
1953 மார்ச் மாதம் 4ம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில் ஒரு பியானோ இசை நிகழ்ச்சி நடந்தது. அது முடியும் நேரம் ரேடியோ மாஸ்கோ இயக்குநரை அழைத்து அந்த நிகழ்ச்சியின் இசைப்பதிவு வேண்டும் என்கிறார் ஸ்டாலின். நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பதிவு செய்து அனுப்புகிறார் இயக்குநர். அதில் பியானோ வாசிக்கும் மரியா யுடினா என்கிற பெண்மணி ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். தன் மாளிகையில் அதைப் படிக்கும் ஸ்டாலின் மூச்சடைத்து விழுகிறார். கை கால் இழுத்துக் கொள்கிறது. ரஷ்யாவின் மத்திய ஆட்சிக் குழு மொத்தத்திற்கும் தகவல் போகிறது. முதலில் வரும் உள்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு (NKVD) தலைவர் பெரியா, யுடினாவின் குறிப்பைக் கண்டு அதைப் பத்திரப்படுத்துகிறார். கமிட்டியின் துணைத்தலைவர் மாலங்கோவ் ஸ்டாலினின் நிலை கண்டு பதறுகிறார். பெரியா அவரை சமாதானப்படுத்தி “நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் தோழர். மற்ற எல்லாம் என் பொறுப்பு” என்கிறார். Continue reading ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு