ஈ.வெ. ராமசாமி நாயக்கரைத் தந்தை என்று இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கும்
தி.மு.க.வினரும், தி.மு.கவினரை ஆதரிக்கும் தி.க.வினரும், அண்ணாத்துரை காலத்தில், ஈ.வெ.ரா
மணியம்மை திருமணத்தின்போது எப்படி ‘அன்புடன்’ பேசிக்கொண்டார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர்
தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, தி.மு.கவினரின் ‘அறிஞர்’ அண்ணாத்துரையின் கடிதம்
இங்கே வெளியிடப்பட்டுகிறது.

என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது
– எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால், தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக
ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே
– பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட
பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த
மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?”
என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72ம் வயதில் 26 வயதுள்ள
பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது
தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

“ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!” என்று
கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.

சீர்திருத்தம் இயக்கம் இது – இதோ பாரய்யா, ‘சீர்திருத்தம் 72க்கும்
26க்கும் திருமணம்’ என்று கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

‘கையிலே தடி மணமகனுக்கு கருப்பு உடை மணமகளுக்கு!’ – என்று பரிகாசம்
பேசுகிறார்களே,
பேசுகிறார்களே,
‘ஊருக்குத்தானய்யா உபதேசம்!’ என்று இடித்துரைக்கிறார்களே,
அப்பா! அப்பா! என்று அந்த அம்மை மனம் குளிர, வாய் குளிர, கேட்போர்
காது குளிரக் கூறவும் அம்மா – அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும்
விதமாக பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப்
பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்கள்
– பதிவுத் திருமணமாம்!!
– பதிவுத் திருமணமாம்!!
இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங் கொண்டுதான், சாதாரணமானதென்று
சொல்ல முடியும்.
சொல்ல முடியும்.
நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது
கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி, “இதோ, தாத்தா பார்
– வணக்கஞ் சொல்லு” என்று கூறினர் – கேட்டோம் – களித்தோம்.

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி, “தாத்தா
பெண்ணு” என்று கூறினர்.
பெண்ணு” என்று கூறினர்.
அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம், பணிவிடை செய்து வந்த பாவையுடன்.
சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.
பொருந்தாத் திருமணம் – பேசி வந்த கொள்கைக்கு நேர்மாறாக திருமணம்
– பூவையரைப் புழுக்களென மதிக்கும் ஆடவர் மட்டுமே செய்யத்துணியும் திருமணம், செய்து
கொள்கிறார். சீர்த்திருத்த இயக்கத்தின் தலைவர் என்றால், எப்படி நாம் அதற்கு உடந்தையாக
இருக்க முடியும்? உள்ளம் எப்படி இடம் தரும்? உலகம் எப்படி இதை ஏற்கும்? இந்தத் திருமணத்தை
அனுமதித்துவிட்டுப் பிறகு நாம், உரத்த குரலிலே ஊரூரும் சென்று, சீர்திருத்தம் பேசினால்,
யார் மதிப்பார்கள்? யார் ஏற்பார்கள்?

ஊருக்கு உபதேசிகளே! உங்கள் தலைவர் 72ம் வயதிலே திருமணம் செய்து
கொண்டார். இதைக் கண்டிக்க வக்கில்லை, வகையில்லை, வீரமில்லை, நேர்மையில்லை, வாயாட வந்துவிட்டீர்களோ,
சீர்திருத்தம்பற்றி என்று பேசுவரே, ஏசுவரே!

எப்படி மக்களின் முகத்தைக் காண்பது? அவர்களின் கண்கள், கேள்விக்
குறிகளாகிவிடுமே! அவர்களின் கேலி, நமது இயக்கத்தைக் கல்லறைக்கு அனுப்புமே! இயக்கத்துக்கு
மணி அம்மையை வாரிசு ஆக்கவில்லை என்று கூறிவிட்டால் மட்டும் போதாதே – இழியும் பழியும்
இதனால் துடைக்கப்பட்டு விடாதே!

உங்களை நான் நம்பவே இல்லை – யாரையும் – நீங்கள் யாரும் இயக்கத்தை
நடத்திச் செல்லக் கூடியவர்கள் அல்ல – என்று கூறியிருக்கிறாரே. அந்தப் பேச்சினால் ஏற்பட்ட
மனப்புண் மாறுமா? எப்படி மாறமுடியும்?

இயக்கத்தின் தலைவரே நம்மை நம்புவதில்லை என்ற ‘விலாசம்’ ஒட்டிக்கொண்டு
உலகிலே நடமாடி, என்ன காரியத்தைச் சாதிக்க முடியும்?

“இதுகளை பெரியாரே நம்புவதில்லை – இதுகளின் பேச்சை நாம் எப்படி
நம்ப முடியும்” என்று எவரும் கூறுவரே! அந்த இழிவை எப்படித் துடைப்பது?

இவைகளை எண்ணிப் பார்த்து, உண்மையாகவே. இயக்க வளர்ச்சி, எதிர்காலம்,
இயக்கத் தோழர்களின் உணர்ச்சி இவைகளை மதிப்பதாக இருந்தால், பெரியார் தமது திருமண ஏற்பாட்டை
அடியோடு விட்டுவிட வேண்டும் – இயக்கத்துக்கு எதிர்காலத்துக்கான எந்த ஏற்பாடு செய்ததற்கும்
தாமே துணியக்கூடாது – எந்த எண்ணத்தையும் அவர் விட்டுவிட வேண்டும்.

இயக்கத் தோழர்களை மரக்கட்டைகளாகவோ, ஆடும் பாவைகளாகவோ எண்ணிக்கொண்டு,
எனக்கு இயக்கத்தில் யாரிடமும் நம்பிக்கை இல்லை என்று பேசி இருப்பதை வாபஸ் வாங்க வேண்டும்.

அப்போதுதான் நாம் அவருடைய தலைமையை ஏற்க முடியும்.
அந்த அளவுக்கு நிலைமையை அவரே உண்டாக்கி விட்டார்.
அன்பன்,
அண்ணாதுரை.