Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 42 | சுப்பு

புட்டபர்த்தி

தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பினார் என்பதையும் அதன் விளைவாக என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பத்தையும் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 42 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 41 – சுப்பு

Image credit: https://chithirapoomalai.wordpress.com/

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

டாக்டரைச் சந்தித்துப் பழகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய அமைப்பில் சில விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டன. லௌகீக உலகத்தில் நாம் சந்திக்கும் குணக்கேடுகள் அங்கேயும் தலைகாட்டின. புதிதாக ஒரு பொன்னுலகத்தை உருவாக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு போய்க் கொண்டிருந்த எங்களுக்கு, குறிப்பாக எனக்கும் ரமணனுக்கும் இது சகிக்கவில்லை. டாக்டரிடம் முறையிட்டோம் பலனில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 41 – சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 40 – சுப்பு

பெரியார் ஈவெரா

இதுவரை நான் அறிந்திராத ஒரு உலகத்திற்குள் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது-திரையுலகம். பத்மா வந்தது நல்லநேரம் என்று சொல்லலாம்.

நண்பன் ரவியுடைய தந்தை கல்யாணராமன் திரையுலக தயாரிப்பாளர் என்பதைக் குறித்துக்கொள்ளவும். நாங்கள் அவரை மாமா என்று அழைப்போம். எம்ஜிஆர், சிவாஜி போன்ற பிரபலங்களை வைத்துப் படம் எடுத்திருக்கிறார். இந்தமுறை நடிகர் பிரபு-அம்பிகா ஜோடியில் ‘ராஜா நீ வாழ்க’ என்ற படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டுவிட்டார். திரையுலகப் பிரச்சினைகளுக்கு திரையுலகத்திலேயே தீர்வுகள் உண்டு. அங்கே விட்ட பணத்தை அங்கேயே எடுக்க வேண்டும். எனவே அடுத்த படத்திற்குப் பூஜை போட்டார். இது கொஞ்சம் பெரிய பட்ஜெட் என்பதால் பணத்தைப் பாதுகாப்பதற்கு அவருக்கு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. நான் நியமிக்கப்பட்டேன். காபி பவுடர் விற்கும் வேலை தொடர்ந்தாலும் சினிமா கம்பெனி கணக்கு பார்க்கும் வேலை மாலை நேரத்திலேயே இருக்கும் என்பதால் எனக்கு இரட்டைக் குதிரை சவாரி. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 40 – சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 39 | சுப்பு

39

திருமணம்

திருவண்ணாமலையில் கோயிலுக்குப் பின்னால் மலை. மலையின் சில நேரப் படிக்கட்டுகளில் ஏறினால் ஆலமரத்துக் குகை ஆசிரமம். சின்னசாமி என்பவர் அங்கே ஒரு ஆல மரத்தை நட்டு, அது வளர்ந்து பெரிதாகி அங்கிருக்கும் குகைக்கு நிழல் கொடுப்பதால் அந்தப் பெயர். மேற்படி குகையில் பகவான் ரமணர் இருந்திருக்கிறார்; விசிறி சாமியாரின் குரு சுவாமி ராமதாசுக்கு ராம தரிசனம் கிடைத்திருக்கிறது. இப்போதைக்கு ஒரு பெரியவர் அங்கே வாசம். பல ஆண்டுகளாக அங்கே தவம் செய்யும் இந்தப் பெரியவரின் பெயர் தெரியவில்லை. பெரியசாமி என்று அழைக்கிறார்கள். நாங்கள் தாத்தா என்று கூப்பிடுவோம். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 39 | சுப்பு

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – 13 | முனைவர் வ.வே.சு.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டு. கல்லூரித் தமிழ் மன்றம் அமைத்த பட்டி மண்டபம். அந்தக் காலத்திலே பிரபலமாயிருந்த பேராசிரியர் கண.சிற்சபேசன் நடுவர். நான் வரவேற்புரை நவில வேண்டும். அதற்காகக் குறிப்புகள் எடுக்கும் போது, பழைய தமிழ் இலக்கியத்தில் பட்டிமன்றம் பற்றிய செய்திகள் உண்டா எனத் தேடினேன். வருகை தர உள்ள பேராசிரியர் கம்பனில் ஆழங்கால் பட்டவர். எனவே கம்ப ராமாயணத்தில் தேடினேன். Continue reading இந்தியா புத்தகங்கள் – 13 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 38 | சுப்பு

திருவண்ணாமலை

உயிர்களின் இயல்பையும் உலக நடப்பையும் வழிநடத்துவது மகான்கள்தான் என்பது, டாக்டரின் தீர்மானம். மகான்களோடு தொடர்புகொள்ளவேண்டும் என்றும், அவர்களுக்கு இடையே காலப் பிரிவினையோ தேசப் பிரிவினையோ கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார். இதைத் தவிர பலவகையான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபட்டோம். பரிட்சார்த்த முறையில் படிப்பும் உண்டு. மற்ற மதங்களின் நூல்களைப் படித்தபோது, டாக்டர் தடைசொல்லவில்லை. அவரளவில் ஹிந்துவாகவே இருந்தார். பஞ்சாங்கம் பார்க்காமல், எதையும் ஆரம்பிக்க மாட்டார். விரதங்களை வலியுறுத்துவார். மகான்களின் சமாதிக்கு முன்னுரிமை. யார் எந்த ஊருக்குப் போனாலும், அங்கிருக்கும் மகானின் இடத்தைக் குறிப்பிட்டுப் போகச் சொல்லுவார். ஆனால், கத்தோலிக்க மதத்தினர் வழிபடும் மேரி மாதா மீது அவருக்கு பக்தி இருந்தது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 38 | சுப்பு

Posted on 1 Comment

வலம் – ஜூன் 2021

வலம் ஜூன் 2021 இதழின் படைப்புகள்

தமிழ்நாடு 2021 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – ஓர் அலசல் | லக்ஷ்மணப் பெருமாள்

நம்மை நோக்கிப்பாயும் தோட்டா – கொரோனா | ஜெயராமன் ரகுநாதன்

ஆகஸ்டு 44வது – பெலோரூசின் தங்கம் | அருண் பிரபு

மகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்

இந்தியா புத்தகங்கள் – 12 | முனைவர் வ.வே.சு

இது நம் சனாதன தர்மம் – நூல் விமர்சனம் | கவியோகி வேதம்

சிங்கப்பூர் நீர் மேலாண்மை | ஆமருவி தேவநாதன்

உயிர்ப்பிடிப்பு (சிறுகதை) – சித்ரூபன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு

 

Posted on Leave a comment

வலம் – விடைபெறல்

வணக்கம்.

வலம் இதழ் தொடர்பாக ஒரு அறிவிப்பு.

கடந்த 55 மாதங்களாக வலம் இதழ் தொடர்ந்து வெளி வந்தது. கொரோனா காரணமாக மே 2021 இதழை வெளியிடவில்லை. ஜூன் 2021 இதழ் 56வது இதழ்.

இந்த இதழுடன் வலம் இதழை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அச்சு இதழைக் கொண்டு வருவதன் சவால்கள் தெளிவாகவே தெரிகின்றன. சோஷியல் மீடியா யுகத்தில் மாத இதழ்களின் தேவை குறித்தும் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த இதழ் இரண்டு வருடங்கள் வந்தால் கூடப் போதும் என்றுதான் தொடங்கினோம். எப்படியோ இத்தனை இதழ்கள் வெளி வந்தது நல்ல விஷயமாகவே தோன்றுகிறது.

இந்த இதழைக் கொண்டு வர உதவிய அனைத்து நண்பர்களுக்கும், குறிப்பாக பிரதிபலன் பாராமல் எழுதிய நண்பர்களுக்கும், தொடர்ந்து சந்தா செலுத்தி வாசித்த நண்பர்களுக்கும் நன்றி.

சந்தாதாரர்களுக்கு மீதம் உள்ள தொகை, கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் அனுப்பப்பட்டிருக்கிறது. சந்தா வரப் பெறாதவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

வலம் இதழ் ஆன்லைனில் தேவைப்படும்போது வெளிவரும் ஒரு இதழாக இனி இருக்கும். அதுவும் இலவச வலைத்தளமாகவே இயங்கும். இது குறித்த விரிவான அறிவிப்பைப் பின்னர் வெளியிடுகிறோம்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். நன்றி.

பாரத மாதா கி ஜெய். ஜெய்ஹிந்த்.

வலம் எடிட்டோரியல் குழு.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு

சமையல்கட்டில் ஆண்கள்

பல வருடங்களாகத் தொடர்ந்து அரசியல்களத்தில் செயல்பட்டு வந்த எனக்கு டாக்டருடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. ஆனால் பலமுறை முயன்று பார்த்தும் என்னால் அவரை வகைப்படுத்த முடியவில்லை. ‘சிறுவயதில் தனக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி மீது ஈடுபாடு இருந்ததாக’ அவர் ஒரு முறை குறிப்பிட்டார். அதற்காக அவர் சொல்லிய காரணம் சுவாரசியமாக இருந்தது. ‘கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அரிவாளும் சுத்தியலும். விளைகின்ற பொருட்களை அறுவடை செய்து அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இதற்குத் தடையாக இருப்பவரை சுத்தியலால் அடிக்கவேண்டும் என்பதாகத் தன்னுடைய புரிதல் இருந்தது’ என்று அவர் சொன்னார். இதையே நான் டாக்டருடைய அரசியல் கொள்கை என்று பரப்புரை செய்தபோது, ‘அது சின்ன வயசில் இருந்த புரிதல்’ என்று சொல்லி ஒதுக்கிவிட்டார். அவருடைய சமகாலத்தில் வெகுவாகப் பேசப்பட்ட அதிமுக – திமுக., எம்ஜிஆர் – கருணாநிதி மோதல் பற்றி அவர் எதுவும் பேசியதில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 37 | சுப்பு

Posted on Leave a comment

உயிர்ப் பிடிப்பு (சிறுகதை) | சித்ரூபன்

‘அனாயாசேன மரணம்

வினாதைன்யேன ஜீவனம்

தேஹிமே க்ருபயா சம்போ

த்வயி பக்திம் அசஞ்சலாம்’

என்று எழுதப்பட்டிருந்த தாளை எதிர் வீட்டு மாமா விபூதி வாசனையுடன் மாதங்கியிடம் கொடுத்தார். ‘இது காஞ்சி மஹா பெரியவா அருளின ஸ்லோகம்.. நரசிம்மய்யங்கார்க்கு ரொம்ப முடியலேன்னு கேள்விப்பட்டேன்.. இந்த மந்திரத்தை சொல்லி ஈஸ்வரனை வேண்டின்டா, வயசானவா கஷ்டப்படாம சீக்கிரமே ஸத்கதி அடைஞ்சுடுவாளாம்..’ என்று அவர் சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை. எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக படுத்த படுக்கையாய் நரக வேதனை அனுபவிக்கும் மாதங்கியின் மாமனாரைப் பார்க்க வந்திருந்தார் அவர். Continue reading உயிர்ப் பிடிப்பு (சிறுகதை) | சித்ரூபன்