சோவியத் ஆக்கிரமிப்பு, கம்யூனிச ஆதிக்கம் இவற்றை லெனின் என்ற உருவகத்தின் மூலம் சொல்கிறது இத்திரைப்படத்தின் தலைப்பு. Continue reading Good Bye, Lenin – கம்யூனிசத்துக்கு விடை கொடுப்போம் | அருண் பிரபு
Tag: கம்யூனிஸத் திரைப்படங்கள்
சோவியத் உளவாளியின் கதை | அருண் பிரபு
The Courier – 2020ல் வெளியான திரைப்படம். சோவியத் உளவாளி ஒருவரை பிரிட்டானிய உளவு அமைப்பு கையாண்டதும் அவரிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற்று அதன்மூலம் போர் தவிர்க்கப்பட்டதையும் குறித்த கதை. Continue reading சோவியத் உளவாளியின் கதை | அருண் பிரபு
ஆகஸ்டு 44வது – பெலோரூசின் தங்கம் | அருண் பிரபு
1944ம் ஆண்டு ஆகஸ்டு 7 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஜெர்மனியில் இருந்து விடுவிக்கப்பட்ட பெலோரஷ்யாவில், ஒரு ரேடியோ, ரகசியத் தகவல்களை ஒலிபரப்புகிறது. அதன் அடிப்படையில் எதிரிகளின் உளவுப்படை குறித்த விவரங்களை அறிந்து வர கேப்டன் அல்யோகின் தலைமையில் ஒரு குழு அனுப்பப்படுகிறது. இவர்கள் SMERSH எனப்படும் ரகசிய போலிஸ், உளவுத்துறை, காமிசார்கள் ஆகியோரைக் கண்காணிக்கும் பிரிவினர். ஏற்கெனவே போலந்து போராளிக் குழுக்கள், சோவியத்தை எதிர்க்கும் உள்ளூர் ஆயுதக் குழுக்கள் என்று அந்தப் பகுதி அபாயகரமானதாக உள்ளது. அவர்கள் பெலாரூஸ் நாட்டுக்குச் சுதந்திரம் தேவை, சோவியத் ஆட்சிக்கு உட்பட முடியாது என்ற கொள்கையோடு போராடுபவர்கள். போலந்துக்காரர்கள் அவர்களைப் பயிற்றுவித்து அப்படியே போலந்தை விட்டு கம்யூனிசத்தை விரட்ட முயல்பவர்கள். Continue reading ஆகஸ்டு 44வது – பெலோரூசின் தங்கம் | அருண் பிரபு
ரஷ்ய உளவாளிகள் | அருண் பிரபு
Black March – Unofficial Assignment – Russian Detectives
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும் செக்கோஸ்லோவாகியாவும் சரணடைந்தாலும் சிறு சிறு எதிர்ப்புக் குழுக்கள் சோவியத் படைகளை எதிர்க்கின்றன. ஆயுதப் போராட்டமாக இது உருவெடுக்க ரஷ்ய உளவுப்படை ஒன்று உள்ளே வருகிறது. எங்களை எதிர்க்கிறார்கள் என்றால் நாங்கள் வருகிறோம் என்று அமெரிக்காவோ பிரிட்டனோ வரும், வந்தால் தன் கை தாழும் என்று எண்ணும் ஸ்டாலின் உளவுப்படைகளை அனுப்பி இந்த எதிர்ப்பாளர்களை ‘கவனிக்க’ உத்தரவிடுகிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமான கர்னல் ஒருவரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்படுகிறது. Continue reading ரஷ்ய உளவாளிகள் | அருண் பிரபு
இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு
ரஷ்ய கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. மகா தேசப்பற்றுப் போர் என்று சோவியத் பெயர் சூட்டிய இரண்டாம் உலகப் போரில் எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமே இப்படம். Continue reading இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு
போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு
உக்ரேனில் ஒரு கிராமத்தை நாசிப்படை ஆக்கிரமிக்கிறது. குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போய் கிருமிநாசினி அறைக்குள் அடைத்துச் சோதனைகள் செய்து வெளியே எடுக்கிறார்கள். நோயுள்ள குழந்தைகள் கொல்லப்படுவர் என்கிறார்கள். ஜெர்மனியின் சோதனைச் சாலைகளுக்குச் சில குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். எலிகள் சீக்குப் பிடித்துச் சாகின்றன, நல்ல எலிகளாகப் பார் என்று ஜெர்மன் அதிகாரி தன் படைக்கு உத்தரவு போடுகிறார். Continue reading போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு
ஓட்டம் | அருண் பிரபு
As Far As My Feet Will Carry Me (2001)
1945ல் படம் தொடங்குகிறது. க்ளெமென்ஸ் ஃபோரல் என்ற ஜெர்மானிய நாஜிப் படைவீரன் சோவியத் துருப்புக்களால் சிறை பிடிக்கப்படுகிறான். Continue reading ஓட்டம் | அருண் பிரபு
சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு
இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் ஜெர்மானியர்களின் கைதிகளாக இருந்த சிவப்பு ராணுவத்தினர், சோவியத் அமைப்பின் பொது மக்கள் என்று பலரும் தங்களுக்கு விடுதலை என்று மகிழ்ந்து கொண்டாடினர். ஜெர்மனி தோற்று சோவியத் யூனியன் வென்ற நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததால் நாட்டுக்குத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டனர். ஜெர்மன் சிறைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்குச் செல்லாமல் சைபீரியச் சிறை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஜெர்மானியச் சிறைகளில் அவர்களுக்கு நாஜி கொள்கை கற்பிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுவித்து கம்யூனிசத்தை மீண்டும் கற்பிக்க என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு கொடுமையான சிறை. போனால் திரும்பி வருவது மிகவும் அரிது. Continue reading சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு
காமிசார்களின் அரசியல் (Demoted) | அருண் பிரபு
இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வென்றது முற்றிலும் ஹிட்லரின் தலைக்கனம், பிடிவாதம், தற்குறித்தனம் இவற்றால் மட்டுமே; ரஷ்யர்களை விட்டிருந்தால் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு பெரிய எண்ணிக்கையில் செத்திருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் மற்றொரு படம். Continue reading காமிசார்களின் அரசியல் (Demoted) | அருண் பிரபு
சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு
கம்யூனிஸ உலகில் நண்பன் என்பதும் இல்லை எதிரி என்பதும் இல்லை. கொள்கைக்கு விரோதி என்று சந்தேகம் வந்தால் பெற்ற தாயைக் கூட சிறை செய்யவோ கொல்லவோ தயங்கமாட்டார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை இது. Continue reading சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு