா இனியாவது அவரைப் பிடித்து விடலாம்!

30 ஆண்டுகளுக்கு மேலாகக் காவல்துறைக்குத் தண்ணி காட்டி, பல ஆண்டுகளாகக் காட்டில் சந்தனமரக் கடத்தல் செய்து, பல யானைகளைக் கொன்று, பல அதிகாரிகளைக் கொன்று தொழில் செய்த வீரப்பனை ஒரே ஒரு முறைதான் காவல்துறை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. அதன் பிறகு அவன் காவல்துறையில் பிடிபடவேயில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் 24 மணி நேரத்தில் இரண்டு முறை தப்பித்திருக்கிறான்.

வீரப்பன் எவ்வளவு பயங்கரமானவன் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதும். 1990 வருடம் ஸ்ரீநிவாஸ் என்ற வனத்துறை அதிகாரி தானாக முன்வந்து கர்நாடகா அமைத்த சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார். ஒரு முறை ஸ்ரீநிவாஸிடமிருந்து வீரப்பன் தப்பியிருந்தான். அதனால் அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று அவர் அதிரடிப்படையில் சேர்ந்தார். வீரப்பனின் தங்கை தற்கொலை செய்துகொள்ள ஸ்ரீநிவாஸ்தான் காரணம் என்று வீரப்பன் நம்பினான். அதனால் ஸ்ரீநிவாஸைப் போட்டுத்தள்ளத் திட்டம் வகுத்தான்.

தான் சரணடையத் தயார் என்று அறிவித்த வீரப்பனைச் சந்திக்க உற்சாகமாக ஸ்ரீநிவாஸ் கிளம்பினார். ஆனால் புதர்களுக்குள் பதுங்கி இருந்த வீரப்பனும் அவன் கூட்டாளிகளும்…

ஸ்ரீநிவாஸ் சுற்றுமுற்றும் பார்த்தார். யதார்த்தம் உறைத்தது. … வாழ்வின் கடைசி நிமிடங்கள். நின்றுகொண்டிருந்த ஸ்ரீநிவாஸைப் பார்த்து வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் சிரிக்கத் தொடங்கினர். … வீரப்பன் துப்பாக்கியால் சுட்டான். அவர் சரிந்து விழுந்து இறந்தார். ஆனால் அப்போதும் வீரப்பன் திருப்தி அடையவில்லை. ஸ்ரீநிவாஸின் தலையை வெட்டினான். கொடூரமான அந்த வெற்றிக் கோப்பையைத் தனது முகாமிற்குக் கொண்டு சென்றான். அங்கு அவனும் அவன் கூட்டாளிகளும் அதை ஒரு கால்பந்தைப் போல உதைத்து விளையாடினர்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் வரையில் ஸ்ரீநிவாஸின் தலை மீட்கப்படவில்லை!
அந்த முப்பது ஆண்டுகளில் அவன் 124 பேரைக் கொன்று குவித்துள்ளான். சிலர் 184 என்கிறார்கள். ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற ஒன்று உருவாகக் காரணம் அந்தப் புனித வெள்ளி படுகொலைதான்.

ஒரு புனித வெள்ளி அன்று வீரப்பன் வைத்த கண்ணிவெடிகளில் ஒரே சமயத்தில் 22 காவலர்கள் உயிர் இழந்தார்கள். அந்தப் படுகொலை தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரே நாளில் பங்குச் சந்தையில் விலை ஏறுவது போல வீரப்பனின் தலைக்கு ஐந்து லட்சம் என்பதிலிருந்து 20 லட்சம் ஏறியது. அதைவிட அவனிடம் பயமும் அதிகமாகியது.

அந்தப் புனித வெள்ளி தாக்குதலில் ராம்போ என்ற காவலர் பலத்த காயமடைந்தார். அவரைப் பற்றி புத்தகத்தில் வரும் பகுதி இது:

அந்தக் குண்டு வெடிப்பில் ராய்போ பலத்த காயமடைந்திருந்தார்.
ஆனால் அவரைப் போன்ற அசாதாரணமானவர்களை மரணம் நெருங்குவது கடினம். அல்லது அவரது மலைபோன்ற உடல்வாகு பாதிப்பைக் குறைத்திருக்கலாம். அவசரமாக அவர் சேலம் கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்தது, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழுவை பிரமிக்க வைத்தது.

பல மணி நேரங்களுக்குப் பிறகு அவர் சுயநினைவு வந்து எழுந்தபோது மறுபடியும் ஒரு அதிர்ச்சியில் இருந்தார். அவருக்கு அருகே அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

நீங்க நல்லாயிட்டீங்கன்னு டாக்டர்கள் எங்கிட்ட சொன்னாங்க. சீக்கிரம் சரியாயிடுவீங்க என்று சொன்னார்..

ஜெயலலிதாவின் முகம் கடுமையாக இருந்தது. இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று உத்திரவிட்டார்.

இதற்குப் பிறகு ராம்போ ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவ விடுப்பிலிருந்தார். அவருக்கு 12 அறுவைச் சிகிச்சையாவது நடந்திருக்கும். அவர் வாழ்க்கை தொடர்ச்சியான வலியிலேயே கழிந்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெயலலிதா காட்டிய வேகம் அசாதாரணமானது. வால்டர் தேவாரம் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை அறிவிக்கப்பட்டு, அதில் சேர பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள்.
இன்னொரு சம்பவம். காட்டில் யானை ஒன்று விஜயகுமாரைத் துரத்த மலைச் சரிவில் விழுந்து அடிபட்டு மூன்று வாரங்கள் ஓய்விலிருந்து வந்தபிறகு அவருக்குப் பணி மாறுதல். அப்போது அவர் ஜெயலலிதாவிடம்

மேடம்… எனது டாஸ்க் இன்னும் முடியவில்லையே? என்று முதல்வரிடம் கேட்டேன்

வீரப்பனைப் பிடிக்க நாள் குறித்து விட்டீர்களா? என்றார்.
அந்தக் கேள்வி என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

இல்லை என்றே தர்மசங்கடத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. 20 வருடங்களாக அந்தக் கொள்ளைக்காரன் தப்பித்துக் கொண்டிருக்கிறான். என்னால் அவனைப் பிடிப்பதற்கான தேதியைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

புத்தகத்தின் இன்னொரு பகுதியில், வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது சக காவலர் பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார். இங்கே எப்படி ஸ்பிரைட் கிடைத்தது? இது பாசி பிடித்த தண்ணீர் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரண்டு வாய் குடிப்பதற்குள் குமட்டிக்கொண்டு வர… என்று வருகிறது.

பிறகு ஒரு சமயம், வீரப்பனின் தாக்குதலில் கோபால் என்ற காவலர் அடிப்பட்டு ஜீப்பில் இருக்கிறார். அவருடைய ஓட்டுநர் ரவி என்பவர் காயம் பட்டு வலது மணிக்கட்டு துண்டிக்கப்படும் நிலையில் இருக்கிறார். அத்தனை வேதனையையும் தாங்கிக்கொண்டு, ரவி தனது முரட்டுத்தனமான தைரியத்தையும் சமயோஜித புத்தியையும் செயல்படுத்தி, குறுகிய நேரத்தில் ஒரே கையில் வண்டியை ஓட்டிக்கொண்டு தப்பித்திருக்கிறார்கள்.

வீரப்பன் சிறுவனாக இருந்தபோது அவன் ஒரு யானையைக் கொன்றிருக்கிறான். யானையின் நெற்றியில் சுட்டு உடனடியாக அதை உயிரிழக்கச் செய்வது அவனுக்குப் பிடித்தமான வழிமுறை. ஏராளமான யானைகளை அவன் கொன்று குவித்திருக்கிறான். ஒரு யானையின் சடலம் பறவைகள், எறும்புகள் போன்ற லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு உணவாகிறது என்றும் யானையைக் கொல்வது ஒரு தொண்டுதான் என்றும் அவன் வாதிடுவானாம்.

நாயகன் படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்ற வசனத்திற்கு நாம் கைதட்டி ரசித்த அபத்தத்திற்கும் வீரப்பனின் இந்த விதண்டாவாதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஒரு சம்பவத்தை ஒரு சிறுகதையாகவே எழுதிவிடலாம்.
விஜயகுமார் அவருடைய வேலையைப் பற்றி முடிந்தவரையில் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஒருமுறை சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது…

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு எனது குடும்பத்தினரை அழைத்துச் சென்றேன். நான் காரை ஓட்டினேன். எனது டிரைவர் என் அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். மீனாவும் (மனைவி) குழந்தைகளும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

வழியில் ஒரு உள்ளூர் ரவுடி ஒருவன் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது என்னை ஆத்திரமூட்டியது. காரைவிட்டு வெளியே வந்தேன். அவன் என்னைக் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆள் வாட்டசாட்டமாகப் பெரிதாக இருந்தான். நடுரோட்டில் ஒரு ரவுடியுடன் மோதுவது சரியான முடிவா இல்லையா என்பதையெல்லாம் சிந்திக்கும் நிலையில் நான் இல்லை. பொதுமக்களை அடித்துக்கொண்டு இருந்தவனை நோக்கி நான் வருவதைக் கண்ட அவன் என்னைத் தாக்க கையை ஓங்கினான். அவனது கையைப் பிடித்து தடுத்து ஓங்கி ஒரு அறைவிட்டேன். அடுத்து, எனது துப்பாக்கியைப் பார்த்ததும் சிறிது மிரண்டான். சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை எடுத்தேன். அவனது காலைப் பிடித்து இழுத்து காரின் முன்சீட்டில் அவனைத் தள்ளினேன். போலிஸ் ஸ்டேஷன் வரும் வரையில் அவனை அந்த மரக் கிளையை வைத்து அடித்துக் கொண்டே வந்தேன். எனது குழந்தைகள் இருவரும் சினிமாவில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்த காட்சிகளை நிஜத்தில் பார்த்து மிரட்சி அடைந்தனர். அவர்கள் பொருமினர். விம்மினர். அவர்கள் கண்ணில் கண்ணீர் உடைத்துக் கொண்டு வெளியேறியது.

குழந்தைகள் முன் இப்படி நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விஜயகுமாரின் மனைவி கடுமையாகக் கோபித்துக் கொண்டுள்ளார். ஒரு போலிஸ் அதிகாரி ரவுடியை இந்த மாதிரி போலிஸில் ஒப்படைப்பதை சினிமாவில் பார்த்துக் கைதட்டும் நாம் அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் என்ன மாதிரி சவால்களைச் சந்திக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

வீரப்பன் என்றால் சந்தனக் கடத்தலுக்குப் பிறகு நினைவுக்கு வருவது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல். ஜூலை 30, 2000 அன்று இரவு வீரப்பன் ராஜ்குமார் தங்கியிருந்த பண்ணை வீட்டில் வைத்து அவரைக் கடத்தினான். பக்கத்திலிருந்த ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம் ஒரு ஆடியோ கேசட் கொடுத்து அப்போதைய முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுக்கச் சொல்லிச் சென்றான். பர்வதம்மாள் உடனே பதற்றத்துடன் பெங்களூரு நோக்கிச் சென்றார். போகும் வழியில் குடும்ப ஜோதிடரைப் பார்த்து ஆலோசனை கேட்டுவிட்டுச் சென்றார். ஒரு சில நாட்களில் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றார் ஜோதிடர். ராஜ்குமார் வருவதற்கு 108 நாட்கள் ஆனது.

1994ல் புகைப்படக்காரர்களை கடத்தியபோது அதில் ஒருவர் தன் நண்பருக்குக் விளையாட்டாகக் கைரேகை பார்க்க, உடனே வீரப்பன் ஆர்வமாகத் தன் கையைக் காட்டிப் பார்க்கச் சொல்லி, தனக்கு ஆயுசு எவ்வளவு நாள் என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். எதுக்கு நமக்கு வம்பு என்று கைரேகை பார்த்தவர் எழுவது வயது வரை நீங்க இருப்பீங்க என்று சொல்லியுள்ளார்.

2001 அதிரடிப்படைக்கு வீரப்பனின் ஜாதகம் வந்தது. அதிரடிப்படையில் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் ஜாதகம் பார்க்கும் நிபுணர்களை வரவழைத்து அவர்களிடம் வீரப்பனின் பற்றியும் அவன் எதிர்காலம் பற்றியும் கேட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிரியாக இருப்பான். அவனுடைய பெரும்பாலான வாழ்க்கை வனவாசமாக இருக்கும். அவனுக்கு ராஜதண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். வீரப்பன் 14, 19, 32, 45, 52 ஆகிய வயதில் சோதனையை அனுபவிப்பான். 65 வயது வரையில் அவன் உயிரோடு இருந்துவிட்டால் அவன் 78 வயது வரை உயிரோடு இருப்பான் என்று கணித்தார்கள். வீரப்பன் 52 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின் முக்கியத் திருப்பம் ராஜ்குமாருடன் சென்ற அவருடைய உதவியாளர் நாகப்பா தப்பித்து வந்தது. விஜயகுமார் எழுதிய புத்தகத்தில்: ஒரு மாலை நேரம் நாகப்பா தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். நக்கீரன் கோபால் ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு இருக்க, வீரப்பன் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்த போது, நாகப்பா இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று அங்கே இருந்த அரிவாளை எடுத்து வீரப்பனை வெட்ட ஓங்கிய போது மேலே உள்ள கூரை தடுத்தது. அப்போது கோபால் அவரது தோள்களைப் பிடித்துத் தடுக்க, அதற்கு நாகப்பா இதற்கு மேல் அங்கே இருந்தால் ஆபத்து என்று தப்பித்து வந்துவிட்டார்.

வில்லனிடம் தப்பித்து வந்த ஹீரோவாக நாகப்பா புகழப்பட்டார். ஆனால் விரைவிலேயே சிலர் நாகப்பா தனது ஹீரோவை விட்டு ஓடி வந்த கோழை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ராஜ்குமார் குடும்பத்தினர் கூட அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற செய்திகள் இருக்கிறது. நாகப்பா செய்ததையே ராஜ்குமார் செய்திருந்தால் மீடியா இப்படி பேசியிருக்குமா என்று தெரியாது. கில்லிங் வீரப்பன் என்ற படத்தில் விஜயகுமார் டீமில் இருக்கும் ஒரு எஸ்.பி கதாபாத்திரத்தில் ராஜ்குமார் மகன் பிறகு நடித்து திரைப்படத்தின் வழியாக வீரப்பனைக் கொன்றார்!.
தினகர் எழுதிய புத்தகத்தில் நாகப்பா பற்றி மிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார்.

நாகப்பா ஓர் ஏழை. ஆனால் ராஜ்குமாரிடம் அபரிமிதமான விசுவாசம் உடையவர். ஓர் ஏழைக்குக்கூட தன்னுடைய மரியாதையைக் காப்பாத்திக் கொள்கின்ற உரிமை இருக்கிறது. நாகப்பா பற்றி தவறான அறிவிப்பை நான் வெளியிட்டேன்… அவருக்கு அநீதி செய்துவிட்டேன்… அவருக்கு என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.. தன்னுடைய உயிரினையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய எஜமானருக்காக அவர் ஒரு வீரச் செயலைச் செய்திருக்கிறார்.
நாகப்பா தயவு செய்து என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

கோபால் மட்டும் இல்லாவிட்டால், இந்த இருண்ட இரவில் நாகப்பா வீரப்பனின் வாழ்க்கையினையே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார். தொல்லைகளும் முடிவுக்கு வந்திருக்கும். வீரப்பன் இன்று உயிருடன் இருப்பதற்கு கோபால்தான் பொறுப்பு. என்ன முரண்பாடு. உண்மையுள்ள ஊழியன் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறான். காட்டுக் கொள்ளைக்காரன் வீரப்பனை மரணத்திலிருந்து காப்பாற்றி ஒருவர் குளிர்சாதன வசதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீரப்பன் பற்றிய கதைகளை எழுதி சம்பாதித்த செல்வத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நக்கீரன் கோபால் செய்த குற்றங்களுக்காக தமிழ்நாடு காலவல்துறையினர் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

ராஜ்குமார் விடுவிப்புக்குப் பிறகு பத்திரிகையாளார்களை சந்தித்து அவருடைய அனுபவங்களைச் சொன்ன போது வீரப்பனின் மீது எந்த கசப்புணர்வும் இன்றி, வீரப்பனை மனிதத்தன்மை உடையவனாகவே கருதலாம். என்னை விடுவிக்கும் முன் அங்கே ஒரே கூத்தும் கும்மாளமும்தான் என்று நினைவு கூர்ந்தார். வீரப்பன் இறந்த பின் ஒரு தீய சக்தி அழிக்கப்பட்டது என்றார்.

ராஜ்குமார் விடுவிப்புக்குப் பல கோடிகள் கைமாறியது என்பது பல புத்தகங்களில் இருக்கிறது. விஜயகுமார் தன் புத்தகத்தில் அதைக் குறிப்பிட்டுள்ளார் ஆனால் இரு மாநில அரசும் அதை மறுத்தது. ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகு வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது பல ரூபாய் நோட்டுகள் கிடந்ததையும், ராஜ்குமார் கடத்தலின் போது கொடுத்த பணமாக அவை இருக்கலாம் என்றும் யூகங்கள் அடிப்படையில் சொல்லி உள்ளார். சில வருடங்களுக்கு முன் ராஜ்குமார் மூத்த மகன் வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப்பட்டது ஒரு ஓப்பன் சீக்ரெட்.. யார் எவ்வளவு என்று தெரியாது ஆனால் நிறைய என்று கூறியுள்ளார். தினகர் தன் புத்தகத்தில் எவ்வளவு கோடி யார் என்று பட்டியலிட்டுள்ளார்.


மருமகன் மூலம் 5 கோடி இரண்டு முறை (10 கோடி), உளவுத்துறைத் தலைவர் மூலம் 5 கோடி, பர்வதம்மா சென்னைக்கு அனுப்பிய 1 கோடி கருணாதிநி வீட்டில் கொடுக்கப்பட்டது. பர்வதம்மா பானுவிடம் நேரடியாக 2 கோடி, திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் சென்னையில் கருணாநிதி வீட்டிற்குக் கொண்டு சென்ற 2 கோடி… மொத்தம் 20 கோடி!

வீரப்பனுடைய செல்வாக்கு தமிழ்த் தீவிரவாதிகளின் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு அடுத்த நிலைக்குச் சென்றது என்று கூறினால் மிகை ஆகாது. கோபால், நெடுமாறன் போன்றவர்கள் சென்று வீரப்பனை மீட்டுக் கொண்டு வந்ததை In retrospect, the entire drama looks like a pre-planned, well-executed exercise with the single-point agenda of promoting Nedumarans interest in politics and his popularity among the public என்று சோ கூறியுள்ளார்.

வீரப்பனைப் பிடிக்க, சிறையில் தமானி(விஜயகுமார் இப்படித்தான் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்) என்ற கேரள மதத்தலைவருடன் பேசி ஒரு திட்டத்தை வகுக்க, போலிஸ் அவரை ரகசியமாகச் சந்தித்தது. அந்த சமயத்தில் தினமலர் பத்திரிகை அடிக்கடி கோவை சிறைக்குக் காவல் அதிகாரி செல்கிறார் என்று செய்தி வெளியிட்டு போலிஸின் தூக்கத்தைக் கெடுத்தது. வீரப்பனின் கேசட் வெளியிடுகிறேன் என்று சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடத் தொடங்கின. பல தலைவர்கள் பற்றியும் வீர்ப்பன் அசிங்கமாகப் பேசியது (குறிப்பாக ஜெயலலிதா), தடா கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சு, காவிரி பிரச்சினை பற்றிப் பேசியது போன்றவை எல்லாம் இரு மாநில அரசாங்கங்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கியது.

வீரப்பன் என்கவுண்ட்டர் என்ற செய்தி வந்தபிறகு அந்த என்கவுண்ட்டர் போலி என்று மீடியாக்கள் ஊதிப் பெருக்கின. இத்தகைய வதந்திகள் அதிரடிப்படையின் நேர்மைக்கும் வலிமைக்கும் ஒரு அவமானம் என்கிறார் விஜயகுமார். அதிரடிப்படை அப்பாவி மலைவாழ் மக்களைக் கொடுமைப் படுத்தியது என்று ஒரு செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டு அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தியதில் மீடியாக்களுக்கு உள்நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. கோர்ட் கேஸ் என்று வந்த பிறகு, சின்னதாக வருத்தம் என்று வெளியிட்டு முடித்துக்கொள்கிறார்கள்.

துக்ளக் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி:

பத்திரிக்கையாளர்களுக்கும் சிறைத்தண்டனை அளிக்கும் பயங்கரவாதத் தடுப்பு மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதே?

ப: தீவீரவாதிகளைப் பற்றிய தகவல் அளித்த பத்திரிகையாளர்கள், அது பற்றிய விவரங்களை அரசுக்குத் தர மறுத்தால் தண்டனை – என்பது மசோதாவின் ஷரத்துக்களில் ஒன்று. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகையாளர்களும் குடி மக்களே. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களே

உச்சநீதிமன்றம் நம் நாட்டுக்கு ஏன் முக்கியம் என்பது வீரப்பன் விஷயத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இரு மாநில முதல்வர்களும் தடா கைதிகளை விடுவிக்க முடிவு செய்தபோது உச்ச நீதி மன்றம் தடுத்தது. தன்னுடைய தீர்ப்பில்

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகக் காடுகளில் வீரப்பன் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான், வீரப்பன் தொடர்ந்து குற்றங்களை இழைப்பவன் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரிகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்குப் பயந்து அரசு நடந்து கொண்டால் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு இடம் கொடுப்பதாகிவிடும். இதன் விளையாக ஜனநாயக அமைப்பே சீர்குலைந்து போகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது கர்நாடக அரசின் பொறுப்பு. உங்களால் முடியவில்லையெனில் நீங்கள் பதவி இறங்கி அதை யார் செய்வார்களோ அவர்களுக்கு வழிவிடுங்கள்.

வீரப்பனின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர் அப்துல் கரீம் என்ற 76 வயது ஓய்வு பெற்ற முன்னாள் டி.எஸ்.பி. இவருடைய மகன் வீரப்பனின் தாக்குதலில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. ஷகில் அகமதுவின் தந்தை. இவர்களைப் போல உண்மையான குடிமகன்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இருக்கக் கூடாது.

வீரப்பனை வெளியே கொண்டு வர, மிஸ்டர் எக்ஸ் என்ற வீரப்பனிடம் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவர் உதவியிருக்கிறார். அவர் யார் என்று புத்தகத்தில் சொல்லப்படவில்லை. கடைசியில் வீரப்பனை எப்படிச் சுட்டு வீழ்த்தினார்கள் என்ற பகுதிகள் படிக்கச் சுவாரசியமானவை.


வீரப்பன் முடிவுக்கு வந்த பின் துக்ளக் தலையங்கத்தில் சோ இப்படி எழுதினார்:
துக்ளக் உட்பட பல பத்திரிகைகள் செய்து வந்த கிண்டல்; பொதுவாகவே மக்களிடையே நிலவிய ஏளனம்; நிபுணர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டவர்களின் உபதேசங்கள்; நடக்கவே நடக்காது எனக் கூறி சில தலைவர்கள் விட்டு வந்த சவால்கள்… போன்றவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு வந்த தமிழக போலிஸ்துறை, வீரப்பனையும், அவனது சகாக்கள் சிலரையும் சுட்டு வீழ்த்தி, ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது….
….
இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தன்னால் முன்பு தோற்றுவிக்கப்பட்ட விசேஷப் படையை மீண்டும் உயிர்ப்பித்தார். அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்ததுடன், நவீன சாதனங்களையும் அவர்கள் பெற வழி செய்து, அவர்களை ஊக்கப்படுத்தினார். அரசு அவர்கள் பின் நிற்கும் என்ற உறுதியையும் அவர்கள் மனதில் தோற்றுவித்தார். விசேஷப் படை காட்டிய முனைப்பிற்கு, முதல்வர் ஜெயலலிதா காட்டிய உறுதியும் முக்கியக் காரணம். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும், ரௌடிகளை அடக்குவதிலும், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிற முனைப்பு, இந்தியாவில் வேறெந்த முதல்வருக்கும் இல்லை என்ற நமது கருத்து மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கிறது. விஜயகுமாருடன் சேர்ந்து, ஜெயலலிதாவையும் பாராட்டுகிறோம். நல்லது நடந்திருக்கிறது. நல்லவர்கள் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா அதிரடிப்படையில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ஒரு மனையும், ரூ 3 லட்சம் ரொக்கமும் பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்தார்.
விஜயகுமார் ஒரு பேட்டியில் தன்னுடைய புத்தக விற்பனையில் வரும் பணத்தில் ஒரு பகுதியை எப்படிப் பயன்படுத்தப் போகிறேன் என்று கூறி இருக்கிறார். I want to donate the entire proceeds for education-related activities in the places where Veerappan struck like a tsunami – say the villages including Manjucomapatti, Pulinjur, Geddesal- where people were brutally killed by him என்கிறார்
விஜயகுமார் ஆங்கிலப் புத்தகத்தின் ஆரம்பத்தில் Dedicated to late Selvi J. Jayalalithaa and to all search teams என்று சமர்ப்பித்துள்ளார். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் இதைக் காணவில்லை!
-சுஜாதா தேசிகன்
புத்தகங்கள்:
Veerappan: Chasing the Brigand, K. Vijay Kumar (ஆங்கிலம்)
வீரப்பன் வேட்டை, கே. விஜயகுமார் (தமிழ்)
Birds, Beasts and Bandits by Krupakar Senani,
மாலை சுவடுகள் – மாலை முரசு பிரசுரம்
பரபரப்பு செய்திகள்:


அச்சமறியா போர்ப் பறவை: குலாலை இஸ்மாயில் | ராம் ஸ்ரீதர்திடீரென்று நடக்கவில்லை என்றாலும், ஒருநாள் காலையில் எங்கெங்கு பார்த்தாலும் அந்தப் பெண்ணின் முகம்தான்பாகிஸ்தானின் அதிகமாகத் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்ற அச்சுறுத்தலான வாசகங்களுடன்அனைத்துக் காவல் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் / ட்ரெயின் நிலையங்கள் சகலத்திலும் குலாலை இஸ்மாயில் (Gulalai Ismail) முகம்தான்!

அவர் மீது தேசத் துரோக வழக்கு! மனித உரிமைப் பாதுகாவலர்கள் அவர் பக்கம் நின்றாலும், பாகிஸ்தானில் மனித உரிமையாவது மண்ணாவது? அதுவும் ஒரு பெண்ணுக்கு!

மனித உரிமைப் பாதுகாவலர்கள் குலாலை மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் எல்லாமே போலியானவை என்று போராடினர். பாகிஸ்தானின் ராணுவம் செய்துவரும் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது குலாலை செய்த மாபெரும் தவறு. பாகிஸ்தானின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் சல்லடை போட்டுத் தேடி வந்தனர் பாகிஸ்தானின் ரகசியப் பிரிவைச் சார்ந்த உளவுப்படை போலிசார்.

இவை எல்லாவற்றையும் மீறி 32 வயதான குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானின் அச்சுறுத்தும் போலிஸ் / ராணுவ வலையிலிருந்து தப்பி இறுதியில் அமெரிக்காவில் ப்ரூக்ளினில் (Brooklyn) உள்ள அவர் சகோதரியிடம் வந்து சேர்ந்து விட்டார். அமெரிக்க அரசிடம் அரசியல் புகலிடம் (Political Asylum) கேட்டு விண்ணப்பித்துள்ள இவர், தனக்கு அது கிடைத்துவிடும் என நம்புகிறார். நியூயார்க் நகரம் வந்து சேர்ந்து சிறிது காலம் கழிந்தும் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை குலாலையால் நம்ப முடியவில்லை. தொடர்ச்சியாக, மனித உரிமை ஆர்வலர்களையும், அரசைச் சேர்ந்த அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார். 

பாகிஸ்தானில் இன்னமும் இருக்கும் அவருடைய பெற்றோர்கள் பற்றிய சிந்தனை குலாலைக்கு அதிகமாகவே உள்ளது.

பாகிஸ்தானிலிருந்து எப்படித் தப்பினார் குலாலை?

இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது மிகச் சுருக்கமாக அங்கிருந்த எந்த விமான நிலையத்திலிருந்தும் நான் பறக்கவில்லை என்கிறார். இதற்கு மேல் என்னிடம் கேட்காதீர்கள். நான் தப்பி வந்த விதத்தை விவரித்தால் நிறைய நல்லவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்கிறார். 

குலாலைக்கு ஏற்பட்ட துன்பங்கள் பாகிஸ்தானின் உண்மை முகத்தைக் காட்டுகின்றன. தனிமனித உரிமையைத் துச்சமாக மதித்து, பெண்களையும், வயதானவர்களையும் கூட மிகக் கொடுமையான அடக்குமுறை மூலம் அடக்கி ஒடுக்கும் பாகிஸ்தானைப் பற்றி யாரும் பேச விரும்புவதில்லை.

பாகிஸ்தானில் பெண்கள் உரிமைகளுக்காக குலாலை இஸ்மாயில் தொடர்ந்து மிகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வந்தார். பாகிஸ்தான் அரசும் அதனுடைய ரகசியப் பாதுகாப்புப் படையும் பெண்கள் மீது ஏவிவிடும் அதீத அடக்குமுறை, வன்கொடுமைகள், இன்னபிற உரிமை மீறல்கள் போன்றவற்றை வெளியுலகம் அறியச் செய்ய தொடர்ந்து போராடி வந்தார். 

ராணுவம் சர்வ வல்லமை வாய்ந்ததாக அடக்கியாளும் (வெளியுலகுக்கு என்னதான் ஜனநாயக முகமூடியைக் காட்டினாலும்) பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் ஒரு மாற்றுப்புள்ளி எங்கேயாவது தோன்றியே ஆகவேண்டும் என்பதே குலாலை போன்ற எண்ணற்ற மக்களின் நம்பிக்கை.

பாகிஸ்தானிய அரசு அதிகாரிகள் குலாலை போன்ற போராளிகள் பற்றித் தொடர்ந்து வாய் திறக்க மறுத்து வருகிறார்கள். குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானில் இருந்து துணிகரமாகத் தப்பித்த விஷயம் மேலைநாட்டு ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டபோதும் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கவும் மறுத்து வருகின்றனர். 

மனித உரிமை மறுக்கப்பட்டு, இதுபோன்று அடியோடு நசுக்கப்படும் நிகழ்வுகளை சர்வதேச ஊடகங்களின் கவனத்திலிருந்து திசைதிருப்பவே பாகிஸ்தான் காஷ்மீர் மீது இந்தியா கொண்டுவந்த மாற்றங்களைத் தொடர்ந்து கூக்குரலிட்டுக் கண்டனம் செய்து உலக அரங்கில் ஆதரவு தேட மிகுந்த முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஒருபுறம் அந்தநாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது. மறுபக்கம் எவ்வளவு முயற்சி செய்தாலும் உலக அரங்கில் அந்த நாட்டிற்குப் பெரிய அளவில் ஆதரவுக் குரல் கொடுக்க பல நாடுகள் இதுவரை முன்வரவில்லை.

குலாலை அமெரிக்காவுக்குப் புகலிடம் கேட்டு வந்துள்ள கோரிக்கையை நியாயமாகப் பரிசீலனை செய்துவருகிறோம், அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்போம். பாகிஸ்தானுக்குத் திரும்பினால் அவர் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதையும் அறிந்துள்ளோம் என்று அமெரிக்க செனட்டர்களில் பிரபலமானவர்களில் ஒருவராக விளங்கும் நியூ யார்க் நகர செனட்டரான சார்லஸ் ஷூமர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தங்களுடைய பிடியிலிருந்து குலாலை எப்படியோ தப்பிவிட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அவரை வெகு தீவிரமாகக் கண்காணித்து வந்தும் எப்படியோ தப்பித்து, நாங்கள் அணுகமுடியாத இடத்துக்குச் சென்றுவிட்டார் என்று தன்னைப் பற்றி விவரங்கள் சொல்ல விரும்பாத ஒரு பாதுகாப்பு அதிகாரி அமெரிக்க நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் ஒருவரிடம் சொன்னதாக அந்த நாளிதழ் தகவல் வெளியிட்டது.

குலாலை இஸ்மாயில் பாகிஸ்தானுக்குள் சுதந்திரமாகப் பயணம் செய்யவே தடைகள் இருந்தபோது, நாட்டை விட்டே எப்படித் தப்பித்தார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு ஒரு புரியாத ஒரு புதிராகவே விளங்குகிறது.

அவர் தப்பிக்க உதவியவர்கள் தரை மார்க்கமாக ஆப்கானிஸ்தான் அல்லது ஈரான் வழியாகத் தப்ப உதவினார்களா அல்லது கடல் மார்க்கமாக ஏதேனும் ஒரு ஐரோப்பிய நகருக்குத் தப்பிக்க வைத்து அங்கிருந்து அமெரிக்கா தப்பவைத்தார்களா என்பது யாருக்கும் தெரியவில்லை.

தனி மனித உரிமையைப் பற்றி (குறிப்பாகப் பெண்களின் உரிமை) இப்போது பேச ஆரம்பித்தவர் அல்ல குலாலை. கிட்டத்தட்ட அவருடைய 16 வயதிலிருந்து 16 வருடங்களாகக் குரல் கொடுத்து வருகிறார். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், பெண்கள் மீது பாகிஸ்தானில் இருக்கும் அடக்குமுறை, அதை எதிர்த்தவர்கள் / எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட பயங்கர முடிவுகள் போன்றவற்றைப் பற்றி குலாலை அசராது பேசி வருகிறார். பெண்கள் சிறுவயதிலேயே எப்படி திருமணத்துக்கு வற்புறுத்தப் படுகிறார்கள், காதல் என்று ஏதாவது இருந்தால் நடக்கும் கௌரவக் கொலைகள் என்று குலாலை தொடாத விஷயமே இல்லை. 

பெண்கள் மீது ஏவி விடப்படும் அடக்குமுறைகள், அநீதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எப்படித் தத்தம் வீரத்தை அப்பாவிப் பெண்களைக் கெடுத்துs சீரழிப்பது மூலம் வெளிப்படுத்துகிறார்கள் போன்றவற்றைப் பற்றி 2019 ஜனவரியில் குலாலை முகநூல் மற்றும் ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார். இது மட்டுமல்லாமல், ஆண்டாண்டு காலமாக பாகிஸ்தானில் தன்னுடைய பஷ்டூன் இன மக்கள் மீது நடக்கும் அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார், தன் இன மக்களின் ஆதார உரிமைகளை பாகிஸ்தான் ராணுவம் அடியோடு நசுக்குவதை எதிர்த்து நடைபெற்ற பேரணியில் குலாலை கலந்துகொண்டு பேசினார்.

இதனால் எரிச்சலடைந்த பாகிஸ்தான் ராணுவம் குலாலை மீது தேசத்துரோக வழக்கை ஏவியது. பிற மக்களை அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டுகிறார் என்றும் அவர் மீது பழி சுமத்தப்பட்டது. 2019 மே மாதம் குலாலை மீது அரசு தொடுத்துள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து ஓடப் பார்க்கிறார் என்று அரசால் தேடப்படும் குற்றவாளி (Fugitive) என்ற குற்றம் சுமத்தப்பட்டது. தன்னை ஒரேயடியாகத் தீர்த்து விட முயற்சி நடக்கிறது என்பதை குலாலை உணர்ந்துகொண்டார்.

இது பற்றிய தகவலை அவருடைய நண்பர் ஒருவர் குலாலை வீட்டுத் தொலைபேசியில் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள அந்த வீட்டில்தான் குலாலை தன் வயது முதிர்ந்த பெற்றோருடன் வசித்துவந்தார். ஊடகங்கள் முழுக்க உன்னைப் பற்றிய செய்திதான். உன் இருப்பிடத்தைச் சோதனை செய்து உன்னைக் கைது செய்ய உளவுப்படை போலிஸ் வருகிறது. இதுதான் நீ இங்கிருந்து கிளப்புவதற்குச் சரியான தருணம். உடனே கிளம்பு என்று தொலைபேசியில் தெரிவித்தார் அந்த நண்பர். 

மாற்று உடை, கையில் அலைபேசி என எதுவும் இல்லாமல் வீட்டைவிட்டு உடனே வெளியேறினார் குலாலை. அலைபேசி தன் வசம் இருந்தால், அதன் மூலம் தன் இருப்பிடத்தைப் பற்றி அறிந்துகொள்ள உளவுப்படை போலிஸால் முடியும் என்பதை குலாலை அறிந்திருந்தார். 

நீங்கள் பயந்தீர்களா என்ன? 

குலாலை இந்தக் கேள்விக்குப் புன்னகைத்தவாறே பதில் சொன்னார், எதையும் நினைத்துப் பார்க்கக் கூட எனக்கு நேரமில்லை. பயப்படுவதற்கோ, தைரியமாக இருப்பதற்கோ நேரமில்லை. அது தப்பிப்பதற்கான நேரம் என்றார் அவர்.

அடுத்த மூன்று மாதங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் என்று மாறி மாறி பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நாடோடி வாழ்க்கை நடத்தினார் குலாலை. தனக்கு மிக நம்பகமான மிகச் சில நண்பர்களை மட்டுமே நம்பினார் அவர். இஸ்லாமியப் பெண் என்பதால் முகத்திலிருந்து கால் வரை மறைக்கப்பட்ட உடை அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் நகரங்கள் பலவற்றில் இருக்கும் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் போதெல்லாம் மிகவும் பயந்திருந்தார் குலாலை. 

இதுபோன்ற ஒரு தருணத்தில் தன் தந்தையின் நெருங்கிய நண்பர் வீட்டிற்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி ஒருமுறை திடீரென்று சென்று அந்த வீட்டில் இருந்தவர்களை துணுக்குறச் செய்ததை எண்ணி இப்போதும் வருந்துகிறார் குலாலை. என் தந்தையின் நண்பர் என்னைப் பார்த்ததும் மிகவும் பயந்துவிட்டார். ஏனென்றால் நான் அரசால் மிகத் தீவிரமாகத் தேடப்படும் குற்றவாளி. எனக்கு உதவி செய்வது தெரிந்தால் அவர் குடும்பத்துக்குக் கிடைக்கும் தண்டனை மிகக் கொடூரமானதாக இருக்கும். அதனால் ஒரே இரவில் அங்கிருந்து வெளிவந்து, நண்பர் ஏற்பாடு செய்த டாக்சி மூலம் வேறிடத்திற்குச் சென்று விட்டேன். ஒளிந்து வாழ்வது ஒன்றும் ரசிக்கத்தக்க அனுபவமல்ல, என்றார் அவர்.

குலாலை முன்னெச்சரிக்கையாக முதலிலேயே அமெரிக்க விஸாவுக்கு விண்ணப்பித்து அதை வாங்கி வைத்திருந்தார். ஏனென்றால் அங்கு அவருடைய இரு சகோதரிகளும், இரு சகோதரர்களும் ஏற்கெனவே அமெரிக்காவில் குடியேறி இருந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக முன்பே (நேரான வழியில்) அமெரிக்கா சென்றுவந்த அனுபவமும் அவருக்கு உண்டு.

குலாலைக்குத் தன் பெற்றோரை எண்ணி இன்னமும் பயமாகவே இருக்கிறது என்கிறார். அவர் அமெரிக்கா தப்பிச் செல்ல பண உதவி செய்தார்கள் என்று அவர்கள் எந்த நேரமும் கைதாகலாம் என்ற என்ற அச்சமும் அவருக்கு உள்ளது. ஆனால், உண்மையில் குலாலையின் பெற்றோர்கள் அவருக்குப் பணஉதவி எதுவும் செய்யவில்லை.

இருந்தாலும் குலாலையின் பெற்றோர் மீது தீவிரக் கண்காணிப்பு இருந்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தானிய உளவுப்படை ஆட்கள் யாராவது பார்த்தாலும் குலாலைக்குப் பிரச்சினைதான். 2019 செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று அடைந்துவிட்டாலும் இன்னமும் பயத்துடன், தனியாக வெளியே எங்கும் செல்லாமல் கூடியவரை சகோதரியின் வீட்டிலேயே இருக்கிறார் குலாலை. அங்கு இருக்கும் தன் குடும்பத்தினருக்கு விதவிதமான பாகிஸ்தானிய உணவுகளைச் சமைத்துப் பரிமாறுவதில் ஆர்வம் காட்டுகிறார்.

இதுபோன்ற மனித உரிமை வழக்குகளை எடுத்து நடத்திவரும் மஸ்ரூர் ஷா என்ற வழக்கறிஞர், குலாலை மறுபடியும் பாகிஸ்தானிய அரசு அதிகாரிகளிடம் சிக்கினால் அவருக்கு நிச்சயம் மரண தண்டனைதான் என்கிறார். குலாலை அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான குரல் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தன் போன்ற பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். சட்டம் படிக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது. ஆனால், மறுபடியும் தன் பெற்றோரைப் பார்க்கவே முடியாது என்ற உண்மை அவரை மிகவும் வாட்டுகிறது.நான் அந்த நாட்டிலிருந்து வெளிவந்தபோதே இது ஒரு வழிப்பாதை என்பதை உணர்ந்து கொண்டேன். அமெரிக்க மண்ணை மிதித்தவுடன் இனி இதுதான் என் பூமி என்ற எண்ணத்தையும் என்னுள் விதைத்துக்கொண்டேன் என்கிறார் குலாலை.

தகவல்கள் நன்றி:

நியூ யார்க் டைம்ஸ் தினசரி, Front-line Defenders இயக்க இணையத்தளம், Peace Direct இயக்க இணையத்தளம், Undispatch இணையத்தளம், Secure Avaaz இயக்க இணையத்தளம்.

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 2) | ஹரி கிருஷ்ணன்

கேள்வி: கிருஷ்ணனுடைய மாயை என்ற ஸஞ்சயன் அனுமானம் எந்த அளவுக்கு உண்மை?
 
இந்திரனிடமிருநது பெற்ற வாசவி சக்தியைக் கர்ணன், தான் போர்க்களத்துக்கு வந்த முதல் நாளிலேயே பயன்படுத்தி இருக்கலாமே. அவ்வாறு செய்யாமல், அந்த அஸ்திரத்தை ஏன் கடோத்கசனின்மேல் வீணடித்தான் என்று திருதராஷ்டிரன் எழுப்பிய கேள்விக்கு ஸஞ்சயன் சொன்ன பதிலைச் சென்றமுறை பார்த்தோம். இதற்கு, கிருஷ்ணன் உண்டாக்கிய மாயைதான் காரணம் என்ற தொனியில் ஸஞ்சயனின் விடை அமைந்திருந்தது. ஆனால், கர்ணன் களத்துக்கு வந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து, கடோத்கசன் மீது அவன் இந்திரன் கொடுத்த சக்தியாயுதத்தை வீணடித்த பதினான்காம் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்தி, மிகச் சுருக்கமாக high-lights மட்டும் பார்த்துக்கொண்டு வந்தால், கர்ணனிடத்திலிருந்த சக்தி அஸ்திரத்திலிருந்து தப்பியது கிருஷ்ணன் உண்டாக்கிய மாயையாலா அல்லது வேறு காரணங்களாலா என்பது தெளிவாகும் என்று சொல்லியிருந்தோம். இப்போது கர்ணன் யுத்தகளத்துக்குள் நுழைந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து பதினான்காம் நாள் இரவு யுத்தத்தில் கடோத்கசனைக் கொன்றது வரையில் நடந்தனவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். அதாவது கிட்டத்தட்ட 300-400 பக்கங்களின் சுருக்கத்தைப் பார்க்கப் போகிறோம்.
பத்தாம் நாள் பீஷ்மர் விழுந்தார். பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை போர்புரிய மாட்டேன் என்று சபதம் செய்திருந்த கர்ணன், பதினோராம் நாள் யுத்தத்துக்கு வந்தான். பீஷ்மருடைய மரணத்துக்குப் பிறகே போருக்கு வருவேன் என்று அவன் உத்தியோக பர்வத்தில் மூன்று வெவ்வேறு சமயங்களில் சபதம் செய்கிறான். அதில் மூன்றாவது முறையாகச் செய்யும் சபதத்தில் இவ்வாறு சொல்கிறான்:
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Gangas son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together! (கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு, உத்யோக பர்வம் 169ம் பகுதி)
 
அதாவது, நான் ஒருவனாகவே பாண்டவர்களை அழிப்பேன். ஆனால், பீஷ்மரின் தலைமையில் போரிட்டால், பாண்டவர்களை நான் அழித்ததற்கான எல்லாப் புகழும் சேனைத் தலைவர் என்ற முறையில் பீஷ்மரைச் சேரும். ஆகவே, இன்னொருவர் தலைமையின்கீழ் நான் போரிட மாட்டேன் என்று சொன்ன கர்ணன், இப்போது துரோணருடைய தலைமையின்கீழ் போரிட வந்திருப்பதே பெரிய நகைமுரண். அது போகட்டும். இந்தப் பதினோராவது நாள் யுத்தத்திலிருந்து நடந்தவை என்ன? வரிசைப்படிப் பார்ப்போம்.
 
பதினோராம் நாள்
 
இன்று நான் யுதிஷ்டிரனை சிறைப் பிடிப்பேன். ஆனால் ஒன்று. நான் அவ்வாறு சிறையெடுக்கும் சமயத்தில் அர்ஜுனன் குறுக்கிடக் கூடாது. அப்படி அவன் குறுக்கிடாமல் நீ பார்த்துக் கொண்டால் யுதிஷ்டிரனைச் சிறைப் பிடிக்கிறேன் என்று துரோணர், துரியோதனனுக்கு வாக்களித்திருந்தார். அன்று நடந்த யுத்தத்தில் பீமன், சல்யன், சாந்தனீகன், கர்ணனுடைய மகன் விருஷசேனன், அர்ஜுனனுடைய மகன் அபிமன்யு என்று பலர் தமக்குள் போர்புரிந்து கொண்டார்கள். துரோணர், தருமபுத்திரனை ஏறத்தாழ சிறைப்பிடித்துவிட்டார் என்ற நிலையில் மின்னல் வேகத்தில் அங்கே வந்த அர்ஜுனன் அவரைத் தடுத்துவிட்டான். துரோணரால் தர்மபுத்திரனைச் சிறைப்பிடிக்க முடியவில்லை. அன்று கர்ணன் களத்தில்தான் இருந்தான். அவனால் முடிந்திருந்தால், துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் புகுந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் யுதிஷ்டிரன் ஒருவேளை சிறைப்பிடிக்கப் பட்டிருக்கலாம். கர்ணன் அவ்வாறு குறுக்கிடவில்லை.
 
பன்னிரண்டாம் நாள்
 
அர்ஜுனனை சம்சப்தகர்கள் வெகுதொலைவுக்கு இழுத்துச் சென்றிருந்தனர். பகதத்தனும் அவனுடைய யானையான சுப்ரதீகமும் பாண்டவர் சைனியத்தைக் கலங்கடித்தனர். பீமன், சாத்யகி, அபிமன்யு என்று பலர் முயன்றும் சுப்ரதீகத்தின் அட்டகாசத்தைத் தடுக்க முடியவில்லை. எங்கிருந்தோ முளைத்த அர்ஜுனன் அன்று சுப்ரதீகத்தை அடக்கினான். அதைத் தொடர்ந்துதான் அர்ஜுனன்மீது பகதத்தன் வைஷ்ணவாஸ்திரத்தை எறிகிறான். அவன் அப்படி எறியும்போது, கிருஷ்ணன் தன் குதிரைச் சவுக்கையும் கீழே போட்டுவிட்டு, முழுமையான நிராயுதபாணியாக எழுந்து நின்று அந்த அஸ்திரத்தைத் தன் மார்பில் ஏற்றுக் கொள்கிறான். அது அவன் கழுத்தில் மாலையாக விழுகிறது. கிருஷ்ணா, நீ இப்படிக் குறுக்கிட்டிருக்கக்கூடாது என்று ஆட்சேபித்த அர்ஜுனனுக்கு, இது என் பொருள். என்னிடம் திரும்ப வந்துவிட்டது. பூமாதேவி கேட்டுக்கொண்டதன் பேரின் இதை நான் நரகாசுரனுக்குக் கொடுத்திருந்தேன். அவனிடமிருந்து பகதத்தனிடத்தில் இது வந்திருக்கிறது. இப்போது அவன் தன்னுடைய அங்குசத்தின்மேல் அபிமந்திரிந்து உன்மீது எய்தான். இனி நீ போரைத் தொடர்க என்று கிருஷ்ணன் பதில் சொன்னான். அதைத் தொடர்ந்து பகதத்தன் மீது அர்ஜுனன் எய்த அம்பு அவனுடைய மார்பைத் துளைத்து, அவன் உயிரைக் கவர்ந்தது. கிஸாரி மோகன் கங்கூலி சொல்கிறார்:
 
The son of Pandu then, with a straight shaft furnished with a crescent-shaped head, pierced the bosom of king Bhagadatta. His breast, being pierced through by the diadem-decked (Arjuna), king Bhagadatta, deprived of life, threw down his bow and arrows. Loosened from his head, the valuable piece of cloth that had served him for a turban, fell down, like a petal from a lotus when its stalk is violently struck.
 
கர்ணன் அன்று பகதத்தனுக்கு அருகிலேயேதான் இருந்தான். பகதத்தனுக்கு உதவியாக அர்ஜுனோடு போர்புரிந்து, கர்ணன் அர்ஜுனனைத் தடுத்திருக்கலாம். கர்ணன் அப்படி எதையுமே செய்யவில்லை.
 
பதின்மூன்றாம் நாள்
 
அன்றும் சம்சப்தகர்கள் அர்ஜுனனுக்கு சவால்விட்டு, அவனை யுத்தகளத்தின் தெற்குக் கடைக்கோடிக்கு இழுத்துச் சென்றிருந்தனர். அன்றுதான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள் நுழைந்து, கர்ணன் உள்ளிட்ட கௌரவ மஹாரதிகளைத் தோற்கடித்திருந்தான். இப்படி அர்ஜுனனைத் தொலைதூரத்துக்கு இழுத்துச் சென்றால்தான் அபிமன்யு சக்கர வியூகத்துக்குள்ளே வருவான் என்பது ஏற்பாடு. அப்படியானால், அர்ஜுனனை அந்த இடத்திலிருந்து விலக்க துரோணாசாரியார் சம்சப்தகர்களைத் தற்கொலைப் படையாக உபயோகித்துக் கொண்டது ஏன்? கர்ணனைவிட்டு அர்ஜுனனைத் தடுத்திருக்கலாமே! அவனிடம்தான் இந்த மகத்தான சக்தி அஸ்திரம் இருக்கிறதே! துரோணர் கர்ணனிடம் இந்த வேலையை ஒப்படைக்கவில்லையே! அவனால் அர்ஜுனனைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை துரோணாசாரியருக்கு இருக்கவில்லையே!
 
பதினான்காம் நாள்
 
ஜயத்ரத வதம் நடந்த தினம். அன்று துரோணர், கௌரப் படைகளை அர்த்த-பத்ம-அர்த்த சக்கர வியூகங்களாக அமைத்து, இந்த வியூகங்களுக்குள் ஒரு ஊசி வியூகத்தை ஏற்படுத்தி, அந்த ஊசியின் காதுப் பகுதியில் ஜயத்ரதனை நிறுத்தியிருந்தார். ஜயத்ரதனுடைய பாதுகாப்புக்காக நின்ற மஹாரதிகளில் கர்ணனும் ஒருவன். ஜயத்ரதன் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் பீமனுக்கும் கர்ணனுக்கும் போர் மூண்டது. பீமன் கர்ணனை அன்று மூன்றுக்கும் மேற்பட்ட முறைகள் தோற்கடித்தான். கதாயுதப் போரிலில்லை; விற்போரில்தான். கர்ணனுடைய தேர்களைச் சிதைத்து அவனைத் தரையிலே நிற்கவைத்தான். இப்படித் தொடர்ந்து தோற்கடித்துக்கொண்டிருந்த பீமனிடத்தில் ஆயுதங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. யுத்தத்தில், கையிலுள்ள ஆயுதங்கள் செலவழியும்; சாரணர்கள் (Scouts) ஆயுதங்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அப்படி, சாரணர்களிடமிருந்தும் ஆயுதங்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தான் பீமன். பலமுறை பீமனிடம் தோற்றிருந்த கர்ணன், ஆயுதக் குறைபாட்டோடு இருந்த பீமனை வென்றான். அர்ஜுனனைத் தவிர மற்றவர்களைக் கொல்ல மாட்டேன் என்று குந்தியிடம் அவன் வாக்களித்திருந்தான். இது, கர்ணனே குந்திக்குத் தந்த வாக்கு; குந்தி கர்ணனிடம் கேட்டுப் பெற்றதன்று. ஆகவே கர்ணன் பீமனைக் கொல்லவில்லை. அதற்கு பதிலாக பீமனை, காட்டுக்குப் போ. பயிற்சியில்லாமல் உயர்ந்த வீரர்களோடு போர்புரிய வராதே என்றெல்லாம் பலவிதமாக அவமானப்படுத்தினான். தேரில்லாமல் தரையில் நின்றுகொண்டிருந்த பீமனைத் தன் வில் நுனியால் தொட்டான். வீரர்களுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய அவமானம் இது. ஜயத்ரத வதத்துக்காக அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் இதைப் பார்த்தான். சூரியனோ அஸ்தமனத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சூர்யாஸ்தமனத்துக்குள் ஜயத்ரதனைக் கொல்லாவிட்டால் தீயில் பாய்வேன் என்று சபதம் செய்திருந்த அர்ஜுனன் பீமனுக்கும் கர்ணனுக்கும் குறுக்கே வந்தான். Then the ape-bannered (Arjuna), urged by Kesava, shot at the Sutas son, O king, many shafts whetted on stone. Those arrows adorned with gold, shot by Parthas arms and issuing out of Gandiva, entered Karnas body, like cranes into the Krauncha mountains. With those arrows shot from Gandiva which entered Karnas body like so many snakes, Dhananjaya drove the Sutas son from Bhimasenas vicinity. His bow cut off by Bhima, and himself afflicted with the arrows of Dhananjaya, Karna quickly fled away from Bhima on his great car. என்று இந்த இடத்தை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். (துரோண பர்வம், அத்தியாயம் 138)
 
ஜயத்ரதனுக்குப் பாதுகாவலாக நிறுத்தப்பட்டிருந்த கர்ணன், அர்ஜுனனுடைய காண்டீவத்திலிருந்து புறப்படும் அம்புகளைச் சமாளிக்க முடியாமல் அந்த இடத்தைவிட்டு கிருபருடைய தேரில் ஏறிக்கொண்டு ஓடிப் போனான். கர்ணன் இந்தச் சமயத்திலாவது அர்ஜுனன் பேரில் அந்த மகத்தான சக்தியாயுதத்தை எய்திருக்கலாம். எய்யவில்லை.
 
ஜயத்ரத வதம் முடிந்தபிறகு எப்போதும்போல சூரிய அஸ்தமனத்துடன் போர் நிற்காமல் இரவெல்லாம் தொடர்ந்தது. இரவு ஆக ஆக அரக்கர்களுக்கு பலம் அதிகரிக்கும். அரக்கனான கடோத்கசனுக்கு பலம் ஏறிக்கொண்டே போனது. கடோத்கசன் ஏற்படுத்துகிற அழிவைப் பொறுக்க முடியாமல் கௌரவப் படைகள் கர்ணனிடத்தில் தஞ்சம் புகுந்தன. இதற்குமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கர்ணன் அந்த இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கடோத்கசன் மீது எய்தான்.
சக்தியாயுதம் என்பது அவ்வளவு பெரிய ஆற்றலுடையதா? உத்யோக பர்வத்தில் கர்ணனிடத்தில் பீஷ்மர் கேட்கிறார்: The shaft that the illustrious and adorable chief of the celestials, the great Indra, gave thee, thou wilt see, will be broken and reduced to ashes when struck by Kesava with his discus. That other shaft of serpentine mouth that shineth (in thy quiver) and is respectfully worshipped by thee with flowery garlands, will, O Karna, when struck by the son of Pandu with his shafts, perish with thee
அந்த சக்தியாயுதம் என்ன அவ்வளவு பெரியதா? கிருஷ்ணனுடை சக்ராயுதம் பட்டால் அது பொடிப் பொடியாகப் போய் சாம்பலாகும் என்கிறார் பீஷ்மர். அதற்குக் கர்ணன், ஆமாம். கிருஷ்ணனுடைய தன்மை அப்படிப்பட்டது; அதற்கும் மேற்பட்டது. நான் மறுக்கவில்லை என்கிறான்.
Karna said, Without doubt, the chief of the Vrishnis is even so. Further, I admit, that that high-souled one is even more than that. Let, however, the Grandsire listen to the effect of the bit of harsh speech that he hath uttered. I lay down my weapons. The Grandsire will henceforth behold me in court only and not in battle. After thou hast become quiet, the rulers of the earth will behold my prowess in this world. (உத்தியோக பர்வம், அத்தியாயம் 62)
 
அர்ஜுனனிடத்தில் சக்ராயுதத்துக்குச் சற்றும் குறையாத பாசுபதாஸ்திரம் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதமும் இருந்தது. இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தித்தான் அவன் நிவாத கவசர்களை அழித்திருந்தான். எனவே அர்ஜுனனிடம் சக்தியாயுதத்துக்கு மாற்று இல்லாமலில்லை. கண்ணனுடைய சக்ராயுதம், அதற்குச் சற்றும் குறையாத பாசுபாதாஸ்திரம் இந்திரனுடைய வஜ்ராயுதம் என்று சகலவிதமான மாற்று ஆயுதங்களும் அர்ஜுனனுடைய துணைக்கிருந்தன.
 
அதற்குமேல், இந்திரன் இந்த சக்தியாயுதத்தைக் கர்ணனுக்குத் தரும்போது, மற்ற எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திய பிறகே இதைப் பயன்படுத்தவேண்டும்; உன்னுடைய உயிருக்குப் பேராபத்து இருக்கும் நிலையில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தான். தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் கட்டம் வரையில் கடோத்கசனோடு கர்ணன் போர்புரிந்திருநதான். வேறுவழியே இல்லாத நிலையில்தான் சக்தியாயுதத்தை கடோத்கசன் மீது எய்தான்.
 
அவ்வாறு எய்யப்படாமல் இருந்திருந்தாலும் எதுவும் நடந்திருக்காது. அர்ஜுனனிடத்திலேயே சக்தியாயுதத்தைவிட அபரிமிதமான ஆற்றலுள்ள ஆயுதங்கள் இருந்தன. ஒருவேளை அவையே இல்லாமல் போயிருந்தாலும் கண்ணனுடைய சக்ராயுதம் அந்த நேரத்தில் சும்மா இருந்திருக்காது. அதற்குமேல், கடோத்கச வதம் நடந்த சிலமணி நேரத்துக்கு முன்னால்தான் கர்ணன் பீமனிடத்திலேயே மூன்று நான்கு முறை விற்போரில் தோற்று, தேரிழந்து நின்றிருக்கிறான். அர்ஜுனனோடு நேருக்கு நேர் மோதி தோற்று ஓடியிருக்கிறான். சக்தியாயுதத்தை கடோத்கசன்பேரில் வீணடித்திராவிட்டாலும் அது அர்ஜுனனை வெல்ல ஒரு காரணியாக இருந்திருக்கவே போவதில்லை.

எஸ் வங்கி பிரச்சினை | ஜெயராமன் ரகுநாதன்


 கடந்த ஒரு வருடத்தில் நாம் இரண்டு பெரிய நிதித்துறை அதிர்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. முதலில் பஞ்சாப் மஹாராஷ்டிரா கோ-ஆப்பரேடிவ் வங்கியின் திவால். அதன் தாக்கம் முழுமையாகச் சரி செய்யப்படுவதற்குள் இப்போது எஸ் வங்கியின் (Yes Bank) வீழ்ச்சி. இந்த வீழ்ச்சி வெகு ஆழமான காரணங்களுக்கு உட்பட்டது என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. பதிலில்லாத பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஒரு சராசரி இந்தியனின் மனக்குமுறலை அதிகரிக்கும் வண்ணம் சிக்கல்களை இந்த வங்கியின் வீழ்ச்சி உள்ளடக்கியிருக்கிறது.

அக்டோபர் 2019 தொடங்கி டிசம்பர் 2019 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கி அடைந்திருக்கும் நஷ்டம் ரூபாய் 18,564 கோடி. ஒரு வருடம் முன்பு, அதாவது அக்டோபர் 2018 தொடங்கி டிசம்பர் 2018 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கியின் லாபம் ரூ 1000 கோடி என்று அறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த மாதிரியான அதலபாதாள வீழ்ச்சி ஒரே வருடத்தில் சாத்தியமா? அப்படியானால் இதுநாள் வரையிலான அறிக்கைகளும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளும் சொல்லியவை எல்லாம் பொய்தானா? இந்த அளவுக்கா அடிப்படை முறைமைகளே கேள்விக்குள்ளாகும்? இது நமது நாட்டின் நிதித்துறையின் சட்டதிட்டங்களையே கேலிக்குள்ளாக்கும் அவலமில்லையா?

உடனடி முடிவாக ரிசர்வ் வங்கி எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறும் (Moratorium) அளவை ரூ 50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது இந்தக் கட்டுப்பாடு மர்ச் 18ம் தேதி வரை மட்டுமே. இந்த முடிவுமே கேள்விக்குரியதாக ஆகியிருக்கும் நிலையில் இதைக் கொஞ்சம் விவரமாக அலசுவது அவசியம். ஆனால் அதற்கு முன்னால் இந்த எஸ் வங்கியில் நடந்த நிகழ்ச்சிகளைத் தேதி வாரியாகப் பார்க்கலாம்:

செப்டம்பர் 19, 2018 
வங்கியின் தலைப்பொறுப்பில் இருந்த ரானா கபூருக்கு அந்தப் பதவியில் தொடருவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி மறுத்து, அவர் ஜனவரி 2019ல் பதவி விலகவேண்டும் என்று கட்டளை இடுகிறது.

நவம்பர் 27, 2018
நிதித் தரத்தை நிர்ணயிக்கும் மூடி (Moody) என்னும் சர்வதேச நிறுவனம் எஸ் வங்கியின் அந்நியச் செலாவணி அளிக்கும் நிறுவனத் தரத்தை சந்தேகத்துக்குரியது என்று நிர்ணயித்தல்.

ஃபிப்ரவரி 13, 2019
எங்களின் சொத்து மற்றும் வாராக்கடன் பற்றின ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது என்று எஸ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 8, 2019
முதலீட்டுத் தேவையை மனதில் கொண்டு எஸ் வங்கி நாங்கள் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் இன்னும் முதலீட்டைப்பெருக்குவோம் என்ற அறிவிப்பு

ஏப்ரல், 26, 2019
முதன் முறையாக, கடந்த மூன்று மாதத்திய (ஜனவரி – மார்ச் 2019) வருவாயில் இழப்பு என்று எஸ் வங்கி அறிவிக்க, எஸ் வங்கியின் பங்கு அடுத்த நாள் சந்தையில் 30% வீழ்ச்சி.

மே 14, 2019
இதுவரை காணாத வகையில் ரிசர்வ் வங்கி ஆர். காந்தி என்னும் ஓய்வுபெற்ற உதவி கவர்னரை தன் சார்பில் எஸ் வங்கியில் கூடுதல் நிர்வாக இயக்குநராகப் புகுத்தியது.

ஜூலை 17, 2019
முதல் மூன்று மாதங்களுக்கான (ஏப்ரல் – ஜூன் 2019) லாபம் 91% குறைவு என்றும், வாராக்கடன் தொகை விகிதம் 5.01%க்கு உயர்ந்து விட்டது என்றும் எஸ் வங்கி அறிவிப்பு.

செப்டம்பர் 10, 2019
எஸ் வங்கியின் தலைவர் ரன்வீட் கில் (Ranveet Gill), சர்வதேச தொழில்நுட்ப கம்பெனி ஒன்று எஸ் வங்கியின் பங்குகளை வாங்கி முதலீடு செய்வதற்குச் சம்மதித்திருப்பதாக அறிவிப்பு.

அக்டோபர் 3, 2019
மேலும் பல முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிக முதலீடு பெறப்படும் என்று மறுபடி கில் அறிவிப்பு.

அக்டோபர் 31, 2019
ஒரு சர்வதேச முதலீட்டாளர் எஸ் வங்கிக்கு 1.2 பில்லியன் டாலர் (ரூ. 8,400 கோடி) முதலீடு அளிக்க வாக்குக் கொடுத்திருப்பதாக அறிவிப்பு. இந்தச் செய்தி வந்தவுடன் எஸ் வங்கியின் பங்குகள் 39% விலை உயர்வு.

நவம்பர் 1, 2019
அடுத்த மூன்று மாதங்களுக்கான (ஜூலை – செப்டம்பர் 2019) வரவு செலவு கணக்கில் மிகப்பெரிய இழப்பும் வாராக்கடன் விகிதம் 7.39% உயர்வும் மற்றும் வாராக்கடன் ஒதுக்கீடு 133.6 கோடி ரூபாய் எனவும் எஸ் வங்கி அறிவிப்பு.

நவம்பர் 26, 2019
2 பில்லியன் டாலருக்கு (ரூ 14,000 கோடி) முதலீடு பெறுவதற்கான முயற்சிகளை எஸ் வங்கி எடுத்திருப்பதாக அறிவிப்பு. அதில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர் (ரூ 8,400 கோடி) எர்வின் சிங் பிரெய்ச் என்னும் கனடா தொழிலதிபருக்குச் சொந்தமான, ஹாங்காங்கைச் சேர்ந்த எஸ் பி ஜி பி ஹோல்டிங்ஸ் என்னும் கம்பெனி (Erwin Singh Braich and Hong Kong-based SPGP Holdings) அளிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு.

ஜனவரி 10, 2020
எர்வின் சிங் பிரெய்ச்சின் திட்டத்தை எஸ் வங்கி நிராகரித்து விட்டதாகவும் வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிவிப்பு.

ஃபிப்ரவரி 12, 2020
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வருமான விவரங்களை அளிக்க இன்னும் அவகாசம் தேவைப்படுவதாகவும் தாம் இன்னும் முதலீட்டைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிப்பு. JC Flowers, Tilden Park Capital Management, OHA (UK) and Silver Point Capital போன்ற கம்பெனிகளிடமிருந்து முதலீட்டை அளிப்பதற்கான விருப்பம் வந்திருப்பதாக அறிவிப்பு.

மார்ச் 5, 2020
ரிசர்வ் வங்கி எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது. அதோடு எஸ் வங்கியின் நிர்வாகத்தை அடுத்த முப்பது நாட்களுக்கு ரிசர்வ் வங்கியே எடுத்துக்கொண்டு விட்டதாகவும் அறிவிப்பு.
ஏதோ ஒரு மர்மக்கதை போல நடந்த அறிவிப்புக்களைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தன் பொறுமையை இழந்து செயல்பாட்டில் இறங்கியதைப் பார்த்தோம்.
2004ல் தொடங்கப்பட்ட இந்த எஸ் வங்கி மிக ஆக்ரோஷமாகத்தான் செயல்பட ஆரம்பித்தது. பதினைந்தே வருடங்களில் இந்த வங்கியின் சொத்து மதிப்பு ரூ நான்கு லட்சம் கோடியை எட்டியது. இந்த வங்கியின் வெற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘‘இப்படி அல்லவா இருக்க வேண்டும் தனியார் வங்கி’’ என்று சொல்லும்படி அதன் செயல்பாடுகள் இருப்பதாக வங்கியின் அதிகாரிகள் டீவியிலும் பத்திரிகைகளிலும் பேட்டி அளித்தனர். போன வருடம் கூட வங்கியின் தலைவர் எஸ் வங்கியின் வளர்ச்சி அபாரமாக 25% வரை இருக்கக்கூடும் என்று அறிவித்திருந்தார். பங்குச் சந்தையில் எஸ் வங்கியின் பங்குகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கி விற்கப்பட்டன. வங்கியின் வருடாந்திர அறிக்கையில் காணப்பட்ட வாக்கியம் “எதிர்காலம் இன்றே“!
எந்த ஒரு பொருளுமே ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பாய முடியாது. அப்படிப் பாயுமானால் இன்று மட்டுமல்ல நாளையும் கூட நேற்றாகிவிடும் என்பார் ஐன்ஸ்டீன்! எஸ் வங்கியின் முன்னேற்ற வேகம் அப்படித்தான் இருந்தது.
இதுநாள் வரையிலான எஸ் வங்கியின் செயல்பாடுகளில் ஒரு சர்ரியலிஸம் இருப்பதை உணரலாம். போதுமான மூலதனம் (capital adeqacy – 16.5%), குறைவான வாராக்கடன் (3.5%) என்று கடந்த மார்ச் 31 2019 வரை அபார வளர்ச்சியுடன் விளங்கியதாக அறிக்கையில் சொல்லப்பட்ட வங்கி, எப்படி பன்னிரண்டே மாதங்களில் இப்படிச் சரிய முடியும்? அப்போது இது நாள் வரை அறிக்கையில் வந்தவை, அதிகாரிகள் பேட்டியில் தெரிவித்தவை, மேலே நாம் பார்த்த அறிவிப்புக்கள் எல்லாம் மேலும் மேலும் மூலதனம் வாங்குவதற்காகச் சொல்லப்பட்ட வெற்று வார்த்தைகள்தானா? ரிசர்வ் வங்கி ஆடிட்டர்கள், அரசாங்கம், மக்கள் என எல்லாரையும் ஒரு சேர ஏய்க்க முடியுமா அல்லது இது திட்டமிடப்பட்ட அரசியல் குறுக்கீடுகள் கொண்ட இன்னொரு குளறுபடியா என்னும் கேள்வி எழாமலில்லை.
கடந்த சில வருடங்களாகவே நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பல வீழ்ச்சிகளில் – ஐ டி பி ஐ வங்கி, ஐ எல் எஃப் எஸ், டி ஹெச் எஃப் எல், பி எம் சி கோஆப் வங்கி, ஆல்டிகோ காபிடல் போன்ற அதிர்ச்சிகளை ஒட்டியே இப்போது எஸ் வங்கியும் கவிழ்ந்திருப்பது நமது நிதித்துறை எத்தனை அபாயகரமான பாதுகாப்பின்மையுடன் இயங்குகிறது என்பதைப் பறைசாற்றவில்லையா?
அப்படி எஸ் வங்கியில் எதில்தான் தவறு நிகழ்ந்தது?
இதற்குப்பதில் மிகச்சுலபம்! எல்லாவற்றிலும்தான்!
(ரானா கபூர்)
ராணா கபூருக்கும் அவரின் மைத்துனி மது கபூருக்கும் வங்கியின் பொறுப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்னும் தகராறு வெளிப்படையாகவே அரங்கேறியது. கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி ரானா கபூர் பதவிக்காலம் முடிவடையும்போது வெளியேறி விட வேண்டும் என்று சொல்லி, அவர் வங்கியில் தொடருவதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டது. நிர்வாகச் சீர்கேடு என்று காரணம் சொல்லி வங்கியின் தனி இயக்குநர் (independent Director) உத்தம் பிரகாஷ் அகர்வால் ஜனவரி மாதம் ராஜினாமா செய்துவிட்டார்.
தேசலான நிர்வாகம், செயல்பாடில்லாத நிர்வாகக்குழு, குளறுபடிகளுடன் கூடிய தணிக்கை முறைகள், உடைபட்ட நிதிச்சந்தை சட்டங்கள், துணிவில்லாத மேலாண்மை, இவையெல்லாம் தவிர, அரசியல் மூக்கு நுழைப்பை உறுதியாகக் கையாளாததால் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், பல வருட நேர்மையற்ற உள் விவகாரங்கள், எஸ் வங்கியின் முதலாளிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் அரசியல் தலையீட்டுக்கும் இருந்த சங்கிலித்தொடர்புகள் எல்லாமாகச் சேர்ந்துதான் இந்த நிலைமை உண்டாகி விட்டிருக்கிறது.
அதுவும் இந்த எஸ் வங்கி வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணம் ஒரு மிக மோசமான தருணமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதாரம் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு தனியார் வங்கி வீழ்ந்தது இன்றைய வங்கித் துறையின் மீதான பொது மக்களின் நம்பிக்கைக்கு பலத்த அடியைச் சாத்தியிருக்கிறது.
நிகழ்ந்த அவலங்களை மட்டும் பேசுவது எவ்விதத்திலும் நன்மை தரப்போவதில்லை. ஆனாலும் இதைச் சரி செய்ய வேண்டிய அரசாங்கத்தின் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாகத்திறமை மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை மறுக்க இயலாது. மக்களின் மத்தியில், முக்கியமாக முதலீட்டாளர்களின் மத்தியில் ஒரு இயலாமை, வருத்தம் ஏன் கொஞ்சம் கோபம் கூட உண்டாகியிருக்கிறது. இந்தச் சந்தேகம் சில அரசியல் மற்றும் நிதித்துறைப் பலிகளை வாங்கப்போகிறது என்பது நிச்சயம்.
நிதித்துறை எந்த நாட்டிலுமே கொஞ்சம் மென்மையானது. சீர்கேடுகளுக்குள் சுலபத்தில் மாட்டிக்கொண்டுவிடும் அபாயம் இருக்கிறது. இத்துறையின் ஏதோ ஒரு பகுதி எல்லை மீறினாலும் மொத்த நிதித்துறையும் அதற்கான விலையைத்தர வேண்டியிருக்கும் என்பதுதான் சரித்திரம் நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தும் பாடம். இந்தியாவின் இன்றைய நிதித்துறைச் சட்ட திட்டங்களும் கட்டுப்பாடுகளும் சர்வதேசத்தரம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை நிர்வகிக்கும் திறமை ரிசர்வ் வங்கிக்கு போதுமான அளவில் இருக்கிறதா என்பதற்கான பதிலைத்தான் தேட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1969 வரை 559 தனியார் வங்கிகள் திவாலாகியிருக்கின்றன. 1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டுவிட்டதால் திவால் நிலைமை ஏற்படவில்லை. ஆனால் மீண்டும் வங்கித்துறை தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின்னர் 36 வங்கிகள் வீழ்ச்சியடைந்து அவை வேறு பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டன. கடந்த ஐந்து வருடங்களில் 26 பொதுத்துறை வங்கிகளின் 3400 கிளைகள் மூடப்பட்டோ அல்லது வேறொரு வங்கிக் கிளையுடனோ ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கையில் 75% கிளைகள் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகள் என்பதில் சப் டெக்ஸ்ட் இருப்பதாகக் கருதலாம்! தவிர இப்போது இன்னும் பத்து பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நான்கு பொதுத்துறை வங்கிகளாக்கப்படும் என்னும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
(திவால் அல்லது இணைக்கப்பட்ட தனியார் வங்கிகளின் பட்டியலைப் பெட்டிச் செய்தியில் காண்க.)
எஸ் வங்கி விவகாரத்திலேயே சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட வாராக்கடன்களின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ 3277 கோடி வரை குறைத்துச் சொல்லப்பட்டதாக (under reporting) அன்றைய தணிக்கை சொல்லுகிறது. ஆனால் இந்தத் தொகையே மிக்குறைவு. அதாவது மறைக்கப்பட்ட வாராக்கடன் இதை விட மிக மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மார்ச் மாதம் 6ம் தேதி ரிசர்வ் வங்கி எஸ் வங்கியின் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டபோதே (Moratorium), வங்கியின் முதலீடான ரூ 26,904 கோடியில் பாதிக்கு மேல் இழக்கப்பட்டு விட்டது (Eroded) என்பது புரியத் தொடங்கியது.
கடந்த சில வருடங்களாகவே தனியார் வங்கிகளின் வருடாந்திரக் கணக்கு வழக்குகளைப் பார்க்கும்போது ஒரு சில விஷயங்களில் சந்தேகம் வருகிறார் போல இருப்பதாக வல்லுநர்கள் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் தனியார்மயக் கொள்கைக்கு எதிரானவர்கள், அப்படித்தான் பேசுவார்கள் என்று அசட்டை செய்து விட்டோமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. எஸ் வங்கியிலேயே 2016-17ல் அளித்த கடன்கள் ஆண்டுக்கு 35% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த வருடத்தில் கடன் 54% உயர்ந்திருக்கிறது. இதே வருடங்களில் வட்டியில்லா வருமானமும் மிக அதிகமான விகிதத்தில் மேலே போயிருக்கிறது. ஒரு தனியார் வங்கி தன் வருடாந்திரக் கணக்கில் அசாதாரணமான தொகைகளை வட்டியில்லா வருமானமாகக் காண்பிக்கும்போது நம் சந்தேக ஆண்டென்னாக்கள் விடைத்து எழுந்திருக்க வேண்டும் என்று இப்போது புரிகிறது. இந்த வட்டியில்லா வருமானமானது சந்தேகோபாஸ்தமான வழிகளில் ஈட்டப்படுகிறது என்பதும் அதற்கான திரை மறைவு நன்மைகள் யார் யாருக்கோ போய்ச்சேருகின்றன என்பதும், நிரூபிக்க முடியாவிட்டாலும் விஷயமறிந்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிற சமாச்சாரம்தான். ஆகவே ரிசர்வ் வங்கி இந்த எஸ் வங்கி விவகாரத்தில் சென்ற வருடம் முதல் நடந்த சில தணிக்கைகளில் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். பொறுப்பேற்க வேண்டியவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும்.
முக்கியமாக வல்லுநர்கள் சொல்லுவது ரிசர்வ் வங்கி இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதே. திசை திருப்புதல், முழுமையான வெளிப்படுத்துதல் (Disclosure) இல்லாத தகவல்கள், ஏறிக்கொண்டிருந்த வாராக்கடன்கள், அரிக்கப்பட்ட மூலதனம், மேலும் மூலதனம் திரட்டும் தகுதியின்மை போன்ற சிக்கல்கள் எஸ் வங்கியில் தொடர்ந்திருப்பது எப்படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் வெளிப்படாமல் போனது என்னும் கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது. இதற்கான சீரமைப்பாக மாரட்டோரியத்தைக் கொண்டு வந்து டெபாசிட் போட்ட வாடிக்கையாளர்களின் நிம்மதியை வேறு ரிசர்வ் வங்கி கெடுத்துவிட்டது என்னும் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. (இந்தக் கட்டுரை அச்சேறும் தறுவாயில் இது சரி செய்யப்பட்டுவிட்டது.) எனவே தனியார் வங்கிகள் மிகவும் திறமையானவை, பொதுத்துறை வங்கிகளைப்போல மெத்தனமாகச் செயல்படுவதில்லை என்ற கருத்து இப்போது மரண அடி வாங்கியிருக்கிறது.
இது ஒன்றும் புதிதும் அல்ல. குளோபல் டிரஸ்ட் வங்கி மற்றும் பஞ்சாப் மஹாராஷ்டிரா கோஆப்பரேடிவ் வங்கிகளிலும் நடந்தவைதாம் இங்கும் நடந்தேறியிருக்கின்றன.
சரி, இந்த வீழ்ச்சியைச் சரி செய்ய என்ன மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
முதலாக ஸ்டேட் வங்கி முன் வந்து ரூ 2450 கோடி முதலீட்டைத் தருவதற்குச் சம்மதித்துள்ளது. சம்மதித்ததா அல்லது நிர்பந்தப்படுத்தப்பட்டதா என்பது பதிலில்லாத கேள்வி. அந்த அளவு மூலதனத்திற்கு ஸ்டேட் வங்கிக்கு எஸ் வங்கியின் 49% பங்குகள் கொடுக்கப்படும். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்திறமையும் இது போன்ற சவால்களைச் சந்தித்த அனுபவமும் எஸ் வங்கி விஷயத்திலும் கை கொடுக்கும். அதோடு மேலும் சில தனியார் வங்கிகளும் மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஹெச் டி எஃப் சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவையும் மொத்தமாக ரூ 3,100 கோடி வரையும் ஃபெடரல் வங்கி மற்றும் பந்தன் வங்கி ரூ 600 கோடி வரையிலும் மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்.
மிகச்சிறந்த நிர்வாகிகளும் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் நிதித்துறையும் ஒருங்கிணைந்து எஸ் வங்கியின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டபடியால் இச்சங்கடங்கள் தீர்க்கப்பட்டு டெபாசிட் செலுத்திய பொது மக்களின் பணத்துக்கு பங்கம் வராமல் காப்பாற்றிவிடுவார்கள் என்னும் நம்பிக்கை வலுக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் முன்பு போல அரசாங்கம் எஸ் வங்கியை இன்னொரு வங்கியுடன் இணைக்கும் முடிவை எடுக்கவில்லை. இதுவும் சரியான முடிவுதான் என்று தோன்றுகிறது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்னால் குளோபல் டிரஸ்ட் வங்கி வீழ்ச்சி அடைந்தபோது அதை ஓரியண்டல் வங்கியுடன் இணைத்து விட, பின் நிகழ்ந்தவை மிகவும் மறக்க வேண்டியவையாக மாறிப்போன சரித்திரத்தை அரசு நினைவில் கொண்டு, இணைப்பு என்னும் முறையைக் கைவிட்டிருக்கிறது. அச்சமயத்தில் குளோபல் டிரஸ்ட் வங்கி இணைப்பால் ஓரியண்டல் வங்கி அடிபட்டுச் சாய்ந்தது. ஓரியண்டல் வங்கியின் வீழ்ச்சிக்கு இது மட்டுமே காரணம் அல்ல. அரசியல் தலையீட்டுக் கடன், வாராக்கடன் பெருக்கம், துணிவில்லாத வங்கிக்கொள்கை மற்றும் நிர்வாகத்திறமையின்மை என்று பல காரணங்களைச் சொன்னாலும் ஓரியண்டல் வக்கியின் வீழ்ச்சிக்கு இந்த குளோபல் டிரஸ்ட் இணைப்பு கடைசி வைக்கோலாகிப் போனதை மறுக்க முடியாது.
பதவியேற்ற 2014ல் நாட்டின் வங்கித்துறை எப்படி இருந்தது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று பல முறை கேட்டபோதும் பாஜக அரசு அதை மறுத்து விட்டது. அப்படிப்பட்ட வெள்ளை அறிக்கை வங்கித்துறையின் மீதான பொது மக்களின் நல்லெண்ணத்தை சீர் குலைத்துவிடும் என பாஜக அரசு தெரிவித்திருந்தது. அதனாலேயே பல சீர்திருத்தக் கொள்கை முடிவுகள் மூலமாகவே வங்கித்துறை மாற்றங்களைக் கொண்டு வர ஆரம்பித்து. ஆனால் வெள்ளை அறிக்கை இல்லாமையால் யார் தவறு என்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருந்ததே தவிர பொது வெளியில் அதற்கான தெளிவு பிறக்கவில்லை. பல கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வங்கித்துறைச் சீர்திருத்தங்கள் நடைபெற்ற நிலையில் இப்போதாவது பாஜக அரசு 2014க்கு முன் மற்றும் அதற்குப்பின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெளிவு படுத்த வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு வல்லுநர்களிடம் இல்லாமலில்லை.
பொருளாதாரத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற மற்றும் தெரியாத தாக்கங்கள் என்பவை உண்டு. இந்த எஸ் வங்கி விவகாரத்தில், அதுவும் முக்கியமாக ரிசர்வ் வங்கி ரு 50,000க்கு மிகாமல் பணத்தை எடுக்க வேண்டும் என்னும் மாரடோரியம் கொண்டு வந்த சமாச்சாரம் நிச்சயம் இரு வகைத் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிப்படையான மற்றும் மறைமுகமான தாக்கங்கள்.
இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் இதரக் கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வெளிப்படையான தாக்கங்கள் என்று பார்த்தால்: அவசரத்தேவைக்கு ரூ 50,000க்கு மேல் எடுக்க முடியாதது, எஸ் வங்கியில் செக் கொடுத்தவர்களின் நிலை, இந்த பாங்கின் மூலம் மாதாந்திர ஈ.எம்.ஐ. ஏற்பாடு செய்தவர்களின் நிலை.
ஆனால் இவற்றைவிட கண்ணுக்குத்தெரியாத மறமுகமான தாக்கங்கள் ஆழமானவை.
தனியார் வங்கிகளெல்லாம் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் அதனாலேயே பொதுத்துறை வங்கிகள் மிகவும் நம்பிக்கை வாய்ந்தவை என்னும் எண்ணம் உருவாகி இருப்பது. இது நிச்சயம் ஒரு மாயத்தோற்றமே! ரிசர்வ் வங்கி இந்த மாரட்டோரியத்தை நீக்கும்போது இருக்கிறது வேடிக்கை. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு விரையப்போகிறார்கள். Run on the bank என்று சொல்லும் படையெடுப்பு நிகழவிருக்கிறது. அதை எதிர்பார்த்து ரிசர்வ் வங்கி எஸ் வங்கிக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவ வேண்டியிருக்கும்.
எஸ் வங்கியின் நிர்வாகத்திற்காக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிரஷாந்த் குமார் இந்த மாரட்டோரியம் இன்னும் ஓரிரு வாரங்களில் நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லி இருந்தார். அதே போல் நீக்கப்பட்டும் விட்டது. அப்படியானால் இதை முதலில் விதித்ததற்கான காரணம் என்ன என்னும் கேள்வியும் எழுகிறது.
31 மார்ச் 2019க்கான ஆண்டறிக்கை எஸ் வங்கியின் நிதிநிலைமை நன்றாக இருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தும் இத்தனை குறுகிய காலத்தில் நிலைமை இவ்வளவு மோசமானது எங்ஙனம்? ஆடிட்டர்களும் ரிசர்வ் வங்கியின் தணிக்கையும் என்ன செய்துகொண்டிருந்தனர்?
இன்னொரு பரவலான தாக்கம் பொது மக்கள் தங்கள் டெபாசிட்டுகளைத் தனியார் வங்கியிலிருந்து எடுத்துப் பொது வங்கிக்குள் செலுத்தக்கூடும். இது நிகழ ஆரம்பித்து விட்டதை சில உதாரணங்களின் மூலம் நாமே காணலாம். 2015 முதல் 2019 வரை பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட் ரூ 1,65,000 கோடியாக இருக்க, தனியார் வங்களின் டெபாசிட் ரூ 46,680கோடிதான். ஆனால் கடந்த சில வருடங்களாக நிலமை மாறி, பொதுத்துறை வங்கிகள் ரூ 14,60,000 கோடி டெபாசிட் திரட்ட, தனியார் வங்கிகள் திரட்டிய டெபாசிட் தொகை ரூ 18,60,000 கோடிகள். ஆனால் எஸ் வங்கி வீழ்ச்சிக்குப்பிறகு மீண்டும் டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கிகளை நோக்கி நகரும். ஆகவே தனியார் வங்கிகள் டெபாசிட்டை வரவேற்க அதிக வட்டி கொடுக்க வேண்டும். அப்போது தனியார் வங்கிகள் தரும் கடன் வட்டி விகிதமும் உயரக்கூடுமல்லவா?
இது போலவே கடன் விநியோகத்திலும் தனியார் வங்கிகள், கடந்த சில வருடங்களில் பொதுத்துறை வங்கிகளை விட மிக அதிகமான அளவில் கொடுத்தார்கள். 2019-20ல் தனியார் வங்கிகள் கொடுத்த கடன் தொகையானது அதிகரிக்க, பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன் தொகை ரூ 25,560 கோடி குறைந்திருந்தது. இனி டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கியை நோக்கிப் போனாலும் அவை கடன் கொடுக்க மெத்தனமாக இருப்பதால் தொழில்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதும் வெளிப்படையாகத் தெரியாத இன்னொரு தாக்கமாகும்.
இன்று நாமெல்லோரும் எஸ் வங்கியின் வீழ்ச்சி பற்றி விலாவாரியாகப் பேசி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மேலே சொன்ன மறைமுகமான தாக்கங்கள் நமது நிதித்துறையில் ஏற்படக்கூடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு எஸ் வங்கியின் மறு சீரமைப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு, அவை திறமையாக நிர்வகிக்கப்பட்டால்தான் நிதித்துறை சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்க முடியும். முக்கியமாக எஸ் வங்கி போல வீழக் காத்திருக்கும் அடையாளங்கள் தெரியும் வங்கிகளையும் இப்போதே அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் தணிக்கை முறைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டு, அளிக்கப்பட்ட கடன்கள் திரும்ப வராமல் இருக்கக்கூடிய சமிக்ஞைகளை உடனுக்குடன் கண்டறிந்து, சம்மந்தப்பட்ட வங்கிகளின் மீது சீர் செய்யும் நடவடிக்கைகளுக்கு வழி செய்ய வேண்டும்.
(சக்திகாந்த தாஸ்)
இந்த வருட பட்ஜெட்சமயத்தில் நமது தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், ‘‘பொதுத்துறைகளில் இடப்படும் ஒரு ரூபாய் மூலதனம் அரசுக்கு 23 பைசா நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே ஒரு ரூபாய் மூலதனம் தனியார் வங்கிகளில் போடப்பட்டால் அது 9.6 பைசா லாபம் தருகிறது’’ என்று சொன்னதை நினைத்துப் பார்ப்போம். அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையினைக் கேள்விக்குரியதாக ஆக்கிவிட்ட எஸ் வங்கி மற்றும் இதர வீழ்ச்சிகளை எப்படி நிகழாமல் காக்கப்போகிறோம் என்பதில் முழு முனைப்போடு அரசும் ரிசர்வ் வங்கியும் உழைக்க வேண்டும். முக்கியமாக இன்று பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியிருக்கும் அரசு, நிதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வண்ணம் செயல்பட வேண்டியது முக்கியம். பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர எஸ் வங்கிக்கு மூலதனம் அளிக்க முன் வந்திருக்குப்பவை அனைத்துமே தனியார் வங்கிகள்தாம் என்பது, ரிசர்வ் வங்கி அமல்படுத்தியிருக்கும் மறு சீரமைப்புத்திட்டம் சரியான நோக்கில் செயல்படுத்த முடியக் கூடியதுதான் என்னும் நம்பிக்கையைத் தருகிறது. மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், எந்த நிலையிலும் டெபாசிட்டர்களின் பணத்துக்கு ஆபத்தில்லை. அதில் சிக்கல் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் ரிசர்வ் வங்கி முன் வந்து பணத்தைத் தந்து உதவும் என்று ஆணித்தரமாகத் தெரியப்படுத்தியிருப்பது, இந்த அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் நிதித்துறை மேலாண்மையைச் சரியான முறையில் நடத்திச் செல்லுகிறார்கள் என்னும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றைக் கண்டறிந்து சரிசெய்யும் முயற்சிகள் பாராட்டத்தக்க வகையில் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

1969ல் இருந்து மூடப்பட்ட தனியார் வங்கிகள்வலம் மார்ச் 2020 முழுமையான இதழ்

வலம் மார்ச் 2020  இதழ் :

வலம் மார்ச் 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.

அராஜகத்துக்குப் பலியான வடகிழக்கு தில்லி | தேஜஸ்வினி

நாடாளுமன்ற பட்ஜெட் 2020 | ஜெயராமன் ரகுநாதன்

2020 டெல்லி மாநிலத் தேர்தல் முடிவுகள் – கட்சிகள் கற்க வேண்டியது என்ன? | லக்ஷ்மணப் பெருமாள்

சில பயணங்கள் – சில பதிவுகள் 28 | சுப்பு

சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்

அந்தமானிலிருந்து கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

மகாபாரதம் – கேள்விகளும் பதில்களும் | ஹரி கிருஷ்ணன்

விஞ்ஞானப் புதினங்களின் பார்வையில் (தற்போது நிகழ்காலமாகிவிட்ட) எதிர்காலம் |ராம்ஸ்ரீதர்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பாகம் 11 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

ஹேமு என்கிற ஹேமசந்திர விக்ரமாதித்யா : வரலாற்றில் மறக்கப்பட்ட மாவீரர் | ஜடாயுஇந்திய வரலாற்றில் மாபெரும் திருப்பங்களை ஏற்படுத்திய போர்கள் என்று சிலவற்றைச் சொன்னால், மூன்று பானிபட் போர்களும் அதில் கட்டாயம் இடம்பெறும். இவற்றின் முடிவுகள் சிறிது மாறியிருந்தாலும் கூட இந்தியாவின் சரித்திரம் திசைமாறியிருந்திருக்கும். இதில், இரண்டாம் பானிபட் போரில் வீழ்ந்த ஹேமு என்ற மகத்தான வீர அரசர் முகலாயப் பேரரசர்கள் மற்றும் அவர்களது படாடோபமான வரலாறுகளுக்கிடையில் சிக்கி, அந்தக் காலகட்டத்தின் ஏராளமான இந்துக்களின் துயரமும் வேதனையும் நிறைந்த வாழ்க்கையைப் போலவே, சாதாரண அடிக்குறிப்பாக மட்டுமே எஞ்சிவிட்டார் என்பது சோகம்.

அது 1500களின் தொடக்கக் காலம். பாரதத்தின் வடக்கு மேற்கு, மத்தியப் பகுதிகள் பெருமளவு இஸ்லாமிய ஆட்சிக்குள் வந்து விட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த தென்னிந்தியா, ராஜபுதனம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்து ஆட்சியாளர்கள் நிலைபெற்றிருந்தனர். இஸ்லாமியர்களாக மாறிவிட்டிருந்த மத்திய ஆசியாவின் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்கிடையே தொடர்ந்து கடுமையாகப் போரிட்டுக் கொண்டுமிருந்தனர். மத்திய கால இந்தியாவின் பல பெரும்போர்கள் ஆப்கானிய – முகலாய மோதல்களே.

இச்சூழலில் தில்லியை நோக்கிப் படையெடுத்து வந்த தைமூர்-செங்கிஸ்கான் கலப்பு வம்சாவளியைச் சேர்ந்த பாபர் முதலாம் பானிபட் போரில் (1526) ஆஃப்கானியரான இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து முகலாய ஆட்சிக்கு அஸ்திவாரமிட்டார். பாபரின் மறைவுக்குப் பிறகு அவரது மகனான ஹுமாயூன் தொய்வடைந்திருந்த நேரத்தில், பீகாரில் இப்ராஹிம் லோடியின் படைப் பிரிவின் தலைவனாக இருந்த ஷேர் கான் சூரி, தில்லியின் மீது படையெடுத்து (1540) முகலாயப் படைகளைத் தோற்கடிக்க, பாபரின் மகன் ஹுமாயூன் ஈரானுக்குத் தப்பியோடினார். சாதாரண ஆப்கானிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த படைத்தலைவனான ஷேர் கான், இவ்வெற்றிக்குப் பின்பு ஷேர் ஷா சூரி என்று தில்லியின் அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.

இந்தச் சூழலில்தான் ஹேமுவின் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வரத் தொடங்குகிறது.  அவரது இளமைப் பருவம் குறித்து அதிக விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. தில்லியிலிருந்து 150 கிமீ தொலைவில் ஜெய்ப்பூருக்கு வடக்கே ராஜஸ்தானத்தில் அல்வர் (Alwar) நகரின் Dhansar பகுதியில் வசித்து வந்த ஒரு ஏழ்மையான வணிகக் குடும்பத்தில் (பனியா) அவர் பிறந்திருக்கலாம் என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் R.C.மஜூம்தார். ஹேம ராய், பஸந்த் ராய் அல்லது ஹேம சந்திர பார்கவா என்பது அவரது மூலப் பெயராக இருக்கலாம் என்று K.K.பாரத்வாஜ் கருதுகிறார். சிறுவயதிலேயே அவரது குடும்பம் தில்லி நகர்ப் புறத்திற்கு இடம் பெயர்ந்தது. தனது இளமைப் பருவத்தில் அவர் ஹிந்தி, சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி பாரசீக மொழிகளில் அடிப்படை தேர்ச்சி உள்ளவராகவும், குதிரை ஏற்றம், மல்யுத்தம் ஆகிய கலைகளைப் பயின்றவராகவும் இருந்தார் என்று கருதப் படுகிறது.
தில்லியின் புறநகர்ப் பகுதியான ரேவாரி (Rewari) என்ற இடத்தில் சந்தையில் பலசரக்கு, காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரியாக ஷேர் ஷாவின் படைத்தலைவர்களுக்கு அவர் அறிமுகமாகிறார். பீரங்கிகளுக்கு வேண்டிய வேதி உப்பு (saltpetre) தயாரித்துத் தருபவராகவும் அவர் இருந்திருக்கலாம். 1545ல் ஷேர் ஷாவின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் இஸ்லாம் ஷா அரசராகும் போது, ஹேமு அரசு நிர்வாகத்தின் அபிமானத்தைப் பெற்று பிரதான சந்தைக் கண்காணிப்பாளர் என்ற பதவியை அடைந்து. முக்கியமான ஒற்றராகவும் பணியாற்றுகிறார்.

இஸ்லாமிய அரசில் இந்துக்கள் ஜிஸியா வரி போன்ற கொடும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும், பெண்களைக் கவர்ந்து செல்லுதல், அடிமைகளாக்கி விற்றல், கட்டாய மதமாற்றங்கள், கோயில் அழிப்புகள் போன்ற கொடுமைகளுக்கும் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அரசாட்சி இயங்குவதற்கு இந்துப் போர்க்குடிகள், வணிகர்கள் ஆகியோரின் ஆதரவும் தேவைப்பட்டது. மேலும் எப்போதும் உட்பகைகளாலும் சூழ்ச்சிகளாலும் துரோகங்களாலும் நிறைந்திருந்த தில்லி இஸ்லாமிய அரசில், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பரஸ்பரம் ஒற்றர்களாக வைத்திருப்பது போன்ற யுக்திகளும் புழக்கத்திலிருந்தன என்பதைக் கவனிக்க வேண்டும்.

1553ல் இஸ்லாம் ஷாவின் மறைவிற்குப் பின், அவரது 12 வயது மகனான பிரோஸ் ஷாவைக் கொன்றுவிட்டு, மாமன் அடில் ஷா சூரி தில்லியின் அரசராகிறார். ஹேமுவின் அந்தஸ்து மேலும் உயர்ந்து அவர் பிரதம அமைச்சராகவும் (Wazir), பிரதான கண்காணிப்பாளராகவும் ஆகிறார். அடில் ஷா சூரியின் அரசவையில் பணி நியமனங்கள், நீதி வழங்குதல் ஆகியவற்றுக்கான அதிகாரம் அனைத்தும் ஹேமுவிடம் இருந்தது என்று அபுல் ஃபசல் தனது ‘அக்பர் நாமா’வில் குறிப்பிடுகிறார்.

அடில் ஷா சூரியின் அனைத்துப் போர் வெற்றிகளுக்குப் பின்னும் ஹேமுவின் கூர்மையான யுத்த மேதைமையும் வீரமும் இருந்தது. மன்னருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஆஃப்கானிய கிளர்ச்சியாளர்கள் உட்பட பல்வேறு  எதிரிகளைத் தோற்கடித்து 22 போர்களில் அடில் ஷாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஹேமு. அப்படியும் ஷேர் ஷா சூரியின் பேரரசு நான்கு துண்டுகளாக உடைந்து, ஆக்ரா-பீகார் பகுதிகளின் அதிகாரம் மட்டுமே அடில் ஷாவிடம் நீடிக்கிறது. வங்கத்தில் முகமது ஷா சூரி தன்னை சுயமாக மன்னராக பிரகடனம் செய்து கொள்ள அங்கு பெரும்படையுடன் சென்று அவரை ஹேமு முறியடிக்கிறார். வங்கத்தில் படைகளுடன் தங்கி அந்த மாகாணத்தில் நிர்வாக அமைப்பைச் சீரமைத்து வருகிறார்.

இச்சூழலில் தில்லியில் ராணுவ பலம் தளர்ந்த போது, ஈரானில் ஒளிந்திருந்த ஹுமாயூன் தனது படைத்தலைவர் பைராம் கான் தலைமையில் படையெடுத்து வந்து 1555ல் அங்கு ஆண்டு வந்த சிகந்தர் ஷா சூரியைத் தோற்கடித்து தில்லியைக் கைப்பற்றினார். 1556ல் ஹுமாயுன் இறந்தார். அவரது மகனான அக்பர் அப்போது 13 வயது சிறுவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தில்லியை நோக்கி தனது படைகளைத் திருப்பிய ஹேமுவை தார்டி பெக் கான் தலைமையிலான முகலாயப் படைகள் துக்ளகாபாத் என்ற இடத்தில் சந்திக்கின்றன.

புகழ்பெற்ற துக்ளகாபாத் போரில் (1556) முகலாயப் படைகளுடன் ஒப்பிடுகையில் ஹேமுவின் படை பெரும் வலிமை கொண்டிருந்தது. அவரது படையில் இந்து வீரர்களும் ஆப்கானியர்களும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர். 1000 யானைகள், 50,000 குதிரைகள், 51 கனரக பீரங்கிகள், 500 falconets எனப்படும் மென்ரக பீரங்களிகள் கொண்ட மாபெரும் படை ஹேமு என்ற ஹேமசந்திராவின் தலைமையில் அணிவகுத்து வந்தது என்று இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பதாயுனி பதிவு செய்கிறார். பீதியுடன் போரிட்ட முகலாயப் படைகளை வென்று தில்லியை ஹேமு கைப்பற்றுகிறார்.

தனது சுயமான வீரத்தாலும் தலைமைப் பண்பாலும் தில்லியை வென்றடுத்த ஹேமு, தன்னை சுதந்திரமான மன்னராகப் பிரகடனம் செய்து கொண்டார். புரானா கிலா எனப்படும் தில்லியின் கோட்டையில் பறந்து கொண்டிருந்த இஸ்லாமியக் கொடியை இறக்கி இந்துக்களின் காவிக் கொடியைப் பறக்க விட்டார். 1556 அக்டோபர் 7 அன்று பாரம்பரிய இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க, அந்தணர்கள் ஆசிகூற, புனித தீர்த்தங்களின் நீர்த்திவலைகள் தெறிக்க, வெண்கொற்றக் குடை மேல்விரிய, தில்லியில் அவரது ராஜ்யாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது என்று வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்கார் தனது நூலில் குறிப்பிடுகிறார். ஆப்கானிய சர்தார்களும், இந்து சேனாபதிகளும் அருகருகே நின்று தங்கள் மாமன்னராக அவரைப் பிரகடனம் செய்து வாழ்த்தினர். பிருத்விராஜனுக்குப் பிறகு 350ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்து மன்னர் தில்லியின் அரியணையில் ஏறிய மகத்தான தருணம் அது. அதற்கு ஏற்ற வகையில் ‘சம்ராட் ஹேமசந்திர விக்ரமாதித்யா’ என்ற பட்டப் பெயரையும் அவர் ஏற்றார். அப்பெயரில் நாணயங்களையும் உடனடியாக ஆணை பிறப்பித்து வெளியிட்டார். மிகச்சிறந்த நிர்வாக அனுபவம் கொண்டிருந்த ஹேமு, சீரழிந்திருந்த நிர்வாக அமைப்புகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளில் இறங்கினார். ஆப்கானிய சர்தார்களுக்கும் இந்து படைத்தலைவர்களுக்கும் பாரபட்சமின்றி வெகுமதிகளை வழங்கினார்.

துக்ளகாபாத் போரின் தோல்வியினால் பெரிதும் மனம் தளர்ந்திருந்த முகலாயப் படைத்தலைவரும் அக்பரின் பாதுகாவலருமான பைராம் கான், ஹேமுவின் இந்த வெற்றியைக் கண்டு மேலும் பீதியடைந்தார். உடனடியாக, எஞ்சியிருந்த முகலாயப் படைகள் திரண்டு 1556 நவம்பர் 5ம் நாள் பானிபட்டில் ஹேமுவின் பெரும் படைகளை எதிர்கொண்டன. மீண்டும் முகலாயர்களின் தோல்விக்கான சாத்தியங்களே அதிகம் என்ற நிலை இருந்த இப்போரில் எச்சரிக்கையுடன் அக்பரும் பைராம் கானும் போர்க்களத்திலிருந்து 8 மைல் தூரத்திலுள்ள தளவாடத்திலேயே தங்கி விட்டனர். அலி குலி கான் ஷைபானி உள்ளிட்ட நான்கு படைத்தலைவர்கள் முகலாயப் படைகளை நடத்திச் சென்றனர். எதிர்த்தரப்பில், ஹவாய் என்ற புகழ்பெற்ற யானை மீதேறி ஹேமசந்திரா தானே தனது படைகளை நடத்தினார். இடப்புறம் அவரது சகோதரி மகன் ரமையா, வலப்புறம் ஷாதி கான் கக்கார் ஆகியோர் படைத்தலைவர்களாக வந்தனர். போர் தொடக்கத்திலிருந்தே ஹேமுவின் படைகளுக்கே வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தது. முகலாயப் படைகளையும் இரு பக்கப் பிரிவுகளையும் சேதமடையச் செய்து மையத்தை நொறுக்குவதற்காக ஹேமுவின் படை முன்னேறிக் கொண்டிருந்தது.

வெற்றி மயிரிழையில் இருக்கும் தருணத்தில் முகலாயர் படையிலிருந்து பறந்து வந்த அம்பு ஹேமுவில் இடது கண்ணில் தைத்து விட, அவர் உடனே நினைவிழந்தார். இது ஹேமுவின் படைகளிடையே உடனடியாகப் பெரும் கலக்கத்தையும் நிலைகுலைவையும் உண்டாக்கியது. படைகளின் வியூகம் குலைந்தது. ஹேமுவின் படைவீரர்கள் போரிடுவதை விட்டு தப்பியோடத் தொடங்கினர். முகலாயப் படை இதைப் பயன்படுத்தி முன்னேறி பெரும் அழிவை நிகழ்த்தியது. ஹேமுவின் படைவீரர்கள் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். தோல்வியே கண்டறியாத வீரர் என்று புகழ்பெற்றிருந்த ஹேமு தனது வாழ்வில் முதலும் கடைசியுமாகத் தோற்றார்.  

காயம் பட்டு நினைவிழ்ந்திருந்த ஹேமுவைத் தாங்கிச் சென்ற யானையை முகலாயப் படை சிறைப்பிடித்து அக்பரும் பைராம் கானும் தங்கியிருந்த கூடாரத்துக்கு எடுத்துச் சென்றது. இறந்து கொண்டிருந்த ஹேமுவின் தலையை வாளால் வெட்டிக் கொன்று காஜி (காஃபிர்களைக் கொன்றவன்) என்ற புகழ்மிக்க பட்டத்தை அடையுமாறு பைராம் கான் ஆணையிட, 13 வயதான அக்பர் அதை அப்படியே ஏற்று நிறைவேற்றினார். ஹேமுவின் கொய்யப் பட்ட தலை வெற்றிச்சின்னமாக காபூலுக்கு அனுப்பப்பட்டது. அவரது சிதைந்த உடல் தில்லிக் கோட்டையின் ஒரு வாயிலில் தொங்கவிடப்பட்டது. இப்போரில் கொல்லப்பட்ட காஃபிர்களின் தலைகளைக் கொய்து அதனை மீனார் (ஊசிக் கோபுரம்) ஆகக் கட்டினார் அக்பர். இந்த செய்திகள் அனைத்தையும் அபுல் ஃபசல் தனது அக்பர் நாமாவில் பதிவு செய்கிறார். அக்பர் தலைகளை வைத்துக் கோபுரம் கட்டும் முகலாய பாணி ஓவியமும் நூலின் பிரதிகளில் வரையப்பட்டுள்ளது.

 

இத்தகைய கொடூரம் வாய்ந்த அக்பரைத்தான் நேருவிய-மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் பொய்களை அள்ளி வீசி அமைதியை விரும்பிய பேரரசர் என்பது போல சித்தரித்துள்ளனர்.

ராஜஸ்தானில் அல்வர் நகருக்கருகில் Machari என்ற கிராமத்தில் வாழ்ந்த ஹேமுவின் குடும்பத்தினரையும் முகலாயப் படைகள் வேட்டையாடினர். 80 வயதான ஹேமுவின் தந்தை இஸ்லாமுக்கு மதம் மாறும்படி கட்டாயப் படுத்தப்பட்டார். அதை மறுக்கவே, உடனடியாகக் கொல்லப்பட்டார். ஹேமுவின் மனைவி, குழந்தைகள் எங்கோ தப்பித்து ஓடிப் பிழைத்ததாகக் கருதப்படுகிறது.

ஹேமுவின் மறைவிற்குப் பின் அடில் ஷா சூரியும் அதிக நாள் வாழவில்லை. 1557ல் வங்கத்தில் ஹேமுவால் முறியடிக்கப் பட்ட முகமது ஷா சூரியின் மகன் கிஸ்ர் கானால் கொல்லப்பட்டார்.

இவ்வாறாக ஹேமுவின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஒளிவீசும் சூரியன் போல எழுந்து வந்த மாவீரன் மின்னல் போல மறைந்து விட்டான். இதற்குப் பிறகு 1709ல் அவுரங்கசீப் இறந்த பின்பு, 1737ல் தான் பேஷ்வாவின் மராட்டியப் படைகளின் வெற்றி முழக்கத்துடன் இந்து அரசதிகாரம் தில்லியில் மீண்டும் தலையெடுக்க முடிந்தது. 

மிக எளிய பின்னணியிலிருந்து எழுந்து வந்து மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய ஹேமுவின் வீரமும் பண்புகளும் அவரது எதிரிகளாலும் கூடப் புகழப்பட்டன. பதாயுனி (The Muntakhabu-rūkh), அபுல் ஃபசல் (அக்பர் நாமா), நிஜாமுதீன் அகமது (Tabaqat-i-Akbari), அஹ்மத் யாத்கார் (Tārikh-i-Salātin-i-Afghāniyah), அப்துல்லா (Táríkh-i Dáúdí) ஆகிய இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் பதிவுகளில் ஹேமுவைப் பற்றிய குறிப்புகள் வெறுப்பும், அசூயையும் அதே சமயம் பொறாமையும் வன்மமும் கலந்த மதிப்புடனும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நவீன காலகட்டத்திய வரலாற்றாசிரியர்களான V.A.ஸ்மித், Sri Wolsey Haig, ஜதுநாத் சர்கார், R.C.மஜும்தார் ஆகியோர் ஹேமுவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உள்ளவாறே பதிவு செய்துள்ளனர்.

ஒரு மாதம் கூட தில்லியின் அரியணையில் அமர்ந்து அரசு செய்யாவிட்டாலும் கூட, ஹேமசந்திர விக்ரமாதித்யனின் புகழ்மிக்க வாழ்வு இந்துக்களின் நெஞ்சில் நீங்காது நிலைபெற்று விட்டது. அச்சு ஓவியங்கள் வரத் தொடங்கியபோது 1910களில் அவரது ராஜதர்பார் ஓவியமாக வரையப்பட்டு வீடுகளில் வைக்கப்பட்டது.
  
தற்போது, ஹரியானாவில் பானிபட்டில் உள்ள அருங்காட்சியகத்தின் வாயிலை ஹேமசந்திரரின் சிலை அலங்கரிக்கிறது.அருங்காட்சியகத்தின் உள்ளே அக்பர் கட்டிய ‘தலை கோபுரம் ஓவியமும் உள்ளது.

வரலாற்றின் கசப்புணர்வுகளை ஒரு நவீன சமுதாயம் கற்று, மறந்து முன்செல்லலாம். ஆனால் வரலாறு அளிக்கும் முக்கியமான பாடங்களையும், மகத்தான உத்வேகங்களையும் நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.

வீரரை வீரர்கள் போற்றுவர். ஹேமுவின் புனித நினைவை நாம் போற்றுவோம்.  
அராஜகத்துக்குப் பலியான வடகிழக்கு தில்லி | தேஜஸ்வினி
வடகிழக்கு தில்லி கலவரங்களில் 42 பேர் பலியாகியுள்ளனர். வழக்கம்போல், இந்து அமைப்புகளே இதற்கு முழுமுதற் காரணம் என்று ஊடகங்கள் வர்ணிக்கத் தொடங்கி, பழிபோடுவதில் உச்சத்தைத் தொட்டுள்ளனர்.

கலவரக் கதை, பா... உறுப்பினர் கபில் மிஸ்ராவில் இருந்தே தொடங்கப்படுகிறது. ‘அமெரிக்க அதிபர் கிளம்பும்வரைதான் காத்திருப்பேன், நீங்களாகக் கலைந்து போகாவிட்டால், நாங்கள் கூட்டத்தைக் கலைத்துவிடுவோம்என்று அவர் ஷாகீன்பாக் போராட்டக்காரர்களைப் பார்த்துத் தெரிவித்ததே, வடகிழக்கு தில்லி பகுதியான ஜாஃப்ராபாத்தில் கலவரம் தொடங்கக் காரணம் என்ற வர்ணனை சுவாரசியமாக முன்வைக்கப்படுகிறது.

இது நடப்பது பிப்ரவரி 23 ஆம் தேதி.

ஆனால், அதற்கு முன்பே, ஜாஃப்ராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் இஸ்லாமியப் பெண்கள் திரளத் தொடங்கிவிட்டார்கள். 22ஆம் தேதி, இஸ்லாமியர்கள் நிறைந்த சாந்த்பாக் பகுதியில் இருந்து ராஜ்காட்டுக்கு பேரணி செல்ல அனுமதி கோரப்பட்டது. போலீஸ் அனுமதி தர மறுத்துவிட்டது. ஆனால், இஸ்லாமிய பெண்கள் திரண்டு, நடக்கத் தொடங்குகிறார்கள். ராஜ்காட்டுக்குத்தான் போகிறார்கள் என்று நினைத்த போலீஸுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உட்கார்ந்துவிட்டார்கள். இது ஒரு பிரதான சாலை. சீலம்பூர், மெளஜ்பூர் முதல் யமுனா விஹார் வரை இணைக்கக்கூடிய சாலை 66 என்று இதற்குப் பெயர். இங்கே, சாலையை மறித்து உட்கார்ந்ததில், போக்குவரத்து பாதிப்பு தொடங்கியது. அன்று இரவு வரை யாரும் இதை இடைஞ்சல் என்பதற்கு மேல் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

ஆனால், 23ஆம் தேதி இரவில் இருந்து இதே பகுதியில் இரண்டு விஷயங்கள் நடைபெறத் தொடங்கின. முதலில், ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே அமர்ந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. இரண்டு, கபில் மிஸ்ராவின் பேச்சு வீடியோ இந்தப் பகுதியில் அதிகம் வலம்வரத் தொடங்கியது. மேலும், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகத்தில் வாரிஸ் பதான் பேசிய மற்றொரு வீடியோவும் இவர்களிடையே புழங்கத் தொடங்கியது.

கபில் மிஸ்ரா வீடியோ பேச்சு வலம் வரத் தொடங்கியவுடன், மெளஜ்பூர் பகுதியில் சின்னச் சின்னதாக மோதல்கள் எழுந்தன. பிப்ரவரி 23 மாலை 5 மணிக்குத் தொடங்கிய மோதல்கள், 24 காலை முழுவீச்சை எட்டியது. வடகிழக்கு தில்லி முழுவதும் கலவர பூமியானது.

இந்தக் கட்டுரை எழுதும்போது, கலவரம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அமைதி திரும்பியுள்ளது. வடகிழக்கு தில்லியின் பல பகுதிகளில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால், கலவரம் நடந்த மூன்று நாட்கள் மற்றும் அதற்குப் பிறகான ஊடக வர்ணனைகளில், பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வளைய வரும் வீடியோக்கள் பெரும்பாலும் இந்து தரப்பில் இருந்தே எடுக்கப்பட்டவை. அதாவது, போலீஸும் ஊடகக் காரர்களும் இந்து தரப்பு மக்கள் மத்தியில் சுலபமாக இறங்கிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடிந்தது. ஆனால், இஸ்லாமியர் ஏராளமாக வாழும் பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் எதுவும் அவ்வளவு விரைவாகப் பொதுமக்கள் பார்வைக்கு வரவே இல்லை. அவையெல்லாம் கடந்த ஒன்றிரண்டு நாட்களாகத் தான் லேசாகத் தெரியத் தொடங்கியுள்ளன. ஒரு குறிப்பிட்ட வீடியோவில், இஸ்லாமியப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 500 தாள் கொடுக்கப்படுவது தெரிகிறது. இன்னொரு வீடியோவில், குறிப்பிட்ட நபர் ஒருவர் இஸ்லாமிய கூட்டத்தினரால் அடித்துக்கப்படுவது தெரிகிறது. கலவரம் தொடங்கிய பிறகு, இஸ்லாமியத் தரப்பினர் வாழும் பகுதிகளில், போலீஸாரால் கூடப் போகமுடியவில்லை. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

2. ஜாஃப்ராபாத்தில் இஸ்லாமிய பெண்களின் திரட்டலுக்கு யார் காரணம்? மூன்று முக்கியமான அமைப்புகள் இதன் பின்னே செயற்பட்டுள்ளன. இவர்கள் தான் ஷாகீன்பாக் போராட்டத்துக்கும் பின்னணியில் இருந்து வேலை செய்தவர்கள்.

3. முதலாவது வருவது, இடதுசாரி பெண்கள் அமைப்பானபிஞ்ரா தோட்’ (PinjraTod). இவர்கள் தான் ஜாஃப்ராபாத்தில் இஸ்லாமியப் பெண்களை கூட்டிக்கொண்டு வந்தவர்கள். இடதுசாரி தீவிரவாத அமைப்பான பிஞ்ரா தோட், கமுக்கமாக வேலை செய்பவர்கள். இந்தியாவெங்கும் இதுபோன்ற மா.லெ. இயக்கத்தினர் இப்படிப்பட்ட குயுக்தியோடு செயல்படுபவர்கள்.
தமிழகத்தில், எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு, அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு கூட்டம் கோஷம் போடச் சென்றது. பல பெண் பத்திரிகையாளர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அவர்களிடையே புகுந்திருந்த மா.லெ. கும்பல், சட்டென வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது. எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் தொடங்கியது. உண்மையில் பல பத்திரிகையாளப் பெண்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. வழக்கு போடப்பட்டபோது, அப்பாவிப் பெண்கள் இதனால் பாதிப்படைந்தனர்.

அதேபோல்தான் வடகிழக்கு தில்லியிலும் நடந்துள்ளது. இஸ்லாமியப் பெண்களைத் தெருவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தபிஞ்ரா தோட்டின் உண்மை முகத்தை முதன்முதலில் ஒரு டிவீட் தான் போட்டு உடைத்தது. ஓவியாஸ் சுல்தான் கான் என்பவர் எழுதியுள்ள டிவீட்டைப் படியுங்கள்:
மேட்டுக்குடி சிவில் சமூகங்கள் மற்றும் பிஞ்ரா தோட் போன்ற குழுக்களின் கற்பனைகளுக்காக, சீலம்பூர் மற்றும் டிரான்ஸ் யமுனா பகுதி மக்களாகிய நாங்கள்தான் பெரும் சிரமத்தில் தள்ளப்பட்டு இருக்கிறோம். இந்தப் பகுதியினர் அனைவரும் கவலைப்படுகின்றனர். எங்கும் பேரச்சம் நிலவுகிறது. அவர்கள் எல்லா இடங்களிலும் வன்முறையைக் கட்டவிழுத்துவிடுகின்றனர். இன்று, ஜாஃப்ராபாத் பிரதான சாலையை மறித்துவிட்டார்கள்.
 1992, 2006 கலவரங்களின் பாதிப்புகளும் சமீபத்தில் மத்திய அரசு நிகழ்த்திய வன்முறையின் சுவடுகளும் இன்னும் எங்கள் பகுதியினரிடையே உண்டு. அப்போதெல்லாம் இவர்கள் யாரும் எங்களுக்கு பக்கபலமாக நிற்கவில்லை.
 மிக மோசமான பொறுப்பற்ற நடத்தை இது.
 ஒரு சில உள்ளூர்ப் பெண்கள், சாலை மறியல் செய்ய மறுத்தபோது, பிஞ்ரா தோட் தலைவர்கள் சொன்னார்கள்:
 “நாங்கள் போர்க்கோலம் பூண்டுவந்துள்ளோம், எங்களோடு இல்லாதவர்கள் அனைவரும் இந்த நாட்டுக்குத் துரோகம் செய்தவர்கள்.”
 தில்லிகேட் தர்யாகஞ்ச் பகுதியில் இதே பிஞ்ராதோட், போலீஸாரோடு மோதியது, ஆனால் யாருமே கைதாகவில்லை. அவர்கள் ஓடிவிட்டார்கள். உள்ளூர் மக்கள் தான் கைதாகி, வழக்கைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 அவர்களுடைய சாகசங்களுக்காக நாங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறோம்.
 எங்கள் பகுதியில், அமைதி திரும்ப கடுமையான உழைத்துக்கொண்டிருக்கிறோம். எந்தவிதமான வன்முறையையும் அனுமதிக்க முடியாது.
 இதே வேலையை பிஞ்ரா தோட் அமைப்பினர் முன்பே டிரான்ஸ் யமுனா போராட்ட தலத்திலும் பலமுறை செய்ய முயன்றனர். நாங்கள் அவர்களை அப்போது தடுத்தோம். எங்கள் போராட்டம் அமைதி வழியிலேயே நடைபெறும் நாங்கள் தெளிவாக அவர்களுக்குச் சொன்னோம்.
 எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள். வெளியார்கள் வந்து எங்கள் பகுதிகளில் இதுபோன்ற வீரதீர சாகசங்கள் செய்வதைத் தடுக்க எங்களுக்கு உதவுங்கள்.
 கோரிக்கையை வைப்பவர்கள்:
 சீலம்பூர், ஜாஃப்ராபாத், டிரான்ஸ் யமுனாவின் பொறுப்பான குடிமக்கள்

இதனை ஏற்றுக்கொள்வது போல் இன்னொரு டிவீட் போட்டவர், காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டின் செய்தி ஆசிரியர் அஷ்லின் மேத்யூ. அவர், “பிஞ்ரா தோட் பெண்கள், சாலை மறியல் செய்ய ஜாஃப்ராபாத் பெண்களைத் தள்ளிக்கொண்டு போவதாக ஞாயிறுமுதல் அறிந்துவருகிறேன். இது கூட்டுமுடிவு என்று ஜாஃப்ராபாத் பெண்கள் தெரிவித்தனர். டிசம்பர் மாதம் தர்யாகஞ்சில் வன்முறை ஏற்பட்டபோது, பிஞ்ரா தோட் குழு அங்கே இருந்தது,” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

4. இந்தக் கலவரத்துக்குப் பின்னே இருந்த இன்னொரு நபர், ஷர்ஜில் இமாம். தில்லி ஷாகீன்பாக் போராட்டத்தைத் தூண்டிவிட்டவரே இவர் தான். இவர் ஆரம்பித்த தீயில் குளிர் காய்ந்தவர்கள் தான் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும். மதம் சார்ந்த போராட்டமாக வெடித்த ஷாகீன்பாக்கை, செக்கியூலராக மாற்றிய புண்ணியவான்கள் தான் ஆம் ஆத்மியும் காங்கிரஸும். (ஷர்ஜில் இமாம்)

ஷர்ஜில் இமாம், ஜே.என்.யு. மாணவர். இவரது பேச்சுகள் அனைத்தும் பிரிவினை வாத விஷம் தோய்ந்தவை. ஷாகீன்பாக் போராட்டத்தில், இவர் தெரிவித்த இரண்டு கருத்துகள் கவனிக்கத்தக்கவை.

இந்திய முஸ்லிம்கள் திரண்டு எழுந்து, அஸாமையும் வடகிழக்குப் பகுதியையே துண்டித்துவிட வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு புத்திபுகட்ட முடியும் என்று பேசினார். இன்னொன்று, சாலையை மறிப்பது ஒன்று தேசத் துரோகம் அல்ல என்பது.

ஷர்ஜில் இமாம் ஒரு முகம் தான். இவருக்குப் பின்னே இருக்கும் இயக்கங்கள் தான் நம்மை அச்சமடைய வைப்பவை. இரண்டு அமைப்புகள் இவருக்குப் பின்னே உள்ளன என்கிறது உளவுத் துறை.

ஒன்று, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா. கர்நாடக ஃபோரம் ஃபார் டிக்னிட்டி, கேரளத்தின் நேஷனல் டெவலப்மெண்ட் பிரண்ட், தமிழகத்தின் மனித நீதி பாசறை, செளத் இந்தியா கெளன்சில் ஆகியவற்றின் கூட்டு அமைப்புதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா. இந்த அமைப்புதான் நாடெங்கும் நடைபெறும் பல்வேறு சி...வுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதியுதவி அளித்துவருவதாகத் தெரிகிறது. இதுவரை இந்த அமைப்பினர் ரூ.120 கோடி ரூபாய் வரை செலவிட்டிருப்பதாக, மத்திய அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது. இந்தப் பணம், சி...வுக்கு எதிரான போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தகவல்.

தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வரும் அமைப்பு, பி.எஃப்.. தேசிய புலானாய்வு முகமை தொடர்ந்து பல மாநிலங்களில் மேற்கொண்டுவரும் ரெய்டு மற்றும் கைதுகளில், பி.எஃப்.. உறுப்பினர்களே சிக்கிவருகின்றனர்.

இரண்டாவது அமைப்பு, இஸ்லாமிக் யூத் பெடரேஷன் (.ஒய்.எப்.). இது இன்னும் மோசமான அமைப்பு. இவர்களுடைய நோக்கமே அல்லாவின் ஆட்சியை இந்தியாவில் நிலைநிறுத்துவதுதான். அதற்காகப் பல விதங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது.

இவர்களின் முகமாகச் செயல்பட்டு வரும் ஷர்ஜில் இமாம் பேச்சுகள், அனைத்து இடங்களிலும் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது.

5. வடகிழக்கு தில்லி கலவரத்தின் இன்னொரு முக்கிய புள்ளி, காவல் துறை. சி...வுக்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, மன ரீதியாகக் காயப்பட்டது போலீஸ்தான். எதைச் செய்தாலும் தப்பு, செய்யவில்லை என்றாலும் தப்பு என்று நீதிமன்றங்களும், ஊடகங்களும் அவர்களைக் காயடித்து வந்தார்கள்.

ஜாஃப்ராபாத் கலவரத்தை முதலில் இவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்தலாமா, கைது செய்யலாமா என்றெல்லாம் குழப்பம் நிலவியதாக போலீஸ் துறையினரே தெரிவிக்கின்றனர்.

சரியான உத்தரவுகளை மேலதிகாரிகள் அளிக்கவில்லை என்பதோடு, அவர்களுடையமொரேல்என்று சொல்லப்படும் மன உறுதியும் குலைந்துபோய்விட்டது. தொடர்ச்சியாக அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களே இதற்குக் காரணம். துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டியது தான், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதற்குக் காரணம்.

6. இந்தக் கலவரங்களின் நோக்கம் என்ன? ஒன்றே ஒன்றுதான். அமெரிக்க அதிபர் இந்தியா வரும்போதும் அவர் இங்கே இருக்கும்போதும், கலவரத்தைத் தூண்டி விட்டுவிட்டால், இரண்டு பலன்கள் கிடைக்கும். ஒன்று அதிபர் ஏதேனும் ஒரு கருத்து முத்தை உதிர்ப்பார். இரண்டு, சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவரலாம்.

பின்னர் இவை இரண்டையும் பிடித்துக்கொண்டு சிலம்பம் ஆடலாம் என்று காத்திருந்தார்கள். சென்ற முறை, அமெரிக்க அதிபரான ஒபாமா வந்துவிட்டுச் சென்றபோது, இந்தியாவின் மத சுதந்திரத்தைப் பற்றி, ஒரு நெருக்கடியான கருத்தை உதிர்த்தார். அது சர்வதேச சமூகங்களிடமும், ஊடகங்களிலும் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது.

அதேபோன்ற ஒரு வார்த்தை முத்தைத் தான் எதிர்பார்த்தார்கள் சி... எதிர்ப்பு கலவரக்காரர்கள். அதற்குக் கொடுக்கப்பட்ட விலை தான் இந்த 42 உயிர்கள். நல்லவேளையாக அந்த ஓட்டைவாய் அதிபர் இங்கே மட்டும் கொஞ்சம் நாக்கை அடக்கிக்கொண்டுவிட்டார். உள்நாட்டு விவகாரம் என்றதோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.

7. ஷாகீன்பாக்கை பயன்படுத்தி, ஆம் ஆத்மி கட்சி முழு மெஜாரிட்டியோடு ஜெயித்துவிட்டது. இப்போது அரவிந்த் கேஜரிவால் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். போலீஸ்துறை, மத்திய அரசின் கையில் இருப்பதால், தன் கையில் கறையில்லை என்ற எண்ணம் அவருக்கு.

8. ஊடகங்கள் தான் இதில் புகுந்து விளையாடின. உண்மை நிலவரங்களைச் சொல்வதைவிட, வழக்கம்போல், ஒரு பக்கச் சாய்வைக் காண்பித்து, அனைவர் பதற்றத்துக்கும் காரணமானது, என்.டி.டி.வி. சி.என்.என்., நியூஸ் 18 போன்றவை கொஞ்சம் சமச்சீராக செய்திகள் வெளியிட்டன. வலைத்தளங்களில், ஒயர், ஸ்கிரால், குவின்ட் ஆகியவை எதிர்ப்பிரசாரத்தை முன்னெடுக்க, பிரின்ட் மட்டும் கொஞ்சம் சமநிலையோடு நடந்துகொண்டது. ஊடகங்கள், Genocide, Pogrom போன்ற சொற்களை வெகு இயல்பாகப் பயன்படுத்தியதுதான் எரிச்சல் தந்தது. இனப்படுகொலை என்றே தில்லி கலவரத்தைச் சித்திரிக்க, இவர்களுக்கு எங்கிருந்து மனம் வந்ததோ தெரியவில்லை. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் மட்டும் இச்சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல். 

9. இதில் முக்கியமான புள்ளி என்னவென்றால், உண்மையில் இஸ்லாமியச் சமுதாயத்துக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்பதுதான். ஆங்கில பத்திரிகைகள் எழுதுகிறவர்கள், டி.வி.யில் பேசுகிறவர்கள் எல்லோரும் ஒரு பொதுவான விவரிப்பையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பவர்கள். உண்மையில் இஸ்லாமியச் சமுதாயத்துக்குள் ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்க வேண்டும் இல்லையா? இங்கே தமிழகத்தில் தலித் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் தலித் அல்லாதவர்கள் பேசுவார்கள். உடனே, அவர்களை முளையிலேயே கிள்ளியெறியும் போக்கு வெளிப்படும். தங்கள் வலியைத் தாங்கள் தான் பேச வேண்டும் என்பார்கள். அதேபோல், சி..., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பற்றியெல்லாம் அவர்களுக்குள் என்ன விவாதம் நடைபெறுகிறது என்றே தெரியவில்லை. உருது ஊடகங்களில் ஏதேனும் நடைபெறுகிறதா என்பதை விவரம் அறிந்தவர்கள் தான் சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த தில்லி கலவரத்திலேயே இதர வெளியார்கள், தங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற எண்ணம் ஒருசில இடங்களில் வெளிப்பட்டது கண்கூடு. உதாரணமாக, இந்தக் கட்டுரையிலேயே மேலே குறிப்பிட்டஓவியாஸ் சுல்தான் கான்என்பவர் எழுதியுள்ள டிவீட் கவனிக்கத்தக்கது.

10. மத்திய உளவுத்துறையின் மிகப்பெரிய சறுக்கல் தில்லி கலவரங்கள். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் திட்டமிடப்படுகிறது என்பதை அவர்களால்  ஏன் முன் கூட்டியே கணிக்க முடியவில்லை என்பதற்கு பதில் இல்லை.

11. மத்திய அரசின் ஒரு முக்கிய பிரச்சினை, அவர்களால் இஸ்லாமியர் மத்தியில் உரையாடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்க முடியவில்லை என்பதுதான். பா...வும் இஸ்லாமிய அமைப்புகளும் ஏதேனும் ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டால், எல்லா குழப்பங்களும் தெளிவாகிவிடும். இது ஏற்படாமல் தடுப்பதில் தான் பல்வேறு சந்தர்ப்பவாத அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அதையும் விரைவில் முறியடிக்க மத்திய பா... முயற்சி செய்யவேண்டும்.

12. வடகிழக்கு தில்லி கலவரம் என்பது நீங்காத ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டது. வலியை ஏற்படுத்திவிட்டது. காவல்துறை, பொதுமக்கள் என்று பலருக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்யவே முடியாது. இத்தகைய ஓர் அமைதியின்மையையும் அதிகாரக் குலைவையும்  தான் கலவரக்காரர்கள் விரும்புகிறார்கள். ஆங்கிலத்தில் இதற்குப் பொருத்தமான சொல், அனார்கி (anarchy). அராஜகம். இம்முறை அவர்களுடைய மோசமான நோக்கத்துக்கு தில்லி பலியாகிவிட்டது. இனிமேலாவது உஷாராக இருக்கவேண்டும். அது மத்திய அரசின் கையில் தான் இருக்கிறது.

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய் – பாகம் 11, தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்


பகுதி 11
அரசியல் முன்னேற்றத்திற்கான சில பரிந்துரைகள்
இந்து-முஸ்லிம் உறவுகளின் கடந்த கால வரலாற்றை நான் இதுவரை தொட்டுச் சென்றிருக்கிறேன். தற்போது விஷயங்கள் எந்த அளவிற்கு வந்துள்ளன என்பதற்கான ஒரு சித்திரத்தையும் அளித்துள்ளேன். அரசியல் துறையில், தற்போதைய நிலைமையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த சில அவதானிப்புகளை இப்போது தருகிறேன்.
முஸ்லிம் தலைவர்கள் சார்பாகப் பின்வருவன பரிந்துரைப்படுகிறது:
​​அ) அனைத்து சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பிற அரசு, அரசு சார்ந்த அமைப்புகளில் தனித் தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
திரு. எம்.ஏ. ஜின்னா இந்த கட்சியில் அண்மையில் இணைந்திருக்கிறார். அவர் தன்னை ஒரு தேசியவாதி என்று எப்படிக் கூறிக்கொள்கிறார் என்பதை என்னால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தற்காலிகமானதே,முஸ்லிம்கள் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு காலம் வரும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.தனித் தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஒரு உள்நாட்டுப் போர் இல்லாமல், அது எப்போதும் ஒழிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய உள்நாட்டுப் போர், ஒரு சமூகம் மற்றொன்றின் மேல் தனது மேலாதிக்கத்தை நிறுவவதற்கு வழிவகுக்கும். இந்துஸ்தான் முழுவதும் முஸ்லிம் ஆட்சியை நிலைநாட்ட வெளிநாட்டு முஸ்லிம் நாடுகளின் உதவியை முஸ்லிம் தலைவர்களில் சிலர் கோரி வருகிறார்கள் என்று சில இந்துக்கள் அச்சப்படுவதற்கு இது வலுச்சேர்க்கிறது. இந்தப் பயம் உண்மையோ பொய்யோ,அந்த அச்சத்தைக் கொண்டிருப்பவர்கள்வகுப்புவாத பிரதிநிதித்துவத்தைவலிமையுடன் எதிர்ப்பது இயற்கையானது. ஆனால் அரசாங்கம் இதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதால், இந்த எதிர்ப்பு பயனற்றதாகவே இருக்கும். எனவே தற்போதைய நிலைமையை நீட்டிப்பதையே அவர்கள் விரும்பக்கூடும்.
சுயராஜ்யக் கோரிக்கு சரியான மறுமொழி இந்த தனித் தொகுதியுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம்.வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தொடர்ந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதைப் பற்றி பேசுபவர்களின் மனநிலையை என்னால் ஒருபோதும் பாராட்ட முடியவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு உண்மையில் புரியவில்லை.இதில் ஒன்று மற்றொன்றை எப்போதும் அடைய முடியாததற்கான சரியானவழி. கடந்த மூன்று ஆண்டுகளின் அனுபவம் அதற்கு மிக உறுதியான சான்று. முஸ்லிம்களின் இந்தக் கோரிக்கை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சுதந்திரத்திற்கு எதிரானநிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. மேலும் இந்தியா சுதந்திரத்திற்குத் தயாராக உள்ளது என்ற வாதத்திற்கு எதிரான பதிலை அளிக்கக்கூடியது.வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது ஒரு பொதுவான தேசம் என்ற யோசனைக்கு எதிரான மோசமான, அழிவைத்தரக்கூடிய, விரோதமான கொள்கை, அதிலும் தனித் தொகுதி என்பது இந்தத் தீய கொள்கையை அளவிட முடியாத அளவுக்கு மோசமாக்குகிறது. நம்நாட்டு முஸ்லிம் மக்கள் தேசியவாதத்தின் மீதான நம்பிக்கையிலும், சுதந்திரத்திற்கான கோரிக்கையிலும் உண்மையிலேயே அக்கறையுள்ளவர்களாக இருந்தால், அவர்களால் செய்யக்கூடியது தனித் தொகுதிகளை வலியுறுத்துவதல்ல.
ஆ) முசால்மன்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்கள் மற்றும் இடங்களில், மாகாண சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் மக்கள்தொகை அடிப்படையில் இருக்க வேண்டும். பிற மாகாணங்களிலும் இடங்களிலும், அவர்களுக்கு ‘பயனுள்ள சிறுபான்மை பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.
(இ) பிரிவு (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கையின் அடிப்படையில் அரசின் கீழ் உள்ள இடங்களும் அலுவலகப் பதவிகளும் விநியோகிக்கப்பட வேண்டும்.
(ஈ) முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாணங்களிலும், அகில இந்தியத் துறைகளிலும், முஸ்லிம்களுக்கு மொத்த பதவிகளில் 25 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
இந்த உட்பிரிவுகளை ஒவ்வொன்றாக அவற்றின் வரிசையின் அடிப்படையில் ஆராய்வோம்.
பிரிவு (அ) இன் உட்கருத்து கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் ஒன்றுபட்ட தேசத்தை நிராகரிப்பதாகும். இது முஸ்லிம் இந்தியா, முஸ்லிம் அல்லாத இந்தியா என இரு பிரிவுகளாக நாட்டைப் பிளவுபடுத்துவதை ஆதரிக்கிறது.நான் வேண்டுமென்றே முஸ்லிம் அல்லாத இந்தியா என்று சொல்கிறேன். ஏனென்றால் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் இருப்பதெல்லாம் அவர்களின் சொந்த உரிமைகளுக்கான உத்தரவாதம் மட்டுமே. மற்ற அனைத்து சமூகங்களும் அவர்களைப் பொருத்தவரை ஒரே கூட்டம்தான்.நாட்டின் அனைத்து பிரதிநிதித்துவ நிறுவனங்களிலும் தனித்தனி வாக்காளர்களுடன் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை கோருபவர்கள், தாங்கள் தேசியவாதத்தையோ அல்லது ஐக்கிய இந்தியாவையோ நம்பவில்லை என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளட்டும். இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாதவை.
சட்டமன்றங்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும், எப்போதென்றால் அந்தக் கொள்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே. ‘பயனுள்ளசிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கான வேண்டுகோள் ஏற்றுக்கொள்ள முடியாதது. திரு. ஜின்னா இதைப்பற்றி தனக்குச் சொந்தமான ஒரு சிறப்பு விளக்கத்தை வைத்துள்ளார். உண்மைகளின் வெளிச்சத்தில் அதை ஆராய்வோம். வங்காளத்திலும் பஞ்சாபிலும், முசல்மான்கள் பெரும்பான்மையில் உள்ளனர், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் இந்த மாகாணங்களை ஆளுவார்கள். இந்த மாகாணங்களில் உள்ள இந்துக்கள், திரு. ஜின்னாவின் விளக்கத்தின்படி, ஏற்கெனவே ஒரு சிறுபான்மையினர், எனவே அவர்களுக்கு எந்தவொரு சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்கும் உரிமை இல்லை. ஆனால் சீக்கியர்களின் நிலை என்ன? அவர்களுக்குச் சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்கு உரிமை இல்லையா? அதைப் பெறுவது யாருடைய பங்கிலிருந்து? இந்துக்களின் பங்கிலிருந்தா அல்லது முஸ்லிம்களின் பங்கிலிருந்தா? எந்தவொரு கொள்கையின் கீழும் அவர்கள் அதை இந்துக்களின் பங்கிலிருந்து பெற முடியாது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள உத்திரப் பிரதேசத்திலிருந்தோ அல்லது மற்ற மாநிலங்களிலிருந்தோ அவர்கள் அந்தப் பிரதிநிதித்துவத்தை எந்தக் கொள்கையின் அடிப்படையில் பெறுகிறார்களோ அதே அடிப்படையில்தான் சீக்கியர்களும் முஸ்லிம்களின் பங்கிலிருந்து இதைக் கோரமுடியும். இது ஹிந்துக்களும் சீக்கியர்களும் சேர்ந்து பெறுவதை விட பெரும்பான்மை பலத்தைக் கோரும் முஸ்லிம்களின் கோரிக்கையில் குறுக்கிடக்கூடும்.
சில முஸல்மான்கள் இதை உணர்ந்து, அவர்கள் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் அதிகமுள்ள பெரும்பான்மையுடன் திருப்தி அடைவார்கள் என்று வாதிடுகின்றனர். ஆனால் எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் வைத்திருக்க முடியாது அல்லவா.எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லஅனுமதிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பஞ்சாப்பில் தங்கள் ஆட்சியைத் திறம்படச் செய்ய முடியும் என்று அவர்கள் கற்பனை செய்கிறார்களா? இந்திய மாகாணங்களில் பஞ்சாப் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றியபோது மாகாணத்தின் ஆட்சியாளர்களாக இருந்த ஒரு சமூகத்தின் வீடு இது. அந்த சமூகம் வீரியமானது, வலுவானது, ஒன்றுபட்டது. இந்த ஏற்பாட்டின் மூலம் முழுமையாக அடிபணிந்த நிலையை ஏற்றுக்கொள்ள அந்தசமூகம் உடனடியாக ஒப்புக் கொள்ளுமா? வேறு எதுவும் அவர்களுக்கு உதவவில்லை என்றால், முன்பு செய்தது போல, அவர்கள் சுதந்திரத்தை எதிர்க்கக்கூடும்,
இந்தச் சூழ்நிலையில், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் உணர்வுகளை மிதிக்காமல் முஸ்லிம்கள் தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு தீர்வைத் தேட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். எனது பரிந்துரை பஞ்சாப் பிரிக்கப்பட வேண்டும். இரண்டு மாகாணங்களாக, மேற்கு பஞ்சாப் ஒரு பெரிய முஸ்லிம் பெரும்பான்மையுடன், ஒரு முஸ்லிம் ஆளும் மாகாணமாக இருக்க வேண்டும்; கிழக்கு பஞ்சாப், ஒரு பெரிய இந்து-சீக்கிய பெரும்பான்மையுடன்,முஸ்லிம் அல்லாததாக இருக்க வேண்டும். நான் வங்காளத்தைப் பற்றி விவாதிக்கவில்லை. திரு. தாஸ் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தை வங்காளத்தின் பணக்கார, மிகவும் முற்போக்கானஇந்துக்கள் எப்போதுமே செயல்படுத்துவார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாது. நான் அவர்களுடைய விஷயத்திலும் இதே ஆலோசனையை கூறுவேன், ஆனால் வங்காளம் திரு. தாஸின் ஒப்பந்தத்தை ஏற்க முடிவு செய்தால், நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்கள் சொந்த விஷயம்.
மௌலானா ஹஸ்ரத் மோகானிசமீபத்தில்இந்தியாவின் டொமினியன் அந்தஸ்தை முஸ்லிம்கள் பிரிட்டிஷாரின் கீழ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அவர்கள் நோக்கம் என்னவென்றால், இந்தியாவில் தனி முஸ்லிம் மாநிலங்கள், ஒரு தேசிய மத்திய அரசாங்கத்தின் கீழ் ஹிந்து மாநிலங்களுடன் இயங்கவேண்டும் என்பதே. இந்து மற்றும் முஸ்லிம் மக்களைக் கொண்ட சிறிய மாநிலங்களுக்கு அவர் ஆதரவாக இருக்கிறார். தனித் தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது விதியாக இருக்க வேண்டும் என்றால், சிறிய மாகாணங்களைப் பற்றிய மௌலானா ஹஸ்ரத்தின் திட்டம் மட்டுமே செயல்படக்கூடிய முன்மொழிவாகத் தெரிகிறது. எனது திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு நான்கு முஸ்லிம் மாநிலங்கள் இருக்கும்: (1) பதான் மாகாணம் அல்லது வடமேற்கு எல்லைப்புற மாகாணம், (2) மேற்கு பஞ்சாப், (3) சிந்து (4) கிழக்கு வங்கம் ஆகியவை. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் குறிப்பிட்ட அளவிலான முஸ்லிம் சமூகங்கள் ஒரு மாநிலத்தை உருவாக்கும் அளவிற்குப் போதுமானவை, இருந்தால் அவை இதேபோல் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரு ஐக்கிய இந்தியா அல்ல என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதன் பொருள் இந்தியாவை ஒரு முஸ்லிம் இந்தியா மற்றும் முஸ்லிம் அல்லாத இந்தியா என்று தெளிவாகப் பிரித்தல் ஆகும்.
இ) ஒரு தேசிய கண்ணோட்டத்தில், அரசாங்க சேவைஅல்லது பல்கலைக்கழகங்களில் எந்தவொரு இனவாத வேறுபாட்டையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஆயினும்கூட, தற்போதைய விஷயங்களில் முஸ்லிம் அதிருப்தி நன்கு நிறுவப்பட்டதும் உண்மையானதும் என்பதை மறுக்க முடியாது. அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய ரொட்டிகள், மீன்களின் நியாயமான பங்கை முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொள்ள இந்துக்கள் முன்வரவேண்டும். அவர்கள் முஸ்லிம்களின் நிலையிலிருந்து, அவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைக் காண வேண்டும். மியான் பாஸல்-இ-ஹுசைன் இந்த விஷயத்தில் உண்மையான குறைகளை முன்வைக்கிறார். ஆனால் இந்த குறைகளை நீக்கும் முறையில்மட்டுமே நம்பிக்கையற்ற முறையில் அவர் தவறு செய்துள்ளார். அவர் இந்துக்களின் கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்க வேண்டும், மேலும் கசப்பான மாத்திரையை இந்துக்களால் எளிதில் விழுங்கச் செய்யும் வகையில் செயல்படுத்தியிருக்கவேண்டும். அதைப் படிப்படியாகச் செய்திருக்கவேண்டும்.
பஞ்சாபில் மியான் பாஸல்-ஹுசைனின் ஆட்சி,மற்றும் லாகூரில் உள்ள சவுத்ரி ஷாஹாபுதீனின் ஆட்சி, முஸ்லிம் ஆட்சியின் கீழ் அவர்கள் இருக்கக் கூடியவற்றின் மாதிரியை இந்துக்களுக்கு வழங்கியுள்ளது. அவர்கள் இதைச் செயல்படுத்த ஏதுவாக இருந்தது கடந்த ஐந்து ஆண்டுகளில் சர் ஈ. மக்லாகன் மற்றும் சர் ஜான்மேனார்ட்டின் கொள்கைகள்தான். அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர் என்பதென்னவோ உண்மை.ஆனால் ஒரு இந்திய தேசபக்தராக மியான் பாஸல்-இ-ஹுசைன் பெருமைப்படக்கூடிய உண்மை இதுதானா? நான் மியான் பாஸ்ல்-ஐ ஹுசைனின் நிலையில் இருந்திருந்தால், அதே நோக்கத்தை வேறு வழியில் அடைய முயன்றிருப்பேன்.கடைசி முயற்சியாக மட்டுமே வெளிப்படையான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பேன். பஞ்சாபின் முஸ்லிம்களுக்கு (முஸ்லிம் நில உரிமையாளர்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள்ன், முஸ்லிம் பட்டதாரிகளிடமிருந்து வேறுபடுகிறவர்களையே நான் குறிப்பிடுவது) கல்வி, பொருளாதார வாய்ப்புகளே மிகப் பெரிய தேவைகளாக உள்ளன. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கல்வியறிவு குறைந்தமுஸ்லிம் மாவட்டங்கள் மாகாணத்தில் உள்ளன.
முஸ்லிம், இந்து நில உரிமையாளர்களின் தயவில் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு சில படித்த முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின் கீழ் பதவிகளை வழங்குவது தற்போதைய நிலைக்கு தீர்வு அல்ல. ஒரு சிலரின் நலன்களைப் பாதுகாப்பதும், பலரின் நலன்களைப் புறக்கணிப்பதும் பாராட்டத்தக்க ஒன்றல்ல, ஆனால் மியான் பாஸல்-இ-ஹுசைன் சாதித்தது அதைத்தான், அதுவும் மிகப்பெரிய செலவில்!
முஸ்லிம் ஆட்சியைத் தவிர, பொருள் ஈட்டவும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையவும்வேறு வழிகள் உள்ளன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இன்னும் அறியவில்லை. நவீன முற்போக்கான கொள்கைகளை முஸ்லிம்களிடம் முன்னிறுத்துவதை விட்டுவிட்டு, தனித்துவமான கொள்கைகளை, மயிர்பிளக்கும் கோட்பாடுகளை, அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திருப்பதைவெறுமனே வலியுறுத்துபவர்களை முஸ்லிம்களின் நல்ல நண்பர்கள் என்று அழைக்க முடியாது. இந்திய முஸ்லிம்கள் தங்கள் தலைவிதியை இந்துக்களுடன் இணைக்கும் பட்சத்தில், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேறஉதவுவது இந்துக்களின் கடமையாகும், ஆனால் தற்போதைய வகுப்புவாதக் கொள்கைகள் மேலோங்கினால், அவர்களின் பின்தங்கிய நிலை குறித்து ஹிந்துக்களின் அக்கறையின்மை பற்றி அவர்களால் குறை கூற இயலாது. தற்போதைய இனவாத போராட்டம், இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள வன்முறை, வற்புறுத்தலின் சூழ்நிலையுடன், இந்துக்களின் மனதில் ஒரு எதிர்வினையை மட்டுமே உருவாக்க முடியும்.


விஞ்ஞானப்புதினங்களின்பார்வையில் (தற்போதுநிகழ்காலமாகிவிட்ட) எதிர்காலம் | ராம்ஸ்ரீதர்


சிறிது காலம் முன் வரை விஞ்ஞானப் புதினங்கள் (நாவல்கள் மற்றும் திரைப்படங்கள்) எதிர்காலத்துடன் ஒரு சிக்கலான தொடர்பையே வைத்துக் கொண்டுந்திருந்தன.
பெரும்பாலும் இந்த வகை நாவல்கள் / திரைப்படங்களில் எதிர்காலத்தில் மனிதன் அற்புதமான / ஆச்சரியமான விஷயங்களைச் சாதிப்பான். உதாரணத்திற்கு, பறக்கும் கார்கள், சுயமாகப் பறந்து செல்ல தனிமனித ஜெட் பேக்குகள் (Jetpacks), எரிமலையின் அருகாமையில் உல்லாச சுற்றுலா – இதுபோன்றவை.
உண்மையைச் சொல்லப்போனால் இதுபோன்ற மகிழ்ச்சியான / ஒளிமயமான எதிர்காலம் போரடிக்கும் என்று தோன்றியதாலோ என்னவோ, இப்போது, சமீபகாலமாக, வரும் படைப்புகள் (நாவல்கள் / திரைப்படங்கள்) எல்லாமே எதிர்காலத்தை மிக அச்சுறுத்தும் வகையில் காட்டுகின்றன.
விஞ்ஞானப் புதினங்களை சுலபாமாக இரு வகையாகப் பிரித்துவிடலாம்; எடுத்ததெற்கெல்லாம் விண்வெளி, வேற்று கிரக மனிதர்கள், அண்டவெளிப் பயணம், பிற கிரகங்களை மனிதகுலம் ஆக்கிரமிப்பது போன்ற Hard Science Fiction; மற்றொரு புறம், விஞ்ஞான உலகில் திடீரெனத் தோன்றுவதாக / கண்டுபிடிக்கப்படுவதாக நிகழும் மாற்றங்களை விவரிக்கும் நாவல்கள் / திரைப்படங்கள் போன்ற Soft Science Fiction.
ஆங்கிலத்தில், முதல்வகை படைப்புகள் ஏராளம். இப்போது இரண்டாவது வகை படைப்புகளும் பல்கிப் பெருகிவருகின்றன.
இதில் அலுப்பூட்டும் வண்ணம், திரும்பத் திரும்ப Zombie-க்கள் எனப்படும் நடைபிணங்களின் அட்டகாசங்களை விவரித்து / காட்டி அலுக்க வைக்கிறார்கள். அல்லது, ஒரு கொடூர வைரஸ் தாக்குதல், உலகில் பெரும்பான்மையான மனிதர்கள் இறந்துவிட, மீதியிருக்கும் சொற்ப மனிதர்கள், மிஞ்சியிருக்கும் சொற்ப உணவுக்காகப் போராடுவது. கடந்த வருடங்களில் இது போன்ற அச்சுறுத்தும் விஞ்ஞான விபரீதங்களைப் பற்றி புத்தகங்கள் / திரைப்படங்கள் நிறைய வந்திருந்தாலும், சமீபத்தில், இது போன்ற ஒரு அச்சுறுத்தும் சூழ்நிலை விவரிப்பை (Scenario) ஆரம்பித்தது, 2007-ல் The Road என்ற மிகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய கோர்மாக் மெக்கார்தி (Cormac McCarthy) என்ற புண்ணியவான் (புலிட்ஸர் விருதினை வென்றவர்). இது 2009-ல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.
இதே பாணியைப் பின்பற்றி இப்போது எக்கச்சக்கமான புத்தகங்கள் / திரைப்படங்கள். இவ்வகையான அச்சுறுத்தும் எதிர்கால நிகழ்வுகளை post – apocalyptic என்றும் dystopian என்றும் அழைக்கிறார்கள்.
Apocalypse (அபோகாலிப்ஸ்) என்பது பேரழிவு. பைபிளில் புதிய ஏற்பாட்டில் (New Testament) இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதையும் பெருவெள்ளம் சூழ்ந்து அழிப்பதாக விவரம் உள்ளது. இதற்குப் பின் நடக்கும் நிகழ்வுகளையே post – apocalyptic படைப்புகள் (அதீதமான கற்பனையுடன்) விவரிக்கின்றன.
இந்த அபோகாலிப்ஸ் என்ற வார்த்தை வேண்டுமானால் நாம் அதிகம் கேள்விப்படாததாக இருக்கலாம். ஆனால், பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மஹாபாரதத்தில் இதுபற்றிய (பெரும் வெள்ளத்தினால் வரும் பேரழிவு) விவரிக்கப்பட்டுள்ளது.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையேயான குருஷேத்திர யுத்தம் முடிவுக்கு வந்து கிருஷ்ணபரமாத்மாவின் உதவியால் கௌரவர்கள் அடியோடு அழிக்கப்படுகிறார்கள். தன்னுடைய மகன்கள் எல்லோரும் இறந்ததினால் வருந்தும் காந்தாரி, கோபத்தில் கிருஷ்ணரைப் பார்த்துச் சாபமிடுகிறாள். “நான் உன்னை விஷ்ணுவின் வடிவாகவே பாவித்து பூஜை செய்தேன். ஆனால், நீ இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தும் இந்தப் போர் மூள்வதைத் தடுக்க முற்படவில்லை. என்னுடைய பக்தி உண்மையானால், இன்னும் 36 வருடத்தில் ஒரு பெரும் வெள்ளம் சூழ்ந்து துவாரகை மட்டுமல்ல, இந்த உலகமே அழிந்து போகும் என்று சொல்லும் காந்தாரியிடம், கிருஷ்ணர் சொல்கிறார். “உன் பக்தி உண்மை காந்தாரி. இன்னும் 36 வருடங்களில் நீ சொன்னது போலவே ஒரு பெருவெள்ளத்தில் இந்த உலகம் அழியும் என்று வாக்கு கொடுக்கிறார்.
போரில் வெற்றி பெற்றாலும் தங்களுடைய சொந்தங்கள் அனைவரையும் இழந்ததால் துன்புறும் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் குல மக்கள் சிலரை அரசாள வைத்துவிட்டு நெடும்பயணமாகப் பல கோயில்களுக்கு பாப விமோசனம் பெறும் நோக்கில் செல்கிறார்கள். இவர்கள் யாரும் இல்லாததால் அந்த மக்கள் தறிகெட்டு போய் குடித்துக், கும்மாளமிட்டு வாழ்வைக் கொண்டாடுகிறார்கள். இதனிடையே, துவாரகையிலிருக்கும் சிலர், கிருஷ்ணர் மற்றும் ஜாம்பவதிக்கும் பிறந்த சம்பா என்ற மகனுக்குப் பெண் வேடமிட்டு, கர்ப்பவதி போல நடிக்க வைத்து, அங்கிருக்கும் சில முனிவர்களிடம் விளையாட்டாக “இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்? என்று கேட்கிறார்கள். உண்மையை உணர்ந்த முனிவர்கள், “ஒரு இரும்பு உலக்கைப் பிறக்கும். அதனால் உங்கள் இனமே பூண்டோடு அழியும் என்று சபித்துவிடுகிறார்கள்.
அதுபோலவே சம்பாவிற்கு ஒரு உலக்கை பிறக்கிறது. இதை அறியும் அரசன் உக்கிரசேனன், அந்த உலக்கையைத் தூள்தூள்ளாக்கி கடலில் கரைக்க ஆணையிடுகிறார்.
கிருஷ்ணரிடம் “இது என்ன விபரீதம்? என்று கேட்க, அவர் புன்னகைத்து, “கால சக்கரம் சுழல்வதை யாராலும் நிறுத்த முடியாது. காந்தாரி இட்ட சாபம் பலிக்கும் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார்.


கடலில் கரைக்கப்பட்ட உலக்கையின் ஒரு துண்டை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது. அந்த மீனைத் தூண்டிலில் பிடிக்கும் ஒரு வேடன், மீனின் வயிற்றில் இருக்கும் துண்டை எடுத்து அதை வைத்து ஒரு அம்பு நுனியைத் தயாரிக்கிறான். ஒரு மரத்தின் கிளையில் சாய்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் கிருஷ்னரின் வெண்பாதத்தை தூர இருந்து பார்க்கும் அந்த வேடன், அதைப் புறா என்று நினைத்து அம்பெய்தி விடுகிறான். கிருஷ்ணரின் அவதாரம் இவ்வாறாக முடிவுக்குவந்தவுடன், கடல் கொந்தளித்து பெரும் வெள்ளம் வந்து உலகை அழிக்கிறது.
Dystopia (டிஸ்டோபியா) என்பது Utopia (உடோபியா) என்பதின் எதிர் / மாற்று வடிவம். உடோபியா என்பது ஒரு கற்பனை உலகம். இங்கே, சகல வசதிகளுடனும், செழிப்பாக, எந்தவித பிரச்சினைகளும் இன்றி மனிதர்கள் வாழ்வதாக 16-ம் நூற்றாண்டில் தாமஸ் மோர் (Thomas More) என்பவர் விவரித்தார். இந்த உடோபியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்குப் பொருள் ‘இல்லாத உலகம் என்பதே.
இப்போது வரும் படைப்புகள் இதற்கு நேர் எதிர்மாறான ஒரு உலகத்தை (பசி, பட்டினி, நோய் போன்ற தீராத பிரச்சினைகளுடன்) விவரிக்கும் போது உடோபியா (Utopia) என்பதற்கு எதிர்வார்த்தையாக டிஸ்டோபியா (Dystopia) என்ற பதத்தை உபயோகிப்பதனால் இவ்வகை படைப்புகள் dystopian என்று அழைக்கப்படுகின்றன.
நாம் இப்போது 21-ம் நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்டபடியால், கடந்தகாலத்தில் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடப்பது போன்ற சில கற்பனைப் படைப்புகளில் அதனை எழுதியவர்கள் எப்படிக் கற்பனை செய்தார்கள் என்பது பற்றி ஆராயலாம். இவர்கள் கற்பனையில் 2020ல் துவங்கும் தசாப்தம் (decade) மிக மோசமாக இருக்கும் என்றே கணித்துள்ளார்கள்.மிக மோசமான டிஸ்டோபிய சூழ்நிலைகளையே பெரும்பாலான எழுத்தாளர்கள் விவரித்துள்ளார்கள். பி.டி (P D) ஜேம்ஸ் என்ற பிரபல எழுத்தாளர் 1992-ல் எழுதிய தி சில்ட்ரன் ஆஃப் மென் (The Children of Men) என்ற கதையில் 1995க்குப் பிறகு உலகில் குழந்தைகளே பிறப்பதில்லை. உலகெங்கும் பசி, பட்டினி போன்ற காரணங்களால் நிறைய தற்கொலைகள் போன்ற துயர சம்பவங்கள் உலகைச் சூழ்கின்றன. கதை நடக்கும் வருடமாக 2021ஜக் குறிப்பிடுகிறார் கதாசிரியர்.
இதற்கு நேரெதிர்மாறாக, ரெய்ன் ஆஃப் ஃபயர் (Reign of Fire) என்ற திரைப்படத்தில் நம் உலகை தீ காக்கும் பிரமாண்டமான ட்ராகன்கள் (dragons) சூழ்ந்துவிடுகின்றன. கண்ணில் கண்டவற்றை எல்லாம் பொசுக்குகின்றன. அவற்றை மனித இனம் அடக்க, பெரும் போராட்டம் நிகழ்கிறது. 2002ல் வெளிவந்த இந்தப் படத்தில் கதை நடப்பது 2020ல் என்று காட்டுவார்கள். இதைத் தவிர, திகில் கதை எழுத்தாளர் ஸ்டீஃப ன் கிங் (ரிச்சர்ட் பாக்மன் -Richard Bachman- என்ற புனைபெயரில்) 1982ல் எழுதிய தன்னுடைய ரன்னிங் மேன் (Running Man) நாவலில், 2025ல், அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். இதனால் உண்டாகும் தீவிரமான பிரச்சினைகளால் மக்கள் மிக ஆபத்தான ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு உயிர் பிழைக்க வழி தேடுவார்கள் என்று குறிப்பிட்டிருப்பார். பின்னர், இந்த நாவலைத் தழுவி, அதே பெயரில் 1987ல் ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர் நடிக்கப் படமாக எடுத்து, படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
1950லேயே ரே பிராட்பரி (Ray Bradbury) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர் எழுதிய There will come Soft Rains என்ற சிறுகதையில் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் நடக்கும் ஒரு அணுஆயுத விபத்தால் ஒரு நள்ளிரவில் உலகமே அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகி அழிந்துவிடும் என்று கணித்திருப்பார். கதை நடக்கும் வருடம் 2026 என்று எழுதியிருப்பார் ரே பிராட்பரி. 1982ல் ஹாரிஸன் ஃபோர்ட் (Harisson Ford) நடித்து, பிரபல இயக்குநர் ரிட்லி ஸ்காட் (Ridley Scott) இயக்கிய தி ப்ளேட் ரன்னர் (The Blade Runner) மிகப் பெரும் வெற்றியும், புகழையும் பெற்றது. இந்தப் படம் 2019ல் லாஸ் ஏஞ்சலஸில் (Los Angeles) நடைபெறுவது போல படமாக்கப் பட்டிருக்கும். இது பிலிப் கே. டிக் (Philip K.Dick) என்பவர் 1968ல் எழுதிய ‘Do Androids Dream of Electric Sheep? என்ற கதையைத் தழுவியதாகும். இதே படம் ப்ளேட் ரன்னர் 2049 (The Blade Runner 2049) என்ற பெயரில், டெனிஸ் வில்யனுவி (Denis Villeneuve) என்பவர் இயக்கத்தில், 2017ல் எடுத்து வெளிவந்தது. ஆனால் அது எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இது மிகப் பெரிய பட்டியல். நிறைய புத்தகங்களும், திரைப்படங்களும் இந்த தசாபத்தில் (2020-ல் ஆரம்பித்து 10 வருடங்கள்) நடைபெறும் கதை அம்சங்களுடன் வந்துள்ளன. எல்லாவற்றையும் குறிப்பிடுவது நேர விரயம். பொதுவாக விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்து, உள்வாங்கிக் கொண்டு, எதிர்காலம் இப்படி இருக்கலாம் என்ற கற்பனையில் பல சமயம் நிறைய வரம்பு மீறிப் போய்விடுகிறார்கள். ஆனால், 1970 / 80 / 90 களில் எழுதியவர்கள் 2020 எப்படியிருக்கும் என்று எப்படிச் சரியாக யூகிக்க முடியும்?
நாம் இந்தக் கதைகள் / திரைப்படங்களில் உள்ள அச்சுறுத்தும் சூழ்நிலையை வேறு விதமாகச் சிந்தித்துப் பார்க்கலாம். இப்போதைய நிலை உலகில் மோசம் என்றாலும் இன்னும் டிஸ்டோபியா / அபோகாலிப்ஸ் (dystopia / apocalypse) என்றளவு மோசமாகவில்லையே?
அதனால் உள்ள மட்டும் நம் சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம். பறக்கும் கார்கள், சுயமாகப் பறந்து செல்ல தனிமனித ஜெட் பேக்குகள் (Jetpacks) என்று முன்னர் குறிப்பிட்ட மாதிரி நல்ல முன்னேற்றங்களை மட்டுமே மனதில் கொண்டு, தைரியமாக எதிர்காலத்தை மேற்கொள்ளலாம். எதிர்காலம் எப்படியிருக்கும் என்றும் நாம் எப்படி அனுமானிக்க முடியும்?ஏனென்றால், வேறு சில படைப்புகளில் (நாவல்கள் / திரைப்படங்களில்) அடுத்த தசாப்தம் (2030ல் ஆரம்பித்து 10 வருடங்கள்) இதைவிட மோசமாக இருக்கும் என்றே கணித்துள்ளார்கள்.
நாம் எப்போது போல இதைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறையுடன் (positive attitude) அணுகுவோம்.
நன்றி: இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய (நான் படித்து / பார்த்து அனுபவித்த) விஞ்ஞானப் புதினங்கள் / மற்றும் அவற்றைத் தழுவியெடுத்த திரைப்படங்கள் / மஹாபாரதக் குறிப்பு / David Baker, Lecturer in Big History, Macquarie University, Australia.

மகாபாரதம் – கேள்வி பதில் (பகுதி 1) | ஹரி கிருஷ்ணன்

பகுதி 1
இதிகாசங்களை விட்டுப் பெருமளவும் விலகிக்கொண்டே இருக்கும் இன்றைய சூழலில் பெரும்பாலும் இளம் தலைமுறைக்கும் அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு முதியவர்களுக்கும்கூட, ராமாயண பாரதங்களைப் பற்றிய பலவிதமான ஐயங்களும், விடைகாண முடியாத பல்வேறு கேள்விகளும் எழுந்துகொண்டேயிருப்பதுதான் நிதர்சனம்.இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு விடைகளைத் தருவதற்கான முயற்சி இது.வாசகர்களும் தங்களுக்கு எழும் இதுபோன்ற—ராமாயண, பாரத இதிகாசங்கள் தொடர்பான கேள்விகளை அனுப்பி வைக்கலாம்.வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம் ஆகியவற்றின் மூலங்களின் துணையுடனும், மஹாபாரதத்தில் தமிழில் வெளிவந்துள்ள கும்பகோணம் பதிப்பு, ஆங்கிலத்திலுள்ள கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு, Bhandarkar Oriental Research Institute (BORI) பதிப்பை ஆங்கிலத்தில் ஆக்கப்பட்டுள்ள பிபேக் தேப்ராயின் மொழிபெயர்ப்பு ஆகியனவற்றின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் விடைகள் சொல்லப்படும்.இந்த இதழுக்கான முதல் கேள்வி இது.
கேள்வி: இந்திரனிடத்திலிருந்து பெற்ற (வாசவி சக்தி எனப்படும்) சக்தி ஆயுதத்தை, கர்ணன்தான் களத்தில் நுழைந்த முதல் நாளிலேயே அர்ஜுனன் பேரில் எய்திருக்கலாமே.அவ்வாறு செய்யாமல் ஏன் கடோத்கசனின்மீது எய்து அந்த அஸ்திரத்தை வீணடித்தான்?
இந்தக் கேள்வியின் விடைக்குள் நுழைவதன் முன்பு, சில ஆரம்பகட்டத் தகவல்களைச் சொல்லவேண்டும்.பீஷ்மர் தலைமையில் நடந்த யுத்தத்தில் ‘பீஷ்மர் விழும்வரையில் நான் யுத்தத்தில் பங்குபெறமாட்டேன் என்று கர்ணன் சபதம் செய்திருந்தான்.பீஷ்மர் பத்தாம் நாள் வீழ்த்தப்பட்டார்.அபிமன்யு வதம் துரோணர் தலைமையேற்ற பதின்மூன்றாம் நாள் நடைபெற்றது.அபிமன்யு வதத்துக்குக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் ‘சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால் நெருப்பில் விழுந்து உயிர் நீப்பேன் என்று அர்ஜுனன் சபதம் செய்திருந்தான்.பதினான்காம் நாள் சூரிய அஸ்தமனத்துக்குச் சற்று முன்பு ஜயத்ரத வதம் முடிந்தது.ஆனால் அன்றைய போர் எப்போதும்போல சூரியாஸ்தமனத்துடன் நிறுத்தப்படாமல் இரவெல்லாம் தொடர்ந்தது.யானைகள் மீதும் குதிரைகள் மீதும் தேர்களின் மீதும் தீப்பந்தங்களை ஏற்றிவைத்துக்கொண்டு இரவெல்லாம் போரிட்டார்கள் என்கிறது வியாச பாரதம்.பீமனுக்கும் ஹிடிம்பிக்கும் பிறந்தவனான கடோத்கசன் அரக்க இனத்தைச் சேர்ந்தவனாதலால், இரவு ஆகஆக அவனுடைய உக்கிரம் அதிகரித்தது.கௌரவ சேனையைச் சேர்ந்த பலர், இந்திரன் தந்த சக்தியை உபயோகித்து அவனைக் கொல்லச் சொல்லிக் குரலெழுப்பினர். “கர்ண! இப்பொழுது சக்தியாயுதத்தினாலே விரைவாகக் கடோத்கசனைக் கொல்.திருதராஷ்டிர மகாராஜனைச் சேர்ந்த இந்தக் கௌரவர்கள் ஓடுகிறார்கள்.பீமன், பார்த்தன் இருவரும் நமது விஷயத்தில் என்ன செய்யப்போகிறார்கள்?அர்த்தராத்திரியில் தாக்கச் செய்கின்ற இந்தப் பாபியைக் கொல்.நமக்குள் எவன் மிக்க கோரமான இந்த யுத்தத்தினின்று விடுபடுவானோ அவன் சேனையுடன் கூடின பார்த்தர்களை எதிர்த்துப் போர்புரிவான்.ஆதலால், இந்தக் கோரரூபியான ராக்ஷஸனை இந்திரனாலே கொடுக்கப்பட்ட சக்தியினாலே நீ கொல்ல வேண்டும்.கர்ண!இந்திரனுக்கொப்பான எல்லாக் கௌரவர்களும் போர்வீரர்களுடன் ராத்திரி யுத்தத்தில் நசிக்கவேண்டாம் என்று சொன்னார்கள். (கும்பகோணம் பதிப்பு, துரோண பர்வம், 5ம் தொகுதி, கடோத்கசவத பர்வம், அத்.180, பக்.722) (At that time all the Kauravas, beholding Karna and that terrible illusion (of the Rakshasa) cried out saying, ‘O Karna, slay the Rakshasa soon with thy dart. These Kauravas and the Dhartarashtras are on the point of being annihilated. What will Bhima and Arjuna do to us? Slay this wretched Rakshasa at dead of night, who is consuming us all. They that will escape from this dreadful encounter to-day will fight with the Parthas in battle. Therefore, slay this terrible Rakshas now with that dart given thee by Vasava. O Karna, let not these great warriors, the Kauravas, these princes that resemble Indra himself, be all destroyed in this nocturnal battle என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு—Drona Parva, Section CLXXIX) இதைக் கேட்ட கர்ணன், தன்னுடைய கவச குண்டலங்களைக் கொடுத்து அதற்கு பதிலாக இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை கடோத்கசன் மீது எய்தான்.சக்தியாயுதத்தால் தான் அடிக்கப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்த கடோத்கசன், தன் உருவத்தை விந்திய மலையைப் போலப் பெருக்கிக்கொண்டு கௌரவ சேனையின் மீது விழுந்தான்.இப்படியொரு மலைபோன்ற உருவத்துடன் அவன் விழுந்ததால் கௌரவ சேனையில் ஒரு அக்ஷெஹிணி சேனை அழிந்தது.(பாரதத்தின் மற்ற பல பதிப்புகளில், கடோத்கசன் விழும்போது, ‘உன் உருவத்தைப் பெருக்கிக்கொண்டு விழு என்று பீமன் வந்து சொன்னதாகக் காணப்படுகிறது.அது தமிழ் மொழிபெயர்ப்பிலும் இல்லை.ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் இல்லை.)
ஸஞ்சயன் இதை திருதராஷ்டிரனிடத்தில் சொல்லிக்கொண்டு வரும்போது, திருதராஷ்டிரன் அவனை இடைமறித்தான். ‘ஓ ஸஞ்சயா!கர்ணன் இந்திரனிடத்திலிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை ஏன் அவன் போருக்கு வந்த முதல் நாளிலேயே (அதாவது பதினோராவது நாள் போரிலேயே) விடவில்லை?பன்றிக்கும் நாய்க்கும் நடக்கின்ற சண்டையில் இரண்டுமே அழிந்தன என்றால் எப்படி வேட்டைக்காரனுக்கு லாபமோ, அப்படி இப்போது சக்தியாயுதம் கடோத்கசனின் மீது ஏவப்பட்டதால் இப்போது வாசுதேவனுக்கு லாபமாயிற்று.கடோத்கசன் கர்ணனைக் கொன்றிருந்தால், அது பாண்டவர்களுக்கு லாபமாகியிருக்கும். அல்லது கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், சக்தியாயுதம் வீணடிக்கப்பட்டதால் அதுவும் பாண்டவர்களுடைய லாபமாகவே ஆகும்.இப்படியிருக்கும்போது, மகாபுத்திசாலியான நீ, கர்ணனுக்கு அர்ஜுனன் மீது சக்தியாயுதத்தைப் பிரயோகிக்கும்படி ஏன் நினைவூட்டவில்லை? என்று கேட்டான்.தமிழ் மொழிபெயர்ப்பில் அத்.183, பக்.731ல் உள்ள இந்தப் பகுதியை கிஸாரி மோகன் கங்கூலி இவ்வாறு மொழிபெயர்க்கிறார்: Even so hath that fatal dart been rendered fruitless through Ghatotkacha. As in a fight between a boar and a dog, upon the death of either, the hunter is the party profited, I think, O learned one, that even so was Vasudeva the party to profit by the battle between Karna and Hidimvas son. If Ghatotkacha had slain Karna in battle, that would have been a great gain for the Pandavas. If, on the other hand, Karna had slain Ghatotkacha, that too would have been a great gain to them in consequence of the loss of Karnas dart. Endued with great wisdom, that lion among men, viz., Vasudeva, reflecting in this way, and for doing what was agreeable to and good for the Pandavas, caused Ghatotkacha to be slain by Karna in battle.… “Dhritarashtra said, ‘My son is fond of quarrel. His advisers are foolish. He is vain of his wisdom. It is for that, that this certain means of Arjunas death hath been baffled. Why, O Suta, did not Duryodhana, or that foremost of all wielders, viz., Karna, possessed of great intelligence, hurl that fatal dart at Dhananjaya? Why, O son of Gavalgana, didst thou too forget this great object, possessed as thou art of great wisdom, or why didst not thou remind Karna of it?
‘நான் கர்ணனுக்கு இதை நினைவூட்டாமலில்லை.பதினோராம் நாள் யுத்தத்தின் இரவிலிருந்து ஒவ்வொரு நாளும்நானும் துரியோதனனும் துச்சாதனனும் சேர்ந்து பார்த்தனைக் கொல்லுமாறு கர்ணனுக்கு நினைவூட்டுவோம். ‘கர்ணா, சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜுனனைக் கொல்.அர்ஜுனனுடைய வீழ்ச்சிக்குப் பிறகு வேறு யாரையாவது கண்ணன் தலைமையேற்கச் செய்தால், கர்ணா, கண்ணனைக் கொல்.அவன்தான் பாண்டவர்களுக்குப் புகல்.அவன்தான் அவர்களுடைய வேர்.ஆகவே, இலை கிளைகளை விட்டுவிட்டு வேரை அழி என்று தினந்தோறும் இரவுக்கூட்டத்தில் கர்ணனுக்கு நினைவூட்டுவோம்.காலையில் எழுந்திருக்கும்போது இந்த உறுதியான தீர்மானத்தோடு கண்விழிப்போம்.ஆனால் எப்படியோ தெரியவில்லை.காலையில் போர் தொடங்கியதும் இந்தத் தீர்மானத்தை நாங்கள் எல்லோருமே மறந்துவிடுவோம்.கேசவன் எப்போதும் அர்ஜுனனைக் காக்கிறான்.அர்ஜுனைக் காக்கிறான் என்றால், தன்னைக் கொல்வதற்காக நாங்கள் திட்டம் தீட்டியிருப்பதை அவன் அறியானா?தன்னைக் காத்துக்கொள்வான் இல்லையா?எனவேதான் அர்ஜுனனைக் கர்ணனுக்கு எதிரில் அவன் கொண்டுவரவே கையில் சக்கரப்படையைக் கொண்டுள்ள அந்த ஜனார்தனனை வெல்வோர் யாருமே இல்லை என்று பதில் சொன்னான்.
கிஸாரி மோகன் கங்கூலி இந்தப் பகுதியை இப்படி மொழிபெயர்க்கிறார்:
“Sanjaya said, ‘Indeed, O king, every night this formed the subject of deliberation with Duryodhana and Sakuni and myself and Duhsasana. And we said unto Karna, ‘Excluding all other warriors, O Karna, slay Dhananjaya. We would then lord it over the Pandus and the Panchalas as if these were our slaves. Or, if upon Parthas fall, he of Vrishnis race appoints another amongst the sons of Pandu (in this place for carrying on the fight), let Krishna himself be slain. Krishna is the root of the Pandavas, and Partha is like their risen trunk. The other sons of Pritha are like their branches, while the Panchalas may be called their leaves. The Pandavas have Krishna for their refuge, Krishna for their might, Krishna for their leader. Indeed, Krishna is their central support even as the moon is of the constellations. ……….. We rose every morning, having formed such a resolution in respect of that Lord of the very gods, viz., Hrishikesa of immeasurable energy. At the time of battle, however, we forget our resolution. Kesava always protected Arjuna, the son of Kunti. He never placed Arjuna before the Sutas son in battle. Indeed, Achyuta always placed other foremost of car-warriors before Karna, thinking how that fatal dart of ours might be made fruitless by ourselves. O lord! When, again, the high-souled Krishna protected Partha in this manner from Karna, why, O monarch, would not that foremost of beings protect his own self? Reflecting well, I see that there is no person in the three worlds who is able to vanquish that chastiser of foes, viz., Janardana, that hero bearing the discus in hand.
‘இரவெல்லாம் ஆலோசித்துத் திட்டம் தீட்டினாலும், யுத்தம் தொடங்கியதும் நாங்கள் அனைவருமே இதை எப்படி மறக்கிறோம் என்பது தெரியவில்லை.இது கண்ணனுடைய வேலைதான் என்று ஸஞ்சயன் சொல்கிற இந்த பதில், ஒருபுறம் பார்த்தால் ஏற்புடையது என்று தோன்றுகிறது.ஏனென்றால், மஹாபாரதத்தில் ஒரு வாக்கியம் திரும்பத் திரும்ப ஒலிக்கும்: “யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய: (சல்லிய பர்வம், அத்தியாயம் 61, ஸ்லோகம் 30). இங்கே நாம் சல்லிய பர்வத்திலிருந்து மேற்கோள் காட்டியிருந்தாலும், கம்பராமாயணத்தில் ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்று திரும்பத் திரும்ப ஒலிப்பது போல இந்த “யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய: என்பது பல இடங்களில் ஒலிக்கும்.எங்கே தர்மமோ அங்கே கிருஷ்ணன்; எங்கே கிருஷ்ணனோ அங்கே வெற்றி என்ற இந்த மஹாவாக்கியத்தை ஒட்டி ஸஞ்சயனுடைய பதில் ஒலிப்பதால் இதை ஏற்கலாம் என்றும் தோன்றும்.
இந்த பதில் அவனுடைய கண்ணோட்டத்தின்படி மட்டும்தான்.(இந்தச் சமயத்தில் இன்னொன்றையும் கவனித்திருப்பீர்கள்.ஸஞ்சயன் ஒவ்வொரு நாளும் யுத்த களத்தில் இருந்தான்.நாம் பொதுவாக எண்ணுவதைப்போல திருதராஷ்டிரனுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு ரன்னிங் காமெண்டரி கொடுத்துக்கொண்டிருக்கவில்லை. இதற்கான வலுவான ஆதாரங்கள் பாரதத்தில் பல இடங்களில் வருகின்றன.பதினெட்டாம் நாள் யுத்தத்தில் போர்க்களத்தில் ஸஞ்சயன், பீமனிடத்திலும் சாத்தியகியிடத்திலும் அகப்பட்டுக் கொள்கிறான். ‘இந்த மூஞ்சுறால் ஒரு பயனும் இல்லை.விட்டுவிடு என்று பீமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கே தோன்றும் வியாசர் ஸஞ்சயனை விடுவிக்கும்படிச் சொல்கிறார்.இது போகட்டும்.இதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்.) ஸஞ்சயன் அவனுடைய கண்ணோட்டத்தில் சொன்ன பதில் ஏற்கத் தக்கதுதானா என்பது இப்போது நம்முன் உள்ள கேள்வி.கர்ணன் களத்துக்குள் நுழைந்த பதினோராம் நாள் யுத்தத்திலிருந்து, கர்ணன் வீழ்ந்த பதினேழாம் நாள் யுத்தம் வரையில் ஒவ்வொரு நாளும் நடந்தது என்ன என்பதன் சுருக்கத்தைப் பார்த்துக்கொண்டு வந்தால்தான், ஸஞ்சயனுடைய பதிலின் validity புலப்படும்.அதை அடுத்தமுறை அலசுவோம்.
(தொடரும்…)